Everything posted by ஏராளன்
-
மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் உதயங்க ஹேமபால நியமனம்
03 JUN, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹேமபால இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். அந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். மின்சார சபையின் தலைவராக பணியாற்றிய டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் இராஜிநாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சியம்பலாபிட்டிய கடந்த மே 11ஆம் திகதி அன்று இலங்கை மின்சாரசபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அவர் கடந்த ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி மின்சாரசபை தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216493
-
ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு 'ஆனையிறவு உப்பு' என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி
03 JUN, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ' ஆனையிறவு உப்பு' என்ற நாமத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா 27/2 இன் கீழ் கடந்த அமர்வின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் நாமம் ( பெயர்) ரஜ உப்பு என்று குறிப்பிடப்படுகிறது. முழு சந்தை கட்டமைப்பையும் கைப்பற்றுவதற்காகவே இந்த பெயர் நாமம் பயன்படுத்தப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதிநிதிகளின் வலியுறுத்தலுக்கு அமைய ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ' ஆனையிறவு உப்பு' என்று குறிப்பிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஒரு தரப்பினரை தவறாக வழிநடத்தியுள்ளார்கள். உப்பளத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பு தொழிற்சாலைக்கு அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள் வழங்கப்படவில்லை. முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே அரசியல் தலையீடு உள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.. தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/216464
-
முல்லையில் இவ்வருடத்தில் இதுவரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; பாடசாலைகளில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து
03 JUN, 2025 | 04:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுகின்றது. அதில் மூவர் பாடசாலை மாணவர்கள். எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நீரில்மூழ்கி 17பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் கோவில் தீர்த்தக்கேணியில் மூழ்கி இரண்டு பாடசாலைமாணவிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய இருமாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன் பிரணவன் ஆகியோருமாக ஒரேநாளில் நான்குபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறாக ஒரேநாளில் நான்குபேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையில் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாதநிலையில் காணப்படுகின்றனர். எனவே பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினால் நல்லதென எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்தவிடயத்தை கவனத்திலெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/216483
-
இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:53 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரிச்சர்ட் மார்ல்ஸை (Richard Marles) தெளிவுபடுத்தினார். கடந்த காலத்தில் சமுத்திரப் பாதுகாப்பு, சட்டவிரோத வர்த்தகம், ஆள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உதவிகளை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார். சுற்றுலா, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவது, இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) இங்கு தெரிவித்தார். அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருடன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், (Paul Stephens), பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் கிரகரி லோரன்ஸ் மொரியாட்டி (Gregory Laurence Moriarty), பிரதிப் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சைமன் எரிக் ஓ' கொணர் ( Simon Eric O'Connor), இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் (Lalita Kapur) ஆகியோரும் இதன்போது இணைந்துகொண்டிருந்ததோடு, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டினர். https://www.virakesari.lk/article/216462
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:33 PM தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியை ஒருவரே மரணமடைந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்றையதினம் காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர். இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/216456
-
பொள்ளாச்சி: மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?
பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், 'யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்' என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இதற்கு இணையத்திலும் ஏராளமான புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இணைய விளம்பரத்தில் ஈர்க்கும் மனநல காப்பகம் நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய கட்டடம், உள்விளையாட்டு அரங்கம், சிறப்புப் பயிற்சி மையங்கள், திறந்தவெளி மைதானங்கள், அதிநவீன பயிற்சி வகுப்பறைகள் என இந்தக் காப்பகத்தின் விளம்பரமே எல்லோரையும் ஈர்ப்பதாக உள்ளது. இதை மனநல ஆலோசகரான டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்து நடத்தி வந்துள்ளனர். இங்கு மனநல பயிற்சியளிக்கும் பயிற்றுநர்கள், உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியாளர்கள், காப்பாளர்கள், பராமரிப்பாளர்கள் எனப் பலர் பணியாற்றி வந்தனர். இந்தக் காப்பகத்தில், கோவை மாவட்டம் சோமனுார் அருகேயுள்ள கரவளி மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த் (வயது 24) உள்பட 25க்கும் மேற்பட்டோர் மனநல சிகிச்சைக்காகத் தங்கியிருந்தனர். கடந்த மே 13 ஆம் தேதியன்று, அவர்களை ஆழியாறு அணைக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றபோது, வருண் காந்த் காணாமல் போய்விட்டதாக, ரவிக்குமாருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஆழியாறு காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு ரவிக்குமாரும், அவரது மனைவியும் காப்பகத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். காவல் நிலையத்தில் புகார் பட மூலாதாரம்,TNPOLICE படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட வருண் காந்த் அப்போது அங்கிருந்த சிலர் அளித்த தகவலின்பேரில், மே 13ஆம் தேதி ஆழியாறுக்கு அழைத்துச் சென்றபோது, காப்பகத்தில் இருந்து தங்கள் மகன் வருண் காந்த் வாகனத்தில் ஏறுகின்ற காட்சி, காப்பகத்திலுள்ள சிசிடிவியில் இருக்கிறதா என்று ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது, அவர் அங்கிருந்து ஏறவில்லை என்பதும், அதற்கு முதல் நாளிலேயே வருண் காந்த்தை காப்பக ஊழியர்கள் தாக்கியதும் தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை வழங்கிய மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் "கடந்த மே 12ஆம் தேதியன்று, வருண் காந்தை காப்பக ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை வருணின் பெற்றோர் மற்றும் காவல்துறையிடம் தெரிவிக்காமல், மறைக்க முயன்று, டாக்டர் கவிதாவுக்கு சொந்தமான நடுப்புணி பி.நாகூர் பகுதியிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டி வருண் காந்தின் உடலைப் புதைத்துள்ளனர். அதன் பிறகு மே 13ஆம் தேதியன்று, ஆழியாறுக்கு காப்பகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் சுற்றுலா அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்று, அங்கே வைத்து வருண் காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுக்கவும் திட்டமிட்டு, அதையே செய்துள்ளனர்," என்று தெரிவித்தனர். தலைமறைவான நிர்வாகிகள் பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, வருண் காந்தின் உடல் புதைக்கப்பட்ட இடம் இந்தக் கொலை தொடர்பாக, முதலில் காப்பக நிர்வாகி கிரி ராம், கேர் டேக்கர் நிதீஷ், பணியாளர்கள் சதீஷ், ஷீலா, ரங்கநாயகி, அறக்கட்டளை நிர்வாகி ஷாஜியின் தந்தை செந்தில் பாபு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஐந்து பேரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இறுதியில் 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மகாலிங்கபுரம் போலீசார் தெரிவித்தனர். ''தாக்கப்பட்டதில் வருண் காந்த் உயிரிழந்ததும் காவல்துறையிடம் தெரிவித்திருந்தால், அவரைத் தாக்கியவர்கள் மீது மட்டும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள், காப்பகப் பணியாளர்கள் என எல்லோரும் சேர்ந்து இந்தக் கொலையை மறைப்பதற்கு முயற்சி எடுத்து, இந்த நாடகத்தை அரங்கேற்றியதால்தான் இப்போது 11 பேரையும் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காவல்துறை அதிகாரி கைது பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவரது கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி மற்றும் ஸ்ரேயா (இடப்புறத்தில் இருந்து) இந்தச் சம்பவத்தில் கொலையில் தொடர்புடையதாக 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்பாராத திருப்பமாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் பணம் மற்றும் நகையைக் கையாடல் செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். காப்பக அறக்கட்டளை நிர்வாகிகளைக் கைது செய்தபோது, அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 18.5 சவரன் நகை ஆகியவை தனிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதை முறைப்படி ஒப்படைக்காமல் தனிப்படையைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், அவருடன் பணத்தைப் பங்கிட்டுக் கொண்ட மற்றொரு துணை ஆய்வாளரான மகாராஜா இருவரும் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்த விவாதங்களும் சூடு பிடித்துள்ளன. மனநல காப்பகங்கள் குறித்து எழும் அச்சம் மனநலம் குன்றிய இளைஞர் வருண் காந்த் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. கொலை செய்யும் அளவுக்கு அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி, ''வருண் காந்த் காப்பகத்திலுள்ள மற்றவர்களைவிட, எப்போதுமே விவாதம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த வாரத்தில் ஒரு நாள் அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை வெளியில் அழைத்துச் சென்றதால், கோபமாகிக் கத்தியுள்ளார். அப்போது காப்பக நிர்வாகியின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். அதில்தான் மிகவும் கோபமடைந்து, எல்லோரும் சேர்ந்து குரூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்'' என்று விவரித்தார். இதற்கு முன்பாக வருண் காந்த், கோவை சரவணம்பட்டியில் உள்ள கெளமாரம் பிரசாந்தி அகாடமி என்ற மனநல காப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். யுதிரா மனநல காப்பகத்தின் வசதிகளைப் பார்த்துவிட்டு, கடந்த பிப்ரவரியில்தான் வருண் காந்தை அவருடைய பெற்றோர் இங்கு சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு அங்கு பல பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததால், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பழைய காப்பகத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகத் தங்கள் விசாரணையில் தெரிய வந்ததாக மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய கெளமாரம் பிரசாந்தி அகாடமி மனநல காப்பகத்தின் பிசியோதெரபிஸ்ட் மாதையன், ''வருண் காந்த் அதிகமாகப் பேசுவார். எங்களிடம் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஒருபோதும் முரட்டுத்தனமாகவோ, தவறாகவோ நடந்து கொண்டதில்லை. பயிற்சி கொடுத்தால் நன்றாகச் செய்வார். எங்களிடம் இருந்தபோது யார் மீதும் எச்சில் துப்பியதில்லை,'' என்றார். அரசின் அனுமதி கிடைத்த அதே நாளில் நடந்த கொலை பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் முகப்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இந்த மனநலக் காப்பகம், அரசின் நிதியுதவி ஏதுமின்றி சுயநிதியில் நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாதாந்திர கட்டணம் வசூலித்துள்ளனர். வருணின் பெற்றோர் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம், உணவு, விளையாட்டுப் பொருள் என எது வாங்கினாலும் அனைவருக்கும் சேர்த்தே வாங்கி வருவார்கள் என்றனர். இந்தக் கொலை சம்பவத்துக்குப் பின், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையினர், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில், காப்பகத்தை ஆய்வு செய்து, அங்கிருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றியுள்ளனர். தற்போது அந்தக் காப்பகம் மூடப்பட்டுள்ளது. இந்தக் காப்பகம், வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தாலும், கடந்த மாதத்தில்தான் இதற்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், ''அந்தக் காப்பகத்துக்கு அனுமதி கோரி கடந்த பிப்ரவரியில் விண்ணப்பித்துள்ளனர். அதன்பின் நாங்கள் ஆய்வு செய்தோம். கட்டடம் சகல வசதிகளுடன் இருந்தது. வட்டாட்சியரிடம் கட்டட அனுமதியும், தீயணைப்புத்துறையிடம் தீயணைப்புச் சான்றும் பெற்றிருந்தனர். காப்பகங்களுக்கான விதிமுறைகளின்படி காப்பகப் பராமரிப்பாளர், மருத்துவர், பயிற்றுநர் என எல்லோரும் தகுதியுடன் இருந்ததால் நாங்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தோம். அதற்கான அனுமதி மே 12 அன்றுதான் வந்தது'' என்றார். காப்பகத்துக்கு அரசின் முறையான அனுமதி வந்ததாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கூறும் அதே நாளில்தான், அந்தக் காப்பகத்தில் வருண் காந்த் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மனநல காப்பக்ததில் வருணையும் சேர்த்து 28 பேர் இருந்துள்ளதாகக் கூறிய மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அவர்களில் 20 பேர், கோடை விடுமுறைக்கு அவர்களின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். படக்குறிப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கோயம்புத்தூர் ''கொலை நடந்தபோது, வருணையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, மீதமுள்ள 7 பேரில் 6 பேருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவரின் பெற்றோர் கனடாவில் இருந்ததால், அவருடைய உறவினர் வீட்டில் ஒப்படைத்தோம். மீதமிருந்த ஒருவருக்கு பெற்றோர் இல்லை. தாத்தா, பாட்டி வயதானவர்கள் என்பதோடு, அவரின் பாட்டிக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், அவரை மற்றொரு காப்பகத்தில் சேர்த்துள்ளோம்'' என்றார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 19 காப்பகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். கடந்த 3 நாட்களில் 17 காப்பகங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 காப்பகங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் பகிர்ந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல மீளாய்வுக் குழு என்ற குழு செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர். அந்தக் குழுவின் கூட்டமும் நடத்தப்பட்டு, அவர்களும் காப்பகங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். தற்போது இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குமணன் உள்ளார். சேலம் மாவட்டத்துக்கான குழுத் தலைவரான இவர்தான், தற்போது கூடுதலாக கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் பார்த்து வருவது தெரிய வந்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்களில் ஆய்வுகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள TN RIGHTS என்பது, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் துவக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் உலக வங்கியின் நிதி 70 சதவிகிதமும், தமிழக அரசின் 30 சதவிகிதமும் இதற்காகச் செலவிடப்படுவதாகவும் திட்ட அலுவலர் விவரித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பும் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகளும் கண்காணிப்பும் பட மூலாதாரம்,DEPARTMENT OF WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS படக்குறிப்பு, கோவை மாவட்ட மனநல மீளாய்வுக் குழுவினரின் ஆலோசனை தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை தமிழக முதல்வரின் கீழ் இருந்தாலும், சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன்தான் இந்தத் துறை சார்ந்த பல்வேறு கூட்டங்களையும் நடத்தி, கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருவதாக அத்துறை அலுவலர்கள் தகவல் பகிர்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்தான் மனநல காப்பகங்களுக்கான அனுமதியை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016இன் படியே (RPWD-The Rights of Persons with Disabilities Act, 2016) மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவிக்கின்றனர். "இதற்கு படிவம் வடிவிலான விண்ணப்பமே இத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. அதில் ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டடம், கழிப்பறை, சாய்வு தளம், மேல்மாடி அனைத்தும் எந்தெந்த விதங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டடம் அமைந்துள்ளதா என்பதைப் பார்த்து வருவாய் வட்டாட்சியர் கட்டட உரிமம் தர வேண்டும். தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்து, தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்தக் காப்பகம் இயங்கியிருக்க வேண்டும்," என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்குகின்றனர். அவர்களது கூற்றுப்படி இயங்கும் காப்பகங்களில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா, மனநலம் குன்றியவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்கிறார்களா, கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் உள்ளதா, மனநலம் குன்றியவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அதற்கான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளனவா என்பதை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, அந்த விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குப் பரிந்துரைக்கும். அந்த ஆணையரகத்தில் மனநல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களும் பரிசீலித்து பரிந்துரைக்கும் அடிப்படையில் இறுதியாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரால் மனநல காப்பகத்துக்கான அனுமதி வழங்கப்படும். இந்த காப்பகங்களைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான மாவட்ட மனநல மீளாய்வுக் குழு செயல்படுகிறது. "அந்தக் குழு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காப்பகங்களை ஆய்வு செய்யும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார். ஏதாவது குறைபாடுகள் இருப்பின், அந்தக் காப்பகத்தின் அனுமதியைப் புதுப்பிப்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்," என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்கினர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mrg310p0no
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேலிய படையினர் மீண்டும் தாக்குதல் - 25 பாலஸ்தீனியர்கள் பலி Published By: RAJEEBAN 03 JUN, 2025 | 12:50 PM காசாவில் உணவுவிநியோக நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவு ஆதரவு அமைப்பு விநியோகிக்கும் உணவுப்பொருட்களை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஃபாவின் வடமேற்கே உள்ள அல்-மவாசி பகுதியில் உள்ள அல்-ஆலம் சுற்றுவட்டத்தில் விடியற்காலையில் இருந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் .என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காசாவின் சுகாதார அமைச்சு 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. நாசர் மருத்துவமனையின் இயக்குநரும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் உடல்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சந்தேகநபர்கள் தங்களை நோக்கி வருவதை அவதானித்த பின்னர் இஸ்ரேலிய படையினர் உணவு விநியோக மையத்தை நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. படையினர் முதலில் முன்னெச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர். ஆனால் அவர்கள் விலகிச்செல்லவில்லை. பின்னர் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தேகநபர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. படையினரை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களால் படையினருக்கு ஆபத்து காணப்பட்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதேபகுதியில் இஸ்ரேலிய படையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/216435
-
பிரதமர் ஹரிணியை மாற்றும் நோக்கம் இல்லை - அரசாங்கம் அறிவிப்பு
03 JUN, 2025 | 04:30 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கத்துக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தை திசை திருப்புவதற்காகவும், அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன. எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றார். https://www.virakesari.lk/article/216474
-
கல்லீரல் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? அதன் அறிகுறிகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கல்லீரல் 500க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் உறுப்பு (பிரதிநிதித்துவ படம்) 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை தீபிகா கக்கர் தற்போது தனது வாழ்வின் மோசமான கட்டத்தைக் கடந்து வருகிறார். தீபிகாக்கு கல்லீரல் புற்றுநோய் (இரண்டாம் நிலை) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் ஷோயப் இப்ராஹிம் கூறியுள்ளார். நடிகை தீபிகா கக்கர், தனது உடல்நிலை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களுடன் உடல்நலன் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, தான் எதிர்கொண்ட கடினமான நாட்களைப் பற்றி நினைவுகூர்ந்தார். தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தீபிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "கடந்த சில வாரங்களாக கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றின் மேற்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு எனது கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவிலான கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பிறகு அது இரண்டாம் நிலை புற்றுநோய் என்பதைக் கண்டுபிடித்தனர். இது எங்களுக்கு மிகவும் கடினமான நேரம்." "நான் இதை தைரியத்துடனும் நேர்மறையான சிந்தனையுடனும் எதிர்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ், நாங்கள் இதைக் கடந்து வருவோம் என்று நம்புகிறேன். எனது குடும்பம் எனக்கு ஆதரவாக நிற்கிறது. உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் எனக்கு பலத்தைக் கொடுக்கின்றன. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தீபிகா தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடிகை தீபிகா கக்கர், தனது உடல்நிலை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் சீசன் 12இன் வெற்றியாளரான தீபிகா கக்கர், இந்திய தொலைக்காட்சியின் பிரபலமான நடிகை. 'சசுரல் சிமர் கா' என்ற மெகா சீரியல் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. 'பால்டன்' திரைப்படத்திலும் தீபிகா கக்கர் நடித்துள்ளார். இவர் தனக்கு இருக்கும் புற்றுநோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியதைத் தொடர்ந்து, கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது எவ்வளவு ஆபத்தானது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்து கொள்வோம். கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன? கல்லீரல், மனித உடலின் மிகவும் சிக்கலான உறுப்புகளில் ஒன்று. இது, ஐநூறுக்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது. கொழுப்பு மற்றும் புரதத்தை செரிமானம் செய்வது, நச்சுகளை அகற்றுதல், பித்த சுரப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவது ஆகியவை கல்லீரலின் செயல்பாடுகளில் முக்கியமானவை. புற்றுநோயால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அது தனது வேலையைச் சரியாகச் செய்வது தடைபடும் என்பதுடன் கல்லீரலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம். கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய்களின் வகைகள் முதன்மை கல்லீரல் புற்றுநோய்: கல்லீரலில் ஏற்படும் இந்தப் புற்றுநோய் கட்டி மிகவும் ஆபத்தானது. ஆஸ்திரேலிய புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, முதன்மை கல்லீரல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம். ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (HCC) அல்லது ஹெபடோமா: முதன்மைக் கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையாக அறியப்படும் ஹெபடோமா, கல்லீரலின் முக்கிய செல்களான ஹெபடோசைட்டுகளில் தொடங்குகிறது. சோலாங்கியோகார்சினோமா: இது பித்தநாள புற்றுநோய் என்றும் அறியப்படுகிறது. சோலாங்கியோகார்சினோமா பித்த நாளங்களை உள்ளடக்கிய செல்களில் தொடங்குகிறது (இது கல்லீரலை குடல் மற்றும் பித்தப்பையுடன் இணைக்கிறது). ஆஞ்சியோசர்கோமா: இந்த வகை முதன்மைக் கல்லீரல் புற்றுநோய் ரத்த நாளங்களில் ஏற்படுகிறது. இது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படக் கூடிய அரிய வகை கல்லீரல் புற்றுநோயாகும். இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய்: உடலின் ஒரு பகுதியில் தொடங்கிய புற்றுநோய், பிறகு கல்லீரலுக்கு பரவுவது இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தின்படி, 2024ஆம் ஆண்டில், 3,208 பேர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் சராசரி வயது 69 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய் உடலின் மற்றொரு பகுதியில் தொடங்கி பின்னர் கல்லீரலுக்குப் பரவுகிறது (சித்தரிப்புப் படம்) கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமானது. இந்தப் புற்றுநோய் மேம்பட்ட நிலையை அடையும் வரை நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்: விலா எலும்புகளுக்குக் கீழே வலது பக்கத்தில் கட்டி வயிற்றின் மேல் வலது பகுதியில் சங்கடம் ஏற்படுவது வயிற்றில் வீக்கம் வலது தோள்பட்டைக்கு அருகில் அல்லது பின்புறத்தில் வலி மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல்) லேசாக அடிபட்டாலும் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு ஏற்படுதல் வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது பலவீனமாக உணர்வது குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை அல்லது சிறிதளவு உணவு உண்டாலே வயிறு நிரம்பியதாக உணர்வது காரணமின்றி உடல் எடை இழப்பு வெளிர், நிறமற்ற மலம் மற்றும் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறுவது காய்ச்சல் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தின்படி, நீண்டகால தொற்றுநோயை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ்கள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கொழுப்பு கல்லீரல் அல்லது மரபணுக் கோளாறுகள், இதில் ஹீமோக்ரோமாடோசிஸ் அல்லது ஆல்ஃபா 1-ஆன்டிட்ரிப்சின் குறைபாடும் அடங்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஹெபடைடிஸ் பி அல்லது சி மது அருந்துதல் உடல் பருமன் புகைப் பிடித்தல் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் (சித்தரிப்புப் படம்) கல்லீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி? புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் விஷயங்களில் கவனம் செலுத்துவதே, புற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்று கூறப்படுகிறது. புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் எந்தவொரு அம்சத்தையும், ஆபத்து காரணி என்று வகைப்படுத்தலாம். புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் எந்தவொரு அம்சத்தையும் புற்றுநோய் பாதுகாப்புக் காரணி என்று அழைக்கலாம். புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க ஆபத்து காரணிகளைத் தவிர்ப்பதும் புற்றுநோய் பாதுகாப்புக் காரணிகளை அதிகரிப்பதும் முக்கியம். ஹெபடைடிஸ் பி-ஐ தடுக்கும் வழிகள்: ஹெபடைடிஸ் பி ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது சிறப்பானது. பச்சிளம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுவது அவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தடுப்பூசி பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்றுக்கு சிகிச்சை பெறுதல்: நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்று உள்ளவர்களுக்கு, இன்டர்ஃபெரான் மற்றும் நியூக்ளியோஸ்(டி)ஐடி அனலாக் சிகிச்சை ஆகியவை உதவும். இந்த சிகிச்சைகள் கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். அஃப்லாடாக்சின் பி1-ஐ குறைத்தல்: அஃப்லாடாக்சின் பி1 அதிகமாக உள்ள உணவுகளைக் குறைத்து, அஃப்லாடாக்சின் பி1 குறைவாக உள்ள உணவுகளை உண்பது, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். கல்லீரல் புற்றுநோய்க்கான சாத்தியமான சிகிச்சைகள் பட மூலாதாரம்,GETTYIMAGES/PETER DAZELEY அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இணையதளம் வழங்கும் தகவல்கள்படி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல சிகிச்சைகள் உள்ளன. சில சிகிச்சைகள் நிலையானவை (தற்போது பயன்பாட்டில் உள்ளன) வேறு சில சிகிச்சைகள், தற்போது மருத்துவப் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. 1. கண்காணிப்பு: பரிசோதனையின்போது, ஒருவருக்கு இருக்கும் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான புண்கள் கண்காணிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து சோதனைகளைச் செய்துகொள்வது அவசியம். கண்காணிப்பு கட்டத்தில் எந்தவித சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை, ஆனால் புண்ணின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, அதாவது, நிலை முன்பைவிட மோசமடைந்துள்ளதா என்பது கவனமாக அவதானிக்கப்படுகிறது. அதன் நிலை அடுத்த கட்டத்திற்குச் சென்ற பின்னரே சிகிச்சை தொடங்கப்படும். 2. அறுவை சிகிச்சை: அறுவை சிகிச்சையில், புற்றுநோய் காணப்படும் கல்லீரலின் பகுதி அகற்றப்படுகிறது. கல்லீரலை மீண்டும் உருவாக்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றிவிட்டால், அது மீண்டும் வளர்ந்து தனது செயல்பாட்டைத் தொடரும். 3. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சிலருக்கு முழு கல்லீரலும் அகற்றப்பட வேண்டியிருக்கும். அந்தச் சூழலில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அறுவை சிகிச்சையில், முழு கல்லீரலும் அகற்றப்பட்டு, தானமாகப் பெறப்பட்ட ஆரோக்கியமான கல்லீரல் மாற்றப்படுகிறது. இதில், புற்றுநோய் கல்லீரலுக்கு மட்டுமே பரவி பிற உறுப்புகளுக்குப் பரவாதபோது மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும், மற்றொரு நபரிடம் இருந்து கல்லீரலை தானமாகப் பெறுவது எளிதானது அல்ல. 4. நீக்குதல் சிகிச்சை (Ablation therapy): புற்றுநோய் பகுதியை நீக்கவோ அல்லது அழிக்கவோ நீக்குதல் சிகிச்சை பயன்படுகிறது. கல்லீரல் புற்றுநோய்க்குப் பல்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 5. எம்போலைசேஷன் சிகிச்சை: அறுவை சிகிச்சை செய்தோ அல்லது நீக்குதல் சிகிச்சையை (Ablation therapy) செய்தோ புற்றுநோய்க் கட்டியை அகற்ற முடியாதவர்களுக்கும், கல்லீரலுக்கு அப்பால் கட்டி பரவாதவர்களுக்கும் பயன்படுத்தப்படுவது எம்போலைசேஷன் சிகிச்சை. புற்றுநோய்க் கட்டிக்கு, ரத்த ஓட்டம் செல்வதை நிறுத்துவது அல்லது குறைப்பதை உள்ளடக்கிய சிகிச்சை இது. கட்டிக்குப் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்லாதபோது அதன் வளர்ச்சி குறைகிறது. 6. டார்கெட் தெரபி: இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை என்பது குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை அழிக்க, மருந்துகள் அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வகை சிகிச்சை. 7. நோய் எதிர்ப்பு சிகிச்சை: புற்றுநோயை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் வழிமுறைக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை என்று பெயர். உடலில் உருவாக்கப்படும் அல்லது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தப்படுகிறது. 8. கதிர்வீச்சு சிகிச்சை: இது, உடலின் புற்றுநோய் பகுதிக்கு உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் அல்லது பிற வகையான கதிர்வீச்சை அனுப்பி புற்றுநோயைக் குணப்படுத்துவதும் சிகிச்சை முறை. இந்தச் செயல்முறை பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், கல்லீரல் புற்றுநோயை எந்த அளவுக்கு குணப்படுத்த முடியும் என்பது, புற்றுநோயின் நிலை மற்றும் அது எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதைப் பொறுத்தே அமையும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql2436d77lo
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
அண்ணை, தானாகச் சென்று வாதாடி வெளில வர இருந்தவரை உள்ளுக்கை போக வைச்சிற்று அதை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்.
-
கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு
03 JUN, 2025 | 11:01 AM இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார். காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார். இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம். ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம், ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார். இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216420
-
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும். புதிய விமானம் பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும். இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/new-airbus-a330-200-aircraft-to-arrive-sri-lanka-1748921410
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனிதப் புதைகுழி ; இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு 03 JUN, 2025 | 09:20 AM யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக, மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது. அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் , திங்கட்கிழமை (02) மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சேராக காணப்பட்டமையால், பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர். https://www.virakesari.lk/article/216408
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; இவ்விவகாரத்தை அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தாதீர் - வெளிவிவகார பிரதி அமைச்சர் 02 JUN, 2025 | 04:59 PM (நா.தனுஜா) புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அதேவேளை அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் தீர்க்கப்படும் எனவும், இச்சம்பவத்தை குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிரிக்குமாறும் அவர் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, 'இலங்கைக்குத் திரும்பிய அகதி அந்தஸ்த்தைக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, குடிவரவுச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நான் அறிவேன். எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் அக்காலப்பகுதியில் பாரிய புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இவ்வாறான நபர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அருண் ஹேமசந்திர அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது பதிவாகியுள்ள சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் சகல தரப்பினரும் இவ்விவகாரத்தைப் பொறுப்புவாய்ந்த முறையில் அணுகவேண்டும் எனவும், இதனைக் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வேண்டுகோள்விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/216360
-
அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கவிதா பூரி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார். சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர். அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியமான நபராக மாறியது எப்படி? அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, அங்கேயே பணி புரிந்தார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றியது. அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது "முக்கியமான துறைகளில்" படிப்பவர்கள் உள்பட சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்க நிர்வாகம் "திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும்" என்று அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், விஞ்ஞானி சியான் சேசென் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்தச் செய்திகள் வெளியாகின. சியான் சேன்சென் போன்ற திறமையாளர்களை வரவேற்பதற்குப் பதிலாக வெளியேற்றுவதன் அபாயங்கள் ஏற்கெனவே ஒரு காலத்தில் அமெரிக்காவை பாதித்துள்ளன. அமெரிக்கா மீண்டும் தடுமாறி தவறு செய்கிறதா? சீன விஞ்ஞானி சியான் சேசென் போன்ற புத்திசாலித்தனமான நபர்களை வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தவறு என்று கூறப்பட்டது. இந்நிலையில், முந்தைய கால தவறையே அமெரிக்கா மீண்டும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகிறது. அறிவுத் திறனால் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது திறமையின் பயனாக அவர் எம்.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார் சீனாவின் ஏகாதிபத்திய வம்சம் முடிவடைந்து, அந்நாடு குடியரசாக மலரக் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் 1911ஆம் ஆண்டு சியான் சேசென் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த சியான் சேசென்னின் தந்தை ஜப்பானில் பணிபுரிந்து அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது அறிவாற்றலால், சீனாவின் தேசிய கல்வி முறையை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமை மிக்க மாணவரான சியான் சேசென், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். அது அவருக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சிறப்பு உதவித்தொகையைப் பெற உதவியது. கடந்த 1935ஆம் ஆண்டில் அவர் பாஸ்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தார். அமெரிக்காவுக்கு மெலிதான உடல்வாகு கொண்ட, கண்ணியமான நபராக வந்து சேர்ந்தார். அமெரிக்காவில் அவர், அந்நிய வெறுப்பு மற்றும் இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்று வடக்கு ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார். ஆனால், "சீனா (அடிப்படையில்) குறிப்பிடத்தக்க வழிகளில் மாறிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது." மேலும் அறிவுக்கு மதிப்பு கொடுத்தவர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்று அவர் நம்புகிறார். கால்டெக் அனுபவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1960இல் எடுக்கப்பட்ட வில்லியம் பிக்கரிங், தியோடர் வான் கர்மா மற்றும் பிராங்க் மலினாவின் புகைப்படம் எம்ஐடியில் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (கால்டெக்) குடிபெயர்ந்த சியான் சேசென், அன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க விமானப் பொறியாளர்களில் ஒருவரான ஹங்கேரிய குடியேறி தியோடோர் வான் கர்மானிடம் படிக்கச் சென்றார். அங்கு அவர், மற்றொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் இணைந்தார். 'சூசைட் ஸ்குவாட்' என்ற கண்டுபிடிப்பாளர்களின் சிறிய குழுவின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா இருந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கெட்டை உருவாக்க முயன்ற இந்தக் குழுவினரின் சில பரிசோதனைகள், ஆவியாகும் ரசாயனங்கள் மூலம் தவறாகிப் போனதால், அவர்களின் குழுவை தற்கொலைப் படை என்று அழைத்ததாக "Escape from Earth: A Secret History of the Space Rocket" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃப்ரேசர் மெக்டொனால்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்களின் அந்தப் பரிசோதனையில் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நாள், மலினா மற்றும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடன் ஒரு சிக்கலான கணிதப் பிரச்னை பற்றிய விவாதத்தில் ஈடுபட்ட சியான், விரைவில் 'தற்கொலைப் படை' குழுவில் ஒருவராக மாறிவிட்டார். அவரும், ராக்கெட் உந்துவிசை குறித்த அடிப்படை ஆராய்ச்சியில் பங்களித்தார். அந்தக் காலகட்டத்தில், ராக்கெட் அறிவியல் என்பது "முட்டாள்கள் மற்றும் கற்பனையாளர்களின் பொருளாக" இருந்தது என்று மெக்டொனால்ட் கூறுகிறார். "ராக்கெட் அறிவியலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணிதத்தில் விருப்பம் இருந்த பொறியாளர்களில் யாருமே அதுதான் எதிர்காலம் என்று கூறி தனது நற்பெயருக்கு ஆபத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்." ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், நிலைமை துரிதகதியில் மாறியது. போர் படைப்பிரிவு 'தற்கொலைப் படை' அமெரிக்க ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது, ஜெட் உதவியுடன் கிளம்புவது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி கிடைத்தது. குறுகிய ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் புறப்பட ஏதுவாக ப்ரொப்பல்லர்கள் இணைக்கப்பட்டன. கடந்த 1943ஆம் ஆண்டில் தியோடோர் வான் கார்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தை (JPL) நிறுவ ராணுவ நிதியும் கிடைத்தது. சியான் சேன்சென் மற்றும் ஃபிராங்க் மலினா இருவருமே திட்டத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர். அப்போதைய சீன குடியரசு அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் சீன விஞ்ஞானி முக்கியப் பங்கு வகிப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. ரகசிய ஆயுத ஆராய்ச்சியில் பணியாற்ற பாதுகாப்பு அனுமதி பெற்ற சியானுக்கு, அமெரிக்க அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் இடம் கொடுக்கப்பட்டது. போரின் முடிவில், உலகின் முன்னணி ஜெட் உந்துவிசை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். தியோடோர் வான் கார்மனுடன் ஜெர்மனிக்கு ஒரு முக்கியமான பணிக்காக அனுப்பப்பட்ட சியான் சேன்சென் அங்கு தற்காலிக லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றினார். ஜெர்மனியின் முன்னணி ராக்கெட் விஞ்ஞானியான வெர்ன்ஹர் வான் பிரவுன் உள்பட நாஜி பொறியாளர்களைச் சந்தித்துப் பேசுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஜெர்மனியர்களுக்கு தெரிந்த அனைத்தையும் சரியாக அறிய அமெரிக்கா விரும்பியது. அந்த தசாப்தத்தின் இறுதியில், அமெரிக்காவில் சியானின் வாழ்க்கை திடீரென நிலைதடுமாறியது. அவரது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. சர்வதேச அரசியலில் மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சியானின் அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாக போற்றப்படுகிறார் கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார். அந்தப் பின்னணியில், சீனர்கள் என்றாலே "கெட்டவர்கள்" என்று பார்க்கும் போக்கு அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார். "அமெரிக்காவில், சீனாவை நேசித்த காலகட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ நடந்தது, திடீரென நாம் அந்நாட்டை இழிவாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம்," என்று வரலாற்றாசிரியர் பிபிசியிடம் கூறுகிறார். JPL-இன் புதிய இயக்குநர், தங்கள் ஆய்வகத்தில் உளவாளிகள் இருப்பதாக நம்பினார். சில ஊழியர்கள் குறித்த தனது சந்தேகங்களை எஃப்.பி.ஐ உடன் பகிர்ந்து கொண்டார். "அவர்கள் அனைவரும் சீனர்கள் அல்லது யூதர்கள் என்பதை அவர் கவனித்தார்," என்கிறார் ஃப்ரேசர் மெக்டொனால்ட். பனிப்போர் நடந்து கொண்டிருந்தது, மெக்கார்த்தி சகாப்தம் தொடங்கிய அந்த வேளை கம்யூனிச எதிர்ப்பு வீரியமடையத் தொடங்கிய காலம். இந்தக் காலகட்டத்தில்தான் எஃப்.பி.ஐ., சியான், ஃபிராங்க் மலினா மற்றும் பிறரை கம்யூனிஸ்டுகள் என்றும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டியது. சியான் சேன்சென் செய்த தவறு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார் கடந்த 1938ஆம் ஆண்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் அடிப்படையில் சியானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமைந்தன. அவர் ஒரு சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை அது காட்டுகிறது. பசடேனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமாக அது இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ சந்தேகித்தது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை என்று சியான் கூறினாலும், அவர் 1938இல் பிராங்க் மலினாவுடன் இணைந்திருந்தார் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதி செய்தது. ஆனால் இதனால் மட்டுமே அவர் ஒரு மார்க்சியவாதி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், அந்த நேரத்தில் கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பது இனவெறிக்கு எதிரானது என்ற எண்ணம் நிலவியது என ஃப்ரேசர் மெக்டொனால்ட் தெளிவுப்படுத்துகிறார். இந்தக் குழு, பாசிசத்தின் அச்சுறுத்தலையும், அமெரிக்காவில் இனவெறியின் பயங்கரத்தையும் முன்னிலைப்படுத்த விரும்பியதாக அவர் கூறுகிறார். பிரிவினைக்கு எதிரான பிரசாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் கம்யூனிஸ்ட் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உள்ளூர் பசடேனா நீச்சல் குளத்தில் மதிய வேளையில் கறுப்பினத்தவர்கள் குளித்தால், அவர்கள் பயன்படுத்திய குளத்தை, வெள்ளையர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்வார்கள். பொமோனாவில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சூயோயு வாங், சியான் அமெரிக்காவில் இருந்தபோது சீனாவுக்காக உளவு பார்த்ததாகவோ அல்லது உளவுத்துறை முகவராக இருந்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் சியான் சேசெனின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் குற்றமற்றவர் என தியோடோர் வான் உள்பட சியானின் கால்டெக் சகாக்கள் அரசுக்கு எழுதிய கடிதங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த பிறகு, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர், சியானை சீனாவுக்கு நாடு கடத்த முடிவு செய்தார். 1955ஆம் ஆண்டில், தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் சீனாவுக்கு கிளம்பிய சியான் சேன்சென், மீண்டும் ஒருபோதும் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இறுதி வரை தனது வாக்குறுதியை சியான் சேன்சென் காப்பாற்றினார். வேறொரு இலக்கை நோக்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950இல் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நடந்த வழக்கின்போது தனது வழக்கறிஞர் கிராண்ட் கூப்பருடன் சியான் "அமெரிக்காவின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்த சியான் சேன்சென், அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருந்தார். அவரால் இன்னும் அதிகமாகப் பங்களித்திருக்க முடியும். ஆனால், அவர் இவ்வாறு அவமதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது அவருக்கு அவமானம் மட்டுமல்ல, துரோகமும்கூட" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தியான்யு ஃபாங் கூறுகிறார். அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கதாநாயகனைப் போல் சியான் சேன்சென் வந்தார். ஆனால் அவர் உடனடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அதற்குக் காரணம், சியானின் மனைவி ஒரு தேசியவாதத் தலைவரின் செல்வ மகள். அதுமட்டுமல்ல, பதவி விலகும் வரை சியான் அமெரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியிருந்தார். கடந்த 1958இல் சியான் சேன்சென் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானபோது, ஆட்சியின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார். இதனால் அவர் சுத்திகரிப்பு மற்றும் கலாசாரப் புரட்சியில் இருந்து தப்பிப் பிழைத்தார். சீனாவில் அவரது வாழ்க்கை நிம்மதியாகவும் மேம்பட்டதாகவும் இருந்தது. அவர் சீனாவுக்கு வந்தபோது, அங்கு விண்வெளி அறிவியலைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளுக்கான பணிகளை அவர் மேற்பார்வையிட்டார். பல தசாப்தங்களாக, அவர் புதிய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தார். அவரது சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஏவுகணைத் திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சியானின் சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சியான் உதவியுடன் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் திட்டம்தான், பின்னொரு காலத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. சியானின் "silkworm" ஏவுகணைகள் 1991 வளைகுடா போரில் அமெரிக்கர்கள் மீதும், 2016இல் ஏமனில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களால் யுஎஸ்எஸ் மேசன் மீதும் ஏவப்பட்டதாக ஃப்ரேசர் மெக்டொனால்ட் குறிப்பிடுகிறார். "இது காலத்தின் விசித்திரமான சுழற்சி: அமெரிக்கா வெளியேற்றிய சக்தி, திரும்ப அதையே தாக்கியது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் சாங்க்-4 2019ஆம் ஆண்டு நிலவின் வெகு தூரத்தில் கால் பதித்த முதல் செயற்கைக்கோளாக மாறியது சியான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். அன்று பல விஷயங்களில் பின்தங்கியிருந்த சீனா, தற்போது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பூமியிலும் விண்வெளியிலும் வல்லரசாக வளர்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சியான் இருந்தார். ஆனால் அவரது கதை அமெரிக்காவை பெருமைப்படுத்தும் ஒன்றாகவும் இருந்திருக்கக்கூடும். திறமையுள்ள ஒருவர் எங்கு இருந்தாலும் செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சியான் சேன்சென். கடந்த 2019ஆம் ஆண்டில், சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சீனா தரையிறங்கிய இடத்திற்கு, அமெரிக்காவில் சியானுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்த விமானப் பொறியாளர் வான் கார்மனின் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பானது, சீனாவை விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவியது என்று கூறப்படுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14km2jxlzvo
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை சென்ற துயரம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 75 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பலாலியில் வைத்து கைது செய்யப்பட்டார். விளக்கமறியலில்... இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் தொடர்பான வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக அவரது உறவினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட முதியவரின் உறவினர் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. அரசியல் சூதாட்டம் ஆனால் தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே அவரை சிறையில் அடைப்பதற்காக அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டுள்ளார். குறித்த நபருக்கு ஆதரவாக முன்னிலையாவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் உள்ளே செல்வதற்கான வேலைகளை மாத்திரம்தான் செய்துள்ளார். அவரை கைது செய்த புலனாய்வுத்துறையினரே கூறினார்கள் அவரை விடுதலை செய்யலாம் என்று, ஆனால் அந்த சட்டத்தரணி அவரை உள்ளே அனுப்புவதிலேயே குறியாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கருத்து தெரிவிக்கையில், நேரடியாக சட்டத்தரணி சுமந்திரன் சதி செய்ததாக குற்றச்சாட்டினார். https://tamilwin.com/article/sri-lankan-refugee-arrested-in-sri-lanka-1748872059
-
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட ஆளுந்தரப்பு இதில் அலட்சியம் காண்பிக்கலாமா? - காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்
Published By: VISHNU 02 JUN, 2025 | 09:06 PM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வலிந்து காணாமலாக்கப்படல்களால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும்கூட, இவ்விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவாக தலா 200,000 இலட்சம் ரூபாவையை வழங்குவதற்கும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் சார்பில் இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப்பிரேரணையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்கல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் செயற்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதி பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு தலா 200,000 ரூபா வீதம் வழங்குவதற்குப் போதுமானது எனினும், கடந்த 6 மாதகாலத்தில் மேற்படி இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது. மேற்குறிப்பிட்ட குறைநிரப்புப்பிரேரணை ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்னமும் 6 மாதகாலத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும் பின்னணியில், அந்நிதி உரியவாறு பயன்படுத்தப்படாவிடின், அதனை மீண்டும் திறைசேரியிடமே கையளிக்கவேண்டும். 2023 - 2024 வரையான நிதியாண்டில் இந்நோக்கத்துக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அந்நிதி உரியவாறு பயன்படுத்தப்படாததன் விளைவாக 200 மில்லியன் ரூபா திறைசேரியிடம் மீளக்கையளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை செயற்திறன்மிக்கவகையில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு மாதமும் 1000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இருப்பினும் கடந்த 6 மாதகாலத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஒரு விசாரணையைக்கூட மேற்கொள்ளவில்லை. இவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான செயன்முறை தொடர்பில் நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமைச்சரவை தாமதப்படுத்தியிருப்பதே இதற்குரிய பிரதான காரணமாகும். அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படல்கள் சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியம் அல்ல எனவும், மாறாக உள்ளகப்பொறிமுறை பலப்படுத்தப்படும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்துக்கும், வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அறிவித்துள்ளனர். அத்தகைய வாக்குறுதிகளுக்கு மத்தியிலும் கூட, புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைப் பலப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறன்மிக்கவகையில் இயங்குவதற்கு சுமார் 250 ஊழியர்கள் அவசியம். ஆனால் தற்போது 49 ஊழியர்களுடனேயே அந்த அலுவலகம் இயங்கிவருகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வலிந்து காணாமலாக்கப்படல்களால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாகும். அவ்வாறிருந்தும்கூட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைப் பலப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், அவர்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதிலும் அரசாங்கம் அக்கறையீனமாக செயற்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவாக தலா 200,000 இலட்சம் ரூபாவையை வழங்குவதற்கும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை அனுமதி அளிக்கவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எதிர்வரும் 6 மாதகாலத்தில் 5000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யவேண்டும். இவற்றுக்கான நிதி உரிய காலத்தில் விடுவிக்கப்படவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் இயங்கைக்கு அவசியமான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216389
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
பகிர்விற்கு நன்றி அண்ணா. சிந்திக்க வேண்டிய கருத்துகள் அண்ணை. இதில் பாலியல் மூலமாக தொற்றக் கூடிய நோய்கள் சம்பந்தமான அறிவூட்டல் முக்கியம் என கருதுகிறேன்.
-
இந்தி எதிர்ப்பும், இளையராஜாவும் - தமிழ்த் திரையிசையின் மறுமலர்ச்சி நாயகன் ஆனது எப்படி?
பட மூலாதாரம்,ILAIYARAAJA_OFFL/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்? தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். 'தம் மரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), "ப்யார் திவானா ஹோதா ஹை" (கடி பதங்), 'சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ' (யாதோங் கி பாரத்) போன்ற பாடல்களின் மூலம் ஆர்.டி. பர்மன் தமிழ் மனங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். தமிழ்த் திரையுலகிலும் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும், சட்டென ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக ஏதும் இல்லை. இந்த நிலையில்தான் 1976ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், தமிழ்நாட்டின் திரைப்பட ரசனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. ரசிகர்களை கட்டிப்போட்ட 'அன்னக்கிளி' அந்த காலகட்டத்தில் இந்த மாற்றம் எப்படியானதாக இருந்தது என்பதை, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்' நூலில், இளையராஜா பற்றிய ஒரு கட்டுரையில், பேராசிரியர் ஒருவர் நினைவுகூர்ந்திருந்தார். "நாங்கள் அப்போது தீவிர தமிழ் உணர்வோடு இருந்தோம். இந்தி எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். ஆனால், பாடல்கள் கேட்பதென்றால் இந்திப் பாடல்கள்தாம். தஞ்சாவூரில் நாங்கள் இருந்த பகுதியில் என் வயதைச் சேர்ந்தவர்கள் வழக்கமாகக் கூடும் டீக்கடையில் இந்திப் பாடல்களே போடுவார்கள். நாங்கள் அவற்றின் ரசிகர்கள். திடீரென ஒரு நாள் அலைபோல, 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்ற பாடல் வந்தது. அன்னக்கிளி படம் வந்து ஒரு சில நாட்கள் ஓடிய பின் எடுத்துவிட்டார்கள். ஆனால், பாடல்கள் பிரபலமானதையொட்டி, அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் திரையிட்டார்கள். படம் நூறு நாட்களைத் தாண்டியது. இப்பாடல்கள் வந்த பிறகு ஒரே நாளில் இந்திப் பாடல்களைவிட்டு, தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பழக்கத்துக்கு மாறிப்போனோம், அந்த அளவுக்கு அப்பாடல்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தன" என அந்தப் பேராசிரியர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,THEODORE BASKARAN/FACEBOOK படக்குறிப்பு, தியோடர் பாஸ்கரன், திரைப்பட ஆய்வாளர் அன்னக்கிளி படத்தைப் பொறுத்தவரை, 70களுக்கே உரிய வழக்கமான கதையைக் கொண்ட திரைப்படம் அது. ஆனால், அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை வேறு தளத்தில் நிறுத்தின. "எதிர்பார்க்கக்கூடிய சம்பவங்களைக் கொண்ட வழக்கமான இந்தத் திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. ஒன்று, இந்தப் படம் முழுக்க முழுக்க தெங்குமரகடா என்ற அழகிய கிராமத்தில் படமாக்கப்பட்டிருந்தது. செட் ஏதும் போடப்படாமல், இருந்ததால் அந்த நிலப்பரப்பை அப்படியே திரையில் கொண்டுவந்தது இந்தப் படம். இரண்டாவதாக, இளையராஜா என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்ற பாடல் வெளிவந்த சில வாரங்களிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. இந்தப் படத்தின் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகப் பிரபலமாக இருந்தன," என தன்னுடைய The Eye of the Serpent நூலில் குறிப்பிடுகிறார் பிரபல திரைப்பட ஆய்வாளரான தியோடர் பாஸ்கரன். இந்தப் படம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகுக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழ்த் திரையிசையின் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார் இளையராஜா. ஒரு இசையமைப்பாளரின் அன்னக்கிளிக்குக் கிடைத்த வெற்றியால், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை நோக்கிப் படையெடுக்க, அடுத்த சில ஆண்டுகளுக்கு நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துக் குவித்தார் இளையராஜா. 1979ஆம் ஆண்டில் மட்டும் 29 படங்கள் அவரது இசையில் வெளிவந்தன. மௌனத்தை ரசிக்க வைத்த ராஜா இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை இருந்தால் போதும், படம் வெற்றிப் படமாகிவிடும் என்ற நிலை உருவாகியது. 70களிலும் 80களிலும் பிரபலமாக இருந்த இயக்குனர் மகேந்திரன் இதற்கு சில உதாரணங்களை தன்னுடைய 'சினிமாவும் நானும்' கட்டுரையில் சொல்கிறார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, "இளையராஜாவின் உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" - இயக்குநர் மகேந்திரன் அதாவது, ரஜினிகாந்த் நடித்த 'முள்ளும் மலரும்' படத்துக்கு பின்னணி இசையைச் சேர்ப்பதற்கு முன்பாக, படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் மகேந்திரனைத் திட்டித் தீர்த்துவிட்டனராம். இதற்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை சேர்க்கப்பட்டு, படம் ரிலீஸானதும் மாபெரும் வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு, தொகையைக் குறிப்பிடாமல் காசோலையை எழுதி மகேந்திரனிடம் கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள். படத்தின் வெற்றிக்குக் காரணமே இளையராஜாதான் என்கிறார் மகேந்திரன். அதேபோல, 'உதிரிப்பூக்கள்' படத்துக்கு அவரது இசை கிடைத்திருக்காவிட்டால் அது எதிரிப்பூக்களாகியிருக்கும் என்கிறார் அவர். "முள்ளும் மலரும் தொடங்கி எனது படங்களை எல்லாம் நீங்கள் மனதார உணர்ந்து, நுகர்ந்து பாராட்டுவதற்கு உண்மையான காரணம் இளையராஜாதான். என் மனம் எண்ணியதையெல்லாம் பார்வையாளனிடம் இசை அலைகளாகக் கொண்டுபோய் சேர்த்தவர் இளையராஜா. அவரது உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" என்கிறார் மகேந்திரன். ஐந்து ஆண்டுகளில் 100 படங்கள் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்தாலும், இதில் பெரும்பாலான பாடல்கள் மனதைக் கவரும் வகையில் இருந்தன. படத்திற்கு ஒரு பாடலாவது எல்லோரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. 1975ல் அறிமுகமான இளையராஜா, 1980லேயே 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். பாலுமகேந்திராவின் மூடுபனிதான் அவரது நூறாவது படம். 1983ல் 200வதுபடமான ஆயிரம் நிலவே வா வெளியானது. 1989 - 90ல் ஐநூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார் இளையராஜா. 2016ல் அவரது 1000வது படமாக தாரை தப்பட்டை படம் வெளியாது. இந்தப் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது, அறிமுகமாகி நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் அவரது இசையில் நீடித்துவரும் உன்னதத்தைக் காட்டுவதாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளையராஜாவின் 1000வது படமான தாரை தப்பட்டை படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது படம் ஓடும் தியேட்டருக்கு வெளியே நின்றபடியே அவரது பின்னணி இசையின் மூலம், "இதோ இங்கே அந்தக் கதாபாத்திரம் வருகிறது... அந்த. இருவர் இப்போது சந்திக்கிறார்கள்... இந்த இசையின்போது அந்த கேரக்டரின் மெளனம் திரையில் வருகிறது..." என்று நம்மை உணர வைக்கும் அசாத்திய இசை ஆளுமை ராஜாவினுடையது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ இசைமேதைகள் திரையுலகில் கோலோச்சினர். ஆனால், பின்னணி இசையில் இளையராஜாவுக்கு மட்டுமே ஒரு தனித்துவம் உள்ளது. அது அவருக்கே உரித்தான சிம்மாசனம். அவரைத் தவிர வேறு யாரும் அதில் அமர முடியாது எனக் குறிப்பிடுகிறார் மகேந்திரன். இசையில் மறுமலர்ச்சி திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக அவர் அறியப்படுவதற்கு மற்றுமொரு காரணம் "அரண்மனைகளிலும் அக்ரஹாரத்திலும் இருந்த தமிழ் சினிமா அவர் காலத்தில் கிராமத்தை நோக்கிக் கிளம்பியதுதான். கண்ணுக்கெட்டும் தூரம்வரை நிலப்பரப்பைக் காட்டும் கேமராக்களும் கலர் ஃபிலிம்களும் அதிகப் பயன்பாட்டுக்கு வந்தபோது அதற்குரிய இசையை இளையராஜா வைத்திருந்தார்" என்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி. பட மூலாதாரம்,YUGHABHARATHI/INSTAGRAM படக்குறிப்பு, திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக இளையராஜா அறியப்படுவதாகக் கூறுகிறார் பாடலாசிரியர் யுகபாரதி இது குறித்து பிபிசியிடம் பேசிய யுகபாரதி, தமிழ் மீது அவருக்கு இருந்த புலமை அதற்கு முக்கியமான காரணம் என்கிறார் அவர். "தமிழின் பிரபல இசையமைப்பாளர்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இளையராஜா தமிழின் வளமான சந்தக் கட்டுமானத்தை உள்வாங்கியவர். தமிழ் நிலப்பரப்போடு நேரடிப் பரிச்சயம் கொண்டவர். இதனால்தான் இளையராஜாவின் இசை தமிழரின் இசையாக மலர்ந்தது" என்று கூறும் யுக பாரதி, எளிய சந்தங்களையும் மக்களின் வழக்கில் உள்ள வார்த்தைகளையும் பாடல்களில் தந்தவர் இளையராஜா என்கிறார். "60களின் துவக்கத்தில் வெளிவந்த குலமகள் ராதை திரைப்படத்தில், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை என்று ஒரு பாடல் இருக்கிறது. அதே போன்ற பாடல், இளையராஜாவின் இசையில் வரும்போது 'உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல' என்று மாறிவிடுகிறது. அதேபோல, அருணகிரி நாதரின் 'ஏறுமயிலே ஏறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று' என்ற சந்தம், இளையராஜாவின் இசையில் 'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு' என்று மாறிவிடுகிறது. அதாவது, செவ்வியல் சந்தங்களை மக்கள் வழக்கில் உள்ள சந்தங்களாக மாற்றினார் இளையராஜா." என்கிறார் யுகபாரதி இளையராஜா சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும் 1400 படங்கள், 7000 பாடல்கள்: அன்னக்கிளி முதல் சிம்ஃபொனி வரை இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான காப்புரிமை யாருக்கு? சட்டம் சொல்வது என்ன? காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் இதே கருத்தை எதிரொலிக்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "இளையராஜா பொதுவாக மெலடி, காதல், சோகப் பாடல்களுக்காக சுட்டிக்காட்டவும் பாராட்டவும் படுகிறார். ஆனால், அவரிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு. இளையராஜா தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகுதான் மாற்றம் என்பது இசையில் மட்டுமில்லாமல், பாடல்களிலும் தென்பட ஆரம்பித்தது. எளிமையான வார்த்தைகள், நேரடித்தன்மை கொண்ட பாடல்கள் இவரது வருகைக்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் தென்பட ஆரம்பித்தது. இளையராஜாவும் அவரது சகோதரர் பாவலர் வரதராஜனும் இடதுசாரி மேடைகளில் எளிய, பிரசாரத்தன்மை கொண்ட பாடல்களைப் பாடியவர்கள். இளையராஜா திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கியபோது அந்த அம்சம் வெளிப்பட ஆரம்பித்தது. அப்படி நேரடித் தன்மை கொண்ட பல பாடல்களை இளையராஜாவின் இசையில் எழுதியவர் அவரது சகோதரரான கங்கை அமரன் என்பதும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பட மூலாதாரம்,STALINRAJANGAM/INSTAGRAM படக்குறிப்பு, இளையராஜாவிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு என்கிறார், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் மொழிப் பார்வை இளையராஜாவைப் பொறுத்தவரை, மொழிசார்ந்த பார்வையும் கூர்மையாக இருந்ததால் தமிழ் வார்த்தைகளைச் சிதைக்காத அளவில் அவரால் இசையமைக்க முடியும். பாபநாசம் சிவனுக்குப் பிறகு இளையராஜாவுக்குத்தான் சந்தங்களுடன் செய்யுள் இயற்றும் ஆற்றல் இருந்ததாகக் கருதுகிறேன் என்கிறார் யுகபாரதி. மேலும் ஒரு ராகத்தை எப்படியெல்லாம் பாடலாக மாற்ற முடியும் என்பதில் அவர் யாரும் அடைய முடியாத உயரங்களை அடைந்திருந்தார் என்கிறார் யுகபாரதி. இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவுகூர்கிறார் அவர். "ஒரு படத்திற்காக பாடல் எழுத வேண்டியிருந்தது. மூன்று ட்யூன்கள் அடங்கிய கேஸட்டை என்னிடம் கொடுத்து, மூன்றாவது ட்யூனுக்கு பாட்டெழுதும்படி சொல்லப்பட்டது. நானும் எழுதிவிட்டேன். அடுத்த நாள் இளையராஜாவை பாடலுடன் போய்ப் பார்த்தேன். அவர் பாடல் ஒலிப்பதிவுக்காக சேர்ந்திசைக் குழுவுடன் தயாராக இருந்தார். பிறகு பாடலை வாசித்துப் பார்த்தவர், அது ட்யூனுடன் பொருந்தவில்லையே என்றார். எனக்குக் குழப்பமாகிவிட்டது. பிறகுதான் நேர்ந்த குழப்பம் புரிந்தது. அதாவது, கேஸட்டை என்னிடம் கொடுத்தவர், இரண்டாவது ட்யூனுக்கு பாட்டெழுத வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக மூன்றாவது ட்யூனுக்கு எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனை இளையராஜாவிடம் விளக்கிவிட்டு, இரண்டாவது ட்யூனுக்கு நாளை எழுதிவருவதாகச் சொன்னேன். ஆனால், இளையராஜா என்னைக் கையமர்த்தினார். பிறகு உள்ளே சென்று தனது இசைக் குழுவினரிடம் சில மாற்றங்களைச் சொன்னார். பிறகு நான் எழுதிவந்த பாடலையே, இரண்டாவது ட்யூனில் பொருத்தினார். அதாவது அவரைப் பொறுத்தவரை எல்லா இசையும் ஒன்றுதான். கேட்பவர்களுக்குத்தான் அது வேறு,வேறு. இந்த சம்பவத்தை நேரில் பார்க்காவிட்டால் யாராலும் நம்பவே முடியாது" என்கிறார் யுகபாரதி. அழகர்சாமியின் குதிரை படத்தில் இடம்பெற்ற "பூவைக் கேளு, காத்தைக் கேளு" என்ற பாடல்தான் அது. திரையிசையைத் தவிர்த்து, இளையராஜா மேற்கொண்ட, தனியான ஆல்பங்கள், சிம்பனி உள்ளிட்ட பிற முயற்சிகளும் கவனிக்கத்தக்கவைதான். ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் பேசும் ஒவ்வொருவரது காதலிலும் சோகத்திலும் பிரிவிலும் மகிழ்ச்சியிலும் கேட்க சில இளையராஜா பாடல்களாவது உண்டு. இது வேறு யாரும் நிகழ்த்தாத சாதனை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgeg84x8q15o
-
அகதிகள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியமில்லை; மாறாக கொள்கையிலேயே மாற்றம் வேண்டும் - சுமந்திரன்
02 JUN, 2025 | 05:35 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாறாக இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளியன்று தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அதில் பின்வருமாறு கூறிப்பிட்டிருந்தார்: சட்டத்தின் ஊடாக அனுமதியளிக்கப்படாத துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிப்போருக்கு எதிராக தன்னியல்பாகப் பிரயோகிக்கப்படும் சட்டத்தின் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்குப் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொண்ட தரப்பினர் உரியவாறு செயலாற்றியிருந்தால், இச்சட்டத்தை இலகுவாக மாற்றியமைத்திருக்கமுடியும். இதுபற்றி நான் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடினேன். அவர் இக்கொள்கையை மாற்றியமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அத்தோடு இது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல. மாறாக இது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். நானும், அமைச்சர் சந்திரசேகரும் 2007 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அம்முகாம்களில்; இருந்த 28,500 இலங்கைப் பிரஜைகளுக்கு இந்நாட்டுப் பிரஜாவுரிமையை வழங்குவதற்கான சட்டத்தை 2008ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டோம். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பதிவை மேற்கோள்காட்டி தனது 'எக்ஸ்' தளத்தில் கடந்த சனிக்கிழமை பதிவொன்றைச் செய்திருந்த சுமந்திரன், 'குறித்த நபருக்கான பயண அனுமதிப்பத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதுடன், அது இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் அந்நபரைக் கைதுசெய்த குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள், இதுபற்றி ஏன் ஆராயவில்லை. மாறாக அவரைக் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தது ஏன்?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதேவேளை நேற்று திங்கட்கிழமை இதுபற்றி மற்றுமொரு பதிவைச் செய்துள்ள அவர், அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியமைப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதைப் பெரிதும் வரவேற்பதாகவும், இருப்பினும் இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 'ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் 'தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்' கீழ் நாடு திரும்பும் நபர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள். மாறாக அவர்கள் நாட்டுக்குள் வரவேற்கப்படுவார்கள் எனும் கொள்கைசார் அறிவுறுத்தல் மாத்திரமே அவசியமாக இருக்கின்றது' என்றும் சுமந்திரன் அப்பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216368
-
எரிபொருளில் கிடைக்கும் இலாபம் இன்று யாருடைய சட்டை பைகளுக்குள் செல்கிறது? - பிரேம்நாத் சி தொலவத்த கேள்வி
02 JUN, 2025 | 05:28 PM (எம்.மனோசித்ரா) உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், நமது நாட்டில் எவ்வித விலை திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அன்று எரிபொருளால் கிடைத்த இலாபம் தேசிய மக்கள் சக்தி கூறியதைப் போன்று கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் சென்றது உண்மையெனில், இன்று அது யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார். கொழும்பில் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி அப்போதைய அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் செல்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்தியது. ஆனால் இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவ்வாறெனில் இப்போது கிடைக்கும் இலாபம் யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது? அன்று உண்மையைக் கூறியிருந்தால், இன்று அரசாங்கத்துக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அன்றைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தான் இன்றும் இந்த அரசாங்கத்துக்கு உதவுகின்றனர். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவே பங்கேற்கின்றார். தமது ஆட்சியில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறிய நிதி அமைச்சின் செயலாளரும், மத்திய வங்கி ஆளுநரும் இன்றி இந்த அரசாங்கத்தால் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அன்று கூறிய பொய்களால்தான் இன்று இந்த அரசாங்கம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அரசாங்கத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/216375
-
திருகோணமலையில் காணி அபகரிப்பு, இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
02 JUN, 2025 | 06:01 PM வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில் சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கிறது. ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக் கூறி, பெரும் பிரச்சாரம் செய்துவந்த ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர் சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும். அத்துடன் நீண்ட நாட்களாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வினையும் தராமல் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலயத்தில் காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பல நூறு சமயத் தலங்களின் பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் நீள்கிறது என்று குரல் எழுப்பினர். https://www.virakesari.lk/article/216379
-
சூப்பர் பக்: மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் - ஆன்டிபயாடிக்குகளை கையாளுவதில் அதிகரிக்கும் முரண்பாடு
பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES படக்குறிப்பு, "நுண்ணுயிர் எதிர்ப்பு" நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கட்டுரை தகவல் எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சையில் மோசமான முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒருபுறம், ஒருவரின் உடலில் ஆன்டிபயாடிக்ஸ் வேலை செய்யாமல் போகும் அளவுக்கு தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டுகிறது மற்றும் கொடிய சூப்பர் பக் கிருமிகள் எழுச்சியடைய ஊக்கமளிக்கிறது. ஆனால் மறுபுறம், இந்த உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காததால் மக்கள் உயிரிழக்கின்றனர். Global Antibiotic Research and Development Partnership (GARDP) என்ற லாப நோக்கற்ற அமைப்பு நடத்திய ஒரு புதிய ஆய்வு, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெரிய நாடுகளில் எட்டில், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கார்பபெனெம்-எதிர்ப்பு கிராம்-எதிர்மறை (CRGN) தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தது. CRGN பாக்டீரியாக்கள் கடைசி வரிசை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்ட சூப்பர் பக் கிருமிகள் ஆகும். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் 6.9% நோயாளிகள் மட்டுமே பொருத்தமான சிகிச்சையைப் பெற்றனர் என்று தெரிய வந்துள்ளது. ஆன்டிபயாடிக் மீதான பாக்டீரியாவின் எதிர்ப்பு நிலை (antibiotic resistance) அதிகரித்து வருகிறது. CRGN தொற்றுகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது, ஆய்வு செய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் முழு ஆய்வில் 80% இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் 7.8% நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க முடிந்தது என்று தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. (ஆன்டிபயாடிக் மருந்துகளின் முழுமையான ஒரு கோர்ஸ் என்பது, ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தொற்று பூரண குணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய முழுமையான அளவுகளைக் குறிக்கிறது.) நீர், உணவு, சுற்றுச்சூழல் மற்றும் மனித குடலில் பொதுவாகக் காணப்படும் எதிர்மறை பாக்டீரியாக்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs), நிமோனியா மற்றும் உணவு நஞ்சாதல் என பல உடல்நலக் கோளாறுகளையும், நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்துகின்றன. இவை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் ICUக்களில் இருப்பவர்களுக்கு வேகமாகப் பரவி, அவர்களுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிவிடும். அதுமட்டுமல்ல, சில சமயங்களில் சிகிச்சையே சாத்தியமற்றதாகிவிடுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் கார்பபெனெம்-எதிர்ப்பு கிராம்-எதிர்மறை பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது இரட்டிப்பு சிக்கலாகிறது. ஏனெனில், அந்த பாக்டீரியாக்கள் மிகவும் சக்திவாய்ந்த சில ஆன்டிபயாடிக்குகள் மீதான எதிர்ப்பு நிலையை அதிகரித்து விடுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சூப்பர்பக்ஸ் என்றால் என்ன? சூப்பர்பக்ஸ் என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற கிருமிகள் ஆகும். அவை பொதுவாக அவற்றைக் கொல்லும் மருந்துகளுக்கு ஏற்றவாறு மாறிவிடுகின்றன. அவை மருந்துகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வளர்கின்றன. ஒரு கட்டத்தில், சிகிச்சைக்காக கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் வேலை செய்யாமல் போக வாய்ப்பு உள்ளது. "இந்த பிரச்னை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரிடமும் காணப்படுவதை தினமும் பார்க்கிறோம்" என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் அப்துல் கஃபூர் கூறுகிறார். "எந்தவித ஆன்டிபயாடிக்கும் வேலை செய்யாத நோயாளிகளை நாம் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது- அவர்கள் உயிரிழக்கிறார்கள்." ஆனால், இதிலுள்ள முரண்பாடு கொடூரமானது. உலகம் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், ஏழை நாடுகளில் அதற்கு எதிர்மறையான நிலை காணப்படுகிறது. சிகிச்சையளிக்கக்கூடிய தொற்றுநோயாக இருந்தாலும், உரிய மருந்துகள் கிடைக்காததால், அவை மக்களின் உயிரை பறிக்கின்றன. "பல ஆண்டுகளாக, ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் நிதர்சனத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், நோயாளிகளுக்குத் தேவையான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்கவில்லை," என்று GARDP இன் குளோபல் அக்சஸ் இயக்குநரும் ஆய்வின் மூத்த ஆசிரியருமான டாக்டர் ஜெனிஃபர் கோன் கூறுகிறார். இந்த ஆய்வில், கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் 8 நரம்பு வழி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. கொலிஸ்டின் உள்ளிட்ட பழைய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் முதல் செஃப்டாசிடைம்-அவிபாக்டம் போன்ற புதிய மருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டன. கிடைக்கக்கூடிய சில மருந்துகளில், டைஜெசைக்ளின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மருத்துவமனை ஐசியுக்கள் போன்ற இடங்களில் கிராம் நெகட்டிவ் பாக்டீரியா வேகமாகப் பரவுகிறது. பலவீனமான சுகாதார அமைப்புகள் மற்றும் பயனுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமான அளவு கிடைக்காததே சிகிச்சைகளில் ஏற்படும் இடைவெளிக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக, 8 நாடுகளில் 15 லட்சம் நோயாளிகளுக்கு டைஜெசைக்ளின் தேவைப்பட்ட நிலையில், 103,647 பேருக்கு மட்டுமே முழு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கிடைத்தது என்பது கவலையளிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இது, தொற்றுக்களை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக்குகளின் உலகளாவிய தேவைக்கும் விநியோகத்துக்கும் இருக்கும் இடைவெளியை காட்டுகிறது. இந்தியாவில், மருந்து கொடுத்தால் குணமாகக்கூடிய தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தேவையான ஆன்டிபயாடிக் கிடைக்காமல் போவதற்கு காரணம் என்ன? இதற்கு மருத்துவர்கள் பல தடைகளை சுட்டிக்காட்டுகின்றனர், சரியான சிகிச்சையைப் பெறுவது, துல்லியமான நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வது மற்றும் பயனுள்ள மருந்துகள் கிடைப்பது என பல காரணங்கள் உள்ளன. மருந்துகளின் விலையும் ஒரு பெரிய தடையாக உள்ளது, ஏனெனில் இந்த ஆன்டிபயாடிக்குகளில் பல. ஏழை நோயாளிகள் வாங்க முடியாத அளவு அதிக விலையுள்ளவையாக இருக்கின்றன. "இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வாங்கக்கூடியவர்கள் பெரும்பாலும் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்; வாங்க முடியாதவர்களுக்கு போதுமான அளவில்கூட வாங்க முடிவதில்லை" என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். "ஏழைகளுக்கு இந்த மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, வசதி படைத்தவர்கள் இவற்றை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு அமைப்பு நமக்குத் தேவை" என்று அவர் கூறுகிறார். ஆன்டிபயாடிக்குகளை பயன்படுத்தும் அளவில், இந்த மருந்துகளின் விலை மலிவாக்கப்பட வேண்டும். மேலும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, வலுவான ஒழுங்குமுறை முக்கியமானது. "மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்துச் சீட்டிலும், ஒரு தொற்று நிபுணர் அல்லது நுண்ணுயிரியலாளரின் ஒப்புதலும் இரண்டாவதாக இருக்க வேண்டும்" என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். "சில மருத்துவமனைகள் இரண்டாவது ஒப்புதல் நடைமுறையை பின்பற்றுகின்றன, ஆனால் பெரும்பாலானவை அவ்வாறு செய்வதில்லை. சரியான மேற்பார்வையுடன், இது நிலையான நடைமுறையாக மாறுவதை கட்டுப்பாட்டாளர்கள் தான் உறுதிசெய்ய முடியும்." ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைப்பதில் உள்ள சிக்கலைச் சரிசெய்யவும், மருந்துகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சிறந்த கொள்கைகள் மற்றும் வலுவான பாதுகாப்புகள் இரண்டும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மருந்துக்கான அணுகல் மட்டுமே நெருக்கடியைத் தீர்க்காது. புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஆன்டிபயாடிக் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள மருந்துகளே குறைவாக கிடைப்பது என பல உலகளாவிய பிரச்னைகள் உள்ளன. இந்தியா உலகின் மிகப்பெரிய ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (AMR) பிரச்னைகளை எதிர்கொள்கிறது. ஆனால் உள்நாட்டிலும் உலக அளவிலும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான திறவுகோலும் அதனிடம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளின் வளர்ச்சி மற்றும் அணுகலை இந்தியா வெற்றிகரமாக ஆதரிக்க முடியும்" என்று டாக்டர் கோன் கூறுகிறார். வலுவான மருந்துத் தளத்துடன், புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவது முதல் மேம்பட்ட நோயறிதல் வரை AMR கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. உள்ளூர் தரவுகளை உருவாக்குவதன் மூலம், தேவைகளை சிறப்பாக மதிப்பிடுவதற்கும், மருந்து விநியோகப் பாதையில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதற்கும் இந்தியா தனது ஆன்டிபயாடிக் ஆராய்ச்சியை வலுப்படுத்த முடியும் என்று டாக்டர் கோன் நம்பிக்கை தெரிவிக்கிறார். இது சரியான மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு அதிக இலக்குகள் கொண்ட தலையீடுகளை அனுமதிக்கும் என்றும் அவர் கருதுகிறார். பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு,கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியாவின் எலக்ட்ரான் நுண் வரைபடம் புதுமையான மாதிரிகள் ஏற்கெனவே உருவாகி வருகின்றன. உதாரணமாக, கேரள மாநிலம், கடுமையான தொற்றுநோய்களை நிர்வகிப்பதில் கீழ்மட்ட வசதிகளை ஆதரிக்கும் வகையில், "ஹப்-அண்ட்-ஸ்போக் அணுகுமுறையை" பயன்படுத்துகிறது. புற்றுநோய் மருந்து திட்டங்களில் காணப்படுவது போல், மருத்துவமனைகள் அல்லது மாநிலங்களில் ஒருங்கிணைந்த அல்லது தொகுக்கப்பட்ட கொள்முதல் திட்டம் மூலம், புதிய ஆன்டிபயாடிக் விலையையும் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சரியான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்காவிட்டால், நவீன மருத்துவம் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மருத்துவர்கள் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போவது, புற்றுநோய் நோயாளிகளின் சிக்கல்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் அல்லது அன்றாட தொற்றுகளை நிர்வகிக்கும் திறனை இழப்பது என பல அபாயங்களை மருத்துவம் எதிர்கொள்ளலாம். "ஒரு தொற்று நோய் மருத்துவராக, ஆன்டிபயாடிக்கின் பொருத்தமான பயன்பாட்டை, அதன் அணுகலின் ஒரு பகுதியாக பார்க்கிறேன் என்றாலும், அதை ஒரு பகுதியாக மட்டுமே நான் பார்க்கிறேன்," என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். "புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்தால், அவற்றை சேமிப்பதும் முக்கியமானது, அதாவது உரிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவற்றைச் சேமிப்பது முக்கியம்." தற்போது நம் முன்னிருக்கும் தெளிவான சவால் என்னவென்றால், ஆன்டிபயாடிக் மருந்துகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவை உண்மையிலுமே அவசியமாக தேவைப்படுபவர்களை சென்றடைவதை உறுதி செய்வதும் தான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn9je4x5859o
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு
02 JUN, 2025 | 03:34 PM இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$ (சுமார் ரூ. 270 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 47 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. KAMOSHIDA Naoaki Chargé d' Affaires ad interim, கண்ணிவெடி ஆலோசனைக் குழு (MAG) மற்றும் ஹாலோ அறக்கட்டளையுடன் (Halo Trust) அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)" திட்டத்தின் கீழ் இரண்டு கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கான மானிய ஒப்பந்தங்களில் மே 30, 2025 அன்று கையெழுத்திட்டார். MAG மற்றும் HALOவின் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 13,000 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும். இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல், மீள்குடியேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு அடிப்படை படியாக கண்ணிவெடி அகற்றலை ஜப்பான் கருதுகிறது என்று KAMOSHIDA வலியுறுத்தினார். ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கான வலுவான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை கண்ணிவெடி பாதிப்பு இல்லாத நாடாக மாறும் என்றும், இது நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில், MAG இன் இயக்குநர் ஜீனத் கரேவால் கூறினார். “இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கையில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் நில விடுவிப்பு நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நிலங்களை அகற்றுவது கிராமங்களில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவுவதோடு கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன, செழிப்பு மற்றும் பாதுகாப்பான தேசத்தை நோக்கிய பாதையை அமைக்கின்றன. ஜனவரி 2025 நிலவரப்படி, MAG மொத்தம் 100,930,005 ㎡நிலத்தை விடுவித்துள்ளது மற்றும் 2002 முதல் 103,467 க்கும் மேற்பட்ட வெடிக்கும் போர் எச்சங்களை அகற்றியுள்ளது. பல தசாப்தங்களாக ஆயுத மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆள் எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் பிற ஆபத்தான மாசுபாடுகளை அகற்றுவதற்கு ஜப்பான் தூதரகம் மற்றும் மக்கள் அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்கு MAG தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. “உயிர்களைக் காப்பாற்றுங்கள், எதிர்காலத்தைக் கட்டியெழுப்புங்கள்” என்ற எங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக, MAG தூதரகம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் கண்ணிவெடி இல்லாத இலங்கையை உருவாக்குவதற்கான எங்கள் இலக்கை அடைய அவர்களின் தொடர்ச்சியான ஆதரவையும் உதவியையும் எதிர்நோக்குகிறது.” HALOவின் துணைத் திட்ட மேலாளர் ஹன்னா எலிசபெத் பிக்டன் கூறுகையில்; “கடந்த 22 ஆண்டுகளில், ஜப்பான் HALOவின் மிகவும் நிலையான ஆதரவாளராக இருந்து வருகிறது. இக்காலத்தில், HALO கிட்டத்தட்ட 300,000 ஆள் எதிர்ப்பு கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழித்துள்ளது மற்றும் முன்னர் மாசுபட்ட 120 ㎢ நிலத்தை விடுவித்துள்ளது. இது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 150,300 நபர்களின் மீள்குடியேற்றத்திற்கு பங்களித்துள்ளது, நிலையான வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளது மற்றும் சமூக மறுகட்டமைப்பு மற்றும் நிலைப்படுத்தலை செயல்படுத்துகிறது. இது உள்ளூர் ஆண்களும் பெண்களும் மிகவும் மதிக்கப்படும் தொழிலில் பங்கேற்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கவும் உதவியுள்ளது. ஜப்பானின் ஆதரவுடன், மீதமுள்ள மாசுபாட்டைக் கண்டறிந்து அகற்றுவதில் HALO செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தை (NMAC) தேசிய நிறைவு செயல்முறையை செயல்படுத்துவதில் ஆதரிக்கிறது. கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு இந்த உதவி, இலங்கை அரசாங்கத்தை அதன் அனைத்து அறியப்பட்ட கண்ணிவெடி மற்றும் பிற வெடிக்கும் மாசுபாடுகளிலிருந்து நாட்டை விடுவிப்பதற்க்கும் அதன் ஆள் எதிர்ப்பு கண்ணிவெடி தடை ஒப்பந்தக் கடமையை நிறைவேற்றுவதற்க்கும் மிகவும் முக்கியமானது.” https://www.bbc.com/tamil/articles/cn9je4x5859o
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து 37 வருடங்களின் பின் நாடு திரும்பியவருக்கு பிணை ! Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 03:59 PM 37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், குறித்த நபர் இன்றையதினம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216353