Everything posted by ஏராளன்
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் பிளேஆஃப் சுற்று எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? ஓர் அலசல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் போட்டிகள் இன்று ( மே29) தொடங்குகின்றன. 2 அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலும், 2 அணிகள் எலிமினேட்டரிலும் விளையாடுகின்றன. இந்த ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அடுத்த மாதத்திலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பல வெளிநாட்டு தொடர்கள் தொடங்க இருப்பதால், ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் தங்கள் அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் லீக் ஆட்டங்களில் பல நேரங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்த வெளிநாட்டு வீரர்கள் பலர் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருப்பது அணிகளுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது. இருப்பினும் அதை ஈடுகட்டும் நோக்கில் வேறு வீரர்களை அணியில் சேர்த்து ப்ளேஆஃப் சுற்றை 4 அணிகளும் எதிர்நோக்குகின்றன. அந்த வகையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், குஜராத் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாததால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராகும். ப்ளே ஆஃப் சுற்று எப்படி நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை, பஞ்சாப், குஜராத், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. நியூ சண்டிகரில்தான் முதல் தகுதிச் சுற்றும், எலிமினேட்டர் சுற்றும் நடக்கின்றன. இதில் பஞ்சாப், ஆர்சிபி அணிகள் 19 புள்ளிகள் பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்து முதல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி, 16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் போட்டியிடும். இதில் முதல் தகுதிச் சுற்றில் மோதும் இரு அணிகளில் எந்த அணி வெல்கிறதோ அது நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் 2வது தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இதில் வெல்லும் அணிதான் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அதாவது முதல் தகுதிச் சுற்றில் வென்ற அணியுடன் கோப்பைக்கான போராட்டத்தில் ஈடுபட முடியும். இதுதான் ப்ளே ஆஃப் சுற்று நடக்கும் முறையாகும். ஆர்சிபி அணி எப்படி தயாராகியுள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடிவரும் ஆர்சிபி அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் போராடுகிறது. இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். "ஈசாலா கப் நமதே" என்ற கோஷம் இந்த முறை நனவாகாதா என்ற ஏக்கம் ரசிகர்கள் முகத்தில் தெரிகிறது. கடந்த 6 சீசன்களில் 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் ஆர்சிபி திணறுகிறது. ஆனால் இந்த முறை ஆர்சிபி அணி சீசன் தொடக்கத்தில் இருந்து அற்புதமாக தயாராகி வந்திருக்கிறது. பெங்களூரைத் தவிர்த்து வெளி-மைதானங்களில் நடந்த 7 போட்டிகளிலும் ஆர்சிபி வென்று சாதனை படைத்தது. வலுவான பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அற்புதமான கலவையுடன் ஆர்சிபி அணி இருக்கிறது. பஞ்சாப் அணியுடன் இதுவரை ஐபிஎல் தொடரில் 35 முறை மோதியுள்ள ஆர்சிபி அணி 17 முறை வென்றுள்ளது, 18 முறை தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசனிலும் பெங்களூருவில் பஞ்சாப் அணியிடம் தோற்ற ஆர்சிபி அணி, முலான்பூரில் வைத்து பஞ்சாப் அணியை வென்று பதிலடி கொடுத்தது. பஞ்சாப் அணிக்கு எந்தவிதத்திலும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் சளைக்காத அணியாக ஆர்சிபி இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் யார் இல்லை? ஆர்சிபி அணியில் லீக் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல், லுங்கி இங்கிடி ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடமாட்டார்கள், அதேபோல காயத்தால் தேவ்தத் படிக்கலும் ஆடமாட்டார். இவர்கள் 3 பேரும் இல்லாத நிலையில் ஆர்சிபி களமிறங்குகிறது. இதில் இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசபராபாணியும், படிக்கலுக்குப் பதிலாக மயங்க் அகர்வால், டிம் சீபர்ட் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். இதில் டிம் டேவிட் தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்று நடக்கும் ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகம் அவருக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் களமிறங்கலாம். டிம் டேவிட்டுக்கு இணையாக பெரிய ஹிட்டராக லிவிங்ஸ்டோன் இருக்கமாட்டார் என்றபோதிலும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். இதில் முக்கிய அம்சமாக ஹேசல்வுட் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று விளையாடுவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால், முசாபராபாணி ஆகியோர் இருப்பது பெரிய வலிமையாகும். அதேபோல சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் இருப்பதும், பேட்டர்கள் வரிசையில் விராட் கோலி, பில் சால்ட், பட்டிதார், மயங்க் அகர்வால், ரோமாரியா ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டோன் வரை நல்ல பேட்டிங் செய்யக்கூடிய வரிசை இருப்பது மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வென்றுவிட்டால், 2016ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு ஆர்சிபி முன்னேறும். பஞ்சாப் அணி பைனலுக்கு முன்னேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26 கோடி கொடுத்து வாங்கியது வீண்போகவில்லை என்பது அணியை ப்ளே ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்து நிரூபித்துவிட்டார். அடுத்ததாக பைனலை எதிர்நோக்கி பஞ்சாப் அணி இருக்கிறது. கடைசியாக 2014-ஆம் ஆண்டு பைனலுக்கு முன்னேறிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் தோற்றது, அதன்பின் 10 ஆண்டுகளாக அந்த அணி பைனலுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை. இந்நிலையில் இந்த முறை பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் முன்னேறியுள்ளது. லீக் போட்டிகளில் சில வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறி சுவைத்து வந்த பஞ்சாப் அணி, கடைசி சுற்று லீக் போட்டிகளில் வென்று 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியுடன் மோதும் பஞ்சாப் அணி வென்றி பெற்றால், நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். பஞ்சாப் அணியில் லீக் போட்டிகளில் ஆடிய மார்க்கோ யான்சென், மேக்ஸ்வெல், பெர்குசன் ஆகியோர் ப்ளே ஆப் சுற்றில் ஆடமாட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக, கெயில் ஜேமிஸன், மிட்ஷெல் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியைப் பொருத்தவரை இந்த சீசன் முழுவதுமே பெரும்பாலும் உள்நாட்டு வீரர்களை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வெளிநாட்டு வீரர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரிதாக யாரையும் ப்ளேயிங் லெவனில் கொண்டுவரவில்லை. ஆதலால், யான்சென், மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணியை பெரிதாக பாதிக்காது. அதேசமயம், காயத்தால் ஆடாமல் இருந்த சஹல் அணிக்கு திரும்புவது பெரிய பலம். யான்சென் இல்லாத நிலையில் ஜேமிஸன் கொண்டுவரப்படலாம். இதைத் தவிர பெரிதாக பஞ்சாப் அணியில் மாற்றம் இருக்காது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பஞ்சாப் அணி ஆர்சிபி அணிக்கு வலுவான சவால் அளிக்கும். வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே ஓரளவுக்கு அச்சுறுத்தல் தரக் கூடியவர். மற்றவகையில் ஜேமிஸன், ஓமர்சாய் பந்துவீச்சை ஆர்சிபி வீரர்கள் எளிதாக ஆடிவிடக்கூடியவர்கள். ஆனால் சுழற்பந்துவீச்சில் ஹர்பிரித் பிரார், சஹல் ஆகியோரின் 8 ஓவர்கள் நிச்சயமாக சவாலாக இருக்கும். பேட்டிங்கில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ், இங்கிலிஸ், நேஹல் வதேரா, சசாங்சிங், ஸ்டாய்னிஷ், ஓமர்சாய், ஜேமிசன் வரை சிறப்பாகவே பேட் செய்யக்கூடிய வரிசையை பஞ்சாப் வைத்துள்ளது ஆர்சிபி அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்சிபி அணியை ஒப்பிடும்போது சற்று வலிமையாக இருப்பது சாதகமான அம்சமாகும். குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குஜராத் அணியின் சுப்மான் கில் மற்றும் ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றுகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து வந்தநிலையில் கடைசி இரு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளால் 18 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இதனால் எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் ஆடி, அதில் வென்று, 2வது தகுதிச்சுற்றில் ஆடி வென்று, பைனலுக்கு முன்னேறய வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி இருக்கிறது. குஜராத் அணிக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர், ரபாடா, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக இலங்கை வீரர் குஷால் மென்டிஸ், சனகா சேர்க்கப்பட்டுள்ளனர். பட்லர், ரபாடா, பிலிப்ஸ் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பின்னடைவுதான். ஏனென்றால், குஜராத் அணி லீக் போட்டிகளில் சேர்த்த ரன்களில் 73% ரன்கள் டாப்ஆர்டரில் 3 பேட்டர்கள் சேர்த்ததாகும், அதில் பட்லரும் ஒருவர். பட்லர் அணியில் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பலவீனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதை குஷால் மெண்டிஸ் நிரப்புவாரா என்பதும் தெரியவில்லை. அடுத்ததாக லெக் ஸ்பின்னர் ரஷீத் கானின் மோசமான ஃபார்ம் குஜராத் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ரஷீத் கான் 14 போட்டிகளில் ஆடி இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓவருக்கு 9 ரன்களும் 53 பந்துவீச்சு சராசரி வைத்து மோசமாக பந்துவீசி வருகிறார். எலிமினேட்டர் சுற்றில் ரஷித் கான் எழுச்சி பெற்று பந்து வீசினால் தான் குஜராத் அணி தப்பிக்க முடியும் இல்லாவிட்டால் கடினம் தான். ரஷித் கான் தவிர்த்து சாய் கிஷோர், திவேட்டியா இருவர் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை வேகப்பந்துவீச்சில் சிராஜ், அர்ஷத் கான், கோட்ஸி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை. வலுவான பந்துவீச்சு இல்லாததால் தான் கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களிலும் குஜராத் அணி, எதிரணியான சிஎஸ்கே, லக்னெள அணியை 230 ரன்கள் வரை சேர்க்க அனுமதித்தது. குஜராத் அணியின் முக்கியமான பலவீனம் கடந்த 2 போட்டிகளிலும் அம்பலப்பட்டுவிட்டது. லீக் சுற்றுகளில் பெற்ற வெற்றிகள் பெரும்பாலும் டாப்ஆர்டரில் இருக்கும் சுதர்சன், கில், பட்லர் ஆகியோர் சேர்த்த ரன்களால் பெற்ற வெற்றியாகும். நடுவரிசை பேட்டர்களை வைத்து குஜராத் அணி பெரிதாக சோதித்துப் பார்க்கவில்லை. டாப்-ஆர்டரில் 3 பேட்டர்களே பெரும்பாலான போட்டிகளை முடித்துவிட்டனர். இந்தச் சூழலில் கடந்த 2 போட்டிகளிலும் நடுவரிசை பேட்டர்களை களமிறங்கி பேட் செய்யும்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எந்தஅளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. உண்மையில் குஜராத் அணியின் நடுவரிசையில் ராதர்போர்ட், ஷாருக்கான், திவேட்டியா ஆகியோர் இருந்தாலும் இவர்களின் பேட்டிங்கில் நிலைத்தன்மைஇல்லாதது பலவீனம். குஜராத் அணி ஒட்டுமொத்தத்தில் கில், சுதர்சன் இருவரின் தொடக்க பேட்டிங்கை நம்பியை இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தால், குஜராத் அணியின் நிலைமை மதில்மேல் நிற்கும் பூனையாக மாறிவிடும். 6-வது கோப்பையை நோக்கி மும்பை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா மும்பை அணி தோல்வியுடன் சீசனைத் தொடங்கினாலும் பும்ராவின் வருகை, ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் ஃபார்முக்கு திரும்பியபின் மும்பை அணி வலுவாக வலம் வந்தது. 16 புள்ளிகளுடன் இருந்தாலும் மும்பை அணி வைத்திருக்கும் ரன்ரேட் முதலிடத்தில் இருக்கும் அணியிடமே இல்லை. எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியுடன் மும்பை அணி மோதுகிறது. லீக் சுற்றுகளில் குஜராத் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலுமே மும்பை அணி தோற்றுள்ளது. ஆனால் அப்போதிருந்த மும்பை அணியைவிட முற்றிலும் மாறியுள்ளது தான் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தப் போகிறது. மும்பை அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்றாலும் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் மும்பை அணி அனைத்து அணிகளுக்கும் சாவலாகவே திகழ்கிறது. பந்துவீச்சில் பும்ரா, போல்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சஹர் என வகையான பந்துவீச்சாளர்கள், சான்ட்னர், கரன் சர்மா, நமன் திர் என சுழற்பந்துவீச்சாளர்களுடன் நடுப்பகுதி ஓவர்களை நகர்த்துகிறது. மும்பை அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்கள் வில் ஜேக்ஸ், ரிக்கெல்டன், கார்பின் போஸ் ஆகியோர் இல்லாவிட்டாலும், பேர்ஸ்டோ, அசலங்கா, கிளீசன் வருகை அந்த அணிக்கு பெரிய பலம் சேர்க்கும். ரோஹித் சர்மாவுடன், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேர்ஸ்டோ மட்டும் களத்தில் நின்றுவிட்டால் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்வது உறுதியாகும். இது தவிர சூர்யகுமார், திலக் வர்மா, அசலங்கா அல்லது பேவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், சான்ட்னர் வரை ஓரளவு நிலைத்து ஆடக்கூடிய பேட்டர்களை மும்பை அணி வைத்துள்ளது. குஜராத் அணியை ஒப்பிடும்போது, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாகவே மும்பை அணி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபிக்கும், பஞ்சாப் அணிக்கும் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மிகுந்த சுவாரஸ்யத்தையும், கடைசிப் பந்துவரை பரபரப்புடன் நகரும் என நம்பலாம். ஏனென்றால் இரு அணிகளுமே தங்களிடம் இருந்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக சரியான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளன. உள்நாட்டு வீரர்களும் வலுவாக இருப்பதால் நிச்சயம் சவாலாக இருக்கும். எலிமினேட்டர் சுற்றைப் பொருத்தவரை குஜராத் அணி, மும்பை அணி இடையிலான ஆட்டத்தில் சாய் சுதர்சன், சுப்மான் கில் ஆட்டம் ரசிகர்களை ஈர்க்கலாம். மும்பை அணி முதலில் பேட் செய்து 230 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துவிட்டாலும் குஜராத் அணி திணறக்கூடும். ஆதலால், எலிமினேட்டர் போட்டி, குஜராத் அணிக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c308v0qyqn4o
-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 02:33 PM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது. பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கருதுகின்றார். இரு அரசுகள் தீர்வு முன்னர் எப்போதையும் விட அவசியமானதுஇஎனினும் யுத்தம்இ .இடம்பெயர்வுஇதீவிரதன்மை மிகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை போன்றவற்றால் அது முன்னர் எப்போதையும் விட அதிக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேலின் காசாமீதான குண்டுவீச்சுக்கள் காரணமாகவும்இஇஸ்ரேலின் மூன்று மாத கால தடைகள் காரணமாக உணவிற்கும் மருந்திற்கும் நீருக்கும் காசாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாலும் சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள அந்த மாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் குறித்து பிரான்ஸ் தனது நம்பிக்கைகளை குறைத்துள்ளது. அராபிய தேசங்கள் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தே ஆர்வமாக உள்ளன பாலஸ்தீன தேசம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன தேசத்திற்கான அடித்தளத்தினை ஆதரிப்பதற்காக பிரிட்டன் சகாக்களுடனும் ஏனைய நாடுகளுடன் இணைந்து எதனையும் செய்ய தயார் என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த முதல் ஜி7 நாடுகளாக பிரான்சும் இங்கிலாந்தும் மாறலாம். பாலஸ்தீன தேசம் என்பது பாலஸ்தீனியர்களின் தசாப்தகால கோரிக்கை. இதேவேளை பிரான்ஸ் இராஜதந்திரிகளின் முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.பிரான்சின் நடவடிக்கை ஹமாசினை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுகின்றதுஇ2023 பயங்கரவாத தாக்குதலிற்காக அந்த அமைப்பிற்கு வெகுமதி வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது. பாலஸ்தீன தேசத்தை பிரிட்டனும் பிரான்சும் அங்கீகரித்தால் இஸ்ரேல் இதனையே தெரிவிக்கப்போகின்றது. கடந்த ஆண்டு ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நிலையில் 140க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பல வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை மக்ரோனின் முன்னிலை பல ஆண்டுகளாக பாரிஸ் பாலஸ்தீன பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பிரான்ஸ் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என எச்சரிக்கiயும் விடுத்துவந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் "அங்கீகாரத்தை நோக்கி நகர" வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசு இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாட்டில் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மக்ரோன் கூறினார். ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை. இப்போது காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து வருவதால் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பது என்பது அமைதியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக ஒரு இஸ்ரேலிற்கு எதிரான ஒரு கண்டனமாகத் தோன்றும் என்று சிரியாவிற்கான முன்னாள் தூதரும் இன்ஸ்டிட்யூட் மோன்டைக்னேவின் உறுப்பினருமான மைக்கேல் டக்லோஸ் விளக்கினார். இது இஸ்ரேலுக்கு எதிரான கண்டனமாக இருக்கும்" என்று அவர் கூறினார். இருப்பினும் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பது "இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான நிபந்தனைகளை வரையறுக்க அரபு நாடுகளை ஊக்குவிக்கும்" என்று டுக்லோஸ் கூறினார். ஜூன் 17 முதல் 20 வரை நியூயார்க்கில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் இயல்பாக்கத்தை நோக்கி "நடவடிக்கைகளை" எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாக மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரெஞ்சு தூதர் கூறினார். இறுதியில் காசா பகுதியில் வன்முறையை நிறுத்துவதும் ஓரளவிற்கு மேற்குக் கரையில் வன்முறையை நிறுத்துவதும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் மிகப்பெரிய இராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா என்ன செய்ய முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஐரோப்பிய அதிகாரிகள் கவனித்தாலும்இ வாஷிங்டன் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை. இது இறுதியில் வெற்றுப்பட்டாசாக மாறலாம் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215904
-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலை ; 240க்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், சட்டத்தரணிகள் நீதியமைச்சருக்கு கடிதம்
Published By: RAJEEBAN 29 MAY, 2025 | 02:21 PM பயங்கரவாத தடைச்சட்டத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும், மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என 240க்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் மதகுருமாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். சிவில் சமூக அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள இவர்கள், ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். நீதியமைச்சருக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து பரிந்துரைகளை கருத்துக்களை யோசனைகளை முன்வைக்குமாறு கோரும் பத்திரிகை அறிவிப்பு குறித்து (லங்காதீப 16-5-2025 இல் வெளியானது இலங்கையின் கரிசனை கொண்டுள்ள பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் பதிலளிக்கின்றோம். பொதுமக்களிற்கு தங்கள் கருத்துக்கள் யோசனைகள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு வெறுமனே இரண்டுவார கால அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் பொதுமக்களிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற மிகக்கடுமையான ஒடுக்குமுறை சட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் தக்கவைக்காது என்ற வெளிப்படையான வாக்குறுதியும் வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என வெளியாகும் அறிக்கைகளும், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும்,மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயல். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேசிய மக்கள் வழங்கிய வாக்குறுதி தற்போது ஆட்சியில் உள்ள கட்சியினால் மழுப்பப்படுகின்றது. இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை பார்க்கும்போது இலங்கையின் பெரும்பான்மை நிர்வாக சாதனங்கள் , இனவெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் எவ்வாறு சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற விடயம் குறித்த அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த குழுவில் முக்கியமானவர்கள் உள்வாங்கப்படவில்லை, பெருமளவிற்கு அரசாங்க அதிகாரிகள் காணப்படுகின்றனர், இராணுவத்தினரும்,பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் காணப்படுகின்றனர், ஆனால் பாதிக்கப்ட்டவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களோ தமிழ் முஸ்லீம் சமூகத்தினரோ இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த குழு மக்களின் பார்வையில் எந்த நியாயதன்மையும் இல்லாததாக காணப்படுகின்றது, மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக,குறிப்பாக எங்கள் சமூகத்தில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக இது காணப்படவில்லை. ஈவிரக்கமற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மனித உயிர்களிற்கு ஏற்பட்ட பாரிய அளவு இழப்புகள், ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்து நீதியமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/215983
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
நடிகர் ராஜேஷ் காலமானார் - ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1970களிலும் 80களிலும் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் காலமானார். மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜேஷிற்கு இன்று காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷின் மனைவி கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கத்தக்க, அழுத்தமான பாத்திரங்களில் திரையில் தோன்றினார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அவர், டப்பிங் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும், தவிர்க்க இயலாத காரணங்களால் தன்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக பேட்டி ஒன்றில் நடிகர் ராஜேஷ் தெரிவித்திருந்தார். கே. பாக்கியராஜ் திரைக்கதையில் பாலகுரு இயக்கிய 'கன்னிப் பருவத்திலே' படத்தில் நடிகர் ராஜேஷ் கதாநாயகனாக நடித்தார். இதுவே அவரது முதல் படமாக அமைந்தது. 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் இவருக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரமாக அமைந்தது. 2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ் ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி? 1949ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவில்லை. சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக யூ டியூபில் தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துவந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0qg5g8glq0o
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 02:07 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி தொடர்பான வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இங்கே நீதிமன்ற நடவடிக்கையின்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள், காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனித புதகுழி வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே சட்ட வைத்திய அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட இருந்தது. இன்று சட்ட வைத்திய அதிகாரியின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இறந்த மண்டை ஓட்டு தொகுதிகளில் எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? இறப்புக்கான காரணங்கள் போன்ற விவரங்களும் சம்பவத்திற்கான விடயதானங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த இறுதி அறிக்கைகளை அடுத்து காணாமல் போனோர் அலுவலகத்தின் இந்த இறுதி அறிக்கைகள் காணப்படுகின்ற இலக்கங்கள், அதாவது தமிழீழ விடுதலை புலிகளுடைய இலக்கமான கருதப்படும் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கிறார்கள். அந்த பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான , தொடர்புடைய மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற பதிவாளரிடம் இது சம்பந்தமாக தெரிவிக்கும் போது மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது. ஆகவே இந்த இறுதி அறிக்கையை வைத்துக்கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் பத்திரிகை பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215984
-
ரப் பாடகர் வேடன்
அண்ணை, வழக்குப் போட்டவர் சு.சாமி எல்லோ? அதை முன்னெடுத்தது தி.மு.க என்று நினைக்கிறேன். வாய்தாவால் கர்நாடகத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
எங்கட சனம் படிக்க அனுப்பினால் எல்லோ?!
-
தபாலக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 01:21 PM தபாலக ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை. முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது. இருவரது குரல் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. https://www.virakesari.lk/article/215978
-
ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
டிரம்பின் வரி விதிப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை - வரி வசூலிப்பில் உடனடி மாற்றம் இருக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ் பதவி, வணிக நிருபர், பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவரது பொருளாதாரக் கொள்கைகளின் முக்கிய அங்கமான வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, அதிபர் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதிபர் டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்திய அவசரச் சட்டம், கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகள் மீதும் ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கவில்லை என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் பிரத்யேக அதிகாரம், அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும், பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான அதிபரின் அதிகாரம் அந்த உரிமையை மீற முடியாது என்றும் மன்ஹாட்டனைத் தளமாகக் கொண்ட அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு வெளியானதும் டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களும் சட்டவிரோத குடியேறிகளும் அதிக அளவில் நுழைவதாக கூறிய டிரம்ப் நிர்வாகம், இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பிறகு சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதித்த தனித்தனியான வரிகளையும் நீதிமன்றம் தடை செய்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் "தேசிய அவசர நிலையை எவ்வாறு சரியாகக் கையாள வேண்டும் என்பதைக் தீர்மானிப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் பொறுப்பல்ல," என வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவதாக உறுதியளித்தார். இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், அமெரிக்க மகத்துவத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், நிர்வாக அதிகாரத்தின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார். வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் 5 சிறு வணிகங்கள் சார்பில், பாரபட்சமற்ற 'லிபர்ட்டி ஜஸ்டிஸ் சென்டர்' தாக்கல் செய்த இந்த வழக்கு, டிரம்ப் முன்வைத்த "விடுதலை நாள்" வரிகளுக்கு எதிரான முதல் முக்கியமான சட்ட சவாலாக உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12 மாகாணங்களில் ஒன்றான நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். "சட்டம் தெளிவாக உள்ளது. எந்தவொரு அதிபருக்கும் தாங்கள் விரும்பும் போதெல்லாம் தனியாக வரிகளை உயர்த்த அதிகாரம் இல்லை" என்று கூறிய லெட்டிடியா ஜேம்ஸ், "இந்த வரிகள் உழைக்கும் குடும்பங்கள் மற்றும் அமெரிக்க வணிகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி உயர்வு. இதைத் தொடர அனுமதித்திருந்தால், அதிகமான பணவீக்கம், அனைத்து வணிகங்களுக்கும் பொருளாதார சேதம் மற்றும் நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்பட வழிவகுத்திருக்கும்" என்றும் தெரிவித்தார். வரி வசூலிப்பில் உடனடி மாற்றம் இருக்குமா? நீதிமன்றத்தின் தீர்ப்பின் உடனடி தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. இந்த வழக்கு மேல்முறையீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். டிரம்ப் நிர்வாகம் தனது மேல்முறையீட்டில் தோல்வியுற்றால், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம் (CBP) அதன் அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று CBP இன் முன்னாள் உயர் அதிகாரி ஜான் லியோனார்ட் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அமெரிக்காவின் உயர் நீதிமன்றங்கள் டிரம்பிற்கு மிகவும் சாதகமாக இருக்கலாம். ஆனால் அனைத்து நீதிமன்றங்களும் இந்த தீர்ப்பை உறுதி செய்தால், வணிக நிறுவனங்கள் இதுவரை செலுத்திய தொகைக்கு வட்டியுடன் பணத்தைத் திரும்பப் பெறும். இவற்றில் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படுபவை அடங்கும், அவை தற்போது பெரும்பாலான நாடுகளுக்கு 10% ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. சீனப் பொருட்களுக்கு 145% ஆக உயர்த்தப்பட்டது, பின்னர் அந்த வரி விதிப்பு 30% என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டது. எல்லையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், வரிகள் இன்னும் செலுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் லியோனார்ட் கூறினார். எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரிகள் இந்த தீர்ப்பால் பாதிக்கப்படவில்லை, ஏனெனில் அவை வேறுபட்ட சட்டத்தின் கீழ் வருகின்றன என்று அவர் மேலும் கூறினார். "வர்த்தகப் போரின் எல்லை மீறிய தன்மையால் தூண்டப்பட்டு, பல வாரங்களாக நீடித்த நிலையற்ற தன்மைக்குப் பிறகு முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதை சந்தை எதிர்வினைகள் ஓரளவு காட்டுகின்றன" எஸ்.பி.ஐ. சொத்து மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் இன்னெஸ் குறிப்பிட்டுள்ளார். "அமெரிக்க நீதிபதிகள் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர். ஓவல் அலுவலகம் ஒரு வர்த்தக மேசை அல்ல, அரசியலமைப்பு ஒரு வெற்று காசோலை அல்ல." என்று இன்னெஸ் கூறினார். பட மூலாதாரம்,EPA சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் பற்றி நீதிபதிகள் கூறியது என்ன? டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிரான ஏழு சட்ட சவால்களில் ஒன்றாக இந்த வழக்கு உள்ளது. இதனுடன் சேர்த்து, 13 அமெரிக்க மாகாணங்களும், பிற சிறு வணிகக் குழுக்களும் வழக்கு தொடர்ந்துள்ளன. 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) இந்த வரிகளை விதிக்க உதவியதாக டிரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இத்தகைய விரிவான அளவில் வரி விதிப்பதற்கான அதிகாரத்தை, அந்தச் சட்டம் (IEEPA) அவருக்கு வழங்கவில்லை என இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்தது. "உலகளாவிய மற்றும் பழிவாங்கும் வகையிலான வரி உத்தரவுகள், இறக்குமதிகளை வரிகளின் மூலம் கட்டுப்படுத்த சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) மூலம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லையை மீறுகின்றன. அந்த உத்தரவுகளில் குறிப்பிடப்பட்ட அச்சுறுத்தல்களை சரியாக கையாளாததால், இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்ததாகக் கருதப்படுகின்றன," என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி, டிரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்தார். அதன் பின்னர் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் சில வரி விதிப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு, உலக நிதி சந்தைகள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் இன்று (வியாழக்கிழமை) காலை ஆசியாவில் பங்குச் சந்தைகள் உயர்ந்தன, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சுமார் 1.5% உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் ASX 200 குறியீடும் சற்று உயர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்க பங்குகளின் எதிர்கால ஒப்பந்தங்களும் (US stock futures ) உயர்ந்தன. எதிர்கால ஒப்பந்தங்கள் என்றால், எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வாங்க அல்லது விற்க ஏற்பாடு செய்யும் ஒப்பந்தங்கள். இவை, பங்குச் சந்தைகள் திறக்கும் நேரத்தில் அவை எவ்வாறு செயல்படலாம் என்பதை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு அறிகுறியாகவும் உள்ளன. ஜப்பானிய யென் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற நாணயங்களுக்கு எதிராகவும் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crr7kzkjg15o
-
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்
அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் Published By: DIGITAL DESK 2 29 MAY, 2025 | 12:47 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னிட்டு, விசேட கலந்துரையாடல் ஒன்றினை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடத்தினர். இந்த கலந்துரையாடலின் போது, “மீண்டெழும் அலைகள்” எனும் தூரநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, 2025 மற்றும் 2035 ஆண்டுகளை மையமாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார். இவை மூலம் யாழ். மாவட்டத்தை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முழுமையாக மேம்படுத்தும் நோக்கமுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணத்திற்கான திணைக்கள அதிகாரிகள், இந்த திட்டங்கள் தொடர்பான தகவல்களை விளக்கிக் கூறினர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சந்திரசேகர் தமது தரப்பிலிருந்து யோசனைகளையும் முன்வைத்து, திட்டங்கள் மீது கருத்து வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், “இந்த திட்டங்கள் வளமானதொரு யாழ்ப்பாணம் மாவட்டத்தை உருவாக்கும் ஒரு முக்கிய பக்கபலமாக அமையும். மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கம் ஏற்படும்,” எனத் தெரிவித்தார். மேற்படி கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் க. இளங்குமரன், ஜெ. ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, அத்துடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர் ஸ்ரீ வாகீசன், முன்னாள் விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான சு. கபிலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215973
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
விகிதாசாரப்படி சரி தானே அண்ணை!
-
ரப் பாடகர் வேடன்
அவர் கட்சி வைத்திருக்கிறார் அண்ணை! இவர் எழுதி, இசையமைத்து பாடுபவர் தானே? என்றாலும் மக்களாதரவால் தான் பிணையில் விட்டிருக்கிறார்கள்.
-
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து ஈலோன் மஸ்க் வெளியேறுகிறார் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் தனது நேரம் "முடிவுக்கு வருகிறது" என்று கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடக தளத்தில், டோஜ் (DOGE) என்று அழைக்கப்படும் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார்- ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைகிறது. டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும். "ஒரு சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக் காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் எழுதினார். "DOGE பணி காலப்போக்கில் வலுப்பெறும், ஏனெனில் இது அரசாங்கம் முழுவதுமான ஒரு வழக்கமாக மாறும்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் மசோதா மீது மஸ்க் அதிருப்தி வெள்ளை மாளிகை புதன்கிழமை இரவு ஈலோன் மஸ்க்கை சிறப்பு அரசு ஊழியர் பொறுப்பிலிருந்து விலக்கும் பணிகளை தொடங்கும் என்று பிபிசி நம்புகிறது. பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் "ஏமாற்றம்" அடைந்ததாக அண்மையில் கூறியிருந்த நிலையில் மஸ்கின் வெளியேற்றம் நடக்கிறது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா உரிமையாளரான மஸ்க் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளி சிபிஎஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், "இந்த மசோதா அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும்" என்றார். இது தன்னால் வழிநடத்தப்படும் டோஜ் துறையால் செய்யப்படும் "வேலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அவர் நினைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குடியரசுக் கட்சியின் மெகா நன்கொடையாளரான மஸ்க், குழப்பம் நிறைந்த நிலையற்ற அரசியல் ஈடுபாட்டில் இருந்து விலகுகிறார். இந்த அரசியல் நுழைவு தான் அவரை டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக மாற்றியது. அதேநேரத்தில் அவரது டெஸ்லா மின்சார கார் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது. டெஸ்லா சமீபத்தில் இதே நிலைமை தொடரக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்தது. வளர்ச்சிக்கான கணிப்பை வழங்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. ஈலோன் மஸ்க் கடந்த மாதம் முதலீட்டாளர்களிடம் டோஜுக்கு ஒதுக்கும் நேரம் "கணிசமாகக் குறையும்" என்றும், "எனது அதிக நேரத்தை டெஸ்லாவுக்கு ஒதுக்குவேன்" என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8615pe51zdo
-
தினமும் 520 மில்லியன் ரூபாய் சிகரெட்டுக்காக செலவிடப்படுகின்றது - மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 11:16 AM எமது நாட்டில் மாத்திரம் தினமும் 520 மில்லியன் ரூபாய் சிகரெட் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. அத்தோடு, கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு புகைத்தலினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்) என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது சாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணிகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது. "சிகரெட்டுகளுக்கான வரியைக் குறைப்பது அதிக சிகரெட் கடத்தலுக்கு வழிவகுக்கும் என மக்கள் நினைக்கிறார்கள், இது முற்றிலும் உண்மையல்ல" என தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதாக தேசிய அதிகாரசபை தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன. 2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215944
-
ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் விதித்த வரி - தடைவிதித்தது அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் 29 MAY, 2025 | 11:01 AM அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்பிரல் மாதம் விதித்த வரிகளை தடுக்கும் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உலக நாடுகளின் இறக்குமதிகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகளிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களிற்கு மேலதிக வரிகளை விதிப்பது என்ற தீர்மானத்தை அறிவித்ததன் மூலம் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறினார் என மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. புதிய வரிகளிற்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கவேண்டும். ஆனால் இது தேசிய அவசரநிலை என்பதால் தனக்கு அதற்கான அதிகாரம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்பிரல் மாதம் விடுதலை தினத்தன்று டிரம்ப் அறிவித்த புதிய வரிகளிற்கே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி சில மணிநேரங்களிற்குள் டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டிரம்பின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் சமூக ஊடகங்களில் நீதிமன்றத்தை விமர்சித்து எழுதினார்: "நீதித்துறை சதி கட்டுப்பாட்டை மீறிவிட்டது."என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை : "தேசிய அவசரநிலையை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் வேலை அல்ல என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/215957
-
ரப் பாடகர் வேடன்
அண்ணை, கஞ்சா வழக்கு, புலிப்பல் வழக்கு போட்டாயிற்று. இனி தேசிய புலனாய்வு முகமை வழக்கு(NIA) போடலாம்!
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —
மாற்றம் ஏற்றம் என்ற வாய்ப்பேச்சை நம்பித்தான்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் தான் சென்னையை நம்பியவன் என்று பார்த்தால் வரிசையில் இருக்கினம் நிறையப்பேர்?!
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
பட மூலாதாரம்,GETTY/STALIN/X கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ள நிலையில், 'தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படலாம்' என பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு முயற்சியில் தி.மு.க இறங்கவில்லை. காரணம் என்ன? தி.மு.க-வை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் இதே காலகட்டத்தில் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன பலம்? இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், ஜூன் 12 அன்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற்ற உடன், அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் (திமுக 134, காங்கிரஸ் 17, விடுதலைச் சிறுத்தைகள் 4, இ.கம்யூ 2, மா.கம்யூ 2) உள்ளனர். ஒரு ராஜ்யசபா இடத்துக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க-வுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் உள்பட 4 உறுப்பினர்கள் தனி அணியாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் வாக்களிக்காமல் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் எண்ணிக்கை 66 ஆக உயரும் (62 + பாஜகவின் 4 வாக்குகள்). 2 ராஜ்யசபா இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ம.கவில் இருந்து 2 பேர் ஆதரவு தெரிவித்தால் மட்டும் அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். "இதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும்" எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன். நான்கு வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தால் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும். மாறாக, உபரியாக உள்ள வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நான்கு இடங்களுக்கு மட்டுமே தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது. "கட்சிக்குக் கெட்ட பெயர் வரும்" பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் "தி.மு.க வசம் 23 ஓட்டுகள் கூடுதலாக உள்ளதால் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தனது வலிமையைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படியொரு சர்ச்சைக்கு தி.மு.க தலைமை இடம் கொடுக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம். "தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க அணியில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் ஜென்ராம், "அவரவர் வாக்கு அவரவருக்கே என்ற நிலையை எடுத்து தேவையற்ற சர்ச்சையை தி.மு.க தலைமை தவிர்த்துள்ளது" என்கிறார். "தி.மு.க தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததில்லை" எனக் கூறும் ஜென்ராம், "கொள்கைரீதியான முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். எனவே, அரசியல்ரீதியாக புதிய முயற்சிகளில் அவர் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார். தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "உபரியாக உள்ள வாக்குகளை வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றாலும் அது கட்சிக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். தோற்றாலும் அது தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்" எனக் கூறுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கான்ஸ்டன்டைன், "அப்போது தி.மு.க பக்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார்" எனக் கூறுகிறார். "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதுபோன்று செய்தால் அதை வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சர்ச்சைகளில் இறங்க மாட்டார் என்று இதர அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்" எனக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன். அதேநேரம், "தங்களிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை வைத்து ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தும் வேலைகளைக் கடந்த காலங்களில் தி.மு.க செய்துள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்" : கமல்ஹாசனின் 'தக் லைஃப்' கருத்துக்கு எதிர்ப்பு ஏன்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அண்ணா பல்கலை வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு28 மே 2025 கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் - அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?27 மே 2025 1984 உதாரணம் என்ன? படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. வேட்பாளர் பட்டியலில் கவிஞர் சல்மா பெயர் இடம்பெற்றுள்ளது எதிர்பாராத ஒன்று" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகிவிட்டதால், ஓட்டு போடும்போது சட்டமன்ற உறுப்பினர்களை 34 என நான்கு வகைகளாக பிரித்து, யார் எந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கூறுவார்கள். மீதமுள்ள வாக்குகள் உபரியாக இருக்கும். தி.மு.கவுக்கு உபரியாக 23 வாக்குகள் உள்ள நிலையில், ஐந்தாவது வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம் எனக் கூறலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கு 34 வாக்குகளும் வந்துவிட்டால், தி.மு.க நிறுத்தும் ஐந்தாவது வேட்பாளர் தோற்றுப் போவார். அதனால் வேட்பாளரை நிறுத்தியும் பலன் இல்லை" எனக் கூறுகிறார். "ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தும்போது, பா.ம.கவும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக அறிவித்தால் தி.மு.கவின் முயற்சி எடுபடாது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே இப்படியொரு தோல்வியை தி.மு.க விரும்பாது" என்கிறார், ஷ்யாம். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை சுட்டிக் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அப்போது ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியை தி.மு.க முன்னிறுத்தியது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை" எனக் கூறுகிறார். 1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா, வலம்புரி ஜான், ராஜாங்கம், ராமநாதன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுவும் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் வைகோவும் ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். இதில் ஆற்காடு வீராசாமி தோல்வியடைந்தார். "1996ஆம் ஆண்டில் ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக வேட்பாளராக உதயபானு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை. உறுதியாக வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடினமான முடிவுகளை தி.மு.க எடுக்கும்" என்கிறார் ஷ்யாம். 1996 ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் சார்பில் உதயபானு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார். ஓ.பி.எஸ் தரப்பு வாக்குகள் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் குபேந்திரன் "தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுடன் பன்னீர்செல்வம் அணி, பா.ம.க மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தால் புதிதாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளதே?" என, பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம். "பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை. இருவரும் அமைதியாகிவிட்டனர்" என்கிறார். "ஐந்தாவது வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் பன்னீர்செல்வம் அணியினர் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் அணியும் பா.ம.கவும் வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வை மீறி இந்த கட்சிகள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் குபேந்திரன். கூட்டணிக் கட்சிகளைத் தவிர்ப்பது ஏன்? பட மூலாதாரம்,KAMALHAASAN/X படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க உறுதியளித்தது தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் கடந்த முறை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, கடந்த மாதம் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே, 'தி.மு.க மீண்டும் சீட் கொடுக்குமா?' எனக் கேள்வி எழுப்பும் தொனியில் வைகோ பேசியிருந்தார். "வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லாததால் தான் துரை வைகோவுக்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இதே கருத்தை முன்வைக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன், "மக்கள் நீதி மய்யத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை" எனக் கூறுகிறார். "ராஜ்யசபாவில் தி.மு.கவின் குரல் எதிரொலிக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். கூட்டணிக் கட்சிகள் பேசினாலும் அது கட்சியின் குரலாக இருக்காது என நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" எனக் கூறினார். "அன்புமணி விரும்பவில்லை" பட மூலாதாரம்,ANBUMANI/X படக்குறிப்பு,"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை" அ.தி.மு.க உடன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. அந்தவகையில், அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. "கட்சி வளர்ச்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்டி வருவதால், மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை" என, பா.ம.க-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது குறித்து பா.ம.க தலைமை பேசி வருகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். அ.தி.மு.க தரப்பில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவ்விரு இடங்களுக்கும் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார். "பொறுமை கடலினும் பெரிது" - பிரேமலதா பட மூலாதாரம்,_PREMALLATHADMDK/INSTAGRAM படக்குறிப்பு,நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். அ.தி.மு.க அணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க இணைந்தது. அப்போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசி வந்தார். "நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" எனவும் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் தரப்பில் இருந்து அப்படி எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்" எனக் கூறியவர், "ஜனவரி 9 ஆம் தேதியன்று கடலூரில் மாநாடு நடக்க உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்" என்றார். "2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, "கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் சீட்டை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது அது தேர்தலில் எதிரொலிக்கும்" எனக் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg5v400z1no
-
ரப் பாடகர் வேடன்
Vedan | Subair | அநீதிகளை எதிர்த்து பாடும் வேடம்!
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம் 28 MAY, 2025 | 03:54 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/215908
-
ரப் பாடகர் வேடன்
கேரளாவில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேடன்: இந்து அமைப்புகள் இவரைக் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 29 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்? கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக உருவெடுத்திருக்கிறார் அவர். வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. 'வேடன்' என்ற பெயர் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM படக்குறிப்பு, ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார். கேரளாவின் திருச்சூரில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சில காலம் கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்த ஹிரந்தாஸ், ஒருகட்டத்தில் திரைப்பட இயக்குநரும் எடிட்டருமான பி. அஜீத் குமாரின் ஸ்டுடியோவில் பணியாற்ற ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில்தான் அமெரிக்க ராப் பாடகரான ட்யுபக் ஷகூரின் தாக்கம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வேடன். ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார். 2020ஆம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது அகில் ராமச்சந்திரன், ஹ்ரித்விக் சசிகுமார் என்பவர்களோடு இணைந்து Voice of the Voiceless என்ற தனது முதல் பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டார் வேடன். சாதி பிரச்சனை, நிறம் சார்ந்த ஒதுக்கல், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஆகிவற்றை அந்தப் பாடலில் சுட்டிக்காட்டியிருந்தார். குறுகிய காலத்திலேயே அந்தப் பாடல் 6,00,000 பார்வைகளைக் கடந்தது. (தற்போது 13 மில்லியன் பேர் அந்தப் பாடலைப் பார்த்திருக்கின்றனர்). இதற்கடுத்ததாக Bhoomi Njan Vazhunidam என்ற பாடலை வெளியிட்டார். அதுவும் பிரபலமான நிலையில், கேரளாவில் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டார் வேடன். பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM அதே ஆண்டில் கொச்சி மியூசிக் ஃபவுண்டேஷனின் ஹிப் ஹாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். இதற்குப் பிறகு அவரது இசைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. 2021ஆம் ஆண்டில் நாயாட்டு படத்தில் "நரபலி" என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இதற்குப் பிறகு மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் 'குதந்திரம்' என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இந்தப் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகின. டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலையும் எழுதி பாடியிருக்கிறார் வேடன். கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) எதிர்க்கட்சியான காங்கிரசும் வேடனை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்து அமைப்புகள் பாடகர் வேடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு முகமைக்கு அனுப்பப்பட்ட கடிதம் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM 2021ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று எல்டிஎஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரள அரசு பல நிகழ்வுகளை நடத்தியது. அப்படி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளில் வேடன் பங்கேற்றார். கடந்த மே 18ஆம் தேதியன்று பாலக்காட்டின் கோட்டை மைதானத்தில் வேடனின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநில அரசின் எஸ்.சி. - எஸ்.டி. மேம்பாட்டுத் துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த மைதானத்தில் சேதமடைந்த நகராட்சி சொத்துகளுக்கு மாநில எஸ்.சி. - எஸ்.டி மேம்பாட்டுத் துறை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் உள்ள பாலக்காடு நகராட்சி கூறியுள்ளது. இதற்குப் பிறகு, பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.கவின் கவுன்சிலரான வி.எஸ். மினிமோல் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தேசியப் பாதுகாப்பு முகமைக்கும் (என்ஐஏ) வேடன் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், வேடனின் பாடல்களில் பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் சாதியை முன்வைத்து இந்து சமூகத்தைப் பிளக்க வேடன் முயல்வதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். வேடன் மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மினிமோல், இருந்தபோதும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் வேடன் பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வன்முறையையும் வெறுப்பையும் தூண்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். வேடன் மீதான வழக்குகள் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM மினிமோல் குறிப்பிடும் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் 28ஆம் தேதியன்று, கொச்சியில் ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருந்த வேடனும் அவரது நண்பர்கள் எட்டுப் பேரும் கேரள மாநில கலால் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதற்குப் பிறகு காவல்துறை அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவரது சங்கிலியில் புலிப் பல் (அது சிறுத்தையின் பல் என்றும் குறிப்பிடப்படுகிறது) பதிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சங்கிலி தாய்லாந்தில் வாங்கப்பட்டதாக வேடன் தெரிவித்தார். கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேடனை, புலிப் பல் விவகாரத்தில் கேரள வனத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பிறகு இந்த வழக்கிலும் வேடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது விவகாரங்கள் அனைத்திலும் கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே வேடனுக்கு ஆதரவாக நின்றது. அக்கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன், வனத் துறை அவசரப்பட்டு கைதுசெய்ததாகக் குறிப்பிட்டார். அதேபோல வனத்துறை அமைச்சர் இதுபோன்ற விவகாரங்களில் பொதுமக்களின் உணர்வுகளையும் மனதில் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். இந்து அமைப்புகள் குறிவைக்க காரணம் என்ன? இந்து அமைப்புகள் அவரைக் குறிவைக்க, அவரது பாடல்களில் இருக்கும் அரசியல்தான் முக்கியக் காரணம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான எம்.ஜி. ராதாகிருஷ்ணன். "அவரது பாடல்கள் தீவிரமான அரசியல்தன்மை உள்ளடக்கமும் கொண்டவை. தலித்துகளின் குரலை வலுவாக வெளிப்படுத்துபவை. பிராமண மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துபவை. அதனால்தான் இந்து அமைப்புகள் ஆத்திரமடைகின்றன." என்கிறார் அவர். வேடன் பிரதமர் மோதி குறித்து நேரடியாக விமர்சித்திருக்கிறாரா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க, சாதிய அடக்குமுறை குறித்து அவர் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறார், அதுதான் அவர்கள் வேடனைக் குறிவைக்கக் காரணம் என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன். இது ஒருபுறமிருக்க, பாலக்காட்டில் நடந்த இந்து ஐக்கிய வேதி கூட்டத்தில் பேசிய அதன் தலைமை டிரஸ்டி பி. சசிகலா, பட்டியல் இன மக்களின் வலுவான நாட்டுப் புற பண்பாட்டில் விழுந்த கறைதான் வேடனின் இசை எனக் குறிப்பிட்டிருக்கிறார். வேடனை சாதி தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்காக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் இதழான கேசரியின் ஆசிரியர் என்.ஆர். மது மீது கொல்லம் நகரக் காவல்துறை மே 17ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ldq0pdgjzo
-
அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழர்களின் கொலைகளுக்கு தீர்வு வழங்குவதிலிருந்து விலகிச் செல்கிறது - சபா குகதாசன்
28 MAY, 2025 | 03:22 PM (எம்.நியூட்டன்) அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வினை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலை தான் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்தார். அத்துடன், மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமாகும். இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் சட்டம் பாயும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அழிவுகள் இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்தும் செயல் எனவும் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை ஏற்க முடியாது. அனுர அரசும் ஏனைய அரசு போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலைதான். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்று குவித்தார்கள். இவை எல்லாம் என்ன? இன அழிப்பில்லையா? இது ஆதாரம் இல்லையா? மோசமான பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாது செய்கின்றது. இதை நாம் ஏற்க முடியாது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/215902
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அண்ணா பல்கலை வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு 28 மே 2025, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. காவல் துறை தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஞானசேகரன் மீது குற்றம் சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் அரசுத் தரப்பு வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஞானசேகரன் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார், தனது குடும்பம் தன்னை நம்பியுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது," என்றார். தீர்ப்பை வரவேற்ற அதிமுக, பாஜக இந்தத் தீர்ப்பை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டுப் படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்? SIT-ல் பணியாற்றிய டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். வழக்கின் பின்னணி என்ன? சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கண்டனம் தெரிவித்தன. வெளியான முதல் தகவல் அறிக்கை Play video, "அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என தீர்ப்பு", கால அளவு 5,26 05:26 காணொளிக் குறிப்பு, இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை ஒளிபரப்பின. பாதிப்பிற்கு உள்ளான மாணவி, தன்னைத் துன்புறுத்திய நபர் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் அவரை 'சார்' என அழைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" எனக் கேள்வியெழுப்பின. ''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இது தொடர்பான அவருடைய செய்தியாளர் சந்திப்பே சர்ச்சைக்கு உள்ளானது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார். வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஞானசேகரனுக்கு என வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப் பணிகள் குழுவின் சார்பில் அவருக்காக இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே அவர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் பிறகு மே 20ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதிவரை இரு தரப்பிலும் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஒரு பாலியல் குற்ற வழக்கில் ஆறு மாதங்களுக்குள் புலனாய்வும் நீதிமன்ற விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக மேலும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kqp20vq80o
-
ஓய்வூதியத் திணைக்கள தரவுகள் திருட்டு - சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளம் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2025 | 05:37 PM இலங்கையின் ஓய்வூதியத் திணைக்கள தரவுகளை க்ளோக் ரான்சம்வேர் (Cloak ransomware) குழுவால் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io தெரிவித்துள்ளது. இந்த குழுவால் ஏதேனும் தரவு திருடப்பட்டதா அல்லது மீட்டெடுப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டாலும், ஓய்வூதியத் திணைக்களம் சைபர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பகிரங்கமாக எந்தவொரு அறிவிப்பும் விடுக்கவில்லை. அண்மைய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு ஆலோசகர் அசேல வைத்தியலங்கார வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மார்ச் மாதம் கார்கில்ஸ் வங்கியின் தரவு திருடப்பட்டமை தொடர்பில் கண்காணிப்பு தளம் (FalconFeeds.io) கண்டறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவங்களை மேற்கொண்டதாக அடையாளம் காணப்பட்ட க்ளோக் ரான்சம்வேர் குழு, முக்கியமான தரவை குறியாக்கம் செய்வதற்கும், மறைகுறியாக்க விசைகளுக்கு மீட்கும் தொகையை கோருவதற்கும், திருடப்பட்ட தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கும் பெயர் பெற்றது. தரவு குறியாக்கம்: Ransomware பயன்பாடுகள் உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்து அதன் வெளியீட்டிற்கு மீட்கும் தொகையைக் கோரலாம், இது மீட்கும் தொகை செலுத்தப்படாவிட்டால் தரவு இழப்புக்கு வழிவகுக்கும். https://www.virakesari.lk/article/215910