Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. புளோரிடாவை புரட்டிபோடும் மில்டன் சூறாவளி- 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்'- எச்சரித்த பைடன் பட மூலாதாரம்,GETTY IMAGES 10 அக்டோபர் 2024 மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. புளோரிடாவில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. செயின்ட் லூசி கவுன்ட்டியின் கிழக்கு கடற்கரையில் மில்டன் சூறாவளியால் 4 பேர் உயிரிழந்தனர். மேற்கு கடற்கரையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் புளோரிடாவில் வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். "சில வாரங்களுக்கு முன்பு புளோரிடாவை தாக்கிய ஹெலன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது ஏற்பட்டிருப்பது 'மோசமான சூழ்நிலை அல்ல', என்றும் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சூறாவளி மில்டன் சூறாவளி அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் ஐந்தாம் வகை (category 5) சூறாவளி ஆகும். இந்த சூறாவளி மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசியது. ஹெலன் சூறாவளி தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், புதன்கிழமை அன்று இரவு கடும் வேகத்தில் மில்டன் சூறாவளி புளோரிடாவை தாக்கியது. பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மக்களை வெளியேற்றும் பணியை அம்மாகாண அரசு மேற்கொண்டு வந்தபோது, 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்' எனக்கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புளோரிடா மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, புதன்கிழமை அன்று இரவு கடும் வேகத்தில் மில்டன் சூறாவளி புளோரிடாவை தாக்கியது. பல்வேறு மக்கள் சூறாவளியில் இருந்து தப்பிக்க புளோரிடாவை விட்டு வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையங்களும் மூடப்பட்டன. ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்த பகுதியைத் தாக்கும் மிக மோசமான சூறாவளியாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் புயலுக்கு முன் 31 கவுன்டிகள், மக்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்ததால் 70,000க்கும் மேற்பட்ட புளோரிடா மக்கள் அரசாங்க முகாம்களில் இருப்பதாக அமெரிக்க மத்திய அவசரகால மேலாண்மை ஆணையத்தின் தலைவர் டீன் கிறிஸ்வெல் பிபிசியின் ரேடியோ 4 டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார். புளோரிடாவில் பெரும்பாலான பகுதிகளைத் தவிர, ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலைனா பகுதிகளிலும் மில்டன் சூறாவளி பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது புளோரிடா முழுவதும் புதன்கிழமை அன்று குறைந்தது 116 சூறாவளி எச்சரிக்கைகள் விடப்பட்டன என்று அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார். மாகாணத்தில் இதுவரை 19 முறை சுழற்காற்று வீசியதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக மாகாண அதிகாரிகள் சுமார் 10,000 தேசிய காவல் படை உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர். 20 மில்லியன் உணவுப் பொட்டலங்கள் மற்றும் 40 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது. 25 ஆண்டுகளில் தான் பார்த்த மிகவும் கடுமையான, சக்திவாய்ந்த புயல் என்று புளோரிடாவில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகிறார். "மரங்கள் இவ்வளவு வளைந்ததை நான் பார்த்ததில்லை, இது உண்மையில் பயமாக இருந்தது", என்று பிபிசியிடம் ஒலாண்டோவில் வசிக்கும் ஃபில் பீச்சி கூறுகிறார். "இந்த புயலில் வலு குறைந்த பிறகுதான் இது ஏற்படுத்திய மோசமான பாதிப்பின் விளைவுகள் பற்றி தெரிய வரும்", என்றும் அவர் கூறினார். புளோரிடாவில் உள்ள டாம்பா நகரத்தில் 35 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர். தற்போது மில்டன் சூறாவளியின் காற்றின் வேகம் மணிக்கு 129 கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. புளோரிடாவில் பாதிப்புகளை ஏற்படுத்திய பிறகு, அது அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளி காற்றும் மழையும் தொடரும் என்று வானிலை கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7v6q9dre5ro
  2. மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபயசேகர - குற்றவியல் புலனாய்வு ஆய்வு மற்றும் தடுப்புபிரிவின் இயக்குநராக நியமனம் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு ஆய்வு மற்றும் தடுப்புபிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 இல் ஷானி அபயசேகர பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார் . கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஷானி அபயசேகர சிஜடியிலிருந்து இடமாற்றப்பட்டார், இதன் பின்னர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவினர் ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் ஷானி அபயசேகரவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர். முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது மகன் மேலும் நான்கு பொலிஸார் தொடர்புபட்ட கொலை சம்பவம் தொடர்பில் போலியான ஆதாரங்களை உருவாக்கினார் என ஷானி அபயசேகரவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எனினும் கம்பஹா நீதிமன்றம் ஷானி அபயசேகரவையும் ஏனையவர்களையும் இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. இலங்கையின் மிகவும் திறமையான விசாரணையாளர்களில் ஒருவர் என கருதப்படும் ஷானி அபயசேகர மிகவும் முக்கியமான விசாரணைகளை கையாண்டுள்ளார். ரோயல் பார்க் கொலை, அங்குலான இரட்டை கொலை, உடத்தலவன்ன படுகொலை, முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா படுகொலை முயற்சி போன்றவற்றை ஷானி அபயசேகர விசாரணை செய்துள்ளார். கொழும்பு நகரசபை குண்டுவெடிப்பு, 2007 - 2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 பேர் காணாமல்போனமை குறித்தும் ஷானி அபயசேகர விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/196000
  3. ரத்தன் டாடா: ஆடம்பரங்களை வெறுத்த, எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த தொழிலதிபர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரத்தன் டாடாதான், உதவியாளர் யாருமின்றித் தனியாகப் பயணம் செய்த ஒரே விஐபி. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 10 அக்டோபர் 2024 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே கடந்த 1992ஆம் ஆண்டில், ஒரு தனித்துவமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லி- மும்பை இடையிலான விமானப் பயணங்களின்போது, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் என அவர்களிடம் கேட்கப்பட்டது. ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. இதற்கான காரணத்தை அறிய முயன்றபோது, வழக்கமாக தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே என்றும், அவரது பையையோ அல்லது கோப்புகளையோ எடுத்துச் செல்ல அவருடன் உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது என்றும் கூறப்பட்டது. மேலும், விமானம் புறப்பட்டவுடன், அவர் அமைதியாக வேலை செய்வார். அவர் வழக்கமாக மிகக் குறைவான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு பிளாக் காபி (Black Coffee) கேட்பார். தனக்கு விருப்பமான காபி கிடைக்கவில்லை என்பதற்காக விமான பணிப்பெண்ணை அவர் ஒருபோதும் திட்டியதில்லை. ரத்தன் டாடாவின் எளிமைக்கான இதுபோன்ற உதாரணங்கள் இன்னும் நிறைய உள்ளன. 'The Tatas: How a Family Built a Business and a Nation' என்ற தனது பிரபலமான புத்தகத்தில், கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "அவர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரானபோது, ஜே.ஆர்.டி-யின் (ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அறையில் அவர் உட்காரவில்லை. அவர் தனக்கென ஓர் எளிய மற்றும் சிறிய அறையை அமைத்துக் கொண்டார். அவர் ஒரு ஜூனியர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு மூத்த அதிகாரி வந்தால், மூத்த அதிகாரியை காத்திருக்கச் சொல்வார்.” "அவரிடம் 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்தன, அவற்றை அவர் மிகவும் நேசித்தார். நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்." "இந்த நாய்கள் பெரும்பாலும் பம்பாய் ஹவுஸின் முகப்பு அறையில் (Lobby) அங்குமிங்கும் உலாவுவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் மனிதர்கள் யாரேனும் அங்கு நுழைய வேண்டுமென்றால், ஒன்று அவர்கள் ஊழியர்களாக இருக்க வேண்டும் அல்லது முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அங்கு நுழைய அனுமதிக்கப்பட்டனர்." ‘டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே’ பட மூலாதாரம்,GETTY IMAGES ரத்தன் டாடாவின் முன்னாள் உதவியாளர் ஆர்.வெங்கட்ரமணனிடம், ரத்தனுக்கும் அவருக்குமான நெருக்கம் குறித்துக் கேட்டபோது, "மிஸ்டர். டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே. ஆம், அவருக்கு மிகவும் நெருக்கமான இரண்டு பேர் உள்ளனர், 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ', அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் அவரை நெருங்க முடியாது" என்று கூறினார். பிரபல தொழிலதிபரும் எழுத்தாளருமான சுஹைல் சேத் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்: "பிப்ரவரி 6, 2018 அன்று, பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், ரத்தன் டாடாவுக்கு அவரது பொதுநலப் பணிகளுக்காக 'ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்க இருந்தார்." "இதற்காக ரத்தன் டாடா பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனது நாய் டிட்டோவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் ரத்தன் டாடா தெரிவித்தார். இதுகுறித்து இளவரசர் சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டபோது, 'அதுதான் நல்ல மனிதனின் குணம். அப்படிப்பட்ட மனிதன்தான் ரத்தன் டாடா' என்று கூறினார்." ‘தனிமை விரும்பி, புகழ் வெளிச்சத்தை வெறுத்தவர்’ ஜே.ஆர்.டி.யை போலவே, ரத்தன் டாடாவும் தனது நேரம் தவறாமைக்குப் பெயர் பெற்றவர். அவர் மாலை சரியாக 6.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்புவது வழக்கம். அலுவலகம் தொடர்பான வேலைக்காக வீட்டில் இருக்கும்போது யாராவது அவரைத் தொடர்புகொண்டால், அவர் பெரும்பாலும் எரிச்சல் அடைவார். பட மூலாதாரம்,RATAN TATA INSTAGRAM தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது கோப்புகளைப் படிப்பார். அவர் மும்பையில் இருந்தால், அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களைக் கழிப்பார். இந்த நேரத்தில் அவரது நாய்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்கமாட்டார்கள். அவர் பயணம் செய்வதையோ சொற்பொழிவு ஆற்றுவதையோ விரும்பவில்லை. அவருக்கு புகழ் வெளிச்சமும், கைதட்டலுக்கு பேசுவதும் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது. அவரது குழந்தைப் பருவத்தில், குடும்பத்தின் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்குச் செல்வதை அவர் சங்கடமாக உணர்ந்தார். அவரது பிடிவாத குணம், ஜே.ஆர்.டி மற்றும் அவரது தந்தை நவல் டாடாவிடம் இருந்து அவர் பெற்ற ஒரு குடும்பப் பண்பு என்று ரத்தன் டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சுஹைல் சேத், "நீங்கள் ரத்தன் டாடாவின் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், 'என்னைச் சுடுங்கள், ஆனால் நான் என் பாதையைவிட்டு நகர மாட்டேன்' என்றுதான் அவர் சொல்வார்" என்று கூறுகிறார். ரத்தன் டாடாவின் நண்பரும், பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவருமான நுஸ்லி வாடியா கூறுகையில், "ரத்தன் டாடா என்பவர் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரம். யாரும் அவரை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் மிகவும் ஆழமான எண்ணங்கள் கொண்ட மனிதர். நெருக்கமான நட்பு இருந்தாலும், தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருடனான உறவு இருக்கவில்லை. அவர் ஒரு தனிமை விரும்பி” என்று கூறுகிறார். 'An Intimate History of the Parsis' என்ற தனது புத்தகத்தில் கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், “தனது தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, ரத்தன் என்னிடம் ஒப்புக்கொண்டார். ‘நான் தோழமைப் பண்பு இல்லாத ஒருவனாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் நான் ஒன்றும் யாருடனும் பழகாமல் விலகியிருப்பவனும் கிடையாது’ என்று அவர் என்னிடம் கூறுவார்.” பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்ட ரத்தன் டாடா பட மூலாதாரம்,GETTY IMAGES “டாடா குழுமத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய காலங்களில், ரத்தன் டாடா தனது குடும்பப் பெயரை ஒரு சுமையாகவே கருதியதாக” ரத்தன் டாடாவின் பால்ய கால நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். அமெரிக்காவில் படிக்கும்போது, அவரது குடும்பப் பின்னணி பற்றி அவரது வகுப்புத் தோழர்களுக்குத் தெரியாது என்பதால், அங்கு அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். கூமி கபூருக்கு ரத்தன் டாடா அளித்த பேட்டியில், "அந்த நாட்களில், வெளிநாட்டில் படிப்பவர்கள் மிகக் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தவே ரிசர்வ் வங்கி அனுமதித்தது. என் தந்தை சட்டத்தை மீறுவதை ஆதரிக்கவில்லை, எனவே அவர் எனக்கு வேறு வழிகளில் அமெரிக்க டாலர்களை வழங்க விரும்பவில்லை. அதனால் மாத இறுதிக்குள் என் பணம் எல்லாம் காலியாகிவிடுவது வழக்கம். சில நேரங்களில் நான் என் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது. பல நேரங்களில், கூடுதல் பணம் சம்பாதிக்க நான் பாத்திரங்களைக் கழுவும் பணியைச் செய்தேன்" என்று தெரிவித்திருந்தார். ரத்தன் டாடாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றபோது அவருக்கு 10 வயதுதான். ரத்தனுக்கு 18 வயதாக இருந்தபோது, அவரது தந்தை சிமோன் டனோயர் என்ற சுவிட்சர்லாந்து பெண்ணை மணந்தார். மறுபுறம், அவரது தாயார் விவாகரத்துக்குப் பிறகு சர் ஜாம்செட்ஜி ஜீஜீபாய் என்பவரை மணந்தார். ரத்தனை அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் டாடாதான் வளர்த்தார். ரத்தன் அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார். அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நல்ல வேலை மற்றும் ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. ஆனால் அவர் தனது பாட்டி மற்றும் ஜே.ஆர்.டி.யின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. இதனால், அவருடைய அமெரிக்க காதலியுடனான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் போனது. அதற்குப் பிறகு ரத்தன் டாடா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். ஜாம்ஷெட்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக பணியில் சேர்ந்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1962ஆம் ஆண்டில், ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "ரத்தன் ஜாம்ஷெட்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அவர் ஆரம்பத்தில் நீல நிற மேலாடை அணிந்து, ஒரு கடைநிலை தொழிலாளியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார்." "பயிற்சி முடிந்த பிறகு அவர் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.நானாவதியின் சிறப்பு உதவியாளர் ஆனார். அவரது கடின உழைப்பின் புகழ் பம்பாய் வரை சென்றது, ஜே.ஆர்.டி. டாடா அவரை பம்பாய்க்கு அழைத்தார்." இதற்குப் பிறகு, ரத்தன் டாடா ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு பணியாற்றினார். நஷ்டத்தில் இயங்கும் சென்ட்ரல் இந்தியா மில் மற்றும் நெல்கோ நிறுவனங்களை மேம்படுத்தும் பொறுப்பை ஜே.ஆர்.டி., அவருக்கு வழங்கினார். ரத்தனின் தலைமையின்கீழ், மூன்று ஆண்டுகளுக்குள், நெல்கோ நிறுவனம் மாற்றமடைந்து, லாபம் ஈட்டத் தொடங்கியது. ஜே.ஆர்.டி. 1981ஆம் ஆண்டில், ரத்தனை ‘டாடா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவராக்கினார். இந்த நிறுவனத்தின் டர்ன்-ஓவர் (turn over) 60 லட்சம் மட்டுமே என்றாலும், இந்தப் பொறுப்பு ரத்தன் டாடாவுக்கு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு ஜே.ஆர்.டி டாடாவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரடியாகக் கவனித்து வந்தார். எளிமையான வாழ்க்கை முறை பட மூலாதாரம்,GETTY IMAGES அன்றைய வணிக பத்திரிகையாளர்களும், ரத்தனின் நெருங்கிய நண்பர்களும், ‘அவரை நட்புணர்வு கொண்ட, எளிமையான, நாகரிகமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு மனிதராகவே’ நினைவு கூர்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவரைச் சந்திக்கலாம், வழக்கமாக அவரே தொலைபேசியை எடுத்துப் பேசுவார் என்கிறார்கள். கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார்: "பெரும்பாலான இந்திய பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது ரத்தனின் வாழ்க்கை முறை மிகவும் கட்டுப்பாடாகவும் எளிமையாகவும் இருந்தது. அவரது வணிக ஆலோசகர்களில் ஒருவர், ‘ரத்தனின் பின்னால் உதவியாளர்களின் கூட்டம் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது’ என்று என்னிடம் கூறினார்.” “ஒருமுறை நான் அவரது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன், ஒரு இளைஞர் வந்து கதவைத் திறந்தார். சீருடை அணிந்த சேவகர்களோ, ஆடம்பரங்களோ இல்லை. மும்பையின் கும்ப்லா ஹில்ஸில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர மாளிகையான ஆன்டிலாவின் பளபளப்புக்கு நேர்மாறாக, அதே மும்பையின் கொலாபாவில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ரத்தனின் வீடு அவரது ரசனையைப் பிரதிபலிக்கிறது.” ரத்தன் டாடாவை தனது வாரிசாக தேர்வு செய்த ஜே.ஆர்.டி பட மூலாதாரம்,GETTY IMAGES ஜே.ஆர்.டி 75 வயதை எட்டியபோது, அவரது வாரிசு யார் என்பது குறித்து நிறைய ஊகங்கள் இருந்தன. டாடாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியர் ருஸ்ஸி எம் லாலா பின்வருமாறு எழுதுகிறார், "நானி பல்கிவாலா, ருஸ்ஸி மோதி, ஷாருக் சப்வாலா, எச்.என்.சேத்னா ஆகியோரில் ஒருவரைத்தான் ஜே.ஆர்.டி தனது வாரிசாகக் கருதினார். பல்கிவாலா மற்றும் ருஸ்ஸி மோதி, ஆகிய இருவர்தான் அந்தப் பதவிக்கான இரண்டு முக்கியப் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரத்தன் டாடாவே நம்பினார்.” ஜே.ஆர்.டி., 1991ஆம் ஆண்டில், தனது 86வது வயதில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்தக் கட்டத்தில் அவர் ரத்தனை நோக்கித் திரும்பினார், தலைவர் பதவிக்குத் தகுதியான ‘டாடா’-வாக அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். ரத்தனுக்கு சாதகமான மிக முக்கியமான விஷயம் அவரது 'டாடா' என்ற குடும்பப் பெயர்தான் என ஜே.ஆர்.டி நம்பினார். டாடாவின் நண்பர் நுஸ்லி வாடியா மற்றும் அவரது உதவியாளர் ஷாருக் சப்வாலா ஆகியோரும் ரத்தனை தலைவராக்க ஆதரித்தனர். மார்ச் 25, 1991 அன்று டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் பொறுப்பேற்றபோது, தர்பாரி சேத், ருஸ்ஸி மோதி, அஜித் கெர்கர் ஆகிய மூன்று தலைவர்களை எவ்வாறு பலவீனப்படுத்துவது என்பதே அவருக்கு முன் இருந்த முதல் சவாலாக இருந்தது. இந்த மூவரும் இதுவரை தலைமை அலுவலகத்தின் தலையீடு இல்லாமல் டாடா நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு டாடா நிறுவனத்திற்கும் ஒரு முகலாய சக்கரவர்த்தி இருப்பார் என்று ரத்தனின் தந்தையும் எச்சரித்திருந்தார். டெட்லி, கோரஸ் மற்றும் ஜாகுவார் கையகப்படுத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்தில், ரத்தன் டாடாவின் வணிக மதிநுட்பம் குறித்துக் கேள்விகள் எழுந்தன. ஆனால் 2000ஆம் ஆண்டில், அவர் பிரிட்டனின் 'டெட்லி' (Tetley- தேயிலை பிராண்ட்) குழுமத்தை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது அவர்களின் சொந்த நிறுவனத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. இன்று, டாடாவின் குளோபல் பிவரேஜஸ் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமாக உள்ளது. இதற்குப் பிறகு, அவர் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான 'கோரஸ்'-ஐ (Corus) வாங்கினார். விமர்சகர்கள் இந்த ஒப்பந்தத்தின் திறனை கேள்விக்கு உள்ளாக்கினர். ஆனால் ஒரு வகையில், இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் தனது திறனையும் வணிக வலிமையையும் டாடா குழுமம் நிரூபித்தது. கடந்த 2009 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரூ.1 லட்சம் விலையில் கிடைக்கும் மக்களுக்கான காராக 'நானோ'வை அவர் அறிமுகப்படுத்தினார். நானோ காருக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் 1998ஆம் ஆண்டில் சந்தையில் 'இண்டிகா' காரை அறிமுகப்படுத்தியது. இதுவே இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் கார். தொடக்கத்தில் இந்த கார் தோல்வியுற்றது. இதனால் ரத்தன் டாடா அதை ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கு (Ford Motor Company) விற்க முடிவு செய்தார். இதற்காக அவர் டெட்ராய்ட் சென்றபோது, பில் ஃபோர்ட் அவரிடம், ‘ஏன் இந்தத் துறையைப் பற்றிப் போதுமான அறிவு இல்லாமல் இந்தத் தொழிலில் நுழைந்தீர்கள்’ என்று கேட்டார். மேலும், 'இண்டிகாவை' வாங்குவது, இந்தியாவின் டாடா நிறுவனத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ரத்தன் டாடாவை கிண்டல் செய்தார். இதனால் கோபமடைந்த ரத்தன் டாடா குழுவினர் பேச்சுவார்த்தையை முடிக்காமல் திரும்பிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. 2008இல், ஃபோர்டு நிறுவனம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் சிக்கி, பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்ட்களான 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' ஆகியவற்றை விற்க முடிவு செய்தது. அதுகுறித்து கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், "அப்போது பில் ஃபோர்டு, ‘தனது சொகுசு கார் நிறுவனத்தை வாங்குவதன் மூலம், ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்திய நிறுவனமான டாடா ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்கிறது’ என்று ஒப்புக்கொண்டார். ரத்தன் டாடா இரண்டு பிரபலமான பிராண்டுகளை 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார்." ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியதாக டாடா மீது எழுந்த விமர்சனங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சில வணிக ஆய்வாளர்கள் ரத்தன் டாடாவின் இத்தகைய பெரிய கையகப்படுத்தல்களைக் கேள்விக்கு உள்ளாக்கினர். 'டாடா ஸ்டீல் ஐரோப்பாவை’ வாங்கியது மிகப்பெரிய சுமை என நிரூபணமானது, அது டாடா குழுவை பெரும் கடனில் மூழ்கடித்தது. டி.என்.நினன் பின்வருமாறு விவரிக்கிறார், "ரத்தனின் சர்வதேச பந்தயங்கள், அவரது ஆணவம் மற்றும் கெட்ட நேரத்தின் கலவை." ஒரு நிதி ஆய்வாளர், "கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய வணிகத்தில் மிகப்பெரிய வாய்ப்பு தொலைத்தொடர்புகளில் இருந்தது, ஆனால் ரத்தன் தொடக்கத்தில் அந்தத் துறையை தவறவிட்டுவிட்டார்" என்கிறார். பிரபல பத்திரிகையாளர் சுசேதா தலால் கூறுகையில், "ரத்தன் தவறுக்கு மேல் தவறு செய்தார். 'ஜாகுவாரை' வாங்கியதன் மூலம் அவரது குழு நிதிச் சுமையின் கீழ் புதைந்தது’ என்கிறார். ஆனால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டிசிஎஸ் (TCS) எப்போதும் டாடா குழுமத்தை முன்னிலையில் வைத்திருந்தது. இந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் நிகர லாபத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியது. 2016ஆம் ஆண்டில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும்விட (அம்பானியின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தை விடவும்) டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய சந்தை மூலதனமயமாக்கலைக் (capitalization) கொண்டிருந்தது. நீரா ராடியா, தனிஷ்க், சைரஸ் மிஸ்திரி தொடர்பான சர்ச்சைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2010ஆம் ஆண்டில், ரத்தன் டாடா மற்றும் தரகர் நீரா ராடியா இடையிலான தொலைபேசி உரையாடல் கசிந்தபோது, அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்டோபர் 2020இல், டாடா குழுமத்தின் நகை பிராண்டான 'தனிஷ்க்' (Tanishq) ஒரு விளம்பரத்தை அவசரமாக திரும்பப் பெற்றதும் ரத்தன் டாடாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம் அனைத்து மதங்களையும் சமமாகக் கருதும் ஒன்றுபட்ட இந்தியாவை பற்றிய ஓர் உருக்கமான சித்தரிப்பைக் கொண்டிருந்தது. இந்த விளம்பரம் வலதுசாரியிடம் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில், 'தனிஷ்க்' நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது. ஜே.ஆர்.டி டாடா உயிருடன் இருந்திருந்தால், இதுபோன்ற அழுத்தத்தின் காரணமாக அவர் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார் என்று சிலர் நம்பினர். அக்டோபர் 24, 2016 அன்று டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரியை ஒரு மணிநேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் பதவி நீக்கம் செய்தபோது ரத்தன் டாடா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரியுடன் ரத்தன் டாடா டாடாவை நம்பகமான பிராண்டாக நிலைநிறுத்துதல் ஆனால் இதையெல்லாம் மீறி, ரத்தன் டாடா எப்போதும் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கோவிட் பேரிடர் காலத்தில், தொற்றுநோய்ப் பரவல் மற்றும் ஊரடங்கின் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க ரத்தன் டாடா, ‘டாடா அறக்கட்டளையில் இருந்து’ ரூ.500 கோடியும், டாடா நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடியும் வழங்கினார். ஆபத்தான சூழலில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தங்களது சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதல் நபரும் ரத்தன் டாடாதான். இன்றும், இந்திய டிரக் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் பின்புறத்தில் 'ஓகே டாடா' (OK Tata) என்று எழுதி, இந்த டிரக் டாடாவிடம் இருந்து வந்தது, எனவே இது நம்பகமானது என்ற செய்தியைச் சொல்கிறார்கள். டாடா நிறுவனம் சர்வதேச அளவிலும் ஒரு மிகப்பெரிய தடத்தைப் பதித்துள்ளது. 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' கார்களை தயாரிக்கிறது, மேலும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' உலகின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இவை அனைத்தையும் உருவாக்கியதில் ரத்தன் டாடாவின் பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62dlzk501po
  4. 150 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய,சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லி மீற்றர்‌ இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 மில்லி மீற்றர்‌ வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மன்னார் தொடக்கம் கொழும்பு , காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். இக் காற்றின் வேகமானது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 55 - 65 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/195994
  5. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் தசுன் ஷானக்க இல்லை (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 17 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக கண்டியில் ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 தொடரில் 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்து சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்கவுக்கு மிண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ரி20 போட்டியில் அறிமுகமான சமிந்து விக்ரமசிங்க அப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரண, நுவன் துஷார, துடுப்பாடட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இடைக்காலப் பயிற்றுநராக இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய சனத் ஜயசூரிய, முழு நேரப் பயிற்றுநராக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருடன் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார். இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும். அப் போட்டிகள் அக்டோபர் 13, 15, 17ஆம் திகதிகளில் இரவு போட்டிகளாக நடத்தப்படும். இலங்கை குழாம் சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, ஜெவ்றி வெண்டசே, சமிந்து விக்ரமசிங்க, நுவன் துஷார, மதீஷ பத்திரண, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ. https://www.virakesari.lk/article/195902
  6. இஸ்ரேலின் வடபகுதி மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல் காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் வடபகுதியை நோக்கி 150க்கும் அதிகமான ரொக்கட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிரியாட் ஸ்மோனா என்ற எல்லைபகுதி நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ரொக்கட் சிதறல்கள் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்தனர் பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஹெஸ்புல்லா அமைப்பு இந்த நகரில் உள்ள இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ளது. கிரியாட் ஸ்மோனா நகரிலிருந்து இஸ்ரேல் பெருமளவிற்கு பொதுமக்களை வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதல் தீவிரமடைந்த பின்னர் இஸ்ரேலிய பிரஜைகள் கொல்லப்பட்டுள்ள முதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரொக்கட் சிதறல்கள் காரணமாக இந்த நகரின் பல பகுதிகளில் தீ மூண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195904
  7. ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் காணாமல் போன ராணுவத்தைச் சேர்ந்த வீரரின் உடல், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். ஷா பகுதியில் இருந்து காணாமல் செவ்வாய்க்கிழமை போயிருந்ததாக கூறப்பட்ட பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் அனந்தநாக் மாவட்டத்தின் உட்ரசோ பகுதியில் உள்ள சங்லான் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ வீரரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இது குறித்து விவரமறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கடத்தப்பட்டனர். செவ்வாய்க்கிழமை இரவு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தப்பிவந்துவிட்டார்” என்றது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195847
  8. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள்களை நம்மால் தடுக்க முடியுமா என்பதை சோதித்து பார்க்கும் ஒரு சர்வதேச ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில், நாசாவால் திட்டமிடப்பட்ட அந்த மோதல் மூலம், 'டார்ட்' விண்கலம் டிமார்போஸ் (Dimorphos) என்ற சிறுகோள் மீது மோதியது. அவ்வாறு மோதிய போது `டிமார்போஸ்’ என்ன ஆனது என்பதை ஆய்வு செய்வதே தற்போது ஏவப்பட்டுள்ள `ஹெரா கிராஃப்ட்’ விண்கலத்தின் பணி. இரண்டு ஆண்டுகளில் இலக்கை அடையும் ஹெரா விண்கலம் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், 2026 டிசம்பரில் `ஹெரா கிராஃப்ட்’ ஏழு மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள டிமார்போஸை சென்றடையும். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் மேற்கொள்ளப்படும் `ஹெரா மிஷன்’, நாசாவின் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) திட்டத்தின் ஒரு பகுதி. டிமார்போஸ் (Dimorphos) என்பது 160 மீ அகலமுள்ள ஒரு சிறிய நிலவு. இது பூமிக்கு அருகில் உள்ள டிடிமோஸ் (Didymos) எனப்படும் சிறுகோளை சுற்றி வருகிறது. டிமார்போஸ் , டிடிமோஸை சுற்றி வருவதால் இது இரட்டை சிறுகோள்கள் அமைப்பு ( binary asteroid system) என அழைக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில் மோதல் ஏற்படுத்தியதன் மூலம் டிமார்போஸின் போக்கை வெற்றிகரமாக மாற்றியமைத்ததாக நாசா கூறியது. நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மோதல் சிறுகோளின் பாதையை சில மீட்டர்களுக்கு மாற்றியது. டிமார்போஸ் சிறுகோள் அமைப்பு பூமியைத் தாக்கும் போக்கில் இல்லை. ஆனால், பூமியை சிறுகோள்கள் மோதும் அபாயம் வரும்போது, விண்வெளி முகமைகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோதிக்கவே இந்த திட்டம் செயல்படுகிறது. இரண்டு வருடங்களில் `ஹெரா கிராஃப்ட்’ இலக்கை சென்றடைந்ததும், டிமார்போஸ் சிறுகோளின் மேற்பரப்பு, நாசாவின் டார்ட் விண்கலம் மோதி ஏற்பட்ட பள்ளம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய உள்ளது. பட மூலாதாரம்,SPACEX படக்குறிப்பு, ஹெரா கிராஃப்ட் டிமார்போஸ் சிறுகோளை அடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் இரண்டு கனசதுர வடிவிலான இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் டிமார்போஸின் அமைப்பு மற்றும் நிறை அளவை பகுப்பாய்வு செய்யும். "இந்த சிறுகோள்களின் இயற்பியல் பண்புகள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவை எதனால் ஆனவை? அவை மணலால் உருவானவையா? என அதன் அமைப்பை நாம் ஆராய வேண்டும்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் விஞ்ஞானி நவோமி முர்டோக் கூறினார். எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட பிற சிறுகோள்களை இடைமறிக்க முயற்சிப்பதற்கான சிறந்த வழியைப் புரிந்துகொள்ள இது விஞ்ஞானிகளுக்கு உதவும். சிறுகோள்களால் டைனோசர் காலத்தில் நிகழ்ந்த அழிவு மீண்டும் நிகழுமா? ஒருவேளை சிறுகோள் பூமியைத் தாக்கினால், டைனோசர் காலகட்டத்தில் நடந்ததை போன்று நாம் அழிந்துவிடுவோம் என்பதை விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதுபோன்ற அபாயம் தற்போது இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர். பூமியை சேதப்படுத்தும் அளவுள்ள ஒரு சிறுகோள் விண்வெளியில் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். டார்ட் மற்றும் ஹெரா விண்கலங்கள் இலக்கு வைக்கும் சிறுகோள்களின் அளவு சுமார் 100-200m அகலம் கொண்டது. இவற்றை நமது கிரகத்தில் இருந்து பார்ப்பது மிகவும் கடினம். சில விண்கற்கள் அவ்வப்போது பூமியைத் தாக்கும். 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் நகருக்கு மேலே, வானத்தில் ஒரு வீட்டளவில் இருந்த சிறுகோள் ஒன்று வெடித்துச் சிதறியது. அதன் விளைவாக அப்பகுதியில் கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும், 1,600 பேர் காயமடைந்தனர். இதுபோன்ற சிறுகோள்களை எதிர்காலத்தில் அடையாளம் கண்டு அவற்றை திசைதிருப்ப முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். "இது மனித இனத்தின் அழிவைத் தவிர்ப்பதற்காக அல்ல. நம்மால் முடிந்த அளவு சேதத்தை குறைக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். டைனோசர் காலத்தில் விண்வெளித் திட்டங்கள் இல்லை, ஆனால் நம்மால் அது முடியும்” என்கிறார் பேராசிரியர் முர்டோக். ஆனால், ஒரு சிறுகோளின் போக்கை மாற்றுவது சாத்தியம் என்று நாசா நிரூபித்திருந்தாலும், எல்லா விண்வெளிப் பாறைகளிலும் இவ்வளவு எளிதாக நம்மால் மோதல் நிகழ்த்த முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஒரு சிறுகோள் பூமியைத் தாக்குவதற்கு முன் இடைமறிக்க வேண்டுமெனில், முதலில் பூமியை அது நெருங்கி வருவதை நாம் முன்னதாகவே கண்டறிவது அவசியம். https://www.bbc.com/tamil/articles/cj4dze29wexo
  9. 10 OCT, 2024 | 11:17 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தமைக்காக சில பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைதுசெய்ய முயல்கின்றனர் என ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார் பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில் தன்னை கைதுசெய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் தொடர்ச்சியாக வெளியிடும் செய்திகளுடன் தொடர்புபட்டதே இந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார். நான் செய்திகளை வெளியிடுவது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தரிந்து ஜெயவர்த்தன அது பொய்யான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195921
  10. பொதுத்தேர்தல்; தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும். மேலும், அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பணிபுரிபவர்கள் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195909
  11. பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம் என மனநல தினச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். மன ஆரோக்கியத்திற்கும் பணியிடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆரோக்கியமான பணியாளர்கள் கூட மோசமான பணிச்சூழலில் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பணியாளர்கள் உணர்ந்து மனநலத்தில் கவனம் செலுத்தினால், அது ஊழியர்களின் மன அழுத்தம் குறைதல், பணிக்கு வராமல் இருப்பது குறைவடைதல் மற்றும் அவர்களின் வேலையில் ஈடுபாடும் அதிகரிக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனநல சுதந்திரத்தை அனுபவிப்பதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195910
  12. இந்தியா - வங்கதேசம்: நிதிஷ் குமார் ரெட்டியின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் டி20 தொடரை வென்ற இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கின் அற்புதமான பேட்டிங் டெல்லியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், தொடரை வென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்று வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இந்திய அணி வெல்லும் 16வது டி20 தொடர் இது. இளம் கூட்டணி இந்திய அணி ஒரு கட்டத்தில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா(32), ரியான் பராக்(15) அருமையான கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றனர். ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகி 2வது போட்டியிலேயே இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு முத்தாய்ப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் தனது முதலாவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்து, 34 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் 217 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது கணக்கில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அற்புதமான ஆட்டத்தையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிதிஷ்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய டி20 அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் அற்புதமான ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி கிடைத்துள்ளார். இதுபோன்ற ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் என நீண்ட பட்டியல் இந்திய அணிக்கு இருப்பது மிகப்பெரிய பலம். வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசியபோது, “மூன்று விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையை நான் விரும்பினேன். அப்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எவ்வாறு பேட் செய்வார்கள், அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்பதைப் பார்க்க முடியும்," என்று கூறினார். 7 பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி மைதானம் அளவில் சிறியது, பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, இந்த மைதானத்திலும் தங்களால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்பதையும் இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்தினர். கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வந்தபின் அணியில் பந்துவீசும் திறமையுள்ள பேட்டர்கள் அனைவரும் பந்துவீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றாற்போல் எப்போதுமில்லாத வகையில் நேற்று 7 பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது. ஏழு பந்துவீச்சாளர்களும் ஏமாற்றமின்றி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் நிதிஷ்குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், மயங்க் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியை எந்த நிலையிலும் தூக்கி நிறுத்தக்கூடிய இளம் பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள் அதிகமான அணி, பந்துவீச்சு தேர்வுக்குப் பஞ்சமில்லாத வீரர்கள் என வேறு கட்டத்துக்கு இந்திய டி20 அணி முன்னேற்றப்படுகிறது. இந்திய அணியின் இந்த உருமாற்றம், நிச்சயம் உலக அணிகளுக்கு எதிர்காலத்தில் பெரிய சவாலாக மாறக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர். வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்கள் வீசி 102 ரன்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 8 ஓவர்கள் வீசி 116 ரன்களையும் வாரி வழங்கினர். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசி 49 ரன்களை மட்டுமே வழங்கி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் எந்த ஆடுகளத்திலும் பந்துவீச முடியும் என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். டாப் ஆர்டர் தடுமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES டாஸ் வென்ற வங்கதேச அணி இரவுநேரப் பனிப்பொழிவை பயன்பபடுத்தும் நோக்கில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதற்கு ஏற்றாற்போல் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் சஞ்சு சாம்ஸன்(10) தஸ்கின் அகமது பந்துவீச்சிலும், ஹசன் சஹிப் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா(15), முஸ்தபிசுர் ரஹ்மான் வேகத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ்(8) என பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்து தடுமாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட வங்கதேசம் அதன் பிறகு 4வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அதிலும் நிதிஷ் குமார் ரெட்டியை ஆட்டமிழக்கச் செய்ய வங்கதேசத்துக்கு கிடைத்த இரு வாய்ப்புகளையும் அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். நிதிஷ் குமார் 6 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், தன்ஜிம் வீசிய ஓவரில் லிட்டன் தாஸ் கைக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவறவிட்டார். பிறகு நிதிஷ் குமார் 19 ரன்களில் இருந்தபோது, கால்காப்பில் வாங்கியபோது, நடுவர் அதை நோ-பால் என அறிவித்தார். அது நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால் நிதிஷ் குமார் ஆட்டமிழந்திருப்பார். மெகமதுல்லா வீசிய 9வது ஓவரில் நிதிஷ் குமார் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களும், ரிஷாத் ஹூசைன் வீசிய 10வது ஓவரில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், நிதிஷ் குமார் 2 சிக்ஸர்களும் விளாசி, அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினர். ரிஷாத் ஓவரில் மட்டும் 24 ரன்களை இந்திய பேட்டர்கள் சேர்த்தனர். முதல் டி20 அரைசதம் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியாக பேட் செய்த நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் தனது முதலாவது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அதேபோல மெஹதி ஹசன் வீசிய 13வது ஓவரில் நிதிஷ் குமார் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தார். அதன்பின் முஸ்தபிசுர் வீசிய 14வது ஓவரில் மெஹதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ் குமார் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, தனது பங்கிற்கு கேமியோ ஆடி வங்கதேசத்தின் பந்துவீச்சை சிதறடித்தார். ரிஷாத் ஹூசைன் 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார். தன்சிம் ஹசன் வீசிய 16வது ஓவரில் ரிங்கு சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, தஸ்கின் பந்துவீச்சில் 53 ரன்களில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். கடைசியில் களமிறங்கிய ரியான் பராக்(15), ஹர்திக் பாண்டியா(32) இருவரும் கேமியோ ஆடி ஸ்கோரை 221 ரன்களுக்கு உயர்த்திச் சென்றனர். இதில் ரிஷாத் ஹூசைன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் என 3 விக்கெட்டுகள மளமளவென இழந்தது சற்றுப் பின்னடைவாகும். போராடாத வங்கதேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேச அணி 222 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது. அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரிலேயே வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் பவர்ப்ளே முடிவுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எனத் தடுமாறியது. வருண் வீசிய ஓவரில் கேப்டன் ஷாண்டோ(11), வாஷிங்டன் சுந்தர் ஓவரில் லிட்டன் தாஸ்(14), அபிஷேக் ஷர்மா ஓவரில் ஹர்தாய்(2) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. வங்கதேச அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் மெஹதி ஹசன்(16) விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கடைசி வரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மெஹமதுல்லா (41) ரன்கள் சேர்த்து நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் வங்கதேசம் அணி 33 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணி டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 215 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை இதுவரை அந்த அணியாலேயே கடக்க முடியவில்லை. ஏறக்குறைய 6 ஆண்டுகளாகப் பல்வேறு டி20 போட்டிகளில் வங்கதேசம் ஆடியிருந்தாலும், 215 ரன்கள்தான் அதன் அதிகபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்திலும் அது தொடர்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9j4zlvgvdo
  13. இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுகிறது; இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடுகிறது (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாயிற்று. இந்தப் போட்டியில் இலங்கையை விஞ்சும் வகையில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டிய போதிலும் அதன் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடிய வண்ணம் இருக்கிறது. இந்தியாவின் கடைசிப் போட்டி, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரானதாகும். அதேவேளை இலங்கையையும் பாகிஸ்தானையும் 2 புள்ளிகள் பெற்றுள்ள நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இன்றைய வெற்றியுடன் இந்தியா 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கையுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியாவின் முன்வரிசை வீராங்கனைகள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கி மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 76 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். ஸ்ம்ரித்தி மந்தனா 38 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 40 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரொட்றிக்ஸ் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாமன்ப்ரீத் கோர் 27 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களை விளாசினார். ரிச்சா கோஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் அமா காஞ்சனா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சமரி அத்தபத்து 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மிகவும் கடினமான 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்த வருட ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 100 ஓட்டங்களைப் பெறத் தவறியது. இலங்கை துடுப்பெடுத்தாடியபோது இந்தியாவின் வழமையான அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. அவருக்கு பதிலாக உதவி அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தலைவர் பதவியை பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழிநடத்தினார். ஹாமன்ப்ரீத் கோருக்குப் பதிலாக ராதா யாதவ் களத்தடுப்பில் ஈடுபட்டார். அவர் மிகவும் சிரமமான பிடி ஒன்று உட்பட மூன்று பிடிகளை எடுத்தார். இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மோசமாகவே இருந்தது. விஷ்மி குணரட்ன (0) இரண்டாவது பந்திலும் சமரி அத்தபத்து (1) இரண்டாவது ஓவரிலும் ஹர்ஷித்தா சமரவிக்ரம (3) மூன்றவாது ஓவரிலும் ஆட்டம் இழக்க இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 6 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் துணிச்சலுடன் எதிர்த்தாடுவதே சிறந்தது என்ற கோட்பாட்டிற்கு அமைய கவிஷா டில்ஹாரியும் அனுஷ்கா சஞ்சீவனியும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் சற்று அவசரப்பட்ட அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து நிலக்ஷிகா சில்வா (8) ஆட்டம் இழந்தார். (57 - 5 விக்.) மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்ளைப் பெற்ற நிலையில் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் சுகந்திகா குமாரி (1), இனோஷி ப்ரியதர்ஷனி (1) ஆகிய இருவரும் விரைவாக ஆட்டம் இழந்தனர். (65 - 5) மறுமுனையில் ஓரளவு திறமையாக துடுப்பெடுத்தாடிய அமா காஞ்சனா 19 ஓட்டங்களைப் பெற்றார். உதேஷிக்கா ப்ரபோதனி 9 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆஷா சோபனா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேணுகா சிங் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஹாமன்ப்ரீத் கோர் https://www.virakesari.lk/article/195900
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோள் காட்டிய பகுதிகளைக் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், "அவர் (பாப் உட்வர்ட்) ஒரு கதைசொல்லி, அதிலும் மோசமானவர். அவர் தன்னிலையை இழந்துவிட்டார்," என ஏ.பி.சி நியூஸ் சேனலிடம் கூறினார். இவை கற்பனைக் கதைகள் என்றும், இதில் எந்த உண்மையும் இல்லை என்றும் டிரம்ப்-இன் பிரசாரக் குழு கூறியுள்ளது. 'புதினுடன் தொடர்பில் இருந்த டிரம்ப்' டிரம்ப் பிரசாரக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் செவ்வாயன்று (அக்டோபர் 😎 பிபிசிக்கு அளித்த பதிலில், “தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்கும் ஒரு கடையின், புனைகதைப் பிரிவில் இருக்கவேண்டிய புத்தகம் இது. அல்லது கழிவறை டிஷ்யூக்களாக இது பயன்படுத்தப்படும். இந்தக் குப்பை புத்தகத்தை எழுதுவதற்காகத் தன்னைச் சந்திக்க டிரம்ப் ஒருபோதும் அந்த எழுத்தாளருக்கு அனுமதி வழங்கவில்லை,” என்று கூறினார். அடுத்த வாரம் வெளிவரும் இந்த ‘வார்’ எனும் புதிய புத்தகம், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் புதினுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தகவல்களை டிரம்பின் உதவியாளர் ஒருவர் அளித்தார் என்று கூறுகிறது. அந்த உதவியாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் செய்தி அறிக்கையின், ஒருமுறை மார்-ஏ-லாகோவில் உள்ள (புளோரிடாவில் உள்ள கடற்கரைப் பகுதி) டிரம்பின் அலுவலகத்தில் இருந்து அவரது உதவியாளர் வெளியேற உத்தரவிடப்பட்டது குறித்து அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், புதினுடன் தொலைபேசியில் தனியாகப் பேச வேண்டும் என்பதற்காகவே அந்த உதவியாளர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு, டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதில் இருந்து இருவரும் குறைந்தது 6 முறை பேசியிருக்கலாம் என்று அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்ய அரசு கடந்த புதன்கிழமை (அக்டோபர் 2) அன்று இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. டிரம்ப், புதின் இருவரும் என்ன விவாதித்தார்கள் என்று புத்தகம் கூறவில்லை, ஆனால் இருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து டிரம்ப் பிரசாரக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சந்தேகங்கள் எழுப்பியதை மேற்கோள் காட்டி அது விவரிக்கிறது. புத்தகத்தின் பிரதியை பிபிசி இன்னும் பார்க்கவில்லை. டிரம்பின் உதவியாளரது கூற்றைத் தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பாப் உட்வர்ட் கூறியதாக டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவரும் புதினும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டது பற்றி வேறு நபர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் அந்த செய்தித்தாள் கூறுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கு காரணமாக இருந்த வாட்டர்கேட் (Watergate) ஊழலை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர் மூத்த நிருபர் பாப் உட்வர்ட். உயர்மட்ட நபர்களை அணுகி, தகவல்களைப் பெறுவதன் அடிப்படையில் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவை அதிகளவில் விற்பனையும் ஆகியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 05 தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும்போது, டிரம்புக்கும் புதினுக்கும் இடையிலான உறவு பற்றிய கேள்விகளை இந்த கூற்றுக்கள் மீண்டும் எழுப்பியுள்ளன புதினுக்கு கோவிட் சோதனைக் கருவிகள் அனுப்பினாரா டிரம்ப்? உட்வர்டை ‘மனவளர்ச்சி குன்றியவர்’ என்றும் 'குழப்பமடைந்தவர்’ என்றும் விவரித்த டிரம்ப் பிரசாரக் குழுவின் செய்தித் தொடர்பாளர், “உட்வர்ட் மலிவான எண்ணங்கள் கொண்ட மனிதர். மேலும் அவர் முன்பு டிரம்புடன் செய்த நேர்காணல் பதிவுகளை அங்கீகாரம் பெறாமல் வெளியிட்டார். இதனால் டிரம்ப் அவர் மீது வெற்றிகரமாக வழக்குத் தொடுத்துள்ளதால், உட்வர்ட் வருத்தத்தில் இருக்கிறார் போல," என்று கூறினார். 'ரேஜ்' (Rage) என்ற, 2021-ஆம் ஆண்டு புத்தகத்திற்காக டிரம்ப் முன்பு உட்வர்டிடம் பேசியிருந்தார். இருவருக்குமான நேர்காணல்களின் பதிவுகளை அனுமதி இன்றி உட்வர்ட் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரம்ப், உட்வர்ட் மீது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் உட்வர்ட் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தனது ‘வார்’ புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் உட்வர்ட்: “முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியில் இருந்தபோது, புதினுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ‘அபோட் பாயிண்ட் ஆஃப் கேர் கோவிட் சோதனை இயந்திரங்களை’ ரகசியமாக அனுப்பி வைத்தார்". அமெரிக்க ஊடகங்களில் வெளியான உட்வர்டின் புத்தகத்தின் மறுபரிசீலனையின் படி, அப்போது கொரோனா வைரஸால் நோய்வாய்ப்படுவதைப் பற்றி புதின் அதிகம் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது. 'டிரம்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற அச்சத்தில், தனக்கு கோவிட் சோதனை இயந்திரங்களை அனுப்பியதை பகிரங்கமாக கூற வேண்டாம்' என்று புதின் டிரம்பைக் கேட்டுக் கொண்டதாக அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. “ ‘நீங்கள் யாரிடமும் இதைப் பற்றி சொல்வதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் மக்கள் உங்கள் மீது தான் கோபப்படுவார்கள். என் மீது அல்ல’ என்று புதின் டிரம்பிடம் கூறியதாக” ‘வார்’ புத்தகத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது. அதற்கு டிரம்ப், "நான் அது குறித்து கவலைப்படவில்லை.” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில வாரங்களே இருக்கும்போது, டிரம்புக்கும் புதினுக்கும் இடையிலான உறவு பற்றிய கேள்விகளை இந்தக் கூற்றுக்கள் மீண்டும் எழுப்பியுள்ளன. முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல்களுக்காக ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததாக கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நீதித்துறையின் விசாரணையில் இதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேபோல டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த குற்றச்சாட்டின் விசாரணையைத் தடுத்தாரா என்பது குறித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளின் படி, ‘கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த வெளிநாட்டு மோதல்கள் மற்றும் அப்போது இருந்த மோசமான அமெரிக்க அரசியல் சூழல்கள், ஆகியவற்றில் டிரம்பிற்கு இருந்த பங்கையும் இந்த புத்தகம் ஆராய்கிறது’. மெர்ரிக் கார்லண்டை அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்தது போன்ற, தனது சொந்த தவறுகள் குறித்த அதிபர் ஜோ பைடனின் வெளிப்படையான விமர்சனமும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சிறப்பு வழக்கறிஞர் கார்லண்ட், ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வழக்கின் விசாரணையை முன்னெடுத்தார். இந்த விவகாரம் குறித்து தனது உதவியாளர் ஒருவரிடம் பேசியபோது, "ஒருபோதும் நான் கார்லண்டைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது," என்று ஜோ பைடன் கூறினார் என்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1jd7ly1p34o
  15. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195895
  16. வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்; அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, குறிப்பிட்ட தீர்மானத்தின்[57/L.1] நகல்வடிவம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கின்றது. மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தையும் 51/1அதற்கு முந்தைய தீர்மானத்தையும் 46/1 இலங்கை நிராகரித்துள்ளது. இந்த தீர்மானத்தின் மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலிருந்து எங்களை விலக்கிக்கொள்கின்றோம்; அதற்கான காரணங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம். தொடர்புபட்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் சம்மதம் இன்றியே 51/1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது உலக நாடுகள் அந்த தீர்மானம் குறித்து பிளவுபட்டிருப்பது வெளிப்பட்டது. இதன் காரணமாக அந்த 51/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கும் தீர்மானம் மனித உரிமை பேரவையின் பொது உடன்பாடு அற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம். எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும் அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. https://www.virakesari.lk/article/195898
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 9 அக்டோபர் 2024, 19:27 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த அறிக்கையில், "ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார். டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது. இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) மேலாக உள்ளது. பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்படும். மகாராஷ்டிர அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. அவரது உடல் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக என்.சி.பி.ஏ-வில் வைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். அவரது மறைவுக்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பிரியாவிடை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது உதவியாளராக இருந்து தலைவராக உயர்ந்தவர் ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா. கடந்த 1955ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். உயர்கல்விக்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார். கடந்த 1975ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார் பின்னர் 1981ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா. அதன்பின் 1991ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி டாடாவுக்குப்பின் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்குத் தலைவரனார். அந்த பதவியில், டாடா நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யத் துவங்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு ‘டாடா நானோ’ என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது அவரது பெரும் திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது. கடந்த 2012ஆம் ஆண்டு, 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸ்-இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cew17xxwd5jo
  18. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்வதற்கும் தென்னாசியாவில் பாதுகாப்பு ஸ்திரதன்மைக்காகவும் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் அதற்கு ஆதரவளிக்கவேண்டும். https://www.virakesari.lk/article/195916
  19. (எம்.நியூட்டன்) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று புதன்கிழமை (09) தாக்கல் செய்தது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகிறது. வேட்பாளர் பட்டியலின்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் களமிறங்குகின்றனர். https://www.virakesari.lk/article/195875
  20. பெருந்தொகை இலத்திரனியல் சாதனங்களுடன் சிக்கிய சீன பிரஜைகள் மேற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 மடிக்கணனிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹோட்டலுக்கு இருபது இலட்சம் மாத வாடகை இவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து உணவு எடுத்து வந்ததாகவும், இருபது இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். நீதிமன்றில் முன்னிலை இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர். நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://ibctamil.com/article/chinese-nationals-arrested-with-437-laptops-1728454387?itm_source=parsely-api
  21. அதிகளவில் பெண்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் : முன்னாள் பெண் அமைச்சர் கோரிக்கை “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிவேறுபாடின்றி அதிகமான பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பெண்களை மதிக்கும் நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்” என முன்னாள் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே(sudarshini fernandopulle) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொரளையில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்: அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்டும் “இம்முறை பொதுத்தேர்தலில் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி அனைவரும் மன உறுதியுடன் அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்டும். பெண்களிடம் பேசத் தெரியாதவர்களுக்கும், பெண்களை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மக்களுக்கும் வாக்களிக்காதீர்கள். ஊழல், மோசடிகள் குறையும் பெண்களை மதிக்கும் நபர்களை மட்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அதிக அளவில் பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல், மோசடிகள் குறையும். எந்தக் கட்சியானாலும் முக்கியமான பதவிகளுக்கு பெண்களை நியமித்தால் அவர்கள் மீதான வன்முறைகள் குறையும் என்றார். முன்னாள் அமைச்சரான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/send-more-women-to-parliament-1728476192
  22. 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிநபரின் அடாவடித்தனம் தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையான போக்கு கட்சிகளில் காணப்படுகின்றது. சுமந்திரனின் எதேட்சையதிகார தனித்துவ சிந்தனையால்தான் இன்று தமிரசுக் கட்சியானது படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, தனிநபரின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தாத தலைமை இருந்து என்ன பயன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை அத்தோடு சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியனின் கட்சிகள் மீதான ஆதிக்கம், பாதிக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழரசுக் கட்சியில் எதிர்காலம் மாற்றம் என்பவை தொடர்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு, https://ibctamil.com/article/the-allegation-leveled-against-sumanthiran-1728471832
  23. ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தெளிந்த பார்வை மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது. மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills), இளையோர் அமைப்பின் நோக்கம் மற்றும் வேலைதிட்டங்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம், எமது வரலாறு, தமிழீழ அரசியல் மற்றும் பூகோள அரசியல் போன்ற தலைப்புகளும் இரண்டாவது நாளில்,சிங்கள அரசின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் பறிபோகும் தமிழர் தாயகம், பொருளாதார வலுவூட்டல் போன்ற தலைப்புக்களில் வளவாளர்களால் கருத்தூட்டல் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் அனுபவங்களூடாக விடயப்பரப்புக்களை எடுத்துரைக்க, இளையோர்களும் அவர்களுடன் இணைந்து கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். அத்தோடு,இளையோர் அமைப்பினரால் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை ஒவ்வொரு இடைவேளையின் போதும் இளையோர்கள் மிக ஆர்வத்துடன் படித்து குறிப்புக்கள் எடுத்து கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. தமிழ் இளையோர் மாநாடு இரண்டு நாட்களின் முடிவில் இளையோர் மாநாட்டில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் அனைத்துலக இளையோர் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது. இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வுகளோடு, உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்ட இளையோர்களின் அகநிறைவோடு உறுதியேற்று “தமிழ் இளையோர் மாநாடு 2024” சிறப்போடு நிறைவுபெற்றது. தமிழீழத் விடுதலைப்போராட்டத்தை இளையோர் கரமேற்று தொடர்ந்தும் முன்னகர்த்த வேண்டுமென்ற தமிழீழத் தேசியத்தலைவரின் அறைகூவலை உளமேற்று இளையோர்கள் பயணிக்கிறார்கள் என்பதை இந்த இளையோர் மாநாடு கட்டியம் கூறிநிற்கிறது. இம் மாநாட்டில் யேர்மனி, நோர்வே, பெல்சியம், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/tamil-youth-conference-2024-in-germany-1728477833
  24. இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட் (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார். கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார். தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 35ஆவது சதத்தைப் பூர்த்திசெய்ததுடன் இதுவரை 12578 ஓட்டங்களை மொத்தமாக பெற்று இங்கிலாந்துக்கான சாதனையாளரானார். அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடி வரும் ஹெரி ப்றூக் தனது 6ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 243 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜோ ரூட் 277 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் உட்பட 176 ஓட்டங்களுடனும் ஹெரி ப்றூக் 173 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 141 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். அவர்களைவிட பென் டக்கட் 84 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 78 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 556 ஓட்டங்களைக் குவித்தது. பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவர் ஷான் மசூத் 151 ஓட்டங்களையும் சல்மான் அகா ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களையும் அப்துல்லா ஷக்கிப் 102 ஓட்டங்களையும் சவூத் ஷக்கீல் 82 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெக் லீச்160 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றய்டன் காஸ் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 99 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/195896
  25. இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்ததுடன் யாழில்(jaffna) சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில்(sri lanka) தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை) காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சிகளை பாராட்டுகிறேன். இலங்கையில் தொழுநோய் இலங்கையில் தொழுநோய் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்காமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் சரியான மருந்து இன்மை, மற்றும் முறையான ஆற்றுப்படுத்தல் இன்மை காரணமாக தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திக்கும் வாய்ப்புகள் காணப்பட்டது. ஆனால் தற்போது தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்காமல் இருப்பதற்கும், வைத்தியசாலையில் கிடைக்கக் கூடிய இலவச மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் தொழுநோயாளர்கள் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்கின்றமை வரவேற்கதக்கது. பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு மேலும் இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தொழுநோயாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான புதிய அணுகுமுறைகளை உருவாக்கி பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும். அது மட்டுமல்ல கிராமிய ரீதியிலும் தொழுநோயாளர்கள் மற்றும் விழிப்புணர்வு சார் அக்கறை ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சங்கானை பகுதியில் அதிகளவான தொழு நோயாளர்கள் இருப்பதை அறியும் போது வருத்தமளிக்கிறது. உரிய காலத்தில் சரியான மருத்துவம் உரிய காலத்தில் சரியான மருத்துவம் மேற்கொள்ளும் போது தொழு நோயை முற்றாக தடுக்க முடியும் என்ற போதிலும் கூட, உள்ளூர் வைத்தியர்களின் பாரம்பரிய முறைசாரா வைத்திய முறைகளை பின்பற்றி நோயின் தாக்கம் அதிகரிக்கும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே அரச வைத்தியசாலைகளில் முறையாக கிடைக்கப்பெறும் இலவச வைத்திய உதவிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக தொழுநோயிலிருந்து முறையாக விடுதலை பெறலாம் என்பதை உணர வேண்டும். எனவே வைத்தியதுறையில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடம் சார்ந்தவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்தார். https://ibctamil.com/article/leprosy-on-the-rise-in-sri-lanka-including-jaffna-1728469333#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.