Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. என்னண்ணை நீங்க மருந்து போத்தலை குலுக்கிற மாதிரி சொல்கிறீங்க!
  2. அண்ணை, 1 கோடி செலவழிக்கவேணுமாம் தேர்தலுக்கு! நேற்று பாடசாலைக்கருகில் சந்தித்த தம்பி சொன்னான். ஒருத்தர் 30 லட்சம் வைச்சுக்கொண்டு என்ன செய்ய என்று கையை பிசைகிறாராம்!
  3. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது. கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195803
  4. படக்குறிப்பு, காஸா - இஸ்ரேல் இடையேயான மோதல் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜ்ஜீய விவகாரங்களுக்கான செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வரலாற்றில் மிகவும் மோசமான தாக்குதலின் தாக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீண்டு வந்து கொண்டிருந்த அதே நேரத்தில், காஸா கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆளானது. பாலத்தீன - இஸ்ரேல் விவகாரத்தில் இந்த மோதல் ஒரு திருப்புமுனையாக கருதப்பட்டது. பல ஆண்டுகளாக நம்முடைய திரைகளில் இருந்து விலகியே இருந்த இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள் கடந்த ஆண்டு மீண்டும் நம் பார்வைக்கு வந்தன. இந்த மோதல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் இந்த தாக்குதல்கள் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், "இரண்டு தசாப்தங்களாக இருந்த சூழலோடு ஒப்பிடுகையில் மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது மிகவும் அமைதியாக இருக்கிறது," என்று கூறியிருந்தார். தற்போது ஓர் ஆண்டாக அந்த பிராந்தியம் எரிந்து கொண்டிருக்கிறது. 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இறந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு கரையில் மேலும் 600 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் பத்து லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலின் முதல் நாளில் 1200 இஸ்ரேலியர்கள் இறந்தனர். அதன் பிறகு 350க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இறந்து போனார்கள். காஸாவின் எல்லையோரமும், பதட்டத்துடன் காணப்படும் லெபனான் நாட்டு எல்லையை ஒட்டிய வடக்கு இஸ்ரேலில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஹெஸ்பொலாவின் வான்வழி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். முற்றுப்பெறாத மோதல்கள் மற்ற நாடுகளும் மத்திய கிழக்கு முழுவதும் நடந்து வரும் இந்த மோதலில் இணைந்துள்ளன. இந்த மோதல் அதிகரிப்பதை தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட விடாப்பிடியான முயற்சிகள் அனைத்து ஒன்றும் இல்லாமல் போனது. அதிபர் சந்திப்புகள், எண்ணிக்கையற்ற ராஜ்ஜீய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள், பெரும் அளவிலான ராணுவ ஆயுதங்களை அனுப்புதல் என பல நடவடிக்கைகள் இதில் அடங்கும். இராக், ஏமென் போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தும் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. எதிர்பார்க்கப்பட்ட வகையில் இஸ்ரேலும் இரானும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. அமெரிக்காவின் முயற்சிகள் செல்வாக்கற்றதாக காணப்பட்டது. மோதல்கள் விரிவடைந்து வருகின்ற சூழலில் அதன் ஆரம்பப்புள்ளி முற்றிலுமாக பார்வையில் இருந்து மறைய துவங்கிவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் மத்திய கிழக்கில் முழுமையான போர் சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சூழலில், அக்டோபர் 7க்கு முன்பும் சரி பின்பும் சரி, காஸா மக்களின் வாழ்க்கை மறந்து போன ஒன்றாக மாறிவிட்டது. தங்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்ட அந்த நாளில் பாதிக்கப்பட்ட சில இஸ்ரேலியர்களும் கூட ஒதுக்கப்பட்டதாக உணர்கின்றனர். "நாங்கள் புறந்தள்ளப்பட்டோம்," என்று கூறுகிறார் பணைய கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நிம்ரோத் கோஹெனின் தந்தை யெஹுதா கோஹென். கடந்த வாரம் இஸ்ரேலின் கன் செய்திகளில் பேசிய அவர், "இந்த அர்த்தமற்ற போரில் அனைத்து எதிரிகளையும் நம் பக்கம் திருப்பியதற்கு நெதன்யாகுதான் காரணம்," என்று கூறினார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த நிகழ்வு மிகவும் சிறிய நிகழ்வுதான் என்று உணர வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் வெற்றியுடன் செய்து கொண்டிருக்கிறார் என்றும் யெஹுதா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 7 தாக்குதல்- முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரித்த இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவின் நிலைப்பாடு என்ன? அனைத்து இஸ்ரேலிய மக்களும் யெஹுதா கோஹெனின் கருத்திற்கு உடன்படவில்லை. இஸ்ரேலின் எதிரிகள், யூத நாட்டை அழிப்பதற்கான துவக்கமாகவே ஹமாஸின் தாக்குதலை பார்க்கின்றனர். பேஜர்கள் வெடிப்பு, திட்டமிடப்பட்ட கொலைகள், தொலைதூரத்திற்கு சென்று இலக்கை தாக்கும் வான்வழி தாக்குதல்கள், தங்களின் பெருமையாக இஸ்ரேல் கருதும் உளவு பிரிவு மூலமான தாக்குதல்கள் என்று இஸ்ரேல் பதில் தாக்குதல்கள் நடத்தி, கடந்த ஆண்டு இழந்த தன்னம்பிக்கையை தற்போது மீட்டுள்ளது. கடந்த வாரம் பேசிய நெதன்யாகு, மத்திய கிழக்கில் இஸ்ரேல் அணுக முடியாத பகுதி என்ற ஒன்று இல்லை என்று நம்பிக்கையுடன் கூறினார். அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு பிரதமருக்கான தேர்தல் கருத்துக்கணிப்பில் மோசமான இடத்தில் இருந்தார் நெதன்யாகு. தற்போது அதில் முன்னேறி வருவதை அவரால் காண முடிகிறது. மிகவும் தைரியமான முடிவுகளை எடுக்கும் ஒரு உரிமமாக அது மாறுமா என்ற கேள்வியும் நீடிக்கிறது. ஆனால் இவை அனைத்தும் எதை நோக்கி செல்கிறது? ''எப்போது இசை முடிய போகிறது? எங்கே அனைவரும் நிற்பார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை'' என்று கூறுகிறார் - பிபிசியின் டுடே பாட்காஸ்ட் நிகழ்வில் பேசிய இரானுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர் சிமோன் காஸ். மோதலை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளை தளபதி (Centcom) மைக்கேல் குரில்லா இஸ்ரேலுக்கு வருகை புரிந்தது ராஜ்ஜீய தீர்வுகளை ஆய்வதற்கான ஒரு வருகை போல் இல்லாமல் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாகவே காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் நான்கு வாரங்களில் நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிக்கலானதாக இருக்கின்ற இத்தகைய சூழலில் அமெரிக்கா எந்தவிதமான புதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஏதுவான நேரம் இது அல்ல. தற்போதைக்கு, உடனடி சவாலானது இந்த மோதல் மிகப்பெரிய பிராந்திய மோதலாக உருமாறுவதை தடுப்பது. கடந்த வாரம் இரான் நடத்திய தாக்குதல் உட்பட அனைத்திற்கும் பதிலடி தரும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக அதன் கூட்டாளி நாடுகள் கருதுகின்றன. இரானின் அந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் யாரும் கொல்லப்படவில்லை. இரான் இஸ்ரேலின் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தியது. இருப்பினும் கடுமையான பதிலடி வழங்குவோம் என்று நெதன்யாகு உறுதி அளித்தார். பல வாரங்களாக நடைபெற்ற மோதல்களில் அற்புதமான உத்திகள் மூலம் வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பல பெரிய கனவுகளை காண துவங்கியுள்ளார். இரானிய மக்களுக்கு அவர் நேரடியாக வெளியிட்ட செய்தி ஒன்றில், தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட இருப்பதாக மறைமுகமாக கூறினார். "எப்போது இரான் விடுதலை அடையும்? மக்கள் நினைக்கும் காலத்திற்கு முன்பே அது நிகழ்ந்துவிடும். அனைத்தும் மாற்றமடையும்," என்று அவர் கூறினார். இராக்கில் 2003-ஆம் ஆண்டு அமெரிக்க போர் தொடுத்த போது அமெரிக்காவின் நவீன பழமைவாதிகள் வெளியிட்ட கூற்றையே நெதன்யாகு எதிரொலிப்பதாக சிலர் கருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு இருபது லட்சம் காஸா மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் இஸ்ரேல் இல்லாத உலகத்தை இரானிய அரசு கனவு காணலாம். ஆனால் 'எதிர்ப்பின் அச்சு' என்று அழைக்கப்படுகின்றன இரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளான ஹெஸ்பொலாவும் ஹமாஸும் ஒடுக்கப்படும் நிலையில், இரான் அந்த பிராந்தியத்தில் இருக்கும் ஒரே ஒரு வல்லரசு நாடான இஸ்ரேலை போரில் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளது. இரான் ஏற்படுத்தியுள்ள அச்சத்தை இஸ்ரேல் மிக விரைவாக கடந்து சென்றுவிட இயலும். சமீபத்திய வெற்றிகள் அதற்கு நம்பிக்கை அளித்தாலும் தனியாக அதனை செய்ய இயலாது என்பதையும் இஸ்ரேல் உணர்ந்தே இருக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது ஜோ பைடனின் நோக்கத்தில் இல்லை. அவரது துணை அதிபரான கமலா ஹாரிஸின் நோக்கத்திலும் இல்லை. டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை ஒரே ஒருமுறை தான் இரானை தாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை தெஹ்ரான் சுட்டு வீழ்த்திய பிறகு அந்த முடிவை எடுத்தார். இருப்பினும் இறுதி நொடியில் அந்த எண்ணத்தில் இருந்து பின்வாங்கினார். ஆனால், அதற்கடுத்த 7 மாதத்தில் இரானின் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல உத்தரவு பிறப்பித்தார். ஒரு வருடத்திற்கு முன்பு, மத்திய கிழக்கு சில தசாப்தங்களில் காணாத மிகப்பெரிய பேரழிவை சந்திக்க இருக்கிறது என்பதை வெகு சிலரே நினைத்து பார்த்திருப்பார்கள். காஸாவில் மோதல் துவங்கி இரண்டாம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அனைவரும், போர் நிறுத்தத்திற்கு பிறகோ, அல்லது பரந்த போரில் மொத்தமாக மூழ்கிய பிறகோ காஸாவை மீண்டும் கட்டமைப்பது எப்படி என்றும், ஆள்வது எப்படி என்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில், எப்போது ஹமாஸ், ஹெஸ்பொலாவை போதுமான அளவிற்கு ஒழித்துவிட்டோம் என்று இஸ்ரேல் நினைக்கிறதோ, இது இந்த பிராந்தியத்தை மேலும் நெருக்கடிக்குள் கொண்டு செல்லாது என்று இஸ்ரேலும் இரானும் கூறுகிறதோ, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகோ, ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கலாம். அதுவரை, இந்த மோதலை நிறுத்த நீண்ட காலம் ஆகும் என்றே தோன்றுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgn24z6ek1o
  5. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணியளவில், ஈரானில்(iran) ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம்(earth quake) ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அரடன் நகருக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் நிலத்தடியில் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தின் அளவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டது. இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை ஈரானை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு ஈரான் புரட்சிப் படை இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்தியதே காரணம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் குற்றச்சாட்டு இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்து வருவதாக இஸ்ரேல்(israel) குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையில், ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக ஈரானைத் தாக்கி, ஈரானிய ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/iran-earthquakes-caused-by-nuclear-tests-1728384521#google_vignette
  6. பாராளுமன்றத் தேர்தல்; வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அரசியல்வாதிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை கையளிக்கும் போது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கணிசமான இடத்தை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிலர் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்பதை அவதானித்துள்ளோம். மேலும், மக்கள் அந்தந்த கட்சியால் வேட்புமணுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தமது கட்சி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தெரிவு செய்யாமல் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கணிசமான வாய்ப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டுமென கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச அவர்கள் கேட்டுக்கொள்கிறார். ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில் குறிப்பாக அவ்வீதம் நீண்டகாலமாக 50% முதல் 52% வரையில் காணப்படுகிறது. ஆனால், இந்நாட்டு வரலாற்றில் பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் 6% வீதத்தினை விட அதிகரிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதன் காரணமாக ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது. https://www.virakesari.lk/article/195794
  7. அண்ணை, தேசியப்பட்டியல் மூலம் நேரடி தேர்தலில் போட்டியிட முடியாத மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களிற்கு மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் நாடாளுமன்றில் வழங்கப்பட வேண்டும்.
  8. ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்....! கசிந்துள்ள தகவல் ஹமாஸ் (Hamas) அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் கடந்த மாதம் 21 ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இஸ்ரேலிய ஊடகங்கள் இந்நிலையில், ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தார் அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கத்தார் மத்தியஸ்தர்களுடன் தொடர்பில் உள்ளார் என்று அல் - அரேபியா மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இதேவேளை, லெபனானின்(lebanon) பெய்ரூட் பகுதியில் நேற்று(07) தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மிக முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சுஹைல் ஹுசைன் ஹுசைனி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இவர் ஈரானுக்கும்(iran) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆயுதங்களைக் கொண்டு செல்வதில் "முக்கியமான" பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டது. https://ibctamil.com/article/hamas-news-leader-yahya-sinwar-alive-1728372450?itm_source=parsely-api
  9. பொதுத்தேர்தல்; தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தபால்மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195795
  10. பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் ஜனாதிபதியின் முடிவிற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கடந்த மாதம் 27ம் திகதி அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ்மா அதிபராக நியமித்தார். அன்றைய தினமே ஜனாதிபதியின் செயலாளர் நியமனக்கடிதத்தை வழங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று அரசியலமைப்பு பேரவை இந்த நியமனத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/195793
  11. ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றால்… ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகினார். பின்னர் ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் போட்டியில் நுழைந்ததிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. ஜோ பைடன் போட்டியில் இருந்தபோது, ட்ரம்ப்தான் வெற்றிப் பெறுவார் என கூறப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் வந்தவுடன் ட்ரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அமெரிக்க அரசியல் கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்கத்திலிருந்தே முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு பிரபல தொழிலதிபரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின், முன்னாள் செய்தி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடனான எலான் மஸ்க்கின் நேர்காணல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியை தொடர்ந்து இந்த பேட்டி வெளிவந்துள்ளது. இதில் எலான் மஸ்க் பேசியதாவது; இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல் என்பது எனது கருத்து. சட்டவிரோதமானவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சில முக்கிய மாநிலங்களுக்கு வேண்டுமென்றே கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பர். இவ்வாறு ஸ்விங் ஸ்டேட்களில் ஆயிரக்கணக்கான மக்களை வைத்தால் வைத்தால் என்ன ஆகும்?. எனது கணிப்பு என்னவென்றால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜனநாயக கட்சியினர் இருந்தால், சட்டவிரோதமானவை அனைத்தையும் சட்டபூர்வமானதாக மாற்றுவர்.” என எலான் மஸ்க் தெரிவித்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் ஸ்டேட்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஸ்விங் மாகாணங்களாக இருக்கும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளார். https://thinakkural.lk/article/310450
  12. இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின்(USAID) ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார். ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார். சிறந்த அரச நிருவாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார். மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்தார். தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ (Justin Divenanzo) மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் (Christopher Gooch) உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195773
  13. இலங்கை அனைத்து நாடுகளுடனும் சமமான இராஜதந்திர உறவை பேணும் எந்த நாட்டிற்கும் விசேட சலுகையையோ முக்கியத்துவத்தையோ வழங்காது என வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் எப்படி ஈடுபாட்டை பேணுகின்றோமோ அது போலவே சீனாவுடன் ஈடுபாட்டை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் சீன இராணுவத்தின் பயிற்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான நோக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜித ஹேரத் இது நாட்டின் இராஜதந்திர ஈடுபாட்டின் கட்டமைப்பை மீறாத விடயம் என குறிப்பிட்டுள்ளார். இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இந்த மாதம் வந்துசேரும்; என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த நாடும் விசேடமானது என கருதவில்லை, பெரிய நாடாகயிருந்தாலும் சரி சிறிய நாடாகயிருந்தாலும் சரி அவற்றுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை பேணுகின்றது, எங்கள் அணுகுமுறையில் பக்கச்சார்பு இருக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார். வழமையான இராஜதந்திர பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக பல நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195755
  14. இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்திற்கும் அனுர அரசாங்கம் எதிர்ப்பு - யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது - விஜித ஹேரத் 08 OCT, 2024 | 12:21 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை பேரவையுடனும், வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும், தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார், தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை, நாளை ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195746
  15. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாடு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310434
  16. Published By: VISHNU 08 OCT, 2024 | 09:08 PM இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை செவ்வாய்க்கிழமை (08) நேரில் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 வருடங்களின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றை வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை இலங்கைக்கு மீள அழைத்து வர அப்போது கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இவருடன் கைது செய்யப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போதே கடந்த பெப்ரவரி மாதம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195806
  17. 08 OCT, 2024 | 05:26 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/195791
  18. உயர்ந்த மரங்கள் மழைக்காலங்களில் பெருங்காற்றில் வீதியில் விழ வாய்ப்பிருக்கலாம்! மற்றும்படி மரங்களை அநாவசியமாக வெட்டி வீழ்த்துவதை தவிர்க்கவேண்டும். ஏறத்தாள 50 நாளின் பின் 6ஆம் திகதி முதல் வெப்பச்சலன மழை சிறிது பெய்கிறது. மழை வேணும் எனில் மரம் வளர்ப்போம்.
  19. ChatGPT உருவாக வழிவகுத்த கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாஃப்ரி ஹிண்டன் 8 அக்டோபர் 2024, 12:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 😎 அன்று அறிவித்தது. “இந்த இரு ஆராய்ச்சியளர்களும், இன்றைய இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் முறைகளை உருவாக்க இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சுவீடனின் அரச அறிவியல் கழகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி பரிசுத் தொகையை இவர்கள் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES ChatGPT-க்கு வழிவகுத்த கண்டுபிடிப்பு செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களில் ஜாஃப்ரி ஹின்டனின் முன்னோடி ஆராய்ச்சி ‘ChatGPT’ போன்ற தற்போதைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உருவாக்கப்பட வழிவகுத்தது. செயற்கை நுண்ணறிவில், நரம்பியல் வலைப்பின்னல்கள் என்பவை மனித மூளையைப் போலவே தகவல்களைக் கற்றுக்கொள்வது மற்றும் செயலாக்குவது போன்ற அமைப்புகளாகும். ஒரு மனிதரைப் போலவே, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள இந்த நரம்பியல் வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு உதவுகின்றன. இது ‘ஆழ்ந்த கற்றல்’ (deep learning) என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நினைவுக் கட்டமைப்பு தரவுகள், படங்கள் அகியவற்றைச் சேமித்து வைத்து, அவறைத் தேவைக்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் ஒரு ‘நினைவுக் கட்டமைப்பை’ ஜான் ஹாப்ஃபீல்ட் உருவாக்கினார். ஜாஃப்ரி ஹின்டன், இந்தத் தரவுகள், படங்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காணும் முறையைக் கண்டுபிடித்தார். ஜாஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து தனது பணியை ராஜினாமா செய்தார். “இந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவர்கள் இயற்பியலைப் பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன,” என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸின் உறுப்பினர் ஆண்டர்ஸ் இர்பாக் தெரிவித்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் அணு இயற்பியல், விண்ணியல், காலநிலை மாற்றம், சோலார் செல்கள், மருத்துவ ஸ்கேன்கள் எனப் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார். பரிசு வென்ற ஜாஃப்ரி ஹின்டன், தொழில் புரட்சி எப்படி மனிதர்களின் உடல் வலிமையை மீறிச் சென்றதோ, அதேபோல் தங்கள் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் அறிவு வலிமையை மீறிச் செல்ல உதவின என்றார். ஆனால் இந்தக் கட்டமைப்புகள் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அபாயமும் உள்ளது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தொலைபேசி மூலமாகக் கூறினார். "நான் கணிப்பது என்னவென்றால் 5 முதல் 20 ஆண்டுகளுக்குள், AI முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் என்ற சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்", என்று ஜாஃப்ரி ஹின்டன் கூறினார். கடந்த ஆண்டின் இயற்பியல் பரிசு கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து நாம் புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்தது. பியர் அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன் லூயே ஆகிய 3 விஞ்ஞானிகள் அந்தப் பரிசை பகிர்ந்து கொண்டானர். அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பதிவு செய்யவும், புரிந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது. https://www.bbc.com/tamil/articles/cyvy9n0zj4jo
  20. அது 250ரூபா அல்லது 350ரூபா கொடுக்கிறார்கள் அண்ணை. சமுர்த்தியும் அரச ஊழியர் தவிர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொகை சரியாத் தெரியவில்லை அக்கா.
  21. முதியோர் கொடுப்பனவு 3000ரூபா, 70 வயதிற்கு மேற்பட்டவ்களுக்கு அண்ணை.
  22. Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 05:14 PM ஆர்.ராம்- ‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன. அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கக் கூடிய தரப்புக்கள் ‘தமிழ்த் தேசிய விரோதிகளாக’ அல்லது ‘தமிழ்த் தேசிய துரோகிகளாக’ சித்தரிக்கப்படுகின்றன. மேற்படி வகையறாக்களுக்குள் தான் ‘மிதவாத’ அல்லது ‘முற்போக்கு’ சிந்தனை சக்திகளும் உள்ளடக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டியதொரு விடயமாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் உண்மையான வாரிசுகள் யார், போலித் தமிழ்த் தேசியவாதிகள் யார் என்று ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல. ஏனெனில் அது தமிழ் மக்களின் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயம். மாறாக, வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ‘தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளுக்கு’ முன்னால் காணப்படுகின்ற பாரிய சவால்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துவது தான் இந்தப் பத்தியின் பிரதான நோக்கமாக உள்ளது. நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியனவும் அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய தனிநபர்களும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்த ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவர் 84,588 வாக்குகளையும், வன்னியில் 52,573வாக்குகளையும், மட்டக்களப்பில் 91,132வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். திருகோணமலையில் 40,496 வாக்குகளையும், அம்பாறையில் 86,589 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்தாலும் அதில் தமிழ்த் தரப்பு வாக்குகள் சொற்பமானவையே. இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படியான பெறுபேற்றுக்கு டக்ளஸ் தேவானந்தா, சிவநேசத்துரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய நான்கு நபர்கள் தான் பிரதான காரணிகளாக உள்ளனர். இதில், டக்ளஸ், சந்திரகாந்தன் ஆகியோர் தனியாக தமது கட்சிகளின் ஊடாக பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுகின்றார்கள். அவர்களுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும் நிலையான வாக்குவங்கியொன்று உள்ளது. ஆகவே அவ்விருவரினது வெற்றி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டது எனலாம். ஆனால், வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோர் கடந்தமுறை தேசிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதித்திருந்தாலும் இம்முறை அவர்கள் புதுப்பொலிவுடன் வரவுள்ள பழைய தேசிய கட்சியொன்றின் கூட்டுடன் தான் கைகோர்க்க வேண்டியுள்ளது. அந்தக் கைகோர்ப்புக்கான அங்கீகாரம் எவ்வளவு தூரம் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் கேள்விகள் உள்ளன. ஏனெனில், வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோருக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களுடன் கொண்டிருந்த ஊடாட்டம் தான் வெற்றியை உறுதி செய்தது. ஆகவே, அவர்களின் வாக்காளர்கள் மத்தியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதை தான் எதிர்பார்பாக கொண்டிருப்பார்கள் என்று கொள்கின்றபோது, இம்முறை அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை. ஆகவே அவர்களின் ஆதரவாளர்கள் எவ்விதம் சிந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்தவர் சஜித் பிரேமதாச. இவரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் அணி மட்டும் தான் ஆதரித்திருந்தது. அதில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ஆதரித்து வாக்குச் சேர்த்தார்கள். அதற்கு அமைவாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 121,177வாக்குகளை அவர் பெற்றார். இதில் கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி பெற்றுக்கொடுத்த 30ஆயிரம் வரையிலான வாக்குகளும் உள்ளடக்கம். வன்னியில் 94,422வாக்குகளையும், மட்டக்களப்பில் 139,110வாக்குகளையும் திருகோணமலையில் 120,588 அம்பாறையில் 200,348 வாக்குகளையும் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டுள்ளார். இதில் முஸ்லிம் கட்சிகளின் வாக்குச் சேகரிப்பும் உள்ளடங்கியுள்ளது. ஆகவே, சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தங்களின் அறிவிப்புக்கு மக்கள் திரண்டு வாக்களித்ததாக தர்க்கத்துக்காக கூறினாலும் சஜித்துக்கான வாக்குகளில் தங்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதை உறுதியாக கூற முடியாதவொரு நிலைமையே உள்ளது. ஏழு அரசியல் கட்சிகளும், 83சிவில் அமைப்புக்களும் இணைந்து களமிறக்கிய தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் 116,688 வாக்குகளும், வன்னியில் 36,377வாக்குகளும், அவரது பிறந்த மண்ணான மட்டக்களப்பில் 36,905வாக்குகளும் திருமலையில் 18,524வாக்குகளும் அம்பாறையில் 9,985வாக்குகளும் கிடைத்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 3,168வாக்குகளும் கொழும்புக்கு வெளியே வடக்கு,கிழக்கு அல்லாத ஏனைய மாவட்டங்களில் 4,696 வாக்குகளும் உள்ளடங்கலாக அவர் 2,26,243வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சிறிதரன் ஆதரவு அணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிவில் அமைப்புக்களின் கூட்டான தமிழ்த் தேசிய பொதுச்சபை ஆகிய நான்கு தரப்புக்கள் அந்த வாக்குகளுக்கு உரிமை கோருகின்றன. இதனைவிட, புலம்பெயர் சமூகத்தின் வகிபாகமும் உள்ளது. ஆகவே, ‘தேசமாக’ அணி திரட்டிய அரியநேத்திரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எந்தத் தரப்பிற்குச் செல்லும் என்பதிலேயே அதற்கான உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், சிறிதரன் தரப்பும், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுக்குள் சில சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பொதுவேட்பாளரின் ‘சங்கு’ சின்னத்தை தனதாக்கியுள்ளது. இது ஏனைய தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பிரசார மேடைகளில் ‘சங்கு’ சின்னத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்களும் தாராளமாக எழுவதற்கு இடமுள்ளது. இம்முறை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த தரப்பில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களின் தேர்தல் செலவீனங்களை பெருவர்த்தக நிறுவனமொன்று தத்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் சாத்தியமாகின்றபோது குறித்த தரப்புக்கள் பெருவர்த்தக நிறுவனத்தின் ‘கை பொம்மைகளாக’ மாறும் நிலைமையே ஏற்படும். இவற்றைவிடவும், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த அணியும், ரணிலை ஆதரித்த அணியும் உள்ள அரசியல்வாதிகள் சம்பிரதாய தமிழ்த் தேசிய அரசியல் கலாசாரத்திற்கு அப்பாற்சென்று பெற்றுக்கொண்ட சலுகைகள் பற்றிய தகவல்களும் மெல்லக் கசிய ஆரம்பித்துள்ளன. அவையும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க வடக்கு,கிழக்கில் நேரடியாகவே களமிறங்கிப் பிரசாரம் செய்திருந்தார். யாருடனும் கூட்டணி அமைத்திருக்கவில்லை. அவருக்கு யாழில் 27,086வாக்குகளும் வன்னியில் 21,412வாக்குகளும் மட்டக்களப்பில் 38,832வாக்குகளும் கிடைத்துள்ளன. திருகோணமலையில் 49,886வாக்குகளும், அம்பாறையில் 108,971வாக்குகளும் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற ஆசனமொன்றைப் பெறுவதற்கு சொற்பமான வாக்குகளே அவருக்குத் தேவையாக உள்ளன. தற்போதைய சூழலில் வடக்கு,கிழக்கில் உள்ள துறைசார்ந்த நிபுணத்துவத் தரப்புக்கள் ஜே.வி.பியின் பெலவத்த தலைமையகத்திலும், ஜனாதிபதி செயலகத்திலும், நீண்ட வரிசையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கோரி நிற்கின்றன. அவ்விதமானவர்களில் ஜே.வி.பி.அடையாளம் கண்டு பொருத்தமான மக்கள் அபிமானத்தை வென்றவர்களை களமிறக்கும்போது வெற்றி உறுதியானதாக மாறுவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கில் தலா ஒவ்வொரு ஆசனங்களை வெற்றி கொள்வது தான் முதற்கட்ட இலக்காக கொண்டுள்ள நிலையில் அந்த இலக்கு இலகுவில் அடையப்படும் என்பதே கணிப்பாக உள்ளது. இதேநேரம், தேர்தல் புறக்கணிப்பைக் கோரிய தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணி தனித்து களமிறங்குகின்றது. அது தன்னுடைய வழமையான ஆதரவாளர்களை நோக்கியே நகருவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளது. இவ்விதமான சூழலில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஏதேவொரு வகையில் அழுத்தங்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாகவே உள்ளன. அத்தோடு தமிழ்த் தேசியத்தை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் அபிமானமும் தற்போதைய சூழலில் குறைமதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்கள் மத்தியிலும் ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்ற சிந்தனையை வெகுவாக தோற்றுவித்து வருகின்றது. மூன்று சதவீதத்தினைக் கொண்டிருந்த ஜே.வி.பி.அரியணைக்கு செல்லுமளவிற்கு உருவெடுத்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் மாற்றத்தை மையப்படுத்திய சிந்தனைகள் வலுப்பெற்றுள்ளன. ஆகவே, வடக்கு,கிழக்கு எதிர்பார்க்கும் மாற்றம் தமிழ்த் தேசியத்துக்குட்பட்டதாக இருந்தால் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. சிலவேளைகளில் அந்த மாற்றம் தென்னிலங்கை காண்பித்த ‘திசைகாட்டியை’ நோக்கியதாக இருந்தால் தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? https://www.virakesari.lk/article/195636
  23. 08 OCT, 2024 | 11:55 AM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகளவான யானைகள் பயிர்களை பாதுகாப்பதற்காக காணிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காணிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195741
  24. 08 OCT, 2024 | 11:24 AM பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான். முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று திங்கட்கிழமை (07) நீதிமன்றில் முற்படுத்திய போது , இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்று செவ்வாய்க்கிழமை (08) மீள கையளிப்பதாகவும் , மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாக மன்றில் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. https://www.virakesari.lk/article/195738

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.