Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. 07 OCT, 2024 | 12:57 PM வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றன. தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களிடம் திசாநாயக்க தனது ஆட்சியை உறுதியான முறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக தேசிய மக்கள் சக்தி பலம்பொருந்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றியைத் தருமாறு கேட்பார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் நோக்கும்போது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே மதிப்பீடுகளை வெளியிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கட்சிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் அந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு பொருத்தமானவை அல்ல. அத்துடன் இரு தேசிய தேர்தல்களிலும் ஒரே மாதிரியான காரணிகள் முழுமையாகச் செல்வாக்கு செலுத்துவதில்லை. ஜனாதிபதி திசாநாயக்க ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை என்றபோதிலும், மக்கள் மாற்றம் ஒன்றுக்காகவே அவருக்கு வாக்களித்தார்கள். மாற்றத்துக்கான வேட்பாளராக திசாநாயக்கவை அடையாளம் கண்டு வெற்றிபெறவைத்த மக்கள் அவர் உறுதியான அரசாங்கத்தை அமைத்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது வழமையாகும். அதுவும் இந்த தடவை பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் பின்புலத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிடைத்த வாக்குகளையும் விடவும் கூடுதலான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலில் 3.16 சதவீதமான வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கு பிரமாண்டமான பாய்ச்சலை செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல சமூக விஞ்ஞானம் என்று கூறிய திசாநாயக்க நாட்டில் பரவலாக தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துவந்த பெரும் ஆதரவின் அடிப்படையில் தனது வெற்றியில் திடமான நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி திசாநாயக்க சாதித்துக் காட்டியதைப் போன்று இலங்கையின் முன்னைய வேறு எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை என்று கூறினால் அது மிகையில்லை. முன்னைய ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதத்தை விடவும் 14 மடங்கு பாய்ச்சலை ஒரு ஐந்து வருடங்களுக்குள் செய்து அவர் சாதித்த வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு பாகங்களிலும் கூட முன்னென்றும் கண்டிராததாகும் என்றுகூட சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள். ஐக்கிய முன்னணி என்ற பழைய வாகனம் இல்லாமல் இடதுசாரி கட்சியொன்றினால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று காட்டிய பெருமையும் ஜனாதிபதி திசாநாயக்கவையே சாரும். கடந்த நூற்றாண்டில் மிகவும் பெரிய கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்த கட்சி ஒருபோதும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்ததில்லை. பழைய இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு சுதந்திர கட்சியுடனான கூட்டணியையே நம்பியிருந்தன. அந்த இடதுசாரி கட்சிகள் எல்லாம் வரலாறாகிவிட்ட நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு சக்தியாக மாறியிருப்பது இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாகும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், இங்கு அதன் தேர்தல் சாதனை மீதே கவனம் செலுத்தப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ அல்லது ராஜபக்சாக்களின ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ பிரதான கட்சிகள் என்று இனிமேல் அழைப்பது பொருத்தமில்லை. அவை தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக் கூடியவையாக இல்லை. கூட்டணி அமைப்பதற்கு இந்த கட்சிகளைத் தேடி மற்றைய கட்சிகள் வந்த காலம்போய் இப்போது மற்றைய கட்சிகளைத் தேடி இவற்றின் தலைவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைக்க குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க வேறு எந்த கட்சியும் முன்வருவதாகவும் இல்லை. ஆளும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வெளிக்கிளம்பியிருக்கும் புதியதொரு அரசியல் கோலத்தையே இன்று காண்கிறோம். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்தது. பிரேமதாசவும் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை சேர்த்துப்பார்க்கும்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணமாகும். ஆனால், பிரேமதாச அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை தாங்கள் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் கூறினார்கள். இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும், கட்சியின் தலைமைத்துவத்தை உடனடியாக அவர் கைவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை தவிர்ப்பதற்காகவே அவர் இணங்கமுடியாத அந்த நிபந்தனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முன்வைத்தனர் போலும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளில் இருந்து வெளியேறிவந்து ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக கூறப்பட்டது ஆனால், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் வேறு பலரும் மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டணி என்ற பெயரில் வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானத்திருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியும் வேறு குழுக்களுமே சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது. ராஜபக்சாக்களை கைவிட்டு விக்கிரமசிங்கவுடன் சேர்ந்தவர்களினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுக்ககொடுக்க முடியவில்லை. ராஜபக்சாக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததைப் போன்றே அவர்களுடன் சேர்ந்தவர்களும் மக்களினால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிக்காட்டின. இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, உதவி தலைவர் அகில விராஜ் காரியவாசம் போனறவர்களும் கூட தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களது அரசியல் எதிர்கால வாய்ப்புக்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர் தோல்வியடைந்ததும் அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டுவிட்டன. எதிரணிகளுக்குள் தோன்றியிருக்கும் குழப்பநிலை தேசிய மக்கள் சக்திக்கு முன்னரை விடவும் அனுகூலமான அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்க எதிரணிக் கட்சிகளை தடுமாற வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இது இவ்வாறிருக்க, பொதுவாழ்வில் ஒரு தூய்மையைப் பேணவேண்டும் என்றும் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் அக்கறை கொண்டவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு இந்த தடவை மக்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் அதிகாரத்தில் இருந்த சகல கட்சிகளும் ஊழல்தனமான அரசியல்வாதிகளினால் நிறைந்து கிடக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையானவர்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது அந்த கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. நல்ல கல்வித்தகைமையும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட இளம் வேட்பாளர்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி அக்கறை காட்டும் என்பது நிச்சயம். இதுகாலவரையில் அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தால் அத்தகைய புதிய வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு சிரமமில்லை. அதனால், மற்றைய கட்சிகளும் புதிய முகங்களை களத்தில் இறக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஆனால் அந்த கட்சிகளை விடவும் அது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு அனுகூலமான நிலையில் இருக்கிறது. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே மக்கள் பார்க்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியின்போது ராஜபக்சாக்களும் அவர்களுடன் இருப்பவர்களும் மாத்திரமல்ல, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மக்கள் குரலெழுப்பியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். மிகவும் சுலபமாக குறுகிய காலத்திற்குள் பெருமளவு சொத்துக்களை குவிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக இன்று அரசியல் விளங்குகிறது. அந்த கெடுதியான அரசியல் கலாசாரத்தை மாற்றுவததை நோக்கிய முதற்படியாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மக்களினால் நிச்சயமாக பயன்படுத்தமுடியும். இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றி உரத்துப்பேசிய வண்ணம் தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு போகின்றன. எந்தவொரு கட்சிக்குள்ளும் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது மருந்துக்கும் கிடையாது. கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டை எவர் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தடுமாறுகிறார்கள். ஏற்கெனவே சிதறுப்பட்டுக் கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான எந்த சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. தலைவர்கள் எனப்படுவோரின் அகம்பாவமே தலைதூக்கி நிற்கிறது. இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கூறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற இயக்கத்திற்குள் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றிவிட்டன. இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற விபரீதமான முனைப்புடன் செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் உள்ள சில குழுக்களும் தனவந்தர்களும் வடக்கு, கிழக்கு அரசியலை ஊழல்தனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கட்டுறுதியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. காலம் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் உருப்படியான எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் வெறுமனே தீவிர தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது. ஒரு மாற்றமாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது குறித்து தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. https://www.virakesari.lk/article/195674
  2. இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07.10.2024) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். புதிய சனத்தொகை 2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 வருடத்துக்கு ஒருமுறை இந்த சனத்தொகை கணக்கெடுப்பானது முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sri-lanka-begins-new-census-survey-today-1728260947
  3. சென்னை விமான சாகச நிகழ்வில் 240 பேர் மயக்கம்; சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு 07 OCT, 2024 | 12:11 PM இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக மயங்கி விழுந்தனர். முறையான முன்னேற்பாடுகள் இல்லாததால் அவதி என புகார்: பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை வரையிலும் நெரிசல் உணரப்பட்டது. மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசல். நிகழ்வு முடிந்து நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலில் நகர்ந்து செல்ல முடியாமல் தடுமாறினர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். சிந்தாதிரிப்பேட்டை யில் பைக் ஒன்று அதிக வெயில் மற்றும் இன்ஜின் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. காவல், போக்குவரத்து, ரயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை காண நேற்று லட்சக்கணக்கானோர் குவிந்ததால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ்களும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறின. லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள் மூலமாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதலே சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். நேரமாக நேரமாக மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. காலை 8 மணிக்கு பிறகு, செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில்உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் குவிந்திருந்த கூட்டம். குறிப்பாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் ஏற முடியாமல் தவித்தனர். இதனால், பெரும்பாலானோர் சாகச நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முடியாமல் போன நூற்றுக்கணக்கானோர் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி தண்டவாளத் திலேயே நடந்து சென்றனர். மின்சார ரயிலைப்போல், மெட்ரோ ரயில்களிலும் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் உட்பட முக்கிய மெட்ரோரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ‘க்யூஆர்’ கோடு மூலமாக டிக்கெட் எடுக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மக்களின் வசதிக்காக, வண்ணாரப்பேட்டை - ஏஜி டிஎம்எஸ் மார்க்கத்தில் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும், கூட்ட நெரிசல் தொடர்ந்தது. சில இடங்களில் எஸ்கலேட்டர்கள், ஸ்கேனர்கள் இயங்காததால் மெட்ரோ ரயில் ஊழியர்களும் ஸ்தம்பித்து நின்றனர். விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது, கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என அறிந்தும் அரசும், ரயில்வே துறையும் போதிய மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். https://www.virakesari.lk/article/195669
  4. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அநுராதபுரம் (Anuradhapura) வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெறுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயமானது நேற்றைதினம் (06.10.2024) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்துள்ளார். தேசிய கொள்கை அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும், புதிய நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு நீண்ட காலத்துக்கு பொறுத்தமான சிறந்ததொரு தேசிய கொள்கையை உருவாக்க முடியுமாயின் அது சிறப்புக்குரியதாக அமையுமெனவும் அடமஸ்தானாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை விவசாய சங்கத்தின் உப தலைவர் சுசந்த நவரத்ன, பேராசிரியர் சேன நாணயக்கார உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/anurakumara-dissanayake-visit-to-anuradhapura-1728201339#google_vignette
  5. இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்த இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பிரகடனத்தை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடெங்கிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் செயற்பாட்டை மார்ச் 12 இயக்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக ஞாயிறன்று வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கின்றன. பவ்ரல் என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு என்ற அமைப்பினால் இந்த மார்ச் 12 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri_lanka/2015/06/150628_march_12
  6. 07 OCT, 2024 | 03:05 PM பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் பவ்ரல் அமைப்பின் கள இணைப்பாளர் சசீஸ்காந்த் அவர்களுக்கும் இடையில் கே. கலாராஜ் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சில தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் - குற்றவியல் தவறுகளற்ற, இலஞ்ச ஊழலற்ற ஒருவராக இருத்தலுடன் மது, போதைப் பொருள், சூது, ஆகிய சமூக சீரழிவுமிக்க வியாபார நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்களாகவும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்காதவர்களாகவும் இருப்பது அவசியம். சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவர்களாகவோ, நாட்டுக்கு குந்தகம் விளைவித்த நிதிசார் ஒப்பந்தங்களின் பங்கு தாரராகவோ இருந்திருக்கக் கூடாது. வேட்பாளர்கள் நியமனம் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்லது தாக்கல் செய்த பின்னர் தாம் மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வது பற்றி பகிரங்கமாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதாவது, தாம் கடந்த காலத்தில் மேற் குறிப்பிட்ட முறைகேடான செயல்களை செய்ததில்லை எனவும் அவ்வாறான செயல்களை ஊக்குவிக்கவோ அல்லது உடந்தையாகவோ இருக்கவில்லை . வருங்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவ்வாறான செயல்களை செய்யப்போவதில்லை. இவ்வாறான செயல்களை புரிவோருக்கு உடந்தையாகவோ ஊக்குவிப்பாளராகவோஇருக்கப்போவதில்லை பொதுமக்களுக்கு இந்த வேட்பாளர்கள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும். ஆகிய கட்டாய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இச் சந்திப்பில் சமூக அரசியல் சார் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/195683
  7. வெற்றி எமக்கே; இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி! இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: ”வடக்கு எல்லையில் இருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களை சந்தித்தேன். அங்கிருந்து சில மீட்டர்கள் தொலைவில் எல்லைக் கோட்டுக்கு அப்பால், அவர்களின் நண்பர்கள், ஹிஸ்புல்லா அமைப்பினர் எங்களுடைய முகாம்களை தாக்குவதற்காக தயார் செய்த உள்கட்டமைப்புகளை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர். நான் அவர்களிடம் சொன்னேன்: நீங்கள்தான் வெற்றி நாயகர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களான இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களும், காசாவில் உள்ள வீரர்களும் அற்புதங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள். ஓராண்டுக்கு முன்பு நாம் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானோம். கடந்த 12 மாதங்களில் நாம் எதார்த்தத்தை முழுமையாக மாற்றியிருக்கிறோம். நமது எதிரிகளின் மீது நீங்கள் கட்டவிழ்க்கும் தாக்குதலைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது. உங்களுக்கு என்னுடைய வீரவணக்கம். வெற்றியின் தலைமுறையினர் நீங்கள் என்பதை நான் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். ஒன்றிணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார். பின்புலம் என்ன? – பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் இயக்கத்தினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுக்களும், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. https://thinakkural.lk/article/310380
  8. அமெரிக்க அதிபர் தேர்தல்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் யாருக்கு சாதகமாக அமையும்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது. தேசிய அளவிலும் சமபலம் கொண்ட மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவிவருவதால், மிகச்சிறிய வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வெற்றி தீர்மானிக்கப்படலாம். புதிய வாக்காளர்களும் வாக்களிப்பது குறித்து முடிவெடுக்காத வாக்காளர்களும் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பர். “மிகவும் சமபலத்துடன் கடுமையான போட்டி நிலவும்போது, ஒன்று அல்லது இரண்டு சதவிகித வாக்கு வித்தியாசம் கூட வெற்றியை தீர்மானிக்கும் வகையில் இருக்கும்,” என ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் அதிபர் தேர்தல் குறித்த வரலாற்று ஆய்வாளர் டேவிட் க்ரீன்பெர்க் கூறுகிறார். வெற்றியை தீர்மானிக்க க்கூடிய வாக்குகளை பெறுவது எப்படி என கட்சியின் வியூகவாதிகள் கவனம் செலுத்திவரும் நிலையில், அது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத, கடைசி வார பரப்புரைகளை தலைகீழாக திருப்பிப் போடும் எதிர்பாராத திருப்பங்கள் அல்லது சம்பவங்களாலும் நிகழலாம். இந்தாண்டு அமெரிக்க அரசியலில் பல சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதிபர் வேட்பாளர் ஒருவர் மீது இருமுறை கொலை முயற்சி, அவருக்கு எதிரான வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு ஆகியவை நடந்தேறின. அதிபர் ஜோ பைடன் தன்னைவிட இளம் வயதுடைய துணை அதிபருக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகினார். கடந்த காலத்தில் அமெரிக்க அரசியலில் அக்டோபர் மாதம் பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்துள்ளன. 2016 அக்டோபரில் டிரம்ப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளியான வீடியோ (Trump’s Access Hollywood tape) மற்றும் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் சர்ச்சை ஆகியவை வெளியாயுன. தவறான செய்தி அல்லது விரும்பத்தகாத சம்பவங்களின் சுழற்சியிலிருந்து மீள்வதற்கு நேரம் இல்லை. இந்த வாரத்தில் மட்டும், வரும் நவம்பர் 5-ம் தேதிக்குள் அரசியலில் சூறாவளியை கிளப்பக் கூடிய பல புதிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹெலென் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள வட கரோலினாவில் டிரம்ப் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் எனும் நிலை உள்ளது ஹெலென் சூறாவளியின் அரசியல் தாக்கம் அரசியல் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ள முதல் சர்ச்சை சூறாவளி உருவிலேயே வந்துள்ளது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாகாணங்களில் கடந்த வாரம் ஹெலென் சூறாவளி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அதிபர் தேர்தலில் இந்த இரு மாகாணங்கள் மீது செலுத்தப்பட்ட அதீத கவனம் செலுத்தப்படுகிறது.ஏற்கெனவே 130 பேரின் உயிரிழப்புகளுடன் மானுட பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூறாவளி அந்த மாகாணங்களில் அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஜார்ஜியா சென்ற கமலா ஹாரிஸ் அப்பகுதிக்கு நீண்ட கால உதவியை செய்வதாக உறுதியளித்தார். கடந்த சனிக்கிழமையன்று வட கரோலினாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். அதிபர் தேர்தலில் வெற்றிபெற இந்த இரு மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றிபெறுவது கட்டாயம் எனும் நிலை உள்ளது. இரு மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஜார்ஜியாவுக்கு சென்ற முன்னாள் அதிபர் டிரம்ப், அவசரகால நிவாரண நிதியை புலம்பெயர்ந்தவர்களுக்காக செலவிடுவதால் அமெரிக்கர்கள் அதனை இழப்பதாக கூறினார். உண்மையில், இந்த இரு நிதியும் தனித்தனி பட்ஜெட். இதையடுத்து, குடியரசு கட்சியினர் பேரிடர் நிதி குறித்து “அப்பட்டமான பொய் கூறி வருவதாக” பைடன் நிர்வாகம் குற்றம்சாட்டியது. பேரிடர் தாக்கும்போது, அனைத்துத் தரப்பையும் மகிழ்ச்சிப்படுத்துவது ஓர் அரசாங்கத்திற்கு எளிதானது அல்ல. டிரம்பின் இத்தகைய குற்றச்சாட்டுகள் இந்த இரு மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அமெரிக்க அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் யாருக்கு சாதகமாக அமையும்? பேரிடர் ஏற்பட்ட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மனிதர்களால் ஏற்பட்ட நெருக்கடி, அமெரிக்க அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா படைகளுடன் இஸ்ரேலிய படைகளின் சண்டை மற்றும் இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியதால் காஸா போர் பிரதேச அளவிலான சண்டையாக உருவெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாற்றத்திற்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அமெரிக்கா-இஸ்ரேல் கொள்கை என வரும் போது தற்போதைய நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளவில்லை. இதனால் அவருக்கு சில சவால்கள் ஏற்படலாம். அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக காஸாவில் சண்டை நிறுத்தம் உறுதியாக ஏற்படாது என்று தோன்றும் நிலையில், இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பின் பதிலடி முழு வீச்சிலான போருக்கு இட்டுச் செல்வதை தடுக்க வெள்ளை மாளிகை முயற்சிக்கிறது. “முழு வீச்சிலான போர் ஏற்படும் என நான் நம்பவில்லை,” என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். “அதை நாம் தவிர்க்க முடியும். ஆனால், அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.” என்பது அவரது கூற்று. வழக்கமாக அமெரிக்க வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் போது வெளியுறவு கொள்கை குறித்து நேரடியாக சிந்திக்க மாட்டார்கள் என்றாலும், இந்த போர், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினருக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும். இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விநியோகிப்பதில் கமலா ஹாரிஸின் உறுதிப்பாடு, ஜனநாயக கட்சியின் வாக்காளர்களின் இரு முக்கிய பிரிவுகளுக்கு பிரச்னையாக உள்ளது. அவர்கள், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அரபு-அமெரிக்கர்கள் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கலாம் என கருதப்படும் கல்வி நிலையங்களில் உள்ள இளம் வாக்காளர்கள். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பொருளாதார ரீதியிலான கவலைகளும் எழுந்துள்ளன. இரானிய எண்ணெய் வளங்களை இஸ்ரேல் குறிவைக்கலாம் என பைடன் குறிப்பிட்டதால் வியாழக்கிழமை ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்தது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமெரிக்கர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹாரிஸுக்கு சாதகமான சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன ஜனநாயகக் கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சிகள் அமெரிக்க வாக்காளர்களிடையே பொருளாதாரம் தான் முக்கியமாக பிரச்னையாக இருப்பதை பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து காட்டுகின்றன. அதனடிப்படையில் ஹாரிஸ் மற்றும் ஜனநாயக கட்சியினருக்கு வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது, சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை 4.1% குறைந்துள்ளது. வாக்காளர்களின் பொருளாதாரம் குறித்த கவலைகள் சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் குறித்து மட்டுமல்ல என்கிறார், க்ரீன்பெர்க். “உண்மையில் மக்கள் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் நீண்ட கால தோல்வியை தான் குறை கூறுகின்றனர். குறிப்பாக கிராமப்புற அமெரிக்காவின் தொழில்மயமாக்கல் குறைந்துவருவது,” என்கிறார் அவர். “ஒரு நாட்டின் சிறப்பான பொருளாதாரத்தில் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று அவர் கூறுகிறார். இந்த தேர்தல் காலம் முழுவதும் பொருளாதாரத்தில் யார் சிறப்பாக பணியாற்றுவார் என்ற கேள்விக்கு, சமீபத்திய சி.என்.என் கருத்துக்கணிப்பு உட்பட, ஹாரிஸைவிட டிரம்பையே பலரும் தங்கள் தேர்வாக கூறினர். ஆனால், டிரம்பின் இந்த நிலை மாற்ற முடியாதது அல்ல. குறிப்பாக, குக் பொலிட்டிக்கல் ரிப்போர்ட் (Cook Political Report) கருத்துக்கணிப்பின்படி, பணவீக்கத்தை யார் சிறப்பாக கையாள்வார்கள் என்ற கேள்விக்கு சமபலம் உள்ள மாகாணங்களில், வேட்பாளர்கள் இருவரும் சமமான ஆதரவை பெற்றனர். ஜனநாயக கட்சியினருக்கு நெருக்கடியாக மாறுவதற்கு சாத்தியமான மற்றொரு விஷயமும் இந்த வாரம் தணிந்தது. கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக கிழக்கு கடற்கரை மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் முக்கியமான துறைமுகங்களை மூடுவதற்கு காரணமாக இருந்த கப்பல்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தான் அது. துறைமுகங்களை மீண்டும் திறக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப இருதரப்பும் முன்வந்துள்ளன. வேலைநிறுத்தம் தொடர்ந்திருந்தால், தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் சப்ளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரித்திருக்கலாம். இதனிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவது, கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய அளவுக்கு திரும்பியுள்ளது. அது, கடந்தாண்டு டிசம்பரில் சாதனை அளவாக 2,49,741 என்ற எண்ணிக்கையை அடைந்தது. இதன் தாக்கம் பல அமெரிக்க நகரங்களில் உணரப்பட்டாலும், நிலைமையின் தீவிரம் குறையக்கூடும். மீண்டும் கேபிடல் தாக்குதல் குறித்து கவனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேபிடல் கட்டடம் தாக்குதல் குறித்து மீண்டும் கவனம் எழுந்துள்ளது இந்த வாரச் செய்திகளில் பெரும்பாலானவை ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், டிரம்பிற்கும் அது சுமூகமானதாக இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயற்சித்ததாக டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வழக்கு மற்றும் ஆதாரங்களைக் கோடிட்டுக் காட்டும் சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித்தின் ஆவணத்தை நீதிபதி ஒருவர் வெளியிட்டார். இதனால், 2021, ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடம் மீதான தாக்குதலில் டிரம்பின் செயல்பாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை மீண்டும் கவனம் பெற்றது. இத்தாக்குதலுக்கு முன்பாக டிரம்பின் கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள், அவரது ஆதரவாளர்களால் கேபிடல் கட்டடம் தாக்கப்படுவதற்கு வழிவகுத்ததாக கூறும் புதிய தகவல்கள் அந்த ஆவணத்தில் அடங்கியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்படுவதில் இருந்து டிரம்ப்பிற்கு விலக்களிக்கக் கூடாது என அந்த ஆவணம் பரிந்துரைத்தது. “ஜனநாயகத்தைக் காப்பது” தொடர்பாக வாக்காளர்கள் டிரம்பைவிட (40%) ஹாரிஸை (47%)அதிகமானோர் ஆதரிப்பதாக சமீபத்திய சி.என்.என் கருத்துக்கணிப்பு கூறுகிறது. "எதிர்பாராத முடிவாக இருக்கும்" கடந்த 50 ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல் அகராதியில் “அக்டோபர் ஆச்சர்யம்” என்பது நிலையானதாக உள்ளது. இதனால் போட்டியின் போக்கை மாற்றும் எதிர்பாராத தலைப்புச் செய்திகள் அல்லது நெருக்கடி குறித்த அச்சம் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. சம போட்டி நிலவும் மாகாணங்களில் வாக்கு வித்தியாசம் சில பத்தாயிரங்களில் மட்டுமே இருக்கும் எனும் நிலையில், பொதுக் கருத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக மாறலாம். நவம்பர் தேர்தல் முடிவு எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்றார் க்ரின்பெர்க். “நீங்கள் எந்த தரப்பை ஆதரித்தாலும், உங்களின் வாக்கை பொறுத்து தீவிரமான விளைவுகள் ஏற்படும் என நான் யூகிக்கிறேன்.” - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4xk2593gqo
  9. "உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது உங்களிற்கும் தெரிந்திருந்தது ஜனாதிபதி அவர்களே" பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டு 07 OCT, 2024 | 12:57 PM உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்கள் இடம்பெறப்போகின்றன என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என பாதிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் முன்னிலையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக உரையாடியவேளை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வேளை பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மிக முக்கியமான சில அரசியல்வாதிகளின் விசேட பாதுகாப்பு பிரிவினருக்கு மாத்திரம் தாக்குதல் இடம்பெறலாம் என தகவல் வழங்கப்பட்டிருந்தது என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். எனக்கும் எனது சகாக்களுக்கும் அவ்வேளை விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு எவ்வாறு நீதியை வழங்க முடியும் என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளார். தாக்குதலுடன் தொடர்புடையவர்களை விசாரணைகள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை தண்டித்தல், எதிர்காலத்தில் மீண்டும் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதை தவிர்த்தல், போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195675
  10. 07 OCT, 2024 | 11:56 AM இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபற்றுதலை இளைஞர்களின் மேம்படுத்துவதற்கான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப் பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல், சம்பந்தமான கருத்துரைகளும் முன்வைக்கப்பட்டதுடன், இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இன்றைய தூய அரசியலுக்காக என்ற நிகழ்ச்சி திட்ட என்னும் விளக்க உரையை எஸ்.கோபிகாந்த் மற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் புதிய கருத்துரையை எஸ்.சொர்ணலிங்கமும் அரசியலில் பெண்கள் பற்றிய விளக்க உரையை மார்ச் 12 இயக்கத்தின் திட்ட முகாமையாளர் ருக்ஷி பெனாண்டோ ஆகியோர் வழங்கி வைத்தனர். இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/195665
  11. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை முழுமையாக செலுத்தினார் நிலாந்த ஜெயவர்த்தன 07 OCT, 2024 | 12:38 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையில் 65 மில்லியனை செலுத்தியுள்ளதாக தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக அவர் இதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஆராயப்பட்ட அடிப்படை மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் நிலாந்த ஜெயவர்த்தன 75 மில்லியன் ரூபாய்களை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் முன்னர் 10 மில்லியன் ரூபாயினை செலுத்தியிருந்ததாக நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார் தற்போது 65 மில்லியனை செலுத்தியுள்ள நிலையில் அவர் முழு இழப்பீட்டுதொகையையும் செலுத்தியுள்ளார். ஜனவரி 2023ம் திகதி உயர்நீதிமன்றம் 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு இழப்பீடாக அரசாங்கம் 1 மில்லியனை செலுத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 2019ம் ஆண்டு தாக்குதலை தடுக்க தவறினார்கள் எனமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மனுதாரர்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டனர் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/195670
  12. ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்? ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்? என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமய ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் போது ஈஸ்டர் அறிக்கையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஏன் எடுக்க மறந்தார் என்று தெரியவில்லை. மக்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும். சும்மாவாக மக்களுக்கு கையசைத்து செல்வதில் பலன் இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணம் செலவழித்தே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பதில் அதில் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதனை மக்களும் அறிய விரும்புகிறார்கள். எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று மேடையில் சொன்னபோது அவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. அல்லது பொய் சொல்லியிருப்பார்கள். அத்தகைய எரிபொருளின் விலையை வரிகள் விதிப்பதன் மூலம் குறைக்க முடியாது. நாங்கள் இம்முறை நட்சத்திரப் பதக்கத்திற்காகப் போட்டியிடவில்லை, வெள்ளிப் பதக்கத்திற்காகப் போட்டியிடுகிறோம். சஜித் கூறுவது போல் நாங்கள் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த அரசு தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/310392
  13. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 03:32 PM இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்த நிதி வசதியானது இலங்கையின் முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை காண்பிக்கிறது. இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்த இரு வருட வேலைத்திட்டம் (2023-2024), வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடி மக்கள் மீதான தாக்கத்தை குறைத்து முழுமையான பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். அதன்படி இந்த வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று அம்சங்களாக, 1.பொருளாதார நிருவாகத்தை மேம்படுத்தல் : நிதி நிலைத்தன்மையை பாதுகாத்து அரச வளங்கள் முகாமைத்துவம், நிதி ஒழுக்கம், வௌிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலப்படுத்தல் 2. வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தல் : மிகவும் போட்டித்தன்மை மிக்க தனியார் துறையுடன் இலங்கையின் அபிவிருத்தியை விரிவுபடுத்தல் 3.வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல்: நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல். உரிய நிதி வசதியை பெற்றுக்கொள்ள தகுதி பெற வேண்டுமெனில், அரசாங்கத்தினால் மேற்குறிபிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் 9 வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட வேண்டிய அதேநேரம், அதற்கு உகந்த பொருளாதார கொள்கை வரைவொன்றை பேணிச் செல்ல வேண்டியதும் அவசியமாகும். அதன்படி இந்த நிதி வசதியின் இரண்டாம் கட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும், உலக வங்கிச் சபையின் அனுமதி கிட்டியுள்ளதோடு, ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதன் பின்னர் அது அமுலாகும். உலக வங்கியின் இந்த நிதி உதவி இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தீர்மானமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் என்பதோடு, நிலையானதும் போட்டித்தன்மை மிக்கதுமான சூழலை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/195690
  14. இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுநரானார் சனத் ஜயசூரிய Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 01:14 PM (நெவில் அன்தனி) இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுராக சனத் ஜயசூரியவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று திங்கட்கிழமை நியமித்தது. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய பதவி வகிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது. இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவரை தொடர்ந்து பயிற்றுநராக நியமிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்தது. இந்த மூன்று கிரிக்கெட் தொடர்களிலும் இடைக்காலப் பயிற்றுநராக பதவி வகித்த சனத் ஜயசூரிய, இன்று முதல் 2026 மார்ச் 31ஆம் திகதிவரை இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கவுள்ளார். சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி கடந்த 27 வருடங்களில் இந்தியாவுக்கு எதரான முதலாவது ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது. இறுதியாக நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை முழுமையாக வெற்றிகொண்டிருந்தது. தலைமைப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய தனது பணியை மேற்கிந்தியத் தீவுகளுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/195677
  15. வளமான நாட்டை எப்படி மயானப்பூமியாக போர் மாற்றி விடும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் மாறி உள்ளது காசா. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குல் நடத்திய ஹமாஸூக்கு தனது வான் படை மூலம் பதிலடி கொடுக்க ஆரம்பித்த இஸ்ரேல், காசாவில் உள்ள கட்டிடங்களை எல்லாம் தரை மட்டமாக்கியது. கடந்த 16 ஆண்டுகால ஹமாஸ் ஆட்சியில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வந்த காசாவின் பெரும்பகுதியை, மீண்டு எழுவெ முடியாத வகையில் அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பரபரப்பு மிகுந்த காசாவின் உமர் அல்-முக்தார் தெருவில் இருபுறமும் சாலைகளுக்கு நடுவே பசுமை நிறைந்த பூங்காக்களும் அலங்கார அமைப்புகளும் காசாவிற்கு அழகூட்டியுருந்தன. ஆனால் அவை தற்போது மணல் மேடுகளாக காட்சியளிக்கின்றன. அதே பகுதியில் மற்றொரு இடத்தில் கடைகள் நிறைந்த பகுதியில் வியாபாரம் களைகட்டி கொண்டிருக்க, நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகன போக்குவரத்துடன் காணப்பட்ட சாலைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் உருகுலைந்து போயி உள்ளன. இதே போல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட வீடியோவில் மத்திய தரைக்கடலையொட்டிய வானலாவிய கட்டடங்கள், காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் அவை தற்போது, கட்டட குவியல்களாக உருமாறி உள்ளன. குடும்பம் குடும்பமாய் மகிழ்ச்சியோடு வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும், போரின் கோரமுகத்துக்கு சாட்சியாய் மாறி உள்ளன. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேலின் 2 முறை கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஷிஃபா மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கட்டிடங்கள் இன்றி வெறும் இரும்பு கூடுகளாக காட்சியளிக்கின்றன. ஷாட்டி அகதிகள் முகாம் உள்ளிட்டவை இஸ்ரேலின் முக்கிய குறிகளாக இருந்த நிலையில், அப்பகுதிகள் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி திகிலூட்டி வருகின்றன. தாக்குதலால் காசாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்த சுமார் 23 லட்சம் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில், அப்பகுதிகள் அனைத்தும் கைவிடப்பட்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன. வாகனங்கள் பாய்ந்தோடிய தெற்கு மற்றும் வடக்கு காசாவை இணைக்கும் நெடுஞ்சாலை, இருந்த இடம் தெரியாமல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது. https://thinakkural.lk/article/310370
  16. ரோகித், கோலி இல்லாத இந்திய இளம் படை வங்கதேசத்தை துவம்சம் செய்தது - பாகிஸ்தான் சாதனை சமன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வங்கதேச வீரர் பர்வேஸ் ஹூசைன் கிளீன் போல்டானார் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித், கோலி இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றுள்ளது. குவாலியரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.5ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. வெற்றிக்கு அடித்தளமிட்ட அர்ஷ்தீப் சிங் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சுதான். தொடக்கத்திலேயே வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை தனது பந்துவீச்சு மூலம் உடைத்தெறிந்து பர்வேஷ் ஹூசைன்(8), லிட்டன் தாஸ்(4) இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் முஸ்தபிசுர் ரஹ்மான் விக்கெட்டையும் அர்ஷ்தீப் எடுத்தார். இதனால் அதிரடியாக தொடக்கம் அளிக்க முயன்ற வங்கதேசத்தின் பேட்டிங் உத்தி நொறுங்கியது. 2.1 ஓவர்களில் வங்கதேசம் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்தடுத்துவந்த பேட்டர்கள் தங்கள் விக்கெட்டை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று ரன் சேர்ப்பை கோட்டைவிட்டனர், விக்கெட்டுகளையும் இழந்தனர். தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 3 ஆண்டுகளுக்குப்பின் சர்வதேச போட்டியில் விளையாடினார். வருண் தனது மாயஜால பந்துவீச்சு மூலம் தெளஹித் ஹிர்தாய்(8), ரிஷாத் ஹூசைன்(11), ஜாக்கர் அலி(8) ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் சரிவுக்கு துணையாகினார். அறிமுகப் போட்டியிலேயே மயங்க் யாதவ் அருமையாகப் பந்துவீசி 4 ஓவர்களில் ஒருமெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்து மெகமதுல்லா(1) விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச கேப்டன் ஷாண்டோ(27) ஆங்கர் ரோல் எடுத்து நிதானமாக பேட் செய்த நிலையில் அவர் விக்கெட்டை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி ரன்ரேட் உயர்வுக்கு தடை போட்டார். கடைசி 7 ஓவர்களில் வங்கதேச அணி இரட்டை இலக்க ரன்களைக் கூட சேர்க்க முடியவில்லை, ஆனால், விக்கெட் சரிவு தொடர்ந்தது. இந்திய அணியில் புதிய நம்பிக்கையுடன் சேர்க்கப்பட்ட இளம் வீரர்கள் தங்கள் தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் இந்தியா அதிரடி தொடக்கம் இந்திய அணிக்கு சஞ்சு சாம்ஸன், அபிஷேக் ஷர்மா அதிரடியான தொடக்கம் அளித்தனர். தஸ்கின் அகமது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தநிலையில், 16 ரன்னில் அபிஷேக் வெளியேறினார். சாம்ஸன் வழக்கத்துக்கு மாறாக நிதானமாக பேட் செய்து அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் வழக்கம்போல் பந்துகளை மைதானத்தின் நான்கு திசைகளிலும் சிதறவிட்டார். 3 சிக்ஸர்கள், 2பவுண்டரி என 14 பந்துகளில் 29ரன்கள் என கேமியோ ஆடி முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இந்தியஅ ணி பவர்ப்ளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது. அடுத்துவந்த நிதிஷ் குமார் ரெட்டி, சாம்ஸனுடன் இணைந்தார். அதிரடியாக ஆட நினைத்த சாம்ஸன் 29 ரன்களில் மிராஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 9.3 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்திபின் ரன்ரேட் வேகமெடுத்து. பாண்டியா தான்சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அதிரடியாகத் தொடங்கினார். முஸ்தபிசுர் வீசிய 10-வது ஓவரில் ஹர்திக் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆட்டத்தை விரைவாக முடிக்க நினைத்த ஹர்திக் பாண்டியா, ஹூசைன் வீசிய 11-வது ஓவரில் சிக்ஸரும், தஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும் விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பந்தை அடித்தாடும் ஹர்திக் பாண்டியா அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வு வங்கதேச அணியின் சரிவுக்கு காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து 3 வீரர்கள் மட்டுமே இந்த புதிய இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் 2 வீரர்கள் அறிமுகமாகியிருந்த நிலையில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. குவாலியர் ஸ்ரீ மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடந்த முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். 14 ஆண்டுகளுக்குப்பின் குவாலியர் நகரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இங்கு கடைசியாக கேப்டன் ரூப் சிங் அரங்கில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். இதன்பின் இந்த ஆடுகளத்தின் பயன்பாடு கைவிடப்பட்டு, புதிதாக மாதவராவ் சிந்தியா மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் மயங்க் யாதவ் மைல்கல் இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் அறிமுகமாகினர். இதில் ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாகப் பந்துவீசி கலக்கிய மயங்க் யாதவ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் மயங்க் நேற்று 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வங்கதேச பேட்டர்களை திணறவிட்டார். மயங்க் யாதவ் தான் வீசிய முதல் ஓவரையே மெய்டனாக வீசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பில் அறிமுக ஆட்டத்திலேயே மெய்டன் ஓவர் எடுத்த பந்துவீச்சாளர்களில் 3வதாக மயங்க் யாதவ் இணைந்தார். இதற்கு முன் அஜித் அகர்கர், அர்ஷ்தீப் மட்டும் அந்த சாதனையைச் செய்திருந்த நிலையில் மயங்க் யாதவும் இணைந்தார். இந்திய அணிக்கு சிறந்த இரு வேகப்பந்துவீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பும்ராவோடு இணைந்து, மயங்க் யாதவ் பந்துவீசுவதை நினைக்கவே எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இதுதவிர ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தபடியாக புதிய ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி அடையாளம் காணப்பட்டு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். 127 ரன்களை இந்திய அணி இந்த ஆட்டத்தில் 12 ஓவர்களில் சேஸ் செய்ய ஹர்திக் பாண்டியா ஆடிய கேமியோ முக்கியக் காரணம். குவாலியர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் தஸ்கின் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும், ரிஷாத் ஹூசைன் வீசிய 11வது ஓவரில் ஒருசிக்ஸரும் விளாசி ஹர்திக் பாண்டியா மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்தார். ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 சிக்ஸர், 5பவுண்டரி உள்பட 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் நிலைப்படுத்திக்கொண்டு 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா "இன்பத் தலைவலியாக இருந்தது" வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “ எங்கள் திறமையை மீண்டும் கொண்டுவர அணியின் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்தோம் அதை செயல்படுத்தினோம். அணி வீரர்களும் தங்களின் பந்துவீச்சு, பேட்டிங் திறமையை களத்தில் வெளிப்படுத்தினர், புதிய மைதானத்தில் முதல்முறையாக விளையாடியது மகிழ்ச்சி. அடுத்தடுத்த ஆட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கூடுதலாக பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கும்போது, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கேப்டனுக்கு இருக்கும் இன்ப தலைவலி. ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறோம். சில விஷயங்களில் இன்னும் நாங்கள் மேம்பட வேண்டும், அது குறித்துப் பேசி, அடுத்த ஆட்டத்தில் அந்தக் குறைபாடுகளைக் களைவோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பாகிஸ்தான் சாதனை சமன் இந்த வெற்றி மூலம் இந்திய அணி சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் சாதனையையும் சமன் செய்துள்ளது. டி20 போட்டிகளில் எதிரணிகளை அதிகமுறை ஆல்அவுட் செய்த வகையில் பாகிஸ்தானின் சாதனையை இந்திய அணி நேற்று சமன் செய்தது. பாகிஸ்தான் அணி 42முறை எதிரணிகளை டி20 போட்டிகளில் ஆல்அவுட் செய்தது, இந்திய அணியும் அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cvgd18209zdo
  17. 07 OCT, 2024 | 11:15 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று திங்கட்கிழமை (07) உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை தடுக்கத் தவறியதால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிலந்த ஜயவர்தன நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக நிலந்த ஜயவர்தன இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பிரகாரம், நிலந்த ஜயவர்தன இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195662
  18. ஸ்கொட்லாந்துக்கு எதிரான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மே.தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றி Published By: VISHNU 06 OCT, 2024 | 11:29 PM (நெவில் அன்தனி) ஸ்கொட்லாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு நடைபெற்ற பி குழு ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது. தென் ஆபிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்கொட்லாந்து சார்பாக ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்கள் அனைவரும் மந்த கதியிலேயே ஓட்டங்களைப் பெற்றனர். எய்ல்ஸா லிஸ்டர் (26), அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்களே ஸ்கொட்லாந்து இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. அவர்களைவிட டார்சி காட்டர் (14 ஆ.இ.), சஸ்கியா ஹோர்லி (11), லோர்னா ஜெக் ப்றவுண் (11) ஆகிய மூவர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அஃபி ப்ளெச்சர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 11.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அணித் தலைவி ஹேய்லி மெத்யூஸ் (8), ஸ்டெஃபானி டெய்லர் (4), ஷெமெய்ன் கெம்பெல் (2) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டம் இழந்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கியானா ஜோசப் 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்று 4ஆவதாக ஆட்டம் இழந்தார். பின்னர் டியேந்த்ரா டொட்டின், சினெலி ஹென்றி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை 12ஆவது ஓவரில் உறுதிசெய்தனர். டியேந்த்ரா டொட்டின் 15 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் சினெல் ஹென்றி 10 பந்துகளில் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகி: சினெல் ஹென்றி https://www.virakesari.lk/article/195651
  19. சென்னை விமான சாகசத்தை காணச் சென்ற 5 பேர் உயிரிழப்பா? தமிழ்நாடு அரசு பதில் பட மூலாதாரம்,X/MKSTALIN படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 6 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மறுத்துள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர். இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தபோது, கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலைக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெரினாவை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 பேர் உயிரிழப்பா? இந்த நெரிசலில் சிக்கியும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் சுமார் 200 பேர் வரை மயக்கமடைந்ததாகவும், 90க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன. திருவொற்றியூரை சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது INS அடையாறு அருகே நெஞ்சை பிடித்துக்கொண்டு, வாந்தி எடுத்து மயக்கமடைந்தார், ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன. இதேபோல, சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஜான் பாபு, பெருங்களத்தூரை சேர்ந்த 48 வயதான சீனிவாசன், தினேஷ் ஆகியோரும் மயக்கமடைந்து பிறகு உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆந்திராவைச் சேர்ந்த இதுவரை அடையாளம் காணப்படாத ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 தமிழ்நாடு அரசு மறுப்பு தமிழ்நாடு அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒரு முறையும் பின்னர் துறை அளவில் பல முறையும் நடத்தப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்களும் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக நாற்பது ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை - தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அரசு அனுப்பிய சிறு தகவல் குறிப்பில், விமானக் காட்சியைப் பார்க்க வந்தவர்கள் யாரும் ராயப்பேட்டை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வரவில்லையென்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் இரண்டு பேர் வேறு சில உடல்நலப் பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் யாரும் மரணமடையவில்லையென்றும் எந்த ஒரு மரணமும் நெரிசலாலோ, மோசமான ஏற்பாடுகளாலோ நடக்கவில்லையென்றும் அந்தத் தகவல் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கவனம் ஈர்த்த கனிமொழி பதிவு தமிழ்நாடு அரசு இவ்வாறாக பதிலளித்திருந்த நிலையில், மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தகவல் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. "விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது." என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததே அதற்குக் காரணம். பட மூலாதாரம்,X/KANIMOZHI ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனக் குற்றச்சாட்டு மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலை 11 மணிக்குத் துவங்கவிருந்த நிகழ்ச்சிக்காக, காலை எட்டரை மணியில் இருந்தே பொதுமக்கள் கடற்கரையில் கூட ஆரம்பித்தனர். காலை எட்டு மணியிலிருந்தே செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய வழித்தடங்களில் உள்ள உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கவே மிகப் பெரிய வரிசை நின்றது. இதனால், பலர் இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்பினர். சென்னை மெட்ரோ ரயிலின் இரு வழித்தடங்களிலும் கடுமையான கூட்டம் இருந்தது. டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கியூஆர் கோடைப் பயன்படுத்தி டிக்கெட் எடுக்க பலரும் ஒரே நேரத்தில் முயன்றதால், சிறிது நேரம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை வண்ணாரப்பேட்டை - ஏஜிடிஎம்எஸ் வழித்தடத்தில் மூன்றரை நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருந்தபோதும் கூட்டம் குறையவில்லை. காலை பத்து மணியளவில் பல லட்சம் பேர் கடற்கரையில் குவிந்தனர். இருந்தபோதும் இவர்களுக்கென போதுமான குடிநீர், கழிப்பட வசதிகள் செய்துதரப்படவில்லையென நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பிற்பகல் ஒரு மணியளவில் சாகசம் நிறைவடைந்த போது கடற்கரையில் கூடியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். இதனால், காமராஜர் சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டிய பறக்கும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், திருமயிலை, வேளச்சேரி ரயில் நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குவிந்தனர். பறக்கும் ரயிலைப் பொருத்தவரை, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வழித்தடத்தில் விடுமுறை நாள்களுக்கான நேர அட்டவணைப்படியே அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டதால் ரயில் நிலையங்களில் கூடியிருந்தவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1jdez50d6xo
  20. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 10:18 AM பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சில கார்களும் தீ பிடித்து எரிந்தன. விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளன. இது ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்". சிந்து மாகாணத்தில் மின் திட்டத்தில் பணிபுரியும் சீன பொறியாளர்களை குறிவைத்து இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சர் சியா உல் ஹசன் இது வெளிநாட்டினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதல் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. https://www.virakesari.lk/article/195659
  21. பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றியீட்டியது Published By: VISHNU 06 OCT, 2024 | 08:50 PM (நெனில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் 7 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை இந்தியா ஈட்டியது. இந்தக் குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் படு தோல்வி அடைந்த இந்தியாவுக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஆனால், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபோதிலும் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேக அடிப்படையில் தொடர்ந்தும் நான்காம் இடத்திலே இருக்கிறது. நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. 106 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பnடுத்தாடிய இந்தியா கடும் சவாலுக்கு மத்தியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்;டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அதிரடிக்கு பெயர்பெற்ற ஸ்ம்ரித்தி மந்தனா நீண்;ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் மற்றைய ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மாவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரொட்றிகஸ் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். ஆனால், ஷபாலி வர்மா 32 ஓட்டங்களுடனும் ஜெமிமா ரொட்றிகஸ் 23 ஓட்டங்களுடனும் ரிச்சா கோஷ் ஓட்டம் பெறாமலும் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (80 - 4 விக்.) அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 104 ஓட்டங்களாக உயர்த்தினர். அப்போது முன்னாள் பாய்ந்து பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த ஹார்மன் ப்ரீத் தரையில் வீழ்ந்ததால் அவரது கழுத்துப் பகுதியில் கடும் உபாதை ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் 29 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார். அடுத்து களம் நுழைந்த சஜீவன் சஜானா பவுண்டறி அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். தீப்தி ஷர்மா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் பாத்திமா சானா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியதால் பாகிஸ்தான் ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டது. ரேணுகா சிங் தனது முதலாவது ஓவரிலேயே குல் பெரோஸாவை (0)ஆட்டம் இழக்கச் செய்ததைத் தொடர்ந்து சித்ரா ஆமின் (8), ஒமய்மா சொஹெய்ல் (3) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். முன்வரசையில் ஆரம்ப வீராங்கனை முனீபா அலி மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 17 ஓட்டங்களைப் பெற்றார். 15ஆவது ஓவரில் பாகிஸ்தானின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 71 ஓட்டங்களாக இருந்தது. எனினும், நிதார் தார் 28 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 13 ஓட்டங்களையும் சயிடா ஆரூப் ஷா ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர். பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷ்ரீயன்கா பட்டில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: அருந்ததி ரெட்டி. https://www.virakesari.lk/article/195649
  22. இஸ்ரேலிய பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக யுத்தத்தை முன்னெடுக்கின்றார் - ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு - இஸ்ரேலில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் Published By: RAJEEBAN 06 OCT, 2024 | 12:45 PM ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வருடமாகின்ற நிலையில் ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலின் பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. காசாவில் தொடர்ந்தும் சிக்குண்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இஸ்ரேலிய தலைநகர் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பணயக்கைதிகளின் உறவினர்கள் பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு மேலும் தீவிர நடவடிக்கைகள் அவசியம் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இஸ்ரேலின் கேசரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெஞ்சமின் நெட்டன்யாகு காரணமாகவே பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் சிக்குண்டுள்ளனர் என காசாவில் சிக்குண்டுள்ள மட்டன் என்பவரின் தாயார் தெரிவித்துள்ளார். பெஞ்சமின் நெட்டன்யாகு பணயக்கைதிகளை விடுதலை செய்யவிரும்பவில்லை வடக்கில் யுத்தம் முடிவிற்கு வந்தாலும் தெற்கில் யுத்தம் தொடர்வதை அவர் விரும்புகின்றார், என அந்த தாயார் தெரிவித்துள்ளார். லெபனானில் இடம்பெறுகின்ற மோதல்களையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அரசியல் ரீதியில் உதவுகின்றது, அவர் ஆட்சியிலிருப்பதை உறுதி செய்கின்றது என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பணயக்கைதியாக சிக்குண்டுள்ள இட்ஜிக் என்பவரின் சகோதரர் இஸ்ரேலிய பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். பணயக்கைதிகளாக இஸ்ரேலியர்கள் பிடிக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது, என தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவின் தனிப்பட்ட அரசியல் உயிர்வாழ்தலிற்கான யுத்தத்தில் இஸ்ரேலியர்கள் பயணக்கைதிகளாக சிக்குப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195607
  23. Published By: VISHNU 06 OCT, 2024 | 09:29 PM அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார். இன்று கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தனது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தற்போது நமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரிதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தை தனித்து போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டணி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195650
  24. தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசன ஆசையால் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை இழக்கும் ஆபத்து - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 06 OCT, 2024 | 01:43 PM இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இணங்கியதன் பிரகாரம் இணைந்து செயற்படுவதற்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் கால அவகாசம் வழங்குகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய கூட்டமொன்று நேற்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றிருந்தது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆசனப் பங்கீடுகள் யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்தி பூர்த்தியாகியுள்ளது. எனினும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமான பங்கீடு திங்கட்கிழமை இரவு இறுதியாகவுள்ளது. இந்நிலையில் இக்கூட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு அக்கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்தப் பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகளை விரைவில் அறிவிப்போம். தற்போதைய நிலையில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதிநிதித்துவங்களை இழந்துவிடும் நிலை இருக்கிறது. கடந்த முறை அம்பாறையில் பிரதிநிதித்துவத்தினை இழந்தோம். இதற்கு முன்னதாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் ஒவ்வொரு தடவை பிரதிநிதித்துவங்களை இழந்துள்ளோம். ஆகவே, தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தினை உறுதி செய்வதில் நாம் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயராகவே உள்ளோம். அதற்காக நாம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கொண்ட குழுவினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். இதன்போது திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலும், அம்பாறையில் எமது சின்னத்திலும் போட்டியிடுவதற்கு இணக்கம் கண்டிருந்தோம். ஆனால் தற்போது அந்தக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் ஐந்து மாவட்டங்களில் தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அது கட்சியின் உத்தியோகபூர்வமான முடிவா இல்லை அவரது தனிப்பட்ட முடிவா என்பது எமக்குத் தெரியாது. எனினும் தமிழ் மக்களின் நன்மை கருதி ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதற்குஅமைவாக, நாம் தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தயராகவே உள்ளோம். எனவே நாளை திங்கட்கிழமை ஏழாம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமான பதிலை அறிவிக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தற்போதைய அறிவிப்பின் பிரகாரம் அக்கட்சி செயற்படுவதாக இருந்தால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிரதிநிதித்துவ இழப்பிற்கு அக்கட்சியே காரணமாக அமையும். தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தினையோ அல்லது இரண்டு ஆசனத்தினையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதற்காக இரண்டு பிரதிநிதித்துவங்களை இழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடயமாகும். ஏனென்றால், அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சேனாதிராஜா அங்கு சென்று போட்டியிட்டிருந்தார். ஆகவே, வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் பற்றிய புரிதல் சேனாதிராஜாவுக்கு உள்ளது. அதுகுறித்த புரிதல் சுமந்திரனுக்கு இருக்குமா, இல்லையா என்பது எனக்கு தெரியாது என்றார். https://www.virakesari.lk/article/195612

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.