Everything posted by ஏராளன்
-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்கள்
ஜனாதிபதி - சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இரண்டாவது நாளாகவும் கலந்துரையாடல் Published By: DIGITAL DESK 3 04 OCT, 2024 | 12:49 PM சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ணா ஸ்ரீநிவாஸ், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீற்றர் ப்ரூயர் உட்பட நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேநேரம், மக்கள் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழியில் செல்வதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/195461
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
இஸ்ரேலிற்கு எதிரான தாக்குதல் - "குறைந்தபட்ச தண்டனை" - ஈரானின் ஆன்மீக தலைவர் கமேனி 04 OCT, 2024 | 03:15 PM இஸ்ரேலிற்கு எதிராக ஈரான் மேற்கொண்ட தாக்குதலை ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி குறைந்தபட்ச தண்டனை என வர்ணித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை சட்டபூர்வமானது என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலின் ஆச்சரியமளிக்கும் குற்றங்களிற்காகவே இந்த தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டது என தெரிவித்துள்ளார். இஸ்ரேலை காட்டேரி ஆட்சி எனவும் அமெரிக்காவை பிராந்தியத்தில் வெறிபிடிதத நாய் எனவும் வர்ணித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஈரான் இஸ்ரேலிற்கு எதிரான தனது கடமைகளை வலிமையுடன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் என வரும்போது ஈரான் ஒருபோதிலும் தயங்காது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195479
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
சரி பையா.
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 10 வருட வெற்றி தாகத்தைத் தீர்த்துக்கொண்டது பங்களாதேஷ் Published By: VISHNU 03 OCT, 2024 | 11:07 PM (நெவில் அன்தனி) ஸ்கொட்லாந்துக்கு எதிராக ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (03) பிற்பகல் நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் 16 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றியீட்டியது. மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் அறிமுகமான 2014இல் இருந்து 16 போட்டிகளில் தோல்வி அடைந்துவந்த பங்களாதேஷ் இந்த வெற்றி மூலம் 10 வருட வெற்றி தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. அத்துடன் 'நிழல் சொந்த மண்ணில்' இந்த வெற்றி பங்களாதேஷுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 'எமது சொந்த நாட்டில் விளையாடாமல் இருப்பது இதயத்தை நோக வைக்கிறது. ஆனால், நாங்கள் பாதுகாப்பாக இருந்தவாறு சொந்த நாட்டிற்காக விளையாடுகிறோம். நல்ல எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளோம். இது எமது சொந்த நாட்டில் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது' என தனது 100ஆவது மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் வெற்றியை சுவைத்த அணித் தலைவி நிகார் சுல்தானா தெரிவித்தார். தகுதிகாண் சுற்றின் மூலம் முதல் தடவையாக மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஸ்கொட்லாந்துக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம். இந்தப் போட்டியில் இரண்டு தரப்பினரும் களத்தடுப்பில் கோட்டை விட்டதால் ஆட்டம் பெரியளவில் சுவாரஸ்யத்தை தோற்றுவிக்கவில்லை. முழுப் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் இருவரே 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பங்களாதேஷில் நடைபெறவிருந்த ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம், அந் நாட்டில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. எனினும் வரவேற்பு நாடு என்று உரிமைத்துவம் பங்களாதேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பங்களாதேஷுக்கு 'சொந்த மண்' போன்ற உணர்வை கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சோபனா மோஸ்தரி 36 ஓட்டங்களையும் ஷாதி ராணி 29 ஓட்டங்களையும் நிகார் சுல்தானா 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சஸ்கியா ஹோர்லி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் விக்கெட்களை தாரைவார்த்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது. ஆரம்ப வீராங்கனை சாரா ப்றைஸ் மாத்திரம் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சாராவின் சகோதரியான அணித் தலைவி கெத்தரின் ப்றைஸ் மற்றும் அலிசா லிஸ்டர் ஆகியோர் தலா 11 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ரிட்டு மோனி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஆட்டநாயகி: ரிட்டு மோனி https://www.virakesari.lk/article/195432 மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு பலத்த அடி; பாகிஸ்தானிடம் 31 ஓட்டங்களால் தோல்வி Published By: VISHNU 04 OCT, 2024 | 01:43 AM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (03) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 31 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பாகிஸ்தானின் கடைசி 2 விக்கெட்களை விரைவாக வீழ்த்த முடியாமல் 32 ஓட்டங்களை கடைசி 5 ஓவர்களில் இலங்கை விட்டுக்கொடுத்ததே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் பாகிஸ்தான் அணித் தலைவி பாத்திமா சானா வேகமாகப் பெற்ற 30 ஓட்டங்களும் பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகளும் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 117 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி இலங்கைக்கு பலத்த அடியாக வீழ்ந்துள்ளதுடன் தொடரும் போட்டிகளில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிவரும். இலங்கையின் ஆரம்பம் எந்தவகையிலும் சிறப்பாக அமையவில்லை. சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இலங்கை வீராங்ககைளின் மோசமான அடி தெரிவுகள், பொறுப்பற்ற துடுப்பாட்டம் காரணமாக விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. அத்துடன் இலங்கை அணியின் ஒட்ட வேகம் மிகவும் குறைவாக இருந்தது. முன்வரிசையில் இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன மாத்திரமே ஒரளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓட்டங்களைப் பெற்றார். சமரி அத்தப்பத்து (6), ஹர்ஷிதா சமரவிக்ரம (7), ஹாசினி பெரேரா (8), கவிஷா தில்ஹாரி (3) ஆகியொர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக 15 ஓவர்கள் நிறைவில் இலங்கை 5 விக்டெக்ளை இழந்து 61 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்று பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது. மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் ஏனையவர்களிடமிருந்து போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் சாடியா இக்பால் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பாத்திமா சானா 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஷ்ரா சாந்து 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஒமய்மா சொஹெய்ல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. 15 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பாகிஸ்தான், கடைசி 2 விக்கெட்களில் 32 ஓட்டங்களை மேலதிகமாக பெற்று ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. பாகிஸ்தானின் 8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது 6 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணித் தலைவி பாத்திமா சானா அடுத்த 14 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்று 30 ஓட்டங்களுடன் 9ஆவதாக ஆட்டம் இழந்தார். அவரைவிட முன்னாள் அணித் தலைவி நிதா தார் 23 ஓட்டங்களையும் ஒமய்மா சொஹெய்ல் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சமரி அத்தபத்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உதேஷிகா ப்ரபோதனி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: பாத்திமா சானா. https://www.virakesari.lk/article/195433
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படக்கூடியவரை இலக்குவைத்தது இஸ்ரேல்? 04 OCT, 2024 | 11:20 AM ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படக்கூடியவர் என கருதப்படுபவரை இலக்குவைத்து லெபனான் தலைநகரில் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹெஸ்புல்லா இயக்க்தின் முக்கிய உறுப்பினரான ஹாஷிம் சாபீதின் என்பவரை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு இதனை தெரிவித்துள்ளார். எனினும் அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/195453
-
ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு வெடித்தது
உலகையே உலுக்கிய சம்பவம்; 80 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த குண்டு ஜப்பானில் இரண்டாம் உலகப்போரின் போது புதைக்கப்பட்ட குண்டு நேற்று தீடீரென வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பான் மீது அமெரிக்கா ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியது. அப்போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்தது. இதில் ஓடு பாதையில் பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து, புறப்படவிருந்த மற்றும் தரையிறங்க இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அதன்படி, நேற்று மட்டும் 80 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது. ‘வெடிகுண்டு வெடித்த போது அருகில் எந்த விமானங்களும் இல்லை. மேலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ‘இந்த சம்பவத்தால், 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.” இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/310285
-
ஹாலிவுட்: உலகெங்கும் கொடிகட்டிப் பறந்த திரைத்துறையில் ஏற்பட்டுள்ள திடீர் முடக்கம்
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ரீகன் மோரிஸ் பதவி, பிபிசி செய்திகள், லாஸ் ஏஞ்சல்ஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாலிவுட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் பொற்காலத்தில் இருந்தார் மைக்கேல் ஃபோர்டின். நடிகரும் வான்வழிக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளருமான, மைக்கேல் ஃபோர்டின் 2012ஆம் ஆண்டில் டிரோன்களை பறக்கச் செய்யும் தனது பொழுதுபோக்கை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றினார். அதே காலகட்டத்தில்தான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. பல ஆண்டுக்காலமாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி போன்ற ஓடிடி தளங்களில் வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நேர்த்தியான வான்வழிக் காட்சிகளை உருவாக்கி திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்து வந்தார். இப்போது அவர் மீண்டும் வீடற்றவராக மாறும் விளிம்பில் இருக்கிறார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹண்டிங்டனில் கடல் ஓரமாக ஓர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். தெற்கு கலிஃபோர்னியாவில் வசிக்க முடியாததால் அவர்கள் லாஸ் வேகாஸில் குடியேறினர். ஆனால் இப்போது அவர்கள் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டனர். "நாங்கள் ஒரு வீட்டை வாங்க சேமித்துக்கொண்டிருந்தோம். எங்களிடம் பணம் இருந்தது. நாங்கள் முறையான வழியில் வாழ்ந்து வந்தோம்." "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் உணவகத்திற்குச் சென்று 200 டாலர்கள் செலவழிப்பதைப் பற்றிக்கூட நான் கவலைப்பட்டதில்லை," என்று அவர் கூறுகிறார். ஆனால், "தான் இப்போது வெளியே சென்று மெக்டொனால்ஸில் 5 டாலர் மதிபுள்ள ஓர் உணவை வாங்கி உண்ணக் கவலைப்படுவதாக" கூறுகிறார் ஃபோர்டின். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திரைத்துறையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹூலூ போன்ற புதிய ஓடிடி தளங்களுடன் போட்டியிட ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் போராடி வந்ததால், ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. ஆனால் மே 2023ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கியதில் இருந்து இந்த வளர்ச்சி நின்றுவிட்டது. இந்த வேலை நிறுத்தங்கள் பல மாதங்கள் நீடித்தன. 1960-களுக்குப் பிறகு முதல் முறையாக எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் இருவரும் இணைந்து இதில் ஈடுபட்டது ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்புகளைத் திறம்பட நிறுத்தியது. ஆனால் இந்த வேலைநிறுத்தங்கள் முடிவடைந்த ஓராண்டில், மீண்டும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்த்த நிலையில் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு முடங்கியுள்ளது. பல ஸ்டூடியோக்களில் வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் ஏற்கெனவே இருந்த படங்களின் தயாரிப்பு ரத்து செய்யப்பட்டு, மேலும் படங்கள் தயாரிப்பதும் குறைந்துவிட்டன. சமீபத்தில் பாரமவுண்ட் ஸ்டூடியோ உள்படப் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணிநீக்கங்களும் செய்யப்பட்டன. ஸ்கை-டான்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு, பாரமவுண்ட் ஸ்டூடியோ நிறுவனம் அதன் பணியாளர்களில் 15 சதவீதத்தைக் குறைப்பதற்காக, அங்கு இந்த வாரம் இரண்டாவது சுற்று பணி நீக்கங்களை முன்னெடுத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் வேலையின்மை 12.5% ஆக இருந்தது. பல திரைப்படத் தொழிலாளர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற பதிவு செய்யவில்லை. இதனால் இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று பலர் நினைக்கிறார்கள். பட மூலாதாரம்,MICHAEL FORTIN படக்குறிப்பு, மைக்கேல் ஃபோர்டின் கடந்த 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க தயாரிப்புகளின் எண்ணிக்கை சுமார் 40% குறைந்துள்ளது. உலகளவில், அந்தக் காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பில் 20% சரிவு ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்புகளைக் கண்காணிக்கும் ProdPro நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது குறைவான புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியாகின. ஆனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் நீடித்து நிலையானதாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயுடன் இயங்கும் கேபிள் டிவிக்கு மக்கள் சந்தா செலுத்தாதபோது, திரையுலகில் லாபம் ஈட்டுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க ஸ்டூடியோக்கள் முயற்சி செய்கின்றன. "திரையுலகில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை மக்கள் உணர்கிறார்கள். நான் பீதியைக் கிளப்புவதற்காக இதைக் கூறவில்லை," என்று பொழுதுபோக்குத் துறையைப் பற்றி செய்தி வெளியிடும் பக் நியூஸின் (Puck News) நிறுவனர் மேத்யூ பெலோனி கூறுகிறார். ஓடிடி தளங்களின் ஏற்றத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட்டால் தூண்டப்பட்டது. இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி ஜாம்பவான்கள் சாதனை வளர்ச்சியைக் கண்டன மற்றும் பாரமவுண்ட் போன்ற ஸ்டூடியோக்கள் சொந்த ஸ்ட்ரீமிங் ஓடிடி தளங்களைத் தொடங்கியதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்ததைக் கண்டது. "இது ஓடிடி தளங்களின் சந்தையைச் சூடு பிடிக்கச் செய்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு 600 ஆக்ஷன் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் பங்குச் சந்தை அதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தியது," என்று மேத்யூ பெலோனி கூறுகிறார். "நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மற்ற அனைத்து ஓடிடி நிறுவனங்களும் செயலிழந்தன. பின்னர் இதிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் மீண்டுள்ளது. ஆனால், மற்ற நிறுவனங்கள் உண்மையில் லாபத்தைப் பெற போராடுகிறார்கள்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன. திரையுலகில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைத் தாண்டி சில தயாரிப்பு நிறுவனங்கள், கலிஃபோர்னியாவில் இருந்து மற்ற மாகாணங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும், அங்குள்ள கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளால் ஈர்க்கப்படுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர்கள் மந்தநிலையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள், மேயர் கரேன் பாஸ் கடந்த மாதம் ஹாலிவுட்டில் திரைப்படத் தயாரிப்புக்கான புதிய ஊக்குவிப்புகளைப் பற்றி ஆலோசனை செய்ய ஒரு குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக் குழு உருவாக்கத்தை அறிவித்துவிட்டு மேயர் கரேன் பாஸ், "லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு பொழுதுபோக்குத் துறை முக்கியப் பங்காற்றுகிறது" என்று கூறினார். இது அந்நகரத்தின் பொருளாதாரத்தின் "மூலக்கல்" மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்கக்கூடும் என்று அவர் விவரித்தார். சமீபத்திய தரவுகளின்படி, பொழுதுபோக்குத் துரையானது 6,80,000-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. அது அந்த மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 115 பில்லியன் டாலர்கள் பங்களிப்பதாக மேயர் கரேன் பாஸ் கூறினார். எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன. இதற்குப் பிறகு அதிக பண மதிப்பு அளிக்கும் தொழிற்சங்க ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான பாதுகாப்புகள் வழங்க வழிவகுத்தன. ஹாலிவுட்டில் சில ஒருங்கிணைப்பு தவிர்க்க முடியாதது என்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் யூனியனுடன் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் டங்கன் க்ராப்ட்ரீ-அயர்லாந்து கூறினார். ஹாலிவுட்டில் கூடிய விரைவில் படங்கள் தயாரிப்பது அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே வீடியோ கேம் கதாப்பத்திரங்களுக்குக் குரல் கொடுக்கும் கலைஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர். "தனித்துவமான படைப்பாற்றல் மிக்க தயாரிப்புகளை உருவாக்குவதுதான் இந்த நிறுவனங்களைச் சிறப்பான மற்றும் மதிப்பு மிக்கதாக மாற்றியுள்ளது," என்று அவர் செப்டம்பரில் டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே ஒரு மறியல் போராட்டத்திற்குச் சென்றபோது கூறினார். இங்குதான் வீடியோ கேம் கதாப்பத்திரங்களுக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள் தற்போது இதேபோன்ற பாதுகாப்புக்காக வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளனர். "ஹாலிவுட் எப்போதும் நெருக்கடியில் இருப்பதாக நினைக்கிறது" என்று அவர் கூறுகிறார். இது அனைத்து வகையான மாற்றங்களையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு நகரம். விஷயங்கள் எப்போதும் இருந்தபடியே இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளதால் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளடக்கத்தை புதியதாக வைத்திருக்க வேண்டியுள்ளது." மைக்கேல் ஃபோர்டினின் டிரோன் நிறுவனம் இந்த வேலைநிறுத்ததிற்கு முன்பு தினமும் இயங்கி வந்தது. இப்போது இந்த வேலை நிறுத்ததப் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் வெறும் 22 நாட்கள் மட்டும் டிரோன்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடிகராக வெறும் 10 நாட்கள்தான் பணிபுரிந்துள்ளார். அவர் பின்னணி நடிகராகக்கூட பணிபுரிந்துள்ளார், ஆனால் லாஸ் வேகாஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு செல்வதற்கான பெட்ரோல் செலவைக்கூட அந்த வருமானம் ஈடு செய்யவில்லை. "முன்பு பணி சிறப்பாக இருந்தது இப்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது," என்று ஃபோர்டினின் ஆப்பிள் டிவி+ நிகழ்ச்சியில் தனது ட்ரோன்களை பறக்கவிட்டதன் பின்னர் கூறினார். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ட்ரோன்களுடன் இதுதான் அவரது முதல் பணி. "விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகின்றன. ஹாலிவுட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. ஆனால் திரைத்துறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் சரிவை ஏற்படுத்தியுள்ளது," என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c3vk3qyg919o
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
04 OCT, 2024 | 10:52 AM இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (03) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது. அவர்கள் எமது கூட்டமைப்புடன் இணைவது தான் சரியானது. அதனை விடுத்து, தங்களில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைப்பது சரியானது அல்ல. ஆகவே ஐக்கியத்தை விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஒருமித்து போவதே சரியானது. தம்மில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைத்துள்ளனர். அதிலும் யாரை அழைக்கின்றார்கள் என குறிப்பிடவில்லை. அதுமாத்திரமின்றி அவர்களுக்கு பொது சின்னமோ பொது கட்சியோ இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது கட்சியில் தமது சின்னத்தில் போட்டியிடுமாறு கோருகின்றனர். அது சரியானதல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு நாம் பல தடவைகள் கோரியும். அதனை செய்யவில்லை. தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கியப்பட்ட விரும்பினால், அதனை எமக்கு அறிவிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/195447
-
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை மாற்றம்!
04 OCT, 2024 | 09:58 AM வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக இருந்த புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமையினை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195443
-
சிறுவர்களிடையே கை, கால், வாய் தொற்று நோய் பரவும் அபாயம்
Published By: DIGITAL DESK 7 04 OCT, 2024 | 09:31 AM தற்போது காய்ச்சல் பரவுவது சிறுவர்களிடையே அதிகரித்துள்ளமையினால் முகக்கவசம் அணிய வேண்டும் என சிறுவர்கள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கை, கால், வாய் நோய் தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகின்றது. எனவே, சிறுவர்களை பாதுகாக்க சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195442
-
அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் !
சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்; ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு! 04 OCT, 2024 | 09:41 AM அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (03) இடம் பெற்றது. காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர். இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்ததுடன், இன்றைய கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர். கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது. இன்றைய கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றை அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது. அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும், தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்டகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர். இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/195441
-
யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Published By: VISHNU 04 OCT, 2024 | 02:25 AM யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி கேமிற்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை. கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வந்து, பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளார். இதனால் குறித்த மாணவன் 25.10.2024 அன்று வீட்டினை விட்டு வெளியேறி சென்றுள்ளான். இது குறித்து பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர். குறித்த மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை நேற்றிரவு (02) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருடன் சேர்ப்பித்தார். அந்த மாணவன் இன்று அதிகாலை 2 மணிவரை குறித்த கேமினை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகேயுள்ள காணியில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளான். இந்நிலையில் மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/195438
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன - யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் Published By: VISHNU 04 OCT, 2024 | 02:12 AM யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். வியாழக்கிழமை (3) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195436
-
பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு
Published By: VISHNU 04 OCT, 2024 | 02:00 AM உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதியை இயன்றளவு விரைவாக அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு 2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கிறது. அரசியலமைப்புக்கு அமைய 2024.07.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய 2024.09.21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அது தொடர்பான 2024.08.28 ஆம் திகதி ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் மாவட்ட பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள், அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடியதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தபட்சம் 30 -35 வரையான நாட்கள் தேவைப்படும் என அவதானிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024.09.24 ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதியை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். நாட்டின் சட்டவாக்கத்துறைக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நோக்கத்துக்கு முன்னுரிமையளித்து செயலாற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேரிட்டுள்ளது. அதேபோல் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு காலப்பகுதியினுள் தீர்மானிக்கப்பட்டவாறு பாராளுமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தினுள் அதாவது 2024.10.26 ஆம் திகதி காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கும் நேரிட்டுள்ளது. நாட்டு மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளை பாதுகாப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அதன் செயற்பொறுப்கை சிறந்த முறையில் புரிந்துக் கொண்டு செயலாற்றுவதுடன், 2024. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுடன் இசைந்து சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ள தேர்தல்களை நடாத்தும் செயற்பொறுப்பையும் கவனத்திற் கொண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் இயன்றளவு விரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு திகதி அறிவிக்கப்படும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சிவில் அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ' உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. ஜனாதிபதி உட்பட தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளனர்' என தீர்ப்பளித்ததுடன், அரச தரப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்திருந்தது. https://www.virakesari.lk/article/195435
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
Published By: DIGITAL DESK 3 04 OCT, 2024 | 10:24 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், அவரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் ஆவார். https://www.virakesari.lk/article/195440
-
அனுரகுமாரவுடன் பேச்சுவார்த்தை – ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்
இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் 04 OCT, 2024 | 10:54 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் விஜயம் என்பதால் இந்த விஜயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை மற்றும் சாகர் கொள்கைகளின் அடிப்படையில் இந்த விஜயம் பரஸ்பர நன்மைக்காக நீண்ட ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் இரு தரப்புகளினதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெய்சங்கரின் விஜயம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மீளாய்வு செய்வதுடன் கொழும்பின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் வகையில் அமைந்திருக்கும். இந்திய முதலீடுகள், பிராந்திய பாதுகாப்பு, இலங்கையின் சிறுபான்மை தமிழர் தொடர்பான அணுகுமுறை குறித்த அனுரகுமார திசநாயக்கவின் நிலைப்பாட்டை புதுடில்லி கேட்டறிவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் காணப்படும். புதன் கிழமை இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா இலங்கை பிராந்தியத்தில் அமைதியான ஸ்திரமான நாடாக மாறுவதை இந்தியா பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். ஊழலிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்திற்கு உதவதயார் என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195451
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
தவறான செய்தியைப் பகிர்ந்ததற்காக யாழ் கள உறவுகளிடம் மன்னிப்பை கோரிக்கொண்டு, எனக்கு "ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு" என்ற செய்தி வியப்பைத் தந்ததால் பகிர்ந்தேன். ஆனால் வாய்ப்புக் குறைவு என்பதை சிந்திக்கவில்லை.
-
தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி வட, கிழக்கு நகரவேண்டும்
Published By: VISHNU 03 OCT, 2024 | 08:30 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு சவாலாக காணப்படுகிறது. ஐக்கிய இலங்கைக்குள் தென்பகுதி மக்களுடன், முஸ்லிம் மக்களுடன், மலையக மக்களுடன் இணைந்த ஒரு அரசியலை நாம் எவ்வாறு முன்னெடுப்பது என்பது இங்கு முக்கியமாகும் என்று யாழ். பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு கேள்வி இலங்கையின் வரலாற்றில் பாரம்பரிய கட்சிகளிலிருந்து விலகி மாற்று அணிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். புதிய ஜனாதிபதி தெரிவை எப்படி பார்க்கின்றீர்கள்? பதில் இதனை ஒரு வரலாற்று ரீதியான மாற்றமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அதாவது இலங்கையில் பிரதான இரண்டு கட்சிகள் அல்லது அதிலிருந்து பிரிந்து வந்த கட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுக்கவில்லை. இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு கட்சி தற்போது ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கின்றது. நாம் 2022 ஆம் ஆண்டில் இருந்து மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறோம். இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போது ஏற்பட்டு இருக்கின்ற இந்த மாற்றம் இரண்டும் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றன. எனவே இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வி, இந்த பாரிய பொருளாதர நெருக்கடியில் இருந்து இந்த அரசாங்கம் எங்களை மீட்டெடுக்குமா என்பதாகும். கேள்வி அந்த சவாலை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எப்படி சமாளிக்கும் ? பதில் உண்மையில் பாரிய சவாலாக தான் இருக்கப் போகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுபோன்ற ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு பல வருடங்கள் போகலாம். ஆனால் அவர்கள் உடனடியாக என்ன செய்வார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வறுமை இரட்டிப்பாகியிருக்கிறது. போஷாக்கின்மை ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வேலையின்மையும் காணப்படுகிறது. இதுபோன்று பல நெருக்கடிகள் நாட்டில் காணப்படுகின்றன. வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாதவாறு தற்போது நாட்டின் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது. எனவே பொருளாதார ரீதியாக மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரித்து படிப்படியாக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. அதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இங்கு ஒரு மிகப்பெரிய சிக்கலும் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடன்களை மீள் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு சென்றது. அதனுடன் தொடர்புபட்டதாகவே நாணய நிதியத்துடன் நாங்கள் ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். அவர்களின் இறுக்கமான நிபந்தனைகளும் காணப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது அரசாங்கம் சிக்கன கொள்கைகளை முன் கொண்டு செல்ல வேண்டும். எனவே சிக்கன கொள்கையை கடைப்பிடித்தல் மறுபுறம் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் என்பது இருவேறுபட்ட விடயங்கள். அந்தவிடயத்தை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய விடயமாகும். மறைமுக வரியை கொண்டு செல்வதும் கடினமாக இருக்கும். காரணம் மக்களின் வருமானம் குறைவாக இருக்கின்றது. இவ்வாறான சூழலில் சொத்து வரியை அறிமுகப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. மீள்விநியோகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை கொண்டு வரலாமா என்று பார்க்கப்படலாம். ஆனால் அதற்கு பாரியதொரு அரசியல் விருப்பு தேவையாகும். ஒருசில தரப்பினர் அதனை விரும்பமாட்டார்கள். கேள்வி சர்வதேச நாணயத்துடனான பயணம் தொடரும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாரே? பதில் தற்போதைய ஜனாதிபதிக்கு இருக்கின்ற முக்கியமான சவால் என்னவென்றால் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களின் கவனம் தற்போது பாராளுமன்ற தேர்தலில் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றால் மட்டுமே மாற்றங்களை செய்ய முடியும். அதனால் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அவர்கள் பாரிய மாற்றங்கள் எதையும் செய்யமாட்டார்கள் என்றே கருதுகிறேன். கேள்வி தற்போதைய அரசாங்கம் இந்த வெற்றிமுகத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு மற்றும் மக்களின் தேவைகள் நிறைவேற்றுவதற்கு ஒரு புத்திஜீவி என்ற வகையில் உங்களது ஆலோசனைகள் எப்படி இருக்கும்? பதில் தற்போது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்று சவால்கள் காணப்படுகின்றன. முதலாவது மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதேபோன்று புதிய அரசாங்கம் என்று வரும்போது முதலாளித்துவ சமூகத்தின் எதிர்ப்பும் காணப்படும். அதற்கு முகம் கொடுப்பது அவசியம். மூன்றாவதாக சர்வதேச ரீதியான அழுத்தங்களும் ஏற்படலாம். எனவே இந்த மூன்று தரப்பையும் சமாளித்துக் கொண்டு படிப்படியாக அரசாங்கம் பயணிக்க வேண்டியுள்ளது. அதேநேரம் ஒரு புது திசையிலும் நாட்டை கொண்டு செல்ல வேண்டும். எமது நாட்டின் வரலாற்றில் அரசியல் பொருளாதாரப் பார்வையில் இது உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாகும். அந்த திசைமாற்றத்தை அவர்கள் படிப்படியாக எப்படி செய்யப் போகிறார்கள்? அந்த திசை மாற்றத்திற்கான அரசியல் விருப்பு மற்றும் தேசிய இணக்கப்பாடு என்பவற்றினூடாக அதனை செய்ய முடியும். கேள்வி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை இடதுசாரி ஆட்சி என்றும் ஒருபுறத்தில் சிலர் விழிப்பதை காண்கிறோம். அந்த பின்னணியில் மேற்குலகம் இந்த வெற்றியை எப்படி பார்க்கும்? பதில் அந்த தரப்புக்கள் இதனை ஒரு சந்தேகத்துடன்தான் பார்க்கும். காலம் காலமாக காலணித்துவத்தில் இருந்து அவர்களுடன் இணங்கி போகின்ற ஒரு அரசாங்கத்தை தான் எப்போதும் மேற்கு நாடுகள் விரும்பும். அதேநேரம் ஜே.வி.பி.யின் வரலாற்றை எடுத்தும் பார்க்கும்போது கடந்த 20 வருடங்களில் பாரிய மாற்றங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் தமது அந்த தீவிர இடதுசாரி கொள்கைகளிலிருந்து தங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி தமது தளங்களை அமைத்திருக்கின்றார்கள். கடந்த சில வருடங்களில் முழுமையாக நடுத்தர வர்க்கத்தை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக ஊழலுக்கு எதிரான அவர்களது பிரச்சாரத்தை பார்க்கும்போது அது பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் நடுத்தர வர்க்கத்துடன் தாக்கம் செலுத்துவதாகவே இருக்கும். அந்தவகையில் அவர்கள் தங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் சர்வதேச மட்டத்தில் சில அழுத்தங்கள் வரும். அதற்கு முகம் கொடுப்பதற்கு அவர்களுக்கு இலங்கை மக்களிடமிருந்து பாரிய ஆதரவு இருந்தால்தான் முடியும். மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் ஊடாகத்தான் இதனை செய்யக் கூடியதாக இருக்கும். கேள்வி வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் நீண்ட காலமாக தமக்கான ஒரு அரசியல் தீர்வை கோரி வருகின்றனர். தற்போதைய இந்த புதிய அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் எப்படி அணுகப்படும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்? பதில் சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்கும் பாரபட்சம் ஒடுக்குமுறைகள் நீண்டகால பிரச்சினையாக வந்திருக்கின்றன. அதற்கான தீர்வாகத்தான் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பன முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் ஜே.வி.பி.யின் வரலாற்று ரீதியான பார்வைகளை பார்க்கும்போது அவர்கள் அதற்கான சரியான தீர்வை முன்வைக்கவில்லை. ஆனால் அவர்கள் கடந்த தேர்தலில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியிருக்கிறார்கள். அந்த மாற்றத்தை அவர்கள் கொண்டு வருவார்களா என்ற கேள்வி உள்ளது. தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. உணவு பாதுகாப்பு மிகப் பிரச்சினையாகியுள்ளது. அதனால் கிராமப்புற பொருளாதாரத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது எனும்போது அங்கு அதிகார பரவலாக்கம் முக்கியமாகின்றது. அந்தந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்குத் தான் தங்களுடைய தேவைகள் தெரியும். அவர்களாகவே அந்த தீர்வுகளை கொண்டுவரும் போதுதான் அவை வெற்றியளிக்கும். இந்த விடயங்களை விளங்கி தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமது கொள்கைகளை மாற்றி அமைப்பார்களா என்பது கேள்வியாகும். கேள்வி இலங்கை பொறுத்தவரையில் இந்தியா சீனா என்ற இரண்டு பெரிய நாடுகளின் ஆதிக்கத்துக்குள் இருப்பதாக விமர்சர்கள் கூறுகின்றனர். இரண்டு நாடுகளுமே இங்கு பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புகின்றன. இந்தியா மிக நெருங்கிய நாடாக இருக்கின்றது. இந்த நிலைமையை புதிய ஜனாதிபதி எவ்வாறு சமாளிப்பார்? பதில் அ என்னை பொறுத்தவரை மிகப் பெரிய சவாலாக தான் இருக்க போகிறது. காரணம் பூகோள அரசியலில் காணப்படும் போட்டி, ஒருபக்கம் இந்தியா, மறுபக்கம் சீனா, இன்னொரு பக்கம் மேற்கு நாடுகள் என உள்ளன. அந்தப்போட்டி எமக்கு நலனை கொண்டுவரப் போவதில்லை. அதனை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி. 1960 மற்றும் 70களில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை அணிசாரா கொள்கையாக இருந்தது. அப்போது அணிசேரா இயக்கமும் இருந்தது. அதனுடன் இருந்து நாங்கள் பயணித்தோம். அந்தக் கொள்கைக்குத்தான் நாங்கள் மீண்டும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இலங்கை அபிவிருத்தி அடையாத மற்றும் மூன்றாம் உலக நாடுகளுடன் பலமான உறவை பேண வேண்டிய தேவை காணப்படுகிறது. இலங்கை போன்ற கிட்டத்தட்ட 70 நாடுகள் உலகத்தில் கடன் பிரச்சனையில் சிக்கி காணப்படுகின்றன. அந்த நாடுகளுடன் ஒரு கூட்டை உருவாக்கி இலங்கை போன்ற நாடுகளின் நலனை முன்னுருத்திய தேவைகளை கொண்டு செல்லும் கொள்கைகளை உருவாக்கவேண்டும். அணிசேரா கொள்கைகளின் அடிப்படையில்தான் இந்த பயணம் அமையவேண்டும். கேள்வி இதற்கு முன்னர் நீங்கள் வடக்கு கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டமையை முட்டாள்தனமான முடிவு என்று கூறினீர்கள். அவர் 2,14,000 வாக்குகளை பெற்றிருக்கின்றார். இப்பொழுது உங்கள் நிலைப்பாடு என்ன? பதில் இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றேன். தமிழ் அரசியலில் ஒரு பாரிய மாற்றம் தேவைப்படுகிறது. பொது வேட்பாளருக்காக நின்றவர்கள் தற்போது மீண்டும் ஒரு கூட்டை உருவாக்கத்தான் முயற்சிக்கிறார்கள். புதிய அரசியலைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. கேள்வி புதிய அரசியல் என்று நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள் பதில் புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு சவாலாக காணப்படுகிறது. ஐக்கிய இலங்கைக்குள் தென்பகுதி மக்களுடன், முஸ்லிம் மக்களுடன், மலையக மக்களுடன் இணைந்த ஒரு அரசியலை நாம் எவ்வாறு முன்னெடுப்பது என்பது இங்கு முக்கியமாகும். அதற்கேற்ற வகையில் ஒரு அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதும் இங்கு முக்கியமாகும். அதற்கு நாங்கள் தென்பகுதியில் இருக்கின்ற அரசியலுடன் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது. இந்த பொது வேட்பாளர் மற்றும் தற்போது யாழ்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியலானது பொதுவாக புலம்பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகிறது. இதுவும் ஒரு அபாயமான நிலைமையாகும். இங்குள்ள மக்கள் தான் இங்குள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். புலம்பெயர் மக்கள் தமது நிதி பலத்தை பயன்படுத்தி செய்யப்படுகின்ற விடயங்கள் கற்பனை அரசியலாகத்தான் இருக்கும். அது எமது மக்களுக்கு ஒரு பாதகமான நிலையை தான் ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/195426
-
ஈயின் மூளையில் என்ன இருக்கிறது?!
ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது? பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, ஈயின் மூளை எந்தளவுக்கு சிக்கலானதாக உள்ளதோ அந்தளவுக்கு அழகாகவும் உள்ளது. அதன் மூளையில் 1,30,000 செல்களும் 5 கோடி இணைப்புகளும் உள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும் - இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின் உதவியால் செய்கின்றன. 'ஈ'யின் மூளையின் வடிவம் மற்றும் அதன் 1,30,000 செல்கள் மற்றும் 5 கோடி இணைப்புகள் குறித்து முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இதுவரை வளர்ச்சியடைந்த ஈ ஒன்றின் மூளை குறித்து செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சியில் இது மிகவும் விரிவானது. இந்த புதிய கண்டுபிடிப்பு மனித மூளைகள் குறித்த நமது புரிதல்களில் “மிகப்பெரும் முன்னேற்றமாக” அமைந்துள்ளதாக முன்னணி மூளை நிபுணர் ஒருவர் கூறுகிறார். “எண்ணங்கள் எப்படி உருவாகின்றன” என்பதில் இந்த ஆராய்ச்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக, ஆய்வுக்குழு தலைவர்களுள் ஒருவர் தெரிவித்தார். ஈக்களின் வியப்பூட்டும் மூளை கேம்பிரிட்ஜில் மூலக்கூறு உயிரியலுக்கான மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தை சேர்ந்த டாக்டர் கிரேகரி ஜெஃப்ரிஸ் பிபிசியிடம் கூறுகையில், நம் ஒவ்வொருவருடைய மூளை உயிரணுக்களின் வலையமைப்பு, எவ்வாறு ஒருவருக்கொருவர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது என்று தற்போது எங்களுக்குத் தெரியாது என்றார். “அதனுடன் என்ன தொடர்பு உள்ளது? உங்கள் முகத்தை அடையாளம் காணும் வகையில் தகவல்களை அனுமதிக்கவும், என் குரலைக் கேட்கவும், வார்த்தைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றவும் உதவும் சமிக்ஞைகள் இந்த அமைப்பில் எவ்வாறு பாய்கின்றன? ஈ-யின் மூளையின் வலையமைப்பு உண்மையில் வியப்பூட்டுகிறது. இது நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.” ஆய்வு செய்யப்பட்ட ஈயை விட பல லட்சம் மடங்கு மூளை செல்கள் அல்லது நியூரான்கள் நம்மிடம் உள்ளன. ஒரு பூச்சியினுடைய மூளையின் இணைப்பின் (wiring) வரைபடம் எப்படி விஞ்ஞானிகளுக்கு நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை அறிய உதவும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈக்கள் பற்றிய இந்த புதிய ஆராய்ச்சி மனித எண்ணங்கள் குறித்து புரிந்துகொள்ள வழிவகுக்கிறது விஞ்ஞானிகள் இதற்காக தயாரித்த படங்கள், ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்கள், எந்தளவுக்கு சிக்கலானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அழகாக இருப்பதையும் காட்டுகிறது. அதன் வடிவம் மற்றும் அமைப்பு, இவ்வளவு சிறிய உறுப்பு எவ்வாறு பல சக்திவாய்ந்த கணக்கீட்டு (computational) பணிகளைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது. இந்த அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய ஒரு கசகசா அளவுகொண்ட கணினியை உருவாக்குவது நவீன அறிவியலின் திறனுக்கு அப்பாற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் மற்றொரு இணை தலைவர்களுள் ஒருவரான, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் மாலா மூர்த்தி, அறிவியல் ரீதியாக கணெக்டோம் (connectome) என அறியப்படும் இந்த இணைப்பின் புதிய வரைபடம், "நரம்பியல் விஞ்ஞானிகளின் புரிதலை மேம்படுத்தும்" என்றார். புதிய ஆய்வுகளுக்கு திறவுகோல் "ஆரோக்கியமான மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவும். எதிர்காலத்தில், நம் மூளையில் ஏதேனும் தவறாக நடக்கும்போது என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சியாளரும் இந்த ஆராய்ச்சிக் குழு தலைவருமான டாக்டர் லூசியா பிரீட்டோ கோடோலோ இந்த கருத்தை ஆமோதிக்கிறார். “300 இணைப்புகளைக் கொண்ட ஒரு எளிய புழு மற்றும் 3,000 இணைப்புகளைக் கொண்ட ஒரு மாமிசப் புழுவின் இணைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். 1,30,000 இணைப்புகளைக் கொண்ட ஈ-யின் மூளையை ஆராய்ந்திருப்பது அற்புதமான சாதனையாகும். இதைவிட பெரிய மூளையை கொண்டுள்ள எலி மற்றும் இன்னும் பல தசாப்தங்களில் நம்முடைய மூளையின் இணைப்புகளையும் ஆராய இது வழிவகுக்கும்.” பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, இந்த இணைப்புகள் ஈயின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றை உருவாக்கின்றன பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, ஈயின் பார்வை செயல்திறனுக்கான இணைப்புகள் இவை. பார்வை தொடர்புடைய இணைப்புகளில் இன்னும் பல நியூரான்கள் உள்ளன, ஏனெனில் பார்ப்பதற்கு அதிக கணக்கீட்டு சக்தி தேவைப்படுகிறது ஆராய்ச்சியாளர்கள் பல தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு தனித்தனி சுற்றுகளை அடையாளம் கண்டு, அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட முடிந்தது. எடுத்துக்காட்டாக, இயக்கத்துடன் தொடர்புடைய இணைப்புகள் மூளையின் அடிப்பகுதியில் உள்ளன, அதேசமயம் பார்வை தொடர்பான இணைப்புகள் பக்கவாட்டில் உள்ளன. பார்வை தொடர்புடைய இணைப்புகளில் இன்னும் பல நியூரான்கள் உள்ளன, ஏனெனில் பார்ப்பதற்கு அதிக கணக்கீட்டு சக்தி தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஏற்கனவே தனி சுற்றுகளைப் பற்றி அறிந்திருந்தாலும், அவை எவ்வாறு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாது. ஈக்களை அடிப்பது ஏன் கடினமாக உள்ளது? மற்ற ஆராய்ச்சியாளர்கள், ஈக்களை அடிப்பது ஏன் கடினமாக உள்ளது என்பதை கண்டறிய சுற்று வரைபடங்களைப் பயன்படுத்துகின்றனர். உங்களின் சுருட்டப்பட்ட செய்தித்தாள் எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை பார்வை சுற்றுகள் கண்டறிந்து, அவை ஈ-யின் கால்களுக்கு சமிக்ஞையை அனுப்புகின்றன. அவை தங்களுக்கு உடனடி மரணத்தை ஏற்படுத்தவல்ல பொருளிலிருந்து விலகி நிற்கும் வகையில் கால்களுக்கு மிக வேகமாக சமிக்ஞைகளை அனுப்புகின்றன. எனவே ஈக்கள் எண்ண ஓட்டத்தைவிட மிக வேகமாக பறந்துவிடுகின்றன. இந்த கண்டுபிடிப்பு, நம்மால் ஏன் ஈக்களைக் கொல்ல முடிவதில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும். பட மூலாதாரம்,GWYNDAF HUGHES/BBC NEWS படக்குறிப்பு, ஈயின் மூளையை துண்டுகளாக்கும் உபகரணம்: ஈயின் மூளை 7,000 மிக மெல்லிய துண்டுகளாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்தது எப்படி? இந்த விளக்க வரைபடம், மிகச்சிறிய மைக்ரோஸ்கோபிக் கருவி மூலம் ஈயின் மூளையை துண்டுகளாக்கி, அந்த 7,000 துண்டுகளை படங்களாக்கி அவற்றை டிஜிட்டல் முறையில் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர், பிரின்ஸ்டன் குழு அனைத்து நியூரான்களின் வடிவங்கள் மற்றும் இணைப்புகளை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பிரித்தெடுத்தது. எனினும், ஏ.ஐ. தொழில்நுட்பம் நேர்த்தியாக இதை செய்யாததால், சுமார் 30 லட்சம் தவறுகளை ஆராய்ச்சியாளர்கள் கைகளால் சரிசெய்ய வேண்டியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இது அளப்பரியது என்றாலும், வேலை பாதிதான் நடந்துள்ளது. ஒவ்வொரு இணைப்பும் என்ன வேலை செய்கிறது என்ற விவரம் இல்லையென்றால் இந்த வரைபடம் அர்த்தமற்றதாகிவிடும் என்கிறார், மூலக்கூறு உயிரியலுக்கான மருத்துவ ஆராய்ச்சி கழக ஆய்வகத்தை சேர்ந்த டாக்டர் பிலிப் ஷ்லேகெல். பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, ஸ்கேன்கள் மனித மூளையின் இணைப்பை காட்ட முடியும் - ஆனால் மிகச் சிறந்த ஸ்கேன்கள் கூட மூளை இணைப்புகளின் சிறிய பகுதியை மட்டுமே காட்டுகின்றன ஈயின் கனெக்டோம், தங்கள் ஆராய்ச்சிக்கு வழிகாட்ட அதைப் பயன்படுத்த விரும்பும் எந்தவொரு விஞ்ஞானிக்கும் கிடைக்கிறது. இந்த வரைபடம் மூலமாக, நரம்பியல் உலகம் "அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளை காணும்" என்று டாக்டர் ஷ்லேகல் நம்புகிறார். ஒரு மனித மூளை ஈயை விட மிகப் பெரியது, அதன் இணைப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறியும் தொழில்நுட்பம் நம்மிடம் இன்னும் இல்லை. ஆனால் இன்னும் 30 ஆண்டுகளில் அதை சாதிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஈயின் மூளை, மனிதர்களின் எண்ணங்கள் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய புதிய, ஆழமான புரிதலின் தொடக்கமாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஃபிளைவயர் கன்சார்டியம் எனப்படும் விஞ்ஞானிகளின் ஒரு பெரிய சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c153pg07215o
-
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1 வருட சிறை - சிங்கப்பூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு
03 OCT, 2024 | 03:35 PM சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச தரப்பு ஆறு-ஏழு மாத சிறைத் தண்டனையை கோரிய போதிலும் நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சரின் குற்றங்களின் அளவையும் அவை பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஏற்படுத்திய பாதிப்பையும் கருத்தில்கொள்ளும் போது ஆறு-ஏழு மாத சிறைத்தண்டனை போதுமானதல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார். பொது நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே திறமையான நிர்வாகத்திற்கான அடித்தளம் என தெரிவித்துள்ள நீதிபதி தனிப்பட்ட அரசாங்க ஊழியர் நேர்மை பொறுப்புக்கூறல் தரத்திற்கு குறைவாக வீழ்ச்சியடைந்துவிட்டார் என்ற என்ற தோற்றப்பாடு பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். சிறந்த வருமானம் வழங்கப்படும் செயறதிறன் மிக்க அதிகாரிகளை கொண்ட வலுவான சுத்தமான ஆட்சி என தங்களை பற்றி பெருமிதம் கொண்டிருந்த சிங்கப்பூர் மக்களிற்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஊழல் அற்ற முதல் ஐந்து நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என கடந்த வருடம் டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்திருந்தது. இறுதியாக 1975 இல் சிங்கப்பூர் அமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195405
-
யாழ் பல்கலையில் "சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலும் மக்களின் வாக்களிப்பும்" தொடர்பான கலந்துரையாடல்
03 OCT, 2024 | 04:19 PM அண்மையில் நடைபெற்று முடிவடைந்த “சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு முறை” எனும் தலைப்பிலான அவையம் படிப்பு வட்டம் மக்களிடையே நிலவும் சமகால அரசியல் சிந்தனைகள் பற்றிய உரையாடல் தளமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 02.10.2024 புதன்கிழமை கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தலுக்குப் பின்னரான நிலை மற்றும் தேர்தல் முடிவுகளில் எவ்விதம் மக்களின் சமூக, பொருண்மிய, அரசியற் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பது தொடர்பிலும், மக்களிடையேயான அரசியல் விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடலுக்கான தளமாக இம்மாத “அவையம் படிப்பு வட்டம்” நகர்ந்துள்ளது, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் துணைச் செயலாளர் சி.சிவகஜன் தலைமையில் நடைபெற்ற குறித்த “அவையம்” படிப்பு வட்டத்தில் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர். கே.ரி கணேசலிங்கம், வருகை விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான செல்வின் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களிடையே சமூக, பொருண்மிய, பண்பாட்டு, அரசியல் தளங்களில் கருத்து பரிமாற்றத்திற்கான வெளியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/195409
-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்கள்
மக்களுக்கு வரி நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது – சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகளிடம் ஜனாதிபதி 03 OCT, 2024 | 09:47 PM இலங்கை அரசாங்கம் வற், வருமானவரி நிவாரணங்களை மக்களிற்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துவரும் மக்களிற்கு வரி நிவாரணங்களை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஆராய்ந்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் நோக்கங்கள் குறித்த கொள்கையளவிலான அரசாங்கத்தின் பரந்துபட்ட உடன்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி இந்த நோக்கங்களை மக்களின் சுமைகளை குறைக்கும் மாற்றுவழிகள் ஊடாக அடையவேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/195431
-
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்
Published By: VISHNU 03 OCT, 2024 | 09:06 PM இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். கொரிய எக்ஸிம் வங்கியின் பணிப்பாளர் வொன்சுக் ஹா, பிரதிப் பணிப்பாளர் ஹனுய் ஹன், திட்ட முகாமையாளர் நளின் ஜயதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் இதில் இணைந்து கொண்டார். https://www.virakesari.lk/article/195429
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
தெரியவில்லையே அண்ணை. தினக்குரல் ஏதும் தவறாக மொழிபெயர்த்துவிட்டதோ?!
-
சம்பிரதாய அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது; ஜனாதிபதி அநுர உறுதி
ஜனாதிபதி விவசாயம், காணி, கால்நடை, நீர்பாசனம், கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 01:53 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயம், காணி,கால்நடை, நீர்பாசனம்,கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை இன்று வியாழக்கிழமை (03) பொறுப்பேற்றார். https://www.virakesari.lk/article/195389