Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 03 OCT, 2024 | 03:02 PM மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் ஓய்வூதியம் இரத்து செய்யப்படுகின்றது. ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கான ஓய்வூதியம்11 முதல் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195388
  2. 03 OCT, 2024 | 03:05 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தனது தமது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி கட்டணத்திற்காகச் செலுத்தப்பட வேண்டிய 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195387
  3. ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார். மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310282
  4. Published By: RAJEEBAN 03 OCT, 2024 | 01:20 PM இலங்கையில் ஊழல் கலாச்சாரம் நீடித்தால் ஜப்பானின் முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹடேகி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையி;ல் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. முதலில் வெளிநாட்டு அழுத்தங்களின் மூலம் கிடைக்ககூடிய சாதகதன்மையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாமல் ஜப்பான் பல விடயங்களை சாதித்திருக்க முடியாது. ஜப்பானின் சீர்திருத்த தலைவர்கள் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தார்கள். இலங்கை இன்று சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ் பொருளாதார அமைப்பு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளமுயல்கின்றது. வரிச்சீர்திருத்தம், மின்சார சீர்திருத்தம் போன்றவை சவாலானவை மக்களின் ஆதரவற்றவையாக காணப்படலாம். எனினும் இவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களை நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக பயன்படுத்துவதை பலவீனமாக கருதக்கூடாது, மாறாக தலைவர்களின் புத்திசாலித்தனத்திற்கான சான்றாக கருதவேண்டும். இந்தியா 1991 இல் நிதிநெருக்கடியை எதிர்கொண்டது, சர்வதேச நாணயநிதியம் உலக வங்கியின் ஆலோசனைகளுடன் கட்டமைப்பு சீர்திருத்தத்தை முன்னெடுத்தது. அன்று முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை இன்று மிகவேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கைகள் புத்திசாலித்தனமான தொடர்ச்சியான பொருளாதாரகொள்கைகளை பின்பற்றுவது குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பிற்கான ஆதரவாக சர்வதேச சமூகம் கருதுகின்றது. 2022 இல் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட 11 ஜப்பான் நாணய கடன் திட்டங்களை ஜப்பான் சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முதல் ஜப்பான் இதனை செய்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்துடனும் இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடனும் இலங்கை செய்துகொண்ட உத்தியோகபூர்வ உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஜப்பான் இந்த திட்டங்களை மீள ஆரம்பித்துள்ளது என்பதை கருத்தில்கொள்வது அவசியம். போட்டிதன்மை மிக்க தொழில்துறையை உருவாக்குதல் ஜப்பானின் அனுபவத்தில் இரண்டாவது மிக முக்கியமான விடயம் என நான் கருதுவது போட்டித்தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்புவது. இலங்கை தற்போது முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. பொருளாதார நெருக்கடியை வளர்ச்சியை நோக்கி மாறுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம். போட்டித்தன்மை மிக்க தொழில்துறையை உருவாக்குவதற்கான தொழில்கொள்கையை உருவாக்குவது அவசியம் என்பதை பொருளாதார அதிசயம் குறித்த ஜப்பானின் அனுபவம் வெளிப்படுத்துகின்றது. சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. பணவீக்கம் ஒன்றை இலக்கத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சாதகமானதாக காணப்பட்டது. குறுகிய காலத்திற்குள் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமும் பொதுமக்களும் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன். எனினும் இலங்கை இறக்குமதி கட்டுப்பாட்டினை அகற்றியதும், அந்நிய செலாவணி பற்றாக்குறை மீண்டும் உருவாகலாம். இதன் காரணமாக ஸ்திரதன்மையை ஏற்படுத்திய பின்னர், நாட்டில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும், நாட்டிற்கு அந்நிய செலாவணியை உழைக்கும் போட்டித்தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்புவது அவசியம். தொழில்துறையை கட்டியெழுப்புவதில் இலங்கை ஜப்பானின் தொழில்துறை கொள்கைகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ளலாம். நஷ்டத்தில் இயங்கும் தொழில்துறையை அரசாங்க பணத்தை பயன்படுத்தி பாதுகாக்காமல் இருப்பது அவசியம். ஊழலிற்கு முடிவுகட்டுதல் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்ற மூன்றாவது விடயம் ஊழலிற்கு முடிவு காண்பது. இலங்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் நான் ஊழல் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகின்றேன். ஊழலை ஒழிப்பது குறித்து தீவிர அர்ப்பணிப்புள்ள தலைவரை இலங்கை மக்கள் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதால் இலங்கைக்கு நீண்டகாலமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ள இந்த தீமைக்கு தீர்வை காண்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இங்கு பணியாற்ற வந்த பின்னர் இலங்கையின் அரசியலை உன்னிப்பாக அவதானித்தவன் என்ற அடிப்படையில் ஊழல் தொடர்பான இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கை மக்கள் தங்கள் தலைவர்களை வெறுப்பதற்கு ஊழல் ஒரு காரணமாக உள்ளது. மேலும் தலைவர்கள் ஊழல்மிகுந்தவர்களாகயிருக்கும் போது பொறுப்புணர்வுள்ளவர்களாக தாங்கள் இருக்கவேண்டும் என மக்கள் சிந்திக்கும் நிலையை அது ஏற்படுத்தாது. தலைவர்கள் ஊழல்வாதிகளாக காணப்படும் போது வரி செலுத்தவேண்டியவர்கள் வரிசெலுத்துவதை தவிர்க்க முயலக்கூடும். இரண்டாவது இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முயலும் போது இது பாதகமான விதத்தில் தாக்கம் செலுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு வெளிப்படையான எதிர்வுகூறக்கூடிய வர்த்தக சூழல் அவசியம். ஜப்பானிய நிறுவனங்கள் தற்போது தங்கள் கடப்பாடுகளை பின்பற்றுவதில் மிகவும் இறுக்கமாக காணப்படுகின்றன, இதன் காரணமாக அவர்கள் இலஞ்சம் பெறுவதில்லை. இலங்கையில் ஊழல் கலாச்சாரம் நீடித்தால் ஜப்பானின் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிவிப்பேன். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கா அதிகளவு ஜப்பானிய முதலீடு கிடைப்பதை விரும்புவதால் நான் இதனை தெரிவிக்கின்றேன். https://www.virakesari.lk/article/195385
  5. மதுசார பாவனையினால் உலகில் ஆண்டுக்கு 03 மில்லியன் பேர் பலி; அரசுக்கு 237 பில்லியன் ரூபாய் வருடாந்த சுகாதார, பொருளாதார செலவீனங்கள் - ADIC நிறுவனம் 03 OCT, 2024 | 01:08 PM இன்று (ஒக்டோபர் 3) சர்வதேச மதுசார தடுப்பு தினம்! மதுசார பாவனையினால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவீனங்கள் 237 பில்லியன் ரூபாயாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தகவல் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுசார தடுப்பு தினமாகும். மதுசார பாவனையினால் வருடாந்தம் உலகளாவிய ரீதியில் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகெங்கும் ஏற்படும் 10 மரணங்களில் 08 மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான பிரதான நான்கு காரணங்களுள் முதன்மை காரணமாக மதுசார பாவனை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாடு என்ற ரீதியில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் பல்வேறு வகையான சுகாதார, பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் மதுசார பாவனையினால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைவதுடன் வருடாந்தம் சுமார் 15000 – 20000 பேர் அகால மரணமடைகின்றனர். மேலும் 2022ஆம் ஆண்டு மதுசாரத்தினால் கிடைக்கப்பெற்ற மதுவரி வருமானம் 165 பில்லியன் ரூபாய் ஆகும். 2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 2022ஆம் ஆண்டு மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்காக 237 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆகவே, மதுசாரம் ஒரு நாட்டுக்கு இலாபகரமானது அல்ல என்பதும் தெளிவாகிறது. மேலும், மது வரியினால் கிடைக்கப்பெறும் வரி வருமானத்தை விட மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவீனங்கள் அதிகம் என்பது இப்பகுப்பாய்வின் மூலம் விஞ்ஞான ரீதியாக ஒப்புவிக்கக்கூடியதாக உள்ளது. 2006ஆம் ஆண்டு 27ஆம் இலக்க தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்தின்படி, மதுசாரம் மற்றும் புகைப்பொருள் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், இச்சட்டத்தை மீறும் வகையில் மதுசார நிறுவனங்களால் பிள்ளைகளையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்களும் சிறுவர்களும் மதுசார நிறுனவங்களின் பிரதான இலக்குக் குழுக்களாகும். மதுசார பாவனையினால் அகால மரணமடைகின்ற ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு பதிலாகவும் இளைஞர்களையும் சிறுவர்களையுமே இலக்கு வைக்கின்றனர். அதற்காக மதுசாரத்துக்கான கவர்ச்சியை அதிகரித்து காண்பிப்பது குறிப்பிட்ட மதுசார நிறுவனங்களின் இலக்காகும். மதுசார பாவனையில் வீழ்ச்சி ஏற்படுவதானது நாட்டுக்கு சிறந்தவொரு குறிகாட்டியாகும். அதாவது மதுசார பாவனையில் வீழ்ச்சி ஏற்படும் போது சுகாதார செலவீனங்கள் குறைவடையும். பொது மக்களின் சுகாதாரம் விருத்தியடையும். குடும்பங்களுள் மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியன விருத்தியடையும். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி, மதுசாரத்துக்கான வரி அறவிடுதல் மற்றும் விஞ்ஞான ரீதியாக மதுசாரத்துக்கான விலையை நிர்ணயித்தல் ஆகியவை விஞ்ஞான ரீதியானதும் செலவீனம் குறைந்ததுமான பயனுள்ள மதுசாரக் கட்டுப்பாட்டு முறைமையாகும். மதுசாரத்துக்கான வரியை அதிகரிக்கும்போது மதுவரி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடிவதுடன், மதுசார பாவனையைக் குறைத்துக்கொள்ளவும் இயலும். கடந்த வருடத்தில் மது வரி அறிக்கைகளின் பகுப்பாய்வை மேற்கொள்ளும் போது மதுசாரத்துக்கான வரி 34 வீதம் அதிகரிக்கப்பட்டதால் மது வரி வருமானம் அதிகரிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானமும் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மதுவரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாயாக காணப்பட்டதுடன் 2023ஆம் ஆண்டு மது வரி வருமானம் 181.10 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட விலைச்சூத்திரத்தின்படி, மதுசாரத்துக்கு வரி அறவிடுவதன் மூலம் மதுசாரத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் மதுசாரத்தினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். மதுசார பயன்பாட்டைக் குறைப்பதற்கும் மதுசார பாவனையை ஆரம்பிக்கும் வீதத்தை குறைப்பதற்கும் வரி அறவீடு மற்றும் விலை நிர்ணயம் ஆகியன சிறந்ததொரு வழிமுறையாகும். புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் புதிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ள இவ்வேளையில் நாட்டில் காணப்படும் மதுசார பிரச்சினைகளை குறைப்பதற்காக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பின்வரும் முன்மொழிவுகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தும் என நாம் நம்புகின்றோம். மதுசார பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் 01. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒவ்வோர் ஆண்டும் கலால் வரி அதிகரிக்கும் விஞ்ஞான வரி சூத்திரத்தை நடைமுறைப்படுத்துதல். 02. மதுசார நிறுவனங்களால் ஏற்கனவே அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரிகளை மீளப்பெறுவதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமையை தவிர்த்துக்கொள்வதற்குமான முறையான வரி அறவீட்டு முறையைத் தயாரித்தல். 03. மதுசார பயன்பாடு மற்றும் ஊக்குவிப்பைக் குறைப்பதற்கான தற்போதைய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபையின் (NATA) உத்தேச திருத்தங்களை விரைவாக அமுல்படுத்துதல் 04. தற்காலிக மதுசார அனுமதிப்பத்திரங்களை வழங்காதிருத்தல் மற்றும் சுற்றுலாத் தொழில் என்ற போர்வையில் வழங்கப்படும் அனுபதிப்பத்திரங்களுக்கான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல் 05. 2016ஆம் ஆண்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரக் கட்டுப்பாடு தொடர்பான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல். 06. சட்டவிரோத மதுசார வகைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை அமுல்படுத்துதல். மேலும் அந்த நோக்கத்துக்காக செயற்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிகைகளை மேற்கொள்ளல். 07. மதுசார பாவனைக்கு ஆளாகுவதற்கு முன்னரே இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தொடர்த்தேர்ச்சியான தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துதல். 08. மதுசார பாவனையாளர்களை அப்பாவனையிலிருந்து விடுதலையாக்குவதற்காக ஆலோசனைகள், சிகிச்சைகள், பிற சேவைகள் மற்றும் தேவையான திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல். 09. ஏற்கனவே காணப்படும் கொள்கைகளை வலுவிழக்கச் செய்வதற்கும் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மதுசாரத் தொழில்துறையின் தலையீடுகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முறையான செயற்றிட்டத்தை புதிய அரசாங்கம் தயாரித்து இம்முறை மதுசார தடுப்பு தினத்தில் மதுசார பிரச்சினைகளை நாட்டில் குறைத்துக்கொள்வதற்காக விரைந்து செயற்படும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) எதிர்பார்க்கிறது. சம்பத் த சேரம், நிறைவேற்றுப் பணிப்பாளர், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) https://www.virakesari.lk/article/195384
  6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர் தின நாளில் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவித்தமை குறித்து கண்டனம் தெரிவித்து இன்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எட்டுமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடமாக போராடிக்கொண்டு வருகின்றோம். இலங்கை அரசிடம் பலவழிகளில் பலமுறை நீதி கேட்டு நின்றோம். நீதி கிடைக்காத நிலையில் தான் நாம் எட்டு மாவட்ட உறவுகளும் சரவதேச நீதியைதேடி 2018ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேச நீதி கோரி ஜெனிவா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்று வருகின்றோம். எமது போராட்டங்களான மே18 இனவழிப்புநாள், சர்வதேச மனித உரிமைகள் தினம், சிறிலங்கா சுதந்திரதினம், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச மகளிர்தினம், சர்வதேச சிறுவர் தினம் அத்துடன் மாதாந்த மாவட்ட ரீதியான கவனயீர்ப்பு போராட்டம் என அத் தினங்களில் நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம். எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளுக்கும் தலைமைகளுக்கும் சிறிலங்கா காவல்துறை விசாரணை, புலனாய்வுத்துறை விசாரணை என பல ஏராளமான மன உளைச்சல்கள், எண்ணிலடங்காத அச்சுறுத்தல்கள் இவற்றுக்கு மத்தியிலும் நாம் எப்போதும் எமக்கான நீதிக்கான போராட்டத்தை கை விடப்போவதில்லை என உறுதி எடுத்துக்கொள்கின்றோம் . இதேபோல் சிறுவர் தினமான 01/10/2024 அன்று எட்டு மாட்டமும் மாவட்ட ரீதியாக சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு சர்வதேச நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கோண்டோம். எட்டு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் பட்டியலில்1000ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் இராணுவத்திடம் சரணடைந்தனர் அந்த குழந்தைகளூக்கு என்ன நடந்தது என மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கிறோம். “இந்த குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கிய விடயத்தில் உலகளாவிய ரீதியில் சிறிலங்கா முதலாம் இடத்தைப் பெற்று நிற்கிறது. அதேபோல் எட்டு மாவட்டத்திலும் சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக அந்த அந்த மாவட்ட மக்களும் சிறுவர்கள், குழந்தைகள் அனுஷ்டித்தனர். வவுனியா மாவட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி எஸ்.ஜெனித்தாவின் தலைமையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்துக்கு மூன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்க்கொண்டனா். போராட்டம் காலை10.30 ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த வேளை போராட்ட இடத்திற்கு வந்த ஒரு நபர் தான் அநுரவின் ஆள் எனவும் இங்கு போராட்டம் செய்யவேண்டாம் என எச்சரித்தார். அதற்கு தாய்மார் இது ஜனநாயக போராட்டம் நாம் இதை ஏன் நிறுத்த வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அந்த நபர் மிக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவருடைய தொனியில் கத்தினார். யாரோ எமது போராட்டத்தை குழப்புவதற்கு அவரை அனுப்பியதாக எமக்கு தெரிந்தது. தாய்மார் இதையெல்லாம் கதைக்க நீர் யார் என்று கேட்ட போது, குறித்த நபர் நான் அநுரவுடன் ஒன்றரை வருடமாக இருக்கின்றேன். அவர் இப்பொழுது ஜனாதிபதியாக வந்துவிட்டார் அதனால் உங்களை போராட்டம் செய்ய விடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறினாா். அதுமட்டுமல்ல உங்களை எல்லாம் கைது செய்யப்போகிறேன் என்று தகாத வார்த்தைகளால் அவ்விடத்தில் பேசி எமது தாய்மாரின் மனதை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார். ஆனால் எமக்கு இவர் ஜனாதிபதி அநுரவின் ஆளோ அல்லது காவல்துறையினரின் ஆளோ அல்லது புலனாய்வுத்துறையின் ஆளோ அல்லது வேறுயாருடைய ஆளோ என்று எமக்கு தெரியாது. இங்கு குழப்பத்தை ஏற்படுத்தியவருக்கும் அவரை இயக்குபவருக்கும் நாம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எமது போராட்டத்தை குழப்ப வரும் எவரானாலும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உறவுகளை உயிருடன் ஒப்படைத்துவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த போராட்டத்தில் எம்முடன் இருந்து உறவைத தேடிய 280ற்கும் மேற்பட்ட உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இதற்கு யாருமே பதில் சொல்ல முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆகவே எமது போராட்டம் எமக்கு சரியான சர்வதேச நீதி கிடைக்கும் வரை தொடரும் என பிரகடனப்படுத்துகின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310276
  7. கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும் ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண திருவிழா இன்று ஆரம்பம் 03 OCT, 2024 | 10:51 AM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (3) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு முறை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் உலக சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா உட்பட 10 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி பிரசித்திபெற்ற ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும் துபாய் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது. இப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுகின்றபோதிலும் வரவேற்பு நாடு என்ற அந்தஸ்தை பங்களாதேஷ் கொண்டுள்ளது. ஷார்ஜாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. இப் போட்டியைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. கடந்த ஒன்றரை வருடங்களாக மிகவும் பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு மகளிர் கிரிக்கெட் அரங்கில் பல திருப்பங்களை ஏற்படுத்திய சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை, ஆசிய கிண்ண சம்பியன் என்ற அந்தஸ்துடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது. 'ஒவ்வொரு முறையும் நாங்கள் மிகக் குறைந்த வாய்ப்பைக் கொண்டவர்கள் (Underdogs) என்ற முத்திரையுடனேயே பங்குபற்றுகிறோம். அதனால் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. அதிகமான அழுத்தத்தை நானும் எனது சக வீராங்கனைகளும் எங்கள் தோள்களில் சுமக்க விரும்பவில்லை. நாங்கள் மிகவும் எளிமையாக வைத்துக்கொள்ளவுள்ளோம். சில சிரேஷ்ட வீராங்கனைகளுடன் இளம் வீராங்கனைகளும் அணியில் இடம்பெறுகின்றனர். கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளதால் எமது அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இது மாறுபட்ட கிரிக்கெட் வடிவமாகும். அத்துடன் நிலைமைகளும் மாறுபட்டே இருக்கிறது. எனவே நாங்கள் புதிய நாட்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொன்றாக திட்டமிட்டு விளையாடவுள்ளோம்' என நேற்றைய தினம் சமரி அத்தபத்து தெரிவித்தார். மேலும், இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக வெற்றிகொண்ட அணி என்ற வகையில் உலகக் கிண்ணத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற 3 போட்டிகளில் இரண்டில் (குழு நிலை) இலங்கையும் நிரல்படுத்தல் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றன. மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 20 போட்டிகளில் பாகிஸ்தான் 10 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை. ஆசிய கிண்ண அரை இறுதி உட்பட கடைசியாக விளையாடப்பட்ட 3 போட்டிகளிலும் பாகிஸ்தானை இலங்கை வெற்றிகொண்டிருந்தது. 10 அணிகள், 150 வீராங்கனைகள், 23 போட்டிகள், ஒரு உலக சம்பியன் பத்து அணிகளைச் சேர்ந்த 150 வீராங்கனைகள் 23 போட்டிகளில் தங்களது அதி உச்ச ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருப்பதுடன் அக்டோபர் 20ஆம் திகதி 70 கோடி ரூபா (2.34 அமெரிக்க டொலர்கள்) பணப்பரிசுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுமக்கப்போகும் சம்பியன் அணி தீர்மானிக்கப்படும். இறுதிப் போட்டிக்கான இருப்பு நாளாக அக்டோபர் 21ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியன ஏ குழுவிலும் அங்குரார்ப்பண உலக சம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன பி குழுவிலும் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தலா 10 லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளில் அக்டோபர் 17ஆம், 18ஆம் திகதிகளில் விளையாட தகுதிபெறும், அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் (அக். 20) பங்குபற்றும். இலங்கை பங்கபற்றும் போட்டிகள் (பி குழு) அக்டோபர் 3 (இன்று) எதிர் பங்களாதேஷ் (ஷார்ஜா பி.ப. 3.30 மணி) அக்டொபர் 5 எதிர் அவுஸ்திரேலியா (ஷார்ஜா பி.ப. 3.30 மணி) அக்டோபர் 9 எதிர இந்தியா (துபாய் இரவு 7.30 மணி) மகளிர் ரி20 உலக சம்பியன்கள் இங்கிலாந்து (2009), அவுஸ்திரேலியா (2010, 2012, 2014, 2018, 2020, 2023), மேற்கிந்தியத் தீவுகள் (2016) https://www.virakesari.lk/article/195366
  8. வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார். கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். எனவே, வினைத்திறன் மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார். முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/310272
  9. Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 09:39 AM ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு புதன்கிழமை வெடித்துள்ளது. குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை. 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின் தற்காப்புப் படையைச் சேர்ந்த குண்டு செயலிழப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது தற்கொலைப் பயணங்களில் "காமிகேஸ்" விமானங்களைத் தடுப்பதற்காக வீசப்பட்டதாகக் கருதப்படுகிறது. குறித்த பகுதியில் மீண்டும் வெடிப்பு சம்பவம் நிகழ வாய்ப்பில்லை. பொலிஸார் மற்றும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தற்போது சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையம் வியாழக்கிழமை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943ல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 41 டன் எடையுள்ள 2,348 குண்டுகள் அகற்றப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195362
  10. ஈஷா யோகா மையம்: காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈஷா மையம் 1992ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியின் அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஈஷா மையத்துக்கு எதிரான தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா மையம் தொடுத்த அவசர மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்த போது, இதைத் தெரிவித்துள்ளனர். ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இரண்டு பெண்களிடம் பேசிய பிறகு, "அவர்கள் சொந்த விருப்பதிலேயே அங்கு தங்கி வருவதாக தெரிவித்தனர்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட இரு பெண்களின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த ஆட்கொணர்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிக் கொண்டது. ஒரு நிறுவனத்துக்குள் ராணுவம் அல்லது காவல்துறையினரை இப்படி உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்த அறிக்கையை காவல்துறை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். கோவை வெள்ளியங்கிரி மலைடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக நடத்தி வந்த சோதனை புதன்கிழமை இரவு முடிவடைந்தது. ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்தச் சோதனை நடத்தப்பட்டு வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது. துறவிகள் மட்டுமின்றி ஈஷாவில் இருக்கும் அனைவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தனது இரண்டு மகள்களை ஈஷா மையத்திலிருந்து மீட்டுத் தருமாறு தொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. அந்த மையத்தில் தனது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். எனினும் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருந்து வருவதாக அவரது மகள்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். யாரையும் திருமணம் செய்துகொள்ளவோ, துறவறம் மேற்கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை என்று ஈஷா யோகா மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. https://www.bbc.com/tamil/articles/cqxrzzjvg44o
  11. Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 11:40 AM பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளதால் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்கள் எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம் மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/195373
  12. மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவதானத்தைத் தக்கவைப்பதற்கு இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் அவசியம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 7 03 OCT, 2024 | 08:45 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வழக்குத் தொடரக்கூடியவகையில் ஆதரங்களைத் திரட்டுதல் மற்றும் கண்காணித்தல், அறிக்கையிடல் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைப்பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவருவதன் மூலமும் இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளிலிருந்து அவர் விலகி செயற்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்யும் வகையில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் எதிர்வரும் வாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் இலங்கை தொடர்பான புதிய அறிக்கையில் 'பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் மறுசீரமைப்புக்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. மாறாக அடிப்படை சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடிய புதிய அச்சுறுத்தல்கள் தோற்றம் பெற்றுள்ளன' எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் மீறல்களுடன் தொடர்புடைய அதிகாரிகளைப் பொறுப்புக்கூறவைப்பதற்குத் தவறியிருக்கின்றன. இருப்பினும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நீதியை நிலைநாட்டும் அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதன் ஊடாக அந்த வரலாற்றை மாற்றியமைக்கமுடியும். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானத்தைத் தக்கவைப்பதற்கும், நீதிக்கான எதிர்பார்ப்பைப் பேணுவதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைத்திருப்பை உறுதிசெய்வதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இன்றியமையாதவையாகும். எனவே இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஆணையை ஏற்கனவே வழங்கியிருக்கும் தீர்மானத்தை (51/1) மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195331
  13. ஈரான் ஏன் உள்ளே வந்தது? காசாவிற்கு எதிரான போரில், ஹமாஸிற்கு, ஈரான் மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக இஸ்ரேல் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குல் நடத்தியது. இதில், ஈரானை சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததால், ஈரான் கடுங்கோபம் அடைந்தது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரான், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இஸ்ரேலை நோக்கி 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இதன் மூலம், தங்களை சீண்டினால் நேரடியாக தாக்குவோம் என ஈரான் சுட்டிக்காட்டிய நிலையில், சிறிது நாட்கள் இஸ்ரேல் அமைதி காத்தது. ஆனால், கடந்த மே மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளை எழுப்பியது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் பொறுப்பேற்ற நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர்கள் டெஹ்ரானில் கொல்லப்பட்டனர். அதற்கு சில மணிநேரத்திற்கு, முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஃபுஆத் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார். இதன் மூலம், 24 மணிநேரத்தில், ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவரையும், லெபனானில் ஹிஸ்புல்லா தலைவரையும் தாக்கி இஸ்ரேல் தனது பலத்தை காட்டியது. இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்-ஹிஸ்புல்லா இடையே தாக்குதல் பல்வேறு வகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. குறிப்பாக, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் வெடித்தது, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடுத்தது என இஸ்ரேல் உக்கிரமாக இறங்கியது. இந்நிலையில், கடந்த வாரம் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையின் தளபதி அபாஸ் நில்ஃபோராஷன் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா லெபனானில் கொல்லப்பட்டனர். இதனால் அத்திரம் அடைந்த ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான அயதோல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தங்களது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது அரசியல் ரீதியான அவமானமாக கருதியதால், ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக பிபிசி தமிழ் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அடிப்படை வாதத்தில் இருந்து மிதவாத போக்கிற்கு மாறும் ஈரானை, இஸ்ரேல் மறைமுகமாக சீண்டி போரின் பாதைக்கு கொண்டு வந்ததாக பேராசிரியர் கிளாட்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட போது, ஈரான் சிறிது நாட்கள் அமைதியாக இருந்ததால், இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதே நிலை, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட பிறகும் இருக்கக்கூடாது என்பதால், ஈரான் உடனடியாக நேரடி தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக கருதப்படுகிறது. ஹமாஸிற்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது ஈரான் பக்கம் திரும்பியதால், அதன் போக்கை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். https://thinakkural.lk/article/310261
  14. Published By: DIGITAL DESK 7 03 OCT, 2024 | 09:52 AM உலகளாவிய ரீதியில் சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று வியாழக்கிழமை (03) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 30 இலட்சம் மக்கள் மது பாவனைக்கு அடிமையாகி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை செய்யப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை இன்று (03) மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195363
  15. 03 OCT, 2024 | 09:11 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டுள்ளார். கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையானது சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் மேலும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் ஜெனிவா ஊடக அமையத்தில் நடாத்திய கலந்துரையாடலின்போதே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டன. இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி சன் கிம் மற்றும் இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூகப்பேரவையின் உறுப்பினர் ஆனந்தராஜ் நடராஜா ஆகியோர் பங்கேற்று கருத்து வெளியிட்டனர். அதன்படி கலந்துரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தன், இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகின்றது எனச் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டவர்களைப் பொறுப்புக்கூறச்செய்யக்கூடியதுமான சுதந்திரமான சர்வதேச விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை நிறுவவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து இலங்கையிலிருந்து நிகழ்நிலை முறைமையில் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைத்த ஆனந்தராஜ் நடராஜா, 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் கலவரங்கள், படுகொலைகள், அரச கண்காணிப்புக்கள், ஒடுக்குமுறைகள், வலிந்து காணாமலாக்குதல்கள், காணி அபகரிப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளிலும் திட்டமிட்ட இனவழிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் குறிப்பிட்டார். அதேவேளை இத்தகைய அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டதை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்துவரும் நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே இதற்குரிய நீதியை நிலைநாட்டமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்த அலைன் வேனர், அது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டார். எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலதரப்பட்ட தேசிய மற்றும் சர்வதேசப் பொறிமுறைகளின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சட்ட ஆலோசகருமான சன் கிம், நீதியை அடைந்துகொள்வதற்கான பயணத்தில் பல்வேறுபட்ட சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டினார். 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அங்கம்வகிக்காத நிலையில், சர்வதேச நீதிமன்றம் போன்ற ஏனைய கட்டமைப்புக்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்' எனவும் சன் கிம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195328
  16. Published By: VISHNU 03 OCT, 2024 | 03:24 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தலைமையிலான தாயக மக்கள் கட்சியின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் திலதி ஜயவீரவினால் புதன்கிழமை (2) நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை தொடர்ந்து தாயக மக்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டதாவது, தொழிலதிபர் திலித் ஜயவீரவை நன்கு அறிவேன். தனது உழைப்பால் அவர் முன்னேறியுள்ளார். ஆகவே இவ்வாறானவர் அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுத்ததால் எமது அரசாங்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்காக எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/195357
  17. சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் Published By: VISHNU 02 OCT, 2024 | 09:26 PM சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று புதன்கிழமை (02) இலங்கைக்கு விஜயம் செய்தது. IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதன்படி, IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதாரக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வேலைத்திட்டம் தொடர்பில் இதன் போது இருதரப்பும் மீளாய்வு செய்ததோடு அதன் எதிர்கால செயற்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கை தொடர்பான சாதகமான அணுகுமுறையை அதிகரித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஆதரவை நோக்கி ஒரு தீர்க்கமான முன்னெடுப்பும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டது. IMF தூதுக்குழுவில் சிரேஷ்ட தூதுக் குழு தலைவர் டொக்டர் பீட்டர் ப்ரூவர், வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான் மற்றும் பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் இடம்பிடித்ததோடு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஹர்சன சூரியப்பெரும, பொருளாதாரக் கொள்கைப் பேரவையின் தலைவரும் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான டொக்டர் அனில் ஜெயந்த, பொருளாதாரக் கொள்கை தொடர்பான பேரவையின் பிரதான உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, பேராசிரியர் சீதா பண்டார ரணதுங்க, சுனில் கமகே, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி, பேராசிரியர் ஓ.ஜி.தயாரத்ன பண்டா, அமரசேன அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/195351
  18. இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களின் போதே இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எந்தவொரு லொட்டரிகள், வாடிக்கையாளர் கணக்கெடுப்பு, நன்கொடைகள் போன்றவற்றில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று சம்பத் வங்கி அறிவித்துள்ளது. பிரபலமான வர்த்தக நாமங்கள் மற்றும் சேவைகள் என்ற போர்வையில் தள்ளுபடிகள், பரிசுகள், அதிர்ஷ்ட சீட்டிழுப்புக்கள் போன்றவற்றை வழங்குவதாக காண்பித்து, போலியான இணையப் பக்கங்களுக்கு உங்களை வழிநடத்திச் செல்கின்ற போலியான சமூக ஊடக விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310249
  19. Published By: VISHNU 03 OCT, 2024 | 02:51 AM இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் புதன்கிழமை (02) முல்லைத்தீவு- கள்ளப்பாட்டிலுள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் லலிதா கபூர் ரவிகரனை எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் என விளித்திருந்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பாக வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போட்டியிடுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் ரவிகரனை மேற்கண்டவாறு விளித்திருந்தார். மேலும் குறித்த சந்திப்பில் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய தீர்வு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் நிலமைகள், தமிழர்களின் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு, தமிழர் பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாடுகள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/195358
  20. பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 அக்டோபர் 2024 அமலாக்கத் துறை வழக்கு ஒன்றில் கைதாகி பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி 'தியாகம் செய்ததாக' முதல்வரே குறிப்பிட்டதும் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது. மோசடி வழக்கு ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பிணையில் வெளிவந்தவுடன் அதற்கு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். "உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளிடமும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதலமைச்சரே சொல்வது வெட்கக்கேடானது. தி.மு.க-வை வளர்க்க போராடியவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை. பல கட்சிகளுக்கு சென்று வந்தவருக்குதான் தியாகி பட்டம்," என்று குறிப்பிட்டார். பா.ஜ.க., மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவரான எச்.ராஜாவும் இதனைக் கடுமையாக விமர்சித்தார். "குளித்தலையில் தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜி மிகப் பெரிய ஊழல்வாதி என்றார் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று சொன்னார். அவரை ஸ்டாலின் இன்று தியாகி என்கிறார்," என்றார். ‘ஏற்றுக்கொள்ள முடியாது’ பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாசும், முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததைக் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்ததுதான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்,” என்றார். ராமதாசு, மேலும் அந்த அறிக்கையில், "பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ‘இது விபரீதமான போக்கு’ இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், இந்தப் போக்கு நல்லதல்ல என்கிறார். “நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, அரசியல் அவசரம் காட்டுவது விபரீதமாகத்தான் முடியும்,” என்கிறார். இப்படிச் அவருக்கு அவசரமாக அமைச்சர் பதவி வழங்குவதால், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் ரத்தாகலாம் என்கிறார் ஷ்யாம். “அவர் அமைச்சராகிவிட்டதால், சென்னையில் இந்த வழக்கை நடத்தக்கூடாது, வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என யாராவது உச்சநீதிமன்றத்தை நாடி, நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொண்டால், அது இன்னும் விபரீதமாக முடியும்,” என்க்கிறார். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தந்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபோன்ற காரணங்களைச் சொல்லித்தான் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன், வழக்கை கர்நாடக மாநிலத்தில் விசாரிக்கும் தீர்ப்பைப் பெற்றார், என்கிறார். “அந்த வழக்கு எப்படி முடிவுக்கு வந்தது என எல்லோருக்குமே தெரியும்," என்கிறார் ஷ்யாம். பட மூலாதாரம்,X/V_SENTHILBALAJI படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி ‘தி.மு.க இதனை எளிதாக எடுத்துக்கொள்கிறது' இதுபோன்ற சட்ட விவகாரங்களை எளிதாக எடுத்துக் கொள்வது நல்லதில்லை என்கிறார் ஷ்யாம். "இந்த விஷயத்தை தி.மு.க., மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். சூழல் வேகமாக மாறிவருகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தபோது இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு என உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் முறையிட்டவுடன், அதனைத் தனி மனுவாகத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்கிறார் அவர். “அமைச்சர் பதவி அளிப்பதையெல்லாம் அவசரப்படாமல் பொறுமையாகச் செய்திருக்கலாம். எந்தக் காரணத்திற்காக இதைச் செய்திருந்தாலும் அரசியல் ரீதியாக இது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும்," என்கிறார் ஷ்யாம். மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டால், அதனை அந்தத் தருணத்திற்கு ஏற்றபடி எதிர்கொள்ளலாம் என்ற எண்ணம் தி.மு.க-விடம் இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இப்போது தேர்தல் வந்தால்கூட தி.மு.க-தான் வெல்லும் நிலை இருக்கிறது என நினைக்கிறார்கள். இந்த நிலைமை மாறினால், அப்போது அதற்கேற்றபடி அதைச் சமாளிப்பார்கள்," என்கிறார் அவர். படக்குறிப்பு, பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ‘தி.மு.க. முழுமையாக மாறிவிட்டது’ மேலும் பேசிய பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், இந்தப் போக்கு, தி.மு.க. முழுமையாக மாறிவிட்டதன் அடையாளம் என்கிறார். இப்போது இருப்பது முன்பிருந்த தி.மு.க., அல்ல என்னும் அவர், தி.மு.க., அடிப்படையாகவே மாறிவருகிறது என்கிறார். “எந்த விஷயம், கட்சி நிர்வாகிகளை ஈர்த்து வைத்திருக்கும் எனப் பார்க்கிறார்கள்,” என்கிறார். முன்பு தி.மு.க உறுப்பினர்களை கொள்கை கட்டிப்போட்டிருந்தது என்று கூறும் ராதாகிருஷ்ணன், இப்போது ஒருவர் கட்சிக்குத் தீவிரமாக வேலை பார்த்தால் அவரைக் கைவிடமாட்டோம் எனக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காட்ட நினைப்பதாகக் கூறுகிறார். இதுகுறித்து மேலும் பேசிய ராதாகிருஷ்ணன், “செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குக் கடுமையாக வேலை செய்திருக்கிறார். ஆகவே, அதற்காக அவரை நான் கைவிடாமல் இருக்கிறேன் எனச் சொல்ல நினைக்கிறார் ஸ்டாலின். ஆகவே, ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பது கேள்வியல்ல. கட்சிக்கு என்ன வேலை பார்த்தாய் என்பதுதான் முக்கியம் என கட்சித் தலைமை முடிவுசெய்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது," என்கிறார் ராதாகிருஷ்ணன். இளம் வயதிலேயே முதுகு வலி வருவது ஏன்? மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?29 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,X/V_SENTHILBALAJI படக்குறிப்பு, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது ‘அர்த்தமில்லாத விமர்சனங்கள்’ ஆனால், இதுபோன்ற விமர்சனங்களில் அர்த்தமில்லை என்கிறார் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சிறையிலிருந்து வந்த பிறகு கட்சித் தலைவர் என்ற முறையில் வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார் அவர். "செந்தில் பாலாஜி வழக்கு முடிந்துபோன ஒன்று. செந்தில் பாலாஜி கரூரில் அண்ணாமலையைத் தோற்கடித்தார் என்பதற்காகவும், தி.மு.க-வின் பெயரைக் கெடுப்பதற்காகவும் இதைச் செய்கிறார்கள்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன். செந்தில் பாலாஜியிடம் கொடுத்த மூன்று லட்ச ரூபாய் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே கிடையாது என்று சொல்பவர்கள் எப்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்கள்? என்று கேள்வியெழுப்புகிறார் கான்ஸ்டைன்டீன். “உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வழக்கறிஞரை ஆஜராகச் செய்ய எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும்? அந்த அளவு பணத்தை, பாதிக்கப்பட்டதாகச் சொல்பவர்கள் கொடுக்க முடியுமா? ஆகவே இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அது பா.ஜ.க. செய்யும் அரசியல்,” என்கிறார். மேலும் பேசிய கான்ஸ்டைன்டீன், செந்தில் பாலாஜி பல நாட்கள் சிறையில் இருந்தார். ஆனால், இன்றுவரை குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை, என்கிறார். “இந்தியா முழுவதும் மத்திய ஏஜென்சிகளால் வழக்குத் தொடரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க-வுக்கு மாறியிருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி அப்படிச் செய்யவில்லை. அந்த விசுவாசத்திற்காக அவரை கட்சித் தலைவராக பாராட்டுகிறார் முதலமைச்சர்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன். ‘தியாகம்’ என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்தைப் பற்றிப் பேசிய கான்ஸ்டைன்டீன், ''செந்தில் பாலாஜி மக்களுக்குத் தியாகம் செய்தார் என யாரும் சொல்லவில்லை, பா.ஜ.க-வின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு விசுவாசமாக இருந்தது ஒரு தியாகம். அதைக் கட்சித் தலைவர் பாராட்டுவதில் என்ன தவறு?" என்கிறார் கான்ஸ்டைன்டீன். அரிசியா, கோதுமையா? - எதை சாப்பிடுவது உடலுக்கு நல்லது?7 மார்ச் 2024 ‘தி.மு.க-வின் செயலில் முரண்பாடில்லை’ இந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்து, வழக்குத் தொடர்ந்த தி.மு.கவே இப்போது அவரைப் பாராட்டுவது சரியா என்ற விமர்சனம் சரியானதில்லை என்கிறார் கான்ஸ்டைன்டீன். "நாங்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட சிலர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அந்த வழக்கில்தான் அவர் கைதுசெய்யப்பட்டார். ஆகவே இதில் முரண்பாடில்லை," என்கிறார் கான்ஸ்டைன்டீன். இதற்கிடையில், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுமார் 20 வழக்குகளை விசாரித்து வருவதால், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கத் தனியாக ஒரு நீதிபதியை நியமிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ரூ.1.5 கோடி சம்பளத்துடன் அழகிய தீவில் வேலை - எங்கே, என்ன வேலை?7 மார்ச் 2024 செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி அ.தி.மு.க-வின் சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் பாலாஜியை, 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. இந்நிலையில், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான நியமனங்களுக்கு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2015-ஆம் ஆண்டு வாக்கில், பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை தரவில்லையெனக் கூறி தேவசகாயம் என்பவர் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீதும் அவரது சகோதரர் அசோக் உள்பட வேறு நாற்பது பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார். இருந்தபோதும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா அளித்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு, டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருந்துவந்தார் செந்தில் பாலாஜி. தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத்' தொடங்கியபோது, அதிலும் இருந்துவந்தார். ஆனால், விரைவிலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறி, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு வேகம் எடுத்தது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்ததில், ரூ.1.62 கோடி அளவுக்குச் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. தமிழ்நாட்டில் இனி வீட்டில் நாய் வளர்க்க ரூ.5,000 கட்டணம், 11 ரக நாய்களை வளர்க்க தடை - புதிய கட்டுப்பாடுகள் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய நிறுவனங்களில் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களும் சவால்களும்27 செப்டெம்பர் 2024 படக்குறிப்பு, சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி கைது முதல் ஜாமீன் வரை இதற்கிடையில், தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் பாலாஜி, மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக்கப்பட்டார். இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, தன் மீது புகார் கூறியவர்களுடன் சமரசத்தை எட்டிவிட்டதால் தன் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மோசடி வழக்கை முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது. இதற்குப் பிறகு அமலாக்கத்துறை சுறுசுறுப்படைந்தது. செந்தில் பாலாஜி, அவருடன் தொடர்புடையவர்களது இடங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில்கூட சோதனை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இருந்தபோதும் அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அன்றைய தினமே சிறையிலிருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி. இதற்குப் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தன. செப்டம்பர் 29-ஆம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த மூன்றே நாட்களில் செந்தல் பாலாஜி மீண்டும் அமைச்சரானது பலரது புருவங்களை உயர்த்தியிருப்பதோடு, விமர்சனங்களுக்கும் உள்ளானது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1wngvv41g9o
  21. 03 OCT, 2024 | 11:16 AM முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மதுபான நிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம் காணப்படுகின்றது, இவற்றிற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் யார் என்பது மக்களிற்கு தெரியவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், எதிர்வரும் தேர்தலிற்கு முன்னர் இதனை பகிரங்கப்படுத்தவேண்டும், இதன் மூலம் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளவர்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலைகள் அதிகரிப்பு என்பது சமூக பிரச்சினை, இது இளம்தலைமுறையினருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், மதுபானசாலைகளை விஸ்தரிப்பதில் நேரடியாக தொடர்புபட்ட அரசியல்வாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195372
  22. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானிய ஏவுகணைகள் அக்டோபர் 1 அன்று இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மூலம் இடைமறிக்கப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெரெமி பொவன் பதவி,சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி 28 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று அந்தத் தாக்குதல் குறித்தும், அது நடத்தப்பட்ட முறை குறித்தும் இரான் வெளிப்படையாக அறிவித்தது. இரானின் ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில கடுமையான சேதங்களைச் செய்ய விரும்புவதைப் போலத் தோன்றுகிறது. தனது நிலைப்பாட்டை ஆக்ரோஷமாகப் பதிவு செய்ய விழைவது போலவும். ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், அதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்திருக்கிறது. கடந்த முறை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ‘வெற்றியை கொண்டாடுங்கள் ஆனால் பதிலடி வேண்டாம்’ என்று கூறினார். அதனால் இஸ்ரேல் அதனைச் செய்யவில்லை. ஆனால், இம்முறை இஸ்ரேலின் மனநிலை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இஸ்ரேலின் தடுப்பு அமைப்பு என்னவானது? நேற்றிரவு (அக்டோபர் 1) இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட்டின் ட்வீட்டைப் பாருங்கள்: "இது, மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றியமைக்க, 50 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு." ''இந்த பயங்கரவாத ஆட்சியைக் கொடிய முறையில் முடக்குவதற்கு'' இஸ்ரேல் இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இப்போது பென்னட்டின் இஸ்ரேலின் பிரதமராக இல்லை (அவர் வருங்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராகலாம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதனால்தான் கடினமானவர் என்பதைக் காட்ட அவர் இந்த நிலைப்பட்டை வெளியிட்டார்). ஆனால் இது இஸ்ரேலின் ஒரு குறிப்பிட்ட மனநிலையைப் பிரதிபலிக்கிறது. அணுசக்தி தளங்கள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் என இரானியப் பொருளாதாரத்திற்குச் சேதம் விளைவிக்கக்கூடிய எதன் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம். இந்தச் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. இரானும் அதன் அணுசக்தி நிலையங்களும் தாக்கப்பட்டால், லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவிடம் இருக்கும் அதிநவீன ஆயுதங்களின் மிகப்பெரிய களஞ்சியம் அதற்குப் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல் ஹெஸ்பொலா அமைப்பை நிலைகுலைய வைத்து, அதன் ஆயுதங்களில் பாதியை அழித்துவிட்டது. லெபனானிலும் படையெடுத்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 1-ஆம் தேதி இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது, வானில் காணப்பட்ட ஓர் எறிகணை பேச்சுவார்த்தைக்கு இடமிருக்கிறதா? ஹெஸ்பொலா வடிவில் இரானுக்கு இருந்த தடுப்பு, நொறுக்கப்பட்டுவிட்டது. எனவே இஸ்ரேலியர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானம் தாங்கிக் கப்பல்களின் மற்றொரு குழுவை மத்தியதரைக் கடலுக்கு அனுப்புகிறார். ‘நீங்கள் இஸ்ரேலைத் தாக்கினால், அமெரிக்காவையும் தாக்குவதாக அர்த்தம்’ என்று அவர் இரானுக்குச் சமிக்ஞை செய்கிறார். இந்த ஸ்திரமற்ற தன்மை, நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் உருவாகும் கொந்தளிப்பு, ஆகியவற்றால்தான் போர் வலுக்குமோ என்ற பயம் பரவலாக இருக்கிறது. இப்போது அது வெளிவருவதை நாம் காண்கிறோம். இந்த நேரத்தில் ராஜதந்திரத்திற்கு மிகக் குறைந்த இடமே இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c99vgeynj2mo
  23. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நடவடிக்கை - ஜுலி சங் Published By: VISHNU 02 OCT, 2024 | 06:30 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித்தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது. இதன்போது நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுமந்திரனிடம் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார். அதேபோன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை இப்புதிய அரசாங்கம் வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த அமெரிக்கத்தூதுவர் தம்மிடம் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசாங்கத்துக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியுமா எனவும் இதன்போது அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியினால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புவதாகவும், இருப்பினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்கத்தூதுவர், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/195346
  24. 02 OCT, 2024 | 05:44 PM தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25 வீத பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (02) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா, பிரசாந்தன் பவித்திரா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், ஒற்றுமையின்மை காரணமாக தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரைவாசிக்கு மேல் குறைந்துள்ளது. ஒற்றுமையில்லாத நிலையே இதற்கு காரணமாக உள்ளது. வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டும். தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று கோருகின்றோம். அதேபோன்று பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிகள் பேச்சளவிலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசுகின்றனர். உள ரீதியாக அவர்கள் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தினை வழங்குவதை உறுதிப்படுத்துவதில்லை. வெறுமனே பேச்சளவிலேயே உறுதி கூறுகின்றனர். எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலில் பெண்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர். https://www.virakesari.lk/article/195343

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.