Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறார் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், அபய் குமார் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார். அக்டோபர் 4ஆம் தேதி, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதை உறுதிப்படுத்தினார். அக்டோபர் 15, 16ஆம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்திய தூதுக்குழுவை வழிநடத்துவார் என்று அவர் கூறினார். முன்னதாக டிசம்பர் 2015இல், அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் "ஆசியாவின் இதயம்" (heart of asia) மாநாட்டில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி "ஆச்சரியப் பயணமாக" லாகூர் சென்றார். இப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வதன் அர்த்தம் என்ன? வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம், வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், “இந்தப் பயணம் எஸ்சிஓ மாநாட்டுக்காகத்தான், அதற்கு மேல் யோசிக்க வேண்டாம்” என்றார். பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த், புது டெல்லியின் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர். அவர், இந்தப் பயணம் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று கூறுகிறார். அதேவேளையில், எஸ்சிஓ மாநாட்டின் பார்வையில் இது முக்கியமானது என்றும் அவர் நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பிபிசி ஹிந்தியிடம் பேசிய பேராசிரியர் பந்த், "இந்தியாவிற்கு தற்போது அதற்கான ஊக்கம் இல்லை என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தானின் நிலைமையும் முழுமையாக மேம்படவில்லை. அங்குள்ள அதிகார மையம் குறித்து தெளிவு இல்லை. எனவே, பாகிஸ்தானின் தற்போதைய நிர்வாகத்துடன் இந்தியா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை. எனவே, இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை” என்றார். இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையால் எஸ்சிஓ மாநாட்டில் எந்தவிதமான இடையூறு ஏற்படுவதையும் தனது “நட்பு நாடுகள்” பார்ப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். பேராசிரியர் பந்த் கூறுகையில், "இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் எஸ்சிஓ மாநாட்டின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாக மற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உணர்வதை இந்தியா விரும்பவில்லை" என்றார். பிரதமரே பாகிஸ்தானுக்கு சென்றிருந்தால் அது வேறு செய்தியைச் சொல்லியிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், பிரதமருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் செல்கிறார், ஆகவே "உயர்மட்டத் தலைமை அளவில் பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா தற்போது தயாராக இல்லை என்பது தெளிவாகிறது," என்றார். "இந்தியா எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் விரும்பவில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான செய்தி. ஆனால், வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது எஸ்சிஓ போன்ற பலதரப்பு அமைப்புகளில் இந்தியா தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தயாராக உள்ளதைக் காட்டுகிறது” என்றார். வாஷிங்டன் டிசியில் உள்ள வில்சன் சென்டர் எனும் சிந்தனை மையத்தில் உள்ள தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன், இருதரப்பு உறவுகளைவிட இந்தப் பயணம் எஸ்சிஓ கூட்டத்திற்கானது என்று நம்புகிறார். மைக்கேல் குகல்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தப் பயணம், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை முன்னேற்றுவதற்கான விருப்பத்தைவிட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், "ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் இருதரப்பு ராஜ்ஜீய உறவைவிட பலதரப்பு ராஜ்ஜீய உறவை அதிகம் வெளிப்படுத்துகிறது என்றாலும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளுக்கான இப்பயணத்தின் முக்கியத்துவத்தையும் புறக்கணிக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் செல்வது முக்கியம் என்கிறார் அவர். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறை என்று அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோதி (கோப்புப்படம்) கடந்த 2016இல் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் சார்க் கூட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். பல நாடுகளுக்கு இந்திய தூதராக இருந்த முன்னாள் தூதர் ராஜீவ் டோக்ரா, ராஜ்நாத் சிங்கின் அந்தப் பயணத்தை நினைவுகூர்ந்தார். பிபிசி இந்தி செய்தியாளர் மோகன்லால் ஷர்மாவிடம் பேசிய அவர், வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் பயணம் இந்தியாவின் தரப்பில் இருந்து பாராட்டுக்குரிய முயற்சி என்றும், ஆனால் பாகிஸ்தானின் நடத்தை குறித்து எதுவும் கூற முடியாது என்றும் கூறினார். கடந்த 2016இல் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்றதை நினைவுகூர்ந்த அவர், அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான், ராஜ்நாத்திடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறுகிறார். பாகிஸ்தானின் நடத்தைக்கு உதாரணமாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ குறித்தும் ராஜீவ் டோக்ரா பேசினார். “பிலாவல் பூட்டோ வந்தபோது அவர் கூறிய கருத்துகள் இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்றதாக இல்லை. அதனால் பேச்சுவார்த்தை அந்த நிலையிலேயே முடிந்தது” என்கிறார். மற்ற நாடுகள் எப்படி எடுத்துக்கொள்ளும்? தற்போது, உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ-வில் அங்கம் பெற்ற நாடுகளில் வாழ்கின்றனர். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகள் 20 சதவீதம் பங்கு வகிக்கின்றன. உலகின் 20 சதவீத எண்ணெய் இருப்பு இந்த நாடுகளில் உள்ளது. இதற்கிடையே, எஸ்சிஓ நாடுகளுக்கு இடையே நிலவும் கொந்தளிப்பை உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை உலகின் பிற நாடுகள் எப்படிப் பார்க்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2017இல் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க வந்த பல நாடுகளின் தலைவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் பந்த், சீனா அல்லது பாகிஸ்தானுடனான அதன் உறவுகள் எதுவாக இருந்தாலும், எஸ்சிஓ கூட்டமைப்பில் தனது பங்கை சாதகமாக முன்வைப்பதே இந்தியாவின் நோக்கம் என்று கூறுகிறார். "இந்தப் பயணம் இந்தியாவுக்கு முக்கியமானது. ஏனெனில் எஸ்சிஓ கூட்டமைப்பில் முழுமையாக ஈடுபட்டு, நேர்மறையான செயல் திட்டத்துடன் முன்னேறும் இந்தியாவின் பங்கைத் தெளிவுபடுத்துகிறது." மேலும், தன்னுடைய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பாகிஸ்தானுடனான உறவை இந்தியா தனது சொந்த நிபந்தனைகளில் பார்க்கும் என, உலக நாடுகளுக்கு இந்தியா தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் கூறுகிறார். பேராசிரியர் பந்த் பிபிசியிடம் பேசியபோது, "இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் எடை போடுவதை உலகம் இப்போது நிறுத்திவிட்டதாக நான் நினைக்கிறேன். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்லும்போது, இந்தியா இப்போது தன்னம்பிக்கை கொண்ட நாடாக முன்னேறி வருகிறது என்பதை உலகமே பார்க்கும். இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நிலையில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. காஷ்மீர் பிரச்னையும் எப்படியோ ஓரங்கட்டப்பட்டது” என்றார். 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை பட மூலாதாரம்,X/DR. S. JAISHANKAR படக்குறிப்பு,எஸ். ஜெய்சங்கர் முன்னாள் தூதரக அதிகாரி கே.பி. ஃபேபியன், இந்தப் பயணத்தை "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையின் அடுத்த கட்டமாகப் பார்க்கிறார். ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் கொள்கை மீண்டும் புத்துயிர் பெறுகிறது. வெளியுறவு துறை அமைச்சர் மாலத்தீவில் மூன்று நாட்கள் தங்கியது நினைவிருக்கும். புதிய இலங்கை அதிபரை சந்தித்த முதல் வெளியுறவு அமைச்சர் அவர். இந்த நாடுகளுக்கு மத்திய அமைச்சர் செல்வது நல்லது" என்றார். இருப்பினும், பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த் இந்தக் கொள்கை 'புத்துயிர் பெறுகிறது' என்பதை முழுமையாக ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. “இந்தியா எப்போதுமே 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' எனும் கொள்கையில் இருந்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து எப்படி விலகியிருக்க முடியும்? அண்டை நாடுகளுக்கான தனது பொறுப்புகளில் இருந்து இந்தியா ஒருபோதும் மாறவில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒருபோதும் இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை” என்றார். ஜெய்சங்கர் எப்படி நடந்துகொள்வார்? கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், பிலாவல் பூட்டோவின் வருகையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பு முடிந்த ஒரு நாளிலேயே இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கூர்மையான கருத்துகளை வெளியிட்டனர். இப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு செல்லும்போது, அவருடைய அணுகுமுறை என்னவாக இருக்க முடியும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ்சிஓ மாநாட்டில் கலந்துகொள்ள கடந்தாண்டு பிலாவல் பூட்டோ இந்தியா வந்தார் இதுகுறித்து பேராசிரியர் பந்த் கூறுகையில், "எஸ்சிஓ மாநாட்டுக்காக அவர் பாகிஸ்தானுக்கு செல்கிறார், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்து விவாதிக்க அல்ல. அம்மாநாட்டில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கர் வலியுறுத்துவார். எனவே, பாகிஸ்தானுடனான இருதரப்பு வேறுபாடுகளை அவர் முன்னிலைப்படுத்துவார் என நான் நினைக்கவில்லை” என்றார். மேற்கொண்டு பேசிய அவர், “மேற்கத்திய நாடுகளுடனான பிரச்னைகள் பேசப்படும்போது எஸ்.ஜெய்சங்கரின் ஆக்ரோஷமான அணுகுமுறை அடிக்கடி வெளிப்படுகிறது. ஆனால் நீங்கள் அண்டை நாடுகளைப் பற்றிப் பேசினால் (பாகிஸ்தான் தவிர), இந்தியாவின் ராஜதந்திரம் மிகவும் நுட்பமானது. இதற்கு மாலத்தீவு மிகப்பெரிய உதாரணம். பிரதமர் மோதியை சமூக ஊடகங்களில் விமர்சித்து, மாலத்தீவில் கொந்தளிப்பு ஏற்பட்ட நேரத்தில், அப்போதும் இந்திய வெளியுறவு அமைச்சகமோ, தலைவர்களோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன் விளைவாக சில மாதங்களுக்குப் பிறகு இந்தியா-மாலத்தீவு உறவுகள் இயல்பு நிலைக்கு வந்தன,” என்று கூறினார். அதேநேரத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நல்லுறவை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ராஜீவ் டோக்ரா உள்ளார். அவர் கூறுகையில், ”அனுபவம் வாய்ந்த ராஜ்ஜீய அதிகாரி மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரான வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்லும்போது, அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். இருநாட்டு உறவுக்கு இடையிலான சிக்கல் உடையும். எனினும் இந்தப் பயணம் எஸ்சி ஓ மாநாட்டுக்கானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்றார். இந்தியா, பாகிஸ்தானுக்கு எஸ்சிஓ கூட்டமைப்பு எவ்வளவு முக்கியமானது? ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முறைப்படி 2001இல் சீனா, ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு மத்திய ஆசிய நாடுகளால் நிறுவப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஜூன் 28, 2019-ல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் எனினும், முன்னதாக 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷாங்காயில் நடைபெற்ற கூட்டத்தில், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர இன மற்றும் மத பதற்றங்களை சமாளிக்க தங்களுக்குள் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன. பின்னர் அது ஷாங்காய்-ஃபைவ் (Shanghai-Five) என்று அறியப்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் 2017ஆம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இரான் 2023ஆம் ஆண்டில் அதன் உறுப்பினரானது. இந்த வகையில் மொத்தம் 9 நாடுகள் எஸ்சிஓவில் உறுப்பினர்களாக உள்ளன. ஆப்கானிஸ்தான், பெலாரூஸ், மங்கோலியா ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த அமைப்பை வழிநடத்தும் ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் நல்லுறவைக் கொண்டுள்ளது. அதுதவிர, மத்திய ஆசிய நாடுகள் என்பதால் பாகிஸ்தானுக்கு முக்கியமானது. மத்திய ஆசியா நிலவியல் ரீதியாக முக்கியமான பகுதி என்பதால், அங்கு வர்த்தகம், இணைப்பு மற்றும் ஆற்றலை மேம்படுத்த பாகிஸ்தான் நினைக்கிறது. அதேநேரத்தில், இது இந்தியாவிற்கு ஒரு பெரிய மூலோபாய தளமாகும். இது அண்டை நாடுகள் மற்றும் மத்திய ஆசியாவுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பந்த் கூறுகையில், "மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் இணைப்பு குறைவாக இருப்பதால், எஸ்சிஓ அதன் பங்கைத் தக்க வைத்துக் கொள்வது முக்கியம்" என்றார். "எனவே, இந்தப் பயணத்தை இருதரப்பு கண்ணோட்டத்தில் பார்க்காமல், பலதரப்பு தளத்தில் இந்தியாவின் ஈடுபாடு மற்றும் ராஜதந்திரமாகப் பார்க்க வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c361zz6zkx9o
  2. இருக்கலாமண்ணை. கோப்பாயில் தான் பிரதேச செயலகம் இருக்கிறு, பிரதேச செயலர் தான் அனுமதி வழங்குபவர். நீர்வேலியில் தான் மதுபானசாலை அமைக்க முயல்கிறார்கள் அண்ணை, பாடசாலை மற்றும் கோவில் அருகில் இருப்பதும் எதிர்க்க காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதிக்குரிய தொழில்களாக சிலவற்றை பார்ப்பதால் இளையவர்கள் வேறு தொழில்களுக்கு செல்கிறார்கள். மதுப்பிரியர்கள் எவ்வளவு தூரம் என்றாலும் சென்று வாங்குவார்கள் அண்ணை.
  3. பொதுத் தேர்தல்; இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்; தேர்தல் ஆணைக்குழு 05 OCT, 2024 | 11:53 AM எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது. அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 01 வேட்பாளரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 15 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15 வேட்பாளர்களும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 06 வேட்பாளர்களும் , அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 1 வேட்பாளரும் , பதுளை மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும் , மொனராகலை மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் , இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் , கேகாலை மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/195533
  4. Published By: DIGITAL DESK 3 05 OCT, 2024 | 09:14 AM கொழும்பு அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி வெள்ளிக்கிழமை (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வீதி திறக்கப்பட்டமையினால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு இலகுவாக பயணிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/195521
  5. ஏமனில் ஹூத்தி இலக்குகளை தாக்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,DVIDS படக்குறிப்பு, ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சி குழுவின் 15 இலக்குகளை தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், செபாஸ்டியன் அஷர் & மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி செய்திகள் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. “கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஏமன் தலைநகர் சானா உள்பட ஏமனின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் முதல் செங்கடலில் ஹூத்தி குழு சுமார் 100 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது, இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. காஸாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஹூத்தி குழு தெரிவித்தது. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட், இந்தத் தாக்குதல்கள் ஹூத்திகளின் ஆயுதக் கட்டமைப்புகள், தளங்கள் மற்றும் இதர உபகரணங்களைக் குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நகரங்களுள் தலைநகர் சானாவும் ஒன்று என ஹூத்திகள் ஆதரவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த கால தாக்குதல்கள் ஏமனில் கடந்த திங்கட்கிழமை எம்.க்யூ-9 எனும் அமெரிக்க தயாரிப்பு ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹூத்தி குழு தெரிவித்தது. அதை அமெரிக்க ராணுவமும் ஒப்புக்கொண்டது. அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஹூத்தி குழு “சிக்கலான தாக்குதலை” மேற்கொண்டதாகவும் ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்தது. ஏமனில் போரிடும் இரு தரப்புக்கும் இடையே சண்டை பெருமளவில் தணிந்ததில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளில் இருந்து சானா தலைநகருக்கு ஓய்வு கிடைத்திருந்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் ஹூத்தி படகுகள் மீது எதிர்த் தாக்குதல் நடத்திய அமெரிக்கா கடற்படை செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களுடன் கூடவே, ஹூத்திகள் இஸ்ரேல் மீது நேரடியாகப் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் டெல் அவிவ் நகரைத் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம், இஸ்ரேல் மீது ஹூத்திகள் பல ஏவுகணைகளை வீசினர். அவற்றில் ஒன்று இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்தது. அந்த இரண்டு தாக்குதலின்போதும் இஸ்ரேல் ஏமனில் உள்ள தளங்களைத் தாக்கி பதிலடி கொடுத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹூத்திகளுக்கு எதிராக செங்கடலில் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் 12 நாடுகள் ‘ஆபரேஷன் ப்ராஸ்பரிட்டி கார்டியன்’ (Operation Prosperity Guardian) எனும் கூட்டமைப்பைத் தொடங்கின. மத்திய கிழக்கில் இரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக ஹூத்தி குழு உள்ளது. லெபனானில் ஹெஸ்பொலா, காஸாவில் ஹமாஸ் ஆகியவையும் இந்த வலையமைப்பின் அங்கமாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg78vvgdrvno
  6. Published By: VISHNU 05 OCT, 2024 | 02:04 AM யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (4) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நீர்வேலிப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை தொடர்ந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவரும் நிலையில் அதனை உடனே நிறுத்துமாறு கோரி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (4) மாலை இந்த ஆர்ப்பாட்டம் எடுக்கப்பட்டது. நீர்வேலி பகுதியில் அத்தியார் இந்துக்கல்லூரி, கந்த சுவாமி கோவில் என்பவற்றிற்கு அருகிலே குறித்த மதுபான சாலை திறக்கப்படவுள்ளதால் பாடசாலை மாணவர்கள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த விடயம் அடங்கிய மகஜர் ஒன்றிணையும் கோப்பாய் பிரதேச உதவி பிரதேச செயலர் சஞ்சீவன் ராதிகாவிடம் பொதுமக்கள் கையளித்தனர். https://www.virakesari.lk/article/195517
  7. Published By: VISHNU 05 OCT, 2024 | 01:57 AM சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் முன்நகர்ந்துள்ளமை தமிழ் அரசியற்பரப்பில் புதிய திருப்பம். கடும்போக்கு சிங்கள – பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தி தெற்கில் வெல்லக் கூடியவராக கணிக்கப்படும் பேரினவாதத்தின் முகவர் வென்றுவிடக் கூடாதென்ற அச்ச நிலையானது பிறிதொரு பேரினவாதத்தின் முகவரிற்கு வாக்களிப்பதற்கு மக்களை வழிநடத்தியிருப்பதும் வெள்ளிடைமலை. சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியத்தை மக்களின் இருப்புக்கானதாக மாற்றியமைப்பதற்கு உளச்சுத்தியோடு முனைந்து விடாத தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை மக்களின் வாழ்வியலில் இருந்து அகற்றி, கட்சிகளின் தேர்தல் கால கோசங்களாக மாற்றியமைத்துள்ளன. தேர்தலில் போட்டியிடுவதையே இலக்காகக் கொண்ட இவர்களின் இயலாமைகள், தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையினை தகர்த்தெறிவதிலும் மக்களின் உயிர்வாழ்தலுக்கு அவசியமற்றதொன்றாக தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதிலும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சிறிலங்கா அரச இயந்திரத்திற்கு பெருமளவு துணைபுரிந்துள்ளன. புதியவற்றை உள்ளீர்த்து முற்போக்குக் கருத்தியலாய்ப் பரிணமிக்கட்டும் தமிழ்த் தேசியம்! தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும். தமிழ் அரசியலானது முன்நகர முடியாமைக்கு அகவயமான முற்போக்கு மாற்றங்களை காலத்திற்குக் காலம் மேற்கொள்ளத் தவறியமையும், எம்மிடையே நிலவும் சில போதாமைகளுமே காரணம். அவ்வாறிருக்கையில் மக்கள் மத்தியில் நிலவும் சில முன்மொழிவுகளை தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை நோக்கி முன்வைக்கின்றோம். சமூக, பொருண்மிய, அரசியல், கல்வி, பண்பாடு, சூழலியல் தளங்களிலிருந்து தமிழ்த் தேசியத்தில் முற்போக்கான, ஆழமான, பரந்த பார்வை கொண்ட செயற்பாட்டாளர்களை, துறைசார் வல்லுனர்களை வேட்பாளர்களாக முன்நிறுத்த முன்வர வேண்டும். இதுவரை காலமும் இரண்டு தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர்கள் தேர்தல் அரசியலிற்கு ஓய்வு கொடுத்து மக்கள் அரசியற் தளத்தில் செயற்பட வேண்டும். 40 - 50 சதவீதத்திற்குக் குறையாமல் இளைவர்களிற்கு வாய்ப்பளிக்க வேண்டும். தமிழ்த் தேசியம் முற்போக்கானதாக நிலைமாற்றம் கொள்வதற்கு பெண்கள், சிறுவர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் உள்ளிட்டோரை பிரதிநிதித்துவம் செய்யக் கூடியவர்களுக்கு வாய்ப்பளித்தல் கட்டாயக் கடமையாகும். வேட்பாளர் தெரிவின் போது உணர்ச்சி நிலையிலிருந்து மட்டும் அணுகுபவர்கள் தவிர்க்கப்பட்டு, தமிழ்த் தேசியத்தை உணர்வுடன் கூடிய அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க கூடியவர்களிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் தேர்தலில் தோற்றவர்களிற்கு வாய்ப்பளித்தல் மக்களாணைக்கு எதிரானதாகும். மேலும் கட்சி உறுப்பினர்கள் என்று பாராமல், கற்றறிந்த செயற்பாட்டாளர்களிற்கு வாய்ப்பளிப்பதற்கு முன்வர வேண்டும். தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை அகவயமான முற்போக்கு மாற்றங்களை நோக்கித் தூண்டுவதும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதிலுமே உண்மையான மாற்றம் தமிழ்த் தேசியப் பரப்பில் தங்கியுள்ளது. இளையோருக்கான பிரதிநிதித்துவம் வழங்குவதில் தனியே வாக்குகளைத் திரட்டக் கூடியவர், கவர்ச்சிகர – பிரமுகர் அரசியல் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்குதல் அல்லது கற்றறிந்தவர் என்று தமிழ்த் தேசிய விடுதலைக்கு அப்பால் சிந்திக்க கூடிய கொழும்பு மைய மேட்டுக்குடி அரசியற் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டவர்களை முன்னிறுத்துதல் என்பவவும் பழைய குருடி கதவைத் திற என்பதற்குச் சமனானது. கிழக்கில் தமிழர் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் காத்திடுவோம்! தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஏற்கனவே இல்லாமற் போய்விட்ட அம்பாறை மற்றும் இல்லாமற் போகக் கூடிய திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழ்த் தேசியக் கட்சிகள் கட்சி வேறுபாடுகள் கடந்து போட்டித் தவிர்ப்பு, விட்டுக் கொடுத்தல் அல்லது இணைந்து போட்டியிடக் கூடிய பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தையாவது காத்திட முன்வர வேண்டுகின்றோம். வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது. இதுபோன்ற நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலிற்குள் சுருக்கும் முயற்சிகளாகும் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இது தாயகத்தில் நிலவும் உரிமைசார் போராட்டங்கள் ஒவ்வொன்றினையும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலிற்குட்பட்டு ஒரு நாடு – ஒரு தேசம் நீரோட்டத்தினுள் வலிந்து இழுத்துச் செல்லும் நுண் அரசியலாகும். வடக்கு – கிழக்கிற்கு வெளியில் போட்டியிடத் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் முயல்வதென்பது தாயக நில ஒருமைப்பாட்டிற்கு அப்பாலானது என்பதோடு, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காகவேயன்றி வெறெதற்குமல்ல. இந்த முயற்சி தாயகத்திற்கு வெளியிலுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைசார் நட்பு சக்திகளை நாம் இழப்பதற்கு வழிகோலும் என்பதனையும் எச்சரிக்கையுடன் பதிவு செய்கின்றோம். தமிழ்த் தேசியப் போலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்! தமிழ் மக்களை அணி திரட்டும் நோக்கில் குடிமக்கள் அமைப்புக்கள் (Civil Society) மற்றும் சில அரசியல் கட்சிகளால் கூட்டாக இணைந்து நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுதல், கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மீள மேற்கொள்வதைத் தவிர்த்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே நிறுத்தப்பட்டார். தமிழ்ப் பொது வேட்பாளரிற்கு அவரை முன்நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கு அப்பால் பல குடிமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தேசத்திரட்சிக்காக பணியாற்றின என்பதோடு, மக்களும் தமிழர் தேசம் என்ற அடிப்படையிலே தங்கள் வாக்குகளை அளித்தார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது. பொது வேட்பாளரிற்காக வழங்கப்படும் கட்சிச் சின்னம் அடுத்து வரும் சில தேர்தல்களிற்கு பயன்படுத்தக் கூடாது எனும் குடிமக்கள் அமைப்புக்களின் அறம் சார் நிபந்தனைகளை அரசியற்கட்சிகள் எவையும் ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் சுயேட்சையாக வேட்பாளர் களமிறக்கப்பட்டார் என்பது அறியக்கூடியதாகவுள்ளது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்பட்ட தரப்புக்களில் குடிமக்கள் சமூகங்களினதும் (Civil Society) ஏனைய கட்சிகளினதும் உடன்பாடுகள் ஏதுமின்றி தங்களிற்கிருந்த அறம்சார் கடப்பாட்டினை மீறி மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் கூட்டணியொன்று தேர்தல் ஆணைக்குழுவில் பொது வேட்பாளரின் சின்னத்தினைக் கோரிப் பெற்றுள்ளது. குடிமக்கள் சமூகங்களின் கூட்டிணைவிற்குள் (Civil Society) செயற்படும் சிலர் தங்கள் சிந்தனைகளோடு குடிமக்கள் சமூகத்தினரை நகர்த்திச் செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது. தொடர்ந்தும் மக்களை மடையர்கள் என்றெண்ணிச் செயலாற்றும் இதுபோன்ற அறம் பிழைத்தவர்களை மக்கள் நாங்கள் தோலுரித்தல் அவசியமாகும். தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக் கேலிக்குரியதொன்றாக்கியுள்ளதோடு, தொடர்ந்தும் மக்களையும் உழைத்த தரப்புக்களையும் ஏமாற்ற முயலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். இது போன்ற தமிழ்த் தேசியப் போலிகள் மக்களிடையே தமிழர் தேசத்திரட்சியின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தையும் தகர்த்தெறிந்து தென்னிலங்கைக் கட்சிகளை நோக்கி மக்களை நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியத்தின் பெயரால் முயன்று கொண்டிருக்கின்றன. சில தமிழ்த் தேசியப் போலிகள் அரச தலைவர் தேர்தலில் ஒரு பக்கம் தென்னிலங்கைக் கட்சிகளுடன் இருட்டு ஒப்பந்தமும், மறுபக்கம் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக பொது வேட்பாளர் தரப்புடன் இணைந்து கொண்டிருந்தமையினையும் யாரும் அறியாமலில்லை. அதற்காக உழைக்காத தரப்புக்கள் அரசியல் சூழ்ச்சிகளினால் இன்று பொது வேட்பாளரின் சின்னத்தைக் கைப்பற்றுவதனூடாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாணை பெற பகற்கனவு காணுகின்றன. பொது வேட்பாளரின் சின்னம் தற்பொழுது அவரை நிறுத்திய தரப்புக்களுடையதல்ல, வேறு கட்சிகளினுடையது என்பதனை அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். புதிய அரசியற் பண்பாட்டினால் மேலேழட்டும் தமிழர் தேசம்! தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்படாமையும் தேசமாய் அணி திரட்டப்படாமையுமே அனைத்துத் தளங்களிலும் பலவீனப்பட்ட மக்களாய்ப் போகக் காரணம். தமிழ் மக்களின் அரசியல் தனியே அடையாளத்திற்கானதன்று; அது இறைமைக்கானது. தமிழ்த் தேசியம் என்பது வாழ்க்கை முறை, அதனை தேர்தல்க் கால வெற்றுக் கோசமாக மாற்றியமைத்தது சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலிற்கு துணை போன தமிழ் அரசியற் கட்சிகளே! நாங்கள் எமது தாயகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்காமையும், ஆதிக்க சக்திகளையும் பகை முரண்களையும் கையாள்வதில் உரிய தந்திரோபாயங்களை வகுக்காமையுமே அவர்களிடமே சரணாகதியடைந்த தமிழ் அரசியலினால் இதுவரைகாலமும் விளைந்ததொன்று. அகவயமாக முற்போக்கு அம்சங்களைக் கொண்ட புதிய மாறுதல்களிற்குத் தமிழ்த் தேசிய அரசியல் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையைச் சிதைப்பதற்கு தமிழ்த் தேசிய போலிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டினை அறிவுபூர்வமாக விழிப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அனைவரையும் சமூகப் பொறுப்புடன் வேண்டி நிற்கின்றோம். நன்றி https://www.virakesari.lk/article/195516
  8. நியூசிலாந்தின் ரன் குவிப்பால் திணறிய இந்திய அணி - நெருக்கடியில் இருந்து மீள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் துபாயில் நேற்று நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியடைந்து இந்திய அணி நெருக்கடியில் சிக்கியுள்ளது. நியூசிலாந்து அணி 2024ஆம் ஆண்டில் 11 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று 10 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்தது. தற்போது அந்தத் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இரு பயிற்சி ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி நேற்று பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பலாக ஆடினர். அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் பெரும்பாலான பேட்டர்கள் 22 யார்ட் வட்டத்தைக் கடந்து பந்தை அடிக்காமல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. 161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து 58 ரன்களில் மோசமாகத் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் ரன் குவிப்புக்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்த கேப்டன் சோபி டிவைன்(57ரன்கள்) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் ஏ பிரிவில் இந்திய அணி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு நிகர ரன்ரேட்டில் மைனஸ் -2.900 என்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. இந்திய அணி அடுத்து மோதக்கூடிய பாகிஸ்தான்(நாளை), ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். ஏனென்றால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வெல்வது எளிதானது அல்ல, பாகிஸ்தான் அணி நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை வென்று கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதால் நாளை கடினமான போராட்டத்தை இந்திய அணிக்கு எதிராக வெளிப்படுத்தலாம். ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு கணக்குத் தீர்க்க இலங்கையை வெல்ல வேண்டும். இந்திய அணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சவாலாக இருந்தாலும் வென்றுவிடும் என்று கூறலாம். ஆனால், 6 முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வெல்வதுதான் மிகக் கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நிகர ரன்ரேட்டில் இந்திய அணி மைனஸில் இருப்பதால், இந்திய அணி பெறும் வெற்றி அதை உயர்த்து வகையிலும் அமைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. ஆட்டநாயகி டிவைன் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன். கடைசி நேரத்தில் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இறுதிவரை டிவைன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 15வது ஓவரில்தான் நியூசாலந்து அணி 100 ரன்களை எட்டியது. இதனால் 130 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து சேர்க்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இந்திய மகளிர் அணி வீசிய 5 ஓவர்களை டிவைன் வெளுத்து வாங்கி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்குத் துணையாக ஜார்ஜியா பில்மர்(34), சூசி பேட்ஸ்(27) ஆகியோரும் ரன்கள் சேர்த்ததால் நியூசிலாந்து பெரிய ஸ்கோரை எட்டியது. அடுத்துவரும் போட்டிகள் முக்கியம் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறுகையில் “எங்களின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. அடுத்து வரும் ஆட்டம் ஒவ்வொன்றும் முக்கியம் என்பதை அறிந்து முன்னேறுவோம். வாய்ப்புகளை உருவாக்கியும் அதை நாங்கள் பயன்படுத்த முடியவில்லை," என்று தெரிவித்தார். தங்களைவிட நியூசிலாந்து வீராங்கனைகள் சிறப்பாக ஆடியதாகக் குறிப்பிட்ட ஹர்மன்ப்ரீத், "ஃபீல்டிங்கிலும் நாங்கள் பல தவறுகளைச் செய்தோம். 160 ரன்களை பலமுறை சேஸ் செய்துள்ளோம், ஆனால், இப்போது முடியாதது குறித்து ஆலோசிப்போம். நல்ல தொடக்கம் அமையவில்லை, சீராக விக்கெட்டை இழந்தது, ஒரு பேட்டர்கூட நிலைத்து ஆடாதது தோல்விக்கான காரணமாக அமைந்தது,” எனத் தெரிவித்தார். இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியினர் சிறப்பாகப் பந்து வீசவில்லை. பவர்ப்ளே ஓவர்களுக்குள் நியூசிலாந்து அணியை 55 ரன்கள் சேர்க்கவிட்டனர். முதல் இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இந்திய அணி வீழ்த்தினாலும் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். அது மட்டுமல்லாமல், முக்கிய விக்கெட்டுகளை எடுக்காமல் விட்டதும் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தது. குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியினர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரன்களை வாரி வழங்கியதுதான் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினார். தீப்திக்கு இரு ஓவர்களை குறைத்துவிட்டு பூஜாவுக்கு வழங்கியிருக்கலாம். பேட்டிங்கிலும் இந்திய மகளிர் அணியினர் போதுமான போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசாலந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சையும், பந்துவீச்சில் துல்லியத்தையும் இந்திய மகளிர் அணியினரால் சமாளிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் ரோஸ்மேரி 4 விக்கெட்டுகளையும், லீ தஹுகு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர், லெக் ஸ்பின்னர் ஈடன் கார்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வலிமையான பேட்டர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கார்ஸன் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஷஃபாலியும், ஸ்மிருதியும் ஆட்டமிழந்தபின் இந்திய அணியினர் நம்பிக்கையிழந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 15 ரன்கள்தான், உதரி ரன்களான 13 ரன்கள் அதற்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சேர்த்த 15 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற வகையில் ஷஃபாலி(2), ஸ்மிருதி(12), ரோட்ரிக்ஸ்(13), ரிச்சா கோஸ்(12) எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த 18 மாதங்களில் முதல்முறையாக இப்போது 3வது வரிசையில் பேட் செய்து அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. நடுவரிசையில் களமிறங்கி வந்த ஹர்மன்ப்ரீத்தை 3வது வரிசைக்கு உயர்த்தியது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியினர் தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருகுள் 43 ரன்கள் எடுப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்தது. ஆனால், அடுத்த 12 ரன்கள் சேர்ப்பதற்குள் கூடுதலாக 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இப்படி 75 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. 11 முதல் 19 ஓவர்களில் இந்திய அணியால் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, அதோடு மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. சவாலான டிவைன் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கியது நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் பேட்டிங். இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் டிவைன் டாப் ஆர்டரில் களமிறங்கி ஆடிய நிலையில் இந்த உலகக்கோப்பையில் நடுவரிசையில் களமிறங்கி அணிக்கு நங்கூரம் பாய்ச்சினார். இந்த ஆண்டில் 11 டி20 போட்டிகளில் டிவைன் ஆடியிருந்தாலும், இவரின் சராசரி 21 ரன்கள் என சுமாராகவே இருக்கிறது, இரு அரைசதங்கள் மட்டுமே அடித்திருந்தார். அதிலும் கடைசி 5 போட்டிகளில் டிவைன் 5, 12, 4, 5 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், டிவைனின் ஆட்டம் நேற்றைய போட்டியில் கடந்த காலப் போட்டிகளைப் போல் இருக்கும் என நினைத்த இந்திய அணிக்குப் பெரிய அதிர்ச்சியையும், சவாலையும் அவர் அளித்தார். ஏழு ஓவர்களாக நியூசிலாந்து அணி பவுண்டரி அடிக்காமல் திணறிய நிலையில் இந்திய அணியின் ஆஷா ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து டிவைன் ஃபார்முக்கு திரும்பினார். ரேனுகா சிங் வீசிய 15வது ஓவரிலும் டிவைன் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி ரன்களை சேர்த்து, 21வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் ஃப்ரூக் ஹாலிடேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டிவைன் 26 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலாக இருந்தார். எடுபடாத இந்திய அணியின் உத்தி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டில் டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. மொத்தம் 6 பந்துவீச்சாளர்கள் என்ற உத்தியைக் கையில் எடுத்து சுட்டுக்கொண்டது. வஸ்த்ராக்கர், ரேணுகா, அருந்ததி ரெட்டி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களைச் சேர்க்க, இந்த ஆண்டின் 2வது சிறந்த பந்துவீச்சாளர் எனப் பெயரெடுத்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவை களமிறக்கவில்லை. ஆறு பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்பதால், பேட்டிங்கில் பலம் குறைந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3வது வரிசையிலும், ரோட்ரிக்ஸ் 4வது இடத்திலும், கோஸ் 5வது இடத்திலும் களமிறக்கப்பட்டனர். ஆனால், கீழ் வரிசையில் எந்த பேட்டரும் இல்லாமல் போனதால் கடைசி நேரத்தில் இந்திய அணியால் ரன் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. துபாய் ஆடுகளத்தில் 161 ரன்களை சேஸ் செய்வது கடினமானது. அதிலும் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தபோதே ஏறக்குறைய தோல்வியின் பிடிக்குள் சிக்கிவிட்டது. ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்குக்கூட போராடி ரன்களை சேர்த்திருக்கலாம். ஆனால், கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லாததால் அதையும் செய்ய முடியவில்லை. சர்ச்சைக்குரிய ரன்-அவுட் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீராங்கனைகள் டிவைன், கெர் இருவரும் 2வது ரன்னுக்கு முயலும்போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரால் ரன்-அவுட் செய்யப்பட்டனர். ஆனால், அதை நடுவர்கள் அன்னா ஹாரிஸ், ஜேக்குலின் வில்லியம்ஸ் இருவரும் டெட்பால் என அறிவித்தனர். இதனால் நடுவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதாவது, தீப்தி ஷர்மா 14வது ஓவரின் கடைசிப் பந்தை வீசினார். அந்தப் பந்தைத் தட்டிவிட்டு டிவைன், கெர் இருவரும் ஒரு ரன் ஓடினர். ஓவரும் முடிந்துவிட்டதால், நடுவரும் தீப்தியிடம் தொப்பியை வழங்கினார். ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை ஃபீல்டிங் செய்து கையில் வைத்திருந்தார். அப்போது திடீரென டிவைன், கெர் இருவரும் 2வது ரன்னுக்கு முயற்சி செய்து ஓடினர். இதைப் பார்த்த ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை எடுத்து ஸ்டெம்பை நோக்கி எறிய அதைப் பிடித்த ரிச்சா கோஸ் கெர் க்ரீஸுக்குள் வருவதற்குள் ரன்-அவுட் செய்தார். ஆனால், நடுவர்கள் இது ரன்அவுட் இல்லை, ஓவர் முடிந்து பந்துவீச்சாளரும் தொப்பியைப் பெற்றுக்கொண்டதால் இது டெட்பால் என அறிவித்தனர். ஆனால், நடுவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதம் செய்ததால் 7 நிமிடங்கள் வரை ஆட்டம் நின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm28v7l4jelo
  9. ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக பொது வெளியில் தோன்றிய இரான் தலைவர் - முஸ்லிம் நாடுகளிடம் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,EPA ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில், இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இரானின் 'எதிரிகள்', இஸ்லாமிய உலகில் பிரிவினைக்கு வித்திடுவதாக குற்றம் சாட்டிய அவர் அதற்கு கண்டனம் தெரிவித்தார். கூடவே இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் அவர் நியாயப்படுத்தினார். அயத்துல்லா இந்த உரையை ஆற்றிய போது, மொசல்லா மசூதியில் அவரது பேச்சைக் கேட்பதற்காக பெரும் கூட்டம் கூடியிருந்தது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை நினைவு கூர்ந்து காமனெயி தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக 2020-ஆம் ஆண்டில் இரான் புரட்சிகர காவலர் படையின் (ஐஆர்ஜிசி) ஜெனரல் காசிம் சுலேமானியை அமெரிக்கா கொன்றபோது அயதுல்லா அலி காமனெயி வெள்ளிக்கிழமை தொழுகையில் உரையாற்றினார். அதற்கு முன் 2012-ஆம் ஆண்டிலும் காமனெயி இதே போல உரையாற்றியுள்ளார். நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பதிலடியாக இரான் செவ்வாய் இரவு இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதையடுத்து, இரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாலத்தீன நிர்வாகம் மற்றும் லெபனான் உள்ளிட்ட பிற முஸ்லிம் நாடுகளின் எதிரிகள், இரானுக்கும் எதிரிகள் என்று காமனெயி தனது உரையில் கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் காமனெயின் உரையை கேட்க மக்கள் திரண்டிருப்பதைக் காட்டுகிறது தேவைப்பட்டால் முன்பு போலவே தாக்குதல் நடத்தப்படும் ''எங்கள் ராணுவத்தின் இந்த அற்புதமான பணி முற்றிலும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒன்று. அது நியாயமானதும் கூட," என்று காமனெயி தனது உரையில் குறிப்பிட்டார். ”ஆக்கிரமிப்பு கொள்கையைப் பின்பற்றும் சியோனிச ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் குற்றங்களுக்கு நமது ஆயுதப் படைகள் அளித்தது குறைந்த பட்ச தண்டனைதான்,” என்றார் அவர். இந்த விஷயத்தில் இரான் தனது கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார். ”இந்தப் பணியை முழு பலத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிப்போம். இந்தப் பணியை முடிப்பதில் நாங்கள் தாமதிக்க மாட்டோம், அவசரமும் படமாட்டோம்,” என்றார் அவர். ”தேவைப்பட்டால், அரசியல் மற்றும் ராணுவ விஷயங்களில் முடிவெடுப்பவர்களின் தீர்மானத்தின்படி முன்பு எடுக்கப்பட்ட அதே நியாயமான முடிவு எடுக்கப்படும்" என்றார் காமனெயி. காமனெயி உரைக்கு முன்பாக நஸ்ரல்லாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்திய காமனெயி, "நஸ்ரல்லா எனது சகோதரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகவும், என்னுடைய பெருமையாகவும் இருந்தார். இஸ்லாமிய உலகிற்கு பிடித்த நபராக அவர் இருந்தார். அவர் லெபனானின் ஒளிரும் வைரமாக இருந்தார்,” என்று குறிப்பிட்டார். இஸ்ரேலிய தாக்குதலில் நஸ்ரல்லா இறந்ததைத் தொடர்ந்து காமனெயி இரானில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில ஊடக செய்திகள் தெரிவித்தன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலில் விழுந்த இரானிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் ஒரு பகுதி நஸ்ரல்லாவின் கொலைக்குப் பிறகு சூளுரைத்த ஹிஸ்புல்லா-ஹமாஸ் லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட பல ஹெஸ்பொலா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. சில மணிநேரங்களுக்கு பிறகு, நஸ்ரல்லா இறந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கை ஹெஸ்பொலாவிடமிருந்து வந்தது. அதேசமயம் இஸ்ரேலுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்வது குறித்து ஹெஸ்பொலா பேசியது. ஹெஸ்பொலாவின் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "எங்கள் போர் ஹெஸ்பொலாவுக்கு எதிரானது, லெபனான் மக்களுக்கு எதிரானது அல்ல,” என்று கூறினார். அவர் நஸ்ரல்லாவை 'இஸ்ரேலின் மிகப்பெரிய எதிரிகளில் ஒருவர்' என்று விவரித்தார். மறுபுறம் இரங்கல் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு, "நாங்கள் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுடன் நிற்கிறோம்" என்று கூறியது. காமனெயி என்ன செய்தியை தெரிவிக்க முயன்றார்? பிபிசி செய்தியாளர்கள் ஷாயென் சர்தாரிஸ்தே மற்றும் குன்ஷே ஹபிபியாசாத் ஆகியோரின் பகுப்பாய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெனரல் காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு அயதுல்லா அலி காமனெயி ஆற்றிய உரையைப் போலவே தற்போதைய உரையும் கருதப்படுகிறது. அமெரிக்கத் தாக்குதலில் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார். தெஹ்ரானின் மையத்தில் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் ஆற்றிய இந்த உரையின் மூலம் காமனெயி, இரானின் வலிமையை உலகிற்குக் காட்டியதுடன், தனது நாட்டு மக்களை சமாதானப்படுத்தவும் முயன்றார். உண்மையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா மற்றும் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து காமனெயி தனது உயிருக்கு பயப்படுவதாக வெளியான செய்திகளை மறுக்கும் முயற்சியாக அவர் ஒரு பொது மேடையில் தோன்றினார். ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சி என்றும் இதைக்கூறலாம். இந்த உரையின்போது இரானின் புதிய அதிபர் மசூத் பெஜேஷ்கியன் மற்றும் அரசின் முக்கிய தலைவர்களும் அங்கு இருந்தனர். இரானும் இஸ்ரேலும் தங்கள் பகையை ஏதோ ஒரு இடத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மசூத் பெஜேஷ்கியன் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த கருத்து காரணமாக அவர் அடிப்படைவாதிகளின் விமர்சனத்திற்கு ஆளானார். இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக பிராந்தியத்தில் இரானுக்கு இருக்கும் ஆதரவு பாதிக்கப்படும் என்ற அச்சத்தையும் காமனெயி நிராகரித்தார். அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அவர் மீண்டும் ஒருமுறை நியாயப்படுத்தினார். ஹனியா மற்றும் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகும் இரான் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்துப் போரிடும் என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq640gq1rnvo
  10. 04 OCT, 2024 | 08:11 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம் மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாடு இறைமை ஆகியவற்றை பேணும் அதேவேளை தொடர்பில் தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் நீதி கௌவரம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளிற்கு இந்தியா ஆதரவளிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவம், மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதும் இந்த நோக்கங்களை அடைய உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த இந்தியாவின் கரிசனையை வெளியிட்டார்,அவர்களையும் அவர்களின் படகுகளையும் கூடிய விரைவில் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார், மேலும் அவர்களிற்கு எதிராக பெரும் அபராதத்தை விதிப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195512
  11. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு 04 OCT, 2024 | 08:28 PM இலங்கை ஜனாதிபதியை இருதரப்பிற்கும் பொருத்தமான திகதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195514
  12. Published By: VISHNU 04 OCT, 2024 | 09:25 PM பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த தெரிவுகள் யாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளிக்கிழமை (4) மன்னார் வருகை தந்து வேட்பாளர்களை இறுதி நிலைப் படுத்தியதாக தெரிய வருகிறது. எம்.ஏ.சுமந்திரன் மன்னார் கட்சி அலுவலகம் வருகை தந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தேர்தலுக்கான செலவுகள் பற்றியும் பேசப்பட்டது. இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளார். அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், மன்னாரின் இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகிய மூவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தெரிய வருகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இத் தேர்தலில் இருந்து நான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195515
  13. சாம்சங் ஊழியர் தொழிற்சங்கம் தொடங்க நிர்வாகம் அனுமதி மறுப்பது ஏன்? ஐந்துமுறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி படக்குறிப்பு, இந்திய அரசின் சட்டங்களை நிறுவனம் மீறுவதாக சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 அக்டோபர் 2024, 09:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 25 நாள்களைக் கடந்தும் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "இந்திய அரசின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான் பிரச்னை நீடிக்க காரணம்" எனக் கூறுகின்றனர் தொழிலாளர்கள். ஆனால், ஊதியம், பணிச்சூழல், சலுகை என தொழிலாளர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தயாராக உள்ளதாகக் கூறுகிறது, சாம்சங் இந்தியா நிறுவனம். சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஐந்து முறை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்? தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வது ஏன்? காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டாவிலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் தொடர் தோல்வி ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. "வேலை நிறுத்தம் நீடிக்கக் காரணம், இந்திய நாட்டின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான்," என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார். "அவர்களின் பிடிவாதத்துக்கு தமிழக அரசும் ஆதரவு கொடுப்பதாக" அவர் தெரிவிக்கிறார். 'சங்கம்' என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு "இரு தரப்பும் சுமூக உடன்பாட்டுக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை முக்கியம். அதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் உடன்பட மறுக்கிறது" என்கிறார் முத்துக்குமார். சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், இரண்டு வழக்குகளை சாம்சங் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ளது. ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது. தொழிற்சங்க பதிவு தொடர்பாக சி.ஐ.டி.யு தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய முத்துக்குமார், "முதல் இரண்டு வழக்குகளில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை எதிர்த்தரப்பாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எங்கள் வழக்கிலும் 'சங்கம்' என்றே கூறியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையில் 'சங்கம்' என்ற வார்த்தையை ஏற்கவே மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்" என்கிறார். "இந்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களை அரசுத்துறை முன்னிலையிலேயே சாம்சங் இந்தியா நிறுவனம் மறுக்கிறது. இதனால் தொழில் அமைதி சீர்குலைவதாக" குற்றம் சாட்டுகிறார் முத்துக்குமார். 'எட்டு நாள் சம்பளம் தர மறுப்பு' சாம்சங் இந்தியாவில் தற்போது 60 சதவீதம் அளவு உற்பத்தி நடப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறும் முத்துக்குமார், "75 சதவீத தொழிலாளர்கள் வெளியில் உள்ளனர். அதையும் மீறி உற்பத்தி நடப்பது சட்ட விரோதம்" என்றார். "கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்திலும் இதையேதான் செய்தார்கள். அவர்கள் நாட்டில் சட்டத்தை மீறுவது அவர்கள் விருப்பம். இந்தியா போன்ற நாட்டில் சட்டங்களை மீறுவது சரியல்ல" என்கிறார். சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக செப்டம்பர் 9ஆம் தேதி முதல் பணி புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாக, செப்டம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரையிலான சம்பளத்தைத் தர நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறுகிறார், முத்துக்குமார். இதற்கிடையில், கடந்த 1ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இவர்களில் 900க்கும் மேற்பட்டோரை விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று உண்ணாவிரத போராட்டத்தையும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். தொழிற்சங்க சட்டம் சொல்வது என்ன? இந்திய அரசின் சட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மீற முடியுமா என்று மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)(c)இன்படி அடிப்படை உரிமைகளில் ஒன்று," எனத் தெரிவித்தார். "இந்திய தொழிற்சங்க சட்டம் 1926இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தால் சங்கத்தைப் பதிவு செய்யலாம். தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பதவிகளை உருவாக்க வேண்டும். சங்கத்துக்கான துணை விதிகளையும் ஏற்படுத்த வேண்டும்," என்று விளக்கினார் சத்தியசந்திரன். "ஆலைகளில் சங்கத்தைத் தொடங்குவது பிரச்னை இல்லை. ஆனால், புதுப்பிக்கும்போது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்று விதி சொல்கிறது" என்கிறார் சத்தியசந்திரன். "இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நாட்டின் சட்டங்கள் பொருந்தும்" எனக் கூறும் சத்தியசந்திரன், "சட்டம் தெளிவாக இருப்பதால்தான் சாம்சங் இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது" என்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, தொழிற்சாலைகளில் சங்கம் தொடங்குவதற்கான அனுமதி எளிதாகக் கிடைப்பதில்லை என்கிறார் சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலர் எஸ்.கண்ணன். "ஆலையில் சங்கம் தொடங்குவதற்கு அரசின் தொழிற்சங்கப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்பேரில 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அவ்வளவு எளிதில் அனுமதி கிடைப்பதில்லை" என்கிறார், சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலர் எஸ்.கண்ணன். சங்கத்தின் பெயரில் 'சாம்சங்' என்ற பெயரை வைத்திருப்பதற்கு அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆனால் கொரியாவில் 'நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன்' என்ற பெயரில்தான் சங்கம் செயல்படுவதாகவும் கூறுகிறார், எஸ்.கண்ணன். "தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் தொழிலாளர்களின் கோரிக்கையை சாம்சங் ஏற்க மறுப்பது சரியல்ல" என்கிறார் எஸ்.கண்ணன். காஞ்சிபுரத்தில் 'சாம்சங்' மட்டும் தான் பிரச்னையா? சாம்சங் இந்தியா நிறுவனத்தைப் போலவே, காஞ்சிபுரத்தில் சில நிறுவனங்களில் யூனியன் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறுகிறார், எஸ்.கண்ணன். "யமஹா, ஜே.கே.டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உள்பட 30க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை அங்கீகரித்துள்ளன" என்கிறார் எஸ்.கண்ணன். யமஹா நிறுவனத்தில் 55 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த பிறகே சங்கம் தொடங்க அனுமதி கிடைத்ததாகக் கூறும் எஸ்.கண்ணன், "இப்போது வரை யமஹா நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. சங்கம் சுமூகமாகச் செயல்படுகிறது" என்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பதில் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இரு தரப்புக்கும் இடையே சுமூகமான தீர்வவை எட்ட முயன்று வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகிறார். சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் குறித்து, தொழிலாளர் நலத்துறையின் காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆணையர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "கடந்த 27ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. வரும் 7ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. அதன் பின்னரே நிலவரம் தெரிய வரும்" என்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "சட்டத்தை மதிக்காமல் எந்த நிறுவனமும் இருக்க முடியாது. அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் சுமூகமான தீர்வைக் கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்" என்கிறார். சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக அரசு செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சி.வி.கணேசன், "துறையின் பெயரே தொழிலாளர் நலத்துறையாக உள்ளபோது, நிர்வாகத்துக்கு சாதகமாக எப்படிச் செயல்பட முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு வரும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறும் அமைச்சர் சி.வி.கணேசன், "நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும். அதேநேரம், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இரு தரப்புக்கும் எந்த பாதகமும் இல்லாமல் விரைவில் சுமூக தீர்வை ஏற்படுத்துவோம்" என்றார். "போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது தொழிலாளர்களின் கைகளில்தான் உள்ளது" என்கிறார், காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபன். "இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா தலைமையகத்துக்கு உங்கள் கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்" எனவும் பார்த்திபன் கூறினார். இதையடுத்து, தொழிலாளர்கள் முன்வைக்கும் குற்றற்சாட்டுகள் தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் சார்பில் கேள்விகளை அனுப்பினோம். சாம்சங் இந்தியா சொல்வது என்ன? இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தின் 'செய்தித் தொடர்பாளர்' விரிவான விளக்கத்தை அனுப்பியுள்ளார். இந்திய சட்டங்களை மீறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள சாம்சங் இந்தியா நிறுவனம், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது. "சென்னையில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளம் என்பது மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தைவிட 1.8 மடங்கு அதிகம்" எனக் குறிப்பிடுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர். கூடுதல் நேரம் பணிபுரிவதற்கான ஊதியம், இரவுநேர பேருந்து வசதி, உணவு, சுகாதாரம், பணியிடப் பாதுகாப்பு, ஊழியர் நலன் ஆகியவற்றில் உயர்ந்த தரத்தைக் கொடுத்து வருவதாகவும் பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. "இது அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த தரத்தில் உள்ளது எனத் தாங்கள் நம்புவதாக" சாம்சங் இந்தியா கூறுகிறது. "சாம்சங் இந்தியாவில் ஊழியர்களின் சராசரி பதவிக்காலம் என்பது 10 ஆண்டுகளாக உள்ளது எனவும் அவர்களின் பணி திருப்திக்கு இதுவே சான்று" எனவும் சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். 'தீர்வு காண்பதில் உறுதியாக இருக்கிறோம்' - சாம்சங் இந்தியா செப்டம்பர் மாதம் 8 நாள்களுக்கான பணி ஊதியத்தைத் தர மறுப்பது குறித்த கேள்விக்கு, "வேலை இல்லை, ஊதியம் இல்லை என்ற கொள்கையின்படி, சட்டவிரோத வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்பதை தொழிலாளர்களிடம் தெரிவித்து விட்டோம்" என சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உற்பத்தி பாதிப்பு குறித்த கேள்விக்கு, "சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி சீராக நடந்து வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளர். ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர், "சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் இருந்து வேலைக்குத் திரும்புமாறு தொழிலாளர்களிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" எனவும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த இடத்திலும் சங்கம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் கூறவில்லை. சாம்சங் இந்தியாவின் விளக்கத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் (சி.ஐ.டி.யு) முத்துக்குமார். "வேறொரு நிறுவனத்தைவிட அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறுவது உண்மையல்ல. காஞ்சிபுரத்தில் 1800 ஊழியர்களுக்கான சராசரி சம்பளம் என்பது 32 ஆயிரமாக உள்ளது. இது இங்குள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு" என்கிறார் முத்துக்குமார். "சம்பளம் அதிகம் எனக் கூறும் சாம்சங் இந்தியா நிர்வாகம், பொருள் உற்பத்தியில் சம்பளத்தின் சதவீதம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக வெளியிடுமா?" எனவும் முத்துக்குமார் கேள்வி எழுப்பினார். "காஞ்சிபுரம் சாம்சங் இந்தியாவில் ஆண்டு சம்பள உயர்வு என்பது 10% அளவுகூட இல்லை. கொரியாவில் தொழிலாளியின் சம்பளம் என்பது லட்சக்கணக்கில் உள்ளது. இந்தியாவில் மலிவு சம்பளத்தில் தொழிலாளர்களை சாம்சங் பயன்படுத்திக் கொள்வதாக" கூறுகிறார் முத்துக்குமார். இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. "அடுத்தகட்டமாக, இதர தொழிற்சாலை பணியாளர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம்" எனக் கூறும் முத்துக்குமார். "எந்த உரிமைக்காக தொழிலாளர்கள் போராடுகிறார்களோ அது அனைவருக்கும் பொதுவானது. இப்போது குரல் கொடுக்காவிட்டால் நாளை அவர்களுக்கும் பிரச்னை வரலாம்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c870lg58qjdo
  14. 04 OCT, 2024 | 06:31 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களைத் தற்காலிகமாக முடக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதித் திட்டங்களை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை தற்காலிகமாக முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195495
  15. ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்; இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு 04 OCT, 2024 | 04:09 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன். இந்திய குடியரசுதலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்துச்செய்திகளை தெரிவித்தேன். இந்திய இலங்கை உறவுகளிற்கான அவரது அன்பான உணர்வுகளிற்கும்,வழிகாட்டுதல்களிற்கும் பாராட்டுக்கள். தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இருநாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தோம். https://www.virakesari.lk/article/195481
  16. பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமன பத்திரம் தாக்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பம்! 04 OCT, 2024 | 03:24 PM எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (04) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ஜேஜே முரளிதரன் தெரிவித்தார். மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட சிகிச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இன்று முதலாவது நியமன பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கை இடம் பெற்றது மோகன் டிலான் என்பவரின் தலைமையில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்வற்காக எட்டு பேர் போட்டியிடுகின்றனர் நான்கு லட்சத்தி 49,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் தேர்தல்கள் இடம் பெற உள்ளன. 442 வாக்கு அளிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கை ஆரம்பமானது தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/195473
  17. பந்துவீச்சில் மிலாபா, துடுப்பாட்டத்தில் லோரா, தஸ்மின் அபாரம்; மெற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்தது தென் ஆபிரிக்கா Published By: VISHNU 04 OCT, 2024 | 07:02 PM (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா மிக இலகுவாக வெற்றிகொண்டது. ஒருபக்க சார்பாக அமைந்த அப் போட்டியில் நொன்குலுலேக்கோ மிலாபாவின் துல்லியமான பந்துவீச்சும் அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் தென் ஆபிரிக்காவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 119 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 119 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. லோரா வுல்வாட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 119 ஓட்டங்கள் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இப்பொதைக்கு பதிவாகியுள்ளது. அத்துடன் இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீராங்கனைகள் என்ற பெருமையை அவர்கள் இருவரும் பெற்றுக்கொண்டனர். லோரா வுல்வார்ட் 55 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 59 ஓட்டங்களுடனும் தஸ்மின் 52 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள் உட்பட 57 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது. இவ் வருட உலகக் கிண்ணத்தில் முதல் 3 ஆட்டங்களில் இதுவரை முதலில் துடுப்பெடுத்தாடிய 3 அணிகளும் 120 ஓட்டங்களுக்கு குறைவாகவே எடுத்துள்ளன. மேற்கிந்திய தீவுகளின் வீராங்கனைகள் ஓட்டங்களை வேகமாக பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர். துடுப்பெடுத்தாடிய அனைவரும் பெரும்பாலும் ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் என்ற ரீதியில் ஓட்டங்களைப் பெற்றனர். ஸ்டெபானி டெய்லர், ஸய்டா ஜேம்ஸ் ஆகிய இருவரும பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 35 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது. ஸ்டெபானி டெய்லர் 44 ஓட்டங்களுடனும் ஸய்டா ஜேம்ஸ் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஷெமெய்ன் கெம்ப்பெல் 17 ஓட்டங்களையும் டியேந்த்ரா டொட்டின் 13 ஓட்டங்களையும் பெற்றனர். அபாரமாக பந்துவீசிய நொன்குலுலேக்கோ மிலாபா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/195508
  18. அண்ணை செய்தி இணைக்க முடியாது எனவும், போனூடாக பின்னூட்டமிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தவர் சிறி அண்ணை.
  19. 04 OCT, 2024 | 03:24 PM யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்றுப் பெற்ற பணத்தை கொண்டுசென்ற நபரை இருவர் வழிமறித்து ஒரு கோடி ரூபாய் பணம், கையடக்கத் தொலைபேசி கடவுச்சீட்டு முதலியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் காணி விற்பனை தரகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் கடந்த புதன்கிழமை (2) சேந்தான்குளம் பகுதியில் உள்ள தனது காணியை விற்று, அதனூடாக பெற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வழிமறித்துள்ளனர். பின், அவரை தாக்கிவிட்டு பணம், கடவுச்சீட்டு, பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதனையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபடத் தொடங்கினர். காணி விற்பனைக்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டு சட்டத்தரணி முன்னிலையில் பணம் கைம்மாற்றப்பட்டபோது, காணி விற்பனை தரகரும் அவ்விடத்தில் இருந்துள்ளார். அத்தோடு, காணி விற்பனையாளர் பணத்துடன் வீடு திரும்பும்போதே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் காணி விற்பனை தரகரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோது, ஊரெழு பகுதியில் உள்ள தரகரின் வீட்டிலிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பணம், கையடக்கத் தொலைபேசி முதலானவற்றை பொலிஸார் கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர். காணி விற்ற நபர் பணத்தோடு செல்வதாக தரகர் தனது மகனுக்கு தெரிவிக்க, தரகரின் மகன் தனது நண்பருடன் சென்று கொள்ளையடித்துள்ளதாக தரகர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195472
  20. Published By: RAJEEBAN 04 OCT, 2024 | 02:56 PM சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன, இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் எரிக்சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன, இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவர் இராஜதந்திர செயற்பாடுகளை மிகச்சரியான முறையில் முன்னெடுத்துள்ளார். முதலில் இந்திய தூதுவருடன் சந்திப்பு, பின்னர் சீன தூதுவருடன், இதன் முக்கியமான நாடு என பார்த்தால் இந்தியாவிற்கே முதலிடம் அதற்கு பின்னரே சீனா என்ற சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் அனைத்து நாடுகளினதும் தூதுவர்களை அவர் சந்தித்துள்ளார். மேற்குலகம், ரஸ்யா மேலும் பல நாடுகள். இலங்கைக்கு முதலிடம் என்ற வெளிவிவகார கொள்கையே பின்பற்றப்படும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார். பதவியேற்றதும் அனுரகுமார திசநாயக்க உடனடியாக கண்டியில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு மகாநாயக்க தேரர்களின் ஆதரவை பெற்றார். அதன் பின்னர் அவர் தமிழ், முஸ்லீம் அரசியல் மததலைவர்களை சந்தித்துள்ளார். அனைத்து இன சமூகத்திற்குமான இலங்கையை உருவாக்குவதற்கான அவரது வலியுறுத்தல்கள் வலுவானவையாக காணப்படுகின்றன. அவர் வர்த்தக சமூகத்தினை நோக்கி தனது கரங்களை நீட்டியுள்ளார், வர்த்தக சமூகத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவதன் மூலமே வளமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும், கல்வி சுகாதாரம் மற்றும் வறியவர்களிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வளங்களை கொண்டுவரமுடியும் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார். அவர் ஊழல் அற்ற குழுவினரை அரச அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளார். அமைச்சர்களிற்கு ஆடம்பர கார்களிற்கான சலுகைகளை நிறுத்தியுள்ளார். அரச தலைவர்களிற்கு ஆடம்பரமற்ற வாழ்க்கை என்பதை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் இலங்கையின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதில்லை. இடதுசாரி தலைவர் குறித்து இராஜதந்திரிகள் மத்தியில் காணப்படும் சந்தேகத்தை இது போக்காது. ஆனால் இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம். அமைதியான, பல மத, பசுமையான செழிப்பு மிக்க இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் அனுரகுமார திசநாயக்கவிற்கு உதவவேண்டும். https://www.virakesari.lk/article/195477
  21. 04 OCT, 2024 | 02:34 PM தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதால், தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு அழைப்பு விடுத்தனர். ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி எமது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஸ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டிருந்தது. இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம். இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர். எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர். எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயற்படுவோம். இதற்காக, அனைவரும் ஜனநாயக வழிநின்று செயற்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும். இந்நிலையில் எமது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது தமிழ் தேசியப் பரப்பிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் தலைமைகளுக்கு ஓர் பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கிறது. இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போகும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், கட்சி ரீதியாக தனித்து போட்டி இடாமல் ஓர் கூட்டாக அல்லது கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக இணையாத சந்தர்ப்பத்தில் வாக்குகள் சிதறப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன், குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டி நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/195467
  22. ஜெய்சங்கர் - விஜித ஹேரத் சந்திப்பு; இரு தரப்பு நலன் சார்ந்த விடயங்கள் குறித்து பேச்சு 04 OCT, 2024 | 01:26 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்வார்ததைகளை மேற்கொண்டுள்ளார் பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/195464
  23. Published By: DIGITAL DESK 7 04 OCT, 2024 | 12:50 PM யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/195460

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.