Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 07 SEP, 2024 | 02:22 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இத்தேர்தலில் அவர் வெல்லப்போவதில்லை என்றாலும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் அரியநேத்திரன், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் வட, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அல்லாத ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தைக் கொண்டிருக்கிறார்களாக என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அரியநேத்திரன், அவ்வாறானதொரு கருத்தை அவர்கள் இதுவரையில் எங்கும் கூறவில்லை எனவும், அவர்கள் அத்தகைய உத்தேசத்தில் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதேபோன்று எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் களமிறங்குவார்கள் என்று தான் கருதவில்லை எனவும், மாறாக பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அவர்களது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வார்கள் எனவும் அரியநேத்திரன் விளக்கமளித்துள்ளார். https://www.virakesari.lk/article/193076
  2. பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, பரதன் பாண்டுரங்கன், சௌதியில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள தமிழர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகோட்டுமுளை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பரதன் பாண்டுரங்கன் 2000ஆம் ஆண்டில் சௌதி அரேபியா சென்றார் . சௌதி அரேபியாவில் உள்ள அல்ஜூபைல் ஜெனரல் மருத்துவமனையில் இஇஜி (Electroencephaloram) டெக்னீஷியனாக பணியைத் தொடங்கினார். பரதனின் அறையில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த ஃபைசல் என்பவர் 2008 ஆம் ஆண்டு ஜூன் 31-ஆம் தேதி கொல்லப்பட்டார். அடுத்த இரண்டு வாரங்களில் பரதன் கைது செய்யப்பட்டார். "பணம் தொடர்பான தகராறில் ஃபைசலை சித்ரவதை செய்து பரதன் கொன்றுவிட்டார்" என்பது சௌதி காவல்துறையின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் பரதனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக சௌதியில் உள்ள ஜூபைல் சிறையில் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் பரதன். 'எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம்' என்ற சூழலில், அதில் இருநது தப்புவதற்கு பரதன் முன் தற்போது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, அவரை மன்னிப்பதாக, ஃபைசல் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கடிதம் பெறுவது அல்லது இந்திய அரசின் மீட்பு முயற்சி. கேரள பயணத்தில் என்ன நடந்தது? ஃபைசல் குடும்பத்தினரிடம் Blood money (நஷ்ட ஈடு கொடுத்து மன்னிப்புக் கடிதம் பெறுவது) பேச்சுவார்த்தையில் பரதன் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக முயன்றுள்ளனர். "கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஃபைசலின் குடும்பத்தினரிடம் உள்ளூர் வழக்கறிஞர் மூலம் நேரில் சென்று பேசினோம். ஆனால், எங்களின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை" என்கிறார் பரதனின் அண்ணன் குமணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஃபைசல் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது அவரது தாய்மாமா முகமது எங்களிடம் பேசினார். எங்களிடம் அவர், 'ஃபைசல் சாகும் போது அவனது குழந்தைகளுக்குச் சிறு வயது. இப்போது வரை சௌகத் அலியை (ஃபைசலின் சகோதரர்) தனது தந்தையாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன்' என்றார். ஒரு கட்டத்தில், 'மன்னிப்புக் கடிதம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறி தங்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார் குமணன். மீண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் உதவியுடன் முகமதுவிடம் பேச சென்றுள்ளனர். இந்த முறை கசப்பான அனுபவங்களை பரதன் குடும்பத்தினர் எதிர்கொண்டுள்ளனர். மன்னிப்புக் கடிதம் பெறும் முயற்சி தோல்வியடைந்ததால், இந்திய அரசின் உதவியுடன் பரதனை மீட்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். வெளியுறவுத்துறை சொன்னது என்ன? பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, பரதன் தனது 33 வயதில் சிறைக்குச் சென்றார், அவருக்குத் தற்போது 49 வயதாகிறது என்கிறார் குமணன். இந்நிலையில், இந்திய அரசுக்கும் சௌதி அரேபிய அரசுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்த உடன்படிக்கை அமலில் இருப்பதால், அதன் அடிப்படையில் பரதனை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரதனின் தாய் சரோஜா வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதன்கிழமையன்று (செப்டம்பர் 4) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய வெளியுறவுத் துறையின் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சுதா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தொடக்கத்தில் பரதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தண்டனையில் மாற்றம் செய்யப்பட்டு மரண தண்டனையாக மாற்றப்பட்டது. பரதனுக்கு தூதரக ரீதியிலான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் விடுதலை தொடர்பாக, உயிரிழந்த ஃபைசலின் குடும்பத்தினருடைய வழக்கறிஞர்களை அணுகலாம்' எனத் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளும், "கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இருந்தாலும் அதைச் செயல்படுத்துமாறு நாங்கள் உத்தரவிட முடியாது. வெளியுறவுத் துறையை அணுகி நிவாரணம் பெறுங்கள்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். பரதனை மீட்டு வருவது சாத்தியமா? பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஃபைசல் கொல்லப்பட்டார். "கைதிகள் பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில், சௌதியில் 2006 முதல் 2012 வரையில் 75 இந்திய கைதிகளை விடுதலை செய்து அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு விதமான குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள். இதை நீதிமன்றத்தில் தெரிவித்தோம். வழக்கு முடித்து வைக்கப்பட்டதால், உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறோம்" என்கிறார் பரதனின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இதே கூற்றை வலியுறுத்தி பிபிசி தமிழிடம் பேசிய மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி, "கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில், இந்திய அரசு முடிவெடுத்தால் பரதனை மீட்டுக் கொண்டு வருவது எளிதான ஒன்று" என்கிறார். அதற்கு உதாரணமாக, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை இந்திய அரசு மீட்ட வழக்கை அவர் மேற்கோள் காட்டினார். பணமும் தங்கமும் எங்கே? "கேரளாவில் உள்ள மாட்டுல் என்ற ஊர்தான் ஃபைசலின் சொந்த ஊர். அவர் சௌதியில் பிசியோதெரபி டெக்னீஷியனாக இருந்தார். என் அண்ணனும் அவரும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளனர். ஃபைசல் குடும்பத்துடன் எனது அண்ணன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவரின் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள் கொடுப்பது, பிரியாணி சமைப்பது என அவர்களின் நட்பில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார் குமணன். "என் அண்ணனுக்கும் அவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. வழக்கில் கேரள இளைஞர் ஒருவர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், வழக்கு முடியும்போது பரதனை முதல் குற்றவாளியாக அறிவித்தனர்,” என்கிறார் குமணன். தாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைபேசியில் பரதனிடம் பேசுவதாகவும், இந்தக் கொலையை வேறு யாரோ செய்துவிட்டுப் பழியை தன்மீது போட்டுவிட்டதாக பரதன் கூறியதாகவும் குமணன் தெரிவித்தார். எட்டு ஆண்டுகளாக பரதன் சேர்த்து வைத்த பணமும் தங்கமும் எங்கே எனத் தெரியவில்லை என்கிறார் குமணன். பரதனின் விடுதலைக்காக தொடக்கத்தில் இருந்தே சௌதியில் உள்ள தமிழ்ச் சங்கம் ஒன்றின் பொதுச்செயலராக இருந்த வாசு விஸ்வராஜ் என்பவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். சௌதியில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, பரதனின் தாய் சரோஜா "ஜூபைல் சிறையில் பரதனை நான்கு முறை சந்தித்துப் பேசினேன். கொலை குறித்து அவரிடம் கேட்டபோது, 'ஃபைசலுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. அவரிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக அறையில் பூட்டி வைத்திருந்தேன். ஒருநாள் தப்பித்துச் செல்லும் போது கீழே விழுந்து இறந்துவிட்டார்' என்றார். இந்த விவகாரத்தை கேரள ஊடகங்கள் பெரிதாக வெளியிட்டன" என்கிறார் வாசு விஸ்வராஜ். "குறிப்பாக, 'ஃபைசலை ஒரு வாரம் கட்டிப் போட்டு பரதன் சித்ரவதை செய்தார். ஃபைசல் குடிப்பதற்குச் சிறுநீர் கொடுத்தார்' என்றெல்லாம் செய்தி வெளியானது. ஃபைசலின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கடிதம் பெறுவதற்காக நானும் உடன் சென்றேன். ஃபைசலின் உடன் பிறந்த சகோதரரையே ஃபைசலின் மனைவி திருமணம் செய்து கத்தாரில் வசித்து வருவது தெரிய வந்தது. அவர்கள் நல்ல நிலையில் இருப்பதால் பணம் தேவைப்படவில்லை. இதையடுத்து, சௌதி நீதிமன்றத்தில் மனு ஒன்றைக் கொடுத்தேன். அதில், 'பரதன் நிரபராதி. ஃபைசலின் மனைவி வேறு திருமணம் செய்துவிட்டார். அவரது மகள் மேஜராகும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஃபைசலின் மகள் மேஜராகி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் பரதனுக்கு சிக்கல் ஏற்படலாம்" என்கிறார் வாசு விஸ்வராஜ். கொலை வழக்கில் மீண்ட குமரி மீனவர்கள் இதேபோன்ற கொலை வழக்கு ஒன்றில் கன்னியாகுமரி மீனவர்கள் இருவரை Blood money எனப்படும் நஷ்ட ஈடு வழங்கி மீட்டதாகக் குறிப்பிட்டார் வாசு விஸ்வராஜ். "கன்னியாகுமரியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கு ஒன்றில் சௌதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். சௌதியில் மது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்பதால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல தயக்கம் காட்டியுள்ளனர். இதனால் ரத்தம் கொட்டி அந்த நபர் இறந்துவிட்டார். இறந்தவரின் குடும்பத்துக்குப் பணம் கொடுத்து மன்னிப்புக் கடிதம் வாங்கினோம். அந்த மீனவர்கள் இருவரும் சொந்த ஊர் திரும்பிவிட்டனர்" என்கிறார். அதேநேரம், நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டதால், மிகுந்த கவலையில் இருக்கிறார், பரதனின் தாயார் சரோஜா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என் மகனைப் பார்த்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒருமுறை வந்து என் முகத்தைப் பார்த்தால் போதும். அவனைப் பார்க்காத ஏக்கத்திலேயே என் இரண்டு பெண்களும் இறந்துவிட்டார்கள். மகன் நினைப்பாகவே இருப்பதால் சாப்பிடக்கூட முடிவதில்லை " என்கிறார் கண்ணீருடன். ஃபைசல் குடும்பத்தினர் சொல்வது என்ன? பரதன் குடும்பத்தினரின் கோரிக்கை தொடர்பாக, கேரளாவில் உள்ள ஃபைசலின் தாயாருடைய சகோதரர் முகமதுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "பரதன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து எனக்குத் தகவல் எதுவும் வரவில்லை. அவர்கள் தொடர்ந்த வழக்கு குறித்து நான் பேசவும் விரும்பவில்லை. அதைப் பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து ஃபைசலின் சகோதரர்களே முடிவெடுப்பார்கள்" என்று மட்டும் பதில் அளித்தார். தொடர்ந்து, மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் அவர் மறுத்துவிட்டார். "ஃபைசலை பரதன் கொலை செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும் சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் அவர் சிறைக்குப் போனார். இப்போது 49 வயதாகிவிட்டது. அவரது இளமைக் காலமே தொலைந்துவிட்டது. அதை மனதில் வைத்தாவது இந்திய அரசு அவரை மீட்க வேண்டும்" என்கிறார் குமணன். பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, பரதனின் அண்ணன் குமணன் வழக்கு விவரம் சௌதியில் 2000 ஆம் ஆண்டில் மருத்துவமனை ஒன்றில் இஇஜி டெக்னீஷியனாக பரதன் பணியில் சேர்ந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு அதே மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக ஃபைசல் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவர்களுடன் எல்தோஸ் வர்கீஸ் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். மூவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஃபைசல் கொல்லப்பட்டார். ஜூலை 13ஆம் தேதி பரதன் கைது செய்யப்பட்டார். தன்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தருமாறு ஃபைசலிடம் பரதன் கேட்டதாகவும் அவர் மறுக்கவே கையைக் கட்டிப் போட்டு சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட மோதலில் ஃபைசல் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து சமையல் கூடத்துக்கு ஃபைசலின் உடல் கொண்டு செல்லப்பட்டதை சாட்சி ஒருவர் பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது. வழக்கின் தடயங்களை அழிப்பதற்கு குற்றவாளி முயற்சி செய்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பரதன் குற்றம் செய்ததாகக் கூறி ஆயுள் தண்டனையுடன் 1,000 கசையடி வழங்குமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கசையடியை தவணை முறையில் நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில், ஃபைசல் குடும்பத்தினரின் மேல்முறையீட்டில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. இந்திய அரசால் காப்பாற்ற முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 1. இந்திய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள் கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அங்குள்ள நீர்மூழ்கிக் கப்பலில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூதரகம் வழியாக சட்டரீதியான உதவிகளை மேற்கொண்டு அவர்களை இந்திய அரசு மீட்டது. இதுதொடர்பாக, துபாயில் நடைபெற்ற காப் உச்சி மாநாட்டில் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியிடம் பிரதமர் மோதி கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டது. 2. கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம், சௌதியில் 2006 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றார். அங்கு கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளரின் மகனான சிறுவன் மாற்றுத் திறனாளியாக இருந்தார். ஒருநாள் கார் பயணத்தின் போது சிறுவனின் கழுத்தில் இருந்த செயற்கை சுவாசக் குழாய் மீது ரஹீமின் கைபட்டதால் மயக்கமான சிறுவன் மரணமடைந்துவிட்டார். இந்த வழக்கில் ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாயை அவர்கள் கேட்டனர். நிதியைத் திரட்ட வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டன. 34 கோடி ரூபாயும் திரட்டப்பட்டதால் மரண தண்டனையில் இருந்து ரஹீம் தப்பித்தார். 3. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, வேலைக்காக ஏமன் நாட்டுக்குச் சென்றார். அவர் பணி செய்த இடத்தின் உரிமையாளர் அப்தே மஹ்தி என்பவருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவரின் பாஸ்போர்ட்டை உரிமையாளர் எடுத்துக் கொண்டதால் அதை மீட்கும் முயற்சியில் மயக்க ஊசி போடும் போது டோஸ் அதிகமாகி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு கைதான நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நிமிஷாவின் விடுதலைக்காக 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' அமைப்பு, இந்திய அரசு தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இன்றளவும் ஏமனில் உள்ள சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருக்கிறார் நிமிஷா பிரியா. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czdpmzryyyno
  3. வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார். வட மாகாண மெய்வல்லுநர் போட்டி வரலாற்றில் இப் பாடசாலைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். அத்துடன் தட்டெறிதல் போட்டியிலும் சரனியா சந்திரசேகரன் மூன்றாம் இடத்தைப் பெற்றார். வட மாகாண பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் சிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளருக்கான விருதையும் கள நிகழ்ச்சிகளில் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றெடுத்து பாடசாலைக்கும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கும் பெருமையைச் சேர்த்துள்ளார். இம் மாணவிக்கு பயிற்சி வழங்கிய விளையாட்டுத்துறை பயிற்றுநர் ஜெ. தட்சாவையும் மாணவியை ஊக்குவித்து சகலவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்கிய ஆசிரியர் எஸ். சக்தி, பாடசாலை அதிபர் பீ. கேமலதன் ஆகியோரையும் பாடசாலை சமூகம் நன்றி பெருக்குடன் பாராட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/193028
  4. சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால (Palita Mahipala ) வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கட்டாய ஓய்வு வயதை திருத்துமாறு (01-07-2024) அன்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய ஓய்வு வயது இந்நிலையில் குறித்த விடயமானது சுகாதார அமைச்சின் செயலாளரால் மாகாண சுகாதார செயலாளர்கள், கொழும்பு, கண்டி மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகங்கள். மற்றும், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/pension-retirement-age-of-medical-officers-revived-1725671951
  5. படக்குறிப்பு, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர், உஜ்ஜயினியில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தில் சாலையோரத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. உஜ்ஜயினியில் கடந்த புதன்கிழமை 28 வயது இளைஞர் ஒருவர், கொய்லா பாதக் சந்திப்பின் நடைபாதையில் பட்டப் பகலில் 40 வயது பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த இடம் உஜ்ஜயினியின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். அந்தச் சாலையில் பெட்ரோல் பங்க், சரக் மருத்துவமனை தவிர, ஒரு மதுபானக் கடையும் உள்ளது. இது நடந்தபோது அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், இந்தச் சம்பவத்தைத் தடுக்க யாரும் முயலவில்லை. மேலும், சிலர் அச்சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். இதுதொடர்பான வைரல் வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ், பாஜகவை விமர்சித்துள்ளது. மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி ‘தீய முயற்சிகளை’ மேற்கொள்வதாக பாஜக அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. உஜ்ஜயினியில் என்ன நடந்தது? செப்டம்பர் 4, புதன்கிழமை பிற்பகலில் இந்தச் சம்பவம் நடந்ததாக உஜ்ஜயினி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடந்த உஜ்ஜயினி பகுதி பரபரப்பாக உள்ளது. உஜ்ஜயினி காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தெருவோர கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அன்றைய தினம் இருவரும் சேர்ந்து பேசியவாறு மது அருந்தியுள்ளனர். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக அப்பெண்ணிடம் அந்த இளைஞர் கூறிய பிறகே இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பிறகுதான் இச்சம்பவம் நடந்துள்ளது," என்று தெரிவித்தார். இதையடுத்து, "376வது பிரிவின் கீழ் பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இதை வீடியோவாக எடுத்துப் பரப்பியவர்கள் யார் என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும்" அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஏற்கெனவே ஒருவரையொருவர் அறிந்திருந்ததாக, உஜ்ஜயினி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா தெரிவித்தார் அந்தப் பெண் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஜ்ஜயினிக்கு வந்ததாகவும், அவருக்கு 18 வயது மகன் இருப்பதாகவும், ஆனால் இப்போது அவர் குடும்பத்துடன் வசிக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர். சம்பவம் நடைபெற்றபோது அவ்வழியாகச் சென்ற ஒருவர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்ததாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பெண்ணுக்கு போதை தெளிந்த பின்னர், அவருடைய வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாஜக மீது விமர்சனம் இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் நடைபாதையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது," என்று தெரிவித்துள்ளார். "இன்று நம் சமூகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது" என ஒட்டுமொத்த நாடும் திகைத்து நிற்பதாகக் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, "அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவ்வழியாகச் சென்றவர்கள் அதை வீடியோ எடுத்துள்ளனர். புனித பூமியான உஜ்ஜயினியில் இதுபோன்ற சம்பவம் மனித நேயத்தைக் களங்கப்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உஜ்ஜயினியில் நடைபெற்றது மிகக் கொடூரமான சம்பவம் என பிரியங்கா காந்தி விவரித்துள்ளார் (கோப்புப்படம்) அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி சமூக ஊடகத்தில், “திறந்தவெளி சாலைகளில் பாலியல் வன்புணர்வுகள் தொடங்கியுள்ளன. முதலமைச்சரின் சொந்த ஊரிலேயே நிலைமை இப்படியெனில், மற்ற பகுதிகளின் நிலையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தலித் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான அட்டூழியங்களையும் உணர முடியும்,” எனத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியான பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால், ஜிது பட்வாரிக்கு பதிலளிக்கும்போது, மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி ‘தீய முயற்சிகளை’ மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய பதிவில், “முதலில், குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் இருக்கிறார். கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, பெண் (புகார்தாரர்) மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவரும் ஒருவருக்கொருவர் முன்பே அறிந்தவர்கள். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் சாலையோரத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தின்போது, அவ்வழியாகச் சென்ற மக்கள் அதைத் தடுக்காமல், வீடியோ எடுத்துள்ளனர் என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம். சமூகத்தின் அணுகுமுறை குறித்து கேள்விகள் உஜ்ஜயினியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 15 வயது சிறுமி அரை நிர்வாணமாக ரத்தத்தில் தோய்ந்தபடி இருந்த வீடியோ ஒன்று வைரலாக பரவியது. வீடியோவில், அந்த பெண் மக்களிடம் உதவி கேட்டு வீடு வீடாக அலைந்து திரிந்தார். மத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காகப் பணியாற்றும் சமூக ஆர்வலர் அர்ச்சனா சஹாயிடம் சமூகத்தின் இந்த அணுகுமுறை குறித்துப் பேசியபோது, மக்களின் இந்த நடத்தை மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறினார். அவர் கூறுகையில், “பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்புணர்வு சம்பவங்களில், சமூகத்தின் அணுகுமுறை மிகவும் வருத்தமளிக்கிறது. சம்பவத்தை நிறுத்த முயல்வதற்குப் பதிலாக, மக்கள் அதை வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக உள்ளனர்" என்றார். "எந்தப் பெண்ணும் இதுபோன்ற சம்பவத்திற்கு சுயநினைவுடன் இருக்கும்போது சம்மதிப்பதில்லை என்பது வீடியோ எடுத்தவருக்கும், அந்த வழியாகச் சென்றவர்களுக்கும் தெரியும். அதன் பிறகும் யாரும் தடுக்க முயலவில்லை. சிலர் வீடியோவும்கூட எடுத்துள்ளனர்," என்றார். இத்தகைய சம்பவங்களை வீடியோ எடுத்து, பரப்புபவர்களைத் தண்டிக்கும் விதமாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அர்ச்சனா சஹாய் வலியுறுத்தியுள்ளார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj9lx142g08o
  6. வடமராட்சி கிழக்கில் தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சார நடவடிக்கைகள் தீவிரம்! 07 SEP, 2024 | 10:28 AM தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை அறிக்கைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று (06) பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்களிடையே பெருகிவருவதாக தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவருமான ஆனந்தராசா சுரேஷ்குமார் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவை வழங்கவேண்டும் எனவும் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டார். இதில் ஜனநாயக போராளிகள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/193050
  7. நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, தென்னை, வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது நாட்டில் தேங்காய்க்கு பெரும் கேள்வி நிலவி வருவதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்நிலையில், இவ்வாறான இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளமையால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு 8 & 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். https://ibctamil.com/article/coconut-price-in-sri-lanka-1725682256#google_vignette
  8. ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதத்தில்! சஜித், நாமல், அரியம், திலித் இன்று பங்கேற்பு! Published By: DIGITAL DESK 3 07 SEP, 2024 | 11:23 AM 'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று சனிக்கிழமை (07) நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதாக 38 வேட்பாளர்களில் 16 பேர் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்கலாக 22 பேர் தமது பங்கேற்பை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இன்று சனிக்கிழமை (07) பி.ப 3.00 - 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த விவாதம் சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், மார்ச் 12 இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதேவேளை விஜயதாஸ ராஜபக்ஷ, நுவன் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் த சில்வா, ஓஷல ஹேரத் மற்றும் பிரியந்த விக்ரமசிங்க ஆகிய 6 வேட்பாளர்களின் பங்கேற்புடனான விவாதம் ஞாயிற்றுக்கிழமை (08), பாணி விஜேசிறிவர்தன, மயில்வாகனம் திலகராஜா, நாமல் ராஜபக்ஷ, கே.ஆர்.கிரிஷான், ரொஷான் ரணசிங்க மற்றும் கீர்த்தி விக்ரமரத்ன ஆகிய 6 வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் விவாதம் திங்கட்கிழமையும் (09) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/193061
  9. எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயற்பாடுகளை இலங்கையில் அமைப்பதற்கான திட்டத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை குறித்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்கிற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) முன்னதாக அறிவித்திருந்தார். தொலைத்தொடர்பு இந்நிலையில், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை நாட்டில் செயற்பட அனுமதிக்கும் வகையில், பல தசாப்தங்கள் பழமையான சட்டத்தில் திருத்தங்களை கடந்த செவ்வாயன்று (03.09.2024) நாடாளுமன்றம் அங்கீகரித்தது. குறித்த திருத்தங்கள் மூன்று புதிய வகையான உரிமங்களை அறிமுகப்படுத்தியதுடன் ஸ்டார்லிங்க் இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் உரிமம் பெற்ற சேவை வழங்குநராக நுழைய அனுமதித்துள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த நடவடிக்கை சாத்தியமற்றது என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ள நிலையில் ஜனதிபதி தேர்தல் முடியும் வரை இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்டார்லிங்க் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/starling-internet-services-suspended-the-country-1725688495
  10. தபால் மூல வாக்களிப்பு; வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு Published By: DIGITAL DESK 3 07 SEP, 2024 | 02:49 PM தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்ததாக அரசியல் கட்சி ஒன்றின் மத்திய குழு உறுப்பினரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள நாழில் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்குச் சீட்டில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அடையாளம் இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் இடம் பெற்ற பிரதேசம் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/193077
  11. ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம் - நாசா கூறியது என்ன? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, பூமிக்குத் திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம் 4 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் சனிக்கிழமை காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர். இரு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாக நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு 6 மணிநேரம் எடுத்தது. பூமியின் வளிமண்டலத்தில் அந்த விண்கலம் மீண்டும் நுழைந்த பின்னர், நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் மெதுவாகத் தரையிறங்கும் விதமாக பாரசூட்கள் பயன்படுத்தப்பட்டன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் இருவரும் அவர்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. "இருவரும் இந்த விண்கலம் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர்," என நாசாவின் திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் தெரிவித்தார். என்ன சிக்கல்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது. முன்னதாக, ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான சோதனைகளை நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருந்தன. செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலம் இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. இந்த விண்கலத்தில் தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் பூமிக்குத் திரும்புகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் (சித்தரிப்புப் படம்) ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்த பின் விண்கலத்தின் செயல்பாடுகளை ஆளில்லா விமானத் தகவல் அமைப்பு ஒன்றின் மூலம் அதன் பணி மேலாளர்கள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி சுற்றுப்பாதையில் மேற்கொண்ட இரண்டு சோதனைப் பயணங்களின் போது ஆள் இல்லாமல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இந்த பயணங்களில் ஒன்றில், அது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து வரும் செயல்முறையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாசா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் செல்வதே போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பணியாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்க உள்ள ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ 9 விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக விடப்படும். "விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும். அந்த வகையில்தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டார்கள். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆளில்லாமல் பூமிக்கு திரும்பச் செய்ய முடிவு செய்யப்பட்டது.", என்று நாசா அதிகாரி பில் நெல்சன் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஸ்டார்லைனர் பயணம் போயிங்கிற்கு ஏன் முக்கியமானது? விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நாசா தனது சொந்த விண்கலத்தை பயன்படுத்தி வந்தது. இந்த செயல்பாட்டை தனியார் மயமாக்க நாசா முடிவு செய்த போது, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனத்திற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலங்களை பயன்படுத்த நாசா ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டனர். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆளில்லாமல் விண்வெளி பயணம் மேற்கொள்ள சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் தடைகளும் தாமதங்களும் இருந்தன. இதனால் விண்வெளி நோக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஸ்டார்லைனர் விண்கலம் புறப்பட்டது. ஜூன் 6-ஆம் தேதி அன்று, பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதையும், விண்கலத்தின் உந்துவிசைகள் செயலிழந்ததையும் நாசாவும், போயிங் நிறுவனமும் கண்டறிந்தன. அப்போதிலிருந்து, விண்கலத்தை பழுது பார்க்க பொறியியல் குழுக்கள் முயற்சி செய்தன. விண்கலத்தில் இருந்து பல்வேறு தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும், விண்கலத்தை பூமிக்கு மீண்டும் கொண்டு வர பல்வேறு திட்டங்களும் முடிவு செய்யப்பட்டன. ஆனால், சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் அதே விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப பாதுகாப்பானது இல்லை என்பதாலும், அதன் செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதையும் உணர்ந்ததாலும், அவர்களை வேறொரு விண்கலம் மூலம் மீண்டும் பூமிக்கு கொண்டு வர நாசா முடிவு செய்தது. போட்டியாளரான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா தீர்மானித்தது போயிங் நிறுவனத்திற்கு பெரிய அடி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆளில்லா பயணத்தின் போது ஸ்டார்லைனர் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தற்போது அனைவரின் பார்வையும் இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வழக்கமான பயணத்திற்கு நாசாவின் வணிகக் குழு திட்டத்தில் போயிங் நிறுவனம் அனுமதி பெற வேண்டும். இப்போது ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்பியதும், இந்த பயணம் தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்படும். நாசா சான்றிதழைப் பெற வேறு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போயிங் நிறுவனம் முடிவு செய்யும். பிபிசியின் அறிவியல் செய்தியாளர் ரெபேக்கா மோரெல் மற்றும் ஆலிசன் பிரான்சிஸ், பிபிசி செய்தியாளர் மைக்கேல் ஷீல்ஸ் மெக்னமீ வழங்கிய கூடுதல் தகவல்களுடன். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy0r42ln4zqo
  12. ஓம் ஐயா, விச ஊசி மருந்து ஏற்ற காசு வேணும் தானே?! இலங்கையில் கருணைக்கொலை சட்டமாக்கப்படவில்லை.
  13. அவரைப் பார்த்தால் அழுவது போல் தெரியவில்லை அண்ணை! அவர்களைப் புரிந்துகொள்ள அவர்களால் மட்டுமே முடியும். நாங்கள் எமது சமூக வரைமுறைகளைத் தாண்டிய விடயங்களை ஒவ்வாமையுடன் நோக்குகிறோம் என எண்ணுகிறேன்.
  14. பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM படக்குறிப்பு, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்திருக்கிறார் யுவன் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது வெளியாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் அவர் இசையமைத்துள்ளார். தனது 35 வயதிற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன் சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார். ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் 1997ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன்’ என்ற அடையாளத்தைக் கடந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்திருக்கும் யுவன், தனியாக எந்த இசை வகுப்புகளுக்கும் செல்லாதவர். ‘16 வயதில் இசையமைப்பாளராக அறிமுகம்’ பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM இசையமைப்பாளர் இளையராஜா- ஜீவா தம்பதிக்கு 1979ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்தவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் குடும்பத்தில், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, (மறைந்த) பாடகி பவதாரிணிக்குப் பிறகு பிறந்த கடைசிப் பிள்ளை யுவன் சங்கர் ராஜா. யுவன் பிறந்த தருணம் குறித்து, ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் விவரித்திருந்தார் இளையராஜா. “அப்போது இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில், ரஜினி நடித்த ‘ஜானி’ படத்தின் இசையமைப்பிற்காக ஆழியார் அணையின் (பொள்ளாச்சி) விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது யுவன் பிறந்துள்ளான் என்ற செய்தி எனக்கு வந்தது.” “அன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் இசையமைத்ததுதான் ‘செனோரிட்டா..ஐ லவ் யூ’ என்ற பாடல். அந்தப் பாடல் மட்டுமல்லாது, ஜானி திரைப்படமும், அதன் அத்தனை பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது” என்று கூறியிருந்தார். அரவிந்தன் திரைப்படத்திற்குத்தான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது. அதற்கான இசையை யுவன் வடிவமைத்தார். அந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானபோது யுவன் சங்கர் ராஜாவுக்கு வயது 14. இரண்டு ஆண்டுகள் கழித்து, 1997ஆம் ஆண்டு 'அரவிந்தன்' வெளியானபோது தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜாவுக்கு சில ஆண்டுகள் முன்பாக, 1992இல் வெளியான ‘பாண்டியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவனின் அண்ணனும், இளையராஜாவின் மூத்த மகனுமான கார்த்திக் ராஜா. “என் தம்பி அடைந்துள்ள உயரத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இளம் வயதில் இந்த உயரத்தை அவன் அடைந்துள்ளான். அவனுக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று சமீபத்தில் கார்த்திக் ராஜா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ‘ராசியில்லாத இசையமைப்பாளர்’ பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM படக்குறிப்பு,தனது தந்தை இளையராஜாவுடன், யுவன் சங்கர் ராஜா தனது 16ஆம் வயதிலேயே இசையமைப்பாளர் என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும்கூட, ‘இளையராஜாவின் மகன்’ என்ற அடையாளத்தைக் கடக்கவும், தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பெறவும் யுவன் போராட வேண்டியிருந்தது. முதல் திரைப்படமான அரவிந்தன் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து யுவனின் இசையில் வெளியான ‘வேலை’, ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சமீபத்தில் சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பேசிய யுவன், “ஆரம்பக் காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், என்னை ராசியில்லாத இசையமைப்பாளர் என முத்திரை குத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு எனக்குப் பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.” “இதை நினைத்துப் பலமுறை நான் அழுதிருக்கிறேன். அதிலிருந்து மீள வேண்டும் என இசையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனால்தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்” என்று கூறியிருந்தார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ திரைப்படம் யுவனுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது. யுவன், 2000ஆம் ஆண்டில் 'தீனா' திரைப்படத்திற்கு இசையமைத்தார். தீனா, நடிகர் அஜித்குமாரின் திரைவாழ்வில் முக்கியமான திரைப்படம். அதில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ என எஸ்பிபி குரலில் ஒரு 'மாஸ்' பாடல், மறுபுறம் ஹரிஹரனின் குரலில் ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்’ என்ற அற்புதமான 'மெலடி' பாடல் என ரசிகர்களைக் கவர்ந்தார். பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM படக்குறிப்பு,சின்ன பட்ஜெட் படம், பெரிய படம், மாஸ் ஹீரோ என்றெல்லாம் யுவன் பிரித்துப் பார்ப்பதில்லை தொடர்ந்து 'நந்தா', 'துள்ளுவதோ இளமை', 'மெளனம் பேசியதே' ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மன்மதன்’, ‘ராம்’, ‘சண்டைக்கோழி’, ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக நிலைநிறுத்திக் கொண்டார். இளம் ரசிகர்களைப் பெரியளவில் பெற்ற யுவனின் பாடல்கள், இளைஞர்கள் தங்கள் காலர் டியூன்களாக வைக்கும் அளவுக்குப் புகழ் பெற்றன. சின்ன பட்ஜெட் படம், பெரிய படம், மாஸ் ஹீரோ என்றெல்லாம் யுவன் பிரித்துப் பார்ப்பதில்லை. தனக்குக் கதை பிடித்திருந்தால் அந்தப் படத்திற்கு இசையமைப்பார். இந்த விஷயத்தில் இளையராஜாவும், யுவனும் ஒன்று என்றே கூறலாம். 'பில்லா-2' திரைப்படத்தில் அஜித் போன்ற மாஸ் ஹீரோவிற்காக இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற புதுமுகம் நடிக்கின்ற படத்திற்கும் இசையமைத்தார். ‘நா.முத்துக்குமாருக்கு கொடுத்த இடம்’ பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM படக்குறிப்பு,நா.முத்துக்குமார்-யுவன் என்கிற அற்புதமான கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது நா.முத்துக்குமார்-யுவன் என்கிற பிரபலமான கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது என்றே கூறலாம். ‘தேவதையைக் கண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘பையா’, ‘புதுப்பேட்டை’, யாரடி நீ மோகினி’, ‘கற்றது தமிழ்’ என இந்தக் கூட்டணியில் வெளியான பல திரைப்பட ஆல்பங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தக் கூட்டணியின் மற்றொரு திரைப்படம் 2013இல் வெளியான ‘தங்க மீன்கள்’. இதில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். “மறைந்த நா.முத்துக்குமாருக்குக் கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச் சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன்” என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நிகழ்வில் பேசியிருப்பார் யுவன் சங்கர் ராஜா. ‘மெட்டமைப்பதில் யுவனுக்கு இருக்கும் தனித்துவம்’ பட மூலாதாரம்,YUVANSHANKARRAJA/FACEBOOK படக்குறிப்பு,கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார் யுவன் தமிழ்க் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி, ‘தாஸ்’, ‘சண்டைக்கோழி’, ‘தீபாவளி’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட பல படங்களில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நான் மகான் அல்ல, திரைப்படத்தின் ‘இறகைப் போலே’ காதல் உணர்வுகளைச் சொல்லும் ஒரு மெலடி பாடல், ஆனால் ‘தெய்வம் இல்லை’ என்ற பாடல் கதாநாயகனின் தந்தை இறந்த பிறகு வரும் சோகப் பாடல். இரண்டு பாடல்களுக்கும், ஒரே நாளில் அடுத்தடுத்து இசையமைத்தார் யுவன். பாடல்களின் சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டு, உடனடியாகத் தனது மனநிலையை அதற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு மெட்டமைக்கும் அவரது திறன் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது” என்கிறார். யுவனுடன் பணிபுரிவது மிகவும் இலகுவாக இருக்கும் என்று கூறிய யுகபாரதி, யுவனுடனான மற்றோர் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். “ஒருமுறை இசையமைப்புப் பணிகளுக்காக 5 நாட்கள் மலேசியா சென்றிருந்தோம். முதல் நான்கு நாட்கள் மெட்டமைப்பது குறித்து யுவன் எதுவுமே பேசவில்லை. சரி, 5ஆம் நாள் தமிழ்நாட்டிற்குத் திரும்பலாம் எனத் தயாரானபோது, திடீரென்று அன்று காலை யுவன் அழைத்து 8 டியூன்களை (Tune) போட்டுக் காட்டினார். நான்கு நாட்களாகச் சத்தமின்றி அனைத்து வேலைகளையும் அவர் பார்த்துள்ளார்.” பட மூலாதாரம்,YUGABHARATHI/X “எந்த மெட்டைத் தேர்ந்தெடுப்பது என நான் திணறிப் போனேன். அனைத்தும் நன்றாக இருந்தது. அதிலிருந்து ஒரு மெட்டுதான் ‘சண்டைக்கோழி’ திரைப்படத்தில் வரும் ‘தாவணி போட்ட தீபாவளி’ என்ற பாடல். இப்படி எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மிகவும் இயல்பாகப் பணியாற்றக் கூடியவர் யுவன் சங்கர் ராஜா” என்று கூறினார் யுகபாரதி. இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி 'பியார் பிரேமா காதல்', 'மாமனிதன்' போன்ற திரைப்படங்களுக்குத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ படத்திற்கும், 2010ஆம் ஆண்டு வெளியான ‘பையா’ படத்திற்கும் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார் யுவன். 2004ஆம் ஆண்டு ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதையும், 2006ஆம் ஆண்டு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘ராம்’ படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார் யுவன். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் யுவன் பெற்றார். 2022ஆம், சத்யபாமா பல்கலைக்கழகம் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cnvy87ygm3ro
  15. Published By: RAJEEBAN 07 SEP, 2024 | 09:48 AM மேற்குகரையில் நேப்லஸிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க – துருக்கி யுவதி இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் அய்செனூர் எய்கி என்ற யுவதி கொல்லப்பட்டுள்ளார். அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவேளை தலையில் சுடப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் பெய்ட்டா கிராமத்திற்கு அருகில் இடம்பெறும் வாராந்த ஆர்ப்பாட்டங்களின் போது இவர் சுடப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை இஸ்ரேலிய இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.படையினர் மீது கல்லை எறிந்து அவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்திய வன்முறையை தூண்டிய முக்கிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம்,இதன் காரணமாக வெளிநாட்டு பிரஜை கொல்லப்பட்டமை குறித்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட யுவதி சர்வதேச ஒற்றுமை இயக்கத்தின் தொண்டராக செயற்பட்டு வந்தார், பாலஸ்தீனிய ஆதரவு குழுவான இதன் தொண்டர் ஒருவர் 2003 இல் கொல்லப்பட்டார். பாலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேல் புல்டோசர்களை பயன்படுத்தி அழிப்பதை தடுக்க முயன்றவேளை அவர் கொல்லப்பட்டார். https://www.virakesari.lk/article/193045
  16. Published By: VISHNU 07 SEP, 2024 | 12:15 AM நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அநுரகுமா திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர். எனவே ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/193039
  17. ஒல்லி போப் ஆபார சதம், டக்கட் அரைச் சதம்; பலமான நிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 06 SEP, 2024 | 11:50 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில அணித் தலைவர் ஒல்லி போப், பென் டக்கட் ஆகிய இருவரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இங்கிலாந்து பலமான நிலையில் இருக்கிறது. மேலும் ஏற்கனவே இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ள இங்கிலாந்து தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் முன்னேற முயற்சிக்கவுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக மாலை 5.45 மணியளில் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர்முடிவுக்கு வந்தபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் ஒல்லி போப் 103 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 103 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தனது 49ஆவது டெஸட் போட்டியில் விளையாடும் ஒல்லி போப் தனது 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். முன்னதாக ஆரம்ப வீரர் டான் லோரன்ஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இங்கிலாந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (45 - 1 விக்.) ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் பென் டக்கட்டும் ஒல்லி போப்பும் 2ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். பென் டக்கெட் 79 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோ ரூட் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டபோது ஒல்லி போப்புடன் ஹெரி புறூக் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லஹிரு குமார 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/193037
  18. புலரின் தற்காலிக செயற்பாட்டிமாக முதியோர் சங்க கட்டிடத்தை பாவிக்கிறோம் அக்கா. அங்கே மதிய உணவு மட்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முதியோர்களுக்கு கொடுக்கினம். அதற்கு முதியோர்கள் பலர் இணைந்து தனியான நிர்வாகம் செய்கிறார்கள். எனது தந்தையார் தலைவராக இருக்கிறார். வெளிநாட்டு, உள்நாட்டு மக்களின் நன்கொடைகளால் முதியோர் சங்கம் செயற்படுகிறது.
  19. ஜோடிப் பொருத்தம் நல்லா இல்லை என்பது தான் என் மனதில் படுவது. ஆனால் அவர்களுடைய சொந்த விருப்புகளில் நாம் மூக்கை நுழைக்க முடியாது தானே அண்ணை. அவருடைய ஆசிரியரைத் திருமணம் செய்தவர் என நினைக்கிறேன் அண்ணை.
  20. ஆசிரியர் தினக் குறிப்பு இது. ஆனால் ஆசிரியர்களைப் பாராட்டுவதோ பெருமிதத்தில் திளைப்பதோ நன்றியுணர்ச்சியில் பொங்குவதோ என் நோக்கம் அல்ல. நன்றியுணர்ச்சி மிகவும் நல்லதே என்றாலும் அதைவிட முக்கியமான ஒரு பிரச்சினையை இங்கு பேச வேண்டும் என நினைக்கிறேன் - இந்த ஆசிரியர் தினமன்று பெரும்பாலான ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். என் நண்பர்கள் பலர் கல்லூரி ஆசிரியர்களாக தனியாரிலும் அரசுதவி நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள் - வேலையும் அழுத்தமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, வாழ்க்கையில் நிம்மதியில்லை, வேலையில் திருப்தியில்லை. ஓய்வு பெற்ற பேராசிரியர்களிடம் பேசும் போது “நல்லவேளை நாங்கள் தப்பித்துவிட்டோம், உங்கள் தலைமுறையில் ஆசிரிய வேலையானது சார்ளி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் படத்தில் அவர் எந்திரத்துக்குள் மாட்டிக்கொள்வாரே அதைப் போல ஆகிவிட்டது, நல்லவேளை நாங்கள் தப்பித்துவிட்டோம்” என்கிறார்கள். உலகளவிலும் இதுவே நிலைமை என்பதை வாய்ஸஸ் ஆப் அகாடெமியா எனும் இணையதளத்தில் கிளென் ஒ ஹாரா எனும் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய கட்டுரை (It is not Your Fault that Academic Life is Getting Harder) காட்டுகிறது. “பேராசிரியர்கள் இன்று மிகவும் அழுத்தத்தில், நெருக்கடியில், பதற்றத்தில், பாதுகாப்பின்மையில் இருக்கிறார்கள்” என அவர் தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். இந்தப் பத்தியைப் பாருங்கள்: “It is impossible to be a top-line manager and administrator and mentor and researcher and writer and outreach officer and IT expert and online instructor and pedagogical innovator and recruiter and teacher and marker and external examiner and press pundit and grant bidder and editor and look after your own wellbeing. No-one can do that. Yet that’s what is often asked.” அண்மையில் ஒரு கருத்தரங்கில் நான் ஒரு நிர்வாகவியல் பெண் பேராசிரியரிடம் பேசும்போது ஓ ஹாரா சொல்லுகிற இதே விசயத்தை சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் வரிக்கு வரி எந்த மாற்றமும் இல்லாமல் அதையே சொன்னார். இந்த வாக்கியம் ஏதோ உலகம் முழுக்க ஆசிரியர்களின் மனதுக்குள் உழன்று கொண்டிருப்பதைப் போல. அவரும் என்னைப் போல இதற்கு முன்பு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தவர். அவர் இணைய வழியான விற்பனையிலும் நான் மின்பதிப்புத் துறையிலும் இருந்திருக்கிறோம். அந்த வேலைகளுக்கு ஒரு எல்லை, கால வரையறை இருந்தது; நீங்கள் காலையில் போனால் மாலைக்குள் முடித்துக்கொள்ளலாம். அதன் பிறகு உங்கள் உலகம் உங்களுக்கு. ஆனால் பேராசிரியர் ஆன பிறகு “தூங்கும்போது கூட அந்த வேலையே எப்போதும் மனதுக்குள் ஓடுகிறது, பின்மாலையில் கூட ஆன்லைனில் வகுப்பு எடுக்கிறேன், இரவில் மின்னஞ்சல்களைப் பார்த்து பதிலளிக்கிறேன், தேர்வுத்தாள்களைத் திருத்திக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார். புத்தகங்களைப் படித்து தயாரித்துக்கொண்டு வகுப்புக்குப் போய் பாடம் எடுப்பதே இப்போது எளிதான பணி, மற்றவை எல்லாம் தலையை கிரைண்டரில் மாட்டிக்கொண்டு அரைபடுகிற வேலைகள். ஆனால் அந்த பிரதான வேலையை விடுத்து வேறு கடமைகளே இன்று அதிக நேரத்தை இழுக்கின்றன. நான் ஒரு பட்டியல் இடுகிறேன்: நீங்கள் ஒரு ஆசிரியராக சமூகப் பணியாற்ற வேண்டும். எதாவது ஒருவிதத்தில் உங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கோ கல்லூரிகளுக்கோ சென்று இலவசமாக பாடம் சொல்லித் தரவேண்டும். இதை அவுட்ரீச் புரோக்கிராம் என்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும் நிறுவனங்கள் இதை வலியுறுத்துவதால் உலகம் முழுக்க இது தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு முறைப்படி ஆலோசனை வழங்கவேண்டும். அனேகமாக எல்லா மாணவர்களுக்கும் முறைமைக்கு வெளியே ஆலோசனை வழங்கியபடியே இருக்க வேண்டும். மாணவர்கள் வகுப்புக்கு கொண்டு வரப்படுவது, அவர்கள் கவனம் செலுத்துவது, தேர்வுகளில் கட்டாயமாக அதிக மதிப்பெண்கள் எடுப்பது, உடல்நலமற்று, மனநலமற்றுப்போய் கல்வியில் ஆர்வம் செலுத்த முடியாமல் போய் வகுப்பில் இருந்து கழன்றுகொண்டாலும் அவர்களை எப்படியாவது படிக்கவைத்து தேர்வடைய செய்யவேண்டும். அவர்கள் எத்தனை முறைகள் தோல்வியடைந்தாலும் திரும்பத்திரும்ப தேர்வுகள் எழுத வைத்து தேர்வாக்க வேண்டும். ஒரே மாணவருக்கு பலமுறை தேர்வுகளை நடத்தி திருத்திக்கொண்டே இருந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். ஒரு கட்டத்தில் இவர் எப்படியாவது தேர்வானால் போதும் என நீங்கள் பிரார்த்திக்கத் தொடங்கிவிடுவீர்கள். யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு ஆண்டும் அறுநூறு மாணவர்களில் இப்படி கணிசமானோரை நீங்கள் கவனித்துக்கொண்டும், அவர்களில் பத்து சதவீதத்தினரைத் துரத்திக்கொண்டும் இருந்தால் உங்களால் வேறு எதில் தான் கவனம் செலுத்த முடியும்? முன்பு இதை தனிப்பட்ட அக்கறையில் செய்தார்கள், ஆனால் இன்றோ கல்வி முழுமையான வணிகம் என்பதால் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இதைச்செய்கிறார்கள். முக்கியமாக, இன்று உங்கள் மீது வந்து குவியும் பல்வேறு வேலைகளில் இதுவும் ஒன்றாகையால் இது வதையாகி விடுகிறது. இவ்விசயத்தில் கல்லூரி ஆசிரியர்களை விட பள்ளி ஆசிரியர்கள் நிலை இன்னும் மோசமானது என அறிவேன். அவர்கள் இரவெல்லாம் கணினியில் அமர்ந்து எதாவது ஒரு மதிப்பெண்ணை உள்ளிட்டபடி இருக்கிறார்கள். கணினிமயமாக்கல் முன்னேற்றத்தை விட வேலைத்திணிப்பையே அதிகமாக்கியிருக்கிறது. அடுத்து, நீங்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதை ஆவணப்படுத்தி தனியாக தொகுத்து வைக்கவேண்டும். நீங்கள் உங்கள் வகுப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவற்றையும் புகைப்படங்கள் எடுத்து நிகழ்ச்சி சுருக்கம் எழுதித் தொகுத்து வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் வகுப்பில் மாணவர்களுடன் ஆர்வமூட்டும் வகையிலோ வித்தியாசமாகவோ எதையாவது பாடமெடுக்கும்போது செய்தால் அதையும் மேற்சொன்ன வகையில் ஆவணப்படுத்த வேண்டும். ஐந்தில் இருந்து ஏழெட்டு முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து அவர்களுடைய பல பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை வழங்கி அவர்களைக் கண்காணித்து எப்படியாவது ஆய்வறிக்கையை மூன்றாண்டுகளுக்குள் முடிக்கச்செய்யவேண்டும். அவர்களை மாதாமாதம் சந்தித்து அதையும் ஆவணப்படுத்த வேண்டும். வருடத்திற்கு சிலமுறைகள் அவர்களுடைய முன்னேற்றத்தை ஆய்வுசெய்யும் கூட்டங்களை நடத்துவதுடன் பிற நெறியாளர்களின் மாணவர்களுக்கான ஆய்வு ஆலோசனைக் குழுக்களிலும் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் கோடை விடுமுறையின்போது வெளியே நிறுவனங்களுக்கு சென்று பணிக்கல்வி பெறுவது இன்று தேசிய கல்விக்கொள்கைக்குப்பிறகு கட்டாயம். ஆனால் மாணவர்களில் ஒருபகுதியினர் இதில் முறைகேடுகளை (போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தல்) செய்வதால் எல்லா மாணவர்களையும் ஆவணரீதியாக பின்தொடரவேண்டும். தொடர்ந்து ஆவணங்களை சமர்பிக்கச்சொல்லி அதை கடைசியில் ஒரு ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்க சொல்லவேண்டும். [அதாவது இன்று மாணவர்கள் கழிப்பறைக்கு செல்வதைத்தவிர அனைத்தையும் ஆவணப்படுத்தி தாம் ‘கற்கிறோம், கற்கிறோம்’ என்பதை சமூகத்துக்கு நிரூபித்தாகவேண்டும் கட்டாயத்தில் இருப்பதால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.] நீங்கள் சொந்தமாக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி அதைத் தேர்வுப்பாடமாக மாணவர்கள் எடுப்பதற்கான ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும் (கபெட்டேரியா சிஸ்டம்). அப்பாடத்தை மாணவர்கள் எடுக்காவிடில் உங்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. நீங்கள் உங்கள் பாடத்திட்டத்திற்கான வகுப்புத்திட்டங்களை விரிவாக எழுதி, அவை பாடத்தின் இலக்கு, மாணவரின் கல்வி இலக்கு, நிறுவனத்தின் இலக்குடன் ஒத்துப்போவதாக புள்ளிகளைக் கொண்டு நிரூபித்துக்காட்ட வேண்டும் (விளைவு-சார் கல்வி எனும் OBE). நீங்கள் கேள்வித்தாளை உருவாக்கும் போதும், அதைத் திருத்துவதற்கான வழிகாட்டி ஆவணத்தை உருவாக்கும் போது இந்த சிஸ்டத்துடன் அது ஒத்துப்போவதாக நிச்சயமாகக் காட்டவேண்டும். இல்லாவிட்டால் வேலை போய்விடும். இதை சாதாரணமானவர்கள் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் மேற்சொன்ன வகுப்புத்திட்டத்தை ஒவ்வொரு வகுப்பிலும் துல்லியமாகப் பின்பற்றுகிறீர்களா என்பது பலவகைகளில் இன்று கண்காணிக்க முடியும். ராணுவ ஒழுங்குடன் செயல்படவேண்டும். கொஞ்சம் பிறழ்ந்தால் கூட அது பின்னர் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களிடம் கருத்துக்களைப் பெற்று பின்னாய்வை நிர்வாகம் செய்யும். உங்களுக்கான பின்னாய்வுப் புள்ளிகள் குறைவாக இருந்தால் அது பல சிக்கல்களைக் கொண்டுவரும், நீங்கள் வேலையை இழக்க நேரிடும் என்பதால் நீங்கள் மாணவர்களின் மனம்கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். எப்போதுமே ஒருவித கவலையில் இருக்கவேண்டும். நீங்கள் தினம் தினம் உங்கள் ஆய்வுப்புலத்துக்கோ பணிக்கோ தொடர்பில்லாத நிர்வாகரீதியான எதாவது ஒரு சந்திப்பில் கலந்துகொண்டு அதையும் ஆவணப்படுத்தவேண்டும். இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஆய்வுத்திட்டப் பணிகளை நெறியாள்கை செய்ய வேண்டும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் எழுதும் பல்லாயிரம் தேர்வுத்தாள்களைத் திருத்தி, அந்த மதிப்பெண்களை இணையம் வழியாகப் பதிவுசெய்து, அந்த மதிப்பெண்களை ஆய்வுசெய்து, மதிப்பெண்கள் அதிகரித்தால் அது ஏன் நடக்கிறது என்றும் (நீங்கள் சரியாகத் திருத்தவில்லை), குறைந்தால் அது எப்படி நடக்க இயலும் என்றும் (நீங்கள் சரியாக பாடமெடுக்கவில்லை) விளக்கி ஆவணப்படுத்தவேண்டும். நீங்கள் வகுப்புக்கு ஒழுங்காக வராத மாணவர்களை அழைத்துவைத்து ஆலோசனைவழங்கி, பாடமெடுத்து, அப்பாடத்தில் இருந்து இடுபணிகளை அளித்து, அவர்களுக்கான வருகைப் பதிவை அளிக்க வேண்டும். வகுப்பில் மாணவர்கள் சரியாக மதிப்பெண் ஈட்டாவிடில் அவர்களுக்கு மறுவகுப்புகளை மாலையில் நடத்தி மதிப்பெண்களை அதிகரிக்க உதவவேண்டும். நீங்கள் ஊடகங்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றோ கவனம் பெற்று நிறுவனத்தையும் நல்ல வெளிச்சத்தில் வைத்திருக்கவேண்டும். நீங்கள் உங்கள் வேலை நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆவணப்படுத்தி உங்கள் வேலையானது நிறுவனத்துக்கு பயனுள்ளதாக இருந்தது என நிரூபிக்க வேண்டும். நீங்கள் வாட்ஸாப், மெயில் போன்ற செயலிகள் வழியாக நள்ளிரவு தூங்கச்செல்லும்வரையில் மாணவர்களுடனும் நிர்வாகத்துடனும் தொடர்பில் இருந்தாக வேண்டும். நீங்கள் வேலை மனநிலையில் இருந்து துண்டித்துக் கொள்ளவே கூடாது. நீங்கள் இன்று உயர்கல்வி நிறுவனங்களில் (ஸ்கோபஸ், வெப் ஆப் சயின்ஸ் போன்ற நிறுவனங்களால்) தரவரிசைப்படுத்தப்பட்ட ஆய்விதழ்களில் கட்டாயமாக கட்டுரைகளைப் பதிப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையையும் அனுப்பி மூன்று நான்கு மாதங்கள் காத்திருந்து பதிலைப் பெற்று மீண்டும் வேறு இதழ்களுக்கு அனுப்பி தாவு தீர்ந்துவிடும். வருடம் முடியுமுன்பு இதழில் கட்டுரை வராவிடில் வேலை போய்விடும். ஆகையால் சில கல்லூரிப் பேராசிரியர்கள் கூட்டுசேர்ந்து தரவரிசையில் வரும் இதழ்களுக்கு லட்சங்களில் பணம் கொடுத்து கட்டுரையைப் பதிப்பிக்கிறார்கள். இது ஒரு தனி ஊழலாகப் போய்க்கொண்டிருக்கிறது. நீங்கள் வருடத்திற்கு சில கருத்தரங்குகளிலாவது ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்க வேண்டும். அடுத்து, நீங்கள் எதாவது ஒரு ஆய்வு நல்கையை அரசிடம் இருந்தோ வேறு நிதியளிக்கும் நிறுவனத்திடம் இருந்தோ பெற்று ஆய்வுப் பணி ஒன்றை செய்ய வேண்டும். ஒரு ஆய்வாளராக நீங்கள் எதாவது ஒன்றை அடிக்கடி கண்டுபிடித்து அதற்கான காப்புரிமத்தைப் பெறவேண்டும். அடுத்து, நீங்கள் தொழில் நிறுவனங்கள், வெளிக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு சென்று எதாவது ஒரு சேவையை வழங்கி பணம் ஈட்டி, அப்பணத்தில் ஒரு பகுதியை உங்கள் கல்வி நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் (கன்சல்டன்ஸி). ஆண்டுக்கு சில லட்சங்களையாவது ஈட்டிக்கொடுக்காவிடில் வேலைக்கு நெருக்கடி வரும். இதை இன்று அனேகமாக எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்துகிறார்கள். இவை போக நீங்கள் தினமும் 3-4 மணிநேரங்கள் வகுப்புகளையும் நடத்தவேண்டும். இன்று நீங்கள் தனியார், அரசு உயர்கல்வி நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தால் மேற்சொன்ன வகைமைகளில் உங்கள் கடந்த மூன்றாண்டுப் பங்களிப்பு என்னவென்று தகவல்களை அளிக்கவேண்டும். நான் நல்ல ஆசிரியர், ஆய்வு செய்கிறேன் என்றால் மட்டும் வேலைகொடுக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு ஆவணக்காப்பகத்தையே உருவாக்கிக் காட்டினால் தான் வேலைகிடைக்கும். இவ்வளவு சிக்கல்களும் இன்று தோன்றுவதற்கான காரணம் உயர்கல்வி முழுக்க தனியார்மயமாகி வருவதுதான். தொழிற்சாலைகளில் பின்பற்றும் உற்பத்தி அளவை அமைப்பைக்கொண்டு கல்விப்பணியை மதிப்பிடும்போது நிர்வாகத்தினருக்கு இவர்கள் வேலையே செய்யவில்லை என்று தோன்றுவது சுலபம். கல்வியளிப்பது அரூபமான, செயல்சார்ந்த பணி. அதை நீங்கள் பருப்பொருளாக உருவாக்கிக்காட்ட முடியாது. ஒரு மாணவரின் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமானது தகவல்பூர்வமானது அல்ல, அது உணர்வுசார்ந்தது, திறன்சார்ந்தது. அதைத் துல்லியமாக நிரூபிக்க இயலாது. மேலும் ஆசிரியரின் பணி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருப்பதாகையால் அதை லௌகீகமாக மதிப்பிடுவது கடினம். வகுப்பில் மட்டுமல்ல வகுப்புக்கு வெளியில் மாணவருடன் உரையாடுவதும் கல்விதான். ஒரு ஐ.டி பணியாளர் தன் வேலைச் சாதனையைக் காட்டுவதைப் போல ஒரு ஆசிரியரால் துல்லியமாக வர்ணிக்க முடியாது. மொழியில் தகவல்பூர்வமாக நிரூபித்துக் காட்ட முடியாதது வேலையே அல்ல என்று இன்றைய நிர்வாகங்கள் கருதுகின்றன. இது அவர்களை ஆசிரியர்களின் பணிகளை இன்னும் இன்னும் அதிகரிக்க வைக்கின்றன. எவ்வளவு தான் ஆசிரியர்கள் பணிசெய்தாலும் அவர்கள் ‘வெட்டியாக’ இருக்கிறார்கள் என்றே சமூகமும் தனியார் நிர்வாகமும் கருதி தொடர்ந்து விமர்சித்தும் ஒடுக்கியும் வருகிறார்கள். ஆனால் நிஜத்தில் பத்து பேர்கள் செய்யவேண்டிய பணிகளை ஒரே நபர் செய்வதே இன்றைய ஆசிரியப்பணி. கல்வி புகட்டும் திறன், ஆய்வுத்திறன், அறிவுத்திறனை விட இன்று கல்லூரி ஆசிரியர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது தர உள்திப்பீட்டு (IQAC) ஆவணங்களை உருவாக்கும் திறன். யு.ஜி.ஸி மட்டும் தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் விதத்தில் ஆவணங்களையும் தரவுகளையும் உற்பத்தி செய்து அவற்றை நெறியாள்கை செய்வதே இத்திறன். இது அடிப்படையில் விளம்பரம் மற்றும் பிம்பக் கட்டமைப்புப் பணி. இதில் அனுபவம்கொண்ட ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் நேர்முகத்தின் போது முன்னுரிமை அளிக்கிறார்கள், அவர்களுக்கு பதவியுர்வு கிடைக்கவும் வாய்ப்பதிகம். எதிர்காலத்தில் இதை முதுகலைப் பாடத்திலேயே கற்றுக்கொடுத்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் இதற்கும் உயர்கல்விக்கும் அறிவுக்கும் என்ன சம்மந்தம் என்றால் ஒன்றுமேயில்லை. அதேநேரம் மாணவர்களிடம் புறவயமாக கருத்துக்கேட்டோ அவர்களுடைய அறிவுத்திறனை மதிப்பிட்டோ உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையிலோ யு.ஜி.ஸி ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடுவதில்லை. யு.ஜி.ஸியின் NAAC குழுவிடம் எந்த நிறுவனம் தன்னிடம் மிக அதிகமாக ஆவணங்களை சமர்ப்பிக்கிறதோ அதுவே தலைசிறந்த உயர்கல்வி நிறுவனம் என்று சொல்லி ஐந்து நட்சத்திரங்களை கொடுத்துவிடும். அந்த ஆவணங்களைக் கொடுக்காவிடில் அந்நிறுவனத்துக்கு இரண்டு நட்சத்திரங்களைக் கொடுக்கும். அங்கு போய் அங்கு என்ன நடக்கிறது, பாடம் எப்படிக் கற்பிக்கப்படுகிறது, மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பற்றி எந்த ஆய்வும் செய்யாது, செய்தாலும் அதைக் கணக்கில் எடுக்காது. தர மதிப்பீடானது ஆவணங்களை மட்டும் சார்ந்திருக்கும் போது ஊழல் நடக்க வாய்ப்பே அதிகம். மேலைநாடுகளில், வளர்ந்த நாடுகளில் என்ன நடக்கிறது? அங்கு பிரசுரி அல்லது அழிந்துபோ (publish or perish) எனும் நெருக்கடி உயர்கல்வியாளர்களுக்கு 70களிலேயே இருந்ததாகவும், அதனால் ஆய்வின் தரம் மோசமாகிவிட்டதாகவும் சொல்வார்கள். இங்கு ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு அந்தப் புயல் தாக்குகிறது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைகளுக்கு தெற்காசிய மாணவர்களிடம் நல்ல மவுசு உள்ளதால் இங்கிருந்து கணிசமான கட்டணம் முதலீடாக அங்கு போகிறது. அங்கு தனியார் நிதியும் உயர்கல்விக்கு அதிகமாக கிடைக்கிறது. அங்கு முதுகலை + முனைவர் ஆய்வு மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகமான நேரத்தை கல்வி, ஆய்வில் செலுத்த முடிகிறது. இங்கு பெரும்பாலான நிதி உள்ளூர் மாணவர்களின் கட்டணத்தில் இருந்து வருகிறது. 80% மேல் இளங்கலை மாணவர்களாகையால் ஆய்வுசார்ந்த கல்வியில் உயர்கல்வியாளர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. அதிகமும் எளிமைப்படுத்தி புகட்டுவதே கல்வியாக உள்ளது. தனியார் நிறுவனங்களும் இங்கு கல்விக்காக நிதியளிப்பதில்லை. அதே நேரம் இன்னொரு பக்கம் ஆய்வு, அறிவார்ந்த வளர்ச்சி, திறன் மேம்படுத்தல் என்று சொல்லி கல்லா கட்ட வேண்டியுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் உள்ள மிகப்பெரிய நெருக்கடி அவர்களுடைய வாடிக்கையாளர்களான மாணவர்கள் வடிகட்டப்பட்ட சிறந்த மாணவர் திரள் (கிரீமி லேயர்) அல்லர், சராசரியானவர்கள். ஆனால் சராசரிகளையும், குறைவான மதிப்பெண் பெற்றவர்களையும் மறுக்காமல் பிடித்து இடமளித்து, அவர்களுக்கு ஆய்வு, உயர்தரக் கல்வி எனும் பெயரில் அடர்த்தியான, சிக்கலான அடிப்படைக் கல்வியை, ஆய்வறிவை வழங்கவும் வேண்டும், அவர்கள் படிக்கவும் ஆய்வு செய்யவும் ஆர்வம் காட்டாவிடினும் அவர்களைத் தோற்க வைக்கவும் கூடாது. தரத்தை முன்னிலைப்படுத்தினால் லாபம் கிடைக்காது. ஐ.ஐ.டியும் பிரின்ஸ்டன், கொலொம்பியா பல்கலைக்கழகங்களும் பல நூறு மடங்கு அதிக நிதியுடனும் வசதிகளுடன் செய்யும் காரியத்தை மிகக்குறைந்த நிதியுடனும் வசதிகளுடனும் இந்தியாவில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் செய்யும்படி நெருக்கடி உள்ளது. ஒரு அரசு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் நடத்துவதை விட இரட்டிப்பு வகுப்புகளை தனியாரில் நடத்தவேண்டும், பத்து மடங்கு அதிகப் பணிகளை செய்யவேண்டும், ஆய்வுப் பணிகளுக்கு அரசுப் பேராசிரியர்களுக்குக் கிடைக்கும் நிதியில் நூற்றில் ஒரு மடங்குதான் தனியார் பேராசிரியர்களுக்குக் கிடைக்கும், ஆனால் செயல்பாட்டிலும் பிரசுரத்திலும் மட்டும் அவர்கள் அரசுப் பேராசிரியர்களையும் ஹார்வர்டு பேராசிரியர்களையும் ஒத்திருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து மாணவர்களைப் பற்றி சொல்லவேண்டும். அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படிக்க சென்ற மாணவர் ஒருவர் அங்கு ஒருநாளைக்கு 2-3 மணிநேரங்களுக்கு மேல் வகுப்புகள் இராது, ஒரு பேராசிரியர் மாதத்திற்கு எழெட்டு வகுப்புகளே எடுப்பார்கள் என்றார். மாணவர்கள் பகலில் வேலை பார்த்துக்கொண்டு, மிச்ச நேரத்தில் வகுப்புக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு கல்லூரிக்கு மாலையில் வந்து பயில்கிறார்கள். வகுப்புக்கு வருமுன்பு இவ்வளவு கட்டுரைகளையும், அத்தியாயங்களையும் வாசித்துவிட்டே வரவேண்டும் எனப் பேராசிரியர்கள் வலியுறுத்தினால் மாணவர்கள் செய்கிறார்கள். இங்கோ அதையே ஒரு புகாராக போய்ச் சொல்வார்கள். “எங்களை அதிகமாகப் படிக்கவைக்கிறார்கள், எங்களால் வாசிக்க முடியவில்லை” எனும் புகாரை நீங்கள் ஹார்வர்ட்டில் போய்ச் சொல்லமுடியாது. இந்தியாவில் மாணவர்கள் அப்படிச் சொன்னால் அப்படிக் கோரிய ஆசிரியரைக் கூப்பிட்டுத் திட்டுவார்கள் என்று தனியார் கல்லூரியொன்றில் பணியாற்றும் என் நண்பர் ஒருவர் சொன்னார். ஏனென்றால் இங்கு குறைந்தது 8 மணிநேர வகுப்புகள், காலையில் இருந்து மாலை வரை மாணவர்களை வகுப்பிலேயே வைத்திருக்கவேண்டும் எனப் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். (வெளிநாடுகளில் தம் பிள்ளைகள் படிக்கும்போது இதைப் பெற்றோர்கள் குறைவான வகுப்புகளைக் குறைசொல்ல மாட்டார்கள். வெள்ளைக்காரர்கள அல்லவா!) அடுத்து, வகுப்பு நேரத்திற்கு வெளியிலும் எதாவது ஒரு நிகழ்வு - ஆட்டம், பாட்டம், வெவ்வேறு பயிற்சிகள் - என அவர்கள் ஈடுபட்டபடி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் மாணவர்களுக்கு வாசிக்கவோ சிந்திக்கவோ நேரம் இருப்பதில்லை. அப்படி நேரம் வழங்கப்பட்டால் மாணவர்களுக்கு அந்நேரத்தை செலவிடவும் தெரிவதில்லை. சிறுவயதில் இருந்தே கோழிப்பண்ணை கோழிகளைப் போல வளர்த்துவிடுகிறோம். இந்தியா முழுக்க மாணவர்கள் நேரடியாக வாசித்து சொந்தமாக யோசிக்கும்படி நம்மால் கேட்க முடியாததும், கரண்டியால் கல்வியை எடுத்தூட்ட வேண்டிய நிலை இருப்பதும் இதனால் தான். வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஆய்வு சாத்தியங்கள் இங்கு இல்லாதது இந்தச் சூழலால் தான். இங்கு தரம் அல்ல, அளவும் எண்ணிக்கையும்தாம் முக்கியம். இங்கு அதிகமான நேரம் பாடம் கேட்கவேண்டும், படிக்கக் கூடாது, இங்கு அதிகமான விசயங்களை மேலோட்டமாக கற்றுக்கொடுக்க வேண்டும், எதாவது ஒன்றில் ஆழமாகப் பயிற்றுவிக்கக் கூடாது. கலந்து குழைத்தடிப்பது தான் நம் பாணி. வெளிநாட்டில் போய்ப் படிக்கும்போது வரும் பொறுப்புணர்வு இந்தியாவில் இருக்கும்போது வருவதில்லை. இங்கு தனியாரில் தாம் அதிகப் பணம் செலுத்திப் படிப்பதாலே தமக்கு அதிக மதிப்பெண்கள் சுலபத்தில் அளிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒருவித சுரணையின்மை, முரட்டுத்தனம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் போய் அதைக் கேட்க மாட்டார்கள். வெள்ளைத்தோலிடம் உள்ள பயம். இன்னொரு சிக்கல் - இது உலகம் முழுக்க உள்ளதுதான் - மாணவர்களின் மனநிலை. குப்பையான உணவுகளை அதிகமாகத் தின்று, சமூகமாக்கல், போதைப்பழக்கம், அதிக நேர வேலை என்று அவர்கள் மிகவும் உடல், மனநலம் சீரழிந்து போயிருக்கிறார்கள். தினமும் சராசரியாக 3-4 மணிநேரங்களே தூங்குகிறார்கள். விதவிதமான வியாதிகள் இல்லாத மாணவர்களையே நான் இன்று காண்பதில்லை. அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை. மிகச்சீக்கிரமாக உணர்வுவயப்படுவது, சின்னச்சின்ன விசயங்களுக்கு புண்படுவது, கோபப்படுவது, மன அழுத்தம் கொள்வது, பகல் நேரத்திலேயே உறங்கிப் போவது, கவனம் சிதறிக்கொண்டே இருப்பது என இன்றைய மாணவர்களின் பிரச்சினைகள் வினோதமானவை. இவர்களைக் கையாள்வதற்கு ஒரு உளவியல் ஆலோசகரின் மதிநுட்பமும் காவலரின் திரளை மிரட்டிக் கட்டுப்படுத்தும் திறனும் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம், கடுமையானத் தாழ்வுணர்வும், இணையத்தில் நுனிப்புல் மேய்வதை வைத்து தனக்கு எல்லாம் தெரியும் என நம்புகிற அகந்தையும் அதிகமாகிவருகிறது. அதாவது இரண்டு எதிர்நிலைகளிலான சிந்தனைகள் அவர்களுடன் இருக்கும் - “எனக்கு ஒன்றுமே தெரியாது, வராது, யாருக்கும் என்னைப் பிடிக்காது, ஆனால் எனக்கு எல்லாமே தெரியும், வரும், உலகமே என் காலின் கீழ்தான்.” இவர்களிடம் பேசி சரிகட்டி அமைதிப்படுத்தி உங்கள் வழிக்கு அழைத்துப் போகும் போது ஒரு ஆசிரியராக நீங்களும் மனதளவில் நிலைகுலைந்து போவீர்கள். இன்று கல்லூரி ஆசிரியர்கள் அடிக்கடிப் பொதுவெளியில் சொல்லிப் புலம்புவது மாணவர்களால் தமக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளைக் குறித்தே. பள்ளி ஆசிரியர்களின் நிலைமை இன்னும் பரிதாபமானது. வகுப்பில் மாணவர்களின் ஒழுங்கீனத்தில் இருந்து வன்முறை, வறுமை, ஹார்மோன் கோளாறு எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று குடும்பமோ தனிப்பட்ட நாட்டங்களோ சாத்தியமில்லை எனும்படியாக வேலை அவர்களுடைய மொத்த வாழ்க்கையையுமே ஆசிரியப்பணி ஆக்கிரமித்துக்கொள்கிறது. இதை நாம் கொண்டாடக்கூடாது, இதை நாம் விமர்சித்து மாற்ற முயலவேண்டும். வேறெந்த தொழிலிலும் (காவல்துறையைத் தவிர) ஒருவர் தன் மனநிலையை, தனிப்பட்ட நேரத்தை, குடும்பத்துக்கான நேரத்தை ஒப்புக்கொடுக்க வேண்டியிராது என நினைக்கிறேன். அண்மைக் காலங்களில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது என்பது உண்மைதான், ஆனால் எந்தளவுக்கு என்றால் இன்று ஐ.டியில் அல்லாத ஒருவர் படித்து முடித்து இரண்டாண்டுகளில் ஈட்டும் சம்பளம் அளவுக்குத்தான். முன்பு அம்மாணவர்கள் பரிகசிக்கும் அளவுக்கு ஆசிரியரின் சம்பளம் இருந்தது, இன்று அது மாறியுள்ளது, ஆனால் வேலை பத்து மடங்கு அதிகரித்துவிட்டது. ஒரு ஒப்பீடு சொல்கிறேன் - அமெரிக்காவில் பயின்ற மாணவர்கள் ஒருவர் என்னிடம் விமர்சகர் ஜூடித் பட்லர் தனக்கு வகுப்பெடுப்பதாக சொன்னார். அவருக்கு எவ்வளவு மாதச்சம்பளம் இருக்கும் என்று கேட்டேன். இந்திய மதிப்பில் இரண்டு கோடிகளாவது வரும். வேலை நேரம்? ஒரு மாதத்திற்கு நான்கைந்து மணிநேரங்கள். இதே ஜூடித் பட்லர் இந்தியாவில் கறுப்புத்தோலுடன் இருந்திருந்தால் அரை லட்சம் வாங்க மாதம் உளுந்தூர்பேட்டையில் 160 மணிநேரங்களுக்கு மேல் வேலைபார்த்திருப்பார். அவரது சிந்தனைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அமெரிக்காவில் வெளியிராவிடில் அவரை ஒரிஜினல் சிந்தனையாளராக கருதவோ மதிக்கவோ கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கவோ செய்திருக்க மாட்டார்கள். அத்தோடு, வேலையே செய்யாமல் ஒபி அடிக்கிறாய் என்று ஊரே திட்டியிருக்கும். நம் ஊரில் ஜூடித் பட்லர் அளவுக்கு தரத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் ஊதியமோ சாதாரண பட்லர் அளவுக்குத்தான். வேலை செய்வது உண்மையில் மகிழ்ச்சியளிப்பதே, ஆனால் பொருளற்ற வேலை, சம்மந்தமில்லாத வேலை, மேலோட்டமான எந்திரத்தனமான வேலை, மனிதனின் ஆன்மாவைக் கொன்றுவிடக் கூடியது. பல ஆசிரியர்கள் இன்று “இண்டஸ்டிரியே மேல், அங்கு எனக்கு அதிக சுதந்திரமும் நேரமும், வளர்ச்சியும் இருந்தது” என வெளிப்படையாகக் கூறுகிறார்கள். தொழில்துறையில் இல்லாத அளவுக்கு பாதுகாப்பின்மையும், தாழ்வுணர்வும் பதற்றமும் ஆசிரியத்துறையில் உள்ளது. யாரும் மதிப்பதில்லை, யாருக்கும் நம்மைத் தேவையில்லை எனும் உணர்வு கணிசமான ஆசிரியர்களின் மனத்தில் உள்ளது. இன்றைய ஆசிரியர்கள் நடமாடும் கைதிகள். அவர்களை நீங்கள் வாழ்த்தும்போது உள்ளுக்குள் தம்மைக்குறித்து கசந்தபடித்தான் அதை ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் ஊரில் முந்திரி ஏற்றுமதி தொழிற்சாலையை அண்டி பேக்டரி என்று சொல்வார்கள். முந்திரிக் கொட்டையை வறுத்து அதன் ஓட்டை உடைத்து பதமாக எடுக்க வேண்டும். நாள் முழுக்க உடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியப் பணி இன்று ஒரு நவீன அண்டி பேக்டரி ஆகிவிட்டது. இதை ஏன் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் எனும் தத்துவஞானியின் பிறந்தாளன்று நினைவு கூர்ந்து அவரை அவமதிக்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை. மேலும் படிக்க: https://voicesofacademia.com/2024/04/05/its-not-your-fault-that-academic-life-is-getting-harder-by-glen-ohara/ Posted Yesterday by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post.html
  21. 06 SEP, 2024 | 05:35 PM ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஆயுர்வேதத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய, ஆயுர்வேத, சித்த, யூனானி, ஹோமியோபதி வைத்தியர்கள், உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறையினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். உள்நாட்டு மருத்துவத்துறையின் முன்னேற்றத்துக்கான யோசனையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "2022ஆம் ஆண்டு சிகிச்சைக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி தற்போது எழுந்து நடக்கிறார். குணமடைந்த நபரை மீண்டும் நோளாளியாக்குவதற்கு தகுதியற்ற வைத்தியர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் பிரயோசனமற்ற மருந்தை அவர் குடித்தால், அந்த நோயாளியை மீண்டும் குணப்படுத்த முடியாது. அதனால் அந்த மருந்தை குடிப்பதா இல்லையா என்பதை குணமடைந்த நபரே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும் நோயாளியை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்தே எமது நோக்கமாகும். ஒரு நாட்டு இப்படி ஒரு நோய் வருவது நல்லதல்ல. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வெளியில் இருந்தும் சில வைத்தியர்களை வரவழைக்க வேண்டியிருந்தது. வொஷிங்டன், டோக்கியோ உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தோம். இப்போது புதிய வைத்தியர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் தரப்போவதாகச் சொல்லும் மருந்துகளை பார்க்கும்போது பயமாய் இருக்கிறது. அது குறித்து முழுநாடும் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டதோடு அவற்றை செயல்படுத்துவது குறித்து ஆலோசிகிறோம். உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் டபிள்யூ.ஜே.பெர்னாண்டோ தலைமையில் சுதேச மருத்துவம் தொடர்பான முதலாவது குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவ்வாறான அறிக்கைகள் எவையும் வரவில்லை. உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அதற்கான மதிப்பும் கிடைத்தது. இந்த சுகாதார முறமைகள் இலங்கையிலும் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் 1000,2000 ஆண்டுகள் பரலாக காணப்பட்டது. இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இலங்கையில் அது நடக்கவில்லை. எனவே உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம். இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம். இந்தப் பணிகளை முன்னெடுக்க ஆயுர்வேதத் திணைக்களம் மாத்திரம் போதாது. ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப, சுதேச வைத்தியத் முறையின் மறுசீரமைப்பு குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித்து முன்னோக்கிக் கொண்டு செல்வோம். ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். இது இந்தியாவில் செயற்படுகிறது. அந்த முறையை நாமும் பின்பற்ற வேண்டும். நமது சுதேசவைத்திய முறையின் அறிவியல் அடிப்படையைக் கண்டறிந்து செயற்படுவது மிகவும் முக்கியம். அதற்காக ஆராய்ச்சிகள் அவசியம். மேலும், சுற்றுலாத்துறைக்காக இத்துறை, நவீனமயமாக்கப்பட்டு பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது. இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும். எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி: சுதேச வைத்தியத் துறையின் வளர்ச்சி மூலம் தேசியப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பல்வேறு சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை நன்றியுடன் நினைவுகூர விரும்புகின்றேன். அதன் மூலம் சுதேச வைத்தியத் துறையை ஏற்றுமதி வருமானம் ஈட்டக்கூடிய துறையாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். 300 மில்லியன் டொலர்களுக்கு மேல் அந்நியச் செலாவணியை ஈட்டும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரமான மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் சுதேச வைத்தியத் துறையை வெட் வரி இன்றி பேணுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெறப்பட்ட வாய்ப்பைப் பாராட்ட வேண்டும். அத்துடன், பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளை இங்குள்ள அனைவர் சார்பாகவும் நினைவுகூறுகிறேன். சுதேச வைத்தியத் துறையின் மேம்பாட்டிற்காக நீங்கள் காட்டும் அக்கறையும், அதன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க சுதேச வைத்தியத்துறை ஆதரவளிக்கும்" என்றார். பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, சதேச மருந்து உற்பத்தியாளர்கள், கைத்தொழில்துறையினர், மருந்தக உரிமையாளர்கள், மருந்து சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பாரம்பரிய வைத்திய, யூனானி, சித்த மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட சுதேச வைத்தியத் துறையின் பிரதிநிதிகள், பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/193024
  22. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்த 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஜோ பைடனின் வெற்றி ஆகிய இரண்டையும், ஆலன் லிச்மேன் துல்லியமாக கணித்திருந்தார். இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பார் என்று ஆலன் கணித்துள்ளார். ஆலனின் கணிப்பு, கடந்த 10 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் 9 தேர்தல்களில் உண்மையாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜ் புஷ்ஷை, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல் கோர் தோற்கடிப்பார் என்று அவர் கணித்தது மட்டுமே தவறிப்போனது. இதுதவிர, ஜனநாயகக் கட்சிக்கு தனது தனிப்பட்ட ஆதரவை, ஆலன் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதியில், டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான ஜனாதிபதி விவாதம் நடக்கவுள்ள நிலையில், ஆலனின் அதிபர் கணிப்பு அமெரிக்க அரசியலில் பேசுபொருளாகி வருகிறது. https://thinakkural.lk/article/309068
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 செப்டெம்பர் 2024, 11:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்குகின்றன. ஜூலை மாதத்தில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 37 டன்களாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது. போலந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகள் தங்கத்தை வாங்குகின்றன. இப்படி அதிகமாக தங்கம் கொள்முதல் செய்யப்படுவதற்கு நடுவே, சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கவும் செய்கின்றன. ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-காஸா போர், மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி போல, உலகம் முழுவதும் பிரச்னைகள் அதிகரித்து கொண்டிருக்கும் நேரத்தில் உலக நாடுகளின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு நிலையான சொத்தாக இருக்கிறது எந்தெந்த நாடுகளில் தங்கம் வாங்குகின்றது? இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை), தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்ததாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதே காலகட்டத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), போலந்து நாட்டின் மத்திய வங்கி 18.68 டன்கள் தங்கத்தை வாங்கி முதல் இடத்தில் இருந்தது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 18.67 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் துருக்கி 14 டன்களும், உஸ்பெகிஸ்தான் 7.46 டன்களும் மற்றும் செக் குடியரசு 5.91 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, இதே இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் 173.6 டன்கள் தங்கத்தை வாங்கிய நிலையில், இந்த ஆண்டு அது 183 டன்களாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), கஜகஸ்தான் 11.83 டன்கள் தங்கத்தையும் சிங்கப்பூர் 7.7 கிலோவும், ஜெர்மனி 780 கிலோ தங்கத்தை விற்றுள்ளன. பல ஆண்டுகளாக உலக நாடுகளின் சொத்து இருப்புகளில் தங்கம் ஒரு முக்கிய அங்கமாக இன்று வரை இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், தங்கள் சொத்து இருப்புகளில் 1,037 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. 2022-ஆம் ஆண்டில், மத்திய வங்கிகள் 1,082 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. இது உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளைக் கொண்டு மத்திய வங்கிகள் தங்கத்தை ஒரு முக்கியமான சொத்து இருப்பாக பார்க்கின்றன என்பது தெரியவருகின்றது. மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு நிலையான சொத்தாக இருக்கிறது. நிதி நெருக்கடி ஏற்படும் போது, தங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவுகிறது. ஒரு வகையில் சொத்து இருப்புக்களை பன்முகப்படுத்த உதவுகிறது. அமெரிக்க டாலருக்கு 'ரிசர்வ் கரன்சி' என்ற அந்தஸ்து இருக்கிறது. வணிகப் பரிவர்தனைக்காக அமெரிக்க டாலர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே உலகெங்கிலும் உள்ள பல வங்கிகளின் நோக்கமாக இருக்கிறது. இதனைச் செயல்படுத்தத் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேலும் பிரச்னைகள் ஏற்பட்டால், பணமதிப்பு குறைந்து, தங்கத்தின் விலை உயரும் இதற்கான காரணம் என்ன? "அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. அமெரிக்கா வட்டி விகிதங்களை இன்னும் குறைத்தால், டாலரின் மதிப்பு குறையும் என்று மற்ற நாடுகள் நம்புகின்றன. அந்த நிலை வரும்வரை அவர்கள் தங்கத்தை நோக்கி தங்கள் முதலீட்டை செய்கின்றன", என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பொருட்கள் மற்றும் நாணயங்களுக்கான தலைமை அதிகாரியான அனுஜ் குப்தா கூறுகிறார். "அமெரிக்கப் பொருளாதாரம் கடனில் இயங்குவதால், வரும் காலத்தில் டாலர்களின் மதிப்பு இன்னும் குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது,” என்கிறார் அவர். "இந்தியாவும் தனது முதலீட்டைப் பன்முகப்படுத்துவதற்காக இது போலச் செய்கிறது. இந்தியா தனது வெளிநாட்டு இருப்பை அதிகரிக்க வேண்டும். டாலர்களுக்கு ஈடாகத் தங்கத்தை வாங்கினால், இந்தியாவால் அதிக நோட்டுகள் அச்சிட முடியும். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்கிறார் அனுஜ். இதைத் தவிர, உலகின் பல பகுதிகளுக்கு இடையே அரசியல் பதட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் மேலும் பிரச்னைகள் ஏற்பட்டால், பணமதிப்பு குறைந்து, தங்கத்தின் விலை உயரும். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgjvexwz14xo
  24. 06 SEP, 2024 | 06:21 PM மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி. தொடவத்த, ஆர்.ஏ. ரணராஜா ஆகியோரும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கோபல்லாவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது. அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/193022
  25. பட மூலாதாரம்,STEPHANE DE SAKUTIN/AFP படக்குறிப்பு, மிஷேல் பார்னியை (வலது) புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி, லாரா கோஸி பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மிஷேல் பார்னியை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். "அனைத்து அரசியல் சக்திகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்," என்று கூறிய அவர் பிரான்ஸ் ஒரு மிக முக்கியமான தருணத்தை அடைந்துவிட்டது என்றும் அதனை பணிவுடன் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு இரண்டு மாதங்களாக அரசியல் கட்சிகள் மற்றும் சாத்தியமான வேட்பாளர்களுடன், பல கட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்திய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை பிரெக்ஸிட் மத்தியஸ்தரான மிஷேல் பார்னியை பெயரை பரிந்துரை செய்தார். 73 வயதான பார்னியை, வியாழன் மாலை பாரிஸில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்தடைந்தார். கடந்த எட்டு மாதங்களாக பிரதமராக பதவி வகித்து வந்த பிரான்ஸின் இளைய பிரதமரான கேப்ரியல் அட்டலிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நிலையில், மூன்று பெரும் கட்சிகளாக பிரிந்துள்ள நாடாளுமன்றத்தில் தாக்குபிடிக்கக்கூடிய ஒரு அரசை அமைப்பதுதான் அவருக்கான முதல் பணியாக இருக்கும். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து செயல்படுவதற்காக பார்னியை தன்னுடைய அனைத்து அரசியல் திறன்களையும் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே மைய- இடது சோசியலிஸ்டுகள் அவரின் நியமனத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். சவால்கள், கோபம், கைவிடப்பட்ட உணர்வு, நகரங்கள் கிராமப்புறங்களில் நடக்கும் அநீதி என அனைத்துக்கும் வரும் நாட்களில் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார். நாடு எதிர்கொள்ளும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து பிரெஞ்சு மக்களுக்கு உண்மையைச் சொல்ல இருப்பதாகவும், நல்ல நம்பிக்கை உள்ள அனைவருடனும் மிகுந்த மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் பணியாற்ற இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, 'அரசியல் நிறுத்தம்' என்று கூறி பிரதமரை தேர்வு செய்ய மக்ரோங் 60 நாட்கள் எடுத்துக் கொண்டார். பிரதமர் இல்லத்தின் முன்பு தன்னுடைய பிரியாவிடை உரையை நிகழ்த்திய அட்டல், "பிரெஞ்சு அரசியல் நோய்வாய்ப்பட்டிருக்கிறது, ஆனால் நாம் அனைவரும் தீவிர மத உணர்வில் இருந்து விலகிச் செல்ல ஒப்புக்கொண்டால் குணப்படுத்த முடியும்" என்று கூறினார். 2016 மற்றும் 2019 க்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தொடர் பேச்சுக்களை நடத்திய பார்னியை, அரசியல் முட்டுக்கட்டை பற்றிய கணிசமான அனுபவத்தைக் கொண்டுள்ளார். பிரான்ஸிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் நீண்ட அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கும் அவர், வலதுசாரி குடியரசுக் கட்சியில் முக்கிய அங்கம் வகிக்கிறார். பிரான்ஸில் 'திரு பிரிக்ஸெட்' என்று அழைக்கப்படும் அவர், 1958-ஆம் ஆண்டில் ஐந்தாவது குடியரசு உருவானதில் இருந்து பிரான்ஸில் பிரதமராக பதவி வகிக்கும் நபர்களில் மிகவும் வயதானவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் ஈடுபட்ட அவர், அவருடைய கட்சியின் வேட்பாளராக தேர்வாகும் முயற்சியில் தோல்வி அடைந்தார். குடியேற்றத்தை குறைக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,STEPHANE DE SAKUTIN/POOL/EPA-EFE படக்குறிப்பு, பிரதமர் இல்லத்தில் பிரான்ஸின் முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டலுடன் மிஷேல் பார்னியை சவால்கள் என்ன? மக்ரோங்கின் அதிபர் பதவி காலம் 2027-ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் சில வார இடைவெளியில் நடத்தப்படுவதால் பொதுவாக அதிபரின் கட்சியில் இருந்துதான் ஆட்சி அமைக்கப்படும். ஆனால், தன்னை "காலத்தின் மாஸ்டர்" என்று என அழைத்துக்கொள்ளும் மக்ரோங் ஜூன் மாதம் திடீரென தேர்தல்களை அறிவித்தார். தேர்தல் முடிவுகளில் இடதுசாரியான புதிய பாப்புலர் ஃப்ரண்டிற்கு அடுத்தபடியாக அவரது மையவாத கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. அதிபர் மக்ரோங் பிரதமர் பதவிக்காக பல சாத்தியமான வேட்பாளர்களை நேர்காணல் செய்தார். ஆனால், தேர்தேடுக்கும் நபர் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோன்றும்போது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். இதன் காரணமாக மக்ரோங்கின் தேர்வு பணி சவால் மிகுந்ததாக இருந்தது பார்னியை நியமித்ததன் மூலம் பிரதமரும், வருங்கால அரசாங்கமும் ஸ்திரத்தன்மையையும், ஒற்றுமையையும் வழங்குவதை மக்ரோன் உறுதி செய்துள்ளதாக எலிசீ அரண்மனை (அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம்) தெரிவித்துள்ளது. நாட்டிற்கும் பிரெஞ்சு மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு ஒருங்கிணைந்த அரசாங்கத்தை உருவாக்கும் பணி பார்னியைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எலிசீ அரண்மனை தெரிவித்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் பார்னியை முன் இருக்கும் சவால்களில் மிக முக்கியமான ஒன்று 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது. மேலும் நாடாளுமன்றத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று அதற்கான வரைவு திட்டத்தை சமர்பிப்பது ஆகும். இந்த கோடை காலத்தில் ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான பணிகளை அட்டல் மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த பட்ஜெட் ஒப்புதல் பெறுவதற்கு தற்போது பார்னியையின் அரசியல் திறன்கள் தேவைப்படுகின்றன. பிரதமராக இவரை தேர்வு செய்திருப்பது புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அக்கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்ட பிரதமர் வேட்பாளரை மக்ரோங் நிராகரித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நான்கு கட்சிகளை உள்ளடக்கிய புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரிய கட்சியான பிரான்ஸ் அன்பவுடின் தலைவர் ஜாங் லுக் மெலாங்ஷாங், பிரெஞ்ச் மக்களிடம் இருந்து தேர்தல் உரிமை திருடப்பட்டுவிட்டது என்று கூறினார். ஜூலை 7-ஆம் தேதி வெளியான முடிவுகளில் அதிக இடங்களை பெற்ற கூட்டணியில் இருந்து பிரதமரை தேர்ந்தேடுக்காமல், கடைசி இடத்தை பெற்ற குடியரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரதமராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என அவர் குற்றஞ்சாட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்னியை அரசில் மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா இடம்பெற மாட்டார்கள் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவரை குறிப்பிட்டு ''இது ஒரு மக்ரோங் - லே பென் அரசாகதான் இருக்கிறது'' என்று மெலாங்ஷாங் கூறினார். மக்ரோங்கிற்கு எதிரான இடதுசாரி போராட்டங்களில் மக்களை பங்கேற்க அவர் அழைத்தார். இந்த போராட்டம் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 577 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற 289 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பார்னியைக்கு தேவை. பார்னியையின் அரசில் தனது தேசிய பேரணிக் கட்சி இடம்பெறாது என மரைன் லே பென் தெளிவாக கூறியுள்ளார். ஆனால், பரந்த கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகளை மதிக்கும் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற தங்களது தேசிய பேரணிக் கட்சியின் முதல் தேவையை பூர்த்தி செய்யும் நபராக அவர் உள்ளார் என லே பென் கூறியுள்ளார். அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படும் பிரான்ஸின் பட்ஜெட் வாயிலாக,பார்னியையின் பேச்சு, செயல் மற்றும் முடிவுகள் என அனைத்தும் உற்று கவனிக்கப்படும் என்று தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் ஜோர்டர் பர்தெல்லா கூறினார். இங்கு விலைவாசி உயர்வு, பாதுகாப்பு, குடியேற்றம் போன்றவை பிரெஞ்ச் மக்கள் அதிகமாக எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இது முறையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், அதற்கு எதிரான அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார். பார்னியை, மக்ரோங்கின் மையவாத கூட்டணியின் ஆதரவை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக் முடியும் வரை புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகளை நிறுத்தி வைத்திருந்தார் அதிபர் மக்ரோங் புதன்கிழமை மாலைக்கு பிறகே பார்னியை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை, இரண்டு அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் யாரோ ஒருவர் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவர் முன்னாள் சோசலிஸ்ட் பிரதமர் பெர்னார்ட் காசெனியூவ். மற்றொருவர் குடியரசுக் கட்சியின் பிராந்தியத் தலைவர் சேவியர் பெர்ட்ராண்ட். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருவருமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று பிறகு தெரிய வந்தது. இடதுசாரி வேட்பாளராக களம் இறங்கிய பாரிஸின் மூத்த அரசு ஊழியரான லூசி காஸ்டெட்ஸை நிராகரித்ததற்கு விளக்கம் அளித்த மக்ரோங், அவர் முதல் தடையை கூட கடந்திருக்கமாட்டார் என கூறினார். பிரான்சில் அரசியல் நெருக்கடியை தூண்டியதாக அதிபர் மீது பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. சமீபத்திய கருத்துக் கணிப்பில் 51% பிரெஞ்சு வாக்காளர்கள் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கருதினர்.அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் 2017ல் மக்ரோங்கால் முதல் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்வார்ட் பிலிப், அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்ற சூழலில் தேர்தலில் போட்டியிட இப்போதே விருப்பம் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/ced1jwplyw8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.