Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 04 SEP, 2024 | 04:18 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். இதனை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும். ரணில் - ராஜபக்ஷ என்று குறிப்பிடுவதை ஜனாதிபதி நிரூபித்து விட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூல தனிநபர் பிரேரணை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன். இந்த பிரேரணையின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. தனிநபர் பிரேரணை தொடர்பான நிலையியல் கட்டளை பிரிவுக்கு சட்ட மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் செப்டம்பர் 3ஆம் திகதி மூன்றாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணங்கிய போதும், அது இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் இதில் அரசியல் தலையீடு இருந்த காரணத்தினாலா இது தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று கேட்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்கு காரணமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கவே இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் நிலையியல் கட்டளையை மீறியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் தீர்மானத்தை மீறியும் இதனை தாமதப்படுத்தியுள்ளனர். இது தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல் செயற்படாகும். ஜனாதிபதியுடன் நான் இந்த சட்டமூலம் தொடர்பில் கதைத்த போது இதில் பிரச்சினையில்லை. மூன்றாம் வாசிப்புக்காக எடுக்கலாம் என்றும் இது தொடர்பில் சபை முதல்வருக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் மூன்றாம் வசிப்புக்காக நிகழ்ச்சி நிரலில் சட்டமூலம் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்ற போது ரணில் -ராஜபக்‌ஷ என்றே அவரை கூறினர். ஆனால் அவரே அதனை நிரூபித்துள்ளார். அவருக்குள்ள அதிகாரத்துக்கமைய இந்த சட்டமூலத்தை தாமதப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி நிறைவேற்று அதிகார மற்றும் அமைச்சரவையின் பிரதானியே. இதன்படி அவரால் இது தொடர்பில் அறிவிக்க முடியும். ஆனால் இறுதி நேரத்தில் ஏன் அவர் இவ்வாறு செய்ய வேண்டும். இது தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடே ஆகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் முன்னாலும் நாட்டு மக்கள் முன்னாலும் இனவாதியாக காட்டப்படுவார். தமிழ் மக்களுக்கு எதிராக அவர் செய்யும் இந்த விடயம், தான் செய்வதாக வழங்கிய வாக்குறுதி எதனையும் அவர் செய்ததில்லை. அவர் இப்படியாக கடைசி நேரத்தில் தடுத்துள்ளார். நான் செய்ய இருந்த விடயம் என்றும் அதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறிவிட்டு கடைசி நேரத்தில் எங்கள் மீது காட்டும் வெறுப்பாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதற்கான வெளிப்பாடே இது. தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/192789
  2. Published By: VISHNU 04 SEP, 2024 | 04:09 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலைக்கண்ணீர் வடித்த ஜனாதிபதி தற்போது அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அரசாங்கம் தெரிவித்துள்ள சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மாதமும் கிடைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தாெழிலாளர்களின் சம்பள பிரச்சினை இன்று பூதாகரமான பிரச்சினையாக இருந்து வருகிறது. தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபா என சொல்லப்பட்டது. பின்னர் அது 1300 ரூபா என்றார்கள். ஆனால் இன்னும் ஒரு முடிவில்லாமல் இருக்கிறது. அதேநேரம் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக எஸ்.பி. திஸாநாயக்கவும் வடிவேல் சுரேஷ் இராஜாங்க அமைச்சரும் கதைக்கொண்ட விடயம் தற்போது பரவலாகி வருகிறது. இதன்போது சம்பள அதிகரிப்பு வழங்காத முதலாளிமார்களின் வீடுகளுக்கு தீ வைக்கவேண்டும் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது பயங்கரமான வார்த்தையாகும். அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலைக்கண்ணீர் வடித்து வந்த ஜனாதிபதி, தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். எதிர்வரும் மாதமும் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. எதிர்காலத்திலாவது அவர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டாலும் பெருந்தோட்டங்களில் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றன. அண்மையில் திறக்கப்பட இருந்த மதுபானசாலையை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். மேலும் இந்த தேர்தலில் ஜனாதிபதி வெற்றிபெறாவிட்டாலும் இன்னும் 6மாதங்களில் ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்கவேண்டிவரும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை. ஜனாதிபதிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டடு, அவரால் முடியாவிட்டால், வெளிநாட்டில் இருந்து ஜனாதிபதி ஒருவரை கொண்டுவருவதா அல்லது நாட்டை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவிடுவதா என கேட்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/192787
  3. Published By: VISHNU 04 SEP, 2024 | 12:25 AM போர் நிறைவுற்று நீண்டகாலம் ஆகியும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்டார் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்; அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனது ஆட்சியில் அவர்களுக்கு 25 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியமாக 57500 ரூபா மாற்றப்படும். அரச ஊழியர்கள் இந்த நாட்டின் சொத்து. அரச சேவையின் தரம் விருத்தி செய்யப்படவேண்டும். உங்களுடைய ஒத்துழைப்பை எங்களுக்குத் தாருங்கள். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து உங்களின் சகல பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். அத்துடன் இந்த வவுனியா பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமபுறமக்களின் வாழ்வாதாரத்தினை எனது அரசு மேம்படுத்தும். பல்துறைகளிலும் அபிவிருத்தியடைந்த இடமாக இதனை மாற்றுவதற்கான நடவடிக்கையினை நிச்சயமாக எடுப்பேன். கடந்த ஜனாதிபதித்தேர்தலில் அரசியல் சதி செய்து என்னைத் தோற்கடித்தார்கள். என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் கோட்டா அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. எனவே எனது ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து வீட்டு வேலைத்திட்டங்களும் நிச்சயமாக முழுமையாக வழங்கப்படும். அத்தோடு நாட்டின் வறுமை நிலையினை குறைக்கவேண்டும். சேமிப்பு, முதலீடு, நுகர்வு, உற்பத்தி ஏற்றுமதி இவற்றினை மையப்படுத்தி வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் சுயபொருளாதாரத்தினை வளர்ச்சியடை செய்யவேண்டும். இந்த நிலையான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன். கல்வித்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை ஆகியன எனது ஆட்சியில் மேம்படுத்தப்படும். மகாவலி எ வலயம் அபிவிருத்தி செய்யப்படும். விவசாயக்கடன்கள் அனைத்தும் நீக்கப்படும். புதிய உபகரணங்கள் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டு விவசாயத்தில் புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும். வவுனியாவில் இளைஞர்களின் தொழில் வாய்ப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். இந்த அரசாங்கத்தினால் ஒரு கடவுச்சீட்டைக் கூட சீராக வழங்க முடியாதிருக்கின்றது. இந்த நிலைமையில் அவர்களால் எவ்வாறு தொழிற்சாலைகளை வழங்கமுடியும். தொழிற்சாலைகளை எரித்து அழித்தவர்கள் எவ்வாறு அதனை நிறுவித்தருவார்கள். எனவே நீங்கள் நன்றாகச் சிந்தியுங்கள். ஜக்கியமக்கள் கூட்டமைப்பு சிறப்பான அணியினை கொண்டது, நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடிய சிறந்த அணி எம்மிடம் உள்ளது. போர் நிறைவுற்ற பின்னர் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்தித்தார்களா? எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை எடுப்பேன். எனவே எதிர்வரும் காலத்தில் அபிவிருத்தி புரட்சியோடு நாம் உங்களைச் சந்திப்போம் என்றார். https://www.virakesari.lk/article/192786
  4. Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 06:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் இருந்து வருகின்றனர். அவர்களை அதிபர்களாக அவ்வாறே நியமிப்பதா அல்லது அவர்களுக்கு எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன? அதேபோன்று அபிவிருத்தி அதிகாரிகளாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவை செய்துவரும் 16ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்ந்து பதிலளிக்கையில், பதில் அதிபர்களாக கடமை செய்துவரும் 18ஆயிரம் அதிபர்கள் கஷ்டப்பிரதேச பாடசாலைகளிலேயே சேவையாற்றுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அது அரச சேவை ஆணைக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அரச சேவை ஆணைக்குழுவின் கொள்கைக்கமைய அந்த விடயம் மிகவும் கஷ்டமான நிலைக்கு சென்றது. என்றாலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் வழக்கு விசாரணையை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் நாங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்பார்த்து இருக்கிறோம். அத்துடன் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. என்றாலும் தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை ஆரம்பத்தில் இடம்பெற்று வந்தது. என்றாலும் தற்போது அரச சேவை ஆணைக்குழுவின் புதிய சட்டத்தின் பிரகாரம் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்றம் செய்ய முடியாது. அதனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மாகாண ஆளுநர்களின் ஒப்புதலை எடுத்துக்கொண்டு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் மேலும், பாடசாலைகளில் தற்போது அபிவிருத்தி அதிகாரிகளாக இருக்கும் 16ஆயிரம் ஆசிரியர்களை அந்த பாடசாலைகளில் தொடர்ந்து ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழியாென்றை ஒரு வாரத்துக்குள் பரிந்துரைக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/192779
  5. சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் - பா.அரியநேத்திரன் Published By: VISHNU 03 SEP, 2024 | 09:01 PM சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் என தமிழ் தேசிய கட்டமைப்பின் ஐனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியடப்பட்டது. இதன்போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலர் எரிச்சல் படுகின்றனர். சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். அவ்வாறானவர்களை சிரிப்போடு கடந்து செல்வோம். அவர்களின் பெயர்களை கூறி அவ்வாறானவர்களை பிரபல்யப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தவறுகள் என்பது எல்லோரிடமும் இருக்கின்றது. தவறு இழைத்தவர்கள் அத்தனைபேரும் வருகின்ற 22 ஆம் திகதி தமிழ் மக்கள் அளிக்கும் முடிவைப்பார்த்து திருந்துவார்கள். சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும். ஒன்றிணைந்த வட கிழக்கில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வுக்காக பலரும் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதை நோக்கியதான தமிழ்ப்பொது வேட்பாளர் நிலைப்பாட்டை வெற்றிபெற வைப்பதற்காக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்களும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களும், புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் உறவுகள் என பலவேறு தரப்பினரும் இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். சில கட்சிகள் பொது வேட்பாளரை ஆதாரிக்காவிடில் அது செய்தி அல்ல. சங்கை ஆதரித்தால் அதுதான் செய்தி 21 ஆம் திகதிக்கு இடைபட்ட நாட்களில் பல்வேறு கதைகள் வரும். வதந்திகள் வரும். மக்கள் அவை எதையும் பொருட்படுத்தாது சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தவறிழைப்பவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். முடிவு எவ்வாறு அமையும் என எங்களுக்கு நன்றாகவே தெரியும். எஞ்சி இருக்கும் 15 நாட்களுக்குள் தவறான முடிவெடுத்தவர்கள் திருந்திவரவேண்டும். தந்தை செல்வநாயகத்தின் கொள்கைக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்பட்டுவரும் நான் அந்த கொள்கைக்காகவே தமிழ்த் தேசிய பொதுக்கடமைப்பின் அழைப்பை ஏற்று தமிழ்ப் பொதுவேட்பாளராக இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றேன். இதனை உணர்ந்துகொண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/192785
  6. வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது Published By: VISHNU 03 SEP, 2024 | 08:41 PM வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (03/09) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் (S.C.I.B) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பிரிவிற்கான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுகந்த் அவர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் உப பொலிஸ் பரிசோதகர் குணத்திலக்க, மற்றும் பொலிஸ் சார்ஜன்டுகளான விஜேசிங்க, மெதகொட, மேலும் பொலிஸ் கொன்ஸ்தாபிள் கிரிநாத் ஆகியோரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன் புதன்கிழமை (04) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஆள் அடையாள அணிவகுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/192783
  7. தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016 ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார். கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது. அந்த இறுதிப் போட்டியில், 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார். அதன் மூலம் புதிய சாதனையையும் படைத்தார். அதற்கு முன்னர், அதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் தாண்டிய 1.83 மீட்டர் உயரமே சாதனையாக இருந்தது. மாரியப்பன் கடந்து வந்த பாதை தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை குடும்பத்தை கைவிட்டதால், தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்துள்ளார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும், காய்கறிகள் விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். மாரியப்பனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவரது வலது கால் மூட்டு நசுங்கியது. அது அவரை நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கியது. தமது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரனால் உந்தப்பட்டு தடகளத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மாரியப்பன். 2016 பாராலிம்பிக் போட்டிகளின் போது அளித்திருந்த பேட்டியில், “பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.” என்று மாரியப்பன் கூறியிருந்தார். பள்ளியில் படித்துக்கொண்டே மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாரியப்பன், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார். 2013இல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் உயரம் தாண்டிய விதம், பயிற்சியாளர் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக, மாரியப்பனுக்கு பெங்களூருவில் வைத்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2015இல், தமிழ்நாட்டின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ (BBA) பட்டப்படிப்பை முடித்தார் மாரியப்பன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார் ரியோ பாராலிம்பிக்-2016 போட்டியில் தங்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தகுதி பெற, துனிசியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், மாரியப்பன் 1.78 மீட்டர் உயரத்தை தாண்டினார். இதைத்தொடர்ந்து ரியோ பாராலிம்பிக் போட்டியில், T42 பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய அளவிலான சாதனையைப் படைத்தார் மாரியப்பன். அவர் தங்கம் வென்ற பிறகு, அவருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. நவம்பர் 2019இல், துபாயில் நடந்த ‘2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்’ ஆண்களுக்கான T63 உயரம் தாண்டுதலில் 1.80 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார். அதைத் தொடர்ந்து, டோக்கியோ 2020 (கொரோனா காரணமாக 2021இல் நடத்தப்பட்டது) பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அப்போது நடந்த, T63 உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு மாரியப்பன் அளித்த பேட்டியில், "இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது. மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது தான் நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் (Take off) பிரச்னை தென்பட்டது. இல்லாவிட்டால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்" என்று கூறியிருந்தார். மத்திய அரசு மாரியப்பனுக்கு, 2017ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2020ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வழங்கி கெளரவித்தது. 2017ஆம் ஆண்டு மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், ‘மாரியப்பன்’ என்ற பெயரிலேயே இயக்குவதாக அறிவித்திருந்தார். பின்னர் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது. 2016இல் ரியோ பாராலிம்பிக், 2021இல் டோக்கியோ பாராலிம்பிக் என இரு சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக ஒரே பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாரியப்பன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgw531xy30o
  8. மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தித் திட்டம் - சஜித்! 04 SEP, 2024 | 10:50 AM மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி தொழிற்துறையை உருவாக்கி பலமிக்க அபிவிருத்தியை கொண்டு வர முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள் வெற்றிப் பேரணி தொடரின் 32 ஆவது கட்டம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கடந்த காலங்களில் இருந்த எந்த ஒரு தலைவருக்கும் முடியாமல் போயிருக்கின்றது. எனவே தான் ஜனாதிபதியான உடனே வட கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு, யுத்தத்தின் பின்னரான பாரிய அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, வடக்கையும் கிழக்கையும் மையமாகக் கொண்ட பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம். ஏனைய மாகாணங்களுக்கும் அதன் பிரதிபலன் செல்லக்கூடிய வகையில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம். சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பின் ஊடாக, அந்தந்த மாகாணங்களில் தேசிய உற்பத்திக்காக அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பையும் கணக்கிட்டு இருக்கின்றார்கள். அதில் 43.4% மேல் மாகாணத்தில் கிடைக்கின்றது. வட மாகாணத்தின் பங்களிப்பு 4.1. வீதமாகவும், கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு 5.2 வீதமாகவும் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தரவுகளையும் தகவல்களையும் மையமாகக் கொண்டு முழு நாட்டையும் அபிவிருத்தியின் பால் விட்டு செல்வோம். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்குமான சலுகைகள் 50 கிலோ கிராம் உடைய உர மூடை ஒன்றை சலுகை விலை அடிப்படையில் 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்வோம் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. QR CODE முறையூடாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகன உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுப்போம். சகல வசதிகளையும் கொண்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும் சகல வசதிகளையும் கொண்ட மீன்பிடித் தொழிலுக்காகவும் சக்தியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். சட்ட விரோதமான முறையில் எமது கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து இராஜதந்திர முறையில் அதற்கான தீர்வினை பெறவும் நடவடிக்கை எடுப்போம். கடந்த அரசாங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம். வீட்டுக்கடன்களை வழங்கி வீடமைக்கும் யுகத்தை உருவாக்குவோம். இன, மத, குல, வகுப்பு பேதங்கள் இன்றி காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்கும் கம் உதாவ திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம். பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு முதலிடம் வழங்கப்படுவதோடு, இளைஞர்களுக்காகவும் விசேடமான வேலை திட்டங்களை முன்னெடுப்போம். மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும். சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி தொழிற்துறை உருவாக்கி பலமிக்க அபிவிருத்தியை கொண்டு வர முடியும் என்றார். https://www.virakesari.lk/article/192808
  9. தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/308958
  10. Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj சித்தன் ஜெயமூர்த்தி பாடியது.
  11. 03 SEP, 2024 | 06:48 PM தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அரச ஊழியர்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், திடீர் திடீரென்று சம்பளத்தை அதிகரிப்போம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்குகின்ற இந்த நிலையில், ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 24% ஆல் அதிகரிப்பதோடு, வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை 17800 ரூபாயிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம். தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம். 6 - 36% ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24% வரை குறைத்து, அரச ஊழியர்களையும் நடுத்தர வகுப்பினர்களையும் வலுப்படுத்துவோம். சுமார் 7 இலட்சம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்திக்கு உங்களுடைய வாக்கை அளிக்குமாறு கோருகின்றோம். அத்தோடு அரச ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முகாமைத்துவ, அபிவிருத்தி துறை, கிராம உத்தியோகத்தர், விவசாய துறை, கல்வித்துறை, மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் இந்நாட்டின் வளங்களாகும். அரச ஊழியர்கள் இந்நாட்டின் சுமை என்று இந்த அரசாங்கம் கருதியது. அரச சேவை துறை இந்த நாட்டை பாதிக்கின்றது என்று மாற்று அரசியல் சக்திகள் கூறியது. அரச சேவையை பாதுகாத்து, புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறமைகளையும் ஆளுமைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து அதனை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய மக்கள் சக்தியே. பொலிஸாருக்கு வழங்கிய மூன்று மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதோடு, பதவி உயர்வுகளையும் மீள பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். முப்படைகளில் வன் ரேங்க் ஒன் பே திட்டத்தை செயல்படுத்துவதோடு, சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாத்து எமது நாட்டின் அரச சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அத்தோடு அரச சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சிகளும் வழங்கப்படும். அத்தோடு கோட்டாபயவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து, கம்உதாவ யுகத்தை உருவாக்குவோம். அன்று மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருந்தால் இன்று அந்த வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். கோட்டாபயவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான மூலோபாயத்தின் சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க ஆகும். அவர் கோட்டாபயவை வெற்றி பெறச் செய்வதற்கான தந்திரங்களையும் மேற்கொண்டார். வறுமையை போக்குவதற்கான புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து துறைகளை மையமாகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வறுமையை ஒழிக்கும் சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கடந்த ஜனாதிபதிகளாலும் தற்போதைய ஜனாதிபதிக்கும் கூட கூட்ட முடியாமல் போயிருக்கின்றது. அவர்களின் இயலாமை மற்றும் இனவாத கொள்கை என்பனவற்றினாலே இந்த மாநாட்டை கூட்டமுடியாதுள்ளனர். எனவே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இரண்டு மாகாணங்களையும் மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதனுடாக முழு நாட்டுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/192767
  12. பிரித்தானியாவின் கருத்துக்கு இஸ்ரேல் கடும் அதிருப்தி: வலுக்கும் கண்டனம் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடுமையாக சாடியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி நேற்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக தெரிவித்திருந்தார். சர்வதேச ஆபத்து சர்வதேச சட்டத்தை மீற இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அவர் மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளிப்படத்தினார். இடைநிறுத்தப்பட்ட உபகரணங்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான பாகங்கள் அடங்கும் என அவர் கூறியிறுந்தார். மேலும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதில் வழங்கியுள்ள இஸ்ரேல், "மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் ஜனநாயக நாடான இஸ்ரேலுடன் நிற்பதற்குப் பதிலாக, பிரித்தானியா மேற்கொண்டுள்ள தவறான முடிவு ஹமாஸைத் தைரியப்படுத்தும். நியாயமான வழி இஸ்ரேல் நியாயமான வழிகளில் ஒரு நியாயமான போரைத் தொடர்கிறது. நாஜிகளுக்கு எதிரான வீரமிக்க நிலைப்பாடு இன்று நமது பொதுவான நாகரீகத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாததாகக் காணப்படுவது போல, ஹமாஸ் மற்றும் ஈரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இஸ்ரேலின் நிலைப்பாட்டை வரலாறு தீர்மானிக்கும்” என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள நெதன்யாகு போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும், ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன் நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால், கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன. சொந்த அரசியல் வாழ்வு எனவே, நெதன்யாகு தனது சொந்த அரசியல் வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அமைதி ஒப்பந்தத்தைத் தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, இறந்துவிட்டதாக கருதப்படும் 33 பேர் உட்பட, இன்னும் பிடியில் உள்ள 97 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறான பின்னணியில் பிரித்தானியாவின் அறிவிப்புக்கு இஸ்ரேல் அதிருப்தி வெளியிட்டுள்ளது. https://tamilwin.com/article/britain-withdraws-support-for-israel-1725359301
  13. மக்கள் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதற்கு ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் - முஜிபுர் Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 04:45 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கடவுச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரத்தை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என ஜனாதிபதிக்கும் அவரது செயலாளருக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடு காரணமாகவே கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறனர். ஜனாதிபதியின் முகாமைத்துவத்தை இதன் மூலம் மக்களுக்கு அறிந்துகொள்ள முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் கடந்த சில தினங்களாக மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். பிழையான முகாமைத்துவம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019இலும் இதுவே இடம்பெற்றது. பிழையான நபரை அதிகாரத்துக்கு காெண்டுவந்து, தவறான தீர்மானங்களை எடுத்ததால் நாடு வீழ்ச்சியடைந்தது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் வரை கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஒருநாள் சேவை மூலம் வரையறை இல்லாமல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. கடவுச்சீட்டுகளின் காலாவதியாகும் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளருக்கும் தெரியும். அப்படி இருந்தும் இதனை விநியோகிக்க ஏன் தாமதித்தார்கள். கையிருப்பில் ஒருதொகை கடவுச்சீட்டு இருக்கும்போதே இதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அத்துடன் கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைய பிரதான காரணமாக அமைந்திருப்பது, இதனை எந்த நிறுவனத்துக்கு வழக்குவதென்று, ஜனாதிபதிக்கும் அவரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடாகும். இவர்களின் இழுபறியால் சாதாரண மக்களை பாதிக்கப்பட்டு, இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். ஜனாதிபதியுன் முகாமைத்துவத்தை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதனால் கடவுச்சீட்டுகளை சரியான முறையில் விநியோகிக்க முடியாத ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர மக்கள் ஒருபோதும் தீர்மானிக்கப்போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/192763
  14. யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நல்லூர் திருவிழா காலங்களில் ஆலய சூழலில் மாநகர சபையினால் கடைகள் குத்தகைக்கு வழங்கப்படும் போது, "பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்" எனும் நிபந்தனையுடனையே கடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் நிபந்தனைகளைமீறும் பட்சத்தில், மாநகர சபையினால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு, அதனையும் மீறினால் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்யப்படும். மக்களுக்கு இடையூறு இந்த நிலையில், இம்முறை மாநகர சபையினர் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் குறித்த ஒரு கடைக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கடைக்கான இடத்தினை மாநகர சபையிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் திருவிழா காலங்களில் இரவு வேளைகளில் கடையில் பெரிய திரையில் (8 X 10 LCD) திரையில் துள்ளல் இசை பாடல்களை ஒளி ஒலிபரப்பு செய்வதனால் , அவ்விடத்தில் கூடும் இளையோர் அதற்கு குத்தாட்டம் ஆடி , அவ்வழியாக செல்லும் ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கோரிக்கை இதன் படி, சம்பவம் தொடர்பில் தியாக தீபத்தின் நினைவிடம் மற்றும் ஆலய சூழலில் களியாட்ட நிகழ்வுகள் போன்று இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் மாநகர சபையினருக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதிலும் மாநகர சபையினர் எவ்விதமான நடவடிக்கையும் குறித்த நபர்கள் மீது எடுக்கவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது. நல்லூர் ஆலய பூங்காவன உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலையும் நாளைய தினம் புதன்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் , பின் வீதியில் துள்ளல் இசை பாடல்களை போடும் குறித்த நபர்களுக்கு எதிராக மாநகர சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://ibctamil.com/article/municipal-council-did-not-take-any-action-jaffna-1725356308
  15. உக்ரைனின் பொல்டவா நகரின் மீது ரஸ்யா தாக்குதல் - 40 பேர் பலி 03 SEP, 2024 | 05:37 PM உக்ரைனிய நகரமான பொல்டவா மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் 180 பேர் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு கல்வி நிலையங்களும் மருத்துவமனையொன்றும் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192773
  16. அப்ப கொழும்பு தான் நீங்க வரவேணும் அண்ணை. ஒரு காலத்தில ஓடுபாதையை நீட்டி விரிவாக்கி பெரிய விமானங்கள் வந்தால் தான் பொதிகளின் எடை கூடும்.
  17. பாகிஸ்தானை சகல துறைகளிலும் விஞ்சி 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது 03 SEP, 2024 | 04:35 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் கடைசி நாளான இன்று (03) நிறைவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்டெக்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது. டெஸ்ட் தொடர் ஒன்றில் பாகிஸ்தானை பங்களாதேஷ் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை சகலதுறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடி வெற்றியை சுவைத்தது. இப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 4ஆம் நாளனான நேற்று மாலை தொடங்கிய பாகிஸ்தான், ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை பங்களாதேஷ் தொடர்ந்தபோது, ஆரம்ப வீரர்களான ஸக்கிர் ஹசன் (40), ஷத்மான் இஸ்லாம் (24) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (70 - 2 விக்.) எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ (38), மொமினுள் ஹக் (34), முஷ்பிக்குர் ரஹிம் (22 ஆ.இ.), ஷக்கிப் அல் ஹசன் (21 ஆ.இ.) ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷின் வெற்றியை உறுதி செய்தனர். பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர்கள் பத்து விக்கெட்களையும் பகிர்ந்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியது இதுவே முதல் தடவையாகும். தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 24 வயதான ஹசன் மஹ்முத் முதல் தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். எண்ணிக்கை சுருக்கம் பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 274 (சய்ம் அயூப் 58, ஷான் மசூத் 57, சல்மான் அகா 54, மெஹிதி ஹசன் மிராஸ் 61 - 5 விக்., தஸ்கின் அஹ்மத் 57 - 3 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 262 (லிட்டன் தாஸ் 138, மெஹிதி ஹசன் மிராஸ் 78, குரம் ஷாஹ்ஸாத் 90 - 6 விக்., சல்மான் அகா 13 - 2 விக்., மிர் ஹம்ஸா 50 - 2 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (சல்மான் அகா 47 ஆ.இ., மொஹம்மத் ரிஸ்வான் 43, ஹசன் மஹ்முத் 43 - 5 விக்., நஹித் ரானா 44 - 4 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 185 ஓட்டங்கள்) 185 - 4 விக். (ஸக்கிர் ஹசன் 40, நஜ்முல் ஹசன் ஷன்டோ 34) ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ்: தொடர்நாயகன்: மெஹிதி ஹசன் மிராஸ். https://www.virakesari.lk/article/192762
  18. தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று கூறியதாக இ.ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார். குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://thinakkural.lk/article/308937
  19. லோர்ட்ஸ் அரங்கில் ஜூன் 11 இலிருந்து 15 வரை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி Published By: VISHNU 03 SEP, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 2025 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஜனவரி மாதம் நிறைவடைந்த பின்னர் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இரண்டு வருட சுழற்சி பருவ காலத்தைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளை 69 போட்டிகளைக் கொண்ட 27 டெஸ்ட் தொடர்கள் தீர்மானிக்கும். தற்போதைய ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா முதல் இடத்திலும் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. நியூஸிலாந்தும் பங்களாதேஷும் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன. அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை நியூஸிலாந்து 2019இல் வென்றதுடன் இரண்டாவது அத்தியாயத்தில் அவுஸ்திரேலியா 2023இல் சம்பியனானது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா இரண்டாம் இடத்துடன் திருப்தி அடைந்தது. https://www.virakesari.lk/article/192780
  20. அரியத்தாருக்கு போதிய வாக்குகள் விழாவிடின் நட்டம் அவருக்கல்ல!!
  21. ஸ்டார்லைனரில் கேட்கும் வினோதமான சத்தங்கள்- நாசா விடுத்திருக்கும் எச்சரிக்கை நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆகஸ்ட் 1, 2024 இல் செயல்படாத ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலில் இருந்து வரும் “வினோதமான சத்தங்கள்” குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மூத்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வசிப்பவர்கள், ராப் டேல் என்ற வானிலை நிபுணரால் முதலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவின் படி, ‘கிட்டத்தட்ட ஒரு சோனார் பிங் போன்ற துடிப்பு சத்தத்தை’ எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. முதல் முறையாக சத்தம் தெளிவாக இல்லாததால், வில்மோர் மீண்டும் முயற்சிப்பதாகக் கூறினார், அதனால் என்ன தவறு என்பதைக் கண்டறிய குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்னொரு தடவை நான் அதைச் செய்வேன், நீங்கள் அனைவரும் உங்கள் தலையை சொறிந்துவிட்டு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று விண்வெளியில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர் சொல்வதைக் கேட்க முடிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/308884
  22. காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலும் ஹமாஸும் தங்கள் 11 மாதப் போரில் சிறு இடைநிறுத்தம் செய்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் ஒரு குழந்தை டைப் 2 போலியோ வைரஸால் பகுதியளவு முடங்கிவிட்டதை உறுதிப்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளில் இது முதல் தடவை எனவும் சுட்டிகாட்டப்பட்டது. மத்திய காசாவின் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரச்சாரம், வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கும் நகரும். தொடர்ந்து மூன்று நாட்களில் குறைந்தது எட்டு மணிநேரம் போர் நிறுத்தப்படும். இடைநிறுத்தங்கள் நான்காவது நாளுக்கு நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும், முதல் சுற்று தடுப்பூசிகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது. குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய காஸா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள ஐ.நா-வால் நடத்தப்படும் மருத்துவ முகாமில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வர். மருத்துவ ஊழியர்கள் சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளை விரல்களில் பேனாவைக் கொண்டு குறித்துக்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது. https://thinakkural.lk/article/308742

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.