Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது தான் அண்ணை. அப்ப சங்கிற்கும் சஜித்திற்கும் தானோ?! ஒரு தம்பி விருப்பு வாக்களிப்பதை பற்றிக் கேட்க 1, 2, 3 என யாருக்கு முதல் வாக்கோ 1 பிறகு விருப்பின் அடிப்படையில் போடச் சொன்னேன். அப்பா சொன்னார் ஒரே ஒரு புள்ளடி சங்கிற்கு மட்டும் போடச் சொல்லி!
  2. நம்மடையர்களின் சமஸ்கிருத மோகமும் ஒரு காரணம்!
  3. சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1 https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette
  4. 10 SEP, 2024 | 10:04 AM யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (09) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடையரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் சாப்பாட்டினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம். அந்தவகையில் இவருக்கு வழமையாக சாப்பாட்டினை கொடுக்க வந்த பெண் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவர் உயிரோட்டம் இன்றி இருப்பதை அவதானித்துள்ளார். இந்நிலையில் அயல் வீட்டாரின் உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193286
  5. Published By: VISHNU 10 SEP, 2024 | 02:29 AM (நா.தனுஜா) அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரவையின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி, போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கையில் புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றல் மற்றும் நாட்டை மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், 2022 ஆம் ஆண்டு நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் பொருளாதார மீட்சி மற்றும் கடன்மறுசீரமைப்பு செயன்முறை ஆகியவற்றுக்கும் இந்திய அரசாங்கம் மிகையான உதவிகளை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று இலங்கையுடனான உறவைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கும், மறுபுறம் இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத்துவம் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளித்துவருவதாகக் குறிப்பிட்ட இந்தியப் பிரதிநிதி;, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார். மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலும் அதற்குப் பங்களிப்புச்செய்யும் என நம்பிக்கை வெளியிட்டார். https://www.virakesari.lk/article/193279
  6. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் துரத்திக்கொண்டேயிருக்கும் - வோல்கர் டர்க் Published By: VISHNU 10 SEP, 2024 | 02:22 AM (நா.தனுஜா) தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறும் புதிய அரசாங்கம் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரiவின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Nவுhல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, கலந்துரையாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். இலங்கை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருப்பதாகத் தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாமையும், அவை மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான மறுசீரமைப்புக்கள் பூர்த்திசெய்யப்படாமையும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டார். விசேடமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு முகங்கொடுத்திருந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த அவர், அதன்விளைவாக உருவான மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் இன்னமும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் வறுமை மட்டம் இரு மடங்காக அதிகரித்திருப்பதுடன், பல குடும்பங்கள் கல்வி, சக்திவலு உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் புறந்தள்ளி நாளாந்த உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன எனவும் கரிசனை வெளியிட்டார். அதேபோன்று அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட அடக்கமுறைச் சட்டமூலங்கள், சட்டங்களை நினைவுகூர்ந்த வோல்கர் டர்க், அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புத்தரப்பினருக்கு மிகையான அதிகாரங்களை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடியவாறு அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிவில் சமூக இடைவெளி மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன முடக்கப்படக்கூடும் என எதிர்வுகூறிய அவர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் மீதான தொடர் கண்காணிப்புக்கள் குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு முத்தூர் படுகொலை, திருகோணமலை ஐவர் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் பதிவான மிகமுக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வோல்கர் டர்க், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் விவகாரத்திலும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை என்றார். மேலும் ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக அவர்களது அன்புக்குரியவர்கள் தொடர்ச்சியாகக் காத்திருப்பதாகவும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார். அத்தோடு தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை அடுத்து ஆட்சிபீடம் ஏறுகின்ற புதிய அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/193278
  7. இன்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) மேற்கொண்ட அந்த வெற்றிகரமான தாக்குதலின் போது உண்மையிலேயே என்ன நடந்தது? ஹமாஸ் என்ற ஒரு சிறிய குழு- எப்படி உலகத்தின் ஒரு நவீன இரணுவக் கட்டமைப்பை சிதைத்து இஸ்ரேலுக்குள் நுழைந்தது? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண் என்று கூறப்பட்ட காசாவின் சுவர்களைத் தகர்த்து- எப்படி இஸ்ரேல் மீது அது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டது? இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகளை காசா தாக்குதலின்போது எப்படி ஏமாற்றியது ஹமாஸ்? ஹமாஸ் விடயத்தில் எங்கே தவறிழைத்தது இஸ்ரேல்? காலங்கள் கடந்தும் நிலைத்துநிற்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சம்பவம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 37 பேர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அந்த செய்தி முகமை கூறியிருந்தது. பிரிட்டனை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழு, 'இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்கப்பட்ட ஐந்து இலக்குகளில் ஆயுத உற்பத்தியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அறிவியல் ஆராய்ச்சி மையமும் உள்ளடங்குவதாகவும்’ தெரிவித்தது. பட மூலாதாரம்,AL-IKHBARIYA AL-SURIYAH TV இந்த தாக்குதல்கள் பற்றிய வெளிநாட்டு ஊடக செய்திகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது. சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதல்களை ‘அப்பட்டமான ஆக்கிரமிப்பு’ என்று கண்டனம் தெரிவித்தது. இரானின் வெளியுறவு அமைச்சகம் ‘இது குற்றவியல் தாக்குதல்’ என்று கூறியது. ஆனால், தனது முக்கிய எதிரியான இரானுடன் தொடர்புடையவை என்று கூறி சிரியாவின் இலக்குகள் மீது சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியதை இஸ்ரேல் இதற்கு முன்பாக ஒப்புக் கொண்டுள்ளது. ராணுவ தளங்களின் மீது ஏவுகணை தாக்குதல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதல்களை ‘அப்பட்டமான ஆக்கிரமிப்பு’ என்று தெரிவித்தது கடந்த ஆண்டு அக்டோபரில் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும், ஹெஸ்பொல்லா மற்றும் லெபனான், சிரியாவில் உள்ள பிற குழுக்களால் வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக இவை நடத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11:20 மணியளவில் வடமேற்கு லெபனானின் மீது பறந்த ஒரு இஸ்ரேலிய விமானம், ‘மத்திய பிராந்தியத்தில் உள்ள பல ராணுவ தளங்களின் மீது ஏவுகணைகளை வீசியது’ என்று ஒரு சிரிய ராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சனாவின் செய்தி கூறுகிறது. "எங்கள் வான் பாதுகாப்பு சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது" என்று அந்த சிரிய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது. 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் ஹமா மாகாணத்தின் சுகாதார இயக்குனர் கூறியதாக சனா செய்தி முகமை குறிப்பிட்டது. சிரிய அரசால் நடத்தப்படும் ‘அல்-இக்பாரியா அல்-சூரியா’ தொலைக்காட்சியும் மஸ்யாஃப்-க்கு மேற்கே உள்ள துறைமுக நகரமான டார்டஸ் நகரில் சேதமடைந்த கட்டிடத்தைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பியது. சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு (SOHR- எஸ்ஓஎச்ஆர்) என்பது களத்தில் ஒரு வலிமையான வலையமைப்பைக் கொண்ட, பிரிட்டனைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் கண்காணிப்புக் குழு. அது, மஸ்யாஃபில் உள்ள அறிவியல் ஆய்வுப் பகுதி, மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலை மற்றும் ஹேர் அப்பாஸ் பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்ததாக தெரிவித்தது. பட மூலாதாரம்,AL-IKHBARIYA AL-SURIYAH TV படக்குறிப்பு, மஸ்யாஃப் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது 'ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உருவாக்கும் திட்டம்' குறுகிய மற்றும் நடுத்தர தூர இலக்குகளுக்கான துல்லியமான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரானிய புரட்சிகர காவலர்கள் ஆறு ஆண்டுகளாக அந்த அறிவியல் ஆராய்ச்சி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக எஸ்ஓஎச்ஆர் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு பிராந்திய புலனாய்வு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 'ரசாயன ஆயுத உற்பத்திக்கான ஒரு பெரிய ராணுவ ஆராய்ச்சி மையம் பல முறை தாக்கப்பட்டது’ எனக் கூறியது. ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தை மீறி ரசாயன ஆயுதங்களை தயாரிக்க மஸ்யாஃப் அருகே உள்ள அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (SSRC) கிளை பயன்படுத்தப்பட்டதாக மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் முன்பு குற்றம் சாட்டின. இந்த கூற்றை சிரிய அரசு மறுத்துள்ளது. எஸ்ஓஎச்ஆர் குழுவின் தகவலின் படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 64 முறை இஸ்ரேலிய விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் சிரியப் பிரதேசத்தை குறிவைத்துள்ளன. ஏப்ரலில், டமாஸ்கஸில் உள்ள தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது. அதில் ‘இரானிய புரட்சிகர காவலர் படையின்’ இரண்டு மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர். அதன் விளைவாக, இஸ்ரேலுக்கு எதிராக இரான் தனது முதல் நேரடி ராணுவ தாக்குதலை நடத்தி, பதிலடி கொடுத்தது. இரான் 300 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது, ஆனால் அவை அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தலைமையிலான படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/c70jp1xn7xvo
  9. மக்கள் தமது விருப்புக்குத் தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தான் கள நிலமை அண்ணா. தபால் வாக்களித்த அண்ணர் ஒருவரிடம் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்ததாக கூறினார், ஏன் அரியத்தாருக்கு போடேல்ல என்ற தும்பு பறக்க பேசிறார்!
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்படுவதற்காக காத்திருந்தது. ஃப்ளைட் 93 இன் நிர்ணயிக்கப்பட்ட புறப்படும் நேரம் கடந்து ஏற்கனவே 40 நிமிடங்கள் ஆகிவிட்டன. முதல் வகுப்பின் ஆறு வரிசைகளில் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவர்கள் திரும்புவதற்கான டிக்கெட்டை வாங்கியிருக்கவில்லை. முந்தைய நாள் இரவு அவர்கள் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு ஆவணத்தைப் படித்தனர். ”எல்லா ஆசைகளில் இருந்தும் உங்களை அகற்றிக்கொண்டு உங்களை போராட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் துறப்பதாக செய்த உறுதிமொழியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்,” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. டாம் மெக்மில்லன் தனது 'ஃப்ளைட் 93: தி ஸ்டோரி ஆஃப் தி ஆஃப்டர்மாத் அண்ட் தி லெகசி ஆஃப் அமெரிக்கன் கரேஜ்' என்ற புத்தகத்தில், "இத்தகைய நுணுக்கமான முன்னேற்பாடுகள் இருந்தபோதிலும், விமானம் புறப்படுவதற்கு தாமதமாகலாம் என்ற சாத்தியக்கூறை அல்-கய்தா கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.” என குறிப்பிட்டுள்ளார் “அவர்களின் இந்த திட்டம் 1996-இல் ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் முதன்முதலாக தீட்டப்பட்டது. அடுத்த பல ஆண்டுகளில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன,” என்று குறிப்பிட்டுள்ளார். கடத்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விமானங்களும் அன்று காலை 7.45 முதல் 8.10 மணிக்குள் புறப்படுபவையாக இருந்தன. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் கடத்தல் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நடந்திருந்தால் அந்த நான்கு விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக முக்கிய கட்டிடங்கள் மீது மோதியிருக்கும். அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் ராணுவத் தலைமைக்கும் சிந்திக்கக்கூட நேரம் இருந்திருக்காது. பட மூலாதாரம்,LYONS PRESS படக்குறிப்பு, டாம் மெக்மில்லனின் புத்தகம் விமான காக்பிட்டுக்குள் ஊடுருவல் நடக்கலாம் என்ற எச்சரிக்கை சரியாக காலை 8 மணி 41 நிமிடங்கள் 49 வினாடிகளுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், ’நான்காம் எண் ஓடுபாதையில் இருந்து புறப்படலாம்’ என்று விமானம் 93 இன் கேப்டன் ஜேசன் டால் மற்றும் முதல் அதிகாரி லெராய் ஹோமரிடம் கூறினார் என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் பதிவுகள் தெரிவிக்கிறது. ஒரு நிமிடம் கழித்து முதல் வகுப்பில் அமர்ந்திருந்த ஜியாத் ஜர்ரா, அஹ்மத் அல் ஹஸ்னாவி, அஹ்மத் அல் நமி மற்றும் சயீத் அல் கம்டி ஆகியோர் மிஷனுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர். அன்று செவ்வாய்கிழமை. தேதி செப்டம்பர் 11, 2001 சிறிது நேரத்தில் விமானம் 93 ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. விமானம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. 182 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தில் மொத்தம் 33 பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். சரியாக 8:40 மணிக்கு ஒரு விமானம் மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் உலக வர்த்தக மையத்தைத் தாக்கியது. வானளாவிய அந்தக் கட்டிடத்தின் 93வது மற்றும் 99வது தளங்களுக்கு இடையே ஒரு பெரிய ஓட்டை உருவானது. 17 நிமிடங்கள் கழித்து 9:03 மணிக்கு இரண்டாவது விமானம் தெற்கு கோபுரத்தைத் தாக்கியபோதுதான் நாடு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை அமெரிக்க நிர்வாகம் உணர்ந்தது. காலை 9:19 மணிக்கு, யுனைடெட் ஃப்ளைட் நிறுவன விமான கண்காணிப்பாளர் எட் பாலிங்கர், அப்பகுதியில் பறந்து கொண்டிருந்த 16 விமானங்களுக்கு முதல் எச்சரிக்கையை விடுத்தார்: 'காக்பிட் ஊடுருவல் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். நியூயார்க்கில் உள்ள வர்த்தக மைய கட்டிடத்தை இரண்டு விமானங்கள் தாக்கியுள்ளன.’ ஃபிளைட் 93 க்கு இந்த செய்தி காலை 9:24 மணிக்கு கிடைத்ததாக விமான பதிவுகள் காட்டுகின்றன. காலை 9:26 மணிக்கு கேப்டன் டால், 'எட், சமீபத்திய செய்தியை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்,’ என்று பாலிங்கருக்கு பதில் செய்தி அனுப்பினார். சரியாக இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதாவது 9:28 மணிக்கு விமானம் 93 இன் காக்பிட் கதவுக்கு வெளியே சத்தம் கேட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலுக்கு உள்ளான இது உலக வர்த்தக மையத்தின் படம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு கேட்ட குரல் தலையில் சிவப்பு ஸ்கார்ஃப் அணிந்த நான்கு கடத்தல்காரர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து விரைவாக எழுந்தனர். அவர்கள் 9:28 மணிக்கு காக்பிட்டிற்குள் நுழைந்தார்கள். அந்த நேரத்தில் திடீரென்று விமானம் 30 வினாடிகளில் 680 அடி கீழே சென்றது. அதே சமயம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு ஒரு குரல் கேட்டது, 'மேடே.. இங்கிருந்து வெளியேறுங்கள்’. 30 வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் அதே வாக்கியம், 'இங்கிருந்து வெளியேறுங்கள்' என்று மூன்று முறை கேட்டது. அங்கு நடந்த கைக்கலப்பின் ஒலிகளும் பின்னணியில் கேட்டன. காக்பிட்டில் என்ன நடக்கிறது என்பதை கேட்கும் வகையில், டால் அல்லது ஹோமர் வேண்டுமென்றே மைக்ரோஃபோன் பட்டனை அழுத்திப் பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ”அடுத்த 90 வினாடிகளில், க்ளீவ்லேண்ட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஜான் வொர்த் விமானத்தைத் தொடர்பு கொள்ள ஏழு முறை முயற்சி செய்தார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவருக்கு இதற்கான காரணம் தெரிய வந்தது,” என்று மிட்செல் ஜூகாஃப் தனது 'Fall and Rise - The Story of 9/11' இல் எழுதுகிறார். 9:31 மணியளவில் முன்பின் தெரியாத நபர் ஒருவர் மூச்சு வாங்கியபடி விசித்திரமான தொனியில் பேச ஆரம்பித்தார். இந்த செய்தி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கானது. ஆனால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இதைக்கேட்டனர். அந்த செய்தி, ' கேப்டன் சொல்வதை கேளுங்கள். தயவுசெய்து அமருங்கள். இருக்கையில் இருந்து எழாதீர்கள். எங்களிடம் வெடிகுண்டு இருக்கிறது.' விமானம் 93 இன் கட்டுப்பாடு ஜியாத் ஜர்ராவிடம் வந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமான கடத்தல் குழுவின் தலைவர் ஜியாத் ஜர்ரா 'பயிற்சி இல்லாதவரைப்போல விமானத்தை கீழே இறக்கத் தொடங்கினார்' ஜர்ரா ஃப்ளைட் 93ஐ வாஷிங்டன் நோக்கி திருப்பியபோது மணி 9:39. பின்னர் அவர் 40 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானத்தை எடுத்துச் சென்றார். அதன் பிறகு பயிற்சி இல்லாதவரைப்போல விமானத்தை கீழே இறக்கத் தொடங்கினார். இதற்கு முன் காலை 9:33 மணியளவில், காக்பிட்டில் இருந்த ஒரு பெண் - ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்.... ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் என்னை ஒன்றும் செய்யாதீர்கள் ....ஓ காட்...என்று அலறுவது கேட்டது. அந்தக் குரல் அனேகமாக முதல் வகுப்பிற்கான விமானப்பணியாளர் டெபி வெல்ஷ் அல்லது வாண்டா கிரீனுடையதாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள். 9:35 மணிக்கு, 'நான் சாக விரும்பவில்லை' என்று ஒரு பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது. பின்னர் காம்டி அல்-சயீத்தாக இருக்கலாம் என்று கருதப்படும் ஒரு கடத்தல்காரரின் குரல் கேட்டது, 'எல்லாம் சரியாக இருக்கிறது. நான் முடித்துவிட்டேன்.' அதன் பிறகு பெண் பணியாளரின் குரல் எதுவும் கேட்கவில்லை. அதற்குள் அவர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜியாத் ஜர்ராவுடன் காக்பிட்டில் அமர்ந்திருந்த சயீத் அல் கம்டி தொலைபேசியில் உறவினர்களை தொடர்பு கொண்ட பயணிகள் 9:39 மணிக்கு அறிவிப்பை வெளியிட ஜர்ரா இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார். இந்த முறை அவரது குரல் முன்பை விட கட்டுப்பாடாகவும் சாதாரணமாகவும் இருந்தது. இந்த அறிவிப்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கும் கேட்டது. 'கேப்டன் பேசுகிறேன். நீங்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களிடம் வெடிகுண்டு இருக்கிறது. நாம் மீண்டும் விமான நிலையத்திற்குச் செல்ல இருக்கிறோம். எங்களுக்கு கோரிக்கைகள் உள்ளன. எனவே தயவு செய்து அமைதியாக இருங்கள்.' யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பணியாளர்கள், சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய 'வெரிசோன்' இயர்போன்கள் மூலம் வானிலிருந்து தரைக்கு பேசும் வசதி வழங்கப்பட்டிருந்தது. விமானம் கடத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள், விமானத்தின் 12 பயணிகள், 23 மற்றும் 34 வது வரிசைகளுக்கு இடையில் பொருத்தப்பட்ட இயர்போன்களில் இருந்து தரைக்கு 35 அழைப்புகளை செய்தனர். இதில் 20 அழைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் 15 அழைப்புகளில் பரஸ்பர பேச்சு நடந்தது. அந்த நேரத்தில் ஃப்ளைட் 93 இல் என்ன நடக்கிறது என்பதற்கான பல தடயங்களை இந்த அழைப்புகள் அளித்தன. முதலில், 9:30 மணிக்கு, டாம் பர்னெட் கலிஃபோர்னியாவில் இருந்த தனது மனைவி டினாவை அழைத்தார். ”டாம், நீங்கள் நலம்தானே?' என்று டீனா கேட்டார். அதற்கு டாம், ''இல்லை. நான் பயணம் செய்யும் விமானம் கடத்தப்பட்டுவிட்டது. கடத்தல்காரர்கள் ஒருவரை கத்தியால் குத்திவிட்டனர். விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இது குறித்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்றும் எங்களிடம் சொல்கிறார்கள்,” என்று டாம் பதில் சொன்னார்,” என்று 'தி ஒன்லி பிளேன் இன் தி ஸ்கை' என்ற புத்தகத்தில், காரெட் எம். கிராஃப் எழுதியுள்ளார். பட மூலாதாரம்,AVID READER PRESS / SIMON & SCHUSTER விமானத்தின் பணிப்பெண் சாண்டி பிராட்ஷா இது குறித்து முதலில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். 9.35 மணிக்கு அவர் 33-வது வரிசையில் இருந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பராமரிப்பு அலுவலகத்தை அழைத்து 'தாக்குதல்காரர்கள் காக்பிட்டை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்புறம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,' என்று மேலாளரிடம் கூறினார். சாண்டி ஆறு நிமிடங்கள் அழைப்பில் இருந்தார். அவரது குரல் மிகவும் அமைதியாக இருந்தது என்று மேலாளர் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானம் 93 பயணிகளுக்கான தற்காலிக நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் உறவினர்கள் (கோப்புப் படம்) விமானங்கள் உடனடியாக தரையிறக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டன இதற்கிடையில் க்ளீவ்லேண்ட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஜியாத் ஜர்ராவின் அறிவிப்பைக் கேட்டவுடன் உடனடியாக பதிலளித்தது. 'ஓகே, யுனைடெட் 93 இன் அழைப்பு இது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதைப் புரிந்து கொண்டோம். மேலே சொல்லுங்கள், யுனைடெட் 93 மேலே சொல்லுங்கள்,' என்று கூறப்பட்டது. ஆனால் காக்பிட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையில், 9.42 மணிக்கு அமெரிக்க வான்வெளியில் பறக்கும் அனைத்து பயணிகள் விமானங்களையும் அருகிலுள்ள விமான நிலையங்களில் தரையிறக்கும்படி அரசு உத்தரவிட்டது. எல்லா விமானங்களும் அவசர அவசரமாக கீழே இறங்க ஆரம்பித்தன. ஆனால் ஓஹாயோ மீது பறந்துகொண்டிருந்த ஃப்ளைட் 93 மீது இந்த அறிவிப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வாஷிங்டன் டிசியை நோக்கிய தனது பயணத்தை அது தொடர்ந்தது. அந்த விமானம் அதிபர் மாளிகையை நோக்கி அல்லது நாடாளுமன்றத்தை நோக்கி செல்கிறது என்று அமெரிக்கர்கள் உணர்ந்துகொண்டனர். ”நாடாளுமன்றத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, 'விமானம் வருகிறது. வெளியே செல்லுங்கள்’ என்று கத்திக்கொண்டே ஓடினார். இதைக் கேட்டு பெண்கள் வெறுங்காலுடன் வெளியே ஓடினர். அபாய சைரன்கள் ஒலிக்க ஆரம்பித்தன. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரத்தடியில் கூடினர். ஆயுதமேந்திய போலீஸ் அதிகாரிகள் அமெரிக்க செனட் தலைவர்களை, பனிப்போர் காலத்தில் கட்டப்பட்ட பதுங்கு குழிகளுக்கு அழைத்துச் சென்றனர்,” என்று மிட்செல் ஜூகோஃப் எழுதுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ளைட் 93 தாக்கவிருந்த அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் எதிர்ப்பு நடவடிக்கைக்கான திட்டம் இதற்கிடையில் விமானம் 40 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழே இறங்கியது. விமானத்தை பறக்கச்செய்வதற்கு ஜியாத் ஜர்ரா சிரமப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. 9/11 விமானக் கடத்தல்காரர்களில் ’விமானி உரிமம்’ இல்லாத ஒரே ஒருவர் ஜர்ரா. மற்றவர்களை ஒப்பிடும்போது விமானத்தை இயக்க அவர் குறைவான நேரமே பயிற்சியை மேற்கொண்டிருந்தார். இதற்கிடையில் கடத்தல்காரர்களை எதிர்க்க பயணிகள் மத்தியில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. டாம் பர்னெட் தனது மனைவி டினாவிடம் தொலைபேசியில் ''தான் ஏதோ ஒன்று செய்யத் திட்டமிட்டிருப்பதாக'’ கூறினார். ''உங்களுக்கு யார் உதவுகிறார்கள்'' என்று டினா கேட்டார். ‘'நிறைய பேர். எங்களிடம் ஒரு குழு உள்ளது,'’ என்றார் டாம். மற்றொரு பயணியான டெரெமி க்ளிக், ''நாங்கள் எங்களுக்குள் வாக்களிப்பு நடத்துகிறோம். என்னைப் போல மூன்று பலசாலிகள் இப்போது விமானத்தில் இருக்கிறார்கள். வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லும் அந்த நபரை தாக்க நினைக்கிறோம்,” என்றார். ஆயுதமாக எதைப் பயன்படுத்த இருக்கிறார் என்பதையும் அவர் சொன்னார். ''காலை உணவுடன் வந்த வெண்ணெய் கத்தி இப்போது என்னிடம் உள்ளது.'' என்றார் அவர் என்று டாம் மெக்மில்லன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,LYONS PRESS படக்குறிப்பு, ஜியாத் ஜர்ராவின் பாஸ்போர்ட் 'நடவடிக்கையை ஆரம்பிப்போம்' விமானத்தில் இருந்த பயணிகள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்பதை ஜியாத் ஜர்ராவும், சயீத் அல் காம்டியும் காலை 9:53 மணிக்கு முதன்முறையாக உணர்ந்தனர். தனது இலக்கை அடைய இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று ஜர்ராவுக்குத் தெரியும். கிளர்ச்சி செய்த பயணிகள் விமானத்தின் நடுவில் கூடினர். கடத்தல்கார்கள் மீது வீசுவதற்காக விமானப் பணிப்பெண் சாண்டி பிராட்ஷா, விமானத்தின் பின்பகுதியில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்தார். உணவு தள்ளுவண்டியை காக்பிட் மீது மோதவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக சில புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள். பட மூலாதாரம்,LYONS PRESS படக்குறிப்பு, கடத்தல்காரர்கள் மீதான தாக்குதலுக்கு முன்முயற்சி மேற்கொண்ட டாம் பர்னெட் காக்பிட்டை தாக்கிய பயணிகள் சரியாக 9:57 மணிக்கு பயணிகளின் தாக்குதல் தொடங்கியது. 757 விமானத்தின் 20 அங்குல குறுகிய நடைபாதை வழியாகச்சென்று அந்த பயணிகள் விமானி அறையைத் தாக்கினர். விமானத்தை பறக்கச்செய்துகொண்டிருந்த ஜர்ராவும் அவரது கூட்டாளி கம்டியும் இவர்களின் குரல்களைக் கேட்டனர். ஏற்கனவே அந்த இருவரும் விமானத்தை ஓட்டுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த ஒலிகள் அவர்களை மேலும் குழப்பமடைய செய்தன. பயணிகளை சமநிலை இழக்கச்செய்யும் விதமாக அவர் விமானத்தின் ’ஹேண்டிலை’(yoke) வலமிருந்து இடமாக சுழற்றத் தொடங்கினார். சுமார் 10 மணியளவில் பயணிகளின் தாக்குதல் தீவிரமடைந்ததால் விமானி அறையில் இருந்த கடத்தல்காரர்கள் விமானத்தை தரையில் மோதுவது பற்றி பேசினர். ஜர்ரா, ''இப்போதே முடித்து விடுவோமா?’' என்று கேட்டார். அதற்கு கம்டி,’' இப்போது வேண்டாம். அவர்கள் அனைவரும் உள்ளே வந்ததும் முடிப்போம்'’. என்றார். ஃப்ளைட் 93 மீண்டும் கீழே இறங்கியது. பயணிகளால் இன்னும் காக்பிட்டிற்குள் நுழைய முடியவில்லை. மேலும் விமானத்தின் கட்டுப்பாடு அப்போதும் ஜர்ராவிடம்தான் இருந்தது. ஆனால் அதற்குள் அவர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ளைட் 93 விமானத்தின் சிதைவுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குரல் பதிவு கருவி விபத்துக்குள்ளான ஃப்ளைட் 93 10.01 நிமிடத்தில் விமானம் மீண்டும் மேலே செல்ல ஆரம்பித்தது. அப்போது ஜர்ரா, ''நேரம் வந்துவிட்டதா.. நாம் இதை மோதிவிடலாமா?’' என்று கேட்டார். அதற்கு கம்டி, ‘சரி. அப்படியே செய்யலாம்’ என்று பதில் சொன்னார். அப்போது திடீரென பலர் குரலெழுப்பும் சத்தம் கேட்டது. விமானத்தை தொடர்ந்து ஓட்டினால் பயணிகள் விரைவில் தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்பதை கடத்தல்கார்கள் உணர்ந்தனர். ''சயீத், ஆக்ஸிஜனை துண்டியுங்கள்'' என்று ஜர்ரா கத்தினார். இதை தொடர்ந்து பயணிகள் விமானி அறையின் கதவை உடைப்பதில் வெற்றி பெற்றனர். ஜர்ரா அரேபிய மொழியில், 'கீழே மோது, கீழே மோது,’ என்று அலறினார். சில நொடிகளுக்குப் பிறகு, ‘'என்னிடம் கொடு, என்னிடம் கொடு'’ என்ற கம்டியின் குரல் கேட்டது. அதற்குள் பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைந்து ஜர்ராவை தாக்க ஆரம்பித்தனர். கம்டி விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது என்று டாம் மெக்மில்லன் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ளைட் 93 இன் சிதைவுகள் பென்சில்வேனியாவின் சோமர்செட் கவுண்டியில் விமானம் தரைக்கு மிக அருகே வந்துவிட்டது. மணிக்கு 563 மைல் வேகத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் 757 விமானத்தின் மூக்கு 40 டிகிரி கோணத்தில் மின்கம்பங்களை உடைத்துக்கொண்டு தரையில் மோதியது. அப்போது விமானத்தில் சுமார் ஐயாயிரம் கேலன் விமான எரிபொருள் இருந்தது. தரையில் மோதியவுடன் விமானம் துண்டு துண்டாக உடைந்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது நேரம் காலை 10:03. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி அங்கிருந்து இன்னும் 15 நிமிட தூரத்தில் இருந்தது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2n674k77vo
  11. 2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை? வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே? 2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது. பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.
  12. 09 SEP, 2024 | 05:26 PM யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன. இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/193251
  13. நில அபகரிப்பை நிறுத்துங்கள் - ஜெனீவாவில் அமெரிக்கா வேண்டுகோள் - சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை 09 SEP, 2024 | 04:47 PM இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது. நிலங்களை மீள ஒப்படைப்பதை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா நீண்டகாலமாக காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் நல்லிணக்கத்திற்கான தடையாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது. பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/193252
  14. லஹிரு குமார, பெத்தும் நிஸ்ஸன்க அபாரம்; இலங்கைக்கு வரலாற்றுடன்கூடிய ஆறுதல் வெற்றி Published By: VISHNU 09 SEP, 2024 | 06:03 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை 8 விக்கெட்களால் ஆறுதல் வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய இங்கிலாந்து 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை தனதாக்கிக்கொண்டது. வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள், பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம் மற்றும் சதம், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முதல் இனனிங்ஸில் குவித்து அரைச் சதங்கள் என்பன இலங்கையின் ஆறுதல் வெற்றிக்கு வழிவகுத்தன. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 1998இல் வெற்றிகொண்ட இலங்கை, அதே மைதானத்தில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றியீட்டி வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் கியா ஓவல் விளையாட்டரங்கில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய 2 சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெறுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும். இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் வெற்றிபெற்றுள்ளதுடன் இங்கிலாந்து மண்ணில் இலங்கை ஈட்டிய 4ஆவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 2014க்குப் பின்னர், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் விளையாடப்பட்ட 10 டெஸ்ட் போட்டிகளில் 9இல் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இந்த 10 வருடங்களில் 11ஆவது போட்டியிலேயே இலங்கை முதலாவது வெற்றியை ஈட்டியது. 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்க 2ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 69 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 111 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். 124 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிஸ்ஸன்க 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற 2ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 7 பவுண்டறிகளுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார். இப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை (09) பகல் போசன இடைவேளைக்கு முன்னர் நிறைவுக்கு வந்தது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 325 (ஒல்லி போப் 154, பென் டக்கெட் 86, மிலன் ரத்நாயக்க 56 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 18 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 46 - 2 விக்., லஹிரு குமார 97 - 2 விக்.) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (தனஞ்சய டி சில்வா 69, பெத்தும் நிஸ்ஸன்க 64, கமிந்து மெண்டிஸ் 64, ஒல்லி ஸ்டோன் 35 - 3 விக்., ஜொஷ் ஹல் 53 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 42 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 156 (ஜெமி ஸ்மித் 67, டான் லோரன்ஸ் 35, லஹிரு குமார 21 - 4 விக்., விஷ்வா பெர்னாண்டோ 40 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 49 - 2 விக்.) இலங்கை (வெற்றி இலக்கு 219 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 219 - 2 விக். (பெத்தும் நிஸ்ஸன்க 127 ஆ.இ., குசல் மெண்டிஸ் 39, ஏஞ்சலோ மெத்யூஸ் 32 ஆ.இ.) ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க, தொடர் நாயகன்: ஜோ ரூட் https://www.virakesari.lk/article/193265
  15. 09 SEP, 2024 | 05:10 PM தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப்புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பலம் பேரம் பேசக்கூடிய பெரும் சக்தியாக இருந்தது. இப்போது எம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆயுதம் வாக்குகள்தான். யுத்தத்தின் பின்னரான கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த வாக்குபலத்தை நாம் வீணடித்துவிட்டோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இம்முறையாவது நமது வாக்குகளை இலக்கு தவறாமல் பிரயோகிப்போம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கழமை (08) ஏழாலை ஐக்கிய நாணய சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழினம் அரசியல் ரீதியாக மிக மோசமாக பலவீனம் அடைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தை வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஊடாகச் சட்ட ரீதியாக கையகப்படுத்தி வருகிறது. தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்களை, பொருளாதாரத்தை, பண்பாட்டை திட்டமிட்டுச் சிதைத்து வருகிறது. இவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சினையாக மாத்திரமே உலகுக்குக் காட்டி வருகின்றார்கள். இலங்கைத் தீவில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்குத் தமிழ் மக்கள் மீது தொடுத்த யுத்தமே மூலகாரணம் ஆகும். மாறி மாறி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் கடன் வாங்கி யுத்தத்தை முன்னெடுத்தமையே நாட்டைப் பொருளாதாரப் படுகுழிக்குள் தள்ளியது. ஆனால், இந்த கசப்பான உண்மையை ஏற்க எந்தத் தென்னிலங்கைத் தலைவரும் தயாராக இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் நாம் விட்ட தவறுகளைத் தொடர்ந்தும் இழைத்துக் கொண்டிருக்க முடியாது. இதனைக் கருத்திற்கொண்டே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனிநபர் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தினதும் குரல். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/193256
  16. 09 SEP, 2024 | 05:17 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது அங்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை பறித்துள்ளனர். இதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மருதங்கேணி பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/193254
  17. தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்மை - ஐரோப்பிய ஒன்றியம் கவலை 09 SEP, 2024 | 04:27 PM இலங்கையில் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நோர்டிக் நாடுகள் சார்பில் உரையாற்றிய பின்லாந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காகவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவும் இலங்கை உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஆதரிப்பதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193248 மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை தெரிவிப்பு Published By: RAJEEBAN 09 SEP, 2024 | 04:46 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் சம்மதம் இன்றி அவை நிறைவேற்றப்பட்டமையினால் அவற்றை நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கை பல தசாப்தகால மோதல்களினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றினோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193250
  18. 09 SEP, 2024 | 05:25 PM ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்துக்கு திங்கட்கிழமை (09) விஜயம் செய்தபோது மேள தாள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டார். தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரன் வடக்கில் தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதையடுத்து, தான் பிறந்த மண்ணான கிழக்கு மாகாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போதே அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பொதுக் கட்டமைப்பினாலும் அரசியல் கட்சிகளினாலும் களமிறக்கப்பட்டவர் ஆவார். https://www.virakesari.lk/article/193249
  19. இலங்கையில் சிவில் சமூகம் கண்காணிக்கப்படுகிறது; துன்புறுத்தப்படுகிறது - ஜெனீவாவில் பிரிட்டன் Published By: RAJEEBAN 09 SEP, 2024 | 04:21 PM இலங்கையில் சிவில்சமூகம் கண்காணிக்கப்படுகின்றது துன்புறுத்தப்படுகின்றது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார். சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் அதற்கு தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/193247
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது? ஆராய்ச்சியாளர் டிண்டாலின் கண்டுபிடிப்புகள் கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ஆசிரியர் குழு பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததை நாம் வரலாறு நெடுக கண்டுள்ளோம். இயற்கை குறித்த பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நிகழ்ந்தவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜான் டிண்டால் (1820 - 1893). அறிவியல் துறைக்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கியவர் இவர். காற்று மூலம் பரவும் நோய்கள் எதிலிருந்து உருவாகிறது என்பதை நிரூபித்த அவர், பருத்தியால் ஆன 'மாஸ்க்' கிருமிகள் பரவுதலை தடுக்கிறது என்பதையும் தன்னுடைய ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தினர். இன்று, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), உலக அளவில் பொது சுகாதாரத்திற்கு பெரிய அளவில் தீங்குவிளைவிக்கும் ஒரு சுகாதார சீர்கேடாக காற்று மாசுபாடு இருக்கிறது என்று கூறுகிறது. சர்வதேச அளவில் 70 லட்சம் நபர்கள், காற்றுமாசுபாடு காரணமாக அகால மரணமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கணித்துள்ளது. யார் இந்த டிண்டால்? மேதையாக இருந்த டிண்டால் ஒரு ரசனைவாதியும் கூட. மலையேற்றத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்த அவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை ஆல்ப்ஸ் மலையில் கழித்தார். சூரியன் மறைவதையும், அந்த நேரத்தில் தோன்றும் எண்ணற்ற வர்ணங்களின் மாயத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர் மாலை நேரங்களில் ஓய்வெடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்த நிறங்கள் குறித்து புரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் இறங்கினார். அவர் அப்படி செய்தது தான், பின்நாட்களில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் அது தொடர்பான ஆராய்ச்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்தது. இயற்கை மீது அவருக்கு இருந்த எண்ணற்ற ஆர்வம், பல்வேறு நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்யவும், அறிவியலில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யவும் தூண்டுதலாக அமைந்தது. வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் வெவ்வேறு அளவுகளில் வெப்பத்தை உறிஞ்சுகிறது என்று முதன்முறையாக கண்டறிந்து அதற்கு செயல்முறை விளக்கம் அளித்த முதல் ஆராய்ச்சியாளர் இவர்தான். காலநிலை அறிவியல் என்ற பிரிவு உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர்களுள் டிண்டால் ஒருவராக இருந்ததாக பலர் கருதுகின்றனர். அவருடைய பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியின் போது பல கருவிகளை அவர் கண்டுபிடித்தார். அவற்றில் பல கருவிகள் மிகவும் அதிநவீனமாக இருந்தது. ஆழமான புரிதலும், திறமையும் இருந்தால் மட்டுமே அந்த கருவிகளின் செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ள இயலும். ஆனால், பகல் பொழுதில் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. ஆனால் மாலையில் ஏன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள அவர் பயன்படுத்திய கருவி மிகவும் எளிமையானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐரிஷ் இயற்பியலாளர் டிண்டால் வானம் நீல நிறத்தில் இருக்க காரணம் என்ன? வானத்தை பிரதிபலிக்க ஒரு கண்ணாடி ட்யூப்பையும், சூரிய வெளிச்சத்தை உருவாக்க ஒரு வெள்ளை நிற விளக்கையும் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தினார் டிண்டால். அந்த ட்யூபில் கொஞ்சம் கொஞ்சமாக புகையை உட்செலுத்திய போது, வெள்ளை நிற விளக்கில் இருந்து வெளியான ஒளிக்கற்றைகள் ஒரு பக்கம் நீல நிறமாகவும், மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிறமாகவும் தோன்றியது. வளிமண்டல மேல் அடுக்கில் உள்ள துகள்கள் மூலமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுவதன் விளைவே வானத்தின் நிறங்களுக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இதைத்தான் நாம் தற்போது 'டிண்டால் விளைவு' என்று அழைக்கின்றோம். படக்குறிப்பு, கண்ணாடி டேங்கில் முதலில் நீரை நிரப்பினார் டிண்டால் படக்குறிப்பு, டேங்கின் ஒரு பகுதியில் விளக்கு எரியவைக்கப்பட்டது படக்குறிப்பு, டேங்கின் ஒரு பகுதியில் வெள்ளை நிறத்தில் தோன்றும் ஒளிக்கற்றைகள், மறு புறத்தை அடையும் போது சிவப்பு நிறத்தில் மாற்றம் அடைகிறது நீலத்தில் துவங்கி சிவப்பில் முடிந்த ஒளிக்கற்றைகள் இது தொடர்பான அவரின் மற்றொரு ஆய்வு, இதைவிட எளிமையாக இருந்தது. ஒரு கண்ணாடி டேங்கில் நீரை நிரப்பி அதில் சில துளி பாலை சேர்ந்தார். அதன் பின்னர், அந்த டேங்கின் ஒரு பகுதியில் வெள்ளை நிற விளக்கை ஒளிரச் செய்தார் டிண்டால். விளக்கு ஒளிர்ந்தவுடன், டேங்கில் பல நிறங்கள் உருவாவதை அவர் கண்டிருந்தார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அவர், தன்னுடைய இலக்கிய ரசனைக்கு ஏற்றவகையில் அந்த ஆராய்ச்சிக்கு "பெட்டியில் சொர்க்கம் (Heaven in a box)," என்று பெயரிட்டார். டேங்கின் ஒரு பகுதியில் விளக்கு ஒளிர்விக்கப்பட்டவுடன், அதனை ஒட்டியிருந்த பகுதி நீல நிறத்தில் காட்சி அளித்தது. அது டேங்கின் மற்ற பகுதியை அடையும் போது பல்வேறு நிற மாற்றங்களை அடைந்தது. அடுத்து ஒளிக்கற்றைகள் மஞ்சள் நிறமாகவும், பின்னர் ஆரஞ்சு நிறமாகவும், இறுதியில் சூரிய மறைவில் காணப்படும் சிவப்பு நிறமாகவும் காட்சி அளித்தது. வெள்ளை நிற ஒளியானது வானவில் நிறங்களின் கலவை என்பதை டிண்டால் அறிந்திருந்தார். நீல நிற ஒளி தண்ணீரில் உள்ள பால் துகள்களால் சிதறடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற விளக்கம்தான் அவரின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்வுக்கான காரணம் என்று அவர் நினைத்தார். மற்ற நிறங்களின் ஒளியைக் காட்டிலும் நீல நிற ஒளி குறைவான அலைநீளத்தைக் கொண்டுள்ளது என்று நாம் தற்போது அறிந்திருக்கிறோம். அந்த திரவத்தில் முதலில் சிதறடிக்கப்பட்ட ஒளி நீல நிற ஒளி என்பதே இதன் அர்த்தம். அதனால்தான் வெள்ளை நிற விளக்கிற்கு அருகே உள்ள பகுதி மட்டும் நீல நிறத்தில் உள்ளது. இதுதான் வானம் நீல நிறத்தில் இருப்பதற்கான காரணம் கூட. ஏன் என்றால் சூரியனில் இருந்து வரும் நீல நிற ஒளியானது, வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மற்ற அனைத்து நிறங்களைக் காட்டிலும் அதிகம். ஆனால், இந்த கண்ணாடி டேங்க் சூரிய மறைவில் தோன்றும் மற்ற நிறங்கள் குறித்தும் விளக்கமளிக்கிறது. பால் கலந்த நீரில் ஒளி ஆழமாக ஊடுருவும் போது குறைவான அலை நீளங்களைக் கொண்ட நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன. அதிக அலை நீளங்களைக் கொண்டிருக்கும் நிறங்களான ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறங்கள் நீண்ட தூரம் பயணிக்கின்றன. அதனால்தான் சில தூரம் கடந்தவுடன் நீர் ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளிக்கிறது. டேங்க் இன்னும் நீளமாக இருந்திருக்கும் பட்சத்தில் சிவப்பு நிறம் காட்சி அளித்திருக்கும். இது போல தான் வானத்தில் நடக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவருடைய காலத்தில் மதிப்புமிக்க மனிதராக பலராலும் அறியப்பட்டார் டிண்டால் சூரியன் மறையும்போது, அதன் ஒளி வளிமண்டலத்தின் அனேக பகுதிகளுக்கும் பரவுகிறது. அதனால் குறைந்த அலை நீளத்தைக் கொண்ட நீல நிறம் முழுமையாக சிதறடிக்கப்பட்டு, இறுதியாக ஆரஞ்சும் சிவப்பு நிறமும் அதிக தூரம் பயணிக்கின்றன. இதன் விளைவாகவே அந்த நிறங்கள் சூரிய மறைவில் அதிகமாக காணப்படும் நிறங்களாக உள்ளது. டிண்டால் நினைத்ததைப் போன்றே, இந்த ஒளிச் சிதறலானது தூசுக்களால் அல்லாமல் காற்று மூலக்கூறுகளால் நடந்தது என்று நாம் அனைவரும் அறிந்துள்ளோம். அவர் விளக்கத்தில் உள்ள தகவல்களில் சில பிழைகள் இருந்தாலும், முதன்மை கோட்பாடு சரியான ஒன்றே. உண்மையில், அவரின் கண்டுபிடிப்புக்கு அவர் அளித்த தவறான விளக்கமே மேலும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொள்ள உந்தியது. ஒரு பெட்டியும் தூசுக்களும் ஆர்வம் மிகுதியாக கொண்ட ஆராய்ச்சியாளரான அவர், இது தொடர்பாக மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டார். தூசுக்கள் நிறைந்த, காற்றால் அடைக்கப்பட்ட பெட்டி ஒன்றை சோதனைகளுக்காக எடுத்துக் கொண்டார். அதில் உள்ள தூசுக்கள் எல்லாம் அடங்குவதற்காக பல நாட்கள் அவர் காத்துக் கொண்டிருந்தார். அனைத்து தூசுக்களும் அடியில் தங்கிய நிலையில், அந்த சோதனையை அவர் 'ஒளியியல் தூய்மையான காற்று' (optically pure air) என்று பெயரிட்டார். பிறகு அந்த பெட்டியில் ஒவ்வொன்றாக பொருட்களை போட ஆரம்பித்தார். முதலில் மாமிச துண்டு ஒன்றை போட்டார். பிறகு மீன் ஒன்றை போட்டார். அவர் தன்னுடைய சிறுநீரையும் கூட அதில் சேர்த்தார். அதில் மிகவும் ஆர்வமான ஒன்றைக் கண்டிருந்தார். அதில் போட்ட மாமிசமோ, மீனோ கெட்டுப் போகவில்லை. அவரின் சிறுநீரிலும் எந்த மாற்றமும் இல்லை. அவைகள் அனைத்தும் ''புத்தம் புதிய செர்ரி பழம் போல இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், அவர் அந்த பெட்டிக்குள் உருவாக்கியது தூசு இல்லாத அல்லது ஒளியியல் தூய்மையான காற்று அல்ல. அனைத்து பாக்டீரியாக்களும் பெட்டியின் அடியில் தங்கியுள்ளது. இதனால், கிருமிகள் ஏதும் இல்லாததாக காற்று மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலை நேரத்தில் வானம் ஏன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது? டிண்டாலின் இந்த ஆராய்ச்சி, "காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் மூலமாகவே நோயும் அழுகலும் ஏற்படுகிறது" என்ற சர்ச்சையான கோட்பாட்டிற்கு ஆதாரமாக இருந்தது. பருத்தி மூலமாக இது போன்ற தூசிக்களை வடிக்கட்ட இயலும் என்பதையும் அவர் நிரூபித்தார். மேலும், மனிதர்கள் சுவாசிக்கும் போது இந்த பருத்தியிலான மாஸ்குகளை பயன்படுத்தினால், தூசிகளை தடுப்பதில் அது திறம்பட செயல்படுகிறது என்றும் அவர் நிரூபித்தார். நிகழ்கால பிரச்னைகளோடு தொடர்பு கொண்ட விவகாரங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தாமல், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் ஆய்வுகளை மேற்கொண்டார். வானில் தோன்றும் நிறங்களை குறித்து ஆய்வு செய்யும் போது அவர் காற்றில் மூலம் பரவும் நோய்களின் மூலத்தை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் அவர் அந்த ஆய்வை துவங்கவில்லை. ஆனால் இறுதியில் அதைத்தான் அவர் கண்டறிந்தார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4ge18ve99go
  21. Published By: VISHNU 09 SEP, 2024 | 08:40 PM ஆசியாவில் நிலவும் சுவாச நோய் தன்மைகளை எதிர்த்துப் போராட உலக முன்னணி வல்லுநர்கள் இலங்கையில் ஒன்று கூடுகின்றனர். உலகெங்கிலும் உள்ள சுவாச சுகாதார நிபுணர்கள் இந்நோய் தாகத்திற்கு எதிரான தங்கள் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், ஆசிய பிராந்தியத்தில் சுவாச நோய்களின் பாதிப்புகளை குறைத்திட நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சியின் பரந்துபட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட்டின் (RESPIRE) வருடாந்த அறிவியல் கூட்டம் 2024 ஆவணி 27 முதல் 29 வரை நடைபெறுகிறது, மேலும் 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பிரிவானது, இலங்கையில் சுவாச ஆரோக்கிய ஆராய்ச்சிக்கான மேலதிகமான முதலீட்டுக்கான அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையில் நாடொன்றில் ஒரு மாநாட்டை நடத்துவது இதுவே முதன் முறையாகும். இந்த மூன்று நாட்களுக்கான தொடர் கூட்டத்தில் 2024 ஆவணி 27ஆம் திகதியன்று தொடக்க விழாவில், சுகாதார அமைச்சு, இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரி மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களின் சுகாதார பீடங்களின் கௌரவ விருந்தினகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பிராந்தியதில் சிறந்த சுவாச ஆரோக்கியத்தை உறுதி செய்யும் முகமாக ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஆய்வுகளின் சமீபத்திய விடயங்களை தெரியப்படுத்துவதோடு உலகளாவிய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியம் விவாதிபார்கள். இலங்கையின் சுகாதார அமைப்பில் சுவாச நோய்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2017 ஆம் ஆண்டில் இலங்கை மருத்துவமனை இறப்புகளில் நாட்பட்ட சுவாச நோய்கள் (CRD)மற்றும் நிமோனியா ஆகியவை இரண்டும் அதிக எண்ணிக்கையிலான (18%) மரணங்களுக்கு காரணமாய் அமைந்துள்ளன.1 கடந்த தசாப்தத்தில் விகிதாசார இறப்பு தரவுகளின் ஒப்பீடுகள், இந்த இரண்டு வகையான நோய்களினால் மருத்துவமனையில் இறப்புகள் அதிகரித்து செல்லும் போக்கின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. நாள்பட்ட சுவாச நோய்களில், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சிஓபிடி) ஆகிய இரண்டு வகையான நோய்களே அதிக நோய்த் தாக்கத்தையும் இறப்பையும் ஏற்படுத்தும் முன்னணி நோய்களாக அமைகின்றன. குழந்தை பருவத்தினர் பள்ளி செல்லாதிருப்பதற்கு மூச்சுத்திணறல் ஓர் முக்கிய காரணமாக இருப்பதோடு பெரியவர்களில், ஆஸ்துமா மற்றும் சிஓபிடி முறையே 11% மற்றும் 10.5% அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல் புற்றுநோய் உட்பட பல சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு அசுத்தமான காற்றின் தன்மையே காரணம் என்று கூறப்படுகிறது. நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்துவரும் மோட்டார் வாகனங்களின் பாவனையானது, நாடு முழுவதும் சுற்றுப்புற சூழலின் காற்றின் தரம் தாழ்த்தப்பட்டமையுடன் தொடர்புபட்டதாய் அமைகிறது. நகரங்களில் வெளிப்புற காற்று அசுத்தமடைதல் ஒரு முக்கிய விடயமாக இருப்பதைப் போலவே, கிராமப்புற சமூகங்களில் காற்றோட்டம் இல்லாத சமையலறைகளில் உணவு சமைக்க விறகுகள் பயன்படுத்தப்படுவது உட்புற காற்று அசுத்தமடைதளுக்கான ஒரு அச்சுறுத்தும் காரணியாக அமைகிறது. கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த புகைபிடிக்கும் பழக்கமற்ற பெண்களிடையே சமையலறையிலிருந்து வெளிப்படும் புகையினாலேயே நாட்டப்பட்ட மூச்சுத்திணறல் நோயானது ஏற்படடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. உயிரிவாயுவை சுவாசிப்பதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகாதார விளைவுகள் பற்றிய ஆய்வு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு முக்கிய மாவட்டங்களில் நடத்தப்படும். இவர்கள் வளி மாசடைதல் மற்றும் புகையிலைப் பயன்பாடு பற்றி நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை; ஆராய்ந்து, அதில் காணப்படும் குறைபாடுகளையும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் கண்டறிவார்கள். இலங்கையில் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயனளிக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை இவ் வேலைத்திட்டமானது வெளிக்கொணரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 2019 ஆம் ஆண்டில், சிஆர்டி (CRD) ஆனது உலகளாவிய இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக 1. 100,000 மக்கள் தொகைக்கு 218.5 இறப்புகளில் 39.3 சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட் (RESPIRE) www.ed.ac.uk/usher/respire RESPIRE@ed.ac.uk ஆசிரியர்களுக்கான குறிப்புகள் ஊடக விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: பேராசிரியர் சாவித்திரி விமலசேகர, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம். savithriww@yahoo.com பேராசிரியர் துமிந்த யசரத்ன, பேராதனைப் பல்கலைக்கழகம். yasaratne@yahoo.com சுவாச ஆரோக்கியம் (RESPIRE) பற்றிய NIHRகுளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட் பற்றி விபரம் தெற்காசியாவில் சுவாச நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் பரவலான உடல்நலம் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதையே RESPIRE நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசியாவில் சுவாச நோய் மற்றும் இறப்பைக் குறைப்பதற்காக எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் மலாயா யுனிவர்சிட்டி மலாயா ஆகியவற்றின் தலைமையில், வங்கதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ரெஸ்பைர் அமைப்பினர் குறைந்த செலவு, அளவிடக்கூடிய கொள்கை மற்றும் மருத்துவ தலையீடுகளை வழங்கி இணைந்து செயற்படுகின்றனர். RESPIRE இன் ஆராய்ச்சி திட்டங்கள் தொற்று நோய்களை உள்ளடக்கியது. உதாரணம் - காசநோய் மற்றும் நிமோனியா, தொற்றாத நோய்கள் - ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய், தடுக்கக்கூடிய ஆபத்து காரணிகள் - காற்றின் தரம் மற்றும் புகையிலை பயன்பாடு மற்றும் சுவாச ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம். உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக்கு ஆதரவாக யுகே அரசாங்கத்தின் யுகே சர்வதேச மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி NIHR 16/136/109 மற்றும் NIHR132826 ஆகியவற்றால் RESPIRE நிதியளிக்கப்படுகிறது. இந்த வெளியீட்டில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின்(கள்) கருத்ததுக்களே அன்றி NIHR அல்லது யுகே அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல. மேலதிக தகவல்களுக்கு Twitter/X மற்றும் Facebook மற்றும் www.ed.ac.uk/usher/respire/ அல்லது @RESPIREGlobal இனை பார்வையிடவும். உடல்நலம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIHR) தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIHR) நோக்கம், ஆராய்ச்சி மூலம் நாட்டின் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மேம்படுத்துவதாகும். இதனை நாம் பின்வருமாறு செயற்படுத்துகிறோம்: உரிய காலத்தில் தேசிய சுகாதார சேவை, பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பயனளிக்கும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்தல்; ஆராய்ச்சியின் கண்டறிதல்களை மேம்படுத்தவும், சிகிச்சைகள் மற்றும் சேவைகளை வழங்க உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள், செயற்பட்டு உதவியாளர்கள் மற்றும் திறமையான பணியாளர்களில் முதலீடு செய்தல்; ⦁ எங்கள் ஆராய்ச்சியின் பொருத்தப்பாடு, தரம் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் விளைவுகளின் தாக்கத்தினை மேம்படுத்துவதற்காக நோயாளர்கள், சேவைகளை வழங்க உதவுபவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படல்; ⦁ சிக்கல் தன்மையான உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சவால்களைச் கையாளக்கூடிய சிறந்த ஆராய்ச்சியாளர்களது கவனத்தை எம்பக்கம் ஈர்த்தல், அவர்களுக்கு உகந்த பயிற்சிகளை அளித்து ஆதரித்தல்; ⦁ ஏனைய பொது நிதிவழங்குனர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையாளர்களுடன் கைகோர்த்து, ஒரு ஒருங்கிணைந்த மற்றும் உலகலாவிய ரீதியில் போட்டித்தன்மையுள்ள ஆராய்ச்சி முறையை வடிவமைக்க உதவுததல்; ⦁ குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடுகளில் (LMICs) வாழும் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு நிதியுதவி வழங்குதல்; NIHR இற்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் நிதி வழங்கப்படுகிறது. NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் போர்ட்ஃபோலியோ யுகே அரசாங்கத்தின் சர்வதேச மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி LMIC களில் வாழ்பவர்களின் நேரடியானா மற்றும் அத்தியாவசிய நலனுக்காக உயர்தர பயன்பாட்டு சுகாதார ஆராய்ச்சிக்கு உதவுகிறது. https://www.virakesari.lk/article/193272
  22. தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா. பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் ஒற்றுமையின்மை வெளிப்பட்டால் அதுவும் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும், இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.
  23. 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது. முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/193214
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும். இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா? ‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’ நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார். தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார். “ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது ‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’ அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது. அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும். இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது. யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது. இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது. ‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’ படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் “வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார். மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjyx771ll8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.