Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முஹம்மது இல்யாஸுக்கு வழங்கப்படும் வாக்குகள் என்ன ஆகும்?; தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி காலமானதையடுத்து வாக்குச் சீட்டில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் factseeker இது குறித்து ஆராய்ந்தது. முஹம்மது இல்யாஸ் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அதன்படி, நான்காவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த முஹம்மது இல்யாஸ் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி காலமானார். முஹம்மது இல்யாஸ் காலமானதையடுத்து அவருடைய இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்ததுடன், அவருடைய இடத்திற்கு இன்னொரு பெயரை முன்மொழிவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் கடந்த செப்டம்பர் ஐந்தாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாயின் அந்த வேட்பாளர், முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 31 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 31(1) சனாதிபதி பதவிக்கெனத் தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்தப் பிரசையும் (அ) அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியினால், அல்லது (ஆ) அவர், நடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது முன்னர் பதவி வகித்திருந்தால், வேறேதேனும் அரசியற் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரைப் பதிந்துள்ளவரான ஒரு தேருநரால், அத்தகைய பதவிக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம். இதன்படி, முஹம்மது இல்யாஸின் வெற்றிடத்திற்கு முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்விடயம் தொடர்பாக மறைந்த முஹம்மது இல்யாஸின் மனைவி முகமது இல்யாஸ் ஜமீனாவிடம் factseeker வினவிய போது, உரிய வெற்றிடத்திற்கு தனது பெயரை முன்மொழிந்ததாகவும், எனினும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தனக்கு போட்டியிட முடியாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எமது தரப்பில் இல்லாத காரணத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை என முகமது இல்யாஸ் ஜமீனா தெரிவித்தார். இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவிய போது, தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் வெற்றிடத்திற்கு எவரையும் முன்னிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், ஒரு சுயேச்சை வேட்பாளரின் வெற்றிடத்தை முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார். மேலும், வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஐதுரூஸ் முஹம்மட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்ட அவர், எவ்வாறு இருப்பினும் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் என்ற அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவருக்கான வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் என்பதையும் factseeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது நன்றி – factseeker https://thinakkural.lk/article/309307
  2. 12 SEP, 2024 | 10:35 AM மாண்டியா: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாண்டியாவின் நாகமங்கல நகர்ப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்கு உட்பட்ட பதரிகொப்பாலு பகுதியில் விநாயகர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது பிரதான சாலையை ஊர்வலம் கடந்து சென்றபோது ஊர்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்துவிட்டு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். சிலர் அருகிலிருந்த கடைகளுக்கு தீ வைத்தும், டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றும் மோதல் பெரிதானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை பதற்றம் நிறைந்ததாக போலீஸார் அறிவித்தனர். அப்பகுதியில் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம் 163 பிரிவின் கீழ் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/193464
  3. 12 SEP, 2024 | 06:46 AM காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். விமானதாக்குதல் இடம்பெற்றது என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன, கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த ஹமாசின் கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் இடம்பெற்றவேளை அங்கு 5000க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் யுத்தம் ஆரம்பித்தது முதல் இதுவரை ஐந்து தடவைகள் இந்த பாடசாலை மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.இந்த பாடசாலையில் இடம்பெயர்ந்த சுமார் 12000 பேர் தங்கியுள்ளனர் என ஐநா குறிப்பிட்டுள்ளது. காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளை தொடர்ச்சியாக தாக்கிவரும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினை இலக்குவைப்பதாக தெரிவித்துவருகின்றது. https://www.virakesari.lk/article/193452
  4. தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- அரியநேந்திரன் கூறுகிறார் தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது எனவும் எங்களுடைய மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எனவும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொது வேட்பாளரில் நீங்கள் அளிக்கும் வாக்கும் சிந்திக்க வைத்துள்ளது. இப்பொழுது சிந்திக்க வைத்துள்ளார்கள். தென்பகுதியில் அவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு 24 மாவட்டங்கள் இருக்கின்றது. ஆனால் நாங்கள் வடக்கு கிழக்கிலே 8 மாவட்டங்களில் மட்டும் தான் பிரச்சாரப்பணியை மேற்கொள்கிறோம். ஆனால் அவர்கள் இங்கே வந்து முகாமிட்டு யாழ்பாணமாக இருக்கலாம், மட்டக்களப்பாக இருக்கலாம், திருகோணமலையாக இருக்கலாம், தாங்களும் வருகின்றார்கள் தங்கள் மனைவிகளை அனுப்புகின்றார்கள், பிள்ளைகளை அனுப்புகின்றார்கள், அவ்வாறு அனுப்பி எங்கள் வாக்கை சிதரடிப்பார்களேயானால் தமிழ் மக்கள் என்ன சிந்திக்க தெரியாதவர்களா? அல்லது வட கிழக்கு மக்கள் அவர்களது கோரிக்கையை நம்புவதற்கு எங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையாக இருக்கிறது.அவர்கள் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முகவர்களாக செயற்படுகின்றவர்கள் ஒன்றை உணர வேண்டும். தமிழ் மக்களுக்கான நீண்ட கால தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது இந்தமுறை ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த செய்தியை சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு எடுத்த முயற்சியை இவர்கள் சிதைக்கின்றார்கள். நான் 8 மாவட்டத்திலும் பிரச்சார பபணிகளை மேற்கொண்டுள்ளேன் . 8 மாவட்ட மக்களும் தெளிவாக இருக்கின்றார்கள். இந்த முறை நாங்கள் எல்லோருமே சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309283
  5. Published By: DIGITAL DESK 3 12 SEP, 2024 | 10:47 AM தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா வீதி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (12) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (11) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா வீதி ஊழியர்கள் இன்றையதினம் காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாணரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். குறித்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193458
  6. தந்தையின் கோட்டைக்குள் மகனுக்கு கல் வீச்சு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மஹிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டையில், நாமலுக்கு இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. https://thinakkural.lk/article/309297
  7. Published By: DIGITAL DESK 3 12 SEP, 2024 | 09:44 AM இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் காலநிலை மாற்றத்தினால் நீர்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 100 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியில் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டம் இரண்டு துணைத் திட்டங்களை கொண்டுள்ளது. முதலாவது திட்டம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகளை நிறுவும். இரண்டாவது திட்டம் மேம்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதை ஆதரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/193456
  8. Published By: DIGITAL DESK 7 12 SEP, 2024 | 08:56 AM கடந்த இருபத்தைந்து வருடங்களாக 11 மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒரே நிறுவனத்தினால் 5.89 டொலர்களுக்கு எவ்வித டெண்டரும் இன்றி அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் குறைவான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலேயே இம்முறை டெண்டர் கோரப்பட்டதாகவும் அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். மேலும் 5.06 டொலர்களுக்கு இ-பாஸ்போர்ட் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று புதன்கிழமை (11) சென்ற அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய,அமைச்சர். கடவுச்சீட்டு , விசா விவகாரம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் ஆதாயம் அடைய காரணமாக அமைந்தது. சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்ததும் அதில் தொடர்புடையவர்களை தண்டிப்பேன் என்கிறார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் உண்மை தெரியாமல் பேசுகிறார். கடவுச்சீட்டு பெறுவதற்கு தரகர் மாஃபியா 50,000 ரூபாய் முதல் பல்வேறு தொகைகளை வசூலித்ததாக அறிந்தோம். ஆனால் தற்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிவரவு அலுவலகம் அருகிலும் ஒரு சிறப்பு பொலிஸார் குழு பணியில் உள்ளது. இப்போது வரிசைகள் இல்லை. இருபத்து இரண்டு வருடங்களாக ஒரே நிறுவனத்தால் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டது. குறைந்தபட்சம் டெண்டர் கூட கோரப்படவில்லை. அவர்கள் இதுவரை 11 மில்லியன் பாஸ்போர்ட்டுகளை அச்சிட்டுள்ளனர். இம்முறை அதே நபர்களிடம் கொடுக்கச் சென்றபோது அதை நிறுத்திவிட்டு டெண்டர் கோரச் சொன்னேன். புதிய கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சில தட்டுப்பாடு உள்ளது. கிடைப்பதை நிர்வகித்தல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு எனக்கு விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் 10 ஆண்டுகள் வாழ எனக்கு சிறப்பு விசா உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய 80 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கான வீசாவைப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் தவறான கூற்று என்று நான் நினைக்கிறேன். தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். எந்த அமைச்சர்களுக்கும் விசா கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் அப்படி விசா எடுக்கவில்லை. அப்படி யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார். இதில் சந்தேகமில்லை. அரசாங்க அமைச்சர்களாகிய நாம் அரசாங்கத்தின் தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்த நாடு தற்போது ஓரளவு மீண்டுள்ளது. நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இது பரிசோதனைக்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள் மனதினால் சிந்திப்பதைவிட்டும் மூளையால் சிந்தித்து செயல்பட வேண்டும் இதுவரை நீதியின் செயல்பாடு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுள்ளது. போதைப்பொருள் பணம் பலரது கைகளில் சிக்கியுள்ளது. அவர்கள் தான் பொலிஸ்மா அதிபரை சுற்றி வளைத்து அடிக்கிறார்கள். யுக்திய செயல்பாடுதான் அதற்குக் காரணம். இந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் யுக்திய செயற்பாடு இரட்டிப்பாக்கப்பட்டு கடுமையாக நடைமுறைப் படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் 100% இல்லாவிட்டாலும் 90% கட்டுப்படுத்தப்படும் என்றார். https://www.virakesari.lk/article/193453
  9. பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார். வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,"சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும். இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்களை உடைத்தெறிவோம்" என வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழ் மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, https://www.facebook.com/100042065541571/videos/859387266158952/? https://tamilwin.com/article/tamil-general-candidate-prapoganda-jaffna-1726065769#google_vignette
  10. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா? தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 10) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோது, அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்," என்றார். இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க-வும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாமா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, "மது ஒழிப்பில் அ.தி.மு.க-வும் தயங்குகிறது. வேண்டுமானால் அவர்கள் மாநாட்டுக்கு வரட்டும். எந்தக் கட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை," என்று தெரிவித்தார். மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் அரசியலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் சொன்னாலும், தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி அளிப்பதற்காகவே மதுவிலக்கை வலியுறுத்தி மாநாட்டை நடத்துகிறாரா என்றும் அ.தி.மு.க-வை அழைக்கிறாரா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. செவ்வாய்க்கிழமையன்று தி.மு.க., தலைவர்களிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் இதனைச் சாதாரணமாகக் கடந்து சென்றனர். இது தொடர்பாக சென்னையில் பதிலளித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "விடுதலைச் சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க-வை அழைத்து, அதற்கு அவர்கள் சென்றால் நல்லதுதானே. நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்," என்றார். சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "அ.தி.மு.க-வை அழைத்திருப்பது அவர்களுடைய விருப்பம்," என்று தெரிவித்தார். படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம் ‘கூட்டணி மாற்றத்திற்கான அச்சாரம்’ ஆனால், இதனை கூட்டணி மாற்றத்திற்கான அச்சாரமாகவே பார்க்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் இதுபோன்ற மாநாடுகள் எதுவும் ஆளும் அரசுக்குத் தரப்படும் அழுத்தமாகத்தான் கருதப்படும். தி.மு.க., கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே, 2026-இல் கூட்டணி ஆட்சி என்பதை வலியுறுத்த நினைக்கின்றன. அந்த நிலைப்பாட்டில்தான் வி.சி.க-வும் செல்கிறது'' என்றார் மேலும் அவர், ''முதலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிலர் கைதுசெய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என திருமாவளவன் கூறினார். பின்னர் . கள்ளச்சாராய சாவுகளுக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தது தவறு என்றார். இப்போது மதுவிலக்கை வலியுறுத்துகிறார். இது சாத்தியமல்ல என்பது அவருக்கும் தெரியும். ஆகவே, இது கூட்டணி முறிவை நோக்கித்தான் செல்லும். இது தி.மு.க-வுக்கும் தெரியும்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். 1970-களில் மதுவிலக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளையும் அதற்குப் பிறகு தமிழ்நாடு அரசியலில் நடந்த மாற்றங்களையும் இதற்கு உதாரணமாக நினைவுகூர்கிறார் ஷ்யாம். ''1971-இல் தி.மு.க., ஆட்சி நடந்துவந்தபோது, அந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மதுவிலக்கு ஒத்திவைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில் தி.மு.க-விற்குள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கும் பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்திருந்தன. இந்தத் தருணத்தில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுவிலக்குப் பிரசாரத்தைத் துவங்கப்போவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். ‘மது கூடாது’ என்ற லட்சியம் உடையவர்கள், அண்ணா சமாதிக்குச் சென்று மதுவுக்கு எதிராக மூன்று வாக்குறுதிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். ஆனால், இந்தப் பிரசார நிகழ்ச்சிகள் குறித்து தி.மு.க-விற்குள்ளிருந்தே விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பிறகு முரண்பாடுகள் முற்றி, எம்.ஜி.ஆர்., கட்சியை விட்டே வெளியேறினார். எம்.ஜி.ஆர்., கட்சியைவிட்டு வெளியேறுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இது ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. அதுபோலவே இப்போதும் நடக்கலாம்'' என்கிறார் ஷ்யாம். படக்குறிப்பு, 2016-இல் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியையே தாங்கள் நிறைவேற்ற வேண்டுமெனக் கோருவதாக திருமாவளவன் கூறுகிறார் ‘கூட்டணியோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை’ ஆனால், இது முழுக்க முழுக்க மதுவிலக்கை மட்டுமே வலியுறுத்தி நடத்தப்படும் மாநாடு என்றும் இதனை கூட்டணியோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை என்கிறார் திருமாவளவன். புதன்கிழமையன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், 2016-இல் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியையே தாங்கள் நிறைவேற்ற வேண்டுமெனக் கோருவதாகக் குறிப்பிட்டார். "ஒரு தூய நோக்கத்திற்காக எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்கிறோம். இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது. தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்ப்பது, கூட்டணிக் கணக்குகளோடு இணைத்துப் பார்ப்பது, என இந்த விவகாரத்தை அணுகுகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலை தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பார்ப்போம். மற்ற நேரங்களில் அதைக் கருப்பொருளாக வைத்து எந்த முடிவையும் எடுப்பதில்லை," என்று குறிப்பிட்டார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், அப்போதும் தி.மு.க. மதுவிலக்குக் கொள்கையை நிறைவேற்ற முன்வராவிட்டால், வி.சி.க-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேற்றவில்லையென்றால் என்ன நடக்கும் என்பது போன்ற யூகங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை," என்று முடித்துக்கொண்டார். பட மூலாதாரம்,VCK படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி மதுவிலக்கு கோரிக்கைகள் 2024-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில்தான், தற்போது மதுவிலக்கு குறித்த கோரிக்கைகள் முன்னணிக்கு வந்திருக்கின்றன. இதற்கு முன்பாக, 2014-2015-ஆம் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் நடந்தன. மது ஒழிப்பு போராளியான சசி பெருமாள் 2015-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார். இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசி பெருமாளின் குடும்பத்தினர் அவரது சடலத்தை வாங்க மறுத்தனர். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி சேலத்தில் ஒரு மதுபானக் கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதில் டாஸ்மாக் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்தது அக்கட்சி. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவையும் தாங்கள் வெற்றிபெற்றால் மதுவிலக்கைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தன. ஆனால், மீண்டும் அ.தி.மு.க-வே ஆட்சியைப் பிடித்தது. இதற்குப் பிறகு மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் முன்னணிக்கு வரவில்லை. 2021-ஆம் ஆண்டு தேர்தலில் மதுவிலக்கு குறித்து தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இப்போது கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களையடுத்து மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. பட மூலாதாரம்,RAVIKUMAR படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார் வி.சி.க என்ன சொல்கிறது? ஆனால், இதனை அரசுக்குத் தரும் நெருக்கடியாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார். "கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட பிறகு, அங்கு சென்ற திருமாவளவன் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்தார். இதற்கு பிறகு இது தொடர்பாக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அரசுக்கு அளிக்கும் நெருக்கடியாக பார்க்க வேண்டியதில்லை. மதுவிலக்கு என்பது அரசின் கொள்கைதான். அதனால்தான் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை என்று இருக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் அந்தத் துறையின் வேலை,” என்கிறார் அவர். “மதுவிலக்கால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். நம்மைவிட வருவாய் குறைந்த பிஹாரில் துணிச்சலாக மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறார்கள். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசே இழப்பீடு தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை," என்கிறார் அவர். அதேபோல, அ.தி.மு.க-வுக்கான அழைப்பையும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்கிறார் அவர். "எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க., பா.ம.க., தவிர வேறு எந்தக் கட்சி வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம். அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி. அக்கட்சி கலந்துகொண்டு ஒரு வாக்குறுதியை அளித்தால் அதற்கு நல்ல விளைவு ஏற்படுமல்லவா. அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும். இதனைத் தேர்தல் கூட்டணியோடு முடிச்சுப்போட வேண்டியதில்லை," என்கிறார் அவர். தி.மு.க என்ன சொல்கிறது? தி.மு.க-வும் இதனை ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை என்கிறது. இது குறித்து பிபிசி-யிடம் பேசிய தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன், ஜனநாயகத்தில் இதுபோன்ற நடைமுறைகள் ஏற்கத்தக்கவைதான் என்றார். "மதுவிலக்கு போன்ற பெரிய கொள்கை மாற்றங்கள், கோரிக்கை எழுந்தவுடன் நிறைவேற்றப்படப் போவதில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்த பிறகு, அங்கு சென்ற திருமாவளவனிடம் மதுவிலக்குக் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது மதுவிலக்கு வரவேண்டும் என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். மதுவிலக்கு தொடர்பான மாநாடு என்பதால் யார் வேண்டுமானாலும் வரலாம், இது அரசியல் மேடையல்ல என்றுதான் சொல்லியிருக்கிறார். தேர்தல் அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்லியிருக்கிறார். ஜனநாயகத்தில் இதுபோன்ற நடைமுறைகளை ஏற்க வேண்டியதுதான்," என்கிறார் கான்ஸ்டைன்டீன். வி.சி.க-வின் மதுவிலக்குக் கோரிக்கை குறித்து கேட்டபோது, இதில் முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார். "மதுவைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதனால்தான் சமீபத்தில்கூட 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், இவ்வளவு கடைகள் திறந்திருக்கும்போதே பெரிய அளவில் கள்ளச்சாராயம் பிடிபடுகிறது. ஆகவே இதில் உடனடியாக முடிவெடுப்பது கடினம். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார்," என்கிறார் கான்ஸ்டைன்டீன். தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மிக முக்கியமானதாக இருக்கிறது. 2023- 24-ஆம் ஆண்டில் இந்த வருவாய் சுமார் 45,800 கோடி ரூபாயாக இருந்தது. 2019-ஆம் ஆண்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இரு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4-இல் வெற்றிபெற்றது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றது. https://www.bbc.com/tamil/articles/c07e4ynl8yvo
  11. அண்ணை ரைப்படிக்கிறவை தமிழக உறவுகளாமே?!(உறுதிப்படுத்தாத தகவல்) அவர்களுடைய புரிதலுக்காகவோ!
  12. Published By: RAJEEBAN 11 SEP, 2024 | 11:23 AM மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் ஆராய்ந்து கொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததால் செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்சிக்கோவின் பதவி விலகும் ஜனாதிபதியின் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு மாணவர்களும், நீதித்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சீர்திருத்த திட்டத்தினால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை செவிமடுக்கின்றார்கள் இல்லை என தெரிவித்துள்ளனர். மெக்சிக்கோ கொடியையும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு எதிரான வாசகங்களையும் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதித்துறை வீழ்ச்சியடையாது என கோஷமிட்டுள்ளனர். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். நீதித்துறை சீர்திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பது தங்களிற்கு தெரியும் என 30 வயது நீதித்துறை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193385
  13. தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஓஃப்-ஸ்பின்னரான இவர், தனது சாதனையை எந்த பந்து வீச்சாளராலும் விரைவில் முறியடிக்க முடியாது என கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது; “டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி நான் கவலைப்படுகிறேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாடும் 6 – 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடலாம். பல நாடுகளில் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதே இல்லை. இங்கே குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. எனவே 800 விக்கெட் சாதனையை ஒருவர் உடைப்பது மிகவும் கடினம். ஏனெனில் தற்போது கிரிக்கெட் என்பது ஷார்ட் ஃபார்மை நோக்கி நகர்ந்துள்ளது. எங்கள் காலத்தில் நாங்கள் 20 வருடங்கள் விளையாடினோம். ஆனால் இப்போதுள்ள வீரர்களின் விளையாட்டு காலம் என்பது குறைந்துள்ளது. தொடர்ந்து யாரும் விளையாடுவதில்லை என்பது பிரச்னையாகும். அனைத்து வீரர்களிடமும் திறமை இருந்தாலும் அவர்களால் அனுபவத்தை பெற முடியுமா? அதிக தொடர்கள் நடைபெறும் இந்த காலத்தில் அது கடினம்” என்று கூறினார். https://thinakkural.lk/article/309250
  14. 11 SEP, 2024 | 09:27 PM (இராஜதுரை ஹஷான்) இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொஸ்கம பகுதியில் புதன்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதியின் பக்கம் சென்றுள்ளார்கள். குறுகிய நோக்கங்களுக்காக நாங்கள் கட்சியை விட்டுச் செல்லவில்லை. பெரும்பான்மையானவர்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த மூன்று வேட்பாளர்கள் இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாப்பதாக குறிப்பிடுகிறார்கள். 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கமே சர்வதேசத்துக்கு காட்டிக் கொடுத்தது. இதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். இராணுவத்தினரது உரிமைகள் பற்றி பேசுவதற்கு ரணில், சஜித், அனுர ஆகியோருக்கு தார்மீக உரிமை கிடையாது. இவர்களின் அரசியல் மேடைகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். யுத்த காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகத்தை வேண்டுமென்றே இடைநிறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது. யுத்த சூழலிலும் வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினோம். இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடவில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தான் கோட்டாபய ராஜபக்ஷ 30- 1 தீர்மானத்துக்கு இணையணுசரனை வழங்குவதில் இருந்து விலகினார். இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே இராணுவத்தினர் தமது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக்கூடாது என்பதை கடுமையாக குறிப்பிட்டார்கள். இராணுவத்தினரது அர்ப்பணிப்புக்கு உரிய மதிப்பளிக்கப்படுகிறதா? அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்று குறிப்பிடும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பெரும்பான்மையினர் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார். https://www.virakesari.lk/article/193415
  15. சிறுவயதில் பாடசாலைக்கு சென்ற அனுபவங்கள் நினைவிற்கு வந்தது. கவிதைக்கு நன்றி.
  16. ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தியாவும், சீனாவும் இணைய ஆர்வம் காட்டுவதாக ரஷ்யாவின் EurAsian Times தெரிவித்துள்ளது. ரஷ்யா 0.5 மெகாவாட் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட, ஒரு சிறிய அணுமின் நிலையத்தை நிலாவில் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் இணைய இந்தியாவும், சீனாவும் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் 2035 க்குள் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அரசு அணுமின் நிறுவனமான Rosatom-த்தின் தலைவர் அலெக்ஸி லிக்காச்சேவ், விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசியதாவது; “0.5 மெகாவாட் ஆற்றல் திறன் கொண்ட அணுமின் நிலையத்தை நிலவில் அமைக்கவுள்ளோம். இந்த திட்டத்தில் சர்வதேச நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நமது சீனா மற்றும் இந்திய நண்பர்கள், இதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பல சர்வதேச திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 2040ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் சுகன்யா திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. அமெரிக்க திட்டத்திலும் இந்தியா அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வீரர் சுபான்சு சுக்லாவை அனுப்பவுள்ளதாக இஸ்ரோ கடந்த மாதம் அறிவித்திருந்தது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட சபான்சு சுக்லா, முன்னதாகவே, நாசாவின் உதவியுடன் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவுள்ளார். https://thinakkural.lk/article/309181
  17. படக்குறிப்பு, 1990-களில் குழந்தையாக இருக்கும்போது கைவிடப்பட்ட பின்னர் காப்பாற்றப்பட்ட மோனிகாவைச் சந்திக்கும் போது மருத்துவச்சி சீரோ உடைந்து அழுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், அமிதாப் பராசர் பதவி, பிபிசி ஐ புலனாய்வுகள் 11 செப்டெம்பர் 2024, 05:09 GMT புதுப்பிக்கப்பட்டது 11 செப்டெம்பர் 2024, 05:32 GMT மருத்துவச்சியான சீரோ தேவி, மோனிகா தாட்டேவை கட்டிப்பிடித்து அழுகிறார். 20களில் இருக்கும் மோனிகா, தான் பிறந்த இடத்திற்குத் திரும்பியிருக்கிறார். இந்த இந்திய நகரத்தில்தான் சீரோ நூற்றுக்கணக்கான குழந்தைகளை பிரசவிக்க உதவியிருக்கிறார். சீரோ அழுததற்குக் காரணம், பிரசவிக்க தான் உதவிய குழந்தையை மீண்டும் சந்தித்தது அல்ல. மோனிகா பிறப்பதற்கு சில காலத்திற்கு முன்புவரை, புதிதாகப் பிறந்த பெண் சிசுக்களைக் கொல்ல நிர்பந்திக்கப்படும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவச்சிகளில் சீரோவும் ஒருவராகத்தான் இருந்தார். ஆவணங்களின்படி பார்த்தால், இவர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தைதான் மோனிகா. சீரோவையும் இன்னும் நான்கு மருத்துவச்சிகளையும் பேட்டியெடுக்க 1996ல் இந்தியாவின் ஏழ்மையான பிஹார் மாநிலத்திற்குச் சென்றேன். அப்போதிலிருந்து நான் சீரோவின் கதையை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். கத்தியார் மாவட்டத்தில், பெற்றோரின் வற்புறுத்தலில் பெண் சிசுக்கள் கொல்லப்படுவதன் பின்னணியில் இவர்கள்தான் இருக்கிறார்கள் என ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கண்டறிந்தது. ரசாயனங்களைக் கொடுத்தோ, கழுத்தை நெரித்தோ அந்தக் குழந்தைகளை இவர்கள் கொன்றனர். நான் பேட்டியெடுத்த மருத்துவச்சிகளிலேயே மூத்தவர், ஹகியா தேவி. அப்போதுவரை 12 அல்லது 13 சிசுக்களைக் கொன்றிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். மற்றொரு மருத்துவச்சியான தர்மி தேவி, கூடுதலான குழந்தைகளைக் கொன்றிருந்தார். குறைந்தது 15 - 20 குழந்தைகளாவது இருக்கும். புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும் முறையை வைத்துப் பார்த்தால், இவர்கள் எத்தனை சிசுக்களைக் கொன்றிருக்கக்கூடும் என்பதை சரியாகச் சொல்வது கடினம். இந்த மருத்துவச்சிகளிடமும் வேறு 30 மருத்துவச்சிகளிடமும் எடுக்கப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் 1995ல் வெளியிட்ட அறிக்கையில் சில புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த அறிக்கையில் தரப்பட்ட விவரங்கள் சரியானவை என்றால், ஒரு மாவட்டத்தில் மட்டும் 35 மருத்துவச்சிகளால் 1,000க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையின்படி அந்தத் தருணத்தில் பிஹாரில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவச்சிகள் இருந்தனர். கட்டளைகளை மறுப்பது என்பது ஒரு மருத்துவச்சியால் இயலாத காரியம் என்கிறார் ஹகியா. “குடும்பத்தினர் அறையைப் பூட்டிவிட்டு, எங்கள் பின்னாலேயே குச்சிகளோடு நிற்பார்கள்" என்கிறார் ஹகியா தேவி. “எங்களுக்கு ஏற்கனவே நான்கைந்து மகள்கள் இருக்கிறார்கள். இது எங்கள் செல்வத்தையெல்லாம் அழித்துவிடும். எங்கள் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்த பிறகு, நாங்கள் பட்டினி கிடந்துதான் சாக வேண்டும். இப்போது இன்னொரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அவளைக் கொன்றுவிடு.. என்பார்கள்" “நாங்கள் யாரிடம் புகார் சொல்ல முடியும்? நாங்கள் பயந்து போயிருந்தோம். நாங்கள் காவல்துறைக்குப் போனால், எங்களுக்கு பிரச்னை வந்திருக்கும். நாங்கள் வெளியில் சொன்னால், எங்களை அச்சுறுத்துவார்கள்” என்று என்னிடம் சொன்னார் அவர். படக்குறிப்பு, தான் 90களில் செய்த மிக முக்கியமான நேர்காணல்களை அமிதாப் பார்க்கிறார் கிராமப்புற இந்தியாவில் மருத்துவச்சியின் பங்கு என்பது, பாரம்பரியம், ஏழ்மை மற்றும் ஜாதியியின் கடுமையான நிதர்சனங்களால் ஆனது. நான் நேர்காணல் செய்த மருத்துவச்சிகள் இந்தியாவின் ஜாதிக் கட்டமைப்பில் கீழே இருக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மருத்துவச்சித் தொழில் அவர்களுடைய பாட்டிகளாலும் தாய்மார்களாலும் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. சக்திவாய்ந்த, உயர் ஜாதிக் குடும்பங்களின் கட்டளைகளை மறுப்பதை நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு உலகத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். ஒரு சிசுவைக் கொல்வதற்காக சிறிய அளவு பணம் கொடுப்பதாகவோ சேலை அல்லது சிறிதளவு தானியம் கொடுப்பதாகவோ மருத்துவச்சிக்கு வாக்குறுதி அளிக்கப்படும். சில சமயங்களில் அதுவும் கிடைக்காது. ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பெண் குழந்தை பிறந்தால் அதில் பாதிதான் கிடைக்கும். இந்தியாவின் பாரம்பரியத்தில் ஊறியுள்ள வரதட்சணை பழக்கமே இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்றார்கள் அவர்கள். வரதட்சணை என்பது 1961-இல் சட்டவிரோதமாக்கப்பட்டாலும்கூட, 90களிலும் இந்த வழக்கம் தீவிரமாகவே இருந்தது. இப்போதும்கூட தொடர்கிறது. வரதட்சணை என்பது பணம், நகை, பாத்திரங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏழையோ, பணக்காரரோ - பெரும்பாலான குடும்பங்களில் இது திருமணத்திற்கான நிபந்தனையாக இருக்கும். இதுதான் மகன் பிறப்பதைக் கொண்டாட்டமாகவும் மகள் பிறப்பதை நிதிச் சுமையாகவும் மாற்றுகிறது. பலருக்கு இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. நான் நேர்காணல் செய்தவர்களிலேயே இப்போதும் உயிரோடு இருப்பவரான சீரோ தேவி, ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இடையே அந்தஸ்தில் உள்ள ஏற்றத்தாழ்வை விளக்குவதற்கு ஒரு தெளிவான சித்திரத்தை அளிக்கிறார். படக்குறிப்பு, தான் குழந்தையாக இருந்ததிலிருந்து மருத்துவச்சியாகப் பணியாற்றியிருக்கிறார் சீரோ “ஒரு மகன் என்பது எப்போதுமே மேலேதான். மகள் என்பது கீழே. ஒரு மகன் உணவளிக்கிறாரா, தாய், தந்தையரைப் பார்த்துக்கொள்கிறாரா என்பது ஒருபுறமிருந்தாலும், அவர்களுக்கு மகன்தான் தேவை.” மகன்களை விரும்பும் இந்தப் போக்கு இந்தியாவின் தேசிய அளவிலான புள்ளிவிவரங்களிலேயே புலப்படுகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,000 ஆண்களுக்கு 943 பெண்களே இருந்தனர். ஆனால், 1990-களைவிட நிலைமை மேம்பட்டிருக்கிறது. 1991 கணக்கெடுப்பின்போது 1,000 ஆண்களுக்கு 926 பெண்கள்தான் இருந்தார்கள். 2021-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நிலைமை இன்னும் மேம்பட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பணியாற்றிவருபவர்கள், அந்த எண்கள் நம்பத்தக்கவையல்ல என்கிறார்கள். படக்குறிப்பு, சமூகப் பணியாளரான அனிலா குமாரி (இடமிருந்து 2-வது), 1990-களில் மருத்துவச்சிகளின் அணுகுமுறையை மாற்ற கூட்டங்களை நடத்தினார் கடந்த 1996-இல் நான் மருத்துவச்சிகளின் வாக்குமூலத்தைப் படமாக எடுத்து முடித்தபோது ஒரு சிறிய, அமைதியான மாற்றம் உருவாக ஆரம்பித்திருந்தது. இந்த ஆணைகளை முன்பு நிறைவேற்றிய மருத்துவச்சிகள், இப்போது எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த மாற்றத்தைத் தூண்டியவர் அனிலா குமாரி. இந்த சிசுக் கொலைகளின் அடிப்படையான காரணத்தை நீக்கப் போராடிவந்த அனிலா குமாரி, கத்தியார் மாவட்டதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்தார். அனிலாவின் அணுகுமுறை எளிமையானது. "உங்கள் சொந்த மகளுக்கு இதை நீங்கள் செய்வீர்களா?" என்று மருத்துவச்சிகளிடம் கேட்பார். அவருடைய கேள்வி, பகுத்தறிவையும் எதிர்ப்பையும் ஊட்டியது. சமூகக் குழுக்களின் மூலமாக மருத்துவச்சிகளுக்கு சில நிதியுதவிகள் கிடைத்தன. மெல்லமெல்ல வன்முறையின் சுழற்சியில் ஒரு தடை ஏற்பட்டது. 2007-இல் என்னிடம் பேசிய சீரோ, இந்த மாற்றத்தைப் பற்றி விளக்கினார். "இப்போது யார் என்னிடம் சிசுவைக் கொல்லச் சொன்னாலும், 'இங்கே பாருங்கள், குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் அனிலா மேடத்திடம் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்' என்று சொல்வேன்’" தங்களுடைய சிசுக்களைக் கொல்ல விரும்பிய அல்லது தூக்கியெறிய விரும்பிய குடும்பங்களிடமிருந்து இந்த மருத்துவச்சிகள் 1995க்கும் 1996க்கும் இடையில் குறைந்தது ஐந்து சிசுக்களையாவது காப்பாற்றியிருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்ற நான்கு குழந்தைகளை பிஹாரின் தலைநகர் பாட்னாவில் இயங்கிவந்த, தத்தெடுப்பிற்கு உதவக்கூடிய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் அனுப்பிவைத்தார் அனிலா. இந்தக் கதை இங்கேயே முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், காப்பாற்றப்பட்டு, தத்தெடுக்கப்பட்ட இந்த குழந்தைகளின் வாழ்க்கை எங்கே சென்றது என்பதை நான் அறிய விரும்பினேன். அனிலாவின் ஆவணங்கள் மிக துல்லியமாக இருந்தன. ஆனால், தத்துக் கொடுக்கப்பட்டதற்குப் பிந்தைய தகவல்கள் ஏதும் அவரிடம் இல்லை. பிறகு நான், மேதா சேகர் என்ற பெண்ணைத் தொடர்புகொண்டேன். அவர் 1990களில் மருத்துவச்சிகள் அனிலாவின் என்.ஜி.ஓவுக்கு வர ஆரம்பித்து சிசுக்கள் காப்பாற்றப்பட ஆரம்பித்த தருணத்தில், பிஹாரில் சிசுக் கொலை குறித்து ஆய்வுசெய்துவந்தார். குறிப்பிடத்தக்கவிதமாக, காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் ஒன்று என நம்பப்படும் இளம் பெண்ணுடன் மேதா தொடர்பில் இருந்தார். மருத்துவச்சிகளால் காப்பாற்றப்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் பிஹாரில் ஓடும் கோசி ஆற்றின் பெயரை, அந்தக் குழந்தைகளது பெயரின் முன்னொட்டாக சேர்த்திருந்தார் அவர். தத்தெடுப்பதற்கு முன்பாக 'கோசி' என்பது மோனிகாவின் பெயரின் முன்னொட்டாக இருந்ததை மேதா நினைவுகூர்ந்தார். தத்துக்கொடுத்த நிறுவனம், அந்த ஆவணங்களைப் பார்க்க எங்களை அனுமதிக்காது என்பதால், எங்களால் அதனை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவரது பாட்னா பின்புலம், அவருடைய தோராயமான பிறந்த தேதி, 'கோசி' என்ற முன்னொட்டு ஆகியவை எல்லாம் ஒரு முடிவுக்கு எங்களை இட்டுச்சென்றன: எப்படிப் பார்த்தாலும், அனிலாவாலும் மருத்துவச்சிகளாலும் மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளில் மோனிகாவும் ஒருவர். புனேவிலிருந்து சுமார் 2,000 கி.மீ. (1,242 மைல்கள்) தூரத்தில் இருந்த அவரது பெற்றோரின் வீட்டில் மோனிகாவை நான் சந்திக்கச் சென்றபோது அவரது குழந்தைப் பருவத்தில் சௌகர்யமாகவும் வசதியாகவும் இருந்ததைப்போலவே பேசினார். படக்குறிப்பு, தன்னை 3 வயதில் தத்தெடுத்த தந்தையுடன் மோனிகா “நல்ல குடும்பம் கிடைத்ததில், நான் அதிர்ஷ்டக்காரி. இந்த வாழ்க்கைதான் இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான என் வரையறை. அதை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்," என்றார் அவர். தான் தத்தெடுக்கப்பட்டவர் என்பதும் பிஹாரைச் சேர்ந்தவர் என்பதும் மோனிகாவுக்குத் தெரியும். அவர் தத்தெடுக்கப்பட்டதற்குப் பின்னணியில் இருந்த சூழல் குறித்து எங்களால் கூடுதல் தகவல்களை அளிக்க முடிந்தது. அனிலாவையும் சீரோவையும் சந்திக்க இந்த ஆண்டின் துவக்கத்தில் மோனிகா பிஹாருக்கு வந்தார். அனிலா மற்றும் மருத்துவச்சிகளைப் போன்றவர்களின் பல ஆண்டுகால கடுமையான உழைப்பின் உச்சகட்டமாக மோனிகா தன்னைப் பார்த்தார். “தேர்வை சிறப்பாக எழுத பெரிய அளவில் முயற்சிகளைச் செய்வார்கள். அதைப்போல நான் உணர்ந்தேன். அவர்கள் கடுமையாக பணியாற்றினார்கள். ஆகவே அதன் பலனைப் பார்க்க அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆகவே, நானும் (அவர்களை) பார்க்க விரும்பினேன்." படக்குறிப்பு, இத்தனை வருடங்கள் கழித்து மோனிகாவைச் சந்தித்ததில் அனிலா மிகவும் மகிழ்ச்சியடைந்தார் மோனிகாவைச் சந்தித்தபோது மகிழ்ச்சியினால் அனிலா கண்ணீர்விட்டு அழுதார். சீரோ சற்று வேறு மாதிரி நடந்துகொண்டார். அவர் தேம்பித்தேம்பி அழுததோடு, மோனிகாவை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு, அவரது முடியைக் கோதினார். “உன் உயிரைக் காப்பாற்ற நான் உன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு சென்றேன். என் ஆன்மா இப்போது அமைதியாக இருக்கிறது” என்று மோனிகாவிடம் சொன்னார் அவர். சில நாட்களுக்குப் பிறகு, சீரோ நடந்துகொண்டவிதத்திற்கான காரணத்தை வலியுறுத்திக்கேட்க நினைத்தேன். ஆனால், மேலும் மேலும் கேள்விகள் கேட்கப்படுவதை அவர் விரும்பவில்லை. “கடந்த காலத்தில் நடந்தது, நடந்துவிட்டது” என்றார் அவர். ஆனால், பெண் குழந்தைகளுக்கு எதிராக சிலரிடமிருக்கும் உணர்வு இன்னும் மாறவில்லை. தேசத்தின் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற இந்திய அரசு போராடினாலும் தற்போது ஆண் - பெண் விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு கருக்கலைப்புதான் பெரிதும் காரணமாக அமைகிறது. இருந்தாலும் சிசுக் கொலைகள் இன்னும் பதிவாகின்றன. 1994ல் குழந்தைகளின் பாலினத்தைத் தேர்வுசெய்து கருக்கலைப்பு செய்வது சட்டரீதியாக தடைசெய்யப்பட்டது. இருந்தாலும், பாலினத்தைத் தேர்வுசெய்து நடக்கும் கருக்கலைப்புகள் சட்டவிரோதமாக நடப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். வட இந்தியாவின் சில பகுதிகளில் குழந்தை பிறப்பின்போது 'சோஹர்' என்ற பாரம்பரிய பாடல் பாடப்படுகிறது. ஆண் குழந்தையின் பிறப்பிற்காக மகிழ்வதாகவே அந்தப் பாடல் இருக்கும். 2024லும் பெண் குழந்தையின் பிறப்பிற்காக மகிழ்ச்சியடைவதைப் போலவும் பாடல்களை மாற்றிப் பாடும்படி உள்ளூர் பாடர்களிடம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் எங்கள் ஆவணப் படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது, கத்தியாரில் பிறந்து சில மணி நேரமே ஆன இரண்டு பெண் குழந்தைகள் தூக்கியெறியப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழந்தை புதரிலும் ஒரு குழந்தை சாலையோரமாகவும் கிடந்தது. இதில் ஒரு குழந்தை பிறகு இறந்துவிட்டது. மற்றொரு குழந்தை தத்தெடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. படக்குறிப்பு, பிபிசி இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தபோது கைவிடப்பட்ட பச்சிளம் பெண்குழந்தை மோனிகா பிஹாரைவிட்டுப் புறப்படும் முன்பாக, கத்தியாரில் உள்ள சிறப்பு தத்தெடுப்பு மையத்திற்குச் சென்று அந்தக் குழந்தையை பார்த்தார். பெண் சிசுக்கள் கொல்லப்படுவது குறைந்திருக்கலாம். ஆனால், பெண் குழந்தைகளை கைவிட்டுச் செல்வது தொடர்கிறது என்ற நிதர்சனம் தன்னை பெரும் தொந்தரவுக்குள்ளாக்குவதாகச் சொன்னார். “இது ஒரு சுழற்சி. சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் அந்த இடத்தில் இருந்தேன். இப்போது என்னைப் போலவே இன்னொரு பெண் இருக்கிறாள்" ஆனால், மகிழ்ச்சிகரமான சில ஒற்றுமைகளும் இருந்தன. அந்தக் குழந்தை வடகிழக்கு மாகாணமான அசாமைச் சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு எதா என பெயரிட்டனர். எதா என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம். படக்குறிப்பு, கைவிடப்பட்ட குழந்தையை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தத்தெடுத்து அதற்கு ‘எதா’ என்று பெயரிட்டுள்ளது "நாங்கள் அவளது புகைப்படத்தைப் பார்த்தோம். ஒரு முறை கைவிடப்பட்ட குழந்தை, இன்னொரு முறை கைவிடப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்" என்கிறார் அவளைத் தத்தெடுத்த தந்தையான கௌரவ். அவர் இந்திய விமானப் படையின் அதிகாரி. சில வாரங்களுக்கு ஒரு முறை, அவள் செய்யும் சேட்டைகளை படம் பிடித்து கௌரவ் எனக்கு அனுப்புகிறார். நான் சில நேரம் அவற்றை மோனிகாவுக்கு அனுப்புவேன். திரும்பிப் பார்க்கும்போது, இந்த விவகாரத்திற்காக செலவிட்ட 30 ஆண்டுகள் என்பது, வெறும் கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது அசௌகர்யமான உண்மைகளை எதிர்கொள்வது. கடந்த காலத்தில் நடந்தது, நடந்ததுதான். ஆனால், அதனை மாற்றியமைக்க முடியும். அந்த மாற்றத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c985736m6eeo
  18. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை 11 SEP, 2024 | 05:28 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனு கடந்த 7 மாத காலமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (11) இந்த பிணை உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193430
  19. கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம்: யார் கை ஓங்கியிருந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதலாவது நேருக்கு நேர் விவாதம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த 'தி ஏபிசி நியூஸ் பிரசிடென்ஷியல் டிபேட்' (The ABC News Presidential Debate) நிகழ்ச்சியில், கமலா ஹாரிஸும், டிரம்பும், ஒருவருக்கொருவர் மற்றவரின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர். இதன்போது ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், எல்லைப் பிரச்னைகள், சட்டவிரோத குடியேற்றம், பொருளாதாரம், கேபிடல் ஹில் கலவரம், கருக்கலைப்பு போன்ற விவகாரங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின்போது சீனா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரான் போன்ற நாடுகள் பற்றி பல முறை குறிப்பிடப்பட்டன. ”அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து எனக்கும் டிரம்புக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. என் கவனம் எதிர்காலத்தின் மீது உள்ளது. டிரம்ப் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்,” என்று விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். "கமலா ஹாரிஸின் கொள்கைகள் அர்த்தமற்றவை. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் அவர் எதையும் சாதிக்கவில்லை", என்று டிரம்ப் கூறினார். "நம் நாடு அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கிறது. நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளது”, என்றும் அவர் தெரிவித்தார். டிரம்ப் மீது நடந்து வரும் வழக்கின் விசாரணைகள் மற்றும் 2020-ஆம் ஆண்டின் தேர்தலில் அவர் தோல்வியை ஏற்க மறுத்தது ஆகியவை தொடர்பாக கமலா ஹாரிஸ் டிரம்பை தாக்கி பேசினார். கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டிரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து நெறியாளர்கள் டிரம்பிடம் கேட்டபோது அவர் அந்த கேள்வியைத் தவிர்ப்பது போல் இருந்தது. "கமலா ஹாரிஸ் எப்படிப்பட்டவர் என்பது பற்றி எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் கூறினார். “அமெரிக்காவை எப்போதும் இனரீதியாக பிரிக்க முயற்சிக்கும் டிரம்ப் அதிபராக விரும்புவது சோகமான விஷயமாக இருக்கிறது", என்று ஹாரிஸ் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய அமெரிக்க துணை அதிபர் மற்றும் 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியது யார்? பிபிசி-யின் வட அமெரிக்க நிருபர் ஆண்டனி ஸச்சரின் பகுப்பாய்வு: ''90 நிமிட விவாதத்தின் போது கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை பலமுறை சிக்கல்களில் ஆழ்த்தினார். டிரம்ப்பின் பேரணியில் வரும் கூட்டத்தின் அளவு மற்றும் கேபிடல் ஹில் மீதான தாக்குதல் ஆகிய விஷயங்களை குறிப்பிட்டு கமலா ஹாரிஸ் டிரம்பை தாக்கி பேசினார். ஒரு காலத்தில் டிரம்புடன் இருந்த அதிகாரிகள் இப்போது அவரையே கடுமையாக விமர்சிப்பதை பற்றி கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். அந்த அதிகாரிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்குமாறு கமலா ஹாரிஸ் டிரம்பை கேட்டுக்கொண்டார். வாக்காளர்களுடன் நேரடியாக தொடர்புடைய விஷயங்களை, ஒரு வேட்பாளர் எவ்வளவு சிறப்பாக அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் என்ற அடிப்படையில் ஒரு விவாதத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கலாம் என்றால், இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம். விஷயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். விவாதம் முன்னேற முன்னேற கமலா ஹாரிஸின் கருத்துகளை டிரம்ப் சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கமலா ஹாரிஸ் டிரம்ப்பை தாக்கி பேசினார், அவரை கிண்டலும் செய்தார். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு டிரம்ப் ஆளானார். கமலா ஹாரிஸ் டிரம்ப்பை பலவீனமானவர் என்று கூறினார். வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார். சோர்வு மற்றும் சலிப்பு காரணமாக மக்கள் அவரது பேரணிகளில் இருந்து சீக்கிரமே கிளம்பிச் செல்வதாக கமலா ஹாரிஸ் கூறினார். விலைவாசி உயர்வு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளின் வெளியேற்றம் போன்ற விஷயங்களில் கமலா ஹாரிஸ் பலவீனமாக இருப்பார் என்று பல அமெரிக்கர்கள் நினைத்தனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது விவாதங்களை டிரம்பால் திறம்பட முன்வைக்க முடியவில்லை. பைடன் நிர்வாகம் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரத்தை கையாண்ட விதம் பல அமெரிக்கர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஆனால், இந்த விவாதத்தை டிரம்ப் பக்கம் திருப்பிய கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வரிகளே இதற்கு காரணம் என பதிலளித்தார் விவாதத்தின் போது கமலா ஹாரிஸின் முகபாவனைகள் அனைவரையும் கவர்வது போல இருந்தது. விவாதத்தின் பெரும்பகுதி நேரத்தில் டிரம்ப் பதில் கூறும்போது, கமலா ஹாரிஸ் அவரை நேருக்கு நேராகப் பார்த்தபடி இருந்தார். டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு உடன்படவில்லை என்ற போது கமலா ஹாரிஸ் தலையை அசைத்தார் அல்லது புன்னகைத்தார். கமலா ஹாரிஸை 'மார்க்சிஸ்ட்' என்று டிரம்ப் கூறிய போது கமலா ஹாரிஸ் தனக்குப் புரியவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் தனது கன்னத்தில் கை வைத்த படி இருந்தார். ஆனால் பொருளாதாரம் அல்லது கருக்கலைப்பு போன்ற பிரச்னைகள் பற்றிப் பேசும்போது கமலா ஹாரிஸ் வாக்காளர்களிடம் நேரடியாக பேசுவது போல் கேமராவை பார்த்து பேசினார். அதே நேரத்தில் டிரம்ப் விவாதம் முழுவதும் கமலா ஹாரிஸை கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்த்தார். கமலா ஹாரிஸ் கேள்விகள் கேட்டபோது அவரை நோக்கி டிரம்ப் விரலைக் காட்டியபடி பேசுவதை பார்க்க முடிந்தது. கருக்கலைப்பு குறித்த விவாதத்தின் போது டிரம்ப் கோபத்தில் ஆவேசமாகப் பேசியதையும் பார்க்க முடிந்தது.'' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விஷயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். விவாதத்தின் முக்கிய அம்சங்கள் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குடியேறிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதை நிகழ்ச்சியின் நெறியாளரே தவறு என்று கூறினார். குடியேறிகள் 'தங்களது செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்' என்று டிரம்ப் அபத்தமான கூற்றுக்களை முன்வைத்தார். "குடியேறிகள் செல்லப்பிராணிகளான நாய்களை சாப்பிடுகிறார்கள்," என அவர் கூறினார் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்பிரிங்ஃபீல்டின் நகர நிர்வாக மேலாளரே கூறியுள்ளார் என்று விவாதத்தின் நெறியாளர் டேவிட் முயர் குறிப்பிட்டார். "எங்கள் நாயை திருடி சாப்பிட்டுவிட்டனர் என்று மக்கள் தொலைக்காட்சியில் கூறுவதை நான் கேட்டேன்" என்றார் டிரம்ப். இதற்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ், ''டிரம்ப் மிகைப்படுத்தி பேசுகிறார்'' என்று கூறினார். இது உண்மையில் நடந்தது என்பதற்கான நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை என்று ஸ்பிரிங்ஃபீல்ட் அதிகாரிகள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோ பைடனை ’எங்கும் காணப்படாத அமெரிக்க அதிபர்’ என்று டிரம்ப் அழைத்தார். ரஷ்யா-யுக்ரேன் போர் விவாதத்தின் போது, ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்தும் பேசப்பட்டது. "அப்போரில் யுக்ரேன் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று டொனால்ட் டிரம்பிடம் வினவப்பட்டது. "போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று டிரம்ப் பதில் அளித்தார். யுக்ரேன்-ரஷ்யா போர் அமெரிக்கா மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துப்பேசிய டிரம்ப், ''ஐரோப்பாவை ஒப்பிடும்போது அமெரிக்கா மீதான தாக்கம் அதிகம்,” என்று குறிப்பிட்டார். யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகிய இருவரையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார். ஜோ பைடனை ’எங்கும் காணப்படாத அமெரிக்க அதிபர்’ என்று டிரம்ப் அழைத்தார். இதற்கு பதில் கொடுத்த கமலா ஹாரிஸ், "நீங்கள் பைடனுக்கு எதிராகப் போட்டியிடவில்லை. எனக்கு எதிராகப் போட்டியிடுகிறீர்கள்" என்றார். யுக்ரேன் போர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ் யுக்ரேன் அதிபருடன் தனக்கு வலுவான நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார். அவர் டிரம்பிடம், "நீங்கள் அமெரிக்க அதிபராக இல்லை என்பதால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் நிம்மதியாக இருக்கின்றனர். இல்லையென்றால் புதின் கீவில் (யுக்ரேன் தலைநகர்) அமர்ந்திருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளை பார்த்துக்கொண்டிருப்பார்" என்று கூறினார். "புதின் ஒரு சர்வாதிகாரி" என்றார் கமலா ஹாரிஸ். இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ''இதுவரையிலான மிகவும் மோசமான துணை அதிபர் கமலா ஹாரிஸ்'' என்று கூறினார். படையெடுப்பிற்கு முன்னர் யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தடுக்க அவர் தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன்-ரஷ்யா போர் நிறுத்தப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறினார் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் இஸ்ரேல்-காஸா பிரச்னையில் இதற்கு முன் அவர் தெரிவித்த கருத்துகளையே மீண்டும் கூறினார். "தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. ஆனால் இஸ்ரேல் அதை எப்படிச்செய்கிறது என்பதும் முக்கியம்," என்றார் அவர். இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றார் கமலா ஹாரிஸ். போர் நிறுத்தம் மற்றும் ’இரு நாடு’ தீர்வு குறித்தும் அவர் பேசினார். "தான் அதிபராக இருந்திருந்தால் இந்த மோதல் ஒருபோதும் தொடங்கியிருக்காது" என்றார் டிரம்ப். "கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். கமலா ஹாரிஸ் அதிபரானால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது" என்றும் ”இந்தப் பிரச்னைக்கு நான் விரைவில் தீர்வு காண்பேன்,” என்றும் டிரம்ப் கூறினார். ”நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ரஷ்யா- யுக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன்,” என்றார் டிரம்ப். இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிப்பதாக கமலா ஹாரிஸ் வலுவாக தெரிவித்தார். டிரம்பின் கூற்றை நிராகரித்த அவர், உண்மையை திசை திருப்பவும் பிரிக்கவும் டிரம்ப் விரும்புவதாகத் தெரிவித்தார். “டிரம்புக்கு சர்வாதிகாரிகளை பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியாக மாற அவர் விரும்புகிறார்,” என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் அதிபரானால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று டிரம்ப் கூறினார். பொருளாதார கொள்கைகள் விவாதத்தின் தொடக்கத்திலேயே கமலா ஹாரிஸ் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளை தாக்கி பேசினார். "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அமெரிக்கா தற்போது நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்று டிரம்ப் கமலா ஹாரிஸிடம் கேட்டார். அனைவரும் பொருளாதார சுதந்திரத்தை அடையும் திட்டத்தை உருவாக்க தான் திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் அதற்கு பதில் அளித்தார். "பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடந்த முறை போல் வரிச்சலுகை அளிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். "நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார வல்லுநர்கள், டிரம்ப் முன்வைக்கும் திட்டத்தை விமர்சித்துள்ளனர். இவை செயல்படுத்தப்பட்டால் அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்,” என்றும் கமலா ஹாரிஸ் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9v8wl2vjego
  20. நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கை சங்கிலி – 1, மோதிரம் -1, பணப்பைகள் – 9, கைக்கடிகாரங்கள் – 18, தேசிய அடையாள அட்டைகள் – 4, சாரதி அனுமதிப்பத்திரம் – 4, வங்கி அட்டைகள் – 4, திறப்புகள் – 39 ஆகிய பொருட்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டன. இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை காட்டி மாநகர சபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் அக்டோபர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309271
  21. Published By: VISHNU 11 SEP, 2024 | 08:54 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது. அவர்களது பிரிவினைவாத கருத்துக்களைப் பின்பற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார். அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் என்பது மக்களின் ஆணையூடாக ஆணையைப் பிடிப்பதாகும். இலங்கையில் நிறைவேற்றுத்துறையின் அதிகாரம் என்பது சிறுபான்மை மக்களுக்கு இன்றியமைதா ஒன்றாகும். அந்த வகையில் கிழக்கு மக்களின் முழு நம்பிக்கையையும் வென்ற தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் மிகப் பிரம்மாண்டமான கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அம்பாறையில் தமிழ் பிரதேசங்களில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானித்து கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் இரு வேறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. நாட்டு மக்கள் மிகுந்த துயரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்வந்தார். அதற்கு செலுத்தும் நன்றிக் கடனாக நாம் மீண்டும் மக்கள் ஆணையை அவருக்கு வழங்க வேண்டும். அம்பாறை தமிழ் மக்கள் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்குவார்கள்.. இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்பாறையின் அபிவிருத்தியில் மக்கள் பங்காளர்களாக வேண்டும். வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதோடு, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார். குறிப்பாக காணி சீர்திருத்த சட்டம் கூட அவரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எமக்கு தனிப்பட்ட அரசியல் நோக்கம் கிடையாது. பல்வேறு பொது பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்லப் போகின்றோமா அல்லது அனைவரும் இணைந்து கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரத்தையும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறைக்கு தமிழ் அமைச்சரொருவரையும் பெற்றுக் கொள்ளப் போகின்றோமா? எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் வடக்கில் பிளவடைந்து காணப்படுபவர்களின் தீர்மானங்கள் பயனற்றவை என்றார். https://www.virakesari.lk/article/193442
  22. தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுக்கின்றேன் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் வருகிற செப்டமர் 21ஆம் நாள் நடக்கவுள்ள குடியரசு தலைவருக்கான தேர்தலில் தமிழீழ மக்களின் விடுதலை, நீதிக்கான கோரிக்கைகளின் குறியீடாக பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடுகின்றார். இதன் மூலம் உலகத்திற்கு தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பையும் விருப்பையும் அறிவிப்பது என்ற நோக்கில் அங்குள்ள விடுதலை ஆற்றல்கள் முன்முயற்சி எடுத்துள்ளன. இதன் பொருட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுக்கின்றேன். இம்முயற்சிக்கு நமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஊடகச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்துள்ளோம் என்றார். https://thinakkural.lk/article/309273
  23. 11 SEP, 2024 | 03:04 PM இங்கிலாந்தின் ஓவல் மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி போன்றவற்றுடன் காணப்பட்டனர். இந்த விடயத்தை பிரிட்டனின் உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் ரோகிதபோகொல்லாஹம தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193408
  24. பாலியல் குற்றச்சாட்டுகள்: சினிமா நடிகைகள் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'காஸ்டிங் கவுச்' மூலம் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது என்ற கருத்தை பல நடிகைகள் புறக்கணித்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து தப்பிக்க சிலர் அவர்களை அறைந்தனர், சிலர் அலறினர், சிலர் உதவி கோரினர். சிலர் அவர்களின் கண்களை நேரடியாக பார்த்தனர். மற்றொருவரோ, கேமரா முன்பு தன் வசனத்தை மறக்கும் அளவுக்கு பயந்துபோனார். இதன்மூலம், பெண்கள் தங்களுடைய நம்பகத்தன்மை நிலைத்திருக்க, தங்களுக்கென ஒரு 'கோட்டை'யை உருவாக்கினர். “சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” ஆகிய இரண்டு வார்த்தைகளும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, மலையாளத் திரையுலகில் பெண்களின் பணிச்சூழலை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. திரையுலகில் நுழைவதற்கோ அல்லது அதில் முன்னேறுவதற்கோ அல்லது திரைத்துறை தொடர்பான சங்கங்களில் இணைவதற்கோ ‘காஸ்டிங் கவுச்’ (சினிமாவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக சமரம் செய்தல்) மூலம் மட்டும்தான் முடியும் என்ற கருத்தை சில நடிகைகள் புறக்கணித்துள்ளனர். அவ்வாறான நடிகை ஒருவர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்வதியின் அனுபவம் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின்படி, திரையுலகில் சில காலம் தடையை எதிர்கொண்ட பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. மலையாள திரையுலகில் உள்ள ‘அதிகாரமிக்க குழு’ அல்லது ‘மாஃபியா’ மூலம் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. சிலர் பிற மொழித் திரையுலகின் பக்கம் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால், சில பெண்கள் மீண்டும் திரும்பிவந்து படங்களில் நடித்துள்ளனர். பெண் இயக்குநர்கள் அல்லது பெண் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு வாய்ப்பளித்தனர். அல்லது ஆண் ஒருவர் அப்பெண்ணின் திறமையை கண்டுகொண்டபோது அவரால் மீண்டும் நடிக்க முடிந்தது. படப்பிடிப்பிலேயே அத்துமீறல் இதேபோன்ற ஒரு 'பயங்கரமான' அனுபவம் மற்றொரு நடிகைக்கும் ஏற்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு கேமரா முன்பு அச்சம்பவம் நடந்தது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அந்த நடிகரின் மூன்றாவது படம் அது. "அந்த ஆண் நடிகர் என்னை கேமரா முன் பிடித்தபோது நான் பயந்தேன். நான் வலியில் முனகிக் கொண்டிருந்தேன். நான் திகைத்து விட்டேன்” என, மாலா பார்வதி பிபிசியிடம் கூறினார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நடிகரின் மனைவியாக அத்திரைப்படத்தில் மாலா நடித்திருந்தார். “காட்சியின்படி கண்ணாமூச்சி விளையாடும் தன் மகளை அந்த நடிகர் பிடிக்க வேண்டும். அப்போது, தன்னுடைய இன்னொரு கையால் அவர் என்னைப் பிடித்தார். அப்படி செய்ய வேண்டாம் என இயக்குநர் அந்த நடிகரிடம் கூறினார்” என்கிறார் மாலா. “அதன்பின் என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு ‘ஷாட்’டுக்கு 10-12 டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது. இயக்குநர் என்னை கடிந்துகொண்டார். அடுத்த நாள் படப்பிடிப்பில், நான் அந்த நடிகரை முறைத்துக் கொண்டே இருந்தேன். அவர் வசனம் பேசும்போது பல தவறுகளை செய்தார். அவரும் பல டேக்குகளை எடுக்க வேண்டியிருந்தது” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GOVT. OF KERALA படக்குறிப்பு, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தபோது (ஜனவரி 1, 2020) நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் பார்வதியின் உதாரணம் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. நீதிபதி ஹேமா கேட்டுக் கொண்டதன் பேரில், அந்த அறிக்கையின் பெரும்பகுதி வெளியிடப்படவில்லை. 290 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் சுமார் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. பார்வதி கூறுகையில், “படப்பிடிப்பில் எனக்கு ஆறுதல் சொன்ன ஒரே நபர் படத்தொகுப்பாளர் தான். கவலைப்பட வேண்டாம் என அவர் கூறினார். அந்த நடிகர் எப்படி இதைச் செய்தார் என தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார். அச்சம்பவத்திற்கு பின் எனக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பின் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நண்பரின் வற்புறுத்தலுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினேன்” என்கிறார் மாலா. பெண்கள் தைரியத்தை வெளிப்படுத்திய போது... ஆனால், பார்வதி இதுதொடர்பாக தற்போது காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை. “இப்போது அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. இத்தகைய அத்துமீறல்களை எதிர்கொள்ளும் நபர்களிடம் மற்றவர்கள் கூர் உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் கூறினார். நடிகை ஸ்வேதா மேனன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இது ஒரு அழகான தொழில். தொடக்கத்திலேயே உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவுபடுத்துவதே முக்கிய விஷயம். பின்னர் யாரும் உங்களிடம் தீய எண்ணம் கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார். பாலியல் அத்துமீறலுக்கு ஆளான எந்தவொரு நபரும் அதைப் பற்றி பேசுவது 'எளிதல்ல' என்று ஸ்வேதா கூறினார். "இது மிகவும் வேதனையானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். காவல்நிலையத்திற்கு சென்று புகார் செய்ய பெண்களுக்கு தைரியமும் பலமும் வேண்டும். இதைச் செய்ய முன்வந்தவர்களுக்குப் பாராட்டுகள். இதைச் செய்ததற்காக, அவர்களுடைய குணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும்” என்றார் ஸ்வேதா. அத்துமீறலை அவர் எப்படி சமாளித்தார்? இந்த கேள்விக்கு பதிலளித்தா அவர், "நான் எந்தவொரு விஷயத்திற்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவேன். சில நேரங்களில் நான் அவர்களை அறைந்திருக்கிறேன், சில சமயங்களில் காயப்படுத்தியிருக்கிறேன். நான் சலசலப்பை உருவாக்கவில்லை, நான் பலமாக எதிர்வினையாற்றுகிறேன். நிஜ வாழ்க்கையில் நான் மிரட்டல்கள் குறித்து கவலைப்படுவதில்லை. கேமரா முன்பு மூத்த நடிகர்கள் இருந்தால் இதுபோன்று நடக்கலாம்” என்றார். நடிகைகள் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்? காவல்துறை அல்லது ஊடகங்களுக்கு வரும் இத்தகைய புகார்களின் நோக்கம் பழைய கதைகளை வெளியே கொண்டு வந்து 'ஆண்களை குறிவைப்பது' என்ற கருத்து, திரையுலகில் சிலரது மனதில் உள்ளது. நடிகை கீதா விஜயன் பிபிசியிடம், “ஒரு நாள் இரவு ஹோட்டலில், திரைப்பட இயக்குநர் எனது அறையின் கதவைத் தட்டினார். ஆனால் மற்ற கலைஞர்களின் கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் என்னுடைய புகாரை பதிவு செய்யவில்லை” என்றார். ஆனால், அச்சமயத்தில் தனக்கு உடல் ரீதியான துன்புறுத்தல் ஏதும் நிகழவில்லை என தான் உறுதிப்படுத்தியிருப்பதால், தான் தொழில் வாய்ப்புகளை இழக்கவில்லை என்றார் கீதா விஜயன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதுகுறித்து கீதா விஜயன் கூறுகையில், “இந்த விவகாரத்துக்கு சட்ட வடிவம் கொடுக்க விரும்பவில்லை. இது 33 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் எனது வாக்குமூலத்தை அளித்துள்ளேன். அப்படிப்பட்டவர் மீது வேறு எந்த கலைஞரும் புகார் கொடுத்தால் 100 சதவீதம் அவருக்கு ஆதரவளிப்பேன்” என்றார். திரைப்பட தயாரிப்பாளர் ஆஷா ஏ. ஜோசப், திரைப்படத் துறையில் தனது சக ஊழியர்களின் கருத்துகளை ஆதரிப்பதோடு, 'பாலியல் சுரண்டலை எதிர்ப்பதும் தனிநபரைப் பொறுத்தது' என்றும் கூறுகிறார். "காஸ்டிங் கவுச்சைத் தவிர்க்க முடியவில்லை என்று, சில சலுகை பெற்ற பெண்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சில தீவிரமான புகார்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை” என்கிறார் அவர். திரைப்பட விமர்சகர் சௌமியா ராஜேந்திரன் இத்துறையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்று பெண்கள் நினைப்பதை அவர் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் நோக்கம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்களை சிறைக்கு அனுப்புவது அல்ல என்று அவர் பிபிசியிடம் கூறினார். “இந்த அறிக்கையின் நோக்கம் திரைத்துறையில் பெண்களுக்கான பணிச்சூழலை முன்னிலைப்படுத்துவது, பாலியல் அத்துமீறல்கள் வெறும் கதைகள் அல்லது செவிவழிச் செய்திகள் அல்ல என்பதை நிரூபிப்பதாகும்” என்கிறார் அவர். "பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் திரைத்துறையில் பரவலாக இருப்பதை நாங்கள் இப்போது அறிவோம். இதன்மூலம், பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசும்போது, முன்பு போன்று அல்லாமல் அவர்கள் நம்பப்படுவார்கள், அவர்களின் கருத்துகள் நிராகரிக்கப்பட மாட்டாது” என்கிறார் அவர். மலையாள திரையுலகினர் கவலை நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், நடிகைகளின் பகிரங்க அறிக்கைகள், 58 ஆண்டுகளாக திரைத்துறையில் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றிய ஸ்ரீகுமரன் தம்பி போன்றவர்களைக் கூட கவலையடையச் செய்துள்ளது. "60கள் மற்றும் 80களில் மிகக் குறைவான பிரச்னைகளே இருந்தன. அக்காலத்தில் பாலியல் சுரண்டல் பிரச்னை இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழ், தெலுங்கு திரையுலகில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. பல பெண் கலைஞர்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. அப்படி பிரச்னைகள் இருந்தால் கூட, திரையுலகில் அவை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்ளப்பட்டது” என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள திரையுலகின் பெரிய நடிகர்களும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்த கவலையில் உள்ளனர் ஊதியத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்து பேசிய அவர், நடிகர், நடிகைகளின் சம்பள வித்தியாசம் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது என்றார். “கதாநாயகனின் சம்பளம் 5 கோடி முதல் 10 கோடி வரை என்றால், படத்தின் முன்னணி நாயகி சில லட்சங்களில் திருப்தி அடைய வேண்டியுள்ளது. 33 வருடங்களுக்கு முன் என்னுடைய முதல் படத்தை எடுத்த போது கதாநாயகனுக்கு கொடுத்த சம்பளத்தில் 75 சதவீதம் கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டது” என்றார். “70, 80களில் பிரேம் நசீர், சத்யம், மது போன்ற கதாநாயகர்கள் இருந்த போது, சூழல் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் மொத்த தயாரிப்பு செலவில் 10 சதவிகிதத்தை சம்பளமாக பெற்றனர். ஆனால் இன்று ‘சூப்பர் ஹீரோ’க்கள் தயாரிப்பு செலவில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் கட்டணமாக வசூலிக்கின்றனர்” என்றார். புதிய தலைமுறை கலைஞர்களிடம் நம்பிக்கை கொண்டிருக்கும் அவர், “எல்லாம் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்கள் மீதான பாரபட்சமான அணுகுமுறை குறைந்து, சினிமாவில் பெண்கள் வெற்றியாளர்களாக வருவார்கள்” என்றார். ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்த தம்பி, 1976-ல் பெண்கள் பிரச்னைகளை மையமாக வைத்து மோகினியாட்டம் என்ற படத்தை எடுத்தார். சௌமியா ராஜேந்திரன் கூறுகையில், “நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் புகார் அளிக்க முன்வந்த பெண்களின் வார்த்தைகளை புறக்கணிப்பது கடினம். ஆனால், நிலைமையை மாற்ற, திரைத்துறை தொடர்பான அமைப்புகளும், அரசாங்கமும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் முழு சகிப்பின்மையை கடைபிடிக்க வேண்டும். பெண்கள் கழிவறை வசதி, ஊதிய வேறுபாடு போன்ற திரையுலகில் உள்ள பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். அவை குறித்து விவாதம் நடத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பாலியல் வன்கொடுமை பிரச்னை பொது களத்திற்கு வந்தவுடன் அதற்கான முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. இதிலிருந்து முன்னேற வேண்டிய தேவை உள்ளது” என கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4genpgnzjvo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.