Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. வலுவான இஸ்ரேல் - தொடர்ந்தும் ஆயுதவிற்பனை - சிஎன்என் பேட்டியில் கமலா ஹரிஸ் 30 AUG, 2024 | 01:24 PM இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தமாட்டேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜோ பைடன் போன்று இஸ்ரேலிற்கான வலுவான ஆதரவை பேட்டியில் வெளியிட்டுள்ள கமலா ஹரிஸ் காஸாவில் பெருமளவு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதன் காரணமாக அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவேண்டும் என ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நான் வலுவான இஸ்ரேலை ஆதரிக்கின்றேன் என தெரிவித்துள்ள எனினும் காசா மோதலில் யுத்த நிறுத்தத்தை சாதகமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலையை சாத்தியமாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192385
  2. அரசாங்கம் மீறல்களில் ஈடுபடுகையில் ஐ.நா வும் ஏனைய நாடுகளும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பக்கம் நிற்கவேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் Published By: VISHNU 30 AUG, 2024 | 08:56 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நீதிக்கான தமது உரிமையைக்கோரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது. அரசாங்கம் இத்தகைய மீறல்களில் ஈடுபடும்போது மனித உரிமைகள் பேரவையும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பக்கம் நிற்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமக்கான உரிமையைக்கோரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது. கண்காணிப்பு, ஒடுக்குமுறைகள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், வன்முறைகள் மற்றும் தன்னிச்சையான கைதுகள் என்பவற்றின் ஊடாக பாதுகாப்புத்தரப்பினர் அக்குடும்பங்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்திவருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி (நேற்று) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருக்கும் பேரணிக்குத் தடைவிதிக்குமாறு ஓகஸ்ட் 29 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திடம் பொலிஸார் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நாளாந்தம் பெரும் துன்பத்தை அனுபவித்துவருகின்றனர். பெரும் எண்ணிக்கையான தாய்மார், மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமலே உயிரிழந்திருப்பதுடன், மேலும் பலர் தமக்குரிய நீதி நிலைநாட்டப்படுவதைப் பார்க்காமலேயே தாம் உயிரிழந்துவிடுவோம் என அஞ்சுகின்றனர். 1987 - 1989 வரையான காலப்பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) எழுச்சியின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் 1983 - 2009 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக உலகிலேயே அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது. இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதையோ அல்லது அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைத் தண்டிப்பதையோ இலங்கை அரசாங்கம் கடந்த சில தசாப்தங்களாக மறுத்துவந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இயங்கிவருபவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் நெருங்கிப்பணியாற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரிகள் கடந்த மேமாதம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை, குறிப்பாக தாய்மார் மற்றும் மனைவிமாரைச் சந்தித்ததனர். அதன்போது அவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் மீறல்கள் பற்றி விளக்கமளித்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களைத் தண்டித்தல், குற்றஞ்சாட்டப்பட்டிருப்போருக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கும் ஆணையை மீளப்புதுப்பித்தல் ஆகிய பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், உறுப்புநாடுகளும், ஐ.நா முகவரமைப்புக்களும் நடைமுறைப்படுத்தவேண்டும். அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய மீறல்களில் ஈடுபடும்போது மனித உரிமைகள் பேரவையும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192434
  3. ஐயையோ நான் ஆழம் தெரியாமல் காலை விட்டிட்டேன்... மன்னிச்சுடுங்க.... Krithi Shetty Srinidhi Shetty Siddhi Idnani
  4. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல் நாமல் ராஜபக்ஷவுடன் சந்தித்துப் பேச்சு Published By: VISHNU 30 AUG, 2024 | 09:15 PM இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வெள்ளிக்கிழமை (30) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் அஜித் டோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வெள்ளிக்கிழமை (30) நாமல் ராஜபக்ஷவுடனும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192435
  5. வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் Published By: VISHNU 30 AUG, 2024 | 08:54 PM வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வெள்ளிக்கிழமை (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிணைந்தும், குழுக்களாகவும் கவனயீர்ப்புப்போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் அதன்படி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (30) மு.ப 11 மணியளவில் யாழ்ப்பாணம், ஆரிய குளம் சந்தியில் ஆர்மபமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - கங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்திச் சென்றதுடன், பேரணியின் முடிவில் தமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களைத் தொடர்வதாக அக்கினி சாட்சியாக உறுதி எடுத்தனர். கிளிநொச்சி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை பேரணியாகச்சென்று, காணாமலாக்கப்பட்டவர்கள் மீளத்திரும்பிவரவேண்டும் எனப் பிரார்த்தித்து தேங்காய் உடைத்தனர். வவுனியா அதேபோன்று வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக நேற்றைய தினமும் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்கக் கொடிகளையும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும் கைகளில் ஏந்தியவாறு 'எங்கே எமது உறவுகள்?', 'கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?' எனக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (30) திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்தவெளி அரங்கிற்கு அண்மையில் பொலிஸாரின் தடையுத்தரவையும் மீறி கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 'எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்', 'காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?', 'சர்வதேச விசாரணையே வேண்டும்', 'காணாமல்போனோர் பற்றி அலுவலகம் வேண்டாம்' 'மரணச்சான்றிதழ் வேண்டாம்' என்ற கோஷங்களை எழுப்பியும், தமது உறவுகளின் புகைப்படங்கள், பதாதைகள் மற்றும் தீச்சட்டிகளை ஏந்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரட்ரிக் கோட்டை வீதி வழியாக வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்த வெளி அரங்கிற்கு செல்ல முற்பட்டபோது பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கடற்கரை ஓரமாக வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு சென்று தீபச்சுடர் ஏற்றி காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட ரஜீவ்காந்த் என்பவரை விடுதலை செய்யக்கோரியும் விடுதலை செய்யும்வரை அவ்விடத்தில் இருந்து நகரமாட்டோம் என அவ்விடத்தில் அமர்ந்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ரஜீவ் காந்தை விடுதலை செய்யப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கங்களின் தலைவிமார்களினால் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட மறைமாவட்ட ஆயரின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்குமாறு அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த அருட்தந்தையர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு அதேவேளை 1980 களில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (30) கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தூதரகங்களிடம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிகோரி மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இவ்வாறு நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மதகுருமார், சிவில் சமூகப்பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192433
  6. ஏனண்ணை புதுசா அழகா இருக்கும் நடிகைகளின் பெயர் தெரியலையோ?!
  7. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 05:12 PM மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலையை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில் 'வர்த்தகம் முக்கியத்துவம் கொண்ட மன்னார் தலைமன்னார் சர்வதேச நெடுஞ்சாலையில் மதுக்கடையா?', 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே', 'மக்கள் வாழ்விடத்தில் மதுபானசாலையா? ஏழை மக்களின் வாழ்க்கையில் விலையாடாதே', 'பாடசாலை மாணவர்களை போதைக்குள் தள்ளாதே', 'அதிகாரிகளே மதுபானக் கடைக்கு அனுமதி வழங்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை எந்தியிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தின் கோரிக்கைகள் கொண்ட மகஜர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளரிடமும் நேரில் சென்று கையளிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/192417
  8. 30 AUG, 2024 | 03:47 PM யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு 24 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன்போது வெதுப்பகமொன்று சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதையடுத்து, உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வெதுப்பகத்தில் காணப்பட்ட சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் வெதுப்பகத்தை சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்ட நீதிமன்றம் வெதுப்பக உரிமையாளருக்கு 24 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/192398
  9. குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்களில் சேர டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து மறுப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆன்லைனில் குழந்தை வன்கொடுமை உள்ளடக்கத்தை கண்டறிந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச திட்டங்களில் சேர்வதற்கு டெலிகிராம் செயலி தொடர்ந்து மறுக்கிறது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் சமீபத்தில் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். அத்தகைய உள்ளடக்கத்தைக் கண்டறியவும் புகாரளிக்கவும் மற்றும் அகற்றவும் செயல்படும், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC) மற்றும் இணைய கண்காணிப்பு அறக்கட்டளை (IWF) ஆகியவற்றுடன் டெலிகிராம் ஒத்துழைப்பதில்லை. கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியில் போதுமான அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்ற குற்றசாட்டின் பேரில் துரோவ் கைது செய்யப்பட்டார். 39 வயதான அவர் மீது போதைப்பொருள் கடத்தல், குழந்தை பாலியல் உள்ளடக்கம் மற்றும் மோசடி ஆகியவற்றில் சட்ட அமலாக்க அமைப்புடன் ஒத்துழைக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "கட்டுப்பாடுகள்,தொழில்துறை தரங்களுக்கு ஏற்ப உள்ளதாகவும், அவை தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும்" டெலிகிராம் வலியுறுத்தி வந்தது. மேலும் "ஒரு தளம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு அந்த தளம் அல்லது அதன் உரிமையாளர்தான் பொறுப்பு என்று கூறுவது அபத்தமானது" என்றும் அது கூறியது. குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களில் சேர மறுப்பது குறித்து கருத்து கேட்பதற்காக டெலிகிராம் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டது. பிற சமூக வலைதளங்களை போல அல்லாமல், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் ’சைபர் டிப்லைன்’ போன்ற திட்டங்களில் சேர டெலிகிராம் மறுக்கிறது. 1,600 க்கும் மேற்பட்ட இணைய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ளன. அமெரிக்காவில் இருந்து செயல்படும் நிறுவனங்கள் இதில் சட்டப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் 16% அமெரிக்காவை சேராதவை ஆகும். டெலிகிராம் ரஷ்யாவில் நிறுவப்பட்டது. ஆனால் துரோவ் தற்போது வசிக்கும் துபாயில் இருந்து அந்த நிறுவனம் இப்போது செயல்படுகிறது. குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் தொடர்பான புகார்கள், ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ், ஸ்நாப்சாட் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் பிரச்னையை சமாளிக்க தன்னுடன் சேருமாறு காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம்( NCMEC) பலமுறை டெலிகிராமை கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்தது. இணைய கண்காணிப்பு அறக்கட்டளை(IWF) உடன் பணிபுரியவும் டெலிகிராம் மறுக்கிறது. "கடந்த ஓராண்டாக டெலிகிராமுடன் பேச்சு நடத்த நாங்களே முயற்சித்த போதிலும் அந்த நிறுவனம் இணைய கண்காணிப்பு அறக்கட்டளையில் உறுப்பினராக ஆகவில்லை. மேலும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் படங்கள் பகிர்வை தடுக்க, எங்கள் சேவைகள் எதையும் அது பயன்படுத்துவதில்லை,” என்று இணைய கண்காணிப்பு அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். IWF அல்லது NCMEC உடன் இணைந்து செயல்படாத காரணத்தால், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் என்று இந்த அமைப்புகளால் வரையறுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட பட்டியல்களை முன்கூட்டியே அறியவோ, அகற்றவோ அல்லது தடுக்கவோ டெலிகிராம் செயலியால் முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ’டேக்இட்டவுன்’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும் டெலிகிராம் இல்லை. வன்முறையுடன் கூடிய பழிவாங்கும் ஆபாச படங்களை அகற்றும் பணியை இந்தத்திட்டம் மேற்கொள்கிறது. ஸ்நாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக்டாக், பார்ன்ஹப், ஒன்லிஃபேன்ஸ் ஆகிய அனைத்துமே, தங்கள் பொது அல்லது குறியீட்டு சொற்களால் மறைக்கப்படாத தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்கேன் செய்ய 'ஹாஷ் பட்டியலை'ப் பயன்படுத்தும் இந்தத்திட்டத்தின் உறுப்பினர்கள். டெலிகிராம் இணங்காத மற்றொரு விதிமுறை ’வெளிப்படைத்தன்மை அறிக்கை’. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமூக வலைதளங்கள் காவல்துறையின் கோரிக்கைக்கு இணங்க, அகற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களின் பட்டியலையும் வெளியிடுகின்றன. மெட்டாவின் செயலிகள், ஸ்நாப்சாட் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்கள் ஆன்லைனில் தங்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றன. முந்தைய ஆண்டுகளின் அறிக்கைகளையும் லைப்ரரியில் பார்க்கமுடியும். டெலிகிராமில் அத்தகைய இணையதளம் எதுவும் இல்லை. ஒரு சேனல் மட்டுமே செயலியில் உள்ளது. ஆனால், அதில் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் இல்லை. வெளிப்படைத்தன்மை அறிக்கைகளுக்கான தனது அணுகுமுறையை "ஆண்டிற்கு இருமுறை" என்றும் அது விவரிக்கிறது. முந்தைய அறிக்கைகளைப் பார்ப்பதற்கான கோரிக்கைக்கு ’டெலிகிராம் வெளிப்படைத்தன்மை சேனல்’ பதிலளிக்கவில்லை. மேலும் "உங்கள் பிராந்தியத்திற்கு எந்த அறிக்கையும் கிடைப்பதற்கு இல்லை" என்று அது கூறியது. ஊடகங்கள் தொடர்புகொள்வதற்கு டெலிகிராமில் ஒரு அசாதாரண அமைப்பு உள்ளது. தானியங்கி பாட் உடன் தொடர்பு கொள்ளும் முறை செயலியில் உள்ளது. ஆனால் இந்த செய்தியாளர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலைப் பெற பல மாதங்கள் முயற்சி செய்த பிறகும் பலன் ஏதும் இல்லை. ஊடகங்கள் தொடர்புகொண்டு விசாரிக்க விளம்பரப்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரி ஒன்று உள்ளது. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஜூன் மாதத்தில் பவெல் துரோவ், செய்தியாளர் டக்கர் கார்ல்சனிடம், "சுமார் 30 பொறியாளர்களை" மட்டுமே தனது தளத்தை இயக்குவதற்குப் பயன்படுத்துவதாகக் கூறினார். டெலிகிராமை நிறுவிய துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். அவரிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை உள்ளது. டெலிகிராம் குறிப்பாக ரஷ்யா, யுக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மற்றும் இரானில் பிரபலமாக உள்ளது. https://www.virakesari.lk/article/192398
  10. 30 AUG, 2024 | 03:52 PM யாழ்ப்பாணத்தில் மணல் மற்றும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக மணல் மற்றும் மரக்குற்றிகள் டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனையடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்போது, உரிய அனுமதிப் பத்திரங்களின்றி மணல் கடத்திச் சென்ற 24 டிப்பர் வாகனங்களும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற ஒரு டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, அந்த டிப்பர் வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் தரித்துவைத்துள்ள பொலிஸார், அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/192400 மணலுக்குள் மரக்குற்றிகள் கடத்துவது வழமையாமே!!
  11. யாழில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம்! Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 03:55 PM சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது. பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/192402
  12. 30 AUG, 2024 | 04:49 PM யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வரும் சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர் திருட்டில் ஈடுபடுவது தொடர்பிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக, வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் , நேற்று வியாழக்கிழமை (29) சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் திருடப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. குறித்த நபர் வீட்டினுள் நுழையும் போது ஒரு சேர்ட்டும் , திருடிய பின்னர் வீட்டிலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு சேர்ட்டும் அணிந்துள்ளமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் அறிந்தவர்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591337 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/192404
  13. Published By: DIGITAL DESK 2 30 AUG, 2024 | 07:04 PM கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் உறுப்பு நாடுகள் கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் செயலகத்தினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சாசனத்தில் 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன. குறித்த கைச்சாத்திடும் நிகழ்வுகள் இலங்கை அரசாங்கத்தால் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , கே.சி, மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு இப்ராஹிம் லத்தீப் DC (Retd.), Lt. Col (Retd.) மொரீசியஸ் குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஹய்மந்தோயல் திலும் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கா ஆகியோர் குறித்த உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆவணங்களில் கைச்சாத்திட்டிருந்தனர். உறுப்பு நாடுகளின் பொதுவான கவலைகள் குறித்த சவால்கள் மற்றும் நாடுகடந்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை முறியடித்து பிராந்திய பாதுகாப்பினை மேம்படுத்துவதே இந்த கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் முக்கிய இலக்காகும். கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான ஐந்து முக்கிய காரணிகளாக கடல்சார் பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத ஒழிப்பு, கடத்தல்கள் மற்றும் திட்டமிட்ட பல்தேசிய குற்றங்களுக்கு எதிராக போராடுதல், இணைய பாதுகாப்பு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு, மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இக்கூட்டுக்குழுமத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட தூதுக்குழுவினரது தலைவர்கள் மட்டத்திலான கலந்துரையாடல்களுடன் இந்நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன. இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட CSC உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை சந்தித்துள்ளார். மேலும் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். https://www.virakesari.lk/article/192419
  14. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வவுனியாவில் மாபெரும் போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 02:48 PM சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (30) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது வவுனியா தபால் திணைக்களத்தின் அருகில் 2,750வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க கொடிகளை தாங்கியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் படங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/192397
  15. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 03:37 PM அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்று வெள்ளிக்கிழமை (30) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/192391
  16. நிறைய செல்லுபடியற்ற வாக்குகள் விழும்போல!
  17. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் வெளியான அறிக்கை 30 AUG, 2024 | 03:38 PM எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, வாக்காளர் வாக்குச்சீட்டில் தான் வாக்களிக்கவுள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தை குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும். அதன் பின்னர், 2 மற்றும் 3 என்ற இலக்கங்களை குறிப்பதன் மூலம் இரண்டு வேட்பாளர்களுக்கு தனது விருப்புத் தெரிவை குறிப்பட முடியும். வாக்காளர் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிடவில்லை எனினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்பட்டால் அது செல்லுபடியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும். வாக்காளரின் உளக்கருத்து வாக்குச்சீட்டில் ஏதேனும் தெளிவான அடையாளம் ஒன்று (உதாரணமாக; x என்ற அடையாளம் ) காணப்பட்டால் அது வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாக கருதப்படும். இதேவேளை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் காணப்படும் வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும். 1. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடப்படாமல் இருத்தல் 2. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அடையாளமிடப்பட்டு இருத்தல் 3. ஒரு வேட்பாளருக்கு 1 என்ற இலக்கமும் மற்றைய வேட்பாளருக்கு x என்ற அடையாளமும் காணப்படல் 4. இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டு இருத்தல் 5. வாக்காளரை அடையாளம் காணக்கூடியவாறு ஏதேனும் எழுதப்பட்டிருத்தல் 6. 1 தவிர்த்த வேறு அடையாளமொன்றுடன் 2,3 விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல் 7. 1,2,3 ஐ விட அதிகமான வாக்கு மற்றும் விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல் https://www.virakesari.lk/article/192394
  18. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்; யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 02:45 PM சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில், யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் அமைந்துள் ஆரியகுளம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி, முனியப்பர் கோவில் வரையில் இடம்பெற்றது. குறித்த, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கையளிக்க வலியுறுத்தும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். அத்தோடு, ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஐவர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டபேரணியின் முடிவில் 'நீதி?' என எழுதப்பட்ட பாத்திரமொன்றினுள் ஆர்ப்பாட்டக் காரர்களால் தீச்சுடரேற்றப்பட்டு தமக்கான நீதியை வலியுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும், இவ்வார்ப்பாட்டப்பேரணியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன், அரசியல் பிரதிநிதிகள், சமூகமட்ட பிரதிநிதிகள், உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192387
  19. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் ஆர்ப்பாட்டம் - திருகோணமலையில் ரஜீவ்காந் கைது 30 AUG, 2024 | 12:46 PM திருகோணாமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/192380
  20. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 02:10 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/192392
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத்தை நவீனப்படுத்தும் நோக்கில் இந்தியா செயலாற்றி வருகிறது (பிரதிநிதித்துவப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிகாட் வெள்ளிக்கிழமை கடற்படையில் இணைய உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணையவுள்ள இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். அரிஹந்த் கப்பல் 2009-இல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்தியக் கடற்படை ஏற்கனவே இரண்டு போர்க்கப்பல்களில் இருந்து நீண்ட தூர அணுகுண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளது. இந்தியா விரைவில் மூன்றாவது கடற்படைக் கப்பலை கடற்படையில் சேர்க்கத் தயாராகி வருகிறது. இந்தியாவின் பலம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்தியாவில், அணுசக்தியால் இயங்கும் நீண்ட தூர பாலிஸ்டிக் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு 'அரிஹந்த் கிளாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அரிஹந்த் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'எதிரியை அழிப்பவன்' என்று பொருள். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணைவது மிகவும் முக்கியமானது என்று பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி பிபிசி உடனான உரையாடலில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இதுதொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு, இறுதியாக ரஷ்யாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. ஏனெனில், அதில் நிறுவப்பட்ட அணுஉலை 83 மெகாவாட் திறன் கொண்டது. இவ்வளவு சிறிய அணு உலையை உருவாக்குவது எளிதானது அல்ல," என்றார். இருப்பினும், இப்பிரிவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர நீண்ட காலம் எடுத்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். இந்திய அரசு தனது நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக அணு மற்றும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக, ஆங்கில நாளிதழான 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது . இந்தியா ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை மூன்று கட்டங்களாகவும் ஐந்து அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்திய கடற்படை ஏற்கனவே ஆறு புதிய கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற்றுள்ளது. ப்ராஜெக்ட்-75 இந்தியா, ப்ராஜெக்ட்-76 மற்றும் ப்ராஜெக்ட்-75 ஏஎஸ் ஆகிய திட்டங்களின் கீழ், கடற்படைக்கு மேலும் 15 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைக்கும். சீனாவுடன் பதற்றம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமாக உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் பல பகுதிகளிலும் தகராறு நடந்து வருகிறது. அதேநேரத்தில், பயங்கரவாதம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்கிய பிறகும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் பதட்டமாகவே உள்ளன. 2022-ஆம் ஆண்டு, டிசம்பரில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக, ஜூன் 2020-இல் கால்வானில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஐ.என்.எஸ் இம்பால் போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்ட போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மிகவும் ரகசியமான கப்பல்’ அண்டை நாடுகளுடனான இந்தியாவின் பதட்டமான சூழ்நிலையும் இந்தியாவின் ராணுவ திறன்களின் நவீனமயமாக்கலுடன் தொடர்புடையதாகும். ராகுல் பேடியின் கூற்றுப்படி, “அணு ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு விமானம், ஏவுகணை அல்லது கடல்வழி பாதை இருந்தாலும் இவற்றில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக முக்கியமானவை,” என்றார். அவர் கூறுகையில், "இக்கப்பல் நீருக்கடியில் நகர்கிறது, அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இது மிகவும் ரகசியமாகவே உள்ளது," என்றார். அவரைப் பொறுத்தவரை, “அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த விஷயத்தில் சீனா இந்தியாவை விட மிகவும் முன்னிலையில் இருந்தாலும், இக்கப்பல் இந்தியாவுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும்,” என்றார். இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் சீனா, 2012 மற்றும் 2022-க்கு இடையில் இரண்டு விமானங்களை இயக்கியுள்ளது. சீனா இதே திசையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சீனா தனது கடற்படையின் திறனை வெகுவாக அதிகரித்துள்ளது. சீனா அமெரிக்க கடற்படையையும் பின்தள்ளிவிட்டது. அதேநேரத்தில், இந்தியா 2022-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் P15B ஏவுகணை அழிப்பானைக் கொண்ட போர்க்கப்பலைச் சேர்த்தது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், "மஜ்கான் டாக் ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் போர்க்கப்பல், நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. வரும் காலங்களில் போர்க்கப்பல்களைத் தயாரிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. நமது தேவைக்காக மட்டுமல்லாமல் உலகின் தேவைக்காகவும் வருங்காலத்தில் போர்க்கப்பல்களை உருவாக்குவோம்,” என்றார். பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, இந்தியா 2022 ஆம் ஆண்டு தனது கடற்படையில் 'விக்ராந்த்' என்ற போர்க்கப்பலை சேர்த்தது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு அவரைப் பொறுத்தவரை, "இந்தியப் பெருங்கடலுடன் நேரடியாக தொடர்புள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நாடாக இருப்பதால், அதன் பாதுகாப்பில் நமது கடற்படையின் பங்கு மிகவும் முக்கியமானது,” என்றார். செப்டம்பர் 2022-ஆம் ஆண்டில், இந்தியா தனது பெரிய போர்க்கப்பலான 'விக்ராந்த்' கப்பலை கடற்படையில் சேர்த்தது. ஜெர்மனியால் உருவாக்கப்பட்ட HDW நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிரான்ஸ் வடிவமைத்த ஸ்கார்பீன் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியாவில் உள்ளன. இந்த விஷயத்தில் இந்தியா தனது திறனை அதிகரிக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/clywg3v7nnzo
  22. மழையினால் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது 30 AUG, 2024 | 03:21 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் விளையாடப்படாமல் கைவிடப்பட்டது. இன்று காலை பெய்த தொடர் மழை காரணமாக மைதானத்தின் எல்லைக்கோடு பகுதிகளில் நீர் நிறைந்திருந்ததால் போட்டியை நடத்த முடியாது என மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர். இப் போட்டிக்கான நாணய சுழற்சி பாகிஸ்தான் நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழை தொடர்ந்ததால் நாணய சுழற்சி பிற்போடப்பட்டது. எவ்வாறாயினும் நண்பகல் 12.00 மணிக்கு மழை தொடர்ந்ததாலும் மைதானத்தின் எல்லைக் கோட்டருகே மழை நீர் தேங்கியிருந்ததாலும் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். https://www.virakesari.lk/article/192406
  23. இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தினார் ஜோ ரூட்; கஸ் அட்கின்சனும் துடுப்பாட்டத்தில் அபாரம் Published By: VISHNU 30 AUG, 2024 | 12:23 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் தலைவர் ஜோ ரூட் 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தியதுடன் அணியை பலமான நிலையில் இட்டார். மத்திய வரிசையில் 8ஆம் இலக்க வீரர் கஸ் அட்கின்சனும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது ஐந்தாவது டெஸ்டில் கன்னி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இப் போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்த இலங்கை, ஆரம்பத்தில் 2 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால், ஜோ ரூட் களம் புகுந்ததும் நிலைமை இங்கிலாந்துக்கு சாதகமாகத் திரும்பியது. 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் களம் புகுந்த ஜோ ரூட், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மூன்று இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியைப் பலப்படுத்தினார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் தனது 145ஆவது டெஸ்ட் போட்டியில் 33ஆவது சதத்தைப் பெற்று, இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த அலஸ்டெயார் குக்கின் சாதனையை சமப்படுத்தினார். சமகால டெஸ்ட் அரங்கில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கும் ஜோ ரூட், அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் 10ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 12274 ஓட்டங்களுடன் 7ஆம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர்களில் அலஸ்டெயார் குக்கைவிட 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இன்றைய போட்டியில் பென் டக்கெட்டுடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக்குடன் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித்துடன் 6ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் கஸ் அட்கின்ஸுடன் 7ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் ஜோ ரூட் பகிர்ந்தார். ஜோ ரூட் 206 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 143 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநேர முடிவில் கஸ் அட்கின்சன் 74 ஓட்டங்களுடனும் மெத்யூ பொட்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அவர்களை விட பென் டக்கட் 40 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 33 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லஹிரு குமார 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/192348
  24. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 AUG, 2024 | 12:16 PM திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்துகொண்டனர். பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இடம்பெற்றது. “OMP ஒரு ஏமாற்று நாடகம்”, ”காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை”, “சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் கோருகிறோம்” உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியும், ஈகைச் சுடரினை ஏற்றியும் கண்ணீருடன் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/192375
  25. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக வெளியான தொலைபேசி உரையாடல் பதிவு கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல தரப்பினரும் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இவ்வாறிருக்க சம்பவத்தன்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிய மூன்று தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன. அவ்வுரையாடலில், நடைபெற்ற கொலையை தற்கொலை அல்லது உடல்நலக் குறைவினால் மரணம் என மாற்ற முயற்சி செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. முதலாவது அழைப்பு 9ஆம் திகதி காலை 10.53க்கு எடுக்கப்பட்டுள்ளது. 1 நிமிடமும் 11 வினாடிகளும் நீடித்த அந்த உரையாடலில், மருத்துவமனை உதவிக் கண்காணிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பெண்ணொருவர், மகளுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு பெண் மருத்துவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அடுத்த இரண்டாவது அழைப்பு 46 வினாடிகள் நீடித்துள்ளது. அதில் பெண் மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி அழைப்பு 28 வினாடிகள் நீடித்துள்ளன. அதில் உங்கள் மகள் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம். பொலிஸார், மருத்துவமனை நிர்வாகம் என அனைவரும் இங்கு இருக்கிறோம். எனக் கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிவந்த தகவல்களும் தொலைபேசி உரையாடல்களில் கூறப்பட்ட தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் சந்தேகம் எழுப்பிய விசாரணை அதிகாரியொருவர், “அழைப்பில் பேசும் பெண், பொலிஸார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னிலையில் பேசுவது தெரிகிறது. ஏனென்றால் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு அழைப்பு செல்வதற்கு முன்பே ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என தல்லாஹ் பொலிஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவேற்றப்பட்டுவிட்டது. இதனால் குற்றத்தை மறைப்பதற்கு பொலிஸ் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளால் தற்கொலை என சதித் திட்டம் தீட்டப்பட்டதா என கேள்வியெழும்புவதாக” கூறியுள்ளார். https://thinakkural.lk/article/308653

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.