Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 30 AUG, 2024 | 11:00 AM பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு மிரட்டல் பொய்யான குற்றச்சாட்டுகள் வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். ஆகஸ்ட் 29 2024 அன்று திருகோணமலையில் உள்ள நீதிமன்றம் ஆகஸ்ட் 30 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊர்வலம் நடத்துவதைத் தடை செய்யுமாறு பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாட வேதனையை அனுபவிக்கிறார்கள். இதற்கு காரணமான அரச அமைப்புகள் அவர்களை மௌனமாக்க முயற்சி செய்கின்றன என ”மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி" கூறினார். "நூற்றுக்கணக்கான தாய்மார்கள் மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே காலமானார்கள் மேலும் பலர் நீதியைப் பார்க்க அவர்கள் வாழ மாட்டார்கள் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்."என அவர் தெரிவித்தார். உலகில் அதிகளவானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று(இடதுசாரி ஜேவிபி கிளர்ச்சி (1987-89) மற்றும் அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (1983-2009) இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்கள்). இலங்கை அதிகாரிகள் பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சர்வதேச விசாரணைகளிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், குறிப்பாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் செயற்படுபவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது துன்புறுத்தப்படுவது குறித்து தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகளுடன், இராஜதந்திரிகள் உட்பட சர்வதேச செயற்பாட்டாளர்களுடன் ஈடுபாட்டை கொண்டுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது, துன்புறுத்தப்படுவது குறித்து தெரிவித்திருந்தார். கடந்த ஜனவரி உட்பட சமீபத்தில் பாதுகாப்பு படையினர் இழைத்த ஆட்கடத்தல், கண்மூடித்தனமான தடுத்துவைப்பு, சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்தும் மனித உரிமை ஆணையாளர் ஆராய்ந்தார். காணாமல்போகச் செய்யப்படல் போன்ற விடயங்களுக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆண்களே அனேகமாக இவ்வாறான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். மே மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை முழுவதும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்தது. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் அல்லது தாய்மார்கள். அவர்கள் தொடர்ந்து துஷ்பிரயோகங்களின் மாதிரியை விவரித்தனர். ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்ட பின்னர் பலர் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையின் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவர் உட்பட. 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்த தனது கணவரின் கதி என்னவென்பதை அறிவதற்காக போராடும் பிரச்சாரம் செய்யும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதாக நம்புவதாகக் கூறினார். இராணுவம் தன்னைப் பற்றிய தகவல்களுக்கு அண்டை வீட்டாருக்கு பணம் கொடுக்க முன்வருவதாகவும் அவளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட தந்திரங்களில் இருப்பதாகவும் அவர் கூறினார். தன்னை பற்றி தகவல்களை பெறுவதற்காக அண்டை வீட்டாரிற்கு இராணும் பணம் வழங்க முன்வந்ததாக தெரிவித்த அவர் தன்னை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவே இந்த நடவடிக்கை என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192364
  2. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 01:28 PM வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்றவர்களை பெண்ணின் மாமியார் தடுக்க முயன்றுள்ளார். அவ்வேளை மாமியாரை உதைத்துத் தள்ளிவிட்டு சந்தேக நபர்கள் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அஹமட், பொலிஸ் சார்ஜன்ட் திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான தயாளன் (91792), ரணில் (81010) கால்கே (9200) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்ற போது குறித்த வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர். இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/192381
  3. உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தீ ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது கடந்த 26ம் திகதி அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. அப்போது, அந்த தளம் மட்டுமின்றி, அதற்கு கீழே, மேலே இருந்த (27, 29-வது மாடிகள்) தளங்களும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கின. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது: “ரஷியாவின் கிரோவ் பிராந்தியம், கோட்டல்நிச் பகுதியில்அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து 1,500 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/308644
  4. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 02:54 PM மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் 2 ஆவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை (30) மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர். இதன் காரணமாக இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு முன்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ தலைமையிலான சட்டத்தரணிகள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் போது மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மேல் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 52 பேர் வரை கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழங்கு விசாரணை இடம்பெற்று நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) குறித்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை (28) குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக கொழும்பில் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் அவருக்கு எதிராக வசனங்கள் குறித்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் உரிய முறையில் இடம் பெற்று வந்துள்ள போதும் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை (29) மற்றும் இன்று வெள்ளிக்கிழமை (30) பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டோம். எனவே உரிய அதிகாரிகள் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். https://www.virakesari.lk/article/192396
  5. Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 09:03 AM புதுடெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹுருன் இந்தியாவின் நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலை வியாழக்கிழமை (29) வெளியிட்டது. இந்த பட்டியலில் 2020ல் 4வது இடத்தில் இருந்த கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை முந்தினார். அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 11.60 இலட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அவரது சொத்து கடந்த ஒருவருடத்தில் வேகமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை விட 95 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு ரூ. 1,021,600 கோடி சொத்து குவிந்துள்ளது. இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ரூ. 10.14 இலட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி உள்ளார். மூன்றாவது இடத்தில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடார், 4வது இடத்தில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தலைவர் சைரஸ் பூனவாலா, 5வது இடத்தில் சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் திலீப் ஷங்வி உள்ளனர். இந்தியாவிலுள்ள உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 334 என்ற சாதனையை எட்டியுள்ளது. ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக உயர்ந்துள்ளது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் சீனா 25% சரிவைக் கண்டபோதும், இந்தியா 29% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒரு கோடீ ஸ்வரரை இந்தியா உருவாக்கியது. 2023ல் நமது நாட்டில் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அதேபோல் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியல் அதிகரித்துள்ளது. 1,500 க்கும் மேற்பட்ட தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி அல்லது அதற்கு மேல் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 150% வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 1539ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த பட்டியலில் 220 பேர் சேர்ந்துள்ளனர். இளைய கோடீஸ்வரர் பட்டியலில் செப்டோ கைவல்யா வோரா (வயது 21) , இணை நிறுவனரான ஆதித் பாலிச்சா(வயது 22) ஆகியோர் ரூ.41 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். https://www.virakesari.lk/article/192355
  6. பட மூலாதாரம்,PLANET LABS படக்குறிப்பு, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் யுக்ரேன் பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறவருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் பீல் & தாமஸ் ஸ்பென்சர் பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர் & பிபிசி வெரிஃபை 30 ஆகஸ்ட் 2024, 02:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கத்தியத் தொழில்நுட்பமும் நிதியும் ரஷ்யாவிற்குள் நூற்றுக்கணக்கான தொலைதூரத் தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கு உதவி வருகின்றன. மோதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தால், மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு நேட்டோ நட்பு நாடுகள் இன்னும் அனுமதி வழங்க மறுத்துவருகின்றன. இருந்தபோதும் இவை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. யுக்ரேன், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிற்குள் அதன் தொலைதூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. வாரத்திற்குப் பல முறை மூலோபாய இலக்குகள் மீது ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்களை ஏவி வருகிறது. விமானப்படை தளங்கள், எண்ணெய் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் உள்ளிட்டவை இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாகும். குறைந்த செலவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் யுக்ரேன் யுக்ரேனிய நிறுவனங்கள் இப்போது மாதத்திற்கு நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய ஒருவழி தாக்குதல் ட்ரோன்களை உற்பத்தி செய்து வருகின்றன. மேற்கில் இதேபோன்ற ட்ரோனை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை மட்டுமே யுக்ரேன் இதற்குச் செலவிடுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய செலவில், ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தில் ஏற்கனவே பெரிய தாக்கத்தை இது உருவாக்கி வருவதாக ஒரு நிறுவனம் பிபிசியிடம் கூறியது. இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பலர் பிபிசிக்கு இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளனர். அவற்றில் யுக்ரேனின் மிகப்பெரிய ஒருவழி தாக்குதல் ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒருவரும், இந்த தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கான மென்பொருளை உருவாக்க உதவிய ஒரு பெரிய தரவு நிறுவனமும் அடங்கும். யுக்ரேனின் இந்த உத்தி ஏற்கனவே ரஷ்யாவுக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கி வருவதாக பிரான்சிஸ்கோ செர்ரா-மார்டின்ஸ் கூறுகிறார். கூடுதல் முதலீடு செய்தால், அது போரின் போக்கை யுக்ரேனுக்குச் சாதகமாக மாற்றும், என்று அவர் நம்புகிறார். பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, அவர் இணைந்து நிறுவிய நிறுவனமான டெர்மினல் அடானமி உருவாகியே இருக்கவில்லை. ஆனால், இப்போது ஒரு மாதத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட AQ400 ஸ்கைத் தொலை தூர ட்ரோன்களை உற்பத்தி செய்கிறது. இது 750 கி.மீ. (465 மைல்கள்) வரை பறக்கக்கூடிவையாகும். இந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கான குறுகிய தூர AQ100 பயோனெட் ட்ரோன்களையும் தயாரிக்கிறது, அவை சில நூறு கிலோமீட்டர்கள் பறக்கும். பட மூலாதாரம்,TERMINAL AUTONOMY படக்குறிப்பு, ரஷ்யாவை அதிரவைக்கும் யுக்ரேனின் மலிவான ட்ரோன்கள் ரஷ்யா - யுக்ரேன் போரை நிறுத்த இந்தியாவால் முடியுமா? மோதி பயணம் உணர்த்தும் சேதி என்ன?24 ஆகஸ்ட் 2024 மரத்தால் ஆன ட்ரோன்கள் இந்த ட்ரோன்கள் மரத்தால் ஆனவை. இவை யுக்ரேனில் உள்ள முன்னாள் மரச்சாமான் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகின்றன. முன்னாள் ஆஸ்திரேலிய ராணுவ ராயல் பொறியாளரான (Australian Army Royal Engineer) செர்ரா-மார்டின்ஸ், தனது யுக்ரேனிய இணை நிறுவனருடன் அமெரிக்க நிதியுதவியுடன் இந்த நிறுவனத்தை அமைத்தார். யுக்ரேனில் இப்போது ட்ரோன்களை அதிக அளவில் தயாரிக்கும் குறைந்தது மூன்று நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். அவர் தனது ட்ரோன்களை "அடிப்படையில், இது ஒரு பறக்கும் மரச்சாமான் - நாங்கள் அதை இகியா (IKEA- உலக அளவில் மரச்சாமான்கள் விற்கும் ஒரு நிறுவனம்) போல அசெம்பிள் செய்கிறோம்," என்று விவரிக்கிறார். இவற்றின் உடற்பகுதியை உருவாக்கச் சுமார் ஒரு மணி நேரமும், அதனுள்ளே பொருத்த வேண்டிய எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை வைக்க அதில் பாதி நேரமும் ஆகும், என்கிறார். இந்த நிறுவனத்தின் பயோனெட் ட்ரோன் சில ஆயிரம் டாலர்கள் செலவில் தயாரிக்கப்படுகிறது. அதே நேரம், அதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்படும் ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணை 10 லட்சம் டாலருக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்படுகிறது. யுக்ரேனுக்கு உதவும் மேற்கத்திய நிறுவனங்கள் மலிவான ட்ரோன்கள் மட்டுமே மாற்றத்தை இந்த ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் பெரிய தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான பலான்டிர், யுக்ரேனின் போர் நடவடிக்கைகளுக்கு உதவிய முதல் மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். யுக்ரேனின் பீரங்கித் தாக்குதல்களின் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்துவதற்கான மென்பொருளை இது வழங்கியது. இப்போது யுக்ரேனின் தொலைதூர ட்ரோன் தாக்குதல்களைத் திட்டமிடப் புதிய கருவிகளை வழங்கியுள்ளது. பலான்டிரைச் சேர்ந்த பிரிட்டிஷ் பொறியாளர்கள், யுக்ரேனியப் பொறியாளர்களுடன் இணைந்து ஒரு இலக்கை அடைவதற்கான சிறந்த வழிகளை உருவாக்கி வரைபடமாக்குவதற்கான ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளனர். பலான்டிர் எந்த ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதன் மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்று 1,000-க்கும் மேற்பட்ட யுக்ரேனியர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவியுள்ளது. இது, எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது என்று பிபிசிக்கு விளக்கப்பட்டுள்ளது. பல தரவுகளைப் பயன்படுத்தி, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு, ரேடார் மற்றும் மின்னணு ஜாமர்களை வரைபடமாக்க முடிகிறது. இறுதியாக அதைப் பார்க்கும் போது, ஒரு நிலப்பரப்பு விளக்கப்படத்தைப் போலவே தெரிகிறது. விளக்கப்படத்தில் உள்ள கோடுகள் இறுக்கமாக இருந்தால், அந்தப் பகுதியில் வான் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். வணிகச் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமிக்ஞை புலனாய்வுகளைப் பயன்படுத்தி இந்த இடங்கள் ஏற்கனவே யுக்ரேனால் அடையாளம் காணப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,TERMINAL AUTONOMY தொலைதூர ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் மின்னணு போர் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி தங்கள் இலக்கை அடைய இந்தத் திட்டம் யுக்ரேனுக்கு உதவுகிறது என்று பலான்டிரின் லூயிஸ் மோஸ்லி கூறுகிறார். "போர் நடைபெறும் இடம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதும் காட்சிப்படுத்துவதும் இந்தப் பணிகளை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது," என்று அவர் கூறுகிறார். தொலைதூர ட்ரோன் தாக்குதல்களைச் செயல்படுத்துவது ரகசியமாகச் செயல்படும் யுக்ரேனின் புலனாய்வு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனால் சில விவரங்களைப் பற்றி பிபிசி-க்கு வேறு இடங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த முறையில், எந்த ஒரு இடத்துக்கும் ஏராளமான ட்ரோன்களை ஏவ முடியும். ஒரு இலக்கை நோக்கி 60 ட்ரோன்களை வரை செலுத்தலாம். தாக்குதல்கள் பெரும்பாலும் இரவில் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும். 10% மட்டுமே இலக்கை அடையலாம். சில ட்ரோன்கள் யுக்ரேனின் சொந்த வான் பாதுகாப்பு - நட்பு துப்பாக்கிச் சூடு மூலம் வழியில் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. ரஷ்யாவின் மின்னணு நெருக்கத்தை (electronic jamming) எதிர்கொள்ள யுக்ரேன் சில வழிகளை உருவாக்க வேண்டியிருந்தது. டெர்மினல் அடானமியின் ஸ்கைத் ட்ரோன்கள், அதன் போக்கை தீர்மானிக்கக் காட்சி நிலைப்படுத்தலைப் பயன்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் நிலப்பரப்பை ஆராய்கிறது. இதில் விமானி யாரும் இல்லை. 'ரஷ்யாவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது' பலான்டிர் மென்பொருள் ஏற்கனவே சிறந்த பாதைகளை குறித்து வைத்திருக்கும். நிறைய ட்ரோன்களை பறக்கவிடுவது ரஷ்யாவின் வான் பாதுகாப்பைத் தளரவைப்பதற்கு முக்கியமானது என்று செர்ரா-மார்டின்ஸ் கூறுகிறார். அதேபோல், ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்த முயற்சிக்கும் ஏவுகணைகளை விட அல்லது அவை தாக்க முயற்சிக்கும் இலக்குகளை விட மலிவானதாக இருப்பதும் முக்கியம் என்கிறார். ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் ஜஸ்டின் பிராங்க், யுக்ரேனின் தொலை தூர ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவுக்குச் சங்கடங்களை உருவாக்குகின்றன என்று கூறுகிறார். ரஷ்யாவிடம் நிறைய வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும், அவற்றால் எல்லாவற்றையும் பாதுகாக்க முடியவில்லை. யுக்ரேனின் தொலை தூர தாக்குதல்கள் சாதாரண ரஷ்யர்களுக்கு 'அரசால் அவர்களை முழுமையாக பாதுகாக்க முடியாது என்பதையும், ரஷ்யாவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது' என்பதையும் காட்டுகிறது என்று பேராசிரியர் பிராங்க் கூறுகிறார். ரஷ்யாவுக்குள் 1,000 கி.மீ (620 மைல்) தூரத்திற்கு யுக்ரேன் ட்ரோன்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் கவனம் ராணுவ தளங்கள் மீது செலுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், ரஷ்ய விமானத் தளங்களை குறிவைப்பது மட்டுமே ரஷ்யாவின் கிளைட் குண்டுகளுக்கு யுக்ரேன் பதிலளிக்கக்கூடிய ஒரே சிறந்த வழியாகும். இது ரஷ்யாவை தனது விமானங்களை இன்னும் தொலைவில் உள்ள தளங்களுக்கு நகர்த்தவும், தனது தாக்குதல்களின் இடைவெளியை அதிகரிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளது. யுக்ரேனிய ட்ரோன்கள் அதன் மரினோவ்கா விமான தளத்தில் உள்ள ஹேங்கர்களை எவ்வாறு வெற்றிகரமாக சேதப்படுத்தியுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பட மூலாதாரம்,EPA அடுத்து என்ன நடக்கும்? மேற்கத்தியத் தயாரிப்பான தொலை தூர ஆயுதங்களின் உதவியுடன் இன்னும் அதிகமாகச் செயல்பயல்பட முடியும் என்று யுக்ரேன் உறுதியாக நம்புகிறது. ஆனால் இதுவரை, நேட்டோ நட்பு நாடுகள் யுக்ரேனின் வேண்டுகோள்களை நிராகரித்து வந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில், இது மேற்கு நாடுகளை மேலும் மோதலில் ஈடுபடுத்தும் என்ற அச்சம் நீடிக்கிறது. எனினும் மேற்கத்திய நிறுவனங்கள் யுக்ரேனுக்கு உதவுவதை இது நிறுத்தவில்லை. யுக்ரேன் இன்னும் பெரும்பாலும் அதன் உள்நாட்டு முயற்சிகளையே நம்ப வேண்டியுள்ளது. போரை ரஷ்யாவுக்குள் நடத்துவது போரை வெல்வதற்கு ஒரு திறவுகோல் என்று நம்புகிறது. பிரான்சிஸ்கோ செர்ரா-மார்டின்ஸ் மேற்கத்திய உற்பத்தியாளர்கள் ஒரு தீவிரமான போரை எதிர்கொள்ள இன்னும் தயாராக இல்லை என்கிறார். மிகக் குறைவான தொலை தூர ஆயுதங்களை அதிகச் செலவில் உற்பத்தி செய்கிறார்கள் என்கிறார். யுக்ரேனுக்கு இப்போது உண்மையில் தேவைப்படுவது 'போதுமான நல்ல அமைப்புகள்' என்று அவர் கூறுகிறார். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணையை விட குறைந்தது 10 மடங்கு மலிவான புதிய கப்பல் ஏவுகணையை ஏற்கனவே உருவாக்கி வரும் ஒரு யுக்ரேனிய நிறுவனத்துடன் பிபிசி பேசியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் சந்தேகங்கள் ஒருபுறம் இருந்தாலும், ரஷ்யா மீதான தாக்குதலை அதிகரிக்க யுக்ரேன் திட்டமிட்டுள்ளது. செர்ரா-மார்டின்ஸ், "இப்போது நீங்கள் பார்ப்பது ஆண்டின் இறுதிக்குள் நீங்கள் பார்க்கப்போவதை ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை," என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c8rx1d42yr3o
  7. Published By: VISHNU 30 AUG, 2024 | 03:21 AM தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தலைமையில் திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) காலை 10.00 மணியளவில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் குறித்த முடிவை மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்குமாறும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். குறித்த கலந்துரையாடலில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களினால் எடுக்கப்பட்டுள்ள முடிவு தொடர்பாக எதிர்வரும் 1ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரியப்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை முடிவினை அறிவிக்காத நிலையில் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் அவற்றை பரிசீலித்து முடிவினை அறிவிக்கலாம் என தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதேவேளை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழ் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவினையும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192351
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2050ம் ஆண்டில் 10-ல் ஒரு நபருக்கு இது போன்ற கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4 கோடி குழந்தைகளும் அடங்குவார்கள். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசித்து வருகின்றனர். ஒருவருக்கும் கேட்கும் திறனில் பிரச்னை இருப்பதை எப்படி கண்டறிவது? யாருக்கெல்லாம் அதிக பாதிப்புகள் இருக்கும்? கேட்கும் திறன் குறைவது, காது முழுமையாக கேளாமல் போவதற்கான காரணங்கள் என்ன? அதனை எப்படி சரி செய்வது? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. கேட்கும் திறனில் குறை உள்ளவர்கள் யார்? பொதுவாக காது கேளாமை பிரச்னை ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலும் ஏற்படலாம். சில நேரங்களில் கேட்கும் திறன் குறைபாடு மிகவும் குறைவாக இருக்கலாம் அல்லது அது தீவிரமாகவும் இருக்கலாம். கேட்கும் திறனில் பிரச்னை உள்ளவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. கருவிகள் மற்றும் இதர தொழில்நுட்ப உதவிகளுடன் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடவும், அவர்கள் உரையாடுவதைக் கேட்கவும் இயலும். ஆனால், காது கேட்கும் திறனை முழுமையாக இழந்தவர்களால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க இயலாது. அவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு அதிகமாக சைகை மொழியை பயன்படுத்துகின்றனர். யார் ஒருவரால் 20 டெசிபல் என்ற அளவில் எழுப்பப்படும் ஒலியைக் கேட்பதில் பிரச்னை இருக்கிறதோ அவர்களின் கேட்கும் திறன் குறைந்து வருகிறது என்று பொருள். இது, மரபு ரீதியாக இருக்கலாம். இளம் வயதில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாகவும் கேட்கும் திறன் குறையலாம். சத்தமான சூழலில் வாழ்வதும் கூட இந்த குறைபாடுகளுக்கு வழி வகுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு காதுகளிலும் கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்த நபர்கள் சைகை மொழியில் மற்றவர்களுடன் உரையாடுகின்றனர் கேட்கும் திறனில் பிரச்னை எதனால் ஏற்படுகிறது? சிலருக்கு மரபு ரீதியாகவே பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகள் பிறக்கும் போது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஹைபர்பிலிரூபினேமியா எனப்படும் மஞ்சள் காமாலை நோய்த் தொற்று போன்றவற்றாலும் சிறு வயதிலேயே காது முழுமையாகக் கேட்காமல் போவது மற்றும் கேட்கும் திறனில் பிரச்னைகள் ஏற்படுவது போன்றவை நிகழும் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். காதுகளில் நோய் தொற்று ஏற்படுதல், காதுகளில் நீர் கோர்த்தல் போன்றவையும் குழந்தைப் பருவத்தில் காது கேளாமையைத் தூண்டுகிறது. புகைப்பிடித்தல், நாள்பட்ட நோய்கள் போன்றவை காரணமாகவும் காது கேளாமை ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு உதவ இயலும்? உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது, 4.3 கோடி குழந்தைகள் கேட்டல் திறன் குறைபாட்டால் அவதியுற்று வருகின்றனர். ஆரம்ப காலத்திலேயே அதனைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கினால், அவர்களது இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இயன்முறை மருத்துவரான சனம் நாயர், "எவ்வளவு விரைவாக குழந்தைகளுக்கு காது கேளும் திறனில் பிரச்னை இருக்கிறது என்று பெற்றோர்கள் அறிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவில் குழந்தைகளுக்கு மாற்று முறையில் பேச, கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். இதனால் அவர்கள் தனித்து இருப்பதாக உணரமாட்டார்கள்," என்று தெரிவித்தார். இயன்முறை மருத்துவரான (Physiotherapist) சனம், 46 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக செயல்பட்டு வரும் சென்னையை தலைமையகமாக கொண்ட ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு (Spastic Society of Tamil Nadu) என்ற அரசு சாரா நிறுவனத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். பார்வை-செவி திறன் குறைபாடால் அவதிப்படும் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வரும் பிரிவில் பணியாற்றி வருகிறார். "கேட்கும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்வதிலும் கற்றுக் கொள்வதிலும் சிரமத்தைச் சந்திப்பார்கள். கற்றல் மட்டுமின்றி, வெவ்வேறு இடங்களுக்குச் செல்வது, மற்றவர்களுடன் உரையாடுவது போன்றவற்றிலும் அவர்களுக்குச் சிரமம் ஏற்படும். இதனை விரைவில் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பட்சத்தில் சமூகத்தில் மற்ற நபர்களை போல அவர்களும் செயல்பட முடியும்," என்று கூறுகிறார். குழந்தைகளின் ஆரம்ப கால மூளை வளர்ச்சிப் பருவமான 1 முதல் 3 வயதுக்குள் இந்தக் குறைபாட்டினைக் கண்டறியும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையான வகையில் அவர்களது வீடு, பள்ளிகளில் மாற்றங்கள் கொண்டு வர இயலும். இந்த மாற்றத்திற்கு பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தயாராகும் வகையில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதும் அவசியம் என்று கூறுகிறார் சனம். "சிறப்புக் கல்வியோடு மட்டுமின்றி, ஆக்குபேஷனல் தெரபி, பிசியோதெரபி போன்றவற்றோடு பேச்சுக்கான சிகிச்சை ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். "சிறந்த அறிவாற்றல் திறன் கொண்ட குழந்தைகளால் கற்றலில் இருக்கும் தடைகளைக் களைந்து படிக்க இயலும். பிறகு அவர்கள் பொதுப்பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கச் செல்வார்கள். அவர்களது இயல்பு வாழ்க்கையில் எந்தச் சிரமும் இருக்காது," என்றும் கூறுகிறார் சனம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு உதவு முடியும்? இளமையில் செவித்திறன் குறைபாட்டை தவிர்ப்பது எப்படி? குழந்தை வளர்ப்பில் இருந்தே இதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அதிக சத்தமான சூழலுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தக் கூடாது என்று கூறுகிறார் சனம். 60% கேட்டல் குறைபாடுகளை மனிதர்கள் தங்களின் அன்றாட செயல்பாடுகளின் மூலம் தவிர்க்க இயலும் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். பொதுச் சுகாதார நடவடிக்கைகள் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். குழந்தைகளுக்கு டி.வி போன்றவற்றை அதிகமாகப் பழக்கப்படுத்தக் கூடாது என்கிறார் சனம். மேலும் வீட்டில் இருக்கும் நபர்கள் சத்தமாகப் பேசும் பழக்கத்தைக் கைவிட வேண்டும், என்கிறார். ஹெட்போன்கள் போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்துப் பழக்குவதை நிறுத்த வேண்டும். மக்கள் அதிகமாகப் புழங்கும் பகுதிகள், வெடிச் சத்தங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது அவர்களுக்கு வெகுகாலம் பயனளிக்கும் என்றும் தெரிவிக்கிறார் சனம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முறையான உதவி மற்றும் கல்வி கிடைக்காத சூழலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது சவாலாக இருக்கிறது முறையாக கண்டறியப்படாத குறைபாட்டால் ஏற்படும் தாக்கங்கள் என்ன? கேட்டல் திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முறையாக பேசுவதிலும், தகவல் பரிமாற்றத்திலும் தடுமாறுவார்கள். அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படும். மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமையிலேயே இருப்பார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதில்லை. அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு அவர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. அதையும் மீறி பணியில் அமர்த்தப்படும் பட்சத்தில் அவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. "கற்றல் திறன் இருக்கும் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். மேற்கொண்டு கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் கற்றல் திறன் சிறப்பாக இருக்கும் என்று கூற இயலாது. அவர்களுக்கு முறையாக தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த மையத்தில் இந்த பயிற்சிகளில் ஈடுபட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் சமைத்தல், உணவு பரிமாறல் போன்ற பணிகளில் மற்றவர்களுக்கு நிகராக பணியாற்றி வருகின்றனர்," என்று கூறுகிறார் சனம். ஆரம்பத்திலேயே குறையை கண்டறியும் போது தான் இத்தகைய மாற்றத்திற்கு வழி பிறக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cn87zyg989vo
  9. உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது Published By: DIGITAL DESK 3 30 AUG, 2024 | 10:58 AM இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை (29) நாட்டை விட்டு சென்றது. மேற்கு கடற்படைக் கட்டளைக் கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடனான பயிற்சிக்குப் (PASSEX) பின்னர், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் புறப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக 26 ஆம் திகதி காலை கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Destroyer வகையின் ஐ.என்.எஸ். மும்பை (INS Mumbai) என்ற கப்பல் 163 மீற்றர் நீளமும் 410 கடற்படையினரை கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும். மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது. இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகபட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை பிரிவிடம் சேவையில் இணைக்கப்பட்டது. கொழும்பில் ஐஎன்எஸ் மும்பை தரித்து நிற்கும் காலத்தில் இருகடற்படையினரதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் இலக்குடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டனர். கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சந்தீப் குமார் (Captain Sandeep Kumar) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது. அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டது. https://www.virakesari.lk/article/192366
  10. வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (National Hospital Colombo) நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு அதிக அளவிலான பெரசிட்டமோல் கொடுப்பதனால் அவர்களின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தினை, சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர்களின் பரிந்துரை அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியர்களின் பரிந்துரைகளில் பெரசிட்டமோல் மருந்தைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பெரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மோசமான நிலைக்குள்ளாகும். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டறிந்தால் பெரசிட்டமோலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க வேண்டும். இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்" என குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/important-paracetamol-alert-for-parents-1724938264#google_vignette
  11. வவுனியாவில்(vavuniya) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தைச்(jaffna) இளம் குடும்பஸ்தர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குடும்பஸ்தர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலை இதனையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று (29.) மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவராவார். வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://ibctamil.com/article/jaffna-family-member-brutally-murdered-in-vavuniya-1724939097
  12. அனைவரும் ஒருமித்துநின்று தமிழர் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது - தமிழ் பிரதிநிதிகளிடம் அஜித் டோவல் Published By: VISHNU 29 AUG, 2024 | 10:37 PM (நா.தனுஜா) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சந்திப்பில் சிறிதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்லவேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறினார். அதற்கமைய இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழமுடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்லமுடியாது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஜித் டோவலிடம் எடுத்துரைத்தார். ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த கஜேந்திரன், வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி முறைமையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தமிழ் பொதுக்கட்டமைப்பின் தீர்மானம் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார். அத்தோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்று தான் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத்தகைய தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து சிந்தித்து செயலாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/192347
  13. Published By: DIGITAL DESK 7 27 AUG, 2024 | 02:23 PM கலாநிதி ஜெகான் பெரேரா பொருளாதார நிலைவரம், பின்பற்றவேண்டிய பொருளாதார அபிவிருத்திப் பாதை மற்றும் தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு பொருத்தமான தலைவர் யார் என்ற விடயங்களே இன்று பெருமளவுக்கு பேசப்படுகின்றன. ஆனால், நாடடின் பொருளாதாரப் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பங்களிப்புச் செய்ததும் தீர்வு காண்பதற்கு சிக்கலானதாக இருப்பதுமான இன்னொரு முக்கிய பிரச்சினை இந்த பேச்சுக்களுக்குள் விரைவில் ஊடுருவப் போகிறது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்ற அதேநேரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் விரைவில் தொடங்கப்போகிறது. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இசைவான முறையில் இலங்கை செயற்படுகிறதா இல்லையா என்பது தொடர்பான பிரச்சினை 2009 ஆண்டில் இருந்து கிரமமாக ஆராய்வுக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தொடரிலும் அந்த பிரச்சினை ஆராயப்படும். அந்த தீர்மானங்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கங்கள் ஒரு ஏற்புடைய முறையில் கையாளவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் மதிப்பீட்டின் அடிம்படையில் அமைந்தவை. இலங்கை நிலைவரம் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் தற்போதைய தறுவாயில் ஏதாவது ஒரு வகையில் கணிசமான மாற்றத்தை செய்வதில் நாட்டம் காட்டுவதற்கான சாத்தியமில்லை. இலங்கை செல்ல வேண்டிய புதிய திசைமார்க்கத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதுவரையில் நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசைமார்க்கத்தை விடவும் சிறப்பானதாக புதிய பாதை இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் செப்டெம்பரில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் முடிவுகள் இலங்கைக்கென்று நிர்ணயிக்கப்படும் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு கூடுதலான கால அவகாசத்தை வழங்கவது பெரும்பாலும் சாத்தியம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அண்மைய அறிக்கை இலங்கைக்கு சாதகமானதாக இருக்கவில்லை. இலங்கை பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதும் அதுவரை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மீதான ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு தொடரும் என்பதுமே அந்த அறிக்கை மூலமான செய்தி. "பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை ஒப்புக்கொள்வதற்கும் முழு மனித உரிமை மீறல்களையும் செய்ததில் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகளின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் கடந்த காலத்தினதும் சமகாலத்தினதும் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியமையே சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு" முக்கியமான ஒரு தடையாக இருந்து வருகிறது. "பாரதூரமான குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் செய்ததாக நம்பகமாக தொடர்புபடுத்தப்படும் பல கட்டமைப்புக்களும் அரச இயந்திரத்தின் கூறுகளும் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பது பொறுப்புக்கூறல் விடயத்தில் அர்த்தபுஷ்டியான முன்னேற்றத்தை தடுக்கிறது என்பதுடன் மனித உரிமைமீறல்கள் தொடருவதற்கும் வழிவகுக்கிறது" என்று மனித உரிமைகள் உயர்ஸ்தினிகர் வொல்கர் ரேக் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும், உத்தேச உண்மை கண்டறியும் பொறிமுறை அமைக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்திருப்பதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர் முதலில் அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு உகந்த சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதற்கு பிரத்தியேகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார். அரசாங்கத்தின் மறுப்பு ஐக்கிய நாடுகள் அறிக்கையில் உள்ள அவதானிப்புக்களை அரசாங்கம் மறுத்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விளக்கமளித்திருக்கும் அரசாங்கம் கிளப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை இராஜதந்திர குறிப்பு ஒன்றில் தெளிவு படுத்தியிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களையும் நிறுவனங்களையும் இலக்குவைத்து விதிக்கப்படும் தடைகள் மற்றும் எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் தொடர்பிலான குறிப்புக்கள் உட்பட முடிவுகளையும் விதப்புரைகளையும் நிராகரித்திருக்கும் அரசாங்கம் அவற்றை தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான மூலங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்றும் மனித உரிமைகள் பேரவையை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/ 251 தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் இயற்கை நீதிக் கோட்பாடுகள், பக்கச்சார்பின்மை மற்றும் சகலரும் சமம் என்ற கோட்பாடுகளுக்கும் முரணானது என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால் நாட்டில் களநிலைவரம் வேறுபட்டதாக இருக்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்படுவதில்லை. உளாளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததை நாட்டின் ஜனாதிபதியே நியாயப்படுத்திப் பேசுகிற அளவுக்கு சட்டங்கள் அவமதிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் உட்பட பல தீர்மானங்களில் கடுமையான ஏற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சர்வதேச சமூகம் இன்னமும் பயன்படுத்தவில்லை. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட சில நிறுவனங்களை அல்லது தனிநபர்களை இலக்குவைத்து தடைகளை விதிப்பதாகும். அதை அவர்கள் பயன்படுத்தினால் ஆழமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் தற்போதைய தருணத்தில் இலங்கையினால் அதை தாங்கமுடியாது. விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை நிறைவு செய்யவில்லையானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வாபஸ் பெறப்படக்கூடும். அடுத்த சமாளிக்க முடியாத அச்சுறுத்தல் சர்வதேச குற்றங்களுக்கான உலகளாவிய நீதி நியாயாதிக்கம் தொடர்பானதாகும். உலகளாவிய நீதி்நியாயாதிக்க கோட்பாடு என்பது இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை போன்ற சர்வதேச சட்டத்துக்கு எதிரான பாரதூரமான குற்றச்செயல்களுக்காக தனிநபர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு அரசுகளை அல்லது சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்கும் ஒரு சட்டக் கொள்கையாகும். குற்றச் செயல்கள் எங்கு இடம்பெற்றன என்பதையோ, குற்றச்செயல்களைச் செய்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையோ அல்லது அந்த விவகாரம் வேறு எந்த நீதி நியாயாதிகத் தொடர்புகளைக் கொண்டது என்பதையோ பொருட்படுத்தாமல் அந்த கொள்கையை பிரயோகிக்கமுடியும். இலங்கையின் பின்புலத்தில் நோக்கும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்கள் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை குறப்பாக 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நீண்ட உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய மீறல்களைக் கையாள்வதில் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றன. உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jursdiction ) பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு அல்லது சர்வதேச விசாரணை மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் அர்த்தம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் குறிப்பிடப்படும் தனிநபர்கள் இலங்கையின் நியயாதிக்கத்துக்கு வெளியில் விசாரணைகளை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்ககிறது. ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைச் செயன்முறையை தொடருவது குறித்து சர்வதேச சமூகத்திற்குள் மீள்மதிப்பீடு ஒன்று இடம்பெறுகிறது போன்று தெரிகிறது. இலங்கை மோதலின் மோசமான கட்டம் 15 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் போரின் முடிவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. உலகின் வேறு பகுதிகளில் நடைபெறுகின்றவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கையின் இன்றைய நிலைவரம் பெருமளவுக்கு மேம்பட்டதாக இருக்கிறது. முறைமை மாற்றம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சனத்தொகையின் சகல பிரிவுகளினதும் ஆதரவைப் பெறுவதில் பிரதான அரசியல் சக்திகளின் அக்கறைகள் சங்கமிக்கின்றதன் விளைவாக இலங்கையில் தற்போதைய காலகட்டம் தேசிய நல்லிணக்கத்துக்கு கூடுதலான அளவுக்கு அனுகூலமானதாக இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பதை உறுதிசெய்வதற்காக அவர்களை தன்பக்கம் இழுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு அளவிலான முயற்சிகளில் ஈடுபட்டவருகின்றார். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கையின் வாக்காளர் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராக இருப்பதால் இறுக்கமான மும்முனைப் போட்டி ஒன்றில் வெற்றி பெறுவதற்கு அந்த சமூகங்களின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும். மூன்று பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளை கையாளுவது தொடர்பிலும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பிலும் ஒப்பீட்டளவில் அறிவுத் தெளிவுடனான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள். அளிக்கின்ற வாக்குறுதிகளை தாங்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்று மக்களுக்கு அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும். சிங்கள இனத்துவ தேசியவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்சவின் தீங்கான காலப்பகுதிக்கு பிறகு தற்போது பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு மற்றும் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தேசிய நல்லிணக்கத்துக்கு சார்பாக பொதுமக்களின் நிலைப்பாடுகள் வலுவானவையாக வளர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அதே தேசியவாத சக்திகள் ஜனாதிபதி தேர்தலுக்காக தங்களை மீள அணிதிரட்டுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கோட்டாபயவின் பெறாமகன் நாமல் ராஜபக்ச தேர்தல் நோக்கத்துக்காக சிங்கள இனத்துவ தேசியவாதத்தின் சக்தியை திரட்டுவதில் சிறிய தந்தையாரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதாக தெரிகிறது. "இந்த பௌத்த நாட்டில் சகல மதங்களையும் மதிப்பதற்கு நாம் உறுதி கொண்டிருக்கிறோம். மாகாணசபைகளுக்கு காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதாகாரத்தையோ நாம் பரவலாக்கம் செய்யப் போவதில்லை. வடக்கில் உள்ள எமது தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை" என்று நாமல் கூறியிருக்கிறார். அவரது இந்த கூற்றில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்களும் உண்மையில் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்ட சகல மக்களும் காண்கிறார்கள். இத்தகைய கள யதார்ததங்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற குடையின் கீழ் தமிழ் இனத்துவ தேசியவாத சக்திகளும் தங்களை மிள அணிதிரட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் தமிழ்த் தலைவர்களும் அவர்களது கட்சிகளும் தேர்தல்களை பகிஷ்கரித்ததுடன் சிங்களப் பெரும்பான்மையினர் மீதான நம்பிக்கையீனம் காரணமாக நாட்டுப் பிரிவினையைக் கோரினர். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போனதற்கு இனத்துவ துருவமயமாதலே காரணமாகும். ஆனால் தற்போதைய தருணத்தில் நாட்டில் பிரதான சுலோகமும் அபிலாசையும் முறைமை மாற்றம் ஒன்றுக்கானதாகவே இருக்கிறது. இலங்கையில் தங்களது தலையீடுகளின் பெறுமதி பற்றி சர்வதேச சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற மீள்சிந்தனையும் மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளரகளும் தமிழ் வாக்காளர்களுக்கு நீட்டுகின்ற நேசக்கரமும் தமிழ் அரசியல் சமுதாயம் விலகிநிற்காமல் தேசிய அரசியல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு காலம் கனிந்திருக்கிறது என்பதன் அறிகுறியாகும். அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற விரும்புகின்றவர்களும் சட்டத்தின் ஆட்சிக்கு பாதகமாக அமைகின்றதும் இன, மத சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாரபட்சத்தைக் காட்டுகின்றதுமான இன்றைய நாட்டு நிலைவரங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும். https://www.virakesari.lk/article/192111
  14. கொழும்பில் முக்கிய சந்திப்புகளில் அஜித் டோவல் Published By: VISHNU 29 AUG, 2024 | 09:08 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. டோவல் வியாழக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்தார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. டோவலின் விஜயம் அமைந்துள்ளதுடன் உயர்மட்ட அரசியல் தலைவர்களுடனும் சந்திப்புகளில் கலந்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுரகுமார திசாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருந்தது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் இதுவரையில் டெல்லி செல்லவில்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஓரிரு முறை உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டு இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால் சகாலத்தில் இலங்கையில் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியில் பிரபல்யமாகியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க டெல்லிக்கு அழைத்திருந்த போது அஜித் கே. டோவலுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. மறுபுறம் சீன கப்பல்கள் மூன்று கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நங்கூரமிட்டிருந்தது. இத்தகைய சீன போர்க் கப்பல்களின் பிரசன்னத்தினால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை தளம் விரிவடைவதுடன், இப்பிராந்தியத்தில் கூடுதல் தளவாடத் தங்குமிடங்களை பெய்ஜிங் தேடுவதாக கருதப்படுகின்றது. இந்த நிலைமையானது பிராந்தியத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இத்தகைய சவால்கள் இலங்கை ஊடாக எதிர்ககொள்ள நேரிடும் என்ற சந்தேகம் எப்போதும் டெல்லிக்கு உள்ளது. உதாரணமாக இந்தியாவுடன் நட்பில் இருந்த மாலைத்தீவில் தேர்தல் ஊடாக இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சீன இராணுவ பிரசன்னங்கள் அங்கு அதிகரித்துள்ளன. மாலைத்தீவில் முகமது முய்சு தலைமையிலான புதிய அரசு இந்திய எதிர்ப்பு கொள்கையில் உள்ளது. எனவே தான் ஜனாதிபதி முகமது முய்சு வெற்றிப்பெற்ற உடன் இந்திய இராணுவத்தை அந்நாட்டில் இருந்து வெளியேற்றினார். அதன் பின்னரே சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார். இலங்கையிலும் இத்தகைய சூழ்நிலை உருவாகக் கூடும் என்ற சந்தேகம் டெல்லிக்கு இல்லாமல் இல்லை. ஏனெனில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் போட்டி நிலைமையை உருவாக்கியுள்ள, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி) அநுரமார திசாநாயக்க சீனாவுக்கு ஆதரவானவராக பார்க்கப்படுகின்றார். எனவே மாலைத்தீவு போன்தொரு அரசியல் சூழல் இலங்கையில் உருவானால் பிராந்தியத்தில் சீனாவின் கரம் பலமடங்கில் வலுப்பெறும். உண்மையான இராணுவம் கட்டுப்பாட்டு நில எல்லையில் இந்திய - சீன மோதல்கள் இந்திய பெருங்கடலிலும் விஸ்தரிக்க கூடும். இவ்வாறானதொரு நிலையிலேயே அஜித் தோவால் கொழும்பில் சந்திப்புகளில் ஈடுப்படுகின்றார். இலங்கையின் உத்தேச ஜனாதிபதி தேர்தல் இந்தியாவுக்கு புவிசார் அரசியல் மூலோபாய ரீதியில் முக்கியமாகின்றது. ஏனெனில் இந்திய திட்டமான ஆசிய நெடுஞ்சாலை இணைப்பு திட்டங்களில் இலங்கையின் பங்களிப்பு முக்கியமாகின்றது. இதே வேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. டோவலை வியாழக்கிழமை சந்தித்த மிலிந்த மொரகொட, பாத்ஃபைண்டர் அமைப்பின் இலங்கை - இந்திய பௌதீக இணைப்பு தொடர்பிலான அறிக்கையை கையளித்தார். சாலை, ரயில், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளில் பௌதீக இணைப்புக்கான விரிவான வரைபடத்தை உருவாக்கும் வகையில் பாத்ஃபைண்டர் அமைப்பின் அறிக்கை அமைகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை 3 முதல் 6வீதம் வரை அதிகரிப்பதே இந்த முயற்சியின் இறுதி இலக்கு என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல துறைசார்ந்த பௌதீக இணைப்புகள் குறித்து அஜித் கே. தோவால் கொழும்பு சந்திப்புகளில் கவனம் செலுத்த உள்ளார். அதே போன்று இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இடையிலான முத்தரப்பு பிராந்திய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உள்ளடக்கங்களின் மறுபரிசீலனை குறித்தும் அஜித் கே. தோவால் கொழும்பு சந்திப்புகளில் அவதானம் செலுத்த உள்ளார். இந்த முத்தரப்பு பாதுகாப்பு மாநாட்டில் மொரிஷியஸ் மற்றும் பங்களாதேஷ் உறுப்பினர்களாகவும், சீஷெல்ஸ் ஒரு பார்வையாளராகவும் இருப்பதுடன் இந்தியா, மொரிஷியஸ், மாலைத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் ஐந்தாவது உறுப்பு நாடாக பங்களாதேஷ் இணைத்துக்க கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192344
  15. தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்; சஜித்தின் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது. இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. https://thinakkural.lk/article/308624
  16. பொன்சேகாவுக்கு தொடரும் அவலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ஒருவர் உட்பட சில பேச்சாளர்கள் மேடையில் இருந்ததாகவும் பொது மக்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/308631
  17. பங்களாதேஷுடனான இரண்டாவது டெஸ்டுக்கான பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்றிடி இல்லை Published By: VISHNU 29 AUG, 2024 | 07:46 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் பங்களாதேஷுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஷஹீன் ஷா அப்றிடியை பாகிஸ்தான் அணி இணைத்துக்கொள்ளவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் சுழல்பந்துவீச்சாளர் அப்ரார் அஹ்மதை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது. அப் போட்டியில் பங்களாதேஷின் சுழல்பந்துவீச்சாளர்கள் மெஹிதி ஹசன் மிராஸ் (21 - 4 விக்.), ஷக்கிப் அல் ஹசன் (44 3 விக்.) ஆகிய இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை திக்குமுக்காடவைத்ததை அடுத்து பிரதான சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை அணியில் இணைத்துக்கொள்ளதது எவ்வளவு பெரிய தவறு என்பதை பாகிஸ்தான் அணி புரிந்துகொண்டது. முதலாவது போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறுவதால் சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை பாகிஸ்தான் இணைத்துக்கொண்டுள்ளது. 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 38 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அப்ரார், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் துரும்புச் சீட்டாக இருப்பார் என நம்பப்டுகிறது. மறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 14ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ், இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்ற முயற்சிக்கவுள்ளது. முதலாவது போட்டியில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த 191 ஓட்டங்கள், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுள் ஹக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், மெஹிதி ஹசன் மிராஸின் சகலதுறை ஆட்டம் (77 ஒட்டங்கள், 4 விக்கெட்கள்) என்பன பங்களாதேஷை வெற்றிபெறச் செய்தன. அவர்கள் அனைவரும் பங்களாதேஷுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சிக்கவுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பங்களாதேஷ் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிப்பதால் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. அணிகள் பாகிஸ்தான்: ஷான் மசூத் (தலைவர்), சவூத் ஷக்கீல், அப்ரார் அஹ்மத், அத்துல்லா ஷபிக், பாபர் அஸாம், குரம் ஷாஹ்ஸாத், மிர் ஹம்ஸா, மொஹமத் அலி, மொஹம்மத் ரிஸ்வான், நசீம் ஷா, சய்ம் அயூப், சல்மான் அலி அகா. பங்களாதேஷ்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், மொமினுள் ஹக், முஷ்பிக்குர் ரஹிம், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ராஸா, ஸசன் மஹ்முத், ஷொரிபுல் இஸ்லாம், நஹித் ராணா. https://www.virakesari.lk/article/192343
  18. இன்றும் நீண்ட வரிசை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்களை மாத்திரம் விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/308611
  19. பிரதமரை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 29 AUG, 2024 | 05:41 PM இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று வியாழக்கிழமை (29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். இதன்போது, இலங்கை - இந்திய இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192336
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வோங் மற்றும் ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூரில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஏற்கெனவே கடல் எல்லை தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் தென்சீனக் கடலில் மற்றொரு இடம் தொடர்பாக மோதிக் கொண்டுள்ளன. சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுமே கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாட்டு கப்பல்களும் மோதிக்கொள்ளுதல், கைகலப்புகள் மற்றும் போர் மிரட்டல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் கடந்த வாரம் இரு நாட்டு கப்பல்களும், சபீனா மணல் திட்டு அருகே மோதிக்கொண்டபோது இந்தப் பிரச்னை தீவிரமானது. கப்பலை வேண்டுமென்றே மோதியதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படும் சபீனா மணல் திட்டு, பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையில் இருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவில் இருந்து 630 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. சபீனா மணல் திட்டில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சபீனா மணல் திட்டு, தென் சீனக் கடலில் எண்ணெய் வளம் மிக்க ஸ்ப்ராட்லி தீவுகளில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளின் சபீனா மணல் திட்டு பகுதியில், பல சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக் கொண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நிறைந்த பகுதி இது. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இந்தப் பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன. பிலிப்பைன்ஸ் கப்பல் "வேண்டுமென்றே" தங்கள் கப்பல்கள் மீது மோதியதாக சீன கடலோர காவல்படை கூறியது. அதே நேரத்தில் சீன கப்பல்கள் "அச்சுறுத்தும் வகையில்" நடந்து கொண்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று மோதல் நடந்தது. அப்போதும் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டன. பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. திங்களன்று 40 சீனக் கப்பல்கள் தன் இரண்டு படகுகளை இடைமறித்தன என்றும், சில மாதங்களுக்கு முன்பு மணல் திட்டு பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையின் கப்பலான தெரேசா மாக்புனாவுக்கு பொருட்களைக் கொண்டு சென்று சேர்க்கும் "மனிதாபிமான பணியை" சீனா தடுத்தாகவும், பிலிபைன்ஸ் கூறியது. சபீனா மணல் திட்டில் நிலத்தை ஆக்ரமிக்க சீனா முயல்வதாக பிலிப்பைன்ஸ் சந்தேகிக்கிறது. சபீனா மணல் திட்டின் நீருக்கடியில் நொறுக்கப்பட்ட பவளப்பாறை குவியல்களை அது சுட்டிக்காட்டியது. பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை இதைப் படமெடுத்துள்ளது. மணல் திட்டை விரிவுபடுத்த அந்தப் பொருளை சீனா பயன்படுத்துவதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. இவை "அடிப்படையற்ற குற்றச்சாடுகள்” என்று கூறி சீன அரசு ஊடகம் அவற்றை நிராகரித்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆகஸ்ட் 19ம் தேதி சீனக் கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பலும் மோதிக் கொண்டன. (கோப்புப் படம்) இந்த மணல் திட்டில் நீண்ட காலத்திற்கு தங்கள் இருப்பை நிலைநாட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக பிலிபைன்ஸ் அதிகாரிகள் தெரசா மக்புவானா கப்பலை ஏப்ரலில் சபீனாவுக்கு அனுப்பினார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக ஸ்ப்ராட்லி தீவுகளை ஆராய்வதற்கான தனது முயற்சிகளுக்கு இது முக்கியமானது என்று பிலிப்பைன்ஸ் கருதுகிறது. இதற்கிடையில் தெரசா மக்புவானாவின் இருப்பை, மணல் திட்டை ஆக்கிரமிப்பதற்கான பிலிப்பைன்ஸின் முயற்சியாக சீனா பார்க்கிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தின் ஒரு துருப்பிடித்த சிதைந்த கப்பலை, பிலிப்பைன்ஸ் 1999 ஆம் ஆண்டு இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் (சீனா இதை ரென்ஹாய் ஜியோ கோஸ் என்று அழைக்கிறது) நிறுத்தி வைத்ததாக, சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் சமீபத்திய வர்ணனை தெரிவிக்கிறது. ஒரு சில வீரர்கள் இப்போதும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவ்வப்போது உணவு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த கப்பல் இரு நாடுகளுக்கும் இடையே நிலையான மோதலுக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கப்பலுக்கு பொருட்களை சொண்டு சேர்க்கும் பணிகளைத் தடுக்க சீனா தொடர்ந்து முயற்சிக்கிறது. "25 ஆண்டுகளுக்குப் பிறகும் அது இப்போதும் அங்கேயே உள்ளது. பிலிப்பைன்ஸ் ஜியான்பின் ஜியாவோவிலும் (சபீனா மணல் திட்டு) இதையே மீண்டும் அரங்கேற்ற முயற்சிக்கிறது," என்று அந்த வர்ணனை மேலும் கூறுகிறது. ”பிலிப்பைன்ஸிடம் சீனா இனி ஒருபோதும் ஏமாறாது.”என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைகிறதா? இரண்டாவது தாமஸ் மணல் திட்டு மற்றும் ஸ்கார்பரோ மணல் திட்டு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பவளப்பாறைகள் மற்றும் திட்டுகள் மீதான தங்கள் உரிமைகோரல்களை இரு தரப்பினரும் செயல்படுத்த முயற்சிப்பதால், சமீபத்திய மாதங்களில் பல ஆபத்தான மோதல்கள் நடந்துள்ளன. எதிர்தரப்பை விரட்டியடிக்க படகுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக இந்த மோதல்கள் ஏற்படுகின்றன. பிலிப்பைன்ஸ் கப்பல்களின் மீது சீனா சக்திவாய்ந்த நீர் பீரங்கி மற்றும் லேசர்களைப் பயன்படுத்துகிறது. சீனர்கள் தங்கள் படகுகளில் ஏறி கைக்கலப்புகளில் ஈடுபடுவதாகவும், பொருட்களை பறிமுதல் செய்வதாகவும் மற்றும் காற்று நிரப்பக்கூடிய சிறு படகுகளில் துளைகள் இடுவதாகவும் பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டுகிறது. சீன கடலோர காவல்படை வீரர்கள் கத்திகள், ஈட்டிகள் மற்றும் வாள்களுடன் தனது ராணுவக் கப்பல் ஒன்றில் ஏறி தன் துருப்புக்களை மிரட்டியதாக பிலிப்பைன்ஸ் சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது. "நாங்கள் மிகவும் சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக போராடுகிறோம்" என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப்படையின் தலைவர் கில்பர்டோ தியோடோரோ செவ்வாயன்று கூறினார். அதே நேரத்தில் "சீனாவிற்கு எதிராக ஒரு வலுவான எச்சரிக்கையை" வெளியிடுமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தனது படைவீரர்கள் பலர் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் கூறுகிறது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு மரணம் ஏற்பட்டால் அது "போர் நடவடிக்கையாக" கருதப்படும் என்று அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் எச்சரித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களின் தகராறு இறுதியில் தென் சீனக் கடலில் பெரும் மோதலுக்கு வழிவகுக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகிறார்கள். பிலிப்பைன்ஸ், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தை நாடும் முயற்சியை முன்பு மேற்கொண்டது. அதை தொடர்ந்து, தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு உரிமை கோர சீனா பயன்படுத்தும் ’நைன் டாஷ் லைன்’ எல்லை கோட்டுக்குள் அதன் சட்டபூர்வ உரிமைகோரல்கள் எதுவும் இல்லை என்ற தீர்ப்பு வெளியானது. ஆனால் இந்த முடிவை அங்கீகரிக்க சீனா மறுத்துவிட்டது. ஆனால் சமீப வாரங்களில் இரு நாடுகளும் கடலில் மோதலை தணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டன. இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் உள்ள ராணுவ நிலைக்கு உணவு, பொருட்கள் மற்றும் வீரர்களை கொண்டுசேர்க்கும் அனுமதியை பிலிப்பைன்ஸுக்கு வழங்குவதற்கு கடந்த மாதம் சீனா ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் சபீனா மணல்திட்டில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் முயற்சிகள் பயனளிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிபிசி மானிட்டரிங்கின் கூடுதல் உள்ளீட்டுடன். https://www.bbc.com/tamil/articles/c9v8xv43xgmo
  21. கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு 29 AUG, 2024 | 05:17 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192330
  22. பட மூலாதாரம்,X/S. JAGATHRAKSHAKAN படக்குறிப்பு, அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 16 நிமிடங்களுக்கு முன்னர் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள்கிழமைன்று (ஆகஸ்ட் 26) 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது. வெளிநாடு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அனைத்து தவறுகளுக்கும் சேர்த்து இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தனது வீட்டில் 2020 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கிய நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்துக்கு பள்ளிக் கல்வி நிதி வழங்காத மத்திய அரசு - புதிய கல்விக் கொள்கையை ஏற்காததாலா?7 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குக் கரையில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - இப்பகுதியின் வரலாறு, பின்னணி என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சொல்வது என்ன? புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 28) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தொழிலதிபரும் எம்.பியுமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய இடங்களில் 11.9.2020 அன்று சோதனை நடத்தப்பட்டதாகவும், ஃபெமா சட்டம் 37ஏ பிரிவின்படி, 89.19 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஷேல் நிறுவனம் ஒன்றில் 42 கோடி ரூபாயும் இலங்கையில் 9 கோடி ரூபாயும் ஜெகத்ரட்சகன் தரப்பினரால் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஜெகத்ரட்சகன் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஜெகத்ரட்சகன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெகத்ரட்சகனின் ரிட் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதனை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் செய்த அனைத்து விதி மீறல்களுக்கும் சேர்த்து ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் பங்குகளை ஜெகத்ரட்சகன் வாங்கியதாகவும் இந்த பங்குகளை தனது மனைவி மற்றும் மகன், மகள் பெயரில் மாற்றியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. மேலும், இதுகுறித்து ஜெகத்ரட்சனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டன. எறும்புகள் எந்த மொழியில் பேசிக்கொள்கின்றன தெரியுமா? வியக்க வைக்கும் தகவல்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அமலாக்கத்துறையின் அறிக்கை அபராதம் எவ்வாறு விதிக்கப்படுகிறது? குற்றம் செய்ததாக கூறப்படும் தொகைக்கும் அபராதத்துக்கும் அதிக அளவு வித்தியசம் இருப்பது ஏன்? என பிபிசி தமிழிடம் விளக்கினார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. " சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் அவர்கள் முதலீடு செய்த தொகையின் அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தில் சொல்லப்படும் தொகையில் இருந்து பத்து மடங்கு வரையில் அபராதம் விதிக்கப்படும். அந்தவகையில், 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது" என்றார். இந்த விவகாரத்தில் ஜெகத்ரட்சகனுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசும் ராமமூர்த்தி, "அமலாக்கத்துறையின் அபராதத்தை எதிர்த்து தீர்ப்பாயத்தில் ஜெகத்ரட்சகன் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இந்த அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கையை வைக்கலாம். ஒருவேளை இந்த அபராதத்தை செலுத்த தவறினால் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்" என்கிறார். பொது இடத்தில் பெண்களின் முகங்கள், குரல்களுக்கு தடை விதிக்கும் தாலிபனின் புதிய சட்டங்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FB/JAGATHRAKSHAKAN படக்குறிப்பு, எம்.பி ஜெகத்ரட்சகன் யார் இந்த ஜெகத்ரட்சகன்? ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தார். வழுதாவூரில் பள்ளிக் கல்வியை முடித்த ஜெகத்ரட்சகன், ரயில்வேயில் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். ஆனால், விரைவிலேயே அரசியல்தான் தனக்குச் சரியாக இருக்கும் எனக் கருதிய ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர். துவங்கியிருந்த அ.தி.மு.கவில் இணைந்தார். 1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். வெறும் 30 வயதில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றிபெற்றார். இதற்கடுத்து 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அவருக்கு செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் அவர் வெற்றிபெற்றார் அ.தி.மு.கவுக்குள் அவருக்கு பின்பலமாக அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது, ஜானகி அணியின் பக்கம் சென்றார் ஜெகத்ரட்சகன். 1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், படுதோல்வியடைந்தார். இதன்பிறகு, அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், அ.தி.மு.கவில் இருந்து ஆர்.எம்.வீரப்பனும் நீக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். கழகத்தைத் துவங்கியபோது அதன் பொதுச் செயலாளர் ஆனார். அந்தக் கட்சி, 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது. அந்தக் கூட்டணியின் சார்பில் தி.மு.க. சின்னத்தில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கினார் ஜெகத்ரட்சகன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2004ஆம் ஆண்டு 'வீர வன்னியர் பேரவை' என்ற அமைப்பைத் துவங்கினார். 2004 ஆம் ஆண்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஜெகத்ரட்சகன் ஆதரித்தார். ஆனால், போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது 'வீர வன்னியர் பேரவை', 'ஜனநாயக முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியாக உருமாறியது. 2009ல் இந்தக் கட்சி தி.மு.கவுடன் இணைந்தது. மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பா.ம.கவின் வேட்பாளரான ஆர்.வேலுவை தோற்கடித்தார் ஜெகத்ரட்சகன். இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இணையமைச்சரான ஜெகத்ரட்சகன், 2012ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணை அமைச்சராக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இணை அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. 2014ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற அவர், 2019 மற்றும் 2024-ல் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, இவரும் ஒரு அனுமதியைப் பெற்றார். 1984ல் பாரத் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய அவர், வெகு சீக்கிரமே அதனை வளர்த்தெடுத்தார். 2002ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது. இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, 2007ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், 2002ல் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2007ல் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் துவங்கினார். இது தவிர, வேறு நான்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு மருத்துவக் கல்லூரியும் அவராலோ அவருக்கு நெருக்கமானவர்களாலோ நடத்தப்பட்டு வருகின்றன. 1999ல் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, ஒரு மதுபான ஆலையையும் துவங்கினார் ஜெகத்ரட்சகன். இதற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல்கள், மருந்து நிறுவனங்கள் என அவரது சாம்ராஜ்ஜியம் விரிந்தது. மேற்குக் கரையில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - இப்பகுதியின் வரலாறு, பின்னணி என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,X/S. JAGATHRAKSHAKAN படக்குறிப்பு, ஜெகத்ரட்சகன் ஜெகத்ரட்சகனைத் தொடரும் சர்ச்சைகள் 1999ல் இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகுதான், மதுபான ஆலைக்கு உரிமத்தைப் பெற்றார் என்பதால், அது ஒரு விவாதமானது. 2009ஆம் ஆண்டில் இவரால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரி ஒன்றில், எம்பிபிஎஸ் இடத்திற்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு செய்தி வெளியிட்டது. 2012ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது. இவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான ஜே.ஆர் பவர் ஜெனரேஷன் பி. லிட் என்ற நிறுவனத்திற்கு 2007ல் ஒரு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு ஜே.ஆர் பவர் நிறுவன பங்குகள் கே.எஸ்.கே எனர்ஜி வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டன. சுரங்கமும் அந்த நிறுவனத்திற்குச் சென்றது. 2012ல் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் 3.85 பில்லியன் டாலர்கள் தனியார் முதலீட்டில் கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று நிறுப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சில்வர்பார்க் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்தான் அந்தத் திட்டத்தில் முதலீடுசெய்யும் என்ற தகவல்கள் விரைவில் வெளியாயின. இந்த நிறுவனத்தில், ஜெகத்ரட்சகனின் உறவினர்களே இயக்குநர்களாக இருந்த நிலையில், இவ்வளவு பணம் அவருக்குக் கிடைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதன்பிறகு அமலாக்கத் துறையின் பார்வை அவர் மீது பட்டது. 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ஃபெமா சட்டத்தின் கீழ் அவர் தொடர்புடைய ரூ. 89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில் தற்போது 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர், அரசியல்வாதி என்ற அடையாளங்களைத் தாண்டி ஜெகத்ரட்சகன் தீவிர கடவுள் நம்பிக்கையாளர். சென்னை தியாகராய நகரில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் என்ற பெயரில் ஆய்வு நிலையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம், ஆன்மீகம் தொடர்பான நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் எழுதியதாக 30க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. https://www.bbc.com/tamil/articles/c4gq752k4lxo
  23. இலங்கை - இந்திய தரை வழி அவசியம்: வலியுறுத்திய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் இலங்கை - இந்தியா இடையே சாலைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் சிறிவெங்கடேஸ்வரா பல்கலை கழகம் ஆகியன இணைந்து நடத்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் பேசும்போதே கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான அமிர்தலிங்கம் இதனை தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கும்; இலங்கைக்கும் இடையே சாலைவழி வணிகம் அவசியம். இதற்காக ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு 30 கிலோமீற்றர் வரை பாலம் அமைத்திட வேண்டும். இதன் முலம், தொழில் மற்றும் சுற்றுலா துறைகள் மேம்படும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நிலைமை இலங்கையில் 30 ஆண்டுகள் வரை இடம்பெற்ற உள்நாட்டு போர் மற்றும் சமீபத்திய பொருளாதார சீர்கேடுகளால் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது. ஏற்கனவே ஆழிப்பேரலை இயற்கை பேரிடர் வந்தபோதும் கப்பல்களை அனுப்பி இந்தியா இலங்கை மக்களை காப்பாற்றியது. கொரோனா என்கிற மிகக் கொடிய தொற்று பரவிய போது இந்தியா தடுப்பூசிகளை வழங்கி காப்பாற்றியது. இதனை தொடர்ந்து, பொருளாதார சீர்கேடு ஏற்பட்ட போது இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது உணவு, பால், மருந்து வகைகளை அனுப்பி, கை கொடுத்து உதவியது. ஆதலால், எப்போதுமே இலங்கையர்களுக்கு இந்தியாவும் ஒரு தாய் நாடே என்று அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி தம்மைச் சுற்றிலும் உள்ள இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போதும் இந்தியா மட்டுமே தொடர்ந்து 6 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துபோகும் தன்மையும் முக்கிய காரணமாகும். பிரதமர் மோடி இஸ்ரேல், ரஸ்யா, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் போன்றவற்றின் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரமும் நிலையாக உள்ளதாக பேராசியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-india-road-route-1724913191
  24. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு கடமைகளை ஆரம்பித்தது ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளரான நாச்சோ சான்செஸ் அமோவுடன் 10 முக்கிய பார்வையாளர்கள் இந்த பணியை ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 26 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். https://thinakkural.lk/article/308592
  25. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மாகாண சபை தேர்தல்கள் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். மனுஷ நாணயக்கார போன்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடு மிகவும் அருவருக்கத் தக்கதாக இருக்கின்றது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தாலும் அவர் ஒரு நீதிமன்றத்தை அவமதித்து மனித உரிமை ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டு ஒருவராகவே தான் பார்க்கப்படுகின்றது. மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் எங்களுக்கு இந்த பணத்தினை செலவு செய்ய வேண்டாம் இதை நாட்டின் நலனுக்காக பாவியுங்கள். பொய் பிரசாரங்கள் தற்போது ரணிலின் கூட்டங்களில் நிற்பவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களும், அலிசப்ரி ரகீம் போன்ற தங்கம் கடத்தியவர்களே இன்று ரணிலுடன் நிற்கின்றார்கள். வடகிழக்கு மக்களை ஏமாற்றுவதற்காக பல பொய்களை கூறுகின்றார்கள் 13 தருகிறோம் என்று இருக்கிறார்கள் 13 பிரச்சினைகள் ஆனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. தேர்தலை மூலதனமாக வைத்துக் கொண்டு பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். பாரம்பரிய தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்து, தமது நலனுக்காகவே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனரே ஒழிய தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/we-recognized-right-self-determination-for-tamils-1724582475#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.