ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை
Everything posted by ஏராளன்
-
போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் பாதாள உலக குழுக்களையும் ஒழிப்பது பாவமல்ல! -பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
25 APR, 2024 | 02:52 PM போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக குழுக்களை நாட்டிலிருந்து ஒழிப்பது பாவமான செயல் அல்ல என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பாதாள உலக குழு செயற்பாடுகளை ஒடுக்குவதற்காகக் கடந்த 2 வாரங்களாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்த 100 பேர் கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவொன்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதனை முன்னிட்டு இன்று (25) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலக குழு செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவுக்காகத் துப்பாக்கிகளுடனான 50 பொலிஸ் விசேட மோட்டார் சைக்கிள்கள் கையளிக்கப்பட்டுள்ளன. நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் அதிகரித்தமையே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முக்கிய காரணம். எனவே அனைவரும் அச்சமின்றி இலக்கை நோக்கிச் செல்லுங்கள். இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது துப்பாக்கிகளைப் பயன்படுத்த நேர்ந்தால் சரியான சந்தர்ப்பத்தில் அதனைப் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் துணையாக நாங்கள் எப்போதும் இருப்போம். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181940
-
மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை: நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிமன்றில் சாட்சியம்
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை - நீதிபதி மா. இளஞ்செழியன் மன்றில் சாட்சியம் Published By: DIGITAL DESK 3 25 APR, 2024 | 02:27 PM நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார். நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன் போது , நேற்று புதன்கிழமை (24) நீதிபதி இளஞ்செழியன் மன்றில் தோன்றி, தனது சாட்சியங்களை பதிவு செய்தார். சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில் யாழ். - கண்டி வீதி வழியாக சென்று , கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன். காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன். எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார். நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் , மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார். அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது , சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார். அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்., நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 - 15 அடி இடைவெளி இருந்தது. துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் "மகே அம்மே " என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார். அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர், என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது. பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில் , சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார். துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால், எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும் என கூறினார். குறுக்கு விசாரணையின் போது, எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , "முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது, உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால், ஏற்பட்ட முரணாலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றது, உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை" என குறிப்பிட்டதை , நீதிபதி மறுதலித்து " நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்தார். நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து, நீதிபதி பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார். அதேவேளை, சம்பவ தினத்தன்று, நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது, துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில், நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால் சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை. என கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்தார். குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. வழக்கின் பின்னணி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் இருந்து, நல்லூர் , சங்கிலியன் வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, நல்லூர் ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் இருவர் போக்குவரத்திற்கு இடையூறாக செயற்பட்டனர். அதனை அடுத்து நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜெண்ட் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, மோதலில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியை பறித்து பொலிஸ் உத்தியோகஸ்தரை சுட்டதுடன் நீதிபதியின் காரினையும் நோக்கி சுட்டிருந்தார். துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன், மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்திருந்தார். நீதிபதி தெய்வாதீனமாக காயங்கள் இன்றி உயிர் தப்பி இருந்தார். https://www.virakesari.lk/article/181939
-
முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்களை குடியமர்த்துகிறார்கள் - து.ரவிகரன் சீற்றம்
Published By: DIGITAL DESK 3 25 APR, 2024 | 03:44 PM முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வன இலாகாவினுடைய பொறுப்பில் இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்தி இருபத்தி இரண்டாயிரத்தி ஆறு ஏக்கர் காணிகள்தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுடைய பாவனையில் இருந்த காணிகள் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஒவ்வொரு திணைக்களங்களாக ஆட்சியாளர்கள் மக்களுடைய பெரும்பாலான விவசாய காணிகளை அபகரித்து வைத்துள்ளார்கள். அபகரிக்கப்பட்ட காணிகளில் சில இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதாவது வெலிஓயா என்று சொல்லக்கூடிய 28,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிங்கள குடியேற்றத்தை ஏற்றி தனி ஒரு சிங்கள பிரதேச செயலக பிரிவாக உருவாக்கி இன்று எங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மக்கள் தொகையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன இது தவிர 2009 ஆம் ஆண்டுக்கு பின் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு ஒரு இலட்சத்தி 67 ஆயிரத்தி 484 ஏக்கர் 30.37 வீதமான முல்லைத்தீவின் காணிகளை அபகரித்து வன இலாகா மட்டும் வைத்திருக்கின்றது. இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 42631 ஏக்கர் காணி அதாவது 7.15 வீதமான காணிகள் அபகரித்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 இலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் காணிகள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு வன இலாகாவினால் மட்டும் அபகரிக்கப்பட்டு எல்லைக்கல்லினை நாட்டி தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதற்கு முழுமுதல் காரணம் வனஜீவராசிகள் , வன இலாகா, தொல்லியல் திணைக்களங்கள் அதனைவிட மகாவலி எல் வலயம் இவ்வாறாக மக்களுடைய காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் காதர் மஸ்தானின் அறிக்கை ஒன்றில் ஏற்கனவே உள்ள இரண்டு ஜனாதிபதி அவர்களும் பிழைதான் விட்டிருக்கின்றார்கள் என்ற கருத்தையும் ஏற்றுகொண்டு அதாவது, இந்த காணிகள் பறிக்கப்பட்டதில் பிழை நடந்திருக்கின்றது என்ற கருத்தை கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களூடாக காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களிலுமாக தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டு சிங்கள மக்களை குடியேற்றுவதும், தங்களுடைய திணைக்களங்களூடாக அபகரித்து வைத்து கொண்டிருப்பதும் தான், அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கப்பட வேண்டும். இதே ஒரு நிலைமையில் ஆறுகள் உள்ள நீர் பரப்புகளாக சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் ஆகியன கிட்டத்தட்ட 69401 ஒரு ஏக்கர் நிலம் நீர்நிலைகளோடு சேர்ந்த நிலங்களாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய புள்ளிவிவரத்தின் ஊடாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. 29401 ஏக்கர் நிலம் வனஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய வழக்கு தவணையிடப்பட்டு எதிர்வரும் வைகாசி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அறுநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் மக்களுடைய நிலங்களை இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுடைய காணிகள் தான் இவை. இந்த காணிகளை கூட வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய பறவைகள் சரணாலயம் என்ற பகுதிக்குள் இணைத்து அவர்களுடைய காணிகளையும் பறித்து வைத்திருக்கிறார்கள். மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்கு மக்கள் அல்ல. அரசாங்கத்துக்கு மக்கள் என்ற நிலையில் அரசு இயங்கக்கூடாது. மக்களுடைய காணிகளை மக்களுக்கு விடுவித்து அந்த காணிகளின் ஊடாக மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கையை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக கொண்டு நாட்டுக்கு உதவக்கூடிய நிலையில் தான் மக்களை அரசாங்கம் பாவிக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக முழு ஏக்கர் காணிகளையும் அபகரித்து கொண்டு சென்றால் மக்கள் எங்கே போவது? மஸ்தான் அவர்கள் கூறிய கருத்தானது உண்மையை ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கின்றது. அதேநேரம் இன்னும் காணிகள் விடுவிப்பதாகவும் இருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் சேர்க்கப்பட்டால் நல்லது என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181947
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் 25 APR, 2024 | 10:22 AM நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு 12 மணி முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சை தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் உயர்தர வகுப்புகளுக்கு பிரவேசிப்பதிலும் உயர்தரத்துக்கான பாடங்களை தெரிவு செய்வதிலும் மாணவர்களை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொல கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/181904
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல்: கருணையில்லாமல் பந்தாடப்பட்ட கடைசி ஓவர் - எப்படிப் போட்டாலும் அடித்த ரிஷப் பந்த் பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் சீசனில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறிவிட்டது. அந்த ரன்களுக்குள் எதிரணியை முடக்குவதற்கும் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 40-வது லீக் ஆட்டமும் இப்படித்தான் இருந்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி, என 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் நிகர ரன்ரேட் இன்னும் மைனசிலிருந்து மீளவில்லை, மைனஸ் 0.386 என்ற அளவில்தான் இருக்கிறது. அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 7 நாட்களில் சந்திக்கும் 2-ஆவது தோல்வி இதுவாகும். 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.974 என்று இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்? குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் தலா 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது கடந்த முறை இருந்ததைவிட மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 10 புள்ளிகளுடன் 3 அணிகளும், 8 புள்ளிகளுடன் 3 அணிகளும் இருப்பதால், அடுத்தடுத்து எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்பதை கணிக்க முடியாததாகவும், கடும்போட்டியாகவும் இருக்கும். இந்த நிலையில் குஜராத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அடுத்துவரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றால்தான் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அடுத்து வரும் 5 ஆட்டங்களும் கடும் சவாலானவை. குஜராத் அணி 4 ஆட்டங்களில் வென்றால் 16 புள்ளிகளைப் பெறலாம். இந்த இதில் ஆர்சிபி அணியுடனான இரு போட்டிகளும் அடக்கம். மற்ற 3 ஆட்டங்களில் சிஎஸ்கே, கொல்கத்தா, லக்னெள அணிகளுடன் குஜராத் மோத வேண்டியிருக்கிறது. ஒருவேளை இரு அணிகளும் அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்று 14 புள்ளிகள் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளும் இன்னும் மைனசிலிருந்து மீளாதநிலையில் 14 புள்ளிகள் பெறும்போது நிகர ரன்ரேட்டையில் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஆதலால், அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் 4 ஆட்டங்களிலும் வெல்வது கட்டாயம். பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் - டெல்லி போட்டியில் என்ன நடந்தது? நேற்றைய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் ரிஷப் பந்த், அக்ஸர் படேல் இருவரின் ஆகச்சிறந்த பேட்டிங் என்று கூறலாம். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் கடைசி ஓவரில் மதம் பிடித்தயானை போன்று ஷாட்களை அடித்து, மோகித் சர்மாவை மோசமான சாதனைக்குள் தள்ளிவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 31 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்களுடன்(8சிக்ஸர்,5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து விக்கெட் கீப்பிங்கிலும் இரு கேட்சுகளைப் பிடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ரிஷப் பந்த்துக்கு துணையாக ஆடிய அக்ஸர் படேல் ஆட்ட வரிசையில் உயர்வு பெற்று 3வது வீரராகக் களமிறங்கி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாகச் செய்தார். நேர்த்தியாக பேட் செய்த அக்ஸர் படேல் ஐபிஎல் தொடரில் 2வது அரைசதத்தை நிறைவு செய்து, 43பந்துகளில் 66ரன்கள்(4சிக்ஸர், 5பவுண்டரி) சேர்த்தார். ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். டெல்லி கேபிடல்ஸ் சேர்த்த ஸ்கோரில் பெரும்பகுதி இருவரும் சேர்த்த ஸ்கோர்தான். மற்ற வகையில் பிரித்வி ஷா(11), ஜேக் பிரேசர் மெக்ருக்(23), சாய் ஹோப்(5) என விரைவாக ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் சிறந்த கேமியோ ஆடி 7 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 67 ரன்கள் சேர்த்தது. இதில் ரிஷப் பந்த் மட்டும் கடைசி ஓவரில் 31 ரன்கள் சேர்த்தார். இந்த 3 ஓவர்களில் டெல்லி அணி சேர்த்த ரன்கள்தான் மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் மோகித் சர்மா இந்த சீசனில் சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் என்று பெயரெடுத்து வந்தார். அவரை டெத் ஓவரில் மட்டுமே பெரும்பாலும் கேப்டன் கில் பயன்படுத்தி வந்தார். அதேபோல நேற்றும் மோகித் சர்மாவை பந்துவீசப்பயன்படுத்த, ரிஷப் பந்த் அவரின் பந்துவீச்சை துவம்சம் செய்து விட்டார். இறுதியில் மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் என மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த் என்ன சொன்னார்? டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ டி20 போட்டியில் எதுவுமே உறுதியில்லாமல், எதிர்பார்க்காத முடிவுகள்தான் கிடைக்கிறது. 15-ஆவது ஓவருக்கு மேல் பேட்டிற்கு பந்துகள் நன்றாக வந்தன. 44 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்திருந்தோம், அதன்பின் அக்ஸரும் நானும் பேசி சிறப்பாக ஆட முடிவு செய்தோம், சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் குறிவைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இந்த வெற்றி எங்களை உற்சாகப்படுத்துகிறது, 100 சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறேன். களத்தில் இருக்கும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்தார். குஜராத் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது. பந்துவீச்சில் அனைத்து பந்துவீச்சாளர்களும் இரட்டை இலக்க ரன் ரேட்டில்தான் ரன்களை வாரி வழங்கினர். இதில் சந்தீப் வாரியர் மட்டும் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வகையில் ரஷித் கான், நூர் அகமது இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 71 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழகவீரர் சாய்கிஷோர் ஒரு ஓவர் வீசியநிலையில் 22 ரன்கள் விளாசப்பட்டதால் அத்தோடு நிறுத்தப்பட்டது. டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் மோகித் சர்மா என்று பெயரெடுத்த நிலையில் கடைசி ஒரு ஓவரில் அனைத்தும் மாறிவிட்டது. தொடக்கத்தில் சந்தீப் வாரியர் 4வது ஓவரில் மெக்ருக், பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். அதன்பின் 6-ஆவது ஓவரில் ஹோப்பை வீழ்த்தி குஜராத் அணிக்கு உதவினார். சந்தீப் வாரியர் அமைத்துக் கொடுத்த தளத்தை அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்திருப்பார்கள். ஆனால், ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப்பை அமைக்கவிட்டது, குஜராத் பந்துவீச்சாளர்கள் செய்த பெரிய தவறாகும். இருவரையும் தொடக்கத்திலேயே பிரிக்காமல், கடைசி நேரத்தில் முயன்றது எந்தபயனும் அளிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நம்பிக்கையளித்த தமிழக வீரர் பேட்டிங்கிலும் கேப்டன் கில் 6 ரன்னில் நார்க்கியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு விருதிமான் சஹா, சுதர்சன் கூட்டணி ஓரளவுக்கு ஸ்கோரை குறையவிடாமல் கொண்டு சென்று பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் சென்றது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பிரித்தார். சாஹா 39 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஓமர்சாய் நிலைக்கவில்லை. தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ராகுல் திவேட்டியா, ஷாருக்கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஆனால் மனம் தளராமல் ஆடிய மில்லர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் 3 சிக்ஸர், ஒருபவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மில்லர் இருந்தவரை குஜராத் அணியின் வெற்றி மீது பசுமை காணப்பட்டது. முகேஷ் குமார் வீசிய 18வது ஓவரில், மில்லர் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தவுடன் ஆட்டம் பரபரப்பாகியது, டெல்லி அணியின் கரங்கள் வலுக்கத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் கடைசி 2 ஓவர்கள் களத்தில் சாய் கிஷோர், ரஷித் கான் இருந்தனர். கடைசி இரு ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. அறிமுக வீரர் ரசிக் சலாம் வீசிய 19-வது ஓவரில் ரஷித் கான் ஒரு பவுண்டரியும், சாய் கிஷோர் இரு சிக்ஸர்களையும் விளாசினார், ஆனால் கடைசிப்பந்தில் சாய் கிஷோர் க்ளீன் போல்டாகி 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான், மோகித் சர்மா களத்தில் இருந்தனர். முகேஷ் குமார் கடைசி ஓவரை வீச, ஸ்ட்ரைக்கில் ரஷித்கான் இருந்தார். முகேஷ் ஓவரில் முதல் இரு பந்துகளிலும் ரஷித் கான் இரு பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த 2 பந்துகள் டாட் பந்துகளாக மாறவே 5வது பந்தில் ரஷித் கான் சிக்ஸர் விளாச ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தது. ஆனால் முகேஷ் குமார் பவுன்ஸராக வீசவே அதில் ரஷித் கான் ரன்அடிக்காமல் போக 4 ரன்னில் குஜராத் அணி தோற்றது. "போராடினோம் வெற்றி கிடைக்கவில்லை" குஜராத் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன். கடைசியில் கிடைத்த தோல்வி வேதனையாக இருக்கிறது, ஆனால், போராட்டத்தை வெளிப்படுத்தினோம். 224 ரன்கள் சேஸிங் எளிதானது அல்ல. முதல்பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும். இம்பாக்ட் ப்ளேயர் பங்கு பெரியஸ்கோருக்கு வழிவகுக்கிறது. 200 ரன்களுக்குள் சுருட்ட நினைத்தோம் ஆனால் முடியவில்லை. கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுவிட்டோம். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரி, சிக்ஸர் எளிதாக இருந்தது.” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அசத்திய அக்ஸர் படேல் டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் எனக் கூறப்பட்ட அக்ஸர் படேல் அதை நேற்று நிரூபித்துவிட்டார். டேவிட் வார்னர் காயத்திலிருந்து குணமாகாத நிலையில் 3வது வீரராக அக்ஸர் படேல் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்த அக்ஸர் படேல் 30 ரன்களைக் கடக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, பெரும்பாலும் ஒரு ரன், 2 ரன்களாக மெதுவாகவே ஆடினார். ஒரு கட்டத்துக்குப்பின்புதான் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 2வது ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துக்கு துணையாக பேட் செய்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் அக்ஸர் சிறப்பான பங்களிப்பு செய்தார். கேப்டன் கில் விக்கெட்டை வீழ்த்துவதில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் பெரிய திருப்புமுனையாகவும், பெரியவிக்கெட்டாகவும் அமைந்தது. அதேபோல குல்தீப் ஓவரில் சாஹா அடித்த ஷாட்டை ஒற்றைக் கையில் அக்ஸர் கேட்ச் பிடித்து பாட்ர்னர்ஷிப்பை உடைத்தார். பவர்ப்ளேயில் ரசிக் சலாம் முதல் ஓவர் முதல்பந்தில் சுதர்சன் அடித்த கேட்சை அக்ஸர் தவறவிட்டாலும், அடுத்தமுறை லாங்ஆன் திசையில் கேட்ச் பிடித்து சுதர்சனை வெளியேற்றினார். அக்ஸர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். 3 ஓவர்கள் வீசிய அக்ஸர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 11வது ஓவரில் ஓமர்சாயை விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் அக்ஸர் படேல். https://www.bbc.com/tamil/articles/c3g5494g9wjo
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்க அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன் எந்த மாதிரியான ஆயுதங்களை பெறப் போகிறது? ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் யுக்ரேன் முயற்சிக்கு இது எப்படி கைகொடுக்கும்? வான் பாதுகாப்பு அமைப்புகள், நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவை யுக்ரேனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று ஆயுதங்களையும் வாங்கவே அமெரிக்காவின் நிதியுதவி பயன்படுத்தப்படக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES வான் பாதுகாப்பு வான் வழியாக ரஷ்ய அச்சுறுத்தலைத் தடுப்பது நகரங்களின் பாதுகாப்பிற்கும் ஆற்றல் ஆலைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கவும் இன்றியமையாதது. கடந்த வாரம் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, இந்த ஆண்டு மட்டும் தனது நாடு கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார். யுக்ரேனில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விநியோகித்த ஆயுத அமைப்புகள் உள்ளன. தோள்பட்டையில் இருந்து ஏவப்படும் ஸ்டிங்கர் குறுகிய தூர ஏவுகணைகள் முதல் மேம்பட்ட மற்றும் மிகவும் விலையுயர்ந்த - பேட்ரியாட் அமைப்பு வரை உள்ளன. குறைந்தது இன்னும் ஏழு பேட்ரியாட் ஆயுத அமைப்புகள் அல்லது அதற்கு இணையான ராணுவ உபகரணங்கள் தேவை என்று ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் - மேம்படுத்தப்பட்ட S-300 மற்றும் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் - இரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெத்-136 ட்ரோன்கள் ஆகியவை பெரியளவில் ஏவப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது யுக்ரேனுக்கு கடினமானதாக இருக்கிறது. வான் பாதுகாப்பு அமைப்பை முறியடிப்பதற்கான ஒரு உன்னதமான தந்திரம், அவற்றை ஏமாற்றி திசை திருப்பும் வகையில் இலக்குகளை தாக்குவதாகும். அவற்றின் ரேடார் கண்காணிப்பு அமைப்புகளை ஏமாற்றுவது மற்றும் ஏவுகணை இருப்பை குறைப்பது ஆகியவை ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES நடுத்தர முதல் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் எப்படியிருப்பினும் களத்தில் நடக்கும் போர் மிக முக்கியமானது. கடந்த அக்டோபர் முதல், யுக்ரேன் தனது கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 583 சதுர கிலோமீட்டர் (225 சதுர மைல்) பகுதியை ரஷ்ய படைகளிடம் இழந்துள்ளது. பெரும்பாலும் பீரங்கிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒரு மொபைல் தளத்திலிருந்து வழிகாட்டப்பட்ட ஆயுதங்களை வழங்குவதன் மூலம், ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (HIMARS) யுக்ரேன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், இலக்கை அடைந்து, ரஷ்யப் படைகளின் லாஞ்சரைக் கண்டுபிடித்து அழிக்க முடியும். எனவே யுக்ரேனில், மேற்கத்திய தயாரிப்பான HIMARSஅமைப்பின் அதிக செயல்திறனை எதிர்பார்க்கலாம். மேலும் அதிக டாங்கிகள் மற்றும் நடுத்தர ஆயுத தளவாடங்களின் திறனையும் எதிர்பார்க்கலாம். அமெரிக்க இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளின் (ATACMS) நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமைப்புகளும் யுக்ரேன் வந்தடைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. பழைய ATACMS இராணுவ ஆயுத அமைப்புகள் கடந்த ஆண்டின் பிற்பகுதி முதலே யுக்ரேனிடனம் உள்ளன. ஆனால் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள மேமப்டுத்தப்பட்ட ஆயுதங்கள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தும் திறனுடையது. இது ரஷ்யாவின் ஒரு பெரிய கடற்படை தளமாக இருக்கும் கிரைமியா வரையிலும் தாக்கக் கூடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பீரங்கி குண்டுகள் மேலும் இரண்டு ஆயுதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. M777 ஹோவிட்சர்களுக்கு 155மிமீ பீரங்கி குண்டுகளை தொடர்ந்து உட்செலுத்த வேண்டும். பிப்ரவரி 2022 முதல், அமெரிக்கா இதுபோன்ற 20,00,000 குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த சமீபத்திய இராணுவ உதவித் தொகுப்பில் இன்னும் பல எண்ணற்ற குண்டுகள் அனுப்பப்படும். "மிகவும் வலுவான தளவாட நெட்வொர்க்" என்று அழைப்பதற்கு ஏற்ப அமெரிக்கா ஆயுதங்களை விரைவாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. "நாங்கள் கடந்த காலத்தில் செய்தது போல், சில நாட்களுக்குள் இந்த இராணுவ உதவித் தொகுப்பை வழங்க முடியும்," என்று பென்டகன் செய்தி செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறினார். இராணுவ உபகரணங்கள் அனைத்தும் யுக்ரேனுக்கு மிக அருகில் நகர்த்தப்பட்டிருக்கலாம். அவை ஒப்படைக்கப்பட்ட உடன் அதிகாரப்பூர்வமாக யுக்ரேனின் சொத்தாக மாறும். ஆனால் ரஷ்யப் படைகள் கிழக்கில் தங்கள் தாக்குதலைத் தொடர்வதால், முன்னணி ராணுவ படைகளுக்கு தேவையான பீரங்கி உபகரணங்கள் வந்தடைய பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES F-16 போர் விமானங்கள் இந்த போர் விமானங்கள் தற்போதைய இராணுவ உதவி தொகுப்பில் இல்லை எனினும், முந்தைய இராணுவ தொகுப்பில் இருந்து அவை விரைவில் சேவைக்கு வரவுள்ளது. யுக்ரேனிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது ருமேனியாவில் F-16 ஜெட் விமானங்களை இயக்கும் பயிற்சியைத் தொடர்கின்றனர். இந்த விமானங்கள் பல்வேறு செயல்பாட்டை மேற்கொள்ளக் கூடியது. வலுவான வான்வழி தாக்குதல், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. யுக்ரேனிய வான் பாதுகாப்பை இவை வலுப்படுத்தும். டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா சில மாதங்களில் யுக்ரேனுக்கு டஜன்கணக்கான "வைப்பர்களை" வழங்க உள்ளன. இந்த போர் விமானங்கள்,போர்க் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, ஆனால் யுக்ரேனிய தலைநகரான கீவுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சமாக இருக்கும். F-16 ரக போர் விமானங்களால் போர்க்களத்தில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, அவற்றை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தும் என்று ரஷ்யா கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cjr7eq1q8yno
-
மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை: நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிமன்றில் சாட்சியம்
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர். சாட்சிகள் நெறிப்படுத்தலில் முதலாவது நேரிற்கண்ட சாட்சியாளரான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சாட்சியமளித்தார். சாட்சியினை அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்தன் நெறிப்படுத்தினார். 2017 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி யாழ். நல்லூர் சந்தியில் வைத்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மற்றைய பாதுகாவலர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 2017 ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த காலப்பகுதியிலேயே தன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார். இதன் போதே தனது மெய்ப்பாதுகாவலர், எதிரிக் கூண்டில் நிற்கும் எதிரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, சாட்சியாளரான மா. இளஞ்செழியன் அடையாளம் காண்பித்தார். வழக்கின் இரண்டாவது சாட்சியாளரான, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் மெய்ப்பாதுகாவலரும் இன்று சாட்சியமளிக்க வருகை தந்தார். இரண்டாவது சாட்சியின் சாட்சியத்தை நாளை (25) வரை ஒத்திவைத்து மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன் உத்தரவிட்டார். இதற்கிணங்க, இந்த வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300129
-
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட அதிகாரியிடம் விளக்கம் - சுசில் பிரேமஜயந்த
24 APR, 2024 | 08:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தவறான அறிக்கை வெளியிட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரி இருக்கிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு கிடையாது என்றும் அவர்களுக்கான சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெளியிட்ட தகவல் நாட்டிலுள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இதுதொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்றார். அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் உள்ளவருக்கு கொள்கை ரீதியான விடயம் தொடர்பில் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதற்கான எத்தகைய அதிகாரமும் கிடையாது. நான் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பில் விளக்கம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நான் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆசிரியர் கல்வி சேவை, அதிபர்கள் சேவை, கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை உள்ளிட்ட சேவைகளிலும் சம்பள முரண்பாடு காணப்படுகிறது. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டு பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த அமைச்சின் இணக்கப்பாட்டுடன் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் இதற்கு முன்னரும் இந்த அதிபர்களுக்கான சம்பள முரண்பாடு தொடர்பில் பல தடவைகள் சபையில் விளக்கமளித்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பில் 2021ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். அதன் போது அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் தலைமையில் அது தொடர்பில் ஆராய்ந்து அப்போதைக்கு தற்காலிக தீர்வு ஒன்று வழங்கப்பட்டது. எனினும் அதன் மூலம் சம்பள முரண்பாடு தீர்க்கப்படவில்லை. அந்த வகையில் இந்த சம்பள முரண்பாட்டை தீர்க்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/181884
-
தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் : சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பியோட்டம் - சார்ள்ஸ் நிர்மலநாதன் கடும் காட்டம்
24 APR, 2024 | 08:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். குச்சவெளிப்பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற 52 வயதான நபர் முழுமையான சாட்சியங்களோடு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஏப்ரல் 3ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்துள்ளார். பாலியல் வன்கொடுமை, படுகொலை ஆகிய குற்றங்களை செய்த இந்த நபரை எப்படி பொலிஸார் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்? இதில்தான் மர்மம் உள்ளது. இந்நபர் அந்த கிராமத்திலுள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்துள்ளார். தொழிலை பெற்றுக்கொள்ள வரும்போது தனது பெயர் விஜேந்திரன் என்று அந்த தென்னம் தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்து அந்த கிராமத்தில் வாழ்ந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் தெரியும் அவரின் பெயர் அப்துல் ரகுமான் என்பது. இவ்வாறு பெயர் மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ய ஒரு நபரை பொலிஸார் எவ்வளவு அலட்சியமாக தப்ப விட்டுள்ளனர். நாளை அவரின் வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறான ஒருவர் வவுனியா சிறையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தப்பிக்க விடப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சரின் பதில் என்ன? இதேவேளை நேற்று முன்தினம் கூட இரு பெரியவர்களும் ஒரு வயது குறைந்துவரும் இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கு இலங்கையிலிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் தலைமன்னார் பிரதேச மக்கள் எனக்கு தொலைபேசியில் கூறுகையில், சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற கொலையாளிதான் ராமேஸ்வரம் சென்று வேறு பெயரில் தஞ்சமடைந்துள்ளார் என்று கூறினார்கள். எனவே இந்த அப்துல் ரகுமான் என்ற குற்றவாளி இந்தியாவின் மண்டபம் முகாமில் தஞ்சமடைந்துள்ளாரா என்ற கேள்வியை தலைமன்னார் மக்கள் இந்த அரசிடம் கேட்க விரும்புகின்றார்கள். எனவே இவரை கைது செய்ய நீதி அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை கேட்பதுடன் அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/181883
-
வட மாகாணத்தில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
வடக்கில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு - மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்திய மக்கள் 24 APR, 2024 | 08:20 PM வட மாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம் வடக்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அவர்கள் சுத்தமான குடிநீருக்காக இதுவரை காலமும் அனுபவித்து வந்த துயரங்களுக்கும் முடிவு கட்டியுள்ளது. வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு ஆகிய செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. "அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" என்ற அரசாங்கத்தின் எண்ணக் கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி அந்த அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவு சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக, 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவை என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது. நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிப்பு செய்யும் போது நீரிலிருந்து அதிக உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பின் மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும். இத்திட்டத்தை பெற்றுக்கொண்ட சில கிராமங்களின் மக்கள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். உருத்திரபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரான ராமச்சந்திரன் இத்திட்டம் தொடர்பில் கூறுகையில், நாங்கள் இந்தக் குடிநீர் திட்டத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.இத்திட்டம் 2021ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது கிட்டத்தட்ட 4 மில்லியன் ரூபா நிதிச் செலவில் இந்த நிர்மாணப் பணி ஆரம்பிக்கபட்டு இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தளவில் உருத்திரபுரம் கிழக்கில் குடிநீர் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினை. கிணறுகளிலே நீர் இருந்தாலும் கோடை காலங்களில் குடிக்கக் கூடிய சூழலில் இந்த நீர் இருப்பதில்லை. நீண்ட தூரங்களுக்கு மக்கள் சென்று அந்த நீரைப் பெற்று வரக்கூடிய சூழலே இப்போதும் இருந்து வருகிறது. இன்று அந்த நிலைமை மாற்றமடைந்து மக்கள் அந்த இடத்திலேயே நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்படக்கூடிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி க்கு நாங்கள் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நாங்கள் இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும். ஏனெனில் அவருடைய கடும் முயற்சியினால் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவு க்கும் இந்த இடத்தில் விசேட நன்றிகளையும் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். செல்வா நகர் முதியோர் சங்கத்தின் செயளாலரான க. பூமிநாதன் கூறுகையில், தற்போது இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செல்வா நகர் பின்தங்கிய கிராமத்திற்கு ஏற்படுத்தித் தந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாவட்ட செயலகம், பிரதேச செய்லகம், ஏனைய கிராமிய மட்ட அமைப்புகளுக்கும் இத்திட்டத்திற்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது சங்கத்தின் சார்பிலும் செல்வா நகர் மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டம் கிடைக்கப் பெற்றது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இங்கு சுத்தமான நீர் இல்லாததால் இப்பகுதி மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் இத்திட்டத்தின் மூலம் நீங்கிவிடும் என்றார். பெண்கள் RDSஇல் பொருளாளராக இருக்கும் சுந்தரராசா அகல்யா தனது கருத்தை முன்வைக்கையில், எங்களது கிராமத்தில் நிறைய பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் குடிநீர் பிரச்சினைதான். இந்த நனோ தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்ட பில்டரின் மூலம் இந்த நோய்க்கான தீர்வையும் காணலாம். எங்கள் மக்கள் இந்த நோயிலிருந்து விடுபட இது ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வழிகாட்டலின் கீழும் மற்றும் திலீபன் எம்.பி., ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் மூலம் எங்களுக்கு 40 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட இந்த நிதித் தொகையினை எங்களது இந்தக் கிராமத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இது பெரியளவில் எங்கள் கிராம மக்களுக்கு ஒரு உதவியாக அமையும். எனவே இதற்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் மக்கள் சார்பாகவும் பிரதேச செயலகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். செல்வா நகர் செல்வ செழிப்பு நீர் வழங்கல் சங்கத்தின் தலைவர் மு. சிவபாலன் கூறுகையில், அனைவருக்கும் குடிநீர் வழங்கல் தேசிய திட்டத்தின் கீழ் எங்களுடைய செல்வா நகர் செல்வச் செழிப்பு நீர் வழங்கள் சங்கத்துக்கு பாரிய இத்திட்டத்தை வழங்கிய இன்றைய அரசாங்கத்துக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது போல இந்தத் திட்டத்துக்கு எங்களுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழஙகிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள். அதற்கு ஒப்பாக இன்று முதல் எங்கள் கிராம மக்கள் அசுத்த குடிநீரினால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட்டு வாழ்வார்கள் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/181879
-
வவுனியாப் பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு
Published By: VISHNU 24 APR, 2024 | 09:55 PM வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….. பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்நுளைந்துள்ளார் இதனை அவதானித்த மாணவி ஒருவர் கூச்சலிட்டு சத்தம் போட்டதும் குறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் குறித்த சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளனர் இதேவளை குறித்த மாணவி இது தொடர்பாக தனது பெற்றோருக்கு தகவலை வழங்கியிருந்த நிலையில் மறுநாள் அம்மாணவியின் தாயார் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேவேளை உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/181891
-
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட நடவடிக்கை - 17 வயதிற்குட்பட்ட ஏழு பேர்கைது 24 APR, 2024 | 02:49 PM சிட்னிதேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிட்னியின் பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் பாரிய நடவடிக்கை இடம்பெறுவதாக அவுஸ்திரேலியாவின் பொலிஸ் ஆணையாளர் ரீஸ் கேர்சோவ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிர சிந்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டடிருந்தஏழு பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன 15- 16- 17 வயதுடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் பொதுவான நோக்கத்திற்காக இணைந்திருந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் சமூகத்திற்கு உடனடி ஆபத்து இல்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181844
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
Published By: RAJEEBAN 24 APR, 2024 | 11:01 AM அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர். அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர். முதலில் அவர்களை வெளியேற சொன்னோம் எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது. காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/181819
-
மைத்திரிபால இராஜினாமா?
சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால செயற்படுவதற்கு இடைக்காலத் தடை! Published By: DIGITAL DESK 7 24 APR, 2024 | 02:01 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட பிரதான நீதிவான் நீதிமன்றமும் இன்று புதன்கிழமை (24) இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திர தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மாவட்ட பிரதான நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/181839
-
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
24 APR, 2024 | 02:27 PM ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்தார். உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/181837
-
போதைப்பொருட்களுடன் கைதான அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
Published By: DIGITAL DESK 3 24 APR, 2024 | 11:37 AM நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (23) கைதான குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை மேற்கண்டவாறு 05 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, கணக்களார் வசம் இருந்து 840 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 4 கிராமும் 540 மில்லி கிராம்கேரளா கஞ்சா மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன், தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக பணியில் இருப்பவர் எனவும்பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 39 வயது மதிக்கதக்க சந்தேக நபரான கணக்காளர் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/181825
-
வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்
24 APR, 2024 | 01:54 PM வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார். தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 4 வருடங்களுக்கு நான் இன மத மொழிக்கு அப்பால் சென்று அனைவரது சுகாதார மேம்பாட்டுக்கும் என்னால் இயன்ற சேவையை வழங்குவேன் என்றார். https://www.virakesari.lk/article/181840
-
சோலியஸ்: உங்கள் உடலின் இந்தப் பகுதி இரண்டாவது இதயம் என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்கள் நிற்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு இந்த சோலியஸ் தசை மிகவும் அவசியம். கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபேல் அபுசைப் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக சோலியஸ் தசை (சோலியஸ் தசை - Soleus) குறித்து மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் அதன் செயல்பாடுகள் சக்தி வாய்ந்தவை. நிற்கவும் நடக்கவும் உதவுவதை தாண்டி உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சோலியஸ் துணைப்புரிகிறது. காலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சோலியஸ் தசை, கெண்டைக்கால் தசையின் (Calf) ஒரு பகுதியாகும். பன்முக இயக்கங்களை மேற்கொள்ளும் உறுப்புகளில் ஒன்றாகும், நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கியமான நரம்புகளைக் கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக தான் வல்லுநர்கள் சோலியஸ் தசையை "இரண்டாம் இதயம்" என்று வரையறுத்துள்ளனர். பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மருத்துவப் பள்ளியில் நிபுணரான டாக்டர் கார்லஸ் பெட்ரெட், பிபிசி முண்டோவுக்கு அளித்த பேட்டியில், "சோலியஸ் தசையில் காணப்படும் ஆக்கக் கூறுகள் தான் அதன் சிறப்பம்சம்” என்கிறார். "சோலியஸ் தசை பிற தசைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியது. அதிகளவிலான தசை நிறை (muscle mass) கொண்டுள்ளது. இணைப்பு திசுக்களாக இல்லாமல் முற்றிலும் தசை நார்களால் ஆனது" என்றும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும். நிலைத்தன்மை ”நின்று கொண்டு செய்யும் செயல்பாடுகள், நடப்பது, ஓடுவது என எந்த ஒரு செயலுக்கும் சோலியஸ் தசை மிக அவசியம் ” என்று டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் மார்க் ஹாமில்டன் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். நம் உடலில் உள்ள தசைகள் ஒவ்வொன்றும் அதன் செயல்பாட்டை பொறுத்து, பல்வேறு தசை நார்களால் உருவாக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, உங்கள் முதுகு பகுதியில் அமைந்திருக்கும் தசைகள் உடலின் கட்டமைப்பைப் பராமரிக்கும் தசைகள் ஆகும். அது, உங்கள் முதுகுத் தண்டுவடத்தை நேராக வைத்திருக்க உதவும். எனவே, அந்த தசை மெதுவாக சுருங்கும் தசை நார்களை கொண்டிருக்கும் (slow-twitch fibers). மேலும் இந்த தசைகள் திடீர் அசைவுகளை செய்ய உருவாக்கப்படவில்லை என்றாலும், நீண்ட நேர அசைவுகளுக்கு உதவும். நீண்ட தூரம் ஓடுவது, நடப்பது, நிற்பது, உட்காருவது உள்ளிட்ட நீண்ட நேர அசைவுகளுக்கு அனுமதிக்கிறது. மறுபுறம், உங்கள் கைகள், கால்கள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் இருக்கும் தசைகள் வேகமாக சுருங்கும் தசை நார்களை (fast-acting fibers) கொண்டிருக்கின்றன, அதாவது, நம்மால் இயன்ற அதிக எண்ணிக்கையிலான இயக்கங்களை குறுகிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக தசைகள் வேகமாக சுருங்கி விரிந்து செயல்படும். கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும். இது, மெதுவாக சுருங்கும் தசை நார்களின் (slow-twitch fibers) பெரிய கலவையைக் கொண்டுள்ளது. எனவே சோலியஸ் தசை, நீண்ட நேர இயக்கங்களை சோர்வடையாமல் செய்ய அதிக அளவு ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. கெண்டைக்கால் தசையான சோலியஸில் அதிக அளவிலான தசை நார்கள் உள்ளன. மேலும், அந்த தசை நார்களில் ஆற்றல் உருவாக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மைட்டோகாண்ட்ரியா உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மைட்டோகாண்ட்ரியா இருப்பதால், நம் செயல்பாடுகள் மூலம் அதை தூண்டும் போது, அதிக அளவு ஆற்றலை உருவாக்கும்" என்று மருத்துவர் பெட்ரெட் விளக்குகிறார். இந்த தசை நார்களின் அடர்த்தி, உடல் எடையில் 1% மட்டுமே இருக்கும். ஆனால், உடலில் உள்ள பல உறுப்புகளை விட அதிக ஆற்றல் திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோலியஸ் தசை இதயத்தின் செயல்பாட்டிற்கு முக்கிய உதவி செய்கிறது. இதயத்திற்கு உதவும் சோலியஸ் சோலியஸ் ஒரு முக்கிய செயல்பாட்டை கொண்டுள்ளது. உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து எடுத்து செல்லும் பணியில் இதயத்திற்கு உதவுகிறது. சோலியஸ் தசை இதயத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர். ஹாமில்டன் பிபிசி முண்டேவிடம் விளக்கினார்: "சோலியஸ் தசையின் உடற்கூறியல் மற்ற தசைகளை காட்டிலும் வேறுபட்டது. உங்கள் கெண்டைக்காலில் சில பெரிய நரம்புகள் உள்ளன. நம் உடல் அமைப்பின்படி சோலியஸினுள் அந்த நரம்புகள் அமைந்திருப்பது ஒரு முக்கிய காரணத்திற்காக தான். அதாவது, புவியீர்ப்பு விசை உங்கள் கெண்டைக்கால்களிலும் கணுக்கால்களிலும், கால்களிலும் ரத்தத்தை தேங்கி நிற்க செய்கிறது . வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். உடல் இயக்கம் குறைந்த இளைஞர்களுக்கு கூட ஏற்படலாம்." ஆனால் நம் இயற்கை புத்திசாலித்தனமாக, மனித உடல் அமைப்பில், இந்த நரம்புகளை சோலியஸினுள் வைத்துள்ளது. இதனால் தசைகள் சுருங்கும்போது அவை அழுத்தம் அடைகின்றன. தசைகள் அழுத்தம் அடையும் போது, அந்த நரம்புகள் ரத்தத்தால் நிரப்பப்பட்டு காலியாகி, மீண்டும் அந்த திரவத்தை இதயத்திற்குள் அனுப்புகின்றன." அடிப்படையில், நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் இரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள். இந்த அமைப்பில் பாதத்தில் இருக்கும் பல நரம்புகள் மற்றும் காஸ்ட்ரோக்னீமியஸ் தசைகளும் இணைந்து செயல்படும். இந்த செயல்பாட்டை 'பாப்லைட்டல் பம்ப்’ (popliteal pump) என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் ரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள். சிறந்த பராமரிப்பு உடலில் உள்ள அனைத்து தசைகளையும் போலவே, சோலியஸ் தசைகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க இயக்கம் அவசியம். ஆனால் வேகமாக சுருங்கும் தசை நார்கள் போலல்லாமல் சோலியஸின் தசைகள் மெதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். எனவே வேகமான இயக்கங்களுக்கு உட்படுத்தாமல், நிலையான இயக்கங்களை மேற்கொள்வது நல்லது” இதற்காக நடைப்பயிற்சி செய்வது சிறந்தது என்கிறார் மருத்துவர் பெட்ரெட். "கெண்டைக்காலில் இருக்கும் தசைகள் நிறைய வேலை செய்வதன் மூலம் பலப்படும், ஆரோக்கியமாக இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆனால் அது சற்று மிருதுவான ஒரு தசை, அதற்குத் தேவையானது நீடித்த செயல்பாடு தான், நாம் அதனை அதிகமான இயக்கங்களுக்கு ஆட்படுத்த கூடாது." "சோலியஸுக்கு தேவைப்படுவது வெறுமனே மெதுவான இயக்கங்கள் மட்டும் தான். ஆனால் இயக்கங்கள் இன்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மாதிரியான வாழ்க்கை முறை சோலியஸ் தசைகளை மோசமாக பாதிக்கும். அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். சோலியஸை பொறுத்தவரை, கடுமையான இயக்கங்களும் வேண்டாம். இயக்கங்களே இல்லாத வாழ்க்கை முறையும் வேண்டாம்" இந்த விதி நம் அனைத்து தசைகளுக்கு பொருந்தும் பொற்கால விதியாகும், இது நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இந்த விதி முக்கியம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். "மக்கள் பொதுவாக வயதான காலத்தில் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருப்பதை சிறந்த வாழ்க்கைத் தரமாக சொல்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. ஆனால் என்னை பொறுத்தவரையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பது, நம் ஆரோக்கியமான தசைகள் தான்" என்று பெட்ரெட் மீண்டும் வலியுறுத்துகிறார். "அதாவது, தசைகள் தொடர்ந்து வேலை செய்வது உடலின் ஆரோக்கியமான பராமரிப்புக்கு அதிக அளவு நன்மைகளை வழங்குகிறது. நல்ல தசை செயல்பாடு மற்றும் நல்ல தசை நிறையை (Muscle tone) பராமரிப்பது முழு வளர்சிதை மாற்ற அமைப்பும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. இது நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதனால் மூளையும் சிறப்பாக செயல்படுகிறது, எனவே, டிமென்ஷியா அபாயமும் குறையும், அதாவது மன நலனுக்கு வழிவகுக்கும்" https://www.bbc.com/tamil/articles/clkexdv0r2ro
-
1,700 ரூபா சம்பளம் சாத்தியமில்லை : இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு
Published By: DIGITAL DESK 3 24 APR, 2024 | 09:58 AM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்று சம்பள நிர்ணய சபையின் தலைமையில் தொழில் அமைச்சில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு அறிவித்துள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தித்தின் நிலைப்பாட்டை அதன் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 1,700 ரூபா எனும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியது. தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால் தேயிலைத்துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்பனவற்றின் அடிப்படையில் இந்தச் சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றது. இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளில் எமது நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்திருந்தோம். ஆனாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக இந்த சம்பள அதிகரிப்பை கோருவது நியாயமற்றது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றுாம். எனவே தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 20 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளோம். அப்படியில்லாவிட்டால் கிலோவொன்றுக்கு 65 ரூபா வீதம் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். நாம் தொழிலாளர்களை ஒருபோதும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. தேயிலைத்துறையின் தற்கால நிலைமைகளை தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் ஆராய வேண்டும். தொழிற்சங்கங்கள் 75 வீத சம்பள அதிகரிப்பை கோருகின்றன. அரச துறையின் கீழ் இயங்குகின்ற தொழிற்றுறைகளில் கூட 75 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் அரசாங்கத்திடம் குத்தகையின் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் தேயிலை தொழிற்றுயைில் இவ்வளவு அதிக சம்பள உயர்வை வழங்குவதென்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181815
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
போதைப் பொருள் கொடுத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணை Published By: VISHNU 23 APR, 2024 | 11:14 PM யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் , பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார். சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் சகோதரன் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலாத்காரமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து. தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/181799
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சிங்கத்தின் ராஜதந்திரங்கள் அதன் கோட்டையிலேயே தகர்ந்தது ஏன்? புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய மைதானத்தில் முதலிடமாக இருப்பது சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ரசிகர்கள்தான். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே ஆட்டமாக இருந்தால், அதிலும் தோனி களமிறங்கினால், ரசிகர்களின் விசில் சத்தம், கரவொலி செவிப்பறையை கிழித்துவிடும் அளவுக்கு இருக்கும். ஆனால், இவை எல்லாமே நேற்றைய போட்டியின்போது கடைசி சில ஓவர்களில் காணாமல் போய்விட்டன. ஏனென்றால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பேட்டர் ஸ்டாய்னிஸ் ஒட்டுமொத்த சேப்பாக்கம் ரசிகர்களையும் தனது ஆட்டத்தால் மவுனமாக்கிவிட்டார். லக்னெளவில் வைத்து மட்டுமல்ல, சிங்கத்தை அதன் கோட்டையிலேயே சந்தித்து, வீழ்த்துவோம் என்று சொல்லாமல் சொல்லி சிஎஸ்கே அணியை வீழ்த்தி கடினமான வெற்றியை பெற்றுள்ளது லக்னெள அணி. சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு வந்து சிஎஸ்கே அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது கடந்த கால போட்டியின் புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்த முதல் தோல்வியாகும். அது மட்டுமல்லாமல் கடந்த 5 நாட்களுக்குள் லக்னெள அணியிடம் 2வது முறையாக சிஎஸ்கே அணி தோற்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 39-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னௌ அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணியின் அதிகபட்ச சேஸிங் என்ற சாதனைய பதிவு செய்தது. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே சரிவு இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட் 0.148ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தோல்வியால் 4வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே, உள்ளது. தோற்றாலும், அதன் நிகரரன்ரேட் பெரிதாகக் குறையாமல், 0.415 என்ற ரீதியில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டாய்னிஸின் அதிரடி லக்னெள அணியின் வெற்றிக்கு முதல் முக்கியக் காரணம் ஸ்டாய்னிஸின் அற்புதமான பேட்டிங் மட்டும்தான். 63 பந்துகளைச்சந்தித்த ஸ்டாய்னிஷ் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்து 124 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் அடித்ததற்குப் போட்டியாக ஸ்டாய்னிஸும் 56 பந்துகளில் சதம் கண்டார். எந்த ராஜதந்திரமும் பலிக்கவில்லை இந்த சீசனில் லக்னெள அணிக்காக 3வது வீரராகக் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்யத் தொடங்கி அதன்பின் களத்தில் நங்கூரமிட்டு, சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக மாறிவிட்டார். ஸ்டாய்னிஸை வெளியேற்ற பல உத்திகளை கேப்டன் கெய்க்வாட்டும், தோனியும் பயன்படுத்தியும் அவரை அசைக்கக் கூட முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. சிஎஸ்கே போன்ற வலிமையான பந்துவீச்சு வைத்திருக்கும் அணிகள், தோனியை அணியில் வைத்திருக்கும்போது, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரணியை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது, எளிதாக டிபெண்ட் செய்துவிடும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், சிஎஸ்கேயின் அனைத்து திட்டங்களையும் நிகோலஸ் பூரன் மற்றும் தீபக் ஹூடாவின் உதவியால் ஸ்டாய்னிஸ் உடைத்து எறிந்து சேப்பாக்கத்தை நிசப்தமாக்கிவிட்டார். பூரனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்களும், ஹூடாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 65 ரன்களும் சேர்த்து ஸ்டாய்னிஷ் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டம் எங்கு திரும்பியது? ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் லக்னெள அணி கரங்களுக்குத் திரும்பியது. அதுவரை சிஎஸ்கே அணி களத்தில் ஆதிக்கம் செய்து, தங்களுக்குத்தான் வெற்றி என மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஓவரில் இருந்துதான் ஆட்டம் மெல்ல சிஎஸ்கே கரங்களில் இருந்து நழுவியது. கடைசி 5ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் 16-வது ஓவரை வீசினார். களத்தில் ஸ்டாய்னிஷ், பூரன் இருந்தனர். ஸ்ட்ரைக்கில் இருந்த பூரன், ஷர்துல் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பதிரணா வீசிய 17-வது ஓவரில் பூரன் க்ளீன் போல்டாகி 34 ரன்களில் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. அந்த ஓவரில் லக்னெள அணிக்கு 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 3 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தபிசுர் வீசிய 18-வது ஓவரில் ஹூடா ஒரு சிக்ஸரும், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை லக்னெள அணி சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை பதிரணா வீசிய நிலையில் அந்த ஓவரில் ஹூடா 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3 பந்துகளில் 15 ரன்கள் கடைசி 6 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 17ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை முஸ்தபிசுர் வீச, ஸ்ட்ரைக்கில் ஸ்டாய்னிஷ் இருந்தார். முஸ்தபிசுர் வீசிய முதல் பந்தில் லாங்ஆன் திசையில் ஸ்டாய்னிஷ் சிக்ஸர் விளாசி ரசிகர்களை அமைதியாக்கினார். 2வது பந்தில் ஸ்டாய்னிஸ் பவுண்டரி அடிக்க சேப்பாக்கமே அதிர்ச்சியில் உறைந்தது. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 3-ஆவது பந்து ஸ்டாய்னிஷ் பேட்டில் பட்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரியானது. அந்த பந்தையும் முஸ்தபிசுர் நோபாலாக வீசவே 5 ரன்கள் லக்னெளவுக்கு கிடைத்தது. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு லக்னெள வெற்றிக்கு 2 ரன்கள் தேவை. ஸ்டாய்னிஷ் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து லக்னெள அணிக்கு நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பரிசளித்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் கடைசி ஓவரில் 17 ரன்களை அடித்த செய்த 2ஆவது அணியாக லக்னெள மாறியது. இதற்கு முன் 2020ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் கடைசி ஓவரில் 17 ரன்களை சேஸிங் செய்திருந்தது. லக்னோ அணி கடைசி 8 ஓவர்களில் மட்டும 113 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கின்போது 13 முதல் 20 ஓவர்களில் 113 ரன்களை இதற்குமுன் மும்பை அணி மட்டும்தான் 2021ல் சிஎஸ்கே அணிக்கு எதிராகச் சேர்த்திருந்தது. அதன்பின் தற்போது லக்னெள அணி சேர்த்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் ஸ்டாய்னிஸ் அடித்த 124 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் தனிநபர் பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும்.இதற்கு முன் 2011ல் மொஹாலில் பஞ்சாப் வீரர் பால் வால்தாட்டி 120 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 211 ரன்கள் சேஸிங்தான் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2012ல் ஆர்சிபிக்கு எதிராக 206 ரன்களை சிஎஸ்கே சேஸ் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை லக்னெள முறியடித்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டாய்னிஸ் வெற்றியை சாத்தியமாக்கியது எப்படி? லக்னெள அணி ஐபிஎல் தொடர் முழுவதும் 3-ஆவது இடத்தில் சரியான பேட்டர் கிடைக்காமல் தடுமாறி வந்தது. பலமுறை தீபக் ஹூடாவை களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் டீகாக் விரைவாக ஆட்டமிழக்கவே, ஆங்கர் ரோலுக்காக 3வது இடத்தில் ஸ்டாய்னிஷை களமிறக்கியது லக்னெள அணி. இந்தப் போட்டிக்கு முன்புவரை லக்னெள அணியின் 3வது வரிசை பேட்டரின் சராசரி ரன் 9.33, ஸ்ட்ரைக் ரேட் 101 ஆக மட்டுமே ஐபிஎல் தொடரில் இருந்தது. ஆனால், ஸ்டாய்னிஷ் 3வது வீரராகக் களமிறங்கினாலும், டீகாக் விரைவாக ஆட்டமிழந்ததால், தொடக்க ஆட்டக்காரர் போல் மாறி செயல்பட வேண்டியதிருந்தது. லக்னெள அணிக்காக 3வது வரிசை பேட்டராக ஸ்டாய்னிஷ் முதல்முறைாயக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். இந்த வரிசையில் ஸ்டாய்னிஸ் களமிறங்கி சற்றுகூட தடுமாறாமல், மிகவும் நேர்த்தியாக ஷாட்களை ஆடினார். நிதானமான ஆட்டத்தை கையில் எடுத்து, நேரம் செல்லச் செல்ல அதிரடிக்கு மாறினார். ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணிக்காக ஸ்டாய்னிஷ் பலமுறை 3-ஆவது வீரராகக் களமிறங்கி விளையாடிய அனுபவம், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தபோது, 3வது வீரராகக் களமிறங்கிய அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஷ் 16 பந்துகளில் 11 ரன்கள் என்றுதான் இருந்தார். ஆனால், அணியின் ஸ்கோர், ரன்ரேட்டைப் பார்த்து, அதிரடியாக ஆடிய ஸ்டாய்னிஷ் 26 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 30 பந்துகளில் 50 ரன்கள் என 56 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இந்தப் போட்டிக்கு முன்புவரை பதிரணா ஓவரை ஒருமுறை மட்டுமே ஸ்டாய்னிஸ் எதிர்கொண்டிருந்தார். இதனால் பதிரணாவின் பந்துவீச்சு ஆக்சன், பந்து ரிலீஸ் ஆகும் ஸ்டெயில் ஆகியவற்றை கணித்து ஆடுவதில் ஸ்டாய்னிஸுக்கு தொடக்கத்தில் சற்று குழப்பம் இருந்தது. ஆனால் பதீராணா ஓவரை பின்னர் சமாளித்து ஆடி 12 பந்துகளில் 15 ரன்களை ஸ்டாய்னிஷ் சேர்த்தார். தோல்விக்குப் பிறகு கெய்க்வாட் கூறியது என்ன? தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ இந்த தோல்வியை ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறது. லக்னெள அணியினர் கடைசியில் சிறப்பாக ஆடினர். 13-ஆவது ஓவர்வரை எங்கள் கரங்களில் ஆட்டம் இருந்தது, ஆனால் ஸ்டாய்னிஷ் அதை பறித்துக்கொண்டார். பனிப்பொழிவும் சேர்ந்து எங்களுக்கு பாதகமாக மாறியது. கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே சறுக்கியது எங்கே? சிஎஸ்கே அணியின் 210 ரன்கள் ஸ்கோர் உயர்வுக்கு இரு பேட்டர்கள் மட்டும்தான் காரணம். முதலாவதாக கேப்டன் கெய்க்வாட் அடித்த 60 பந்துகளில் (108), 2வதாக ஷிவம் துபேயின் 66 ரன்கள்(27பந்துகள்) ஆகியவைதான். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் ஜோடி சேர்ந்த பின்புதான் சிஎஸ்கே ஸ்கோர் உயரத் தொடங்கியது. மற்ற பேட்டர்களான ரஹானே(1), டேரல் மிட்ஷெல்(11), ஜடேஜா(16) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கெய்க்வாட் இதுவரை சதம் அடித்த 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஜடேஜாவை மீண்டும் 4-ஆவது வரிசையில் களமிறக்கி சிஎஸ்கே கையை சுட்டுக்கொண்டது. ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ஸ்கோர் செய்யாதது சிஎஸ்கேவுக்கு பெரிய ஷாக். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக நெருக்கடி தரும் வகையில் பந்துவீசவில்லை. தீபக் சஹர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் வீழ்த்தினார். அதன்பின் அவருக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். அதிகபட்சமாக முஸ்தபிசுர், ஷர்துல் இருவரும் ஓவருக்கு 14 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்துவீச்சிலும் ஜடேஜா, மொயின் அலி ஓரளவுக்குபந்துவீசிய நிலையிலும் அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. சேஸிங்கின்போது, பனிப்பொழிவு லேசாக இருந்தது ஆடுகளத்தை லக்னெள பேட்டர்களுக்கு இன்னும் இலகுவாக மாற்றியது. பந்துகள் பேட்டர்களின் பேட்டுக்கு எளிதாக வரத் தொடங்கியது சேஸிங்கை எளிதாக்கியது. அது மட்டுமல்லாமல் பனிப்பொழிவால் பந்துவீச்சாளர்கள் பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீசுவதும் கடினமாக இருந்தது. https://www.bbc.com/tamil/articles/cd137wdkpn1o
-
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பது தொடர்பான அறிவித்தல்
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299989
-
புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு
Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 04:27 PM வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி பத்தரமுல்ல ஸ்ரீ சுபூதிபுர வீதியில் உள்ள “சுஹுருபாய” கட்டிடத்தின் 16வது மாடியில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாவது, இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரையிலான வழமையான அலுவலக நேரங்களில், காலை 8.30 முதல் மாலை 4.15 வரை புதிய அலுவலக வளாகத்தில் அனைத்து தூதரக சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். சுஹுருபாயவில் உள்ள புதிய வளாகத்திற்கு சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பை (e-DAS) மாற்றுவதற்கு வசதியாக, கொழும்பில் உள்ள தூதரக விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் ஆவண சான்றளிப்பு சேவைகள் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். எவ்வாறாயினும், மேற்படி இடைக்காலத்தின் போது, யாழ்ப்பாணம், திருகோணமலை, குருணாகல், கண்டி மற்றும் மாத்தறையில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்கள் வழமையான அலுவலக நேரங்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும். சான்றளிப்பிற்கான விண்ணப்பங்ககை வழமை போல் பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். எவ்வாறாயினும், சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் 02 மே 2024 வியாழன் அன்று மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். எந்தவொரு அசௌகரியத்தையும் தவிர்க்கும் நோக்கில் 26 ஆம் திகதி மாலை 4.15 மணிக்குள் கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவிலோ அல்லது ஏதேனும் பிராந்திய தூதரக அலுவலகங்களிலோ சான்றளிப்பிற்கான எந்தவொரு அவசர விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/181782
-
சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாக்டர் அதிதி நாராயணி பாஸ்வான் பதவி, பிபிசி இந்திக்காக 22 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏப்ரல் மாதம் 'தலித் வரலாற்று மாதமாக' கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் தங்களது அடையாளத்தை கொண்டாடவும், தலித் வரலாற்றில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுகளின் சின்னமாகவும் இந்த மாதம் உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எங்கு வசித்தாலும், உலகம் முழுவதும் வாழும் தலித்துகளின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த மாதம் கருதப்படுகிறது. பாபா சாகேப் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார் என்பதால் மட்டுமல்ல, சாதியத்தை எதிர்த்துப் போராடிய பல மாவீரர்களும் இந்த மாதத்தில் தான் பிறந்தார்கள். இவர்களில் பாபு ஜெகஜீவன் ராம் மற்றும் மகாத்மா ஜோதிபா பூலே ஆகியோரும் அடங்குவர். ஏப்ரல் 4ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக துணிச்சலாகப் போராடிய போர் வீரன் ஜல்காரி பாய் உயிர் நீத்த தினம். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி அமைப்பின் ஆழமான பிரிவினைகளில் விழுந்து தொலைந்து போகிறார்கள். சமூகத்தின் முக்கிய நாட்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருந்து அவர்கள் என்றென்றும் மறக்கப்பட்டு, இறுதியில் எதிர்கால சந்ததியினரின் நினைவுகளிலிருந்து அழிக்கப்படுகின்றனர். ஏப்ரல் மாதம் நம் முன்னோர்களின் வளமான பாரம்பரியத்தை நினைவுகூர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தலித் சமூகத்தை எப்போதும் அடக்கி ஒடுக்கி, ஒதுக்கி வைக்கும் சாதி அமைப்புக்கு எதிராக நமது முன்னோர்கள் நடத்திய போராட்டங்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நினைவில் கொள்ளவும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை போற்றவும் இந்த மாதம் உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES தலித்துகளின் நீண்ட போராட்ட வரலாறு 1757இல் பிளாசி போர் நடந்தது, இதில் முகலாய பேரரசருக்கு எதிராக போரிட்ட துசாதுகள், அவரை தோற்கடித்தனர். அதேபோல 1857இல் நடந்த கிளர்ச்சி, ஜல்காரி பாய் முதல் மங்கு ராம் மற்றும் உதா தேவி வரை இவர்களைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்? வரலாற்றின் பக்கங்கள் இதுபோன்ற பல கதைகளால் நிரம்பியுள்ளன, அங்கு சுதந்திரத்திற்காக போராடுவது முதல் தேசத்தை கட்டியெழுப்புவது வரை நமது தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. ஆனால் தலித்துகளின் மிகப்பெரிய போராட்டம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் தான். தலித்துகள் தண்ணீருக்காகவும், தீண்டாமையை ஒழிப்பதற்காகவும், தங்கள் உழைப்புக்கு மதிப்பளிக்கவும், கோவில்களுக்குள் நுழையவும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக நம் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நான் கூறமாட்டேன். சமூக சீர்திருத்தங்கள் தொடர்பாக நமது கலாசாரத்தில் வேரூன்றி இருக்கும் விழுமியங்கள், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நமது மதத்தின் தன்மை, எல்லாவற்றிற்கும் மேலாக நமது அரசியலமைப்பில் போடப்பட்டுள்ள சமூக நீதிக்கான அடித்தளம், இவை அனைத்தும் நமது பங்களிப்பை உறுதி செய்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES சாதிவெறி பற்றிய விவாதம் இன்று சாதி என்பது நமது அன்றாட உரையாடல்களின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. சாதி பற்றிய விவாதங்கள் நம்மைச் சுற்றி நடப்பதால், சாதி சார்ந்த உணர்வும், அதை உணர்வுப்பூர்வமான ஒன்றாக அணுகும் விதமும் அதிகரித்துள்ளது. பாலிவுட் கதாபாத்திரங்களில் கூட மாற்றங்களைக் காண முடிகிறது. லகான் திரைப்படத்தில் 'கச்ரா' என்ற கதாபாத்திரம் (கச்ரா என்றால் குப்பை என்று அர்த்தம்) சித்தரிக்கப்பட்ட விதத்தோடு ஒப்பிடுகையில், இன்று பாலிவுட் படங்களின் தலித் கதாபாத்திரங்கள் பலசாலிகளாக, புத்திசாலிகளாக, திறமையான மனிதர்களாக காட்டப்படுகின்றனர். 'சக்ரவ்யுஹ்', 'மஞ்சி தி மவுண்டன் மேன்', 'சாய்ராட்', 'தஹாத்', 'ஜெய் பீம்', ‘காந்தாரா’, 'காதல்' போன்ற படங்கள் இந்த மாற்றத்திற்கு உதாரணம். இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் உயர் சாதி-பணக்கார வகுப்பைச் சேர்ந்தவர்கள், சாதிவெறி ஒரு பெரிய சமூகப் பிரச்னை இல்லை என்றே வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களின் பார்வையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, சொந்த சாதியில் துணையைத் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆங்கில நாளிதழ்களில் வரும் திருமண விளம்பரங்களின் பத்திகள் சாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சொந்த சாதியின் வரன்களை மட்டுமே தேடுகிறார்கள். இதே மக்கள் தான், சாதியின் அடிப்படையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட அடிப்படை முரண்பாடுகள் இருக்கும்போது, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சாதிவெறி இல்லை, இப்போதெல்லாம் யாரும் சாதியின் காரணமாக எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்வதில்லை என்று எப்படி சாதாரணமாகக் அவர்களால் கூறமுடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சாதியின் வரலாறு குறித்த கதைகள் இது தவிர, சாதி மற்றும் அதன் வரலாற்று அடித்தளம் குறித்தும் புதிய கதைகள் உருவாக்கப்படுகின்றன. சாதியை வரையறுக்க, சமய நூல்களில் தொடங்கி சாதி என்ற சொல்லின் தோற்ற வரலாறு ஆராயப்படுகிறது. வர்ணத்திற்கும் சாதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் வகையில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 'சாதி' என்ற வார்த்தையின் விசித்திரமான புரிதல் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப் பல்கலைக்கழக உலகம் முழுவதும் நிறைந்துள்ளது. ‘Caste’ என்ற ஆங்கில வார்த்தை போர்த்துகீசிய வார்த்தையான ‘Castus’ என்பதிலிருந்து பெறப்பட்டது உண்மை தான். ஆனால் சாதி என்பது ஒரு மேற்கத்திய கருத்தாக்கம் என்றும், ஆங்கிலேயர்களால் ஏகாதிபத்தியத்தின் கரங்களுக்குள் நம்மை அடக்க தான் சாதி கொண்டுவரப்பட்டது என்றும் சாமர்த்தியமாகச் சொல்ல இந்த உண்மை பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி நான் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை அல்லது வெளிநாட்டினர் அதை நடைமுறையில் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை மறுக்கவில்லை. தலித்துகளின் தற்போதைய நிலை என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தன் சக்தியை காட்ட இன்று தலித்துகளை பலாத்காரம் செய்வது யார்? இன்றைய சமூகத்தில் நாம் எங்கே நிற்கிறோம்? எங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை மீண்டும் பெற விரும்புகிறோம், இதன் மூலம் எதிர்காலத்தில் நாம் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும். நாட்டில் சாதி பாகுபாடு இல்லை என்ற நம்பிக்கை உள்ளவர்கள் ஏராளம். அவர்களது வீட்டு பெரியவர்கள் தலித்துகளை நன்றாக நடத்துவதைப் பார்த்ததையும் அவர்கள் மறக்கவில்லை. தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைக்காக எனது சமூகம் பல நூற்றாண்டுகளாக போராடியது எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது. ஆனால், சாதிவெறி என்பது நாட்டில் இல்லை என்று பல சமயங்களில் ஒருவர் கூறுவதைக் கேட்டு மனமும் சோர்வும் அடைகிறது. தான் சாதி பாகுபாட்டைக் கண்டதில்லை என்று கூறுபவர்கள் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது மேல் சாதியில். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘இட ஒதுக்கீடு என்பது துரோகம் அல்ல’ இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாதியின் பெயரால் அடக்குமுறையைச் சந்திக்காதவர், நம் தலைமுறைகள் பலரின் வலியை எப்படிப் புரிந்துகொள்வார் என்பதுதான் கேள்வி. சாதிவெறியின் வலியை தலித்துகள் அனுபவிக்கவில்லை என்று உங்களுக்கு சொல்ல வேண்டும். கஷ்டப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், தங்கள் கஷ்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதை அறிவிக்க வேண்டும். யாராவது சாதிவெறியை எதிர்கொள்ளவில்லை என்றால், அது அவருடைய அதிர்ஷ்டம். ஆனால் சாதிவெறி இல்லை என்பது உண்மையல்ல. சமூக உண்மைகளைப் பற்றிய இத்தகைய அறியாமை வேதனை அளிக்கிறது. சாதிவெறியைப் பற்றி நான் கேள்விப்படும்போது, குறிப்பாக ஒரு தலித் பெண்ணாக என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, மக்கள் முகத்தில் தோன்றும் அதிர்ச்சி அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. அவர்களின் அறியாமை நமது போராட்டத்தை ஓரங்கட்டுகிறது. மேலும் நமது அனுபவங்களைச் சொல்லும் போது, இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. இட ஒதுக்கீடு என்பது துரோகம் அல்ல, கடந்த கால தவறுகளுக்கு பிராயச்சித்தமும் அல்ல. பாபா சாகேப் போராடிய சமத்துவத்தை நோக்கிச் செல்வதற்கான நமது உரிமை இதுவாகும், இன்னும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்று அந்நிய சக்திகள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டன, நம் நாட்டில் யாரும் சாதி அமைப்பை நம்புவதாகக் கூறவில்லை அல்லது சாதிவெறியுடன் நடந்துகொள்வதும் இல்லை என்று கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES பிறகு இதையெல்லாம் செய்வது யார்? இப்படிப்பட்ட நிலையில், தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, உயிரோடு எரிப்பது யார் என்ற கேள்விகள் என் மனதில் எழுகின்றன. சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது தலித்துகள் ஏன் இறக்கிறார்கள்? குதிரை சவாரி செய்ததற்காக இன்றும் மக்கள் சுடப்படுவது ஏன்? மீசை வைத்ததற்காக இன்றும் தலித்துகள் கொல்லப்படுவது ஏன்? இன்றும் கூட, வலிமையை வெளிப்படுத்தும் பொது மேடையாக தலித்துகளின் உடல் கருதப்படுவது ஏன்? இந்த அடக்குமுறையை யார் செய்வது? உதாரணங்களின் மூலம் நான் பாதிக்கப்பட்டவனாக என்னைக் காட்ட முயற்சிக்கவில்லை, ஆனால் கேள்வி என்னவென்றால், இதை யார் செய்கிறார்கள்? ஒரு தலித் தலைவர் அதிகாரப் பசியில் இதைச் செய்வதாக அடிக்கடி செய்திகள் வரும். நிச்சயமாக நாங்கள் அதிகாரத்தின் மையத்தில் இருக்க விரும்புகிறோம். பல நூற்றாண்டுகளாக நாம் அரசாங்கங்களின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளோம். இப்போது நாம் அதிகாரத்தை சுவைக்க விரும்புகிறோம். அமேசானில் பணிபுரியும் மற்றும் சியாட்டிலில் வசிப்பவர்களும் எங்களை அறிந்திருக்கக் கூடிய வகையில் ஒரு நெட்வொர்க்கை, அத்தகைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் எங்கள் வேலைக்கான விண்ணப்பத்தை நிறுவனங்களுக்கு அனுப்ப முடியும். கேம்பிரிட்ஜில் வசிக்கும் மக்களுடன் எங்களது அறிமுகத்தை அதிகரிக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் எங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுவார்கள். இதையெல்லாம் இழந்துவிட்டோம். இப்போது இதையெல்லாம் மீண்டும் பெற நாங்கள் விரும்புகிறோம். எங்கள் உரிமைகளை வலுவாக வலியுறுத்தவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம். தலித் வரலாற்று மாதத்தில், நாம் அனைவரும் சாதிவெறியர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இனவாதியாக நடந்து கொள்கிறோம். சாதி என்பது நம் உணர்வில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒரு நிறுவன அமைப்பாக சாதி ஆழமாக வேரூன்றியிருப்பதை ஏற்க முடியாது என்றால், பாபா சாகேப் பெயரில் சமூக வலைதளங்களில் பதிவுகள் எழுதுவது அர்த்தமற்றது. முதலில் சாதி இருக்கிறது என்பதை ஏற்க வேண்டும். அதை பகுத்தறிவுடன் அணுக வேண்டும். அப்போதுதான் சாதியக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது பற்றிய விவாதத்தை நாம் ஆரம்பிக்க முடியும். https://www.bbc.com/tamil/articles/c90zynjj1j3o
-
வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்
Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 06:26 PM ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெறடற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும. அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181776