ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை
Everything posted by ஏராளன்
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள் 01 MAY, 2024 | 09:37 PM சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று (மே 01) உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாட்டில் பல இடங்களில் இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன. கொட்டகலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இன்று (01) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் இ.தொ.கா. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதிச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் போன்றோரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு - புறக்கோட்டை கொழும்பு புறக்கோட்டையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். மாத்தறை மாத்தறையில் இன்று தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியும் கூட்டமும் இடம்பெற்றது. இதில் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். வவுனியா 'உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்; நாட்டின் வளங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01) காலை வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது. அதன் பின்னர் அங்கு பிரதான மே தினக் கூட்டம் இடம்பெற்றது. இம்முறை மே தினப் பேரணியில் 'உணவுப் பொருட்கள் எரிபொருட்களின் விலைகளைக் குறை', 'IMF ஆலோசனைகள், நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே', 'வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை', 'அந்நியக் கம்பனிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து', 'தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளை உடன் நிறுத்து', 'தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. இப்பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர். வவுனியா, குருமன்காடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று எழுச்சியுடன் இடம்பெற்றது. முன்னதாக வவுனியா பண்டாரவன்னியன் சிலை முன்பாக ஆரம்பமான மே தின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம் வரை சென்றது. அங்கு மே தின கூட்டம் இடம்பெற்றது. முண்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்', 'இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்', 'வெடுக்குநாறி எங்கள் சொத்து' போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர். மானிப்பாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றைய தினம் (01) மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. “அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த தொழிலாளர் தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் "நாட்டைக் கட்டியெழுப்பும்; தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காகப் போராடுவோம்" என்னும் கருப்பொருளிலான மே தின கூட்டம் இன்று (01) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் கலந்துகொண்டு இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காக குரல் கொடுப்போம் எனும் கருப்பொருளில் உரையாற்றினர். இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.சந்திரசேகரம், மதத்தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், இணைப்பாளர், தோட்ட தொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். கட்டுநாயக்க சுரண்டலுக்கு, அடக்கு முறைக்கு மற்றும் பல்வகை அழுத்தங்களுக்கு எதிரான பெண் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மே தின ஊர்வலம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) முற்பகல் 10 மணியளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான நுழைவாயில் அருகில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்வலத்தை பெண்கள் மத்தியஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் மத்திய ஸ்தானத்தின் கிளை உறுப்பினர்கள், பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர். காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க பேஸ்லைன் வீதியூடாக ஊர்வலம் இடம்பெற்றது. பின்னர், ஊர்வலம் மீண்டும் அதே வீதி வழியாக திரும்பி வந்து, கட்டுநாயக்க மரக்கறி சந்தை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மே தின ஊர்வல மேடையருகில் வந்து நின்றது. அதன் பின்னர், அங்கு கூட்டம் இடம்பெற்றது. அதில் தொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். யாழ்ப்பாணம் - நல்லூர் (எம்.நியூட்டன்) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்ரது. சங்கத்தினர் பங்கேற்ற பேரணியானது நல்லூர் ஆலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பித்து நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவடைந்ததை தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சாய்ந்தமருது சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த 'உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்களை கௌரவிக்கும் மே தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.எம். சம்சுதீன், சிரேஷ்ட வர்த்தகர் ஆதம்பாவா மீராசாஹிப், சிரேஷ்ட கல்விமான் ஏ.எல்.எம்.பஷீர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. கல்முனை மாநகர சுகாதார பிரிவின் ஊழியர்கள், திண்மக்கழிவகற்றல் பிரிவின் ஊழியர்கள் சகலருக்கும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று முழுநாளும் தொழிலாளிகளை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. திருகோணமலை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின ஊர்வலமொன்று திருகோணமலையில் இன்று (01) இடம்பெற்றது. இந்த ஊர்வலத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். 'உழைப்பே உயர்வு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஊர்வலமானது உவர்மலை சந்தியில் இருந்து லிங்க நகர் வரை பேரணியாக சென்றது. அதன் பின்னர், மே தினம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பொது மக்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். கிளிநொச்சி இலங்கை தமிழரசு கட்சியின் மே தின பேரணி சற்று முன்னர் பேரெழுச்சியுடன் நிறைவடைந்து. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்றலில் இருந்து ஆரம்பமானது. இப்பேரணி தொழிலாளர்களின் அடக்குமுறைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காட்சிப்படுத்தியதாக அமைந்தது. இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சாந்தினி, மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் மாதர் முன்னணியினர், இளைஞர் அணி, தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். பருத்தித்துறை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றைய தினம் (01) மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில் ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின கூட்டம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமையேற்றார். முன்பதாக மே தின நிகழ்வுகளில் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. இப்பேரணி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது. அதேவேளை மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பமாகி பருத்தித்துறையை நோக்கி சென்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றன. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தொழிற்சங்ககங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு - பெரியகல்லாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். கம்பஹாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேதின பேரணி... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின பேரணி https://www.virakesari.lk/article/182408
-
13 ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் : எதிர்க்கட்சி தலைவர்
01 MAY, 2024 | 08:17 PM அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி, சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் மேலும் குறிப்பிட்டார். தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து முடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும், 76 வருட வரலாற்றைப் பற்றி பேசும் இந்நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும், 76 ஆண்டுகளில் இந்நாட்டின் எந்த அரசியல் தலைவர்களும் எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் எந்த பணியையும் செய்யவில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சேவையை, ஜனநாயக வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் நம்பர் 1 கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். “ஐக்கியமான நாடு சுபிட்சமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு, செத்தம் வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டை அழித்தவர்களுடன் தமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால், பிரதமர் பதவிகளயோ அல்லது ஜனாதிபதி பதவிகளையோ தனக்கு முன்னரே பெற்றுக் கொள்ள முடியும் எனவும், தானும் தனது குழுவும் எப்பொழுதும் மக்களுக்காவே கொள்கை ரீதியாக தீர்மானங்களை எடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். அத்துடன், நாட்டில் கொலைக் கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை என்றும், நாட்டில் நீதியும் நியாயமும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் கலாச்சாரம், தீவிரவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் என்றும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அங்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, மக்களுக்கான சலுகைகள் இன்றி மக்களுக்காக நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்துள்ளதாகவும் கொள்கையை அடிப்படையாக கொண்ட ஆட்சிக்காக எம்முடன் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன் நாட்டின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு விசேட நிதியம் ஸ்தாபிக்கப்படும் என்றும், 76 வருட காலம் குறித்து பேசும் போது நாம் பெருமடைகிறோம்.எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பணியை ஐக்கிய மக்கள் ஆற்றயுள்ளது. ( படங்கள் - எஸ். எம். சுரேந்திரன் ) https://www.virakesari.lk/article/182432
-
புத்தளத்தில் 3 மாத யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு
01 MAY, 2024 | 05:37 PM புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த யானைக் குட்டியை குழிதோண்டி புதைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/182431
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!
அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு Published By: VISHNU 01 MAY, 2024 | 09:23 PM சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். வழமையான அரசியலில் செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை எதிர்த்து, அதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாடு 2022ல் இருந்த நிலைமைக்குத் திரும்ப இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார். கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். "மீண்டும் வீழாத பெருமைமிகு நாடு என்றென்றும்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவனந்தனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்து கட்சியை சிலர் புதைக்கத் தயாராக இருந்தாலும், புதையுண்டுள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே மீட்டெடுத்தது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியையே இன்று நாடு பூராகவும் நடைபெறும் மே தின பேரணிகள் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்த ஜனாதிபதி, காலி முகத்திடலில் இருந்து துரத்தப்பட்ட எதிர்கட்சி தலைவருக்கு தமது கட்சியின் மேதினக் கூட்டத்தை செத்தம் வீதியில் நடத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் திட்டமொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் இந்த மே தின பேரணிக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தனர். கட்சியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் புதையுண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க வேண்டியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டதாக 1956ஆம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால் ஐ.தே.க மீண்டும் வலுப்பெற்றது. 1970ல் ஐக்கிய தேசியக் கட்சி முடிந்து விட்டது என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் 17 வருடங்கள் ஆட்சி செய்தோம். முடிந்து விட்டது என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சி தான் இன்று நாட்டைக் காப்பாற்ற முன் வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்குவதற்கு பிரதமர் டி.எஸ். சோனாநாயக்க சுபநேரம் பார்த்தார். அந்தக் கூட்டம் காலையில் நடைபெறாமல் மாலையில் நடைபெற்றது. மேலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கும் சுபமுகூர்த்தம் பார்க்கப்பட்டது. எனவே நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தான் சுபமுகூர்த்தம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் வீழ்ந்த நாட்டைஎம்மால் உயர்த்த முடிந்தது. இன்று கொழும்பைச் சுற்றி பல மே தினப் பேரணிகள் நடைபெறுகின்றன. கெம்பல் மைதானத்தில் பொதுஜன பெரமுனவும் , செத்தம் வீதியில் ஐக்கிய மக்கள் சக்தியும் தலவாக்கலையில் திகம்பரமும், கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியும் இன்று மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. இதுதான் ஜனநாயகம். நான் சர்வாதிகாரி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இன்று நடுவீதியில் கூட்டங்களை நடத்தலாம். என்னை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இந்த நிலைமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருக்கவில்லை. அன்று எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டு காலிமுகத்திடலில் இருந்து துரத்தப்பட்டார். ஆனால் இன்று அவரது மே தின பேரணியை செத்தம் வீதியில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். இந்த நாட்டின் அரசியல் முறைமை சீர்குலைந்ததால் நான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனேன். பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் பதவி விலகும்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார். ஆனால் நம் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல ஏனைய அனைத்துக் கட்சிகளும் பின்வாங்கி ஓடிவிட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளும் எவருக்கும் ஆதரவளிப்பதாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த பொதுஜன பெரமுன அறிவித்திருந்தது. முதலில் எதிர்க்கட்சித் தலைவரிடம் வினவப்பட்டது. ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஜேவிபி முன்வரவில்லை. இறுதியாக, தனியொரு எம்.பி.யை கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் சவால்களில் இருந்து ஓடியதில்லை. இதை ஏற்க வேண்டாம் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக முன்னேற்றம் கண்டோம். அன்று ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் பாராளுமன்றத்தை கைப்பற்ற முயன்றார்கள். இதையடுத்து பாராளுமன்றத்தில் இருந்த அனைவரும் ஓடிவிட்டனர். நான் என்ன செய்யலாம் என்று இராணுவத் தளபதி என்னிடம் கேட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அனைவரும் சென்றுவிட்டதாக சொன்னார். அப்படியானால் பாராளுமன்றத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்று அவரிடம் சொன்னேன். அன்று தப்பி ஓடியவர்கள் இன்று பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி எப்படி பேசுகிறார்கள்? அந்தக் குழு பதவியில் இருந்திருந்தால், இன்றைய நாட்டின் நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இன்று சகல இடங்களிலும் மே தினக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் பஸ்களில் வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஸ்களை இயக்குவதற்கு எரிபொருள் இருக்கவில்லை. சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். இப்போது மே தினத்தை கொண்டாடுகிறோம். இன்னும் மூன்று வாரங்களில் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். அப்பொழுது கொழும்பு மீண்டும் மக்களால் நிரம்பியிருக்கும். அரசாங்கத்தை நாம் துணிச்சலுடன் முன்னோக்கிக் கொண்டு வந்ததாலேயே கண்டி பெரஹெராவை கண்டுகளிக்கவும் நல்லூர் திருவிழா மற்றும் தெவிநுவர பெரஹரா போன்றவற்றை பார்வையிடச் செல்வதற்கும் உகந்த சூழல் உருவானது. இதற்காக உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மொட்டுக் கட்சியின் ஒரு பகுதியினர் ஒத்துழைப்பு வழங்கினர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினரும் உதவ முன்வந்தனர். டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினர் எங்களுடன் இணைந்துச் செயற்படுகின்றனர். கட்சி சின்னமொன்று இல்லை. மொட்டுக் கட்சியின் ஒரு குழு எம்மோடு இணைந்தது. மற்றுமொரு குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டது. மிகவும் சிரமப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளோம். எமது தீர்மானங்கள் வெற்றியளிக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. மேலும், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சிரமத்துடனாவது அந்த தீர்மானங்களை எடுத்தோம். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரச வங்கிகளில் கடன் வாங்கவும் முடியாதென அறிவிக்கப்பட்டது. அரசு வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ரூபாயை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கஷ்டமாக இருந்தாலும் அதற்கான முடிவுகளை எடுத்தோம். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியும் அப்போது என்ன சொன்னார்கள்? ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? இன்று ரூபாயின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 280 ஆக உள்ளது. ரூபாய் பெறுமதி வலுவடைந்திருப்பதால் மக்கள் கையிலிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். மேலும், கடந்த பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் தொழில்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தோம். மேற்படித் துறைகளை பாதுகாப்பதற்காக தனிப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதனால் மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன். வேலைத்திட்டத்திற்கு இடையூறு செய்யவும் வேண்டாம். இந்த நிலையைப் பாதுகாக்க மக்களைப் பற்றிச் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துச் செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டிற்குச் சென்று 03 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தேன். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினார். அதனால் 04 பில்லியன் டொலர்கள் கிடைத்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் அனைத்தும் மாறியது. அதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். அந்த 04 பில்லியன் டொலர்கள் எம்மிடம் இருந்தால் இன்று அதன் பெறுமதி 10 பில்லியன் டொலர்களாக இருக்கும். 2018-2019 க்குள் வரவு செலவுத் திட்டத்தில் உபரி ஏற்பட்டது. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை மாற்றினால் நெருக்கடி ஏற்படலாம். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நாட்டின் துரித அபிவிருத்திக்கு தேவையான நிபந்தனைகள் அடங்கிய சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன். அதற்கு ஆதரவு தருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதோடு, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகவும் மாற வேண்டும். இந்த நாட்டின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. நாட்டு மக்கள் இன்னமும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். 03 வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் நிறுவனங்களின் வருமானம் குறைவடைந்திருந்தது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக 04,05 பில்லியன் டொலர்களை தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். வறுமையை ஒழிக்க கிராமப் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். நலன்புரித் நிவாரணத் தொகை மூன்று மடங்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதற்கான திட்டத்தை முன்வைக்கிறேன்.எனவே, பாரம்பரிய அரசியலை கைவிட்டு எம்மோடு இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கிறேன். அதேபோல், நாட்டிலிருக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182439
-
அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருட முயன்ற இரண்டு இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி Published By: RAJEEBAN 01 MAY, 2024 | 12:25 PM 2020 ம் ஆண்டு அவுஸ்திரேலியா இந்தியாவின் ரோ புலனாய்வுபிரிவை சேர்ந்த இருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ரோவிற்கும் மேற்குலகின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்களிற்கும் இடையிலான மோதல்களில் இதுவும் ஒன்று என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இரகசிய தகவல்களை திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவின் புலனாய்வு அமைப்பை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என 2020இல் வெளியேற்றப்பட்டனர் என அவுஸ்திரேலிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இருவர் வெளியேற்றப்பட்டனர் என த அவுஸ்திரேலியனும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட்டும் தெரிவித்துள்ள அதேவேளை இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களின் நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏபிசி எனினும் எத்தனை பேர் வெளியேற்றப்பட்டனர் என்பதை தெரிவிக்கவில்லை. மிகவும் இரகசியமான பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் விமானநிலைய பாதுகாப்பு அவுஸ்திரேலியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான இரகசிய விபரங்களை திருட முயன்ற இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என ஏபிசி தெரிவித்துள்ளது. 2020 இல் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அமைப்பினால் வெளியேற்றப்பட்ட உளவாளிகளின் கூடுகளை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களை உன்னிப்பாக அவதானித்து வந்தனர். தற்போதைய முன்னாள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திவந்தனர் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது. 2021 இல் ஆற்றிய உரையொன்றில் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் இந்த சம்பவத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார் என ஏபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182405
-
பிலிப்பைன்ஸ் கப்பலை நடுக்கடலில் மூழ்கடித்த சீனா - தென் சீனக் கடலில் என்ன நடந்தது?
படக்குறிப்பு,பிலிப்பைன்ஸ் கப்பலை சுற்றி வளைத்த சீன கப்பல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் ஹெட் பதவி, தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பெரிய சீனக் கப்பல் ஒன்று எங்கள் கப்பலுக்கு மிக நெருக்கமாக செல்வதை எங்களால் காண முடிந்தது. எங்களது இரு கப்பல்களும் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தன. சீன கப்பலில் இருந்தவர்களின் முகத்தை பார்க்க முடியுமளவு அவர்களது கப்பல் எங்களுக்கு நெருக்கமாக இருந்தது. எங்களை போலவே அதிலிருந்த இருவர் எங்கள் கப்பலை நோக்கி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலான பிஆர்பி பககேவை (BRP Bagacay) செவ்வாய்க்கிழமையன்று சீனக் கப்பல் நெருங்கிய சமயத்தில் பிபிசி குழுவும் அந்த கப்பலில் இருந்தது. பிலிப்பைன்ஸ் கடற்படை கிட்டத்தட்ட மோதலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. திடீரென்று சீனக் கப்பல் எங்களது கப்பலின் முற்பகுதிக்கு அருகே திரும்பி, எங்களது கப்பலை மெதுவாக இயக்குமாறு கட்டாயப்படுத்தியது. இரண்டு கப்பல்களுக்கும் இடையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியே இருந்தது. எங்களது கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்கரைக்கு மேற்கே 220 கிமீ (137 மைல்) தொலைவில் சீனாவும் உரிமை கோரும் ஸ்கார்பரோ ஷோலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. படக்குறிப்பு,பிபிசி குழுவை வீடியோ எடுத்த சீன கடற்படையினர் சீனக்கப்பல்கள் எங்களை தடுப்பதில் உறுதியாக இருந்தன. அவர்களின் கப்பலில் நிறைய பேர் இருந்தனர். ஒரு கட்டத்தில் கடலோரக் காவல்படை மற்றும் கடலோர போராளிகள் குழுவைச் சேர்ந்த 10 பேர் அந்த பக்கம் இருந்தனர். எனினும், பிலிப்பைன்ஸ் கேப்டன் தனது ஜப்பானிய கப்பலின் வேகம் மற்றும் திறனை நம்பி சீனர்களை தாண்டி கப்பலை செலுத்தினார். கிட்டத்தட்ட கரைக்கு 600 மீட்டர் அளவுக்கு நெருங்கி இருந்த போது, நாம் அருகில் வந்துவிட்டோம் என்று கூறினார். ஆனால் சமீபத்தில் சீனர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய தடுப்பு ஒன்று தடையாக நின்றது. எங்களுக்கு பின்னால் வந்த சீன கப்பல்கள் உடனே இருபுறமும் பிலிப்பைன்ஸ் கப்பலை சூழ்ந்துக் கொண்டன. மறுகணமே அவர்களது தண்ணீர் ஆயுதத்தை கொண்டு எங்கள் கப்பலை தாக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பீய்ச்சி அடித்த நீர் கப்பலின் உலோக மேற்பரப்பின் மீது இடியை போல் இறங்கியது. இதனால் கப்பலின் ஒரு பகுதியே சிதைந்து விட்டது. பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்காக பொருட்களை ஏற்றிவந்த, எங்களது கப்பல் தொகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டாவது கப்பல் தான் இந்த தாக்குதலில் மிக மோசமாக சேதமடைந்தது. தென் சீனக் கடலில் இந்த டாம் & ஜெரி விளையாட்டு ஒன்றும் புதிதல்ல. ஆனால், பிலிப்பைன்ஸ் அதிபர் போங்பாங் மார்கோஸ், கடந்த காலத்தை விட மிகவும் உறுதியாக சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீன இருப்பை எதிர்கொள்வதற்கான அதிகாரத்தை கடலோர காவல்படைக்கு வழங்கியதில் இருந்து, இந்த மோதல்கள் சமீபத்தில் அடிக்கடி நடப்பவையாகவும், மிக தீவிரமானவையாகவும் மாறியுள்ளன. "இங்கு எப்போதுமே ஆபத்தான எச்சரிக்கை கோடு இருப்பதாக சீன அரசு கூறுகிறது" என்று மேற்கு பிலிப்பைன்ஸ் கடலின் கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் ஜே டாரியேலா கூறுகிறார். “சீனாவின் கெடுபிடிகளால் ஷோல் கரையில் இருந்து 12 கடல்மைல் எல்லையை எங்களால் கடக்க முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனால் புதிய அரசின் கீழ், சீனா சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்ட நாங்கள் ஏற்கனவே அந்த எல்லையை மீறிவிட்டோம்.” நாங்கள் இருந்த இந்த செயல் திட்டமும் அந்த வலுவான எதிர்வினையின் ஒரு பகுதிதான். ஸ்கார்பரோ ஷோலில் பல தசாப்தங்களாக பணிபுரிந்து வந்த பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதே அந்த திட்டத்தின் இலக்கு. இந்த பகுதி 2012 இல் சீன கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து, இந்த மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். சீனாவை விட பிலிப்பைன்ஸுக்கு மிக அருகில் இருக்கும் ஷோல் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான பிலிப்பைன்ஸின் உறுதியை நிரூபிப்பதாகவும் இது இருந்தது. 2016 இல் வழங்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தென் சீனக் கடலில் சீனாவின் உரிமைகோரல்களின் முக்கிய கூறுகளான அதன் நைன் - டேஷ் லைன் (Nine - Dash Line) மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் அதன் பல்வேறு நடவடிக்கைகள் போன்றவை சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. ஆனால் தான் இந்தத் தீர்ப்பை அங்கீகரிக்கவில்லை என்று சீனா கூறுகிறது. படக்குறிப்பு,சீன கப்பல்களை தொடர்ந்து கண்காணிக்கும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஷோலில் காணப்படும் சீனக் கப்பல்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அனைத்து திசைகளிலும் நாம் அவர்களைப் பார்க்க முடியும், "அவர்களின் கோலியாத்திற்கு நாங்கள் தான் டேவிட்," என்கிறார் கொமடோர் டாரியலா. அதிபர் மார்கோஸின் இந்தப் புதிய கொள்கை பில்ப்பைன்ஸை எங்கே கொண்டு செல்லும் என்பதைப் அறிந்துகொள்வது கடினம். இருப்பினும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வலுவான ஆதரவு கிடைத்துள்ளது. ராணுவத்திற்கான நீண்டகால நவீனமயமாக்கல் திட்டத்தை இது விரிவுபடுத்தியுள்ளது. சீனக் கப்பல்கள் ஆபத்தானவை என்றாலும், அவற்றின் உத்திகளில் தெளிவான திறன் கொண்டவை. அவர்கள் தங்களது தடைகளை கிட்டத்தட்ட காலவரையின்றி வைத்திருக்கலாம். சீன கப்பலை நாங்கள் எதிர்கொண்ட பிறகு, தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றை தாங்கள் விரட்டியடித்ததாக அறிக்கை வெளியிட்டது சீனா. பிஆர்பி பககே கப்பல் இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்ட பின்னர் ஸ்கார்பரோ ஷோலிலிருந்து பின்வாங்கியது உண்மைதான். இரண்டாவது கப்பலில் இருந்த பொருட்கள் மற்றும் அதன் பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு பின்னால் 20 கிலோமீட்டர் தொலைவில் சீனக் கப்பல்களால் அது மூழ்கடிக்கப்பட்டது. எனவே எங்கள் கப்பல் அதற்கு உதவ அங்கு சென்றது. படக்குறிப்பு,பிலிப்பைன்ஸ் கப்பலிடம் உதவி பெற வந்த மீனவர்கள் ஆனால் இரண்டு கப்பல்களும் சீனாவின் "சிவப்புக் கோட்டிற்கு" வெளியே கடலில் நிலைக் கொண்டிருந்தன. இருப்பினும் இன்னும் அதன் "நைன்-டேஷ் லைனுக்கு" உள்ளேயே இருந்தன. காலையில் டஜன்கணக்கான மீன்பிடி படகுகள் எங்களைச் சுற்றி உதவிகளை பெறுவதற்காக குவிந்தன. ஆனால் தூரத்தில் இருந்து சீன கடலோரக் காவல்படைக் கப்பல் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தது. சீனாவின் துன்புறுத்தும் தந்திரங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலமான நிலையில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தங்களது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக கருதுகிறது. https://www.bbc.com/tamil/articles/cd18xndw822o
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இந்திய - இலங்கை கப்பல் சேவை இம்மாதம் மீண்டும் ஆரம்பம் Published By: DIGITAL DESK 3 01 MAY, 2024 | 05:04 PM இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்திய - இலங்கை கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல முயற்சிகள் சீரற்ற கடல் நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டது. வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். 4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், ‘செரியாபாணி’ எனப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதல் பயணத்தில் கிட்டத்தட்ட 50 பயணிகள் வருகை தந்தனர். ஷிப்பிங் கோர்ப்பரேஷன் ஓப் இந்தியாவுக்கு (எஸ்.சி.ஐ.) சொந்தமான 35 மீட்டர் நீளமும், 9.6 மீட்டர் அகலமும் கொண்ட ‘செரியாபாணி’ என்ற அதிவேகக் கப்பல் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு நான்கு மணித்தியாலங்கள் வரை பயணமாகும் இக்கப்பலில் ஒரு சுற்றுப் பயணத்திற்கு இலங்கை ரூபாய் 26,750 மற்றும் இரண்டு சுற்றுப் பயணங்களுக்கு 53,500 கட்டணம் அறவிடப்படும். https://www.virakesari.lk/article/182418
-
வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 30 ஏப்ரல் 2024 வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிதுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "106 ஏக்கர் பெரு வெளி நிலத்தில் மூன்று ஏக்கரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் இடமாக உள்ளது, தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். வள்ளலாரின் பாரம்பரியத்தை கௌவரவிக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் புதிய வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்? வடலூரில் என்ன நடக்கிறது? ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வள்ளலாரை முன்னிறுத்தி கருத்தியல் மோதல் வள்ளலார் எனப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாருக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதும் அவரது கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட மக்களால் 106 ஏக்கர் நிலம் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் சத்ய தர்ம சாலையின் ‘பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்ய ஞான சபையில் பௌர்ணமி மற்றும் தைபூசம் நாளன்று சமரச சன்மார்க சங்க இயக்கத்தைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். தைப்பூசம் நிகழ்வுக்கு 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள். பௌர்ணமி நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை கூடுவார்கள். இது ஒரு கருத்தியல் மோதலாகவும் இருப்பதால் அரசியல் சர்ச்சையாகவும் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் நபர்களை பாஜக போன்ற அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுகின்றன. சனாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறிய போது, வள்ளலார் எவ்வாறு சாதியையும் சடங்குகளையும் எதிர்த்தார் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பெருவெளியில் கட்டிடம் எழுப்புவது சத்ய தர்ம சாலையின் மாண்பை குறைக்கும் செயல் என்று கூறி, வள்ளலாரை பின்பற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பாஜக, பாமக, தமிழ் தேசிய பேரியக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெருவெளியில் சன்மார்க்க நிகழ்வுகளை நடத்துவதற்கும் இத்திட்டம் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். வள்ளலார் யார்? வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 19ம் நூற்றாண்டின் தமிழ் சைவ ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாமல் அனைவருக்குமான பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை நம்பினார். அதேபோன்று, கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார். வெளியை வெறும் நிலப்பரப்பாக மட்டும் பார்க்காமல் ஞானத்தின் ஒரு பரந்த தொடர்ச்சியாக நம்பினார் வள்ளலார். அவரது கொள்கைகள் பக்தியின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுடன் முரண்படுவதை காணலாம். அவர் எழுதிய திருவருட்பா ஆறு பாகங்களாக உள்ளன. இவை திருமுறைகள் என்று அழைக்கப்படும். முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீக வாழ்க்கை குறித்து பேசிய வள்ளலார், தனது கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும், ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சடங்குகளையும் நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருந்தார். “கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக” என்று எழுதியிருந்தார். 1927ம் ஆண்டு வெளி வந்த குடியரசின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை தந்தைப் பெரியார் பிரசுரித்திருந்தார். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர், வேத ஆகமத்தின் விளைவு அறியீர்” என்று ஆறாவது திருமுறையில் கூறியுள்ளார். வள்ளலார் சர்வதேச மையத்துக்கு ஏன் எதிர்ப்பு ? 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 80 காணி நிலம் (106 ஏக்கர்) நிலத்தை மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். அதில் அவர், சத்ய தர்ம சாலையை நிறுவினார். 1871-ம் ஆண்டு சத்ய ஞான சபையின் கட்டுமானம் தொடங்கி 1872-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக திறந்த வெளியாக இருக்கும் இடத்தில், புதிய கட்டுமானம் எழுப்பப்படுவது தங்கள் தத்துவத்தை குலைக்கும் செயல் என்கிறார், வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட பொறுப்பாளர், முனைவர் சுப்ரமணிய சிவா. “மக்கள் கொடுத்த 106 ஏக்கரின் நடுவே ஞான சபையை நடுவில் கட்டவில்லை வள்ளலார். உடம்பில் உள்ள தலையை குறிக்கும் வண்ணம் தென் திசை மூலையில் கட்டியிருந்தார். பூத வெளி, உயிர் வெளி, யோக வெளி என 40 வெளிகளை கொண்டது பெருவெளி. ஒளி, வெளி இரண்டுமே சன்மார்க்கத்தின் பிரிக்க முடியாத அமைப்பு. எனவே வெளி என்பது எங்களுக்கு வெறும் திடல் அல்ல. பெருவெளி என்பது தத்துவம். அதை குலைக்காதீர்கள்” என்று தெரிவித்தார். எப்படி கோயில்கள் அமைப்பதற்கு ஆகம விதிகள் உள்ளனவோ அது போன்ற விதிகள் இங்கும் உள்ளன என்று சுட்டிக்காட்டும் சுப்ரமணிய சிவா, “தில்லை நடராஜர் கோயிலில் அதன் பழமையை குலைக்கும் வகையில் தீட்சிதர்கள் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதே இந்து சமய அறநிலையத்துறை எங்களது பெருவெளியை குலைக்கப் பார்க்கிறது.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நிலத்தை தானமாக வழங்கிய பார்வதிபுரம் மக்கள் வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள மக்களின் முன்னோர்கள் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை எதிர்க்கும் அவர்கள், பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாடாக இருக்கிறது. ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ‘வேண்டுகோள் ஆர்ப்பாட்டம்’ நடத்தினர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ‘அரசு வெளிப்படையாக இல்லை’ பட மூலாதாரம்,FACEBOOK இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்கிறார் தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலில் 12 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்றார்கள், பிறகு 3.8 ஏக்கர் நிலம் எடுப்போம் என்கிறார்கள். வள்ளலாரின் கொள்கைகளை உலகுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால் அரசின் முயற்சி அவரது கொள்கைகளுக்கே மாற்றாக இருந்தால், முன்னுரிமை கொள்கைக்கு தான், பிறகு தான் சர்வதேச மையம்” என்கிறார். “சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் ஏதாவது கட்டடம் கட்ட முடியுமா? விவேகானந்தர் பாறையில் புதிதாக எதையும் கட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பும் மணியரசன், இதுவும் மதத்தின் ஒரு பிரிவு, ஒரு தனிப்பட்ட வழிபாட்டு முறை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “வள்ளலார் சர்வதேச மையம் வள்ளலாரின் கொள்கைகள் அடிப்படையில் அமைய வேண்டும், திராவிட மாடல் அடிப்படையில் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அரசு என்ன கூறுகிறது? இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் சர்வதேச மையத்துக்கான அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த விழாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். வடலூரில் நேரில் இருந்து அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “பெருவெளி நிலமான 72 ஏக்கரில் 3.42 ஏக்கர் மட்டுமே சர்வதேச மையம் கட்டுவதற்கான பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குகின்றனர்” என்று பேசியிருந்தார். இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் இரண்டு தடவை முறையாக நடத்தப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பு கூறுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமான விவரங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானம் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த வினோத் ராகவேந்திரன், சத்ய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அருட்பெரும் ஜோதியை எட்டுகால் வாயில் திறப்பின் போது மக்கள் காண்பதற்காக வள்ளலார் பெருவெளியை விட்டுச் சென்றார் என்றும் எனவே அந்த இடத்தில் சர்வதேச மையம் கட்டக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். தைப்பூசம் மற்றும் பௌர்ணமி நாட்களில் மக்கள் பெருவெளியில் கூடும் போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாலேயே அங்கு சர்வதேச மையம் அமைக்க திட்டமிட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது. அறங்காவலர்கள் கொண்ட குழு அமைக்காமல் சர்வதேச மையம் அமைப்பது இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன் படி குற்றமாகும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச மையம் கட்டி முடிக்கப்பட்ட பின் அது சத்ய ஞான சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cn0w7p9gnz4o
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!
மே தினத்தில் குப்பைகளை அள்ள 1000 தொழிலாளர்கள் பணியில்! தொழிலாளர் தினமான இன்று (மே 1) கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா மைஷான் தெரிவித்துள்ளார். ஏனைய நாட்களில் கொழும்பு நகரை துப்பரவு செய்யும் 700 தொழிலாளர்களுக்கு மேலதிகமாக மேலும் 300 பேர் இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தும் மே பேரணிகள் மற்றும் அணிவகுப்புகள் மூலம் கொழும்பில் இன்று குவியும் கழிவுகளை விரைவாக அகற்றுவதே இந்த குழுவின் முதன்மை நோக்கமாகும் என்றும் 1000க்கும் மேற்பட்ட இந்த தொழிலாளர் படை 24 மணி நேரமும் இரவும் பகலும் வேலை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி மே 2ஆம் திகதி தொழிலாளர் தினத்தின் பின்னர் கொழும்புக்கான சேவைகளை வழங்குவது உட்பட கடமைக்கு வரும் பொது மக்களை தூய்மையான நகரமாக காண கொழும்பு மாநகர சபை தன்னால் இயன்றளவு செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300640
-
களைத்த மனசு களிப்புற ......!
அண்ணை இது விசப்பரீட்சை என்று தோன்றுகிறது.
-
குஜராத்: இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி உணவுப் பதிவர்
3 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர். சூரத் நகரத்தில் இருக்கும் உணவகங்கள், கஃபேடேரியாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று தன்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்களுக்காக சிறந்த மற்றும் புதிய உணவு வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுகிறார். “இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஃபுட் விலாகர் நான் தான் என்று நினைக்கிறேன். என்னால நடக்க, நகர முடியாது, ஆனாலும் இந்தத் துறையில் நுழைந்தேன். நான் இந்த தொழிலில் என்னால் முடிந்ததை செய்கிறேன்”, என்கிறார் அங்கித் பரன்வால். தொடர்ந்து உற்சாகமாக பேசும் அவர், “நான் சூரத்தில் பிஆர்டிஎஸ் திட்டத்தில் 18 மாதங்கள் வேலை செய்தேன். கொரோனா வந்த பிறகு, என் வேலையை இழந்தேன். வேலைக்காக பல இடங்களில் விண்ணப்பித்தேன், ஆனால் கிடைக்கவில்லை. நான் ஒரு உணவுப் பைத்தியம், பலவகையான உணவுகளை ருசிக்க விரும்புவேன். இதற்கு முன்பாக, சில வெப் சீரிஸ்கள், குறும்படங்களை எடுத்துள்ளேன். நடக்க முடியாத ஒருவர் ஃபுட் வீலாகிங் செய்வது இதுவே முதல் முறை. மக்கள் எனது வீடியோக்களை விரும்பினார்கள், அவர்களால் நான் இன்று பிரபலமாகிவிட்டேன்.” என்கிறார் அங்கித். பிபிசியிடம் பேசிய அங்கித்தின் தாய் அன்னு பரன்வால், “அங்கித் பிறந்த போது அவனுக்கு முதுகில் புற்றுநோய் கட்டி இருந்தது. அங்கித் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, மருத்துவர்கள் அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர். அங்கித் 1 வயதாக இருந்தபோதும், அவனது கால்களில் எந்த அசைவும் இல்லை. நாங்கள் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தோம், ஆனால் அவர்களால் அங்கித்தின் நிலைமைக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் இந்த விஷயங்களைச் செய்யத் தொடங்கிய போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவனுடைய பணி மற்றும் அர்ப்பணிப்புக்காக மக்கள் இன்று அவனைப் பாராட்டுகின்றனர்” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/ce9rqn3z3d2o
-
மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - எவ்வாறு பெறுவது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 30 ஏப்ரல் 2024 இந்திய சுற்றுலாத்துறை 2023-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது, கோடைக்காலம் என்பதால் வெப்ப அலையில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தில் கடைபிடித்தது போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறது. இ-பாஸ் பெறுவது எப்படி? அரசு பேருந்துகளில் செல்லலாமா? அரசு கூறுவது என்ன? இந்த நடைமுறையால் சுற்றுச்சூழல் காக்கப்படுமா? தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. அதில் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைகள் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியாக கருதப்படும் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது ஆண்டுதோறும் இருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் இந்த இரண்டு சுற்றுலாத்தலங்களை முக்கியமாக தேர்வு செய்வார்கள். இப்போது இதற்கு நீதிமன்றம் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளது. இ- பாஸ் முறை ஏன்? சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் நீலகிரி மற்றும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆஜராகி இருந்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஊட்டிக்கு நாள்தோறும் கோடை விடுமுறை காலங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதாகவும் இதில் 1,300 வேன்கள் அடங்கியிருப்பதாகவும் தகவல் அளித்திருந்தது. இதனை கேட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்து இவ்வளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் மலை பகுதிகளுக்குச் சென்றால் நிலைமை மோசமாகும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாத சூழல் ஏற்படும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினர். மேலும், சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வறிக்கையை அளிக்குமாறு கூறினர். மேலும், மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மே ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இ- பாஸ் நடைமுறைகள் என்ன? இ-பாஸ் விதிமுறையை பின்பற்ற கூறிய நீதிபதிகள் அதனை வழங்குவதற்கு முன்பாக வாகனங்களில் வருவோரிடமிருந்து என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர், எத்தனை நாள் சுற்றுலா உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், உள்ளூர் மக்களுக்கு இந்த இ- பாஸ் நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த இ-பாஸ் நடைமுறையை இந்திய அளவில் விரிவான விளம்பரம் கொடுக்க வேண்டும், இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 'மலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு' இதுகுறித்து பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிடாத சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். குறிப்பாக, கொடைக்கானலை சீசன் அல்லாத மாதங்களில் ஆயிரம் முதல் 2,000 வாகனங்கள் மலைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வரும். இதுவே கோடை விடுமுறை நாட்களில் 20,000 முதல் 30,000 வரையில் வாகனங்கள் வரும். இதனால் மலையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும் சூழலை காண முடியும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இதனை நம்பி தொழில் செய்யும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கும் மறுபுறம் போக்குவரத்து நெரிசலால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கடினமாக மாறி இருக்கிறது. நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திடம் சுற்றுலாவுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. சுற்றுலாத்துறை, காவல்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து இ-பாஸ் நடைமுறையை எப்படி முறைப்படுத்தி செயல்படுத்தலாம் என்பது குறித்து பேசப்பட்டு இருக்கிறது. எதன் அடிப்படையில், இ-பாஸ் எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது", என்றார். இ-பாஸ் பெறுவது எப்படி? படக்குறிப்பு,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இதுகுறித்து பிபிசி தமிழிடம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பேசுகையில், "நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை பின்பற்றி இ-பாஸ் சேவையை வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ் பதிவு செய்யும் இணையதள பக்கம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படும். அதற்கு முன்னதாகவே இந்த இணையதள பக்கம் பயன்பாட்டுக்கு வரும். இதில் முன்பதிவு செய்துவிட்டு கொடைக்கானலுக்கு சென்று மக்கள் சுற்றிப் பார்க்கலாம். ஒருநாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம், பேருந்தில் செல்பவர்களுக்கு அனுமதி எப்படி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்புகள் முறையாக அறிவிக்கப்படும்", என தெரிவித்தார். 'இ- பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல்' படக்குறிப்பு,சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன். "இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகள் சில சிக்கல்களை சந்திக்கலாம்", என்கிறார் சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கோடை காலங்களில் மலைப்பிரதேசங்களை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை சுற்றுலா தலங்கள் சந்திக்கும். தற்பொழுது நீதிமன்றம் வாயிலாக நடைமுறைக்கு வரவிருக்கும் இ-பாஸ் முறை சுற்றுலாப் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சுற்றுலா சென்று பல்வேறு பகுதிகளை பார்த்து வர இயலும். ஆனால், சிலருக்கு விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலா செல்ல முடியும். அவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை சிக்கலை கொண்டு வரலாம். ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு மட்டுமே இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஏலகிரி, ஏற்காடு, மேகமலை போன்ற வேறு சில பகுதிகளை நோக்கிச் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுலா சார்ந்த வியாபாரங்கள் நடைபெறும்”, என்றார். 'சுற்றுலாப் பயணிகளை நம்பியிருப்போர் தொழில்கள் பாதிப்பு' இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி விஜய் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி ஹோட்டல்கள், தங்கும், விடுதிகள் சிறு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என அனைத்துத் தரப்பு தொழிலும் இ-பாஸ் நடைமுறையால் பாதிக்கும் சூழல் ஏற்படும். கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். இதனால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கொடைக்கானலுக்கு வருவார்கள். இவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால், சீசனை நம்பி பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்யும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இதனை நடைமுறைப்படுத்த அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக”, கூறுகிறார். 'சொந்த வாகனங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம்' படக்குறிப்பு,'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் "கொடைக்கானல், ஊட்டி ஆகிய நகரங்கள் தாங்கும் திறனை தாண்டி விட்டதாக," கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை சுற்றுலாத் தலங்கள் அதன் தாங்கு திறனை தாண்டி விட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மக்கள் நெரிசலால் உயிர்பன்மை தன்மை பாதிக்கப்படாமல் அதை பாதுகாக்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் வேண்டும், அறிவியல்பூர்வமாக, அதன் தாங்கும் திறனை கண்டறிந்து தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்", என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cv26jjgvq1xo
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது! இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். தேசிய மக்கள் சக்தி கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் நான்கு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பிலும் தலவாக்கலையிலும் இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்துகிறது . ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கம்பஹாவில் நடத்துகிறது. https://thinakkural.lk/article/300621
-
பேலியகொடையில் விபசாரத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் நோயினால் பாதிப்பு!
01 MAY, 2024 | 10:15 AM பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது . போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு, கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது . இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது . சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அழித்து மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இந்த பெண்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொடை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/182382
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மழை காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், ‘117’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடம் 459,979 பரீட்சார்த்திகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/300629
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு Published By: DIGITAL DESK 7 01 MAY, 2024 | 09:19 AM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/182377
-
இன்று முதல் எரிபொருள் விலை குறைப்பு!
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு! Published By: VISHNU 30 APR, 2024 | 09:44 PM இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182364
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
தொடர் தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன? சென்னைக்கு என்ன சிக்கல்? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாற்றங்களுடன் இந்த சீசனை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது. பவர் ப்ளேயின் முதல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட், அடுத்த 2 ஓவர்களில் ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட் என 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ளே ஆஃப் செல்ல லக்னோ என்ன செய்ய வேண்டும்? இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் சென்னை அணி 4-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் சென்னை அணிக்கு முக்கியமானதாக மாறியிருக்கின்றன. அதே நேரத்தில் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கடைசிவரை இழுத்து வந்ததால், லக்னோவின் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. சென்னை அணியையும் விட 0.094 என்ற அளவில் மிகக்குறைவாக இருக்கிறது. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் லக்னோ அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் ஆடினால்தான், ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல தகுதிப்படுத்த முடியும். லக்னோ அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களில் வெல்வது ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிக்கலில்லாமல் உறுதி செய்யும். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா? மும்பை அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு அருகே உள்ளது.. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.272 என்று மோசமாக இருக்கிறது. இன்னும் கைவசம் 4 போட்டிகள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று செல்வது கடினம்தான். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஆர்சிபி அணியைப்போல், ப்ளே ஆஃப் சுற்று என்பது வெறும் கணிதத்தின் அடிப்படையில்தானேத் தவிர செயல்பாட்டளவில் சாத்தி இல்லாத செயலாகும். ஏனென்றால், மும்பை இந்தியன்ஸுக்கும், ஆர்சிபிக்கும் இன்னும் 4ஆட்டங்களே மீதம் உள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றால்கூட தலா 8 புள்ளிகள்தான் பெற முடியும் ஏற்கெனவே இருக்கும் 6 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள்வரை பெற்று அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால், ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகளும் தானாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் போகும். ஒருவேளை 14 புள்ளிகள் பெற்ற அணிகள் 4-ஆவது இடத்துக்கு போட்டியிட்டால், ஆர்சிபி, மும்பை அணிகளின் நிகர ரன்ரேட் மிக அதிகமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமானால்தான் மும்பை, ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும். இந்த ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ஸ்டாய்னிஸ் மந்தமாகத்தான் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி இரு போட்டிகளில் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். இந்த சீசனில் பேட்டிங் சராசரியாக 40 வைத்திருக்கும் ஸ்டாய்னிஸ் 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாக வைத்துள்ளார், பந்துவீச்சில் இதுவரை 10 போட்டிகளில் 12 ஓவர்கள் மட்டுமே வீசிய ஸ்டாய்னிஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த சீசனில் ஏற்கெனவே சதம் அடித்துவிட்ட ஸ்டாய்னிஸ் இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 7பவுண்டரி) ஆட்டமிழந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்பை தவறவிட்ட லக்னோ சேஸிங்கின்போது கேப்டன் ராகுலும், ஸ்டாய்னிஸும்தான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் என்று கூறலாம். ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரர் குல்கர்னி முதல்பந்திலேயே துஷாரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அதன்பின் 3வது வீரராக களமிறங்கிய ஸ்டாய்னிஸ், ராகுலுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்போலத்தான் விளையாட வேண்டியதிருந்தது ஆனால், சூழலுக்கு ஏற்றார்போல் பேட்செய்த ஸ்டாய்னிஸ், பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி கோட்ஸீ வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ராகுலும் அவ்வப்பபோது பவுண்டரிகள் அடிக்க பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் சேர்த்தது. ராகுல் 5 ரன்கள் சேர்த்திருந்த ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த முறை பாண்டியா பந்துவீச்சில் ராகுல்(28) அடித்தஷாட்டை நபி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். 2வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்,ராகுல் கூட்டணி 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். முதல் 50 ரன்களை 5.2 ஓவர்களை எட்டிய லக்னோ அணி அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு 8ஓவர்கள் எடுத்துக்கொண்டது, அதாவது 48பந்துகளை எடுத்துக் கொண்டது. தொடக்கத்தில் 10 ரன்ரேட்டில் சென்ற லக்னோ அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன்சேர்க்கும் வேகம் குறைந்து 6 ரன்ரேட்டாகச் சரிந்தது. நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா, பும்ரா, பாண்டியா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா பேட்டிலிருந்து ரன்கள் செல்வது கடினமாக இருந்தது. இருப்பினும் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஸ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தீபக் ஹூடா 18 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்-பாண்டியா கூட்டணி 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷுடன் சேர்ந்தார் இரு பெரிய ஹிட்டர்களும் அணியை விரைவாக வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாய்னிஸ் 62 ரன்களில் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில்2 சிக்ஸர், 7பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய டர்னர்(5), பதோனி(6) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 115 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வழக்கமாக அதிரடியாக சிக்ஸர்கள், பவுண்டரிகளை அடிக்கும் நிகோலஸ் பூரன் நிதானமாக ஆடி ஒரு பவுண்டரி மட்டுமே சேர்த்தார். பூரன் 14 ரன்களுடனும், குர்னல் பாண்டியா ஒரு ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். லக்னோ அணி முதல் 50 ரன்களை விரைவாக எடுத்துவிட்டு அடுத்த 95 ரன்களை மிகவும் மந்தமாகச் சேர்த்ததுதான் அதனால் நிகர ரன்ரேட்டைஉயர்த்தமுடியாமல் இருக்கிறது. 95 ரன்களைச் சேர்க்க லக்னோ அணி 14 ஓவர்களை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த மந்தமான பேட்டிங்தான் லக்னோவின் குறைவான நிகர ரன்ரேட்டுக்கு காரணமாகும். முதல் 50 ரன்களைச் சேர்த்ததுபோல் விரைவாக இலக்கை எட்டி குறைந்த ஓவர்களில் வென்றிருந்தால், லக்னோ அணி 2வது இடத்துக்கு முன்னேறியிருக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ஸ்டாய்னிஸ் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்து லக்னோவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஸ்டாய்னிஸ் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திலும் ஸ்டாய்னிஸ் அடித்த 62 ரன்கள் சேர்த்து லக்னோ வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பு செய்தார். பந்துவீச்சிலும், ஸ்டாய்னிஸ் மீது நம்பிக்கை வைத்து தொடக்கத்திலேயே கேப்டன் ராகுல் வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய ஸ்டாய்னிஸ் புதிய பந்தை ஸ்விங் செய்து ஆபத்தான பேட்டர் சூர்யகுமார் யாதவ்(10) விக்கெட்டை வீழ்த்தினார். 3 ஓவர்கள் வீசிய ஸ்டாய்னிஸ் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் சரிவு மும்பை அணியைக் காப்பாற்றியது கீழ் வரிசை பேட்டர்கள் நேகல் வதேரா(46), டிம் டேவிட்(35) கடைசி நேரத்தில் ஆடிய கேமியோதான். இருவரும் கடைசி நேரத்தில் ஓரளவுக்கு பேட் செய்யாமல் இருந்திருந்தால் 120 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும். லக்னோவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட விக்கெட் பேட்டர்கள் பேட் செய்ய கடினமாக இருந்தது. மும்பை அணி கூடுதலாக 30 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தால், ஆட்டத்தை வென்றிருக்கக்கூடும். மும்பையின் தொடக்க வரிசை பேட்டர்கள் பவர்ப்ளே ஓவருக்குள் பெவிலியன் திரும்பினர். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி அடித்த பவுண்டரிகளைவிட இழந்த விக்கெட்டுகள்தான் அதிகம். 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி, 4 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா(4) ரன்னில் மோசின்கான் வீசிய 2வது ஓவரில் ஆட்டமிழக்க, சூர்யகுமார்(10) ரன்னில் ஸ்டாய்னிஸ் வீசிய 3வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்துஇருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல திலக் வர்மா(7), கேப்டன் ஹர்திக் (0) ஆகிய இருவரும் நவீன் உல்ஹக் வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இஷான் கிஷன், நேகல் வதேராவுடன் சேர்ந்து ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்து ஸ்கோரை உயர்த்தினர். மும்பை அணி 10 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் இஷான் 32 ரன்கள் சேர்த்தநிலையில் யாதவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். நேஹல் வதேரா மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 35 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் மும்பை பேட்டர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மயங்க் யாதவ் மீண்டும் காயமா? இந்த சீசனில் கண்டுபிடிக்கப்பட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர், மணிக்கு 156 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய மயங்க் யாதவ் காயத்திலிருந்து மீண்டுவந்து நேற்று விளையாடினார். 3 ஓவர்கள் சிறப்பாகப் பந்துவீசிய மயங்க் யாதவ், 4வது ஓவரின் முதல் பந்தில் நபியை கிளீன் போல்டாக்கினார். ஆனால், வயிற்றுப்பகுதியில் மீண்டும் வலி எடுக்கவே மயங்க் யாதவ் பெவிலியன் திரும்பினார், அவரின் ஓவரை நவீன் உல்ஹக் பந்துவீசி நிறைவு செய்தார். மயங்க் யாதவ் குறித்து பயிற்சியாளர் ஜஸ்டின்லாங்கர் கூறுகையில் “ மயங்க் ஏற்கெனவே ஏற்பட்ட காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் முன்கூட்டியே அவரை அழைத்துவந்துவிட்டோம். மயங்க் உடல்நிலையில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. முன்னெச்சரிக்கையாக மயங்க் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரிதாக அவருக்கு பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன சொல்கிறார் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை பவர்ப்ளேக்குள் இழந்தபின் மீண்டு வரமுடியவில்லை. எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பிற அணிகள் பெரிய ஸ்கோரை அடித்துவருவதால் பேட்டர்கள் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்று கூற முடியாது. விக்கெட் நன்றாக இருந்தது, பந்தை பார்த்து அடிக்க முடிந்தது. ஆனால் தவறான ஷாட்களை ஆடினோம். களத்துக்குள் இறங்கிவிட்டால் சில நேரங்களில் தோற்கலாம், வெற்றி பெறலாம், ஆனால் போராட வேண்டும் என்று நம்பக்கூடியவன். இந்த ஆட்டம் கடினமானதுதான். ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். வதேரா சிறப்பாக பேட் செய்தார், கடந்த சீசனிலும் வதேரா சிறப்பாக விளையாடினார். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால் வதேராவுக்குவாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடி வருவதைப் பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3gq141p06qo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
'அந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை' - பிபிசி காஸா செய்தியாளரின் நேரடி அனுபவம் படக்குறிப்பு,அட்னான், பல வாரங்கள் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அட்னான் அல்-புர்ஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏறக்குறைய மூன்று மாதங்களாக, அட்னான் அல்-புர்ஷ் காஸாவிலிருந்து போரைப் பற்றிய செய்திகளை அளித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் வாழ்ந்து, ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, தனது மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவர் போராடியிருக்கிறார். பிபிசி அரபு நிருபர்கள், போரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் போது தாங்கள் எதிர்கொண்ட திகிலூட்டும் தருணங்களைப் பகிர்ந்துள்ளனர். காஸாவில் ஒரு செய்தியாளராக வேலை பார்த்த போது தான் எதிர்கொண்டதை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அட்னான் அல்-புர்ஷ். 'குடும்பத்துடன் தெருவில் உறங்கினோம்' படக்குறிப்பு,அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகைக்கு எடுக்க முடிவு செய்திருந்த குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தெருவில் உறங்கினர் குடும்பத்துடன் அனைவரும் சாலையில் தூங்கிய தருணம் தான், கடந்த ஆறு மாதங்களில் மிகவும் மோசமான தருணங்களில் ஒன்று. தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் தெருவில் கடும் குளிரில் என் மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிராதரவாக நின்றேன். எனது 19 வயது இரட்டைப் பிள்ளைகளான ஜக்கியா மற்றும் படூல் அவர்களின் 14 வயது சகோதரி யும்னாவுடன் நடைபாதையில் தூங்கினர். எனது எட்டு வயது மகன் முகமது மற்றும் ஐந்து வயது இளைய மகள் ரஸான் அவர்களின் தாய் ஜைனப் உடன் உறங்கினர். பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (செஞ்சிலுவைச் சங்கம்) தலைமையகத்திற்கு வெளியே நாங்கள் ஓய்வெடுக்க முயன்ற போது, இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. நாங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் கட்டிடத்தின் மீது குண்டு வீசப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததாக வீட்டு உரிமையாளர் அன்றே எங்களிடம் கூறினார். நான் அப்போதும் வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால் எனது குடும்பத்தினர் தங்கள் உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர். படக்குறிப்பு,பிபிசி குழுவானது கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை அருகே கூடாரத்தில் இருந்து வேலை செய்தது. 'குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சி' நாங்கள் அனைவரும் செஞ்சிலுவை தலைமையகத்தில் சந்தித்தோம், அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நானும் என் சகோதரனும் இரவு முழுவதும் அட்டைப் பெட்டிகளில் அமர்ந்து என்ன செய்வது என்று விவாதித்தோம். வடக்கு காஸாவில் இருந்த அனைவரையும் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக் கொண்டதால், அக்டோபர் 13 அன்று எனது குடும்பம் ஜபாலியா நகரத்தை விட்டு வெளியேறியது. எங்களது வீடு மற்றும் பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினோம். ஆனால் இப்போது எந்த இடத்திற்கு இஸ்ரேலிய ராணுவம் செல்லச் சொன்னதோ, அதே இடத்தில் குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பித்தோம். இந்த நேரத்தில் எதையும் தெளிவாகச் சிந்திப்பது மிகவும் கடினம். நான் கோபமாகவும் அவமானமாகவும் உணர்ந்தேன். எனது குடும்பத்தை ஏன் என்னால் பாதுகாக்க முடியவில்லை? என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. ஒருவழியாக கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஒரு கூடாரத்தில் பிபிசி குழுவுடன் நான் தங்கியிருந்த போது, எனது குடும்பம் மத்திய காஸாவில் உள்ள நுசைரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்கள். சில நாட்களுக்கு ஒருமுறை என் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வேன். இணையம் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் பலமுறை துண்டிக்கப்பட்டதால் அவர்களோடு தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஒருமுறை நான்கைந்து நாட்களுக்கு என் குடும்பத்துடன் பேச முடியாத நிலை இருந்தது. படக்குறிப்பு,அட்னான், தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நாளில் நேரலையில் அழுதார். ‘நேரடி ஒளிபரப்பின் போது அழுதேன்’ கான் யூனிஸின் பிபிசி குழுவில் நாங்கள் ஏழு பேர் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் கிடைத்து வந்தது. சில நேரங்களில் உணவு இருந்தாலும், கழிப்பறை இல்லாததால் மீதம் இருவேளை சாப்பிட மாட்டோம். இதற்கிடையில், எனது நண்பரும் அல் ஜசீரா பணியகத்தின் தலைவருமான வயேல் டாடோ இந்தப் போருக்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்தார். அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவரது மனைவி, சிறு மகன், ஏழு வயது மகள் மற்றும் ஒரு வயது பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்க ‘முடிந்தவரை எச்சரிக்கையாக’ இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இந்தத் தாக்குதலில் , 'ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக' இஸ்ரேல் கூறியது. 20 வருடங்களாக எனக்கு நன்கு பரிச்சயமான எனது நண்பர் அழும் காட்சிகளைப் பார்த்தேன். அவர் மத்திய காஸாவில் தனது குழந்தைகளின் மூடிய உடல்களைத் தழுவியவாறு கண்ணீருடன் இருந்தார். அந்த நேரத்தில் நான் அவருடன் இருக்க விரும்பினேன். எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் மரணச் செய்திகள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தியும் வந்தது. அன்று நான் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே அழுதேன். நான் இரவில் அடிக்கடி கண்விழிப்பேன், என் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருக்கும். நண்பர் வயேல் அழுத காட்சிகள் என் மனதை விட்டு நீங்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் காஸாவில் நடந்த பல மோதல்களை நான் செய்திகளாக விவரித்துள்ளேன் ஆனால் இந்தப் போர் வித்தியாசமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். படக்குறிப்பு,இஸ்ரேல் எச்சரித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு காஸாவிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ரேஷன் கடைகள் மீது தாக்குதல் அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு எழுந்தேன், என் குழந்தைகள் அலறிக் கொண்டிருந்தார்கள். நான் மேல்தளத்திற்கு சென்று பார்த்தேன், இஸ்ரேலில் இருந்து காஸா மீது ராக்கெட்டுகள் ஏவப்படுவதைக் கண்டேன். ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும், இந்த தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்தது. 250 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர், எனவே இஸ்ரேலின் பதிலடி நாங்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 34,000 பேர் இறந்துள்ளனர், ஆனால் போர் தொடர்கிறது. இன்னும் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. போர் ஆரம்பித்து இரண்டு நாட்களாகியிருந்ததால், ஜபாலியாவில் உள்ள ஒரு சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றேன். என்னைப் போலவே பொருட்களை வாங்க ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். நான் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பத்து நிமிடங்களில் அந்த பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெரிய ரேஷன் கடைகளும் இடிந்து நாசமாயின. இந்த குண்டுவெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியின் கேள்விகளுக்கு இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 'எனது வீடு முற்றிலும் சேதமடைந்தது' படக்குறிப்பு,கான் யூனிஸில் இருந்த பிபிசி குழு உறுப்பினர்கள் இந்த நிலையில் தான் வாழ வேண்டியிருந்தது. போர் முழுவதும், ஹமாஸ் தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், மேலும் ஹமாஸ் தளங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ளன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ‘ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்படியே உள்ளன,’ என்றும் அது கூறியுள்ளது. போருக்கு முன்பு, ஜபாலியா ஒரு அழகான, அமைதியான நகரமாக இருந்தது. நான் அங்குதான் பிறந்தேன், என் குடும்பத்துடன் எளிமையான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தேன். எதிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தன. இந்த நகரத்தின் கிழக்கே எனக்கு பண்ணைகள் இருந்தன, அங்கு நான் ஆலிவ், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு மரங்களை என் கைகளால் நட்டேன். அது மிகவும் அமைதியான இடம், மாலையில் வேலை முடிந்ததும் அங்கு அமர்ந்து தேநீர் அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கான் யூனிஸ் செல்ல வடக்கு காஸாவை விட்டு வெளியேற முடிவு செய்த நாள், நான் காஸா நகரில் இருந்த எனது வீட்டையும் பிபிசி அலுவலகத்தையும் விட்டு வெளியேறினேன், அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு காரில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன், நானும் எனது குடும்பத்தினரும், சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு நோக்கிய ஒரு சாலையில் நடந்தும், சில வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தெற்கு காஸாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் இருபுறமும் குண்டுவெடிப்புகள் நடந்தன. பயணத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. வழியில், என் குழந்தைகள் என்னிடம் கேட்டார்கள், "நாம் எங்கே போகிறோம்? நாளைக்கு மீண்டும் வருவோமா?” நான் வீட்டை விட்டு வெளியேறும்போது எனது புகைப்பட ஆல்பத்தை என்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினேன். அதில் எனது குழந்தைப் பருவம், பெற்றோர், மனைவி மற்றும் எனது நிச்சயதார்த்தப் புகைப்படமும் இருந்தது. என் தந்தைக்கு சொந்தமான புத்தகங்களை என்னுடன் கொண்டு வந்திருக்கலாம். எனது தந்தை அரபு மொழி ஆசிரியர். அவர் மறைவுக்குப் பிறகும் அவருடைய புத்தகங்களை நான் வைத்திருந்தேன். பின்னர் எனது வீடு முற்றாக இடிந்து கிடப்பதை எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். எனது வயல்கள், பண்ணைகள் எரிக்கப்பட்டன. காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல்கள் படக்குறிப்பு,அல் ஜசீரா பணியகத்தின் தலைவர் வயேல் டாடோ இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தார். அந்த பயங்கரமான பயணத்திற்கு பிறகு தான், ஓர் இரவு ரெட் கிரசண்ட் தலைமையகத்திற்கு வெளியே தெருவில் உறங்கினோம். பின்னர் நான் கான் யூனிஸில் பல வாரங்கள் தொடர்ந்து வேலை செய்தேன். என் குடும்பம் அப்போது நுசைரத்தில் இருந்தது. அவர்களைப் பிரிந்து இருந்தது எனக்கு உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாட்கள் பல உணர்வுகளுடன் போராடினேன். பின்னர் இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதாகவும், தெற்கை மத்திய மற்றும் வடக்கு காஸாவிலிருந்து பிரிப்பதே அதன் நோக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. நானோ என் குடும்பமோ கொல்லப்படுவோம், இனி ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று பயந்தேன். முதல் முறையாக நான் தோற்றுவிட்டதாக உணர்ந்தேன். அது எந்த நாள் என்று கூட நினைவில்லை. வேலையை நிறுத்திவிட்டு என் குடும்பத்திடம் செல்ல நினைத்தேன். இறந்தால் ஒன்றாகவே இறக்க விரும்பினேன். இறுதியாக டிசம்பர் 11 அன்று, நான் ஒரு சக ஊழியருடன் நுசைரத்துக்குப் புறப்பட்டேன். நான் அவ்விடத்தை அடைந்ததும், என் குழந்தைகள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர். என் மகன் ரசான் என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். எப்படியோ குடும்பத்துடன் ரஃபாவை அடைந்தோம். பிபிசி குழுவும் ரஃபாவை அடைந்தது, நாங்கள் அங்கிருந்து பணியைத் தொடர்ந்தோம். டிசம்பர் பிற்பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எப்- IDF) சுமார் 80 உடல்களை காஸாவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நான் செய்தியில் தெரிவித்தேன். அவர்களில் யாரேனும் இஸ்ரேலிய பணயக்கைதிகளா என்பதை ஆய்வு செய்ய அந்த உடல்கள் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக ஐ.டி.எப் கூறியது. ரஃபாவில் உள்ள ஒரு கல்லறைக்குள் ஒரு பெரிய லாரி நுழைந்தது. கொள்கலனை திறந்ததும் துர்நாற்றம் எங்கும் பரவியது. கவசங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்த மக்கள் மணல் நிலத்தில் ஒரு வெகுஜன புதைகுழியைத் தோண்டி நீல பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட உடல்களின் எச்சங்களை புதைத்தனர். இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, அது எவ்வளவு பயங்கரமானது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. பட மூலாதாரம்,ADNAN EL-BURSH படக்குறிப்பு,போருக்கு முன்னர் அட்னானும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்த வீடு தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது பின்னர் ஜனவரியில், பல உடல்கள் கொண்டு வரப்பட்டபோது நான் ரஃபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து செய்தி அளித்துக் கொண்டிருந்தேன். அதில் அல் ஜசீரா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் வயேலின் மூத்த மகன் ஹம்சாவின் சடலமும் இருந்தது. ஆனால் இதைப் பற்றி வயேலுக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? அவருக்கு ஏற்கனவே மோசமான ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது, இதை அவரிடம் சொல்ல முடியாது என்று தோன்றியது. எனது சக ஊழியர்களில் ஒருவர் வயேலின் நெருங்கிய உறவினர்களை அழைத்து, இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார். ஹம்சாவும் அவரது வீடியோகிராபர் முஸ்தபா துரையாவும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதற்கு முன் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அளித்துக் கொண்டிருக்கும்போதே அவரது கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் ‘காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள்' என்று இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. அவர்களது குடும்பமும் அல் ஜசீராவும் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரிக்கின்றன. அவர்கள் இரண்டு பேரும் ஐ.டி.எஃப் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ட்ரோன்களை இயக்கியதாக ஐ.டி.எப் கூறுகிறது, ஆனால் வாஷிங்டன் போஸ்ட் விசாரணையில் ‘அவர்கள் இருவரும் அந்த நாளில் ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட்டதாக எந்த அறிகுறியும் இல்லை.’ என்று கூறுகிறது. 'இந்த உணவு எனக்கு விஷமாகத் தெரிகிறது' படக்குறிப்பு,அட்னான் மற்றும் பிபிசி குழு இறுதியாக பிப்ரவரியில் காஸாவை விட்டு வெளியேறியது. ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பின் கருத்துப்படி, 100-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பாலத்தீனர்கள், அக்டோபர் 7 முதல் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஐ.டி.எப், "எந்தவொரு பத்திரிகையாளரையும் நாங்கள் வேண்டுமென்றே குறிவைத்ததில்லை. ஊடகவியலாளர்கள் உட்பட எந்தவொரு பொதுமக்களுக்கும் குறைந்தபட்ச ஆபத்து மட்டுமே ஏற்படுவதை உறுதிசெய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்'” என்று கூறுகிறது. இறுதியாக பிபிசி குழுவின் குடும்பத்தினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்கு செய்தி வந்தது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நாங்களும் எகிப்திய அதிகாரிகளின் உதவியுடன் ரஃபாவை விட்டு வெளியேற முடிந்தது. நான் இதை எழுதும்போது, கத்தாரில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஜபாலியாவில் உள்ள மக்கள், எப்படியாவது தங்கள் விலங்குகளுக்கு தீவனம் அளிக்க புல் பறித்து அதை அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதேசமயம் இங்கே நான் ஹோட்டலில் சுத்தமான உணவுடன் அமர்ந்திருக்கிறேன். என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியவில்லை, இந்த உணவு முழுவதும் விஷம் நிரம்பியுள்ளது போல நான் உணர்கிறேன். https://www.bbc.com/tamil/articles/cglveyprz50o
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ரி20 உலகக் கிண்ண இந்திய குழாத்தில் ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பான்ட் Published By: VISHNU 30 APR, 2024 | 07:50 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் செவ்வாய்க்கிழமை (30) அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உதவித் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை 20 நாடுகள் பங்குபற்றும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அஜித் அகார்கார் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (30) கூடி ஆலோசனை நடத்தி 15 வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தை தெரிவு செய்தனர். தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு செம்சன், சென்னை சுப்பர் கிங்ஸின் அதிரடி நாயகன் ஷிவம் டுபே ஆகியோருக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷாப் பான்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. சில கால இடைவெளிக்குப் பின்னர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார். இம்முறை ஐபிஎல் இல் அசத்திவரும் ருத்துராஜ் கய்க்வாட் உட்பட இன்னும் சிலர் தெரிவாளர்களின் கண்களில் படாதது ஆச்சரியத்திற்குரியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, ஐ பி எல் இல் பெரிதாக பிரகாசிக்காத ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது கிரிக்கெட் விமர்சர்களை மட்டுமல்லாமல் இரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் இலும் பார்க்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாண்டியா, யாதவ் போன்றவர்கள் அசத்துவார்கள் என தெரிவாளர்கள் நம்புகின்றனர். விக்கெட் காப்பாளர் கே.எல். ராகுலுக்கும் இந்தியா குழாத்தில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்திய குழாத்தில் ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் துடுப்பாட்ட வீரர்களாகவும், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ரா சஹால், குல்தீப் யாதவ், மொமஹத் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்து குழாம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. ஏனைய குழாம்கள் இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை (30) மாலைவரை நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது உலகக் கிண்ண கிரிக்கெட் குழாம்களை அறிவித்துள்ளன. தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், ஒட்நீல் பாட்மன், ஜெரால்ட் கொயெட்ஸீ, பிஜோன் ஃபோச்சுன், கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்யா, கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி. இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், டெவிட் வில்லி, க்றிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ். https://www.virakesari.lk/article/182362
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இந்தியாவில் தயாராகும் 2 மசாலாப் பொடிகளில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா? அமெரிக்க உணவுத்துறை ஆய்வு பட மூலாதாரம்,GETTY IMAGES 22 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு இந்திய மசாலா நிறுவனங்கள் தயாரித்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக,`அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்’ ஆய்வு நடத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் எம்டிஹெச் (MDH) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று மசாலாப் பொடிகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் ஒரு மசாலாப் பொடியின் விற்பனையை ஹாங்காங் தடை செய்தது. இந்த மசாலாப் பொருட்களில் அதிக அளவு எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர, எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. கடந்த காலங்களில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகையில், எவரெஸ்ட் நிறுவனம் தனது தயாரிப்புகள் உடல்நலனில் எந்த தீங்கையும் ஏற்படுத்தாதது, பாதுகாப்பானது என்று கூறியது. எம்டிஹெச் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) செய்தித் தொடர்பாளர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்த ஆய்வு அறிக்கைகள் பற்றி FDA-வுக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலா கலவையில் அதிக அளவு புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருக்கும் காரணத்தால் சிங்கப்பூர் அரசு நிர்வாகத்தால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த வார தொடக்கத்தில், மசாலா ஏற்றுமதிக்கான அரசு ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய மசாலா வாரியம் (the Spices Board of India), ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகக் கூறியது. அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தரம் குறித்த சிக்கல்கள் ஏற்பட மூல காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் இணையதளங்களும் சனிக்கிழமை இயக்கத்தில் இல்லை. எத்திலீன் ஆக்சைடு என்பது தொழில் துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது மசாலாப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) இந்த ரசாயனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகிறது. 2018 ஆம் ஆண்டில், EPA "எத்திலின் ஆக்சைடு பெண்களுக்கு லிம்பாய்டு புற்றுநோயையும் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என சான்றுகள் கூறுகின்றன" என்று கூறியது. தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களை பிபிசி தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து MDH தயாரிப்புகளை அமெரிக்கா தடை செய்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள். சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன? சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. "எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம். எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது. ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன? எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது. இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை. எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள் இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும். சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல. சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு வடகிழக்கு லண்டனில் (london) உள்ள ஹைனால்ட்டில் (Hainault) மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று (30.04.2024) காலை இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 36 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை துர்லோ கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வாகனம் செலுத்தப்பட்டு, மக்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://tamilwin.com/article/swordsmanship-in-london-13-years-old-boy-dead-1714482803
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
தகுதி பெறாவிட்டாலும் பலஸ்தீன போட்டியாளர்கள் பலர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபற்ற அழைக்கப்படுவர் - சர்வதேச ஒலிம்பிக்குழு தலைவர் Published By: DIGITAL DESK 7 29 APR, 2024 | 03:29 PM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு பலஸ்தீன போட்டியாளர்கள் தகுதி பெறாவிட்டாலும், அவர்களில் சிலருக்கு போட்டிகளில் பங்குபற்ற வருமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அழைப்பு விடுக்கவுள்ளது என அதன் தலைவர் தோமஸ் பெச் தெரிவித்துள்ளார். ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றில் சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச் இது தொடர்பாக கூறுகையில், ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்வேறு விளையாட்டுக்களின் தகுதி காண் போட்டிகள் நடைபெற்று வருகின்றன எனக் கூறினார். “எனினும், பலஸ்தீன போட்டியாளர்கள் எவரும் போட்டிகளில் பங்குபற்றுதற்கு தகுதி பெறாவிட்டாலும் தகுதியான போட்டியாளர்கள் இல்லாத ஏனைய தேசிய ஒலிம்பிக் குழுக்களைப் போன்று பலஸ்தீனமும் அழைப்புகள் மூலம் பயனடைவதில் நாம் தெளிவாக உறுதிபூண்டுள்ளோம்” என தோமஸ் பெச் கூறினார். 6 முதல் 8 பலஸ்தீன போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் பங்குபற்றுவர் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். காஸா மோதல் ஆரம்பமான முதல் நாளிலிருந்து, வீர வீராங்கனைகள் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் பயிற்சிகளை தொடர்வதற்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது எனவும் அவர் கூறினார். ஒலிம்பிக்கில் உலகளாவிய பங்குபற்றுதலை ஊக்குவிப்பதற்காக, தகுதியான போட்டியாளர்கள் போதியளவில் இல்லாத தேசிய ஒலிம்பிக் சங்கங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக்குழு விசேட அழைப்பு விடுப்பது வழக்கம். சர்வதேச ஒலிம்பிக்குழு, தேசிய ஒலிம்பிக் சங்கங்கள், சர்வதேச விளையாட்டுச் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் 'முத்தரப்பு குழுவினால்' விசேட அழைப்புக்குரிய போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். 1976 ஆம் ஆண்டு பலஸ்தீன தேசிய ஒலிம்பிக் குழு உருவாக்கப்பட்டது. 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் முதல் தடவையாக பலஸ்தீனம் சார்பில் போட்டியாளர் ஒருவர் பங்குபற்றினார். அதிகபட்சமாக ரியோ 2016 ஒலிம்பிக்கில் 2 பெண்கள் உட்பட 6 பலஸ்தீன போட்டியாளர்கள் பங்குபற்றினர். 2021 இல் நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் 2 பெண்கள் உட்பட 5 பலஸ்தீன போட்டியாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, உக்ரேன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்யாவை ஒருவிதமாகவும், காஸா யுத்தம் தொடர்பாக இஸ்ரேலை வேறுவிதமாகவும் சர்வதேச ஒலிம்பிக்குழு கையாள்கிறது என்ற கருத்தை தோமஸ் பெச் நிராகரித்தார். https://www.virakesari.lk/article/182243
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஐ.சி.சி. ஆடவர் ரி - 20 உலகக் கிண்ணத்துக்கான அணியை அறிவித்த முதல் நாடு நியூஸிலாந்து 29 APR, 2024 | 02:48 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் ரி-20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு நியூஸிலாந்து முதலாவது நாடாக தனது உலகக் கிண்ண குழாத்தை இன்று (29) அறிவித்தது. அனுபிவம் வாய்ந்தவரும் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து குழாத்தில் அதிரடி ஆட்டக்காரர் டெவன் கொன்வேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்குபற்றுவதைத் தவிர்த்த டெவன் கொன்வே முன்வரிசை வீரராக அணியில் இடம்பெறுகிறார். எவ்வாறாயினும், வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே அணியில் இடம்பெறவில்லை. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திர சிகிச்சைக்குள்ளானதாலேயே அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கய்ல் ஜெமிசனும் உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை. பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் அனுபவசாலிகளுமான டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் குழாத்தில் இடம்பெறுவதுடன் சௌதீ தனது 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத இளம் அதிரடி வீரர் ரச்சின் ரவிந்த்ரா, மூத்த வீரர் மெட் ஹென்றி ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182234
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் - அமெரிக்கா 30 APR, 2024 | 12:35 PM சிஎன்என் காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து படைப்பிரிவினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது. எனினும் இதில் ஒரு படைப்பிரிவிற்கான உதவிகளை குறைப்பதா இல்லையா என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏனைய நான்கு படைப்பிரிவுகளும் இந்த தவறுகளை திருத்திக்கொண்டுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெட்சா யெகுடா படைப்பிரிவிற்கான உதவிகளை நிறுத்துவதா இல்லையா என்பதை அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை. 2022 இல் முதிய பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த படைப்பிரிவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம், அவர்கள் குறிப்பிட்ட படைப்பிரிவு குறித்து மேலதிக தகவல்களை தந்துள்ளனர் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அனைத்து சம்பவங்களும் ஒக்டோர் 7 ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182315