ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை
Everything posted by ஏராளன்
-
கிழக்கு அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைப்பு!
26 APR, 2024 | 07:19 PM கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182051
-
உண்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச வகிபாகம் தொடர்ந்தும் பொருத்தமானதே
26 APR, 2024 | 05:13 PM சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது. இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன. அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
-
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு
Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது. எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது. இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார். பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
-
யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன?
டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார். பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
-
ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இருபாலாரிலும் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா உலக சாதனை
Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல் ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும் சர்வதேச ரி20 கிரிக்கெட் உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
-
ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே - நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா
26 APR, 2024 | 03:25 PM உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
-
கல்லாறு பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய மிளகாய் தோட்டத்தை அழித்த சட்டவிரோத கும்பல்
26 APR, 2024 | 01:25 PM கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர். பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு, வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
-
100% ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு: 2019-ல் நிராகரித்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இம்முறை பரிசீலிப்பது ஏன்?
விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம். பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
-
மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய, ரஸ்ய நிறுவனங்களிடம்!
26 APR, 2024 | 03:16 PM மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ் ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
-
இலங்கையில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய கருவி
Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
-
சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை அதிகரித்தால் அரசாங்கம் மேலும் 40 பில்லியன் ரூபாவை செலுத்த நேரிடும் - நிதி இராஜாங்க அமைச்சர்
25 APR, 2024 | 07:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும் 40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது. நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது. நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
அண்ணை நம்ம அயலகத்தான் தானே இங்க விற்கப்படுவது? கொஞ்சமாக உள்ளூர் உற்பத்தியும்.
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இன்று இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை.
-
இரு தரப்பு பொது இணக்கப்பாட்டுடன் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதா ? - அநுரகுமார கேள்வி
25 APR, 2024 | 06:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதுகாப்பு தரப்பினதும், தாக்குதல்தாரிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதா என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்ஷர்கள் முன்னெடுக்க அரசியல் பிரசாரங்களின் உச்சக்கட்டமாகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மக்களாணை இல்லாத இந்த அரசாங்கம் ஒருபோதும் உண்மையை பகிரங்கப்படுத்தாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 09 நாட்கள் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் செனல் 04 ஆவணப்படம் வெளியாகியுள்ளது. பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளார். பிரதான சூத்திரதாரியை நாங்கள் அறிவோம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது. குண்டுத்தாக்குதலில் பின்னணியில் அரசியல் இல்லை என்று குறிப்பிட முடியாது. குண்டுத்தாக்குதலை தோளில் சுமந்து சென்றவர்களை முறையாக விசாரணை செய்தால் உண்மையை கண்டு பிடிக்கலாம். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக்ஷர்களின் அரசியல் செயற்பாடுகள், முஸ்லிம் அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், சிங்கள இனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை மையப்படுத்தியிருந்தது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இதன் உச்சகட்டம். குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரே 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுபேறு எழுதப்பட்டது. குண்டுத்தாக்குதலுக்கு அப்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு இரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும். குண்டுத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்திருந்தும் அதனை தடுக்காத தரப்பினர், தாக்குதல்தாரிகள் ஆகியோர் இவ்விரு தரப்பினராவர். தகவல் அறிந்திருந்தும் பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை தடுக்கவில்லை. ஆகவே பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தாக்குதல்தாரிகள் தாக்குதலை நடத்தினார்களா என்ற சாதாரண சந்தேகம் எழுகிறது. குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் வவுணத்தீவு பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் பயங்கரவாதி சஹ்ரானின் தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் திரிபுபடுத்தப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்டது. தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு தாக்குதலை நடத்த சென்ற ஜமீல் அங்கு தாக்குதலை நடத்தாமல் தெஹிவளை பகுதிக்கு சென்றுள்ளார். ஜமீல் குண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னரே அவரது வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர். மாத்தளை பொடி சஹ்ரானை தொடர்பு கொண்டு புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்த தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்குமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார். ஆகவே பாதுகாப்பு தரப்பிற்கும், தாக்குதல்தாரிகளுக்கும் இடையிலான பொது இணக்கப்பாட்டுடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் சாரா ஜஸ்மீன் உயிருடன் உள்ளாரா, இல்லையா என்பது சந்தேகத்துக்குரியது. ஆகவே தாக்குத்தாரிகளுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்ற சிக்கலுக்கு தீர்வு காணாமல் உண்மையை கண்டறிய முடியாது. உண்மையை கண்டறிவது பிரச்சினைக்குரியதாகவே உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். இவர்களின் சகாவான ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைய மக்களாணையில்லாமல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். உண்மையை கண்டறிய வேண்டுமாயின் மக்களாணையுடனான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும் செயற்பாடுகள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. நீர்கொழும்பு, புத்தளம், மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பேராயர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அவர் மாத்திரம் தலையிடாமல் இருந்திருந்தால் நாட்டில் இரத்தம் வெள்ளம் ஓடியிருக்கும். கோட்டபய ராஜபக்ஷ மீது மக்கள் நம்பிக்கை இழந்ததால் அரகலய தோற்றம் பெற்றது. மக்கள் அவரை விரட்டியடித்தார்கள். கோட்டா தன்னை ஏமாற்றினார் என்று பேராயர் குறிப்பிட்டதன் பின்னர் அவருக்கு எதிராக ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். 2019ஆம் ஆண்டு காலப்பகுதியை மறந்து விடக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/181973
-
பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?
பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஏப்ரல் 2024, 15:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சமீபத்தில் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் கொடுத்த தகவலின் அடிப்படையில், `சம்பவத்தன்று, சிறுமியின் பிறந்தநாளையொட்டி உணவு விநியோக செயலி மூலம் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கேக் வெட்டிக் கொண்டாடிய பின்னர், அனைவரும் அந்த கேக்கை சாப்பிட்டனர். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டார்' எனத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் பேக்கரி உரிமையாளர் மற்றும் இது தொடர்பான பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர். பல்பீர் சிங் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். பேக்கரியில் உள்ள கேக் மாதிரிகளை எடுத்து விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். உயிரிழந்த சிறுமியின் பெயர் மான்வி, ஐந்தாம் வகுப்பு மாணவியான மான்விக்கு மார்ச் 24 அன்று பிறந்த நாள். ஆசையாக பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய மான்வி, கேக்கை சாப்பிட்ட சில மணிநேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மார்ச் 25ஆம் தேதி உயிரிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுமி மான்வி உயிரிழப்பதற்கு முந்தைய இரவு, மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பிபிசியிடம் பேசிய பாட்டியாலா மாவட்ட சுகாதார அதிகாரி விஜய் ஜிண்டால், அந்த பேக்கரியில் இருந்து சோதனைக்காக எடுத்து வரப்பட்ட நான்கு கேக்குகளில் இரண்டு கேக்குகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது. கேக்கில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 'சாக்கரின்' கலக்கப்பட்டுள்ளது. 'சாக்கரின் (செயற்கை இனிப்பூட்டி)' உண்ணக்கூடிய பொருள் என்றும் அது ஒரு வகையான செயற்கை இனிப்பூட்டி என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சிறுமி இறந்த சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 1ஆம் தேதி கேக் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுமி சாப்பிட்ட கேக், பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006இன் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. உள்ளுறுப்பு பகுப்பாய்வு (Viscera report) மற்றும் தடயவியல் அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு விநியோக செயலியான ஜொமேட்டோ வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்த வழக்கில் இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, பேக்கரியில் இருந்து எடுக்கப்பட்ட கேக் மாதிரியில் கண்டறியப்பட்ட அந்த செயற்கை இனிப்பூட்டியான 'சாக்கரின்' என்னவென்று தெரிந்து கொள்வோமா? செயற்கை இனிப்பூட்டி என்றால் என்ன? அது சர்க்கரையைவிட சிறந்ததா? பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை இனிப்பூட்டி அல்லது சர்க்கரை அல்லாத இனிப்பூட்டி என்பது செயற்கையான முறையில் அல்லது இயற்கைக்கு மாறான முறையில் தயாரிக்கப்படும் வேதிப்பொருள். இது உணவை இனிப்பாக்கும் தன்மையுடையது. ஊட்டச்சத்து சர்க்கரை (Nutritional sugar), ரசாயன கலவை சர்க்கரை (Chemically synthesized sugar) என இரண்டு வகையான செயற்கை இனிப்பூட்டிகள் உள்ளன. இவற்றுடன், இயற்கை சர்க்கரை என்று அழைக்கப்படும் ஸ்டீவியா சர்க்கரையும் பயன்பாட்டில் உள்ளது. இது ஸ்டீவியா என்று அழைக்கப்படும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பிபிசி குட்ஃபுட்டில் வெளியான கட்டுரைப்படி, உடலின் சர்க்கரை அளவு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்காக, சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாக்கரின் என்றால் என்ன? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? சாக்கரின் என்பது நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வகை செயற்கை இனிப்பூட்டி. பிபிசி குட்ஃபுட் கட்டுரைப்படி, அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்கரின் போன்ற செயற்கை சர்க்கரைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இவை ஊட்டச்சத்து அற்ற பொருட்கள் (non-nutritive) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லை. இது வழக்கமான சர்க்கரையைவிட மிகவும் இனிப்பாக இருக்கும். மேலும் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. செயற்கை இனிப்பூட்டிகள் விளைவிக்கும் ஆபத்துகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மே 2023இல், உலக சுகாதார அமைப்பு (WHO) சாக்கரின், ஸ்டீவியா மற்றும் அஸ்பார்டேம் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது. அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இந்த அறிவுரையை உலக சுகாதார அமைப்பு வழங்கியது. இத்தகைய செயற்கை சர்க்கரைகள், டைப் 2 நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. உயிரிழக்கும் அபாயத்தைக்கூட ஏற்படுத்தும் என சான்றுகள் காட்டுகின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய மருத்துவ நூலகம் என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இது 1879ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சாக்கரின் சர்க்கரையைவிட 300 மடங்கு இனிப்பானது. அதே ஆய்வின்படி, சாக்கரின் குளிர்பானங்கள், வேகவைத்த உணவுகள் மற்றும் ஜாம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சாக்கரின் சூடுபடுத்தினாலும் அதன் இனிப்புத் தன்மையை இழக்காது. சர்க்கரைக்கு மாற்றாக குறைந்த கலோரி உள்ளதால் இது பயன்பாட்டுக்கு வந்தது. கால்சியம் சாக்கரின், பொட்டாசியம் சாக்கரின் மற்றும் அமில சாக்கரின் எனப் பல்வேறு வகைகளில் இது கிடைக்கிறது. இவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகை சோடியம் சாக்கரின்தான். நைட்ரஸ் அமிலம், சல்பர் டை ஆக்சைடு, குளோரின், அம்மோனியாவுடன் மெத்தில் ஆந்த்ரானிலேட் கலக்கும்போது 'சாக்கரின்' என்ற கலவை உருவாகிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்பத் துறையின் தலைவர் டாக்டர் பல்விந்தர் சுச் கூறுகையில், சாக்கரின் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது மற்றும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு அமெரிக்க தர நிர்ணய அரசு நிறுவனமான 'எஃப்டிஏ' (FDA) மற்றும் பிற நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். சாதாரண சூழ்நிலையில் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த இனிப்பூட்டி பொதுவாக பேக்கரிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கு உட்கொள்ளும்போது, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜூலை 2023இல், உலக சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு சேர்க்கைகளுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக் குழு ஆகியவை செயற்கை இனிப்பூட்டியான அஸ்பார்டேமை 'புற்றுநோயை உண்டாக்கும்' பொருட்களின் பட்டியலில் சேர்த்தன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி அறிக்கைப்படி, ஜூலை 2023இல் 'செயற்கை இனிப்பூட்டிகளுக்கு' இந்தியா தனது சொந்த தரநிலைகளை நிர்ணயிக்கும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cgxwngqjnv8o
-
வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
மூன்றாவது தடவையாக நேற்று 24-04-2024 புதன்கிழமை வீடு, மலசல கூடம் ஆகியவற்றை கட்டி முடிக்க 55000ரூபாவை திரு சிறிராசா ரஜிந்தன்(பேசமுடியாதவர்) உடைய வங்கிக் கணக்கில் இருவர் சேர்ந்து வைப்பிட்டுள்ளனர். 6) திரு செல்வராசா கருணைராசா பிரான்ஸ் (சுழிபுரம் கிழக்கு)) வீடுகட்டும் பணியை பூரணப்படுத்த 30000 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். 7) திரு VSK அத்தத்தா கணநாதன் குடும்பம் கனடா (சுழிபுரம் கிழக்கு) வீடுகட்டும் பணியை பூரணப்படுத்த 25000 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். இன்னும் 95000ரூபா அண்ணளவாகத் தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட நல்லுள்ளங்கள் உங்களால் இயன்ற உதவியை வழங்கலாம். சி.ரஜிந்தன் குடும்பத்தினருக்கு உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்பு கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448, +94779591047
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான விளம்பரத் தூதுவராக உசேன் போல்ட்! 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன அத்துடன் இதன் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/300191
-
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
மறுபடியுமா?!
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் ராஜபக்ஷர்கள் பதவி விலகினார்கள் - கிரியெல்ல
Published By: DIGITAL DESK 3 25 APR, 2024 | 08:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகினார்கள். கடவுளின் நீதிமன்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தண்டனைக்கு தயாராக வேண்டும். குண்டுத்தாக்குதலை நடத்த புலனாய்வு பிரிவினரே இடமளித்தார்கள். உண்மை நிச்சயம் வெளிவரும் என எதிர்க்கட்சிகளின் பிரதான கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டு விடயத்தை சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன். 'ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை கிடைத்தவுடன் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை எடுத்து, அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவது கடினம் ஏனெனில் பரிந்துரைகளை செயற்படுத்தும் போது எனக்கு நெருக்கமானவர்களை கைது செய்யவும், அவர்களின் அமைப்புக்களை தடை செய்ய நேரிடும்' என்று குறிப்பிட்டதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நியாயத்தை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தை நாடுவதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும். யுத்த விவகாரம் ஜெனிவாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது முடிவடைந்து விட்டது என்று எண்ண வேண்டாம். நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார படுகொலையாளிகள், பொருளாதார குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வருடாந்த கூட்டத்தொடரில் குறிப்பிட்டது. இதனை தொடர்ந்து பொருளாதார படுகொலையாளிகளின் பெயரை எமது உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியது. ஆகவே சர்வதேச விசாரணைகளை அலட்சியப்படுத்த முடியாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முழுமையாக சர்வதேசத்துக்கு பொறுப்பாக்க விரும்பவில்லை. உள்ளக மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை நிலை நாட்டுங்கள் என்றே சர்வதேசம் குறிப்பிடுகிறது. இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சிறந்த திட்ட யோசனைகளை கத்தோலிக்க சபைக்கு முன்வைத்துள்ளார். எமது அரசாங்கத்தில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதற்காக விசேட விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். அத்துடன் விசாரணை அலுவலகமும், விசேட நீதிமன்ற கட்டமைப்பும் ஸ்தாபிக்கப்படும். எமது அரசாங்கத்திலேயே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினர் தனக்கு தகவல்களை வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அது உண்மையாக இருக்கலாம் ஏனெனில் நிலந்த ஜயவர்தன தனது தொலைபேசியின் தகவல்களை அழித்துள்ளார். குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் முன்கூட்டியதாகவே அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் முறையாக செயற்படவில்லை. குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு புலனாய்வு பிரிவினர் இடமளித்துள்ளார்கள். குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். இவர் எப்.பி.ஐ. புலனாய்வு பிரிவுக்கு கடிதம் எழுதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். இதற்கு எப்.பி.ஐ.'முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பயங்கரவாதி சஹ்ரானுடன் ஒன்றரை வருடகாலமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த நபர் குறித்தும், ஐ.பி.முகவரி தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம்'என தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியான கலீல் பயங்கரவாதியான சஹ்ரானுடன் தொடர்புக் கொண்டுள்ளார். ஆகவே உண்மையை இவரும் அறிவார். நாட்டில் உள்ளக மட்டத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாவிடின் சர்வதேசத்தை விமர்சிப்பதை அனைத்து அரசாங்கங்களும் பழக்கமாக கொண்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா இருந்ததாக தற்போது குறிப்பிடப்படுகிறது. ஆனால் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இந்தியாவே ஆரம்பத்தில் இருந்து எச்சரித்தது. குண்டுத்தாக்குதல் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருந்ததாக விசாரணைகளை மேற்கொண்ட எந்த ஆணைக்குழுவிலும், குழுவிலும் குறிப்பிடப்படவில்லை. குண்டுத்தாக்குதல்களின் சாபத்தால் தான் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகினார். நாட்டை விட்டு தப்பியோடினார்கள். நாடு வங்குரோத்து நிலையடைந்தது. கடவுளின் நீதிமன்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தண்டனைக்கு தயாராக வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/181949
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் தீவிரம் - 100க்கும் அதிகமான மாணவர்கள் கைது Published By: RAJEEBAN 25 APR, 2024 | 12:15 PM அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைதுசெய்துள்ளனர். அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால் பல்கலைகழகம் மூடப்பட்டது. பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைகழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைகழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/181925
-
இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன், 3 மாதம் விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் சுகயீனமுற்றிருப்பதால் விடுமுறை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆதரித்துள்ளார். https://thinakkural.lk/article/300206
-
ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!
இலங்கையின் முதலாவது 'Sky bridge" சொகுசு ஹோட்டல் ‘ITC Ratnadipa Colombo’ 25 APR, 2024 | 05:00 PM ( வீ.பிரியதர்சன் ) இலங்கையின் கலை கலாசாரங்களை உள்ளடக்கிய முதலாவது 'Sky bridge" சொகுசு ஹோட்டலான ‘ITC Ratnadipa Colombo’ இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் ITC ஹோட்டல் குழுமத்தின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு வெளியில் உள்ள நாடுகளில் ITC ஹோட்டல் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பாரிய நிதி முதலீட்டு திட்டமாகும். கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலின் முகப்புப் பகுதியில் இந்து சமுத்திரமும் பின்புறப்பகுதி பேர வாவியும் அமைந்து காணப்படுவது இயற்கை அழகை எடுத்துக்காட்டுகின்றது. காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் கொள்கைக்கு அமைய இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிலைபேண்தகு அபிவிருத்தி, மீள் சுழற்சி போன்ற முக்கிய நோக்கங்களை முன்வைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 352 விருந்தினர் அறைகள், 9 உணவகங்கள், வரவேற்பு மண்டபங்கள் காணப்படுகின்றன. இரு கோபுரங்களைக் கொண்ட ‘ITC Ratnadipa Colombo’ கொழும்பு நகரத்தின் முக்கிய அடையாளமாகவுள்ள நிலையில், அதன் 140 மீற்றர் உயரமான கோபுரம் ஹோட்டலுடன் சேர்ந்தும் 224 மீற்றர் உயரமான கோபுரம் குடியிருப்புத் தொகுதியையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு செங்குத்து கோபுரங்களும் நிலத்திலிருந்து 100 மீற்றர் உயரத்தில் ”AHASA ONE - Sky Bridge ” மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ”AHASA ONE - Sky Bridge ”இன் மேல் பகுதியில் நீர் தடாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை, அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தில் ‘ITC Ratnadipa Colombo’ சொகுசு ஹோட்டல் பெரும் பங்கு வகிக்கும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பின் சான்றாக காணப்படுகின்றது. இந்தியாவுடனான பொருளாதார இணைப்பில் இருந்து இலங்கையால் விலக முடியாதென திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்திய முதலீடுகள் இலங்கையை பாதுகாப்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்கச் செய்யுமென திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டார். இது இந்தியாவுக்கு வெளியில் இடம்பெற்ற மிகப்பாரிய அளவான முதலீடுஎன்றும் இலங்கையின் கடல்வளங்கள், சுற்றுலாவளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளே இங்கு இவ்வாறானதொரு முதலீடுகளை மேற்கொள்ள காரணமாக அமைந்தது என ITC Ratnadipa Colombo’ இன் தலைவரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான சஞ்சீவ் பூரி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் தினேஸ்குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். ( படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார் ) https://www.virakesari.lk/article/181953