Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 29 APR, 2024 | 06:24 PM (நா.தனுஜா) 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (30) ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள், பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கொல்வது பாவம் அல்ல என கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தையடுத்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், அன்றேல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் டிரான் அலஸின் நிர்வாகக்குழு உயரதிகாரி ஒருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரும் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகி, பல மில்லியன் ரூபாயைப் பெற்றிருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தே இந்த முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகிளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182269
  2. காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் பலி! ராஃபா மற்றும் காசா நகரங்களில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக ஹமாஸ் அதிகாரிகள் கெய்ரோவிற்குச் செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்து 454 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/300514
  3. பிறந்தநாள் வாழ்த்துகள் புரட்சி, வாழ்க வளத்துடன்.
  4. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் - மின் பொறியியலாளர் சங்கம் எதிர்ப்பு Published By: VISHNU 29 APR, 2024 | 09:27 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது முறையற்றது என மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஸ்க பராக்ரம தெரிவித்தார். இலங்கை மின்சார சபை மின் பொறியியலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. மின்சார சபையை 12 ஆக கூறுப்படுத்தி அதன் உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு உரித்தாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பெறும் இலாபத்துக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவது பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். மின்சட்டத்தை திருத்தம் செய்வதுடன் மின்கட்டமைப்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வகிபாகத்தை வரையறுப்பதற்கும் இச்சட்டமூலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காததால் ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு அமைய செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். சில வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது அரசாங்கத்தை பொறுப்பேற்கும் தரப்புக்கு சவாலாக அமையும். உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம். ஆகவே சட்டமூலத்தில் உள்ள குறைகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/182273
  5. இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய் ஹெயன்துடுவ தெரிவித்துள்ளார். “நம் நாட்டில் சுமார் 10% பேருக்கு சிறுநீரக நோய் உள்ளது. உண்மையில் நோய் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நோய்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரக பாதிப்பை பாதிக்கும் முக்கிய காரணியாக நீரிழிவு நோய் உள்ளது. மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மற்றும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். குறிப்பாக ஒரு நாளில் 3, 1/2 லீற்றர் தண்ணீர் பருகுதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடலாம்”. https://thinakkural.lk/article/300492
  6. மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இங்கே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், அழகுப் போட்டியின் பன்முகத்தன்மை மற்றும் அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு தர வேண்டும் என்ற முடிவை எடுத்த மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். யார் இவர்: அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த அலெஜாண்ட்ரோ.. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்து வரும் இவர், அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது. இந்த வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெறும் முதல் பெண் இவர் ஆவார். அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த அழகி போட்டியைக் காண வந்த பார்வையாளர்கள் சப்போர்ட்டும் இவருக்கு தான் அதிகம் இருந்துள்ளதாம். அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதையே தனது இலக்காக வைத்துள்ளதாக அலெஜாண்ட்ரா தெரிவித்துள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றால் இந்தாண்டு செப். மாதம் மெக்சிகோவில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அவரால் பங்கேற்க முடியும். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமின்றி, அவர்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது” என்றார். கட்டுப்பாடு நீக்கம் இதற்கு முன்பு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற ரூல்ஸ் இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/300429
  7. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்..! Published By: DIGITAL DESK 3 29 APR, 2024 | 04:17 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். கனடா – டொராண்டோவிலுள்ள வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72ஆவது வயதிலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாத காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறிபோயிருந்தது. https://www.virakesari.lk/article/182238
  8. 29 APR, 2024 | 10:55 AM இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182206
  9. Published By: RAJEEBAN 29 APR, 2024 | 10:23 AM தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார். சந்திரிகா, ரணில், மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ஒன்றிணையக்கூடும் அவர்கள் ஒரே தளத்தில் காணப்படலாம் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுகள் இதற்கு தடையாக காணப்படலாம் எனவும் சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க கொள்கைகள் அடிப்படையில் அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அவர்கள் ஒன்றுசேரலாம் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் நான்காம் திகதிக்குள் நடைபெறலாம் என சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களும் அதனை தடுக்கவேண்டியவர்களும் இணைந்து செயற்பட்டனரா என்ற கேள்வி காணப்படுகின்றது இது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு இட்டுசெல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். தாஜ்சமுத்திரா ஹோட்டலில் குண்டை வெடிக்கவைக்க முயன்று தோல்வியடைந்த ஜமீல் தெகிவளைக்கு சென்றார் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அவர் மீண்டும் குண்டை வெடிக்க வைக்க முன்னர் புலனாய்வு பிரிவினர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் இது எப்படி சாத்தியம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பொடி ஜஹ்ரான் என்ற நபர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182203
  10. 29 APR, 2024 | 10:37 AM தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது. இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர். எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர். இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார். குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. https://www.virakesari.lk/article/182204
  11. Published By: DIGITAL DESK 3 29 APR, 2024 | 09:08 AM அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஓக்லாஹோமா மாநிலம் முழுவதும் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர். 20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 5,000 மக்கள் வசிக்கும் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது.அங்கு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓக்லஹோமா அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182192
  12. Published By: DIGITAL DESK 7 29 APR, 2024 | 10:01 AM பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள். குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த கொலைச்சம்பவத்தின்போது அவர்களது உறவினரான மேரி கணேசபிள்ளை என்ற 50 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஓடிச்சென்று மரங்களுக்குள் ஒழிந்து கொண்டு நடந்த சம்பவத்தை பார்த்ததாக அப்போதைய பத்திரிகைகளுக்கு அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார், இராணுவம் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவருடைய மகனும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் இராணுவத்தினர் உடனடியாக சரமாரியாக சுடத் தொடங்கி விட்டனர். பின்னர் பெண்களின் அவலச் சத்தம் கேட்டது. மறுபடியும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பெண்கள் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வெளியே வந்தனர். ஆனால் இராணுவத்தினர் அவர்கள்மீது பனை ஓலைகளை அடுக்கி எண்ணை ஊற்றி தீயை வைத்தனர். பின்னர் வீட்டுக்கும் தீயை வைத்துவிட்டு அவர்கள் வந்த லொறியில் ஏறிச் சென்றுவிட்டனர் என்று அப்பெண் கூறினார். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர் 01. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது 06) 02. உலகநாதன் ஜெயரதி (வயது 01) 03. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26) 04. கோணன் பத்தினியன் (வயது 42) 05. பத்தினியன் சீதையம்மா (வயது 34) 06. பத்தினியன் நேசன் (வயது 17) 07. பத்தினியன் பிரகாஸ் (வயது13) 08. பத்தினியன் சோபனா (வயது 12) 09. பத்தினியன் கிருசாந்தி (வயது 10) 10. பத்தினியன் அற்புதராசா (வயது 😎 11. கோணன் பொன்னம்மா (வயது 60) 12. கோணன் மேரி (வயது 23) 13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29) 14. சிந்தாமணி பாலமுருகன் (வயது 11) 15. சிந்தாமணி யோகராசா (வயது 14) 16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15) 17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30) https://www.virakesari.lk/article/182196
  13. Published By: VISHNU 28 APR, 2024 | 11:00 PM (இராஜதுரை ஹஷான்) நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பி;ல் அவர் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.நட்டடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.இலாபமடையும் நிறுவனங்களினதும்,நட்டமடையும் நிறுவனங்களினதும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியறுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் பதிலளித்துள்ளது.2014 ஆம் ஆண்டு எமக்கு துரோகமிழைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிமைத்து நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தார்.இறுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேற்றினார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/182182
  14. தோனி போன்ற சீனியர்களை கையாளும் ருதுராஜின் உத்தி; ஹைதராபாத் அணியில் அம்பலமான பலவீனம் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி முடியாமல் இதே சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரத்தில் சிஎஸ்கே தோற்றது. கிட்டத்தட்ட அதே அளவு ரன்களைக் குவித்து அதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலவீனத்தை ஆர்சிபி “எக்ஸ்போஸ்” செய்துவிட்டு சென்றது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை பெற்ற 5 வெற்றிகளில் சேஸிங் செய்து பெற்ற வெற்றிகளைவிட முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து எதிரணியை திக்குமுக்காடவைத்து வெல்வதையே ஃபார்முலாவாக வைத்திருந்தது. முதல் முறையாக ஆர்சிபிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றபோது, சன்ரைசர்ஸ் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது. இதை சிஎஸ்கே அணி இறுகப்பற்றிக் கொண்டு அதே உத்தியை கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி திடீரென உயர்வு பெற்று, 3வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 5வெற்றி 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் உயர்வால் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.810 ஆக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு இணையாக 10 புள்ளிகளுடன் கொல்கத்தா, லக்னெள, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இதனால் முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 5 அணிகளில் டெல்லி அணி மட்டுமே 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் மைனசில் வைத்துள்ளது. மற்ற 4 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பாசிட்டிவாக இருக்கிறது. கொல்கத்தா-டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் ஆட்டத்தின் முடிவில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது என்பது தெரிந்துவிடும். தற்போது நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் கொல்கத்தா அணி 2வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மோசமாகத் தோற்றதால் சன்ரைசர்ஸ் நிகரரன்ரேட் மோசமாகக் குறைந்து, 0.075 ஆகச் சரிந்துள்ளது. 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டை குறைவாக சன்ரைசர்ஸ் வைத்துள்ளது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஏனென்றால், இதே மைதானத்தில் 210 ரன்களை டிபெண்ட் செய்ய முடியாமல் லக்னெள அணியிடம் தோற்ற சிஎஸ்கே அணி, நேற்றைய ஆட்டத்தில் 212 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் அணியை டிபெண்ட் செய்து வென்றுள்ளது. ஆதலால் சிஎஸ்கே பந்துவீச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், பந்துவீச்சாளர்களிடையே ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியக் காரணம். அதேநேரம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்தகளில் 98 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் கணக்கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல கெய்க்வாட்டுக்கு துணையாக டேரல் மிட்ஷெல் 32 பந்துகளில் அடித்த அரைசதம்(52), ஷிவம் துபே(39)ரன்கள் ஆகியவையும் ஸ்கோர் உயர்வுக்கு காரணம். கடந்த சில போட்டிகளில் சொதப்பியதால் அமரவைக்கப்பட்ட மிட்ஷெல் நேற்று சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேபோல ஷிவம் துபே, கெய்க்வாட் கூட்டணி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இவர்கள் தவிர அணியில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. ரஹானே தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வருவதால், அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டு ரவீந்திரா உள்ளேவரவும் வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சீனியர் வீரர்களை கெய்க்வாட் எப்படிக் கையாளுகிறார்? வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ பனிப்பொழிவுக்கு மத்தியில் இந்த ஆடுகளத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது கடினமானது. எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. சேப்பாகத்தில் அதிகமான வெப்பம், ஈரப்பதமும் கூடுதலாக இருந்தது. நான் சதம் அடிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை, அணியின் ஸ்கோரை 220 அதற்கு மேல் நகர்த்தவே திட்டமிட்டேன். கடந்த போட்டியில்கூட நான் சதத்தைப் பற்றி நினைக்கவில்லை. சில ஷாட்களை நான் தவறவிட்டது எனக்கு வருத்தம். கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். தவறான பந்துகள் பல வீசினோம், பீல்டிங் சரியில்லை. ஆனால், தவறுகளைத் திருத்திக்கொண்டு, திட்டங்களுடன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளோம். தேஷ்பாண்டே சிறப்பாகப் பந்துவீசினார், அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். குறிப்பாக இந்த ஈரப்பதமான சூழலில், சுழற்பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 25ரன்கள் மட்டுமே கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்திய ஜடேஜாவின் பங்கு சிறப்பானது.” “'நான் அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவருமே மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். சீனியர் வீரர்களிடம் நேரில் சென்று இப்படி விளையாடுங்கள், இப்படி பந்துவீசுங்கள் எனக் கூற முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பின்னால் இருந்து கொள்கிறேன் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணி எப்படி வென்றது? லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகள் ஏதும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி செய்யாததே வெற்றிக்கு முக்கியக் காரணம். சன்ரைசர்ஸ் அணியில் எந்த பேட்டரையும் நங்கூரமிட வைக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாய்னிஸைவிட ஆபத்தான பேட்டர்கள் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறார்கள். குறிப்பாக டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம், அபிஷேக் ஆகியோர் நிலைத்துவிட்டால் ஸ்கோர் எங்கோ சென்றுவிடும் என்பதால் இந்த பேட்டர்களை தனியாகக் கட்டம் கட்டி சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். அடுத்தாக ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், பதிரணா ஆகியோர் தங்களின் ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் பேட்டர்களை திணறவிட்டனர். பந்துவீச்சில் சரி செய்யப்பட்ட தவறுகள், ஆட்டத்தின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால், அந்தத் தவறுகள் நேற்று திருத்தப்பட்டு, கட்டுக்கோப்பான பீல்டிங் வீரர்களிடையே காண முடிந்தது. குறிப்பாக மிட்ஷெல் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்சுகளைப் பிடித்து, ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த முகமது நபி சாதனையுடன் சமன் செய்தார். பெரிதாக எந்த பவுண்டரிகளையும் கோட்டைவிடாமல், கட்டுக்கோப்பாக பீல்டிங் செய்தது, மனரீதியாக சன்ரைசர்ஸ்பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது. பட மூலாதாரம்,SPORTZPICS மெருகேறிய தேஷ்பாண்டே பந்துவீச்சு சிஎஸ்கே அணியில் சொல்லிக்கொள்ளும் வகையில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பாக காய்களை நகர்த்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்குள் சென்றுவிட்டால் எந்த வீரரும் விளையாடுவிடுவார்கள், விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஐபிஎல் வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு. அதுபோல் அன்கேப்டு வீரர் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் நேற்று பெரிய மாற்றம், துல்லியம், லைன்லென்த் காணப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் ஹெட் ,பவுண்டரியும், அடுத்த ஓவரில் சிக்ஸரும் விளாசினாலும் கவலைப்படவில்லை. ஸ்லோவர் பாலை வைடாக தேஷ்பாண்டே வீச, அதை அடிக்க முற்பட்டு ஹெட் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அன்மோல்பிரித் சிங்கை வந்தவேகத்தில் தேஷ்பாண்டே வெளியேற்றினார். டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததைதப் போல், அபிஷேக் சர்மாவையும் வெளியேற்றினார் தேஷ்பாண்டே. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்து அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை தேஷ்பாண்டே அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குறிப்பாக தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆனால், இந்த திறன் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இல்லை, இந்த உத்தியை செயல்படுத்தவும் இல்லை. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் 3 பெரிய விக்கெட்டுகளை இழந்ததுமே மனரீதியாக நம்பிக்கை உடைந்துவிட்டது. லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல் பயணித்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் சிக்ஸர் அடித்தும், கெய்க்வாட் ஒரு சிக்ஸரும் விளாசினர். ரன்களை அதிகமாகச் சேர்க்க சிக்ஸர், பவுண்டரி அவசியம் என்பதை உணர்ந்து நேற்று மிட்ஷெல், கெய்க்வாட் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பேட் செய்தனர். இதனால் சிஎஸ்கே அணி 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தது. மிட்ஷெல்(52) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தபோது, 13.3 ஓவர்களில் சிஎஸ்கே 126 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் பினிஷிங் பணியை ஷிவம் துபே சிறப்பாகச் செய்து வருகிறார். சன்ரைசர்ஸ் அணியினர் நேற்று டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும், துபே தனது அதிரடியால் மிரட்டி 4 சிக்ஸர்களை விளாசி 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இந்த ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் களமிறங்கி, 2 பந்தகளில் ஒருபவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்து தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் என்ன? சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் வெளிப்பட்டதிலிருந்து தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிராக சேஸிங்கில் தோற்று, இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் சேஸிங்கில் வீழ்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி மீது எழும் கேள்வி அவர்களின் சேஸிங் முறைதான். ஏனென்றால், இதுவரை டிபெண்ட் செய்து ஒரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ், சேஸிங் செய்தும் ஒருவெற்றிதான் பெற்றுள்ளார்கள். முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணியை திணறவைத்து வெல்வதையே உத்தியாக சன்ரைசர்ஸ் இதுவரை செயல்படுத்திவந்தது. ஆனால், வலிமையான, பவர் ஹிட்டர் பேட்டர்கள் அணியில் இருந்தும், சேஸிங்கில் கோட்டைவிடுகிறது. அதிலும் தொடர்ந்து இரு ஆட்டங்களும் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணி தோற்றது அந்த அணியின் ஆட்டமுறையை சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் எனத் தெரிகிறது. ஹெட், அபிஷேக், கிளாசன், மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, அன்மோல் பிரித் சிங், அப்துல் சமது ஆகியோர் இருந்தும் சேஸிங்கில் தோல்வி அடைந்தது அந்த அணியின் அடுத்தக் கட்டநகர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. பந்துவீச்சில் நேற்று சன்சைர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதே தவிர சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நிதிஷ் ரெட்டிக்கு ஒரு ஓவர் வழங்கிய நிலையில் அப்படியே நிறுத்திக்கொண்டது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை பயன்படுத்திய அளவுக்கு சன்ரைசர்ஸ் அணி, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தவில்லை. https://www.bbc.com/tamil/articles/c0dexjmmzglo
  15. பத்தே பந்துகளில் 50 ரன்: தமிழக வீரர்களின் அதிரடியை ஊதித் தள்ளிய ஜேக்ஸ் - ஆர்சிபியால் எந்த அணிகளுக்கு நெருக்கடி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் 2024ம் ஆண்டு சீசன்தான் உண்மையில் கணிக்க முடியாத ஆட்டங்களையும், முடிவுகளை ஊகிக்க முடியாத ஆட்டங்களாகவும் அமைந்துவிட்டது என்று கூற முடியும். இதற்கு முன் நடந்த சீசன்களில் ஒரு அணி 200 ரன்களை எட்டினாலே அந்த அணிக்கு வெற்றி பெற்றுவிடுவோம் என்று மனரீதியாக நம்பிக்கையும், உற்சாகமும் வந்துவிடும். ஆனால், இந்த சீசனில் மட்டும் எவ்வளவு ஸ்கோர் அடித்தாலும் அதை டிபெண்ட் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு தேநீர் குடிக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிவிடுகிறது. அப்படித்தான் இன்று ஆர்சிபி-குஜராத் அணிகள் மோதிய ஆட்டமும் அமைந்திருந்தது!! அகமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 ஓவர்கள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விக்கெட் சரிவில் குஜராத் அணி டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. குஜராத் அணியின் சுப்மான் கில், சாஹா ஆட்டத்தைத் தொடங்கினர். அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுக்கும் என்பதில் முதல் ஓவரிலே ஆப் ஸ்பின்னர் ஸ்வப்னில் பந்துவீசினார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த சாஹா, அதே ஓவரில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். யாஷ் தயால், சிராஜ் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசவே கில், சுதர்சன் ரன் சேர்க்க தடுமாறினர். பவர்ப்ளேயில் எதிர்பார்த்த அளவு ரன் சேர்க்கமுடியாமல், 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே குஜராத் அணி சேர்த்தது. 7-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். அவரின் 4வது பந்தில் கில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷாருக்கான் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் களத்தில் இருந்து குஜராத் அணிக்காக ஆடினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஷாருக்கான் மிரட்டல் அரைசதம் வழக்கமாக ஷாருக்கான் நடுவரிசையில் களமிறங்குவார் ஆனால் அவரை 3வது வீரராக களமிறக்கினர். களத்துக்கு வந்தது முதலே ஷாருக்கான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கரன் ஷர்மா வீசிய 8வது ஓவரில் சுதர்சன் ஒருபவுண்டரி, சிக்ஸர்உள்பட 12 ரன்களை விளாசினார். மேக்ஸ்வெல் வீசிய 9-வது ஓவரில் ஷாருக்கான் ஒருசிக்ஸர், பவுண்டரி என 13 ரன்கள் சேர்த்தார். கரன் ஷர்மா வீசிய 10-வது ஓவரிலும் ஷாருக்கான் ஒருசிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்தது. கேமரூன் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்ஸர், கரன் ஷர்மா வீசிய 12ஓவரில் 2 சிக்ஸர் என ஷாருக்கான் அகமதாபாத் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 11.3 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. கிரீன் வீசிய 13வது ஓவரை வெளுத்த ஷாருக்கான் 2பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்து 24 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஷாருக்கான் களத்துக்கு வந்தது முதல் குஜராத் அணி ஓவருக்கு 10 ரன்ரேட்டில் பயணித்தது. நிதானமாக ஆடிய சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பெருமை சேர்க்கும் தமிழக வீரர் சுதர்சன் சாய் சுதர்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2022 சீசனில் இருந்து அருமையாகத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்த சுதர்சன் 23 போட்டிகளில் எட்டி, சராசரியாக 45 ரன்கள் வைத்துள்ளார், 135 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாகவே பேட் செய்து வருகிறார். சாய் சுதர்சன் 3வது வீரராக சிறப்பாக ஆடி வருவதால், அவரை தொடர்ந்து 3வதுவீரராக களமிறக்கவே குஜராத் அணி நிர்வாகமும் விரும்பியது. சுழற்பந்துவீச்சை எளிதாக,அனாசயமாக ஆடக்கூடிய சுதர்சன் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தக்கூடியவர். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து 166 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். சுழற்பந்துவீச்சை எந்த அளவுக்கு விரும்பி ஆடக்கூடியவரோ அதேபோல வேகப்பந்துவீச்சையும் எளிதாக சுதர்சன் ஆடும் திறமை உடையவர். இந்த சீசனில் வேகப்பந்து வீ்ச்சுக்கு எதிராக சுதர்சன் 122 ஸ்ட்ரைக் ரேட்டும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 137 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். 2023 சீசனில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 148 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரர் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர் ப்ளேவில் 18 பந்துகளில் 16 ரன்கள் என நிதானமாக பேட் செய்த சுதர்சன் ஷாருக்கான் களத்துக்கு வந்தபின் பேட்டிங் கியரை மாற்றி ரன் சேர்ப்பை வேகப்படுத்தினார். 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ரன் சேர்ப்பை இன்னும் வேகப்படுத்திய சுதர்சன் 13 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இன்றை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 205 ஸ்ட்ரைக் ரேட் வைத்து 20 பந்துகளில் 41 ரன்களும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கலக்கிய தமிழக வீரர்கள் முகமது சிராஜ் 15வது ஓவரை வீசியபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. அரைசதம் நிறைவு செய்து பேட் செய்த ஷாருக்கான், முதல் பந்திலேயே யார்கரில் க்ளீன் போல்டாகி 58 ரன்களில் (30பந்துகள், 5 சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முதல் 13 ஓவர்களுக்குள் குஜராத் அணி ஷாருக்கான் அதிரடியால் 43 ரன்கள் சேர்த்தது. 3வது விக்கெட்டுக்கு ஷாருக்கான், சுதர்சன் இருவரும் சேர்ந்து 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர். நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி மந்தமாக ஆடும் என்று குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் 7-வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை 100 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். 16 ஓவர்களுக்குப்பின் சுதர்சன், மல்லர் இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். கிரீன் வீசிய 17-வது ஓவரில் சுதர்சன் 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார். சிராஜ் வீசிய 19வது ஓவரில் சுதர்சன் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி, 2வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஆனால், மிகவும் சிரமமான அந்த கேட்சை ஜேக்ஸ் தவறவிட்டார். அந்த ஓவரில் சுதர்சன் பவுண்டரி அடித்து 13 ரன்கள் சேர்த்தார். யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரில் மில்லர் சிக்ஸர் உள்பட 13 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. தமிழக வீரர் சாய்சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து(4 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், மில்லர் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கணினி கணிப்பை பொய்யாக்கிய பேட்டர் பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி அணி வெற்றி பெற 84 பந்துகளில் 138 ரன்கள் தேவைப்பட்டது. கணினியின் கணிப்புகள் ஆர்சிபி வெற்றிபெற 38.33 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், 24 பந்துகள் மீதமிருக்கையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கணினியின் கணிப்பையே பொய்யாக்கியது. கணினியின் கணிப்பை பொய்யாக்கியதற்கு முக்கிய காரணமான பேட்டர் வில் ஜேக்ஸ். அதிரடி என்று சொல்வதைவிட காட்டடி அடித்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். 243 ஸ்ட்ரைக் ரேட்டில் ஜேக்ஸ் ஆடினார். 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார். குஜராத் அணியின் பேட்டர்கள் 10 சிக்ஸர்கள் அடித்த நிலையில் அந்த 10 சிக்ஸர்களையும் ஆர்சிபி பேட்டர் வில் ஜேக்ஸ் ஒருவரே அடித்து 200 ரன்களை அனாசயமாக சேஸிங் செய்ய உதவினார். குறிப்பாக 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆக்ரோஷம் தெறித்த பேட்டிங் 3வது வீரராக களமிறங்கிய ஜேக்ஸ் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக பேட் செய்தார். ரன்களைவிட பந்துகளை அதிகம் வீணாக்கி ஜேக்ஸ் ஆடினார். ஆனால், 10 ஓவர்களுக்குப்பின் ஜேக்ஸ் மதம் பிடித்த யானை போன்று ஆக்ரோஷமாக பேட் செய்து குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை ஓடவிட்டார். குறிப்பாக மோகித் சர்மா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 29 ரன்களை ஜேக்ஸ் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு 2 அல்லது 3 ஓவர்கள் வரை ஆகும் என்று ரசிகர்கள் எண்ணி தேநீர் குடிக்க சென்றவர்களுக்கு திரும்பி வந்தபோது வியப்புதான் காத்திருக்கும். ஏனென்றால், ரஷித்கான் வீசிய 16-வது ஓவரில் வில் ஜேக்ஸ் 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து ஆர்சிபி அணியை 24 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெறவைத்து அஹமதாபாத் அரங்கையே வியப்பில் ஆழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கோலி, 32 பந்துகளில் அரைசதம் அடித்து 44 பந்துகளில் 70 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேக்ஸின் மிரட்டலான ஆட்டத்தின் முன் கோலியின் அரைசதம் கவனிப்பின்றி மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாவப்பட்ட பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் பாவப்பட்டவர்கள். வில் ஜேக்ஸுக்கு எப்படி பந்து வீசுவதென்று தெரியாமல் சிக்கித் தவித்தனர். இதில் பலிகடாவாகியது ரஷித் கான், மோகித் சர்மாதான். இருவரின் ஓவரில்தான் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது, மோகித் சர்மா 2 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார், ரஷித் கான் நிலைமை அதைவிட மோசம் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒட்டுமொத்த குஜராத் பந்துவீச்சாளர்களும் ஜேக்ஸ் அதிரடியால் துவைத்து தொங்கவிடப்பட்டனர். ஓமர் ஜாய் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார். இதுபோன்ற பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக சிக்கிக் கொண்டு பேட்டர்களால் கொடுமையாக வதம் செய்யப்படுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் இதுவரை கட்டிக்காத்துவந்த தன்னம்பிக்கை எனும் சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவை பேட்டர்களை கிழித்து தொங்கவிடப்படுகின்றன. ரசிகர்களின் ரசனைக்காக, பந்துவீச்சாளர்கள் பலியிடப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "நம்பிக்கை துளிர்விடுகிறது" ஆர்சிபி கேப்டன் டூப்பிளெசிஸ் கூறுகையில் “ அருமையான விக்கெட். நாங்கள் முதலில் பந்துவீசியபோதே சேஸிங் எளிதாக இருக்கும் என நினைத்தோம். கடந்த சில போட்டிகளை விட தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம். எங்கள் அணிக்குள் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கிவிட்டது. பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சி பெற்று நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார்கள். நாங்கள் இப்போது அடிப்படையான விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார் நெருக்கடி தரும் ஆர்சிபி இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், நிகர ரன்ரேட்டில் முன்னேறி வருகிறது. இதுவரை ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில்தான் இருக்கிறது, ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.415 ஆகக் குறைந்துவிட்டது. தற்போது 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என 3 அணிகள் இருக்கின்றன. இதில் ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்களும், மற்ற இரு அணிகளுக்கும் 5 லீக் ஆட்டங்களும் உள்ளன. ஆர்சிபி அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் இதுபோல் பெரிய வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. ஆர்சிபியின் தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது பாதியில் உள்ள அனைத்து அணிகளுமே நெருக்கடியில் சிக்கியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES மோசமாகும் குஜராத் குஜராத் அணி கடந்த 10 நாட்களில் சந்திக்கும் 3வது தோல்வி இதுவாகும். 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி கூடுதலாக 2புள்ளிகள் பெற்றுள்ளதேத் தவிர நிகர ரன்ரேட்டில் ஆர்சிபிக்கும் மோசமாக மைனஸ் 1.113 ஆக இருக்கிறது. அடுத்து ஒரு போட்டியில் கூட குஜராத் அணி தோற்றாலும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் வந்துவிடும். ஏனென்றால், நிகர ரன்ரேட் மற்ற அனைத்து அணிகளையும் விட மோசமாக இருப்பது பெரும் பின்னடைவாக மாறும். https://www.bbc.com/tamil/articles/cprg1v1lgero
  16. Published By: DIGITAL DESK 7 28 APR, 2024 | 08:59 PM (எம்.மனோசித்ரா) ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான 12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். தற்போது நாடுகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்ந கூட்டம் ஒரு தளமாக விளங்குகிறது. இக்கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றமை விஷேட அம்சமாகும். பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்த இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதன் போது கலந்துரையாடகள் நடைபெற்றன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12ஆவது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டு முயச்சிகளை உருவாக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமுகமாக அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/182163
  17. Published By: VISHNU 28 APR, 2024 | 07:08 PM காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடுதிரும்பியுள்ளார். இந்நிலையில் உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182176
  18. கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும். அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300441
  19. 28 APR, 2024 | 05:26 PM பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார். பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182161
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ ஆய்விதழான `லான்செட்` சமீபத்தில் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது. மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தனர். எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோயால் ஏற்படும் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் இது ஐந்தாவது பெரிய காரணமாக உள்ளது. இந்தியாவில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒவ்வோர் ஆண்டும் 33,000 முதல் 42,000 புதிதாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 30% அதிகரித்த ப்ராஸ்டேட் புற்றுநோய் பட மூலாதாரம்,RITU MARWA படக்குறிப்பு,ரிது மர்வா மற்றும் ராஜேஷ் குமார் லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ள அதே வேளையில், தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் குமாருக்கு 2022 அக்டோபரில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அவரது மனைவி ரிது மர்வா பிபிசியிடம் ஒரு தொலைபேசி உரையாடலில், "என் கணவர் சிறுநீரை அடக்கி வைப்பதில் பிரச்னைகளை எதிர்கொண்டார். நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இந்த பிரச்னைக்குப் பிறகு, எங்கள் குடும்ப மருத்துவர் அல்ட்ராசவுண்ட் செய்யச் சொன்னார்," என்றார். பரிசோதனையில் ராஜேஷ் குமாருக்கு ப்ரோஸ்டேட் பெரிதாகி இருப்பது தெரிய வந்ததால், மருத்துவர் அவரை ப்ரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் அல்லது பி.எஸ்.ஏ பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னார். இதையடுத்து எம்.ஆர்.ஐ., பயாப்ஸி ஆகிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ராஜேஷ் குமாருக்கு இரண்டாம் நிலை ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ப்ரோஸ்டேட் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES `ப்ரோஸ்டேட்` ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைந்துள்ளது. இது ஒரு வால்நட் அளவில் இருந்தாலும் வயது ஆக ஆகப் பெரிதாகிறது. ஆண்களுக்கு 45-50 வயதிற்குப் பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், எல்லா ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை. ப்ராஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகுதான், புற்றுநோய் சந்தேகம் இருந்தால் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சை துவங்கப்படுகிறது. இந்த சிகிச்சை 68 வயதான ராஜேஷ் குமாருக்கும் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ப்ரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளரும் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையில் பேராசிரியராக இருந்த மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இதுபற்றிக் கூறுகையில், இந்த நோய் வயது அதிகரித்த பிறகு தோன்றும் என்றார். மேலும், இது உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்றும் கூறினார். தைராய்டு புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பகப் புற்றுநோய்களும் உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. "இதற்கு முன்பு இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது, அதாவது 60 வயது. ஆனால் இப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது," என்று அவர் கூறுகிறார். டெல்லியின் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் விக்ரம் பருவா கௌசிக், "மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததால், ப்ரோஸ்டேட் புற்றுநோயும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்," என்றார். பட மூலாதாரம்,DR SVS DEO படக்குறிப்பு,மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இந்தியாவில் உள்ள புற்றுநோய் பதிவேட்டின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருப்பதாக மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். இந்தப் புற்றுநோய் தரவு, புற்றுநோய் பதிவேட்டில் இருந்து கிடைப்பதாகவும் ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர். இந்தப் புற்றுநோய்க்கான பரிசோதனைத் திட்டம் இல்லாததால் ப்ரோஸ்டேட் புற்றுநோயின் வழக்குகள் குறைவாக இருப்பதாகவும், ஆனால் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு ப்ரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் நடப்பதாகவும் அவர் கூறுகிறார். எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சவாலானது, ஏனெனில் இதன் காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன. இது ஒரு வாழ்க்கை முறை நோயா? பட மூலாதாரம்,DR PRADEEP BANSAL படக்குறிப்பு,மருத்துவர் பிரதீப் பன்சல் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறையின் இயக்குநரான மருத்துவர் பிரதீப் பன்சல், ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காரணம் மரபணு என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம் என்கிறார். ஆனால் சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்றும் கூற முடியாது, ஏனெனில் புற்றுநோய் வருவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. மேலை நாடுகளில் இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது, ஏனென்றால் இது உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் பன்சால். சமீபத்திய லான்செட் அறிக்கைப்படி, ப்ரோஸ்டேட் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுகிறது. மேலும் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தாமதமான நோயறிதல் ஒரு பெரிய பிரச்னை. ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அந்த நபரை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரின் பி.எஸ்.ஏ அளவும் அந்த நபரின் வயதைப் பொறுத்தது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின்படி, எந்த பி.எஸ்.ஏ அளவும் சாதாரணமானது அல்லது அசாதாரணமானது அல்ல. முன்பு 4ng/mL அல்லது அதற்கும் குறைவானது சாதாரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இதைவிடக் குறைவாக உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதையும், இதைவிட அதிகமாக அதாவது 10ng/mL வரை உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாததையும் அவதானிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் கீழ்கண்ட பிரச்னைகள் எழுந்தால் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது: அடிக்கடி சிறுநீர் கழித்தல் இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது சிறுநீர் தானாக வெளியேறுதல் சிறுநீரில் ரத்தப்போக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், புற்றுநோய் எலும்புகளுக்குச் செல்கிறது, அதன் பிறகு கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்: முதுகு வலி எலும்பு முறிவு எலும்புகளில் வலி இதுகுறித்து டாக்டர் பிரதீப் பன்சால் கூறும்போது, “புற்றுநோய் இளம் நோயாளிகளிடம் (வயது 60-75) கண்டறியப்படுகிறது, அது புரோஸ்டேட் சுரப்பியில் மட்டுமே இருந்தால், ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம். இது அவர்களின் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்கிறது. ஆனால் அது எலும்புகளுக்குப் பரவினால் அது சிக்கலானது, மேலும் அதற்கான சிகிச்சை வேறு விதமானது," என்றார். இதற்கான சிகிச்சை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும், பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ப்ரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும் என்றும் ஆனால் புற்றுநோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் நிலையைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும், ஏனெனில் இது சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய். ராஜேஷ் குமார் அறுவை சிகிச்சை செய்து சகஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இது மரபணு சார்ந்த நோயா? பட மூலாதாரம்,GETTY IMAGES புற்றுநோய் என்பது மரபணு சார்ந்த ஒரு நோய், அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு குடும்பத்திலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் புற்றுநோய் இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குடும்பத்தில் யாருக்காவது ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் 45 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் மார்பகப் புற்றுநோயைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் நிலைமை என்ன? பட மூலாதாரம்,DR VIKRAM BARUA KAUSHIK படக்குறிப்பு,மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் லான்செட் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரிக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பணக்காரர்கள் தற்போது தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர் என்றும், அதன் நேர்மறையான விளைவைக் காண 10 ஆண்டுகள் ஆகும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். "கடந்த 80கள் மற்றும் 90களில், அந்த நாடுகளின் மக்கள் மலிவான நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொண்டார்கள்." மேலும், அதன் விளைவு இப்போது தெரிவதாகக் கூறுகிறார் அவர். மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் கூறுகையில், அமெரிக்காவிலும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் அதிக அளவில் புற்றுநோய் பரிசோதனை இருப்பதாகவும், அதனால்தான் ப்ராஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி இருப்பதாகவும், அவர் கூறுகிறார். ஆனால் இந்த மருத்துவர்கள் அனைவரும் இந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியம் என்பதாலும் அதன் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாலும், நோயாளிகள் நீண்டநாள் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். https://www.bbc.com/tamil/articles/cv2d07rdzq9o
  21. அவுஸ்திரேலியா – இலங்கை புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை கொழும்பில் புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதி பூண்டுள்ளது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல்சூழலைக்கண்காணித்தல்) எனப்பொருள்படும் ‘Disi Rela’ எனஇந்நடவடிக்கைக்குபெயரிடப்பட்டுள்ளது. இப்புதியகூட்டுநடவடிக்கையில், அவுஸ்திரேலியஎல்லைப்படையும் (ABF) இலங்கை கடலோர காவல்படை திணைக்களமும் (SLCG) இணைந்து செயற்படும் இதன்அறிமுக நிகழ்வில் இத்திட்டம்தொடர்பில் தெளிவுபடுத்திய Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டுமுகவர் நிறுவன) கொமாண்டர்ரியர்அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy)தெரிவிக்கையில் “Disi Rela நடவடிக்கையானது, இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை கோடிட்டுக்காட்டுகிறது” என்றார். அவர்மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா – இலங்கை உறவை தங்கதர நிலைக்கு (Gold Standard )நாம்ஒப்பிடுகிறோம். Disi Rela திட்டம் தொடர்பான இன்றையஅறிவிப்பானது, அதைபிளாட்டினம் நிலைக்கு கொண்டுசெல்கிறது. இந்ததிட்டமானது, கடல்சார்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இருநாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனநான் எதிர்பார்க்கிறேன்.” என்றார். ஆட்கடத்தல், மனிதகடத்தல்உட்படஏனையகடல்சார்குற்றவகைகள்பற்றியசமூகவிழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட, அவுஸ்திரேலியஎல்லைப்படை (ABF) மற்றும் இலங்கை கடலோரகாவல்படை (SLCG) இடையே செயற்பாட்டு திறன்கள் மற்றும் தகவல்களைப் பகிர்வதை Disi Rela திட்டம் உள்ளடக்கியுள்ளது. இலங்கை கடலோரக்காவல்படை திணைக்களத்தின்பணிப்பாளர் நாயகம், ரியர்அட்மிரல் பூஜிதவிதான இங்குகருத்துத் தெரிவிக்கையில், “கடல்சார்பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வலுவான சமூகவிழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒருதளத்தை Disi Rela வழங்குகிறது.” என்றார். சந்தேகத்திற்கிடமானஅல்லதுசட்டவிரோதகடல்சார்நடவடிக்கைகள்குறித்து 041 750 1400 எனும்பிரத்தியேகஉடனடிதொலைபேசிஅழைப்புமூலம் 24 மணிநேரமும் வாரத்தில் ஏழுநாட்களும்முறைப்பாடு செய்யலாம். https://thinakkural.lk/article/300449
  22. நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,63,438 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/300420
  23. ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இனிமேல் பொதுமக்கள் முதற்கட்ட புகார் கொடுக்க பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியதில்லை. இந்த புகாரை “ஐஜிபியிடம் சொல்லுங்கள்” (tell IGP ) என்ற இணையதளம் மூலமாக பொலிஸ் நிலையம் நிலையம் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உதவி கண்காணிப்பாளர், சிரேஷ்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம். பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரில் ஒருவருக்கு இதன் நகலை அனுப்புவதற்கான அமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் முதலில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளது. 22 போலீஸ் நிலையங்களில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறைப்பாடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஸ்டேஷன் கமாண்டர் உத்தரவின் பேரில் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/300424 https://telligp.police.lk/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.