ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை
Everything posted by ஏராளன்
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
30 APR, 2024 | 04:12 PM லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார். காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வேளை அவர்களில் ஒருவர் வாளால் குத்தப்பட்டார் ஏனையவர்கள் பொலிஸாரையும் அம்புலன்சையும் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பத்து நிமிடங்களின் பின்னர் பல பொலிஸ்கார்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். அதன் பின்னர் நபர் ஒருவர் ஓடுவதை பார்த்தேன், அவர் அங்குள்ள வீடுகளிற்குள் நுழைய பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை அவ்வேளை அவர் மீது டேசரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை பொலிஸார் பிடிப்பதையும் அவர் அதனை எதிர்ப்பதையும் பார்த்தேன். பத்து 15 நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது அந்த நபர் ஆட்களை வெட்டினார் நால்வரை குத்தினார் என கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182342
-
இன்றைய வானிலை
கடும் இடி, மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்கவும்! Published By: DIGITAL DESK 3 30 APR, 2024 | 04:17 PM இன்று மாலை புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை (29) பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக மாத்தளை இரத்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை உயிரிழந்துள்ளனர். இதேவேளை, முல்லைத்தீவு துணுக்காய் அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182344
-
யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த 25.04.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் பரிசோதனையில் சிக்கிக் கொண்டுள்ளன. வழக்கு தாக்கல் இதனையடுத்து 3 உணவகங்களுக்கும் எதிராக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் மூன்று உணவகங்களுக்கும் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தமையுடன் மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டுள்ளார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் மூன்று உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன. https://tamilwin.com/article/3-sealed-restaurants-in-jaffna-1714466164
-
போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
30 APR, 2024 | 05:29 PM போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார். குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம்செய்கையில், மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், போன்ற விண்ணப்பங்களை முன்வைத்ததோடு முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். https://www.virakesari.lk/article/182355
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES 46 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இதுவரை ரேவண்ணா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலக அதிகாரி ஒருவர் இதை மறுத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் போலியானவை என்று கூறியிருக்கிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்னாடக மாநிலட் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் மாமாவுமான ஹெச்.டி.குமாரசாமி, இந்தச் சம்பவத்திற்காக ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட முடிவுசெய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை (ஏபர்ல் 29) தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கர்நாடக மாநில காவல்துறை ஐ.ஜி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரும் அக்குடும்பத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் சதி என்று கூறியுள்ளார். 2000-க்கும் மேற்பட்ட போட்டோ வீடியோ காட்சிகள் கர்நாடக முதல்வர் கே சித்தராமையா தெரிவித்தார், கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறினார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுள்ளது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன. "இந்தப் பென்-டிரைவ்கள் பேருந்து இருக்கைகளிலும், பேருந்து நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டன," என்று ஓர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார். "இந்தப் பென்-டிரைவ்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட ஃபைல்கள் இருந்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, இவை வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டன," என்று அந்த அதிகாரி கூறியிருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் 'வீடியோக்களைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது' இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். "சில வீடியோக்களைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "ஒரு பெண் 'தயவுசெய்து வேண்டாம், தயவுசெய்து வேண்டாம்' என்று கெஞ்சுகிறாள். அதைப் பார்த்தாலே பதறுகிறது," என்று அவர் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28), ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார். "நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெ.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார். "அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களில் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார். மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது தந்தை இந்தக் கூற்றை மறுத்து விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாங்கள் பயந்து ஓட மாட்டோம். நாங்கள் இங்கேயே இருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `இத்தகைய கொடூரமான செயலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்` எப்படி விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பட மூலாதாரம்,HD DEVE GOWDA'S X ACCOUNT படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா (வலது) பா.ஜ.க மீது எழும் கேள்வி "நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வேட்பாளரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்தே" பா.ஜ.க கூட்டணி ஏன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் நிறுத்தியது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதியை கேள்வி கேட்டு ஒரு கர்நாடக மாநில அமைச்சர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்த வீடியோக்கள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைமையிடம் தெரிவித்ததாக `தி இந்து` நாளிதழின் செய்தியைத் தொடர்ந்து இந்தலக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க-வின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்.டி.டி.வி செய்தி சேனலிடம், "ஒரு கட்சியாக எங்களுக்கும் இந்த வீடியோக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விசாரணையைப் பற்றி எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை," என்று கூறினார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. ஹெச்.டி.ரேவண்ணாவின் சகோதரரும், முன்னாள் கர்னாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி, திங்கள்கிழமை, பிரஜ்வல் ரேவண்ணாவையும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவையும் `சமூகத்திற்கு அவமானம்` என்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “[எங்கள்] குடும்பத்தைக் குறை கூறாதீர்கள். எச்.டி. ரேவண்ணாவும் அவரது குடும்பத்தினரும் தனியாக உள்ளனர். அவரது செயல்களை நான் கண்காணிப்பதில்லை," என்றார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவர் மீதும் கட்சித் தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் தேவகவுடா தெரிவித்தார். இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இது பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க-வை சேர்த்தோ தனித்தனியாகவோ குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பாதிக்கலாம். இது `வெட்கக்கேடான விஷயம்` என்று பா.ஜ.க தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், தற்போதைய நிலவரத்தப் பார்த்தால், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இந்தப் புயலில் இருந்து வெளியேறும் என்று தெரிகிறது. இருப்பினும், அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக கர்நாடகாவில் மீதமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியும். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் இருந்து இந்த வீடியோக்களின்மீது தடை ஆணை பெற்றார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் பா.ஜ.க தலைவர் தேவராஜ் கவுடா, டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திராவுக்கு கடிதம் எழுதி, பிரஜ்வல் ரேவண்ணா அல்லது அவரது குடும்பத்தினர் யாரையும் கூட்டணியில் இருந்து வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கோரியிருந்தார். ஆனால், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டவுடன், யாரை வேட்பாளராக நிறுத்துவது, எ எனுஇநும் முடிவை கூட்டணி கட்சிக்கே விட்டுவிட வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்திருந்தது. ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுமைப் பேராசிரியர் நாராயணா பிபிசி ஹிந்தியிடம், "இந்தச் சம்பவம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில், ஓட்டுப்பதிவு நடந்த போது, ஹசன் நகரில் மட்டுமே, வீடியோ அடங்கிய பென்-டிரைவ்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மீதமுள்ள 14 இடங்களில் பெண்களின் வாக்குகளை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தால், அது பாஜகவுக்கு தார்மீக சவால் அளிக்கும்," என்றார். அரசியல் விமர்சகர் உமாபதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவே கவுடா உயிருடன் இருக்கும் வரை, தனது கட்சியை உடைய விடமாட்டார், என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cer382232kyo
-
மூச்சை இழுக்கும்போது பெண்ணின் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் சென்ற மூக்குத்தி - என்ன ஆனது?
படக்குறிப்பு,நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு. கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு மூச்சை இழுக்கும்போது தற்செயலாக அவரது மூக்குத்தி திருகு மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிட்டது. அப்போது அவர் அதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. காரணம் திருகு வயிற்றுக்குள் சென்றுவிட்டது, எனவே தன் செரிமான அமைப்பு வழியாக அது வெளியே சென்றுவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலுக்குள் சென்றுவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது? இந்தியாவில் உள்ள பெரும்பாலான திருமணமான இந்து பெண்களைப் போலவே, 35 வயதான வர்ஷாவும் ‘16-17 ஆண்டுகளுக்கு முன்பு’, அதாவது திருமணமானதிலிருந்து மூக்குத்தி அணிந்திருந்தார். திருமணத்தின் அடையாளமாக மூக்குத்தி கருதப்படுகிறது. "அப்போது திருகு அவிழ்ந்திருந்தது எனக்குத் தெரியவில்லை" என்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசியில் அவர் பிபிசியிடம் கூறினார். "நான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். ஆழமாக மூச்சை உள்ளிழுத்தபோது திருகு உள்ளே சென்றுவிட்டது. அது என் மூச்சுக் காற்றுப்பாதைக்குள் சென்றது எனக்குத் தெரியாது. அது என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது என்று நான் நினைத்தேன்" என்று இரண்டு டீனேஜ் பையன்களின் தாயான வர்ஷா கூறினார். கடந்த மாதம் வர்ஷாவின் நுரையீரலில் இருந்து இந்த திருகை அகற்றிய, மெடிகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் தேப்ராஜ் ஜஷ், இந்த சம்பவத்தை "மிகவும் அரிதானது" என்று விவரித்தார். கடந்த பத்தாண்டுகளில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் மட்டுமே இந்திய ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. "சில நேரங்களில் உலர் பழங்கள் அல்லது வெற்றிலை, நுரையீரலுக்குள் சிக்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் சிறு குழந்தைகள் அல்லது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே நடக்கும். முப்பதுகளில் இருக்கும் பெண் நோயாளி ஒரு விதிவிலக்கு," என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு,திருமணமானதில் இருந்து 16-17 ஆண்டுகளாக மூக்குத்தியை அணிந்திருந்தார் வர்ஷா. ‘தொடர் இருமல், மூச்சுத் திணறல், நிமோனியா’ திருகு உள்ளே இழுத்து, ஒரு மாதத்திற்குப் பிறகுதான வர்ஷாவின் உண்மையான பிரச்னை தெரிய வந்தது. தொடர் இருமல், மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா அறிகுறிகளுடன் அவர் மருத்துவரிடம் சென்றார். மூக்கில் முன்பு ஏற்பட்ட காயம் காரணமாகவே மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் நினைத்தார். மருந்துகள் பலனளிக்காததால் நுரையீரல் நிபுணரை அவர் அணுகினார். அவரது நுரையீரலில் ஒரு பொருள் இருப்பதை சிடி ஸ்கேன் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட மார்பு எக்ஸ்ரே அது என்ன என்பதைக் காட்டியது. நுரையீரல் நிபுணர் ஃபோர்செப்ஸ் மற்றும் ஒரு சிறிய கேமரா கொண்ட ஃபைபர் ஆப்டிக் ப்ரோன்கோஸ்கோப்பை அவரது காற்றுப்பாதைக்குள் அனுப்பினார். ஆனால் ‘கூர்மையான பளபளக்கும் பொருளை’ அந்த கருவியால் பிடிக்கமுடியாதால் அதனால் திருகை வெளியே இழுக்க முடியவில்லை. பின்னர் அந்த மருத்துவர் வர்ஷாவை டாக்டர் ஜஷ் இடம் பரிந்துரைத்தார். "நாங்கள் முதலில் நோயாளிக்கு கவுன்சலிங் செய்ய வேண்டியிருந்தது. முதல் செயல்முறைக்கு பிறகு உடனே இரண்டாவது செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதைப் பற்றி அவர் கவலைப்பட்டார். ஆனால் ஒரு வெளிப்பொருளை ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலேயே மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அவருக்கு விளக்கினோம்.” அவருடைய உடல் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவரது நிமோனியா மோசமாகிவிடும் என்றும் நாங்கள் அவரிடம் சொன்னோம்," என்று டாக்டர் ஜஷ் கூறினார். படக்குறிப்பு,வர்ஷாவின் நுரையீரலில் உலோகப் பொருள் இருப்பதை எக்ஸ்ரே காட்டியது. அவரது நுரையீரலின் ஒரு பகுதியைத் துண்டிக்கும் அறுவை சிகிச்சையைக் கூட தாங்கள் செய்ய வேண்டி வரலாம் என்று வர்ஷாவிடம் கூறியதாக மருத்துவர் ஜஷ் தெரிவித்தார். ஆனால் இது நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஃபைப்ரோப்டிக் ப்ரான்கோஸ்கோப் முறையை மீண்டும் முயற்சிக்க அவர் முடிவு செய்தார். "வழக்கமான ப்ரான்கோஸ்கோப் கொண்டு ஒரு கூர்மையான பொருளை வெளியே எடுப்பது மிகவும் கடினம். அந்தப் பொருள் அவரது நுரையீரலில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருந்தது, அதைச்சுற்றி திசுக்கள் ஏற்கனவே வளர்ந்திருந்தன.” "நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டி இருந்தது. ஏனெனில் வெளியே இழுக்கும்போது திருகு, மிகவும் குறுகலாக இருக்கும் மூச்சுக் காற்றுப்பாதையுடன் தொடர்பு கொண்டால், அது காயத்தை ஏற்படுத்தலாம். அப்படி நடந்தால் ரத்தபோக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலைமை உருவாகலாம்” என்கிறார் மருத்துவர் ஜஷ். ஆனால் 30 நிமிடங்கள் நீடித்த இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு வர்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். “அவர் சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளுக்காக வந்திருந்தார். அவர் இப்போது நலமாக இருக்கிறார்" என்று மருத்துவர் ஜஷ் கூறினார். மீண்டும் மூக்குத்தி அணியத்தொடங்கி விட்டீர்களா என்று நான் வர்ஷாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார். "மாட்டவே மாட்டேன். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தில்லை. ஆனால் அது நடந்துவிட்டது. அது மீண்டும் நிகழ்வதை நான் விரும்பவில்லை," என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/c6pylrnq9jmo
-
ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா!
உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அவுஸ்திரேலியா - இலங்கை புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை 30 APR, 2024 | 01:49 PM கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy) குறிப்பிட்டார். கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி அன்று புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும் ‘Disi Rela’ என இந்நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டு நடவடிக்கையில், அவுஸ்திரேலிய எல்லைப் படையும் (ABF) இலங்கை கடலோர காவல்படை திணைக்களமும் (SLCG) திக்கோவிட்டாவில் இருந்து சிலாபம் வரை ஒரு வார கால வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும். இதன் அறிமுக நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy) தெரிவிக்கையில் "Disi Rela நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை கோடிட்டுக் காட்டுகிறது" என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா - இலங்கை உறவை தங்க தர நிலைக்கு (Gold Standard) நாம் ஒப்பிடுகிறோம். Disi Rela திட்டம் தொடர்பான இன்றைய அறிவிப்பானது, அதை பிளாட்டினம் நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த திட்டமானது, கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார். ஆட்கடத்தல், மனித கடத்தல் உட்பட ஏனைய கடல்சார் குற்ற வகைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட, அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) இடையே செயற்பாட்டு திறன்கள் மற்றும் தகவல்களைப் பகிர்வதை Disi Rela திட்டம் உள்ளடக்கியுள்ளது. இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பூஜித விதான இங்கு கருத்துத் தெரிவிக்கையில், "கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வலுவான சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை Disi Rela வழங்குகிறது." என்றார். “Disi Rela எனும் பெயரின் அர்த்தம் குறிப்பிடுவது போன்று, எமது கடல்சார் பிராந்திய சூழலைக் கண்காணிப்பது அனைவரின் பொறுப்பாகும். வேறு வகையில் கூறுவதானால், அனைத்து மட்டத்திலும் உள்ள இலங்கையர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.” என ரியர் அட்மிரல் பூஜித விதான தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகள் குறித்து 041 750 1400 எனும் பிரத்தியேக உடனடி தொலைபேசி அழைப்பு மூலம் 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் முறைப்பாடு செய்யலாம். ரியர் அட்மிரல் Brett Sonter இங்கு மேலும் குறிப்பிடுகையில் “இரு நாடுகளுக்கிடையே காணப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எமக்கு உரித்தான இலக்குகளை அடைவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக இலங்கை கடலோரக் காவல்படையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமை கொள்கிறோம். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பதற்கு Disi Rela திட்டம் ஒரு சான்றாகும்” என்றார். https://www.virakesari.lk/article/182321
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
விரைவில் 67 நாடுகளுக்கு இலவச விசா! சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு 67 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் மாத்திரம் 121,500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும். முதல் நான்கு மாதங்களில் 700,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து தமது யூடியூப் சேனல்கள் மூலம் இலங்கையை விளம்பரப்படுத்தினாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், கண்டி பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கண்டியில் இருந்து எல்ல வரையிலான ஒடிசி ரயிலின் டிக்கெட் கட்டணம் 3000 ரூபாவாக இருந்தாலும், புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், சுற்றுலா பயணிகளுக்கு 8,000 ரூபா போன்ற அதிக விலைக்கு புகையிரத சீட்டை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் 45 சுற்றுலா வலயங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/300543
-
இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்
Published By: RAJEEBAN 30 APR, 2024 | 01:02 PM இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.. நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது, எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன - பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. மின்துண்டிப்பும், எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல இலங்கையர்களிற்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது. பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன, ஆனால் இலங்கை தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம் எனவும் எரிக்சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார். நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனவும் குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில் விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182317
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்! நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதேநேரம், பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 3,527 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது. https://thinakkural.lk/article/300582
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையர் - இரண்டு வருட சிறைத்தண்டனை Published By: RAJEEBAN 30 APR, 2024 | 12:06 PM அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜெராட் சிசில் வாமதேவன் என்ற 56 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்துவந்தார். அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி துண்டுதுண்டாக வெட்டிக்கொல்வேன் என அச்சுறுத்தியுள்ளார். ஜனவரி 2018 முதல் 2022 ஜனவரி 22ம் திகதி வரை இவர் 18 பேருடன் இவ்வாறு தொலைபேசியில் உரையாடியுள்ளார். தன்னை சனல் 7 தொலைக்காட்சியின் திறமையாளிகளை தேடும் நபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களை தொடர்புகொண்டார் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சனல் 7 தனக்கும் இந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட வாமதேவன் இழிவான மோசமான பாலியல் ரீதியிலான உரையாடலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஒருவர் வாமதேவன் தன்னை தொலைபேசியில் அழைக்க தொடங்கியதும் காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளார். பாடகியாக வரவிரும்பும் தனது மகளிற்காக தான் தயாரித்த சுயவிபரக்கோவையில் தான் தெரிவித்திருந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி வாமதேவன் தன்னை தொடர்புகொண்டார் என அந்த பெண் தெரிவித்துள்ளார். 2020 செப்டம்பர் முதல் 2021 ஜனவரி வரை வாமதேவன் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகளின் முதல் பெயரை பயன்படுத்தி ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டார் தன்னை யார் என்பதை தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182308
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…! தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/300586
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலின் புதிய முன்மொழிவுகளை ஹமாஸ் ஆராய்கிறது Published By: DIGITAL DESK 7 29 APR, 2024 | 03:31 PM (சேது) காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான தமது முன்மொழிவுகளுக்கு இஸ்ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், இதை தாம் ஆராய்ந்து வருவதாகவும் ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அரசியல் பிரிவின் பிரதித் தலைவர் கலீல் அல்-ஹேயா சனிக்கிழமை (27) விடுத்த அறிக்கையொன்றில், 'ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி அனுப்பிய முன்மொழிவுக்கு ஸியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் உத்தியோகபூர்வ பதில் முன்மொழிவு இன்று இந்த இயக்கத்துக்கு கிடைத்துள்ளது. இந்த முன்மொழிவை ஹமாஸ் ஆராயவுள்ளது. அதன் பின்னர் அது தனது பதிலை கையளிக்கும்' எனத் தெரிவித்துள்ளார். காஸா போர்நிறுத்தம் தொடர்பான புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக எகிப்திய மத்தியஸ்தர்கள் வெள்ளிக்கிழமை இஸ்ரேலை சென்றடைந்த நிலையில், இஸ்ரேலின் பதில் யோசனைகள் ஹமாஸுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எகிப்திய மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளின் நோக்குகளின் இடைவெளியை குறைப்பதில் அவதானிக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எகிப்திய புலனாய்வுச் சேவையுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் அல் கஹேரா அலைவரிசை தெரிவித்துள்ளது. காஸாவின் ரஃபா நகரம் மீது சனிக்கிழமை இரவும் இஸ்ரேலின் வான் தாக்குதல் தொடர்ந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான புதிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் 34,388 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 77,437 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காஸா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்ட பின்னர், கடத்தப்பட்ட 250 பேரில் இன்னும் 129 பேர் காஸாவில் உள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது. கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த காலப்பகுதியில் 81 இஸ்ரேலியர்களும் 24 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்பட்டதுடன், இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 71 பெண்கள், 169 சிறார்கள் உட்பட 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். மேற்குக் கரையில்....................................... இதேவேளை, பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்திலுள்ள ஜெனின் நகருக்கு அருகில், பலஸ்தீனர்கள் இருவர் இஸ்ரேலிய படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ காவலரண் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தியவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்தவர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182239
-
உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்று
Published By: DIGITAL DESK 3 30 APR, 2024 | 08:45 AM (நா.தனுஜா) உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 1.3 பில்லியன் சிறுவர்கள் உடலியல் ரீதியான தண்டனைகளால் பல்வேறு விதங்களிலும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக தரவுகள் கூறுகின்றன. இலங்கையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை எதிர்பார்க்கப்பட்ட பலனைத் தரவில்லை. எனவே இலங்கையில், குறிப்பாக பாடசாலைகளில் உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படும் போக்கை முற்றாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வைத்திய கலாநிதி துஷ் விக்ரமநாயக்கவின் தலைமையில் இயங்கிவரும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான நிதியமும் (Stop Child Cruelty Trust) அவரது ஒருங்கிணைப்பில் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு கூட்டமைப்பும் (Child Protection Alliance) இணைந்து, பல்வேறு துறைகளிலும் பிரபலமான மேலும் 19 பேரை இணைத்துக்கொண்டு 'நோ குட்டி 2.0' (NoGuti 2.0 - சிங்கள சொற்பதமான இது தமிழில் 'அடி வேண்டாம்' எனும் அர்த்தத்தை வழங்கும்) எனும் சமூகவலைத்தள பிரசாரமொன்றை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இன்று (30) வரையான 30 நாட்களுக்கு முன்னெடுத்துவருகின்றன. இப்பிரசாரமானது ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு 'நோ குட்டி' (NoGuti) எனும் பெயரில் சமூகவலைத்தளங்களிலும், அதற்கு அப்பாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முற்றாகத் தடைசெய்யும் விதமாக முன்மொழியப்பட்டுள்ள தண்டனைச்சட்டக்கோவைத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதே இப்பிரசாரத்தின் பிரதான நோக்கமாகும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடந்த 2017 ஆம் ஆண்டு பாடசாலைகளில் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 80 சதவீத மாணவர்கள் உடலியல் ரீதியான தணடனைகளுக்கு உள்ளாவதாகவும், 53 சதவீத மாணவர்கள் உடலியல் சார்ந்த மீறல்களுக்கு உட்படுவதாகவும், 72.5 சதவீத மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் முன்மொழியப்பட்ட 18 பரிந்துரைகளில் தற்போதுவரை ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது சிறுவர்களின் உடல் மற்றும் உளவியல் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் சிறுவர்நல செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு பிள்ளையை சரியாக நெறிப்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் அதற்கென பல நேர்மறையான அணுகுமுறைகள் உள்ளபோது, அப்பிள்ளையின் உடல், உள நலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான அணுகுமுறைகளைக் கையாளவேண்டியதன் அவசியம் என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://www.virakesari.lk/article/182281
-
விகாராதிபதியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது விவசாயக் காணிகளை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை
Published By: DIGITAL DESK 7 30 APR, 2024 | 08:40 AM குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/182280
-
யாழில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு - மாகாண காணி ஆணையாளர்
30 APR, 2024 | 09:48 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள், காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார். மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணபப்டுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை என தெரிவித்தார். அதேவேளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182288
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
Published By: VISHNU 29 APR, 2024 | 08:44 PM (நா.தனுஜா) ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் 4 - 5 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு உத்தேசித்துள்ள அவர், இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர். இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உதவிகள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பானின் ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/182266
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
டெல்லியின் கனவைக் கலைத்த தமிழ்நாட்டு வீரர்; ஷ்ரேயாஸ் சொன்ன ரகசியம் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில்தான் 262 ரன்களை சேஸிங் செய்த சம்பவத்தையும் ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், நேற்று அப்படியே தலைகீழாக மாறி, பாரம்பரிய கொல்கத்தா மைதானம் போல் குறைந்த ரன்னை சேஸிங் செய்யும் வழக்கமான ஆட்டமாகவும் அமைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 47-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் இலக்குடன் புறப்பட்ட கொல்கத்தா அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டமே ஒருதரப்பாக அமைந்தது போல் இருந்தது. கொல்கத்தா தொடக்க வீரர் பில் சால்ட் பவர்ப்ளே ஓவர்களில் 79 ரன்களும், 9 ஓவர்களில் 96 ரன்களும் சேர்த்தபோதே ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்குவந்து, கொல்கத்தா அணி வென்றதுபோல் ஆகிவிட்டது. கொல்கத்தா அணிக்கு சவால் விடுக்கும் வகையில் டெல்லியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இல்லாததால் ஆட்டம் ஒருதரப்பான முடிவையே அளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப்பட்டியலில் வலுவாக அமர்ந்த கொல்கத்தா இந்த வெற்றியால் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து அணிகளையும்விட நிகர ரன்ரேட்டில் உயர்வாக 1.096 என்று உச்சத்தில் இருக்கிறது. இந்த வெற்றியால், அடுத்தடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. கலைந்துவிட்டதா டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு? ஆனால், டெல்லி அணி இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுவாய்ப்பு மறுக்கப்படவில்லை என்றாலும், சற்று கடினமாகியுள்ளது. டெல்லி அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன்6-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மோசமாகக் குறைந்து மைனஸ் 0.442 என சரிந்துவிட்டது. இனி அடுத்துவரும் 3 போட்டிகளையும் டெல்லி அணி கட்டாயமாக வெல்ல வேண்டிய நிலையிலும் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அடுத்த 3 போட்டிகளை டெல்லி அணி வென்றாலே அதிகபட்சமாக 16 புள்ளிகள்தான் பெற முடியும். ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள் அளவுகோலாக இருக்கும் பட்சத்தில் பல அணிகள் கடும் நெருக்கடி கொடுக்கும். அப்போது ரன்ரேட் முக்கியமாகும், அதை பராமரிக்க வேண்டிய நிலையில் டெல்லி அணி இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாட்டு வீரர் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளமும், பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தியதும் முக்கியக் காரணமாகும். கடந்த 8 போட்டிகளாக பந்துவீச்சில் திணறிக் கொண்டிருந்த வருண், 8 போட்டிகளில் 8 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தால், பந்துவீச்சு சராசரியும் 9 ரன்களாக இருந்தது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் வருண் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அவருக்கு உதவும் வகையில் விக்கெட்டும் இருந்ததால், வருண் பந்துவீச்சில் பந்துகள் நன்றாக திரும்பின. டெல்லி பேட்டர்கள் வருண் பந்துவீச்சை சமாளித்து ஆடத் திணறினர். 4 ஓவர்கள் வீசிய வருண் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். “ப்ளே ஆஃப்தான் எங்கள் இலக்கு” கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் “ஆடுகளம் உதவியதாக நினைக்கவில்லை. ஏனென்றால், பவர்ப்ளே ஓவருக்குப்பின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது ஒருவிதத்தில் நல்லதாகிவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட, நரைன் இருவரிடமும் எப்படி விளையாட வேண்டும் என்று டீம் மீட்டிங்கில் பேசியதில்லை. அவர்களும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை.” “வருண் கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிலையில் இன்று சிறப்பாகப் பந்துவீசினார். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட வேண்டும் என்று முதல் போட்டியிலிருந்து இலக்காக வைத்து ஆடி வருகிறோம். அதை நோக்கித்தான் செல்கிறோம், எங்கள் திறமையை வெளிப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,SPORTZPICS நெருக்கடி தந்த கொல்கத்தா பந்துவீச்சு கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளத்தில் கடந்த சில போட்டிகளாக தட்டையான ஆடுகளத்திலே ஆட்டங்கள் நடந்த நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு உதவும் வகையில் மெதுவான விக்கெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆடுகளத்தை டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதைவிட கொல்கத்தா பந்துவீச்சாளர்களே நன்றாகப் பயன்படுத்தினர். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வரிசையில் 3 விக்கெட்டுகளை மிட்ஷெல் ஸ்டார்ஸ், வைபவ் அரோரா ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். நடுப்பகுதி ஓவர்களில் வருண், நரைன், ராணா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை பெரிய இக்கட்டில் சிக்கவைத்தனர். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 68 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 43 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோர் கிடைக்க உதவினார். இல்லாவிட்டால் டெல்லி அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். குறிப்பாக கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா, வைவப் அரோரா இருவரும் ஓரளவுக்கு கட்டுக்ககோப்பாக பந்துவீசி ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ஸ்டார்க் பந்துவீச்சில் ரன்கள் வாரி வழங்கப்பட்டன, 3 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 43 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்கு அடித்தளமிட்ட பில் சால்ட் குறைவான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், நரைன் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். டெல்லி பந்துவீச்சாளர்கள் கலீல், வில்லியம்ஸ்,ரசிக் சலாம் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்த பில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். லிசாட் வில்லியம்ஸ் வீசிய முதல் ஓவரிலேய சால்ட் 23 ரன்கள் சேர்த்தார், கலீல் அகமது வீசிய 2வது ஓவரிலும் சால்ட் 15 ரன்கள் சேர்த்து பவர்ப்ளே ஓவரை நன்றாகப் பயன்படுத்தினார். பில் சால்ட் 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த பில் சால்ட் இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்து, ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்தது. தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சைக் கொண்டுவராமல் பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அக்ஸர் படேல், குல்தீப் இருவரும் பந்துவீச வந்தனர். ஆனால், அக்ஸர் வந்த உடனே முதல் பந்திலேயே சுனில் நரேன்(15) விக்கெட்டை எடுத்தார். முதல் விக்கட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்தனர். அடுத்த 9-வது ஓவரை அக்ஸர் வீச வந்தபோது, களத்தில் நங்கூர மிட்டு பேட் செய்த பில் சால்ட்டை(68) க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.வழக்கமாக கீழ் வரிசையில் களமிறங்கும் ரிங்கு சிங் பதவி உயர்வு பெற்று 3வதுவீரராகக் களமிறங்கினார். ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்று நினைத்தபோது, ரிங்கு சிங் ஏமாற்றினார். வில்லியம்ஸ் ஓவரில் ரிங்கு சிங்(11) ரன்களில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 33 ரன்களிலும், வெங்கடேஷ் 26 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS டெல்லி அணி சறுக்கியது எங்கே? டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளுமே நேற்று மோசமாக இருந்தது. இதில் சுழற்பந்துவீச்சு மட்டுமே ஓரளவுக்க டெல்லிக்கு கை கொடுத்தது. பவர்ப்ளே ஓவரிலேயே அக்ஸர், குல்தீப் யாதவை பந்துவீச அழைத்திருந்தால், கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் ரன் குவிப்பைத் தடுத்திருக்கலாம். ஆட்டத்தை இன்னும் சிறிது நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம். பீல்டிங்கில், முதல் ஓவரில் பில் சால்ட் அடித்த ஷாட்டை கலீல் அகமது கோட்டைவிட்டு பெரிய தவறு செய்தார். பந்துவீச்சில் லிசாட் வில்லியம்ஸ், ரசீக் சலாம், கலீல் ஆகியோர் ரன்களை அதிகமாக வழங்கியதும் ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாகக் கொண்டு செல்லத் தவறியது. பேட்டிங்கில் பிரேசர் மெக்ருக் அதிரடியாகத் தொடங்கினாலும், அவரை கட்டம் கட்டி கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தூக்கினர். அதிலும் மிட்ஷெல் ஸ்டார்க், பிரேசருக்கு வீசிய 7 பந்துகளில் 5 பந்துகள் யார்க்கராக வீசினார். வைபவ் அரோராவும் யார்கர்களை வீசி மெக்ருக்கை திணறவைத்தனர். இறுதியில் ஸ்டார்க் பந்துவீச்சில் மெக்ருக்(12) விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்சித் ராணா பந்துவீச வந்து முதல் பந்திலேயே அபிஷேக் போரெலை 15 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். ஏற்கெனவே எதிரணி பேட்டர்களுக்கு “சென்ட்ஆஃப்” செய்து அபாராதத்தை வாங்கிய ஹர்சித் நேற்றும் “சென்ட்ஆஃப்” செய்ய முயன்று கட்டுப்படுத்திக்கொண்டார். ரிஷப்பந்த்-அக்ஸர் படேல் ஜோடி சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர். ஆனால், வருண், நரைன் ஓவரில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். ரிஷப் பந்த்(27), வருண் பந்துவீச்சிலும் அக்ஸர்(15) நரைன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டப்ஸ்(4), குஷ்ஹரா(1) விக்கெட்டுகளை வருண் வீழ்த்தவே டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் கேமியோ ஆடிய 35 ரன்கள் சேர்க்காமல் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். https://www.bbc.com/tamil/articles/c6pydxq0pzwo
-
மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்
மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை.! பதைபதைப்பு நிறைந்த மீட்பு காட்சிகள்.!
-
சிட்னியில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் - அவுஸ்திரேலிய காவல்துறை
Published By: RAJEEBAN 29 APR, 2024 | 12:43 PM சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினரில் நால்வர் தேவாலய கத்திக்குத்து இடம்பெற்ற சில நாட்களின்பின்னர் மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செய்தியான சிக்னல் மூலம் உரையாடியுள்ளனர். நான் உயிரிழக்க விரும்புகின்றேன் நான் கொலை செய்ய விரும்புகின்றேன் நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என அவர்கள் தங்களுக்குள் தெரிவித்துள்ளனர். எப்படியும் நாங்கள் கொல்லப்போகின்றோம் பொறுமையாகயிருக்கவேண்டும் என 16 வயது இளைஞன் தெரிவித்துள்ளான். அவன் திட்டம் உயிருடன் பிடிபடுவதா இறப்பதா என மற்றுமொரு இளைஞன் கேள்வி எழுப்பியுள்ளான். நாங்கள் திட்டமிடப்போகின்றோம் தப்பிப்பதுதான் எங்கள் திட்டம், ஆனால் என்ன நடந்தாலும் அது அல்லாவின் வலிமை என அவன் தெரிவித்துள்ளான். அல்லாவின் படைவீரர்கள் என்ற பெயரை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர் த டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யதிட்டமிட்டனர் என காவல்துறையினர் குற்றம்சாட்டவுள்ளனர். இந்த இளைஞர்கள் தாங்கள் யாரை இலக்குவைக்கவேண்டும் என்பது குறித்தும் சிக்னலில் உரையாடியுள்ளனர். நான் யூதர்களை இலக்குவைக்க விரும்புகின்றேன் என 15 வயது இளைஞன் தெரிவித்துள்ளான். https://www.virakesari.lk/article/182224
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஜேர்மனியில் உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவர் குத்திக்கொலை - ரஸ்ய பிரஜை கைது 29 APR, 2024 | 12:13 PM உக்ரைன் படைவீரர்கள் இருவரை ஜேர்மனியில் ரஸ்ய பிரஜையொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஜேர்மனியின் தென்பகுதியில் உள்ள வணிகவளாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேர்னோவ் என்ற நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கத்திக்குத்திற்கு இலக்கான 36 வயது அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் 28 வயது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவரும் ஜேர்மனியில் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து ரஸ்யர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182219
-
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை? அச்சத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் - நியுயோர்க் டைம்ஸ்
Published By: RAJEEBAN 29 APR, 2024 | 11:08 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாசுடனான மோதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கலாம்; என ஐந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாசின் தலைவர்களுக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பிப்பது குறித்தும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. நீதிமன்றம் தனது நடவடிக்கையை தொடரதீர்மானித்தால் காசா பள்ளத்தாக்கிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்தமை ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு மிகக்கடுமையான பதில் தாக்குதலை முன்னெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு எதிராக சுமத்தலாம் என ஐந்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர். எனினும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணைகளை உலகம் இஸ்ரேலிற்கான ஒரு தார்மீக கண்டனமாக பார்க்ககூடும். காசாவில் அதன் நடவடிக்கைகளிற்காக கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகவும் அளவுக்கதிகமானவை என தெரிவித்துள்ளார். ஹமாசிற்கு எதிராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற நிலையில் பிடியாணை இஸ்ரேலின் கொள்கைகள் மீது தாக்கத்தை செலுத்தலாம். நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்கலாம் என்பதை இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டமிடல் பிரிவிற்கு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182208
-
101 வயது மூதாட்டிக்கு குழந்தைக்கான பயணச்சீட்டைத் தரும் விமான நிறுவனம் - என்ன காரணம்?
கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவையான சம்பவத்தின்போது பிபிசி செய்தியாளரும் அங்கிருந்தார். பாட்ரிசியாவுக்கு குழந்தைகளுக்கான பயணச்சீட்டு பதிவு செய்திருந்தது, கேபின் குழுவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. "வயதான பெண்ணான என்னை சின்னக் குழந்தை என்று நினைத்தது வேடிக்கையாக உள்ளது" என்று சிரிக்கிறார் பாட்ரிசியா . இப்படி நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பயணச்சீட்டு பதிவு செய்த போதும் அதே தவறு நடந்ததாக கூறும் பாட்ரிசியா, “இதனால் எனக்கு வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும்” என்கிறார் நூறு வயதை கடந்த பாட்ரிசியா. உதாரணமாக, ஒரு பயணத்தின்போது நான் குழந்தை என்று விமான நிலைய ஊழியர்கள் நினைத்துக் கொண்டதால், முனையத்திற்குள் வயதானவர்களுக்கான வசதிகளை தயார்படுத்தவில்லை. சிரமங்களை எதிர்கொள்ளும் மூதாட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா சிகாகோவில் இருந்து மிச்சிகனில் உள்ள மார்க்வெட்டிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணித்த அதே விமானத்தில் பிபிசி-யின் நிருபரும் பயணித்தார். பாட்ரிசியா தனது மகள் கிரிஸுடன் வந்திருந்தார். "என் மகள் டிக்கெட்டுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தாள், விமான நிலையத்தில் உள்ள கணினி எனது பிறந்த தேதி 1922 ஆக இருக்காது, 2022 ஆக தான் இருக்கும் என அதுவாக கணித்துவிட்டது. கடந்த ஆண்டும் இதேதான் நடந்தது, ஒவ்வொரு முறையும் இந்த விமானத்தில் ஒரு குழந்தை பயணிக்கப் போகிறது என எதிர்பார்க்கிறார்கள். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர்" என்கின்றனர். பாட்ரிசியாவின் இருக்கை பெரியவர்களுக்கான டிக்கெட்டாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், விமான நிலைய கணினியால் 1922 என்ற பிறந்த ஆண்டை கணக்கிட இயலவில்லை. காரணம் இந்த பிறந்த தேதியில் இதற்கு முன்னர் அதிக பயணிகளை கண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே 1922 என்பதை ‘default’ ஆக 2022 என்று மாற்றிப் பதிவு செய்துவிட்டது.” ஓய்வு பெற்ற செவிலியரான பாட்ரிசியா, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தைப் பார்க்கவும் குளிர்காலத்தில் இருந்து தப்பிக்கவும் மிச்சிகன் செல்வது வழக்கம். கடந்த இரண்டு பயணத்தின் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என் வயதை தவறாக பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் ஊழியர்கள் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது. மேலும் பேசிய மூதாட்டி, ”நான் இந்த பிரச்னை சரி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முந்தைய விமான பயணத்தின் போது விமான நிலைய ஊழியர்கள் எனக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யாததால், மற்ற பயணிகள் சென்ற பிறகும் நீண்ட நேரம் நானும் எனது மகளும் விமானத்தின் உள்ளே காத்திருந்தோம். என் உண்மையான வயதை பதிவு செய்திருந்தால் என் மகள் கிரிஸுக்கும் அது உதவியாக இருந்திருக்கும். என் மகள், எங்கள் அனைத்துப் பைகளையும் தனி ஆளாக ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்குக் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். அடுத்த பயணம்... பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா தனது 97 வயது வரை தனியாக தான் பயணம் செய்தார். ஆனால் அதன் பிறகு அவரால் குடும்பத்தின் துணை இன்றி பயணிக்க முடியவில்லை. "எனக்கு கண் பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் நான் தனியாக பயணம் செய்ய விரும்பவில்லை," என்கிறார் பாட்ரிசியா. ”ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஒருபோதும் என் பயணங்களை தடுத்து நிறுத்தாது” என்று உறுதியாகக் கூறுகிறார் அவர். மேலும் இலையுதிர் காலத்தில் தனது அடுத்த விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அப்போது அவருக்கு 102 வயது ஆகி இருக்கும் - ஒருவேளை அடுத்த முறை விமான நிலைய கணினிகள் அவரின் உண்மையான வயதை பதிவு செய்யக்கூடும்! https://www.bbc.com/tamil/articles/c1d43d95kyxo
-
இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா
நாட்டில் சனத்தொகை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது, 180,000ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது. இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக இளைஞர் யுவதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300497
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Hamas வெளியிட்ட Hostages Video; நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இஸ்ரேல் மக்கள் - ஏன்? இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் 6 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில், பணயக்கைதிகள் இருவர் பேசுவது போன்ற வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அதில், அவர்கள் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறுவதைக் காண முடிகிறது. இது ஒருபுறமிருக்க, ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.