Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம் பட மூலாதாரம்,GETTY IMAGES 21 ஏப்ரல் 2024 சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. 40 டிகிரி செல்சியஸை கடந்து, வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் தலைநகரம் தகிக்கிறது. அருவி, அதை சுற்றி ஓடை, குட்டைகள் என நீர்நிலைகள் சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? ஆனால், பல்வேறு சூழல்களால் ஒருநாளை தாண்டி உங்களால் விடுப்பும் எடுக்க முடியாதா? ஒரே நாளில் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று திரும்ப வேண்டுமா? சென்னையை சுற்றி சுமார் 100-150 கி.மீ. தொலைவில் இருக்கக்கூடிய நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் இதோ. தடா அருவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சென்னை அருகேயுள்ள அருவி என்றாலே அந்த பட்டியலில் முதலிடம் தடா அருவிக்குத்தான். சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த தடா அருவி. சென்னையிலிருந்து தூரம் குறைவு என்றாலும் இந்த அருவி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உள்ளூரில் உப்பலமடுகு அருவி என இது அழைக்கப்படுகிறது. சென்னையின் புழல், கும்மிடிப்பூண்டி வழியே தடா செல்லலாம். எல்லாவித போக்குவரத்து மூலமாகவும் தடாவுக்கு செல்லலாம். கார், பைக்கில் சென்றால் தடா நீர்வீழ்ச்சியின் நுழைவுவாயில் வரை செல்லலாம். பேருந்து என்றால் சென்னை கோயம்பேட்டில் இருந்து தடா வரை செல்லும் பேருந்துகளும் உள்ளன. ரயிலில் செல்ல வேண்டுமென்றால் சூலூர்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் தடாவுக்கு செல்லலாம். பொதுப் போக்குவரத்தில் செல்பவர்கள் தடா வரை சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் நுழைவு வாயிலுக்கு செல்ல வேண்டும். நுழைவுவாயிலில் உங்களுக்கும் உங்களின் வாகனத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கிருந்து நடந்துதான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். மலைப்பாங்கான பகுதி என்பதால் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடம். அதனால், டிரெக்கிங் செல்வதற்கு தகுந்த ஷூ எடுத்துச்செல்ல வேண்டும். சுமார் 10 கி.மீ தூரம் வரை டிரெக்கிங் சென்றுதான் தடா அருவியை அடைய முடியும். அதனால் சற்று கடினமான பயணமாகத்தான் இது இருக்கும். நடக்கும் வேகத்தைப் பொருத்து 2 மணிநேரமாவது ஆகும். முதியவர்கள், குழந்தைகள் தடா அருவி வரை செல்வது கடினமானதுதான் என்றாலும் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகள், குட்டைகளை அவர்கள் கண்டுகளிக்கலாம். எனவே, குடும்பத்துடன் இங்கு செல்லலாம். கரடுமுரடான பாதைகளும் பாறைகளும் இருக்கும் என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். நீச்சல், டிரெக்கிங் பிடிக்கும் என்பவர்கள் இங்கு நிச்சயம் செல்லலாம். கைலாசகோனா அருவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கைலாசகோனா அருவியும் சித்தூர் மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 92 கி.மீ. தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. திருப்பதிக்கு அருகிலுள்ள நகரி மலைகளின் பள்ளத்தாக்கில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செல்பவர்கள் அம்பத்தூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வழியாக நாகலாபுரம் என்ற கிராமத்தை அடையலாம். நாகலாபுரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கைலாசகோனா நீர்வீழ்ச்சி. அருவி வரை செல்வதற்கான பொதுப் போக்குவரத்து இல்லை என்பதால், பைக் அல்லது காரில் செல்வது சிறந்தது. கைலாசகோனாவில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பிரதான நீர்வீழ்ச்சி 40 அடி உயரம் கொண்டதாகும். அந்த நீர்வீழ்ச்சிக்கு முன்பாக கைலாசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த முதல் நீர்வீழ்ச்சி வரை குடும்பத்துடன் செல்லலாம். ஆனால், அதனைக் கடந்து இரண்டாவது நீர்வீழ்ச்சி, மூன்றாவது நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது வழியில் மிகவும் ஏற்ற-இறக்கமான பாறைகள் நிறைந்திருப்பதாலும் சரியான பாதை இல்லாததாலும் நிச்சயம் அங்கு செல்வது எல்லோருக்கும் ஏற்றதல்ல. டிரெக்கிங்கில் அனுபவம் உள்ளவர்கள் அந்த நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லலாம். அங்கு மலை மேலே நின்று பார்த்தால் சிறப்பான இயற்கை காட்சியை ரசிக்கலாம். தலகோனா அருவி பட மூலாதாரம்,APTOURISM படக்குறிப்பு,தலகோனா அருவி சென்னையிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் தலகோனா அருவி அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ளது. சுமார் 270 அடி உயரத்தில் உள்ள இந்த தலகோனா அருவி, ஆந்திர மாநிலத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். சேசாசலத்தின் மலைப்பாங்கான அடர்ந்த காடுகளுக்கு நடுவே தலகோனாவுக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்லும் வழியில் மயில்களை காண முடியும். நீங்கள் சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால், மயில்களுக்கு ஆபத்து நேராமல் வாகனங்களை இயக்குவது அவசியம். நுழைவுவாயிலில் இருந்து பார்க்கிங் வரை செல்ல சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும். அருவிக்கு செல்லும் ஆரம்பப் புள்ளியில் அருவியிலிருந்து விழும் நீர் தேங்கி நீச்சல் குளம் போல காட்சியளிக்கும். அங்கிருந்து படிக்கட்டுகள், சிமெண்ட் பாதையைக் கடந்து செல்ல வேண்டும். நடப்பதற்கு சிரமம் பார்க்காமல் இந்த அருவிக்கு சென்றால், மிக உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை ரசிக்க முடியும். இயற்கை விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த இடம் விருந்தாக அமையும். சதாசிவ அருவி பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து அம்பத்தூர், திருவள்ளூர், நகரி, புத்தூர், தடுகு வாயிலாக வேணுகோபாலபுரத்தை அடைய வேண்டும். அங்கிருந்து செம்மண் நிறைந்த சாலையில் செல்ல வேண்டும். இங்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்வது கடினம் என்பதால் பைக்கில் செல்வது சிறப்பானது. இந்த சாலையில் பைக்கில் செல்லும்போது ஒருபுறத்தில் உள்ள வளைவான மலைகளை கண்டு ரசிக்க முடியும். நக்லேரு எனும் பகுதிதான் அந்த மலையின் அடிவாரம். அங்கிருந்து டிரெக்கிங் சென்றுதான் நீர்வீழ்ச்சியை அடைய முடியும். வழியெங்கும் உள்ள சிறு பாறைகளில் உள்ள அம்புக்குறிகளை பின் தொடர்ந்தால், அருவியை சென்றடையலாம். செல்லும் வழியில் சில சிறிய கோவில்களும் உள்ளன. வன விநாயகர், ஆகாய லிங்கேஷ்வரர் ஆகிய மிகச்சிறிய கோவில்களை கடந்து செல்ல வேண்டும். இங்கு இரண்டு அருவிகள் உள்ளன. அவற்றை ஐயாவாரி, அம்மாவாரி அருவிகள் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். அருவிகளுக்கு அருகிலேயே சதாசிவேஸ்வரா ஆலயமும் உள்ளது. மலை மேலே உணவு உள்ளிட்டவை கிடைக்காது என்பதால், நிச்சயம் நீங்கள் முன்னதாகவே அவற்றை தயார் செய்து எடுத்து வரவேண்டும். அருவிகளை கடந்து கோவில்கள் இருப்பதால், அவற்றை தரிசிக்க நினைப்பவர்களும் இங்கு செல்லலாம். அருவி போன்ற இடங்களுக்கு அதிகாலையிலேயே சென்றால் மாலைக்குள் மீண்டும் திரும்புவதற்கு சரியாக இருக்கும். ஆரே அருவி சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆரே அருவி அமைந்துள்ளது. தடா உள்ளிட்ட அருவிகளுக்கு சென்றவர்கள் புதிதாக அருவிகளுக்கு செல்ல வேண்டும் என விரும்பினால் அவர்களுக்கு ஆரே அருவி பொருத்தமானதாக இருக்கும். இந்த அருவியின் உண்மையான பெயர் சுவாமி சித்தேஸ்வரா கோனா அருவி. ஆனால், ஆரே என்ற இடத்தில் இருப்பதால் இதை ஆரே அருவி என்று அழைக்கின்றனர். ஐந்து அருவிகள் இங்குள்ளன. அதில் ஒரு அருவியில் கீழே உள்ள தடாகத்தின் ஆழம் குறைவு என்பதால், குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் இந்த அருவிக்கு செல்லலாம். கோடைக்காலத்திற்கு செல்ல மிகவும் பொருத்தமானது இந்த அருவி. பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்குறிப்பிட்ட அருவிகளில் பல அருவிகளுக்கு செல்லும் வழிகளில் குரங்குகள் பல தென்படும். அதனால், அவற்றிடமிருந்து நம் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பலவும் வனம், மலைப்பகுதி என்பதால், அங்கு வாழும் மற்ற விலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமலும் குப்பைகள் போன்றவற்றால் அப்பகுதிகளை அசுத்தமாக்காமலும் சுற்றுலாப் பயணிகள் இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c51ng23xq3qo
  2. 'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல என்கிறது ஈரான்; சிறுவர் விளையாட்டு என விமர்சனம் Published By: SETHU 22 APR, 2024 | 11:19 AM ஈரான்மீது இஸ்ரேல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் பதி­ல­டி­யா­னது 'ஒரு தாக்­கு­தலே அல்ல' என ஈரான் விமர்­சித்­துள்­ளது. அது சிறு­வர்­களின் விளை­யாட்டைப் போன்­றது என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடை­யி­லான போர் அபாய அச்­சத்தை தணிப்­ப­தாக இக்­க­ருத்­துகள் உள்ளன. சிரி­யா­வி­லுள்ள ஈரா­னிய துணைத்­தூ­த­ர­கத்தின் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி நடத்­திய தாக்­கு­தலில் ஈரா­னிய இரா­ணுவ அதி­கா­ரிகள் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக இஸ்ரேல் மீது கடந்த 13 மற்றும் 14ஆம் திக­தி­களில் சுமார் 300 ஆளில்லா விமா­னங்கள்இ ஏவு­க­ணை­களை ஈரான் ஏவி­யது. இவற்றில் 99 சத­வீ­த­மா­னவை சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தா­கவும் இஸ்­ரே­லுக்கு சிறிய பாதிப்­பு­களே ஏற்­பட்­ட­தா­கவும் இஸ்ரேல் தெரி­வித்­தி­ருந்­தது. எனினும் இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக ஈரான் மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை (19) அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது. அன்­றைய தினம் ஈரானின் இஸ்­பஹான் நகரில் வெடிப்புச் சத்­தங்கள் கேட்­ட­தாக செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. 3 சிறிய ஆளில்லா விமா­னங்கள் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தாக ஈரா­னிய அதி­காரி ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார். ஈரான்மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா கூறிய போதிலும் அத்­தாக்­கு­தலை தான் நடத்­தி­ய­தாக இஸ்ரேல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­ந­ட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயுதம் தொடர்­பிலும் முரண்­பா­டான தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அது ஏவு­கணைத் தாக்­­குதல் என அமெ­ரிக்கா தெர­ிவித்­தி­ருந்­தது. எனினும் ஆளில்லா விமா­னங்­களை (ட்ரோன்­கள்) சுட்­டு­வீழ்த்­தி­ய­தாக ஈரான் கூறு­கி­றது. இந்­நி­லையில் இது ஒரு தாக்­கு­தலே அல்ல என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்­துல்­லா­ஹியன் கூறி­யுள்ளார். பதில் தாக்­குதல் திட்­ட­மில்லை அமெ­ரிக்­காவின் என்.பி.சி. அலை­வ­ரி­சைக்கு வெள்­ளிக்­கி­ழமை அளித்த செவ்­வி­யொன்றில் இது தொடர்­பாக அவர் கூறு­கையில்இ 'நேற்­றி­ரவு நடந்­தது தாக்­குதல் அல்ல. அது ஈரானில் எமது சிறு­வர்கள் பயன்­ப­டுத்தும் விளை­யாட்டுப் பொரு­ளான 'குவாட்-­-கொப்­டர்'­க­ளுக்கு இடை­யி­லான மோதலைப் போன்­றது. அவை ஆளில்லா விமா­னங்கள் அல்ல' என வெள்­ளிக்­கி­ழமை அவர் கூறி­யுள்ளார். ஐ.நா. பாது­காப்புச் சபை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்­காக நியூ யோர்க்­குக்கு சென்­றி­ருந்த நிலையில் அமைச்சர் அப்­துல்­லா­ஹியன் இந்த செவ்­வியை அளித்­துள்ளார். இஸ்ரேல் குறிப்­பி­டத்­தக்­க­வொரு தாக்­கு­தலை நடத்­தினால் தவிர, இஸ்ரேல்மீது பதில் தாக்­குதல் நடத்தும் திட்டம் ஈரா­னிடம் இல்லை எனவும் அவர் கூறி­யுள்ளார். ஆனால்இ ஈரான்மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தினால் ஈரானின் பதி­லடி துரி­த­மா­கவும் கடு­மை­யா­கவும் இருக்கும் என அவர் கூறினார். அதே­வேளைஇ இஸ்ரேல்மீது ஈரான் நடத்­திய ஏவு­கணை, ஆளில்லா விமானத் தாக்­குதல் ஓர் எச்­ச­ரிக்கை நோக்­க­மு­டை­யது எனவும் அமைச்சர் அப்துல்லாஹின் கூறினார். 'எம்மால் (இஸ்ரேலிய நகரங்களான) டெல் அவிவ் அல்லது ஹைஃபாவை தாக்கியிருக்க முடியும். இஸ்ரேலின் அனைத்து பொருளாதார துறைமுகங்களையும் தாக்கியிருக்கலாம். 'ஆனால், எமது சிவப்புக் கோடுகள் பொது­மக்கள் ஆவர்இ இராணுவ நோக்கம் மாத்திரமே எம்மிடமிருந்தது' என அவர் கூறினார். (சேது) https://www.virakesari.lk/article/181636
  3. ஆர்சிபி 7-வது தோல்வி: கடைசி வரை போராடி ஒரு ரன்னில் தோல்வி - கோலி அவுட்டானது நோபாலா? பிளேஆஃப் வாய்ப்பு உள்ளதா? பட மூலாதாரம்,SPORTZPICS 21 ஏப்ரல் 2024 நடப்பு ஐ.பி.எல் சீசனில் ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வீரர்களின் ஜெர்சி நிறத்தை மாற்றினாலும் போட்டியின் முடிவு மாறவில்லை. தொடர்ந்து ஆறாவது போட்டியாக அந்த அணிக்கு தோல்வில்வியே பரிசாக கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்து விட்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 50 ரன்களை சேர்த்தார். ஃபில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். 223 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் இந்த தோல்வியால் பெரும் சோகத்தில் உள்ளனர். பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய பில் சால்ட். பில் சால்ட் அதிரடி தொடக்கம் கொல்கத்தா அணியில் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்திலேயே தடுமாறிய சுனில் நரைன், ஆர்.சி.பி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் யார்க்கரை சமாளிக்க முடியாமல் திணறினார். 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார் சுனில் நரைன். அடுத்து வந்த அங்கிரிஸ் ரகுவன்ஷியும் 3 ரன்களை மட்டுமே எடுத்து உடனே வெளியேறியது பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார் பில் சால்ட். லாக்கி பெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 6, 4, 4, 6, 4, 4 என்று 28 ரன்கள் விளாசினார் பில் சால்ட். ஆனால் அடுத்த ஓவரில் அவரும் ஆட்டமிழந்தார். வெறும் 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 48 ரன்கள் எடுத்திருந்தார் பில் சால்ட். இதில் தான் எதிர்கொண்ட 14 பந்துகளில் 10 பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார். பவர்பிளேவுக்கு பின்னரும் கேகேஆர் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் - வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். வெங்கடேஷ் ஐயர் 8 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரிங்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்களை எடுத்து சிறிய கேமியோ ஆடினார். ஆட்டம் பெங்களூரு அணிக்கு சாதகமாகச் செல்வதை உணர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக விளையாடினார். 36 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன் தீப் சிங் கடைசியில் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ரஸ்ஸல் மற்றும் ரமன்தீப் சிங் சேர்ந்து கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதால் 20 ஓவர்களில் கேகேஆர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன் குவித்தது. ரஸ்ஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும், ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களையும் குவித்தனர். இது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் யாஷ் தயாள் மற்றும் கேம்ரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். கொல்கத்தாவின் சிறப்பான திட்டம் கொல்கத்தா இன்னிங்ஸை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த பில் சால்ட் கொடுத்த அதிரடியான தொடக்கம் தந்த பிறகு மிடில் ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுமையாக ஆடி இன்னிங்சை வலுவாக கட்டமைத்தார். இறுதியாக களமிறங்கிய ரமன்தீப் சிங், அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 222 ரன்களுக்கு உயர்த்தினார். ரமன்தீப் சிங் உள்ளே வந்தபோது கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரமன்தீப் சிங். ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரி விளாசி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி. பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,பெவிலியன் திரும்புவதற்கு முன்பாக நடுவர்களிடம் கலந்துரையாடும் விராத் கோலி. விராத் கோலியின் அவுட் குறித்த சர்ச்சை பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராத் கோலி, டூ பிளெசிஸ் களமிறங்கினர். 7 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிரடியாகத் தொடங்கிய ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விடைபெற்றார் விராத் கோலி. ஆனால் அவர் ஆட்டமிழந்தபோது வீசப்பட்ட பந்து நோ பால் என சமூக ஊடகங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. நடுவர்களின் முடிவுக்கு பெங்களூரு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்ததாக 7 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார் டூ பிளெசிஸ். ஆர்.சி.பி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, வில் ஜேக்ஸும் ரஜத் பட்டிதரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். கோலி அவுட்டில் என்ன சர்ச்சை? அதிக ரன்களை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணிக்கு கோலி அதிரடி தொடக்கம் கொடுத்திருந்தார். வெறும் 7 பந்துகளில் 2 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை சேர்த்திருந்த அவர் அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்களது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஹர்ஷித் ராணா ஃபுல்டாஸாக வீசிய பந்தை கோலி கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து ஆட, பந்து அவரது பேட்டில் பட்டு ராணாவிடமே கேட்சாகிப் போனது. உடனே நடுவர் அவுட் கொடுத்துவிட்டாலும் கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாடவில்லை. மறுபரிசீலனையில், பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டு கோலி அவுட் என்ற முடிவு திரும்பப் பெறப்படலாம் என்ற சந்தேகம் இருந்ததே காரணம். பந்து கோலியின் இடுப்பு உயரத்திற்கும் மேலே சென்றதால் அது நோபாலா என்று பரிசீலிக்கப்பட்டது. ஹாக்ஐ தொழில்நுட்பம் மூலம் பந்து செல்லும் கோணத்தையும் விராட் கோலி அதனை எதிர்கொண்ட விதத்தையும் நடுவர்கள் ஆய்வு செய்தனர். இடுப்பு உயரத்திற்கு மேலே நோபால் என்ற அறிவிப்பு, வீசப்பட்ட பந்தானது கிரீஸில் பேட்ஸ்மேனுக்கு இடுப்பு உயரத்திற்கு மேலே வந்தால் மட்டுமே பொருந்தும். மாறாக, இந்த விஷயத்தில் கோலி கிரீஸை விட்டு வெளியே இறங்கி வந்து பந்தை எதிர்கொண்டதால், பந்தின் கோணத்தை நடுவர்கள் ஆய்வு செய்ததில், பந்தின் கோணம் தாழ்வாக இருந்ததால், அது பேட்டிங் கிரீசை எட்டுகையில் உயரம் குறைந்துவிடும் என்று ஹாக்ஐ தொழில்நுட்பம் காட்டியது. இதனால் விராட் கோலி அவுட்டை நடுவர் உறுதி செய்தார். அவரோ அதிருப்தியுடன் களத்தை விட்டு வெளியேறினார். 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் காலி இந்த ஜோடி கேகேஆர் அணியின் பலமான சுழற்பந்துவீச்சாளர்களை போட்டு நொறுக்கியது. இரு வீரர்களும் அரைசதத்தை பதிவு செய்தனர். அந்த நிலையில், கேகேஆர் அணி 12வது ஓவரில் ரஸ்ஸலை பந்துவீச அழைத்தது. இது கேகேஆர் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நன்றாக செட் ஆகியிருந்த வில் ஜோக்ஸ் மற்றும் கரன் சர்மா ஆகிய இருவரும் அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். அதேபோல், நரைன் வீசிய 13வது ஓவரில் கிரீன் மற்றும் லோம்ரோட் இருவரும் ஆட்டமிழக்க ஆர்சிபி தடுமாற தொடங்கியது. 137 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த பெங்களூரு அணி, 18 ரன்கள் இடைவெளியில் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்து மீண்டும் தடுமாறத் தொடங்கியது. ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, மறுபுறம், இதுவரையிலான ஆட்டங்களில் அதிரடி காட்டி எதிரணிகளை திணறடித்த தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தது. அவரும் தனது பங்கிற்கு அடுத்தடுத்து சிக்சும் பவுண்டரியுமாக விளாசினார். ஒருகட்டத்தில் பெங்களுரு அணி வெற்றிபெற 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்று இருந்தது. ஆட்டத்தை ஆர்.சி.பி. அணிக்கு சாதகமாக முடித்துவைப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக், கேகேஆர் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்சல் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,களத்தில் தினேஷ் கார்த்திக் இருந்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது. பரபரப்பான இறுதி ஓவர் கடைசி ஓவரில், 6 பந்துகளில் ஆர்.சி.பியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டிரைக்கில் நின்றது கரண் சர்மா. கொல்கத்தாவுக்காக கடைசி ஓவரை வீசினார் மிட்செல் ஸ்டார்க். முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் கரண். 2வது பந்து டாட் பால். பந்து பேட்டின் நுனியில் உரசியிருந்தாலும் அது தரையைத் தொட்டு கீப்பர் வசம் சென்றதால் கொல்கத்தாவுக்கு கேட்ச் வாய்ப்பு கிடைக்கவில்லை. 3வது பந்தை அவுட் சைட் ஆஃபில் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார் ஸ்டார்க். அதையும் சிக்சருக்கு பறக்கவிட்டார் கரண். 4வது பந்திலும் சிக்ஸர் விளாசினார் கரண். ஈடன் கார்னனில் இருந்த ஆர்.சி.பி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். வெற்றி கைக்கு எட்டிவிட்டதாக அவர்கள குதூகலித்தனர். இப்போது ஆர்.சி.பிக்கு 2 பந்துகளில் 3 ரன் மட்டுமே தேவை. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை லோ ஃபுல்டாசாக ஸ்டார்க் வீச, அதை கரண் ஓங்கி அடித்தார். ஆனால் அது நேராக ஸ்டார்க்கின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதன் மூலம் பெங்களூரு ரசிகர்களின் உற்சாகத்தை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டார் மிட்செல் ஸ்டார்க். கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவை. 2 ரன்களை எடுத்தால் ஆட்டம் டிராவாகி சூப்பர் ஓவருக்குச் செல்லும். கடைசி வீரராக ஆடுகளத்திற்கு வந்த ஃபெர்கியூசன், பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சிக்க, கொல்கத்தா கீப்பர் ஃபில் சால்ட் டைவ் அடித்து ஸ்டம்புகளை தகர்க்க, ஆர்.சி.பியின் வெற்றியும் கானல் நீராகிப்போனது. பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,கொல்கத்தா கீப்பர் ஃபில் சால்டின் அற்புதமான டைவ் பெங்களூரு அணியின் தோல்வியை உறுதி செய்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஆர்.சி.பியின் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோற்றிருப்பது இதுவே முதல்முறை. நடப்பு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடும் சோதனையாக அமைந்திருக்கிறது. டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரூ அணி நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. இதர போட்டிகள் அனைத்திலுமே தோல்வி. கொல்கத்தாவுடனான ஆட்டத்தையும் சேர்த்து, தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலிலும் ஆர்.சி.பி கடைசி இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி. அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அந்த அணி ஒரே ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்துவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். அத்துடன், மற்ற அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவும், ரன் ரேட்டும் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஆர்.சி.பி. அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். https://www.bbc.com/tamil/articles/c254kkwvrkwo கடைசி ஓவரில் தோற்கும் பஞ்சாப் கிங்ஸ்; மீண்டும் வெற்றியைத் தவறவிட்டது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS 3 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் கடைசி ஓவர்வரை வெற்றிக்காகப் போராடித் தோற்பது இது 5-ஆவது முறையாகும். வெற்றிக்காக எதிரணியுடன் போராடி கடைசி வரை இழுத்துவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியினர், கடைசி நேரத்தில் கோட்டைவிடுவது தொடர்கதையாகி வருகிறது. முலான்பூரில் நேற்று நடந்த ஆட்டத்திலும் பந்துவீச்சில் செய்த சில தவறுகளால் பஞ்சாப் அணி வெற்றியை தாரை வார்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி 6-வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் குஜராத் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 1.055 என்ற அளவில்தான் இருக்கிறது. தற்போது 8 புள்ளிகளுடன் 3 அணிகள் கடும் போட்டியில் உள்ளன. சிஎஸ்கே, லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும், இதில் சிஎஸ்கே அணியின் நிகரரன்ரேட் 0.529 என உயர்வாக இருப்பதால் 4-ஆவது இடத்தில் இருக்கிறது. லக்னெள அணி ரன்ரேட் 0.123 என்ற அளவில் நேர்மையாக இருக்கிறது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மைனஸில் தொடர்ந்து வருவது பின்னடைவாகும். பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி, 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும் பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட் வியப்புக்குரிய வகையில் மிகக் குறைவாக மைனஸ் 0.292 என்ற அளவில்தான் இருக்கிறது. பஞ்சாப் அணிக்குத் தற்போது 2 வெற்றிகள் தேவை, இரு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்ரேட்டில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாளராக மாறிவிடும். தமிழக வீரர்களின் பங்களிப்பு குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள்தான். ரஷித்கான், நூர் அகமது, தமிழக வீரர் சாய் கிஷோர் ஆகிய 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 78 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை சுருட்டினர். முலான்பூர் விக்கெட் மந்தமானது. பந்துகள் இங்கு என்னதான் வேகமாக வீசினாலும் பயன் இருக்காது, ஸ்விங் இருக்காது. அதேசமயம், வேகம் குறைவாக பந்துவீசினால் நினைத்த ஸ்விங்கை, சுழற்பந்துவீச்சில் நல்ல டர்னை எதிர்பார்க்க முடியும். இதை குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மூவரும் பயன்படுத்தினர். அதிலும் தமிழக வீரர் சாய் கிஷோர், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதேபோல தமிழக வீரர் சாய் சுதர்சன்(31) பொறுப்பான பேட்டிங், கடைசி நேரத்தில் ரபாடா ஓவரில் ஷாருக்கான் அடித்த சிக்ஸர்கள் ஆட்டத்தை திருப்பிவிட்டன. இந்த தமிழக வீரர்கள் 3 பேரும் குஜராத் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர் குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சில போட்டிகளாக ஆபத்பாந்தவனாக வரும் அஷூதோஷ்(3), சஷாங்க் சிங்(9), ஜிதேஷ் சர்மா(13) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும்,சக ஆப்கன் வீரர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நடுப்பகுதியில் இவர்கள் 3 பேருந்து வீசிய 12 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ரன்ரேட்டும் இறுகக்கட்டப்பட்டு 142 ரன்களில் சுருட்டப்பட்டது. ஆனால், 142 ரன்கள் என்பது டிபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை. இருப்பினும், இதையும் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் டெபெண்ட் செய்ய கடினமாகப் போராடினர். லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் படேல் கடைசி நேரத்தில் 3 விக்கெட்டுகளையும் எடுத்து நம்பிக்கையூட்டினர். இவர்களின் போராட்டத்துக்கு பலன் கிடைத்ததுபோல் ஆட்டமும் ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியின் கரங்களுக்கு மாறியது. 30 பந்துகளில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது, கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஹர்சல் படேல் வீசிய 16 ஓவரில் ஓமர்சாய் ஆட்டமிழக்க குஜராத் அணி தடுமாறியது. 18 பந்துகளில் 25 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், ஹர்பிரித் பிரார் வீசிய 17-வது ஓவரில் திவேட்டியா 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களும், ரபாடா வீசிய 18-வது ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸரும், திவேட்டியா 3 பவுண்டரிகளும் அடிக்க ஒட்டுமொத்த ஆட்டமும் பஞ்சாப் கரங்களில் இருந்து குஜராத் அணிக்கு மாறியது. 12 பந்துகளில் குஜராத் அணி வெற்றிக்கு 5 ரன்கள் என்றநிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பந்துகள் குறைவாகவும், வெற்றிக்காரச் சேர்க்க வேண்டிய ரன்கள் அதிகமாகவும் இருந்தன. ஆனால், 2 ஓவர்களில் அனைத்தும் தலைகீழாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணி எங்கு கோட்டைவிட்டது? 15-வது ஓவர்கள் வரை ஆட்டத்தை பஞ்சாப் அணி கட்டுக்கோப்பாக கொண்டு சென்று, குஜராத் அணி பக்கம் சாயாமல் பார்த்துக் கொண்டது. ஹர்பிரித் பிரார், ரபாடா வீசிய இரு ஓவர்கள்தான் ஆட்டத்தைத் திருப்பிவிட்டது. களத்தில் தரமான ஃபினிஷரான ராகுல் திவேட்டியை இருப்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றார்போல், ஹர்ஸ்தீப் சிங், அல்லது சாம் கரன் பந்துவீசியிருக்கலாம். அடுத்தடுத்து இரு ஓவர்களையும் இருவரும் வீசி இருந்து, கடைசி ஓவரை ரபாடாவிடம் கொடுத்திருக்கலாம். ஆனால், சுழற்பந்துவீச்சில் சுமாராகச் செயல்பட்ட ஹர்பிரித் பிராரை பயன்படுத்தியதும், ரபாடாவின் அதிவேகப் பந்துவீச்சும் தோல்விக்கு இட்டுச் சென்றன. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ரபாடா கடைசி நேரத்தில் பந்துவீசவில்லை. இந்த ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தாத சுழற்பந்துவீச்சாளரும் ஹர்பிரித் பிரார் மட்டும்தான். பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான லிவிங்ஸ்டன் கூட 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார், ஆனால், ஸ்பெலிஸிட் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பிரித் பிரார் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 4 ஓவர்கள் வீசிய பிரார் 35 ரன்களை வாரி வழங்கினார், இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால், குஜராத் அணிக்கு மேலும் அழுத்தம் அதிகமாக ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய்ந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்கான வாய்ப்புகள் 15 ஓவர்கள்வரை இருந்தும், கடைசி நேரத்தில் யாரை எவ்வாறு பயன்படுத்துவது, சூழலுக்கு ஏற்ப, களத்தில் இருக்கும் பேட்டர்களைப் பார்த்து எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது எனும் முடிவை சரியாக எடுக்க முடியாமல்தான் பஞ்சாப் அணி தோற்றது. பேட்டிங்கைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங்(35), சாம் கரன்(20) இருவரும் 52 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களில் ஒருவர்கூட பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 63 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த பஞ்சாப் அணி, அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல கடைசியில் 139 ரன்கள் முதல் 142 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி பறிகொடுத்தது. பஞ்சாப் அணியில் பேட்டர்கள் இருந்தும் நடுவரிசையில் அஷுதோஷ், சஷாங்சிங் ஜொலிக்காததே ஸ்கோர் பெரியாக உயராததற்கு காரணமாகும். ஜிதேஷ் சர்மா இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பதால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவது மிகக்கடினமாகிவிட்டது. பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண் காயத்தில் இருந்துமுழுமையாக குணம் அடையாததால், கேப்டன் பொறுப்பையும், தொடக்க ஆட்டக்காரர் நிலையிலும், பந்துவீச்சாளராகவும் இருக்கவேண்டிய அழுத்தத்துக்கு சாம் கரன் தள்ளப்பட்டார். கேப்டன் பொறுப்போடு பந்துவீச்சாளர் பணியை கவனிப்பதும் கடினமானது. இதில் ப தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி புதிய பந்தை சந்திப்பது மிகக் கடினமானது, அனைத்தையும் சாம் கரன் தனி ஒருவனாகக் கவனித்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு கை கொடுத்திருந்து, கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருந்தால் டிபெண்ட் செய்ய ஏதுவாக இருந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி நேரத் தோல்வி ஏன்? பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் “ நாங்கள் இன்னும் 20 ரன்கள்வரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டத்தை இழுத்தோம், எங்கள் வீரர்களின் போராட்ட குணம் அற்புதமாக இருந்தது. மீண்டும் தோல்வியைச் சந்திக்கமாட்டோம் என நினைத்தேன். சாய் கிஷோர் சிறப்பாகப் பந்துவீசினார், இவர்போல தரமான பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர். டிபெண்ட் செய்யும் அளவுக்கு போதுமான ஸ்கோர் வந்துவிடும் என நினைத்தேன். ஆனால், வரவில்லை. 160 முதல் 165 வரை நாங்கள் சேர்த்திருந்தால், குஜராத் அணி வெற்றியை தடுத்திருப்போம், ஆட்டத்தை கடினமாக மாற்ற இருப்போம். மொத்தமாக நாங்கள் எங்கள் விக்கெட்டை இழந்தது தவறு. பல போட்டிகளில் நாங்கள் ஏன் கடைசி நேரத்தில் தோல்வி அடைகிறோம் என்பது ஆலோசிக்கப்பட வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார். ஃபினிஷர் பணியை கச்சிதமாகச் செய்யும் திவேட்டியா ராகுல் திவேட்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்ததில் இருந்து பல போட்டிகளில் ஃபினிஷிங் பணி சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளார். அந்தப்பணி குஜராத் அணிக்கு வந்தபின்பும் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் 16 ஓவர்கள்வரை வெற்றி பஞ்சாப் கிங்ஸ் பக்கமே இருந்தது. கணினியின் கணிப்பில் குஜராத் வெற்றி சதவீதம் 80 லிருந்து 50ஆகக் குறைந்தது. ராகுல் திவேட்டியா களமிறங்கியபின் ஆட்டம் அனைத்தும் தலைகீழாக மாறியது. ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. அதிலும் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தவே குஜராத் அணி தடுமாறியது. எந்தப் பந்துவீச்சாளரை குறிவைப்பது என காத்திருந்த திவேட்டியாவுக்கு ஹர்பிரித் ஓவர் கிடைத்தது. அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தும், ரபாடா வீசிய 18-வது ஓவரில் திவேட்டியா 3 பவுண்டரிகள், ஷாருக்கான ஒரு சிக்ஸர் அடிக்கவே குஜராத் அணி பெரிய சிக்கலில் இருந்து மீண்டது. மற்றவகையில் குறைந்த ரன்கள் இலக்கை துரத்தும் பணியில் குஜராத் பேட்டர்களும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் கில் (35) தமிழக வீரர் சாய் சுதர்சன்(31), திவேட்டியா(36 நாட்அவுட்) இவர்கள் 3 பேரும் அடித்த ஸ்கோர்தான் ஓரளவுக்கு பெரிதானது. மற்ற வகையில் மில்லர்(4), ஓமர்சாய்(13), சஹா(13), ஷாருக்கான்(8), ரஷித் கான்(3) என சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குஜராத் அணியில் எந்த பேட்டர்களும் 50 ரன்கள்கூட பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. 66 ரன்கள்வரை ஒரு விக்கெட் இழந்திருந்த குஜராத் அணி அடுத்த 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. https://www.bbc.com/tamil/articles/c1rv3zw1y0do
  4. 21 APR, 2024 | 08:14 PM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை மூன்று சர்வதேச விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது. ஏனெனில், முஸ்லிம் வாக்குகளை இழக்கக் கூடாது என்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிராக செயற்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியிலும் முன் கொண்டு செல்லப்பட்டது. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்து வாக்குமூலம் வழங்கலாம். பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் சிறையில் உள்ள நௌபர் மௌலவி பிரதான சூத்திரதாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று விசாரணைகளில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுக்களுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எவ்வித தாமதமும் கிடையாது. நீதிமன்ற கட்டமைப்பிலேயே தாமதம் காணப்படுகிறது. ஆகவே விசாரணைகளுக்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது அரசாங்கத்தில் நீதியை பெற்றுக்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் கத்தோலிக்க சபையிடம் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாகவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் என்பவரின் இரு புதல்வர்கள் தற்கொலைதாரிகளாக மாறி குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அதேபோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெமட்டகொட பகுதியில் உள்ள இப்ராஹிமின் வீட்டுக்கு பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் சென்ற போது அவரது மருமகள் குண்டை வெடிக்க செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆகவே இவர்கள் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே மக்கள் விடுதலை முன்னணியினர் இப்ராஹிமிடம் இவ்விடயம் தொடர்பில் வினவ வேண்டும். இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சியிர் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது. பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்திருந்தும் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அப்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை அலட்சியப்படுத்தியது. இதன் விளைவாகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உண்மையான முஸ்லிம்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தார்கள். குணடுத்தாக்குதல் தொடர்பில் கேள்வி கேட்கும் உரிமை தற்போதைய எதிர்க்கட்சிக்கு கிடையாது. புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தால் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/181599
  5. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை – பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய தெரிவித்தார் – மல்கம் ரஞ்சித் 21 APR, 2024 | 08:03 PM உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். தனக்கு நெருக்கமான அமைப்புகளை சேர்ந்த நபர்களை கைதுசெய்யவேண்டியிருக்கும் என்பதால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை தன்னிடம் தெரிவித்தார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் ஆர்வத்தை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் கர்தினால் விமர்சனத்தை முன்வைத்தார். https://www.virakesari.lk/article/181601
  6. பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 21 ஏப்ரல் 2024, 03:42 GMT மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி என எங்கு சென்றாலும் அலமாரிகளில் பல பானங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். மக்கள் இந்த பானங்களை பார்த்தவுடனேயே ஆரோக்கியமானது என எண்ணி வாங்கிச் செல்கின்றனர். உண்மையில் அவை ஆரோக்கியமானதா? சமீபத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மின்வணிக நிறுவனங்களுக்கு ஓர் ஆலோசனையை வெளியிட்டது. அதன் அறிவுறுத்தலின்படி, ”மின்வணிக தளங்கள் அல்லது இணையதளங்களில் போர்ன்விட்டா உட்பட சில பானங்கள் `ஆரோக்கிய பானங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தனது விசாரணையில் `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 என்ற சட்டத்தின் படியும் (FSS Act 2006) `மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனியார் நிறுவனம் வழங்கிய விதிகளின்படியும் ஆரோக்கிய பானங்கள் என்பது வரையறுக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. எனவே, வணிக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்கள் உட்பட அனைத்து தளங்களில் இருந்தும் ஆரோக்கிய பானங்கள் என்ற பதாகையின் கீழ் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன” என்றார். இந்த விவகாரம் தற்போது பூதாகரம் ஆனது ஏன்? பட மூலாதாரம்,GETTYIMAGES/DJAVAN RODREQUEZ இதுகுறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ பிபிசியிடம் பேசுகையில், போர்ன்விட்டாவில் உள்ள சர்க்கரை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறினார். ஆனால் "அது ஆரோக்கிய பானமாக விற்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு புகார் வந்தது. இந்த பானம் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது." இந்த விளம்பரம் குழந்தைகளின் நலன் கருதி வெளியிடப்பட்டது அல்ல, பெற்றோர்களைத் தவறாக வழிநடத்துகிறது எனக் கூறும் பிரியங்க் கனுங்கோ, "இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் தெரிவித்தோம், அதே வேளையில் போர்ன்விட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், அவர்கள் தங்களின் தயாரிப்பு ஆரோக்கிய பானம் அல்ல என்று ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். அதன் பிறகுதான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006இல் `ஹெல்த் டிரிங்க்’ என்ற வகைப்பாடு இல்லை என்று தெரிவித்தோம்,’’ என விவரித்தார். அவரது கூற்றுப்படி, கலவை, குளிர்பானம், ஆற்றல் பானம் என எந்த வகையில் இருந்தாலும் எந்தவொரு உணவுப் பொருளையும் ஆரோக்கிய பானம் என்ற பெயரில் விற்க முடியாது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) என்பது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் 2005இன் கீழ் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். விளம்பர உத்திகளைக் கையாளும் நிறுவனங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இது நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பர உத்தி என்றும், ஆரோக்கிய பானம் என்று எதுவும் இல்லை என்றும் மும்பையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மூத்த மருத்துவர் ராஜீவ் கோவில் கூறுகிறார். ஆரோக்கியம் என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்களை மின்வணிக தளங்களில் காணலாம். இதுபோன்ற பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என மருத்துவர் ராஜீவ் கோவில் தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, தாதுக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட அத்தகைய பானங்களைத்தான் மக்கள் உட்கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால், குறைவான சர்க்கரை அளவு என்பதை நிர்ணயிப்பது எப்படி? இது குறித்து டாக்டர் ராஜீவ் கோவில் விளக்கமளிக்கையில், ‘‘இந்தியாவில் 100 கிராம் அளவை வைத்துத்தான் உணவு லேபிளிங் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு உணவுப் பொருள் 100 கிராம் என்றால் அதில் பத்து கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்க வேண்டும். ஐந்து கிராமுக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த சர்க்கரை அளவு எனப்படும். பட மூலாதாரம்,GETTYIMAGES/JACK ANDERSEN சர்க்கரை அளவு 0.5 ஆக இருந்தால் அதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்லலாம். சர்க்கரையைத் தவிர, இந்த பானங்கள் அனைத்திலும் கார்ன் சிரப் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இணையதளத்திலும் இந்த ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலின்படி, தனியுரிம உணவு உரிமம் பெற்ற உணவுப் பொருட்கள் பால் சார்ந்த பான கலவை, தானியம் சார்ந்த பான கலவை அல்லது மால்ட் சார்ந்த பானங்கள், ஆரோக்கிய பானங்கள், ஆற்றல் பானங்கள் ஆகிய வகைகளின் கீழ் விற்கப்படுவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எஃப்.எஸ்.எஸ்- இன் கீழ் ஆற்றல் பானங்கள் என உரிமம் பெற்ற தயாரிப்புகளை மட்டுமே விற்க முடியும் மற்றும் எஃப்எஸ்எஸ் சட்டம் 2006இன் கீழ் ஆரோக்கிய பானம் என்பது வரையறுக்கப்படவில்லை. இந்தக் கலவை அல்லது பானங்கள் குழந்தைக்கு அதிக சர்க்கரையை உட்செலுத்துவதாக பிரியங்க் கனுங்கோ கூறுகிறார். மேலும், இந்த பானங்கள் அருந்திய பின்னர் வேறு எந்த சர்க்கரை கொண்ட உணவையும் குழந்தைகள் உட்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதே இல்லை. சராசரியாக எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ``பல ஆண்டுகளாக ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் நம் மக்கள் மீது இந்தப் பொருட்கள் திணிக்கப்பட்டு, விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் தவறாக வழிநடத்தப்படுகின்றன,’’ என்கிறார் டாக்டர் அருண் குப்தா. குழந்தைகள் மருத்துவர் அருண் குப்தா, பொது நலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை (NAPI) என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவர் பேசுகையில், “ஆரோக்கிய பானங்கள் வரையறுக்கப்படவில்லை என்று அரசு கூறுகிறது, ஆனால் இந்த விவகாரத்தில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆரோக்கியமான உணவு, பானம் எது என்பதற்கும் ஆரோக்கியமற்றவை எவை என்பதற்கும் தெளிவான வரையறை இருக்க வேண்டும்," என்றார். `கணிசமான அளவு சர்க்கரை கொண்ட இத்தகைய பானங்கள் சந்தையில் பல ரகங்களில் கிடைக்கின்றன’ என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் ராஜீவ் கோவில் மற்றும் மருத்துவர் அருண் குப்தா ஆகியோர் `புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது போல, மக்கள் குறிப்பாக குழந்தைகள் சர்க்கரைக்கு அடிமையாகக்கூடும். ஏனெனில் இனிப்பு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால் சர்க்கரையைப் பெற இத்தகைய பானங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அவர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படக்கூடும். தொற்றாத நோய் என்பது எந்தவொரு நோய்த்தொற்றாலும் ஏற்படாத, ஆரோக்கியமற்ற நடத்தையால் ஏற்படும் நோய். இதுபோன்ற பல பிரச்னைகளை இந்த பானங்கள் ஏற்படுத்தலாம். உடல் எடை அதிகரிப்பு உடல் பருமன் சர்க்கரை நோய் உதாரணமாக, பிஸ்கெட்டில் சர்க்கரை தவிர உப்பும் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்பானம் அல்லது ஆற்றல் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் கீழ் வருகின்றன. சமீபத்தில், பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழின் (பிஎம்ஜே) ஓர் ஆய்வறிக்கையில், `இது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், “உங்கள் தினசரி உணவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், உடலில் மனச்சோர்வு போன்ற நோய்களை உண்டாக்கும். தொற்றாத நோய்களை அதிகரிக்கும். உணவு அல்லது பானங்களில் எவ்வளவு சதவீதம் சர்க்கரை அல்லது உப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும்,’’ என்கிறார். மேலும் பேசிய அவர், ``குறைந்த சர்க்கரை அளவைக் கொண்ட பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்ட பொருட்கள் பற்றி எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது குறைக்கப்பட வேண்டும். இதனால், அத்தகைய பொருட்களை மக்கள் வாங்குவதைக் குறைக்க முடியும்,’’ என்கிறார். மருத்துவர் அருண் குப்தா மற்றும் மருத்துவர் ராஜீவ் கோவில், உணவுப் பொருள் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்கத் தெரியாததால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற சூழலில், "படிக்காதவர்களை மனதில் வைத்து, போக்குவரத்து வண்ணக் குறியீடு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பொருட்கள் குறித்து பெரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட வேண்டும்." அத்தகைய பொருட்களின் "விலையை அதிகமாக வைத்திருக்க வேண்டும்." மேலும் "வரிகளும் அதிகமாக விதிக்கப்பட வேண்டும். இதனால் அதை வாங்குபவர்கள் மனதில் இதைப் பசிக்குச் சாப்பிட வாங்குகிறோமா அல்லது சுவைக்காக வாங்குகிறோமா என்ற கேள்வி எழும்." https://www.bbc.com/tamil/articles/cjr7594qxrno
  7. https://y20india.in/tamil-nadu-lok-sabha-elections-2024-candidate-list/ இந்த இணைப்பில் முக்கிய புள்ளிகளோட விபரம் இருக்கண்ணை.
  8. மூத்திரம் பெய்யப் போறதெண்டாலும் மோட்டச் சைக்கிளில போறாங்கள் அண்ணை. அப்ப கேள்வி இருக்கும் தானே?! நெருக்கடி வாறது நல்லது, ஏனெண்டா 1) கறள் பிடிச்ச சைக்கிள்கள் கழுவிப் பூட்டி ஓடுவினம் 2) பணம் சேமிக்கப்படும்(பெற்றோல் செலவு) 3) சுற்றுச்சூழல் மாசுபடாது 4) சைக்கிளோடுவதால் ஆரோக்கியம் மேம்படும்
  9. 21 APR, 2024 | 07:21 AM (நா.தனுஜா) ஜப்பான் வெளிவிவகார ஹயாஷி யொஷிமஸா எதிர்வரும் மேமாத முற்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா ஏற்கனவே கடந்த ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கான அவரது முதலாவது விஜயமாக அது அமைந்திருந்தது. அதன்போது கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஹயாஷி யொஷிமஸா, அனைத்துக் கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் மேமாதம் இரண்டாவது முறையாகவும் ஹயாஷி யொஷிமஸா இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் நம்பகுந்த தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. இவ்வருகைக்கான திகதி மற்றும் நோக்கம் என்பன பற்றிய தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், இதன்போது விசேடமாக இலங்கையின் பொருளாதார மீட்சி, கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/181536
  10. சித்தங்கேணி கோப்பிரட்டி பெற்றோல் செற்ல நேற்றிரவு சிறிய வரிசையைக் கண்டேன்.
  11. SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், விதான்ஷு குமார் பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத் அணியின் 266 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணி 199 ரன்களுக்கு சுருண்டது. டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில், டி. நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் ரன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, ஹைதராபாத் அணி சனிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. பவர் பிளே பட மூலாதாரம்,SPORTZPICS இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பல சாதனைகளைப் படைத்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடியின் ஆக்ரோஷமான விளையாட்டால், அந்த அணி 5 ஓவரில் 100 ரன்களை எட்டியது. முதல் பவர்பிளே முடிவதற்குள், ஹைதராபாத் எந்த விக்கெட்டும் இல்லாமல் 125 ரன்கள் எடுத்திருந்தது. எந்தவொரு டி20 போட்டியின் பவர்பிளேவிலும் இதுவே மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 2017இல் டர்ஹாமுக்கு எதிராக நாட்டிங்ஹாம்ஷயர் 6 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்திருந்தது. 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தது ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது. இதற்கு முன் 2017இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பவர்பிளேவில் 105 ரன்கள் எடுத்திருந்தது. ஆறு ஓவரில் 125 ரன்கள் என்பது எவ்வளவு பெரிய ஸ்கோர் என்பதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்: அதாவது, ஹைதராபாத் இந்த ரன்ரேட்டில் 20 ஓவர்கள் விளையாடியிருந்தால், இறுதியில் ஸ்கோர் 400 ரன்களை தாண்டியிருக்கும். 50 ஓவர் போட்டியில், இந்த ரன்ரேட் ஸ்கோர் மூலம் 1000 ரன்களுக்கு மேல் கிடைத்திருக்கும். டிராவிஸ் ஹெட்டின் வேகமான அரைசதம் பட மூலாதாரம்,SPORTZPICS பவர் பிளே: ஹைதராபாத் அணியின் அபார பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் மீண்டும் முக்கியப் பங்கு வகித்தார். சனிக்கிழமை இரவு, ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தார். வெறும் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், இந்த சீசனில் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். இந்த சீசனில் அதிவேக சதம் அடிக்கும் பாதையில் டிராவிஸ் ஹெட் பயணித்தார். ஆனால், குல்தீப் யாதவின் ஒரு பந்து அவரது பயணத்தை முடித்துவிட்டது. டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம், ஆரஞ்சு கேப் பந்தயத்தில் (Orange Cap) டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். விராட் கோலி இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்துள்ளார், அவருக்கு அடுத்த இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டிராவிஸ் ஹெட்டுடன், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் ஜொலித்தார். இருவரும் இணைந்து 38 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தனர். அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 383 ஆக இருந்தது. ஹைதராபாத் அணியின் வேகமான பேட்டிங்கின் ரகசியம் பட மூலாதாரம்,SPORTZPICS டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்களை எடுப்பது மட்டுமல்லாமல், அவரது இருப்பு காரணமாக அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் மிகவும் சுதந்திரமாக விளையாடத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அபிஷேக், போட்டிக்குப் பிறகு, “கடந்த ஓர் ஆண்டாக அவரைப் பின்பற்றி வருகிறேன், நான் அவருடைய தீவிர ரசிகன். மற்ற பேட்ஸ்மேன்கள் மீது எந்த அழுத்தத்தையும் அவர் அனுமதிக்க மாட்டார். இதனால், நானும் பயனடைகிறேன். அவர் எங்களுடன் விளையாடுவது எங்கள் அணியின் அதிர்ஷ்டம்,” என்றார். இந்த சீசனில் ஐபிஎல்-இன் அதிகபட்ச ஸ்கோர்கள் ஐந்தில் மூன்றை ஹைதராபாத் அணி பெற்றுள்ளது. போட்டிக்குப் பிறகு சுனில் கவாஸ்கர், ஹைதராபாத் அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம், பயிற்சி வலையிலும் உங்கள் பேட்ஸ்மேன்கள் இப்படித்தான் பேட் செய்கிறார்களா என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு, புவனேஷ்வர் பதிலளிக்கையில் “பயிற்சி வலையிலும்கூட, பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குகிறார்கள். இது சற்று வினோதமாகத் தெரிகிறது, ஏனெனில் பொதுவாக வலைகளில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கும், தற்காப்பு பேட்டிங்கை பயிற்சி செய்வதற்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்கவில்லை,” என்றார். பவுண்டரி ஷூட்-அவுட் பட மூலாதாரம்,SPORTZPICS வெளிப்படையாக ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ஏற்கெனவே முதல் பந்தில் இருந்து அடித்து ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்ரோஷமான சிந்தனையின் உதவியுடன் டெல்லிக்கு எதிராக 266 ரன்கள் எடுத்தனர். இருப்பினும், ஆரம்பத்தில் வேகமான பேட்டிங்கிற்கு பிறகு, குல்தீப் யாதவ் ஹைதராபாத் அணி ஸ்கோரில் மற்றொரு சாதனையை உருவாக்கவிடாமல் தடுத்து நிறுத்தினார். பதிலுக்கு பேட்டிங் செய்த டெல்லி அணியும் வலுவாக ஆரம்பித்தது. அந்த அணி, முதல் பத்து ஓவர்களில் 130 ரன்களைப் பெற்றது. இளம் பேட்ஸ்மேன்களான ஃப்ரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து டெல்லி அணியைக் காப்பாற்றினர். மெக்குர்க் மிக எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்தார். மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், "இது இரு அணிகளுக்கு இடையிலான பவுண்டரி-ஷூட் அவுட்" என்று கூறினார். ஹெல்மெட் அணிந்த ‘பால் பாய்ஸ்' பட மூலாதாரம்,SPORTZPICS காலப்போக்கில் கிரிக்கெட் ஆட்டம் எப்படி மாறி வருகிறது என்பதை போட்டிகளில் ஹெல்மெட் பயன்படுத்துவதன் மூலமும் சொல்லலாம். நல்ல தரமான ஹெல்மெட்டுகள் சந்தைக்கு வந்தபோது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் அவற்றை முதலில் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர், கேட்சுகளை எடுக்க பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் நெருக்கமான ஃபீல்டர்கள் அணிந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் கீப்பர்கள் விக்கெட்டுக்கு அருகில் நிற்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஹெல்மெட்டை அணியத் தொடங்கினர். டி-20 கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களின் பலமான அடிகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள நடுவர்களும் ஹெல்மெட் அணிவார்கள். இப்போது எல்லைக்கு வெளியே இருந்து பந்தைப் பிடித்து மைதானத்திற்குத் திருப்பி அனுப்புவதற்குப் பொறுப்பான ‘பால் பாய்ஸ்'-கூட (Ball boys) ஹெல்மெட் அணிய வேண்டியிருந்தது. பால் பாய்ஸ்கூட மைதானத்தில் ஹெல்மெட் அணிவது இதுவே முதல்முறையாக ஒரு போட்டியில் நடந்திருக்கலாம். கருத்து தெரிவித்த முரளி கார்த்திக் இதைச் சுட்டிக்காட்டிய போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது முதல் பொறுப்பு என்பதால் இது சரியான நடவடிக்கை என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். நடராஜனை உலகக்கோப்பை அணியில் காண முடியுமா? பட மூலாதாரம்,SPORTZPICS முதல் பத்து ஓவர்களில் டெல்லி சிறப்பாக பேட்டிங் செய்தாலும் பின்னர் பேட் கம்மின்ஸ் மற்றும் டி.நடராஜன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி ஹைதராபாத் அணியின் நிலையை பலப்படுத்தினர். நடராஜன் 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் கூறுகையில், “அவர் மிகவும் கடினமாக உழைக்கும் அமைதியான வீரர். பல நேரங்களில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை, அவர் போட்டியில் அற்புதங்களைச் செய்கிறார்” என்றார். அவரைப் பாராட்டிய சுனில் கவாஸ்கர், “இப்படியே தொடர்ந்து பந்து வீசினால், ஐபிஎல்லுக்கு பிறகு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் மற்றும் டி20 உலகக் கோப்பையில் அணிக்கு ஆயுதமாக இருக்க முடியும்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cld0nwyrwgvo
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குவாங்சி மாகாணத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், மேட் மெக்ராத் பதவி, சுற்றுசூழல் செய்தியாளர் 20 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் பெரிய முக்கியமான நகரங்களில் பாதி, பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெரியளவில் சுரண்டப்படுவதும், வேகமாக நகரமயமாக்கம் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் பூமியின் நிலைத்தன்மையை பாதிப்பதால், நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். சில நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ. அளவுக்கு பூமிக்குள் புதைந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். சீனாவில் சில தசாப்தங்களாக வேகமான நகரமயமாக்கல் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடலோர நகரங்களில், இவ்வாறு நிலப் புதைவு ஏற்பட்டால், கடல் மட்டம் உயர்ந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நிலப் புதைவை எதிர்கொள்வது சீனாவுக்கு புதிதல்ல. இந்த பிரச்னையை எதிர்கொள்வதில் சீனா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஷாங்காய் மற்றும் டியான்ஜின் ஆகிய இரண்டு நகரங்களும் 1920களில் பூமிக்குள் தாழ்ந்து போனதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஷாங்காய் கடந்த நூற்றாண்டில் 3 மீட்டருக்கும் அதிகமாக பூமிக்குள் புதைந்து உள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் சீனாவில் பல்வேறு நகரங்கள் நிலப் புதைவு நிகழ்வை சந்தித்துள்ளன. சமீபத்திய தசாப்தங்களில், அங்கு வேகமாக நகரமயமாக்கலின் விரிவடைதல் பணிகள் நடந்து வருவதே இதற்கு காரணம் என சொல்கின்றனர். இந்த சிக்கலின் அளவைப் புரிந்து கொள்ள, பல சீனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 82 நகரங்களை ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும், செங்குத்து நில இயக்கங்களை அளவிட சென்டினல்-1 செயற்கைக்கோள்களின் தரவைப் பயன்படுத்தி உள்ளனர். 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், 45% நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 3 மி.மீ.க்கு மேல் நிலப்புதைவு ஏற்பட்டுள்ளதை அக்குழு கண்டறிந்துள்ளது. சுமார் 16% நகர்ப்புற நிலங்கள் ஆண்டுக்கு 10 மில்லி மீட்டரை விட அதிகமாக நிலத்துக்குள் புதைப்படுவதை, "விரைவாகப் புதைந்து வருகிறது" என்று விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். அதாவது, 6.7 கோடி மக்கள் வேகமாக நிலப் புதைவு நேரிடும் பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. படக்குறிப்பு,சீனாவில் நிலப்புதைவால் பாதிக்கப்படும் இடங்கள் நிலப்புதைவால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் ஐந்து பிராந்தியங்களில் உள்ள நகரங்கள் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. நிலப் புதைவின் அளவு புவியியல் மற்றும் கட்டிடங்களின் எடை உட்பட பல காரணிகளால் மாறுபடும். இருப்பினும் ஆய்வாளர்களின் கூற்று படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தான் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக அதிக அளவில் நிலத்தடி நீரை சார்ந்து இருக்கின்றனர். ஏற்கனவே ஹூஸ்டன், மெக்சிகோ சிட்டி மற்றும் டெல்லி உட்பட உலகின் பல முக்கிய நகர்ப்புறங்களில் நிலப்புதைவு பிரச்னை இருந்து வருகிறது. சீனாவில் 1,600 க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகளின் அளவீடுகளை வைத்து பார்க்கும் போது, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது நிலப்புதைவுக்கு வழிவகுப்பதை உறுதிப்படுத்துவதாக ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனாவின் நிலக்கரி உற்பத்தி பகுதிகளில் நீண்டகாலமாகவே நிலப்புதைவு பிரச்னைகள் நிலவி வருகிறது. கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் நிக்கோல்ஸ் கூறுகையில், "நிலத்தடி நீர் சுரண்டப்படுவது தான் நிலப்புதைவுக்கு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். "புவியியல் ரீதியாக பார்த்தால், சீனாவில் சமீப காலமாக வண்டல் படிந்து வரும் பகுதிகளில் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். எனவே நிலத்தடி நீரை எடுக்கும் போது, மணல் படலம் அழிக்கப்பட்டு, நிலத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக நிலப் புதைவு ஏற்படுகிறது" என்கிறார் அவர். நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள், கனிமங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவை நிலப் புதைவு ஏற்படுவதற்கான பிற காரணிகளாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலப்புதைவால் சீனாவில் உள்ள நகரம் ஒன்றின் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம். நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஒன்றான பிங்டிங்ஷானின் வடக்குப் பகுதியில், ஆண்டுக்கு 109 மிமீ அளவில் மிக வேகமாக நிலம் தாழ்ந்து வருகிறது. காலநிலை மாற்றத்தாலும் நிலப்புதைவாலும் கடல் மட்ட உயர்வு ஏற்பட்டு நகர்ப்புற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம். இது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2020 ஆம் ஆண்டில், சீனாவின் சுமார் 6% பகுதி, ஒப்பீட்டளவில் கடல் மட்டத்திற்கு கீழே இருந்தது. அதிக கார்பன் உமிழ்வு சூழ்நிலை ஏற்பட்டால் 100 ஆண்டுகளில், இந்த அளவு 26% ஆக உயரும். கடல் மட்டம் அதிகரிப்பதை விட நிலம் புதைவது வேகமாக நடந்து வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நிலப் புதைவின் வேகத்தை குறைக்கும் பயனுள்ள உத்திகள் இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. கடந்த காலங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ உட்பட ஆசியாவின் பிற முக்கிய நகர்ப்புறப் பகுதிகளை நிலப்புதைவு பிரச்னைகள் பாதித்துள்ளன. "20 ஆம் நூற்றாண்டில் டோக்கியோ துறைமுகப் பகுதியைச் சுற்றி ஐந்து மீட்டர் வரை பூமிக்குள் புதைந்து உள்ளது" என்று பேராசிரியர் நிக்கோல்ஸ் கூறினார். "ஆனால் 1970 களில், அந்த பகுதிகளில் வசித்த மக்களுக்கு மற்ற பகுதிகளில் இருந்து நல்ல குழாய் நீர் வழங்கப்பட்டது. இதனால் அங்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறைந்தது. மேலும் இது தொடர்பாக ஒரு சட்டமும் அங்கு பின்பற்றப்பட்டது. இதனால் அங்கு நிலப் புதைவு ஏற்படுவது குறைந்தது." என்றார். இந்த ஆய்வு சயின்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c6pyz3zz7kzo
  13. கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகளை தொடக்கியுள்ள அந்நாட்டு அரசு, விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு அமைத்துள்ளது. கென்யா இராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்த ஒகோலா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு கென்யா நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒகோலா அந்தப் பகுதிக்குச் சென்றதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விபத்தா, அல்லது சதிவேலையா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. https://thinakkural.lk/article/299717
  14. இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10,000 பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களின் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். ஒரு வீட்டிற்கு 28 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிர்வாகங்களின் ஊடாக இந்த வீட்டுத் திட்டத்திற்குத் தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், அதன் நிர்மாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் 10,000 வீடுகளையும் மக்களுக்குக் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/299745
  15. கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மூன்றாவது மயக்கவியல் வைத்திய நிபுணர்களும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றிய இரண்டு மயக்கவியல் வைத்திய நிபுணர்கள் முன்னறிவிப்பின்றி வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/299731
  16. 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது. பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
  17. LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார். ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார். சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம். பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  18. படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். 40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார். படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
  19. Published By: VISHNU 19 APR, 2024 | 08:36 PM அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும். குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  20. சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  21. பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU 19 APR, 2024 | 06:46 PM மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
  22. இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே. இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது. அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது. மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர். காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  23. Published By: RAJEEBAN 19 APR, 2024 | 05:53 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல் பொருளாதார சமூக கலாச்சார பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர் தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும் குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம் நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள் அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர் நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள். காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார். பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.