Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
  2. துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
  3. இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
  4. 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன. இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
  5. அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  6. Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர். படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  7. 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  8. Published By: RAJEEBAN 18 APR, 2024 | 03:14 PM 2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல் பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில் நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  9. புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது. பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  10. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்… 17 APR, 2024 | 03:18 PM தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல்பறக்க நடந்துவந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் இந்த முறையும் தனித்து களம் காண்கிறது. இவர்களை தவிர, ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட போகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு, பிரதமர் மோடி, கடந்த 4 மாதங்களில் 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் இந்தியா கூட்டணிக்காக சேகரிக்கிறார்கள். பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், இன்று காலை முதலே முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் என அனைவரும் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பரப்புரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வரும் ஏப்ரல் 19ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். உங்க வாக்கு உங்க தொகுதியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு மட்டுமல்ல. 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல். இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்கிற தேர்தல் இது” இவ்வாறு கூறி 39 தொகுதிகளில் திமுக சார்பிலும், கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கூறி வாக்கு சேகரித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, “தமிழர் உரிமை மீட்போம்; தமிழ் நாடு காப்போம்”, “ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு, மத்தியில் தமிழ் நாட்டின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முழு அங்கீகாரத்தையும் அதிமுகவிற்கு வழங்க வேண்டும். தேர்தல் அன்று அதிமுகவின் சின்னமான ‘இரட்டை இலை’க்கு வாக்களியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: விழுப்புரம், மரக்காணம் பேருந்து நிலையம் எதிரே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “எண்ணற்ற உரிமைகளை இழந்து நிற்கிற என் இனத்தின் மக்கள் சொந்த நிலத்திலேயே உரிமையை இழந்து உணர்வு எழுந்து அடிமையாக நிற்க கூடிய ஒரு தேசிய இனத்தின் மக்கள், நீர் உரிமையை இழந்தோம். பசி இல்லாத தேசம், மக்களின் வறுமை இல்லாத தேசம், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்த நாடு, எல்லாருக்கும் வேலை, அவரவர் வாழ்விடத்திலே, ஆகச் சிறந்த கல்வி அவரவர் வாழ்விடத்திலேயே இதுதான் என்னுடைய கோட்பாடு” இவ்வாறு பேசினார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்தவுடன் லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இங்கு போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள முதியோர்களுடன் மாலை நேரத்தில் அமர்ந்து பேச வேண்டும் என கடந்த ஓராண்டாகவே முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார். அவரைத் தேற்றும் வகையில் அங்கிருந்தவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கங்களை எழுப்பினர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “சித்திரை திருவிழா நேரத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையை சுற்றியுள்ள நகரங்களுக்கு மின்சார ரயில்கள் அமைக்கப்படும். தேர்தலை அலட்சியம் செய்யாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர் சரவணன் செய்த சேவையை மக்கள் மறந்து விடக்கூடாது.களத்தில் வந்து மக்களுக்காக சேவை செய்வது இந்த அதிமுக கூட்டணி” இவ்வாறு பேசினார். https://www.virakesari.lk/article/181301
  11. கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக அடக்குமுறையை எதிர்த்து 24 நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் Published By: VISHNU 17 APR, 2024 | 08:06 PM கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 24 நாளாக புதன்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் தடை விதித்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக தீர்விற்கான தமது கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் தம்மைக் காக்க பனைமட்டைகளைத் தாங்கி போராடி வருகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை(25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர். அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக செயற்பாடுகளுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறலுக்குமான குறித்த எதிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் காலை மாலை இரவு என இடமாறி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கும் அத்துமீறல்களுக்குமான எதிர்ப்பு போராட்டம் இவ்வாறு தொடராக முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குறிப்பிட்டனர். மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர். அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது. மேற்குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு,கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு களமிருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181333
  12. பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் - யாழ். அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இரங்கல் 17 APR, 2024 | 05:33 PM பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் என அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நூற்றாண்டு கடந்த வரலாற்றை கொண்டதும், ஈழத்தின் பழம்பெரும் அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டதும், பல பண்டிதர்களை இத்தமிழுலகுக்கு அளித்ததுமான ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை கடந்த 40 வருடங்களாக போற்றிப் பணியாற்றிய பெருந்தமிழ்மகன். தமிழ் மூச்சே உயிர்மூச்சு என்ற அசையாத நம்பிக்கையோடு சங்கத்தை திறம்பட வழிநடத்தி பண்டிதர் மரபை நம் மண்ணுக்கு அளித்த பெருமகனார். தமிழோடு சைவத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக சைவப்புலவர்களை இம்மண்ணில் பிரசவிக்க வேண்டும் எனும் பேரவாவின் காரணமாக மரபு வழி குரு மரபில் இலக்கணத்தை தோற்றுவித்த நாவலர் பெருமான் உருவாக்கிய நாவலர் மகா வித்தியாலயத்தில் மூன்று தசாப்தத்துக்கு மேலாக இளஞ்சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலக்கண பாடத்தினை இலகுபாடமாக்கி கற்பித்த நல்லாசான் ஆவார். தொல்காப்பியத்தை விருப்புடனும் அனைவர் மனதிலும் பதிந்து விருப்புடன் கற்க இலகுபடுத்தி கற்பித்த பெருமகனார். காப்பியதாசன் என்று போற்றப்படும் தொல்காப்பிய விற்பன்னன். தொல்காப்பியத்தை கற்பிப்பதில் இவருக்கு இணையாக யாரையும் ஒப்பிட இயலாத பெருந்தகை. தொல்காப்பியத்தோடு நன்னூல், நன்னூல் கண்டிகையுரை ஆகியவற்றையும் விருப்புடன் கற்பித்து இளஞ்சைவப்புலவர், சைவப்புலவர் பட்டத்தின் ஒரு பாடத்துக்குரிய இலக்கண பாடத்தை மாணவர்கள் கற்று சித்தியடையச் செய்தவர். நீண்டகாலமாக சைவப்புலவர் பட்டப் பரீட்சைக்குழுவில் இலக்கண வினாத்தாள் தயாரிப்பாளராக, மதிப்பீட்டாளராக நடுநிலையுடன் இரகசியத் தன்மையுடன் பணியாற்றி, சைவப்புலவர் சங்கத்தின் மூத்த சைவப்புலவர்களினால் நன்மதிப்பைப் பெற்றவர். குறுகிய சில வருடங்களாக தன் உடல் நிலை காரணமாக இப்பணியில் இருந்து விலகியிருந்தார். சைவத்தமிழ் மரபில் தமிழ்ப் பண்டிதர்களையும் சைவப்புலவர்களையும் உருவாக்கிய பெருமகனார் பண்டிதர் ம.ந. கடம்பேசுவரன் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்துகொண்டார். பிறந்தவர் மண்ணில் மறைவது இயல்பு என்ற சிந்தனைக்கமைய காலம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. உயர் தமிழ் மகனாரின் ஆத்மா பார்வதி சமேத பரமேஸ்வரனின் பாதார விந்தங்களை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ பிரார்த்திக்கின்றோம். பண்டிதமணி ஐயாவுக்கு வெறும் இரங்கல்களையோ அனுதாபங்களையோ தெரிவித்துவிட்டு கடந்துவிடும் இழப்பல்ல இந்த இழப்பு. அசராத தமிழ்ப் பாண்டித்தியத்தின் ஒரு தலைமுறையின் இழப்பு. கடந்துவந்த பல தசாப்தங்களில் புலமையையும் தமிழ் மரபுக் கல்வியையும் கடத்திவந்த, காவி வந்த, தொடரின் ஒரு பெரும் அத்தியாயம் இவர். ஈழத்து மரபுத்தமிழ் கல்வி வரலாற்றில் அழித்துவிட முடியாத எங்கள் பண்டிதர் ஐயாவுக்கு அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் சார்பில் அஞ்சலிகளை செலுத்தி நிற்கிறோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றோம்... என இரங்கல் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181317
  13. Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. வலி தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/181310
  14. வெப்ப அலை: கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கி கடும் வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வெப்ப அலையில் இருந்து காத்துக்கொள்ள, வயது அடிப்படையில் மக்களை ஐந்து வகையாக பிரித்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலை அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது அறிக்கையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரையிலான கோடை காலத்தில், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், வேலூர், சென்னை, கடலூர், சேலம், தருமபுரி, கோவை என பரவலாக பல மாவட்டங்களில் கடும் வெயில் நிலவுவதை பார்க்க முடிகிறது. வழக்கமாக மே மாதம் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திர காலத்தில் தான் அதிக வெப்பம் இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கத்தரி வெயில் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வெயிலின் தாக்கத்தை முறையாக கண்டுகொள்ளாமல் விட்டால் மரணம் நேரிடும் வாய்ப்பு கூட உள்ளதென எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். வெப்ப அலை வீசும் கோடையில் நாம் என்னென்ன செய்யக்கூடாது என, வயதுக்கேற்ப பிரித்து அறிவுரையை கூறுகின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழிடம் பேசிய, கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உதவி சித்த மருத்துவ அலுவலர் வித்யாதேவி, ‘‘ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வியர்வையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பருத்தி துணிகள் மட்டுமே அணிவிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை லேசான சூட்டிலுள்ள நீரில் குளிக்க வைப்பதுடன், தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கொண்டு கை கால்களுக்கு மசாஜ் செய்யும் போது, வியர்வை சுரப்பிகள் அடைத்துக்கொள்ளும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தவுடன் சில நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவிவிட வேண்டும்,’’ என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகள் பாதுகாப்பு 3 – 12 வயதுள்ள குழந்தைகளை, குறிப்பாக காலை 11:00 – மாலை 4:00 மணி வரையில் வெளியில் விளையாட அனுமதிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக, தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு கொடுக்க வேண்டும். வியர்வையால் நம் உடலில் இருந்து தாது உப்புகள் வெளியேறி பற்றாக்குறை ஏற்படும். இதை தடுக்க எலுமிச்சை ஜூஸ் தயாரித்து அதில் சர்க்கரை மட்டுமின்றி உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். வேர்க்குரு அல்லது அம்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். "வெயில் என்று கூறி விளையாட அனுமதிக்காமல் விட்டால் செல்போனுக்கு அடிமையாகிவிடுவார்கள், கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு, 6 – 9 மணி வரையில் வேண்டுமானாலும் விளையாட அனுமதிக்கலாம்", என்கிறார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா. கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகம் வெப்ப அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், கூடுதல் கவனத்துடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ‘‘கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே நீர் குடித்தால் வாந்தி வரும் என்பதால், பல பெண்கள் நீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இதனால், பிரசவிப்பதே பெரும் சிக்கலுக்கு உள்ளாகி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்க வேண்டும்,’’ என்கிறார் மருத்துவர் வித்யாதேவி. கர்ப்பிணிகள், மற்றவர்களைப் போலவே இளநீர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம். அதிக நீர் குடித்து சிறுநீர் கழிக்க வேண்டும்; போதிய அளவு சிறுநீர் போகாமல் விட்டாலும் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும். "வெயிலால் திடீர் மயக்கம் ஏற்படும் என்பதால், வெளியில் சென்றால் தனியாக செல்லக்கூடாது. வெயிலால் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்", என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறினார். ‘முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ பட மூலாதாரம்,GETTY IMAGES கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, ‘‘தேர்தல் வருவதால் முதியவர்கள் முடிந்த வரையில், பகல் நேரங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். முதியவர்களின் தோல் மிகவும் வறண்டு இருப்பதால், வெப்ப அலையினால் சரும பாதிப்புகள் ஏற்படும். இதை தடுக்க வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், பருத்தி மூலம் தயாரிக்கப்பட்ட வெளிர் நிற துணிகளை உடுத்த வேண்டும்,’’ என்கிறார். முதியவர்களுக்கான அறிவுரைகளை முன்வைக்கும் சித்த மருத்துவர் வித்யாதேவி, ‘‘சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் கோடை காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் பொட்டாசியம் குறையும் என்பதால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.,’’ என்கிறார் வித்யாதேவி. நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சில அறிவுரைகளை முன்வைக்கிறார் வித்யாதேவி. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பழம் சாப்பிட்டு உடலில் சர்க்கரை அளவை உயர்த்திக்கொள்ள கூடாது. இதற்கு மாற்றாக அதிகம் நீர் மோர் மற்றும் இளநீர் (தேங்காய் மிகக்குறைவாக நீர் அதிகமுள்ள இளநீர்) பருக வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கோடை காலத்தில் மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உரிய நேரத்தில் சாப்பிட்டு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்,’’ என்கிறார் மருத்துவர் வித்யாதேவி. வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் கையில் குடையும் குடிநீர் பாட்டிலும் எடுத்துச்செல்வதுடன், வாகனங்களை வெயிலில் நிறுத்திவிட்டு அதில் உடனடியாக பயணிக்கக் கூடாது. மதியம் 12:00 – 4:00 மணி வெயிலை தவிர்ப்பது சிறந்தது என, சில பொதுவான அறிவுரைகளையும் தெரிவிக்கிறார் கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா. ‘கவனக்குறைவு கூடாது உயிருக்கே ஆபத்தாகும்’ கோடையின் வெப்ப அலை வீசும் காலத்தில், சிலவற்றில் நாம் கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிறார், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (டீன்) நிர்மலா. அதை விளக்கிய நிர்மலா, ‘‘வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) மட்டுமின்றி, இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல் பணியோ அல்லது சாதாரண பணியோ எதுவாக இருந்தாலும், மதிய நேர வெயிலில் சுற்றுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் திடீரென தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு ஞாபகம் இழப்பது, நெஞ்சு எரிச்சல், மயக்கம், திடீரென வியர்ப்பது போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது போன்றவை ஏற்பட்டால், சாதாரணமாக நினைத்து கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாகும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,’’ என்கிறார் அவர். சுகாதாரத் துறை அறிவுரைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெப்ப அலை பாதிப்பு குறித்து பொதுவான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளது. பயணத்தின் போது கட்டாயம் குடிநீர் எடுத்துச் செல்லவும். உடலில் நீர் பற்றாக்குறையை போக்க போதிய நீர் குடிக்க வேண்டும். நீர் பற்றாக்குறையை போக்க ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும். வெளியில் செல்லும் போது பருத்தி ஆடை, காலணிகளை அணிய வேண்டும். வெறும் காலில் வெயிலில் செல்வதை தவிர்க்கவும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் பாதித்தவர்கள் ஆடையின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும். குழப்பமான மனநிலையில், சோர்வாக உள்ளவர்களிடம் அவர்களின் நலன் குறித்து விசாரிக்க வேண்டும். அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் அடைந்தால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சிகிச்சையில் சேர்க்கவும். மிகவும் சோர்வாக இருந்தால் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை சென்று ஓ.ஆர்.எஸ் வாங்கி குடித்து, மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். https://www.bbc.com/tamil/articles/cv26l6ewg5eo
  15. Published By: VISHNU 17 APR, 2024 | 09:14 PM ஓமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலின் காணப்பட்ட 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக அரச ஊடகம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் கவிழ்ந்த்தாக அதிகாரபூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'ஒரு மீட்புக் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது மற்றும் 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்" என்று ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனர் முகமது அமீன் அமானி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181336
  16. குறைந்த ஓட்டம் எடுத்த அணி புள்ளி போச்சே! ஒரு நாள் பொறுத்திருக்கலாமோ?!
  17. 17 APR, 2024 | 11:38 AM புத்தாண்டுக்காக காலி லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பத்தேகம மாவட்ட நீதிபதி ஒருவரை கடுமையான வார்த்தைகளால் தூஷித்து அறைந்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனரான உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பத்தேகம மாவட்ட நீதிபதியின் மனைவியின் சகோதரராவார். பத்தேகம மாவட்ட நீதிபதி எல்.கே.ஜி விஸ்வநாத் தனது மனைவி மற்றும் செல்லப் பிராணியான பூனையுடன் காலி, லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற மறுநாளான 16 ஆம் திகதி இரவு மாவட்ட நீதிபதி தனது மனைவி மற்றும் பூனையுடன் தனது வீட்டிற்குச் செல்ல தயாரான போது அவரது பூனை காணாமல் போயுள்ளது. தனது பூனை காணாமல் போனது தொடர்பில் மாவட்ட நீதிபதிக்கும் அவரது மைத்துனரான சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சந்தேக நபர் நீதிபதியைத் தூஷித்து அவரது காதில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட நீதிபதி அக்மீமன பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்குச் சென்றுள்ளார். பொலிஸ் அதிகாரியைக் கண்ட மாவட்ட நீதிபதியின் மனைவி அதிர்ச்சியில் சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து அவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபரான சப் இன்ஸ்பெக்டர் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த செல்லப் பூனை மாவட்ட நீதிபதியின் காருக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/181277
  18. O/L பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு! 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்கு 452,979 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். https://thinakkural.lk/article/299352
  19. # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) MI 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jose Buttler 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK போட்டியில் நானும் குதித்துவிட்டேன். ஓடி வாங்கோ ஓடி வாங்கோ இன்னும் 2 நாள் தான் இருக்கு. நன்றி ஈழப்பிரியன் அண்ணா. கிருபன் அண்ணா திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா?
  20. துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது. எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், ரத்து செய்யப்பட்டும் இருந்தன. இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன. இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. துபாயின் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது. ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அமீரகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. இன்றும் புயல் வீசக்கூடும் என முன்னறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். துபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/299335
  21. சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரீன் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அண்மைக் காலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 02 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பிரதமர் லீ சியென் லூங்கும் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/299288
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான். “நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்கள். ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே. இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா இல்லாமல் செய்ய முடியாது. மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும் பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ், இவை அனைத்திலும் மைதா உள்ளது. இப்படியிருக்க தினமும் ஏதேனும் ஒரு வகையில் நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? “மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?” என்று பொது மக்கள் சிலரிடம் கேட்டோம், “மரவள்ளிக்கிழங்கில் இருந்து தான் மைதா தயாரிக்கப்படுகிறது. பரோட்டா சாப்பிட்டாலே அது தெரியும்” என்று ஒருவர் கூறினார். மற்றொருவர், “மரவள்ளிக்கிழங்கைப் பொடித்து தான் மைதா மாவு செய்கிறார்கள். கேரளாவில் அதைக் கப்பக்கிழங்கு என்பார்கள், அதனால் தான் பரோட்டா அங்கு பிரபலமான உணவு” என்றார். “எதிலிருந்து வந்தால் என்ன, மைதா கண்டிப்பாக உடலுக்கு கேடு” என்று சமோசாவை சாப்பிட்டுக் கொண்டே ஒரு இளைஞர் கூறினார். “கோதுமையின் கழிவு தான் மைதா, அந்த கழிவில் ஒரு ஆபத்தான ரசாயனத்தை கலந்து மைதா செய்கிறார்கள்” என்றார் ஒரு பெண். உண்மையில் மைதா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதன் மூலப்பொருள் என்னவென தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமாரிடம் கேட்டோம். “நெல்லில் உமி, தவிடு, உள்ளிருக்கும் அரிசி என மூன்று விதமான லேயர்கள் இருக்கும். உமியை நாம் அகற்றிவிடுவோம். தவிடுடன் இருக்கும் அரிசியைத் தான் பிரவுன் அரிசி என்போம். தவிட்டை நீக்கிவிட்டால் பட்டைத் தீட்டப்பட்ட அரிசி (Polished) என்கிறோம். அதே போல கோதுமையிலும் உமியை நீக்கிவிட்டு தவிடுடன் மாவாக்கி பயன்படுத்தினால் வழக்கமான கோதுமை. அதுவே தவிடு நீக்கப்பட்ட கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா, வெளிநாட்டில் 'ஆல் பர்பஸ் ஃப்ளோர்' (All purpose flour) என்பார்கள். மைதா என்பது பாஸ்மதி அரிசி போன்ற ஒரு அரிசி வகைக்கு சமமான ஒன்று தான்” என்கிறார் மருத்துவர் அருண் குமார். தொடர்ந்து பேசிய அவர், “அதே தவிடு நீக்கிய கோதுமையை மிருதுவாக இல்லாமல் சாதாரணமாக அரைத்து கிடைப்பதே ரவை. எனவே ரவைக்கும் மைதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மைதாவை அதிகம் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல தான். ஆனால் அதற்காக மைதா மீது மட்டும் இருக்கும் இந்த அதீத பயமும் தேவையில்லை. இணையத்தில் உலவும் சில தவறான தகவல்கள் இதற்கு காரணம்” என்றார். பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK படக்குறிப்பு,குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். மைதாவின் வெள்ளை நிறம் எப்படி பெறப்படுகிறது? கோதுமையை அரைத்து தான் மைதா கிடைக்கிறது என்றால், கோதுமை மாவு போல பழுப்பு நிறத்தில் இல்லாமல் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் மைதா இருப்பது எப்படி, இப்படி வெள்ளை நிறத்திற்கு மைதாவை கொண்டுவர ஏதேனும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். “மைதா என்பதே அதன் வெள்ளை நிறத்திற்காக தான் அறியப்படுகிறது. மைதாவில் இருந்து செய்யப்படும் பிரெட், பன், கேக், பிஸ்கட், பரோட்டா என அந்த வெள்ளை நிறமும், மிருதுவான தன்மையும் தான் மைதாவை ஒரு முக்கிய உணவுப் பொருளாக மாற்றியுள்ளது." "கோதுமையின் பழுப்பு நிறம் மைதாவில் வரக்கூடாது என்பதற்காக ப்ளீச் (Bleach) எனப்படும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதைச் சுற்றி தான் பல சர்ச்சைகள் உள்ளன. ப்ளீச் என்பது ஆக்சிசனேற்றம் (Oxidation) எனும் செயல்முறை தான். பள்ளியில் இதைப் பற்றி படித்திருப்போம். இந்த வேதியியல் செயல்முறை மூலம் கோதுமையின் பழுப்பு நிறமியை நீக்கிவிடலாம்." "இதற்காக குளோரின் வாயு, பென்சாயில் ஃபெராக்ஸைடு போன்ற சில ப்ளீச்சிங் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அது சரியான அளவில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். " "இதையெல்லாம் தாண்டி, ப்ளீச்சிங் செயல்முறை முடிந்து இறுதியாக மைதா கிடைக்கும்போது அதில் இந்த ரசாயனங்கள் இருக்காது என்று தான் உணவுத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES மைதா நீரிழிவை ஏற்படுத்துமா? மைதாவை ப்ளீச் செய்யும்போது அலோக்ஸன் எனும் ரசாயனம் அதில் சேர்க்கப்படுகிறது என்றும், இந்த ரசாயனம் நீரிழிவை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது, இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது, “2016இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது, மைதாவில் நீரிழிவை உண்டாக்கும் அலோக்ஸன் சேர்க்கப்படுகிறது, எனவே மைதாவை தடைசெய்ய வேண்டுமென மனுதாரர் கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மைதா கொண்டு செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்ய உணவுத் துறைக்கு உத்தரவிட்டது." "அவ்வாறு உணவுத் துறை ஆய்வு செய்து பார்த்ததில், ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் மைதாவில் இல்லை என்பது உறுதியானது. இந்த அலோக்ஸன் குறித்துப் பார்த்தால், அது மைதாவில் ப்ளீச்சிங் முறைக்கு கலக்க மாட்டார்கள். மாறாக அது ஆக்சிசனேற்றம் முறையின் போது தானாக உருவாகக்கூடிய ஒருதுணைப் பொருள். எல்லா மைதாவிலும் குறைந்தபட்ச அளவில் அது இருக்கும்." "பயம் ஏன் வருகிறது என்றால், எலிகளை வைத்து செய்யும் ஆய்வுகளில் அவற்றுக்கு செயற்கையாக நீரிழிவு நோய் வரவைக்க இந்த அலோக்ஸன் பயன்படும். ஆனால் மைதாவில் இருக்கும் அலோக்ஸனை அந்த ஆய்வுகளுக்கு பயன்படும் அலோக்ஸன் 25,000 மடங்கு வீரியமானது. அதனால் அதையும் இதையும் ஒப்பிட முடியாது. அப்படி பார்த்தால் பிஸ்கட், பரோட்டா உண்ணும் பலர் இன்று நீரிழிவு நோயாளிகளாக மாறியிருக்க வேண்டுமல்லவா." "எனக்கு மைதா உணவுகள் வேண்டாம் என்று ஒதுக்குவது சரிதான், காரணம் மைதாவில் மாவுச்சத்து அதிகம் மற்றும் நார்ச்சத்து மிகக் குறைவு. எனவே அதைவிட்டு அறிவியல் ஆதாரமற்ற காரணங்களுக்காக மைதாவை ஒதுக்கத் தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES மைதாவுக்கு மாற்றா கோதுமை? “இன்று கோதுமையில் செய்யப்படும் பிரெட், பிஸ்கட், பரோட்டா இவையெல்லாம் மைதா உணவுகளுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கோதுமை பரோட்டாவிலும் கூட மைதா சேர்க்கப்படுகிறது." "அதேபோல வெறும் கோதுமையை வைத்து கோதுமை பிரெட் அல்லது கோதுமை பிஸ்கட் தயாரிக்க முடியாது, அதில் குறிப்பிட்ட அளவு மைதா சேர்க்கப்பட வேண்டும். காரணம் மைதாவின் மிருதுவான தன்மை." "எனவே 2 மைதா பரோட்டாவிற்கு பதிலாக, கோதுமை ஆரோக்கியமானது என்பதற்காக 5 அல்லது 6 சப்பாத்தி சாப்பிட்டாலும் அது அதிக மாவுச் சத்து தான். அதனால் மைதா சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அளவாக அல்லது மிகக்குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது” என்றார் மருத்துவர் அருண்குமார். படக்குறிப்பு,ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். மைதாவில் உள்ள சத்துக்கள் என்ன? மைதாவில் உள்ள சத்துக்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மைதாவில் மாவுச் சத்து தான் அதிகமாக உள்ளது. உதாரணமாக 100 கிராம் மைதாவில் 351 கலோரிகள் உள்ளது. மேலும் 10.3 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 2.76 கிராம் நார்ச்சத்து, 74.27 மாவுச்சத்து உள்ளது.” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES மைதாவால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்ன? “பொதுவாக மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகமான கொழுப்பு சேர்க்கப்படுகிறது. பரோட்டாவில் அதிக எண்ணெய் சேர்க்கப்படுகிறது. சோலே பட்டூரா, மிகப் பிரபலமான மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள். அதை எண்ணெயில் பொரித்து தான் எடுக்கிறார்கள்." "இதுபோக மைதா கொண்டு செய்யப்படும் பிஸ்கட்டுகள், பலகாரங்கள் என அனைத்தும் அளவுக்கு அதிகமான இனிப்பும் எண்ணெயும் கொண்டு தான் செய்யப்படுகிறது. ஏற்கனவே அதிக மாவுச் சத்துள்ள மைதாவில் இதுபோன்ற துணைப்பொருட்களும் சேரும்போது அது உடலுக்கு கேடாக மாறுகிறது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். தொடர்ந்து பேசிய அவர், “நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக அதை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும். உடல்பருமன் உள்ளவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும்." "முக்கியமாக எடை அதிகமாக உள்ள பெண்களும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மேலும் எடை கூடும்போது, மாதவிடாய் தள்ளிப்போவது முதல் பல பிரச்னைகள் ஏற்படலாம்” என்று கூறுகிறார் தாரிணி கிருஷ்ணன். https://www.bbc.com/tamil/articles/cxwvmjjlxdxo
  23. பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை…! மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார். இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருமவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு புரட்சிகர பாத்திரம். 2002 ஆம் ஆண்டு மத்துகம பிரதேச சபையின் தலைவராக இருந்த பாலித தெவரப்பெரும மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார். 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும், வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார். பாலித தெவரப்பெரும அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது புதைகுழியை வடிவமைத்துள்ளார் என்பதும் நாட்டில் பேசப்பட்ட மற்றுமொரு விடயமாகும். https://thinakkural.lk/article/299317
  24. வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் - ஞானமுத்து ஸ்ரீநேசன் Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:56 AM வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை(16.04.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்த்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசிகள் கட்சிகள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சனை சுந்தரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்காக அகிம்சை ரீதியாக தழிர் தேசியக் கட்சிகள் பல முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றன. அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. 30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள், பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலமும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்ததை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. தேசியஇனப்பிரச்சனைக்குரிய தீர்வை ஜே.ஆர்.ஜெயவர்த்தன யுத்தம் என்ற ரீதியில்தான் சிந்தித்தார். பின்னர் இந்தியாவில் நிர்ப்பற்த்தின் மூலம் 13 வது திருத்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டது. அந்த மாகாணசபையிலும்கூட இலங்கை இனப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை. மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன, மைலத்தமடு மேச்சல்தலைப் பிரச்சனையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13வது திருத்ததின்மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987 ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை. இந்நிலையில் 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நியாயமான தீர்வைத்தருவார் என் நம்பி சந்திரிக்காவை ஆதரித்தோம், பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் வாக்களித்தோம், எக்குரிய தீர்வு கிடைக்கும் என எம்மை நம்பவைத்தார்கள். இவ்வாறு இரு ஜனாதிபதித் தேர்லிலும் நம்பி வாக்களித்தும் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13 வதுதிருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். 13 வதுதிருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை. தற்போதைய ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மைலத்தமடு, பிரச்சனை, கல்முனை பிரதேச செயலக பிரச்சனை, உள்ளிட்ட மிகவும் சாதாரண பிரச்சனையைத் தீர்க்க அவர் இன்னும் முன்வரவில்லை. 13வது திருத்தத்தை தரலாம் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என தெரிவிக்கின்றார். எனவே நாம் கடந்த காலத்திலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், நிகழ்காலத்திலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் எந்தவொரு வேட்பாளரும் நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் தேசியக் கட்சிகள் சந்தித்து உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பதைக் கேட்கவேண்டும். அதனை மக்களிடதில் தெரிவிக்கவேண்டும். இந்நிலையில் பேரினவாதத்திலுள்ளவர்கள் எமக்கான தீர்வைத் தருவதற்கு மிகவும் பின்னடித்துக் கொண்டு வருகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதற்கான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக களமிறங்கினால் என்ன என்ற கேள்ளி கேட்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையை சர்வதேசத்திடம் தமிழ பேசும் மக்கள் உரத்த குரலில் கூறுவதற்குரிய சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது. எமது வேட்பாளர் வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ளவதராக இருக்க வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரைகளமிறக்க வேண்டும். தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும். எனத் தெரிவித்த அவர் மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள். நாடு வங்குறோத்து நிலையில், உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்திலும் லஞ்சம், மோசடி, என்பன இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடன்பெற்று வந்த பணத்திலும் கையூட்டுப் பெறுகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு முட்டையிலிருந்து சுமார் 15 ரூபா கொள்ளையடிக்கப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடையமாகவும், மீனர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது. இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுறதும் இவ்வடையம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181271
  25. பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரைப் பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். https://thinakkural.lk/article/299313

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.