Everything posted by ஏராளன்
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல் - பலர் படுகாயம் 15 APR, 2024 | 04:42 PM சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர். சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார். மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/181146
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது மகனை உடனடியாக சுட்டுக் கொன்றிருப்பேன் - சிட்னி வணிக வளாக தாக்குதலில் ஈடுபட்டவரின் தந்தை தெரிவிப்பு - கண்ணீர் மல்க மன்னிப்பும் கோரினார் Published By: RAJEEBAN 15 APR, 2024 | 12:53 PM அவுஸ்திரேலியாவின் பொன்டி வணிகவளாகத்தில் சனிக்கிழமை கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தனது மகனின் செயலிற்காக கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் நான் பொலிஸ் உத்தியோகத்தராகயிருந்திருந்தால் நான் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொன்றிருப்பேன் என ஜோல் கவுச்சியின் தந்தை அன்ரூ கவுச்சி தெரிவித்துள்ளார். தனது 40 வயது மகனின் செயலினை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனது மகன் செய்த செயலினால் ஏற்பட்ட வலிகளை வேதனைகளை போக்க கூடிய விதத்தில் என்னால் எதனையும் தெரிவிக்க முடியவில்லை தெரிவிக்க முடியாது என தந்தை தெரிவித்துள்ளார். அவர் ஒரு வேதனையான ஆன்மாவாக காணப்பட்டார் வேதனைப்பட்டார் விரக்தியடைந்தார் என தெரிவித்துள்ள அன்ரூ உங்கள் குழந்தைகளிற்கும் தேசத்திற்கும் அவர் செய்தமைக்காக வருந்துகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி வணிகவளாகத்தில் கத்திக்குத்தில் ஈடுபட்டவர் தனது மனோநிலை பாதிப்பை கையாள்வதற்கு உரிய உதவிகள் அனைத்தையும் வழங்கியதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். அவன் என் மகன் நான் ஆபத்தான ஒருவனை நேசித்தேன் உங்களிற்கு அவன் ஆபத்தானவன் எனக்கு அவன் ஒரு நோயாளி என அவர் தெரிவித்துள்ளார். அறிகுறி ஏதாவது தென்பட்டிருந்தால் நான் வேறு ஏதாவது செய்திருப்பேன் எனவும் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார். நான் முன்னர் ஒரு உணவுவிடுதிக்கு கொண்டுசென்றேன் அவர் என்னை முழுமையாக தழுவிக்கொண்டார் கடவுளே இது எனது மகன் என நான் தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகன் 18 வருடங்களாக மருத்துவசிகிச்சை பெற்றுவந்தார் என கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார். 35 வயதுவரை அவர் வீட்டில் இருந்தார் அதன் பின்னர் பிரிஸ்பேர்ன் சென்றுவிட்டார் மருத்துவர்களிடம் செல்வதை கைவிட்டுவிட்டார் என தாயார் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர் அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் உதவினார்கள் எனவும் அவர் தாயார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181111- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய இராணுவம் அனுமதி 15 APR, 2024 | 11:44 AM ஈரானின் முன்னொருபோதும் இல்லாத வான்தாக்குதலை தொடர்ந்து தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளிற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் போர்கால அமைச்சரவையின் நீண்ட நேர சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி ஈரானின் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இன்னமும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருக்கின்றோம் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த மணித்தியலாங்களில் நாங்கள் தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181103- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் - பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் 15 APR, 2024 | 11:34 AM ஈரானிற்கு எதிராக அனைத்து தடைகளையும் விதிக்கவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இஸ்ரேலின் பிரதிநிதி ஜிலாட் எர்டான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இன்னும் தாமதமாவதற்கு முன்னர் ஈரானிற்கு எதிராக அனைத்து தடைகளையும் விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்துள்ளார். வின்ஸ்டன் சேர்ச்சில் போன்றவர்கள் தலைமை தாங்கும் உலகமே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார் இதேவேளை இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள ஈரானின் இராஜதந்திரி அமீர் சையிட் தனது நாடு மேற்கொண்ட நடவடிக்கை அவசியமானது என தெரிவித்துள்ளார். ஈரான் பிராந்தியத்தில் மோதலை ஏற்படுத்த விரும்பவில்லை அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபடும் நோக்கம் இல்லை ஆனால் அமெரிக்கா இராணுவரீதியில் செயற்பட்டால் ஈரான் உரியஅளவிலான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181100- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஸ்டம்புக்கு முன்னும் பின்னும் நின்று மாயம் செய்தாரா தோனி? ஹர்திக்கும் ருதுராஜும் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கேவுக்கான தோனியின் 250-வது ஆட்டம், சிஎஸ்கேயின் 150-வது வெற்றி, ரோஹித்தின் சதம், 500-வது சிக்ஸர், இந்த சீசனில் சிஎஸ்கேயின் முதல் வெளி மைதான வெற்றி, தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர்கள் என நேற்றைய சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் நடந்தவற்றை பட்டியலிடலாம். இவற்றில் ரசிகர்களுக்கு முக்கியமாக மாறியிருப்பது, 42 வயது தோனி களத்தில் இறங்கி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு, சிஎஸ்கே அணியை 200 ரன்களுக்குமேல் கொண்டு சென்றதுதான். இதுவே ஆட்டத்தின் வெற்றிக்கான வித்தியாசமாகவும் அமைந்தது. முன்னாள் கேப்டன் தோனி மட்டும் கடைசி நேரத்தில் 20 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் சிஎஸ்கே ஸ்கோர் 185 ரன்களுக்குள் முடிந்திருக்க வாய்ப்பிருந்தது. மும்பை அணியும் ரோஹித் சர்மாவால் வெற்றி பெற்றிருக்கக்கூடும். போட்டியில், ரோஹித் சர்மா அடித்த சதம் மும்பை நிர்வாகத்துக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் பதில் சொல்வது அமைந்துவிட்டது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இதுவரை ரோஹித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. ரோஹித் சர்மா சதம் அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்தும், மும்பை அணி வெற்றி பெறாமல் இருந்தது இதுதான் முதல்முறை. ரோஹித் சர்மா கடைசிவரை மும்பை இந்தியன்ஸ் அணியைக் கைவிடவில்லை, ஆட்டமிழக்காமல் வெற்றிக்காக கடைசிப்பந்துவரை போராடினார். ஆனால், அவருடன் நிலைத்து நின்று யாரும் ஆடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில்6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி, 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன், நிகரரன்ரேட்டில் 0.726 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வெளி மைதானத்தில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் சொந்த மைதானத்தில் இந்த சீசனில் அடைந்த முதல் தோல்வியாகும். சிஎஸ்கே வெற்றிக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்த மதீஷா பதிரணா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர், 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிரணா கைப்பற்றிய 4 விக்கெட்டுகளுமே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கான திருப்புமுனை விக்கெட்டுகளாகும். வான்கடே மைதானத்தில் 207 ரன்கள் இலக்கு என்பது சேஸிங் செய்ய முடியாத பெரிய இலக்கு அல்ல. ஆனால், பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் பேட்டர்களின் கரங்களைக் கட்டிப்போடுவதும், சரியான முறையில் திட்டங்களையும், ஸ்மார்ட் கிரிக்கெட் ஆடுவதும்தான் முக்கியம். குறிப்பாக கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி ஹர்திக் பாண்டியா ஓவரில் 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் சேர்த்தது தனது உடற்தகுதியை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், சிஎஸ்கே வெற்றிக்கு முக்கியமான ஸ்கோராக மாறியது. ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் அடித்தும், 61 பந்துகளில் சதம் அடித்தும் எந்தப் பயனும் இல்லாமல் போனது. ரோஹித் சர்மா கணக்கில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியில் ரோஹித் சர்மா சேர்த்த 105 ரன்கள், இஷான் கிஷன் 23 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரிடம் இருந்து ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு இஷான் –ரோஹித் கூட்டணி சேர்த்த 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், திலக் வர்மா-ரோஹித் சேர்த்த 60 ரன்கல் பார்ட்னர்ஷிப்பும்தான் அதிகபட்சமாகும். மற்ற எந்த பேட்டரும் ரோஹித் சர்மாவுக்கு துணையாக பேட் செய்யவில்லை. ஒருவேளை ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷெப்பர்ட் ஆகியோரில் ஒருவர் நிலைத்து பேட் செய்திருந்தால், ரோஹித் சர்மா இருந்த ஃபார்மிற்கு ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும். ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் கைவிடவில்லை, ஆனால், மற்ற பேட்டர்கள் சேர்ந்து ரோஹித்சர்மாவை கைவிட்டனர். தோனி பற்றி ஹர்திக் கூறியது என்ன? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ 207 ரன்கள் சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசினர். பதிரணா பந்துவீச்சு வித்தியாசமாக இருந்தது. சிஎஸ்கே சரியாகத் திட்டமிட்டு அதை செயல்படுத்தி ஸ்மார்டாக செயல்பட்டது. சிஎஸ்கே அணியில் ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு ஆலோசனைகளை வழங்கி, எதை எப்படி செய்யலாம் என்று கூறியவர்தான் காரணம்.” “பதிரணா பந்துவீச வராதவரை ஆட்டம் எங்களிடம் இருந்தது. துபே பேட் செய்தபோது சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அந்த நேரத்தில் சூழலுக்கு எது சரியோ அதைத்தான் செய்தேன். நாங்கள் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் அடுத்துவரும் ஆட்டங்களில் விரும்பிய முடிவுகளை அடையலாம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்கு பதிரணா காரணமாக அமைந்தது எப்படி? மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் வரை 10 ரன்ரேட்டில் வெற்றியை நோக்கி சீராக பயணித்தது. ஆனால், 8-வது ஓவரை பதிரணா வீச வந்தபோதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. பதிரணா வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷன்(23) மிட்விக்கெட்டில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 3வது பந்தில் 360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் டீப் தேர்டுமேன் திசையில் அடித்த ஷாட்டை முஸ்தபிசுர் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இந்த இரு விக்கெட்டுகள் மும்பை அணியின் ரன்ரேட் வேகத்துக்கு பிரேக் போட்டன. அதன்பின் வந்த திலக் வர்மா ரோஹித்துடன் சேர்ந்து ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தி, மீண்டும் வெற்றியை நோக்கி மும்பை நகரத் தொடங்கியது, ஆட்டமும் சிஎஸ்கே கையைவிட்டு நகர்ந்தது. 14-வது ஓவரில் பதிராணா மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். பதிரணா வீசிய ஸ்லோவர் பந்தில் மிட்ஆப்பி்ல் திலக் வர்மா தூக்கி அடிக்க தாக்கூர் கேட்ச் பிடித்தார். வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்த மும்பை அணிக்கு மீண்டும் தடைக்கல் விழுந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை திருப்பிய ஓவர்கள் அதன்பின் 15-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அருமையாகப் பந்துவீசினார். அதேபோல 16-வவரை வீசிய தேஷ்பாண்டே 3 ரன்கள் கொடுத்து, கேப்டன் ஹர்திக் வி்க்கெட்டை வீழ்த்தினார். இருவரும் இரு ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இந்த இரு ஓவர்கள்தான் மும்பை அணி மீது பெரிய அழுதத்தை கொண்டு வந்து சேர்த்து, நெருக்கடியில் தள்ளியது. மும்பை வீரர்களான ஷர்துல், தேஷ்பாண்டே இருவரும் சிஎஸ்கேவுக்கு சரியான வேலையை செய்து கொடுத்தனர். இரு ஓவர்களில் அதிகமான டாட் பந்துகளை விட்டதால், மும்பை இந்தியன்ஸ் அணின் வெற்றிக்கான ரன்ரேட்டை கடுமையாக உயர்த்தி, களத்தில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. அடுத்துவந்த டிம் டேவிட் மீதும் ரன்ரேட் அழுத்தம் இருந்தது. இதனால் முஸ்தபிசுர் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி, அதேஓவரில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஷெப்பர்டை கிளீன் போல்டாக்கி பதீராணா வெளியேற்றினார். ஆட்டத்தின் 14 முதல் 16-வது ஓவர்கள்தான் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. திலக் வர்மா ஆட்டமிழந்த 14வது ஓவர், ஷர்துல் வீசிய 15வது ஓவர், தேஷ் பாண்டே வீசிய 16வது ஓவர் ஆகியவை ஆட்டத்தின் போக்கை மாற்றி, மும்பையிடம் இருந்து வெற்றியை முழுமையாக சிஎஸ்கே பறித்துக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், தோனியின் பேட்டிங் பற்றி கூறியது என்ன? சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “ நாங்கள் பெரிய ஸ்கோரை அடிக்க எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கடைசி நேரத்தில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள்தான் காரணம். அதுதான் வெற்றிக்கான வித்தியாசமாகவும் இருந்தது. இதுபோன்ற மைதானத்தில் எப்போதுமே கூடுதலாக 15 ரன்கள் அடிக்கவேண்டும். 220 ரன்கள்வரை எதிர்பார்த்தோம். பந்துவீச்சில் நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக் செயல்படுத்தினோம். எங்கள் அணியின் மலிங்கா சிறப்பாகப் பந்துவீசி யார்கர்களை கச்சிதமாக இறக்கினார். துஷார், ஷர்துலும் இரு சிறப்பான ஓவர்களை வீசினர். ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பு செய்தனர். ரஹானே தொடக்க வீரராக களமிறங்கியது வித்தியாசமாக இருந்திருக்கும்”எ னத் தெரிவித்தார் நம்பிக்கையளித்த துபே-கெய்க்வாட் ஜோடி சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு 3வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே, கெய்க்வாட் ஜோடி சேர்த்த ரன்கள்தான் முக்கியக் காரணம். நடுப்பகுதியில் இருவரும் சேர்ந்து சிஎஸ்கே ஸ்கோரை அருமையாக நகர்த்திக் கொண்டு சென்றனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்தநிலையில், அடுத்த 7 ஓவர்களில் இருவரின் பேட்டிங்கால் 100 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில்கூட 56 ரன்கள்தான் சிஎஸ்கே சேர்த்தது. சிஎஸ்கேவுக்கு பேட்டிங்கில் திருப்புமுனையாக அமைந்தது. 7 முதல் 15-வது ஓவர்கள்தான். 7-ஆவது ஓவர்கள் முதல் 15-ஆவது ஓவர்களில் மும்பை பந்துவீச்சாளர்கள் செய்த தவறை கெய்க்வாட், துபே இருவரும் நன்கு பயன்படுத்தினர். துபே களமிறங்கியபின் மும்பை பந்துவீச்சை விளாசத் தொடங்கினார், கெய்க்வாடும் தனது பங்கிற்கு பவுண்டரிகள் விளாச ரன்ரேட் உயரத் தொடங்கியது. 6 ஓவர்களில் 48 ரன்கள் இருந்த சிஎஸ்கே 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. துபே 28 பந்துகளிலும், கெய்க்வாட் 33 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இந்த சீசனில் துபே அடித்த 2வது அரைசதம், கெய்க்வாட்டுக்கும் இது 2 வது அரைசதமாக அமைந்தது. கெய்க்வாட் 69 ரன்னில்(40 பந்துகள் 5சிக்ஸர்கள், 5பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். துபே 38 பந்துகளில் 66 ரன்களுடன்(2சிக்ஸர், 10பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மோசமான மும்பை பந்துவீச்சு மும்பை அணியில் பும்ரா, முகமது நபியைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாகப் பந்துவீசவில்லை. இருவர் மட்டுமே ஓவருக்கு 6 ரன்ரேட்டில் வீசியுள்ளனர். பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழந்தார். அதேபோல முகமது நபி 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். துபே சுழற்பந்துவீச்சை நன்கு விளையாடுவார் என்பதால், அவர் களத்துக்குவந்தபின் சுழற்பந்துவீச்சை ஹர்திக் பயன்படுத்தவில்லை. ஆனால், முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபாலை பயன்படுத்தி இருந்தால் துபே பெரிய ஷாட்களை அடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் விக்கெட் விழுந்திருக்கும். அதைச் செய்ய ஹர்திக் தவறிவிட்டார். மற்ற பந்துவீச்சாளர்கள் 10 ரன்களுக்கு மேல் வழங்கினர். ஆகாஷ் மத்வாலுக்கு 3ஓவர்களையும், ஸ்ரேயாஸ் கோபாலுக்கு ஒரு ஓவரையும் ஹர்திக் பாண்டியா வழங்கினார். இருவரும் ஓரளவுக்கு நன்றாகப் பந்துவீசிய நிலையில் துபே, கெய்க்வாட்டுக்கு பயந்து இருவரையும் சரியாக ஹர்திக் பயன்படுத்தவில்லை. ஆனால், அதற்குப்பதிலாக தன்னால் நன்கு பந்துவீச இயலும் என நினைத்துக்கொண்டு 3 ஓவர்களில் 43 ரன்களை வழங்கி, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணி எங்கு தோற்றது? மும்பை வான்கடே மைதானத்தில் 207 ரன்கள் நிச்சயமாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். இதுபோன்ற சிறிய மைதானத்தில் ரன்களை ஓடி எடுப்பதில் கவனம் செலுத்தாமல், டாட் பந்துகளை விடாமல் சிக்ஸர் அடிக்கும் பவர்ஷாட் அடிப்பதில் மும்பை பேட்டர்கள் கோட்டை விட்டனர். இந்த ஆட்டத்தில் மும்பை, சிஎஸ்கே அணிகளின் பேட்டர்கள் தலா 19 பவுண்டரிகள் அடித்துள்ளனர். ஆனால், சிக்ஸரைப் பொறுத்தவரை, சிஎஸ்கே அணி 11 சிக்ஸர்களை விளாசிய நிலையில் மும்பை அணி 8 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தது. ஆக, தோனி கடைசி நேரத்தில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பதாக அமைந்தது. மும்பை பேட்டர்கள் சிறிய கேமியோ கூட ஆடாமல் சிக்ஸர்கள் அடிக்காமல் ஆட்டமிழந்ததுதான் மும்பையை தோற்க வைத்தது. இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c51n4dn7m32o- யாழில் விபத்து : இரு பேரப் பிள்ளைகளும் தாத்தாவும் படுகாயம்
15 APR, 2024 | 11:47 AM யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள மகிழங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தாத்தாவும் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்றைய தினம் (14) இரவு சாவகச்சேரி பகுதியிலிருந்து தனது இரண்டு பேரப் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற தாத்தா, மகிழங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டபோது, பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவர்களது தாத்தா என மூன்று பேரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/181101- வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் காலமானார்
15 APR, 2024 | 11:14 AM வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (14) காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவை தவிசாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181093- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
'ரூ.24 கோடிக்கு தகுதியானவன்' என்று நிரூபித்த ஸ்டார்க்: கொல்கத்தா - லக்னௌ ஆட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஏப்ரல் 2024 மிட்செல் ஸ்டார்க்கின் துல்லியமான பந்துவீச்சு, நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சு, பில் சால்ட்டின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், லக்னெள அணியை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கொல்கத்தாவில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 26 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் கொல்கத்தா வீரர் பில் சால்ட். அசத்திய ஸ்டார்க் மற்றும் பில் சால்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்காள புத்தாண்டில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பரிசை ஸ்டார்க், பில் சால்ட் அளித்துள்ளனர். பந்துவீச்சில் ஸ்டார்க்கும், பேட்டிங்கில் சால்ட்டும் மிரட்டி, வெற்றியை எளிதாக்கினர். அதிரடியாக பேட் செய்த பில் சால்ட் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 2 முக்கிய கேட்சுகளையும் பிடித்த சால்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லக்னெள வீரர் தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்கை பாராட்டும் கொல்கத்தா வீரர்கள். பந்துவீச்சில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், தன்னை கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய் ொடுத்து வாங்கியது சரிதான் என்று இந்த போட்டியில் நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியை சுருட்ட முக்கியக் காரணமாகினார். அது மட்டுமல்லாமல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் சுழற்பந்துவீச்சில் லக்னெள பேட்டர்களின் கரங்களைக் கட்டிப் போட்டனர். இருவரும் ஓவருக்கு 5.8 ரன் வீதம் 8 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளம் தான். ஆனால், சிறிது நிலைத்து நிதானமாக பேட் செய்ய வேண்டும். ஆனால் லக்னெள அணியில் பூரன் ஒருவரைத் தவிர வேறு எந்த பேட்டரும் சராசரியாக 5 ஓவர்கள் கூட நிலைத்து பேட் செய்யவில்லை. 50 ரன்களுக்கு கூட யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னெள அணி தோற்றது ஏன்? இக்கட்டான நேரத்தில் ஆங்கர் ரோல் எடுக்கும் கேப்டன் ராகுல் (39), கடந்த போட்டியில் அதிரடியாக பேட் செய்த பதோனி (29), பூரன் (45) ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. தேவ்தத் படிக்கல் தொடர்ந்து சொதப்புகிறார் என அவருக்குப் பதிலாக ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடாவும் சரிவர திறமையை வெளிப்படுத்தவில்லை. லக்னெள அணிக்காக ஷாமர் ஜோஸப் இன்று முதல் போட்டியில் ஆடினார். பந்துவீச்சில் மோசமாக செயல்பட்ட ஜோஸப் 4 ஓவர்கள் வீசி 47 ரன்களை வாரி வழங்கினார், இதில் 3 வைடுகள், 3 நோபால்கள் என ஜோஸப் உதிரிகளையும் விட்டு வைக்கவில்லை. பீல்டிங்கிலும் லக்னெள அணி கட்டுக்கோப்பாகச் செயல்படவில்லை. பில் சால்ட்டுக்கு மட்டும் இன்று இரு கேட்சுகளை தவறவிட்டனர். இதில் ஏதாவது ஒரு கேட்சைப் பிடித்திருந்தாலே அவரை குறைந்த ரன்னில் ஆட்டமிழக்கச் செய்திருக்கலாம். இரு கேட்சுகளை கோட்டைவிட்டதற்கான விலையை லக்னெள அணி கொடுத்தது. அது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணி உதிரிகளாக 8 ரன்கள் மட்டுமே கொடுத்தது. ஆனால், லக்னெள அணி 22 ரன்களை வாரி வழங்கியது. மேலும் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடிக்க கொல்கத்தா பேட்டர்களை அனுமதித்தது. இதுவே 24 பந்துகளில் 100 ரன்களை வாரி வழங்கி தோல்வியை எளிதாக ஒப்புக்கொண்டுவிட்டது. இதில் உதிரிகள் வரிசையில் 22 ரன்களையும் சேர்த்தால் 122 ரன்கள் கொல்கத்தா அணிக்கு எளிதாகக் கிடைத்துவிட்டது. இந்தத் தவறுகளுக்கு எல்லாம் லக்னெள அணி விலை கொடுத்துள்ளது. லக்னெள அணிக்கு ஆறுதலான அம்சம், மோசின்கான் பந்துவீச்சு தான். பவர்ப்ளே ஓவர்களிலேயே கொல்கத்தா அணியின் சுனில் நரேன் (6), ரகுவன்ஷி (7) விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து நெருக்கடி அளி்த்தார். ஆனால், மோசின்கான் அமைத்துக் கொடுத்த பாதையை சக வேகப்பந்துவீச்சாளர்களான யாஷ் தாக்கூர், ஜோஸப் இருவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சுழற்பந்துவீச்சிலும் குர்னல் பாண்டியா, பிஸ்னோய் பந்துவீச்சும் பெரிதாக அணிக்கு உதவவில்லை. லக்னெள அணி பந்துவீச்சில் பெரிதாக திணறுவதற்கும், 160 ரன்களுக்கு மேல் அடித்தும் டிஃபெண்ட் செய்ய முடியாமல் திணறுவதற்கும் இளம் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாதது முக்கியக் காரணமாகும். அது மட்டுல்லாமல் பந்துவீச்சுக்கு ஏராளமான வீரர்கள் பெஞ்சில் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் இருக்கிறது. நவீன் உல் ஹக்கிற்கு பதிலாக அல்ஜாரி ஜோஸப் களமிறங்கினர். நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி, இந்திய பந்துவீச்சாளர் ஷிவம் மாவி, சுழற்பந்துவீச்சில் அனுபவம் நிறைந்த அமித் மிஸ்வை பயன்படுத்தி இருக்கலாம். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கெயில் மேயர்ஸ்க்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. சிறந்த கலவை இல்லாதது, தொடர்ந்து ஒரே மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது எதிரணி எளிதாக வியூகத்தை அமைத்துவிடக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். 'தோல்வியை பற்றி யோசிக்காமல் மீண்டெழுவோம்' லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “எங்களுக்கு இது கடினமான நாள். எங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் இதுபோன்றுதான் வெற்றி பெற நினைக்கிறது. ஒவ்வொரு போட்டியைப் பற்றியும் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கக்கூடாது. எங்கு தவறு நடந்தது என்பதை கண்டறிந்து சரிசெய்து அடுத்த போட்டியில் மீண்டெழுவோம்." "நாங்கள் மோசமான ஷாட்கள் அடித்தோம் எனக் கூறமுடியாது. அதை சரியாக முறையில் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விட்டதும் தோல்விக்கு காரணம். நாங்கள் 30 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளோம். விக்கெட் கைவசம் இருந்திருந்தால், கூடுதலாக ரன்கள் சேர்த்திருப்போம்" என்று கூறினார். மேலும், "பந்துவீச்சில் தான் போட்டியை கோட்டை விட்டிருக்கிறோம். தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுத்தாலும் அதிகமான பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தோம். தொடர் தோல்விகளால் பதற்றப்படவில்லை, முடிவுகளைப் பற்றி நினைக்காமல் நம்பிக்கையுடன் ஆட்டத்தை எதிர்கொள்வோம்" "கடந்த 2 ஆட்டங்களாக எங்களால் 160 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாமைக்கு என்ன காரணம் என்று ஆலோசிப்போம். 180 முதல் 200 ரன்களை எட்டுவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து அணிக்குள் ஆலோசிப்போம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய டீ காக் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் சரிவு டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டீ காக், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்து டீ காக் அதிரடியாகத் தொடங்கினார். அரோரா வீசிய 2வது ஓவரில் ராகுல் சிக்ஸர் விளாச, அதே ஓவரின் கடைசிப்பந்தில் நரேனிடம் கேட்ச் கொடுத்து டீ காக் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து தீபக் ஹூடா களமிறங்கினார். ஸ்டார்க் ஓவரில் திணறிய ஹூடா ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ராகுலிடம் வழங்க, அவர் பவுண்டரி விளாசினார். ஸ்டார்க் வீசிய 5-வது ஓவரில் நினைத்தது போலவே நடந்தது. ஸ்டார்க் ஓவரில் திணறிய ஹூடா 8 ரன்னில் ராமன்தீப் சிங்கிடம் பேக்வேர்ட் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த பதோனி, ராகுலுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி. திணறடித்த நரைன் மற்றும் சக்ரவர்த்தி நரைன், ஹர்சித் ராணா வீசிய இரு ஓவர்களிலும் ராகுல், பதோனியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இருவரும் சேர்ந்து லக்னோ ரன்ரேட்டை கட்டிப் பிடித்தனர். 2 ஓவர்களுக்குப் பின் வருண் வீசிய 10-வது ஓவரில் தான் பதோனி பவுண்டரி அடித்தார். ரஸல் வீசிய 11-வது ஓவரில் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் டீப் மிட்- விக்கெட்டில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 39 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் வந்த வேகத்தில் ரஸல் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். வருண் சக்ரவர்த்தி வீசிய 12வது ஓவரில் பதோனி சிக்ஸர் விளாசிய நிலையில் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டாய்னிஷ் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பூரன், பதோனியுடன் சேர்ந்தார். நரைன், சக்ரவர்த்தி இருவரும் லக்னோ அணியின் ரன்ரேட்டுக்கு பெரிய தடைக்கல்லாக மாறினர். சக்ரவர்த்தி வீசிய 14வது ஓவரில் பூரன் ஒரு சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லக்னெள வீரர் பூரன் 45 ரன்கள் சேர்த்தார். ஆறுதல் அளித்த பூரன் நரைன் வீசிய 15-வது ஓவரில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. முதல் பந்திலேயே பதோனி கால்காப்பில் வாங்க அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் நடுவர் அக்சய் அவுட் வழங்க மறுத்துவிட்டார். 3வது நடுவர் சென்றும் அவுட் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. நரைன் ஓவருக்கு திணறிய பதோனி அதே ஓவரின் 4வது பந்தில் ரகுவன்ஷியிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா களமிறங்கி, பூரனுடன் சேர்ந்தார். இரு ஓவர்களாக லக்னோ அணி ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவில்லை. 16-வது ஓவரை வீசிய வருண், லக்னோ பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் திணறவிட்டார். 18-வது ஓவரை வீசிய அரோராவின் பந்துவீச்சை குறிவைத்து பூரன் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவரின் ஓவரில் பூரன் இரு சிக்ஸர்களை விளாசி 18 ரன்களைச் சேர்த்தார். 19-வது ஓவரை ஹர்சித் ராணா வீசினார். இந்த ஓவரையும் குறிவைத்த பூரன் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் சால்டிடம் கேட்ச் கொடுத்து பூரன் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த அர்ஷத் கானும் 5 ரன்னில் ஸ்டார்க் பந்தில் போல்டாக லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணித் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நரைன், சக்கரவர்த்தி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், சராசரியாக ஓவருக்கு 5.80 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். 16 டாட் பந்துகளையும் வீசினர். கொல்கத்தா அணி எளிதான வெற்றி 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. பில் சால்ட், நரைன் ஆட்டத்தைத் தொடங்கினர். மோசின் கான் வீசிய 2 ஓவரில் நரைன் 6 ரன்னில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரகுவன்ஷியும் 7 ரன்னில் மோசின்கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இரு விக்கெட்டுகளை பவர்ப்ளே ஓவரில் கொல்கத்தா இழந்தது. 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், சால்டுடன் இணைந்தார். குர்னல் பாண்டியா ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய சால்ட் ஆட்டத்தால் பவர்ப்ளேயில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது. சால்ட் 31 ரன்கள் சேர்த்திருந்தபோது மீண்டும் 2வது முறையாக அவர் கொடுத்த கேட்சை லக்னெள வீரர்கள் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சால்ட், அர்ஷத் கான் ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் விளாசி, 26 பந்துகளில் அரைசதம் நிறைவு செய்தார். அதேபோல யாஷ் தாக்கூர் வீசிய 14-வது ஓவரிலும் சால்ட் 3 பவுண்டரிகளை விளாசி ஃபினிஷிங் டச் கொடுத்தார். மோசின் கான் வீசிய 15-வது ஓவரில் மிகப்பெரியசிக்ஸர் விளாசினார். சால்ட் 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து(14 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சால்ட் அதிரடியாக பேட் செய்ய ஸ்ரேயாஸ் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார். பெரிய ஷாட்களுக்கு செல்வதை ஸ்ரேயாஸ் தவிர்த்தார். கொல்கத்தா அணி இலக்கை நெருங்கிய போதுதான் அர்ஷத்கான், பிஸ்னோய் ஓவரில் பவுண்டரிகளை விளாசி வெற்றியை விரைவுப்படுத்தினார். ஸ்ரேயாஸ் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-சால்ட் இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற்றுக் கொடுத்தனர். புள்ளிப் பட்டியலில் மாற்றம் கொல்கத்தா அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில் லக்னெள அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 1.688 என்ற கணக்கில் வலுவாக 2வது இடத்தில் நீடிக்கிறது. லக்னெள அணி 6 போட்டிகளில் 3 தோல்வி, 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 0.038 என்ற கணக்கில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்தால் லக்னெள அணியின் நிகர ரன்ரேட் மைனசில் சென்றுவிடும் என்பதோடு, இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை வென்றாலே லக்னெளவுக்கு புள்ளிக்கணக்கில் நெருக்கடிக்கு வந்துவிடும். https://www.bbc.com/tamil/articles/cp3gnvp222jo- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இரானுக்கு பதிலடியாக இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது? அமெரிக்காவும் முழு போரில் இறங்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி நிருபர் 14 ஏப்ரல் 2024 இரானால் ஒரே இரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியது. இந்தப் பிரச்னையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நேற்றிரவு நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்து அமையும். இரானிய ஆட்சியை முற்றிலும் விரும்பாத நாடுகள் உட்பட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் இந்த விவகாரத்தை நிதானமாக அணுக வலியுறுத்தியுள்ளன. இரானின் நிலைப்பாடு பின்வருமாறு உள்ளது, "கணக்கு சரி செய்யப்பட்டது, அதுதான் இந்த விஷயத்தின் முடிவு. எங்களைத் திருப்பித் தாக்காதீர்கள் அல்லது உங்களால் தடுக்க முடியாத அளவுக்கு ஒரு வலுவான தாக்குதலை நடத்துவோம்." ஒரு குறிப்பிடத்தக்க பதிலைக் கொடுப்போம் என இஸ்ரேல் ஏற்கனவே சபதம் செய்துள்ளது. தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம், இஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் கடுமையான மற்றும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஒரு அரசாகக் கருதப்படுகிறது. அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்குள் இந்த அரசு பதிலடி கொடுத்தது. எனவே இரானின் இந்த நேரடித் தாக்குதலுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட வாய்ப்பில்லை, இருப்பினும் களத்தில் அதற்கென சில வரம்புகள் உள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் தாக்குதல் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையைக் கூட்டியுளார். பட மூலாதாரம்,REUTERS இஸ்ரேல் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன? இஸ்ரேல், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளின் பேச்சைக் கேட்டு ‘மூலோபாய பொறுமையைக்’ கடைபிடிக்கலாம். இரானைத் தாக்குவதற்குப் பதிலாக லெபனானில் உள்ள ஹெஸ்புலா அல்லது சிரியாவில் உள்ள ராணுவத் தளங்கள் போன்ற இரானின் நண்பர்களை குறிவைப்பதைத் தொடரலாம். இதை இஸ்ரேல் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. நேற்றிரவு இரான் எந்த தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவியதோ, இஸ்ரேல் அதைக் குறிவைக்கலாம். நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களால் பதிலடி கொடுக்க முடியும். ஆனால் அவ்வாறு நடந்தால் இரான் அதை போரின் தொடக்கமாகப் பார்க்கும். ஏனெனில் இஸ்ரேல் நேரடியாக இரானைத் தாக்குவது அதுவே முதல் முறையாக இருக்கும். இதுவரை பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரான் ஆதரவு போராளி அமைப்புகளை மட்டுமே இஸ்ரேல் தாக்கியுள்ளது. அவ்வாறு இல்லையென்றால், இரானின் சக்தி வாய்ந்த புரட்சிகர காவலர் படைக்கு சொந்தமான தளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களைத் தாக்கி, இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம். இது விரிவான பதிலடி தாக்குதலாக இருக்கும். பிந்தைய இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை இஸ்ரேல் தேர்ந்தெடுத்தால், இரான் ஒரு புதிய தாக்குதலை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அமெரிக்காவையும் முழு போரில் ஈடுபட தூண்டுமா? இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால், இவை அனைத்தும் இரான் - இஸ்ரேல் பிரச்னையில் அமெரிக்காவையும் இழுத்துவிடுமா என்பது தான். அப்படி அமெரிக்கா உள்ளே நுழைந்தால், இரானுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே முழு அளவிலான போருக்கு அது வழிவகுக்கும். ஆறு வளைகுடா அரபு நாடுகளிலும், சிரியா, இராக் மற்றும் ஜோர்டானிலும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளை மீறி இரான் தயாரித்துள்ள பாலிஸ்டிக் மற்றும் பிற ஏவுகணைகளின் இலக்குகளாக இந்த அமெரிக்க ராணுவத் தளங்கள் மாறக்கூடும். ஒருவேளை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், இரான் நீண்ட காலமாக அச்சுறுத்தி வந்த ஒன்றைச் செய்யக்கூடும். அதாவது வெடிகுண்டுகள், ட்ரோன்கள் மற்றும் அதிவேக போர்க் கப்பல்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட இரான் முயற்சி செய்யலாம். அவ்வாறு நடந்தால் உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியை இரான் துண்டித்துவிடும். அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை பிராந்திய அளவிலான போருக்கு இழுத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கர நிகழ்வாக இது அமைந்துவிடும். இதைத் தவிர்க்க தான் பல அரசாங்கங்கள் இப்போது 24 மணி நேரமும் போராடி வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3gnvj2re3o- டூசைன்ட் லூவெர்ச்சர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'
பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் டூசைன்ட் லூவெர்ச்சர். கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வீகா பதவி, பிபிசி செய்திகள், பிரேசில் 14 ஏப்ரல் 2024 டூசைன்ட் லூவெர்ச்சர், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு நம்ப முடியாத சாதனையைச் செய்தார். ஒரு முன்னாள் அடிமையாகவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மகனாகவும், அவர் ஒரு வெற்றிகரமான புரட்சிக்குக் காரணமாக இருந்தார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து அடிமைகளையும் விடுவிக்க அந்தப் புரட்சி வழிவகுத்தது. அமெரிக்காவில் அவ்வாறு நடந்தது அதுவே முதல் முறை. இந்தச் செயல்முறை அடிமைத்தனத்தில் இருந்து காலனியை மீட்டெடுத்து, அதற்கு சுதந்திரம் வழங்கியது. லத்தீன் அமெரிக்காவின் முதல் சுதந்திர நாடாக அந்த காலனி மாறியது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புரட்சிக்குக் காரணமாக இருந்தவர்தான், டூசைன்ட் லூவெர்ச்சர் (1743-1803). அவர் ‘ஹைதியன் புரட்சி’ (Haitian revolution) என்று அழைக்கப்படும் புரட்சியின் முக்கியத் தலைவராக இருந்தார். பின்னர் செயின்ட்-டொமிங்கு என்ற அந்த பிரெஞ்சு காலனியின் ஆளுநரானார். இந்த பிரெஞ்சு காலனிதான் சுதந்திரத்திற்குப் பிறகு ஹைதி என்று அழைக்கப்பட்டது. புரட்சி தொடங்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்தப் புரட்சியின்போது, அடிமை ஆட்சி பிரதேசம் முழுவதும் ஒழிக்கப்பட்டது. அடிமைகளின் கிளர்ச்சி ஆகஸ்ட் 22, 1791இல் தொடங்கியது. அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். மெஸ்டிசோஸ், பிரஞ்சு, ஸ்பானிஷ், பிரிட்டிஷ் மற்றும் தீவின் பிற மக்களிடம் இருந்து சிறிது சிறிதாக ஆதரவுகளைத் திரட்டினர். புரட்சியாளர்கள் ஒரு தந்திரமாக, ஏராளமான கரும்பு வயல்களுக்கு தீ வைத்தனர். பண்டைய ரோமில் ஸ்பார்டகஸ் (கி.மு.109- கி.மு.71) நடத்திய புரட்சிக்கு (ஆனால் அது தோல்வியில் முடிந்தது) பிறகு ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. உடனடி விளைவாக, இது மற்ற அமெரிக்க காலனிகளின் அடிமை பிரபுத்துவங்களிலும் மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பெருநகரங்களிலும் ஓர் அச்சத்தைத் தூண்டியது. மோதலின் தொடக்கத்தில் இருந்தே லூவெர்ச்சர் ஒரு தலைவராகச் செயல்பட்டார். அவர் மக்களிடையே தாக்கம் செலுத்தக் கூடியவராகவும், கிளர்ச்சியாளர்களுக்கு கட்டளையிடுவதில் திறமையானவராகவும் இருந்தார். நன்கு கற்றறிந்தவர், 1789 புரட்சிக்குப் பிறகு பிரான்ஸ் எதிர்கொண்ட சிக்கலான வரலாற்றுத் தருணத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. தங்கள் இனம் சுதந்திரத்தை அடைவதற்கான சிறந்த தருணம் அதுதான் என்பதைப் புரிந்துகொண்டார். ‘கருப்பு நெப்போலியன்’ என்ற புனைப்பெயர் பிரெஞ்சு அரசியல்வாதியும் எழுத்தாளருமான ஃபிராங்கோயிஸ்-ரெனே டி சாட்யூப்ரியாண்ட் என்பவர் தனது ‘மெமோயர்ஸ் ஃப்ரம் பியோண்ட் தி கிரேவ்’ என்ற புத்தகத்தில் (1848இல் வெளியிடப்பட்டது) உருவாக்கப்பட்டது. தான் 1833இல் எழுதிய ஒரு கடிதத்தில் (அவரது புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது) சாட்யூப்ரியாண்ட், “கறுப்பு நெப்போலியன் டூசைன்ட் லூவெர்ச்சர், வெள்ளை நெப்போலியனால் கொல்லப்பட்டார் " என்று குறிப்பிட்டார். லூவெர்ச்சரை பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் லூயிஸ் டொனாடியூ, ஜீன் ஆஃப்ரிக் ஊடகத்திடம் பேசியபோது, "கருப்பு மற்றும் வெள்ளை நெப்போலியன்கள், இருவருமே லட்சியவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள். நெப்போலியன் போனபார்ட் தன்னை 'நிரந்தர தலைவராக' அறிவித்துக் கொள்வதற்கு முன்பாகவே டூசைன்ட் லூவெர்ச்சர் தன்னை ‘நிரந்தர ஆளுநராக’ அறிவித்துக் கொண்டார்" என்று கூறினார். வெற்றிகரமான புரட்சி பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,ஹைதிய புரட்சியின் ஓர் அத்தியாயம் ஓவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. “டூசைன்ட் லூவெர்ச்சர் ஒரு சிறிய, சில சலுகைகளை மட்டுமே பெற்ற ஒரு சாதியைச் சேர்ந்தவர்" என்று வரலாற்றாசிரியர் சிஎல்ஆர் ஜேம்ஸ் தனது ‘தி பிளாக் ஜேகோபின்ஸ்' (The Black Jacobins, 1938) புத்தகத்தில் கூறுகிறார். "அவரது தந்தை, ஒரு சிறிய ஆப்பிரிக்க குழுவின் தலைவரின் மகனாக இருந்தார். போரில் பிடிபட்டார், ஒரு அடிமையாக விற்கப்பட்டு, அடிமைக் கப்பலில் பயணம் செய்தார். ஒரு குடியேற்றவாசியால் அவர் விலைக்கு வாங்கப்பட்டார். இந்தக் கறுப்பின மனிதர் ஓர் அசாதாரண நபர் என்பதை அந்த முதலாளி உணர்ந்தார். தோட்டத்தில் அவருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஐந்து அடிமைகளைப் பயன்படுத்தி ஒரு நிலத்தைப் பயிரிட்டார். பின்னர் அவர் ஒரு கத்தோலிக்கராக மாறினார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். டூசைன்ட் அவருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் மூத்தவர்," என்று ஜேம்ஸ் கூறுகிறார். பிரான்சுவா டொமினிக் டூசைன்ட் என்ற பெயருடன் அவர் பிறந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு லூவெர்ச்சர் என்ற குடும்பப்பெயர் சேர்க்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாசாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தின் தகவல்படி, அவர் 1776இல் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அடிமை உழைப்பு மூலம் தனது காபி தோட்டத்தில் ஓரளவு செல்வத்தைப் பெற்றார். கடந்த 1791ஆம் ஆண்டில், செயிண்ட்-டோமிங்குவின் அடிமை மக்களிடையே ஒரு புரட்சி உருவானது. தொடக்கத்தில் லூவெர்ச்சர் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எதிராகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார். "ஹைதியன் புரட்சி வெற்றியடைந்தது என்பதை இங்கு முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். அவர் மிகவும் வெற்றிகரமான தலைவராக இருந்தார், அவர் அமெரிக்காவின் முதல் அடிமைத்தன ஒழிப்பு புரட்சியை முன்னெடுத்தார் மற்றும் ஹைதியின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்தார். எடுத்துக்காட்டாக, பிரேசிலிலோ அல்லது தெற்கு அமெரிக்காவிலோ இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று அஞ்சும் அமெரிக்காவின் அடிமைகளை வைத்திருக்கும் அனைத்து உயரடுக்குகளுக்கும் ஹைதி ஓர் உண்மையான எச்சரிக்கையாக மாறியது," என்று சாவோ பாவுலோ நகரின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அலெக்ஸாண்ட்ரே மார்குசி விளக்கினார். அவரைப் பொறுத்தவரை, இந்த அச்சத்தின் காரணமாக "ஹைதி தொடர்ச்சியான சர்வதேச புறக்கணிப்புகளைச் சந்தித்தது. இது போருக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியைத் தடுத்தது. நாட்டின் பொருளாதார சிக்கல்களை விளக்குவதற்கு இது ஓரளவு உதவுகிறது," என்று வரலாற்றாசிரியர் கூறினார். மிகப்பெரிய மேற்கத்திய படைகளுக்கு எதிராக பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,'கருப்பு நெப்போலியன்' டூசைன்ட் லூவெர்ச்சர். "புரட்சிகர செயல்முறை வெற்றி பெற்றது. 1794ஆம் ஆண்டில், பிரெஞ்சு புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அடிமைத்தனத்தை ஒழித்தது. ஆனால் இது நடந்தபோது, ஹைதியில் உள்ள கறுப்பின ஆப்பிரிக்க தொழிலாளர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருந்தனர். மேலும் அவர்கள் லூவர்ச்சரின் தலைமையின் கீழ் துல்லியமாக விடுவிக்கப்பட்டனர்,” என்று பிரேசிலில் உள்ள மெக்கென்சி பிரஸ்பைடிரியன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான வெஸ்லி சந்தனா கூறினார். “1793 மற்றும் 1794க்கு இடையில் அனைவரும் சுதந்திரமாக இருந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிமைத்தனம் முடிந்துவிட்டது என்று பிரெஞ்சு பெருநகரம் அறிவிக்கத் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பே அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர லூவர்ச்சர்ரால் முடிந்தது,” என்று அவர் கூறினார். அதாவது லூவெர்ச்சரின் மரணத்திற்குப் பிறகு, ஹைதியின் சுதந்திரம் 1804இல் மட்டுமே அடையப்பட்டது. முழு செயல்முறையும் அவர் தலைமையில் ஒரு புரட்சிகர தருணம் என்று சந்தனா நினைவு கூர்ந்தார். பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள விரும்பும் உள்ளூர் பணக்கார வெள்ளையர்களின் உதவியையும் அவர் நாடினார். வரலாற்றாசிரியர் லூயிஸ் ஜெரால்டோ சில்வா, ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் பரானாவின் பேராசிரியர், "வரலாற்றில் பின்னோக்கிப் பார்ப்பது மூலம், அந்த நிகழ்வுகளால் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவாது," என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "புரட்சி வெற்றி பெற்றது. லூவெர்ச்சர் அந்தக் காலத்தின் மிகப்பெரிய மேற்கத்திய படைகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டார். முடிந்தவரை ஹிஸ்பானியோலாவின் பண்டைய தீவின் மேற்குப் பகுதியில் பெருநகரத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க பிரான்ஸ் முயன்றது. அடிமை வர்த்தகம் மற்றும் அடிமைத்தனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியும் அதில் இருந்தது" என்று கூறுகிறார். மேலும், "மலேரியா, காலரா, கரீபியனின் மோசமான வெப்பம் ஆகியவற்றின் காரணமாக, சக்திவாய்ந்த பிரெஞ்சு ராணுவம் கறுப்பர் இன மக்களிடம் போரில் தோற்றது" என்று அவர் விவரித்தார். இன்றைய ஹைதி பட மூலாதாரம்,GETTY IMAGES "இன்று ஹைதி ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத நாடு என்பதற்குக் காரணம் அங்கிருக்கும் மோசமான அரசாங்கம், திடீர் அதிகார மாற்றங்களுடன் போராளிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்தான். மேற்கத்திய தப்பெண்ணங்கள் மற்றும் இனவெறி காரணமல்ல,” என்று வரலாற்றாசிரியர் சில்வா விளக்குகிறார். "ஹைதியின் தற்போதைய சூழ்நிலையும் முதலாளித்துவ வளர்ச்சியின் மோசமான சமத்துவமின்மையுடன் தொடர்புடையது," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், "ஹைதியின் இன்றைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் சரிவு அப்போதைய ஹைதியின் வலிமையையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கவில்லை. இதே ஹைதிதான் ஜனவரி 1804இல், அமெரிக்காவிற்குப் பிறகு புதிய உலகின் இரண்டாவது அரசமைப்பு குடியரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது,” என்று சில்வா கூறுகிறார். அப்போது அனைத்து குடிமக்களும் கறுப்பர்களாக இருக்கும் உலகின் முதல் மற்றும் ஒரே குடியரசாக இருந்தது ஹைதி. "கருப்பின இயக்கத்தின் பார்வையில், புரட்சி மற்றும் லூவெர்ச்சர் இரண்டும் மிக முக்கியமான வரலாற்று குறியீடுகள். எனவே அது பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் அனைத்து வகையான படையெடுப்புகளையும் அல்லது அதிகாரத்தைப் பராமரிக்கும் அளவையும் அகற்றும் அளவிற்கு வெற்றி பெற்றது,” என்று கூறுகிறார் சமூகவியலாளர் பாலோ நிக்கோலி ராமிரெஸ். "எதிர்ப்பின் அடிப்படையில், இதுவொரு வெற்றிதான். இருப்பினும், முன்னாள் கறுப்பின அடிமைகளின் புரட்சியாக இருந்ததால், தப்பெண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தியது. இன்றும் ஹைதியில் அது நிலவுகிறது என்பது தெளிவாகிறது. இதனால் ஹைதி புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டது. இது எண்ணற்ற சமூக பிரச்னைகளை ஏற்படுத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார். புரட்சி ஏற்பட்டபோது, "ஹைதி மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக மாறியது," என்று சமூகவியலாளர் பாலோ கூறுகிறார். "இந்த விதி முழு கண்டத்திற்கும் பொருந்தும். இது அடிமட்டத்தில் இருந்து வந்த ஒரு புரட்சி. இன்றுவரை ஒரு குறிப்பிட்ட வழியில், ஹைதியில் முதலீடு செய்வதில் பல நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் அந்த நாட்டில் அதிகாரம் செலுத்துபவர்கள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில், அவர்கள் லூவர்ச்சரின் வாரிசுகள்,” என்று அவர் கூறுகிறார். கருப்பு நெப்போலியனின் மறைவு பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,லூவெர்ச்சர் சிறையில் இறந்ததை சித்தரிக்கும் ஓவியம். “லூவெர்ச்சர் ஹைதியில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதிலும், ஆப்பிரிக்காவிலும் சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சின்னமாக மாறினார் என்று மார்குசி கூறுகிறார். "ஆப்பிரிக்காவில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அவரது உருவம் மற்ற இடங்களில் விடுதலை இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு கறுப்பினத் தலைவரின் உதாரணமாக நினைவுகூரப்பட்டது," என்று வரலாற்றாசிரியர் கூறினார். "இவை அனைத்தும் அவரது உருவத்தைச் சுற்றி ஒரு கட்டுக்கதையை உருவாக்குவதன் ஒரு பகுதி. ஆனால் அதை முழுமையாக நம்பாமல் இருப்பதும் முக்கியம். அடிமைத்தனம் இல்லாத ஹைதியை அவர் கற்பனை செய்தார். ஆனால் அவரது அரசியல் திட்டம் நாட்டின் நில உடைமையாளர்களின் நலன்களுடன் இணக்கமாக இருந்தது. இது உண்மையில் புரட்சிகர செயல்பாட்டின்போது இந்த உயரடுக்கினருடன் கூட்டணியைத் தக்கவைக்க அவரை அனுமதித்த ஒரு காரணியாகும்," என்று மார்குசி விளக்கினார். ஓர் உதாரணம் என்னவென்றால், வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தபடி, ஹைதியில் அவர் உருவாக்க உதவிய ஒரு விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. "நிலம் தொடர்ந்து பெரிய நில உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும், மேலும் பெரும்பான்மையான மக்கள் கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள்," என்று அவர் விவரித்தார். "ஹைதியின் செல்வமும் பொருளாதார வளர்ச்சியும் பெரிய விவசாய ஏற்றுமதி இருப்புகளைப் பராமரிப்பதைச் சார்ந்துள்ளது என்று அவர் நம்பினார், இது சுதந்திர ஹைதியில் பல சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர உதவியது," என்று அவர் கூறினார். கடந்த 1802ஆம் ஆண்டில், அப்போதைய பிரெஞ்சு தூதர் நெப்போலியன் போனபார்டே (1769-1821) தனது மைத்துனரான ஜெனரல் சார்லஸ் லெக்லெர்க்கை (1772-1802) ஹிஸ்பானியோலா தீவுக்கு அனுப்பினார். காலனியின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து அடிமைத்தனத்தை மீண்டும் நிலைநாட்டுவதே அவரது இலக்காக இருந்தது. பின்னர் செயின்ட்-டோமிங்குவின் ஆளுநராக இருந்த லூவெர்ச்சரை பதவி நீக்கம் செய்ய ஜெனரல் திட்டமிட்டார். அவர் அதைவிட அதிகமாகச் சாதித்தார். தலைவர் லூவெர்ச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து பிரான்சுக்கு அனுப்பினார். ஏப்ரல் 7, 1803இல் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட லூவெர்ச்சர் சிறையில் இறந்தார். ஹைதியின் பிற தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹைதியில் உள்ள லூவெர்ச்சரின் சிலை. கரீபியன் தீவுகளில், அவரது ஆதரவாளர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தனர். பல தோல்விகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு, அதே ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய துருப்புகள் வெளியேறின. ஜனவரி 1, 1804இல் ஹைதி ஒரு சுதந்திர நாடானது, இருப்பினும் பிரான்சின் அங்கீகாரம் 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. வரலாற்றாசிரியர் சந்தனா, “வரலாற்றில் ஹைதி என்பது அமெரிக்காவில் நடந்த அரசியல் புரட்சியின் ஒரு ஆகச் சிறந்த குறிப்பு," என்று கூறுகிறார். "லூவெர்ச்சர் ஒரு மிக முக்கியமான அரசியல் தலைவராக இருந்தார், பல இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் பொறுப்பானவர். அவரது தலைமை, போராடுவதற்கான அவரது திறன் மற்றும் அவரது துணிச்சலுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார்," என்று அவர் கூறினார். "அவரது உருவம் இன்றும் ஹைதியில் எதிர்ப்பின் அடையாளமாக, ஒரு தேசிய அடையாளமாக எதிரொலிக்கிறது" என்று ராமிரெஸ் கூறுகிறார். இருப்பினும், லூவெர்ச்சர் ஒரு தனிப் போராளி அல்ல என்பதையும், புரட்சியில் பல ஹீரோக்கள் இருந்தனர் என்பதையும் நிபுணர்கள் கூறுகிறார்கள். "அவர் மட்டுமல்ல, ஓகேய், ரேமண்ட், கிறிஸ்டோபே, டெஸ்ஸாலின்ஸ் போன்ற தலைவர்களும்கூட சமகால ஹைதியில் மதிக்கப்படுகிறார்கள். இந்த நபர்களுக்கு சிலைகள், ஓவியங்கள் மற்றும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஹைதிய புரட்சியின் வலிமையையும் அர்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்ளவில்லை, பார்க்கவும் இல்லை. ஆனால் இந்த நினைவுச் சின்னங்கள் ஹைதியர்களுக்கு பெருமை சேர்க்கிறது,” என்று சில்வா கூறுகிறார். “லூவெர்ச்சரை அமெரிக்காவின் மிகப் பெரிய கறுப்பினப் புரட்சியாளராகக் குறிப்பிடுவது தனிமனிதனையும் அவர் வாழ்ந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவுவதைவிட அதிகமான பிரச்னைகளை, கட்டுக்கதைகளை உருவாக்குகிறது," என்று வரலாற்றாசிரியர் சில்வா கருத்து தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை புரட்சியாளர் லூவெர்ச்சர், மற்ற மனிதர்களைப் போலவே, சாதாரணமான ஒரு நபர். நமக்கு இருக்கும் கவலைகள், மகிழ்ச்சிகள், உணர்ச்சிகள் என அனைத்தும் அவருக்கும் இருந்தன. ஹைதிய புரட்சியின் வெற்றியில் லூவெர்ச்சரின் செல்வாக்கையும் மார்குசி ஒப்பிட்டுப் பார்க்கிறார், “ஒரு ராணுவ மற்றும் ராஜதந்திரத் தலைவராக அவரது தனிப்பட்ட பங்கை மீறிய தொடர்ச்சியான காரணிகளால் இது வெற்றிகரமாக இருந்தது. வெற்றிக்குக் காரணமாக முக்கியமான பல முன்னாள் அடிமைப் போராளித் தலைவர்களும் இருந்தனர், ஆனால் வரலாற்றில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்" என்று வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2jd8zye9jvo- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
Iran Attack on Israel: போர் கவலையில் UN; இந்தியா சொன்ன 'செய்தி' இதுவரை நடந்தது என்ன? Detailed Report ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை தொடுத்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது. அமெரிக்கா உள்பட பல நாடுகள் இரானை கண்டித்துள்ளன. பதற்றத்தை உடனடியாக தணிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பதன் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு- புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
Published By: VISHNU 14 APR, 2024 | 05:45 PM சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையில்…. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611வது நாளாக நாம் போராடிவருகின்றோம். அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் குழு ஒன்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது எமக்கு மகிழ்ச்சியான விடயம். இவர்கள் சேர்ந்து, தமிழர்கள் மீதான அமெரிக்கக் கொள்கையில் ஒரு மாற்றத்தை வலியுறுத்தி, செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இலங்கையில் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.அத்துடன்தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் உரிமை உள்ளது. அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியானவர்கள். இதன் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். அமெரிக்காவில் உள்ள நமது தமிழர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மற்றும் 10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தமிழ் அரசியல்வாதிகள் மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைக்க வேண்டும். அவர்கள் அரசியலில் இருந்து பின்வாங்கி, புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை நாடுகளான மொண்டினீக்ரோ, தெற்கு சூடான், கொசோவோ, கிழக்கு திமோர் போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க புதிய தலைமுறையை அனுமதிக்க வேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/181072- "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?"
நன்றி உங்கள் ஆக்கத்திற்கு- அறிவாற்றல் முரண்பாடு: தவறு எனத் தெரிந்தே பின்பற்றும் பழக்கங்களை கைவிடும் வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என புகைப்பிடிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். சில நேரங்களில் அவர்களேகூட புகைபிடித்துக் கொண்டே, “இது உடலுக்கு மிகவும் கேடு. சீக்கிரம் நிறுத்த வேண்டும்” என்பார்கள், ஆனாலும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள் அல்லது அதை நியாயப்படுத்த சில காரணங்களை வைத்திருப்பார்கள். “புகைப்பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் இறக்கிறார்கள் (உலக சுகாதார அமைப்பின் அறிக்கை), எனவே இதை விடுங்கள்” என அவர்களிடம் கூறினால், “அட, சாலை விபத்தில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள், அதற்காக சாலையில் பயணம் செய்யாமலா இருக்க முடியும்?” எனக் கேட்பார்கள். மேலும் ஆதாரங்களை நாம் அடுக்கினால், அவர்களும் அதற்கு ஏற்றாற்போல புதிய நியாயங்களை, காரணங்களைக் கூறுவார்கள். பணம் சேமிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு ஆடம்பர பொருட்களை வாங்குவது, ஆரோக்கியமாக இருக்க ஆசை ஆனாலும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற மறுப்பது என இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். இத்தகைய செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல்தான் என்ன? இதனால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அறிவாற்றல் முரண்பாடு கோட்பாடு 1950களில் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கரால் முன்மொழியப்பட்டது. அறிவாற்றல் முரண்பாடு (Cognitive dissonance) முன்னர் சொன்னது போல் ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பான உடலுடன் இருக்க வேண்டுமென யாருக்குத்தான் ஆசை இருக்காது. தோற்றம் சார்ந்த அழகு என்பதைத் தாண்டி அவ்வாறு இருப்பதால் உடல்நிலையும் மனநிலையும் மேம்படும் எனப் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்றால் அதை உடனே தொடங்காமல் ஏதேனும் ஒரு காரணம் சொல்வார்கள். உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலனைவிட எந்தக் காரணத்திற்காக அதைத் தவிர்க்கிறோமோ அதுதான் முக்கியம் என நினைப்பார்கள். இன்னொரு உதாரணம், ஒரு நபர், நன்றாகப் படித்திருப்பார், முற்போக்கான கருத்துகளைப் பேசுவார். ஆனால் தேர்தலில் அவரது கருத்துகள், கொள்கைகளுடன் முரண்படும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பார். அவரது கொள்கைகளைவிட, அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்கான காரணம் அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியதால் இதைச் செய்திருப்பார். இந்த மனநிலைக்குப் பெயர்தான் அறிவாற்றல் முரண்பாடு. ஒரு நபரின் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது கொள்கைகளோடு அவர்களின் செயல்கள் முரண்படும்போது எழும் அசௌகரியம் அல்லது பதற்றத்தை இது குறிக்கிறது. அறிவாற்றல் முரண்பாடு கோட்பாடு 1950களில் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கரால் முன்மொழியப்பட்டது. காலத்திற்கு ஏற்றாற்போல தனிநபர்கள் தங்கள் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது நடத்தைகளை மாற்றுவதன் மூலம் இந்த முரண்பாட்டைக் குறைப்பதற்கான உந்துதலை அவர்களால் பெற முடியும் என அவரது ஆய்வு கூறுகிறது. இதுவொரு சாதாரண பிரச்னை போலத் தெரியலாம். ஆனால் தனி மனிதர்கள் மட்டுமல்லாது, ஒரு குழுவாகக்கூட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1954இல் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ‘தி சீக்கர்ஸ்’ (The Seekers) என்ற வழிபாட்டுக் குழுவின் தலைவர் டோரதி மார்ட்டின் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். இதுதான் அவரது அறிவிப்பு "கிளாரியன் எனும் கிரகத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் என்னைத் தொடர்பு கொண்டனர். இந்த ஆண்டின் (1954) டிசம்பர் 25 அன்று இந்த உலகம் அழியும். ஆனால், நம் குழு மட்டும் வேற்றுகிரகவாசிகளால் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும், பூமி அழிவதற்கு சற்று முன்பு ஒரு விண்கலத்தில் வந்து அவர்கள் நம்மை அழைத்துச் செல்வார்கள். தயாராக இருங்கள்.” அவரது மிகவும் விசுவாசமான ஆதரவாளர்கள் சிலர், தங்கள் தலைவரின் தீர்க்கதரிசனத்தின் மீதான முழு நம்பிக்கை காரணமாக, தங்கள் சொத்துகளை விற்று, தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறி, வேற்றுகிரகவாசிகளின் வருகைக்காகக் காத்திருந்தனர். அவர்களது குழுவில் சில ஒற்றர்களும் இருந்தனர். உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர் மற்றும் அவரது சகாக்களான ஹென்றி ரிக்கென், ஸ்டான்லி ஷாக்டர் ஆகியோர் இந்தக் குழுவின் நடவடிக்கைகளை அறிந்துகொள்ள ஆதரவாளர்கள் போல உள்ளே நுழைந்திருந்தனர். டிசம்பர் 25 அன்று உலகம் அழியவில்லை என்றால் இந்தக் குழு தங்கள் தவறை உணர்ந்து கொள்ளும் என அவர்கள் நினைத்தார்கள். அதேபோல டிசம்பர் 25 வந்தது, அன்று உலகம் அழியவில்லை. ஆனால் இந்தக் குழு தங்கள் தலைவரைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக அவரை மேலும் கொண்டாடினார்கள். எப்படி என்றால், இங்குதான் அறிவாற்றல் முரண்பாடு வேலை செய்தது. திடீரென்று குழு தலைவர் மார்ட்டின் ஒரு செய்தியை வெளியிட்டார், “வேற்றுகிரகவாசிகள் உலகை அழிக்க வேண்டாமென முடிவு செய்துவிட்டார்கள், காரணம் நமது குழு மேற்கொண்ட பிரார்த்தனைகள் தான். அதனால்தான் ஒன்றும் நடக்கவில்லை,” என்று அந்தச் செய்தியில் கூறினார். குழு நபர்களும் வெளியே சென்று இதை பொது மக்களிடம் கூறி, “பார்த்தீர்களா எங்கள் மகிமையை, நாங்கள் செய்த பிரார்த்தனையால் உலகம் அழிவிலிருந்து தப்பித்தது” என்று பரப்புரை செய்தார்கள். உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர் இதன்மூலம் புரிந்துகொண்டது என்னவென்றால், உலகம் அழியவில்லை என்பது குழுவின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இருந்தும் தங்களது தலைவரின் தீர்க்கதரிசனத்தை நம்பியது சரிதான் எனத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அல்லது தங்களது செயல்கள் குறித்து மகிழ்ந்துகொள்ள அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. தங்கள் பிரார்த்தனையால்தான் உலகம் அழியவில்லை என்ற காரணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தனது இத்தகைய ஆய்வுகள் மூலம்தான் அறிவாற்றல் முரண்பாடு கோட்பாட்டை முன்மொழிந்தார் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர். அறிவாற்றல் முரண்பாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் படக்குறிப்பு,மனநல மருத்துவர் கிருபாகரன். “கடந்த 2020இல் உலகம் முழுவதும் கொரோனா பரவியபோது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சொன்னபோது பலரும் அணியவில்லை. ஒரு உயிர்கொல்லி நோய் பரவுகிறது என்பதை கண்கூடாகப் பார்த்தும்கூட சிலர் முகக்கவசம் அணியாமல் சுற்றினார்களே, அதுவே அறிவாற்றல் முரண்பாட்டின் விளைவுதான்,” என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன். தொடர்ந்து பேசிய அவர், “நமக்கு ஒரு எண்ணம் வருகிறது, அது நமக்கு நல்லதல்ல, தவறு எனத் தெரிந்தும் அதைச் செய்வது என்பது மனிதர்களில் பலருக்கும் உள்ள பழக்கம். சிந்தனை மற்றும் செயல்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாடு உளவியல் பதற்றத்தை உருவாக்குகிறது. இந்தப் பதற்றத்தைக் குறைக்க சிலர் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவார்கள் அல்லது தங்களது சிந்தனையை மாற்றிக் கொள்வார்கள். எனவே ஒருவர் தனது பகுத்தறிவு சிந்தனைகளை அடையாளம் கண்டு, இதைச் செய்தால் தவறு, அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து அதைச் சரிசெய்ய வேண்டும். தொடர்ந்து நமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கக்கூடாது. அவ்வாறு செய்து கொண்டே இருந்தால் அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்," என எச்சரிக்கிறார் மருத்துவர் கிருபாகரன். “நம்முடைய எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. அதற்கு எப்படி எதிர்வினை புரிகிறோம் என்பதைப் பொறுத்துதான் எல்லாம். எனவே உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைக் கவனியுங்கள், அதில் எதைச் செயலாக மாற்ற வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் எனபதை யோசித்தால் அதுவே இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் கிருபாகரன். குற்றவுணர்வுக்கு வழிவகுக்கும் அறிவாற்றல் முரண்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES குற்றவுணர்வு என்பது அறிவாற்றல் முரண்பாடு ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சிக்கல்களில் ஒன்று எனக் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “சமீபத்தில் ஒரு கணவன்- மனைவி என்னிடம் ஆலோசனை பெற வந்தார்கள். கணவர் நன்றாகப் படித்தவர், நல்ல பணியில் இருப்பவர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இதையெல்லாம் தாண்டி, கணவருக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தாம் செய்வது தவறு எனத் தெரிந்து மனைவியிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு எனத் தெரிந்தும் ஏன் செய்தீர்கள் எனக் கேட்டால், அவரிடம் பதில் இல்லை. என்னால் இந்த குற்றவுணர்வைத் தாங்க முடியவில்லை என அழுகிறார். இதுபோன்ற பல வழக்குகள் உள்ளன. தவறு எனத் தெரிந்தால், அந்த சிந்தனையைச் செயலாக மாற்றக்கூடாது. பின்னர் குற்றவுணர்வில் தவிப்பதால் நாம் இழந்தவை மீண்டும் வராது அல்லவா!” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clw02841xyvo- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தீர்மானிக்கும் பொறுப்பு இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவையிடம் - மத்திய கிழக்கில் பாரிய மோதல் ஆபத்து தொடர்கின்றது Published By: RAJEEBAN 14 APR, 2024 | 11:47 AM theguardian ஈரானின் தாக்குதலை தொடர்ந்து எவ்வாறான பதில் நடவடிக்கையை எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய போர் அமைச்சரவையிடம் இஸ்ரேலிய அமைச்சரவை கையளித்துள்ள அதேவேளை மத்திய கிழக்கில் பாரிய யுத்தமொன்றிற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன. நள்ளிரவில் கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய பிரதமர் உட்பட மூவர் அடங்கிய போர் அமைச்சரவையிடம் ஒப்படைத்துள்ளது. மூவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ள நிலையில் பிராந்தியத்தின் தலைவிதி அவர்களின் கரங்களில் தற்போது தங்கியுள்ளது. யுத்த அமைச்சரவையின் கூட்டத்திற்கு முன்னரான பதற்றமான நிமிடங்களில் அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலிய பிரதமரும் 25 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர். இந்த உரையாடலில் இஸ்ரேல் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என பைடன் வலியுறுத்தினார் என இஸ்ரேலிய ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன. இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பைடன் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் என்ன தெரிவித்தார் என்பதை தெரிவிக்கவில்லை எனினும் ஈரான் செலுத்திய ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் அனைத்தும் அமெரிக்காவின் உதவியுடன் வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த தற்பாதுகாப்பு திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்ற தெளிவான செய்தி எதிரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பைடன் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் தாக்குதல் காரணமாக பத்துவயது சிறுவன் ஒருவன் மாத்திரமே காயமடைந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் பாலைவனத்தில் அந்த நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பெடோனியஸ் சமூகத்தை சேர்ந்த சிறுவன் காயமடைந்துள்ளான். தென்பகுதி இராணுவதளமொன்றும் சிறிய சேதங்களை சந்தித்துள்ளது. இந்த தாக்குதலிற்கு முன்பாக ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அதன் ஏவுகணைகளால் இஸ்ரேலை நெருங்க முடியாது அவை பாலைவனத்தில் விழுந்து வெடிக்கலாம் உயிரிழப்பு ஏற்படாது என அமெரிக்க அதிகாரிகள் சரியாக கணித்திருந்தனர். அவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேல் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் இறங்ககூடாது என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என ஊகங்கள் வெளியாகியிருந்தன. ஈரான் கடுமையான பதிலடியை எதிர்பார்க்கவில்லை என்பது அது வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் புலனாகியுள்ளது - தனது பதில் தாக்குதலை தொடர்ந்து இந்த விடயம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவதாக ஈரான் ஐநாவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிய பிரதமர் ஈரானின் அணுஉலைகளை அழிக்க விரும்புவார் என்பது ஈரானிற்கும் அமெரிக்காவுக்கும் நன்கு தெரிந்துள்ளது. இஸ்ரேலிய பிரதமர் தனது நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல் என அதனை பல காலமாக கருதிவருகின்றார். எனினும் அமெரிக்காவின் உதவியின்றி அவற்றை அழிப்பது மிகவும் கடினம். எனினும் இந்த தருணத்தை பயன்படுத்தி அவரும் போர்க்குணம் மிக்க சகாக்களும் ஈரானின் அணுஉலைகளை தாக்க முயலக்கூடும். எதிர்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ஈரானின் தாக்குதலிற்கு இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என ஜோ பைடனின் அதிகாரிகள் கரிசனை கொண்டுள்ளனர் என என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181066- அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார் – அவுஸ்திரேலிய காவல்துறையினர் Published By: RAJEEBAN 14 APR, 2024 | 01:19 PM சிட்னியின் பொன்டி வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்தவர் குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது ஜோ கௌச்சி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நபர் மனோநிலை பாதிப்புக்குள்ளானவர் சில மாதங்களிற்கு முன்பே சிட்னியில் குடியேறினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரின் வன்முறை மிகவும் பயங்கரமானது என தெரிவித்துள்ள குடும்பத்தவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர். கௌச்சி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திய பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர். கௌச்சி பெண்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய வன்முறையில் ஐந்து பெண்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/181070- இன்றைய வானிலை
வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம், திருகோணமலையில் கடும் வெப்பநிலை நிலவும் ! 14 APR, 2024 | 07:01 AM வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நைனாதீவு, புங்குடுதீவு, மணல்காடு மற்றும் உடுத்துறை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/181060- "ஊழல், புள்ளி விவரங்களில் முறைகேடு, கூட்டாட்சிக்கு ஆபத்து" - மோதி ஆட்சி பற்றி பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர் பிபிசிக்கு பேட்டி
13 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 13 ஏப்ரல் 2024 பரகல பிரபாகர் இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணர் மற்றும் பகுப்பாய்வாளர் ஆவார். இவர் தி க்ரூக்ட் டிம்பர் ஆப் நியூ இந்தியா (The Crooked Timber of New India) நெருக்கடியில் குடியரசு உள்ளது தொடர்பான கட்டுரைகள் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் இந்திய குடியரசு நெருக்கடியில் உள்ளது, இந்திய ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது, அரசமைப்பு நெருக்கடியில் உள்ளது போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், எதிர்காலம் குறித்தும் பிபிசிக்கு அவர் நேர்காணல் ஒன்றையும் அளித்துள்ளார். அந்த நேர்காணலில் இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு நெருக்கடி, தேர்தல் பத்திர விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம். https://www.bbc.com/tamil/articles/c2x372lknr1o- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
உலகப்போர் மூளும் அபாயம்! அவசரமாக கூடவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஈரானால் தாக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் அவசரகால நிலையை அறிவித்து வான்வெளியை மூட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் அச்சுறுத்தல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேலின் நண்பரான அமெரிக்கா, 'ஒதுங்கி நிற்க வேண்டும்' என, ஈரான் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியும் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார். ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், உலகப்போர் மூளும் அபாயம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/iran-launches-attack-on-israel-update-1713059850- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
Israel's air defence system has not faced attack of this magnitude before- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானின் தாக்குதலில் பலியான உயிர்கள்! வெளியான விபரங்கள் ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளன எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நேரத்தில் விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு வெளியே கப்பல் ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன. UAV களின் முதல் அலை இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவில் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது. ஏவுகணைகளின் இரண்டாவது அலையால் இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து முக்கியமான தளங்களில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 வயது சிறுவன் ட்ரான் தாக்குதலால் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளான். https://tamilwin.com/article/death-details-in-iran-attack-1713055240- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
PBKS vs RR: ராஜஸ்தானை கரை சேர்த்த ஹெட்மயர் - கடைசிவரை திணறடித்த பஞ்சாப் கிங்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரின் அழகே ஒவ்வொரு ஆட்டமும் எப்படி நகரும் என்று கணிக்க முடியாமல் இருப்பதுதான். அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கும், ஆனால் ஆட்டம் ஒருதரப்பாக முடியும். மற்றொரு போட்டியில் குறைந்த ஸ்கோர் குவிக்கப்பட்டாலும், இரு அணிகளும் வெற்றிக்காக கடைசிப் பந்துவரை போராடி ரசிகர்களின் பொறுமையை, இதயத் துடிப்பைச் சோதித்துப் பார்க்கும். இதுபோன்ற விதவிதமான சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட போட்டிகள் தொடர் முழுவதும் நிறைந்திருப்பதுதான் இந்த ஐபிஎல் தொடரின் வெற்றியாக அமைந்துள்ளது. அதுபோன்ற ஆட்டம்தான் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்தது. கடைசிப் பந்துவரை எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்களாலும், களத்தில் இருக்கும் வீரர்கள், டக்அவுட்டில் இருக்கும் அணி குழுவினர் என யாராலும் ஊகிக்க முடியவில்லை. அதுபோன்ற உச்ச பரபரப்பு நிறைந்த ஆட்டம் நேற்று நடந்தது. முல்லான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 27வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நிகர ரன்ரேட் உயரவில்லை பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 5 வெற்றிகள் பெற்றும் நிகர ரன்ரேட் பெரிதாக உயராமல் 0.767 ஆகவே இருக்கிறது. குறைவான இலக்குள்ள இந்த ஆட்டத்தில் குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்திருந்தால் நிச்சயமாக நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும். ஆனால் கடைசிப் பந்துவரை சேஸிங்கை இழுத்து வந்ததால், பெரிதாக நிகர ரன்ரேட் உயரவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வி என 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் 0.218 ஆக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால், நிச்சயமாக 6வது இடத்துக்கு முன்னேறியிருக்கும். திணறிய ராஜஸ்தான் நேற்றைய இலக்கைப் பொறுத்தவரை 148 என்பது மிகவும் குறைவான இலக்குதான். இந்தக் குறைந்த இலக்கை சேஸிங் செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப்பெரிய போராட்டம் நடத்தியது ஏன் என்பது வியப்பாக இருக்கிறது. விக்கெட்டும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது அல்ல, அப்படி இருந்தும் பேட்டர்கள் பொறுப்பின்றி பேட் செய்து ஆட்டமிழந்து ஆட்டத்தை நெருக்கடியில் தள்ளினர். எளிதாக வெற்றி பெறக்கூடிய ஸ்கோராக இருக்கும் நிலையில், ஒரு பேட்டர் நிலைத்து பேட் செய்திருந்தால் ஆட்டம் 15 ஓவர்களில் முடிந்திருக்கும். இதுபோன்ற குறைந்த ஸ்கரை சேஸிங் செய்யத் தொடங்கும்போது ஏதாவது இரு பேட்டர்கள் அதிரடியான ஆட்டத்தைக் கையாண்டு பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தினாலே 70% வெற்றி உறுதியாகிவிடும். பட மூலாதாரம்,SPORTZPICS ஆனால், ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 39 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சம். மற்ற வகையில் எந்த பேட்டரும் முன்னெடுப்பு செய்து அதிரடியான ஆட்டத்தை ஆடவில்லை. பெரிதாக ஸ்கோர் செய்யாததும் கடைசி வரையிலான போராட்டத்துக்கு காரணம். வெற்றிக்கு உரிய டிபெண்ட் செய்ய முடியாத ஸ்கோராக 147 ரன்கள் என்பது இருந்தாலும், கட்டுக்கோப்பான ஃபீல்டிங், துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கடைசிப் பந்துவரை போராடியது சிறப்பு. ஹீரோ சிம்ரன் கடைசி நேரத்தில் சிம்ரன் ஹெட்மயர் மட்டும் கேமியோ ஆடி 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 10 பந்துகளில் 27 ரன்கள் சேர்க்காமல் இருந்திருந்தால், ராஜஸ்தான் தோல்வி உறுதியாகி இருக்கும். கடைசிப் பந்துவரை வெற்றிக்காகப் போராடிய ஹெட்மயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். திசை மாறிய ஆட்டம் ராஜஸ்தான் அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்களும், அடுத்த 9 ஓவர்களில் 52 ரன்களும் சேர்த்தது. 15 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. முப்பது பந்துகளில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் 4 விக்கெட்டுகள் சரிந்தது, கட்டுக்கோப்பான பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு வெற்றியை எளிதாக ராஜஸ்தானுக்கு வழங்கவில்லை. பரபரப்பு நிறைந்த கடைசி ஓவர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS சாம் கரன் 16-வது ஓவரை வீசினார். களத்தில் ரியான் பராக், ஜூரெல் இருந்தனர். இந்த ஓவரை நெருக்கடியாக வீசிய சாம்கரன் 6 ரன்கள் மட்டுமே வழங்கினார். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 17வது ஓவரில் ரியான் பராக் சிக்ஸர் அடித்த நிலையில் 4வது பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மயர் களமிறங்கினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானுக்கு கிடைத்தது. கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சல் படேல் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 6 ரன்னில் சசாங்சிங்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரில் ஹெட்மயர் ஒரு சிக்ஸர், பவுண்டரி உள்பட 14 ரன்கள் சேர்த்து பதற்றத்தைக் குறைத்தார். நெருக்கடி ஏற்படுத்திய விக்கெட் சரிவு கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், பாவெல் களத்தில் இருந்தனர். சாம்கரன் வீசிய 19வது ஓவரில் பாவெல் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், 3வது பந்து ஸ்லோ பவுன்சராக வீச விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பாவெல் 11 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேசவ் மகராஜ் ஒரு ரன்னில் லிவிஸ்டோனிடம் கேட்ச கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தாலும், 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்தது. எதிர்பாராத இரு சிக்ஸர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. ஹெட்மயர், போல்ட் களத்தில் இருந்தனர். அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளை ஹெட்மயருக்கு யார்கராக வீச ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தை யார்கராக வீச முயன்று தவறவே, ஹெட்மயர் சிக்ஸருக்கு விளாசினார். 4வது பந்தில் ஹெட்மயர் 2 ரன்கள் எடுக்கவே ஆட்டம் பரபரப்பானது. கடைசி 2 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் ஃபுல்டாஸாக வீசவே, ஹெட்மயர் ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசி வெற்றியை உறுதி செய்தார். ரபாடாவின் புயல்வேகம் பஞ்சாப் அணி போட்டியை கடைசிப் பந்துவரை இழுத்து வந்து நெருக்கடி கொடுக்க அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் காரணம். குறிப்பாக ரபாடா அற்புதமாகப் பந்துவீசினார். 4 ஓவர்களை வீசிய ரபாடா 18 ரன்கள் கொடுத்து சாம்ஸன், ஜெய்ஸ்வால் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,SPORTZPICS இதில் 14 டாட் பந்துகளும் அடங்கும். பவர்ப்ளே ஓவரில் ரபாடா இரு ஓவர்களையும் கட்டுக்கோப்பாக வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நடுப்பகுதி ஓவர்களில் மீண்டும் ரபாடா பந்துவீச வந்தபோது, ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றிப் பயணித்தது. அப்போது ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சில் ஜெய்ஸ்வால், கேப்டன் சாம்ஸன் வீழ்ந்தனர். ரபாடா தன்னுடைய 4 ஓவர்களில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க அனுமதித்தார். அதேபோல கேப்டன் பொறுப்பேற்று ஆடிய சாம் கரனும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப், ஹர்சல் படேல் இருவர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை வாரி வழங்கினர். மற்றவகையில் லிவிங்ஸ்டோன், ஹர்பிரித் பிராரும் ஓவருக்கு 7 ரன்களுக்குள்தான் கொடுத்தனர். இதில் அர்ஷ்தீப், ஹர்சல் படேல் கட்டுக்கோப்பாக வீசியிருந்தால், ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியிருக்கும். 'பெருமையாக இருக்கிறது' பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பேசுகையில், “விக்கெட் சிறிது மெதுவாக இருந்ததால் பந்து நின்று சென்றன. நாங்கள் சிறப்பான தொடக்கத்தை பேட்டிங்கில் அளிக்கவில்லை என்றாலும் ஃபினிஷிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் எங்களால் முடிந்தவரை வெற்றிக்காக முயன்றோம். 150 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் இருந்திருக்கும் என நம்புகிறேன். நெருக்கடியாக வந்து தோற்றாலும் பல பாசிட்டிவ் விஷயங்களை அடையாளம் கண்டோம். பேட்டிங்கில் இன்னும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பந்துவீச்சு, ஃபீல்டிங் எதிர்பார்ப்பைவிட சிறப்பாக இருந்தது. வெற்றிக்கு அருகே வந்து முடியவில்லை என்பது வருத்தம். நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம். முலான்பூர் அனைவருக்குமே புதியதாக இருந்தது, இருப்பினும் தகவமைத்துக் கொண்டோம். கடைசிப் பந்துவரை ஆட்டத்தைக் கொண்டு சென்ற எங்கள் பந்துவீச்சாளர்களைக் கண்டு பெருமையாக இருக்கிறது,” எனத் தெரிவித்தார். பேட்டிங்கில் திணறிய பஞ்சாப் கிங்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்காக பந்துவீ்ச்சாளர்கள் போராடிய அளவுக்கு பேட்டர்களும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருந்தால், ஆட்டம் நிச்சயமாக பஞ்சாப் கிங்ஸுக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனால், பஞ்சாப் அணியில் ஜிதேஷ் ஷர்மா சேர்த்த 29 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது. அனுபவம் மிகுந்த பேட்டரான பேர்ஸ்டோவுக்கு கட்டம் சரியில்லை. இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட சராசரியாக 30 ரன்களைக்கூட கடந்திருக்கமாட்டார். இந்த ஆட்டத்திலும் ஹெட்மயருக்கு கேட்ச் பயிற்சி அளிப்பதுபோல் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் 15 ரன்னில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய அதர்வா தைடே 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிரப்சிம்ரன் சிங்(10), சாம் கரன்(6), சசாங் சிங்(9), லிவிங்ஸ்டோ(21) என வலிமையான பேட்டிங் வரிசை இருந்தும் ஒருவர்கூட நிலைத்து பேட் செய்யவில்லை. இந்த 4 பேட்டர்களின் படுமோசமாக இருந்ததே விக்கெட் இழப்பிற்கு காரணம் என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால் பஞ்சாப் வெற்றியை உறுதி செய்திருக்கும். கடைசி வரிசையில் களமிறங்கிய அஷுடோஷ் சர்மா கேமியோ ஆடியதால் ஓரளவுக்கு கௌரமான ஸ்கோரை பஞ்சாப் பெற்றது. அஷுடோஷ் 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என மந்தமாக பேட் செய்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும்தான் பஞ்சாப் அணி 72 ரன்கள் சேர்த்ததால்தான் கௌரவமான ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் 120 ரன்களில் பஞ்சாப் அணி சுருண்டிருக்கும். பஞ்சாப் அணியில் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் இருப்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை எவ்வாறு களத்தில் செயல்படுத்துகிறது என்பதில்தான் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி அடங்கியிருக்கிறது. கட்டுக்கோப்பான ராஜஸ்தான் பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்து பஞ்சாப் அணியை 147 ரன்களில் கட்டுப்படுத்தினர். ஆனால், ராஜஸ்தான் அணியின் பேட்டர்களும், பஞ்சாப் பேட்டர்களை போல் தங்களின் பணியை முழுவதுமாகச் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 ரன்டேட்டுக்கு அதிகமாக ரன்களை கொடுக்கவில்லை. கடந்த போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே போல்டுக்கு ஏன் வழங்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த முறை 4 ஓவர்கள் வீசிய போல்ட் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கேசவ் மகராஜ் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். யஜூவேவந்திர சஹல் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் 200வது விக்கெட்டை எடுத்தார். ஆவேஷ், குல்தீப் சென்னும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckkezkq207lo- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்துவதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு உதவியது – பைடன் 14 APR, 2024 | 09:45 AM ஈரான் இஸ்ரேலை நோக்கி செலுத்திய அனைத்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை செயல்இழக்கச்செய்வதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு உதவியது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்காவின் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகளையும் போர்க்கப்பல்களையும் மத்தியகிழக்கிற்கு அனுப்பியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவும் எங்களின் பாதுகாப்பு தரப்பினரின் திறமை காரணமாகவும் இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை செயல் இழக்கச்செய்ய முடிந்தது என குறிப்பிட்டுள்ள அவர் ஈரானின் தாக்குதல்களை மிக கடுமையான விதத்தில் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181064 - அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.