Everything posted by ஏராளன்
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபி பெர்க் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார். ‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ‘இந்த அச்சுறுத்தல்கள் தேவையான இடங்களில் தடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். என்ன நடந்தது? ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கி,மீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்களை எங்கு வீழ்த்தியது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இஸ்ரேல், லெபனான் மற்றும் இராக் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சிரியா, ஜோர்டான் ஆகியவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கைப்படுத்தி வைத்துள்ளன. ஏப்ரல் 1-ம் தேதி சிரிய துணைத் தூதரகம் தாக்கப்பட்ட பிறகு, இரான் பழிவாங்கும் விதமாகப் பேசியது. இந்தத் தாக்குதலில் உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை. இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன? பட மூலாதாரம்,ISRAELI PM'S OFFICE இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “இரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது இரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது,” என்றார். “இரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது,” என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்,” என்றார். மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு கூறினார். பட மூலாதாரம்,X/@POTUS இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரான் இஸ்ரேலை தாக்கினால், இரானுக்குள் பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தனர். இரான் தாக்குதலின் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகக் கூறினார். இரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நின்று அவர்களைப் பாதுகாக்கும் என்றார். “அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார். பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக நிற்பதாக உறுதியளித்துள்ளார். சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானின் தூதரகம் மீதான தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது. கவலை தெரிவித்த ஐ.நா. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று மாலை இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேல் மீது இரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல்கள் "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், "பல ஆண்டுகளாக ஸ்திரமின்மையின் சிற்பியாக" இருப்பதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது. "தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும்" செயல்பட்டதாகக் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cv27e22r4dno
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் வீதியில் இறங்கி தாக்குதலிற்கு ஆதரவு Published By: RAJEEBAN 14 APR, 2024 | 10:03 AM இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் முன்னொருபோதும் இல்லாத பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களிற்கு ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளியிட்டு வருகி;ன்றனர். ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவரும் ஈரானிய மக்கள் ஈரான் பாலஸ்தீன கொடிகளுடன் காணப்படுகின்றனர். டெஹ்ரானின் பாலஸதீன சதுக்கத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிற்கு மரணம் அமெரிக்காவிற்கு மரணம் என கோசம் எழுப்புகின்றனர். அடுத்த அடி மிகமோசமானதாக காணப்படும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையொன்றை டெஹ்ரான் பாலஸ்தீன சதுக்கத்தில் காணமுடிகின்றது. ஈரான் தலைநகரில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தின் முன்னாலும் அமெரிக்காவின் தாக்குதல் உயிரிழந்த ஈரானின் இராணுவதளபதி காசிம் சுலைமானியின் கல்லறைக்கு முன்னாலும் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/181065
-
இந்தியாவால் வல்லரசாக உருவெடுக்க முடியுமா? விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே பதவி, பிபிசி உலக சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 19ஆம் தேதி உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ளது. ஆறு வாரங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்தலில் 96.9 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போதைய பிரதமரான நரேந்திர மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முனைப்பு காட்டுகிறது. அணு ஆயதம் கொண்டுள்ள நாடாகவும், நிலவில் தனது விண்கலத்தை தரையிறக்கிய நாடாகவும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக மாறிய இந்தியா, இங்கிலாந்து பொருளாதாரத்தை முந்தி தற்போது உலகின் 5வது வலிமை மிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. பலரும் இந்தியா உலகின் அடுத்த வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளனர். ஆனாலும், அந்த முன்னேற்றம் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கையுடன் கலந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகின் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது பிரதமர் மோதி, “இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கடைசி மூன்று மாதங்களில் 8.4 சதவீதமாக விரிவடைந்த பொருளாதாரத்தின் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அங்கீகாரத்தை பெற்றது இந்தியா. ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசுகள் மற்றும் தனிநபர்களின் பொருளாதார செயல்பாடுகளை அளவிடும் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மூலம் உலகப் பொருளாதாரங்களை வரிசைப்படுத்தலாம். அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி உட்பட பல நிதி நிறுவனங்களின் கூற்றுப்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வழித்தடத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்ற போது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக நீடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சி, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்ய முடியாத அளவிற்கான மோசமான உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறையையே விட்டுச் சென்றது. அப்போது இந்தியாவின் தனிநபர் ஆயுட்காலம் 35 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் உலக வங்கியின் கூற்றுப்படி, இன்று அது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 67 ஆண்டுகள் என்ற நிலையில் உள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய சராசரி 71 ஆண்டுகள் ஆகும். உலகின் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வைரங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் செழிப்பு மிக்க சேவைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு, மென்பொருள் துறைகளின் வளர்ச்சியே அதன் பொருளாதார ஏற்றம் காண காரணமாக அமைந்தது. ஆனால் அதே வேகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். HSBC யின் ஒரு மதிப்பீட்டின்படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை உயரும்போது, 70 மில்லியன் வேலைவாய்ப்புகளை அது உருவாக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் மூன்றில் ஒருபங்கை தாண்டி அதற்கு மேல் உருவாக்க வாய்ப்பில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.நா.வின் கூற்றுப்படி, இந்தியாவைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் . 'மக்கள் தொகை பெருக்கம்' பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது குறைவு. ஐ.நா கூற்றுப்படி 2022 ஆம் ஆண்டில், சீனா மக்கள் தொகையின் சராசரி வயது 38.4 மற்றும் ஜப்பான் 48.6 ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மக்கள் தொகை சராசரி வயது 28.7 ஆக இருந்தது. தற்போது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 140 கோடியாக உள்ளது. இந்திய பொருளாதார வல்லுநர்களான பஷார் சக்ரவர்த்தி மற்றும் கௌரவ் டால்மியா ஆகியோர் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகையில் வேலைக்கு செல்லும் வயதினரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்று கணித்துள்ளனர். ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூவிடம் அவர்கள் பேசுகையில், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் இந்த "உழைக்கும் வயது மக்கள் தொகையையே" நம்பியுள்ளது என்று தெரிவித்தனர். ஆனால் அந்த தொழிலாளர்கள் அனைவரையும் நாட்டில் தக்கவைப்பது கடினம். ஐ.நா.வின் கூற்றுப்படி, இந்தியாவைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் . அதாவது சுமார் 1.8 கோடி மக்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதில் உயர்கல்வியில் சாதனை படைத்தவர்களும் அடங்குவர். இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் வெளிவிவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அதிகமான இந்தியர்கள் காலவரையின்றி வெளிநாட்டில் தங்குவதைத் தேர்வு செய்கிறார்கள். இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதியில்லை. 2022 ஆம் ஆண்டில், 225,000 க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களது குடியுரிமையை ரத்து செய்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கை. பலருக்கும் உள்ளூரில் வேலைவாய்ப்பை பெறுவது சவாலாக அமைந்துள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8% என்று கூறுகிறது. இது அமெரிக்காவில் 3.8% ஆக உள்ளது. மார்ச் மாதத்தில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 15-29 வயதிற்குட்பட்டவர்கள் 83% பேர் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வி பெற்றவர்கள் என்றும் தெரிவித்தது. இந்திய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சித்தார்த்தா டெப், "நான் இந்தியா முழுவதும் பயணம் செய்து, இளைஞர்களுடன் உரையாடுகிறேன். அவர்கள் மன சோர்வடைந்துள்ளனர்” என்று கூறுகிறார். "பொருளாதார வளர்ச்சியானது நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற புதிய உள்கட்டமைப்பைக் கொண்டுவந்தது. மேலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் பொதுவாகவே இந்தியாவில் உள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள்," என்று கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே கூறுகையில், பல உழைக்கும் பெண்கள் சுயதொழில் செய்கிறார்கள் என்கிறார். உழைக்கும் பெண்கள் எங்கே போனார்கள்? இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 33% என்று அரசு கூறுகிறது. இதை அமெரிக்காவில் 56.5%, சீனாவில் 60.5% மற்றும் உலகளாவிய சராசரி 49% என்ற அளவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்று உலக வங்கி கூறுகிறது. கடந்த காலத்தை விட அதிகமான இந்தியப் பெண்கள் கல்வியில் முன்னேறியிருந்தாலும், திருமணம் செய்து கொள்ளும் மற்ற பெண்கள், கலாசாரத்தை பின்பற்றி வீட்டில் தங்க வேண்டிய சூழலே உள்ளது. பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே கூறுகையில், பல உழைக்கும் பெண்கள் சுயதொழில் செய்கிறார்கள் என்கிறார். "வேலை ஒப்பந்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களுடன் கூடிய வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 1991 இல் ஒருவரில் இருந்து 2022 இல் 162 ஆக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. நீடிக்கும் சமத்துவமின்மை உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஏறக்குறைய இந்தியாவின் பாதி மக்கள் தொகையானது, உலக வங்கியின் சராசரி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறது, அதே நேரத்தில் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 1991 இல் ஒருவரில் இருந்து 2022 இல் 162 ஆக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார கொள்கைக்கான பேராசிரியர் டாக்டர் அசோகா மோதி, "இந்தியாவில் பரந்த சமத்துவமின்மை நிலவுகிறது" என்று கூறுகிறார். மேலும் இதுவே, "பெரியளவிலான கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறுவது முட்டாள்தனமான ஒன்று" என்று கருதுவதற்கான முக்கிய காரணமாகும். அப்படியான முக்கிய மாற்றங்களில் ஒன்று, இந்திய பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது உட்பட, சமத்துவமின்மையை போக்கும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவது என்று டாக்டர் மோதி குறிப்பிடுகிறார். "நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களுக்கு வேலை கிடைப்பது கடினம். மேலும் கல்வி மற்றும் சுகாதாரமும் மோசமாக உள்ளது" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எழுத்தாளர் தேவிகா ரேஜ், தனது நாடு "வகுப்புவாத முரண்பாட்டின்" அலையை எதிர்கொண்டு வருவதாக நம்புகிறார். தீவிரமடையும் அரசியல் கருத்து வேறுபாடு இந்தியாவில் அரசியல் கருத்து வேறுபாடு ஒன்றும் புதிதல்ல. 1800களில் இருந்தே இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா அல்லது இந்து நாடாக இருக்க வேண்டுமா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 80% மக்கள் இந்துக்கள். 2014 இல் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத பாஜக கட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில், ஐ.நா. மற்றும் அமெரிக்க அரசு ஆகிய இரண்டும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தங்களது கவலைகளை தெரிவித்திருந்தன. ‘2014 தேர்தலுக்குப் பிறகு இந்தியா’ குறித்த சர்ச்சைக்குரிய நாவலான Quarterlife என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்ட எழுத்தாளர் தேவிகா ரேஜ், தனது நாடு "வகுப்புவாத முரண்பாட்டின்" அலையை எதிர்கொண்டு வருவதாக நம்புகிறார். இதுகுறித்துஅவர் கூறுகையில் : "இந்தியாவில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதற்கு அடையாள அரசியல் ஏற்கனவே ஒரு காரணியாக இருந்தது. ஆனால் 2014 தேர்தல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற மட்டத்தில் இருந்தே மக்களை வெவ்வேறு திசைகளை நோக்கி தள்ளியது." "இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை மறுப்பது கடினம், ஆனால் அதேசமயம் இந்தியாவில் சிவில் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி வகுப்புவாத முரண்பாடு நிறைந்துள்ளது. இதுபோன்ற சூழல் விரைவில் கைமீறி செல்லும்போது, அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா எப்போதும் மேற்குலகின் விருப்பப்படி நடந்து கொள்வதில்லை. "மேற்குலகின் கைப்பாவை அல்ல இந்தியா" ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சக்தியாக இந்தியா மாறும் என்று பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் நம்பி வந்தன. அணு ஆயுதம் கொண்ட நாடாக இருப்பதுடன், 1.45 மில்லியன் சுறுசுறுப்பான பணியாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தையும் கொண்டுள்ளது. ஆனால் இந்தியா எப்போதும் மேற்குலகின் விருப்பப்படி நடந்து கொள்வதில்லை. ரஷ்யா-யுக்ரைன் போரில் அதன் நடுநிலை நிலைப்பாடு மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான மேற்கத்திய தடைகளை மீறி ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கியதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் அது பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸின் சர்வதேச உறவுகளுக்கான நிபுணர் சானியா குல்கர்னி, மேற்கத்திய நாடுகள் அணுகுவதற்கு சீனாவை விட இந்தியா "குறைந்த சவால்கள்" கொண்டதாக இருக்கும் என்று மேற்குலகம் எதிர்பார்க்கலாம். ஆனால் எப்போதும் இந்தியாவிற்கு அதன் சொந்த இலக்குகள் இருப்பதாக எச்சரிக்கிறார்.” "இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கான தூதராக செயல்படும் என்று எதிர்பார்ப்பது தவறானது" என்று கூறும் அவர், "மேற்கத்திய எதிர்ப்புக்கு எதிரான மேற்கத்தியர் அல்லாத ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்துகிறது" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c51nmv8nn50o
-
விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்
புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் பேருந்துகளின் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/298988
-
ஒரே வங்கியில் ரூ.3.30 லட்சம் கோடி மோசடி கடன் வாங்கி இந்த தொழிலதிபர் ஏமாற்றியது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி வியட்நாம் பதவி, பாங்காக்கில் இருந்து 13 ஏப்ரல் 2024, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காலனித்துவ கால நீதிமன்றத்தில், ஒரு அதிசயக் காட்சி அரங்கேறியது. அப்போது நீதிமன்ற அறை முழுவதும் ஒரு பெயர் எதிரொலித்தது. அது ட்ரூங் மை லான். வியட்நாமின் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, உலகின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றைத் திட்டமிட்டதற்காக செவ்வாயன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 67 வயதான வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரின் சுரண்டல்களை வெளிப்படுத்தியது. அத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனையாகும். வியட்நாமில் ஒயிட் காலர் (White collar crime) குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மிகச் சில பெண்களில் ட்ரூங் மை லானும் ஒருவர். முடிவை மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளது. ட்ரூங் மை லான், சைகான் வணிக வங்கியில் (Saigon Commercial Bank- எஸ்சிபி) 11 வருடங்களாக சுமார் 44 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,30,000 கோடிகள்) கடனாகப் பெற்றதற்காக தண்டிக்கப்பட்டார். இதில் 27 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இது 2023இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%க்கு சமம். பொதுவாக மெத்தனமாக இருக்கும் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் இந்த வழக்கை வெளிப்படையாக விவாதித்து, ஊடகங்களுக்கு சிக்கலான விவரங்களை அளித்து பலரை ஆச்சரியப்படுத்தினர். சாட்சியமளிக்க 2,700 பேர் அழைக்கப்பட்டதாகவும், 10 அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சுமார் 200 வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மொத்தம் 6 டன் எடையுள்ள 104 பெட்டிகளில் ஆதாரம் இருந்தது. 85 பிரதிவாதிகள் ட்ரூங் மை லானுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. நால்வர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ட்ரூங் மை லானின் கணவர் மற்றும் மருமகள் முறையே ஒன்பது மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். வியட்நாமில் நீண்டகால அனுபவமுள்ள ஓய்வுபெற்ற அமெரிக்க அரசுத் துறை அதிகாரி டேவிட் பிரவுன் கூறுகையில், "கம்யூனிஸ்ட் காலத்தில் இதுபோன்ற ஒரு விசாரணை இதுவரை இருந்ததில்லை. இந்த அளவில் நிச்சயமாக எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டது இல்லை" என்றார். ஆனால் இந்த நீதிமன்ற வழக்கின் மைய நபரைப் பற்றி நமக்கு தெரிந்த விவரங்கள் என்ன? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,வியட்நாமின் மிகப்பெரிய வங்கி ஒன்றில் 11 ஆண்டுகளாக நடந்த நிதி மோசடிக்காக ட்ரூங் மை லான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஏழ்மையிலிருந்து உச்சத்திற்கு... ஹோ சி மின் நகரில் ஒரு சீன-வியட்நாமிய குடும்பத்தில் ஒரு எளிய பின்னணியில் இருந்து நிதி ஊழலின் மையத்திற்குச் சென்ற ட்ரூங் மை லானின் பயணம், பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. வியட்நாமின் டோய் மோய் என்று அழைக்கப்படும் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தின் போது அவர் தனது தாயுடன் சந்தை விற்பனையாளராக ஒரு சாதாரண பின்னணியில் இருந்து, ரியல் எஸ்டேட் துறையில் இறங்கினார். 1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார், இது அவரது புத்திசாலித்தனமான வணிகச் செயல்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இருப்பினும், சைகான் வணிக வங்கியுடனான அவரது ஈடுபாடு தான் அவரை கவனத்தில் கொள்ளச் செய்தது. ஷெல் நிறுவனங்கள் மற்றும் ப்ராக்ஸிகள் மூலம், வங்கியின் 90 சதவீதத்தை திறம்பட கட்டுப்படுத்தி, தனிப்பட்ட உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை ட்ரூங் மை லான் மீறியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். இந்த வங்கி சாம்ராஜ்ஜியத்திற்குள் தான் மோசடி நடந்துள்ளது எனவும், ட்ரூங் மை லான் தனிப்பட்ட லாபத்திற்காக திகைக்க வைக்கும் அளவுக்கு பணத்தை மோசடி செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. அவரது கடன்கள் வங்கியின் மொத்த கடன்களில் 93% ஆகும். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, பிப்ரவரி 2019 முதல் மூன்று ஆண்டுகளில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவர் தனது டிரைவருக்கு 108 டிரில்லியன் வியட்நாமிய ரூபாயை, இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் ரொக்கத்தை வங்கியில் இருந்து எடுத்து, அதை தனது வீட்டின் அடித்தளத்தில் சேமிக்க உத்தரவிட்டார். அவ்வாறு சேமிக்கப்பட்ட மொத்த வியட்நாமிய ரூபாய் நோட்டுகளின் எடை இரண்டு டன்களாக இருக்கும், இது பல வியட்நாமியர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக, தனிநபர்கள் கடன் வாங்கும்போது ஒரு சிக்கலான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அத்தகைய நிதிகளின் ஒரு பகுதியை அணுகுவதற்கு இணை (Collateral) வழங்கப்பட வேண்டும். தனது கடன்கள் ஒருபோதும் ஆராயப்படாமல் இருக்க தாராளமாக லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மத்திய வங்கியின் தலைமை ஆய்வாளராக இருந்தார், அவர் சுமார் 37.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ‘என்னுடைய உலகம் சரிந்தது’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹோ சி மின் நகரில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. ட்ரூங் மை லான், பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், பத்திர மோசடி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளில் குறைந்தது இரண்டு கூடுதல் வழக்குகளுக்கான விசாரணை இன்னும் அவருக்கு காத்திருக்கிறது. 42,000க்கும் மேற்பட்ட நபர்கள், 27 முதல் 60 வயது வரை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள், இந்த திட்டங்களுக்கு பலியாயினர். எஸ்சிபி வங்கியின் மூலம் விற்கப்பட்ட மோசடி பத்திரங்களை வாங்கினர். அவர்களில் ஒருவர் 48 வயதான டாங் ட்ரூங் லாங் (Dang Trung Long). வியட்நாமின் பரபரப்பான ஹோ சி மின் நகரில், ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளை விற்பதில் முடிவில்லாத பல மணிநேரங்களை அவர் அர்ப்பணித்தார். இரண்டு தசாப்தங்களாக இடைவிடாத உழைப்பால், அவர் 1.7 பில்லியன் வியட்நாமிய டாங்குகளை (இந்திய மதிப்பில் 52.5 லட்சம்) சேமித்தார். சராசரி மாத வருமானம் 25,000 ரூபாயைத் தாண்டாத ஒரு நாட்டில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். "எனது ஒரே மகளுக்கு சிறந்த கல்வியைத் தருவதற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தேன், ஆனால் இந்த மோசடியால், நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். "என் உலகம் சரிந்துவிட்டது, என் மகளின் கனவு உடைந்துவிட்டது. எல்லாவற்றையும் மீண்டும் கட்டியெழுப்பும் அளவுக்கு எனக்கு உடலில் வலு இருக்கிறதா எனத் தெரியவில்லை" என்றார். பதிலில்லா கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். ட்ரூங் மை லானின் முதல் வழக்கு விசாரணை வெளிவந்த போது, இதுபோன்ற ஒரு திட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டறியப்படாமல் நீடிக்க முடிக்க முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. சிங்கப்பூரில் உள்ள ஐஎஸ்இஏஎஸ்- யூசப் இஷாக் இன்ஸ்டிட்யூட்டில் வியட்நாம் ஆய்வுத் திட்டத்தை நடத்தும் லே ஹாங் ஹிப், "நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்கிறார். "ஏனென்றால் அது ஒரு ரகசியம் அல்ல. ட்ரூங் மை லானும் அவரது வான் தின் பாட் குழுவும் எஸ்சிபி வங்கியை தங்கள் சொந்த உண்டியலாகப் பயன்படுத்தி, மிக முக்கியமான இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகளை பெருமளவில் கையகப்படுத்திய விஷயம் சந்தையில் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது. அவருக்கு எங்கிருந்து பணத்தைப் பெற வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால் அது மிகவும் பொதுவான நடைமுறை. எஸ்சிபி மட்டும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தப்படும் வங்கி அல்ல. எனவே இதுபோன்ற பல வழக்குகள் இருப்பதால் அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கலாம்" என்கிறார் அவர். வணிகம் மற்றும் அரசியலில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் ட்ரூங் மை லானை சட்டத்தில் இருந்து பாதுகாத்து, நாட்டின் வங்கித் துறையை பாதித்த உள்ளூர் ஊழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று ஊகிக்கிறார் டேவிட் பிரவுன். ஆயினும்கூட, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு பரந்த கதை வெளிப்பட்டது. விசாரணையானது ட்ரூங் மை லானின் குற்றச் செயல்களைப் பற்றியது மட்டுமல்ல, வியட்நாமின் அரசியல் நிலப்பரப்பில் அதிகாரத்திற்கான ஒரு பெரிய போராட்டத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு ட்ரோங் (Nguyen Phu Trong), ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கி, ஹோ சி மின் நகரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்த முயன்றார். இந்த பிரசாரத்தால் இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு துணைப் பிரதமர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அதிகாரப் போராட்டத்தில் ட்ரூங் மை லானை வழக்கு விசாரணை ஒரு போர்க்களமாக மாறியது. இது கட்சியின் பழமைவாத கொள்கைகள் மற்றும் வியட்நாமின் பொருளாதார அபிலாஷைகளின் உண்மைகளுக்கு இடையிலான பதற்றத்தின் அடையாளமாகும். தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு நாடு மாற முற்பட்டபோது, ஊழலை எதிர்த்துப் போராடும் முரண்பாடு, பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் போது, வியட்நாமின் எழுச்சியைத் தூண்டிய இயந்திரத்தையே சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. "அதுதான் முரண்பாடு" என்கிறார் லு ஹாங் ஹிப். "அவர்களின் வளர்ச்சி மாதிரி நீண்ட காலமாக ஊழல் நடைமுறைகளை நம்பியிருக்கிறது. ஊழல் என்பது இங்கு இயந்திரங்களை வேலை செய்ய வைக்கும் கிரீஸ் போல. அவர்கள் கிரீஸ் போடுவதை நிறுத்தினால், அரசு இயந்திரங்கள் இனி வேலை செய்யாமல் போகலாம்" என்கிறார் அவர். ட்ரூங் மை லானின் சோதனையானது, வேகமாக மாறிவரும் வியட்நாமில் அதிகாரம், லட்சியம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளின் அடையாளமாகும். நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், ட்ரூங் மை லானின் கதை நீதிமன்றத்தின் சுவர்களுக்கு அப்பால் எதிரொலித்தது. வியட்நாம் தேசம் அதன் மோசமான கடந்த காலத்தையும் அதன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் பற்றி கவலைப்பட அது ஒரு காரணமாக அமைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqvn22d6lpwo
-
தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்
பெருமைமிகு நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சஜித் 11 APR, 2024 | 04:25 PM ஒவ்வோர் இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை உலகில் உள்ள மற்றும் இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடும் பண்டிகை எனவும் குறிப்பிடலாம். இலங்கையின் மாபெரும் கலாசார விழாவாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும் இந்த சம்பிரதாயத்தின் காரணமாக சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மக்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்பு மற்றும் சௌபாக்கியத்தை எதிர்பார்த்து, தங்களால் இயன்றவரை இந்த சடங்குகளை செய்கின்றனர். ஆனால், கடந்த காலம் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த காலப் பகுதியாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன். வரிச்சுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், நாட்டில் உள்நாட்டு நெருக்கடி என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டதுடன், தற்போது தேர்தல் ஆண்டாகவும் காணப்படுகிறது. இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் எமது தாய்நாட்டுக்கு சுபீட்சம் வரும் என்பதும் எனது நம்பிக்கையாகும். மேலும், தற்போது காணப்படுகின்ற வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கொண்ட பெருமை மிக்க நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை முன்னைய வாழ்க்கைத்தரத்துக்கு கொண்டு செல்வது எமக்கு பாரிய சவாலாக உள்ளது. அந்தச் சவாலை 220 லட்சம் பேரும் ஒன்றாக செயற்பட்டால் சமாளிக்க முடியும். ஒவ்வொரு இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/180991
-
மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
13 APR, 2024 | 07:50 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181055
-
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
சிட்னி மாலில் மக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் அதிகாரி - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போண்டியிலிருந்து டிஃபானி டர்ன்புல்&கேட்டி வாட்சன், லண்டனிலிருந்து டௌக் ஃபால்க்னர் பதவி, பிபிசி 27 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மால் ஒன்றில் ஆயுதம் தாங்கிய ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளனர். "இந்த செயல் பைத்தியக்காரத்தனம்," என வருத்தத்துடன் விவரித்தார் ஒரு பெண். போண்டியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மாலில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு மேல் இச்சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல அந்நேரத்தில் வணிக வளாகத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்திருந்தனர். நேரில் பார்த்த ஒருவர் தனது இரண்டு சிறிய குழந்தைகளுடன் கடை ஒன்றின் அருகில் இருந்தபோது, ஒரு நபர் "மக்களைக் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதைக்" கண்டார். "இது படுகொலை" என்று பெயர் வெளியிட விரும்பாத அவர், ஏபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் கூறினார். அந்த ஆயுததாரி உள்ளூர் நேரப்படி 3:10 மணிக்கு வணிக வளாகத்திற்குச் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுகிறது. அவர் வணிக வளாகத்தில் இருந்தவர்களை ஏன் தாக்கினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தீவிரவாதம் ஒரு நோக்கமாக இருக்கலாம் என்ற யூகம் நிராகரிக்கப்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். அருகில் பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்நபரை நேராக எதிர்கொண்ட போதுதான் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது. அப்போது, அந்நபர் போலீஸ் அதிகாரியை நோக்கி கத்தியை உயர்த்தினார். அப்போது அந்நபரை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். "மக்கள் அலறிக்கொண்டே ஓடினர்" என்றும் பின்னர் போலீஸ் அதிகாரியை மக்கள் பின்தொடந்து சென்றதாகவும் பெயரிடப்படாத மற்றொரு நேரில் பார்த்த சாட்சி கூறினார். "பெரிய கத்தியுடன்" ஆயுதம் ஏந்திய அந்த நபர் "எங்களை நோக்கி வரத் தொடங்கினார். அப்போது 'கீழே போடு' என்ற சத்தத்தைக் கேட்டோம். பின்னர், அந்த அதிகாரி அந்நபரை சுட்டார்" என அவர் கூறினார். "அவர் சுடவில்லை என்றால், அந்த நபர் தொடர்ந்து பலரை கொன்றிருப்பார். அவ்வளவு வெறித்தனத்துடன் அந்நபர் இருந்தார்." ‘எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தோம்' பட மூலாதாரம்,APTN தாக்குதல் நடந்த வெஸ்ட்ஃபீல்ட் மால், சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்தின் கிழக்கில் உள்ள ஒரு பெரிய வணிக மையமாகும். இது, புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் உள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான வணிக வாகளங்களுள் ஒன்றாகும். வழக்கமான சனிக்கிழமைகளைப் போலவே இன்றும் இந்த மாலில் நூற்றுக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். இதில் பலர் சிறு குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்கள் நடந்தபோது அதைத் தடுக்க சக்தியின்றி பார்த்துக் கொண்டிருந்ததாக, இதனால் அதிர்ச்சியில் உள்ள கடைக்காரர்கள் விவரிக்கின்றனர். நியூ சௌத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் இருந்து வருகை தந்த 33 வயதான ஜானி, தனக்கு அலறல் சத்தம் கேட்டதாகவும் திரும்பிப் பார்த்த போது, ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் தாக்கப்படுவதைப் பார்த்ததாகவும் கூறினார். "அவர் கத்தியால் குத்தப்பட்டார். எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர், என்ன செய்வது என்றே தெரியவில்லை," என்று அவர் கூறினார். காயமடைந்த பெண், டாமி ஹில்ஃபிகர் கடைக்கு ஓடினார், உள்ளே நுழைந்தவுடன், ஊழியர்கள் விரைவாக கதவுகளைப் பூட்டினர் என்றார். “மற்ற கடைக்காரர்களில் சிலர் உடைகளைப் பயன்படுத்தி, ரத்தப்போக்கை நிறுத்த முயற்சித்தனர்," என்று அவர் கூறினார். "குழந்தைக்கு சிறிய காயம் மட்டுமே இருந்தது, ஆனால் அந்த பெண் மிகவும் மோசமாக இருந்தார் ... நிறைய ரத்தம் வெளியேறியது, அப்பெண் பீதியடைந்திருந்தார்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இச்சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், ஒருவர் காயமடைந்து கிடந்ததைக் கண்டதாகவும், என்ன நடக்கிறது என்பதையே அப்போது உணர முடியவில்லை என்றும் கூறினார். "அப்போது மக்கள் அனைவரும் எங்களை நோக்கி ஓடிவருவதை நாங்கள் பார்த்தோம். பின்னர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என் கணவர் எங்களை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்றார். அப்போது அக்கடையில் இருந்த பெண் ஒருவர் கதவைப் பூட்ட முயற்சித்தார். அவரால் முன் கதவைப் பூட்ட முடியவில்லை. அதனால் நாங்கள் அலுவலகத்திற்குள்ளே சென்றோம். அலுவலகம் முழுவதும் பூட்டப்பட்டிருந்தது, பின்னர் போலீசார் எங்களை அழைத்துச் செல்லும் வரை நாங்கள் உள்ளேயே இருந்தோம்” என்றார் அவர். சம்பவம் குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். "துரதிர்ஷ்டவசமாக, பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் அனைத்து ஆஸ்திரேலியர்களின் எண்ணங்களும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன" என்று அவர் ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். "காயமடைந்தவர்கள் குறித்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கும், எங்கள் துணிச்சலான காவல்துறை மற்றும் முன்களத்தில் இருந்தவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/clke0ddxke0o
-
வட கொரியாவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்தவர் தென் கொரியாவில் எம்.பியானது எப்படி?
பட மூலாதாரம்,PPP படக்குறிப்பு,37 வயதான பார்க் சூங்-வோ வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிரான்சஸ் மாவோ, சங்மி ஹான் பதவி, பிபிசி 38 நிமிடங்களுக்கு முன்னர் பார்க் சூங்-குவோன் ஓர் இளைஞராக, தனது தாயகமான வட கொரியா, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கச் செய்த அணு ஏவுகணைகளை உருவாக்க உதவினார். இப்போது அவர் அதன் ஜனநாயக அண்டை நாடான தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தாராளவாத ஜனநாயக நாடுகளுக்கு இடம்பெயரும்போது, அவர்கள் சிறந்த வாழ்க்கை, வாய்ப்புகள் பற்றி கனவு காண்கிறார்கள். ஓர் அகதி எம்.பியாக முடியுமா அல்லது ஒருநாள் அதிபராகத்தான் முடியுமா? அது சாத்தியமானது தான். ஆனால் ஒரு வட கொரியருக்கு இது அசாதாரணமானது. 37 வயதான பார்க், வட கொரியாவிலிருந்து தப்பித்து, தென் கொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினரான நான்காவது நபராவார். "நான் ஒன்றுமே இல்லாமல் தென் கொரியாவிற்கு வந்தேன். இப்போது நான் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளேன்" என்று அவர் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார். "இவை அனைத்தையும் நமது தாராளவாத ஜனநாயகத்தின் சக்தியாக நான் பார்க்கிறேன். எங்கள் குடிமக்களால் இது சாத்தியமானது என்று நான் நினைக்கிறேன். இது ஓர் அதிசயம் மற்றும் ஆசீர்வாதம்.” வட கொரியாவை உற்றுநோக்குபவர்களுக்கு இது முன்னேற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. "சட்டப்படி எதற்கும் அனுமதிக்கப்படாத நாட்டில் வாழ்ந்தவர்களை விட ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை யார் புரிந்துகொண்டிருப்பார்கள்?" என, வட கொரிய வாழ்க்கை குறித்து ஆய்வு செய்த கார்ல்ட்டன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் சாண்ட்ரா ஃபாஹி தெரிவித்தார். வட கொரியாவிலிருந்து தப்பித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் கொரியா அதிபர் யூன் சுக்-யோ தன் 23 வயதில், ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு வட கொரிய அரசின் பிடியில் இருந்து பார்க் தப்பினார். பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் தனது திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட அவர் மூச்சுவிடவில்லை. அது மிகவும் ஆபத்தானது என்றும் குடும்பத்தினர் இதுகுறித்து அறிந்திருந்தால் அது அவர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார். அவர் தனது கடைசி மூன்று ஆண்டுகளை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கழித்தார். வட கொரியாவின் அணு ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த தலைமுறையாகக் கருதப்படும் உயர்நிலை மாணவர்களில் அவர் ஒருவர். அவர் 1990-களில் வட கொரியாவில் வளர்ந்தார். பல லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் உயிரிழந்த, குடிமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் கறுப்புச் சந்தையை நாடிய காலமாக அது இருந்தது. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சமயத்தில், “வட கொரியா ஆட்சி எப்படி முற்றிலும் தவறாகவும் ஊழல் நிறைந்ததாகவும் உள்ளது என உணர்ந்ததாக" கொரிய ஊடகத்திடம் அவர் தெரிவித்தார். எனவே தன் திட்டத்தை வெளிப்படுத்தாமல் காத்திருந்தார். ஏப்ரல் 2009-ல் ஒருநாளில் தன்னை வெளிப்படுத்தினார். அந்த நாளில் தான், தன் பல ஆண்டு கடின உழைப்பால் அவர் உருவாக்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக செலுத்தியது. ஒட்டுமொத்த நாடும் “கொண்டாட்ட மனநிலையில் இருந்தது"; கொண்டாட்ட கூச்சல்களுக்கு நடுவே அவர் சத்தமின்றி வெளியேறினார். அங்கிருந்து அவர் வெளியேறுவது நிச்சயமாக கடினமான முடிவுதான். அங்கிருந்து சீனாவுக்கு செல்ல மிக வேகமான, ஆனால் செலவுகரமான வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அதற்கு 10 மில்லியன் வான் (5,800 பவுண்ட்; 7,300 டாலர்கள்) செலவானது. செலவைவிட தரகரால் அவருக்கு வழங்கப்பட்ட போலி பாஸ்போர்ட் முறைகேடானதாக இருந்தது. ஆனால், அச்சமயத்தில் தான் விடுதலையடைந்ததாக உணர்ந்ததாக அவர் என்.கே. நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்தார். அந்நாட்களில் சீனாவின் பக்கத்தில் உள்ள துமன் நதிக்கரையில் சுதந்திரம் மற்றும் இழப்பு என இரண்டு உணர்வுகளையும் அவர் கொண்டிருந்தார். அந்த உணர்வு, அவரை “சர்வதேச அநாதையாக" உணரச் செய்தது. அவருடைய வாழ்க்கையை மாற்றிய மற்றொரு தருணம், அவர் தென் கொரியா பாஸ்போர்ட்டை பெற்றது. தன் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களுள் ஒன்று என அவர் அதை குறிப்பிடுகிறார். எம்.பியானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தே யாங்-ஹோ 1990களில் இருந்து வடகொரியாவிலிருந்து சுமார் 35,000 பேர் தென் கொரியாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருடன் ஒப்பிடுகையில், பார்க் தன் புதிய வாழ்க்கையை மிக வேகமாக தழுவிக்கொண்டார், தன் மேல்தட்டு பின்னணி மற்றும் கல்வி காரணமாக அவர் சவாலை பிரச்னைகள் இன்றி சமாளித்தார். தென் கொரியாவின் மிகவும் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமான சியோல் தேசிய பல்கலைக்கழகத்தால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் பொருளறிவியல் மற்றும் பொறியியலில் பிஹெச்.டி பட்டம் பெற்றார். பின்னர், தென்கொரியாவின் அதிகாரம் வாய்ந்த தொழில் நிறுவனமான ஹூண்டாய் ஸ்டீல் நிறுவனத்தில் உயர்மதிப்பு மிக்க பணியில் சேர்ந்தார். பின்னர், தென் கொரியா அதிபரின் கட்சியிலிருந்து அவருக்கு வாய்ப்பு கதவைத் தட்டியது. தான் அரசியலில் இணைவது குறித்து சிந்தித்ததே இல்லை என பார்க் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், மக்கள் அதிகார கட்சி (People Power Party) தன்னிடம் வந்தபோது மக்கள் சேவை மூலம் திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததாக அவர் கூறினார். விகிதாச்சார வாக்களிப்புப் பதவிகளுக்கான ஆளுங்கட்சியின் பட்டியலில் இரண்டாம் பிரதிநிதியாக அவர் இருந்தார். வாக்குப்பதிவு எவ்வளவு சாதகமற்றதாக இருந்தாலும், அவர் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் உறுதியான இடத்தைப் பெற்றார். ஆனால், அக்கட்சிக்கும் அதிபர் யூன் சுக்-யோலுக்கும் தேர்தல் முடிவுகள் மோசமானதாக இருந்தது. ஆனால், பார்க் தேர்தலில் முன்னிலையில் இருந்தார். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக அவருக்கு பல பெரிய திட்டங்கள் உள்ளன. தென் கொரியாவின் முந்தைய நாடாளுமன்றங்களில் வட கொரியாவைச் சேர்ந்த இருவர் பதவியில் இருந்தனர். அவர்களுள் தே யாங்-ஹோ, ஆடம்பரமான கங்நாம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் முன்பு, பிரிட்டனுக்கான வட கொரியா தூதராக இருந்தார். அவர் 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்த போது வடகொரியாவிலிருந்து வெளியேறினார். மற்றொரு நபர் வலதுசாரி செயற்பாட்டாளர் ஜி சியோங்-ஹோ. 1996-ம் ஆண்டில், இளைஞராக அவரும் பசியால் வாடிய அவருடைய குடும்பத்தினரும் ரயிலில் இருந்து நிலக்கரியை திருடியபோது தன் இடது கையையும் காலையும் இழந்தார். அச்சமயத்தில் பசியால் மயக்கமடைந்த அவர் ரயில் பெட்டிகளுக்கிடையே விழுந்தார்; ரயில் சக்கரங்கள் அவர் மீது ஏறியது. பின்னர், அவர் ஊன்றுகோல் உதவியுடன் வடகொரியாவிலிருந்து தப்பினார். வடகொரியாவிலிருந்து தப்பியவர்களின் நிலையை மேம்படுத்த அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றியுள்ளனர். வட கொரியா குறித்த நிலைப்பாடு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கிம் ஜோங் உன் தென் கொரியாவுக்கு வந்தவுடன் தங்களின் வாழ்க்கை புதிதாக மாறியுள்ளதாக பெரும்பாலானோர் கூறினாலும், அங்கு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கருத்தும் நிலவுகிறது. அதுதான் 2020-ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட ஜி சியோங்-ஹோ-வை ஊக்கப்படுத்தியது. அவர் வட கொரிய மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதாக பிரசாரத்தில் ஈடுபட்டார். வடகொரியாவிலிருந்து தப்பியவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக தென் கொரிய அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிய சமபவமும் நடைபெற்றுள்ளது. ஓராண்டுக்கு முன் வறுமையில் இருந்த வடகொரிய தாய் மற்றும் மகள், சியோலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தென் கொரியாவுக்கு வரும் வடகொரிய மக்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதே தன் முதல் இலக்கு என பார்க் தெரிவித்தார். மேலும், நீண்ட கால இலக்குகளையும் அவர் கொண்டுள்ளார். தென் கொரியாவுக்கு வரும் வடகொரியர்களின் எண்ணிக்கை, கொரோனா கால எல்லை மூடலால் கணிசமாக குறைந்துள்ளதால், அவர்களுக்கான பட்ஜெட்டை மறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அவர் கூறுகிறார். வடகொரியா-தென் கொரியா மக்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதிலும் தன் அடையாளத்தைப் பதிக்க அவர் நினைக்கிறார். கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகளை அதிகரித்துள்ள நிலையில், வட கொரியாவை ராணுவ ரீதியிலான தென் கொரிய அதிபரின் அணுகுமுறையை அவர் மனதார ஆதரிக்கிறார். தென் கொரிய அதிபர் யூன் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருவதால், வட கொரியா எதிர்வினையாற்றுவதாக சிலர் கூறினாலும், பார்க் அக்கருத்தை நிராகரிக்கிறார். “யூன் அரசாங்கம் வந்ததிலிருந்து, போர் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல - முந்தைய நிர்வாகத்தின் கீழ் அச்சுறுத்தல்கள் வலுவாக இருந்தன,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் நிர்வாகத்தின் போது வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆயுத மேம்பாடு அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். "வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களைத் தடுப்பது மிக முக்கியமானது, அது போர் அச்சுறுத்தலைக் குறைக்க வழிவகுக்கும்" என்கிறார் அவர். தீபகற்பத்தின் இரு பகுதிகள் மீண்டும் ஒன்றிணையும் என அவர் நம்புகிறார். இந்த ஆண்டு கிம் ஜோங்-உன் அந்த வாய்ப்பை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்த போதிலும் இவ்வாறு அவர் கருதுகிறார். ஆனால் பார்க் தயங்கவில்லை. தென் கொரிய அரசாங்கத்தில் "ஒரு பாலமாக திகழும் ஒரு பாத்திரத்தை வகிக்க" அவர் உறுதியாக இருக்கிறார். "தென் கொரியர்கள் வட கொரியாவின் ஆட்சியையும் அதன் மக்களையும் தனித்தனியாகப் பார்க்கவும் ஒற்றுமைக்கு உகந்த மனநிலையை வளர்க்கவும் உதவ விரும்புகிறேன்." என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz5d71yvx1ro
-
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி
Published By: RAJEEBAN 13 APR, 2024 | 01:58 PM அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. வணிக வளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியேறிய வண்ணமுள்ளனர். அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன. பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர். வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர். வெஸ்ட்பீல்ட் வணிகவளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வணிகவளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். வணிகவளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/181048
-
இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான காப்புரிமை யாருக்கு? சட்டம் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமான பாடல்கள் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் ஒட்டுமொத்த உலகத்தின் வாராந்திர சராசரி பாடல் கேட்கும் அளவைவிட, இந்தியர்கள் பாடல் கேட்கும் வாராந்திர சராசரி அளவு அதிகம். குறிப்பாக இந்திய பொழுதுபோக்குத் துறையில் அங்கம் வகிக்கும் இசைத் துறையின் வருடாந்திர வருமானமே பல ஆயிரம் கோடிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதே நேரம் இதே இசைத் துறையில் காப்புரிமை என்பது பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காப்புரிமை என்றால் என்ன? அது திரைப்படத் துறையில் எப்படி இயங்குகிறது? அதற்கான சட்டங்கள் என்ன? உண்மையில் இசை யாருக்குச் சொந்தம் என்பது குறித்து இங்கு காணலாம். இளையராஜா வழக்கு பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM படக்குறிப்பு,இளையராஜா தனது நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என்றும்கூட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்திய இசைத்துறையில் முக்கியமான இசையமைப்பாளரான இளையராஜா 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர். இதுவரை பல்வேறு மொழிகளில் 7000த்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தாம் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முதலில் படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பயன்படுத்தத் தடை இல்லை என்றும், அதேநேரம் அதன் மீது இளையராஜாவுக்கும் தார்மீக உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு இளையராஜா இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, இந்த நிறுவனங்கள் அந்த பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது இருதரப்பின் வழக்கு விசாரணையும் உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. இளையராஜா இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு அவரது நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகர்கள் சித்ரா மற்றும் எஸ்.பி.பி.சரண் ஆகியோர் தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்றும்கூட வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் பிரச்னை அதற்குப் பின் சமரசத்தில் முடிந்து, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ஒன்றிணைந்தனர். தற்போது இளையராஜாவுக்கு எதிரான மேல்முறையீட்டில், ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றுவிட்டு இசையமைத்துக் கொடுக்கும் இசையமைப்பாளருக்கு அதற்குப் பின் அந்த இசையின் மீது எந்த உரிமையும் இல்லை என்று எதிர்தரப்பால் வாதிடப்படுகிறது. இது சட்டபூர்வமாக எந்தளவுக்கு உண்மை? காப்புரிமை சட்ட விதிகள் சொல்வது என்ன? காப்புரிமை சட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காப்புரிமை சட்டம் தனிநபருக்கு தனது படைப்பின் மீதான உரிமையைப் பாதுகாக்க உதவுகிறது. காப்புரிமை சட்டம் என்பது 1957ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரின் படைப்பு அல்லது கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீதான அவரது உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன். அதேநேரம் “எல்லா படைப்புகளுக்கும் காப்புரிமையைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. குறிப்பாக ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறோம் அல்லது நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்றால் அதைப் பதிவு செய்து அதற்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர். ஆனால், இதுவே ஒரு ஓவியம் வரைகிறோம், இசையமைக்கிறோம், கதை எழுதுகிறோம் என்றால் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒருமுறை அது வெளியிடப்பட்டு விட்டாலே அது உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுகிறார் கார்த்திகேயன். மேற்கத்திய கோட்பாடு பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,காப்புரிமை கோட்பாடு பிறந்த இடத்திற்கும் நம் நாட்டுக்கும் உள்ள ஒரு அடிப்படை வேறுபாடுதான் இந்தக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன். ஆனால், இந்தக் 'காப்புரிமை' என்கிற கோட்பாடே மேற்கத்திய உலகிலிருந்து வந்ததுதான். 'காப்புரிமை' என்பது கலைஞர்களுக்கும் அவர்கள் படைப்புகளுக்குமான வணிகப் பாதுகாப்பை உறுதி செய்கிற ஒரு விஷயம் என்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இந்தக் காப்புரிமை கோட்பாடு பிறந்த இடத்திற்கும் நம் நாட்டுக்கும் உள்ள ஓர் அடிப்படை வேறுபாடுதான் இந்தக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அங்கு இசை என்பது தனித்து நிற்பது; இங்கு திரைப்படங்களின் ஊடாக இணைந்திருப்பது. அந்த மாறுபாட்டை உணராமல் இயற்றப்பட்ட சட்டம் என்பதாலேயே அது பல முரண்களைக் கொண்டு வந்திருக்கிறது என்கிறார் அவர். இசை யாருக்கு சொந்தம்? சமீப காலமாக தமிழ்திரைத்துறையில் இசையமைப்பாளர் மற்றும் இசை நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் உரசல்களில் அதிகம் எழும் வாதம் இசையமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இசை யாருக்கு சொந்தம் என்பதே! இதுகுறித்து கார்த்திகேயனிடம் கேட்டபோது, “ஒரு இசையமைப்பாளர் தனி ஆல்பமாக உருவாக்கி இசையமைக்கிறார், அதை வெளியிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்படிச் செய்தால் அது முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்." ஆனால், ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட படத்தின் தன்மைக்கு ஏற்ப தனக்கு இந்தப் பாடல்கள் வேண்டும் என்று கேட்கிறார். அதற்காக "ஒரு குறிப்பிட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இசையமைப்பாளரும் இசை அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அந்த இசையின் மீதான மொத்த உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்கே உள்ளது,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,KARTHIKEYAN.N படக்குறிப்பு,"ஒரு குறிப்பிட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இசையமைப்பாளரும் இசை அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அந்த இசையின் மீதான மொத்த உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்கே உள்ளது,” என்கிறார் கார்த்திகேயன். மேலும், “ஒரு படத்தில் வரும் பாடல் என்பது குறிப்பிட்ட இசையமைப்பாளரை மட்டும் சார்ந்தது கிடையாது. அதில் சவுண்ட் இன்ஜினியரில் தொடங்கி, பாடலாசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கு செலுத்துகிறார்கள். இதனால், ஒவ்வொருவரிடமும் ஒப்பந்தம் போட்டு அதன் அடிப்படையில்தான் அந்தப் பாடலை ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறார்,” என்று கூறுகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன். இதுவே அந்த இசையமைப்பாளர் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்தப் பாடலை இலவசமாக உருவாக்கிக் கொடுக்கிறார் என்றால் அப்போது அவர் சொந்தம் கொண்டாடிக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிடுகிறார் அவர். இந்தப் பிரச்னையை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன். அவரது கூற்றுப்படி, “சட்டம் என்பது ஒன்று; தார்மீகம் என்பது ஒன்று. சட்டம், அது இசையமைப்பாளருக்கே சொந்தம் என்று சொல்கிறது. தார்மீகப்படி அது தயாரிப்பாளருக்குத்தானே சொந்தம்?” என்று கூறுகிறார் அவர். ஆனால், அதை சட்டரீதியாக வாதிட்டு முடிவு செய்ய வேண்டுமே தவிர, கோயம்பேடு வணிகர்கள் போல வெறும் கடைநிலை விநியோகஸ்தர்களாக இருக்கும் இசை நிறுவனங்கள் ஒரு இசையமைப்பாளருக்கு அவரது பாடல் மீது உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். பட மூலாதாரம்,ILAIYARAAJA/ FACEBOOK பாடலின் தன்மையை மாற்றும்போது யாருக்கு சொந்தம்? இளையராஜா வழக்கில்கூட அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குழு, ஒரு பாடல் படத்திற்காக இசையமைக்கப்பட்டு வீடியோ காட்சிகளோடு இணைக்கப்பட்டு வெளியாகிறது. அதன் மீது மட்டுமே அந்த தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. அதை ஆடியோ போன்று வேறு எந்த வடிவத்திலும் வெளியிட உரிமை கிடையாது என்று வாதிட்டது. ஆனால், வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் கருத்தோ அதற்கு எதிர்மாறானதாக இருக்கிறது. அவரது கூற்றுப்படி, “ஒரு படத்தில் பாடல் அமைப்பதற்காக தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இடையே ஒப்பந்தம் போடும்போதே, அதில் ‘All Rights Reserved’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அர்த்தம், குறிப்பிட்ட பாடலை எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. எனவே ஒரு பாடலை ஆடியோ, வீடியோ என எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளவும் அந்த தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு.” எத்தனை ஆண்டுகளுக்கு சொந்தம் கொண்டாட முடியும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு இசையை ஒரு நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திய பிறகு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன். ஒரு இசையமைப்பாளர் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டு ஒரு இசையை உருவாக்கித் தருகிறார் என்றால் அடிப்படையில் குறிப்பிட்ட தயாரிப்பாளர் அந்த இசையை தனது வாழ்நாள் வரை மற்றும் அவரது இறப்புக்குப் பிறகு அவரின் வாரிசுகள் 60 ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் கார்த்திகேயன். இதே ஒரு நிறுவனமாக இருந்தால் அந்நிறுவனம் அந்த இசையை 60 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பிறகு அந்தப் பாடல்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அது பொதுத்தளத்திற்கு வந்துவிடும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அவர். 'குளிர்காயும் இசை நிறுவனங்கள்' இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் குளிர்காய்வது, கொள்ளையடிப்பது இசை நிறுவனங்கள் மட்டுமே. அவர்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கும் சட்டம் வேண்டும் என்று அழுத்தமாக கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன். “ஒரு வணிகத்துக்கு மூன்று நிலைகள் உண்டு. உற்பத்தியாளர், இடைத்தரகர், விற்பனையாளர். இங்கு இடைத்தரகர் என்பது தயாரிப்பாளர். இசை நிறுவனங்கள் மூன்றாவது நிலை. அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற விகிதத்துக்கு சட்டம் மாற்றப்பட வேண்டும்.” “ஒரு படத்துக்குப் போடப்பட்ட இசையை வேறு படத்திற்கோ, தளத்திற்கோ பயன்படுத்த வேண்டுமென தயாரிப்பாளரோ, இசை நிறுவனமோ நினைத்தால் அதற்குரிய தொகையை அந்த இசையமைப்பாளருக்குக் கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை நிர்ணயிக்கும் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உண்டு” என்று வலியுறுத்துகிறார் ஜேம்ஸ் வசந்தன். சட்டத்தில் மாற்றம் வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தக் காப்புரிமை சட்டத்தை திருத்தியமைக்காத வரை இந்த முரண்களும், மோதல்களும் தீரவே தீராது என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன். ஜேம்ஸ் வசந்தனை பொறுத்தவரை தற்போது இருக்கும் சட்டத்தை முறையாக வடிவமைத்தால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும். அதற்கு திரைப்பட இசையையும், தனி இசையையும் இரண்டாகப் பிரித்து சட்டத் திருத்தம் செய்யவேண்டும் என்கிறார். "தனி இசை உருவாக்கம் பாடகரை மையப்படுத்தியது. திரைப்பட இசை அந்தத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்போரின் அடையாளங்களை மையப்படுத்திய ஒரு புதுமைக் கலவை. எனவே, இந்தக் காப்புரிமைச் சட்டத்தை இதற்கு ஏற்றாற்போல நாமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத வரை இந்த முரண்களும், மோதல்களும் தீரவே தீராது" என்று கூறுகிறார் அவர். ஆனால், தற்போது இருக்கும் சட்டமே போதுமானது. அதன்படி தனியாக ஆல்பமாக ஒரு இசையை வெளியிடும்போது அதற்கான காப்புரிமை வழங்கப்படுகிறது. இதுவே ஒரு படத்தைச் சார்ந்ததாக இசை உருவாகும்போது, அதில் பலதரப்பட்ட பங்குதாரர்களும் உள்ளதால் அதன் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது அவ்வளவுதான் என்கிறார் கார்த்திகேயன். எனவே குறிப்பிட்ட இசையமைப்பாளர்தான் ஒப்பந்தம் போடும்போதே அதற்கான தக்க சம்பளம் என்ன என்பதை நிர்ணயித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4n1ppkdyp2o
-
தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்
தமிழ் சிங்கள புத்தாண்டை இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுவதைப் போன்று ஒவ்வொரு விடயமும் அமைய வேண்டும் - புத்தாண்டு வாழ்த்தில் இந்துக் குருமார் அமைப்பு 12 APR, 2024 | 07:42 AM நாம், தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைதியும் புரிந்துணர்வும் நல்வாழ்வும் அமையட்டும், தமிழ் வருடங்களில் 38 ஆவது வருடமான சுப மங்களகர குரோதி என்னும் நாமத்துடன் பிறந்திருக்கும் தமிழ் புத்தாண்டானது சிறப்பான ஒரு வருடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். உலக மக்கள் அனைவரும் கடந்த தசாப்த காலமாகப் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். அதில் குறிப்பாக எமது நாட்டு மக்கள் இன்னோரன்ன துயரங்களைத் தாங்கி சகித்து வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சமயங்களும் வாழ்வியலை வழிகாட்டி சுட்டி நிற்கின்ற அதேவேளையில் எமது சமயமானது அன்பு, கருணை, கொல்லாமை, பிறருக்குத் தீங்கு செய்யாமை, புரிந்துணர்வு போன்ற நற்செயல்களை சுட்டி நிற்கின்றது இவைபோன்ற விடயங்கள் தொலைத்துவிட்டோம் என்கின்ற காலப்பகுதியிலேயே நாம் அனைவரும் இருக்கின்றோம். நாம் எமது குடும்ப உறவுகளிடம் அன்பு செலுத்துவது போல் ஏனைய இனத்தார் சமூகத்தினர் சமயத்தாருடன் அன்பு செலுத்துதல் வேண்டும். மேலும் ஒவ்வொருவருடைய தனித்துவ பண்பாட்டினை மதித்துப் போற்றுதல் வேண்டியது சிறப்பானதும் பிரதானமான ஒன்றாக காணப்படுகின்றது. அதனோடு தமிழ் மக்களாகிய நாம் எமது தேசத்தில் தொடர்ந்தும் வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேற் கூறிய அனைத்து நற்குணங்கள், விடயங்களை எம் தேசத்து அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும். நாம் தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டும். புதுவருடத்தில் நாம் அனைவருக்கும் இறை பிரார்த்தனையுடன் கூடிய இன்பகரமான வாழ்வு அமைய வேண்டும் என பரம்பொருளை வேண்டி இறை பிரார்த்தனையில் ஈடுபடுவோம். இச்சமயத்திலே இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் வழிகாட்டுதலையும் நிறைந்த இறை பிரார்த்தனையும் நல்லாசிகளையும் பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181014
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பரமானந்தம் ஐயா இந்தப் பிறப்பிலயே அந்தம்மா கல்யாணம் செய்யவில்லை! என்ன நம்பிக்கையில் புறுபுறுத்தியளோ தெரியல?!
-
இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம்!
13 APR, 2024 | 03:44 PM குரோதி என்ற பெயரைக் கொண்ட புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.15 மணியளவிலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்றிரவு 9.04 மணியளவிலும் பிறக்கின்றது. 'குரோதி' வருடப்பிறப்பு சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை. சங்கிரம தோஷ நட்சத்திரங்கள் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள், சித்திரை, விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். குரோதி வருட பலன்கள் இவ்வருடம் முன்மழை அதிகமாகும். பின்மழை மத்திமமாகும். உணவுப் பொருள் விருத்திகள், கமத்தொழில், கைத்தொழில் போன்றவற்றில் லாபங்கள் அமையும். அரச சேவை திருப்திகரமானதாக அமையும். கல்வி மேன்மைகள் சிறப்படையும். பொருட்களின் விலை அதிகமாக அமையும். அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். கைவிஷேட நேரங்கள் 14.04.2024 சித்திரை 1ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை. காலை 09.59 மணி முதல் நண்பகல் 12.01 மணி வரை. மாலை 06.17 மணி முதல் இரவு 08.17 மணி வரை. புது வியாபாரம் ஆரம்பிக்கும் நேரங்கள் 15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை. காலை 09.55 மணி முதல் 10.30 மணி வரை. https://www.virakesari.lk/article/181054
-
மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும் காசா – மயிரிழையில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் Published By: RAJEEBAN 13 APR, 2024 | 11:38 AM காசாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்தவேளை தன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மனிதாபிமான பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் உட்பட ஏழுமனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்ட சில வாரங்களிற்குள் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. யுனிசெவ் பணியாளரும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளருமான டெஸ் இன்கிராம் காசாவில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். நான் உண்மையில் அதிஸ்டசாலி உயிர் தப்பினேன் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் குடிநீர் விநியோகத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைக்காக வாகனத்தொடரணியில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். காசாவின் வடி சோதனை சாவடியில் வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. நாங்கள் அந்த பகுதியில் காத்திருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமானது பொதுமக்கள் காணப்பட்ட சோதனைசாவடியிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது அவர்கள் சிதறியோடினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சன்னங்கள் எனது காரை தாக்கின, நான் அமர்ந்திருந்த பகுதிகளின் கண்ணாடிகளை தாக்கின என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பயணித்தது கவசவாகனம் என்பதால் உயிர்பிழைத்தோம், இல்லாவிட்டால் துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கும் மோசமான விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் எங்களது பணி நாங்கள் பயணிப்பது குறித்து நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான பணியாளர்களாக பணியாற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181047
-
பாலியல் வாழ்வை பாதிக்கும் மெனோபாஸ், ஆண்களுக்கு வரும் ஆண்ட்ரோபாஸ் - மருத்துவர்கள் கூறும் வழி
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் மிகவும் முக்கியமானவை, பருவமடையும்போது, கர்ப்பமாக இருக்கும்போது, மாதவிடாய் நின்று போகும்போது (மெனோபாஸ்). ஆனால் முதல் இரண்டு கட்டங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மெனோபாஸிற்கு கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ். மெனோபாஸ், மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்கள் உடலில் காலப்போக்கில் நிகழும் ஒன்று. பெரும்பாலான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இது நிகழ்கிறது. அப்போது அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் நிகழ்வதுடன், அவற்றின் சுழற்சி முறையிலும் வேறுபாடு உண்டாகிறது. இவற்றுடன் எதிலும் நாட்டம் இல்லாதது, மூட்டு வலி, பிறப்புறுப்பில் வறட்சி உள்ளிட்ட பல பிரச்னைகளையும் பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் இந்த மாதவிடாய் நின்று போதல் எந்த வயதில் நிகழ்கிறது, எந்த மாதிரியான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்துகிறது, அந்த அறிகுறிகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன, நமது அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரம் மாறுபடுகிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை இருக்கும் என்பது உண்மையா? அவ்வாறு உண்டாகும் நாட்டமின்மையைச் சரிசெய்ய மருத்துவர்களின் அறிவுரை என்ன? பெண்களைப் போல் ஆண்களுக்கும் மெனோபாஸ் பிரச்னை உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இங்கு பார்க்கலாம். மெனோபாஸ், பாலியல் நாட்டமின்மையை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES “பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான முக்கிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென். அந்த ஹார்மோன் உடலில் குறையும்போது கருமுட்டைகள் உருவாவதும், அவை வெளியேறுவதும் குறைந்து, ஒருகட்டத்தில் நின்றுவிடும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் அதைத்தான் மெனோபாஸ் என்கிறோம்,” என்று விளக்கினார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ். தொடர்ந்து பேசிய அவர், “பெண்களின் உடலில் தலை முதல் கால் வரை, ஈஸ்ட்ரோஜெனின் தாக்கம் இருக்கிறது. அந்த ஹார்மோன் குறையும்போது மனநிலை, உடல்நிலை இரண்டும் பாதிக்கப்படும். மெனோபாஸ் தொடங்குவதற்கு முன்பும், அந்தக் கட்டத்திற்குப் பிறகும் இந்த பாதிப்புகள் இருக்கும். மனச் சோர்வு, தூக்கமின்மை, எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு மற்றும் முதுகு வலி, உடலில் திடீரென வெப்பம் அதிகரிப்பது, உடல் பருமன், முடி உதிர்வு எனப் பல பிரச்னைகள் ஏற்படும். இதன் தொடர்ச்சியாகத்தான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான், பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களைப் புதுப்பிக்கும். அந்த ஹார்மோன் குறையும்போது, பெண்ணுறுப்பு உலர்ந்துவிடும். இதனால் பிறப்புறுப்பில் அசௌகரியம், வலி ஏற்படும். மெனோபாஸ் கட்டத்திற்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் பெண்களுக்கு ஆர்வம் குறைய இதுவும் ஒரு காரணம்,” என்கிறார் மருத்துவர் நிவேதிதா காமராஜ். பட மூலாதாரம்,AAKASHFERTILITYCENTRE படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ் “ஈஸ்ட்ரோஜென் குறைவால் ஏற்படும் நேரடி விளைவுதான் பாலியல் ஆர்வம் குறைவது. என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண் வந்திருந்தார். அவருக்கு 49 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. அவர் என்னிடம் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாக தீவிர மனச்சோர்வில் இருந்துள்ளார். பாலியல் ஆர்வம் குறைந்ததால் அவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது அவரது மனச் சோர்வை மேலும் அதிகப்படுத்தியது. தூக்கமின்மை பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் அவருக்கு எழுந்துள்ளன. அவரது நண்பர் ஒருவர் பரிந்துரைத்து என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஹார்மோன் மாற்று தெரபியை தொடங்கினோம். ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு ஈடாக மருந்துகள் மூலம் தீவிரமான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முறைதான் ஹார்மோன் மாற்று தெரபி. இப்போது சில கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். மெனோபாஸ் என்பதைப் பற்றிய புரிதல் பலருக்கும் இங்கு இல்லை. பாலியல் உறவில் நாட்டமின்மை முதல் மெனோபாஸ் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் கண்டிப்பாகச் சரிசெய்யலாம். வாழ்நாளில் மருத்துவரிடம் செல்லாமல் இருப்பதை இங்கு பலரும் ஒரு சாதனை என்று நினைக்கிறார்கள். மெனோபாஸ் சமயத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகுவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்,” என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ். இயற்கையாக எந்த வயது வரை பாலியல் ஆர்வம் இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES “ஆண்களுக்கும் பெண்களுக்கும் 80 வயது வரைகூட பாலியல் ஆர்வம் இருக்கும். எனவே மெனோபாஸ் என்பதை தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகப் பார்க்கக்கூடாது,” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். “ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களால் பெண்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் தானே தாம்பத்திய வாழ்வு சிறக்கும். அதோடு சேர்த்து பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி, உறவின்போது கடுமையான வலியை உண்டாக்கி, பாலியல் உறவு குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் நம் நாட்டில் இருக்கும் ஒரு பொதுவான எண்ணம், பாலியல் உறவு என்பது தம்பதிகளுக்குள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் இருக்க வேண்டும், பின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும், ஆன்மீகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் 45 வயதிற்கு மேல் தம்பதிகளுக்குள் பாலியல் ஆர்வம் குறைந்துவிட்டால் அதை மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள்,” என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES “மெனோபாஸ் சார்ந்த மாற்றங்களுக்கு இப்போது மருந்துகள், சிகிச்சைகள் வந்துவிட்டன. அதில் முக்கியமான சிகிச்சை ஹார்மோன் மாற்று தெரபி, எத்தனையோ பேர் அதை எடுத்துக்கொண்டு இயல்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இதை எடுத்துக்கொண்டாலே மெனோபாஸ் தொடர்பான பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும். பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சிக்கு நிறைய லூப்ரிகண்ட்ஸ் (Lubricants) கிடைக்கின்றன. ஆணுறை நிறுவனங்கள்கூட இதற்கென பிரத்யேக ஆணுறைகளைத் தயாரிக்கின்றன. எலும்பு தேய்மானத்திற்கு மருந்துகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் பரிந்துரைக்கிறோம். எனவே ஒரு வயதிற்கு மேல் கணவன்- மனைவிக்குள் உடலுறவு என்பதே ஏதோ பெரிய குற்றம் என்ற பொதுப்புத்தியில் இருந்து விலகி, மெனோபாஸ் குறித்த பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும். உடலுறவின் மீது ஆர்வம் இல்லை என்றால் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடலுறவு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது,” என்கிறார் மருத்துவர் காமராஜ். `ஆண்களுக்கான மெனோபாஸ்' படக்குறிப்பு,பாலியல் மருத்துவர் காமராஜ் “இந்த ஹார்மோன் பிரச்னைகள் ஆண்களையும் பாதிக்கும். இதை, ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்பார்கள், `ஆண்களுக்கான மெனோபாஸ்' என்றும் இதைச் சொல்லலாம்” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். “பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல ஆண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்ற ஹார்மோன் குறையும்போது இது ஏற்படும். ஞாபக மறதி, ஆணுறுப்பு எழுச்சியின்மை, தசைகளின் பலம் குறைவது, தூக்கமின்மை, மனச் சோர்வு, பாலியல் ஆர்வம் குறைவது, விந்து சீக்கிரமாக வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது, இதையெல்லாம் பலரும் முதுமையின் அறிகுறிகளாகப் பார்ப்பார்கள். ஆனால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும் ஆண்கள் மருத்துவரை அணுகி, உடலில் ஹார்மோன்களை அதிகரிப்பதற்குத் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் பாலியல் ஆர்வம் கூடுவது மட்டுமல்லாது, அவர்களது அன்றாட வாழ்க்கையும் மேம்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES கணவன்- மனைவி, மெனோபாஸ் மற்றும் ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும்போது மனம் விட்டுப் பேச வேண்டும். சரி நமக்கு வயதாகிவிட்டது, இதை ஏற்றுக்கொண்டு உடலுறவைத் தவிர்த்துவிடுவோம் என இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த ஹார்மோன் பிரச்னைகள் உடல்நிலை சார்ந்தும், மனநிலை சார்ந்தும் பல விபரீத சிக்கல்களை ஏற்படுத்திவிடும். 40- 50 என்ற வயது சோர்ந்து, ஓய்வு எடுப்பதற்கான வயது அல்ல. மெனோபாஸ்/ஆண்ட்ரோபாஸ் என்பதை பாலியல் வாழ்க்கையின் வீழ்ச்சியாகப் பார்க்கக்கூடாது. அறிகுறிகளைப் புரிந்துகொண்டு குறிப்பிட்ட சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அது வழங்குகிறது. நல்ல மருத்துவ ஆலோசனையோடு உங்கள் உடலைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டால், தாம்பத்திய வாழ்க்கைக்கு வயது ஒரு தடையே இல்லை,” என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cw0v5djxqgno
-
தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்
உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் சமுதாயம் மேலோங்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் 13 APR, 2024 | 07:28 AM தமிழோடு உறவாடுவோம் என தமிழ் புத்தாண்டு சித்திரை தினத்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு நம் சமுதாயத்தின் சிந்தனைகள் உயர்வு பெற வேண்டும் எனவும் உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் சமுதாயம் மேலோங்க வேண்டுமென தெரிவித்தார். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் உள்ள தமிழர்கள் 12 நாடுகளில் 152 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நம் தமிழ் சமுதாயம் மனித வளம் கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும். அதேபோல் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் அரசாங்கங்கள் மூலம் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரசாங்க சலுகைகள் போன்றவற்றை அனைத்து தமிழர்களுக்கும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாட்டின் இறையாண்மைக்கு ஏற்ப அனைத்து நாடுகளிலும் ராஜாங்க உறவை பலப்படுத்தி அதன்மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் தமிழர்கள் இந்திய மக்கள் தொகையில், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் சேர்த்து 8 சதவீதத்துக்கு மேல் வசிக்கிறார்கள். அயல்நாடுகளில் மூன்று கோடியே அறுவது லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இவை அனைத்தையும் சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றால் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் அரசியல் சார்பற்ற ஒரு நபரை நியமன எம்பியாக நியமித்து அதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். எனவே, இந்தியாவில் அடுத்து அமையப்போகும் மத்திய அரசு அரசியல் சார்பற்ற ஒருவரை நியமன எம்.பி.யாக அமர்த்த வேண்டும் என உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/181046
-
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியா சென்ற இருவருக்கு சிறை!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில் குறித்த இருவருக்கும் 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து திருவாடானை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/298986
-
விகாரமஹாதேவி பூங்காவில் சிக்கிய ஆண் யானைகள்
கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இரண்டு யானைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த யானைகளை நகருக்கு வெளியே கொண்டு செல்வது ஆபத்தானது என்பதால், யானைகள் அங்கே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. ஹுனுப்பிட்டி கங்காராமய ஆலயத்தின் வருடாந்த நவம் பெரஹெராவுக்காக இரண்டு யானைகளும் ஆரம்பத்தில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “எனினும், யானைகள் பெரஹராவில் பங்குபெறவில்லை என்று பராமரிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர், ஏனெனில் குழப்பநிலையில் இருந்தன,” என்று அதிகாரி கூறியுள்ளார். . கொழும்பின் மையத்தில் உள்ள பூங்காவில் யானைகளை வைத்திருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி மேலும் கூறுகையில், “அவை இன்னும் மோசமான நிலையில் உள்ளன, எனவே அவற்றை நகரத்திற்கு வெளியே கொண்டு செல்வது மிகவும் ஆபத்தானது என்று பராமரிப்பாளர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். இந்த நேரத்தில் யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும், அவற்றின் அருகில் செல்லவேண்டாம் என்றும் எங்களிடம் கூறியுள்ளனர். பராமரிப்பாளர்கள் 24 மணிநேரமும் இருக்கிறார்கள்,” என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். வழமையாக நவம் பெரஹெராவிற்கு அழைத்து வரப்படும் யானைகள் ஒவ்வொரு வருடமும் விகாரமஹாதேவி பூங்காவில் தற்காலிகமாக வைக்கப்படுவதாக சிஎம்சி அதிகாரி மேலும் விளக்கினார். இதற்கிடையில், யானைகள் ஏன் பெரஹெராவிற்கு கொண்டு செல்லப்பட்டன என்று பாதுகாவலரிடம் கேட்ட பொது : “ஒவ்வொரு வருடமும் யானைகள் குறித்த காலத்தில் சற்று குழப்ப நிலையில் இருக்கும், பொதுவாக அவை அந்த நிலையில் இருக்கும் நேரம் பராமரிப்பாளர்களுக்கு தெரியும், எனவே இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் யானைகளை இப்படி கட்டி வைப்பது வழக்கமான நடைமுறை. டெஸ்டோஸ்டிரோன் அளவு சாதாரண அளவை விட 60 மடங்கு அதிகமாக இருப்பதால் அவற்றை வெளியில் கொண்டு செல்வது ஆபத்தானது. விலங்குகளுக்கு குறைந்த பட்சம் சரியான நிழல் மற்றும் தண்ணீர் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று கூறினார், யானைகளை கொண்டு செல்வது எப்போது பாதுகாப்பானது என்பது குறித்து தங்களுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று சிஎம்சி அதிகாரி கூறியுள்ளார். தி மோர்னிங் https://thinakkural.lk/article/298965
-
தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக புதுவருடம் அமைய வேண்டும் - வட மாகாண ஆளுநர் 10 APR, 2024 | 07:03 PM பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய பண்டிகையாக சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக மலரும் புதுவருடம் அமைய வேண்டும் என வட மாகாண ஆளுநர் தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் கூறியதாவது : தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கமைய சித்திரை 14ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும் சமாதானமும் மேலோங்கி, வறுமை நீங்கி, எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இதே தினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய பண்டிகையாக சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக மலரும் புதுவருடம் அமைய வேண்டும். வருடப்பிறப்பின்போது பின்பற்றப்படுகின்ற சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகள் எம்மவர்களின் மரபுகளை தொடர்ச்சியாக பேணுகின்ற ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில், மருத்துநீர் வைத்துக் குளித்தல், புத்தாடை அணிதல், நறுமணங்களை பூசிக்கொள்ளுதல், மத வழிபாடுகளில் ஈடுபடுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், கைவிசேடம் வழங்கல் ஆகிய செயற்பாடுகளினூடாக மரபுகள் பேணப்படுகின்றன. அத்துடன் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள், கலை நிகழ்வுகளூடாக நல்லிணக்க செயற்பாடுகளும், சமரசமாக வாழும் தன்மையும் ஏற்படுகிறது. “இனி என்னை புதிய உயிராக்கி, எனக்கேதும் கவலையரச்செய்து, மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கமைய, புது வருடத்தில் புதிய சிந்தனைகளை எம்மில் தோற்றுவித்து, மகிழ்ச்சி பொங்கும் வளமான வாழ்வை பெற இறையாசி வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/180932
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறுகிறார். விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், யுஐபி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திதுவதன் விளைவாக விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நம்புவதாக எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.. “வணிகச் சந்தையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு. பாதுகாப்பு தளத்தில் துருப்புகளைச் சுற்றி நிற்க வைப்பதை விட கேமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். எனவே எங்கள் படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், முயற்சிக்கிறோம். அந்த நாட்களில் 35,000 இராணுவம் வழங்கிய செயல்பாட்டு பணியை 2030 க்குள் 18,000 பேரைப் பயன்படுத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298961
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
அக்கரைப்பற்றில் தீயில் கருகி உயிரிழந்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோலாவில்-02 பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஓலைகளால் வேயப்பட்ட வீட்டின் முன் அறையில் குறித்த நபர் கடந்த 10ஆம் திகதி காலை தீயில் கருகி உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குறித்த நபர் கழுத்து வெட்டப்பட்டமையால் ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவொரு கொலை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்தவரின் 33 வயதான மனைவியும் அவருடன் தொடர்புகளை பேணிய 63 வயதான மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/298945
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை, அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார் அதிகாரிகளும் நேற்று(12) காலை குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது. இந்நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு அந்த அதிகார சபை திட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. செம்மணிப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலான திட்ட வரைபை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/298973
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
'இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தினால்...' - ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை, பதற்றத்தில் மத்திய கிழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, இரானை ஜோ பைடன் எச்சரித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், கேத்ரின் ஆர்ம்ஸ்ட்ராங் & மத்திய கிழக்கு செய்தியாளர் ஹூகோ பசேகா பதவி, லண்டன் மற்றும் ஜெருசலேமிலிருந்து 19 நிமிடங்களுக்கு முன்னர் இரானில் ஏப்ரல் ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதலில் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு அந்நாடு பதிலடி தரும் என அச்சம் நிலவிவரும் நிலையில், இரான் இஸ்ரேலை “விரைவில் தாக்கும்" என்று எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள இரான் தூதரகத்தைத் தாங்கள் தாக்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல்தான் அத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் விரைவில் நிகழலாம் என, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் “வேண்டாம்” என, இரானுக்கு பைடன் தெரிவித்துள்ளார். “இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம்,” என பைடன் தெரிவித்தார். “இஸ்ரேலை பாதுகாக்க நாங்கள் உதவுவோம். இரான் இதில் வெற்றி பெற முடியாது,” என அவர் எச்சரித்தார். காஸாவில் இஸ்ரேலுடன் சண்டையிடும் பாலத்தீன குழுவான ஹமாஸ் மற்றும் அப்பிராந்தியத்தில் அதுபோன்ற மற்ற குழுக்களையும் இரான் ஆதரித்து வருகிறது. இஸ்ரேலியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து வரும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பையும் இரான் ஆதரித்து வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி “டஜன்" கணக்கிலான ராக்கெட்டுகளை ஏவியதாக ஹெஸ்புல்லா அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. சுமார் 40 ஏவுகணைகள் மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதில் எந்த உயிர்ச்சேதமும் பதிவாகவில்லை. மேலும், இதில் தொடர்புடைய மற்ற அமைப்புகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. போரை விரும்பாத அண்டை நாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் இரான் வேண்டுமென்றே மத்திய கிழக்கு மற்றும் வாஷிங்டனை யூகிக்க வைப்பதாக, பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃப்ராங்க் கார்ட்னர் தெரிவிக்கிறார். டமாஸ்கஸில் உள்ள தூதரகத்தில் ஏப்ரல் 1 அன்று கடும் தாக்குதலைத் தொடர்ந்து, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இரானிய பினாமிகளுக்கு இரான் தனது ரகசிய ஆயுத விநியோகத்தை வழிநடத்துவதாக இஸ்ரேல் நம்பி வருகிறது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரானின் பாதுகாப்பு அமைப்புகள், தங்கள் பதிலடி குறித்து விவாதித்து வருகிறது. மிகவும் கடுமையாகத் தாக்கினால், இஸ்ரேல் பேரழிவு சக்தியுடன் பதிலளிக்கும். மிகவும் இலகுவாகச் சென்றால், இரான் பலவீனமானதாகவும் பயனற்றதாகவும் கருதப்படும் அபாயம் உள்ளது. ஒரு தந்திரோபாய கண்ணோட்டத்தில், பிராந்தியம் முழு விழிப்புடன் இருக்கும்போதும் அமெரிக்கா உலகிற்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கூறிவரும் நிலையிலும் இரான் இப்போது பதிலளிப்பதில் அர்த்தமில்லை. தெஹ்ரான் மற்றும் கோம்-இல் உள்ள நடைமுறைவாதிகள் கட்டுப்பாட்டை வலியுறுத்துவர். அதேநேரத்தில், இரானின் வயதான அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமேனி உட்பட பருந்துகள் உறுதியான பதிலைக் கோருவர். ஆனால் இரான் ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை. வளைகுடாவின் அரபுப் பக்கத்தில் உள்ள அதன் அண்டை நாடுகளும் போரை விரும்பவில்லை. அங்குள்ள அரசாங்கங்கள் ஏற்கெனவே இரானிடம் கட்டுப்பாடு காக்க வேண்டும் எனக் கேட்டுள்ளன. வெற்றி பெறப்போவது, பருந்துகளா அல்லது புறாக்களா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி என பிபிசி செய்தியாளர் கூறுகிறார். ராணுவத்தைத் தயார் செய்யும் இஸ்ரேல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,டமாஸ்கஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. அதிகரித்து வரும் பதற்றங்களால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளன. இரானை விட்டு வெளியேறுமாறு ஜெர்மனி தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலில் உள்ள தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பீர்ஷெபா நகரங்களுக்கு வெளியே பயணம் செய்வதையும் அமெரிக்க வெளியுறவுத் துறை தடை செய்துள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தனது அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். சில இஸ்ரேலியர்கள் இரானிய தாக்குதலைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினர். "தெற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் நாங்கள் எதிரிகளால் சூழப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்" என்று ஜெருசலேமில் உள்ள சந்தையில் ஏ.எஃப்.சி. செய்தி முகமையிடம் டேனியல் கோஸ்மன் கூறினார். "நாங்கள் பயப்படவில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சுற்றிப் பாருங்கள்: மக்கள் வெளியே செல்கிறார்கள்" என்றார். தண்ணீர், மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கான தற்போதைய வழிகாட்டுதலைத் தவிர, இஸ்ரேலிய அரசாங்கம் அதன் மக்களுக்கு எந்தப் புதிய ஆலோசனையையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், பொது தங்குமிடங்களின் தயார்நிலையை மதிப்பிடுவது உட்பட, தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளுக்கு தயாராகுமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது. கடந்த வாரம், இஸ்ரேலிய ராணுவம் போர் துருப்புகளுக்கான விடுப்பை ரத்து செய்தது, வான் பாதுகாப்பைப் பலப்படுத்தியது மற்றும் ரிசர்வ் படைகளை அழைத்தது. மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு எச்சரிக்கை பட மூலாதாரம்,INDEMTEL/X படக்குறிப்பு,இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்தியாவின் அறிவிப்பு டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மூத்த இரானிய ராணுவத் தலைவர்களும் அடங்குவர். மேலும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள இரானின் உயர்மட்ட குட்ஸ் படையின் மூத்தத் தளபதியான பிரிக் ஜெனரல் முகமது ரேசா ஜாஹேடியும் அடங்குவார். இஸ்ரேல் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல்தான் தாக்குதலை நடத்தியதாக பரவலாகக் கருதப்படுகிறது. பரந்த பிராந்திய போரைத் தூண்டும் என்ற அச்சத்தால், பல நாடுகளில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலைத் தடுக்க முயன்று வருகின்றனர். சீனா, சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் பேசியுள்ளார். அமெரிக்க ஒருங்கிணைந்த படைத்தளபதியை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த அச்சுறுத்தலால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு வலுப்பெற்றுள்ளது என்றும், "எப்படி பதிலளிப்பது என்பதை நாங்கள் அறிவோம்" என்றும் கூறினார். காஸாவுக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சமூகங்களை ஹமாஸ் தாக்கியதில் காஸாவில் போர் மூண்டது. இதில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். மேலும், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். காஸாவில் 130 பணயக் கைதிகளில், குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 33,600க்கும் மேற்பட்டோரில் பொதுமக்களே பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் இஸ்ரேல் தனது வடக்கு எல்லையான ஹெஸ்பொல்லாவுடன் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதேநேரம், இராக் மற்றும் ஏமனில் உள்ள இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய பகுதிகளையும் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்க முயன்றன. ஏமனின் ஹூத்தி இயக்கம் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்தியது. இதில், குறைந்தது ஒரு கப்பலையாவது மூழ்கடித்தது. ஏமனில் உள்ள ஹூத்தி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டனை தூண்டியது. https://www.bbc.com/tamil/articles/cv26w3jz9jzo
-
தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்
புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 10 APR, 2024 | 05:09 PM புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது : புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்துக்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன. புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன். புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுகூருவதோடு அனைவருக்கும் புத்தாண்டு பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/180920