Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஹைதராபாத் - குஜராத் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த 2 ஓவர்கள் - சாய் சுதர்சன், விஜய் சங்கர் அசத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர். கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 31 மார்ச் 2024 குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பந்துவீச்சில் 20-வது ஓவரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் 16-வது ஓவரும்தான் போட்டியைத் தீர்மானித்தன. இந்த இரு ஓவர்கள்தான் இரு அணிகளுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த இரு ஓவர்களிலும் கோட்டைவிட்ட சன்ரைசர்ஸ் அணி, வெற்றி வாய்ப்பையும் தவறவிட்டது. மோகித் சர்மாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, டேவிட் மில்லர், சுதர்சனின் பொறுப்பான பேட்டிங் குஜராத் அணிக்கு வெற்றி தேடித் தந்தது. அகமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணி வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் டேவிட் மில்லர். வெற்றி பெற்றும் உயராத நிகர ரன்ரேட் இந்த வெற்றி மூலம் குஜராத் அணி அகமதாபாத் அரங்கில் 12 போட்டிகளில் 11வது வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் புள்ளிக்கணக்கில் 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என்ற ரீதியில் 4 புள்ளிகள் பெற்றது. 4வது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் இருந்தும் அதன் நிகர ரன்ரேட் இன்னும் மைனசில் தொடர்கிறது. அந்த அணிக்கு கிடைத்த இரு வெற்றிகளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி இல்லை என்பதால், நிகர ரன்ரேட் இன்னும் உயராமல் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது. இரு தோல்வி அடைந்தாலும் நிகர ரன்ரேட் 0.204 என்று குறையாமல் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணி வீரர் ரஷீத் கான். திருப்புமுனை ஓவர்கள் அகமதாபாத் மைதானத்தில் 162 ரன்கள் எனும் ஸ்கோர் என்பது சராசரிக்கும் குறைவானது. சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறவும், குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுக்கவும் கூடுதலாக இன்னும் 25 ரன்களாவது சேர்த்திருக்க வேண்டும். இதுபோன்ற குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியை சுருட்டுவது கடினம். கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 273 ரன்கள் எனும் இமாலய ஸ்கோரை அடித்துவிட்டு, இந்தப் போட்டியில் அதைவிட 100 ரன்களுக்கும் குறைவாக அடித்தது என்பது நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. சன்ரைசர்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தது அதன் ஸ்கோர் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். அது மட்டுமல்லாமல் குஜராத் கேப்டன் குல், மிகவும் புத்திசாலித்தனமாக இளம் வீரர் தர்சன் நல்கண்டேவையும், மோகித் சர்மாவையும் டெத் ஓவரில் பந்துவீசச் செய்து சன்ரைசர்ஸ் பேட்டர்களை கரங்களைக் கட்டிப்போட்டார். அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் வெற்றிக்கான கடும் நெருக்கடியில்தான் பேட் செய்தது. கடைசி 30 பந்துகளில் குஜராத் அணி வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. மார்கண்டே வீசிய 16-வது ஓவரில் மில்லர் அடித்த 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, சுதர்சன் அடித்த ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் சேர்த்தது தான் ஆட்டத்தை திருப்பிவிட்டது. அதேபோல, சன்ரைசர்ஸ் அணி தனது 20-வது ஓவரில் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததும் அந்த அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாமல் போனது. இந்த இரு ஓவர்களும்தான் இரு அணிகளுக்கும் திருப்புமுனையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணி வீரர் மோகித் சர்மா. ஆட்டநாயகன் மோகித் சர்மா சன்ரைசர்ஸ் அணி 20-வது ஓவரில் மட்டும் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெரிய சரிவுக்கு ஆளானது. சன்ரைசர்ஸ் அணிக்கு பதற்றமான சூழலை உருவாக்கி, பந்துவீச்சில் பட்டையக் கிளப்பிய மோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோகித் சர்மா தனது பந்துவீச்சில் ஒரு பவுண்டரிகூட பேட்டரை அடிக்கவிடவில்லை, மாறாக ஒரு சிக்ஸர் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணி வீரர் டேவிட் மில்லர். மில்லரிடம் ‘கில்லர் பவர்’ எங்கே? குஜராத் டைட்டன்ஸ் பேட்டர் டேவிட் மில்லரின் பேட்டிங் நிலைத்தன்மை இந்த ஆண்டில் மோசமாகச் சரிந்துள்ளது. இந்த ஆண்டில் 15 இன்னிங்ஸில் ஆடிய மில்லர் 3 முறை மட்டுமே 30 ரன்களைக் கடந்துள்ளார். இவரின் சராசரி டி20 போட்டியில் 29 ரன்களாக இந்த ஆண்டு இருக்கிறது. அதிலும் ஸ்ட்ரைக் ரேட் 119 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளில் மில்லரின் ஸ்ட்ரைக்ரேட் இதுபோன்று குறைவது இதுதான் முதல்முறை. 2023ல் 135.20 ஆக இருந்த ஸ்ட்ரைக் ரேட், 2022ல் 147.20 ஆக மில்லர் வைத்திருந்தார். இன்றைய ஆட்டத்திலும் தொடக்கத்தில் 15 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே மில்லர் சேர்த்தார். ஆனால் இறுதியில் சிறிய கேமியோ ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை 167 ஆக உயர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் வீரர் மயங்க் மார்க்கண்டே மற்றும் கேப்டன் கம்மின்ஸ். 15 ரன்கள் குறைவாகச் சேர்த்தோம் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நாங்கள் இன்னும் கூடுதலாக 15 ரன்கள் வரை சேர்த்திருக்கவேண்டும். குஜராத் வீரர்கள் நன்றாகப் பந்துவீசினர். கடைசி நேரத்தில் இரு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம், ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்கவில்லை. விக்கெட் மிகவும் ஸ்லோவாக இருந்தால் தான் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், இரு இன்னிங்ஸ்களிலும் விக்கெட் ஒரு மாதிரியாக இல்லை” எனத் தெரிவித்தார் சுயநலத்துடன் ஆடுகிறாரா கம்மின்ஸ் உலகத் தரம்வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கணக்கெடுத்தால் அதில் டாப்-5 இடங்களில் கம்மின்ஸ் இடம் பெறுவார். சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கம்மின்ஸ் கடந்த 3 போட்டிகளிலும் பந்துவீச்சில் பெரிதாக திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. கம்மின்ஸ் போன்ற உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் பந்துவீசி, எதிரணியின் ரன்ரேட்டைக் குறைக்க வேண்டும். ஆனால், சுயநலத்துடன் தனிப்பட்ட சராசரியைத் தக்கவைக்கும் நோக்கில் மிகவும் பாதுகாப்பாக நடுப்பகுதி ஓவர்களில் கம்மின்ஸ் பந்துவீசி தன்னைக் காத்துக் கொள்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். புவனேஷ்வர் குமார் இருக்கிறாரா? சன்ரைசர்ஸ் அணியில் அனுபவம் மிகுந்த பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் இதுவரை இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி இன்னும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. 8 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் 104 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த போட்டியில்தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக 27 ரன்களை புவனேஷ் வழங்கியுள்ளார். கொல்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமார் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசினாலும் டெத்ஓவர்களில் கூடுதலாக ரன்களை விட்டுக்கொடுத்தார். இன்றைய ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசிய புவனேஷ்வர் குமார் பவர்ப்ளே உள்பட 27 ரன்கள் கொடுத்து 3 பவுண்டரிகள் மட்டுமே கொடுத்தார், இதில் 9 டாட் பந்துகள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் நூர் அகமது. அசத்திய ஆப்கன் பந்துவீச்சாளர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தபோதும் சரி, தற்போது கில் கேப்டனாக இருக்கும்போதும் சரி, அவர்களுக்கு பெரிய பலமாக இருப்பது ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தான். குறிப்பாக எதிரணிகளை மிரளவிடும் லெக் ஸ்பின்னர் ரஷித் கான், மற்றொருவர் சினாமேன் எனப்படும் மணிக்கட்டு பந்துவீச்சாளர் நூர் அகமது. இருவரும் இணைந்தவிட்டாலே, எதிரணியின் ஸ்கோர், ரன்ரேட் “மல்லாக்கப் படுத்துவிடும்”. அதுபோலத்தான் இன்றைய ஆட்டத்திலும் நூர் அகமது, ரஷித் கான் இருவரும் இரு மிகப்பெரிய, திருப்புமுனை தரும் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி அளித்தனர். கடந்த போட்டியில் சரவெடியாக வெடித்த டிராவிஸ் ஹெட்டை 19 ரன்னில் கிளீன் போல்டாக்கினார் நூர் அகமது. நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆமதாபாத் மைதானத்தில் விக்கெட் நன்கு காய்ந்திருந்ததால், சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இந்த ஆடுகளத்தில் நூர் அகமது வீசிய கூக்ளி பந்துவீச்சு அருமையாக கைகொடுத்து விக்கெட் வீழ்ச்சிக்கும், ரன்ரேட் கட்டுப்படுத்தவும் உதவியது. அதேபோல ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து மிக ஆபத்தான பேட்டர் கிளாசனை கிளீன் போல்டாக்கி 24 ரன்னில் பெவிலியன் அனுப்பினார். இந்த இரு விக்கெட்டுகளையும் இரு ஆப்கன் சுழற்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி குஜராத் அணிக்கு பெரிய உதவியாக இருந்தனர். மோகித் சர்மா, நூர் அகமது, ரஷித் கான் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும்தான் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை உயரவிடாமல் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்து பயணித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியின் வீரர் அபிஷேக் சர்மா. 20 ரன்கள் சராசரியைத் தாண்டாத சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்களின் பேட்டிங் இன்றைய ஆட்டத்தில் சராசரிக்கும் குறைவாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் 8-வது விக்கெட் வரை ரன்கள் சராசரி என்பது 20 மட்டும்தான். அதிகபட்சமாக அபிஷேக் சர்மா(29), அப்துல் சமது(29) ரன்கள் சேர்த்தனர். மற்ற முக்கிய பேட்டர்களான கிளாசன்(24), மார்க்ரம்(17), அகர்வால்(16), ஹெட்(19) என 20 ரன்கள் சராசரியிலேயே விழுந்தனர். இதுதான் சன்ரைசர்ஸ் ஸ்கோர் சராசரிக்கும் கீழாக குறைந்ததற்கு முக்கியக் காரணம். பவர்ப்ளே ஓவரையும், டெத் ஓவர்களையும் சன்ரைசர்ஸ் சரியாகப் பயன்படுத்தி கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கடியாக சென்றிருக்கும். இதுவரை மயங்க் அகர்வால் 3 போட்டிகளில் களமிறங்கிவிட்டார், ஒரு போட்டியில்கூட 20 ரன்கள் சராசரியைக் கடக்கவில்லை என்பது வருந்தக்கூடியதாகும். தொடக்க ஆட்டக்காரர் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் ஸ்கோர் உயர்வை கடுமையாகப் பாதிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் அணி. நல்ல தொடக்கம் அளிக்கும் குஜராத் அணி குஜராத் அணியின் கேப்டன் கில், விருதிமான் சாஹா இருவருமே 3 போட்டிகளாக இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால், அணிக்குத் தேவையான நல்ல தொடக்கத்தை பவர்ப்ளை ஓவரில் அளித்து அடித்தளம் அமைத்துச் சென்றுள்ளனர். இந்த ஆட்டத்திலும் விருதிமான் சஹா(25), கில் (36) ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் அளித்தனர். ஆனால் கடந்த தொடரோடு ஒப்பிடும்போது சுப்மான் கில்லின் பேட்டிங் திறமை மங்கியுள்ளது. கேப்டன் பொறுப்பு ஏற்றபின் கில்லின் அதிரடி ஆட்டம், களத்தில் நின்று விளையாடும் நிலைத்தன்மை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 3 போட்டிகளிலுமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இந்த ஆட்டத்திலும் சுதர்சன் 45 ரன்கள் சேர்த்து நடுப்பகுதி ஓவர்களில் மில்லருடன் சேர்ந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மார்கண்டே ஓவரில் தொடக்கத்தில் சுதர்சன் திணறினாலும், 12வது ஓவரில் பவுண்டரியையும், உனத்கத் ஓவரில் பவுண்டரியையும் விளாசி ரன் சேர்க்கும் கியரை மாற்றினார். மற்ற வகையில் இரு அணிகளிலும் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்காமல் ஆட்டம் முடிந்துள்ளது. மற்றொரு தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர் கடைசி வரை களத்தில் நின்று குஜராத் அணிக்கு எளிதான வெற்றியை உறுதி செய்தார். https://www.bbc.com/tamil/articles/crg9rz294w1o
  2. உங்கள் தகவல்களுக்கு நன்றி அண்ணா. காணொளி சோலார் சம்பந்தமான அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளது. இங்கு மேலதிகமாக சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சாரசபை வாங்குகிறது. தற்போது வாங்கும் மின்சாரத்திற்கு அலகிற்கு 37ரூபா நிலையான கட்டணமாக வழங்குகிறது, மாறுகின்ற கட்டணமாக 57ரூபாவை வழங்குகிறது. எனது கேள்வி நிலையானதற்கா மாறுகின்ற கட்டணத்திற்கா ஒப்பந்தம் செய்வது நீண்டகால நன்மை தரும்?
  3. முழு விபரமும் தம்பியிடம் கேட்டு எழுதுகிறேன் அண்ணை.
  4. பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பம் அமெரிக்காவின் மெரிலேண்ட் மாநிலத்தின் போல்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ என்ற பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கைக்கு வரவிருந்த குறித்த கொள்கலன் கப்பல் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர் நீளமான பாலமொன்றே இதன்போது உடைந்து வீழ்ந்துள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் 27 நாட்கள் கடல் பயணமாக இலங்கைக்கு வரவிருந்த கப்பலொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு முன்னர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக திசை மாற்று கருவி இயங்கவில்லை எனவும் 5 சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 289 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பல் போல்டிமோர் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் அதன் முழு மின்சாரத்தையும் இழந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த கப்பலில் உள்ள சில கொள்கலன்கள் அகற்றப்பட்டுள்ளன. எனினும் கப்பலை அகற்றுவதற்காக இரண்டு இயந்திரங்களின் உதவி அவசியமாக உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். https://thinakkural.lk/article/297627
  5. ஒரு கடையின் வருமானம் ரூ.166,000 ஆக இருந்தால் வரி கட்டாயம் VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான பதிவுக்கான வருடாந்த வருமான வரம்பு 80 மில்லியன் ரூபா 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து அறுபத்தாறாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் நாட்டிலுள்ள பெருமளவிலான வர்த்தகர்கள் வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 12,000 முதல் 13,000 வரையிலான VAT கோப்புகள் இருப்பதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50,000ஐத் தாண்டும் என்றும் அரசின் வரித் துறைகள் ஊகித்துள்ளன. இவ்வாறாக, 60 மில்லியன் ரூபா வருடாந்த வருமானம் ஈட்டும் அனைத்து நபர்களும் வரி செலுத்துவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297708
  6. இலங்கை - இந்தியா இடையே தரைவழிப் பாலம் நிர்மாணிப்பதற்கான பிரதிநிதிகள் குழுவை நியமிக்க அரசு இணக்கம் 31 MAR, 2024 | 06:06 PM நமது நிருபர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியமைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் புதுடில்லியில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்கண்டவாறு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கும் இடையில் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப்பாலம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சுமார் ஒரு தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுக்களை நடத்தியபோது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு பற்றிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலமானது 23 கிலோ மீற்றர் நீளத்தினை கொண்டுள்ளதாகும். இதில் வீதி மற்றும் ரயில் பாதை என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180085
  7. பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோவுக்கு முலாவது வெற்றி 31 MAR, 2024 | 07:38 AM (நெவில் அன்தனி) லக்னோவ், எக்கானா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (30) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 21 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸை வெற்றிகொண்டது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் தனது 2 போட்டிகளில் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். குவின்டன் டி கொக், அணித் தலைவர் நிக்கலஸ் பூரண், க்ருணல் பாண்டியா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் மயான்க் யாதவ், மொஹ்சின் கான் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக் 54 ஓட்டங்களையும் பதில் அணித் தலைவர் நிக்கலஸ் பூரண் 42 ஓட்டங்களையும் க்ருணல் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றனர். வழமையான அணித் தலைவர் கே.எல். ராகுல் இந்தப் போட்டியில் துடுப்பாட்ட இம்ப்பெக்கட் வீரராக விளையாடினார். பந்துவீச்சில் சாம் கரண் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. அணித் தலைவர் ஷிக்கர் தவான், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் 70 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் வெற்றிபெற்று விடும் என கருதப்பட்டது. ஆனால், ஜொனி பெயாஸ்டோவ் ஆட்டம் இழந்ததும் சீரான இடைவெளிகளில் விக்கெட்கள் சரிந்தன. ஜொனி பெயாஸ்டோவ் 42 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ப்ரப்சிம்ரன் சிங் (19), லியாம் லிவிங்ஸ்டோன் (28 ஆ.இ.) ஆகிய இருவரும் தவானுக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய போதிலும் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. தவான் 70 ஓட்டங்களுடன் 4ஆவதாக ஆட்டம் இழந்ததும் பஞ்சாபின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயிற்று. பந்துவீச்சில் மயான்க் யாதவ் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹ்சின் கான் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/180038
  8. இலங்கையின் மேலும் 3 வீரர்கள் அரைச் சதங்கள் குவித்து அசத்தல்; கடைசி 4 விக்கெட்களில் கமிந்து 120 ஓட்டங்கள் பகிர்வு Published By: VISHNU 31 MAR, 2024 | 08:34 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மேலும் 3 வீரர்கள் அரைச் சதங்களைப் பெற்றதன் பலனாக இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 531 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையில் இருக்கிறது. இந்த எண்ணிக்கையானது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் சதம் குவிக்கப்படமலே பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். நியூஸிலாந்துக்கு எதிராக 1976இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து பெற்ற 524 ஓட்டங்களே சதம் குவிக்கப்படாமல் பெறப்பட்ட அதிகூடிய முந்தைய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. நேற்று சனிக்கிழமை (30) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கமிந்து மெண்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கடைசி நால்வருடன் 120 விக்கெட்களைப் பகிர்ந்து துரதிர்ஷ்டவசமாக 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் தனது முதல் 4 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் முறையே 61 (எதிர் அவுஸ்திரேலியா 2022), 102 மற்றும் 164 (எதிர் பங்களாதேஷ் - 1ஆவது டெஸ்ட் 2024), 92 ஆ.இ. (எதிர் பங்களாதேஷ் - 2ஆவது டெஸ்ட் 2024) என்ற எண்ணிக்கைகளுடன் மொத்தமாக 419 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் ஜாவேட் மியண்டாடின் முதல் 4 இன்னிங்ஸ்களுக்கான மொத்த எண்ணிக்கைக்குரிய சாதனையை கமிந்து மெண்டிஸ் சமப்படுத்தியுள்ளார். போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை, மேலும் மூவரின் அரைச் சதங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 531 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ், இந்தப் போட்டியிலும் சதம் குவித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வீரர் அசித்த பெர்னாண்டோ ரன் அவுட் ஆனதால் அவரது சதம் குவிக்கும் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியானது. இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்தபோது தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். தினேஷ் சந்திமால் 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முதல் டெஸ்ட் நாயகர்களான தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் நிதனாத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், முதல் டெஸ்டில் போன்று அவர்களால் சாதிக்க முடியாமல் போனது. தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 411 ஓட்டங்களாக இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் கமிந்து மெண்டிஸ் 17 ஓட்டங்களுடன் மறுபக்கத்தில் இருந்தார். அதன் பின்னர் பொறுப்புணர்வுடனும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் கடைசி 4 விக்கெட்களில் 120 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தார். ப்ரபாத் ஜயசூரியவுடன் 7ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோருடன் கடைசி 3 விக்கெட்களில் மேலும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சுமார் 4 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 167 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷக்கிப் அல் ஹசன் 3 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் இலங்கை அணி 476 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 55 - 1 விக். (ஸக்கிர் கான் 29 ஆ.இ., மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, லஹிரு குமார 4 - 1 விக்.) https://www.virakesari.lk/article/180088
  9. இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பத்திரிகை செய்தி தொடர்பில் ஹர்ஷ விசனம் Published By: VISHNU 31 MAR, 2024 | 10:12 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரையொன்று அடிப்படையற்ற காரணிகளை சுட்டிக்காட்டி கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. குறித்த கட்டுரையில் இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விசனம் வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் பிரபல ஆங்கில பத்திரிகையொன்றின் அரசியல் கட்டுரையில், மைத்திரி இந்தியாவிலுள்ள பிரபல இராஜதந்திரயொருவர் தொடர்பிலேயே தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனமையே இதற்கான காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இதுவரை இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு என்னவானது? இதன் மூலம் யாருக்கு வெள்ளையடிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது? புதிதாக வெளிவரும் இந்த அரசியல் சூழ்ச்சி என்ன? உயிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறானதொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளமையை, இரு நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்விக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். இதுவரைக் காலமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 100 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்னும் சில மாதங்களில் உருவாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/180091
  10. எரிபொருள் விலையில் திருத்தம்! Published By: VISHNU 31 MAR, 2024 | 09:58 PM எரிபொருள் விலையில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின் படி எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 386 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 245 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180090
  11. 31 MAR, 2024 | 10:28 AM லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில் எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது. அமைதிப்படையினரை இலக்குவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநா தெரிவித்துள்ளது. லெபானின் உட்பகுதிகள் தாக்குதலிற்காக தெரிவுசெய்யப்படுகின்றன இதன் காரணமாக பெரும்மோதல் வெடிக்கலாம் என ஐநா பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180049
  12. 31 MAR, 2024 | 03:48 PM கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 15.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்ட பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி பாலப் புனரமைப்புற்கான பணிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பாரதிபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள இப் பாலமானது சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் காணப்படுவதனால் போக்குவரத்து தடைப்பட்டு பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், அரச சேவைகளுக்கு செல்லும் அதிகாரிகள் என பலரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/180072
  13. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஆராதனைகள் இடம்பெறும் சகல தேவாலயங்களுக்கும் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.அதன்படி 6,522 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 2,746 ஆயுதப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 1,873 கத்தோலிக்க தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297700
  14. INNINGS BREAK 13th Match (N), Visakhapatnam, March 31, 2024, Indian Premier League Delhi Capitals (20 ov) 191/5 Chennai Super Kings DC chose to bat. Current RR: 9.55 • Last 5 ov (RR): 57/1 (11.40) Win Probability:DC 71.20% • CSK 28.80%
  15. சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரால், சர்வதேச நீதி கோரி இன்று ( 30 ) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ”குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்காது. சர்வதேச நீதியினைக்கோரி நாம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். எமது ஆர்ப்பாட்டங்களை நீர்த்துப்போகச் செய்ய பல அமைப்புக்கள் முற்படுகின்றன. குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்க வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/297686
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வெய்கா ரோல் பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 31 மார்ச் 2024, 11:39 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் யூதேயா மாகாணத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து குறித்து, சுவிசேஷங்களில் (இயேசுவின் உபதேசங்கள்) உள்ள மத விவரிப்புகள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் சித்தரிக்கப்பட்ட விதங்களில் வேறுபாடுகள் இருப்பதாக ஆரம்பகால கிறிஸ்தவ அறிஞர்கள் கண்டறிந்தனர். மத விவரிப்புகளின்படி பிலாத்து நியாய, தர்மங்களில் அக்கறை கொண்டுள்ள நடுநிலையான மனிதர் என தெரிகிறது. இயேசுவிடம் எந்த குற்றத்தையும் காணாத பிலாத்து, அவரை தண்டிக்க விரும்பவில்லை. இயேசுவுக்கு தண்டனை அளிப்பது தொடர்பான பொறுப்பிலிருந்து அவர் நழுவுகிறார். தண்டனை குறித்து யூத மக்களையே தீர்மானிக்குமாறு கூறுகிறார். கிறிஸ்தவ மதத்தை சாராத வரலாற்றாசிரியர்களை பொருத்தவரை, பிலாத்து கொடூரமானவர், ரத்தவெறி பிடித்தவர், எதிரிகளை மன்னிக்காதவர். "சுவிசேஷங்களின் மத விவரிப்புகள் எப்படி பிலாத்துக்கு மிகவும் சாதகமாக உள்ளன என்பதே வியப்பூட்டுவதாக உள்ளது. அக்காலத்திலிருந்த சில ஆதாரங்கள் அவரை மிகவும் விமர்சிக்கின்றன" என்று, வரலாற்றாசிரியர் கெர்சோன் லேய்ட்டீ டீ மோரேஸ் பிபிசி பிரேசில் சேவையிடம் தெரிவித்தார். பிலாத்து குறித்து அக்கால கிறிஸ்தவர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பம், யூத-விரோதத்தை மறைமுகமாக குறிப்பிடுவதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, யூதர்கள் வாழ்ந்த நிலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஏகாதிபத்திய ரோமானிய பேரரசின் பிரதிநிதியாக ஆளுநர் இருந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் யூத பிரபுத்துவத்தை தங்களுக்குப் போட்டியாகக் கருதினர். அவர்கள் வளர்ந்து வரும் புதிய பிரிவை ஏற்கவில்லை. "மார்க், மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் நான்கு சுவிசேஷக் கதைகள், இயேசுவின் மரணத்தில் பிலாத்துக்கு நேரடியாகப் பங்கு இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் நாம் குழப்பமடைய வேண்டாம். இவர்கள் பிலாத்துவைப் பற்றி பேசும் நான்கு சுயாதீன எழுத்தாளர்கள் அல்ல," என்று வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான ஆண்ட்ரே லியோனார்டோ செவிடரேஸ் பிபிசி பிரேசில் சேவையிடம் தெரிவித்தார். நான்கு சுவிசேஷங்களில் மிகப் பழமையான உரையை எழுதிய மார்க், மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் பதிப்புகளுக்கு ஆதாரமாக இருந்தார். "அவர்கள் மார்கோஸின் கதையையே பின்தொடர்ந்தனர். தங்கள் உரைகளில் தகவல்களை சில இடங்களில் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்தனர்" என்று செவிடரேஸ் கூறுகிறார். "ஜானும் பிலாத்துவைப் பற்றி பேசுகிறார், ஆனால் சுயாதீனமாக இருக்கிறார். எனவே, இயேசுவின் மரணத்தில் பிலாத்துவிற்கு பங்கு இருக்கிறது என்று கூறுவதற்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத சார்பற்ற ஆசிரியர்களுக்கு, பிலாத்து இரத்தவெறி பிடித்தவர், எதிரிகளை மன்னிக்காதவர். மத தோற்றம் விவிலியக் கண்ணோட்டத்தின்படி, ஒருமித்த கருத்து உள்ளது: அதன்படி, இயேசுவிடம் எந்த குற்றத்தையும் காணாத மனிதராக பிலாத்து இருக்கிறார். "இதற்கு மாறாக, அவர் யூத தலைவர்களிடமும் யூத மக்களிடமும் இயேசுவின் உயிரை பறிக்க வேண்டியதில்லை என்று கூறுகிறார். அதிகபட்சம், சில கசையடிகள் வழங்கி பின் விடுவிக்கலாம் என்பதுதான் பிலாத்துவின் முடிவு என சுவிசேஷ கதைகள் கூறுகின்றன", என, செவிடரேஸ் கூறுகிறார். இவை யூத எதிர்ப்பைக் குறிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அடக்குமுறைகளில் ஈடுபடும் ரோமானியப் பேரரசின் பிரதிநிதி. தண்டிக்கப்படுபவர்கள் யூத மக்களும் மதத் தலைவர்களும் ஆவர். "சுவிசேஷங்கள் எழுதப்பட்ட நேரத்தில், 70 ஆம் ஆண்டில் டைட்டஸ் நகருக்குள் நுழைந்த போது ஏற்பட்ட தீயினால் ஜெருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. நகரத்தின் ஒரு பகுதி ரோமானிய படைகளால் அழிக்கப்பட்டது. நகரத்தின் சுவர் ஏற்கனவே இடிந்த நிலையில் இருந்தது." பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு, பிலாத்துவின் முன் இயேசு விசாரணை செய்யப்படுவதை சித்தரிக்கும் 1881 ஆம் ஆண்டு மிஹாலி முன்காசியின் ஓவியம் "ஜெருசலேமைச் சுற்றி நடந்த இந்த நிகழ்வுகள் அனைத்தும் யூதர்கள் இயேசுவைக் கொன்றதற்காக நிகழ்ந்த பழிவாங்கல் அல்லது தண்டனையாக இயேசுவின் சீடர்கள் கருதினர்," என்று அவர் கூறுகிறார். "மேலும், மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் பரவியிருந்த ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் உள்ள நகரங்களின் உள்ளூர் பகுதிகளில் இயேசுவின் சீடர்களுக்கும் ரோமானிய அதிகாரிகளுக்கும் இடையே ஒரு உரையாடல் ஏற்கனவே நடந்து கொண்டிருந்தது," என்று அவர் மேலும் கூறுகிறார். பேராசிரியர் டொமிங்கோஸ் ஜமக்னா, பிபிசி பிரேசிலிடம், "இயேசுவின் திருப்பாடுகள் பற்றிய கதைகளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும். அதற்கு பழங்கால நூல்களின் அறிவு தேவை" என கூறினார். "இதற்காக, ஆய்வாசிரியர்கள் வாய்வழி மரபுகளைச் சேகரித்துள்ளனர்," என்று அவர் மேலும் கூறுகிறார். வரலாற்றாசிரியர் செவிடரேஸ் இந்த நிகழ்வை "சிலுவையின் இறையியல்" என்று அழைக்கிறார் . இக்கதைகள் "வரலாற்றை விட இறையியலையே" அதிகம் சார்ந்துள்ளன. "ஒரு நல்ல மனிதரான இயேசு எப்படி சிலுவையில் கெட்ட மனிதர்களுக்கான மரணத்தை சந்தித்தார் என்பதையும், மூன்றாம் நாளில் அவர் எப்படி மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதையும் பற்றி அவை கூறுகின்றன," என்று அவர் சுருக்கமாகக் கூறுகிறார். "யூதம், கிறிஸ்தவம் ஆகிய இரண்டுமே வரலாற்று ரீதியிலான மதங்கள்," என்கிறார் பேராசிரியர் டொமிங்கோஸ் ஜமக்னா. 'பொந்தியு பிலாத்து' யார்? ஒரு வரலாற்றுத் தேடல் பிலாத்துவின் முழுமையான விவரங்களை அறிய, மதம் சாராத வரலாற்றாசிரியர்களின் பார்வையையும் பெற வேண்டும். வரலாற்றாசிரியர் ஃபிளேவியஸ் ஜோசபஸ் (37-100), அலெக்ஸாண்டிரியாவின் தத்துவஞானி பிலோ (கிமு 20 - கிபி 45) மற்றும் ரோமானிய செனட்டரும் வரலாற்றாசிரியருமான கயஸ் டாசிடஸ் (55-120) ஆகியோர் பிலாத்து குறித்து எழுதியுள்ளனர். பிலாத்து ஒரு வரலாற்று மனிதராக இருந்ததற்கு சாட்சியமளிக்கும் தொல்லியல் கண்டுபிடிப்புகளும் உள்ளன. " மூன்று கிறிஸ்தவரல்லாத ஆசிரியர்கள் பிலாத்து பற்றி பேசியுள்ளனர். அவர்கள் பிலாத்து என்ற நபர் இருந்ததாக கூறுகின்றனர். அவர் உருவாக்கப்பட்ட நபர் அல்ல, மாறாக கிறிஸ்தவ படைப்பு” என்று செவிடரேஸ் குறிப்பிடுகிறார். "தொல்லியல் பார்வையில், 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது. அதில், பிலாத்து யூதேயாவின் ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிலாத்து என்பவர் இருந்திருக்கிறார்." ஆனால் வரலாற்று மற்றும் மத ஆதாரங்களுக்கிடையேயான புதிரை ஒன்றாக இணைப்பது பிலாத்து உண்மையில் யார் என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குகிறது. பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு, 1890 இல் ரஷ்ய நிகோலாய் ஜி வரைந்த ஓவியத்தில் பிலாத்து இயேசுவை விசாரிக்கிறார். பிலாத்து அப்போதைய ரோமானிய மாகாணமான யூதேயாவின் ஐந்தாவது ஆளுநராக இருந்தார் என்றும், அவரது நிர்வாகம் 25 மற்றும் 37 ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது என்றும் அறியப்படுகிறது. ஏழ்மையான மற்றும் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்த யூதேயா மிகவும் விரும்பப்படும் மாகாணங்களுள் ஒன்றாக இல்லை. இது, பிலாத்து, ரோமானிய பேரரசில் அதிக கௌரவத்தை அனுபவிக்கவில்லை என்பதைக் குறிக்கிறது. பிலாத்து குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விதிக்க முடியும். அவரது அதிகாரங்களில் பிரதான பாதிரியாரை நியமிப்பதும் அடங்கும். இதனால் அவர் அதிகார மட்டத்திலும் அதிகாரம் மிக்க யூதர்களிடையேயும் நெருக்கமானார். அவருக்கு ராணுவ, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரமும் இருந்தது. வரி வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. "பிலாத்து பெரிய செனட்டர் குடும்பங்களில் இருந்து வரவில்லை, ரோமானிய ஆளும் வர்க்கத்திலிருந்து வரவில்லை. அவர் மாவீரர்களின் வரிசையில் இருந்து வந்தவர். எனவே, அவர் சரியான விகிதாச்சாரத்தைப் பேணி, உயர் பதவிகளை வகிக்கும் ஒருவராக இருப்பார்" என்று செவிடரேஸ் கூறுகிறார். "ஆனால், ரோமானியப் பேரரசுக்குள் எப்படி தொடர்புகளை, உறவுகளை பேணுவது என்பது அவருக்குத் தெரியும்." யூதேயா ஆளுநராவதற்கு முன்பு, அவர் அலெக்ஸாண்ட்ரியாவில் வழக்கறிஞராக இருந்தார். "தனது செயல்களில் முற்றிலும் முரண்பாடான, வன்முறை குணமுடைய, ரோமானியர் அல்லாத ஒருவரைக் கையாள்வதில் சிறிதளவு மரியாதை மற்றும் கூர்உணர்வு இல்லாத ஒரு தனிநபர் என்று, பிலாத்து குறித்து பணக்கார எகிப்து நகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஃபிலோ குற்றம்சாட்டுகிறார்" என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் கூறுகிறார். "பிலாத்து ஒரு திருடன் என்றும் மற்றவர்களின் பணம் மற்றும் சொத்து மீது கை வைப்பவர் என்று சொல்லும் அளவுக்கு ஃபிலோ எழுதியுள்ளார்." பட மூலாதாரம்,GETTY IMAGES "பிலாத்துவின் குணாதிசயத்தைப் பற்றி [வரலாற்று ஆதாரங்களில்] ஒரு பொதுவான அம்சம் தெளிவாக உள்ளது: அவர் வன்முறையாளர். மேலும், உயர் பதவிகளுக்கு செல்ல சந்தேகத்திற்கு இடமின்றி நிர்வாக மற்றும் ராணுவப் பாதைகளில் பயணித்தவர்," என்று அவர் மேலும் கூறுகிறார். "ஃபிலோ மற்றும் ஜோசஃபஸ் இருவரும் பிலாத்து குறித்து அறியும் வகையிலான கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அக்கடிதம் பிலாத்துவிற்கு சாதகமாக இல்லை. பிலாத்து ஒரு கடுமையான, பிடிவாதமான, வன்முறை, கொடூரமான, கொள்ளைக்காரனாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். சட்ட நடைமுறைகள் இல்லாமல் மக்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குபவர் என்றும் கருதுகிறேன்" என்கிறார் வரலாற்றாசிரியர் கெர்சோன் லேய்ட்டீ டீ மோரேஸ். உதாரணமாக, யூதர்கள் மீதான மரியாதைக்காக, யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு பிராந்தியத்தில் ரோமானிய வழக்கறிஞர்கள் பிராந்திய நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட போது, அவர்கள் பேரரசரின் உருவம் கொண்ட பதாகைகளை கொண்டு வரமாட்டார்கள். "யூதர்கள் அதை விரும்பவில்லை, ஏனென்றால் அது ஒரு வகையான உருவ வழிபாட்டைக் குறிக்கும்" என்று இறையியலாளர் விளக்குகிறார். "பிலாத்து, தான் ரகசியமாக பதவியேற்ற போது, அந்த பாரம்பரியத்தை உடைத்தார்," என்று அவர் மேலும் கூறுகிறார். அதை யூதர்கள் கண்டறிந்து தெரிவித்த போது, ஒரு மைதானத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு எதிராகத் திரும்பும்படி தனது வீரர்களுக்கு பிலாத்து உத்தரவிட்டார். "அப்போது, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நேர்ந்தன," என வரலாற்றாசிரியர் கெர்சோன் லேய்ட்டீ டீ மோரேஸ் கூறுகிறார். "அவர் ஜெருசலேம் கோவிலில் இருந்து பணத்தை ஆழ்குழாய் கட்டுவதற்காக திருப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை யூதர்கள் புனிதமாக கருதினர். ஊழல் நடந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் அவர் மத பிரச்னையில் தலையிட்டார். யூதர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் வீரர்கள் சில யூதர்களை கொன்றிருப்பார்கள்," என்று அவர் விவரிக்கிறார். "எதிர்ப்பு தெரிவித்தாலே மிகுந்த பலத்துடன் பிலாத்து எதிர்வினையாற்றியுள்ளார்," என்று அவர் மேலும் கூறுகிறார். 35 ஆம் ஆண்டில், கெரிசிம் மலையில் சமாரியன் ஊர்வலம் நடந்தது, மேலும் அந்த இயக்கத்தை வலுக்கட்டாயமாக ஒடுக்குமாறு உத்தரவிட்டார் பிலாத்து. அப்போது மீண்டும் பலர் இறந்தனர்" என்று மோரேஸ் தெரிவிக்கிறார். நியாயமான மனிதன் பிலாத்து ஒரு வரலாற்று நபராக இருந்திருப்பார் என்று ஒருமித்த கருத்து உள்ளது. இருப்பினும் அவரை விவிலிய பிலாத்துவுடன் ஒப்பிட்டு குழப்பமடையக் கூடாது என, பண்டைய கிறிஸ்துவம் குறித்த ஆராய்ச்சியாளர் தியாகோ மேர்கி பிபிசி செய்தி பிரேசிலுக்கு தெரிவித்தார். "சுவிசேஷங்களில் நீதியின் மீது அக்கறை கொண்ட மனிதராக பிலாத்து குறிப்பிடப்படுகிறார். மற்ற ஆதாரங்களில் அவர் கொடுமை மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக காட்டப்பட்டுள்ளார்," என்று அவர் குறிப்பிடுகிறார். "பைபிளில் பிலாத்து நீதி சார்ந்த ஒருவராக கூறப்பட்டுள்ள நிலையில், ஜோசஃபஸின் கதைகளைப் படிக்கும்போது அந்த பிம்பம் தலைகீழாகி விடுகிறது. அவருடைய கதைகளில் பிலாத்து மக்களை இரும்பு மற்றும் நெருப்பு கொண்டு ஒடுக்கும் நபராக உள்ளார்." கிறிஸ்தவத்தின் முதல் தசாப்தங்களில் பிலாத்துவின் வாழ்க்கையைப் பற்றி பல புராணக்கதைகள் வெளிவரத் தொடங்கின என்பதை நினைவில் கொள்ளுங்கள். "அக்கதைகளில் அவர் ஒரு துறவியாகவும் தியாகியாகவும் கூட கருதப்படுகிறார். அவர் காப்டிக் தேவாலயத்தில் தியாகியாகவும், எத்தியோப்பியன் திருச்சபையால் துறவியாகவும் நினைவுகூரப்படுகிறார். இது விநோதமானது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்," என்று அவர் கூறினார். பொதுவாக, இந்த கதைகள், இயேசுவின் சார்பாக தலையிடாததற்காக பிலாத்து மனந்திரும்புதல் குறித்து பேசுகின்றன. இறுதியாக பிலாத்து கிறிஸ்தவத்திற்கு மாறியிருப்பார் என்றும் அவை தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு, 1850 ஆம் ஆண்டு சுவிஸ்-இத்தாலியான அன்டோனியோ சிசெரி வரைந்த இந்த ஓவியம், யூதக் கூட்டத்திற்கு முன் இயேசுவை நிறுத்துகிறார் பிலாத்து. இறையியலாளர் மோரேஸின் கூற்றுப்படி, பைபிள் விவரிப்புகளில் பிலாத்துவின் இருப்பு இரண்டு குறியீட்டு நோக்கங்களுக்கு உதவுகிறது. முதலாவது, இயேசு பிறந்த தேசத்தில் ரோமானிய அரசின் வலுவான இருப்பை நிரூபிப்பது. "ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவை அந்த அதிகாரத்தால் மட்டுமே எடுக்க முடியும்," என்று அவர் கூறுகிறார். இரண்டாவது, இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு வரலாற்றுப் பிடிப்பை ஏற்படுத்துவது. "இது ஒரு வரலாற்றுத் தன்மையைக் கொடுக்கிறது. [சுவிசேஷங்களில்] ஒரு ரோமானிய அதிகாரத்தின் இருப்பு, அந்தப் பிராந்தியத்தில், அந்தப் பிரதேசத்தில் ரோமானியப் பேரரசின் ஆதிக்கத்தை மட்டுமல்ல, அனைத்தின் வரலாற்றுத் தன்மையையும் உறுதிப்படுத்துகிறது" என்கிறார் மோரேஸ். இயேசுவை சிலுவையில் அறையும் முடிவுக்கு வந்தது எப்படி? பிலாத்து மோசமாக காட்டப்பட்டுள்ள ஒரேயொரு விவிலியப் பகுதி உள்ளது. அது லூக்காவின் உரையில் உள்ளது. "பொதுவாக, சுவிசேஷங்கள் பிலாத்துவை ஒரு முக்கியமான மற்றும் நியாயமான நபராக சுட்டிக்காட்டுகின்றன," என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார். மத்தேயுவின் கதையில், மரண தண்டனைக்காக இயேசு கொண்டு வரப்பட்டபோது, "அவர் என்ன தீங்கு செய்தார்?" என்று பிலாத்து கேட்கிறார். யோவான் நற்செய்தியில், "இந்த மனிதருக்கு எதிராக நீங்கள் என்ன குற்றச்சாட்டைக் கொண்டு வருகிறீர்கள்?" என கேட்டுள்ளார் பிலாத்து. "உண்மை என்ன?" என்று பிலாத்து அவரிடம் கேட்டார். பின்னர், யூதர்களிடம் சென்று, "அவரிடம் (இயேசு) நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை" என்று கூறினார்" என்றும் யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களும் இவ்வாறே கூறுகின்றன. அவை, இயேசுவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு யூதர்கள் மீது பழி சுமத்துகின்றன . பட மூலாதாரம்,GETTY IMAGES "யூதர்கள் பிலாத்துவை மிரட்டியிருப்பார்கள் என்பதை லூகாவின் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. `நீங்கள் சீசரின் நண்பராக இருந்தால், இந்த உலகில் யாரோ ஒருவர் ராஜ்ஜியத்தை நிறுவ விரும்புவதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என மிரட்டியிருப்பார்கள்" என்று மோரேஸ் கூறுகிறார். பிலாத்துவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரே பதிவு மத்தேயு நற்செய்தியிலிருந்து தெரியவருகிறது. அதன்படி, பிலாத்து திருமணம் ஆனவர். இயேசுவின் விஷயத்தில் அவருடைய மனைவி தலையிட முயற்சித்திருப்பார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அவர் மனைவி, பிலாத்துவிடம், `இந்த நீதிமான் (இயேசு) விஷயத்தில் ஈடுபடாதே! ஏனென்றால் இன்று நான் அவரால் ஒரு கனவில் மிகவும் கஷ்டப்பட்டேன்," என்று கூறியதாக அந்த நற்செய்தி கூறுகிறது. இயேசுவின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்ததன் மூலம் அந்த சூழ்நிலையில் ரோமானிய அதிகாரத்தின் பச்சாதாபத்தை விவிலிய விவரிப்புகள் இன்னும் நிரூபிக்கின்றன. "தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்கள் பொதுவான கல்லறையில் எறியப்பட வேண்டும் என்பதே வழக்கம். ஆனால், பிலாத்து இயேசுவின் உடலை ஒப்படைத்ததாகவும் அதை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் நான்கு சுவிசேஷகர்கள் தெரிவிக்கின்றனர்" என்று மோரேஸ் கூறுகிறார். "இயேசு கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டார்," என்று அவர் மேலும் கூறுகிறார். விசாரணையின்போது இயேசுவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து பேசப்பட்ட போது, இதனால் கிளர்ச்சி ஏற்படும் என்பதை உணர்ந்து, பிலாத்து தண்ணீரை எடுத்து, கூட்டத்தின் முன்னிலையில் கைகளை கழுவி, "எல்லாப் பொறுப்பும் உங்களுடையது!" என கூறியுள்ளார். சிலுவையின் இறையியல் பட மூலாதாரம்,GETTY IMAGES இயேசுவின் மரணத்தின் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும், "வரலாறு, தொல்லியல், மொழியியல் ஆகியவற்றால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அடிப்படையைக் கொண்டுள்ளன" என்று டொமிங்கோஸ் ஜமக்னா விளக்குகிறார். "ஆனால் இதன் நோக்கம் இறையியல் மற்றும் வாசகர்களின் நம்பிக்கையைத் தூண்டுவதாகும். எனவே, கிறிஸ்தவர்கள் இவற்றுக்கு அதிகப்படியான மதிப்பைக் கொடுக்கக் கூடாது," என்று அவர் தெரிவிக்கிறார். முதலாவதாக, "இயேசு ஒருபோதும் சோதிக்கப்படவில்லை" என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் தெரிவிக்கிறார். "யூதர்களின் பாஸ்கா தினத்தன்று (யூத விழா) அங்கு தோன்றிய எந்த கிளர்ச்சியாளரையும் கைது செய்ய தெருக்களுக்குச் செல்வதைப் பற்றி பிலாத்து கவலைப்படவில்லை. 'ஒரு கிளர்ச்சியாளர் தோன்றினால், அவரைப் பிடித்து சிலுவையில் அறையுங்கள்` என பிலாத்து கூறினார்," என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் விளக்குகிறார். "இறுதியில் இயேசுவைக் கொல்ல பிலாத்து உத்தரவிட்டார். ஆனால் இயேசுவை ஒருபோதும் விசாரணை செய்யவில்லை" என்று வரலாற்றாசிரியர் முடிக்கிறார். பண்டைய ரோம் குறித்து லட்சக்கணக்கான ஆவணங்கள் உள்ள போதிலும், சிலுவையில் அறையப்பட்டவரின் தீர்ப்பைப் பற்றி பேசும் எந்த உரையும் இன்றுவரை எஞ்சவில்லை என்று அவர் வாதிடுகிறார். வரலாற்று மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியின் படி, சிலுவையில் அறையப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உரிமை இல்லை. அவர்களின் உடல்கள் அழுகும் வரை சிலுவையிலேயே தொங்கவிடப்படும். அவர்களின் உடல்களை வேட்டையாடும் பறவைகள் உண்ணும். "ஸ்பார்டகஸின் கிளர்ச்சியின் போது [கி.பி. 70களில்] ஆறாயிரம் அடிமைகள் ரோமின் மையப்பகுதியில் அப்பியன் வழியில் சிலுவையில் அறையப்பட்டனர். அவர்களின் எலும்புகள் எங்கே? அவை ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் புதைக்கப்படவில்லை," என்கிறார் அவர். "ரோமானியர்களால் ஜெருசலேம் முற்றுகையின் கடைசி ஆண்டுகளில், 69 மற்றும் 70 இல், ஒரு நாளைக்கு 500 பேர் வரை சிலுவையில் அறையப்பட்டதை ஜோசபஸ் பேசுகிறார். அவர்களின் எலும்புகள் எங்கே? நாங்கள் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை, அவை ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை." https://www.bbc.com/tamil/articles/cerwl3k8r3go
  17. நாட்டின் சில மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை! மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என ‘ இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. மேல் , வடமேல் வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரியின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை அபாயங்கள் ஆரம்ப எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. மனித உடலில் வெப்ப சுட்டெண்ணின் தாக்கம் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297734
  18. 31 MAR, 2024 | 02:05 PM தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (31) காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அவரது சதுக்கத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கட்சியின் உப செயலாளர் குலநாயகம் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180063
  19. உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகும் தேர்தல் பத்திரங்களை அச்சடித்த அரசு - நடந்தது என்ன? பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2023 அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர வழக்கு விசாரணையைத் தொடங்கியது. அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய இந்த விசாரணை நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி வரை தொடர்ந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகும், புதிய தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கும் பணியை அரசு தொடர்ந்தது என்பது அதன்பிறகு வெளியான தகவல்களில் இருந்து தெளிவாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், 8,350 தேர்தல் பத்திரங்களின் கடைசி தொகுதி 2024ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு வாங்குபவர்களுக்கு கிடைக்கப் பெற்றதாகக் காட்டுகின்றன. இந்தத் தொகுதி இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சப்ளை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 அன்று அதை ரத்து செய்தது. கூடவே தேர்தல் பத்திரத் திட்டத்தை நடத்தும் பாரத ஸ்டேட் வங்கி, சுமார் 12 கோடி ரூபாயை (ஜிஎஸ்டி உட்பட) அரசிடம் கமிஷனாக கோரியதாகவும், அதில் 8.57 கோடியை அரசு செலுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் பத்திரங்களை அச்சடித்ததற்காக 1.93 கோடி ரூபாய் (ஜிஎஸ்டி உட்பட) அரசுக்கு பில் வந்துள்ளது. அதில் 1.90 ரூபாய் கோடி செலுத்தப்பட்டுள்ளது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கோடிக்கணக்கான ரூபாயை ரகசிய நன்கொடையாக வழங்கிய எந்தவொரு நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ எந்த சேவைக் கட்டணத்தையும் வசூலிக்காத திட்டம் இது. உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தை இயக்க பொதுக் கருவூலத்தில் இருந்து, அதாவது வரி செலுத்துவோரின் பணம் அல்லது எளிய வார்த்தைகளில் சொன்னால் பொதுப் பணத்தில் இருந்து சுமார் 13.98 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,ANI தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கமடோர் லோகேஷ் பத்ரா வெளிப்படைத்தன்மை தொடர்பான விஷயங்களில் பணியாற்றி வருகிறார். தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் பல ஆர்டிஐ விண்ணப்பங்களைச் செய்துள்ளார். 2024 மார்ச் 14ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி, ஆர்டிஐக்கு பதிலளிக்கும் விதமாக, எந்த ஆண்டில் எத்தனை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டன என்று கூறியது. இந்தத் தகவலின்படி, 2018ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 250 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்ச பத்திரங்கள் 1,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் மதிப்பிலானவை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் 60,000 பத்திரங்கள் அச்சிடப்பட்டன. அந்த ஆண்டு 1,000 மற்றும் 10,000க்கான ஒரு பத்திரம்கூட அச்சிடப்படவில்லை. அச்சிடப்பட்ட பத்திரங்களின் அதிகபட்ச மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். 2022ஆம் ஆண்டில் 10,000 பத்திரங்கள் அச்சிடப்பட்டன. இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புடையவை. வேறு எந்த மதிப்பின் பத்திரங்களும் அச்சிடப்படவில்லை. சுமார் 8,350 பத்திரங்களின் மிக சமீபத்திய தொகுதி 2024ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புடையவை. வேறு எந்த மதிப்பின் பத்திரங்களும் அச்சிடப்படவில்லை. 2020, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 8,350 பத்திரங்களின் கடைசி தொகுதி 2023 டிசம்பர் 27க்கு பிறகு அச்சிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை (DEA), இரண்டு ஆர்டிஐகளுக்கு அளித்த பதில்களில் இருந்து இது தெரிய வருகிறது. அன்றைய தேதி வரை மொத்தம் 6,74,250 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று 2023 டிசம்பர் 27 அன்று டிஇஏ அறிவித்தது. சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஆர்டிஐக்கு பதிலளித்த இந்தத் துறை, அதுநாள் வரை மொத்தம் 6 லட்சத்து 82 ஆயிரத்து 600 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக 2024 பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்துள்ளது. அதாவது 2023 டிசம்பர் 27 முதல் 2024 பிப்ரவரி 27 வரை 8,350 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதேநேரம் உச்சநீதிமன்றம் இந்த முழு விவகாரம் மீதான தனது தீர்ப்பை நவம்பர் 2ஆம் தேதியே நிறுத்தி வைத்துவிட்டது. 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரசுக்கு நம்பிக்கை இருந்தது' பட மூலாதாரம்,GETTY IMAGES "உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது அரசு அதிக நம்பிக்கை வைத்திருந்ததால், அது தொடர்ந்து பத்திரங்களை அச்சடித்தது என்பது இந்தத் தகவலின் மூலம் தெளிவாகிறது," என்கிறார் கமடோர் லோகேஷ் பத்ரா. கடைசி தொகுதியாக 8,350 பத்திரங்கள் அச்சடிப்பதற்கு முன்பே பாரத ஸ்டேட் வங்கியிடம் சுமார் 20,363 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையாகாமல் இருந்தன. இந்தப் பத்திரங்களில் 17,369 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் 1 கோடி ரூபாய் மதிப்பிலானவை என்று ஆர்டிஐ மூலம் இந்திய ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஏற்கெனவே பெரும் எண்ணிக்கையில் பத்திரங்கள் இருந்தன. இருந்த போதிலும் அரசு 8,350 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பத்திரங்களை அச்சிட்டது. 2024 தேர்தலுக்கு முன் பத்திரங்கள் அமோகமாக விற்பனையாகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததாகத் தெரிகிறது," என்று கமடோர் பத்ரா கூறினார். அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமை சட்டம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விஷயங்களில் பணியாற்றும் சமூக ஆர்வலர். "நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் வரை அரசு வழக்கம் போல் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது. உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை அரசமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்து அதற்கு தடை விதிக்கக்கூடும் என்ற விஷயத்தை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது," என்று அவர் கூறினார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த பின்னரும் அரசு அதிக பத்திரங்களை அச்சிட்டது. எனவே இந்தத் திட்டம் அரசமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்படும் என்று அரசு நினைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்று அஞ்சலி பரத்வாஜ் குறிப்பிட்டார். ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளன பல சுவாரஸ்யமான தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்டிஐயில் பெறப்பட்ட தகவல்களில் இருந்து மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன: விற்பனை செய்யப்பட்ட பத்திரங்களின் மொத்த மதிப்பு 16,518 கோடி ரூபாய். விற்கப்பட்ட பத்திரங்களில் சுமார் 95 சதவிகித பத்திரங்களின் மதிப்பு தலா ஒரு கோடி ரூபாய். முப்பது கட்டங்களாக விற்கப்பட்ட பத்திரங்களில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 219 பத்திரங்கள் மட்டுமே அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படவில்லை. இந்த 25 கோடி ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது. கடந்த 2018 முதல் 2024 வரை மொத்தம் 6,82,600 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 28,030 மட்டுமே. இது அச்சடிக்கப்பட்ட மொத்த பத்திரங்களில் 4.1 சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியளிக்கும் மற்றொரு விஷயம். மிக அதிக பத்திரங்கள் எங்கிருந்து விற்கப்பட்டன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை பிரதான கிளையில் இருந்து அதிகபட்சமாக 4009 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்டன. இரண்டாவது இடத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஹைதராபாத் முதன்மைக் கிளை உள்ளது. அங்கு 3554 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை விற்றுள்ளது. கொல்கத்தா முதன்மைக் கிளை 3333 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும், புது டெல்லி முதன்மைக் கிளை 2324 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும் விற்றுள்ளன. பாட்னா பிரதான கிளையில் இருந்து குறைந்தபட்சமாக 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்டது. பெரும்பாலான பத்திரங்கள் எங்கே பணமாக்கப்பட்டன? பாரத ஸ்டேட் வங்கியின் புது தில்லி பிரதான கிளையிலிருந்து 10,402 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிகபட்ச பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தின் பிரதான கிளையில் இருந்து 2,252 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களும், கொல்கத்தா மெயின் கிளையில் இருந்து 1,722 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களும் பணமாக்கப்பட்டுள்ளன. மிகவும் குறைந்த அளவாக 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் ஸ்ரீநகரின் பாதாமி பாக் கிளையிலிருந்து பணமாக்கப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/c3geyj231q0o
  20. 31 MAR, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/180061
  21. 53 நிமிடங்களுக்கு முன்னர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானதல்ல. பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பங்கு என்ன என்பதும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள், அணுகுண்டு தயாரிப்பது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல்கள், அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜப்பானில் ஏன் தாமதம்? ஜூலை 21, 2023 அன்று வெளியான ஓப்பன்ஹெய்மர் உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஆனால், இந்த படத்தின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஜப்பானில் இப்படத்தின் திரையிடல் குறித்து கடந்த ஆண்டு பேசியிருந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் , ஜப்பானியன் சூழலுக்கு ஏற்ப "கவனமான அணுகுமுறையை" எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். சினிமா ப்ளன்ட் பப்ளிக்கேஷனின் இயக்குனர் இதுகுறித்து பேசுகையில்,” உலகமே இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறது. எனவே ஜப்பானின் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளவர்களும் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்,”என்று கூறியுள்ளார் . 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தது ஜப்பான் வரலாற்றில் பெரும் சோகமான நிகழ்வாக அமைந்தது. இந்த படத்தை பார்த்த ஜப்பானிய பார்வையாளர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "அவர்கள் கூட்ட அறையில் அமர்ந்து ஹிரோஷிமாவைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர். அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது" என்று கூறினார். வேறு சிலரோ கதை சொல்லும் மேற்கத்திய பாணி தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார்." வெளியீடு என்ன ஆனது? ஓப்பன்ஹெய்மர் படத்தின் தயாரிப்பாளரான யுனிவர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விநியோகஸ்தரான பிட்டர்ஸ் எண்ட் ஆகியோர் டைம்ஸ் இதழிடம், ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவது குறித்து பல மாதங்கள் கருத்து ரீதியான விவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். “இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதை பார்வையாளர்களே பெரிய திரையில் தங்கள் கண்களால் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவுகளின் உண்மையான காட்சிகளை படத்தில் காட்டாதது குறித்து ஏற்கனவே நோலனை சர்வதேச பத்திரிகைகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த நோலன், "சில நேரங்களில் அதிகமான காட்சிகளை வைப்பதை விட, தேவையான சில காட்சிகளை வைப்பது போதுமானது என்று நம்புவதால், படத்தில் உள்ள காட்சிகளே இந்த நிகழ்வு சோகம் நிறைந்தது என்பதை தெளிவுபடுத்துவதாக கருதுகிறேன்" என்றார். ஆசிரியர் நவோகோ வேக் தி கன்வெர்ஷனல் போர்ட்டலில் எழுதிய கட்டுரையில், “கிறிஸ்டோபர் நோலன் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை அலட்சியப்படுத்தவில்லை. ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி(ஓப்பன்ஹைமர்) ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு கொண்டாட்ட உரையில் தனது நண்பர்களுடன் பேசும்போது குண்டுவெடிப்பை கற்பனை செய்வதைப் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார். “ஆனால், அந்த கற்பனை காட்சியில் ஓப்பன்ஹெய்மர் ஒரு இளம் வெள்ளைப் பெண்ணின் (நோலனின் மகள் ஃப்ளோரா நடித்திருந்த பாத்திரம்) முகத்தை மட்டுமே பார்க்கிறார். அவர்கள் யாரும் உண்மையில் தாக்கப்படவில்லை இல்லையா? அங்கு ஜப்பானியர்கள், கொரியர்கள் மற்றும் ஆசிய, அமெரிக்கர்கள் மீது தான் குண்டு வீசப்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, " மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்டபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார். படம் பார்த்த மக்கள் கூறியது என்ன? ஜப்பானில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து பார்வையாளர்கள் சிலர் கலவையான விமர்சனங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்து சிதறிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் இந்த படத்தை பார்த்த சிலரிடம் பிபிசியின் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல் பேசிக் கொண்டிருந்தார். அவர்களிடம் ஓப்பன்ஹெய்மர் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். " மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்ட போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார். அணுகுண்டு எதிர்ப்பு ஆர்வலரான மயூ செட்டோ, படத்தை பார்த்து விட்டு தான் அதிர்ந்து விட்டதாக தெரிவித்தார். “சில காட்சிகள் என்னை கோபமூட்டியது. அங்கு மீண்டும் மீண்டும் ஹிரோஷிமா குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்தவர்களின் உணர்வுகள் குறித்து அவர்கள் சிந்திக்கவே இல்லை,” என்று அவர் கூறினார். படக்குறிப்பு, ஜப்பானில் படம் பார்த்த பெண் மசாடோ டெய்னாமா என்ற இளைஞர், “இந்த திரைப்படம் ஓப்பன்ஹெய்மரை ஒரு சிறந்த மனிதராக காட்டினாலும், இந்த நிகழ்வு குறித்து அவர் மனதில் இருந்த குற்றவுணர்வை மறைக்க முடியவில்லை என்று காட்டியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். கனேய் குமே என்ற மாணவர் படத்தைப் பார்த்த பிறகு, இந்த சம்பவத்தை வெளி உலகம் எப்படிப் பார்க்கிறது என்று புரிந்துள்ளதாக கூறினார். “இந்த படத்தில் அணுகுண்டுகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் வழியாக அமெரிக்கர்களும், உலக மக்களும் இந்த சம்பவத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது எனக்கு புரிந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c6p41e6g2ego
  22. முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது! Published By: DIGITAL DESK 7 31 MAR, 2024 | 02:09 PM முல்லைத்தீவு, முள்ளியவளையில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் அவரது வீட்டில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு சட்டவிரோத மதுபானம் 85 லீற்றர் மற்றும் 9 கோடா பீப்பாய்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அரச அனுமதியுடன் பசளை தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக குழாய் நீர் விநியோகம் முறை மூலம் நீர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் குழாய் அமைப்புக்கு நடுவில் உபகரணங்களை புதைத்து வைத்து மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். பொலிஸார் நீர் குழாயின் பாகங்களை அகற்றி அவதானித்தபோதே சந்தேக நபர் சூட்சுமான முறையில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/180057
  23. உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய சிறிசேன - முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா என அரசாங்கம் விசாரணை Published By: RAJEEBAN 31 MAR, 2024 | 02:05 PM சண்டே டைம்ஸ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சண்டேடைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலங்களில் வெளியான விடயங்களை தலைகீழாக மாற்றும் விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றை மாற்றியமைக்கும் விதத்தில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு சில நாட்கள் இருக்கையில் அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டார். கண்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டவேளை தனக்கு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விடயங்கள் தெரியவந்துள்ளதை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார். கண்டியில் தனது நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தான் அறிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்கள் யார் என்பதை அவ்வேளை அவர் தெரிவிக்கவில்லை. நான் நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே அதனை தெரிவிப்பேன் என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இந்த தகவலின் மிக முக்கிய தன்மை காரணமாக தனக்கு மேலதிக பாதுகாப்பையும் கோரவுள்ளதாக குறிப்பிட்டார். கொழும்பில் சிறிசேன ஊடகங்களிற்கு பேட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அவரின் இரண்டு உதவியாளர்கள் மேற்கொண்டிருந்தமை அவ்வேளையில் புலனாகியது. சிறிசேனவின் இந்த தகவலிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம். எனினும் இந்த தகவல் வெளியானதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அழுத்தங்களிற்குள்ளானார். குற்றச்செயல்கள் குறித்த விபரங்களை மறைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்யவேண்டும் என சில தரப்பினர் வாதிட்டனர். பொலிஸ்மா அதிபர் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை விசாரணை செய்யவேண்டும் என்ற உத்தரவை அமைச்சர் பிறப்பித்தார். மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவரின் வாக்குமூலம்பதிவு செய்யப்பட்டது. ஐந்து மணிநேரத்திற்கு மேல் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார் என சண்டே டைம்சிற்கு தெரியவந்துள்ளது. அவருக்கு எப்படி தெரியும்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரியொருவர் தனக்கு தெரிவித்தார். என்ன காரணங்களிற்காக அந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதையும் அவர் தெரிவித்தார் என சிஐடியினரிடம் தெரிவித்துள்ள சிறிசேன அந்த இராஜதந்திரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இந்தியா தனது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலிற்கான காரணம் என அந்த இராஜதந்திரி தெரிவித்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார். உதாரணத்திற்கு மத்தல விமானநிலையம் போன்ற திட்டங்கள். சிறிசேனவிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா? அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனதான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மையை உணரவில்லை போல தோன்றுகின்றது. எந்த இராஜதந்திரியும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று நாங்கள்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவிக்கப்போவதில்லை - சித்த சுவாதீனமற்றவர் மாத்திரமே அவ்வாறு செயற்படுவார். இந்தியாவின் ரோ அமைப்பிடமிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான எச்சரிக்கையை முதலில் அறிந்தவர் சிறிசேன. ஏன் அவர் தற்போது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார். சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள வாகன இறக்குமதியாளருக்கும் இந்த குற்றச்சாட்டுகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா என அரசாங்கத்தின் சில மட்டத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறிப்பிட்ட நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்டவர் மோசமான நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த நபர் தொடர்ந்தும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தினை சிஐடியினர் பதிவு செய்துகொண்டிருந்தவேளை இந்த நபர் மேற்குலக இராஜதந்திரியுடன் உணவகமொன்றில் காணப்பட்டார். சிறிசேன தனது வாக்குமூலத்தை பூர்த்தி செய்ய முன்னரே இந்த இராஜதந்திரி இந்தியாதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில்உள்ளதாக தனது தொடர்பில் உள்ளவர்களிற்கு தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து அரசாங்கத்தின் உயர்வட்டாரங்கள் ஆராய்ந்துள்ளன. இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதாலேயே அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன. சட்டமா அதிபரின் அறிவுரையின் கீழ் சிஐடியினர் நீதிமன்றத்தில் பி அறிக்கையை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்காம் திகதி நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானால் சிஐடியினர் முன்னிலையில் தெரிவித்த அனைத்து விடயங்களையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலையேற்படும். இதனை விட மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இதற்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகும். உள்நோக்கம் உள்ளதா இல்லையா தெரியவில்லை. இந்தியா குறித்து குற்றம் சாட்டுவது இந்த விடயம் குறித்து இதுவரை தெரிவிக்கப்பட்ட அறியப்பட்ட அனைத்தையும் முற்றாக மாற்றியுள்ளது. இலங்கை முஸலீம்களே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது நன்கு அறியப்பட்ட விடயம். ஏன் தாக்குதலிற்கு இந்தியா ஒரு சமூகத்தை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும். மேலும் இந்த விடயத்தில் ஐஎஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும் சிறிசேன தெரிவித்துள்ள விடயங்களை அர்த்தமற்றதாக்குகின்றது. சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசாங்கத்தின் தலைமை மீது கடும் தாக்கத்தினை செலுத்தக்கூடும் மைத்திரிபால சிறிசேனவை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. https://www.virakesari.lk/article/180066
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல், நாகம்மை நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (17). பள்ளி மாணவரான இவர் அண்மையில் 12ஆம் தேர்வு வகுப்பு எழுதி முடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 29), தனது வீட்டு மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. பாதி உடல் கருகிய நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார் சந்தோஷ். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகளின் மேலே அல்லது விவசாய நிலங்களுக்கு மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் குறித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. வீடு கட்ட நிலம் வாங்கும்போது, அதற்கு மேலே உயரழுத்த மின்கம்பிகள் சென்றால் அல்லது அருகே உயரழுத்த மின்கோபுரங்கள் இருந்தால் அந்த நிலத்தை வாங்க மக்கள் அச்சப்படுகிறார்கள். விவசாய நிலங்களிலும்கூட உயரழுத்த மின்கம்பிகள் சென்றால் குட்டைப் பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று செல்போனில் பேசியதால்தான் பள்ளி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததா? உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா? உயரழுத்த மின்கம்பிகளுக்கு கீழே நின்று செல்போன் பயன்படுத்தலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES “செல்போனில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. அதற்குக் கீழே நின்று செல்போன் பயன்படுத்தினால், எந்தக் குறுக்கீடும் ஏற்படாது” என்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சக்திவேல். தொடர்ந்து, “உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று பேசினால், ஒருவித இரைச்சல் ஏற்படலாம், செல்போன் சிக்னல் குறைவாகக் கிடைக்கும். மற்றபடி செல்போன் பேசுவதால் ஒருவர் மீது மின்சாரம் பாயாது. ஏனெனில் உயரழுத்த மின்சாரமாகட்டும் அல்லது வீட்டில் பயன்படுத்தும் மின்சாரமாகட்டும், கம்பிகள் அல்லது ஒரு மின்கடத்தி இல்லாமல் அதைக் கடத்த முடியாது அவர்,” என்கிறார். அதேவேளையில், இதில் கவனிக்க மற்றுமோர் அம்சமும் இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் சக்திவேல். காற்று என்பது ஒரு இன்சுலேட்டர் மின்கடத்தாப் பொருள்). ஆனால் "காற்றில் ஈரப்பதம் கூடும்போது, இந்த மின்கடத்தாத் தன்மை குறையும். அத்தகைய சூழலில் வீட்டின் மேலே உயரழுத்த மின்கம்பிகள் செல்லும்போது, நிலத்துக்கும் கம்பிகளுக்கு இடையே நிற்கும் நாம் ஒரு மின்கடத்தியாக மாறிவிடுவோம்." அவரது கூற்றின்படி, அப்போது நமது கையில் செல்போன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் உடலின் வழியாக மின்சாரம் பாயக்கூடும். எனவே அந்தச் சிறுவனுக்கு செல்போன் மூலமாக மின்சாரம் பாய்ந்திருக்காது. செல்போனின் மின்காந்த கதிர்வீச்சு, உயரழுத்த மின்சாரத்தின் பாதையில் குறுக்கிடும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. "அதுபோல மின்காந்த கதிர்வீச்சால் அல்லது செல்போன் கோபுரங்களால் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறுகிறார் பேராசிரியர் சக்திவேல். “உதாரணமாக ரயில் நிலையங்களில் அல்லது ரயிலின் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் உரசி, சிலருக்கு மின்சாரம் பாய்ந்ததாக செய்திகள் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் நிலத்திற்கும் கம்பிகளுக்கும் இடையே ஒரு மின்கடத்தியாக மனித உடல் மாறிவிடும், இதனால் மின்சாரம் பாய்ந்திருக்கும். இதேபோல சிறுவன் இருந்த பகுதியில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் சென்றிருக்கும். அதனால் உடலுடன் ஏதேனும் தொடர்பு ஏற்பட்டு இது நடந்திருக்கலாம்,” என்கிறார் பேராசிரியர் சக்திவேல். மழைக்காலங்களில் உயரழுத்த மின்கம்பிகளுக்கு கீழே நின்றால் என்ன ஆகும்? பட மூலாதாரம்,GETTY IMAGES தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக இந்த விபத்து நடந்திருக்கும் எனக் கேட்டபோது, “நான் முன்பு கூறியது போல, காற்றின் ஈரப்பதம் கூடும்போது, அதன் மின்கடத்தாத் தன்மை குறையும். மழைக்காலங்களில் இது அதிகமாக நடக்கும். அப்போது மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மின்கசிவுகள்கூட ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு சூழலில்கூட சிறுவனுக்கு மின்சாரம் பாய்ந்திருக்கலாம். எனவே மழைக் காலங்களில் அல்லது காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள நேரங்களில் உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நிற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்,” என பேராசிரியர் சக்திவேல் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களை வாங்கலாமா? உயரழுத்த மின்கோபுரங்கள் இருந்தால் அல்லது மின்கம்பிகள் நிலங்களின் மேலே சென்றால், அந்த நிலத்தை வாங்கி வீடு கட்டலாமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் ஒருவர், “மின்பாதைகளுக்குக் கீழே இருக்கும் தரிசு நிலங்களை இரண்டு காரணங்களுக்காக வாங்கலாம், ஒன்று வீடு கட்ட அல்லது விவசாயத்திற்கு," என்று தெரிவித்தார். மேலும், "விவசாயத்திற்கு என்றால் அரசே அதற்கான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த நிலங்களில் நெல், காய்கறிகள் போன்ற குட்டைப் பயிர்கள்தான் வளர்க்க வேண்டும். தென்னை போன்ற உயரமான மரங்கள் நடுவதற்குத் தடை உள்ளது. அடுத்ததாக தரிசு நிலங்களை வீடு கட்டும் நிலங்களாக மாற்றும் வழக்கம் அதிகரித்து வருகிறது. உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் சென்றால் அங்கே வீடு கட்டக்கூடாது என நிலத்தை விற்பவர்களுக்குத் தெரியும், ஆனால் குறைவான விலையில் அதை விற்று விடுகிறார்கள். இதனால் ஆபத்து என்பது அங்கு வீடு கட்டி வசிப்பவர்களுக்கே,” என்கிறார் அவர். “மின்சாரத்தில் இரண்டு வகை உண்டு, ஹை-டென்ஷன் லைன் (High tension line) மற்றும் லோ-டென்ஷன் லைன் (Low tension line). இதில் ஹை-டென்ஷன் லைனில் 50 கிலோவாட்களுக்கு குறைவாக மின்சாரம் பாய்ந்தால், வீட்டிற்கும் கம்பிகளுக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். 50 முதல் 200 கிலோவாட் என்றால் கண்டிப்பாக 15 அடி இடைவெளி இருக்க வேண்டும். இதில் 110 கிலோவாட் அல்லது அதற்கு மேல் என்றால் எக்ஸ்ட்ரா ஹை-டென்ஷன் லைன் எனச் சொல்வார்கள். இதன் மூலம் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும். அதில் பயன்படுத்தப்படும் கம்பிகளும் மிகவும் கனமாக இருக்கும். எனவே கண்டிப்பாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட இடைவெளி விட்டே வீடுகள் கட்டப்பட வேண்டும்,” என்று கூறினார் அந்த அதிகாரி. தொடர்ந்து பேசிய அவர், “சிலர் வீட்டைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டு, இந்த இடைவெளியை ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை. அது தவறு, அத்தகைய சூழ்நிலைகளில்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன. நாங்களும் பல இடங்களில் ஆய்வு செய்து, ஹை-டென்ஷன் லைன் செல்லும் பகுதிகளில் 15 அடிக்கும் குறைவான இடைவெளியில் வீடுகள் கட்டப்பட்டால் அதற்கு மின்னிணைப்பு கொடுப்பதில்லை அல்லது அந்தப் பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கிறோம்,” என்றார். உயரழுத்த மின்கம்பிகளால் ஏற்படும் ஆபத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES “மழைக் காலங்களில் அல்லது இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் கண்டிப்பாக சாதாரண மின்கம்பங்கள் அடியில்கூட நிற்கக்கூடாது. அதிலும் உயரழுத்த மின்கம்பிகள் அல்லது கோபுரங்கள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இப்போதைக்கு இன்சுலேட்டராக (Insulator) பாலிமரை (Polymer) பயன்படுத்தி வருகிறோம். இதனால் முடிந்த அளவு அசம்பாவிதங்களைத் தவிர்த்து வருகிறோம். ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடந்து விடுகிறது. எனவே மக்களும் நிலத்தை வாங்கும்போது, குறைவான விலையில் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு வாங்காமல் கவனமாக இருக்க வேண்டும்," ," என்று விளக்கினார் தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர். மேலும், உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் வீடுகளுக்கு இடையே இடைவெளி குறைவாக இருந்தால், சில நேரங்களில் அந்த மின்கம்பிகளில் அதிக மின்சாரம் பாயும்போது வீட்டிலுள்ள மின்சாதனங்கள் சேதமடையும். "பொருள் சேதம் மட்டுமில்லாமல் உயிர்ச் சேதமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இத்தகைய பகுதிகளில் வீடு கட்ட நிலம் வாங்கும்போது ஒரு மின்பொறியாளரிடம் ஆலோசனை கேட்பது நல்லது,” என்று கூறினார் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி. https://www.bbc.com/tamil/articles/c84d2rmn7djo
  25. 31 MAR, 2024 | 07:19 AM உலகளாவிய ரீதியில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இன்றையதினம் யேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்தை கொண்டாடுகின்றார்கள். அந்தவகையில், வீரகேசரி இணையத்தளமும் உயிர்த்த யேசுவின் வாழ்த்துக்களை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. https://www.virakesari.lk/article/180035

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.