Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 02 APR, 2024 | 01:17 AM அண்மையில் நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவைகள் பணிமனைகள், பெரிய வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கான சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது. அதன் விளைவாக இன்று நாடு முழுவதும் உள்ள சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான வெற்றிடங்களுக்கான நியமனம் சுகாதார அமைச்சு செயலாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், வடமாகாணத்தில் வைத்திய நிர்வாகிகளுக்கான வெற்றிடங்களுக்கு பின்வரும் புதிய வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 1.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்: வீ. பீ. எஸ். டீ. பத்திரண (Dr. V. P. S. D. Pathinrana) 2.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா: எஸ். சுபாஸ்கரன் (Dr. S. Subaskaran) 3.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு: எம். எஸ். உமாசங்கர் (Dr. M. S. Umashankar) 4.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மன்னார்: பீ. கே. விக்கிரமசிங்க (Dr. P. K. Wickramasinghe) 5.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி: டீ. வினோதன் (Dr. D. Venoden) 6.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா: ஜீ. சுகுணன் (Dr. G. Sukunan) 7.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு: கே. ஜீ. சீ. வை. எஸ். பீ. வீரக்கோன் (Dr. K. G. C. Y. S. B. Weerakoon) 8.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார்: எம். எச். எம். அஸாத் (Dr. M. H. M. Azaath) 9.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி: பீ. எஸ். என். விமலரட்ண (Dr. P. S. N. Wimalaratne) புதிய சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளின் நியமனம் சுகாதார சேவையின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருப்பதுடன் சுகாதார சேவையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதாகவும் இருக்கும். அவர்களின் சிறப்பான கடமைகளுக்கு எல்லோரும் தமது உயரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். https://www.virakesari.lk/article/180195
  2. ஹர்திக்கை மும்பை ரசிகர்களே கேலி செய்தபோது ரோகித் என்ன செய்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயானது எனக் கருதினால் அது விளையாட்டு விமர்சகரின் பார்வைதான். ஆனால், ரசிகர்கள் பார்வையில் இருந்து பார்த்தால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும், மும்பை ரசிகர்களுக்கும் இடையிலான போட்டியாகத்தான் பார்க்க முடியும். இதுவரை 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குஜராத் ரசிகர்கள் கிண்டல் செய்து, ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டு சென்றதுபோல் எதிர்ப்புக் கோஷத்தை எழுப்பினர். ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்திலும் பங்கேற்ற நடுநிலை ரசிகர்கள்கூட, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கக்கூடாது என்பதுபோல அங்கும் தங்களின் அதிருப்தி குரலையும், கிண்டலையும் வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பு தீவிரமாக எதிரொலித்தது. சஞ்சய் மஞ்சரேக்கர் டாஸ் போடும் நிகழ்வின்போது, இரு அணிகளின் கேப்டன்களையும் அறிமுகப்படுத்தினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று கூறியபோது, ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர், ஒருவர்கூட வரவேற்பு அளித்து கரகோஷம் எழுப்பவில்லை. பட மூலாதாரம்,SPORTZPICS அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா பேட் செய்ய களத்துக்குள் வந்தபோது “கணபதி பாப்பா மோரியா” என்ற கோஷம் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுந்து அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தது. சில தருணங்களில் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி சைகை செய்ததுடன், கையெடுத்துக் கும்பிட்டார் ரோகித். ஆனால், ரோகித் சர்மா பீல்டிங்கின் போது எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ரசிகர்கள் தங்கள் முழக்கத்தை எழுப்பினர். ரோகித் சர்மா டக்அவுட் ஆகிச் சென்றபோதுகூட அவரை உற்சாகப்படுத்தும் வகையில்தான் நடந்து கொண்டனர். முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்களை வென்ற பின்புதான், எதிரணியை வெல்ல முடியும் என்ற சூழல் எழுந்திருக்கிறது என்று கூறலாம். அல்லது எதிரணியை வென்றால்தான் ரசிகர்களை வெல்ல முடியும் என்றும் கூறலாம். ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த இரண்டும் இதுவரை நடக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நிர்வாகம் நியமித்திருக்கலாம். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை ரசிகர்கள் அவரை ஏற்கவில்லை என்பது கடந்த 3 போட்டிகளில் ரசிகர்கள் நடந்து கொண்டவிதத்தில் தெரிகிறது. ஐபிஎல் டி20 தொடரின் 16-வது ஆண்டு கால வரலாற்றில் ஒரு அணியின் கேப்டன் ரசிகர்களால் தொடர்ச்சியாக கேலி செய்யப்படுவது, ஏற்க மறுக்கப்பட்டு எதிர்ப்புக் குரலோடு வலம் வருவது இதுதான் முதல்முறையாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கு பல வெளிநாட்டு வீரர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் கூட ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்பது கிரிக்கெட்டை தீவிரமாக பின்தொடர்ந்து வருவோருக்கே புரியாத கேள்வியாக நீடிக்கிறது. அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஹர்திக் பாண்டியா குழு தனியாகவும், ரோகித் சர்மா குழு தனியாகவும் ஓய்வறையில் செயல்படுவதாக ஆங்கில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் மும்பை அணிக்கு சவாலாக உள்ளன. கடந்த கால சீசன்களில் மும்பை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு ப்ளே ஆஃப் வரை சென்றுள்ளது, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த முறையும் அதுபோல் நடக்குமா எனத் தெரியவில்லை. ராஜஸ்தானுக்கு எளிய வெற்றி மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 27 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரட்டையும் 1.249 ஆக உயர்த்திக்கொண்டது. பட மூலாதாரம்,SPORTZPICS ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள மும்பை அணி, இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்கவில்லை. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.423 ஆகக் குறைந்துள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டுவர மும்பை அணிக்கு அடுத்தடுத்து இரு மாபெரும் வெற்றிகள் தேவை. மும்பை அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய ஆறுதல் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால்தான். நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து வெற்றியைத் தள்ளிப்போட்டவர் மத்வால்தான். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவகையில் மும்பை அணியின் பாசிட்டிவ் என்று எந்த அம்சமும் இல்லை. ஆனால், அடுத்த போட்டிகளில் மபாகா, கோட்ஸி இருவரையும் மாற்றிவிட்டு துஷாரா, முகமதுநபியைக் கொண்டுவந்தால் ஓரளவுக்கு வெற்றியை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் மும்பை நிலைமை மோசமாகும். “தோல்வி என்னை பாதிக்கவில்லை” மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ நாங்கள் எதிர்பார்த்த வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை, இந்த இரவு எங்களுக்கு கடினமாக இருந்தது. 150 முதல் 160 ரன்கள் வரை அடிப்போம் என நினைத்தேன். ஆனால், நான் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தின் போக்கு மாறியது. இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக ஆடுகளம் ஒத்துழைத்தது, பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். முடிவுகள் நாம் எதிர்பார்த்ததுபோல் சில நேரங்களில்வரும், சில நேரங்களில் வராது. எனக்கு இதுபெரிதாக வியப்பளிக்கவில்லை. ஆனால் குழுவாக நாங்கள் வெற்றிக்காகப் போராடினோம். இன்னும் ஒழுக்கமான ஆட்டமும், துணிச்சலான ஆட்டமும் அவசியம் எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையை சிதைத்த மூவர் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து சிதைத்த பெருமை இடதுகை வேகப்பந்துவீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் வீரருமான டிரன்ட் போல்ட், யஜுவேந்திர சஹல், பர்கர் ஆகியோரையே சாரும். அதிலும் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, நமன் திர் இருவரின் விக்கெட்டுகளையும் சாய்த்து பேரதிர்ச்சி அளித்தார். தனது அடுத்த ஸ்பெல்லில் பிரிவிஸ் விக்கெட்டையும் வீழ்த்தி போல்ட் மும்பை அணியை முற்றிலுமாக சிதைத்தார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 14 டாட்பந்துகளுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும் ஒரு ரன்னுக்கு 2விக்கெட், 14 ரன்களுக்கு 3 விக்கெட், 20 ரன்களுக்கு 4 விக்கெட் என மும்பை அணி மோசமான சூழலைச் சந்தித்து. 3 விக்கெட்டுகளை போல்டும், இஷான் கிஷன் விக்கெட்டை ஆன்ட்ரே பர்கரும் எடுத்து மும்பை அணியை பெரிய பாதாளத்தில் தள்ளினர். மும்பை அணியின் ரோகித் சர்மா, நமன் திர், பிரிவிஸ் ஆகிய 3 பேட்டர்களுமே டக்அவுட்டில் வெளியேறினர். ஆறுதல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஜோடி ஓரளவுக்கு நிலைத்தது. அதிலும் ஹர்திக் பாண்டியா களத்துக்குள் வந்தபோதும், அவர் அடிக்கும் ஷாட்களின்போதும் ரசிகர்கள் கிண்டலடிப்பதும், எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புவதுமாக இருந்தனர். சொந்த மைதானத்தில் மும்பை அணி விளையாடும் சூழல் இல்லாமல் இருந்தது. ஹர்திக், திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தநிலையில் இருவரையும் சஹல் பிரித்தார். ஹர்திக் 34 ரன்கள் சேர்த்தநிலையில் சஹல் பந்தவீச்சில் பாவெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த பியூஷ் சாவ்லாவை 3 ரன்னில் ஆவேஷ் கான் பெவிலியனுக்கு அனுப்பினார். செட்டில்ஆகி பேட் செய்த திலக் வர்மாவை 32 ரன்னில் சஹல் வெளியேற்றி மும்பை அணியை நெருக்கடியில் தள்ளினார். 95 ரன்களுக்கு மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி வரிசையில் களமிறங்கிய டிம் டேவிட் 17 ரன்களில் பர்கரிடம் விக்கெட்டை இழந்தார். கோட்ஸி 4 ரன்னில் சஹலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆல்அவுட்டிலிருந்து தப்பித்த மும்பை இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை எந்த அணியும் ஆல்அவுட் ஆகவில்லை. மும்பை அணி ஆல்அவுட் ஆகிவிடுமோ என்று எண்ணப்பட்டது. ஆனால், பும்ரா 8, மத்வால் 4 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டர்களை போல்ட், பர்கர் பார்த்துக்கொண்டார்கள் என்றால், நடுவரிசையை சஹல் கவனித்துக்கொண்டார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் மும்பை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் சஹல் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அற்புதமாக பந்துவீசினார். இதில் 16 டாட்பந்துகள் அடங்கும், ஒருபவுண்டரி மட்டுமே சஹல் அடிக்கவிட்டிருந்தார். அதபோல பர்கரும் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள், 15 டாட்பந்துகளுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. மும்பை வான்ஹடே மைதானம் போன்ற சிறிய மைதானத்தில் 125 ரன்களை அடித்து வைத்துக்கொண்டு எதிரணியை டிபெண்ட் செய்வது கடினம். அதிலும் பெரிய பேட்டர்கள் இருக்கும் ராஜஸ்தானை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனாலும், தங்களால் முடியும் என்று முயற்சியில் மும்பை அணி இறங்கியது. மபாகா வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 10 ரன்னில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சீசனில் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 3 போட்டிகளாக எந்த பெரிய ஸ்கோருக்கும் செல்லவில்லை, ஃபார்மின்றி தவித்து வருகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன், பட்லருடன் சேர்ந்து ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தார். மத்வால் பந்துவீச்சில் சாம்ஸன் 12 ரன்னில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த சீசனிலிருந்து ஃபார்மின்றி தவித்துவரும் பட்லர் நிலைமை இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறது. மத்வால் வீசிய பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு வந்த அஸ்வின்-ரியான் பராக் ஜோடி ஓரளவுக்கு சரிவிலிருந்து அணியை மீட்டது. அஸ்வின் ஒத்துழைத்து பேட் செய்ய ரியான் பராக் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். 40 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியையும் மத்வால் பிரித்தார். அஸ்வின் 16 ரன்கள் சேர்த்தநிலையில் மத்வால் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ஷுபம் துபே, ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்தார். ஏற்கெனவே சூப்பர் ஃபார்மில் இருக்கும் ரியான் பராக், வெற்றியைத் தள்ளிப்போட விரும்பவில்லை. கடைசி 30 பந்துகளில் 15 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. கோட்ஸி வீசிய 16-வது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து ரியான் பராக் அரைசதத்துடன் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்களுடன்(3சிக்ஸர், 5பவுண்டரி), ஷுபம் துபே 8ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். https://www.bbc.com/tamil/articles/cz7zk7xldrro
  3. கச்சதீவு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பது ஏன்? ப.சிதம்பரம் 02 APR, 2024 | 09:12 AM கச்சத்தீவு விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இது தொடர்பாக பஇசிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் “பழிக்குப் பழி எல்லாம் பழங்கதை. ட்வீட்டுக்கு ட்வீட் தான் புதிய ரக ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.அந்தத் தேதியில் அவர் தான் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். அந்த ஆர்டிஐ பதிலில் இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கியதற்கான சூழலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஏன் வெளியுறவு அமைச்சகமும் அமைச்சரும் அந்தர் பல்டி அடிக்கின்றனர் எனத் தெரியவில்லை. எப்படி மனிதர்களால் இவ்வளவு வேகமாக நிறம் மாறிக்கொள்ள முடிகிறது? ஒரு சாதுவான தாராள சிந்தனை கொண்டவராக இருந்தவர் ஒரு புத்திசாலித்தனமான வெளியுறவு அமைச்சராக ஆர்எஸ்எஸ் - பாஜகவின் ஆதரவாளராக மாறியிருக்கிறார். ஜெய்சங்கரின் காலமும் வாழ்க்கையும் வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு ட்வீட்டில் “கடந்த 50 ஆண்டுகளாக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையே. அதேபோல் இந்தியாவும் நிறைய இலங்கை மீனவர்களை சிறைப்பிடித்துள்ளது. இங்கிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தை பேசி அவ்வப்போது நமது மீனவர்களை மீட்டும் உள்ளது. இது ஜெய்சங்கர் வெளியுறவு அதிகாரியாக இருந்தபோதும் நடந்துள்ளது. அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் நடந்துள்ளது. ஆனால் இப்போது மட்டும் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக ஜெய்சங்கர் பேச என்ன மாறிவிட்டது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் அது பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் நடந்துள்ளது. 2014-ல் மோடி பிரதமரான பின்னர் இலங்கையால் மீனவர்கள் கைது செய்யப்படவே இல்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலால் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் ‘இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது’ என்று கூறி விமர்சித்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் “கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரம் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும் பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை” எனக் கூறியிருந்தார். நேருஇ இந்திரா காந்தியை தன் உரையில் அவர் சாடியிருந்தார். இந்நிலையில்தான் ப.சிதம்பரம் இந்த ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/180201
  4. இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்துக்கு மத்தியில் பலமான நிலையில் இலங்கை Published By: VISHNU 01 APR, 2024 | 07:32 PM (நெவில் அன்தனி) சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பங்களாதேஷுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 455 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. முதலாவது இன்னிங்கில் 6 துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் 531 ஓட்டங்களைக் குவித்த இலங்கை, பங்களாதேஷை அதன் முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. பங்களாதேஷை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக 190 ஓட்டங்களுக்குள் இலங்கை கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 188 ஓட்டங்களையும் 182 ஓட்டங்களையும் பெற்றது. அசித்த பெர்னாண்டோ, லிஹரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, ப்ரபாத் ஜயசூரிய ஆகியோர் திறமையாக பந்துவீசி பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 353 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. பங்களாதேஷின் அறிமுக வீரர் ஹசன் மஹ்முத், தனது 14ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் காலித் அஹ்மத் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி 6 விக்கெட்களைப் பகிர இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன (4), குசல் மெண்டிஸ் (2) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. இந் நிலையில் நிஷான் மதுஷ்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைத் தற்காலிகமாக தடுத்தனர். எனினும் நிஷான் மதுஷ்க (34) உட்பட வீரர்கள் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தங்களது விக்கெட்களைத் தாரைவார்த்தனர். தினேஷ் சந்திமால் (9), தனஞ்சய டி சில்வா (1), கமிந்து மெண்டிஸ் (9) ஆகியோர் கவனக்குறைவால் ஆட்டம் இழந்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களுடனும் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காலித் அஹ்மத் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (01) காலை தனது முதலாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஒரு கட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷ், எஞ்சிய 9 விக்கெட்களை 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஸக்கிர் ஹசன் (54), மொமினுள் ஹக் (33), தய்ஜுல் இஸ்லாம் (22) மஹ்முதுல் ஹசன் ஜோய் (21) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு குமார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் பங்களாதேஷ் அணி அதிசயம் நிகழ்த்தினாலன்றி இலங்கையின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் தடுக்க முடியாமல் போகும். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கிப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 102 - 6 விக். (ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஆ.இ., நிஷான் மதுஷ்க 34, ஹசன் மஹ்முத் 51 - 4 விக்., காலித் அஹ்மத் 29 - 2 விக்.) https://www.virakesari.lk/article/180187
  5. 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டி : கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை Published By: DIGITAL DESK 7 01 APR, 2024 | 04:16 PM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நிறைவுக்கு வந்த 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். கோலூன்றிப் பாய்தலில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். தியகம விளையாட்டரங்கில் கடந்த வருடம் சச்சின் எரங்க சனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற தேசிய சாதனையை புவிதரன் இம்முறை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார். சாவக்கச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் 2021ல் இராணுவத்தில் இணைந்தார். அவர் தற்போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாயாக பணியாற்றுகிறார். இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர். இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர். 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம், 29.93 செக்கன்களில் நிறைவு செய்தே இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் இந்தப் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர். புதிய தேசிய சாதனை படைத்த 4 x 200 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் பொம்படியர் ஜீ.டி.கே.கே. பபாசர நிக்கு, பொம்படியர் பீ.எம.;பீ.எல். கொடிகார, லான்ஸ் பொம்படியர் ஏ.எஸ்.எம். சபான் மற்றும் பணி நிலை சார்ஜன்ட் எஸ். அருண தர்ஷன ஆகியோர் இடம்பெற்றனர். இதனைவிட ஆண்களுக்கான 100 மீ., 200 மீ., 400 மீ., 3000 மீ. தடைதாண்டல், 4 x 400 மீ. தொடர் ஓட்டம், பெண்களுக்கான 400 மீ., 10000 மீ., 4 x 100 மீ. தொடர் ஓட்டம், 4 x 800 மீ. தொடர் ஓட்டம், 4 x 1500 மீ. தொடர் ஓட்டம், பத்து அம்ச நிகழ்ச்சி ஆகிய போட்டிகளில் இராணுவ வீர வீராங்கனைகள் மொத்தமாக 11 புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டினர். போட்டியின் சிறந்த மெய்வல்லுநர் வீரராக இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜன் எஸ். அருண தர்ஷனவும் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணி நிலை சார்ஜன் நதிஷா ராமநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு விருதுகளைப் பெற்றனர். ஆண்கள் பிரிவில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை சூடியதுடன் இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஒட்டுமொத்த சம்பியனானதுடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. https://www.virakesari.lk/article/180153
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டோஃபர் டேமன் பதவி, தி கான்வர்சேஷன் 45 நிமிடங்களுக்கு முன்னர் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய படை வீரர்களுக்கு சம்பளமாக உப்பு தான் வழங்கப்பட்டது. உணவில் தேவையற்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி, தேவையான நுண்ணுயிரிகளை வளர அனுமதித்து பதப்படுத்தியாக உப்பு இருக்கிறது. பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் இந்த குறிப்பிடத்தக்க திறன் காரணமாகத்தான் ஊறுகாய் முதல் சீஸ் வரை பல உணவுகளில் உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இன்று, உப்பு நம் உணவெங்கும் நிறைந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு அதிகப்படியான உப்பு வழிவகுக்கிறது. வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மெனியர் நோய், ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் போன்றவற்றை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது. ஒரு காலத்தில் தங்கத்தின் எடைக்கு மதிப்புள்ளதாகக் கருதப்பட்ட ஒரு பொருள், எப்படி நோய்களுக்கான காரணியாக மாறியது? வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் குடலியல் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ற முறையில், உப்பு எப்படி நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பட மூலாதாரம்,GETTY IMAGES ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் சோடியத்தின் பங்கு அதிகம். ஏனெனில், சோடியம் ரத்த நாளங்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. எளிமையான சொல்ல வேண்டும் என்றால், ரத்தத்தில் சோடியம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு தண்ணீரை அது ரத்த நாளங்களுக்குள் ஈர்க்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தில் உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பலர் உணராமல் இருக்கலாம். உப்பு, குடல் நுண்ணுயிரியை மாற்றியமைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் மற்றும் நார்ச்சத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் முக்கிய வளர்சிதை மாற்றங்களை உப்பு குறைக்கிறது. இந்த வளர்சிதை மாற்றங்கள் ரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைத்து, அவற்றைத் தளர்வாக வைத்திருக்கின்றன. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு தேவை? ஹாலோஃபில்ஸ் என்று அழைக்கப்படும் உப்பில் செழித்து வளரும் சில நுண்ணுயிரிகளைத் தவிர, அதிகளவு உப்பு கிட்டத்தட்ட தேவையான எல்லா நுண்ணுயிரிகளையும் நச்சுத்தன்மையடையச் செய்யும். அதனால்தான் உணவைப் பாதுகாக்கவும், தேவையற்ற பாக்டீரியாவைத் தடுக்கவும் மக்கள் நீண்ட காலமாக உப்பைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நவீன உணவுகளில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. உலகளவில் சராசரியாக உட்கொள்ளப்படும் உப்பின் அளவான 4,310 மில்லிகிராம் சோடியம், குடலில் உள்ள உப்பின் அளவை ஆரோக்கியமான அளவை விட உயர்த்தலாம். உடல் பருமன் சோடியம் ரத்த அழுத்தத்தைத் தவிர மற்ற உடல்நல பிரச்னைகளுடனும் தொடர்புடையது. அதிக சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் மலத்தில் அதிகளவு சோடியம் ஆகியவை வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையவை ஆகும். இதில், ரத்த சர்க்கரை, கல்லீரல் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை அடங்கும். தினமும் அதிகப்படியாக எடுக்கும் ஒவ்வொரு கிராம் சோடியமும், உடல் பருமன் ஏற்படுவதற்கான அபாயத்தை 15 சதவிகிதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை 500 கலோரிக்கும் அதிகமாக உட்கொண்டவர்களை, குறைவான சோடியம் கொண்ட உணவுகளை உண்பவர்களுடன் ஒப்பிடும்போது 1 கிலோ எடை அதிகமாக இருப்பதாக, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் கூடுதலாக 1.2 கிராம் சோடியத்தை உட்கொண்டனர். கலோரிகள் அதிகரிக்காவிட்டாலும் உப்பை மட்டும் அதிகமாக சேர்ப்பது ஏன் உடல் எடையை அதிகரிக்கிறது? ஏனெனில், சோடியம் ஓர் உணவின் மீதான ஆர்வத்தை (craving) அதிகரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நுண்ணுயிர் வளர்சிதை மாற்றங்கள் எடை இழப்பு மருந்துகளான விகோவி (Wegovy) மற்றும் ஓஸெம்பிக் (Ozempic), குடல் ஹார்மோன் GLP-1 இன் இயற்கையான வெளியீட்டைத் தூண்டுகிறது. GLP-1 மூலம், ஒரு ஆரோக்கியமான நுண்ணுயிர், பசி, ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஆற்றலை எரிக்க அல்லது கொழுப்பாக சேமித்து வைப்பதற்கான உடலின் முடிவை கட்டுப்படுத்த முடியும். அதிகப்படியான உப்பு இந்த விளைவுகளில் தலையிடலாம். வளர்சிதை மாற்ற நோய்களில், குடலில் இருந்து பெறப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகளின் அதிகரிப்பு மற்றும் பிரக்டோஸ் எனப்படும் சர்க்கரை ஆகியவை கொழுப்பு திரட்சிக்கு வழிவகுக்கும். உப்பை குறைக்கும் நாடுகள் பல நாடுகள் உப்பை குறைக்கும் முயற்சிகளை செயல்படுத்தி வரும் நிலையில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் சோடியம் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா உணவில் உப்பைக் குறைப்பதில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதேநேரத்தில், உணவு பாக்கெட்டுகளில் உப்பு குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உப்பு வரி போன்ற நடவடிக்கைகளால், பல ஐரோப்பிய நாடுகள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் குறைவான இறப்புகள் போன்ற பலன்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளன. நாடுகளுக்கிடையேயான துரித உணவுப் பொருட்களுக்கான ஊட்டச்சத்து தரவுகளின் ஒப்பீடு கணிசமான மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மெக்டொனால்ட் ‘சிக்கன் நக்கெட்ஸ்’, கோகோ-கோலா போன்றவற்றில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு அதிகப்படியான உப்பு மற்ற நாடுகளில் இதே உணவுகளில் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உப்பு தொழில் இந்த விஷயத்தில் பங்கு வகிக்கிறது. உப்பு நிறைந்த உணவுகள் அங்கு நன்றாக விற்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த உணவில் உப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டில், அமெரிக்க வேளாண் துறை வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பை தன்னார்வமாக படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறைக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது. சால்ட் இன்ஸ்டிடியூட் 2019 இல் கலைக்கப்பட்டது. சில உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உணவில் உப்பைக் குறைக்க ஒப்புக்கொண்டன. சமச்சீர் உணவுகள் உப்பை அதிகமாக உட்கொள்வதை எப்படி குறைப்பது? இதை மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடங்க வேண்டும்: உப்பு நிறைந்த இறைச்சிகள் (துரித உணவு போன்றவை), உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள் (சிப்ஸ் போன்றவை), மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் (சோடாக்கள் மற்றும் ரொட்டி போன்றவை) ஆகியவற்றை குறைக்க வேண்டும். தற்போது, அமெரிக்க உணவில் உள்ள உப்பில் 70% வரை பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து உட்கொள்ளப்படுகிறது. அதற்கு பதிலாக, குறைந்த சோடியம் மற்றும் சர்க்கரை, அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளில் கவனம் செலுத்துங்கள், அதாவது பதப்படுத்தப்படாத தாவர உணவுகளான பீன்ஸ், கொட்டை வகைகள், விதைகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த உணவுகள், பொதுவாக சோடியம் அதிகமாக இருக்கும் போது, அதிக அளவு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியமான மாற்றாக இருக்கும். இறுதியாக, உணவில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் சமநிலையை கருத்தில் கொள்ளுங்கள். சோடியம் ரத்த நாளங்களில் திரவத்தை வைத்திருக்க உதவுகிறது, பொட்டாசியம் செல்களில் திரவத்தை வைக்க உதவுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை சீரான விகிதத்தில் சிறந்த முறையில் உட்கொள்ளப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cxxz5dz460jo
  7. கச்சத்தீவை இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட ஒரு X வலைதளப் பதிவில், காங்கிரசையும் தி.மு.கவையும் குற்றம்சாட்ட புதிதாக ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருந்தார். அவர் அந்தப் பதிவில், "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரசை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது" என்று குறிப்பிட்டதோடு, நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்திருந்திருந்தார். பட மூலாதாரம்,X/NARENDRA MODI அந்தக் கட்டுரை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டுரை கூறுவது என்ன? "சுதந்திரத்திற்குப் பிறகு அந்தத் தீவின் மீது உரிமை கொண்டாடிய இலங்கை, இந்தியக் கடற்படை தனது அனுமதி இல்லாமல் அங்கே பயிற்சி செய்யக்கூடாது என்று கூறியதாகவும் 1955ல் தனது விமானப் படை பயிற்சியை அங்கே மேற்கொண்டதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இந்த விவகாரத்தை முக்கியத்துவமில்லாத விவகாரமாக பிரதமர் 1961ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி எழுதிய குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். "இந்தச் சிறிய தீவுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான உரிமையை விட்டுத்தர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு நிலுவையில் இருப்பதையோ, மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதையோ நான் விரும்பவில்லை" என நேரு குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீவின் மீதான உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்திருப்பதால், அதன் மீது நமக்கு உரிமை இருக்கிறது என அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்.சி. செடல்வத் கூறியிருந்தார். அப்போது வெளியுறவுத் துறையின் இணைச் செயலராக இருந்த கே. கிருஷ்ணாராவ், உரிமை குறித்து உறுதியாக இல்லை. ஆனால் அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமையைக் கோர சட்ட ரீதியில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டார். 1968ல் இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக இந்தியாவுக்கு வந்தபோது, இந்தத் தீவை இலங்கைக்கு அளிப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திரா காந்தி அரசு, அப்படி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகச் சொல்வதை மறுத்தது. ஆனால், அது சர்ச்சைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டது. இரு தரப்பு உறவுகளை மனதில் வைத்து, இந்தியா உரிமை கோர வேண்டுமென்றும் கூறியது. 1973ல் கொழும்புவில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத் தீவு மீதான உரிமையை விட்டுத்தர இந்தியா முடிவு செய்தது. இந்த விவரம் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் அந்தத் தீவு மீதான ராமநாதபுரம் ராஜாவின் உரிமையும், தனக்குத்தான் அந்தத் தீவு சொந்தமெனக் கூறும் இலங்கைத் தரப்பால் அதற்கு சாட்சியமாக எவ்வித ஆதாரத்தையும் காட்ட முடியாததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இலங்கை பிடிவாதமாக இருப்பதாக கேவல் சிங் குறிப்பிட்டார். 1925 முதல் இலங்கை அந்தத் தீவின் மீது உரிமை கோரிவருவதையும் அவர் குறிப்பிட்டார். அந்தக் கடற் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை இந்தியா கண்டறிந்திருந்ததாலும் இலங்கை அரசின் மீது சீன ஆதரவுக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்துவந்ததாலும் உடனடியாக முதலமைச்சர் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென கேவல் சிங் வலியுறுத்தினார். அதற்கு கருணாநிதி ஒப்புக்கொண்டார்" என அந்தக் கட்டுரை கூறுகிறது. கச்சத்தீவு - பாஜக குற்றச்சாட்டு என்ன? பிரதமர் நரேந்திர மோதியின் எக்ஸ் வலைதள பதிவிற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பேச ஆரம்பித்தனர். இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோதி, "தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத் தீவு விவகாரத்தில் புதிதாக வெளிவரும் தகவல்கள் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. காங்கிரசும் தி.மு.கவும் குடும்பக் கட்சிகள். தங்கள் மகன்களையும் மகள்களையும் வளர்ப்பது பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்படுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏழை மீனவர்களின் நலன்களுக்கு பாதகமாகிவிட்டது" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்குப் பிறகு, திங்கட்கிழமையன்று பா.ஜ.கவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்திய மீனவர்களின் உரிமையை பறிகொடுத்துவிட்டு, அதற்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, பழைய விவகாரமான கச்சத்தீவு பிரச்னையை எழுப்புவது தவறு என்று கூறிய அவர், "தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இது தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துவருகிறது" என்றும் குறிப்பிட்டார். மேலும், காங்கிரசைச் சேர்ந்த பிரதமர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார். கச்சத்தீவைக் கொடுப்பதற்கு தி.மு.க. எதிராக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது, 2015 ஜனவரி 27ஆம் தேதி வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலை இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் மறுக்கிறாரா? இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லை, ஏனெனில் கேள்விக்குரிய பகுதி ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. என்று 2015ஆம் ஆண்டில் கச்சத்தீவு குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/JAIRAM RAMESH கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன? தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரம் பல முறை முக்கியமான அரசியல் பிரச்னையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கச்சத்தீவு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்படுவது கடந்த பல வருடங்களில் இதுவே முதல் முறை. இந்தியா கச்சத்தீவு மீதான தனது உரிமையில் உறுதியாக இல்லை என்பது உண்மைதான் என்கிறார் கச்சத்தீவு குறித்து பல நூல்களை எழுதியவரும் சென்னை பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநருமான வி. சூரியநாராயண். "கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுமானால், அது சரிந்துகொண்டிருக்கும் சிறீமாவோவின் இமேஜிற்கு பெரிய அளவில் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா தனது அண்டை நாடுகளை ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடுகிறது என்று இலங்கையிலிருந்த இடதுசாரி சக்திகள் குரலெழுப்பி வந்தன. கச்சத்தீவு விவகாரத்தை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டின. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது அந்த வாதத்தை முறியடிக்கும் என நம்பப்பட்டது" என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் சூர்யநாராயண். 1974ஆம் ஆண்டின் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமான தீவாகக் கருதாமல், சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதி இந்தியா முடிவெடுத்து எனக் குறிப்பிடும் வி. சூர்யநாராயண், அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார். மேலும், 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாகத்தான் அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது என்கிறார் அவர். படக்குறிப்பு, வி. சூர்யநாராயண் கச்சத்தீவு - ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது என்கிறார் வி. சூர்யநாராயண். "இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க முதலமைச்சர் மு. கருணாநிதியும் அமைச்சர் எஸ். மாதவனும் சென்றனர். பிரதமரைச் சந்தித்த போது இந்த விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை மு. கருணாநிதி தெரிவித்ததாக மாதவன் சொன்னார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு கடிதமாக எழுதி பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மையைச் செலுத்தியதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. கச்சத்தீவைக் கட்டுப்படுத்திய ராமநாதபுரம் ராஜா எந்தக் காலகட்டத்திலும் இலங்கை அரசுக்கு வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை என கருணாநிதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்" என்கிறார் சூர்யநாராயண். மேலும், "இந்த கடல்சார் ஒப்பந்தமானது மாநில அரசின் உரிமையைக் கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளைக் கூட மாநில அரசுடன் விவாதிக்க மத்திய அரசு முன்வரவில்லை என தொடர்ந்து சொல்லிவந்தார் கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்தில் அவர் பிரதமர் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதனை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழக மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் காட்டும் வகையில் 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது" என்கிறது வி. சூர்யநாராயணின் புத்தகம். பட மூலாதாரம்,GETTY IMAGES 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலமைச்சர் மு. கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்: "இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து இந்த மன்றம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. இந்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கச்சத்தீவின் மீது இந்திய இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இலங்கையுடனான ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இந்த மன்றம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது". இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் தருணத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் வி. சூர்யநாராயண். "மேற்கு வங்கத்தில் இருக்கும் பேருபரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானோடு இணைக்க அப்போதைய பிரதமர் நேரு முடிவுசெய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான பி.சி. ராய் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிறார் அவர். ஆனால், 1974, 1976ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களை இப்போது முறித்துக்கொள்வது சாத்தியமில்லை என்கிறார் அவர். "சர்வதேச ஒப்பந்தங்களுக்கு என ஒரு புனிதத்தன்மை உண்டு. அதை மீறக்கூடாது. பல அண்டை நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அவையெல்லாம் சிக்கலுக்குள்ளாகும்" என்கிறார் வி. சூர்யநாராயண். கச்சத்தீவு - திமுக விளக்கம் என்ன? கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை அந்தத் தருணத்தில் தி.மு.க. முடிந்த அளவு எதிர்ப்பைப் பதிவுசெய்தது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "கேவல் சிங் முதலமைச்சரைச் சந்தித்து இந்த விவகாரத்தை விளக்கும்போது, இந்த ஒப்பந்தம் நிலம் தொடர்பான ஒப்பந்தம் மட்டும்தான். அந்த நிலத்தின் மீது உள்ள மீன் பிடி உரிமைகள் அப்படியே நீடிக்கும் என்று கூறினார். காரணம், அந்த நிலம் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மாறாக, யாழ்ப்பாணத்துடன் அந்தப் பகுதி இணைந்திருந்ததைக் காட்டும் ஆவணங்கள் உள்ளன என்றார் கேவல் சிங். இருந்தபோதும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் தி.மு.க. அரசு அது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1974ல் வழங்கப்பட்ட உரிமைகள், 1976ல் பறிக்கப்பட்டன. அப்போது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்த விவகாரத்தில் தி.மு.கவைக் குற்றம்சாட்டுவது முழுக்க முழுக்க அபத்தமானது" என்கிறார் கான்ஸ்டைன்டீன். இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் பா.ஜ.க. எவ்விதமான பலனையும் பெற முடியாது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது இந்த விவகாரத்தைப் பேசுவது ஏன்? இப்போதும்கூட, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்போம் என உறுதியளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டு. இதற்கு எந்த பலனும் இருக்காது" என்கிறார் அவர். கச்சத்தீவு - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா? கான்ஸ்டைன்டீன் கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இந்த விவகாரம் எந்த வகையிலும் பா.ஜ.கவுக்கு பலனளிக்காது, மாறாக எதிர்மறையாகச் செல்லலாம் என்கிறார் அவர். "இந்த விவகாரத்தை இப்படி விவாதிப்பதே தவறு. காரணம், இது தொடர்பாக, அ.தி.மு.க., தி.மு.க., வேறு சில தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. தவிர, கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். 1974ஆம் ஆண்டு மே மாதம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தார். இதனால் சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டது. அப்போது, இலங்கையை இந்தியா பக்கமே வைத்திருக்கவே இதை செய்ததாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம். 1974ல் இந்தியாவும் வங்கதேசமும் தங்களது எல்லைகளை வரையறுக்கும் போது இந்தியா சில பகுதிகளை விட்டுக்கொடுத்தது. அதற்கு இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருந்தது. "அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 100வது முறையாகத் திருத்தப்பட்டது. இது நடந்தது 2015ல் நரேந்திரமோதியின் ஆட்சியில்தான். அதற்காக, அவர் இந்திய நிலப்பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்ல முடியுமா? இரு நாட்டு எல்லைகளை வரையறுக்கும்போது, சில நிலப்பரப்புகளை விட்டுத்தருவது நடந்தே ஆகும்" என்கிறார் ஷ்யாம். ஆனால், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரே எழுப்புவது போன்ற தாக்குதலை தி.மு.க. எதிர்பார்த்ததா? "பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு எதாவது செய்ததா என்ற கேள்வியை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறார். நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தது போல அவர்களால் ஏதாவது ஒரு சாதனையைச் சொல்ல முடியுமா எனக் கேட்டார் முதலமைச்சர். அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில், இதைப் போல எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்" என்கிறார் தி.மு.கவின் கான்ஸ்டைன்டீன். இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு நேரடியாக பதில் சொல்வதை தி.மு.க. தவிர்க்கும்; ஆனால், பா.ஜ.க. இதனை மேலும் மேலும் பெரிதாக்கினால் அவர்களும் தீவிரமாக பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள் என்கிறார் ஷ்யாம். https://www.bbc.com/tamil/articles/cglkmeze9lgo
  8. 01 APR, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம், இராஜதுரை ஹஷான்) பல்வேறு வகையான வரிகள் ஊடாக இந்த ஆண்டு மாத்திரம் 600 பில்லியன் வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் 1066 பில்லியன் ரூபா வரியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்கவில்லை. அத்துடன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது தவறான விலைபட்டியல் மூலம் ஆண்டு தோறும் 4 பில்லியன் டொலர் வருமானத்தை சுங்கத்திணைக்களம் இழக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உரிய வழிமுறை முன்வைத்துள்ள போதும் அவை செயற்படுத்தப்படவில்லை என வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையின் தேசிய வருமானத்தில் இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் இந்நிறுவனங்கள் முறையாக வரி அறவிடுவதில்லை.இதனால் தொடர்ச்சியாக அரச வருமானம் நீக்கப்பட்டுள்ளது. தேசிய இறைவரித் திணைக்களம் 2023.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1066 பில்லியன் ரூபா வரியை அறவிடவில்லை. அத்துடன் 1 முதல் 5 ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் 656 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சேர்பெறுமதி வரி (வற் வரி) 18 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. இதன் ஊடாக 600 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆனால் இறைவரித் திணைக்களம் பல கோடி ரூபா வரியை அறவிடவில்லை. இந்த வரிகளை முறையாக அறவிடுவதற்கு சட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். இருப்பினும் நிதியமைச்சு முன்னேற்றகரமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சுங்கத் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் 58.6 பில்லியன் ரூபா வரி வருமானம் நீக்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தொழில்நுட்ப மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது தவறான விலைப்பட்டியல் மூலம் ஆண்டுதோறும் 4 பில்லியன் டொலர் இழக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்படும் பொருட்களை சுங்கத்தில் உள்ள ஸ்கேனர்கள் மூலம் பறிமுதல் செய்வது செயலிழந்திருத்தல் மற்றும் தங்கம் போன்ற பெறுமதியான பொருட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரும் போது செயற்படும் முறைமை தொடர்பில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இலங்கை மதுவரித் திணைக்களம் 700 கோடி ரூபா வரியை அறவிடவில்லை. மதுபான உற்பத்தியில் முன்னிலையில் உள்ள இரு பிரதான நிறுவனங்கள் வரி வருமான இழப்பில் 70 சதவீத பங்கு வகிக்கின்றன. மது உற்பத்தியாளர்கள் வரி செலுத்த தவறுதல் மற்றும் மதுவரித் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தல் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/180126
  9. இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது Published By: VISHNU 01 APR, 2024 | 08:22 PM பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஏனைய குற்றச்சாட்டுகள் காரணமாக இன்னும் சிறையில் உள்ளார். https://www.virakesari.lk/article/180189
  10. INNINGS BREAK 14th Match (N), Wankhede, April 01, 2024, Indian Premier League Mumbai Indians (20 ov) 125/9 Rajasthan Royals RR chose to field. Current RR: 6.25 • Last 5 ov (RR): 23/2 (4.60) Win Probability:MI 10.70% • RR 89.30%
  11. போளையடி மறக்கேலாது, பள்ளி முடிஞ்சு வீட்ட வரேக்க பொடியளோட விளையாடி முழுதும் தோத்து வாறனான். ஒருத்தன் பொக்கற் நிறைய அள்ளிட்டு போவான். அது ஒரு சீசன் விளையாட்டு.
  12. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளின் படையினரைக் கோரும் பிரான்ஸ் Published By: SETHU 01 APR, 2024 | 11:45 AM (ஆர்.சேது­ராமன்) பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பாது­காப்பு அதி­கா­ரி­களை அனுப்­பு­மாறு தனது நட்பு நாடு­க­ளிடம் பிரான்ஸ் கோரி­யுள்­ளது. ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக 46 நாடு­க­ளி­ட­மி­ருந்து 2,185 பொலி­ஸாரை அனுப்­பு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது என பிரெஞ்சு உள்­துறை அமைச்சு அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். கடந்த ஜன­வரி மாதம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­கவும் 35 நாடுகள் சாத­க­மாக பதி­ல­ளித்­துள்­ள­தா­கவும் பிரெஞ்சு அர­சாங்க வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை­பெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்­டிகள் மற்றும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8 வரை நடை­பெறும் பரா­லிம்பிக் போட்­டி­க­ளின்­போது தினந்­தோறும் 45,000 பிரெஞ்சு பொலி­ஸாரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்­ட­மிட்­டுள்­ளது. 20,000 தனியார் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், 15,000 படை­யி­னரையும் சேவையில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. எனினும், முக்­கிய சர்­வ­தேச விளை­யாட்டு விழாக்­களில் வெளி­நாட்டுப் படை­யி­னரை ஈடு­ப­டுத்­து­வது வழக்­க­மா­னது. 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­காக கட்­டா­ருக்கு 200 பொலிஸாரை பிரான்ஸ் அனுப்­பி­யி­ருந்­தது. கடந்த வருட உலகக் கிண்ண றக்பி போட்டிகளின்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து 160 படையினரை பிரான்ஸ் வரவேற்றிருந்தது. https://www.virakesari.lk/article/180117
  13. தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்கனவே மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது இந்த சைக்கிள்களை வழங்குவதில் முக்கிய நிபந்தனையாக கருதப்பட்டது. இலங்கை ‘Childfund” வேண்டுகோளுக்கு இணங்க இந்த சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/297775
  14. 31 MAR, 2024 | 10:51 AM ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதனால் நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார், சில நாட்களில் டெல்லியில் மிக லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். கோடை காலம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நரேஷ் குமார், “அதனை இப்போதே கூறுவது கடினம். ஆனால், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில், இயல்பை விட அதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ளும் சூழல் . ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மத்திய பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வெப்ப அலை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நாட்டின் மையப் பகுதியில் நீடிக்கலாம்” என தெரிவித்தார். அடுத்த சில நாட்களுக்கான வானிலை குறித்து நரேஷ் குமார் கூறியதாவது, “ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்யக்கூடும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஆழங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலைகள் இருக்கும். குறிப்பாக மத்திய இந்தியாவில் வறண்ட வானிலை நிலவும். கர்நாடகாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்ப அலைகள் நிலவும்” என அவர் தெரிவித்தார். மேலும் அடுத்த நான்கைந்து நாட்களில் கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காணப்படும் என நரேஷ் குமார் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180050
  15. 01 APR, 2024 | 12:39 PM வட மாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. "அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" என்ற அரசாங்கத்தின் எண்ணக்கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி, அந்த அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவு சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாயாகும். முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவை என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது. நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும்போது நீரிலிருந்து அதிக உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பின் மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும். https://www.virakesari.lk/article/180123
  16. பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து தீவிரமாகப் போராடும் இஸ்ரேலியர்கள் பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி பொவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர், ஜெருசலேமிலிருந்து 54 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் ஆழமான அரசியல் பிளவுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. கடந்த வருடம் அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அதிர்ச்சியும், அதனால் தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டதால், இந்த அரசியல் பிளவுகள் கொஞ்சம் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் மீண்டும் இஸ்ரேலின் தெருக்களில் போராடத்துவங்கியுள்ளனர். இஸ்ரேல் காஸா மீது போர் நடத்திவருகிறது. இந்தப் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை முடுக்கியுள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரின் முக்கிய நெடுஞ்சாலையான பெகின் போலவார்ட் தெருவை மறித்த போராட்டக்காரர்களை அகற்ற போலீசார், துர்நாற்றம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். நெதன்யாகுவை பதவி விலகவும், தேர்தல்களை முன்கூட்டியே நடத்தவும் கோரும் பழைய முழக்கங்களுடன், காஸாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருக்கும் 130 இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்கான உடனடி ஒப்பந்தத்தைக் கோரும் புதிய கோஷங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர். இந்த 130 பேரில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அச்சத்தில் உறவினர்கள், நண்பர்கள் ஹமாஸ் குழுவினரிடம் பணயக்கைதிகளாக இருக்கும் 130 பேரில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. நடந்துவரும் போர் நீடித்தால், பணயக்கைதிகளில் மேலும் பலர் கொல்லப்படலாம் என அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் போராடக்காரர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பட மூலாதாரம்,OREN ROSENFELD படக்குறிப்பு, காஸாவில் போரில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய ராணுவ வீரரின் தாயான கட்டியா அமோர்சா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) மாலை, ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய பாராளுமன்றத்தைச் சுற்றிலும் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது காஸாவில் போரில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய ராணுவ வீரரின் தாயான கட்டியா அமோர்சா என்ற பெண், பெஞ்சமின் நெதன்யாகு நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேற விமான டிக்கெட்டை தான் வாங்கித் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். “அவரோடு, அவர் சொந்தமாகத் தேர்ந்தெடுத்து அமைச்சரவையில் வைத்திக்கும் அத்தனை மோசமானவர்களையும் உடனழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர். பட மூலாதாரம்,OREN ROSENFIELD படக்குறிப்பு, ராபி (யூத மதகுரு) யெஹூதா கிளிக் நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் சொல்வது என்ன? நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களின் கருத்தை எதிர்க்கிறார்கள். போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு ராபி (யூத மதகுரு) காணப்பட்டார். அவர் பெயர் யெஹூதா கிளிக். இசுலாமியரின் புனிதமான மசூதி என்று கருதப்படும் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதியின் இடத்தில் இருப்பதாகக் கருதப்படும் ‘டெம்பிள் மவுண்ட்’ என்ற இடத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர் இவர். இஸ்ரேலில் உண்மையான எதிரி ஹமாஸ் தான், பிரதமர் நெதன்யாகு அல்ல என்பதை போராட்டக்காரர்கள் மறந்துவிட்டதாக கிளிக் கூறுகிறார். "நெதன்யாகு மிகவும் பிரபலமானவர் என்று நான் நினைக்கிறேன். அதுதான் போராடக்காரர்களுக்கு ஆத்திரமூட்டுகிறது. இவ்வளவு காலமாக இவர்கள் போராட்டம் நடத்தியும், அவர் இன்னும் ஆட்சியில் இருப்பதை இந்தப் போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார். "அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யட்டும். அவர்களது கருத்தை சத்தமாக, தெளிவாக பேசட்டும். ஆனால் அவர்கள் ஜனநாயகத்திற்கும் அராஜகத்திற்கும் இடையே உள்ள மிக மெல்லிய கோட்டைக் கடக்காமல் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார். பட மூலாதாரம்,EPA-EFE-REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, இஸ்ரேல் காஸா மீது போர் நடத்திவருகிறது. இந்தப் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை முடுக்கியுள்ளனர் காஸா மீதான போரை நியாயப்படுத்தும் அமைச்சர்கள் இஸ்ரேலின் இந்தப் போராட்டக்காரர்களும், இஸ்ரேலின் மற்ற நட்பு நாடுகளில் இருக்கும் நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்களும், நெதன்யாகுவின் அரசாங்கத்தில்தான் ஜனநாயகத்தின் எதிரிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நெதன்யாகுவின் அரசு தீவிர தேசியவாத யூதக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது. நெதன்யாகுவின் அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மதவாத சியோனிச கட்சியின் தலைவர். அதன் எம்.பி.க்களில் ஒருவரான ஓஹாட் தால், பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீதான ராணுவ அழுத்தத்தைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறியிருக்கிறார். "பணயக் கைதிகளை ஒப்பந்தத்தின் மூலம் எளிதாகத் விடுவித்து, பின்னர் அதற்கு ஈடாக இஸ்ரேல் விடுவிக்கும் அனைத்து பயங்கரவாதிகளையும் நாமே கொல்ல ஹமாஸ் அனுமதிக்கும் என்று நினைக்கிறீர்களா? அது அவ்வளவு எளிதல்ல,” என்றார் அவர். "ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன்முலம் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் என்றால், ஒவ்வொரு இஸ்ரேலியரும் அந்த பொத்தானை அழுத்துவார்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல் இது எளிதானது அல்ல," என்றார். பெஞ்சமின் நெதன்யாகு, தான் மட்டுமே இஸ்ரேலை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடியவர் என்று கூறி வந்தார். பல இஸ்ரேலியர்கள் அவரை நம்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகு இதுவரை எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டுகிறது பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பொறுப்பு பாலஸ்தீனர்கள் கோரும் அமைதி உடன்படிக்கைக்குப் படியாமல், அவர்கள் கோரிவரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் யூதர்களைக் குடியமர்த்தலாம் என்றும், பாலத்தீனர்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி வந்தார். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு எல்லைக் தாண்டி வந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியபோது எல்லாம் மாறியது. பல இஸ்ரேலியர்கள், இவ்வளவு பெரிய விளைவுகளுடன் கூடிய தாக்குதல் நடக்கக் காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு நெதன்யாகுவே பொறுப்பு என்கிறார்கள். ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்புத் தலைவர்களைப் தாம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால் இதுவரை நெதன்யாகு அதுபோல எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டுகிறது. வலதுசாரி ஆதரவு கடந்த 40 வருடங்களாக பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவர் பாலத்தீன அரசையும், பாலத்தீனத்தின் விடுதலையையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். போருக்குப் பிறகு காஸாவில் சுயாட்சி ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் திட்டங்களை அவர் கடுமையாக நிராகரித்ததால் தான் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிகளின் தொடர்ச்சியாக அவரை ஆதரிக்கிறார்கள். பட மூலாதாரம்,OREN ROSENFELD படக்குறிப்பு, டேவிட் அக்மோன் ‘நெதன்யாகு பலவீனமானவர், பொய் சொல்பவர்’ இஸ்ரேல் பாராளுக்மன்றத்தின்குன் போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர், இஸ்ரேலிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரலாக இருந்த டேவிட் அக்மோன். நெதன்யாகு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அக்மோன் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகப் பொறுப்பினை எற்று நடத்தினார். "1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுதான் இஸ்ரெலின் மிகப்பெரிய நெருக்கடி. 1996-இல் நான் நெதன்யாகுவின் முதல் தலைமைத் தளபதியாக இருந்தேன். அதனால் எனக்கு அவரை நன்றாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. மூன்றே மாதங்களில் நான் எனது பணியை ராஜினாமா செய்தேன். ஏனென்றால் நெதன்யாகு யார் என்பதை நான் உணர்ந்திகொண்டேன். அவர் இஸ்ரேலுக்கு மிகப்பஎரிய ஆபத்து,” என்றார். மேலும், "அவருக்கு முடிவெடுக்கத் தெரியாது. அவர் பயப்படுகிறார். அவருக்குத் தெரிந்தது பேசுவது மட்டுமே. அவர் தன் மனைவியைச் சார்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவரது பொய்களைப் பார்த்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் அவரிடம் ‘உங்களுக்கு உதவியாளர்கள் தேவையில்லை. உங்களது இடத்திற்கு வேறு ஒரு பிரதமர்தான் தேவை’ என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி வந்துவிட்டேன்," என்றார். நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலா? தனக்கு எதிராகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கையிலேயே நெதன்யாகு தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை நிராகரித்தார். மேலும் காஸாவின் ரஃபா பகுதியில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக ஒரு புதிய தாக்குதலை நடத்தப்போவதாக மீண்டும் உறுதி கூறினார். நெதன்யாகு ஒரு வலிமையான அரசியல் பிரசாரகர். அவரது எதிரிகள் கோருவதைப்போல முன்கூட்டியே தேர்தல் நடந்தாலும் அவர் வெல்லக்கூடும் என்று அவர்களது ஆதரவாளர்க்ள் நம்புகிறார்கள். ஹமாஸ் அழிக்கப்படவேண்டும் என்பதில் இஸ்ரேலியர்களிடையே கருத்துவேறுபாடில்லை. அதற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஆனால் போர் நடத்தப்படும் விதம், பணயக்கைதிகளை மீட்பதில் இருக்கும் தாமதம் ஆகியவை பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு அவரிமீது பெரும் அழுத்ததைச் செலுத்தி வருகின்றன. https://www.bbc.com/tamil/articles/czkz5yje4e9o
  17. பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இது தவிர, உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடு, இந்த வருடத்தில் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் நிர்வாகச் செலவுகளில் இருந்து செய்யப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்திப் பொறிமுறையின் பிராந்திய மையங்களான பிரதேச செயலகங்களை வலுவூட்டும் நோக்கில் இந்த விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/297743 தேர்தல் வரப்போது!
  18. மது அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர் ஒருவர் போட்டி முடிந்த சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். அட்டன் பிரதேச தோட்டமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது! அட்டன் பிரதேச தோட்டமொன்றின் கோவிலில் தேர் திருவிழாவின் பின்னர் இளைஞர்கள் குழு ஒன்று கூடி மதுபானம் அருந்தும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். பல இளைஞர்கள் போட்டியில் கலந்துகொண்டனர், அவர்களுக்கு தலா 750 மில்லி போத்தல்கள் வழங்கப்பட்டன. குறைந்த நேரத்தில் குடித்து முடித்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது . முதலில் பந்தயத்தை முடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நபர் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு போட்டியாளர் கடுமையாக சுகவீனமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/297761
  19. Published By: SETHU 01 APR, 2024 | 01:15 PM ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180130
  20. வணக்கம் ஐயா, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
  21. சிறியண்ணையின் வருடாந்த சுயஆக்கம் எங்கே என யோசித்தேன், வந்துவிட்டது!
  22. பந்துகளை பறக்கவிட்ட தோனி; தோற்றாலும் சென்னை ரசிகர்கள் கொண்டாடுவது ஏன்? பட மூலாதாரம்,CSK/X 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெறும்போது, ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியின் ரசிகர்கள், அல்லது அந்த வீரரின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள், சிலாகிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு அணி போட்டியில் வென்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும், தோற்றாலும் கொண்டாடப்படும் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும்தான். காரணம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சிஎஸ்கே என்றாலே தோனி, தோனி என்றாலே சிஎஸ்கே என்று ரசிகர்கள் மனதில் பதியவைத்துவிட்டார்கள். தோனி பேட்டோடு களத்துக்கு வந்தாலே கொண்டாடுவோம் அவர் சிக்ஸர், பவுண்டரி அடித்தால் விட்டுவிடுவோமா என்று ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். 2023ம் ஆண்டு ஐபிஎல் இறுதி ஆட்டத்துக்குப்பின் இந்த சீசனில் 2 போட்டிகள் முடிந்தும் இன்னும் தோனி களமிறங்கவில்லையே என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த காத்திருப்புக்கு நேற்றை ஆட்டத்தில் பலன் கிடைத்தது. வெற்றிதானே…அது கிடக்கட்டும் தோனி களமிறங்கிவிட்டார், அதிலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்துள்ளார் என்று ரசிகர்கள் சிலாகித்தனர். பட மூலாதாரம்,DELHI CAPITALS/X கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 41 ரன்கள் தேவை. சிஎஸ்கே தோல்வி தெரிந்துவிட்டது. ஆனாலும் நார்கியா வீசிய கடைசி ஓவரில் தோனி அடித்த 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களால் ரசிகர்களின் உற்சாகக் குரல் விசாகப்பட்டினம் மைதானத்தை அதிரவைத்தது. 16 பந்துகளில் 4பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்து 231 ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி பேட் செய்தார். ஒரு அணி தோற்றாலும் கொண்டாடப்படும், வென்றாலும் கொண்டாடப்படும் என்றால் அது ‘தோனி இருக்கும்வரை’ சிஎஸ்கே மட்டும்தான். விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய புள்ளிக்கணக்கைத் தொடங்கியுள்ளது. முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தோல்வியால் நிகர ரன்ரேட் சரிந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,DELHI CAPITALS/X ‘சிங்கத்துக்கு’ தண்ணி காட்டிய ஆட்டநாயகன் சிஎஸ்கே பேட்டர்களுக்கு நேற்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே தன்னுடைய பந்துவீச்சு வேரியேஷனில் சிம்மசொப்னாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருந்தார். 4 ஓவர்கள் வீசிய கலீல் அகமது ஒரு மெய்டன் ஓவர், 15 பந்துகள் டாட்பால், 21 ரன்கள் 2 முக்கிய விக்கெட்டுகள் என கலக்கினார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றோம். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்றோம். பிரித்வி ஷா கடினமாக பயிற்சி எடுத்துவந்தார், அவருக்கு அளித்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். முகேஷ் குமார் டெத் ஓவர்களில் அருமையாகப் பந்துவீசினார். கடந்த ஓர் ஆண்டாக பெரிதாக நான் கிரிக்கெட் ஆடவில்லை, ஆனாலும், என்னால் ஆட்டத்தை மாற்ற முடியும் என்று மட்டும் நம்பினேன். இன்னும் நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,DELHI CAPITALS/X டெல்லி அணி தீட்டிய திட்டம் என்ன? டெல்லி கேபிடல்ஸ் அணி தனது திட்டத்தை சிறிது பிசகாமல் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே போன்ற பெரிய பேட்டர்கள், பந்துவீச்சாளர்களை வைத்திருக்கும் அணிக்கு எதிராக வெல்வது கடினம் என்று தெரிந்து திட்டமிட்டு காய்களை நகர்த்தி வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடதுகை வேகப்பந்துவீச்சில் பலவீனம் என்பதை தெரிந்து கொண்டு கலீல் அகமதுவை பந்துவீசச் செய்து விக்கெட்டைத் தூக்கினர், போனஸா ரவீந்திரா விக்கெட்டும் கிடைத்தது. அடுத்ததாக ரன்ரேட்டில் நெருக்கடி கொடுக்க இசாந்த் சர்மா, நோர்க்கியா பயன்படுத்தினர். சிஎஸ்கே பேட்டர்களுக்கு ஒரு பந்தைக் கூட ஸ்லாட்டில் வீசாமல் பெரும்பாலான பந்துகளை ஆப்சைட் யார்கர், யார்கராக வீசி நோர்க்கியா நெருக்கடி அளித்தார். அதிலும் ஷிவம் துபே சுழற்பந்துவீச்சை வெளுத்துவிடுவார், வேகப்பந்துவீச்சில் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்துவிடுவார் எனத் தெரிந்து அவர் பேட் செய்தபோது சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தவில்லை. மாறாக, நோர்க்கியா, முகேஷ் குமார், இசாந்த் சர்மாவைப் பயன்படுத்தி விக்கெட்டை எடுத்தனர். இ்ப்படி ஒவ்வொரு பேட்டராக அவரின் பலவீனம் அறிந்து கட்டம்கட்டி டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டனர். பீல்டிங்கிலும் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டனர். பெரும்பாலும் மோசமான பந்துகளை வீசவில்லை, அதேநேரம் பீல்டிங் அமைந்திருந்தற்கு ஏற்றாற்போல் பந்துவீசியதால் பெரிய அளவுக்கு பீல்டிங்கை கோட்டை விடவில்லை. தோனி களமிறங்கி முதல் பந்தில் பவுண்டரி அடித்தநிலையில் 2வது பந்தில் தேர்டு மேன் திசையில் கலீல் அகமதுவிடம் அடித்தார். கையில் கிடைத்த பந்தை கலீல் அகமது கேட்ச்பிடிக்கத் தவறிவிட்டார். இந்த கேட்சைப் பிடித்திருந்தால், சிஎஸ்கே ரசிகர்களின் கனவு கலைந்திருக்கும். அதேபோல, கேப்டன் ரிஷப்பந்தும் ஒரு கேட்சைத் தவறவிட்டார். பட மூலாதாரம்,DELHI CAPITALS/X பிரித்விஷா வருகையும், அதிரடி தொடக்கம் ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி தக்கவைத்த 4 வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமானவர். அவரின் அதிரடி பேட்டிங் திறமை என்னவென்று தெரிந்து அணி நிர்வாகம் அவரைத் தக்கவைத்தது. கடந்த சீசனில் 8 இன்னிங்ஸ்களில் 106 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷா 13.25 சராசரி வைத்திருந்தார். ஆனால், கடந்த ஓர் ஆண்டில் தீவிரமான பயற்சிகள், உள்நாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தியது என பேட்டிங்கில் பிரித்வி ஷா மெருகேற்றி இருந்தார். டேவிட் வார்னருடன் சேர்ந்து இந்த முறை பிரித்வி ஷா களமிறங்கினார். ஒருபுறம் சிஎஸ்கே பந்துவீச்சை வார்னர் வெளுக்க, மற்றொரு ஸ்ட்ரைக்கில் பிரித்வி ஷா தனது டிரேட்மார்க் ஷாட்களை ஆடி ரன்களைக் குவித்தார். குறிப்பாக அவரின் கவர் டிரைவ் ஷாட் சச்சினின் ஷாட்டை நினைவுபடுத்தியது. பந்தின் வேகத்துக்கு ஏற்றாற்போல் தட்டிவிடும் கலையை சச்சினிடம் இருந்து பிரித்வி ஷா கற்றதை நினைவூட்டினார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி டெல்லி கேபிடல்ஸ் 61 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா, ரஹ்மான், தீபக் சஹர் ஓவர்களை வெளுத்த வார்னர் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அதிகமுறை(110) சேர்த்த கிறிஸ் கெயிலின் சாதனையை வார்னர் சமன் செய்தார். முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷா-வார்னர் கூட்டணி 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி வார்னர் அடித்த பந்தை பதிரனா பாய்ந்து சென்று ஒற்றைக் கையில் அருமையான கேட்சாக்கினார். வார்னர் 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,CSK/X யார்க்கர்கள் மூலம் மிரட்டிய பதிரணா அடுத்து கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே அரைசதம் நோக்கி நகர்ந்த பிரித்வி ஷா 43 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துகளமிறங்கிய மிட்ஷெல் மார்ஷ்(18), ஸ்டப்ஸ்(0) விக்கெட்டுகளை பதிரணா யார்க்கர் மூலம் 15-வது ஓவரில் வீழ்த்தி டெல்லி அணிக்கு நெருக்கடி அளித்தார். தொடக்கத்தில் ரிஷப் பந்த் தடுமாற்றத்துடன் பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். 23 பந்து 23 ரன்கள் சேர்த்திருந்தார். அதன்பின் ரன்வேகத்தை டாப் கியருக்கு கொண்டு சென்ற ரிஷப் பந்த், பதிரணா வீசிய 19-ஆவது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களாக வெளுத்தார். 31 பந்துகளில் அரைசதம் அடித்து பதிரணா வீசிய அதேஓவரில் 52 ரன்களில் கெய்க்வாட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். இந்த 3 பேரும்தான் டெல்லி கேபிடல்ஸ் அணி ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். ஆல்ரவுண்டர் என்ற ரீதியில் மிட்ஷெல் மார்ஷை ஏலத்தில் எடுத்து இதுவரை ஒரு போட்டியில் கூட பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியும் பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல ஸ்டெப்ஸும் பெரிய ஸ்கோருக்கு இதுவரை செல்லவில்லை. பட மூலாதாரம்,CSK/X சிஎஸ்கே அணி சறுக்கியது எங்கே? சிஎஸ்கே அணியின் நேற்றைய பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. அதிலும் பவர்ப்ளே ஓவரின்போது தீபக் சஹருக்கு வாய்ப்பளித்து ரன்களை வாரிக் கொடுக்க வைத்தனர். வார்னருக்கு ஸ்லாட்டில் போடக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டே அதே இடத்தில் தீபக் சஹரும், முஸ்தபிசுர் ரஹ்மானும் பிட்ச் செய்தனர். வார்னரும் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சிக்ஸர்களாக,பவுண்டரிகளாக வெளுத்தார். வார்னர் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல எக்னாமி வைத்திருக்கும் பந்துவீச்சாளர்களை பந்துவீச செய்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. டெல்லி அணியில் 4 இடதுகை பேட்டர்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னர் ஒருவரை சிஎஸ்கே ப்ளேயிங் லெவனில் சேர்த்திருக்கலாம், அல்லது சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். இந்த ஆட்டத்தில் தீபக் சஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜடேஜா மூவரும் சேர்ந்து 132 ரன்களை வாரி வழங்கினர். சிஎஸ்கே பேட்டர்களைக் கட்டுப்படுத்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் 7 வகையான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். ஆனால், சிஎஸ்கே அணி 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது. சிஎஸ்கே அணியில் இருந்த டேரல் மிட்ஷெல், ரச்சின் ரவீந்திராவுக்கு கூட சில ஓவர்களை கேப்டன் கெய்க்வாட் வழங்கியிருக்கலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது. பட மூலாதாரம்,CSK/X சிஎஸ்கேவுக்கு ஷாக் அளித்த கலீல் சிஎஸ்கே அணிக்கு தொடக்கத்திலேயே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது அதிர்ச்சியளித்தார். கலீல் தான் வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ரச்சின் ரவீந்திராவை ஒரு ரன்னில் வெளியேற்றி ஷாக் அளித்தார். 2வது ஓவரை இஷாந்த் சர்மா கட்டுக்கோப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 3வது ஓவரை வீசிய கலீல், கேப்டன் கெய்க்வாட் விக்கெட்டை சாய்த்து, சிஎஸ்கே அணிக்கு அடுத்த ஷாக் அளித்தார். 3வது விக்கெட்டுக்கு ரஹானே, மிட்ஷெல் ஜோடி சேர்ந்தனர். ரஹானே அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிக்க, பவர்ப்ளேயில் சிஎஸ்கே 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தபோதே தோல்வி எழுதப்பட்டுவிட்டது. ரஹானே-மிட்ஷெல் ஜோடி திணறல் ரஹானே, மிட்ஷெல் ஜோடியும் அதிரடி ஆட்டத்துக்கு கியரை மாற்ற முடியாத அளவுக்கு டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ரசிக்சலாம் வீசிய 10ஆவது ஓவரில் ரஹானே, மிட்ஷெல் தலா ஒரு சிக்ஸர் விளாசினர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 11வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். 2வது பந்தில் அக்ஸரிடமே கேட்ச் கொடுத்து மிட்ஷெல் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஷிவம் துபேவுக்கும் நேற்று இயல்பு ஆட்டத்துக்கு திரும்பமுடியவில்லை. பெரிய ஷாட்களுக்கு துபே முயன்றும், டெல்லி வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. பட மூலாதாரம்,CSK/X சிஎஸ்கேவை தோல்வியில் தள்ளிய முகேஷ் முகேஷ்குமார் 14-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். தன்னுடைய முதல் ஓவரிலேயே ஸ்லோபாலில் ரஹானே (45ரன்கள்) விக்கெட்டையும், அடுத்து களமிறங்கிய ரிஸ்வி விக்கெட்டையும் சாய்த்து சிஎஸ்கே அணியை தோல்வியில் தள்ளினார். அடுத்துவந்த ஜடேஜா, துபேயுடன் சேர்ந்தார். நோர்க்கியா 150கி.மீ வேகத்தில் வீசும் பந்துகளை எதிர்கொண்டு பேட் செய்ய இருவரும் சிரமப்பட்டனர். அதிலும்நோர்க்கியா திட்டமிட்டு ஆப்சைட் யார்கர், யார்கராக வீசி பெரிய ஷாட்களுக்கு செல்லவிடாமல் தடுத்தார். முகேஷ் குமார் வீசிய 16-ஆவது ஓவரின் முதல் பந்தில் துபே18 ரன்னில் ஸ்டெப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தோனி களமிறங்கினார். தோனி களத்துக்கு வரும்போது, பாட்ஷா படப் பாடலின் பின்னணி இசைஒலிக்க, ரசிகர்களின் ஆரவாரமும் சேர்ந்து அரங்கை அதிரவைத்தது. பட மூலாதாரம்,CSK/X தோனி வருகையும், தோல்வியும் தோனி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். அதே ஓவரில் மேலும் 2 பவுண்டரிகளை தோனி விளாசினார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்டது. உலகின் சிறந்த ஃபினிஷராக அறியப்படும் தோனியால் இந்த ஸ்கோரை அடித்து சிஎஸ்கே அணியை வெல்ல வைக்க முடியும் என்றாலும் பழைய தோனி இப்போது இல்லை. கலீல் அகமது வீசிய 18-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் மட்டும் விளாசி 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய முகேஷ் குமார் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூடஅடிக்கவிடாமல் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசிவரை போராடிய தோனி கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 41 ரன்கள் தேவை. சிஎஸ்கே தோல்வியும் எழுதப்பட்டுவிட்டது. இருப்பினும் ரன்ரேட்டை தக்கவைக்கும் முயற்சியில் தோனி இறங்கினார். நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை தோனி விளாசினார். தோனி ஒவ்வொரு பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்கும்போது, ரசிகர்களின் உற்சாகக் குரல் அரங்கை அதிரச் செய்தது. தோனி 37 ரன்களிலும், ஜடேஜா 21 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். https://www.bbc.com/tamil/articles/c884npk2rp8o
  23. கார்த்திகைப் பூ இல்லை காந்தள் பூ : ஆசிரியர்களுக்கு "சப்றைஸ்" கொடுக்கவே செய்தோம் - பொலிஸாருக்கு மாணவர்கள் விளக்கம் Published By: DIGITAL DESK 3 01 APR, 2024 | 09:27 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில் நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்த்திகைப் பூவைத் தானே இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார். இதன் போது பதில் வழங்கிய மாணவர்கள் நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை காந்தள் மலர் என அறிந்துள்ளோம் எமது பாடப்புத்தகத்தில் அவ்வாறே உள்ளது. அது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம். இதன் போது கேள்வி எழுப்பிய பொலிஸார் உங்கள் இல்ல அலங்காரத்திற்கான ஆலோசனையை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் எனக் கேள்வி எழுப்பினார். இதன் போது பதிலளித்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் காந்தள் பூ இல்ல அலங்காரத்திற்கும் தொடர்பு இல்லை நாங்கள் இவ்வாறு அமைக்கப் போகிறோம் என அவர்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை "சப்றைஸ் " வழங்க வேண்டும் என்பதற்காக தெரியாமல் வைத்தோம் என்றனராம். இதன் போது பல்வேறு வழிகளில் குறித்த இல்ல அலங்காரத்திற்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் முடிச்சுப் போட பொலிஸார் முனைந்த நிலையிலும் மாணவர்கள் ஒரே பதிலையை மீண்டும் மீண்டும் கூறினர் இந் நிலையில் பாடசாலை அதிபரும் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில் தனது வாக்குமூலத்தில் ஏற்கனவே இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பாடசாலை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெளிவாக கூறினேன். ஏற்கனவே கிளிநொச்சியில் இடம்பெற்ற இல்ல அலங்காரம் அது தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பில் கூட்டத்தில் தெரிவித்தேன். இவ்வாறான அலங்காரம் தொடர்பில் தானும் அறிந்திருக்கவில்லை என வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/180103
  24. தண்டனை சட்டக் கோவை திருத்தத்தை மிளப் பெறாவிட்டால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் - அரசாங்கத்தை எச்சரிக்கும் எதிர்க்கட்சி தலைவர் Published By: VISHNU 01 APR, 2024 | 01:08 AM (எம்.மனோசித்ரா) பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையை 16இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான தண்டனை சட்டக் கோவை திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது இந்த திருத்தத்தை அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (31) பதுளையில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை, அடிப்படை உரிமைகளில் உள்ளடக்குவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கின்றேன். 'நவீன பெண்கள்' என்பதே எமது இலக்காகும். நவீன பெண்களை நாட்டில் உருவாக்குவதற்காக மக்கள் சக்தி பெண்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். தொழிற்துறையில் பெண்களின் பங்கேற்பு 33 சதவீதமாவே காணப்படுகிறது. அதனை நாம் 40 சதவீதமாக உயர்த்துவோம். அரச துறைகளில் மாத்திரமின்றி தனியார் துறைகளிலும் சம்பளத்துடனான பிரசவ கால விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாடுபடுவோம். பெண்கள் வீடுகளில் ஆரம்பித்து, போக்குவரத்து, வேலைத்தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகின்றனர். இவற்றிலிருந்து பெண்களை முழுமையாக பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 17 910 ஆரம்ப பாடசாலைகள் இலங்கையில் உள்ளன. இவற்றில் 21 557 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதற்கமைய ஆரம்ப மாணவர்களிலுள்ள மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை அரச கொள்கையாக நாம் நடைமுறைப்படுத்துவோம். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் வீட்டுப்பணிப்பெண்ணாக மாத்திரமே எமது பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையை மாற்றி தாதி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை துரிதப்படுத்துவோம். இலங்கையிலுள்ள 16 இலட்சம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். நுண்கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை அந்த நெருக்கடிகளிலிருந்து முற்றாக பாதுகாப்போம். பெருந்தோட்டத் துறைகளிலுள்ள பெண்களை 'பெருந்தோட்ட தொழிலாளிகள்' என்று அடையாளப்படுத்தாமல் 'மேல்நாட்டு பெண்கள் சமூகம்' என்று அடையாளப்படுத்துவோம். அரசாங்கம் செய்ய முனைகின்ற மிக முட்டாள் தனமான செயல் ஒன்று தொடர்பில் தற்போது வெளிப்படுத்தவுள்ளேன். அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள தண்டனை சட்டக் கோவை திருத்தத்தில், குற்றங்களை தடுப்பதற்கன்றி அவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது. பாலியல் உறவுகள் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தும் வயதை, 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இதற்கான விருப்பத்தைத் தெரிவிக்க முடியும். இன்று நாடளாவிய ரீதியில் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், சீண்டல்கள் வானளவு உயர்வடைந்துள்ளன. இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் யாதெனில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையைக் குறைப்பதாகும். பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது? அது மாத்திரமல்ல. 22 வயதுக்குட்பட்ட ஆணொருவர் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது. இது சரியா என்று நான் கேட்கின்றேன்? எம் நாட்டு பெண்களை நாம் இவ்வாறு தான் பார்ப்பதா? 363ஆம் உறுப்புரைக்கமைய பெண்கள் துஷ்பிரயோகம் என்ற விடயத்தில் ஆண்கள் துஷ்பிரயோகமும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான உறுப்புரையை வலுவிழக்கச் செய்வதற்காகவும் அர்த்தமற்றதாக்குவதற்கும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் துஷ்பிரயோகத்தைப் போன்றே ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் அதற்காக வெ வ்வேறாக உறுப்புரைகள் தயாரிக்கப்பட வேண்டும். தற்போது 365 பீ உறுப்புரையின் ஊடாக, இதற்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் அதனை செய்யாமல், தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக பெண்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு எமது கடும் எதிர்ப்பினை வெளியிடுவோம். பாராளுமன்றம் கூடும் போது, மனசாட்சி இருந்தால் உடனடியாக இந்த திருத்தத்தினை மீளப்பெறுங்கள். அவ்வாறில்லை எனில் அதனை மீளப்பெறும் வரை பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இதற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/180096
  25. Published By: VISHNU 31 MAR, 2024 | 11:18 PM (இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு அரசமுறை கடன்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குக்குள் மறுசீரமைக்காவிடின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். பஷிலின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதா ? அல்லது நாட்டை ஸ்திரப்படுத்துவதா ? என்பதை ஜனாதிபதியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் உண்மை வெளிவரவில்லை.திட்டமிடப்பட்ட அரசியல் நாடகமாகவே இந்த குண்டுத்தாக்குதலை கருத வேண்டும்.ஐந்து வருடகால சூழ்ச்சியின் ஊடாகவே கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு மேல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஞானசார தேரரை பயன்படுத்தி சிங்கள முஸ்லிம்; இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் திட்டமிட்ட வகையில் இன முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன.அதனை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமைய வேண்டும். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். வெளிநாட்டு அரசமுறை கடன்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் மறுசீரமைக்க வேண்டும்.இல்லையேல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்.அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என பஷில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். நாட்டில் அரசியல் ஸ்திரப்படுத்தலுக்காக பொதுத்தேர்தலை நடத்த கோருவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, பாராளுமன்றத்துக்கு சென்று விடலாம் என்று ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார். https://www.virakesari.lk/article/180092

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.