Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பாடசாலை பாடத்திட்டத்தை நவீனமயமாக்குவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது. 57 ஆரம்ப பாடசாலைகளிலும் 113 இடைநிலைப் பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10-க்கான பாடத்திட்டமே நவீனமயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாடத்திட்டம் நவீனமயமாக்கப்படவுள்ளது. பாரம்பரிய கற்பித்தல் முறையில் இருந்து விலகி மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவதே பாடத்திட்ட நவீனமயமாக்கலின் நோக்கம் ஆகும். புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் பரீட்சைக்காக கற்றல் எனும் மனப்பான்மையை மாணவர்களிடமிருந்து நீக்கி, புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298262
  2. 'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ் 05 APR, 2024 | 06:20 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த இங்கிலாந்து உலக சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இறுதிப் போட்டியில் மராயஸ் இரேஸ்மஸ், குமார் தர்மசேன ஆகியோர் கள மத்தியஸ்தர்களாக செயற்பட்டனர். நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக்கு கடைசி ஒவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ட்ரென்ட் போல்ட் வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசினார் பென் ஸ்டோக்ஸ். அடுத்த பந்தை பென் ஸ்டோக்ஸ் விசுக்கி அடிக்க மிட் விக்கெட் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மார்ட்டின் கப்டில் பந்தை தடுத்து நிறுத்தி விக்கெட்டை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசை திரும்பிய பந்து எல்லைக் கோட்டை கடந்து சென்றது. அவ்வேளையில் ஸ்கொயார் லெக் மத்தியஸ்தராக இருந்த இரேஸ்மஸ், தலைமை மத்தியஸ்தராக இருந்த குமார் தர்மசேனவிடம் 6 ஓட்டங்கள் என சைகை செய்தார். இதனை அடுத்து எண்ணிக்கை பதிவாளர்களை நோக்கி 6 ஓட்டங்கள் என தர்மசேன கைகை செய்தார். பென் ஸ்டோக்ஸும் ஆதில் ராஷித்தும் 2 ஓட்டங்களை எடுத்ததாகவும் எறிபந்தினால் 4 ஓட்டங்கள் கிடைத்ததாகவும் அப்போது கருதப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு 5 ஓட்டங்களுக்கு பதிலாக 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டது தவறு என இப்போது இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பதால் 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவரது 'காலம் கடந்த ஞானம்' தெரிவிக்கிறது. மாட்டின் கப்டில் பந்தை எறிந்தபோது பென் ஸ்டோக்ஸ், ஆதில் ராஷித் ஆகிய இருவரும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பது சலன அசைவுகளில் நிரூபணமாகியது. இது தொடர்பாக டெலிகிராப் பத்திரிகைக்கு அண்மையில் இரேஸ்மஸ் தெரிவித்திருந்ததாவது: ''மறுநாள் காலை நான் காலை வுக்கு செல்வதற்காக எனது அறைக் கதவைத் திறந்த அதேநேரம் குமார் தர்மசேனவும் அவரது அறைக் கதவைத் திறந்தார். அப்போது அவர் 'நாங்கள் பாரிய தவறு இழைத்தோம் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?' என என்னிடம் கூறினார். அப்போதுதான் நான் அதை அறிந்தேன். ஆனால், மைதானத்தில் நாங்கள் வெறுமனே ஆறு என எங்களுக்குள்ளே கூறிக்கொண்டோம். ஆறு, ஆறு, அது ஆறு என கூறினோமே தவிர துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தார்களா என்பதை கவனிக்கவில்லை. அவ்வளவுதான்' என்றார். இந்தத் தவறுக்காக மட்டும் அவர் வருந்தவில்லை. இன்னும் ஒரு தவறை 'தவறுதலாக' செய்திருந்தார் இரேஸ்மஸ். நியூஸிலாந்து முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரொஸ் டெய்லர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார். பந்துவீச்சுப் பகுதி விளிம்பில் (wide of the crease) இருந்து மார்க் வூட் வீசிய பந்து ரொஸ் டெஸ்லரின் முழங்காலுக்கு மேல் பட்டது. களத்தடுப்பில் எல்.பி.டபிள்யூ.வுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் ரொஸ் டெய்லர் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பிட்டார். நியஸிலாந்து தனது மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவுசெய்திருந்ததால் ரொஸ் டெய்லர் மீளாய்வு செய்ய முடியாதவராக களம் விட்டகன்றார். 2019 உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வெற்றிகர மீளாய்வுக்கான வாய்ப்பே அனுமதிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக இரேஸ்மஸ் என்ன கூறினார் தெரியுமா? 'அது சற்று உயர்வாக இருந்தது. ஆனால் அவர்கள் மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவு செய்திருந்தார்கள். ஏழு வாரங்கள் நீடித்த உலகக் கிண்ணப் போட்டியில் நான் இழைத்த ஒரே ஒரு தவறு அதுதான். அதனால் நான் பின்னர் மிகுந்த கவலை அடைந்தேன். ஏனெனில் அதனை நான் சரியாக தீர்மானித்திருந்தால் தவறு இழைக்காதவனாக உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்திருப்பேன். மேலும் எனது அந்தத் தீர்ப்பு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில் சிறந்த வீரர்களில் அவரும் (ரொஸ் டெய்லர்) ஒருவர்' என இரேஸ்மஸ் குறிப்பிட்டார். இந்த மத்தியஸ்தர்தான் (இரேஸ்மஸ்) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு 'டைம்ட் அவுட்' தீர்ப்பு வழங்கியவர் ஆவார். அவரேதான் இப்போது 'டைம்ட் அவுட்' ஆன நிலையில் 2019 உலகக் கிண்ண தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோன்று ஏஞ்சலோ மெத்யூஸின் டைம்ட் அவுட் ஆட்டம் இழப்பு தொடர்பாக இரேஸ்மஸ் காலம் கடந்து தவறை ஒப்புக்கொண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. ஆனால், குமார் தர்மசேன அப்போது என்ன கூறியிருந்தார் தெரியுமா? உலகக் கிண்ணப் போட்டி முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் 'எனது தீர்மானம் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை' என குறிப்பிட்டிருந்தார். 'போட்டிக்கான சகல மத்தியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது' என அவர் கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/180545
  3. 15 இந்திய மீனவர்கள் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ். நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 15 ஆம் திகதி இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் ஜே. கஜநிதிபாலன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்காக 15 மீனவர்களுக்கும் தலா 1000 மற்றும் 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனை அவர்கள் செலுத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. கடற்படையினரை தாக்கியதாக தெரிவித்து சுமத்தப்பட்டிருந்த 03 ஆம் 04 ஆம் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுச்சொத்தான கடற்படையின் படகை சேதப்படுத்தியமை தொடர்பில் சுமத்தப்பட்டிருந்த 05 ஆவது பிரதான குற்றச்சாட்டின் கீழ் மீனவர்களுக்கு எதிராக 03 இலட்சம் ரூபா அபராதமும் 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். https://thinakkural.lk/article/298264
  4. அமெரிக்காவின் நியுஜேர்சியை தாக்கியது சிறிய பூகம்பம் 05 APR, 2024 | 08:41 PM அமெரிக்காவின் நியுஜேர்சியை பூகம்பம் தாக்கியுள்ளதாகவும் நியுயோர்க்கில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும தகவல்கள் வெளியாகின்றன. பூகம்பம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பூகம்பமா என அவ்வேளை உரையாற்றிக்கொண்டிருந்த சேவ்தவசில்ரன் பிரதிநிதி கேள்வி எழுப்பினார். புரூக்ளினில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அமெரிக்காவின் பல நகரங்களை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/180552
  5. அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது - அமைச்சர் டக்ளஸ் 05 APR, 2024 | 08:50 PM பொன்னாவெளி பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் உண்மைகளை அறிவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சுயலாப அரசியலுக்கான கபடத்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பொன்னாவெளிப் பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை இன்று (05) மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முற்பட்டவேளை, சில அரசியல் தரப்புக்களால் தவறாக வழிநடத்தப்பட்ட சிலர், ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆய்வின் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நிதானமான முறையில் கலந்துரையாடி உண்மைகளை புரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே அங்கிருந்த பலர் காணப்பட்டனர். இதனால், குறித்த தரப்பினருக்கு உண்மைகளை தெளிவுபடுத்துவது உடனடியாக சாத்தியமில்லை என்பதை புரிந்துகொண்ட அமைச்சர், தன்னுயை முயற்சியை இடைநிறுத்தி திரும்பிய போதிலும், மக்களுக்கு நன்மைகளை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு நடவடிக்கைகளை தொடர்வதற்கான பணிகள் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180549
  6. சோழ மன்னனின் பொறாமையும் ஆவேசமும்.. வடக்கில் இருந்த ராஜாவின் நிலை என்ன? https://www.facebook.com/100043983976036/videos/968465944187593?__so__=watchlist&__rv__=video_home_www_playlist_video_list முத்தமிழ்னு பேசுவாங்க.. ஆனால் யாருக்கும் இது தெரியாது! - பாண்டியக்கண்ணன் https://www.facebook.com/FullyNewsy/videos/முத்தமிழ்னு-பேசுவாங்க-ஆனால்-யாருக்கும்-இது-தெரியாது-பாண்டியக்கண்ணன்/721051806580297/
  7. Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 11:30 AM நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். 'இலங்கையின் முன்னேற்றம் இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் இணைந்து செல்லும்போதே மேலும் மேலும் நாட்டை முன்னேற்ற முடியும். எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் சகோதரர்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவே காலம் காலமாக நடந்து வந்த நிலையில் இம்முறை அனைவரினதும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும். ஆகையினால் அனைவரது முன்னேற்றத்துக்கும் எமக்கான ஆதரவை ஒருமித்து வழங்க வேண்டும். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கப்படுகின்றபோது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி அமையப்பெறும். இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள எம்முடன் அனைவரும் வாருங்கள். எனவே, அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குங்கள் என இங்கு வைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கோருகின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180491
  8. கச்சத்தீவை இந்தியாவுக்குத் தரும் எண்ணம் இல்லை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குச் சென்ற விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழன், ஏபர்ல் 5) யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைக் குறிப்பிட்டார். கன்னியாகுமரிக்கு அருகாமையிலுள்ள வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா தனது நலன்களை கருத்திற் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார். இலங்கையின் மீனவர்களுக்கும், கடல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வளங்களை கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை எதிர்காலத்தில் இலங்கை உரிமை கோரக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா கையகப்படுத்தி இருக்கலாம் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க இடமளிக்க முடியாது என இலங்கை மீனவர்களும் கூறுகின்றனர். கச்சத்தீவு விவகாரம் கச்சத்தீவு பகுதியை காங்கிரஸ் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரஸை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது," என பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி இதனை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், கச்சத்தீவு விவகாரம் பாரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து, இலங்கையிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசின் பதில் என்ன? கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பதிலளித்தார். அப்போது அவர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றது என்றும், இவை தேர்தல் காலகட்டங்களில் மேலெழுகின்றன என்றும் கூறினார். “1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் செய்த ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் இலங்கைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடலுக்குள்ளும் போய் தொழில் செய்யலாம் என்று இருந்தது. பின் 1976-ஆம் ஆண்டு அது தடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதும், இலங்கை மீனவர்கள் இந்தியாவிற்குள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது,” என்றார். மேலும், “அதேபோல இந்த வாட்ஜ் பேங்க் என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுமரிக்கு கீழ் அதிக வளங்களை கொண்ட பெரிய பிரதேசமாக இருக்கின்ற ஒரு பகுதி. அதாவது கச்சத்தீவை போல 80 மடங்குக்கு மேற்பட்ட ஒரு பிரதேசம். அந்த பிரதேசம் 1976-ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டு, அவர்கள் அதனை உள்வாங்கிக் கொண்டார்கள்,” என்றார். அதிக வளங்கள் உள்ள பகுதி வாட்ஜ் பேங்க் என்றபடியால், இலங்கை மீனவர்கள் அங்கு தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை அப்பகுதிக்கு உரிமை கோரிவிடக்கூடாது என்ற ஒரு உள்நோக்கத்துடன் தான் அது செய்யப்பட்டதாக தான் கருதுவதாக அவர் கூறினார். மேலும் “கச்சத்தீவை திருப்பி கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை," என டக்ளஸ் தேவானந்தா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன? இந்நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''கச்சத்தீவு என்பது எங்களுடைய தீவு என்பதே முடிவு. அது சம்பந்தமாக இந்தியாவில் கதைக்கின்றார்கள் என்றால், முழுமையாக அரசியல் நோக்கமாக தான் கதைக்கின்றார்கள். அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இது பற்றிய கதை வருகின்றது,” என்றார் நற்குணம். “இந்திரா காந்தி அம்மையார் இருந்த நேரம் 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அதனூடாக [கச்சத்தீவு] இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்திற்கு மாநில தரப்பு பெற்றுத்தருவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று,” என்றார். மேலும், “இந்திய வெளிவிவகார அமைச்சர்கூட சொல்லியிருக்கின்றார், இந்திய டோலர் படகுகள் எல்லை தாண்டிப் போவது குற்றம். கச்சத்தீவு பகுதிக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றம்,” என்றார். மேலும், வாக்கு அரசியலுக்காகவே இது இந்தியாவில் பேசுபொருளாகியிருக்கிறது என்று அவர் கூறுகின்றார். ‘வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் நாங்கள் செல்லவேண்டிய நிலை வரலாம்’ வாட்ஜ் பேங்க் பகுதி குறித்தும் நற்குணம் தனது கருத்தை வெளியிட்டார். ''அந்த பிரதேசங்களில் நல்ல மீன் வளம் இருக்கின்றது. வாட்ஜ் பேங்க் என்ற பகுதிக்குள் நாங்களும் தொழில் செய்யக்கூடிய வகையிலான சட்ட அமைவு தான் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் அந்த பாரிய கடல் பிரதேசத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு, கச்சத்தீவு பகுதியை வழங்கினார்கள்,” என்றார் அவர். “கச்சத்தீவு சட்டப்படி எங்களுடையது. கச்சத்தீவை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களிடமும் சர்வதேச கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையிலான படகுகள் இருக்கின்றது. அதைக் கொண்டு வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் சென்று நாங்களும் மீன்பிடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு கட்டத்திற்கு மாற வேண்டிய நிலைமையும் எங்களுக்கு ஏற்படும். அப்படியொரு தேவைப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது. கச்சத்தீவை வலியுறுத்தினால், நாங்களும் வாட்ஜ் பேங்க் பகுதியை வலியுறுத்தும் நிலை வரும்," என அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/cv2yxz0qqxeo
  9. காஸாவுக்கு எல்லைகள் ஊடான விநியோகங்களை தற்காலிகமாக அனுமதிக்கிறது இஸ்ரேல் Published By: SETHU 05 APR, 2024 | 12:13 PM தனது எல்லைகளுக்கு ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி, காஸாவின் வடபகுதியிலுள்ள எரீஸ் கடவையை ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேல் திறக்கவுள்ளது. அத்துடன், காஸாவின் வடபகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இஸ்ரேலிய நகரான அஷ்தோத்திலுள்ள துறைமுகத்துக்கு ஊடாக விநியோகங்களை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அனுமதித்துள்ளதாகவும், ஜோர்தானிலிருந்து வரும் உதவிகளை அதிகரிப்பதற்கு அனுமதித்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸா விடயத்தில் தனது கொள்கையில் கடும் மாற்றம் ஏற்படலாம் என அமெரிக்க எச்சரித்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/180497
  10. பரபரப்புக்கு மத்தியில் குஜராத்தை ஒரு பந்து மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றி கொண்டது பஞ்சாப் Published By: VISHNU 04 APR, 2024 | 11:55 PM (நெவில் அன்தனி) அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் ஷஷான்க் சிங் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் குஜராத் டைட்டன்ஸை ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிகொண்டது. இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 17ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. ஷஷாங்க சிங் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், ப்ரப்சிம்ரன் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை உறுதிசெய்தன. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆரம்ப வீரராக களம் இறங்கி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் வீண்போனது. அணித் தலைவர் ஷிக்கர் தவான் 2ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தொடர்ந்து ஜொனி பெயாஸ்டோவ் (22), ப்ர்ப்சிம்ரன் சிங் (35) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் நீண்ட நேரம் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சாம் கரன் (5) களம் புகுந்த சொற்ப நேரத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஸிம்பாப்வே சகலதுறை வீரர் சிக்கந்தர் ராசா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். (111 - 5 விக்.) இந் நிலையில் ஷஷாங்க் சிங், ஜிட்டேஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6ஆவது விக்கெட்டில் 19 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜிட்டேஷ் ஷர்மா 8 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் பஞ்சாப் கிங்ஸுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 22 பந்துகளில் பகிர்ந்த 43 ஓட்டங்கள் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கான திருப்பு முனையாக அமைந்தது. 17 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்ற அஷுட்டோஷ் ஷர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்து வைட் ஆனதுடன் 2ஆவது பந்தில் ஹாப்ரீட் சிங்கினால் ஓட்டம் பெறமுடியவில்லை. கடைசி 4 பந்துகளில் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 3ஆவது பந்தில் ஹாப்ரீட் சிங் ஒற்றை ஒன்றை எடுத்து ஷஷாங்க் சிங்குக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அடுத்த பந்தை பவுண்டறி நோக்கி விசுக்கிய ஷஷாங்க் சிங், வெற்றி ஓட்டத்தை லெக் பை மூலம் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் நூர் அஹ்மத் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் அணித் தலைவர் ஷுப்மான் கில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் 4 இணைப்பாட்டங்களில் பங்காற்றி குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தார். ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் கேன் வில்லியம்ஸனுடன் 2 ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷனுடன் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் விஜய் ஷன்கருடன் 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் பகிர்ந்தார். கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷன் 33 ஓட்டங்களையும் விஜய் ஷன்கர் 8 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் ராகுல் தெவாட்டியாவுடன் மேலும் 35 ஓட்டங்களைப் ஷுப்மான் கில் பகிர்ந்தார். ஆரம்ப வீரராக களம் இறங்கி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஷுப்மான் கில் 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். இந்த எண்ணிக்கையே இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தனி நபர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் புதன்கிழமை பெற்ற 85 ஓட்டங்களே இதற்கு முன்னர் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. ராகுல் தெவாட்டியா 8 பந்துகளில் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/180465
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் "இன்சுலின் எதிர்ப்பு" பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அல்லது உணவுமுறைகள் இருப்பதாகக்கூறும் புத்தகங்கள் வெளியாகின்றன. இது பற்றிய வீடியோக்களும் பகிரப்படுகின்றன. ·இன்சுலின் எதிர்ப்பு’ வகை 2 நீரிழிவு (Type 2 Diabetes) உட்பட கடுமையான மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தச்சொல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்சுலின் எதிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன? இதை சரி செய்ய முடியுமா? சாப்பிடாமல் இருப்பது அதாவது ஃபாஸ்டிங் அதை கட்டுப்படுத்த உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். இன்சுலின் என்றால் என்ன? கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் மனித உடலில் உள்ள முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும். ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் கட்டுப்படுத்துவது அதன் வேலை. உடலில் அதை சேமித்து சக்திக்காக பயன்படுத்த அது அனுமதிக்கிறது. கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். உடலில் இன்சுலின் பின்வரும் வழிகளில் செயல்படுகிறது: உடல் நீங்கள் உண்ணும் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு தேவைப்படும் ஆற்றலின் முதன்மை ஆதாரமாக கருதப்படுகிறது. குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் நகர்கிறது, மேலும் இன்சுலின் வெளியிட கணையத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்களுக்குள் நுழைய இன்சுலின் உதவுகிறது. இதனால் அது ஆற்றலுக்காக பயன்படுத்தப்படலாம் அல்லது பிற்கால பயன்பாட்டிற்காக அது சேமிக்கப்படும். குளுக்கோஸ் உடல் செல்களுக்குள் நுழைந்து, ரத்தத்தில் அதன் அளவு குறையும் போது, இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு அது கணையத்திற்கு சமிக்ஞை செய்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்சுலின் எதிர்ப்பு ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? இன்சுலின் எதிர்ப்பு என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள், இன்சுலினுக்கு ஏற்றவாறு செயல்படாமல் இருக்கும்போது ஏற்படும். இது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது. கணையம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸின் அளவை அகற்ற அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது ஹைப்பர் இன்சுலினீமியா என அழைக்கப்படுகிறது. பலவீனமான செல் செயல்பாட்டை ஈடுசெய்ய கணையம் போதுமான இன்சுலினை சுரக்கும் வரை, ரத்த சர்க்கரை அளவு ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்கும். இருப்பினும் இன்சுலினுக்கான செல் எதிர்ப்பு அதிகரித்தால், அது உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு வழிவகுக்கிறது. இது காலப்போக்கில் வகை 2 நீரிழிவு மற்றும் பிற மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும். ·ஃபிராங்க்ளின் ஜோசப், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையில் ஆலோசகர் மருத்துவர் ஆவார். அவர் நாளமில்லா சுரப்பியியல், நீரிழிவு மற்றும் உள்உறுப்புகள் மருத்துவம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் Dr Frank's Weight Loss Clinic இன் நிறுவனரும் ஆவார். இன்சுலின் எதிர்ப்பு என்பது "மரபியல், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படும் ஒரு சிக்கலான நிலை" என்கிறார் அவர். சரியான காரணம் நபருக்கு நபர் மாறுபடலாம். இது உருவாவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்: பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்புடையது. இன்சுலின் எதிர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன? உடல் பருமன்: அதிகப்படியான உடல் கொழுப்பு, குறிப்பாக வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்பை உடையது. உடல் உழைப்பின்மை: வழக்கமான உடல் செயல்பாடு இல்லாதது இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். மரபியல்: சிலர் மரபணு ரீதியாக இன்சுலின் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். மோசமான உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்த உணவு இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். இந்த உணவுகள் ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். நாள்பட்ட மன அழுத்தம்: கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினின் திறனில் தலையிடலாம். இன்சுலின் எதிர்ப்பிற்கு இதுவும் பங்களிக்கிறது. தூக்கமின்மை: தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம், இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை பாதிக்கும். தூக்கமின்மையானது ஹார்மோன் அளவை சீர்குலைத்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். சில மருத்துவ நிலைமைகள்: பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்), குஷிங்ஸ் சிண்ட்ரோம் மற்றும் ஃபேட்டி லிவர் நோய் போன்ற நிலைமைகள் இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தை அதிகரிக்கலாம். முதுமை: வயதாகும்போது செல்கள் இன்சுலினின் சொல்படி கேட்பது குறையும். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்," என்கிறார் பேராசிரியர் வாசிம் ஹனிஃப். ரமலான் நோன்பு ரமலான் மாதத்தில் பல இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன் தொண்டு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. "நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் நீரிழிவு சிகிச்சை மருத்துவ குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே நோன்பு பற்றி முடிவுசெய்ய வேண்டும்,” என்று பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் நாளமில்லாசுரப்பியியல் பேராசிரியரும், நீரிழிவு நோய்க்கான மருத்துவ இயக்குநருமான வாசிம் ஹனிஃப் கூறினார். "உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்,"என்றார் அவர். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளிடையே இன்சுலின் சென்ஸிடிவிட்டியை மேம்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று பேராசிரியர் ஜோசப் குறிப்பிட்டார். கூடுதலாக உண்ணா நோன்பு காலங்களில் சில நபர்களுக்கு எடை இழப்பு அல்லது உடல் கொழுப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் குறிப்பாக பருமனான நபர்களில் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம்." ”இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் மீது ரமலான் நோன்பின் விளைவு, வயது, பாலினம், ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சனைகள், உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு அளவுகள் போன்ற காரணிகளைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும்,” என்று அவர் மேலும் கூறுகிறார். "ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். நோன்பு காலத்தில் பாதுகாப்பான உண்ணாவிரத நடைமுறைகள் மற்றும் ஆரோக்கிய மேலாண்மையை உறுதி செய்வது முக்கியம். சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை அவர்கள் பெறவேண்டும்." " உடல்நல நன்மைகளை அதிகரிக்க, இண்டர்மிடெண்ட் (இடைப்பட்ட) ஃபாஸ்டிங் அல்லது முழு ஃபாஸ்டிங்கின் போது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்" என்று அம்மானைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த முறை ஃபாஸ்டிங் அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கிறார் டாக்டர். நிதின் கபூர் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் நல்லதா? இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது, பல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகிறார்கள். பகலில் நீண்ட நேரம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, உணவுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பது அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் சாப்பிடாமல் இருப்பது ஆகியவை இதில் அடங்கும். டாக்டர். நிதின் கபூர், தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பியல் (நீரிழிவு, உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற ஹார்மோன் கோளாறுகள் பற்றிய ஆய்வு) பேராசிரியராக உள்ளார். இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங்கால் வளர்சிதை மாற்ற நன்மைகள் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்ட எந்த டயட்டும் நோயாளியை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். எந்த வகையான உணவு அல்லது உண்ணாவிரதத்திலும், "நீண்ட கால நிலைத்தன்மையை" அவர் கோடிட்டுக்காட்டுகிறார். "உங்கள் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்ய முடியுமா?.நீங்கள் 15 பவுண்டுகளை இழக்க விரும்பலாம். ஆனால் நீங்கள் டயட்டிங்கை நிறுத்தினால் அது ஆவேசத்துடன் திரும்பி வரும்." இந்த வகை டயட் பற்றிய ஆராய்ச்சி இன்னும் வளர்ந்து வருகிறது என்றாலும் இது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன என்று பேராசிரியர் ஜோசப் குறிப்பிட்டார். "உதாரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை மாற்றாமல் உடல் பருமன் இல்லாதவர்களில் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது என்பதை 2015 இல் செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது." இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் எடை இழப்புக்கு வழிவகுக்கும். இது மேம்பட்ட இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்சுலின் எதிர்ப்பு இருப்பவர்களுக்கு பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இன்சுலின் எதிர்ப்பு அறிகுறிகள் இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. இருப்பினும், இன்சுலின் எதிர்ப்பு இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் (குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி), உயர் ரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடு அளவுகள் (கொழுப்பின் மோசமான வடிவம்), குறைந்த HDL கொழுப்பு ( நல்ல வடிவம்), மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும் என்று பேராசிரியர் ஜோசப் சுட்டிக்காட்டினார். இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தினால் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தால் அந்த நபருக்கு மற்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார். அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதில் அடங்கும். இந்த அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் இன்சுலின் எதிர்ப்பு உள்ள அனைவருக்கும் இந்த எல்லா அறிகுறிகளும் இருக்காது என்று என்று அவர் வலியுறுத்துகிறார். "கூடுதலாக, இந்த அறிகுறிகள் மற்ற சுகாதார நிலைமைகளையும் குறிக்கலாம், எனவே சரியான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம்,” என்றார் ஜோசப். "டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சிக்கல்களைத் தடுக்க இன்சுலின் எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேலாண்மை முக்கியம்". பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் ஜோசப். மிகவும் கடுமையான நிலைமைகளுக்கு இது வழிவகுக்கும் சாத்தியகூறு என்ன? இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் படாவிட்டால் அல்லது நிர்வகிக்கப்படாவிட்டால் அவர்களில் சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் ஜோசப். "ஆனால் இது மரபியல், உடல் பருமன், உடல் செயல் தன்மை, உணவு, வயது மற்றும் இனம் போன்ற பல காரணிகளைச் சார்ந்துள்ளது.” "சில இனக்குழுக்கள் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு காகசியர்களை ஒப்பிடும்போது வகை 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளது" என்று அவர் மேலும் கூறினார். கிளைசெமிக் அமைப்பு என்றால் என்ன? கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் உணவுகளை வகைப்படுத்த பயன்படும் ஒரு அமைப்பாகும். நாம் உண்ணும் உணவு ரத்த சர்க்கரையின் அளவை, விரைவாகவோ, மிதமாகவோ அல்லது மெதுவாகவோ அதிகரிக்கச் செய்கிறது என்பதை இது காட்டுகிறது. மெதுவாக உடைபடும் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதில் சில காய்கறிகள், பழங்கள், இனிப்பு சேர்க்காத பால், பருப்பு வகைகள், முழு தானிய ரொட்டி மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கும். மறுபுறம், சர்க்கரை, சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள், வெள்ளை உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை அரிசி ஆகியவை உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள். இது ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு காரணமாகிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட உணவு ஆரோக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க கிளைசெமிக் குறியீடு மட்டும் போதாது என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, பெரும்பாலான சாக்லேட் வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கலோரிகள் அதிகம்.அதே நேரம் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை அல்ல. எடுத்துக்காட்டாக, தர்பூசணி போன்ற சில பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை நன்மை தரக்கூடியவை. எனவே, உணவு ஆரோக்கியமானதாகவும், சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன. இன்சுலின் எதிர்ப்பு குணமாகக்கூடியதா? "வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருந்துகளின் மூலம் இன்சுலின் எதிர்ப்பை பெரும்பாலும் மாற்றியமைக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் கணிசமாக மேம்படுத்த முடியும்" என்கிறார் பேராசிரியர் ஜோசப். ”இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். கூடவே மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்." என்று ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் குறிப்பிட்டார். ஜோசப் மற்றும் அல்-அப்தாலத் இருவரும் வழங்கிய இரண்டாவது அறிவுரை, வழக்கமான உடற்பயிற்சியை பராமரிக்க வேண்டும் என்பதுதான். எடையை குறைப்பது, குறிப்பாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்தலாம். நாள்பட்ட மன அழுத்தத்தை குறைப்பதும் முக்கியமானது என்று பேராசிரியர் ஜோசப் கூறுகிறார். "தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற நுட்பங்கள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவது நன்மை பயக்கும்," என்றார் அவர். போதுமான அளவு தூங்குவதும் மிகவும் முக்கியம். இறுதியாக, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன. மருந்து உதவுமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும். https://www.bbc.com/tamil/articles/cd1786jrzj2o
  12. 05 APR, 2024 | 10:07 AM மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.காரைக்கால்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கைகடற்படையினர் அடிக்கடி கைதுசெய்கின்றனர். மேலும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்கின்றனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் விடுதலைசெய்யப்படுகின்றனர். ஆனால், படகுகளை ஓட்டிச் செல்லும் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், படகுகளையும் இலங்கை அரசு விடுவிப்பதில்லை. தற்போது 6 மாத சிறை தண்டனை பெற்று இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களையும், 4 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், 2 நாட்களுக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால், தங்களின் விசைப்படகுகளில் கருப்புக் கொடியை ஏற்றவும் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் படகுகள் கடலுக்குச் செல்லாமல், கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/180481
  13. Published By: DIGITAL DESK 7 05 APR, 2024 | 10:15 AM இளம் பிக்கு ஒருவர் பொலிஸாரிடம் தன்னை கைது செய்து தண்டனை வழங்கமாறு கூறி யக்கல பொலிஸ் நிலையத்தில் நேற்று (04) வியாழக்கிழமை சரணடைந்துள்ளார். இவர் தான் செய்த திருட்டுக் குற்றச் செயல்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி தனது தாயுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது பொலிஸாரினால் இளம் பிக்கு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு தான் செய்த திருட்டுக் குற்றச் செயல்களுக்காக தனக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு தண்டனை கிடைக்கும் வரையில் தான் தியான நிலையில் ஈடுபடுவதற்கு மனநிம்மதி இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, தனக்கு தண்டனை கிடைத்து மன அமைதி பெற வேண்டும் என்பதற்காகவே இவர் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/180477
  14. Published By: VISHNU 05 APR, 2024 | 02:07 AM எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக் கடந்து வந்தவன். தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு. துரதிஸ்டவசமாக எனக்கு கிடைத்த ஆசனங்கள் போதாமையால் தெற்குடன் பேரம் பேசும் சக்தியை மக்கள் வழங்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பு மட்டும் எனக்கு இருக்கிறது, மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன். ஆனால் சில விடயங்களை தொடக்கி விட்டேன் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டேன். ஆகவே எனக்கும் வயது சென்று கொண்டிருக்கிறது உடல் இயலாமை தெரிகிறது, அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180470
  15. Published By: VISHNU 05 APR, 2024 | 01:37 AM திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. திருகோணமலை மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானப் பணிகளுக்கு நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அரச திணைக்களங்களினுடைய அனுமதியும் பெறப்படாமல் சட்ட விரோதமான முறையில் குறித்த கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக நகர சபையின் செயலாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார் எனினும் கட்டுமானங்கள் வழமையைப் போல் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பாரிய புத்தர் சிலை வைக்கப்படவுள்ளதாகவும், ஒருகாலத்தில் அப்பகுதியில் விகாரை அமைக்கப்படலாம் எனவும் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் குறித்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் காணிக்குரிய ஆவணங்களை வழங்கக்கோரி கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்கள். மடத்தடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் நிலையம் உட்பட அரச நிர்வாக மட்டங்களிலும் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அது அகற்றப்படும் என கூறப்பட்டதாகவும் எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது. குறித்த இடத்திலேயே பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் எனவும், இதுவும் ஒரு வகையாக இன ஆக்கிரமிப்பு என புத்திஜீவிகள் கவலை வெளியிடுகின்றனர். அத்துடன் நாட்டின் சட்டம் மற்றும் அரச நிறுவனங்கள் பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இன நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தமிழர் பகுதிகளில் பௌத்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு இனங்களுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் இவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயமானது கி.பி 1650 ஆம் ஆண்டளவில் பெரியராசகோன் முதலியார் என்பவரால் திருகோணமலை – மடத்தடி பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. குறித்த பகுதியில் 1958 ஆம் ஆண்டு கலப்பகுதியில் குறித்த பகுதியை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். தற்போது 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் கோவிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/180466
  16. இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது! 05 APR, 2024 | 06:18 AM சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமகராம போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என்றும் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மன்னார் மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/180474
  17. சிட்டுக்குருவிகளை பாதுகாக்க இந்த யோசனை நல்லா இருக்கே! - ஓய்வுபெற்ற ஆசிரியரின் அசத்தல் ஐடியா Save Sparrow: வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர். மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவாக்கப்படுகின்றன.
  18. Published By: SETHU 04 APR, 2024 | 06:33 PM இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது. காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை. எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும். https://www.virakesari.lk/article/180455
  19. அண்ணை எங்களுடைய வீட்டில் சோலார் பொருத்திய நிறுவனம் கிறீன் சண்பவர் எனர்ஜி https://greensunpowerenergy.com/contact/ . JA பனல், 550 Watts. 10Kw மொத்தமாக 20 பனல்கள் பொருத்தவேண்டுமாம். ட்ரான்ஸ்போமருக்கு கிட்டவாக(100-300மீற்றர்களுக்குள்) பொருத்தும் இடம்(வீடு) இருந்தால் கூடுதல் Kw பொருத்த மின்சாரசபை அனுமதிப்பார்கள். 5Kw மேல் எடுப்பதென்றால் 3பேஸ் இணைப்பு எடுக்கவேண்டும். 10Kw சோலார் பொருத்த ஏறத்தாழ 20லட்ச ரூபா தேவைப்படும். பற்றி பக்கப் செய்வதென்றால் கூடுதல் செலவாகும். ஹைபிரிட் இன்வேட்டர் பொருத்துவதற்கும் கூடுதல் செலவாகும். 30/40Kw பொருத்தும் போது சராசரிச் செலவு குறைவு. இது தான் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விபரங்கள். மேலே இணையப் பக்கத்தில் தொடர்பிலக்கம் உள்ளது, மேலதிக விபரங்களை கேட்கலாம்.
  20. வீட்டிலும் இருக்க முடியவில்லை, வெளியிலும் போக முடியாது. சவரை திறந்து விட்டு தண்ணீர் விழும்போது மட்டும் ஆனந்தமாக இருக்கிறது.
  21. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே அக்கா, வாழ்க வளத்துடன்.
  22. சூரிய கிரகணம்: 50,000 அடி உயரத்தில் நிழலைக் கிழித்துச் செல்லும் விமானத்தில் பறந்தபடி இந்த 4 விஞ்ஞானிகள் என்ன செய்யப் போகிறார்கள்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் ஓ'கலெகன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த வாரம் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிலத்தில் இருந்து பார்ப்பார்கள். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலி நாசா விமானக் குழுவினர் அதை மிக நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏப்ரல் 8 (திங்கட்கிழமை) அன்று வட அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணம் நிகழும். சுமார் 3.1 கோடி மக்களால் அதை கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் பெரும்பகுதியிலும் இதை பார்க்க முடியும். மேலும் இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இவை அனைத்தும் மோசமான வானிலை காரணமாக நிறைவேறாமல் போகலாம். கடந்த 1999-ஆம் ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நிகழ்ந்த கிரகணத்தை பார்க்கமுடியாமல் மேக கூட்டங்கள் மறைத்துவிட்டன என்பது நினைவுகூரத்தக்கது. எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சராசரியாக 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி என்ன? வானத்தில் மேகங்களுக்கு மேலே பறப்பது. நான்கு நாசா விமானிகள் இதைத்தான் செய்ய இருக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கிரகணத்தை ஆய்வு செய்யவிருக்கும் விமானங்கள் நாசாவின் இரண்டு பிரத்யேக WB-57 விமானங்களில் மெக்சிகோ கடற்கரையில் இருந்து அக்குழுவினர் பறக்க உள்ளனர். தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கிரகணத்தின் முழுமையான பாதையை அவர்கள் பின்தொடர்வார்கள். சந்திரன் சூரியனைக் கடக்கும்போது ஏழு நிமிடங்கள் அவர்கள் அதன் நிழலில் இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தரையில் இருந்தால் அவர்கள் நான்கு நிமிடங்கள் மட்டுமே அதன் நிழலில் இருந்திருக்கமுடியும். சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வார்கள். “இது மிகுந்த உற்சாகம் தருகிறது" என்று இரண்டு விமானங்களில் ஒன்றின் சென்சார் உபகரண ஆபரேட்டரான நாசா விமானி டோனி கேசி கூறுகிறார். "நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்தப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிரகணத்தின் நிழல் உங்களுக்கு முன்னே செல்லும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்," என்றார் அவர். விமானத்தில் கேசி இயக்கும் ஒரு கேமரா மற்றும் தொலைநோக்கி அமைப்பு, சூரியனை அகச்சிவப்பு மற்றும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியில் புகைப்படம் எடுக்கும். சூரியன் சந்திரனை சுற்றிச்செல்லும்போது அதன் வளிமண்டலத்தையும் அதன் ஒளிமண்டலத்தையும் ஆராய இது உதவும். சூரியனுக்கு அருகில் உள்ள தூசி வளையம் மற்றும் சிறுகோள்களையும் இது ஆய்வு செய்யும். "இரண்டு விமானங்களின் மூக்கிலும் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது அங்கு ஒரு தொலைநோக்கியை வைக்க உங்களை அனுமதிக்கிறது" என்று கொலராடோவில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் சூரிய இயற்பியலாளர் ரிச் காஸ்பி கூறுகிறார். அவர் கேசி இயக்கும் கருவிகள் மூலம் ஆய்வுகளை நடத்துகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முழு சூரிய கிரகணம் நடந்தபோதும் இதேபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. “இந்த விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்கிறார் டோனி கேசி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரையில் இருந்தால் நான்கு நிமிடங்கள் மட்டுமே கிரகண நிழலில் இருக்க முடியும் 740 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானங்கள் கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு விமானங்களும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவை நோக்கிச் செல்லும். ஒவ்வொரு விமானமும் கிரகணத்தின் போது ‘சுமார் ஐந்து அல்லது ஆறு மைல்கள் இடைவெளியில்’ இருக்கும். மேலும் மணிக்கு 740 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும்,” என்று கேசி கூறுகிறார். இது கிரகண நிழலின் வேகத்தினும் குறைவானது. அது மணிக்கு சுமார் 2,500கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனால் விமானங்கள் நிழலுடன் சேர்ந்து பயணிக்கும்போது, தரையில் இருப்பதைக்காட்டிலும் அதிக நேரம் ‘முழு இருட்டில்’ இருக்க முடியும். "கிரகண நிழலின் வேகத்துடன் எங்களால் நிச்சயமாக போட்டிபோட முடியாது," என்கிறார் கேசி. "எனவே நாங்கள் சரியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே இருக்க விரும்புகிறோம். அது முற்றிலும் மறைக்கப்பட்டவுடன் நாங்கள் அதே பாதையை பின்பற்றி மீண்டும் அமெரிக்க வான்வெளிக்குள் செல்வோம்,” என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆராய்ச்சி செய்கையில் கிரகணத்தைப் பார்க்க நேரம் கிடைக்குமா? விமானங்கள் வானத்தில் நகரும்போது கிரகணம் அவற்றின் வலதுபுறத்தில் இருக்கும். கேசி கேமராவை இயக்கி, சூரியனின் வெவ்வேறு பகுதிகளில் அதை ஜூம் செய்து தரையில் இருக்கும் குழுவுடன் பேசுவார். காட்சிப் புலம் சூரியனின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கும். எனவே அவர் கிரகணத்தின் போது மொத்தக் காட்சியையும் பதிவுசெய்ய சூரியனின் ஒவ்வொரு பக்கத்திற்கும் இடையே கேமராவை நகர்த்துவார். சூரிய தீச்சுடர் போன்ற முக்கியமான அம்சங்களை அவர் பதிவு செய்வார். உபகரணங்களை இயக்குவது மிக முக்கியமானது என்றாலும், கிரகணத்தை தனது சொந்தக் கண்களால் பார்க்க தனக்கு நேரம் கிடைக்கும் என்று கேசி நம்புகிறார். “இந்த மிக விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். "அவசரமாக கிரகணத்தைப் பார்க்க நேரம் இருக்குமே தவிர, கருவிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நான் திரையையே பார்க்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர். இவ்வளவு உயரத்தில் இருப்பதால், வளிமண்டலம் மிக மெல்லியதாக இருக்கும். அதனால் தரையில் இருந்து பார்ப்பதைவிட கிரகணத்தை மிக நன்றாகப் பார்க்கமுடியும். "நீங்கள் மேகங்களுக்கு மேலே இருப்பதால் இது மிகவும் தெளிவாகத் தெரியும்," என்கிறார் கேசி. தரையில் இருந்து ஆய்வுசெய்வதைவிட மிக அதிக அளவு அறிவியல் ரீதியிலான பலன் இதன்மூலம் கிடைக்கும். 4,000கி.மீ. பயணிக்கும் திறன் இருப்பதால் கிரகணங்களை ஆய்வு செய்ய WB-57 விமானங்கள் மிகவும் பொருத்தமானவை. அவை காற்றில் அதிக நேரம் -- அதாவது சுமார் 6.5 மணி நேரம் - செலவிட முடியும். ஆனால் அவை கிரகணங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ராக்கெட் ஏவுதல்களை கவனிப்பது போன்ற பிற ஆராய்ச்சி அல்லது புகைப்படம் எடுக்கும் பணிகளுக்கும் நாசா இந்த விமானங்களை பயன்படுத்துகிறது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விமானங்கள் வானத்தில் நகரும்போது கிரகணம் அவற்றின் வலதுபுறத்தில் இருக்கும் மிகவும் சுவாரசியமான வேலை கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேசி இந்த விமானத்தில் பறந்து நிலவுக்கு நாசா அனுப்பிய ஆர்ட்டெமிஸ்-1 விண்கலத்தின் ஏவுதலை புகைப்படம் எடுத்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பேஸ்-X இன் மாபெரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முதல் ஏவுதலின் படத்தையும் அவர் எடுத்துள்ளார். அனைவரும் மிகவும் சுவாரசியமான வேலை என்று கருதும் பணியை கேசி செய்கிறார். ஆனால் அவர் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. "நான் வடமேற்கு அலபாமாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவன்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இந்த நிலைக்கு வந்துவிட்டேன். நான் இந்த தனித்துவமான விமானத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் பறந்து ராக்கெட் ஏவுதல்களை பார்த்தேன். இப்போது கிரகணத்தை பார்க்க இருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை கூடிய அளவு சிறப்பாக நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்," என்கிறார் கேசி. https://www.bbc.com/tamil/articles/cg697zg3n1po
  23. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை ; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 12:32 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இந்நிலையில், அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் அவர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதீடு சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு, குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அத்தோடு, அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து, குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பத நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது. கடந்த வழக்கின்போது அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180410
  24. திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், உணவு விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298141

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.