Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கரைவலையும் லைலா வலை போல கடல் வளத்தை அழிக்கக் கூடியதா? வலையைப் பார்க்கையில் குஞ்சு மீனும் தப்பாது போல இருக்கே?!
  2. RCB vs RR: சதம் அடித்தும் விமர்சிக்கப்படும் விராட் கோலி - ராஜஸ்தான் ஹீரோவாக உருவெடுத்த பட்லர் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் அதிகமான சதங்கள், டி20 போட்டிகளில் 3வது அதிகபட்ச சதங்கள் என சாதனைகள் படைத்தும், அணியின் ஸ்கோர் உயர்வுக்காக தனி ஒருவனாகப் போராடி சதம் அடித்தும் விராட் கோலி சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவது வியப்பாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. GOAT பேட்டர் வரிசையில் விராட் கோலி உண்டு என்பதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டாலும், அவரின் சமீபத்திய பேட்டிங்கில் ரன் குவிக்கும் வேகம் அதிகரித்த போதிலும் அவர் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். விராட் கோலி 20 ஓவர்களையும் தனக்கானதாக மாற்றி களமாடி, ரன்களை குவித்தாலும் அது அவரின் சுயநலமாகவே ரசிகர்களில் ஒரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி தோற்றதுகூட சமூக ஊடகங்களில் பெரிதாக விமர்சிக்கப்படவில்லை, கிங் கோலி அடித்த சதமும், அவர் எடுத்துக்கொண்ட பந்துகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கிண்டல் செய்யப்பட்டும் வருகிறது. “ஆங்கர் ரோல்” அவதாரம் எடுக்கும் கோலியின் பேட்டிங் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடத்தைப் பெற்றுத் தராது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வீணடித்த ராஜஸ்தான் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4வது வெற்றியைப் பெற்று புள்ளி அட்டவணையில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால் நிகர ரன்ரேட் 1.120 ஆக மட்டுமே வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் 2.518 ஆக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி விரைவாக சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும். ஆனால், 15 ஓவர்களுக்கு பின் ராஜஸ்தான் ரன் குவிப்பு வேகம் குறைந்து கடைசி ஓவர் வரை இழுத்து வந்துவிட்டனர். ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 4 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. அதன் நிகர ரன்ரேட் மைனஸ் 843 ஆகச் சரிந்துவிட்டது. ஃபார்முக்கு வந்த பட்லர் கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து இங்கிலாந்து பேட்டர் ஜாஸ் பட்லர் சரியாக எந்தப் போட்டியிலும் ஆடவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வந்தது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அற்புதமான சதத்தை பட்லர்(100) அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார். தொடக்க வீரராகக் களமிறங்கிய பட்லர் 20 ஓவர்கள் வரை களமாடி 58 பந்துகளில் இந்த சத்ததை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அது மட்டுமல்லாமல் பட்லருக்கு நேற்றைய ஐபிஎல் ஆட்டம் 100வது போட்டி. தனது 100வது போட்டியில் சதம் அடித்து மறக்க முடியாத நினைவுகளை வைத்துள்ளார். இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் சஞ்சு சாம்ஸனுடன் இணைந்து பட்லர் 148 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார். இதுதான் இந்த சீசனில் அதிகபட்ச பாட்னர்ஷிப் ஸ்கோராக அமைந்தது. இருவரின் ஆட்டம்தான் ஆர்சிபியின் வெற்றிக் கனவை சுக்குநூறாக உடைத்தது. கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய சாம்ஸன்(69) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சுக்கு 9 மார்க் பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “190 ரன்களுக்கு குறைவாக வரும் என நினைத்தேன், கடைசி நேரத்தில் பனிப்பொழிவு இருந்தது. எங்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. சில போட்டிகளுக்குப் பின் பட்லர் ஃபார்முக்கு வந்தது மகிழ்ச்சி. எங்களின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. எங்களுக்குக் கிடைத்த சிறிய இடைவெளியால்தான் நாங்கள் புத்துணர்ச்சியுடன் வர முடிந்தது. பேட்டிங்கிற்கு 8.7 மார்க், பந்துவீச்சுக்கு 9 மதிப்பெண் கொடுப்பேன்,” எனத் தெரிவித்தார். விராட் கோலிக்கு ஏன் இந்த நிலை? ராஜஸ்தான் அணியைப் போன்றே ஆர்சிபி அணியிலும் விராட் கோலி(113) சதம் அடித்தார், கேப்டன் டூப்ளெஸ்ஸியுடன் சேர்ந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தார். பட மூலாதாரம்,SPORTZPICS கோலி இவ்வளவு சிறப்பாக ஆடியும், பிரயத்தனம் செய்தும் அவரின் சதமும் புகழப்படவில்லை, பார்ட்னர்ஷிப்பும் மதிக்கப்படவில்லை. மாறாக ரசிகர்களில் ஒரு தரப்பினரின் கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் ஆர்சிபியும், கோலியும் ஆளாகியுள்ளனர். விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் அடித்த 8வது சதம். தொடர்ந்து 7 ஐபிஎல் இன்னிங்ஸில் கோலி அடித்த 3வது சதம். இருப்பினும் கோலியின் ரசிகர்கள் தவிர மற்றவர்களால் நகைப்புக்கு உள்ளாகிறார். கோலியால்தான் ஆர்சிபி தோற்றது, கோலிக்கு பதிலாக வேறு பேட்டர் கடைசி நேரத்தில் களமிறங்கி இருந்தால், கூடுதலாக 20 ரன்கள் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் ஆடுகளம் மெதுவான விக்கெட்டை கொண்டது. இங்கு 183 ரன்கள் ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர்தான். இந்த அளவு பெரிய ஸ்கோரை அடித்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்றால் எங்கோ பெரிய தவறு இருக்கிறது என்று ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சிக்கிறார்கள். பதிலடி கொடுத்த பட்லர் பட மூலாதாரம்,SPORTZPICS பட்லர் கடந்த 3 போட்டிகளாக அடித்த ஸ்கோர், 11,11,13. அதிலும் கடந்த சீசனில் ஒரு அரைசதம் மட்டுமே, பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இதனால் பட்லரின் அதிரடி பேட்டிங்கும், அவரின் தொடக்க வரிசை பேட்டிங்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் அனைத்துக்கும் நேற்றைய ஆட்டத்தில் அவரின் பேட்டால் பதில் அளித்துள்ளார். ஆனால், கடந்த சீசனில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் ஃபார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். கடந்த 4 போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் பெரிதாக இதுவரை எந்த ஸ்கோரும் செய்யவில்லை, இந்த ஆட்டத்தில் டாப்லி பந்துவீச்சில் டக்-அவுட்டில் வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு சாம்ஸனுடன் பட்லர் ஜோடி சேர்ந்தபின் மெல்ல தனது ரிதத்துக்கு திரும்பினார். யாஷ் தயால் ஓவரையும், மயங்க் தாகர் ஓவரையும் குறிவைத்து பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி பட்லர் தனது ஃபார்மை மெல்ல மீட்டார். குறிப்பாக அனுபவமில்லாத சுழற்பந்துவீச்சாளர்களான மயங்க் டாகர், ஹிமான்சு ஷர்மா ஓவர்களை பட்லர் வெளுத்து வாங்கிவிட்டார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பட்லர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட்லருக்கு துணையாக பேட் செய்த கேப்டன் சாம்ஸனும் தனது பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி, 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர், இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் டுப்ளெஸ்ஸியால் முடியவில்லை. சிராஜ் 15-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். சிராஜ் தான் வீசிய 4வது பந்தை பவுன்ஸராக வீச அதை சாம்சன் தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அங்கு நின்றிருந்த யாஷ் தயால் கேட்ச் பிடிக்கவே சாம்சன் 42 பந்துளில் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடந்த சில போட்டிகளாக ராஜஸ்தான் ஹீரோவாக வலம் வரும் ரியான் பராக் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். துருவ் ஜூரெல் 2 ரன்னில் டிகேவிடம் கேட்ச் கொடுத்து டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹெட்மயர் களமிறங்கி, பட்லருடன் சேர்ந்தார். இருவரும் வெற்றி நோக்கி அணியை நகர்த்தினர். 24 பந்துகளில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. டாப்லி வீசிய 17வது ஓவரில் பவுண்டரியுடன் 10 ரன்களை ஹெட்மயர் விளாசினார். கேமரூன் கிரீன் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி இல்லாமல் ராஜஸ்தான் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிராஜ் வீசிய 19வது ஓவரிலும் ஹெட்மயர் பவுண்டரி அடித்து 8 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 94 ரன்களுடன் களத்தில் இருந்த பட்லர் சதத்துக்காகக் காத்திருந்தார். கிரீன் வீசிய முதல் பந்தில் டீப் ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசி சதத்தை நிறைவு செய்து அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹெட்மயர் 11 ரன்களுடனும், பட்லர் 100 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அஸ்வின், சஹல் மிரட்டல் பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் போல்ட், பர்கர் இருவரும் பவர்ப்ளேவில் வழக்கமாக விக்கெட்டை வீழ்த்திவிடுவார்கள். ஆனால் நேற்று கோலி, டுப்ளெஸ்ஸியை வீழ்த்த முடியவில்லை. பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், நடுப்பகுதியில் யஜூவேந்திர சஹல், அஸ்வின் இருவரையும் கேப்டன் சாம்சன் மாறி, மாறி பயன்படுத்தி, ஆர்சிபி பேட்டர்கள் டுப்ளெஸ்ஸி, கோலியை சித்ரவதை செய்தார். இதில் சஹல் பந்துவீச்சில் மட்டும் கோலி 2 சிக்ஸர்களை விளாசினார். ஆனால், அஸ்வின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியில்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் 13 டாட் பந்துகள் அடங்கும். இருவரும் 7.75 எக்கானமி வைத்தனர். தரமற்ற பந்துவீச்சு ஆனால், ஆர்சிபி அணியில் மயங்க் டாகர், ஹிமான்சு சர்மா இருவரும் சேர்ந்து 4 ஓவர்கள் வீசி 63 ரன்களை வாரி வழங்கினர். இருவரும் பல பந்துகளை லைன் லென்த்தில் இருந்து தவறி வீசி பட்லரிடமும், சாம்சனிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இதில் ஆர்சிபி அணியிடம் இருந்த ஷான்பாஸ் அகமதுவை சன்ரைசர்ஸிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து மயங்க் டாகரை ஆர்சிபி வாங்கி கையைச் சுட்டுக்கொண்டது. இதிலிருந்து ஆர்சிபி அணியிடம் தரமான வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை, சுழற்பந்துவீச்சாளர்களும் இல்லை என்பது தெரிய வருகிறது. அனுபமில்லாத இதுபோன்ற பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு பட்லர், சாம்சன் போன்ற பெரிய பேட்டர்களுக்கு பந்துவீசினால் கையில் இருக்கும் வெற்றி வாய்ப்பையும் இழக்க வேண்டியதிருக்கும். கோலியை ‘காலி’ செய்த அஸ்வின் பட மூலாதாரம்,SPORTZPICS கோலியின் சதம் எந்த அளவு சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறதோ அதே அளவு அஸ்வினை வைத்து கோலியை கிண்டல் செய்கிறார்கள். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தில் கோலிக்கு தண்ணி காட்டும் விதத்தில் அஸ்வின் பந்துவீச்சு அமைந்திருந்தது. அஸ்வின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க கோலி பல பிரயத்தனங்கள் செய்தும், பலவிதமான ஷாட்களுக்கு முயன்றும் கடைசி வரை நடக்கவில்லை. அஸ்வின் வீசிய 15 பந்துகளை கோலி எதிர்கொண்டு பேட் செய்து அதில் 14 ரன்கள் சேர்த்தார். அதில், ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட கோலியால் அடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். கோலிக்கும், அஸ்வினுக்கும் இடையிலான போரில் இறுதியில் அஸ்வின் வென்றார். அஸ்வின் பந்துவீச்சில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 93.33 என்று குறைந்திருந்தது. ஆனால், ஆவேஷ் கான் பந்துவீச்சை வெளுத்த கோலி 17 பந்துகளில் 39 ரன்கள் குவித்து 8 பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் தனது கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை அடிக்கவிட்டுவிட்டார். அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், அஸ்வின் ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட வழங்காமல் தனது ஸ்பெல்லை சிறப்பாக முடித்திருப்பார். ஒட்டுமொத்ததில் கோலிக்கு சிம்மசொப்னமாக அஸ்வின் பந்துவீச்சு இருந்தது. கோலி ஏன் விமர்சிக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,SPORTZPICS ஜெய்ப்பூரில் இதற்கு முன் கோலி ஆட வந்தபோது அவர் இந்த மைதானத்தில் சராசரி 21.90 ரன்கள்தான். இதனால் இந்த மைதானத்தில் இந்த முறையும் கோலி சொதப்புவார் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் 20 ஓவர்கள் களமாடி 8வது சதத்தை கோலி நிறைவு செய்தார். தொடக்க ஆட்டக்கார் டுப்ளெஸ்ஸியுடன் 125 ரன்கள் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், அதில் பெரும்பங்கு கோலி சேர்த்ததுதான். ஆர்சிபி அணி நேற்று சேர்த்த 183 ரன்களில் கோலியின் பங்கு 61.70 சதவீதம். இவ்வளவு சிறப்பாக கோலி பேட் செய்தும் ஏன் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் கோலி ஆங்கர் ரோல் எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு பந்துகளை வீணாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சிகர்களாலும் வைக்கப்படுகிறது. அதாவது சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் வாய்ப்புள்ள பந்துகளைக்கூட கோலி பெரிய ஷாட்களாக மாற்றத் தயங்குகிறார். இருபது ஓவர்களையும் தானே ஆக்கிரமிக்க வேண்டும், சுயநலத்துடன் ஆடி சதம் அடிக்க வேண்டும், தன்னை யாரும் பேட்டிங்கில் குறை கூறிவிடக்கூடாது என்ற கோணத்தில்தான் கோலி பேட் செய்கிறார் என்று விமர்சிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஆட்டத்தில் கோலி 67 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது ஐபிஎல் வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதம். கடந்த 2009ஆம் ஆண்டில் மணிஷ் பாண்டே 67 பந்துகளில் சதம் அடித்ததுதான் மெதுவான சதமாக இருந்து வந்தது, அதோடு கோலியும் இணைந்துவிட்டார். கோலி ஒட்டுமொத்தமாக 72 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள், ஸ்ட்ரைக் ரேட்டும் 156.94 ஆக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக பந்துகளை சந்தித்ததில் 3வது பேட்டர் கோலிதான். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் மெக்கல்லம் 73 பந்துகளைச் சந்தித்து 158 ரன்களை விளாசினார். ஆனால் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள்தான் சேர்த்தார். 2009இல் மணிஷ் பாண்டேவும் 73 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்திருந்தார். விராட் கோலியின் சிக்ஸர், பவுண்டரிகளை மட்டும் கொண்டாடும் அவரின் ரசிகர்கள் அவர் பவுண்டரி அடிக்கும் முன், எத்தனை பந்துகளைச் சந்தித்தார் என்பதைக் கணக்கிடுவதில்லை. பட மூலாதாரம்,SPORTZPICS களத்தில் கோலி செட்டில் ஆவதற்கு எத்தனை பந்துகளை வீணாக்குகிறார் என்பதையும் பார்ப்பதில்லை. இந்த ஆட்டத்தில்கூட கோலி முதல் 25 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் சேர்த்தார், அதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 128 ஆக இருந்தது. கோலி சந்தித்த அடுத்த 25 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் சேர்த்து, 156 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். கடைசி 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரி என 42 ரன்கள் சேர்த்து 191 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். மெதுவான ஆடுகளம், பந்து பேட்டரை நோக்கி மெதுவாக வருகிறது என்று பேட்டியில் கூறிய கோலியால், தொடக்கத்தில் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முடியவில்லை. கடைசி 22 பந்துகளில் மட்டும் ஸ்ட்ரைக் ரேட்டை எவ்வாறு உயர்த்த முடிந்தது, 42 ரன்கள் எவ்வாறு சேர்க்க முடிந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கோலியின் ஆங்கர் ரோல் ஆர்சிபி அணிக்கு பெரிய வலியாகவே முடிந்துள்ளது என்பதுதான் சமீபத்திய நிதர்சனமாக இருந்து வருகிறது. இதுபோன்று மெதுவாக பேட் செய்யும் பேட்டரை, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எவ்வாறு இடம் பெறச் செய்வது என்று ரசிகர்கள் தரப்பில் கேட்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோலி, அஸ்வின், ஆர்சிபி பெயர் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cy0z0zvng9jo
  3. நமக்கும் அதிஸ்டம் அடிக்குதோ பார்ப்போம்! 😂
  4. கொழுப்பைத் தான் குறைக்கமாட்டுது, ஆனால் வேறு நன்மைகள் உண்டாமே! பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா? "பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர். பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம். "குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை." புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா? நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார். மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். "பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது." இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார். பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது. "வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது." சளி குணமாகுமா? சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார்.
  5. இங்கு வேலை செய்யாமலே வியர்வை ஆறாக ஓடுகிறது! நாக்கு வறள்கிறது. மனமும் உடலும் குளிர்மையை விரும்புகிறது.
  6. இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன - அருட்தந்தை மா.சத்திவேல் 06 APR, 2024 | 10:24 PM இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், கால்நடைகளை கொல்வதற்கு குண்டர்களுக்கு இடம் அளித்தும் தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வை அழித்து வீதியில் தள்ளி இருப்பது இன அழிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது என்பதன் வெளிப்பாடு எனலாம். தமிழ் கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இனவாத குண்டர்களை அரச பயங்கரவாதம் பார்த்துக்கொண்டிருப்பதோடு பாதுகாப்பும் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளிலும் அரச பயங்கரவாதம் இதையே செய்தது. இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன. யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்கள் எல்லாம் பறிபோன நிலையில் தற்போது சுயமாக தொழில் செய்யும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை சீரழித்து நிலத்தை ஆக்கிரமிக்க குண்டர்களை ஏவிவிட்டுள்ள பேரினவாதம் மகாவலி அதிகார சபையின் கீழ் வெறும் நிலங்களை சூறையாடவும் திட்டமிட்டு இருப்பது இஸ்ரேல் வழிமுறையிலான இன அழிப்பாகும். பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களின் நியாயத்தன்மையை ஏற்று நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பினையும் அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்த பின் நிற்பது மனித உரிமை மீறலோடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும். அது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சினையை கதைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் போதுமான காலத்தை அளிக்காது தீர்வு காண வழிகளையும் திறக்காதிருப்பது பண்ணையாளர்களை அழிக்கும் செயலுக்கு அப்பால் தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் சாதியாகும். ஆயிரம் பொங்கல் வைத்து தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழாவினை எடுத்தவர் பண்ணையாளர்களுக்கு எதிராக நிற்பது பேரினவாதத்தின் கைக்கூலியாக செயல்படுவதன் அடையாளம் எனலாம். இத்தகைய பின்புலத்தில் தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் என்பது அவர்கள் சார்ந்த விடயமாக இருந்தாலும் அது தமிழர்களின் பாரம்பரியம் தமிழர் அடையாளம் மற்றும் அரசியல் சார்ந்த விடயமாகும். இதற்கு கிழக்கின் தமிழ் பண்ணையாளர்களால் மட்டும் முகங்கொடுக்க முடியாது. அது வடகிழக்கு சார்ந்த மக்கள் அரசியல் போராட்டமாக உருமாறல் வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவைத் தவிர பொதுவாக தாம் கைவிடப்பட்டுள்ளோம் என்ற மன நிலையிலேயே 200 நாட்களை கடந்தும் பண்ணையாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதனை பயன்படுத்தி தமிழர்களின் தாயக அரசியலை ஏற்காத தெற்கின் போராட்டக் குழு ஒன்றும் தமது அரசியலுக்காக இவர்களை பயன்படுத்த முனைகிறது. எமது போராட்டங்கள் குடும்ப விழாக்களைப் போன்றும், ஊர் திருவிழாக்களை போன்றும், மாவட்ட, மாகாண மட்ட விழாக்கள் போன்றும் காலத்துக்கு காலம் நடத்துவது தோல்விக்கே வழிவகுக்கும். இதனையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் தாயக அரசியலுக்கு எதிரான சக்திகளும் விரும்புகின்றன. இதற்கு இடமளிக்காமல், புதிய வடிவிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். வடகிழக்கு தமிழர்களின் சுதந்திரம், கௌரவம் என்பன தாயகம் காக்கும் அரசியல் செயற்பாடு என்பதை நாம் அறிவோம். அதற்காகவே ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைக்க போராட்ட மையம் தோற்றுவிக்கப்படல் வேண்டும். இது குளிர் அறையில் இருந்து கதைக்கும் விடயமல்ல. போராட்டம் மையம் என்பது சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய தலைமைத்துவ குழுவின் தன்மையைக் கொண்டது. பொதுவானதும் உறுதிமிக்கதுமான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் போராட்ட வடிவங்களை உருவாக்கி அதனை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் போராடுவது அரசிடமிருந்து இலவசங்களையோ சலுகைகளையோ பெற்றுக்கொள்வதற்கு அல்ல என்பது நாம் அறிந்ததே. இது வலுவிழக்கக் கூடாது. https://www.virakesari.lk/article/180567
  7. இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சமாக அதிகரிப்பு 06 APR, 2024 | 12:30 PM இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். உலக வங்கியினால் வெளிப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வருமானமின்மை, தொழிலின்மை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார். இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு இதன் எண்ணிக்கை மூன்று இலட்சமாகக் குறையலாம் என உலக வங்கி கணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180576
  8. உக்ரைன் யுத்தம் - ஒரேதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்ததாக உக்ரைன் தகவல் Published By: RAJEEBAN 06 APR, 2024 | 09:21 AM ரஸ்யாவின் தென்பகுதி விமானதளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 8 விமானங்கள் சேதமடைந்துள்ளன 20க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போர்முனையில் பயன்படுத்தப்படும் எஸ்யு27- 34 விமானங்களின் மொரெஜொவ்ஸ்க் தளத்தின் மீதே இஸ்ரேல் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா இதுவரை இந்த தாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் உக்ரைனின் 40 ஆளில்லா விமானங்கள் இலக்குவைக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதால் ரஸ்யாவின் வான்வெளி பாதுகாப்பு பொறிமுறை செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/180557
  9. பாட்டி குளிப்பாட்டிய குழந்தை பருவ படத்தை பதிவேற்றியதால் ஜிமெயில் கணக்கை முடக்கிய கூகுள் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY/NEEL SHUKLA கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ பரிக் பதவி, பிபிசி குஜராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "என்னுடைய பாட்டி சிறுவயதில் என்னைக் குளிப்பாட்டிய போது எடுத்த படத்தைப் பதிவேற்றுவதால் கூகுளுக்கு என்ன பிரச்னை? அந்தக் குழந்தைப் பருவப் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது." என்கிறார் அகமதாபாத்தில் வசிக்கும் நீல் சுக்லா என்ற 26 வயது இளைஞர். தனது குழந்தைப் பருவத்தின் புகைப்படம் தொடர்பான கூகுள் போன்ற ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் நீல். தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொறியாளராக பணியாற்றுகிறார் நீல் சுக்லா. தனது குழந்தைப் பருவப் புகைப்படத்தை (அவரது பாட்டி அவரைக் குளிப்பாட்டும் புகைப்படம்) டிஜிட்டல் வடிவத்தில் கூகுள் கணக்கில் பதிவேற்றிய பிறகு, அவரது கணக்கை கூகுள் நிறுவனம் முடக்கியது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீல் தாக்கல் செய்த விண்ணப்பத்தின்படி, படம் ஆபாசமாக உள்ளதா இல்லையா என்பது கூகுள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டம் மூலம் சரிபார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களின் முடிவும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தால் தீர்மானிக்கப்பட்டது என்று நீல் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளார். இது மட்டுமின்றி, கூகுள் கொள்கையின்படி, தொழில்முறை சார்ந்த, தனிப்பட்ட மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்கள், கூகுள் பே (யுபிஐ) போன்ற நிதி பரிவர்த்தனை வசதி போன்றவற்றின் தரவுகள் அடங்கிய மின்னஞ்சல்களின் தரவை நீக்குமாறும் ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம், குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, குஜராத் காவல்துறையின் சைபர் கிரைம் துறை என பல இடங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீல் சுக்லே வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குறிப்பிட்ட கேள்விகளுக்கு நிறுவனத்தால் பதிலளிக்க முடியாது என்று பிபிசியிடம் கூகுள் தெரிவித்தது. ஆனால் கூகுள் நிறுவனம் CSAM (Child Sexual Abuse Material- குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருள், சிஎஸ்ஏஎம்) உள்ளடக்கம் தொடர்பான தனது கொள்கை மற்றும் திட்டத்தை மேற்கோள் காட்டியதுடன், குழந்தைகள் தொடர்பான சிஎஸ்ஏஎம் அல்லது பாலியல் உள்ளடக்கம் உடனடியாக அகற்றப்பட்டு கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வழக்கு சர்ச்சையானது ஏன்? இந்தியாவில் மில்லியன்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் கணக்குகள் மூலம் பல்வேறு கூகுள் சேவைகளைப் பயன்படுத்துவதால், விஷயம் நாம் நினைப்பதை விட மிகவும் தீவிரமானது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான புரிதலும் வசதியும் எல்லா மக்களுக்கும் இல்லை. கூகுள் பெரும்பாலும் இந்தச் சேவைகளை இலவசமாக வழங்குகிறது, ஆனால் சில சேவைகளுக்கு மக்களும் நிறுவனங்களும் கூகுளுக்கு பணம் செலுத்துகின்றன. இது குறித்து நீலின் தந்தை சமீர் சுக்லா கூறும்போது, ”இது வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. மில்லியன்கணக்கான மக்களின் தனியுரிமை மீறப்பட்டதற்கு எதிராக சட்டத்தின் பாதுகாப்பைக் உறுதி செய்வதற்கான வழக்கு இது” என்றார். நீல் மற்றும் அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, “கூகுள் மற்றும் அதன் பணியாளர்கள் உங்களின் தனிப்பட்ட தரவை உங்கள் அனுமதியின்றி அணுகலாம். அந்த தரவுகளை தனக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும் நிறுவனத்தால் முடியும். இதுமட்டுமின்றி வழக்கை முன்வைக்க உங்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்காமல் உங்கள் கணக்கை முடக்குவதால், உங்களுக்கு நிதி இழப்பு, மன உளைச்சல் மற்றும் உங்கள் சமூக பிம்பத்திற்கு எதிராக கேள்விகளை இந்தப் பிரச்னை எழுப்பலாம்' என்கிறார்கள். நீல் சுக்லாவும் இதேபோன்ற கேள்விகளுடன், கூகுள் தனது கணக்கை நீக்குவதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். ஆகஸ்ட் 2023 முதல் தனது கணக்கை நீக்குவதைத் தடுக்க நீல் சுக்லா கூகுளுக்கு அனுப்பிய சட்டப்பூர்வ அறிவிப்புக்கு கூகுள் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் கூட கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. நீல் சுக்லாவின் கணக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நிரந்தரமாக நீக்கப்படும் என்று கூகுளால் கூறப்பட்டது. ஆனால் அவரது தரவைப் பதிவிறக்க அவரது முடக்கப்பட்ட கணக்கிற்கான அணுகல் அவருக்கு வழங்கப்படவில்லை. எனினும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நீல் சுக்லாவின் கணக்கை நீக்க கூகுள் நிறுவனத்துக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி வைபவி நானாவதி தடை விதித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘கூகுளின் எதேச்சதிகாரம்’ பிபிசியிடம் பேசிய நீல் சுக்லா, "என்னுடைய பாட்டி என்னைக் குளிப்பாட்டுவதைப் பற்றி கூகுள் ஏன் கவலைப்பட வேண்டும்? எனது குழந்தைப் பருவத்தின் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது. கூகுளுடன் இணைக்கப்பட்ட எனது அனைத்து சமூக ஊடகக் கணக்குகளும் அதனால் தடுக்கப்பட்டுள்ளன. எனது வணிகச் செயல்பாடுகள், எனது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தரவு அனைத்தும் அந்தக் கணக்கில் இருந்தன. கூகுளின் இந்த எதேச்சதிகாரத்துக்கு என்னைப் போல் மற்றவர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார். தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொறியியல் படிப்பை முடித்துள்ள நீல், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் விரைவான மாற்றங்களைத் தெரிந்துகொள்ள ஆன்லைன் படிப்புகளைத் தொடர்ந்தார். “2013ஆம் ஆண்டு முதல் இந்த கூகுள் கணக்கை வைத்திருந்தேன். படிப்பு முடிந்ததும் ஒரு தொழிலைத் தொடங்கி, அந்த கணக்கு மூலம் தொழிலை வளர்க்க மார்க்கெட்டிங் மற்றும் ப்ரோமோஷன் செய்தேன். எனக்கும் புதிய வாய்ப்புகள் கிடைத்து வந்தது” என்கிறார் நீல். தொடர்ந்து அவர் கூறுகையில், "மென்பொருள் துறையின் புதிய மேம்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கணக்கு மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த பல்வேறு ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளேன். எனது அனைத்து திட்டங்களையும் சமூக ஊடகங்களில் தான் பதிவிட்டு வைத்துள்ளேன். ஆன்லைன் படிப்புகளின் சான்றிதழ்களும் மின்னஞ்சலில் தான் உள்ளன." "எனது பங்குச் சந்தை முதலீடுகள், எனது வங்கிக் கணக்கு விவரங்கள், எனது வாடிக்கையாளர்களுடனான வணிக மின்னஞ்சல் தொடர்புகள் அனைத்தும் அந்தக் கணக்கில் தான் இருந்தன. இது முடக்கப்பட்டுள்ளதால், எனது வாடிக்கையாளர்கள் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்களை என்னால் பார்க்க முடியவில்லை." என்கிறார். கூகுள் நிர்ணயித்த கட்டணத்தில் தனது தரவை ஆன்லைனில் சேமித்து வைப்பதற்காக 2 TB (2 டெராபைட்) சேமிப்பக இடத்தையும் கூகுளிடமிருந்து வாங்கினார் நீல். "எங்கள் குடும்பத்தின் புகைப்படங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை டிஜிட்டல்மயமாக்கி ஆன்லைன் டிரைவில் சேமிக்க முடிவு செய்தேன், ஏனென்றால் ஹார்ட் டிஸ்க்குகள் கூட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று தான், சிறுவயதில் என் பாட்டி என்னைக் குளிப்பாட்டும் புகைப்படம்" என்கிறார் நீல். நீல் தனது கூகுள் கணக்கில் படத்தைப் பதிவேற்றிய சிறிது நேரத்திலேயே, அவருக்கு மே 11, 2023 அன்று கூகுளில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. கணக்கு முடக்கப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. கூகுளின் கூற்றுப்படி, நீல் அவர்களின் சேவை விதிமுறைகளை மீறியுள்ளார். நீலின் குற்றச்சாட்டுகள் என்ன? கூகுள் செயற்கை நுண்ணறிவு திட்டத்தால் தனது தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நீல் சுக்லாவின் உரிமைகளை ஐந்து விஷயங்களில் கூகுள் நிறுவனம் மீறியுள்ளது. அவரது தரப்பு வாதத்தைக் கேட்காமல் அவரது கணக்கு முடக்கப்பட்டது அவர்களின் உரிமைகளை மீறும் இந்த முடிவு முற்றிலும் தொழில்நுட்பத்தால் எடுக்கப்பட்டதே தவிர மனிதர்களால் அல்ல. கூகுளின் சேவை விதிமுறைகள் சிஎஸ்ஏஎம் திட்டத்தை ஆதரிக்கின்றன (ஆபாச உள்ளடக்கத்தைக் கண்டறிய கூகுள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் பெயர்) இது பொருத்தமற்றது மற்றும் இடையூறு விளைவிக்கக்கூடியது. சிஎஸ்ஏஎம் முடிவுகள் உலகெங்கிலும் உள்ள பயனர்களைப் பாதிக்கிறது, ஆனால் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்ற தவறான நடத்தை மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகள் தொடர்பான தரவுகள் மூலம் சிஎஸ்ஏஎம் திட்டத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. நீலின் குழந்தைப் பருவத்தின் கடந்தகால புகைப்படங்கள் உட்பட, குழந்தையின் உடலை குழந்தைகளின் உரிமை மீறலாகக் காட்டும் அனைத்துப் பொருட்களையும் கருத்தில் கொள்ள சிஎஸ்ஏஎம் திட்டத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 1999-2000 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாத தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும் என்று அந்த நேரத்தில் யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. "கூகுள் விதிமுறைகளின் கீழ் அந்த படங்களை எனது சேமிப்பகத்திலிருந்து அகற்ற வேண்டும், ஆனால் அவற்றை அகற்ற கூட எனக்கு எந்த வழியும் இல்லை" என்று நீல் கூறினார். சிஎஸ்ஏஎம் திட்டத்தைப் பற்றி கூகுள் கூறுவது என்ன? இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் மின்னஞ்சலில் தெரிவித்தது. ஆனால் சிஎஸ்ஏஎம் உள்ளடக்கம் தொடர்பான எங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தெரிவிக்கலாம் என்று கூறியது. கூகுள் பிபிசியிடம், "சட்டவிரோதமான குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் எங்களின் எந்தவொரு தளத்திலும் விநியோகிக்கப்படுவதை நாங்கள் தடுக்கிறோம். சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" "சிஎஸ்ஏஎம் அல்லது குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறிந்தால், உடனடியாக அதை அகற்றிவிட்டு கணக்கை நிறுத்தவும் கூடும்" என்று கூகுள் கூறியுள்ளது. “எங்கள் தளத்தில்பதிவேற்றப்பட்ட அல்லது பகிரப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள சிஎஸ்ஏஎம் உள்ளடக்கத்தின் அளவு மிகக் குறைவாக இருந்தாலும், இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்” “எங்களின் சிஎஸ்ஏஎம் உள்ளடக்க வரையறையைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்தையும் விரைவாகக் கண்டறிந்து அகற்றும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சிஎஸ்ஏஎம் உள்ளடக்கத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஹாஷ்-பொருந்தும் தொழில்நுட்பத்தின் கலவையைப் பயன்படுத்துகிறோம்” "எங்கள் தொழில்நுட்பம் உலகம் முழுவதிலும் இருந்து பதிவேற்றப்படும் இந்த வகையான வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தின் அளவையும் வேகத்தையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூகுள் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GUJARATHIGHCOURT.NIC.IN உயர் நீதிமன்ற வழக்கு அவசியமா? நீலின் தந்தை சமீர் சுக்லா ஒரு கட்டடக் கலைஞர் மற்றும் சட்டமும் படித்தவர். அவர் பிபிசியிடம் கூறியதாவது, "இந்திய கலாசாரம் மற்றும் இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கூகுள் பெரிய நிறுவனமாக மாறிவிட்டதா? இந்திய கலாசாரத்தில், பாட்டி குழந்தையை குளிப்பாட்டுவது ஆபாசம் அல்ல. இங்கு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தானாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்றார். “இது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சிவில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பது மற்றொரு பெரிய பிரச்னை. இந்த நடவடிக்கை 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதியின்படி சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார் சமீர் சுக்லா. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின்படி, இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் புகார்கள் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் சர்ச்சைகள் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரால் ஒரு நீதிபதியின் பொறுப்பில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நீல் சுக்லா, குஜராத் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் மோனா கந்தரிடம் முறையிட்டார். இந்த விவகாரம் குறித்து மோனா கந்தர் பிபிசியிடம், “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இதுபோன்ற புகார்கள் எங்களுக்கு வருகின்றன” என்றார். இருப்பினும், விவரங்களை சரிபார்க்காமல் ஒரு தனிப்பட்ட வழக்கில் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் கூறுவது என்ன? குஜராத் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தச் செயலை நன்கு அறிந்த அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 9வது அத்தியாயத்தில் பிரிவுகள் (43) மற்றும் 43(A) இருந்ததாகக் கூறினார். இந்தச் சட்டப்பிரிவு 43(A)ன் கீழ், இந்த விவகாரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பதில் கேட்கலாம். ஆனால் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 (DPDP Act, 2023)க்குப் பிறகு, மத்திய அரசு ஐடி சட்டத்தில் இருந்து பிரிவு 43(A) ஐ நீக்கியுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் தெளிவு இல்லை. இருப்பினும், சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பவன் துக்கல் கருத்துப்படி, ஐடி சட்டத்தின் பிரிவு 43(A) இந்த வழக்கில் பயன்படுத்தப்படலாம். அவர் கூறுகையில், "அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்து, 43(ஏ) பிரிவை நீக்கியது உண்மை தான். ஆனால், டிபிடிபி சட்டம்-2023 இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நாம் இப்போது பேசுவது போல், 43(ஏ) சட்டமன்ற செயல்முறை தகவல் தொழில்நுட்பச் சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது. அவற்றை பயன்படுத்த முடியும்" என்கிறார். நீல் சுக்லாவின் வழக்கறிஞர் தீபன் தேசாய் பிபிசியிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தில் பதில் அளிக்க குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், மத்திய அரசின் சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் உத்தரவு வரும் வரை நீல் சுக்லாவின் கணக்கு கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும். செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன? கூகுள் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் அதன் ஆபத்துகள் பற்றி டாக்டர். பவன் துக்கல் பேசுகையில், "தொழில்நுட்பம் மனித விவகாரங்களுக்கான முடிவுகளை எடுக்கத் தொடங்கும் போது, தவறுகள் நடக்கும். ஏனென்றால், மனித கலாச்சாரம், மனித உணர்வுகள் மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை." "தொழில்நுட்பம் படத்தில் உள்ள மனிதனை ஒரே வகையான தரவுகளாகப் பார்க்கிறது, பின்னர் அந்தத் தரவை சிஎஸ்ஏஎம் (குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பொருள்) விதிகளுக்கு எதிராக ஒப்பிடுகிறது, அது விதிகளை பூர்த்தி செய்தால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த முடிவுகளை எடுக்கும். அதனால் இது நடந்திருக்கலாம்" என்கிறார் சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பவன் துக்கல். இந்த சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக பார்க்கிறார் துக்கல், "இது ஒரு பெரும் எச்சரிக்கை. இனியும் இது நடக்காமல் இருக்க கூகுள் ஏதாவது செய்ய வேண்டும்." "கூகுள் போன்ற இடைத்தரகர்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, மனிதக் கட்டுப்பாட்டின் சரியான அளவைப் பராமரிக்க வேண்டுமா என்ற பெரிய கேள்வியை இந்தச் சிக்கல் சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுக்கு முழு உரிமையும் சுயாட்சியும் வழங்குவது நியாயமற்றது." என்கிறார். https://www.bbc.com/tamil/articles/ce979gjm696o
  10. Published By: RAJEEBAN 06 APR, 2024 | 04:45 PM இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை கடன்களை 15 வருடங்களிற்குள் மீள செலுத்தவேண்டியிருக்கும் 2028 முதல் 2043ம் ஆண்டிக்குள் என தெரிவித்துள்ள அவர் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் கடன்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை 2022 ஏப்பிரலில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது. இதன் மூலம் இலங்கை தன்னை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியது. 2023 ஏப்பிரலில் கூட்டத்தில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் குழு ஏற்படுத்தப்பட்டது. சீனாவிற்கு பின்னர் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடான ஜப்பான் இந்தியா பிரான்சுடன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்தி வைப்பது தொடர்பிலும் வட்டியை செலுத்துவது தொடர்பிலும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனா இந்த கூட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் கலந்துகொண்டுள்ளது. எனினும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு ஏனைய நாடுகளுடனான கடன்மறுசீரமைப்பை ஒத்ததாகவே காணப்படும் என தெரிவித்துள்ள இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் இறுதியில் இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் 37.3 பில்லியன் டொலராக காணப்பட்டது இதில் சீனாவிற்கு 4.7 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும். 2017 இல் இலங்கை தனது தென்பகுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது. இது கடன்களை வழங்குவது தாமதமானால் உட்கட்டமைப்பு திட்டங்களை கைப்பற்றும் கடன்பொறிக்கான உதாரணமாக கருதப்பட்டது. இலங்கையை தளமாக கொண்டு இந்தோ பசுபிக்கில் சீனா அகலக்கால் பதிப்பது குறித்து இந்தியா ஜப்பான் உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் சில கவலை கொண்டுள்ளன. எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை முற்றிலும் வர்த்தக நோக்கங்களை கொண்டது என தெரிவித்த சாகலரத்நாயக்க இதில் இராணுவ நோக்கம் எதுவுமில்லை. இலங்கை வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக உள்ளது நாங்கள் எந்த நாடு என்ற அடிப்படையில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில்லை. தேசிய பாதுகாப்பிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தினால் மாத்திரம் அது குறித்து கரிசனை கொள்வோம் என தெரிவித்துள்ளார். எனினும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுதக்கூடிய நாட்டின் வடபகுதி குறித்து நாங்கள் கவனத்துடன் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180595
  11. தோனி போல் ருதுராஜ் கெய்க்வாட் சாதிப்பதில் உள்ள 3 முக்கிய சவால்கள் என்ன தெரியுமா? பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 5 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரெடியா இரு; அடுத்த வருஷம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்" கேப்டன்சி மாற்றம் குறித்து ஓராண்டுக்கு முன்னதாகவே ருதுராஜிடம் சூசகமாக சொல்லிட்டார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ்.தோனி விட்டுச் செல்லும் மரபை ருதுராஜால் தொடர முடியுமா? "ஸ்பார்க் இல்லை என விமர்சிக்கப்பட்டவர்" ருத்து, ஸ்பார்க், ராக்கெட் ராஜா இதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்டின் செல்லப் பெயர்கள். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட ருதுராஜை 2019 ஐபிஎல் தொடருக்காக டிசம்பர் 2018-ல் நடந்த ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது அவருக்கு வயது 21. 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட ருதுராஜ் களமிறக்கப்படவில்லை. 2020-இல் ருதுராஜுக்கு சி.எஸ்.கேவில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அதுவும் வெறு ஆறு போட்டிகளில். இதில் 2 முறை டக் அவுட்டாகி வெளியேறினார். சி.எஸ்.கேவுக்காக களமிறங்கிய தொடக்கத்திலேயே கடும் நெருக்கடிக்குள்ளானார். கிடைத்த வாய்ப்பை வீணடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இளம் வீரர்களிடம் போதிய ஸ்பார்க் இல்லை என தோனியும் காட்டமாக பேசினார். அதன் பிறகு ருதுராஜின் ஆட்டப்பாணி வேறொரு திசையில் நகர்ந்தது. அதே தொடரில், தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அரைசதம் விளாசினார். 65*(51) vs RCB; 72(53) vs KKR; 62*(49) vs KXIP. பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, Gaikwad 13 ஆண்டுகால சி.எஸ்.கே வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் அரைசதம் விளாசிய முதல் வீரர் எனும் பெயரை தனது துடிப்பான பேட்டிங்கால் நிலைக்கச் செய்தார். சி.எஸ்.கேவின் ஜாம்பவான்கள் மைக்கேல் ஹஸி, ஷேன் வாட்சன், மேய்த்யூ ஹேடன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னாவால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததில்லை. “ஸ்பார்க் இல்லை என்றார்கள்; கொளுந்துவிட்டு எரிகிறாரே” என சமூக ஊடகங்களில் அப்போது பாராட்டுகள் குவிந்தன. 2021-ல் ருதுராஜின் பங்களிப்பு சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முக்கிய காரணியாக அமைந்தது. டு பிளெசி உடன் அவர் ஓபனிங் ஆடினார். 16 போட்டிகளில் 4 அரைசதம் ஒரு சதம் என மொத்தம் 635 ரன்களை குவித்து ‘ஆரஞ்சு கேப்பை’ பெற்றார். அந்த சீசனில் சென்னை அணி கோப்பையை வென்றது. அதன் பின் 2022-ல் 6 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தக்க வைத்தது சி.எஸ்.கே. பட மூலாதாரம்,SPORTSPICZ தோனி போல் வெற்றிகரமான கேப்டனாக வலம் வர முடியுமா? தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. நடப்பு தொடருடன் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்கிற பாணி தோனியுடையது. 2022-இல் தனது கேப்டன்ஸியை ஜடேஜா வசம் வழங்கினார். அப்போதே அவரது ஓய்வு குறித்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் ஜடேஜாவால் அணியை திறம்பட வழிநடத்த முடியவில்லை. முதல் 8 ஆட்டங்களில் 6-இல் சி.எஸ்.கே தோல்வியைத் தழுவியது. இதனால் தொடரின் நடுவிலேயே மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி வாங்கிக்கொண்டார். இருந்தாலும் அந்த சீசனில் சி.எஸ்.கே 7-ஆம் இடத்திற்கு பின் தங்கியது. அதன் பிறகு அடுத்த ஆண்டே சி.எஸ்.கே ‘கம்பேக்’ கொடுத்தது. குஜராத்தை வீழ்த்தி கோப்பையையும் வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் பல தருணங்களில் முடியாததை முடித்துக் காட்டியிருக்கிறது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு 2018 கோப்பையை வென்றது. 2020-இல் மோசமான தொடராக அமைந்தாலும் 2021-இல் சாம்பியன் பட்டம் வென்றது. இப்படியான அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்துவதில் தோனி வல்லவராகவே திகழ்ந்திருக்கிறார். அதை ருதுராஜாலும் செய்ய முடியுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் "தோனிக்கு ஒத்த காலத்தில் விளையாடிய வீரர்கள் பலர் இப்போது வர்ணணையாளர்களாக மாறிவிட்டனர். சிலர் பயிற்சியாளராகிவிட்டனர். ஆனால் தோனி இன்னும் துடிப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். தோனி தோனிதான். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது." என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாம் பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, CSK Fans "தோனியுடன் ஒப்பிடுவது நியாயமில்லை" “புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் ருதுராஜை ஆரம்ப கட்டத்திலேயே தோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது” என கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதனும் கூறுகிறார். “2007 டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கையோடு தோனி தனது ஐபிஎல் பயணத்தை துவங்கினார். அதன் பிறகு படிப்படியாக சிறந்த தலைவராக மெருகேறினார். அவரது கேப்டன்ஸி ஸ்டைலே தனித்துவமாக இருக்கும்.” என அவர் குறிப்பிடுகிறார். “ருதுராஜ் இயல்பிலேயே அமைதியானவர் என்பதால் அது சி.எஸ்.கேவின் சூழலுக்கும் ஒத்துப்போகிறது. தொடக்கத்தில் ருதுராஜ் கடுமையாக தடுமாறியபோது சி.எஸ்.கே அவருக்கு பக்கமலமாக நின்றது. அதன் பிறகு தனது ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றார். அதிலிருந்து ஒரு 3 – 4 ஆண்டுகளில் சி.எஸ்.கேவின் கேப்டனாக உயர்ந்திருப்பதே நல்ல சாதனைதான்” என்கிறார் கிஷோர் வைத்தியநாதன். சி.எஸ்.கே.வின் 'ரிக்கி பாண்டிங்காக' உருவெடுப்பாரா ருதுராஜ்? சில அனுபவம் வாய்ந்த பேட்டர்களுக்கே கேப்டன் பொறுப்பை கையாளுவதில் சிக்கல் இருக்கும்போது ஓபனிங் பேட்டராக உள்ள ருதுராஜ் எப்படி இரண்டையும் கையாளுவார்?, கேப்டன் பணி ருதுராஜின் பேட்டிங் திறனை பாதிக்குமா என கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாமிடம் கேட்டோம். "சச்சின், லாரா போன்றவர்கள் சிறந்த பேட்டர்கள். ஆனால் அவர்கள் சிறந்த கேப்டன்களாக இருந்ததில்லை. கேப்டனாக இருந்துகொண்டே ஒரு நல்ல பேட்டராக அணியை வழிநடத்தியதில் ரிக்கி பாண்டிங் தனித்துவமானவர். 1995-ல் ஆஸ்திரேலிய அணியில் பாண்டிங் அறிமுகமானபோது அவர் மிடில் ஆர்டரில் இறங்கினார். அதன் பிறகு கேப்டனானதும் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார். அணியை பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்திக்கிறார். கேப்டனாக இருந்துகொண்டும் பேட்டிங்கில் மிரட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் ரிக்கி பாண்டிங்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிக்கி பாண்டிங் "பாண்டிங்கை போலவே பேட்டிங், கேப்டன்ஸி இரண்டிலும் ஜொலிக்கும் வீரராக ருதுராஜ் உருவாக முடியும். ருதுராஜ் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பை நெருங்குகிறது. ஐபிஎல் 2 மாதங்கள்தான். இதில் விளையாடும் ஒவ்வொருவருமே இந்திய அணியில் இடம்பிடிப்பதை மனதில் வைத்தே செயல்படுகின்றனர். ருதுராஜுக்கு ஒத்த காலத்தில் வந்த கில், யஷஷ்வி ஜெய்ஷ்வால், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை பிடிக்க உறுதியான பங்களிப்பை கொடுத்ததோடு பெயர் சொல்லும் அளவுக்குச் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். அடுத்தடுத்து நிறைய வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டிப்போடுகின்றனர். இது ருதுராஜுக்கும் நன்கு தெரியும். இதனால் கேப்டன் பொறுப்போடு பேட்டிங்கையும் நேர்த்தியாகச் செய்து அதன் மூலம் கவனம் பெற முயற்சிப்பார்." என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இருக்கும் முக்கியமான 3 சவால்கள் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முன் உள்ள சவால்கள் குறித்து கிஷோர் வைத்தியநாதன் பின் வருமாறு கூறுகிறார். கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வெற்றிகரமான அணி. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. ரசிகர்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். மற்ற அணிகளை விட, சென்னை அணி கோப்பையை வெல்லத் தவறினால் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியாகவே கருதப்படும். காரணம் அந்தளவுக்கு சி.எஸ்.கேவின் மதிப்பு இன்று வரை உயர்ந்து விளங்குகிறது. மூத்த வீரர்களை கையாளுதல் தோனி உள்பட அணியில் நிறைய மூத்த வீரர்கள் இருக்கின்றனர். சர்வதேச வீரர்கள் உள்ளனர். இவர்களை எப்படி கையாளப்போகிறார் என்பது மற்றொரு சவால். களத்திற்கு உள்ளே மட்டுமின்றி வெளியிலும் வீரர்களை கையாளுவதில் சில சவால்கள் இருக்கின்றன. அவர்களை எப்படி கையாளுகிறார். அணியை எப்படி கட்டமைக்குகிறார் என்பதும் முக்கியமானது. தோல்வியின்போது அணியை கையாளும் பக்குவம் சி.எஸ்.கே தோல்வியடையும் தருணங்களில் அணியை எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்பதிலும் ருதுராஜுக்கு சவால் இருக்கிறது. சி.எஸ்.கேவிடம் உள்ள ஒரு பலமே அந்த அணி வெற்றியின்போதும் தோல்வியின்போதும் சமநிலையை பேணுவதுதான். வீரர்களை சமச்சீரான நிலையில் எப்போது அமைதியாக வைத்திருப்பார் தோனி. ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் சக வீரர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாமல் எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்பதும் ருதுராஜுக்கு ஒரு சவாலாக இருக்கும். பட மூலாதாரம்,SPORTSPICZ 'கேப்டன்' ருதுராஜை சி.எஸ்.கே ரசிகர்கள் எப்படி பார்க்கிறார்கள்? “தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேசமயம், மாற்று வீரரை அவரே அடையாளம் கண்டு கேப்டன்ஸியை வழங்கியது நல்ல உத்தி" என்கிறார் தோனியின் தீவிர ரசிகரான சரவணன். “கேப்டன் பொறுப்புக்கு ஒரு இளம் வீரரை கொண்டு வர வேண்டும் என்பதே அணி நிர்வாகமும் விரும்பியது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் திறமைமிக்க வீரர். அவர்தான் தகுதியானவரும் கூட காரணம், உள்ளூர் கிரிக்கெட் மட்டுமின்றி ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தியவர்” என சரவணன் குறிப்பிட்டார். 2023 அக்டோபரில், சீனாவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய கேப்டன் எனும் பெருமை ருதுராஜுக்கு கிடைத்தது. அதோடு, தோனிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் முறையே சர்வதேச அரங்கில் கோப்பையை வென்ற வீரர் என்கிற பெருமையும் கிடைத்தது. முன்னதாக 2023-ல் அயர்லாந்திற்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்தபோது துணை கேப்டனாக செயல்பட்டார் ருதுராஜ். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் துணை கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, தோனி ரசிகர் சரவணன் (மஞ்சம் நிறம் பூசியிருப்பவர்) "ருதுராஜ் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்" ருதுராஜால் ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல முடியுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த சரவணன், "தோனிக்கு சி.எஸ்.கே கேப்டன் பொறுப்பை வழங்கியபோது அவர் இவ்வளவு சிறப்பாக அணியை வழிநடத்தி, 5 முறை கோப்பைகளை வென்று கொடுப்பார் என நாம் யாருமே நினைத்திருக்க மாட்டோம். வாய்ப்பு கொடுத்தால்தான் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது தெரியும். தோனி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதே பாணியை ருதுராஜும் தொடர்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார். "களத்திற்கு நேரடியாகச் சென்று பார்க்கும்போது ருதுராஜும் தோனியும் அதிகம் பேசிக்கொள்வதை கவனிக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கிறது. இது அணிக்கு தேவை மற்றும் ஆரோக்கியமான விஷயமும் கூட" என்கிறார் சரவணன். "தோனி சி.எஸ்.கேவுக்காக மட்டும் ருதுவை கைகாட்டவில்லை, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ருதுராஜ் அவசியமானவர் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியிருக்கிறார். தோனியை போன்றே ருதுராஜும் ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுப்பார்" என நம்பிக்கையுடன் பேசினார் சரவணன். https://www.bbc.com/tamil/articles/c9rvv2xgxdyo
  12. மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்தன! 06 APR, 2024 | 05:57 PM தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . தினசரி காய்கறிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகப் வியாபாரிகள் தெரிவித்தனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் , ஒரு கிலோ போஞ்சி 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலும், கோவா மற்றும் வெண்டக்காய் கிலோ 100 ரூபாவாகவும், கரட் 200 ரூபாவாகவும், வெள்ளரிக்காய் 15 ரூபாவாகவும் குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/180590
  13. நனோ நீர் சுத்திகரிப்பு மையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு! திறந்துவைப்பு 06 APR, 2024 | 04:02 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர்ந்த கிராமங்களில் நனோ தொழில்நுட்பத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்வழங்கல் அமைச்சின் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 23 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழான செல்வாநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட செல்வச்செழிப்பு நீர்பாவனையாளர் சங்கத்திற்கான நனோ நீர் சுத்திகரிப்பு மையம் சனிக்கிழமை (6) பாவனைக்காக கையளிக்கப்பட்டது. செல்வச்செழிப்பு நீர் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் திரு.சிவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அதீதிகளாக கலந்துகொண்டு குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நாடாவினை வெட்டி திறந்து வைத்திருந்தனர். இந்நிகழ்வில் அமைச்சர்களுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆனந்த கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன்,திட்டமிடல் பணிப்பாளர் திரு.கி.ஸ்ரீ பாஸ்கரன்,கரைச்சி பிரதேச செயலர் திரு.த.முகுந்தன் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் திரு. இரட்ணம் அமீன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி திரு.மதிவதனன் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,அரசியல் பிரமுகர்கள்,பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். https://www.virakesari.lk/article/180588
  14. சமூக ஒழுக்கத்தை மீறும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை, புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று(5) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டும் என புத்தசாசனம், சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே. டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298305
  15. US Earthquake: ஆட்டம் கண்ட Liberty Statue; அமைதியான UN Officials; பதறிப்போன மக்கள். Shocking Footage
  16. Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 03:54 PM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயிற்கு தந்தை துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது. https://www.virakesari.lk/article/180593
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஜலதோஷத்தை குணப்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், கொழுப்பைக் கட்டுப்படுத்தும். ஆனால், இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளனவா? உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? பூண்டு ஜலதோஷத்திற்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த விஷயங்கள் உண்மையா என்பதைப் பார்ப்போம். பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா? "பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர். பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம். "குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை." கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பூண்டு குறைக்குமா? இரானில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்கள் 20 கிராம் பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவையை 8 வாரங்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டனர். முடிவுகள் நேர்மறையாக இருந்தன. இந்தப் பரிசோதனையில் கொழுப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் குறைவதாகக் காட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வில், பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வைப் பார்த்தால், நமக்கு நேர் எதிரான பதில் கிடைக்கிறது. இந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூண்டு கொழுப்பைக் குறைக்கிறது என்பது கட்டுக்கதை எனக் கூறி 2007இல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். "லேசான கொழுப்பு கொண்ட 200 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பூண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் ரத்தத்தில் கொழுப்பு குறையவில்லை.” தனக்கு ஒரு நாளைக்கு ஒரு பல் பூண்டு கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் கார்ட்னர் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பேராசிரியர் கார்ட்னர் இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார். "எங்கள் ஆய்வு 200 பேரை உள்ளடக்கியது. இது ஆறு மாத ஆய்வு. இந்த ஆய்வு தேசிய சுகாதார நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டது," என்கிறார் கார்ட்னர். "எங்கள் ஆய்வு மிகவும் துல்லியமானது. இருப்பினும், இந்தக் கட்டுக்கதைகள் உண்மையா என்பதை அறிவது சுவாரஸ்யமானது,” என்கிறார் கர்ட்னர். பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்தவொரு பெரிய அளவிலான ஆய்வின் மூலமும் அவற்றை உறுதிப்படுத்துவது ஒரு பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா? நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார். மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். "பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது." இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார். பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது. "வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது." சளி குணமாகுமா? சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார். உணவில் பூண்டை எப்படி அதிகம் பயன்படுத்துவது என்பது குறித்து சமையல் கலை நிபுணர் லின்ஃபோர்ட் கூறினார். உங்கள் விருப்பப்படி பூண்டை உணவில் பயன்படுத்தலாம் என்றார். நீங்கள் பூண்டின் சுவையை விரும்பினால், உங்கள் சமையலில் பூண்டு விழுதைப் பயன்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் நீங்கள் பூண்டின் மணத்தை மட்டும் விரும்பினால், பூண்டு பற்களை ஆலிவ் எண்ணெயில் வறுத்து பின்னர் அதை வடிகட்டி, அந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் சாலட்டில் பூண்டு சுவையை நீங்கள் விரும்பினால், சாலட் கிண்ணத்தின் உட்புறத்தில் பூண்டு பற்களைத் தேய்க்கலாம். பூண்டு அறையின் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். பூண்டு மென்மையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ மாறினால், அது கெட்டுப் போனதாக அர்த்தம். அதை சமையலில் பயன்படுத்த வேண்டாம். பூண்டு அனைவருக்கும் நல்லதா? பூண்டு சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றில் பிரச்னை ஏற்படும். துரதிருஷ்டவசமாக, பூண்டு சிலருக்கு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக குடல் எரிச்சல் (IBS) கொண்டவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என வான் டி போயர் கூறுகிறார். எனவே, இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் உணவில் பூண்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூண்டின் சுவையை அதிகரிக்க சமைக்கும்போது பூண்டு கலந்த எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழி. இந்த முறையில் பயன்படுத்துவது, குடல் எரிச்சல் உள்ளவர்களைக் குறைவாகவே பாதிக்கும். https://www.bbc.com/tamil/articles/c13d3kg3155o
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES / ANADOLU படக்குறிப்பு, இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களை படிக்கும் காஸா மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டெஃபனி ஹெகார்டி & அகமது நூர் பதவி, பிபிசி உலக சேவை 7 மணி நேரங்களுக்கு முன்னர் தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த வெளியேற்ற எச்சரிக்கைகளில் குறிப்பிடத்தக்க பிழைகள் இருப்பதை பிபிசி பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தன. குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்த அந்த எச்சரிக்கைகளில் சில மாவட்டங்களின் பெயர்களும் அதில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்தகைய தவறுகளால், சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவதாகக் கருதப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கைகள் குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருப்பதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நிராகரித்துள்ளன. பிபிசியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட எச்சரிக்கைகள் என்பது பொதுமக்களை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு கூறு மட்டுமே எனத் தனது அறிக்கையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. சூழ்நிலைகள் மோசமாக இருந்தால் ஒழிய, பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தாக்குதல்களைப் பற்றிய முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக வெளியிட வேண்டுமென சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கூறுகிறது. ஹமாஸுக்கு எதிரான தனது போரைத் தொடர்வதால், பொதுமக்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் தனது எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்த அமைப்பு காஸாவின் வரைபடத்தை நூற்றுக்கணக்கான எண்ணிடப்பட்ட தொகுதிகளாகப் பிரிக்கிறது. ஆனால் இந்த எண்ணற்ற தொகுதி அமைப்பானது காஸா மக்களுக்குப் பழக்கப்பட்டதல்ல. மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்படும்போது, தாங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருக்கிறோமா இல்லையா என்பதை காஸா மக்கள் கண்டறிய, அந்தப் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் ஆன்லைன் வரைபடத்தை (மாஸ்டர் பிளாக்) இஸ்ரேல் தயாரித்துள்ளது. ஜனவரியின் பிற்பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சார்பாக எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிடப்பட்ட ஒரு பதிவில், க்யூஆர் குறியீடு வழியாக மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகுவதற்கான இணைப்பு வழங்கப்பட்டது. படக்குறிப்பு, காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது. ஆனால் எங்களிடம் பேசிய காஸா மக்கள் சிலர், இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும், எச்சரிக்கைகளில் உள்ள பிழைகளைப் புரிந்துகொள்வதற்கும், வரைபடத்தைப் பார்த்து புதிய வழிகளைக் கண்டறியவும் கடினமாக இருப்பதை விவரித்துள்ளனர். ஃபேஸ்புக், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் டெலிகிராமில் உள்ள ஐடிஎஃப்-இன் அரபி மொழி சமூக ஊடக சேனல்களை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அங்கு எச்சரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான பதிவுகளை நாங்கள் கண்டோம். ஒரே எச்சரிக்கை மீண்டும் மீண்டும், சில நேரங்களில் சிறிய மாற்றங்களுடன், தொடர்ச்சியான நாட்களில் அல்லது வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட்டு, பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆன்லைனில் பகிரப்பட்ட எச்சரிக்கைகளையும் நாங்கள் தேடினோம். காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக ஐடிஎஃப் கூறுகிறது. டிசம்பர் 1 முதல் வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளில் பிபிசி கவனம் செலுத்தியது. ஏனெனில் சர்வதேச அழுத்தத்தின் கீழ் வந்த பிறகு, முன்பைவிட மிகவும் துல்லியமான வழிமுறைகளை வழங்கும் ஒரு வழியாக தனது பிளாக் அமைப்பை டிசம்பர் 1 முதல் ஐடிஎஃப் தொடங்கியது. இந்தத் தேதிக்குப் பிறகு நாங்கள் கண்டறிந்த ஐடிஎஃப் அமைப்பின் பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் 26 தனித்தனி எச்சரிக்கைகளாகப் பிரித்தோம். பெரும்பான்மையானவர்கள் மாஸ்டர் பிளாக் அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன, ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன. ஆன்லைன் எச்சரிக்கைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள், முன்பே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி செய்திகள் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாக ஐடிஎஃப் அமைப்பு பிபிசியிடம் தெரிவித்தது. காஸாவில் சாலை மார்க்கமாகச் சென்று விரிவான அறிக்கைகளைப் பெறுவது சாத்தியமில்லை. தொலைபேசி நெட்வொர்க் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் பற்றிய ஆதாரங்களை பிபிசியால் சேகரிக்க முடியவில்லை. பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன. அவற்றை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற காஸா மக்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன. அவை, சமூக ஊடகப் பதிவில் இருந்த 12 எச்சரிக்கைகள், அதில் தொகுதிகள் அல்லது சுற்றுப்புறங்கள் குறித்து பட்டியலிடப்பட்டிருந்தது, ஆனால் அதனுடன் உள்ள வரைபடத்தில் அந்தப் பகுதிகள் குறிப்பிடப்படவில்லை. ஒன்பது பகுதிகள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அதனுடன் இருந்த சமூக ஊடகப் பதிவில் பட்டியலிடப்படவில்லை. பத்து எச்சரிக்கைகள், தொகுதிகள் இரண்டாகப் பிரித்து காட்டப்பட்டிருந்தன. ஆனால் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் எல்லையை நிர்ணயிக்கும் அளவுக்கு அந்த வரைபடம் விரிவாக இல்லை. ஏழு எச்சரிக்கைகளின் வரைபடத்தில் ‘பாதுகாப்பு’ பகுதிகளை சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, மக்கள் வெளியேற வேண்டிய பகுதிகளையும் சேர்த்தே சுட்டிக் காட்டுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிழைகள் குறித்து நாங்கள் ஐடிஎஃப் அமைப்பிடம் கேட்டபோது, அது வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை. மேலும், ஒரு எச்சரிக்கையில் ஒரு மாவட்டத்தில் இருக்கும் பகுதிகள் மற்றொரு மாவட்டத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்றொன்று இரண்டு பகுதிகளின் தொகுதி எண்களை இணைத்துக் கொடுத்துள்ளது. மூன்றாவதாக, பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள சில தொகுதிகள் காஸாவின் எதிர்பக்கத்தில் உள்ளது போல வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பிழைகள் பற்றி நாங்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையிடம் கேட்டபோது, அவர்கள் வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை. ஆனால் சமூக ஊடக பதிவுகளின் செய்தி போதுமான அளவு தெளிவாக உள்ளது எனக் கூறினர். மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல வரைபடத்தில் அம்புகள் பயன்படுத்தப்படும்போது, ’அம்புகள் பொதுவான திசையைச் சுட்டிக்காட்டுகின்றன என்பது வெளிப்படையான ஒரு விஷயம்தான்’ எனவும் பதிவுகளின் செய்தியில் முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியது. இந்தத் தவறுகள் மற்றும் பிழைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் ‘பயனுள்ள மேம்பட்ட எச்சரிக்கைகளை’ வழங்குவதற்கான இஸ்ரேலின் கடமையை மீறக்கூடும் என்று ஆக்ஸ்ஃபோர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் எதிக்ஸ், சட்டம் மற்றும் ஆயுத மோதல் பிரிவின் இணை இயக்குநர் ஜானினா டில் கூறுகிறார். “பெரும்பாலான எச்சரிக்கைகளில் பிழைகள் இருந்தாலோ அல்லது பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்குத் தெளிவில்லாமல் இருந்தாலோ, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டிருக்கும் செயல்பாட்டை இந்த எச்சரிக்கைகள் உறுதி செய்யவில்லை என அர்த்தம்” என்று கூறுகிறார் அவர். “இந்த எச்சரிக்கைகளின் நோக்கம் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாகும். அதன் பிழைகள் அவர்களின் செயல்பாட்டை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது,” என எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான குபோ மக்காக் கூறுகிறார். 'பெரிய விவாதம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் காஸா தொழிலதிபர் சலே பார்த்துள்ளார். காஸா நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சலே, டிசம்பரில் மத்திய காஸாவில் உள்ள நுசிராட்டில் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்த போது அங்கு மின்சாரம், தொலைபேசி சிக்னல்கள் இல்லை என்றும், நீண்ட நேரம் இணையத் தடை இருந்தது என்றும் கூறுகிறார். ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் அவர் பார்த்துள்ளார். தனக்கு ஐடிஎஃப் அமைப்பின் வெளியேற்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இறுதியில், எகிப்து மற்றும் இஸ்ரேலில் உள்ள தரவு நெட்வொர்க்குகளை அணுகக்கூடிய சிம் கார்டு பயன்படுத்தும் ஒருவரைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியேறுவதற்கான எச்சரிக்கை குறித்த பதிவைக் கண்டார். "பல குடியிருப்புத் தொகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் எந்தத் தொகுதியில் வசித்தோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுவொரு பெரிய குழப்பத்திற்கு வழிவகுத்தது," என்று சலே கூறுகிறார். சலேவால் எப்போதாவதுதான் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. போருக்கு சற்று முன்பு பிரிட்டனில் வசிக்கும் அவரது மனைவி அமானிக்கு ஒரு செய்தி அனுப்பினார். அவரது மனைவியால், ஆன்லைனில் இருந்த ஐடிஎஃப் அமைப்பின் மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகி, கணவர் சலே எங்கிருக்கிறார் என்பதைக் குறிப்பிட முடிந்தது. ஆனால், முகநூலில் இருந்த வெளியேற்ற எச்சரிக்கையைத் திரும்பிப் பார்க்கையில், சலே தங்கியிருந்த தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்ததை தம்பதியினர் உணர்ந்தனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியில், சலே குழந்தைகளுடன் வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவரது குடும்பத்தில் சிலர் போர் அடுத்த கட்டத்தை எட்டும் வரை அங்கேயே இருந்தனர். சலே புரிந்துகொள்ள முயன்ற அந்த வெளியேற்ற எச்சரிக்கை குறித்த முகநூல் பதிவை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அதில் பல குழப்பமான அம்சங்கள் இருப்பதைக் கண்டோம். பதிவின் செய்தியில், 2220, 2221, 2222, 2223, 2224 மற்றும் 2225 ஆகிய தொகுதிகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஐடிஎஃப் அமைப்பின், இந்தத் தொகுதிகள் அனைத்தும் ஐடிஎஃப்-இன் ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்தில் இருப்பவை. ஆனால் அந்தப் பதிவில் உள்ள வரைபடத்தில், ஆறு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தொகுதி 2220 எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு, பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை. இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜனவரியில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிரான வாதத்தின் ஒரு பகுதியாக, தனது தடுப்பு எச்சரிக்கை அமைப்பை சர்வதேச நீதிமன்றத்தின் முன்வைத்தது இஸ்ரேல் அரசு. “இஸ்ரேல் அரசு குடிமக்களைப் பாதுகாக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், முழுப் பகுதிகளையும் காலி செய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிகமாக வெளியேற்றப்படும் வகையில் விரிவான வரைபடத்தை அரசு உருவாக்கியுள்ளதாகவும்” வாதிட்டனர் இஸ்ரேலின் வழக்கறிஞர்கள். அவர்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைத்த ஒரு சமூக ஊடக எச்சரிக்கை பதிவில், இரண்டு பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது. பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை. படக்குறிப்பு, பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது. ஐடிஎஃப் அதன் அரபு ட்விட்டர் கணக்கு மூலம், வெளியேற்றப்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ள தங்குமிடங்களின் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்கி வருவதாகவும் இஸ்ரேலிய வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால் பிபிசி பகுப்பாய்வு செய்த அனைத்து பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் தங்குமிடங்களின் பெயர்கள் அல்லது அவற்றின் சரியான இருப்பிடங்களை வழங்கும் எந்த எச்சரிக்கையையும் நாங்கள் காணவில்லை. பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது. 26 எச்சரிக்கைகளில் ஒன்பது தொகுதிகளின் எண்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் பெயர்கள் கலவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. மற்ற ஒன்பது எச்சரிக்கைகளில் தொகுதி எண்கள் இல்லை. ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பதிலாக அவை சுற்றுப்புறப் பகுதிகளைத்தான் பட்டியலிட்டன. அதில் பெரும்பாலும் தொகுதிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன, எண்கள் இல்லை. இந்த சுற்றுப்புறப் பகுதிகளின் சரியான தொகுதிகளைத் தீர்மானிக்க பிபிசியால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 32 பேரை உள்ளடக்கிய அப்து குடும்பம், போரின் தொடங்கிய நேரத்தில் காஸா நகரத்திலிருந்து மத்திய காஸாவிற்கு தப்பிச் சென்றது. பின்னர், டிசம்பரில், ஒரு விமானத்தில் இருந்து கைவிடப்பட்ட எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் அவர்களுக்குக் கிடைத்தது. பிபிசிக்கு கிடைத்த குடும்ப வாட்ஸ்அப் குழுவில் உள்ள செய்திகள் மூலம், அந்த துண்டுப் பிரசுரத்திற்கு அர்த்தம் என்னவென்று இரண்டு நாட்களாக அவர்கள் வாதிட்டதால் அவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அதில் வெளியேற வேண்டிய அக்கம்பக்கத்தினரின் பட்டியல் இருந்தது, ஆனால் குடும்பத்தாரால் அந்த இடங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிலிருந்த எச்சரிக்கை செய்தி, "அல்-புரிஜ் முகாம் மற்றும் பத்ர், வடக்கு கடற்கரை, அல்-நுஷா, அல்-சஹ்ரா, அல்-புராக், அல்-ரவ்தா மற்றும் அல்-சஃபா ஆகியவற்றின் சுற்றுப்புறங்களில் இருந்து வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது." அவர்கள் அல்-சஹ்ரா மற்றும் பத்ரை ஆகிய பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அவை வாடி காஸா ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளன. "வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில்" அல்-ரவ்தா அல்லது அல்-நுஷாவின் பகுதிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. "அவர்கள் இங்கேயே தங்கி கடுமையான தரைப் போரில் சிக்கிக் கொள்ள வேண்டுமா, அல்லது இங்கிருந்து வெளியேறி, அவர்களுக்குக் கிடைத்த ஒரே தங்குமிடத்தை விட வேண்டுமா?" என்று அப்து குடும்பத்தினர் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர். படக்குறிப்பு, இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களில் தவறாக குறிக்கப்பட்டிருந்த இடங்கள் சிலர் "டேர் அல்-பாலாவில் உள்ள தங்குமிடங்களுக்கு" செல்லுங்கள் என்று கூறிய எச்சரிக்கை தகவலைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் அந்த இடத்தைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்து திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அப்படி நாங்கள் இறந்தால், ஒன்றாகவே இறப்போம் என்று அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஓரிகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஜமோன் வான் டென் ஹோக் மற்றும் சிட்டி யுனிவர்சிட்டி நியூயார்க் கிராஜுவேட் சென்டரின் கோரே ஷெர் ஆகியோரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட காஸாவின் அழிவு குறித்த செயற்கைக்கோள் தரவு, அவர்கள் விட்டுச் சென்ற பகுதியைவிட அதிக அழிவைக் காட்டியது. செயற்கைக்கோள் தரவுகள், அந்தக் குடும்பம் தப்பியோடிய டெய்ர் அல்-பாலா பகுதி இந்தக் காலகட்டத்தில் மிகவும் தீவிரமான தாக்குதலுக்கு உட்பட்டிருந்ததைக் காட்டுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை "இந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு அங்கு நிலவிய பொதுமக்கள் நடமாட்டம் குறித்த தரவுகளை" குறுக்கு சோதனை செய்ததாகவும், அவை குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இல்லை என்றும் கூறியது. இந்த எச்சரிக்கைகள் மூலம் "காஸா பகுதியில் எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும்" அது கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/czrzxm1rg2do
  19. கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார். சுமார் 10,000இற்கு விற்பனை செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள் 7,000இற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/298359
  20. Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 12:26 PM யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன. கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை க 11 டொல்பின்கள் அகப்பட்டன. குறித்த டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர். டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/180577
  21. CSK vs SRH: 'மினி தோனி'யாக மாறிய பேட் கம்மின்ஸ் - சிஎஸ்கே-வை சிறைபிடித்த சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மைதானத்தின் விக்கெட்டை(ஆடுகளம்) ஒரு கேப்டனும், பந்துவீச்சாளர்களும் விரைவாக உணர்ந்துகொண்டாலே எதிரணியை எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியும், ரன் குவிப்பை தடுத்து, வெற்றியை எளிதாக்க முடியும். எந்த அளவுக்கு விக்கெட்டின் தன்மைக்கு ஏற்ப தங்களின் பந்துவீச்சை மாற்றி அமைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு வெற்றியின் கடினம் தீர்மானிக்கப்படும். அந்த உத்தியை நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸும், பந்துவீச்சாளர்களும் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறைபிடித்தனர். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் பிளஸ் 0.409 ஆக இருக்கிறது. சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து பெறும் 2வது வெற்றி இது. தவறவிட்ட சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS உண்மையில் 4வது இடத்துக்கு சன்ரைசர்ஸ் அணி வரவேண்டியது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கடைசி 30 ரன்களை சேர்க்க அதிகமான ஓவர்களை பேட்டர்கள் வீணடித்தனர். சன்ரைசர்ஸ் வசம் 8 விக்கெட்டுகள் வரை இருந்த நிலையில் துணிச்சலாக பெரிய ஷாட்களுக்கு முயன்றிருக்கலாம். அவ்வாறு பெரிய ஷாட்களை அடித்து இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டியிருந்தால், லக்னௌ அணியைவிட நிகர ரன்ரேட்டில் முன்னேறி 4வது இடத்துக்கு நகர்ந்திருக்க முடியும். ஆனால், தேவையின்றி கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் மெதுவாக பேட் செய்து, நிகர ரன்ரேட்டை கோட்டைவிட்டனர். சிஎஸ்கேவுக்கு கட்டம் சரியில்லை அதேநேரம் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்தாலும், அதன் நிலை குறையாமல் தொடர்ந்து 3வது இடத்திலேயே நீடிக்கிறது. ஆனால் நிகர ரன்ரேட் 0.517 ஆகக் குறைந்துவிட்டது. ஒரு நேரத்தில் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த சிஎஸ்கே அணி தற்போது பாதியாகக் குறைந்துவிட்டது. இப்போதே பரபரப்பு பட மூலாதாரம்,SPORTZPICS தற்போது புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5 அணிகள் இருக்கின்றன. இந்த 5 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாமல் குறைந்த இடைவெளியே இருப்பதால் அடுத்தடுத்து வரும் ஆட்டங்கள், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னௌ, குஜராத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் பெறும் வெற்றிகள், சந்திக்கும் தோல்விகளைப் பொறுத்து அதன் இடங்கள் மாறிக்கொண்டே செல்லும். ஐபிஎல் தொடங்கி பாதி அட்டவணைப் போட்டிகள் முடியும் முன்பே சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டு, புள்ளிகளைப் பெற அணிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்டநாயகன் அபிஷேக் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை நேர்த்தியாக, மிகச் சரியாகச் செய்து கொடுத்ததால்தான், சிஎஸ்கே போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக பேட்டர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது. அதிலும் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் சேர்த்து சிறப்பான கேமியோ ஆடி பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணியை பாதிக் கடலை கடக்க வைத்தார். பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்க்க அபிஷேக் அதிரடியே காரணம். வெற்றிக்கான பாதையையும் எளிதாக்கியதால் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. கம்மின்ஸின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பட மூலாதாரம்,SPORTZPICS புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரை ஜடேஜா எதிர்கொண்டார். 4வது பந்தை புவனேஷ்வர் யார்க்கராக வீசவே, பந்தைத் தட்டிவிட்டு ஜடேஜா ஓட முயன்றார். ஆனால், பந்தைப் பிடித்த புவனேஷ்வர் ஜடேஜாவை ரன்-அவுட் செய்ய ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடியதால், அவர் மீது பந்து பட்டது. கிரிக்கெட் விதியின்கீழ் பேட்டர் ஓடும்போது ஸ்டெம்பை மறைத்து ஓடக்கூடாது. ஆனால், ஜடேஜா அவ்வாறு ஓடியதால் 3வது நடுவரிடம் அப்பீல் சென்றது. ஆனால், இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ் நடுவரிடம் சென்று அப்பீல் வேண்டாம் தேவையில்லை என்று கூறித் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார். மினி தோனியாக மாறி கம்மின்ஸ் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட்டது. மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் எனும் பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் எட்டியது. ஆனால், அதே மைதானம்தான் ஆனால் கறுப்பு மண் கொண்ட விக்கெட்டாக இருந்தது. இந்த விக்கெட் மாறுதலை கேப்டன் கம்மின்ஸும், சக பந்துவீச்சாளர்களும் விரைவாகப் புரிந்து கொண்டதால் தங்கள் பந்துவீச்சை அதற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டனர். இந்த கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் பந்து பேட்டர்களை நோக்கி என்னதான் விரைவாக வீசினாலும் மெதுவாகவே செல்லும் என்பதைப் புரிந்துகொண்ட பந்துவீச்சாளர்கள், ஸ்லோவர் பால், ஸ்லோபவுன்சர் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். அவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள், மிகச் சரியாகப் பலன் அளித்து சிஎஸ்கே பேட்டர்களை வெல்ல முடிந்தது. குறிப்பாக சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான ஸ்லோவர் பந்துகளை வீசி சிஎஸ்கே பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தனர். குறிப்பாக உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஏராளமான ஸ்லோவர் பந்துகளையும், பேட்டர்களை ஏமாற்றும் விதத்தில் ஸ்லோ ஷார்ட் பவுன்சர்களையும் வீசி ரன்சேர்ப்புக்கு பெரிய கடிவாளம் போட்டனர். 'ஹோம் ஓர்க்' செய்த கம்மின்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS இதனால் புவனேஷ்வர், நடராஜன், கம்மின்ஸ், உனத்கட் ஆகியோரின் நிகர ரன்ரேட் 7 சராசரிக்கும் மேல் செல்லவில்லை. அதிலும் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியை கோட்டைவிடாமல் இருந்தால் இன்னும் குறைந்திருக்கும். வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேரும் சேர்ந்து 34 டாட் பந்துகளை வீசியுள்ளனர், அதாவது ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்களாக மாறியுள்ளன. ஆடுகளத்தின் தன்மையையும், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு விளையாடுவார்கள், எந்தப் பந்துவீச்சில் பலவீனம், யாருக்கு எவ்வாறு பந்து வீசலாம் என்பதை கேப்டன் கம்மின்ஸ் நன்கு படித்து “ஹோம்ஓர்க்” செய்து வந்திருந்தார். அதனால்தான், ஒவ்வொரு பேட்டருக்கு ஏற்றாற்போல், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பந்துவீசி எந்த பேட்டரையும் களத்தில் நங்கூரமிடவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர்ந்து கொண்ட கம்மின்ஸ், சக பந்துவீச்சாளர்களுக்கும் எவ்வாறு பந்துவீச வேண்டும், எந்த மாதிரியான பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி சிஎஸ்கே பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் சித்தரவதை செய்தார். பட மூலாதாரம்,SPORTZPICS குறிப்பாக ஷிவம் துபே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு பேட் செய்யக் கூடியவர், ஸ்ட்ரைக் ரேட்டும் அதிகம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கம்மின்ஸ் விரைந்து முடிவெடுத்தார். மார்க்கண்டே, ஷான்பாஸ் ஓவர்களை ஷிவம் துபே குறிவைத்து சிக்ஸர், பவுண்டரிகளா அடித்தவுடன், கம்மின்ஸ் அடுத்தடுத்து நடராஜன், உனத்கட்டை பந்துவீசச் செய்து துபேவுக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில் ஷிவம் துபேயின் விக்கெட்டை கம்மின்ஸ் தனது பந்துவீச்சில் எடுத்துக் கொடுத்தார். ஃபீல்டிங் அமைப்பதிலும் கம்மின்ஸ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். எந்தப் பந்துவீச்சாளரைப் பயன்படுத்தினால் எந்தப் பந்துவீசுவார், அதற்கு ஏற்றாற்போல், பேட்டர் எவ்வாறு ஷாட்களை அடிப்பார் என்பதை மனக்கணக்கில் புரிந்து கொண்டு ஃபீல்டிங்கை அருமையாக கம்மின்ஸ் அமைத்தார். இந்த ஆட்டத்தில் ஒரு கேட்சை கூட விக்கெட் கீப்பர் கிளாசன் பிடிக்கவில்லை, மாறாக மைதானத்தில் நின்றிருந்த பீல்டர்களே கேட்சுகளை பிடித்தனர். தோனி கேப்டனாக இருக்கும்போது, எதிரணியின் ஒவ்வொரு பேட்டருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்துச் செயல்படுவார். பந்துவீச்சிலும் அதற்கு ஏற்ற வகையில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டே இருப்பார். எந்த மைதானமாக இருந்தாலும் ஆடுகளத்தின் தன்மையை விரைந்து புரிந்துகொண்டு பந்துவீச்சாளர்களை அதற்கு ஏற்றாற்போல் மாற்றுவார். தோனி செய்த அத்தனை பணிகளையும் நேற்று கம்மின்ஸ் கேப்டன்சியில் காண முடிந்தது. அதனால்தான் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் தோனிக்கு எதிராக “மினி தோனி”யாக செயல்பட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது. அபிஷேக் அதிரடியால் ‘டென்ஷன்’ குறைந்தது பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் எளிய இலக்கு என்பதைப் புரிந்து கொண்டு தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தார். டிராவிஸ் ஹெட் பொறுமையாக ஆட, அபிஷேக் வெளுத்து வாங்கினார். முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் அபிஷேக் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் ஒரு நோபால் சிக்ஸர் என 27 ரன்களை குவித்தார். தீபக் சஹர் வீசிய 3வது ஓவரிலும் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து அபிஷேக் தனது கேமியோவை நிறைவு செய்தார். அடுத்து வந்த மார்க்ரம், ஹெட்டுடன் சேர்ந்தார். இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் ரன்ரேட் குறையாமல் கொண்டு சென்றதால் பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ். வெற்றிக்கான இலக்கில் பாதியைக் கடந்திருந்தது. 8.5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை அடைந்தது. சவாலான மார்க்ரம் பேட்டிங் பட மூலாதாரம்,SPORTZPICS தீக்சனா வீசிய 10வது ஓவரில் ரவீந்திராவிடம் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஹெட் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 3வது விக்கெட்டுக்கு வந்த ஷான்பாஸ் அகமது, மார்க்ரமுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். பொறுப்புடனும், நேர்த்தியாகவும் பேட் செய்த மார்க்ரம், சிஎஸ்கே பவுலர்கள் தன்னை ஆட்டமிழக்கச் செய்ய எந்த வாய்ப்பும் வழங்கவில்லை, பெரிய ஷாட்களுக்கும் செல்லவில்லை. ஆனால், ஷான்பாஸ் பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அது பலன் அளிக்கவில்லை. 35 பந்துகளில் மார்க்ரம் அரை சதத்தை நிறைவு செய்தார். அதன்பின் மொயீன் அலி பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு மார்க்ரம் கால்காப்பில் வாங்கி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக பேட் செய்த ஷான்பாஸ் ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் சேர்த்து மொயீன் அலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். பட மூலாதாரம்,SPORTZPICS ஏமாற்றிய கிளாசன் ஐந்தாவது விக்கெட்டுக்கு கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் சேர்ந்தனர். குறைவான இலக்கு இருந்தாலும் பெரிய ஷாட்களுக்கு செல்ல இருவரும் தயங்கினர். நிதிஷ் குமார் துணிச்சலாக ஒரு பவுண்டரி அடித்தார், கிளாசன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. தீபக் சஹர் ஓவரில் நிதிஷ் ஒரு சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார். கிளாசன் 10 ரன்களிலும், நிதிஷ் குமார் 14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணி 8.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய நிலையில் அடுத்த 66 ரன்களை சேர்க்க 10 ஓவர்களை தேவையின்றி எடுத்துக்கொண்டு வெற்றியைத் தள்ளிப் போட்டது. 5 ஓவர்கள் குறைவாக இலக்கை அடைந்திருந்தால் சன் ரைசர்ஸ் நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு அருகே வந்திருக்கும். சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன? சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. பலமான பேட்டிங் வரிசையை வைத்துள்ள சிஎஸ்கே அணியால், நேற்றைய ஆடுகளத்தில் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதற்குக் காரணம் பேட்டர்கள் ஆடுகளத்தை நன்றாகப் புரிந்து கொண்டு பேட் செய்யாததும், பெரிய ஷாட்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தததும்தான். பட மூலாதாரம்,SPORTZPICS ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானத்தில் ஆடிப் பழகியவர். திடீரென இந்திய ஆடுகளத்துக்கு ஏற்ப மாறும்போது கடந்த 2 போட்டிகளாகத் தடுமாறுகிறார். ரஹானே அனுபவம் நிறைந்த பேட்டராக இருந்தாலும் 105 கி.மீ வேகத்தில் உனத்கட் வீசிய ஸ்லோவர் பந்துவீச்சுக்கு விக்கெட்டை இழந்தார். பெரும்பாலான சிஎஸ்கே பேட்டர்கள் ஸ்லோவர் பால், ஸ்லோவர் பவுன்சர்கள், ஷார்ட் பவுன்ஸர்கள் விளையாடுவதற்குத் திணறுகிறார் என்பது நேற்றைய ஆட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது. பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணியால் 78 ரன்கள் சேர்க்க முடிந்த நிலையில், சிஎஸ்கே அணியால் பவர்ப்ளேவில் 30 ரன்கள் குறைவாக 48 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. பவர்ப்ளே ஓவர்களை சன்ரைசர்ஸ் அணி பயன்படுத்திய அளவுக்கு சிஎஸ்கே பேட்டர்கள் பயன்படுத்தவில்லை. சன்ரைசர்ஸ் பேட்டர்கள் பவுன்டரி அடிக்க 16 பந்துகளை முயற்சி செய்தனர் என்றால் சிஎஸ்கே பேட்டர்கள் 8 பந்துகளில் மட்டுமே முயன்றனர். சிஎஸ்கே பேட்டர்களின் பலவீனத்தை உணர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதால் கடைசி 7 ஓவர்களில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. டேரல் மிட்ஷெல்(13) நடராஜன் வீசிய ஸ்லோவர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துதான் ஓரளவுக்கு கௌரமான ஸ்கோர் வருவதற்குக் காரணமாக அமைந்தது. அதிலும் சுழற்பந்துவீச்சை துபே வெளுக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு வேகப்பந்துவீச்சுக்கு மாற்றி அவரையும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். ஷிவம்துபே 45 ரன்களை கழித்துப் பார்த்தால் சிஎஸ்கே ஸ்கோர் 120 ரன்கள்தான். பெரிய பேட்டர்களான ரவீந்திரா(12), கேப்டன் கெய்க்வாட்(26), ரஹானே(35), மிட்ஷெல்(13) ஆகியோர் ஏமாற்றினர். பட மூலாதாரம்,SPORTZPICS அதேபோல பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசிய அளவுக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் புரிந்து பந்துவீசவில்லை. அதாவது ஸ்லோவர் பால், ஸ்லோவர் பவுன்ஸர்கள் பெரிதாக சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வீசவில்லை. வழக்கமாக வேகப்பந்துவீச்சு, வழக்கமான சுழற்பந்துவீச்சு என்ற போக்குதான் வெற்றியை இழக்க வைத்தது. அதிலும் முகேஷ் சௌத்ரி 2022, டிசம்பர் மாதத்துக்குப் பின்பு முதல்முறையாக நேற்றுதான் போட்டியில் பங்கேற்றார் என்றால் அவரின் பந்துவீச்சு எந்தத் தரத்தில் இருந்திருக்கும். அதனால்தான் முதல் ஓவரிலேயே 27 ரன்களை வாரிக் கொடுத்தார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் சுழற்பந்துவீச்சாளர்களும் வேகத்தைக் குறைத்து மணிக்கு 90 கி.மீக்குள் வீசியிருந்தால், பந்து நன்றாக டர்ன் ஆகி இருக்கும், சன்ரைசர்ஸ் பேட்டர்களின் ரன்வேகம் குறைந்திருக்கும். ஆனால், தீக்சனா, ஜடேஜா,மொயீன் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களும் மணிக்கு 98 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்து வீசினர். ஆனால் அவ்வப்போது வேகத்தைக் குறைத்து மொயீன் அலி பந்துவீசியபோது பந்து நன்கு டர்ன் ஆனதைக் காண முடிந்தது. அதன்பின்புதான் அவர் பந்துவீச்சில் வேகத்தை சற்று குறைத்தார். அதேபோல வேகப்பந்துவீச்சில் தேஷ்பாண்டே, சஹர், முகேஷ் சௌத்ரி என ஒருவருமே பெரிதாக சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு அழுத்தம் தரவில்லை. பந்துவீச்சில் வேறுபாடுகளைக் கொண்டு வரவில்லை. குறிப்பாக ஸ்லோவர் பால், பவுன்ஸர்கள் என்ற ஆயுதத்தை மறந்துவிட்டனர். பதிரணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இருவரும் இல்லாத வெற்றிடம் நன்கு தெரிந்தது. பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தவில்லை பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நன்கு பந்து வீசினர். கடைசி 5 ஓவர்களை எங்கள் பேட்டர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. நல்ல நிலையில் இருந்து அதைப் பராமரித்துக் கொண்டு செல்லத் தவறிவிட்டோம். கறுப்பு மண்ணில், ஸ்லோவர் பந்துகளைத் தவறவிட்டோம். பந்து தேய்ந்தபின் இன்னும் பேட்டர்களை நோக்கி மெதுவாக வரத் தொடங்கியது. விக்கெட் நன்கு புரிந்துகொண்டு சன்ரைசர்ஸ் பந்து வீசினர். பவர்ப்ளேவில் நாங்கள் நன்கு பந்து வீசவில்லை, அவர்கள் பவர்ப்ளேவில் ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர். நாங்கள் 175 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். பவர்ப்ளே ஓவர்ளில் நன்கு பந்துவீசி இருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும். கடைசி நேரத்தில் லேசான பனியும் இருந்தது,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c1dvdellm59o
  22. 05 APR, 2024 | 08:51 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் 2022 ஜூலை 21 முதல் 2024 பெப்ரவரி வரை 1338.8 மில்லியன் டொலர்களை பலதரப்புக் கடன்கள் மற்றும் வட்டியாகச் செலுத்தியுள்ளதாகவும், 2024 பெப்ரவரி வரை செலுத்த வேண்டிய கடன் தவணைகள் மற்றும் வட்டியில் எவ்வித நிலுவைகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் வெள்ளிக்கிழமை (05) வௌியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 760.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு 7.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மேற்கூறியவாறு செலுத்தப்பட்டுள்து. மேலும், ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கு 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கு 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் EFF 23-26 திட்டத்திற்கு 9.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல், நோர்டிக் அபிவிருத்தி நிதியத்திற்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திற்கு 29.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கிக்கு 489.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி அரசாங்கம் 1,338.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மற்றும் வட்டியாக செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கடன் கொடுப்பனவு பதிவைக் கருத்தில் கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன கடன் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், இருதரப்பு கடன்கள் மற்றும் வட்டியாக 571.0 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கடன்கள் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான இணக்கப்பாடுகளை எட்ட உரிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடனும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரிஸ் சமவாய நாடுகளுடன் கடன் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதோடு, 2024 பெப்ரவரி இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 450.7 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. கடந்த காலத்தில் இடை நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்காக, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, குவைட், பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா, சீனா அபிவிருத்தி வங்கி, சீன - ஹங்கேரி, இந்திய மற்றும் அமெரிக்க எக்சிம் வங்கி உட்பட கிட்டத்தட்ட 25 நிதி நிறுவனங்களுடன், இலங்கை இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்களை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி தனது டொலர் கையிருப்பை வெளிநாட்டு நாணயங்களில் அதிகரித்துக் கொண்டு உள்நாட்டின் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியவைக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களை செலுத்தி முடித்த பின்பே இந்தக் கடன்கள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான கொடுக்கல் வாங்கல் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், ஜப்பானிய யென்கள், கனேடிய டொலர்கள் ஆகிய நாணய அலகுகளில் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த பலதரப்பு, இருதரப்பு மற்றும் உள்நாட்டுக் டொலர் கடன்களை செலுத்திய பின்னர், நாட்டின் கையிருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக (4950 மில்லியன் டொலர்கள்) ஆக அதிகரித்துள்ளது. அதிக வட்டி விகிதத்தில் அரசாங்கம் பெற்றுள்ள 4,439.2 மில்லியன் டொலர் வணிகக் கடன்கள் மற்றும் வட்டியை மறுசீரமைக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதுடன், மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் முடியும் வரை பணம் செலுத்தப்படாது. 2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான சிறப்பு வட்டி விகிதத்தின் கீழ், அதாவது வருடத்திற்கு 15% வட்டி விகிதம் வழங்கப்பட்டது. அப்போது வங்கிகளில் நிலவிய குறைந்த வட்டி விகிதத்தில் இருந்து 15% அதிக வட்டி விகிதத்தைக் குறைக்க பணம் வழங்கியது திறைசேரி. 2015ஆம் ஆண்டு வர்த்தக வங்கிகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இந்த வட்டி விகிதம் 10 இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 15 இலட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, 12 இலட்சம் சிரேஷ் பிரஜைகள் கணக்குகளுக்கும் இந்த வட்டி விகிதம் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டளவில், இந்த கூடுதல் வட்டியை செலுத்துவதற்காக திறைசேரி ஒரு காலாண்டிற்கு 20 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதன்படி, திறைசேரி வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபாவை இதற்காக செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த செயல்முறை 2022 ஒக்டோபர் 01 முதல் நிறுத்தப்பட்டது. 50% இற்கும் அதிகமான சிரேஷ் பிரஜைகள் தங்கள் வட்டித் தொகையை மாதந்தோறும் பெறுகின்றனர். தற்போதைய நிதி நிலைமையின் படி இதற்காக வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபா கூடுதல் தொகையை அரசசாங்கத்தால் தாங்க முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது. 2022 ஒக்டோபர் வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 108 பில்லியன் ரூபாவாகும். வருடத்திற்கு தேவைப்படும் 80000 மில்லியன் ரூபா மேலதிகத் தொகையைக் பெற்றுக்கொள்ள, தற்போதைய VAT இன் மதிப்பு 1% இனால் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தப் பின்னணியில், சில சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வழங்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டால், அதற்கான பணத்தைத் திரட்டும் வழியையும் பகிரங்கப்படுத்த வேண்டும். மத்திய வங்கியின் கொள்கையானது வட்டி விகிதங்களைக் குறைத்து, இலாபம் ஈட்டுவதற்கு போட்டி முறையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகும். கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து 30% வங்கி வட்டி விகிதத்தை நெருங்கி, மக்கள் கடன் பெறுவதற்கு கூட மூலதனத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், நாடு வங்குரோத்தாகிப்போனதைப் பார்த்தோம். அந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே இந்த நேரத்தில் முக்கியமானது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180546
  23. விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் 26 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், ராதாகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிஸார் ராதாகிருஷ்ணன் மற்றும் குறித்த பெண் வீட்டாரிடம் பேசி, அவர்களை சமாதானம் செய்தார்கள். மாலை 4.30 மணியளவில் பொலிஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன்பிறகு ராதாகிருஷ்ணன் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். இரவு சிறிது நேரம் தங்கி இருந்த அவர் மனைவியிடம் எனது வீட்டுக்கு சென்றுவிட்டு, காலையில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமாக எழுதிய கடிதம் மற்றும் செல்போன் வாட்ஸ்அப் பதிவை பொலிஸார் கைப்பற்றி உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என மிரட்டினர். எனவே அவர்கள் தான் என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம். எனக்கு விருப்பம் இல்லாமல் இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியாது என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் தந்தை தனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். இதனையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/298259
  24. அநுரவுடன் சுமந்திரன் சந்திப்பு ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்துச் சுட்டிக்காட்டு 05 APR, 2024 | 08:51 PM (ஆர்.ராம்) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்து அநுரகுமாரவுக்கு சுமந்திரனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு மற்றும் வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பு ஆகியவற்றில் பங்கேற்பதற்காகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (4) யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இதன்போதே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பின்போது அநுரகுமார திசாநாயக்க, இந்தியா பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கின்றது. அங்கு இன ஒற்றுமை காணப்படுவதோடு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். அப்துல்கலாம் ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். அவருடைய சுட்டிக்காட்டல்களை அவதானித்திருந்த நான், பின்னர் அவருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் சிறுபான்மை, மற்றும் நலிவுற்ற சமூகத்தினர் அவ்விதமான பதவிகளுக்கு வருவதற்கும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவுவதற்கும் காரணமொன்று உள்ளது எனக் குறிப்பிட்டேன். அச்சமயத்தில் அநுர, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அமுலாக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்தியாவில் அவ்விதமான நிலைமைகள் நிலவுவதற்கு அங்குள்ள அதிகாரப்பகிர்வு முறை ஒருகாரணமாக இருக்கின்றபோதும் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது தான் என்ற விடயத்தினை குறிப்பிட்டேன். அத்துடன், அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன். இதேநேரம், வடக்கு,கிழக்கில் உள்ள சமகால அரசியல் நிலைமைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதோடு, தொடர்ச்சியாகப் பரஸ்பர கலந்துரையாடல்களை முன்னெடுப்பதென்றும் இணக்கம் காணப்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/180544
  25. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள், தங்கள் மாடுகளை சித்ரவதை செய்து கொன்று வருவதாகத் தமிழ் பண்ணையாளர்கள் (கால்நடை வளர்ப்பாளர்கள்) குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டி அவர்கள், கடந்த 200 நாட்களாக இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் கூடாரம் அமைத்துள்ள தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னையில் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றது. என்ன பிரச்னை? மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லை பகுதியாக மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகள் வனப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரிய இடமாக இப்பகுதிகள் இருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலம் காணப்படுவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பண்ணையாளர்கள் இந்தப் பகுதிகளிலேயே தமது கால்நடைகளை (மாடுகள் மற்றும் ஆடுகள்) வளர்த்து வருகின்றனர். வேளாண்மையின் போது, பாரம்பரியமாக ஆடு, மாடுகளை மேச்சல்நிலப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மற்றும் ஆடுகள் இந்தப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். ‘ஆடு மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன’ இந்த நிலையில், மயிலத்தமடு மற்றும் மாதவணை மேச்சல்நிலப் பகுதியை அண்மித்து, பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் குடியேறி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் அத்துமீறி குடியேறியுள்ள மக்கள், அந்தப் பகுதிகளில் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு புதிதாகக் குடியேறியவர்களின் விளைநிலங்களுக்குள், அப்பகுதியில் ஏற்கெனவே கால்நடை மேய்த்து வந்தவர்களின் மாடுகள், ஆடுகள் நுழைந்தால், அவற்றைப் பல்வேறு விதமாக சித்திரவதைக்கு உள்ளாக்குவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் சொல்கின்றனர். கால்நடைகளைக் கூரிய ஆயுதங்களால் வெட்டுதல், மின்சார வேலிகளை அமைத்து அவற்றைச் சிக்க வைத்தல், வெடி வைத்தல் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உட்படுத்தி தமது கால்நடைகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் கொன்று வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் பிபிசி தமிழிடம் வழங்கிய இறந்த மாட்டின் புகைப்படம் அத்துடன், மேச்சல் தரையில் புல்களுக்கு கிருமிநாசினிகள் தெளிப்பதால், அதனூடாக தமது கால்நடைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலையில், கடந்த 9 மாத காலப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துள்ளதாகத் தெரிவித்து, பண்ணையாளர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், உணவு கிடைக்காததால் பல மாடுகள் மற்றும் ஆடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், மேச்சல்நிலப் புல்தரையை அத்துமீறிய குடியேற்றவாசிகள் தீக்கிரையாக்கி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு, 200 நாட்களாக தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர் 200 நாட்களைக் கடந்த போராட்டம் இந்நிலையில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றை எதிர்த்தும், கால்நடை பாதுகாப்பு, பூர்வீக நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சுழற்சி முறை போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு - சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தப் போராட்டத்தின் 200வது நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்று வரை செவிசாய்க்கவில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்தப் போராட்டத்தில் பண்ணையாளர்கள் மாத்திரமன்றி, சமய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் கண்ணம்மா பிபிசி தமிழிடம் தங்கள் பாட்டன், பூட்டி காலத்திலிருந்து 200 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். படக்குறிப்பு, தர்மலிங்கம் கண்ணம்மா “கடந்த 200 நாட்கள் போராட்டத்தில் நாங்களும் பிள்ளைகளை இந்த வெயிலில் கூட்டி வந்து போராடி வருகின்றோம். ராணுவம், போலீஸ் எல்லாம் வந்து தீர்த்து தருகின்றோம் எனச் சொல்கின்றார்கள். ஆனால் இன்னும் முடிவு வரவில்லை. ஆடு மாடுகளை கம்பியில் கொல்கிறார்கள். மாடுகளை கட்டுவதற்கு மேச்சல் தரையை எங்களுக்குத் தர வேண்டும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம்," என தர்மலிங்கம் கண்ணம்மா கூறினார். தனது மாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இதுவரை தனக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை என பண்ணையாளர் தெய்வேந்திரன் தெரிவிக்கின்றார். “எங்களுடைய நிறைய மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய மாடுகளை வெட்டி விட்டார்கள். என்னுடைய 10 மாடுகள் வரை வெட்டுப்பட்டுள்ளன. கடந்த 7-8 மாதங்களாக தொழில் இல்லாமல் இருக்கின்றோம். அரசாங்கம் எந்தவிதமான நிவாரணமும் தரவில்லை. பண்ணையாளர்கள் அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். போலீசில் முறைப்பாடு செய்துள்ளோம்," என தெய்வேந்திரன் கூறுகிறார். படக்குறிப்பு, சினித்தம்பி நிமலன் ‘அரசியல்வாதிகள் பார்க்க வரவில்லை’ இப்பிரச்னை குறித்து ஆராய்வதற்கு அரசியல்வாதிகள் வந்த போதிலும், அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என கால்நடை வளர்ப்பு, கமநல அமைப்பு மயிலத்தமடு பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சினித்தம்பி நிமலன் தெரிவிக்கின்றார். போராட்டத்தின் சாதகமான ஒரு சில நிலைமைகள் வந்த போதிலும், அது நிலைக்குமா நிலைக்காதா என்பது தெரியாமல்தான் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். “எங்களுடைய மாடுகளுக்கு நடக்கின்ற அச்சுறுத்தல்கள், எங்களுடைய மாடுகள் சாவது எல்லாவறையும் பார்த்து எங்களுக்கு வாழ்வதா சாவதா என்றே தெரியவில்லை. ஜனாதிபதி வந்தபோது, சட்டவிரோதமாக வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றலாம் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. மூன்று மாதம் பயிர் செய்த பின்னர் அவர்கள் வெளியேறுவார்கள். அதற்குப் பின்னர் மாடுகளைக் கட்டலாம் என போலீசார் சொன்னார்கள். அந்த நிலைமையும் இல்லை. இன்று ஆதரவற்ற நிலைமையில் இந்த பண்ணையாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்,” என்றார். மேலும், “பால் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம். யாரும் உதவவில்லை. அந்த நிலைமையைப் பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது எந்தவொரு அரசியல்வாதிகளோ வரவில்லை. பார்க்க வந்தால் அவர்களை உள்ளே விடவும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வேண்டும்," சினித்தம்பி நிமலன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, நாகேஸ்வரன் மிரேக்கா ‘இது அரசு நடத்தும் நிழல் யுத்தம்’ தமிழ் மக்கள் பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டு போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு நடத்தி வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர் நாகேஸ்வரன் மிரேக்கா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். வடக்கு-கிழக்கு பகுதிகளைப் பொருத்த வரையில் தமிழ் மக்கள் பல அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள், என்று அவர் தெரிவித்தார். “அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரச்னை என்பது இன்று-நேற்று நடக்கும் பிரச்னை அல்ல. இது பல ஆண்டுகளாக இந்த மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னை,” என்றார். “கடந்த 9 மாதங்களாக சுமர் 1,750 மாடுகள் இறந்திருக்கின்றன. வாய்க்கு வெடி வைத்தும், மின்சார வேலிகளில் தாக்கப்பட்டும், ஆயுதங்களால் வெட்டியும் இந்த மாடுகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றன. மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழந்துள்ளனர்,” என்றார் அவர். “வாழ்வாதார்ததை இழக்கக்கூடிய இடத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பல நீதிமன்ற உத்தரவுகள் இந்த மக்களுக்கு சார்பாக வந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுகளைக் கூடப் பொருட்படுத்தப்படுவதில்லை. இந்தப் பிரச்னைக்கு 200 நாட்கள் போராடியும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த மக்கள் காலப்போக்கில் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டுப் போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றது,” என்கிறார் நாகேஸ்வரன் மிரேக்கா. மேலும், சர்வதேச அழுத்தங்களின் ஊடாகவே இப்பிரச்னைக்கு தீர்வை ஏற்படும் முடியும் தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, மயிலத்தமடு மேய்ச்சல்நிலப் பகுதிக்குள் சென்றவுடன், ஆடுகளையும், மாடுகளையும் காணமுடிந்தது மயிலத்தமடு மேய்ச்சல் நிலம் இப்போது எப்படி இருக்கிறது? மயிலத்தமடு பிரச்னை வலுப்பெற்றுள்ள நிலையில், அந்தப் பகுதிக்குள் செல்ல அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர் இலங்கையின் போலீசார் மற்றும் ராணுவத்தினர். மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதி, மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 60கி.மீ. தொலைவில், வனப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த மேய்ச்சல் நிலத்துக்குள் செல்லும் பிரதான வீதியில் பாதுகாப்பு அரணொன்றை அமைத்துள்ள போலீசார் மற்றும் ராணுவத்தினர், உள்ளே செல்பவர்களுக்கு டோக்கன்களை வழங்கி, பெயர்களைப் பதிவு செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். எனினும், இந்தப் பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருவதை அங்கு சென்ற பிபிசி குழுவினரால் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், மட்டக்களப்பு - கிரான் வழியாக மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் உதவியுடன் பிபிசி தமிழ் சென்றது. நாம் சென்ற பகுதி வனப் பகுதி என்பதுடன், செல்லும் வழியில் ராணுவ முகாம்கள் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் மாத்திரமே உள்ள செல்ல முடியும் என்ற நிலையில், சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதியைச் சென்றடைந்தோம். பிரதான வழியாகச் செல்ல விவசாயிகளுக்கு மாத்திரம் பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்குகின்ற நிலையில், நாம் மற்றைய வழியாக உள்ளே பிரவேசித்து அங்குள்ள சூழ்நிலையை ஆராய்ந்தோம். படக்குறிப்பு, மேய்ச்சல்நிலப் பகுதியில் அங்காங்கே இறந்த மாடுகளின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், தோல், எலும்பு எச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிந்தது வெளியேறுவதைத் தடுத்த பாதுகாப்புத் துறை மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதிக்குள் சென்றவுடன், ஆடுகளையும், மாடுகளையும் காண முடிந்தது. மேய்ச்சல் நிலத்தை அடுத்து புதிய விவசாய நிலங்கள், சிறுசிறு வீடுகள் மற்றும் டிராக்டர் இயந்திரம் ஆகியவற்றைக் காண முடிந்தது. இவ்வாறு காணப்படும் விவசாய நிலங்கள், வீடுகள் மற்றும் இயந்திரம் ஆகியன சட்டவிரோத குடியேற்றவாசிகளுடையது என நம்முடன் வந்திருந்த மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS அத்துடன், மேய்ச்சல் நிலப் பகுதியில் அங்காங்கே இறந்த மாடுகளின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், தோல், எலும்பு எச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிந்தது. அத்துடன், மேய்ச்சல் தரையின் ஒரு பகுதி தீக்கிரையாகியிருந்த நிலையில், அது சட்டவிரோத குடியேற்றவாசிகளால் தீ வைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றைக் கண்ட பிபிசி குழு, மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதியிலிருந்து பிரதான வீதியாக வெளியேறிய சந்தர்ப்பத்தில், பாதுகாப்புப் பிரிவினர் அங்கிருந்து வெளியேற நமக்கு இடையூறு விளைவித்தனர். செய்தியாளர்கள் எப்படி உள்ளே நுழையலாம் என்று நம்மோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேற பாதுகாப்புப் பிரிவினர் நமக்கு அனுமதி வழங்கினர். அரசாங்கம் என்ன சொல்கிறது? இந்தப் பிரச்னை தொடர்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்தார். அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மேய்ச்சல் நிலப் பிரச்னை இரண்டு தரப்பான விவசாயிகளுக்கு இடையில் காணப்படுகின்றது என்றார். “கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் இடையில் இந்தப் பிரச்னை காணப்படுகின்றது. இந்த இரண்டு தரப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். இந்த இடத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு, பூர்வீகமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு விவசாய பொறிமுறையைச் செய்யுமாறு ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்,” என்றார். படக்குறிப்பு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் பேசிய அவர், விவசாயம் செபவர்கள் மேய்ச்சல் நிலத்தில் புற்களைப் பயிரிடும் போது, கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் என்றார். “அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் செய்கின்றோம்,” என்றார். போராட்டம் செய்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “போராடுபவர்கள் பல கருத்துகளைச் சொல்வார்கள். அந்த இடத்தை ராணுவம் கட்டுப்படுத்தவில்லை. இது இரண்டு மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் யுத்தமும் இல்லை. இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை. இனஅழிப்புக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” என்றார். மேலும், “இது அரசாங்கத்திற்குச் சொந்தமான இடம். இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படும் பிரச்னையாகவே இதைப் பார்க்கிறோம்," என்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான். இரண்டு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில், உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/clm73edmz78o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.