Everything posted by ஏராளன்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
LSG vs PBKS: 155 கி.மீ வேகத்தில் பஞ்சாப்பை பறக்கவிட்ட மயங்க் யாதவ் - ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய தருணம் பட மூலாதாரம்,IPL/X கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங்கில் “பெஞ்ச் ஸ்ட்ரென்த்” அதிகரித்து, ஏராளமான இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டதற்கு ஐபிஎல் டி20 தொடர் முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குள் வந்துள்ளனர். அந்த வகையில் அதிவேகமாகவும், துல்லியத்துடனும் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர் நேற்றைய ஆட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தனது வேகத்தாலும், லைன் லென்த்தாலும், ஷார்ட் பந்துவீச்சாலும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரர் மயங்க் யாதவ் ஈர்த்துள்ளார். மயங்க் யாதவ் பந்துவீச்சை பிசிசிஐ தேர்வுக் குழுவினர் பார்த்திருந்தால், நிச்சயமாக டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். லக்னௌவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 21 ரன்களில் தோல்வியடைந்தது. இதன் மூலம் லக்னௌ அணியும் தனது புள்ளிக்கணக்கைத் தொடங்கி, 0.025 என்று நிகர ரன்ரேட்டை பெற்றுள்ளது. இந்தத் தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ் நிகர ரன்ரேட் மைனசில் சரிந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்னும் புள்ளிக்கணக்கை மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மட்டும்தான் தொடங்கவில்லை. வெற்றிக்கு வித்திட்ட பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,IPL/X இந்தப் போட்டியில் லக்னௌ அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். முதலில் அறிமுக வீரர் மயங்க் யாதவ், இரண்டாவதாக மோசின் கான், மூன்றாவதாக ரவி பிஸ்னோய், குர்னல் பாண்டியா ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆட்டத்தின் பிற்பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து தோல்விக் குழியில் தள்ளியது. இரண்டாவது பந்திலேயே மறைந்த பதற்றம் ஆட்டநாயகன் பட்டம் வென்ற அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் கூறுகையில் “ என்னுடைய அறிமுகப் போட்டி இவ்வளவு சிறப்பாக அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஸ்லோபால் வீச எண்ணினேன். ஆனால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. என் பந்துவீச்சைப் பார்த்த கேப்டன் பூரன் இன்னும் வேகமாகப் பந்துவீசத் தூண்டுகோலாக இருந்தார். முதல் போட்டி என்றாலே பதற்றம் இருக்கும் என மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், இன்று அதை முதன்முதலில் நான் அனுபவித்தேன். ஆனால், முதல் பந்துவீசும்வரைதான் அந்தப் பதற்றம் தெரிந்தது. இரண்டாவது பந்தில் அந்தப் பதற்றம் நீங்கியது. முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திட்டம் ஸ்டெம்பை நோக்கி வீச வேண்டும், வேகத்தை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,LSG/X அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் சரிவுக்குக் காரணமானார். அதிலும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் கொண்ட பேர்ஸ்டோ, மயங்க் யாதவின் அதிவேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். மயங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த 3 பேட்டர்களும், பந்தின் வேகக்தைக் கணிக்க முடியாமல், ஷாட் அடித்து “மூக்கு மேல் ராஜா”வாக விக்கெட்டை இழந்தனர். இந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக 155 கி.மீ வேகத்தில் பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளராக மயங்க் யாதவ் அறியப்பட்டுள்ளார். அதிவேகத்துடன் ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது லைன்-லென்த்துக்குள் கட்டுப்படுத்தி வீசுவது கடினம். பெரும்பாலான பந்துகள் அவுட்-ஸ்விங்காகிவிடும். அது பேட்டர்களை எளிதாக ஷாட்கள் அடிக்க வாய்ப்பாக அமையும். ஆனால், அதிவேகத்துடனும், இன்-ஸ்விங் முறையில் மயங்க் யாதவ் துல்லியமாக வீசி பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டார். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 50 சதவீதம் வாய்ப்பு இருந்த நிலையில் மயங்க் யாதவ் அறிமுகத்துக்குப் பின் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து, 3 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியின் பிடியில் சிக்கியது. அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதும் வென்றார். பஞ்சாப் ஆதிக்கம் - தவான் அரைசதம் பட மூலாதாரம்,IPL/X பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள், 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் என்று வலுவான நிலையில் இருந்தது. அதிலும் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு நகர்த்தினார், துணையாக பேர்ஸ்டோவும் ஆடினார். மயங்க் யாதவ் ‘மிரட்டல் அறிமுகம்’ ஆனால், மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின் பஞ்சாப் ரன்ரேட் குறையத் தொடங்கியது. மயங்க் யாதவ் ஓவரை தொடக்கத்தில் இருந்தே சமாளிக்கத் திணறிய பேர்ஸ்டோ(42), அவரின் 2வது(இன்னிங்ஸில் 11வது ஓவர்) ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த “இம்பாக்ட் வீரர்” பிரப்சிம்ரன் சிங், வந்த வேகத்தில் சிக்ஸர், பவுண்டரியை பிஸ்னோய் ஓவரில் விளாசினார். மயங்க் யாதவ் ஓவரில் ஷார்ட் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பிரப்சிம்ரன் பேட்டை வைத்தவுடன் பேட்டில் பட்டு டீப் பேக்வார்ட் திசையில் சிக்ஸராக மாறியது. அதன்பின் மயங்க் யாதவ் பந்துவீச்சை எதிர்கொள்ள பிரப்சிம்ரனால் முடியவில்லை. அடுத்த பந்தில் மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க நவீன் உல்ஹக் கேட்ச் பிடிக்கவே பிரப்சிம்ரன் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மயங்க் யாதவ் தனது அடுத்தடுத்த 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் மோசின் கான் தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஸ்லோவர் பால் வித்தையால் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். 15வது ஓவரை வீசிய மோசின் கான் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட் வீழ்ச்சி பட மூலாதாரம்,IPL/X கடைசி 5 ஓவர்ளில் பஞ்சாப் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நிச்சயமாக இது அடைந்துவிடக்கூடிய ஸ்கோராக இருந்தாலும், அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி, டாட்பால்கள், பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மயங்க் யாதவ் 16வது ஓவரை மீண்டும் வீசினார். புதிய பேட்டர் ஜிதேஷ் ஷர்மா இரு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் 3வது பந்தில் நவீன் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் வெளியேறினார். இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ரோலில் களமிறக்க தயார் செய்யப்பட்டு வரும் ஜிதேஷ் ஷர்மா 147 கி.மீ வேகத்தில் வந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை இழந்துள்ளார். இந்திய அணியின் ஃபினிஷர் ரோலுக்கு ஷர்மா எவ்வாறு தன்னைத் தயார் செய்யப் போகிறார் என்று வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். மயங்க் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி அதிர்ச்சியில் இருந்தது. கேப்டன் ஷிகர் தவான் 70 ரன்களுடன் களத்தில் நம்பிக்கையுடன் இருந்தார். லிவிங்ஸ்டோன் இருந்ததால், எப்படியும் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் மோசின் கான் வீசிய 17வது ஓவரின் 2வது பந்தில் விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து தவான் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரன், ரன் ஏதும் சேர்க்காமல் மிட்ஆன் திசையில் பூரனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்து மெல்ல தோல்விக் குழிக்குள் பயணித்தது. இந்த ஓவரில் மோசின் கான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பஞ்சாப் அணிக்கு ரன்ரேட் நெருக்கடியை ஏற்படுத்தினார். டெத் ஓவரில் கட்டுக்கோப்பு பட மூலாதாரம்,IPL/X பின்னர் 18வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக்கும் தனது ஸ்லோவர் பால் வித்தையால் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி 12 பந்துகளில் 48 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 19வது ஓவரை குர்னல் பாண்டியா வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து பஞ்சாப்பை ஏறக்குறைய தோல்வியில் தள்ளினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற போதே, தோல்வி எழுதப்பட்டுவிட்டது. நவீன் உல் ஹக் வீசிய கடைசி ஓவரில் லிவிங்ஸ்டோன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை தக்கவைத்தார். இருபது ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. லிவிங்ஸ்டோன் 28 ரன்களுடனும், சசாங் சிங் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் மயங்க் யாதவ், மோசின் கான் காரணமாக அமைந்தனர். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் ஆதிக்கம் இருந்தாலும் கடைசி 10 ஓவர்களில் லக்னௌ அணியின் ஆதிக்கமே இருந்தது. பூரன்-குர்னல் பொறுப்பான பேட்டிங் லக்னௌ அணியைப் பொறுத்தவரை இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டீ காக் தனக்குரிய பணியைச் சிறப்பாக முடித்து 38 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 2வது போட்டியிலும் சொதப்பி 9 ரன்னில் வெளியேறினார். ஸ்டாய்னிஷ் சிறிய கேமியோ ஆடி 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பொறுப்பெடுத்து ஆடிய பூரன் 42 ரன்னிலும், குர்னல் பாண்டியா 43 ரன்களும் சேர்த்து நடுவரிசையில் சிறப்பாக பேட் செய்தனர். கடைசி டெத் ஓவர்களில் லக்னௌ அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ராகுலிடம் இருந்து கேப்டன்சி பறிப்பா? பட மூலாதாரம்,IPL/X இந்த ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்வுக்கு கேப்டன் பொறுப்புடன் நிகோலஸ் பூரன் வந்திருந்தார். லக்னௌ அணிக்கு திடீரென ராகுல் கேப்டனாக இல்லாமல் பூரன் வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது பூரன் கூறுகையில் “கே.எல்.ராகுல் ஏற்கெனவே காயத்தால் மீண்டு வந்துள்ளார். அவருக்குத் தொடர்ந்து பணிப்பளுவை ஏற்ற விரும்பவில்லை என்பதால், அவர் இம்பாக்ட் வீரராகக் களமிறங்குவார். காயம் காரணமாகவே ஐபிஎல் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ராகுல் விளையாடாமல் இருந்தார். கடந்த சீசனிலும் ராகுல் ஏராளமான போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பை எடுத்து கண்டிப்பாகச் சிறப்பாக ஆட வேண்டும்,” எனத் தெரிவி்த்தார். ஆனால் ஆங்கில இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் "லக்னௌ அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றுள்ளார். ராகுலை இம்பாக்ட் வீரராக பயன்படுத்துவது லாங்கர் எடுத்த முடிவுதான். ஆனால், கேஎல் ராகுலை பொருத்தவரை முழு உடல் தகுதியுடனும், அதிகமான ஊக்கத்துடனும் இருக்கிறார்," எனக் கூறப்படுகிறது. ஆனால், "கேப்டன் பொறுப்பை பூரனிடம் கொடுத்து, ராகுலை இம்பாக்ட் வீரராகக் களமிறக்கியது திடீரென வந்த தலைமைப் பயிற்சியாளர் லாங்கர்தான்" என்றும் தெரிவித்துள்ளன. லக்னௌ கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து சத்தமில்லாமல் பறிக்கப்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cz7z99rr2zwo
-
ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷியா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள். எனவே மக்களை பாதுகாப்பதற்காகவே ரஷியா இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ என பேசினார். மேலும் அவர் கூறுகையில், “உக்ரைன் தனது மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ரஷியா மீது ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் F-16 களின் விநியோகத்திற்காக காத்திருக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த ஆண்டு 42 எப்-16 விமானங்கள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறினார். போர் விமானங்களை எப்படி ஓட்டுவது என்பது குறித்து உக்ரைன் விமானிகள் பல மாதங்களாக மேற்கு நாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். F-16 விமானங்கள் தரையில் இருக்கும் போது குண்டுவீச்சு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க உயர்தர ஓடுபாதைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட ஹேங்கர்கள் தேவை. எத்தனை உக்ரேனிய விமானத் தளங்கள் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் ஜெட் விமானங்கள் வந்தவுடன் அவர்களுக்கு இடமளிக்கக்கூடிய சிலவற்றை ரஷியா விரைவில் குறிவைக்கும்” என்று அவர் கூறினார். https://thinakkural.lk/article/297559
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
Lucknow Super Giants 199/8 Punjab Kings (14/20 ov, T:200) 129/2 PBKS need 71 runs in 36 balls. Current RR: 9.21 • Required RR: 11.83 • Last 5 ov (RR): 41/2 (8.20) forecaster Win Probability: PBKS 37.82% • LSG 62.18%
-
பைப்லைன் மூலம் கசிப்பு விநியோகம் : ஒருவர் கைது!
சிந்தனைச் சிற்பியா?! என இனி நீதித்துறை தான் முடிவெடுக்கவேணும்!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழக அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் என்ன? அவை தேர்தல் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? பட மூலாதாரம்,DMK/GETTY/NAAMTAMILARORG/ANBUMANI RAMADOSS கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேர்தல்களில் இந்தத் தேர்தல் அறிக்கைகள் எவ்வளவு முக்கியமானவை, இதை வைத்து மக்கள் வாக்களிக்கிறார்களா? 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் புதுச்சேரியும் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் அவற்றின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது எல்லா நாடுகளிலுமே வழக்கத்தில் இருக்கும் ஒரு நடைமுறைதான். அமெரிக்காவில் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் அவற்றின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, நிர்வாகச் சீர்திருத்தங்கள், குடியேற்றக் கொள்கை தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெளியாகும் தேர்தல் அறிக்கைகளும் அக்கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்தும். பூடானில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் ஒப்புதலுடனேயே அறிக்கைகள் வெளியிடப்படும். மதம், இனம், பிராந்தியம் சார்ந்த விஷயங்களை முன்வைத்து வாக்குறுதிகள் இருந்தால் அவை நீக்கப்படும். தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பொறுத்தவரை, பூடானில் மூன்று வாரங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். மெக்ஸிகோவில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா சுதந்திரம் பெற்று முதன்முதலில் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்தபோது காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கைளை வெளியிட்டன. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை எப்போது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆகவே தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் துவங்குவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. தேர்தல் பிரசாரத்தில் அந்தத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில விஷயங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று முதன்முதலில் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்தபோது காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கைளை வெளியிட்டன. இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் தேர்தல் அறிக்கைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பொதுத் தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இப்படி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில், அக்கட்சிகளின் பொதுவான கொள்கைகள் தவிர, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் போன்ற விஷயங்களும் இடம்பெற்றிருக்கும். சில பிரிவினருக்கு சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன. பல நேரங்களில் பொருளாதார ரீதியான அறிவிப்புகள் பெரும் விமர்சனத்தையும் எதிர்கொள்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஆளும் கட்சியான பா.ஜ.கவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் வெகுவாகக் கவனிக்கப்படும். இருந்தபோதும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விரிவான தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வரை மாநிலக் கட்சிகளே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருப்பதால், அவற்றில் பெரிதும் மாநில உரிமை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பல கோரிக்கைகள் ஒன்றுபோல் அமைந்துள்ளன. ஒன்றிரண்டு விஷயங்களில் மட்டுமே முரண்பாடு காணப்படுகிறது. மத்திய - மாநில அரசுகள் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வது, உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்துவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது, கச்சத் தீவை மீட்பது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெறுவது, நீட் தேர்விலிருந்து விலக்கைக் கோருவது, பொது சிவில் சட்டம் வராமல் தடுப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, இந்தியா முழுவதும் மகளிருக்கு உரிமைத் தொகை அளிப்பது (தொகை வேறுபடுகிறது) போன்ற விவகாரங்களில் இந்த நான்கு தேர்தல் அறிக்கைகளுமே ஒத்துப் போகின்றன. வேறு சில விஷயங்களை சில கட்சிகள் ஒன்று போல் அணுகுகின்றன. உதாரணமாக, ஆளுநரை நியமிக்கும்போது மாநில அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என தி.மு.கவும் அ.தி.மு.கவும் தங்கள் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி ஆளுநர் பதவியையே நீக்க முயல்வோம் என்கிறது. நதிகள் இணைப்பை பாட்டாளி மக்கள் கட்சியும் அ.தி.மு.கவும் வலியுறுத்துகின்றன. அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிப்பது குறித்தும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒன்றுபோல கருத்துகளை முன்வைக்கின்றன. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை தி.மு.க., அ.தி.மு.க,, பா.ம.க. ஆகிய கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநில அரசுகளைக் கலைக்க ஏதுவாக உள்ள அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க., நாம் தமிழர்கள் கட்சிகள் ஒன்றுபடுகின்றன. மக்களவை இடங்களைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும் என்கிறது தி.மு.க. 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பதற்குப் பதிலாக, மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பதிலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையாக எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தாம் நீண்ட காலமாகப் பேசிவரும் விஷயங்களை இந்தத் தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆளுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவை நீக்கும் நடவடிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளது திமுக. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை, மத்திய - மாநில அரசுகளின் உரிமை குறித்து ஆராய்வதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நான்கு ஆணையங்களின் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்து, மாநிலங்களுக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது. ஆளுநர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவை நீக்குவது மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளையும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்துவது. சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் முயற்சிகளை மேற்கொள்வது மீண்டும் திட்டக் குழுவை அமைப்பது, யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது ரயில்வே நிர்வாகத்தை மாநிலங்களிடம் ஒப்படைப்பது தேசிய கல்விக் கொள்கை - ஒரே நாடு ஒரே தேர்தல் முறை - அக்னி பாத் திட்டம் ஆகியவற்றைக் கைவிடுவது ஆகியவற்றை முன்வைக்கிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விவசாயிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது அதிமுக. அ.தி.மு.கவை பொறுத்தவரை, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் பெயர் மாற்றத்தைக் கைவிடவேண்டும். இட ஒதுக்கீட்டிற்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்துவது. விவசாயிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை சென்னை முதல் விழுப்புரம் வரை மின்சார ரயில் நீட்டிப்பு, செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் விமான நிலையம் என்எல்சியில் புதிய சுரங்கப் பணிகள் கூடாது சிஏஏ சட்டத்தில் இஸ்லாமியர்களையும் ஈழத் தமிழர்களையும் உள்ளடக்குவது ஆகியவற்றை முன்வைத்திருக்கிறது. பாமகவின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,ANBUMANI RAMADOSS / X படக்குறிப்பு, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பாமக. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, இட ஒதுக்கீட்டிற்கு உள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது, தனியார் துறையிலும் நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணிகளை மாநில மக்களுக்கு ஒதுக்க நடவடிக்கை. தொழில் திட்டங்களுக்கு வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்தத் தடை, என்எல்சியின் சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதோடு, படிப்படியாக என்எல்சியை அகற்ற நடவடிக்கை, தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை. ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது, ஐஐடிக்கு இணையாக டிஐடி என்ற நிறுவனத்தை உருவாக்குவது, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவது. ஜிஎஸ்டி வரி முறையை இரண்டு அடுக்குகளாக மாற்றுவது, பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது இந்தி பிரசார சபைக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க நடவடிக்கை ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும், தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்களை முன்வைக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,NAAMTAMILARORG / X படக்குறிப்பு, ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிப்பது, வாக்களிப்பதை கட்டாயமாக்குவது உள்ளிட்ட பல விஷயங்களை முன்வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. இதில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை பல சுவாரஸ்யமான விஷயங்களை முன்வைக்கிறது. இந்தியாவில் குடியரசுத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்குப் புதிது புதிதாக சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது எண்களை வழங்க வேண்டும். ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிப்பது, வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது, ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் அடுத்த நிலையில் வாக்கு பெற்றவரை உறுப்பினராக்குவது, தங்கள் கட்சி சின்னத்திற்குப் பதிலாக, இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தடை. மாநிலங்களுக்கு உட்பட்ட விவகாரங்களில் உயர்நீதிமன்றமே தலைமை நீதிமன்றமாக இருக்கும் நிலையை ஏற்படுத்துவது, நீதிபதி பதவிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் அரசுப் பதவிகளிலோ, ஆளுநராகவோ, அரசியலிலோ சேரத் தடை விதிப்பது, மாநில நிலப்பரப்பின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவது. வடமாநிலத்தவர் பெருகுவதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல் உள்நுழைவுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது, தேசிய புலனாய்வு முகமையைக் கலைக்க முயற்சிகள் மேற்கொள்வது, அண்டை நாட்டு கடற்படையின் வன்முறைத் தாக்குதல்களை முறியடிக்க நெய்தல் படை அமைப்பது, வேளாண் தொழில் சார்ந்த அனைத்தையும் அரசு வேலையாக அறிவிக்கத் தனி சட்டம் இயற்ற வேண்டும். ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என சட்டமியற்றுவது போன்றவற்றை அக்கட்சி முன்வைத்துள்ளது. தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் வெற்றிக்கு உண்மையில் உதவுகிறதா? பட மூலாதாரம்,LINKEDIN படக்குறிப்பு, "கட்சிகளைத் தேர்வு செய்வதில் தேர்தல் அறிக்கைகள் பெரிய அளவில் தாக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை," என்கிறார் ராஜரத்தினம் கண்ணன். தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் இதற்கென ஒரு குழுவை அமைத்து, பல வாரங்கள் உழைத்து உருவாக்குகின்றன. செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி அவற்றை வெளியிடுகின்றன. ஆனால், கட்சிகளைத் தேர்வு செய்வதில் தேர்தல் அறிக்கைகள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கம் செலுத்துகின்றன? "பெரிய அளவில் தாக்கம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், வெகு சில தேர்தல்களில் அதுபோல நடக்கிறது," என்கிறார் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவரான ராஜரத்தினம் கண்ணன். "உதாரணமாக 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் இருந்த வாக்குறுதி, மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலின் ஹீரோ அந்தத் தேர்தல் அறிக்கைதான் என ப. சிதம்பரம் குறிப்பிடும் அளவுக்கு அந்தத் தேர்தல் அறிக்கை இருந்தது. அதற்குப் பலனும் கிடைத்தது," என்கிறார் அவர். ஆனால், அதே நேரத்தில் தேர்தல் அறிக்கைக்கு வெளியில் அளிக்கப்படும் சில வாக்குறுதிகள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "கடந்த 1967ஆம் ஆண்டில் ரூபாய்க்கு மூன்று படி அரசி என்பது தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அந்த வாக்குறுதியை அண்ணா அளித்தார். அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தவில்லையென்றால் எங்களைக் கேட்கலாம் என்றும் உறுதி அளித்தார். அதற்கும் பலன் இருந்தது," என்கிறார் கண்ணன். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மாநிலக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கிறது? "மாநிலக் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளுக்குப் பெரிய மதிப்பு இல்லைதான். ஆனால், தங்களுடைய கூட்டணிக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தங்களால் அழுத்தம் தர முடியும் என்று சொல்வார்கள். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தமிழக கட்சிகள் அனைத்தும் மாநில சுயாட்சி, மாநில உரிமை குறித்துப் பேசுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் இதைப் பற்றிப் பேசுவதே கிடையாது. அவற்றைப் பொறுத்தவரை, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதும் என்றுதான் அவை நினைக்கின்றன," என்கிறார் கண்ணன். https://www.bbc.com/tamil/articles/czdzlje9d00o
-
முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ள முரளிதரன்
அம்மான் படையணி எனும் புதிய அமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த செயற்பாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பத் தலைவிகளும், விடுதலைப் புலிகள் மாத்திரமல்லாது அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் வாழ்வாதாரமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அவர்களுக்காக புது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மான் படையணி அமைப்பு போராளிகளின் நலம் பேணுவதற்காக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் வட மாகாணத்திலேயே தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்திலும் அதன் செயற்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகக் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297671
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் தொடர்பான செய்திகள்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம் 30 MAR, 2024 | 02:16 PM வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது. இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதி கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன. எனவே, குற்றம் இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும். அதுவரை நாம் போராடிக்கொண்டே இருப்போம் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் 'ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம்', 'சர்வதேச விசாரணையே எமக்கு தேவை', '12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர். https://www.virakesari.lk/article/180022
-
பைப்லைன் மூலம் கசிப்பு விநியோகம் : ஒருவர் கைது!
முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. https://thinakkural.lk/article/297642 அறிவியல் வளர்ச்சி?!!
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி பட மூலாதாரம்,DANIEL BALAJI 7 மணி நேரங்களுக்கு முன்னர் ‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. ’சித்தி’ எனும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. பாலாஜி என்பதுதான் அவருடைய இயற்பெயர். ஆனால், சித்தி தொடரில் ‘டேனியல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், டேனியல் பாலாஜி எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர், 2003இல் ‘ஏப்ரல் மாதத்தில்’ எனும் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதே ஆண்டில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து காவல்துறை அதிகாரியாக நடித்துப் பிரபலமானார் டேனியல் பாலாஜி. பட மூலாதாரம்,DANIEL BALAJI திருப்புமுனையாக அமைந்த ‘வேட்டையாடு விளையாடு’ ’காக்க காக்க’ திரைப்படத்திற்குப் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்த சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னரே ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கௌதம் மேனன் முடிவெடுத்துள்ளார். ”கமலுக்கு வில்லனாக பாலாஜியா?” என அப்போது பலரும் பேசியதாக டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும், தன் மீது நம்பிக்கை வைத்து கௌதம் மேனன் அந்தக் கதாபாத்திரத்தைத் தனக்கு வழங்கியதாக அவர் கூறினார். பட மூலாதாரம்,DANIEL BALAJI ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் அமுதன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில், தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பெரும் புகழை அடைந்தார். அத்திரைப்படத்தில் தன் வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றுக்காக இன்றும் அறியப்படுகிறார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவரும் கௌதம் மேனனும் இணைந்து வழங்கிய நேர்காணலில், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் வசனத்தை அப்படியே பேசிக் காட்டினார். அப்போது, “இப்போதும் அதேபோன்று வசனத்தை ஒத்திகை இல்லாமல் பேச முடிகிறதென்றால் இவர் ஒரு (திறமையான) நடிகர்,” என கௌதம் கூறியிருந்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் ’பொல்லாதவன்’ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்மூலம், தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகராக அறியப்பட்டார் டேனியல் பாலாஜி. பிரபலமான ‘வட சென்னை’ வசனம் பட மூலாதாரம்,DANIEL BALAJI வில்லன் நடிகராக அறியப்பட்ட டேனியல் பாலாஜி, அதன்பின் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படங்கள் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017இல் பைரவா, 2018இல் வட சென்னை, 2019இல் பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார் டேனியல் பாலாஜி. எனினும், அதன் பின்னும் அவருக்குப் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. ‘வட சென்னை’ திரைப்படத்தில் ‘லைப்-அ தொலைச்சிட்டியேடா’ என்று கூறும் வசனம் சமூக ஊடகங்களில் பிரபலமான ‘மீம்’ வசனமாக உள்ளது. அதேபோன்று, சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். படங்களில் நடிப்பதைத் தாண்டி சில திரைப்படங்களில் ஒப்பனைக் கலைஞராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான ’அறியவன்’ எனும் திரப்படம் அவர் நடித்த கடைசி திரைப்படம் எனத் தெரிகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினராவார். பட மூலாதாரம்,DANIEL BALAJI இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின்போது கொரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தார் டேனியல் பாலாஜி. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடலுக்கு இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர், அருண் மாதேஸ்வரன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டேனியல் பாலாஜி மரணத்திற்கு சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண் தானம் செய்ததன் மூலம் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியைக் கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி,” எனத் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/ceq74yev4g7o
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
30 MAR, 2024 | 11:30 AM முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180011
-
யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் - வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி
30 MAR, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடைய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் அதிகளவிலான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் விடுதிகளிலும் அதிகளவானோர் தாங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இட நெருக்கடி காரணமாக 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டடத்தை அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த கூட்டத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கிறேன். புதிய கட்டடத்தை கட்டுவதற்கு பாரிய நிதி செலவு செய்யவேண்டிய சூழ்நிலையில் எமது புலம்பெயர் வர்த்தகரான ராஜ் ராயரட்ணம் ஒரு தளத்துக்கான முழுமையான செலவை வழங்குவதற்கான சாதகமான பதிலை வழங்கியுள்ள நிலையில் அவரைப் போன்று பலர் உதவி வழங்குவார்கள். அரசாங்கத்திடம் புதிய கட்டடத்துக்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு வரிவிலக்கை கோரி பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடியுள்ளோம். ஒரே தடவையில் பத்து மாடிகளையும் கட்டி முடிக்காவிடினும் ஆகக் குறைந்தது ஐந்து தொடக்கம் ஆறு மாடிகளையாவது கட்டி முடித்தால் இட நெருக்கடி குறைந்துவிடும். ஆகவே, புதிய கட்டடத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/180026
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள். டானியல் பாலாஜி தனது கண்களை தானமாக வழங்கியுள்ளார் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினராவார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி அக்கா, வாழ்க வளத்துடன்.
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
கடும்போக்குக்கு கடும்போக்கு, அமைத்திக்கு அமைதி; பங்களாதேஷ் ஊடகத்திற்கு தனஞ்சய பதில் Published By: VISHNU 30 MAR, 2024 | 01:21 AM (நெவில் அன்தனி) அவர்கள் (பங்களாதேஷ்) கடும்போக்கைக் கடைப்பிடித்தால் நாங்களும் கடும்போக்கை கையாள்வோம். அவர்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் நாங்களும் அமைதியைப் பேணுவோம் என ஊடகவியலாளர்களிடம் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார். சட்டோக்ராமில் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்களாதேஷ் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தனஞ்சய டி சில்வா இதனைக் குறிப்பிட்டார். பங்களாதேஷ் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஷக்கிப் அல் ஹசனுக்கென ஏதாவது திட்டம் உள்ளதா? அவரைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்? என தனஞ்சய டி சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, 'திட்டங்கள் பற்றி இப்போது என்னால் கூறமுடியாது. அத்துடன் அவர் எனது அணியில் இல்லாததால் அவர் பற்றி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவரைப் பற்றி பங்களாதேஷ் அணியிடம் தான் கெட்கவேண்டும். எனக்கு அது பொருத்தமான கேள்வி அல்ல. தவறாக என்னிடம் கேட்கிறீர்கள்' என பதிலளித்தார். கசுன் ராஜித்த உபாதைக்குள்ளானதால் அசித்த பெர்னாண்டோ குழாத்தில் இணைந்துள்ளதுபற்றி என்ன நினைக்கிறீரர்கள் என அவரிடம் கேட்கப்பட்டதற்கு, 'நான் ஏற்கனவே கூறியதுபோல் வேகப்பந்துவீச்சாளர்களில் 1, 2, 3 என யாரையும் தரப்படுத்த மாட்டேன். யார் அணிக்குள் வந்தாலும் அவரது கடமையை நிறைவேற்றுவதற்கு அவர் தெரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அசித்த சிறப்பாக விளையாடியிருந்தார். அவர் இங்கும் சிறந்த பங்களிப்பை வழங்குவார் என நான் நினைக்கிறேன்' என பதிலளித்தார். சட்டோக்ராம் ஆடுகளம் பற்றி கருத்து வெளியிட்ட அவர், 'சட்டோக்ராம் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமையும் என கருதுகிறேன். ஆனால், கடைசி நாட்களில் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் எல்லா துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எமது முன்வரிசை வீரர்கள் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் திறமையாகத் துடுப்பெடுத்தாடியிருந்தனர். கடந்த போட்டியில் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஆனால் இந்த டெஸ்டில் எமது முன்வரிசை வீரர்கள் பிரகாசிப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் பிரகாசித்தால் எனக்கும் கமிந்துக்கும் துடுப்பெடுத்தாட வேண்டிய அவசியம் ஏற்படாது என நான் கருதுகிறேன்' என்றார். இது இவ்வாறிருக்க, பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இலங்கை, சட்டோக்ராமில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது. அதேவேளை, தொடரை சமப்படுத்த பங்களாதேஷ் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மைதானத்தில் இலங்கையும் பங்களாதேஷும் சந்தித்துக்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகளில் 2இல் இலங்கை வெற்றி பெற்றதுடன் மற்றைய 3 டெஸ்ட் போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. சில்ஹெட் மைதானத்தில் இலங்கையின் வேகபந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 20 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டிருந்தனர். ஆனால், சட்டோக்ராம் ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு உகந்ததாகும். இதன் காரணமாக இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்குப் பதிலாக சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது இவ்வாறிருக்க, இலங்கையின் முன்வரிசை வீரர்கள், குறிப்பாக சிரேஷ்ட வீரர்கள் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுவது அவசியமாகும். அணிகள் இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் பெரும்பாலும் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார அல்லது அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுவர். பங்களாதேஷ் அணியில் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அணித் தலைவர் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் மீண்டும் இணைந்துள்ளதுடன் அவர் இறுதி அணியில் இடம்பெறுவது உறுதி. பங்களாதேஷ் அணியில் மஹ்முதுல் ஹசன் ஜோய், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் ஹக், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், ஷொரிபுல் இஸ்லாம், காலித் அஹ்மத், நஹித் ரானா அல்லது ஹசன் மஹ்முத் ஆகியோர் இடம்பெறுவர். https://www.virakesari.lk/article/179991
-
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6 மணி வரை செயற்படும் - வைத்தியர் சத்தியமூர்த்தி
30 MAR, 2024 | 11:57 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (29) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது. இருந்த போதும் எம்மிடம் காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி சேவையாற்றி வருகிறோம். எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம் அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/180014
-
யாழ் மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு
30 MAR, 2024 | 11:55 AM யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று சனிக்கிழமை (30) யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சந்திரன் கிருஷ்னேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச சுழியக் கழிவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண பொஸில் நிலையம், வடமாகாண சுற்றுலா சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி ஆரம்பமானது . இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு தூய்மையாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார். குறித்த ஆரோக்கியமான யாழ் பவனியின் துவிச்சக்கர வண்டி பயணம் யாழ் ஆரியகுளத்தில் இருந்து ஆரம்பமாகி வேம்படிச்சந்தி, வைத்தியசாலை வீதி மகாத்மா காந்தி சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வீதி, பண்ணை வீதி, ஊடாக பண்ணை சுற்று வட்ட வீதியுடாக வந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வந்து நிறைவடைந்தது. https://www.virakesari.lk/article/180013
-
சிறுவர்களிடையே பரவும் கை, கால், வாய் தொற்று நோய் - வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Published By: NANTHINI 30 MAR, 2024 | 01:09 PM கை, கால், வாய் தொடர்பான தொற்று நோய்கள் சிறுவர்கள் மத்தியில் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய்த் தொற்று தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நோயினால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, வாய், கை, கால் மற்றும் பிட்டம் முதலான உறுப்புகளில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. இது சின்னம்மை போன்றது. ஆனால், சின்னம்மை ஏற்பட்டால் மார்பு மற்றும் முதுகில் கொப்புளங்கள் தோன்றும். இது தொற்றக்கூடியது. இது போன்ற அறிகுறிகள் பிள்ளைகளுக்கு தென்பட்டால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180020
-
மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் டக்ளஸ் நேரடி விஜயம்!
Published By: DIGITAL DESK 3 30 MAR, 2024 | 09:24 AM மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த துறைமுகத்தில் தொடர்ந்துவரும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை (30) மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலைமைகளை ஆராய்ந்துகொண்டார். மேலும், மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும் ரொலர் படகுகளும் மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவை நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை உண்டுபண்ணி வருகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் அவற்றை ஒழுங்கபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்,மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்கள் நுளைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய இழுவைப் படகுகளாலும் துறைமுகத்தின் செயற்பாடகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். நிலைமைகளை அவதானித்த அமைச்சர் அவ்வாறு தரித்து நிறுத்தப்பட்ட படகுகளை ஆழமான பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பாக தொழில் மற்றும் எதிபொருள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகைதரும் படகுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத விகையில் பொறிமுறையை வகுத்து தீர்வுகளை காணுமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதேவேளை தடைசெய்யப்பட்ட சுருக்குவலை தொழில் நடவடிக்கைகளும் இப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரியிருந்தனர். இவ்விடயம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திய அமைச்சர் அவ்வாறான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாதெனவும் அவ்வாறு செயற்படும் தரப்பினரை தடுப்பதுடன் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு உத்திவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180000
-
அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும் : இலங்கையில் ஐ.நா.வின் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அன்டனி பிளிங்கெனிற்கு கடிதம்
Published By: RAJEEBAN 30 MAR, 2024 | 06:22 AM இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது. 1. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்புமுறையை (Referendum) ஆதரிக்கவும். 2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி, போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும். அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும். 3. சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் - பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட- உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும். https://www.virakesari.lk/article/179996
-
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உடன் உறுதிப்படுத்தவேண்டிய நிலையில் இலங்கை - சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்
Published By: DIGITAL DESK 3 30 MAR, 2024 | 08:54 AM (நா.தனுஜா) இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உடனடியாகப் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டும் என்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. 'தெற்காசியப் பிராந்தியத்தில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களின் தடங்கள்' எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் தரவு அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் கறைபடிந்த வலிந்து காணாமலாக்கப்படல் வரலாறு மனித உரிமைகள் வலுவாகப் புறந்தள்ளப்படுவதைக் காண்பிக்கின்றது. அத்தோடு சுமார் 60,000 - 100,000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருக்கும் இலங்கை, உலகிலேயே அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை அரசாங்கமானது பல தசாப்தகாலமாக தீவிரவாதத்தைத் தோற்கடித்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்' என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தை பிரயோகிப்பதற்கான ஆயுதமாக வலிந்து காணாமலாக்குவதைப் பயன்படுத்திவந்திருக்கின்றது. 1970 மற்றும் 1980 களில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்படல்கள், தமிழ் இளைஞர்கள் அரச படையினரால் கடத்தப்படல் போன்ற சம்பவங்கள் மூலம் உள்நாட்டு ஆயுதப்போராட்டத்தின்போது மேலும் தீவிரமடைந்தது. இருப்பினும் 2009 இல் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன் இவ்வலிந்து காணாமலாக்கப்படல்களும் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் போருக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின சமூகங்களை இலக்குவைத்து அரச அனுசரணையுடன்கூடிய 'வெள்ளை வான் கடத்தல்கள்' எனும் புதிய பாகம் ஆரம்பமானது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மத்தியில் மிக ஆழமான துயரமும், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற பதில் தெரியாத கேள்வியும், தொடர் விரக்தியும் நிலைகொண்டிருக்கின்றது. உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான அவர்களது தொடர் போராட்டம் அரச ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றது. வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், அரசாங்கம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை ஸ்தாபித்திருக்கின்றதே தவிர, அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகள் மிகவும் மந்தகரமான நிலையிலேயே உள்ளன. அதன்படி இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது உடனடியாக பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டிய விடயமாக இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/179999
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கோலி ரன் குவித்தாலும் விடாமல் தொடரும் நெருக்கடி என்ன? ஆர்.சி.பி. சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,ROYAL CHALLENGERS BENGALURU/X படக்குறிப்பு, விராட் கோலி கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 35 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 போட்டிகள் நடந்துவிட்டாலும், ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி என்றாலே அது ஐபிஎல் தொடரின் “ எல் ப்ரைமிரோ”( El Primero) என்றுதான் அழைக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கும்போது, முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள்தான் மோதின. அந்த ஆட்டத்தில் மெக்கலம் 73 பந்துகளில் 158 ரன்கள் சேர்க்கவே கேகேஆர் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தத் தொடரிலிருந்து இந்த 2024 சீசன் வரை ஆர்சிபி-கேகேஆர் போட்டிகள் என்றாலே இரு அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டுதான் களத்தில் மோதியிருந்தன. பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. விராட் கோலி, கவுதம் கம்பீர், கிறிஸ் கெயில் என பல வீரர்கள் களத்தில் உரசி இருக்கிறார்கள். நீயா, நானா என்ற ரீதியில்தான் பந்துவீச்சும், பேட்டிங்கும் இரு அணிகளிடமும் கடந்த காலத்தில் இருந்துள்ளது. அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் ரசிகர்களின் உற்சாகத்துக்கும், ஆதரவுக்கும் குறைவிருக்காது. இந்த ஆட்டத்திலும் ரசிகர்கள் ஏராளமாக வந்திருந்தாலும் அனைவரையும் வாயடைக்க வைத்தது கொல்கத்தா அணி. ‘லாஜிக்கை’ உடைத்த கேகேஆர் பட மூலாதாரம்,ROYAL CHALLENGERS BENGALURU/X இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆட்டங்களாக தொடர்ந்து வந்த சென்டிமென்டான, சொந்த மைதானத்தில் சொந்த அணிகள்தான் வென்று வந்தன என்ற லாஜிக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடைத்துள்ளது. இந்த சீசனில் முதல்முறையாக எதிரணியின் சொந்த மைதானத்தில் வென்ற முதல் அணி என்ற பெருமையை கேகேஆர் பெற்றுள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு கேகேஆர் அணி முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணியைவிட நிகர ரன்ரேட்டில் 0.900 புள்ளிகள் குறைவாக கேகேஆர் அணி இருக்கிறது. இந்த சீசனில் 2வது தோல்வியைச் சந்தித்த ஆர்சிபி அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு சரிந்தது. நிகர ரன்ரேட்டும் மைனஸுக்கு சரிந்துள்ளது. 500-வது டி20 ஆட்டம் தனது 500-வது டி20 போட்டியில் களமிறங்கிய கேகேஆர் ஆல்ரவுண்டர் சுனில் நரைன், அருமையான கேமியோ ஆடிக் கொடுத்து, வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 22 பந்துகளில் 47 ரன்கள்(5சிக்ஸர்கள், 2பவுண்டரிகள்) என்று ஏறக்குறைய அரைசதத்தை தனது 500வது ஆட்டத்தில் நரைன் எட்டினார். கேகேஆர் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து, பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்திய நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பவர்-ப்ளேயில் ஆட்டத்தை முடித்த கேகேஆர் கேகேஆர் அணி கடந்த சில ஆண்டுகளாகவே தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக அமையாமல் திணறி, தடுமாறி வந்தது. அதிலும் நரைனை களமிறக்கினாலே கேமியோ ஆடுகிறேன், பிஞ்ச் ஹிட்டராக மாறுகிறேன் எனக் கூறி சில பந்துகளில் ஆட்டமிழந்துவிடுவார். அனைத்தும் இந்த சீசனில் கேகேஆர் அணியில் மாறியுள்ளது. பில்சால்ட்-நரைன் கூட்டணி கேகேஆர் அணிக்கு பெரியபலமாக மாறியுள்ளது. கடந்த போட்டியில் பில் சால்ட் வெளுத்து வாங்கிய நிலையில், இந்த ஆட்டத்தில் நரைன் துவம்சம் செய்துவிட்டார். பவர்ப்ளே ஓவர்களில் இருக்கும் பீல்டிங் கட்டுப்பாடுகளை நன்கு பயன்படுத்திய நரைன் - சால்ட் இணை வெற்றி இலக்கின் சரிபாதியை பவர்ப்ளே ஓவரில் கொண்டு வந்தனர். புதிய பந்தில் பந்துவீசும்போது பேட்டரை நோக்கி வேகமாக வரும், அதைப் பயன்படுத்தி நரைன் ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவர் ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி கேகேஆர் அணி 85 ரன்கள் சேர்த்தது. அதாவது வெற்றி இலக்கில் 50 சதவீதத்தை, 30 சதவீத ஓவர்களில் அடைந்து, 100 சதவீதம் விக்கெட்டுகளை கேகேஆர் அணி கைவசம் வைத்திருந்தது. பவர்ப்ளே முடிந்தபோதே ஆட்டம் கேகேஆர் பக்கம் சென்றுவிட்டது என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். முதல் விக்கெட்டுக்கு சால்ட்-நரைன் கூட்டணி அமைத்துக் கொடுத்த 86 ரன்கள் அடித்தளத்தை அடுத்து வந்த வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் இருவரும் பயன்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 8.4 ஓவர்களில் கேகேஆர்அணி 100 ரன்களையும், 15 ஓவர்களில் 167 ரன்களையும் கேகேஆர் அணி எட்டியது. பட மூலாதாரம்,ROYAL CHALLENGERS BENGALURU/X ஸ்ரேயாஸ்-வெங்கடேஷ் கூட்டணி 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் கூட்டணி கேகேஆர் வெற்றியை உறுதி செய்தது. கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பேட் செய்யாத வெங்கடேஷ் இந்த ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்தவீச்சை சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்ட வெங்கடேஷ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அல்சாரி ஜோஸப் வீசிய 10-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 20 ரன்களை வெங்கடேஷ் சேர்த்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வெங்கடேஷ் 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 74 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களுடன் 24 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி சறுக்கியது எங்கே? ஆர்சிபி அணியில் வலுவான வெளிநாட்டு பேட்டர்களும், பந்துவீச்சாளர்கள் இருந்தும் தோல்வி என்ற நிலை அந்த அணியை விட்டு நகர மறுக்கிறது. எந்த நாட்டின் திறமையான வீரர்களைப் பயன்படுத்தினாலும் ஆர்சிபி அணியால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்பது பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில்கூட ஆர்சிபி அணி பந்துவீச்சில் சறுக்கியதா அல்லது பேட்டிங்கில் சறுக்கியதா என்ற சுயபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. ஏமாற்றும் வெளிநாட்டு பேட்டர்கள் ஏனென்றால் பேட்டிங்கைப் பொருத்தவரை சின்னசாமி அரங்கு போன்ற சிறிய மைதானத்தில் 182 ரன்கள் என்பது வெற்றிக்கான ஸ்கோர் அல்ல. ஆடுகளமும் சேஸிங்கிர்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்பதால் இன்னும் கூடுதலாக 50 ரன்களையாவது ஆர்சிபி அணி எடுத்திருக்க வேண்டும். இதுவரை 3 போட்டிகளில் விளையாடிவிட்ட ஆர்சிபி அணியில் நட்சத்திர பேட்டர்களான கேப்டன் டூபிளெசிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் எந்த பெரிய ரன்குவிப்பும் செய்யவில்லை. வெளிநாட்டு பேட்டர்கள்தான் ஆர்சிபி பலம் என்று பேசப்பட்ட நிலையில் இதுவரை வெளிநாட்டு பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தோல்விக்கு பெரிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 3 போட்டிகளிலுமே விராட் கோலி, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகிய வீரர்கள்தான் சிறப்பாக பேட் செய்துள்ளனர். பந்துவீச்சில் அனுபவமின்மை பட மூலாதாரம்,ROYAL CHALLENGERS BENGALURU/X படக்குறிப்பு, வைஷாக் விஜயகுமார் வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் அனுபவமற்ற வீரர்கள் வைத்திருப்பது எதிரணியை குறிப்பிட்ட ஸ்கோரில் சுருட்ட முடியாமல் போய்விடும். இந்த ‘அனுபவமற்றவர்கள்’ என்ற சொற்பதம் என்பது, டி20 அனுபவம் இல்லாத வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள் என எடுக்கலாம். ஏனென்றால், அல்சாரி ஜோஸப் சர்வதேச அளவில் அதிவேகமாக துல்லியமாக பந்துவீசக்கூடிய கரீபியன் பந்துவீச்சாளர் என்பதில் துளியும் மாற்றமில்லை. ஆனால், சின்னசாமி அரங்கு போன்ற சிறிய மைதானத்தில் மணிக்கு 150கி.மீ வேகத்தில் பந்துவீசினால், பேட்டர்களின் பணி எளிதாகிவிடும். பந்து வரும் திசையில் லேசாக பேட்டை வைத்து பேட்டர் திருப்பிவிட்டாலே சிக்ஸர், பவுண்டரி கிடைத்துவிடும். எந்த ஆடுகளத்துக்கு எப்படி பந்துவீச வேண்டும், எங்கு வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற அனுபவம் இல்லாதவர்களாக சிராஜும், அல்சாரி ஜோஸப், தயால் இருக்கிறார்கள். இந்த 3 பந்துவீச்சாளர்களுமே நேற்று ரன்களை வாரி வழங்கினார்கள். இதில் அல்சாரி(17), சிராஜ்(15) என்று ஓவருக்கு ரன்களை வழங்கிய நிலையில் தயால் 11 ரன்கள் சராசரி வைத்திருந்தார். 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 126 ரன்களை விட்டுக்கொடுத்த கேகேஆர் வெற்றியை 70 சதவீதம் உறுதி செய்துவிட்டனர். ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் அதிகமாக “ஸ்லோ-பால்” வீசவில்லை. சின்னசாமி மைதானத்தில் இரவுநேரத்தி்ல் பனிப்பொழிவு இருக்கும்போது, அதிகமான ஸ்லோபால் பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவாக அமையும். ஆனால், இதைஆர்சிபி முறையாகச் செய்யவில்லை. இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் சராசரியாக 21 பந்துகள்வரை ஸ்லோவர் பந்துகளை நேற்று வீசினர். இதில் கேகேஆர் அணியின் ரன் சராசரி 5.45 ஆகக் குறைவாக இருந்தபோது, ஆர்சிபி அணியின் ரன் சராசரி 13.42 ஆக இருந்தது. குறிப்பாக ஆன்ட்ரே ரெஸ்செல் ஸ்லோபால் எனும் வித்தையை சிறப்பாகச் செய்தார், 150 கி.மீ வேகத்தில் வீசிய ரஸல், திடீரென 110 கி.மீ வேகமாக் குறைத்தும் பேட்டர்களைத் திணறவைத்தார். சுழற்பந்துவீச்சிலும் அனுபவம் மிக்க முழுநேர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. மேக்ஸ்வெல் பகுதிநேரப் பந்துவீச்சாளர்தானே தவிர முழுநேர வீரர் அல்ல, விஜயகுமார் சிறப்பாகப் பந்துவீசினாலும் நெருக்கடியான நேரத்தில், டெத் ஓவர்கள், பவர்ப்ளேயில் பயன்படுத்த முடியாத வீரராகவே இருக்கிறார். கோலியை தொடரும் நெருக்கடி என்ன? பட மூலாதாரம்,ROYAL CHALLENGERS BENGALURU/X விராட் கோலி கேப்டன் பொறுப்பு துறப்புக்குப்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சீசன் முடிவில் கோலியின் ரன் குவிப்பு மிரட்சியாகத் தெரிந்தாலும், ஒவ்வொரு போட்டியாகப் பார்த்து ஆய்வு செய்தால், அவரின் ஆங்கர் ரோல் அணியின் ஸ்கோர் குறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. விராட் கோலி அடிக்கடி “ நான் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால், ஆர்சிபி அணி ஒவ்வொரு போட்டியைச் சந்தித்து முடிக்கும்போது, டி20 கிரிக்கெட்டில் கோலி பேட்டிங் செய்த விதம் குறித்து பெரிய விவாதமே நடந்துள்ளது. அடுத்துவரும் டி20 உலகக் கோப்பைக்கு இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் பேட்டிங் திறமை உறைகல்லாக பார்க்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பேட்டிங் ஸ்டைலை ‘மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கும்’ தன்னை ‘நிரூபிக்க’ வேண்டிய கட்டாயத்துக்கும், ‘நெருக்கடிக்கும்’ தள்ளப்பட்டுள்ளார். புள்ளிவிவரங்கள்படி, விராட் கோலி கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அடிக்கும் பெரிய ஷாட்கள் குறித்துப் பார்க்கலாம். அதாவது, ரன்மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி, களத்தில் ஆங்கர் ரோல் செய்து முழு ஆட்டத்தையும் ஆக்கிரமித்து விளையாடவே விரும்புவாரேத் தவிர “பிஞ்ச் ஹிட்டராகவோ”, “பவர்ஹிட்டராகவோ”, “சிறிய கேமியோ” என்று விளையாடியது குறைவுதான். ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடியதால் என்னவோ கடந்த காலங்களில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கோலி பெரிய ஷாட்களை அடிப்பது குறைவாகவே இருக்கும். 2014ம் ஆண்டிலிருந்து 2022 வரை பார்த்தால் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கோலி 3.9 ஷாட்களுக்கு மேல் அடித்தது இல்லை. அதாவது வானவேடிக்கை காட்சி ஷாட்கள் பெரிதாக அடித்தது இல்லை. ஆனால் கோலியின் ஆங்கர் ரோல் மீது கடும் விமர்சனங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டதால் வேறுவழியின்றி தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி வருகிறார். கடந்த சீசனில் ஒரு இன்னிங்ஸிற்கு 7 பெரிய ஷாட்களை தேர்வு செய்து அடித்த கோலி, இந்த சீசனில் 10 பெரிய ஷாட்களை அடித்து வருகிறார். உதாரணமாக நேற்றைய ஆட்டத்தில் ஸ்டார்க் ஓவரில் 2 பெரிய சிக்ஸர்களை கோலி விளாசினார். மேலும் ஆர்சிபி அணிக்காக இதுவரை அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் கெயிலின் 239 சிக்ஸர்களை கோலி (241)முறியடித்தார். உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்குள் செல்ல வேண்டும் என்ற தீவிர வேட்கை, நெருக்கடி தற்போது கோலிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஆங்கர் ரோல் எடுத்த போதிலும், பெரிய ஷாட்களுக்கும் கோலி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கும், நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளார். "ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை" ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் கூறுகையில் “ இரு இன்னிங்ஸ்களிலும் ஆடுகளம் வெவ்வேறு விதமாக செயல்பட்டது. ஆனால், சேஸிங்கிறக்கு ஆடுகளம் எளிதாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் பேட்டர்கள் பெரிய ஷாட்களை அடிப்பது கடினமாக இருந்தது, விராட் கோலி கூட பேட் செய்ய சிறிது சிரமப்பட்டார். நாங்கள் பந்துவீச்சிலும் மாற்றம் செய்ய முயன்றும் நரைன்-சால்ட் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது. பவர்ப்ளே ஓவர்களில் இருவரும் சேர்ந்து ஆட்டத்தின் முடிவை திருப்பிவிட்டனர். எங்களிடம் சுழற்பந்துவீச்சு இருந்தும் பெரிதாக ஆடுகளத்தில் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் கேகேஆர் அணியில், பேட்டர்கள் இடது, வலது கூட்டணியோடு இருந்ததால் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச சிரமப்பட்டனர். சினாமேன் சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள், விஜயகுமார் சிறப்பாகப் பந்துவீசினாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இம்பாக்ட் வீரராக கரன் ஷர்மாவை களமிறக்கி இருக்கலாம்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckmv7r5gj30o
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!
-
பாலாறு அழியப் போகிறதா? கடும் அச்சத்தில் விவசாயிகள் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளுள் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அம்மாநிலத்தில் இருந்து 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாற்றினால் தமிழகத்தில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள், நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. பாலாற்றின் துணை நதிகளாக மலட்டாறு, பொன்னையாறு, சேயாறு, கள்ளாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக (வட ஆற்காடு மாவட்டம்) ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டம்தான் அதிக அளவில் நெற்பயிரிடும் பகுதியாக இருந்தது. மேலும் தென்னை, வாழை, கரும்பு, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பாலாற்றில், பல்வேறு கழிவுகள் கலப்பதால் மோசமான நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேலூர் தொகுதி மக்களின் இந்த முக்கியப் பிரச்னை வரப்போகும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? பாலாற்றில் கலக்கப்படும் கழிவு நீர் பாலாற்றில் கலக்கப்படும் கழிவுகளில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள், உதயந்திரம் பேரூராட்சியின் 15 வார்டுகள், ஜாப்ரபாத், கிரிசமுத்திரம், வளையம்பட்டு ஊராட்சிகளின் ஒட்டு மொத்த கழிவுநீரும் பாலாற்றில்தான் விடப்படுகிறது. இதுமட்டுமின்றி பாலாற்றின் படுகையில் உள்ள மேலும் சில கிராம ஊராட்சிகளில் இருந்தும் நேரடியாக கழிவு நீர் பாலாற்றில் விடப்படுகிறது. இதேபோல குப்பைகள், தோல் கழிவுகள், மருத்துவக் கழிவுகளையும் கொட்ட பாலாற்றைப் பயன்படுத்துவதாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் தமிழ்நாடு அரசு நடத்திய புற்றுநோயைக் கண்டறியும் சோதனையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அசோகன் கூறுகிறார். தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தோல் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதிகளில் பெண்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலாற்றை நம்பியுள்ள நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் எதிர்ப்பைக் கடந்து 22 தடுப்பணைகளை ஆந்திரா அரசு கட்டியுள்ளது. அதையும் தாண்டி பாலாற்றில் தமிழக விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் இதுபோன்ற பொருட்கள் கொட்டியும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் பாலாறு முற்றிலும் மாசடைகிறது என்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகள். பாலாற்றில் நடக்கும் இந்த விதிமீறல் தொடர்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் அசோகன் பிபிசியிடம் பேசினார். “தமிழகத்தில் 222 கி.மீ. பாய்கின்ற பாலாற்றை நம்பி நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்தப் பகுதியில் விவசாயம் பல மடங்கு குறைந்துவிட்டது." பாலாற்றில் உள்ள குரோமியம் கழிவுகளை ஆய்வு செய்து எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறியக்கூட இதுவரை நீர்வளத்துறை அமைச்சகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாலாற்றில் உள்ள தண்ணீரில் குடிக்க முடியாத அளவிற்கு உப்பு கலந்துள்ளது. அதை சரி செய்ய தமிழக அரசு எப்போது முன் வரும் என்று தெரியவில்லை என்கிறார் அசோகன். “சில வருடங்களுக்கு முன்புவரை பாலாற்றில் எப்பொழுதுமே மணலுக்கு அடியில் ஊற்று வந்து கொண்டிருக்கும். ஆனால் இன்று இந்தப் பகுதியில் அதிக மணல் அள்ளப்படுகிறது. இது நிலத்தடி நீரை மேலும் குறைக்கிறது.“ இதனால் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெற்றிலைக்குப் புகழ்பெற்ற ஆம்பூர் படக்குறிப்பு, வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உறுப்பினர் அசோகன். நெல் விவசாயம் தவிர, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வெற்றிலை விவசாயம் நடந்த நிலங்கள் அனைத்தும் இப்போது வளமிழந்து பயன்பாடில்லாமல் இருப்பதாக ஆம்பூர் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ”இதனால் வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து, சராசரியாக ஒரு வீட்டில் ஐந்து கால்நடைகள் இருந்த நிலை மாறி வெகு சில வீடுகளில் மட்டுமே கால்நடைகளை மக்கள் வளர்க்கின்றனர்.” பாலாற்றில் தண்ணீர் மாசடைந்துள்ளதால், புகழ்பெற்ற ஆம்பூர் சீரக சம்பா அரிசி விவசாயமும் தற்போது இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட தேங்காய் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி முதல் செங்கல்பட்டு வரை பாலாற்றின் படுகையில் இருந்த விளைநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது விவசாயம் நடைபெறவில்லை. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வணிகப் பயன்பாட்டு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முல்லை. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதியை ஒதுக்கி பாலாற்றைக் காப்பாற்றவில்லை என்றால் காலப்போக்கில் பாலாறு காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார் அசோகன். அவரது கூற்றுப்படி, பாலாற்றில் 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அளவீடுகளை வைத்துக்கொண்டு இதுவரை 10 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. "இன்னும் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளைக் கட்டினால், வெள்ளம் ஏற்படும்போது வரும் தண்ணீரைச் சேமித்து பாலாற்றில் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும். அதனால் விவசாயமும் இந்தப் பகுதியில் வளம் பெறும்." தொன்மையான ஆறு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் முல்லை பிபிசியிடம் பேசியபோது, “பாலாறு இருக்கின்ற ஆறுகளிலேயே மிகவும் தொன்மையானது. பாலாற்றை நம்பித்தான் குடிநீருக்காக இருக்கிறோம். ரயில் நீர் என்று சொல்லி கோடிக்கணக்கான நீரை சதுரங்கப்பட்டணத்திற்குப் பக்கத்தில் இருந்து எடுத்து வருகிறார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பாலாற்றில் இருந்துதான் தண்ணீரை உபயோகம் செய்து வருகின்றனர்,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பாலாறு. ஒரு லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அளிக்கிறது. பாலாற்றைப் பாதுகாத்தால் மட்டும்தான் தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். கூட்டுக் குடிநீரை சென்னை வரை எடுத்துக்கொண்டு போனது அனைத்துமே ரசாயனம் கலந்த தண்ணீர். அனைத்து கழிவுகளும் பாலாற்றில் கலக்கப்படுகிறது. கிருஷ்ணா நீரை ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து வரக்கூடிய உபரி நீரைச் சேமித்து வைப்பதற்காக தற்பொழுது தடுப்பணை கட்டி வருகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீர் வராது. காவிரிக்கு ஒப்பந்தம் போட்டது போன்று ஆந்திரா அரசுடன் தமிழக அரசு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட ஒப்பந்தம் போட வேண்டும்,” எனத் தெரிவித்தார். வாணியம்பாடி நகராட்சியிடம் இந்தப் பிரச்னை தொடர்பாக கருத்து கேட்டபோது, 37 கோடி ரூபாய்க்கு 83 கி.மீ. தொலைவில் 7 இடங்கள் கண்டறியப்பட்டு ஆறு மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைப்பதற்கான இரண்டு ஏக்கர் இடம் வேண்டி மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்தது. மேலும் வாகனங்களில் சேமிக்கப்படும் மலக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதற்காக 49 லட்சம் மதிப்பீட்டில் வளையம்பட்டு பகுதியில் 30 எம்எல்சி (Mlc) கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, 10 எம்எல்சி தற்பொழுது முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் பயன்பாட்டிற்கு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. துரைமுருகனின் பதில் பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து பிபிசியிடம் பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன், "நகராட்சிகளுக்கு கழிவுநீரை வெளியேற்ற வேறு வழியில்லாததால் பாலாற்றில் கொட்டுகின்றனர். ஆனால் இப்போது ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் பாதாள சாக்கடை திட்டம் வரவுள்ளது. ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாணியம்பாடியில் இதற்கான பணிகள் பேச்சுவார்த்தை அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" கூறினார். தோல் கழிவுகள் தொடர்பான கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்னையைக் கண்காணித்து வருவதாகவும் கூறினார். "பாலாற்றை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலரசம்பட்டி, கோவிந்தம்பாடி, செம்பாக்கம், அரும்பருத்தி, பொய்கையில் இறையன்காடு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. கோட்டாறு பகுதி ஆறு தடுப்பணைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. அதில் தற்போது வரை மூன்று தடுப்பணைகளின் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள மூன்று தடுப்பணைகளின் பணி நடந்து வருவதாக வேலூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாலாறு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கும் நிதிகளின் அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக" தெரிவித்தார். பாலாறு மேம்பாடு தொடர்பாகப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பாலாற்றில் மழை அதிகம் பெய்தால் மட்டுமே வெள்ளம் வரும். மற்ற நேரங்களில் பாலாறு, காலியாகத்தான் இருக்கும். தென்பெண்ணையாற்றில் வெள்ளம் வரும்பொழுது, வெள்ளநீர் சாத்தனூருக்குச் சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. அப்படிப் போகிற வெள்ளத்தின் ஒரு பகுதியை காக்கங்கரை ஏரிக்குக் கொண்டு வந்து அங்கிருந்து கால்வாய் மூலமாகப் பாலாற்றில் சேர்த்து விட்டால் வருடம் முழுவதும் பாலாற்றில் நீர் இருக்கும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்,” என வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசினார். https://www.bbc.com/tamil/articles/c51mx72mnj8o
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RESULT 10th Match (N), Bengaluru, March 29, 2024, Indian Premier League Royal Challengers Bengaluru 182/6 Kolkata Knight Riders (16.5/20 ov, T:183) 186/3 KKR won by 7 wickets (with 19 balls remaining)
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசியின் வெவ்வேறு வகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 29 மார்ச் 2024, 02:21 GMT உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம். அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா? எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அரிசியின் வகைகள் என்னென்ன? தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது. தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான். அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ். அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் . இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது? தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. "ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே." "இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருப்புகவுனி அரிசி கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன? சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார். மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது. பட மூலாதாரம்,AATHICHOODI படக்குறிப்பு, மருத்துவர் மருதராஜ் செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று. இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ். அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும். இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன? தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும். மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர். “இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும் காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா? பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும். இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன. இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்” ரேஷன் அரிசி நல்லதா? பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ். “மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர். எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ். எந்த அரிசியை தேர்வு செய்வது? இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.” “அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” https://www.bbc.com/tamil/articles/c3gj24ql6x4o