Everything posted by ஏராளன்
-
என் இந்தியப் பயணம்
https://postimages.org/ மேலுள்ள இணைப்பில் இணைத்து அதில் வரும் Direct linkஐ யாழில் இணைக்க உங்கள் படங்கள் காட்சி தரும் அக்கா.
-
ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன்.
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துங்கள் : சபாநாயகர் ஆலோசனை ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டள்ளார். அதிக பணம் இவ்வாறு இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த முடியும் என்று கூறிய சபாநாயகர், இரண்டு தேர்தல்களையும் தனித்தனியே நடத்தினால் அதிக பணம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார். நாடு தற்போது இருக்கின்ற நிலையில் இரண்டையும் ஒன்றாக நடத்துவதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/conduct-both-elections-simultaneously-speaker-1711272780?itm_source=parsely-api#google_vignette
-
இன்றைய வானிலை
மேல், வடமேல், தென் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களில் அதிகரித்த வெப்பம் நிலவும் ! 25 MAR, 2024 | 06:14 AM மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/179611
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
துரை வைகோ உடைந்து அழக் காரணம் என்ன? சின்னத்துக்காக மதிமுகவை அழுத்துகிறதா திமுக? பட மூலாதாரம்,DURAIVAIKO/FACEBOOK படக்குறிப்பு, தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய துரை வைகோ, மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ அண்மையில் திமுக நிர்வாகிகள் முன்பு உணர்ச்சிவசப்பட்டு அழுத நிகழ்வு தமிழ்நாட்டு அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக களம் காண்கிறார். அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றை சேர்ந்த கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதிமுக கட்சிக்கு இன்னும் சின்னமே ஒதுக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளதா என்ற கேள்வியும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் தேர்தல் கூட்டம் ஒன்றில் துரை வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பே மேடையில் பேசிய திமுக நிர்வாகி மதிமுக உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றிய துரை வைகோ திடீரென்று உணர்ச்சிவயப்பட்டு அழுதுவிட்டார். இதன் பின்னணி என்ன? மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம். பட மூலாதாரம்,DURAI VAIKO / X படக்குறிப்பு, 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மதிமுக தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு 1994ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை தொடங்கினார். அதற்கு பின்னர் நடைபெற்ற 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக, பம்பரம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தது. அதிமுக - திமுக இல்லாமல் இடதுசாரிகள் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் பிறகு ஒரே ஆண்டில் மீண்டும் நடத்தப்பட்ட 1999 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 6% வாக்குகளையும் பெற்றது. அதன்பிறகு 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவீதம் 6 சதவிகிதத்துக்கும் கீழ் சென்றது. அதற்கு பின் மாறி மாறி அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிகளில் இடம்பெற்றாலும் மதிமுகவால் பெரியளவிலான வாக்கு வங்கியை பெற முடியவில்லை. இந்நிலையில் 6 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்டுள்ள கட்சி என்று கூறி 2010ஆம் ஆண்டு மதிமுகவின் மாநில கட்சி அந்தஸ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இதோடு நிலையான தேர்தல் சின்னம் கிடைக்காது என்றாலும் அடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொண்டது மதிமுக. பட மூலாதாரம்,VAIKO / X படக்குறிப்பு, 2016ஆம் ஆண்டு மக்கள்நலக் கூட்டணி அமைத்து தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியுடன் களம் கண்ட மதிமுக அந்த தேர்தலிலும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிட்டது. துரை வைகோ பேசியது என்ன? திமுக கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருச்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து தொடங்கினார். இந்நிலையில் 23.3.2024 சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ், துரை வைகோ முன்னிலையிலேயே மேடையில் பேசிய திமுக நிர்வாகி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதை அங்கிருந்த திமுக தொண்டர்களும் கூச்சலிட்டு வரவேற்பது போல் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ ஒருகட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிவிட்டார். பட மூலாதாரம்,VAIKO / X படக்குறிப்பு, 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய அவர், மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து என்ன சின்னம் என்று சொல்லவும் என தொண்டர்கள் கூச்சலிட, “உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி முடியாவிட்டால் விலகிக்கொண்டு திமுகவே நிற்கட்டும், நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால், ஒருபோதும் சின்னத்தை விடமாட்டோம்” என்று கூறினார். துரை வைகோவின் இந்த உரை அவர் மீது அழுத்தம் தரப்படுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பட மூலாதாரம்,PRIYAN படக்குறிப்பு, “வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது." உட்கட்சி அழுத்தம்? இதுகுறித்து பத்திரிகையாளர் பிரியனிடம் பேசுகையில், "அவருக்கு அவரது கட்சிக்குள் இருந்து ஏதாவது அழுத்தம் வந்திருக்கலாமே தவிர, திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார். “வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன். பட மூலாதாரம்,MALLAI SATHYA / X படக்குறிப்பு, “சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்” ‘திமுகவுக்கு தர்மசங்கடம்’ வேட்பாளர் அறிமுகக் கூட்டமெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் களத்திற்கு பரப்புரைக்கு சென்றுவிட்டன. இந்த நிலையில், மதிமுகவுக்கு எந்த சின்னத்தில் வாக்கு சேகரிப்பது என்பதில் தான் கூட்டணி கட்சியினரிடையே தர்மசங்கடம் நிலவுதாக கூறுகிறார் மல்லை சத்யா. “சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்” என்று கூறுகிறார் அவர். “களத்தில் திமுக கட்சியினர் உறுதுணையாக நிற்கிறார்கள். தற்போது வரை சின்னம் இல்லாமல் எப்படி பிரச்சாரம் செய்வது, குறுகிய காலத்தில் சின்னத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது என்ற அழுத்தமே நிலவுகிறது ” என்று தெரிவித்துள்ளார் மல்லை சத்யா. பட மூலாதாரம்,MAALAN / X படக்குறிப்பு, "மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது." மதிமுகவை இணைத்துக் கொள்ள நினைக்கிறதா திமுக? சின்னம் குறித்த பிரச்னை, கூட்டணி தலைவர்களின் கருத்துக்கள் இது ஒருபுறமிருக்க மதிமுகவின் சூழலை பயன்படுத்தி அந்த கட்சியை தன்னோடு இணைத்து கொள்ள திமுக நினைப்பதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். “திமுகவில் இருந்துதான் வைகோ வெளியேறினார். தற்போது பலவீனமான சூழலில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார். சின்னமும் இல்லை. இந்த சூழலில் தங்களது சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்து அவர்களது கட்சி உறுப்பினர்களையும் திமுக தனது கட்சியில் இணைத்து கொள்ள விரும்புகிறது. எனவே இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதிமுகவிற்கு அழுத்தம் தருகிறது” என்கிறார். மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது. எனவே அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார் மாலன். பட மூலாதாரம்,TAMILAN PRASANNA / X படக்குறிப்பு, “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருகிறது” திமுக தரப்பு கூறுவது என்ன? பத்திரிகையாளர் மாலன் சொல்வது போல மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் நிற்கச்சொல்லி திமுக கட்டாயப்படுத்துகிறதா என்று செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர், “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருவதாக” கூறுகிறார். “சின்னம் குறித்த பிரச்னை திமுகவுக்கும், மதிமுகவுக்குமானது அல்ல. இது திமுகவுக்கும், பாஜகவுக்குமானது. நாட்டில் உள்ள லெட்டர்பேடு கட்சிகளுக்கும் சின்னம் மற்றும் அனுமதி வழங்கும் தேர்தல் ஆணையம், மத்திய அரசின் பேச்சை கேட்டு முக்கிய கட்சிகளுக்கு சின்னம் வழங்க மறுக்கிறது” என்கிறார் அவர். ஆனால், “திமுக தங்களது உள்நோக்கத்தை மறைப்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் மீது பழி போடுகிறது. அதற்கு பாஜகவே எளிய இலக்கு” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மாலன். மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக தலைவர்கள் ஆலோசனை தருவது குறித்து கேட்டபோது, “வெற்றிவாய்ப்பை எந்த காரணத்திற்காகவும் இழக்கக்கூடாது என்ற குறிக்கோள் உள்ளது. சின்னம் அதில் ஒரு கூடுதல் பலன் அளிக்க கூடியது. அந்த வகையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்." "உதாரணத்திற்கு மதிமுக தொடர்ந்து பரவலான தொகுதிகளில் நிற்கவில்லை. சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதனால், கூட்டணியின் நன்மைக்காக சிலர் ஆலோசனை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுகுறித்து இரு தலைமைகளும் முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார் தமிழன் பிரசன்னா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம்." என்கிறார் மதிமுகவின் மல்லை சத்யா. சின்னம் இல்லாமல் இருப்பது பின்னடைவா? தேர்தலில் களம் காணும் இதர கட்சிகள் ஏற்கனவே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், மதிமுகவிற்கு இன்னும் சின்னமே இல்லை என்பது தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம். எனவே, மக்களின் ஆதரவில் கண்டிப்பாக வெற்றிப்பெறுவோம்” என்று கூறினார். இன்னும் தேர்தலுக்கு 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், ஓரிரு தினங்களில் சின்னமும் வந்து விடும். அதனால், இது பெரியளவு திமுக அல்லது மதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று கூறுகிறார் பிரியன். https://www.bbc.com/tamil/articles/cp9e8ymwz3ro
-
சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்
25 MAR, 2024 | 09:57 AM பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (24) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாட்களுக்கு சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் சீனா இலங்கைக்கு அளித்த கடனை மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார். அவர் நேற்று (24) இரவு 08.20 மணியளவில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து மேலும் 10 தூதுக்குழுவினர் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/179615
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விஷம் குடிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்? முழு பின்னணி கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் மற்றும் கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 24 மார்ச் 2024 ஈரோடு மக்களவைத் தொகுதியின் ம.தி.மு.க சிட்டிங் எம்.பி கணேசமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகிய இருவருமே மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து அவர் என்ன சொன்னார்? கணேசமூர்த்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வைகோ கூறியது என்ன? கணேசமூர்த்தி சாப்பிட்ட விஷம் எப்படிப்பட்டது? விஷ முறிவு மருத்துவர்கள் கூறுவது என்ன? என்ன நடந்தது? மதிமுக தொடங்கியது முதலே அதன் மூத்த தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்து வந்தவர் கணேசமூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியிலும் அவரையே அக்கட்சி நிறுத்தியது. தற்போதைய ஈரோடு தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று மார்ச் 24ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்குப் பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைகோ நேரில் நலம் விசாரித்தார் கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உயிராக நேசித்த, கண்ணின் மணியாக திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேச மூர்த்தி, தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தொடர்பில் உள்ளார். மாணவர் அணியிலிருந்த அவர், சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை சான்ஸ் பார்ப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. 99% அவரை (துரை வைகோ) நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன். இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். இன்று காலை 10 நிமிடம் மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிரார். அங்கு வந்த கபிலனிடம் 'இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்' எனக் கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்ய வேண்டிய முதன்மையான முதலுதவிகள் அனைத்தும் செய்து விட்டனர்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவ தலைமை நிபுணர் என்ன கூறினார்? கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டிருக்கும் கே எம் சி ஹெச் மருத்துவமனையின் தலைமை மருத்துவ நிபுணரிடம் கணேச மூர்த்தியின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்துள்ளார். அப்போது மருத்துவ நிபுணர் பகிர்ந்து கொண்ட தகவல்களாக வைகோ கூறுகையில், "முதலுதவி சரியாக செய்ததால் தான் நாங்கள் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். ஆதலால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்கோவும் கொடுக்கப்படுகிறது." என்று தெரிவித்தார். துரை வைகோ நேரில் நலம் விசாரித்தார் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ உடனே கோவை விரைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கணேசமூர்த்தியை இரவில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் பதிலளித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, துரை வைகோ, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் ‘கணேசமூர்த்தி கவலைக்கிடமாக உள்ளார்’ கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்துப் பேசிய துரை வைகோ, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர். அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’’ என்றார். தேர்தலில் சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சியா? கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி கணேசமூர்த்திக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது" என்று துரை வைகோ தெரிவித்தார். தனியார் மருத்துவமனை கூறியது என்ன? கணேசமூர்த்தியை அவரது உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் முதலில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கணேசமூர்த்தி சுயநினைவுடன்தான் இருந்தார். காலை 10 மணிக்கு அவர் விஷம் குடித்தார் என்று உறவினர்கள் கூறினார்கள். விஷத்தை தண்ணீரில் கலந்து அவர் குடித்துவிட்டதாக உறவினர்கள் கூறினர். விஷம் குடித்திருந்ததால் அவரது வயிற்றை மருத்துவமனையில் சுத்தம் செய்தார்கள். அப்போது அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்று கூறினார். விஷ முறிவு சிகிச்சையின் போது என்ன நடக்கும்? ஒரு மனிதனின் உடலுக்குள் விஷம் நுழைந்தால், மருத்துவர்கள் அந்த விஷத்தை முறிக்க என்னென்ன செய்வார்கள் என விளக்கினார் தடயவியல் துறையின் விஷ முறிவு மேலாண்மை நிபுணர். பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், “எம்.பி. கணேஷமூர்த்தி உட்கொண்டது மாத்திரையின் ஜெனரிக் பெயர் கிடைத்தால்தான், அதன் பண்புகள், உடலில் கலந்து விஷமாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரியும். ஆயினும் பொதுவாக விஷமுறிவைப் பொறுத்தவரை நேர மேலாண்மேதான் முக்கியம்” என்றார். "ஒருவர் வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ, வாய்க்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல முறைகளில் விஷத்தை உட்கொண்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம். அவர் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டால், உணவுக்குழாய், குடல் ஆகியவை சுத்தம் செய்யப்படும். அதுவே 3 முதல் 4 மணி நேரமாக ஆகியிருந்தால், நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்தே விஷத்தின் மாதிரி அறியப்படும். நோயாளிக்கு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, இருதயத் துடிப்பு குறைவது, சுயநினைவு இழத்தல், வலிப்பு உள்ளிட்டவற்றை வைத்து என்ன மாதிரியான விஷம் என அறிய வாய்ப்பு உண்டு, சிறுகுடல் 8 மீட்டர் நீளம் கொண்டது. 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தால் அதில் 6 மீட்டர் அளவுக்கு விஷம் பரவி குடலில் ஓட்டியிருக்கும். இதையடுத்து நேரம் ஆக ஆக, அது பெருங்குடல் உள்ளிட்ட பல உறுப்புக்களில் பரவக்கூடும். வயிற்றைச் சுத்தம் செய்யும்போது, மெக்கானைஸ்ட் வடிவில் உள்ள சார்கோல் பயன்படுத்தும்போது, வயிற்றின் குடல்பகுதியில் விஷம் ஒட்டிக்கொள்ளாதபடி அகற்ற உதவும். இந்த முறை குடலில் ஓட்டியிருக்கும் 70-80% விஷத்தை வெளியேற்ற உதவும். அதை விட நேரம் அதிகம் கடந்து விட்டால், கூடிய விரைவில் உரிய மருந்துகளை வைத்து குடலைக் கழுவி சுத்தம் செய்வதோடு பிற வகை சிகிச்சைகளும் பின்பற்றப்படும். மலம் மற்றும் சோடா பை கார்பனேட் கொண்டு சிறுநீர் வழியாகவும் விஷத்தை முறித்து உடலில் இருந்து வெளியேற்றப்படும். ஒருவேளை சுயநினைவிழந்திருந்தாலோ, விஷமானது ரத்தத்தில் கலந்து இருந்தாலோ, ஹீமோ டயாலிசிஸ், ஹீமோ ஃபில்ட்ரேசன், ஹீமோ பர்ஃப்யூசன் ஆகிய முறைகளில் ரத்தத்தில் இருந்து அகற்றப்படும்." என்று தெரிவித்தார். யார் இந்த கணேசமூர்த்தி? ஈரோட்டைச் சேர்ந்தவரான கணேசமூர்த்தி (77), இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டம் படித்துள்ளார். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக வைத்துள்ள இவர் ம.தி.மு.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். கணேசமூர்த்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அக்கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்.பியாக உள்ளார். பல ஆண்டுகளாக அவர் ம.தி.மு.கவில் இருந்தாலும், இவரின் அரசியல் வாழ்க்கை தி.மு.கவில் இருந்து தான் துவங்கியது. ம.தி.மு.க தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக தி.மு.கவில் இருந்த கணேசமூர்த்திக்கு தி.மு.க மேலிடம் 1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில், தி.மு.க மேலிட உத்தரவுப்படி 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், 1993ம் ஆண்டு தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.கவில் இருந்து வெளியேறிய கணேசமூர்த்தி, ம.தி.மு.கவில் இணைந்தார். 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். மூன்று முறை எம்.பி! 1998 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையிலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இவருக்கு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இந்தத்தேர்தலில் வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு அதன்பின் நடந்த, 2014 மக்களவை தேர்தலிலும் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார். அதன்பின், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், ஈரோடு தொகுதியில் போட்டியிட ம.தி.மு.கவினர் வாய்ப்பு வழங்கிய நிலையில், அதில் வெற்றி பெற்று தற்போது ‘சிட்டிங்’ எம்.பியாக உள்ளார். மக்களவைத் தேர்தல்களில் எப்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வைகோ, கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார். ஒரு முறை, எம்.எல்.ஏ, மூன்று முறை ஈரோடு எம்.பி பதவியை பெற்றுள்ள கணேசமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.கவிற்கென தனிச்செல்வாக்கை உருவாக்கியுள்ளார். 30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளர்! தேர்தல்களில் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், ம.தி.மு.க கட்சியில் பொருளாளர் பதவியையும் வகித்து, பல ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராக விசுவாசியாக இருக்கிறார். ம.தி.மு.கவில் இருந்து பலர் வெளியேறி தி.மு.கவில் இணைந்தபோதும் கூட, 1993 முதல் இன்று வரையில் கணேசமூர்த்தி ம.தி.மு.கவில் வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வருகிறார். தற்போதைய தேர்தலிலும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியி்ல போட்டியிடுவார் என, கணேசமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.கவினர் இந்த முறை ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதியை மட்டுமே ஒதுக்கியதால், கணேசமூர்த்தி மனவிரக்தியில் இருந்ததாக, அந்தக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c723jlpgkxmo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ரோகித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக், தவறு செய்தது எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி 24 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் கடைசி ஓவர், கடைசிப் பந்துவரை இதுதான் முடிவு என்பதை எந்த ரசிகரும் கணிக்க முடியாது. ஒவ்வொரு பந்தும் ஒவ்வொருவிதமான ட்விஸ்ட்களோடு கொண்டு செல்லும். அதுபோலத்தான் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆட்டமும் அமைந்திருந்தது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 5ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது. கேப்டன்சி மாற்றத்துக்குப்பின் சுப்மான் கில் தலைமையில் முதல்முறையாக களமாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. அதேபோல கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின், புதிய கேப்டனோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் அணியிடமே தோல்வி அடைந்துள்ளார். குஜராத் அணி இக்கட்டான நேரத்தில் 45 ரன்கள் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தில் ஒரேஅணியில் இடம் பெற்ற இரு தமிழக வீரர்களும் அற்புதமாகச் செயல்பட்டனர். பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் சாய் சுதர்சனும் முத்தாய்ப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார் திருப்பங்கள் நிறைந்த 5 ஓவர்கள் கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பிரிவிஸ் விக்கெட்டை சாய்த்தார். 17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் டிம்டேவிட் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை வீசிய ஜான்சனின் முதல் பந்தில் திலக் வர்மா சிக்ஸர் விளாசினார். ஆனால், அடுத்த பந்தில் திலக் வர்மா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசிப் பந்தில் கோட்ஸியும் ஆட்டமிழக்க மும்பை அணி தோல்வியின் நெருக்கடியில் திக்குமுக்காடியது. கடைசி ஒரு ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸரை விளாசி ஹர்திக் பாண்டியா ஷாக் அளித்தார். ஆனால், 3வது பந்தில் ஹர்திக் அடித்த ஷாட் லாங்ஆனில் நின்றிருந்த திவேட்டியா கைகளில் தஞ்சமடைய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பியூஷ் சாவ்லாவும் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். முலானி, பும்ராவால் ரன் சேர்க்கமுடியாததால், மும்பை பரிதாபமாக தோற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES "தவறுக்காக காத்திருந்தோம்" குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் செயல்பட்டவிதம் அற்புதமாக இருந்தது. பனிப்பொழிவும் இருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் கிஷோர், ரஷித் கான் கட்டுக்கோப்பாக பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். மோகித் சர்மா அருமையாகப் பந்தவீசினார் மும்பை பேட்டர்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தோம் அதைப் பயன்படுத்தி நெருக்கடி அளித்தோம். 170 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றாலும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த 168 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடமுடியாத அளவுக்கு பெரிய ஸ்கோர் அல்ல. ஆனாலும், அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து, மும்பை அணிக்கு நெருக்கடி வெற்றியை பறித்தவிதம்தான் பாராட்டுக்குரியது. குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு முழுமையாக உரித்தானவர்கள் அவர்களின் பந்துவீச்சாளர்கள்தான். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் தங்களின் பணியை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் ஒரு விக்கெட் என அற்புதமாக பந்துவீசினார். அதிலும் அறிமுகபோட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கி, அதிலும் வலுவான பேட்டர் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது எளிதானது அல்ல. அதை தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாகச் செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை குறைக்க சாய் கிஷோர், ரஷித் கான் பந்துவீச்சு முக்கியக் காரணமாகும். ரஷித் கான் விக்கெட் இன்று பந்துவீசினாலும், அவரின் வழக்கமான டிரேட்மார்க், ரன்சிக்கனத்துடன் பந்துவீசி மும்பை பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். அதிலும் டெத் ஓவர்களில் ரஷித் கான் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனும் தனக்குரிய பணியை சிறப்பாகச்செய்து தன்னுடைய விலை தகும் என்பதை நிரூபித்தார். ஜான்சன் 2 ஓவர்களே வீசினாலும் அவர் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் ஒட்டுமொத்த ஓட்டத்தையே மாற்றினார். கிரிக்கெட்டில் “அன்சங் ஹீரோ” என்பார்கள். அதில் குறிப்பிடவேண்டியது மோகித் சர்மா. டெத் ஓவர்களை அற்புதமாகக் கையாண்ட மோகித் சர்மா தான் வீசிய கடைசி 2 ஓவர்களிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை நிலைகுலையச் செய்தார். அதிலும் தனது 3வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே மோகித் சர்மா கொடுத்தது தரமான பந்துவீச்சுக்கு உதாரணம். முகமது ஷமி இல்லாத நிலையில் அனுபவ பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் பணி செய்ய வேண்டியதிருந்தது. கடந்த காலசீசன்களில் டெத் ஓவர்களை உமேஷ் எவ்வாறு கையாண்டார் என்பதால், அவருக்கு டெத்ஓவர்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், கேப்டன் கில் துணிச்சலாக கடைசி ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார். ரசிகர்கள் நினைத்தது போலவே முதல்பந்தை சிக்ஸர், 2வது பந்தில் பவுண்டரி அடிக்கவிட்டார் உமேஷ். ஆனால், 3வது, 4வது பந்தில் அவரின் பந்துவீச்சில் காண்பித்த வேரியேஷன் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்சாயும் தனது பங்கற்கு சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார். ஒட்டுமொத்த்தில் குஜராத் அணிக்கு கிடைத்த வெற்றி என்பது பந்துவீச்சாளர்களால் கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபினிஷர் ரோலில் கையை சுட்டுக்கொண்ட ஹர்திக் மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியைப் போன்று ஃபினிஷர் ரோல் எடுக்க முயன்று தோல்விஅடைந்துள்ளார். “ எல்லோரும் தோனியாகிவிட முடியாது, ஃபினிஷர் ரோல் செட் ஆகாது” என்று ஹர்திக் பாண்டியாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். குஜராத் டை்டன்ஸ் கேப்டனாக ஹர்திக் இருந்தபோது 4வது வரிசையில் களமிறங்கி பலமுறை விளையாடியுள்ளார். அதுபோல் இந்த ஆட்டத்திலும் ஹர்திக் பேட் செய்திருந்தால், ஆங்கர் ரோல் எடுத்திருக்கலாம், ஆட்டத்தையும் கட்டுப்படுத்தி வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம். ஆனால், தான் கேப்டன் செய்த அணி வீரர்களை குறைத்து மதிப்பி்ட்டு கடைசி நேரத்தில் ஃபினிஷர் ரோல் செய்து ஹர்திக் கையைச் சுட்டுக்கொண்டார் என்பதுதான் நிதர்சனம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார் ரோஹித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக் மும்பை அணிக்கு புதிய கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா நேற்று அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார். முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள், ஹர்திக்கின் செயல்பாடுகளைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார். இந்த காட்சிகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்தனர். அதேபோல பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை தொடக்கத்திலேயே பயன்படு்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்துவிக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் தொடக்கத்தில் ஒரு ஓவர் மட்டுமே பும்ராவுக்கு வழங்கி, கடைசி நேரத்தில் 3 ஓவர்களை ஹர்திக் வழங்கினார். இதுவும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. மும்பை அணியைப் பொறுத்தவரை 3வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா(43) பிராவிஸ்(46) கூட்டணி 77 ரன்கள் சேர்த்ததுதான் நல்ல பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. அதன்பின் களமிறங்கிய பேட்டர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். 129 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த மும்பை அணி அடுத்த 33 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பதற்றத்தில் பறிகொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையும் முதல் போட்டி தோல்வியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் தோல்வியும் கடந்த 12 ஆண்டுகளாக பிரிக்க முடியாததாக இருந்து வருகிறது. கடந்த 12 சீசன்களாக அதாவது 2013ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் சந்தித்த அனைத்து முதல் ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து 2024 சீசன்வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை தமிழக வீர் சாய் சுதர்சன் அடித்த 45 ரன்களும், கேப்டன் கில் சேர்த்த 31 ரன்களும்தான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் எந்த பேட்டரும் பெரிதாக சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓமர்சாய்(17), மில்லர்(12) ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ராகுல் திவேட்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால், பதற்றப்படாமல் வெற்றியை ருசித்திருக்கலாம். தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன? மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “கடைசி 5 ஓவர்களில் 42 ரன்களை சேஸிங் செய்வது செய்யமுடிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கான தருணங்களை தவறவிட்டோம். அரங்கில் நிறைந்த ரசிகர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திலக் வர்மா ஒரு ரன் அடித்து டேவிட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் திலக் செய்தது சரி.இன்னும் 13 போட்டிகள் இருக்கின்றன பார்க்கலாம்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c29w1e5r81no
-
ஒரு பொய்
கவி ஐயா ஆகா அதுக்குள்ள இப்படி ஒரு உள்குத்து விடயமும் இருக்கோ! நான் மைக்கேலின் திறமை மற்றும் ஒருவனின் வேலைக்கு உலை வைக்காத ரசோதரனின் பெருந்தன்மை இரண்டையும் தான் சிந்தித்தேன். பேராசிரியர் சுப சோமசுந்தரம் ஐயாவின் ஆக்கங்களை அடிக்கடி படிப்பதால் அவர் வள்ளுவரது குறள்களையும் அதன் பொருளையும் வெவ்வேறு விடயங்களோடு தொடர்புபடுத்தி எழுதுவதன் தாக்கம் போல!
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RESULT 5th Match (N), Ahmedabad, March 24, 2024, Indian Premier League Gujarat Titans 168/6 Mumbai Indians (20 ov, T:169) 162/9 GT won by 6 runs
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை வாபஸ்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் - நீதி அமைச்சர் 24 MAR, 2024 | 09:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம் பாராளுமன்றத்திலும் அதனை வாபஸ்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 14 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தொடர்பான புதிய சட்ட திருத்தம் தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தண்டனைச்சட்டக்கோவை ஏற்பாடுகளுக்கு அமைவாக 16 வயதுகுட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்வது அல்லது உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்த ஒருவருக்கு பெற்றுக்கொடுக்கப்படும் குறைந்த கட்டாய தண்டனைகள் காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் 14 வயதுக்கு மேற்பட்ட 16வயதுக்கு குறைந்த சிறுமிகள் அவர்கள் தொடர்புகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுடன் இவ்வாறான நிலைமைக்கு முகம்கொடுத்து வருவதான அறிக்கைகள் காரணமாக கடந்த 3, 4 வருடங்களாக ஆராய்ந்து நீதி அமைச்சுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. தண்டனைச் சட்டக் கோவையில் தண்டனை வழங்கும் முறைமையில் ஏதோவொரு வகையில் திருத்தம் மேற்கொண்டு நிலைமையை கருத்திற்கொண்டு பொருத்தமான தண்டனை ஒன்றை வழங்கும் வகையில் நீதிபதிகளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தெரிவித்தோம். எனினும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை இரத்துச் செய்யுமாறு சிவில் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் என்னிடம் கேட்டுக்கொண்டன. அதன் பிரகாரம் இந்த சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் இந்த சட்டமூலத்தை தொடர்ந்து கொண்டு செல்லப்போவதில்லையென நான் சட்டமா அதிபருக்கு ஆலாேசனை வழங்கினேள் அதேநேரம் இது தொடர்பாக அடுத்தவாரம் கலந்துரையாட வருமாறு குறித்த தரப்பினர்களுக்கு அறிவுவுறுத்தியுள்ளோம். கலந்துரையாடலுக்கு பின்னர், திருத்தம் அவசியமா? எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். எனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படமாட்டாது என உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம். பாராளுமன்றத்திலும் அதனை வாபஸ்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். இந்த சட்டமூலம் என்னால் ஆராயப்பட்டதன் பிரகாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. நீதிபதிகள் உள்ளிட்ட விசேட நிபுணர்கள் குழுவொன்றினாலே சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவோம். எதிர்காலத்தில் மேலும் 60 சட்டமூலங்களை கொண்டுவர இருக்கிறோம். அனைத்து சட்டமூலங்களும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்து, அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கொண்டுவரப்படும் என்றார். https://www.virakesari.lk/article/179604
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதிமுக vs பாஜக: தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் இரண்டாண்டு இடைவெளியில் தேர்தல் கூட்டணி கணக்குகள் முற்றிலுமாக மாறிப் போய்விட்டிருக்கின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஒரே அணியாக இருந்த அதிமுகவும், பாஜகவும் தற்போது தனித்தனியாக களம் காண்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்டு 5.38% வாக்குகள் பெற்ற டிடிவி தினகரனும், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் இந்த முறை பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளனர். இவர்கள் மொத்தமாக மூன்றே தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் பெற்ற வாக்குகளில் கணிசமானவை முக்குலத்தோர் சமுதாய வாக்குகள். இந்த முறை அந்த வாக்குகள் தினகரன், ஓ.பி.எஸ். மூலமாக பாஜக கூட்டணிக்குச் கிடைக்குமா அல்லது முக்குலத்தோர் கட்சி என்று அரசியல் அரங்கில் பேசப்படும் அளவுக்கு அதிமுக வாக்கு வங்கியாக இருந்த அவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிப்பார்களா? தமிழ்நாட்டின் தேர்தல் களம் தமிழ்நாட்டின் தேர்தல் களம் இந்த முறை நான்கு முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், கொ.நா.ம.தே.க கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தாமாக, புதிய நீதி கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளும் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடுகிறது. வட தமிழ்நாட்டில் வன்னியர் சமூக வாக்கு வங்கியை கணிசமாக கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், தென்மாவட்டங்களில் பரவலாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு பெற்றவர்களாக கருதப்படும் தினகரன், ஓபி.எஸ். ஆகியோரும் வலு சேர்ப்பார்கள் என்று பாஜக கருதுகிறது. முக்குலத்தோர் சமூக மக்கள் மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம். இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பட மூலாதாரம்,TTV DHINAKARAN FACEBOOK PAGE அமமுகவிற்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைத்ததன் பின்னணி என்ன? கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் அவர் ராஜினாமா செய்ய, ஜெயலலிதாவின் தோழியான வி.கே சசிகலா முதலமைச்சராக வேண்டி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அடுத்த ஓரிரு நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வர அவர் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால், எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றார். அதிமுகவில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியில் சேர்ந்து டிடிவி தினகரனை அதிமுகவை விட்டு வெளியேற்ற, 2018-ம் ஆண்டு அவர் அமமுக என்ற தனிக்கட்சி கண்டார். காலச் சக்கரத்தின் சுழற்சியில் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமாகிட, டிடிவி தினகரனோ அதிமுகவை மீட்போம் என்ற முழக்கத்துடன் அமமுகவை நடத்துகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தினகரனை வெளியேற்றிய ஓ.பன்னீர்செல்வமும் அதே வழியில் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அமமுகவால் அதிமுகவிற்கு சரிந்த தென் மாவட்ட வாக்கு வங்கி கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி 38 தொகுதிகளில் களமிறங்கியது. அதுவரையிலும் அதிமுகவை ஆதரித்து வந்த முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்க, அக்கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது. அந்தத் தேர்தலில் அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. 20 தொகுதிகளில் அக்கட்சி மூன்றாமிடம் பெற்றது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 5.38% வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. திருச்சி, தஞ்சை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகரில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது அதிமுகவின் வெற்றியை தடுத்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES அமமுக வாக்கு சரிவு, ஓ.பி.எஸ் நீக்கம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனின் செயல்பாட்டில் அமமுகவினர் அதிருப்தியடைந்தனர். அவரை நம்பி அதிமுக எம்.எல்.ஏ பதவியை விட்டு வந்தவர்கள் மீண்டும் திமுக, அதிமுகவை நோக்கி நகரத் தொடங்கினர். அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டார். இதனால் கடந்த 2021இல் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் வாக்கு வங்கி 5.5 சதவிகிதத்திலிருந்து 2.5 ஆக குறைந்தது. அமமுகவின் கணிசமான வாக்குகள் திமுகவிடம் சென்றன. சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவில் கடுமையாக எதிரொலித்தது. அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்றும் உரிமை கோரும் ஓ.பி.எஸ்.சால் அக்கட்சியின் கொடி மற்றும் சின்னத்தைக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவு அவரை கட்டிப் போட்டிருக்கிறது. பட மூலாதாரம்,ANNAMALAI/FACEBOOK தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்ததா பாஜக? பாஜக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகள், பாமகவிற்கு 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, அமமுகவிற்கு 2, ஓ.பி.எஸுக்கு 1 (சுயேச்சை சின்னம்), புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 4 கட்சிகளும் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. பட மூலாதாரம்,ARUN KARTHICK அதிமுக vs பாஜக திருச்சி, தஞ்சை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த முறை அமமுக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற 8 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது. இதில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவுடனும், திருச்சி, தேனி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தினகரன், ஓ.பி.எஸூக்கு எதிராகவும் அதிமுகமோதுகிறது இத இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்குமா அல்லது அதிமுகவை நோக்கி அந்த வாக்குகள் மீண்டும் திரும்புமா? பட மூலாதாரம்,PRIYAN படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் பிரியன் முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு? பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகள் செல்லாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. அதில் 75% அதிமுகவிற்கே கிடைத்து வந்தJ. இதற்கு முக்கிய காரணம் அந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, டிடிவி, ஓ.பி.எஸூக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட அதேநேரத்தில், பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன. இதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் பெருவாரியாக அமமுக பக்கம் சாய்ந்தன. அந்த தேர்தலில் தினகரன் ஐந்தரை சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தார். அதேநேரத்தில், ஏழு உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கலாம் என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்தது. தங்களது சமூகத்தை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு உணர்வும் அந்த சமூக மக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அந்த சமூக வாக்குகள் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன” என்றார். டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் முக்குலத்தோர் தொடர்ந்து பேசிய அவர் “முக்குலத்தோருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தினகரனுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகி இருக்கிறது. எனவே, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கான பிரதிநிதியாக தினகரனை பார்க்க மட்டார்கள். அதே சமயம் இந்த வாக்குகள் அதிமுகவிற்கும் செல்லாது. அதிமுக முன்பு முக்குலத்தோரின் ஆதரவு நிலையில் உள்ள கட்சியாக பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி வருகைக்குப் பிறகு அது கொங்கு வேளாளர் அதிக்கம் நிறைந்ததாக கட்சியாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை வாக்குகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கும் அதிமுகவிற்கும் செல்லாது. மாறாக அது திமுகவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன”, என்றார். சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது மக்களவைத் தேர்தலில் சாதி ரீதியாக வாக்குகள் செல்லாது என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர மணி. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தற்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல். எனவே, சாதி பார்த்து வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக தினகரன், ஓபிஎஸ் என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கட்சி ஆகியவற்றை பார்ப்பார்கள். சிலர் சாதி சார்ந்து வாக்களிக்க முயன்றாலும் அதற்கேற்ப அந்த கட்சியினர் அந்த குறிப்பிட்ட தொகுதியில் அந்த சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்தலாம். கட்சி பிடிக்கவில்லை என்றாலும் கூட சாதியைச் சார்ந்த நபர் நிற்பதால் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் பாஜக கூட்டணி நோக்கி நகரும் என கூற முடியாது. தினகரன் 2019இல் இருந்த அவரது நிலை தற்பொழுது இல்லை. அவர் பாஜகவுடன் இணைந்திருப்பதால் அவருக்கு எந்த அளவிலான வாக்குகள் செல்வது என்பதே கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே, இந்த தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் குறிப்பிட்ட கட்சிக்கு செல்லும் என கூற முடியாது. வாக்காளர்கள் பரவலாக பல்வேறு காரணிகள் அடிப்படையில் தங்களது வாக்கை செலுத்த உள்ளனர்”, என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES முக்குலத்தோர் வாக்கு வங்கியை நிரூபிக்கவே ஓபிஎஸும், தினகரனும் களமிறங்கி இருப்பதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. இருகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதிலிருந்து, முக்குலத்தோர் சமுதாயத்துக்கு எதிரான மனநிலையில் கட்சி இருப்பதாகவே அவர்கள் பார்க்கின்றனர். இதனால் டிடிவி தினகரன் ஓபிஎஸ்-க்கு அவர்களின் வாக்குகள் அதிகம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. பல தொகுதிகளில் நின்றால் வாக்குகள் சிதறக்கூடும் என்பதற்காகவே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக தினகரன் முடிவெடுத்து இருந்தார் அதனால் தான், நான் ஒன்று கேட்டேன் பாஜக இரண்டு தொகுதி கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரனும் முக்குலத்தோர் சமூகம் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறங்கி அதிமுகவிற்கு கடும் போட்டியை கொடுப்பார்கள். சில இடங்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட இழக்க வாய்ப்புகள் உள்ளன. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாது. மாறாக திமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளுக்கு அது பிரியும்", என்றார். https://www.bbc.com/tamil/articles/c3ge1g383lro
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் சிறை செல்வார் - உதய கம்மன்பில 24 MAR, 2024 | 09:04 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். மஹரக பகுதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதார பாதிப்புக்கு வித்திட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகார போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பதை தான் அறிவேன், நீதிமன்றம் அழைப்பு விடுத்தால் உண்மையை பகிரங்கப்படுத்த தயார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது பொலிஸூக்கு செல்ல வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதம், அரசுக்கு எதிராக செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது 10 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடை சிறைக்கு செல்வார். 69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் கோட்டபய ராஜபக்ஷவை போன்று எவரும் மக்களாணையை காட்டிக் கொடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான மக்களாணையை ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடினோர். கோட்டபய ராஜபக்ஷவின் செயற்பாடு வெறுக்கத்தக்கது. சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் 69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. 69 இலட்ச மக்களாணையை நாங்களே தோற்றுவித்தோம், ஆகவே நாங்களே 69 இலட்ச மக்களாணைக்கு தலைமைத்துவம் வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/179599
-
ஒரு பொய்
http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4253&id1=50&id2=18&issue=20171116 குறள் 291: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். குறள் 292: பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html https://www.thirukkural.net/ta/kural/adhigaram-030.html
-
‘குடி’ உயர…!
24 MAR, 2024 | 05:07 PM நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டது. இறுதியில் சில நாடுகளின் உல்லாசப்பயணிகள் இங்கு வருகை தந்து பாலியல் வர்த்தகத்தின் மூலம் தாம் அதிக வருமானத்தைப் பெற்றுச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமானது. எந்த வகையிலாவது வருமானத்தை அதிகரித்து கடன் சுமையை குறைக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் மேலும் மேலும் மக்களை நசுக்குவதாகவே இருந்தன. இந்நிலையில், தேர்தல்களை இலக்கு வைத்து மேலதிகமாக மதுபான உரித்துகளை அரசாங்கம் விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். இருநூறு மதுபான உரித்துகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் இதில் 15 உரித்துகள் ஏலவே விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கலால் சட்டங்களுக்கு புறம்பாக அரசாங்கம் இயங்கவில்லையென்ற பதிலே அரசாங்கத்தரப்பிலிருந்து கிடைத்துள்ளதே ஒழிய, அரசாங்கத்தரப்பில் எவரும் இதை மறுக்கவில்லையென்பது முக்கிய விடயம். தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்படுகின்றதோ இல்லையோ…ஆனால் பொருளாதார நெருக்கடிகளில் உழலும் மக்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் வழிகளை விடுத்து, அவர்கள் சட்டரீதியாக போதை உலகத்தில் தள்ளும் முயற்சியாகவே இது தெரிகின்றது. அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், அதற்கு துணை போகும் அதிகாரிகள், சம்பவங்களை கடந்து செல்லும் காவல்துறை, பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் என சகல தரப்பினரிடமும் எந்த கேள்விகளையும் எழுப்ப முடியாமல், மக்களை தொடர்ச்சியாக போதையில் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகின்றதோ தெரியவில்லை. இது இவ்வாறிருக்க வருடாந்தம் மதுபான உரித்துகளை விநியோகிப்பதன் மூலம் கிடைக்கும் வரிவருமானம் இவ்வருடம் வீழ்ச்சியடையும் என கலால் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் எம். ஜே. குணசிறி கவலை தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களைப் பார்க்கும் போது, கலால் திணைக்களத்துக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரி வருமான இலக்கான 232 பில்லியன் ரூபாவை அடைவது சந்தேகமாகவுள்ளதாக அவர் கூறுகின்றார். அதாவது வரி அதிகரிப்பின் காரணமாக மதுபானங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டுக மதுபான நுகர்வு நாட்டில் குறைந்துள்ளது என வேதனை தெரிவிக்கின்றார் அவர். மத்தியதர வர்க்கத்தினராக போராடி வந்த நாட்டின் பல இலட்சம் மக்கள் தற்போது வலிந்து வறுமை கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று வேளை உணவை நிறைவாக அவர்கள் பெறும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை. இப்படியிருக்கும் போது மதுபானத்தை நுகர்வோர் நாட்டில் குறைந்துள்ளனர் என்கிறார் கலால் திணைக்கள ஆணையாளர். 2022 ஆம் ஆண்டை விட கடந்த 2023ஆம் ஆண்டு நாட்டின் மதுபாவனையானது 65 இலட்சம் லீற்றர்கள் குறைந்துள்ளதாக அவர் கூறுகின்றார். 2022இல் 26.5 மில்லியன் லீற்றர் மதுபானம் உற்பத்தியானது 2023இல் 20 மில்லியன் லீற்றராக அது குறைக்கப்பட்டுள்ளது என்கிறது கலால் திணைக்களம். மதுபான நுகர்வு மற்றும் அது தொடர்பான புள்ளிவிபரங்களை கவலையோடு வெளியிடும் அரசாங்கம் நாட்டில் எத்தனைப் பேர் பட்டினியால் வாடுகின்றார்கள் என்பது குறித்து தேடிப்பார்ப்பதில்லை. உள்ளூர் காய்கறிகளின் விலைகள் ஆயிரங்களையும் தாண்டிச் சென்றது ஏன் என்பது பற்றி கவலைப்படவில்லை. நாட்டு மக்களின் மூன்று நேர உணவாக பயன்படும் அரிசி கிலோ ஒன்று தொடர்ந்தும் சராசரியாக முன்னூறு ரூபாவாக இருப்பதை கண்டு கொள்வதில்லை. ‘ஒரு நாட்டு குடிமக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் அந்நாட்டு அரசனின் நிலை உயரும்’ என்ற அர்த்தத்தில் ‘குடி உயர கோல் உயரும்' என பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒவ்வையார் பாடினார். இக்காலகட்டத்தில் கோலும் கோனும் உயர்வதற்கு மக்களின் ‘குடி’ உயர வேண்டும் அரசாங்கம் நினைக்கின்றது. இப்படித்தான் எமது நாட்டின் நிலைமை உள்ளது. https://www.virakesari.lk/article/179598
-
டொலர் பெறுமதி குறைவடைய என்ன காரணம்?
22 MAR, 2024 | 07:25 PM ரொபட் அன்டனி டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக குறைவடைந்து ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது டொலரின் பெறுமதி பாரிய அளவில் எகிறியது. 2022ஆம் ஆண்டு 200 ரூபா என்றவகையில் காணப்பட்ட டொலரின் பெறுமதி செயற்கைத்தனமாக கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அதனை தளர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு தளர்த்தப்பட்டதன் பின்னர் டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 400 ரூபா வரை சென்றது. எனினும் இலங்கை மேற்கொண்டு வருகின்ற பல்வேறு மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிவசதி உடன்படிக்கை, கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகள் போன்றவற்றின் காரணமாக இன்று டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் மீண்டும் அதிகரித்து செல்வதை காண முடிகிறது. சாதக நிலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் 400 ரூபாவாக காணப்பட்ட டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று 300 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருக்கின்ற சூழலில் இவ்வாறு டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து வருகின்றமையும் ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றமையும் மிக முக்கியமான ஒரு நிலைமையாக காணப்படுகிறது. டொலரின் பெறுமதி குறைவடைய என்ன காரணம்? அதாவது கடந்த மூன்று வருடங்களாக முற்றாக செயல் இழந்திருந்த சுற்றுலாத்துறை ஊடான வருமானம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 2022இல் ஒரு பில்லியன் டொலர்கள், 2023 இல் 2 பில்லியன் டொலர்கள் என வருமானம் அதிகரித்துள்ளது. 2024 இலும் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்து செல்கின்றது. வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்பும் டொலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் தற்காலிகமாக கடன் மீள் செலுத்தலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச வங்கிகளின் கடன்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் டொலர் உள்வருகை அதிகரிக்கிறது. எனவே டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அதாவது டொலரின் பெறுமதி டொலர் இலங்கைக்கும் கிடைக்கும் அளவிலும் அதற்கான கேள்வியிலும் தங்கியுள்ளது. தற்போது டொலர் அதிகளவு கிடைக்க ஆரம்பித்துள்ளதால் டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அதன் காரணமாகவே 400 ரூபா அளவுக்கு உயர்வடைந்த டொலரின் பெறுமதி தற்போது 300 ரூபா அளவுக்கு குறைவடைந்துள்ளது. நெருக்கடிக்கு பிரதான காரணம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் செயற்பாட்டில் இது ஒரு சாதகமான நிலைப்பாட்டை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்கணக்கில், கிலோமீட்டர் கணக்கில் வரிசைகளில் நிற்பதற்கும் என்ன காரணம் என்பது சகலருக்கும் தெரியும். அதாவது பொருளாதார நெருக்கடி 2022 ஆம் ஆண்டில் ஏற்படுவதற்கான பின்னணி காரணங்கள், உடனடி காரணங்கள், நீண்ட கால காரணங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதாவது 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக டொலர் பற்றாக்குறையே அமைந்தது. அதாவது இலங்கைக்குள் வருகின்ற டொலர்கள் குறைந்தது. அதன் காரணமாகவே அந்த நெருக்கடி ஏற்பட்டது என்பது சகலருக்கும் தெரியும். டொலர் உள்வருகை, வெளி செல்தல்? இலங்கையை பொறுத்தவரை இறக்குமதி செய்வதற்கு வருடந்தோறும் கிட்டத்தட்ட 20 முதல் 24 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இலங்கை செய்கின்ற ஏற்றுமதிகள் ஊடாக கிட்டத்தட்ட 10 முதல் 12 பில்லியன் டொலர்களே கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு மறைபெறுமதியாக 10 பில்லியன் டொலர்கள் காணப்படுகின்றன. அதாவது டொலர் இடைவெளி 10 முதல் 12 பில்லியன் டொலர்களாக உள்ளன. அதேநேரம் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் இலங்கைக்கு கிட்டத்தட்ட 6 தொடக்கம் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். சுற்றுலாத்துறை ஊடாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. அதேபோன்று வெளிநாட்டு உதவிகள் கடன்கள் மூலமும் டொலர்கள் உள்வருகின்றன. அதேநேரம் இலங்கை வருடந்தோறும் 5 முதல் 6 பில்லியன் டொலர்கள் வரை வெளிநாட்டு கடன்களை செலுத்தவேண்டும். (தற்போது வெளிநாட்டு கடன் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது) 2020 பின்னர் என்ன நடந்தது? எப்படியிருப்பினும் 2020 ஆம் ஆண்டு முதல் டொலர் வருகையின் பாதகமான நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை வருமானம் முற்றாக செயலிழந்து போனது. வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணியின் அளவு குறைவடைந்தது. 50 வீதமாக அந்நிய செலாவணி வருகை குறைவடைந்தது. இதன் காரணமாக இலங்கையின் டொலர் உள்வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் 2020 ஆம் ஆண்டு இலங்கையின் அரச வருமானம் குறைவடைந்தமையினால் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதாரக் குறிகாட்டிகளை பாதகமாக வெளிக்காட்டியமையினால் இலங்கையினால் சர்வதேச கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. நெருக்கடி நிலை இந்த பின்னணியிலேயே இலங்கையில் டொலர் பற்றாக்குறை 2022 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதனால் டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 400 ரூபாய் சென்றது. இதன் காரணமாக இலங்கையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்தன. இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரித்தன. மக்கள் பொருளாதார துன்பங்களை எதிர்கொண்டனர். வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தது. எரிபொருட்கள் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு டொலர்களில் இருக்கவில்லை. வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியவில்லை. எப்போதும் வெளிநாட்டு கையிருப்பில் கிட்டத்தட்ட ஆறு பில்லியன் டொலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 2022 இல் 17 மில்லியன் டொலர்களே கையிருப்பில் இருந்தன. இதன் காரணமாகவே எரிபொருள் மற்றும் எரிவாயுவை கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு லிட்டர் எரிபொருளை பெறுவதற்கு எரிவாயுவை பெறுவதற்கும் மக்கள் நாட்கணக்கில் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பற்றாக்குறை இவை அனைத்துக்கும் இந்த டொலர் பற்றாக்குறையே காரணமாக இருந்தது. அதாவது இந்த நெருக்கடி ஏற்படுவதற்கும் டொலர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் டொலரின் பெறுமதி உயர்வடைந்து ரூபாவின் பெறுமதி சரிந்தமைக்கு டொலர் பற்றாக்குறை மிக முக்கிய காரணமாக அமைந்தது. 2020 ஆம் ஆண்டியே நாணய நிதியத்தை நாடியிருந்தால் ஓரளவு 2022ஆம் ஆண்டு நெருக்கடியை தவிர்த்திருக்கலாம். நாணய நிதியத்துடனான உடன்படிக்கை 2022 ஏப்ரல் மாதமளவில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. தொடர்ந்து இலங்கை நாணய நிதியத்துடன் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்திற்குள் சென்றது. அதன் பின்னர் இலங்கைக்கு 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர் கனை தவணையாக வழங்க நாணய நிதியம் முன்வந்தது. அதுமட்டுமின்றி நாடு வங்குரோத்து நிலையிலிருந்தும் வெளியே வந்து கொண்டிருக்கின்றது. இவற்றின் காரணமாக தற்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன இலங்கைக்கு கடன்களை வழங்க முன்வந்திருக்கின்றன. மறுசீரமைப்புக்கள் இலங்கை சர்வதேச நாண நிதியத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அரசாங்க வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முடிந்துள்ளதுடன் சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இவற்றின் விளைவாக டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது. நாண நிதியம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இலங்கையின் பொருளாதார மீளாய்வை செய்யும். அதன்படி நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பீற்றர் ப்ரூவர் தலைமையிலான குழுவினர் இரண்டாவது மீளாய்வை முன்னெடுத்துவருகின்றனர். தற்போது என்ன நடக்கிறது? மறுசீரமைப்புக்கள், நாணய நிதிய உடன்படிக்கை என்பனவற்றின் விளைவாக சுற்றுலாத்துறை தற்போது மீள் எழுந்து வருகிறது. சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் அதிகரித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களும் இலங்கைக்கு அந்நிய செல்லாவணியை அனுப்புவதை அதிகரித்திருக்கின்றனர். மீண்டும் கிட்டதட்ட 6 பில்லியன் டொலர் அளவில் அந்நிய செலாவணி வந்து கொண்டிருக்கின்றது. வாகனங்களுக்கு இறக்குமதி தடை தொடர்வதால் இறக்குமதிக்காக வெளிச்செல்லும் டொலர்களின் அளவும் குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக தற்போது டொலர் பெறுமதி வீழ்ச்சி அடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்துவருகின்றது. எனவே உள்நாட்டில் உற்பத்தி செலவுகள் குறைவடையும். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். அதாவது பொருளாதார மீட்சி செயற்பாடுகளில் இது முக்கியமானதாக காணப்படுகின்றது. தற்போது மீண்டும் டொலர்கள் உள்வர ஆரம்பித்துள்ளதால் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்கிறது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாக இருக்கின்றன. https://www.virakesari.lk/article/179464
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
தனஞ்சய, கமிந்து 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து சாதனை; வெற்றியின் விளிம்பில் இலங்கை Published By: VISHNU 24 MAR, 2024 | 09:53 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் சதங்கள் குவித்து சாதனை படைக்க, இலங்கை வெற்றியை அண்மித்துள்ளது. அதேவேளை, பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித்த ஆகியோர் தங்களாலான அதிசிறந்த பங்களிப்பை வழங்கி பங்காதேஷை திணறச் செய்துள்ளனர். தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததன் பலனாக பங்களாதேஷின் வெற்றி இலக்கு மிகவும் கடினமான 511 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி மூன்றாம் நாள் கடைசி ஆட்டநேர பகுதியில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது. விஷ்வா பெர்னாண்டோ 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை இலகுவாக வெற்றிபெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் போட்டியின் நான்காம் நாளான திங்கட்கிழமை (25) பகல் வேளையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பங்களாதேஷின் எஞ்சிய 5 விக்கெட்களை இலங்கை வீழ்த்தி வெற்றி ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களிலிருந்து இலங்கை தொடர்ந்தது. மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது இராகாப்பாளன் விஷ்வா பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த முதலாவது இன்னிங்ஸ் ஹீரோக்களான தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் 173 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். முதலாவது இன்னிங்ஸில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிரந்தமை குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் தலா 102 ஓட்டங்களைப் பெற்ற தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது இன்னிங்ஸில் முறையே 108 ஓட்டங்களையும் 164 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கையின் 42 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அணித் தலைவர் ஒருவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததும் இரண்டு வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததும் இதுவே முதல் தடவையாகும். அவுஸ்திரேலியாவின் செப்பல் சகோதரர்களான இயன், க்றெக் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிரான 1974இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து 50 வருடங்களின் பின்னர் இந்த அரிய சாதணையை தனஞ்சயவும் கமிந்துவும் நிலைநாட்டியுள்ளனர். பங்களாதேஷுக்கு எதிராக சட்டக்ரோம் விளையாட்டரங்கில் குமார் சங்கக்கார இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (319, 105) குவித்து பத்து வருடங்களின் பின்னர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இலங்கை வீரர் அல்லது வீரர்கள் சதங்கள் குவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். டுலீப் மெண்டிஸ், அசன்க குருசிங்க, அரவிந்த டி சில்வா (2 தடவைகள்), திலக்கரட்ன டில்ஷான், குமார் சங்கக்கார (2 தடவைகள்) ஆகியோரே இதற்கு முன்னர் ஒரே டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த இலங்கை வீரர்களாவர். இரண்டாவது இன்னிங்ஸில் 179 பந்துகளை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மிகக் கவனக் குறைவான அடி மூலம் ஆட்டம் இழந்தார். அவர் 94 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அவரது கையுறையை உராய்ந்து சென்ற பந்தை விக்கெட் காப்பாளர் லிட்டன் தாஸ் பிடித்தார். ஆனால், அதற்கான கேள்வியை பங்களாதேஷ் வீரர்கள் எழுப்பாததால் தனஞ்சயவுக்கு சதம் குவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 8ஆவது விக்கெட்டில் ப்ரபாத் ஜயசூரியவுடன் 67 ஓட்டங்களையும் கடைசி விக்கெட்டில் கசுன் ராஜித்தவுடன் 52 ஓட்டங்களையும் பகிர்ந்தார். எட்டாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 237 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 164 ஓட்டங்களைக் குவித்தார். இலங்கை சார்பாக 8ஆம் இலக்க வீரர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குவித்த அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். அவருக்கு பக்கபலமாக 8ஆவது விக்கெட்டில் ஜோடியாக துடுப்பெடுத்தாடிய ப்ரபாத் ஜயசூரிய 25 ஓட்டங்களைப் பெற்றார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக பதிவாகியது. கடைசி விக்கெட்டில் பகிரப்பட்ட 52 ஓட்டங்களில் கசுன் ராஜித்தவின் பங்களிப்பு ஆட்டமிழக்காத 4 ஓட்டங்களாக இருந்தது. பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்களையும் தய்ஜுல் இஸ்லாம், நஹித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280 (தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102, காலித் அஹ்மத் 72 - 3 விக்., நஹித் ரானா 87 - 3 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (தய்ஜுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25, காலித் அஹ்மத் 22, விஷ்வா பெர்னாண்டோ 48 - 4 விக்., லஹிரு குமார 31 - 3 விக்., கசுன் ராஜித்த 56 - 3 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 418 (கமிந்து மெண்டிஸ் 164, தனஞ்சய டி சில்வா 108, திமுத் கருணாரட்ன 52, ப்ரபாத் ஜயசூரிய 25, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெஹிதி ஹசன் மிராஸ் 74 - 4 விக்., தய்ஜுல் இஸ்லாம் 75 - 2 விக்., நஹித் ரானா 128 - 2 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 47 - 5 விக். (ஸக்கிர் ஹசன் 19, விஷ்வா பெர்னாண்டோ 13 - 3 விக், லஹிரு குமார 6 - 1 விக்., கசுன் ராஜித்த 19 - 1 விக்.) https://www.virakesari.lk/article/179606
-
வரலாறு: சோழர் ஆட்சியில் திருமணம் செய்துகொள்ள 'திருமண வரி' செலுத்திய குடிமக்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் என்பது மிக முக்கியமான கலாசார விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அந்தக் காலத்தில் தமிழர்கள் தங்கள் இணையை காதல் மூலமும், விருப்பத்தின் அடிப்படையிலும் தேர்ந்தெடுத்து இணைந்து வாழ்ந்தனர். தொடர்ந்து ஊரார்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மிக எளிய அளவில் நடைபெற்று வந்த இந்தத் திருமணம் நாகரீக வளர்ச்சியின் காரணமாகப் பெரிய விழாவாகவே உருமாற்றம் அடைந்து நடைபெற்று வருகின்றது. சங்க காலம் முதல் சேர, சோழ, பாண்டியர் காலங்களிலும் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது காதல் மூலமாக மறைமுகமாக வாழ்ந்து பின்னர், இணைந்து பின் ஊரறிய திருமணம் செய்து வாழ்ந்தனர். திருமணத்திற்காக வரிகளையும் அப்போதைய அரசு அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இருவர் திருமணம் செய்துகொள்ளும் சூழலில் அப்போதைய அரசு அவர்களிடம் திருமண வரியைப் பெற்றுக்கொண்டது. இது திருமண வரி என அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் என்ன? அது ஏன் விதிக்கப்பட்டது? சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள் படக்குறிப்பு, பாகூர் சிவன் கோயில். கண்ணாலக் காணம் (திருமண வரி), குமரகச் சரணம் (முருகன் கோவில் வரி) மீன்பாடம் (மீன்பிடிக்க) கீழிறைப்பாட்டம் (சிறுவரிகள்) முத்தாவணம் (விற்பனை வரி) வேலிக்காசு (ஒரு வேலி நிலத்திற்கான வரி) ஊராட்சி (ஊர்வரி) வட்டநாழி (கழனிவரி நாழிக்கணக்கில்) வண்ணாரப்பாறை (சலவையாளர் பயன்படுத்திய பாறைக்காக வரி) சக்காணம் (குயவர் வரி) நீர்க்கூலி (தண்ணீர் வரி) தனிக்கூறை (துணிநெய்வோர் வரி) தட்டார் பாட்டம் (பொற்கொல்லர் வரி) ஆட்டுநிறை வரி (ஆட்டுவரி) நல்லாநல்லெருது (மாட்டுவரி) ஊடுபோக்கு (தானியம் பயிரிட வரி) வாலாக்காணம் (வீட்டுவரி) உல்கு (சுங்கம்) இப்படிப் பல்வகை வரிகள் சோழர் ஆட்சியில் விதிக்கப்பட்டிருந்தன. இதில் கண்ணால காணம் என்று அழைக்கப்பட்ட திருமண வரி (கல்வெட்டில் கட்டில் ஏறுதலுக்காண வரி எனக் குறிப்பிட்ப்பட்டுள்ளது) பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் அக்காலத்தில் விதிக்கப்பட்ட திருமண வரி குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார். "அனைத்து மதங்களும் ஆண், பெண் இடையிலான உறவைத்தான் திருமணம் என்கிறது. அக்காலத்தில் திருமணத்தில் பல்வேறு சடங்குமுறைகள் பின்பற்றப்பட்டன. ஜல்லிக்கட்டு, வட்டக்கல் தூக்குதல் போன்ற வீர விளையாட்டுகளில் சாதித்த இளைஞர்களை திருமணம் செய்யும் முறையும் இருந்தது. மன்னர் ஆட்சியில் தற்பொழுது பெறப்படும் வரதட்சணை போன்ற சம்பிரதாயங்கள் அரிதாகவே இருந்தன. ஆனால் திருமண வரி (கண்ணால காணம்) என்று அழைக்கப்படக்கூடிய கட்டில் ஏறுதல் வரி அரசர்களால் பெறப்பட்டது. அது குறித்த சில கல்வெட்டு ஆதாரங்களும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளன," என்று விவரித்தார். திருமண வரியாக வழங்கப்பட்ட ஆடு படக்குறிப்பு, விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் புதுச்சேரியில் இருக்கும் பாகூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இருக்கும் கல்வெட்டு இந்தத் திருமண வரி குறித்துக் கூறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். "ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கி.பி. 961ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் பாகூரில் வசித்த மன்றாடிகள் சமூகத்தினர் மூலட்டானத்துப் பெருமான் என்னும் அந்த சிவன் கோவிலுக்கு திருமணத்திற்காக ஒரு தர்மம் செய்வதாக உறுதியளித்துள்ளனர். 'நாங்கள் வைத்த தன்மம் கட்டிலேறப் போம்போது, ஒரு ஆடு குடுத்துக் கட்டி லேறு வோமாகவும்' என்றும், தொடர்ந்து அடுத்த வாக்கியத்தில், 'புறநாட்டினின்று வந்து இந்நாட்டில் கட்டிலேறும் மன்றாடி வசம் ஒரு ஆடு குடுப்பதாகவும்', எனவும் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடாது இருந்தால் இவ்வூரைச் சேர்ந்தவர்களும், தேவராடியாரும் இரண்டு ஆடுகள் பிடித்துக் கொள்ளலாம் என்றும் இச்செயலை இந்நாட்டில் மதகு செய்கின்ற மதகர், சந்திர, சூரியர் உள்ளவரைப் பாதுகாப்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்டதும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது," என்கிறார். இதில் கட்டில் ஏறுதல் என்ற சொல் சடங்கு சார்ந்த நிகழ்வாகவே கூறப்பட்டுள்ளதாகவும், தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி 'மணவினை' என்ற பொருளில் இதை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார். முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு இதேபோல கரூர் ஜலசயனப் பெருமாள் கோவிலில் காணப்படும் முதலாம் குலோத்துங்க சோழனின் 43ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் கட்டிலேறுதல் வரி பற்றித் தெரிவிக்கின்றது. இப்பகுதியில் உள்ள திருவாய்ப்பாடி மன்றாடிகள் தங்கள் மக்கள் திருமணத்தின்போது ஒரு ஆடு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்று பேராசிரியர் ரமேஷ் விவரித்தார். அந்தக் கல்வெட்டில், 'எங்கள் திருமணத்து ஒரு ஆண் கட்டிலேறுமிடத்தும், ஒரு பெண் வாட்கைப்படுமிடத்தும் ஆடு கொடுப்பதாக' இம்மன்றாடிகள் இசைந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார் பேராசிரியர் ரமேஷ். கட்டிலேறத்தடையும், பெண் தற்கொலையும் கட்டிலேறுதல் தொடர்பான கல்வெட்டுகளில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள கல்வெட்டு சற்று வித்தியாசமானது என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், திருமணச் சடங்கு நின்று போனதால் ஒரு பெண் இறந்து போனாள் என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி விவரித்தார். "புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் திருமலைக்கடம்பர் மலை உள்ளது. திருமலைக்கடம்பர் கோவிலினுள் பாறை லிங்கத்தின் அருகில் வடக்கு சுவராக அமைந்துள்ள ஒரு பாறையில் உள்ள கல்வெட்டு ஒன்று கட்டிலேறத்தடை விதித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. நார்த்தமலை என்ற ஊரின் பழைய பெயர் தெலிங்ககுலகாலபுரம் என்பது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் ராஜேந்திர சோழனின் நான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. அதனுடைய காலம் கி.பி.1055-56. இது வணிகக் குழுவினரான திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிய செய்தியைக் கொண்டுள்ளது. அக்கல்வெட்டில் அருமொழி என்னும் வியாபாரி ஒருவன் கட்டிலேற (திருமணம் செய்ய) ஒரு பெண்ணை நிச்சயம் செய்து கொள்கிறான். ஆனால் ஏதோ காரணத்தால் தில்லைக்கூத்தன் என்பவனும் மற்றும் சிலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணாண ராமன் என்பவரின் மகளைத் திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். இதை அறிந்து முதலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட செட்டிச்சி விஷம் குடித்து சாகிறாள். இந்த அவலத்தால் நேர்ந்த பாவத்திற்கு வணிகக் குழுவினர் சங்குபரமேஸ்வரி அம்மைக்கு கோவில் எடுப்பித்து நந்தாவிளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்," என்று கல்வெட்டு பதிவைப் பற்றி விரிவாகக் கூறினார் பேராசிரியர் ரமேஷ். பாகூர், கரூர், நார்த்தாமலை கல்வெட்டுகள் திருமண வரி பற்றி தெளிவாகக் கூறுகின்றன. அக்காலத்தில் நில வரி, வணிக வரி, நீர் வரி எனப் பலவித வரிகள் இருந்ததைப் போல் திருமண வரி இருந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். ஒற்றர்களின் ஊடுருவலைத் தடுக்க திருமண வரி வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான உளுந்தூர்பேட்டை லலித் குமார் கண்ணால கானம் குறித்துப் பேசியபோது, "தற்போதும்கூட கிராமங்களில் திருமணம் அல்லது திருமணத்தை கண்ணாலம் என்று கூறுவதைக் காணலாம். முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டில் இந்த வரி அரைக்கால் பணம் என அறியப்படுகிறது," என்றார். சோழ நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றர்கள், மாப்பிள்ளை என்ற பெயரில் சோழ மண்ணில் ஊடுருவுவதைத் தடுக்கவும் இந்த வரி நடைமுறையில் இருந்தததாகவும் லலித் குமார் விளக்குகிறார். "அக்காலத்தில் சிற்றரசர்களுக்கு இடையே அடிக்கடி போர்கள் நடக்கும். திருமண உறவு என்ற போர்வையில், பகை அரசர் குடிகள் தம் நாட்டில் ஊடுருவி வாழ்ந்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும். அதற்காக அரண்மனைக்கு வரி செலுத்தும்போது மணமகன், மணமகள் இரு வீட்டார் தகவல்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும். வரி செலுத்துவதன் மூலம் திருமணமும் பதிவு செய்யப்பட்டது," என்கிறார் லலித் குமார். மன்னர்களின் அங்கீகாரம் திருமணத்திற்கு அவசியம் பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்று ஆர்வலர் லலித் குமாரின் கூற்றுப்படி, திருமணத்திற்கு முன்பாக மணமகன், மணமகள், இரு வீட்டுப் பெரியோர்களும், ஊர் கிராம சபையில் கூடி, விவாதித்து விளக்கம் பெற்று, கண்ணாலத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்காது என்று உறுதி செய்து, ஒப்புதல் பெற்று, இரு வீட்டார் மற்றும் கிராம சபையார் கையெழுத்துடன், வரியையும் பெற்று, மன்னனின் அங்கீகாரம் பெற அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்படும். "அரண்மனையில் வரி புத்தகத்தில் பதிவு செய்து, திருமண விவரங்கள் மன்னனுக்குத் தெரியப்படுத்தப்படும். கிராம சபையார் பரிந்துரையை ஏற்று மன்னனும் நடைபெறும் கண்ணாலத்திற்கு (திருமண) ஒப்புதல் ஆணையில் கையொப்பம் இடுவார். ஊர் சபையாரும் சாட்சியாகக் கையழுத்திடுவார்கள். இந்த நிகழ்ச்சி தற்போது பதிவு அலுவலகங்களிலும் திருமணத்தை சாட்சிகளுடன் பதிவாளர் முன்னிலையில் மணமக்கள் கையெழுத்திடுவதை நினைவூட்டதாகவே அமைகிறது," என்று கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சடங்குகள் படக்குறிப்பு, வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான உளுந்தூர்பேட்டை லலித் குமார். திருமணச் சடங்குகள் குறித்துப் பேசிய லலித் குமார், "திருமணத்தின்போது அரசர் ஆணையை, அரசன் தன் நாட்டுப் புதுமணத் தம்பதிகளுக்குப் பரிசாக வழங்கும் பானைகளுடனும், பரிசுப் பொருட்களுடனும் மணப்பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார். திருமண நாளன்று அரசன் ஆணையுடன் வரும் பரிசுப் பானைகளை மேள, தாள வாத்தியங்களுடன் எதிர்கொண்டு ஊர்வலமாக அழைத்து வந்து, திருமணத்திற்கு அரசன் ஆணை கிடைத்துவிட்ட தகவல் ஊராருக்குத் தெரியப்படுத்தப்படும். மணவிழா மேடையில் ஈசான்ய திசையில் வைக்கப்பட்டு, மாவிலை, துண்டு கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து மரியாதைகளும் அரசனுக்குச் செய்வது போல் செய்யப்படும். இப்பானைகள் முன்னிலையில்தான் திருமண சடங்குகள் நடைபெறும். மணப்பெண்ணிற்கு தாலி கட்டியதும், மணமக்கள் அரசன் தங்களுக்கு அனுப்பி வைத்த பரிசுப் பொருட்களை, தண்ணீர் நிரம்பியுள்ள பெரிய பானையில் ஒரே நேரத்தில் கைகளைவிட்டுத் துழாவி எடுப்பார்கள். இதன் பின்னர் மணப்பெண் அரசன் வழங்கிய பானையுடன் கணவனுடன் நீர் நிலைக்குச் சென்று நீர் நிரப்பிக்கொண்டு வருவாள். இந்த 'அரசர் ஆணைப் பானை'யே சிதைந்து தற்போது அரசாணிப் பானை ஆகிப்போனது," என்று கூறினார். மேலும், "தற்போதும் தமிழர் திருமணங்களில் இந்த அரசாணைப் பானை வைத்தல் நடைமுறையில் உள்ளது. மூன்று பானைகளை மாக்கோலம் அல்லது வண்ணக்கோலம் இட்டு அடுக்கி வைத்திருப்பதை நாம் காணலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சடங்குகள் தமிழர் திருமணத்தில் நடைபெறுவதை இன்றும் நாம் காண முடியும். அக்காலத்தில் ஒற்றர்கள் ஊரில் எந்த வழியிலும் உள் நுழையாமல் இருக்கவும், புதியவர்கள் யார் நாட்டில் வந்து குடியேறினார்கள் என்பது பற்றின விபரங்களை அறிந்து கொள்ளவுமே திருமண வரி வசூலிக்கப்பட்டது," என்று கூறுகிறார் வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான லலித் குமார். https://www.bbc.com/tamil/articles/c258gxyj0dlo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித் தந்த சாம்ஸனின் அபார ஆட்டமும் சிறந்த கேப்டன்சியும் - கடைசிக் கட்டத்தில் திருப்பம் தந்த அஸ்வின் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் சாம்ஸனின் பொறுப்பான பேட்டிங், போல்டின் துல்லியமான பந்துவீச்சு, டெத் ஓவர்களில் அஸ்வின், சந்தீப், ஆவேஷ் கானின் பந்துவீச்சு ஆகியவை ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. பட்லருக்கு தொடரும் சோகம் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர். கடந்த சீசனில் இருந்து தொடரும் ஓபனிங் சென்டிமென்ட் இந்தமுறையும் பட்லருக்குத் தொடர்ந்தது. பட்லர் 2 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கினாலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் நவீன் உல்ஹக் வீசிய 2வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெய்ஸ்வால் ஏமாற்றம் அடுத்து வந்த சாம்ஸன், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். ஜெய்ஸ்வால் கடந்த சீசனில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பேட்டிங்கால் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வாய்ப்பு பெற்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அபார பார்மில் உள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் களம் கண்ட ஜெய்ஸ்வால், இந்த ஆட்டத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். ஆனால், மோசின் கான் வீசிய 5-வது ஓவரில் மிட்ஆன் திசையில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பவர் ப்ளே ஓவருக்குள் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ரியான் பராக், வந்து சாம்ஸனுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘ஆங்கர் ரோலில்’ சாம்ஸன் முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலைக்கு அணி வந்துவிட்டதால், ஆங்கர் ரோல் எடுத்து விளையாட வேண்டிய நிலைக்கு கேப்டன் சாம்ஸன் தள்ளப்பட்டார். 3-வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ரியான் பராக் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இதுபோன்ற தருணத்தைதான் எதிர்பார்த்திருந்தேன் என்பதைப் போல், சாம்ஸன் தனக்குரிய ஸ்டைலில் ஆட்டத்தை நகர்த்திச் சென்றார். தேவையற்ற ஷாட்களை ஆடாமல், மிகுந்த முதிர்ச்சியுடன் மோசமான பந்துகளில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடிப்பதைக் குறைத்து மிகவும் பொறுமையாக சாம்ஸனும், பராக்கும் பேட் செய்தனர். தாக்கூர் வீசிய 9-வது ஓவரை குறிவைத்த சாம்ஸன் 3 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்தது. பிஸ்னோய் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக், சாம்ஸன் தலா ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் சேர்த்தனர். ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் ரியான் பராக் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை மோசின்கான் தவறவிட்டது பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்க வைத்தது. அதிரடியாகவும், பொறுமையாகவும் பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரியான் பராக் முதிர்ச்சி நவீன் உல்ஹக் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வீசிய 14-வது ஓவரில் ரியான் பராக் ஒருபவுண்டரியும், சிக்ஸரும் விளாசி, 5வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரியான் பராக் 43 ரன்னில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த சில சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக எந்தப் போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை, வாய்ப்பும் பெரிதாக வழங்கவில்லை. ஆனால், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஃபார்மில் இருந்த பராக் முதல் ஆட்டத்தில் முதிர்ச்சியுடன் பேட் செய்துள்ளார். 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-பராக் கூட்டணி 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 4வது விக்கெட்டுக்கு வந்த ஹெட்மெயரும் பெரிதாக நிலைக்கவில்லை. பிஸ்னோய் பந்துவீச்சில் 5 ரன்கள்சேர்த்தநிலையில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு வந்த துருவ் ஜூரெல் சிறிய கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். தாக்கூர் வீசிய 18-வது ஓவரில் சாம்ஸன் ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்களும் விளாசினர். நவீன் உல்ஹக் 19-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் ஏதும் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினார். மோசின் கான் வீசிய கடைசி ஓவரில் சாம்ஸன் சிக்ஸரும், ஜூரெல் பவுண்டரியும் விளாசினர். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து(6 சிக்ஸர், 3பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜூரெல் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES போல்ட், பர்கர் மிரட்டல் 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. குயின்டன் டீகாக், கேஎல் ராகுல் களமிறங்கினர். லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே டிரன்ட் போல்ட் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்தார். போல்ட் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டீகாக் 4 ரன்னில் பர்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த தேவ்தத் படிக்கல் நிலைக்கவில்லை. போல்ட் வீசிய 3வது ஓவரில் க்ளீன்போல்டாகி டக்அவுட்டில் படிக்கல் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு பதோனி களமிறங்கி, ராகுலுடன் சேர்ந்தார். பந்துவீச்சிலும் மாற்றம் செய்யப்பட்டு பர்கர் அழைக்கப்பட்டார். பர்கர் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தைச் சந்தித்த பதோனி மிட்ஆப் திசையில் லட்டு போல் பந்தை பட்லரிடம் தூக்கிக் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 11 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது, கேப்டன் ராகுல் அதிரடியாக தொடங்கலாம் என்று நினைத்த நிலையில் மிகுந்த பொறுமையாக நிலைக்குத் தள்ளப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்சன் புத்திசாலித்தனமும் லக்னோ தடுமாற்றமும் 4வது விக்கெட்டுக்கு வந்த தீபக் ஹூடோ, ராகுலுடன் சேர்ந்து சிறிய கேமியோ ஆடினார். களத்துக்கு வந்தவுடனே ஹூடா பவுண்டரி, சிக்ஸர் என பர்கர் ஓவரில் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதன்பின ஹூடா, ராகுல் இருவரும் ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை 10க்கு குறையவிடாமல் கொண்டு சென்றனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பந்துவீச்சில் மாற்றம் செய்த சாம்ஸன், யுஸ்வேந்திர சஹலை அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. சஹல் வீசிய 8-வது ஓவரின் 3வது பந்தை மிட்விக்கெட் திசையில் ஹூடா தூக்கி அடிக்கவே, ஜூரெலிடம் பந்து தஞ்சமடைந்தது. ஹூடா 26 ரன்களில் சிறிய கேமியோவுடன் வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பூரன்-ராகுல் நம்பிக்கை 5வது விக்கெட்டுக்கு நிகிலோஸ் பூரன் களமிறங்கி ராகுலுடன் சேர்ந்தார். 2 ஓவர்கள் வரை பூரன் நிதானத்தை கடைபிடித்து, சஹல் வீசிய 10வது ஓவரில் சிக்ஸர் அடித்து கணக்கைத் தொடங்கினார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 76 ரன்கள் சேர்த்தது. 12 ஓவரில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. பர்கர் வீசிய 11வது ஓவரை ராகுல் கட்டம் கட்டி, கடைசி 3 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என17 ரன்கள் சேர்த்தார். போல்ட் வீசிய 13-வது ஓவரை பூரன் நொறுக்கி அள்ளினார். பூரன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்களை பூரன் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை நோக்கி லக்னோ பூரனும், ராகுலும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆட்டம் மெல்ல, லக்னோ பக்கம் சாய்வதுபோல் இருந்தது. அதிலும் நிகோலஸ் பூரன் அடித்த ஷாட் ஒவ்வொன்றும் இடிபோல் இறங்கியது. இதனால் பந்துவீச்சில் மாற்றம் செய்த சாம்ஸன், சந்தீப் ஷர்மாவை அழைத்தார். தனது முதல் ஓவரை அற்புதமாக வீசிய சந்தீப் சர்மா, 15-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 5 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ராகுல், பூரன் தள்ளப்பட்டனர். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் சஹல் வீசிய 16வது ஓவரில் பூரன் ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. 17-வது ஓவரை சந்தீப் சர்மா வீசியபோது அவரின் பந்துவீச்சுக்கு பலன் கிடைத்தது. ஆப்சைடில் விலக்கி வீசப்பட்ட அந்தபந்தை ராகுல் தூக்கி அடிக்கவே டீப் பாயின்டில் ஜூரெலிடம் கேட்சானது. ராகுல் 58 ரன்னில் ஆட்டமிழந்து வெறுப்புடன் வெளியேறினார். பூரன்-ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தனர். பூரன் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் 3 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். அடுத்து குர்னல் பாண்டியா களமிறங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆவேஷ் கான் அற்புதம் கடைசி 2 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்களை பூரன் விளாசினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் கடைசி ஓவரை வீசினார். அற்புதமாக வீசிய ஆவேசன்கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பூரனைக் கட்டுப்படுத்தினார். பூரன் களத்தில் இருந்தவரை லக்னோ வெற்றிக்கு சாத்தியங்கள் இருந்தது. ஆனால், 17-வது ஓவரை அஸ்வின் வீசத் தொடங்கியதில் இருந்து, டெத் ஓவர்களை சந்தீப் சர்மாவும், ஆவேஷ் கானும் அற்புதமாக வீசி, லக்னோ பேட்டர்களைக் கட்டிப் போட்டனர். லக்னோ அணி கடைசி 5 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. பூரன் 64 ரன்களிலும், குர்னல் பாண்டியா 3 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. முதல் ஆட்டமும் சாம்ஸனின் அரைசதமும் சாம்ஸன் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரம் இருக்கிறது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனில் இருந்து, தொடரின் முதல் ஆட்டம் அனைத்திலும் சாம்ஸன் அரைசதம் மற்றும் சதம் அடித்துள்ளார். 2020முதல் 2024 வரை ராஜஸ்தான் அணியின் முதல் ஆட்டத்தில் சாம்ஸன் அரைசதம் அடிக்காமல் இருந்தது இல்லை என்பது கூடுதலான தகவல். 2020-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக 72 ரன்கள் சேர்த்த சாம்ஸன், 2021ம்ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சதம் அடித்து 119 ரன்கள் சேர்த்தார். 2022ம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிராக சாம்ஸன் 55 ரன்களும், 2022 சீசனின் முதல் ஆட்டத்திலும் சன்ரைசர்ஸுக்கு எதிராக 55 ரன்களும் சேர்த்தார். 2020 முதல் 2024 வரை அனைத்து சீசன்களின் முதல் ஆட்டத்திலும் சாம்ஸன் அரைசதம் அடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரியாக பணியாற்றிய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், பர்கர் இருவரும் சேர்ந்து முதல் 4 ஓவர்களில் லக்னோவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதே, லக்னோவின் ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டது. அந்த அணியை சரிவில் இருந்து மீட்க விடாமல் அடுத்தடுத்து வந்த வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மாற்றங்களால் அவுட்டாக்கி வெளியேற்றினார். நிகோலஸ் பூரன், ராகுல் இருவரும் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றபோது, டெத்ஓவர்களில் சந்தீப் சர்மா, அஸ்வின், ஆவேஷ் கான் பந்துவீச்சு ஒட்டுமொத்தமாக லக்னோ அணியை தோல்விக் குழியில் தள்ளியது. 18-வது ஓவரை அனுபவ சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு சாம்ஸன் அளித்தது நல்ல பலனைத் தந்தது. டெத் ஓவர்களில் அற்புதம் அதிலும் சந்தீப் சர்மா டெத்ஓவர்களில் தனது முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோ ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். சந்தீப் சர்மா 3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ராகுல் விக்கெட்டை வீழ்த்தி தனது வேலை கச்சிதமாக முடித்தார். கடைசி ஓவரில் ஆவேஷ் கான் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் பூரனை கட்டிப்போட்டு வெற்றியை அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். இதுதவிர 18வது ஓவரை வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோவை கூடுதல் நெருக்கடியில் தள்ளினார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 15 ஓவர்களுக்குப் பின் ஆட்டத்தை கையில் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES "வெற்றிக்கு உரித்தானவர் சந்தீப் சர்மா" வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ நான் முதல் போட்டியிலேயே வித்தியாசாமாக ஆங்கர் ரோல் செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறேன் என்பதால் அந்த அனுபவம் எனக்கு உதவியது. நல்ல தொடக்கம் எங்களுக்கு கிடைத்தது ஆனால், அதைக் கொண்டு செல்ல முடியவில்லை. நம்முடைய பலம், பலவீனத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்தையும் கவனித்து அதற்கு ஏற்றார்போல் விளையாடினேன், அவசரப்படாமல் ஆடினேன். என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கு உரித்தானவர் சந்தீப் சர்மாதான். அவர் இங்கே இல்லை, அவரின் கடைசி டெத் ஓவர்கள் ஆட்டத்தை மாற்றிக்காட்டியது. எங்கள் திட்டப்படி அனைத்தும் நடந்தது” எனத் தெரிவித்தார் முதலிடத்தில் ராஜஸ்தான் இந்த ஆட்டத்தில் லக்னோ அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் ஒரு புள்ளி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறிய நிலையில் சாம்ஸன் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடியவிதம் கேப்டனுக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தியது. 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகிய சாம்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cmmqy2rqr8no
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Moscow Attack: "ஒருத்தரையும் விட மாட்டோம்" கோபத்தில் பேசிய Putin; Ukraine-ஐ 'வம்புக்கிழுத்த' Russia மாஸ்கோ தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து கடுமையாக தண்டிப்போம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆவேசமாக பேசியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் யுக்ரேனுக்குத் தப்பிச் செல்ல இருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பிரச்னையை திசை திருப்ப வேண்டாம் என யுக்ரேன் அதிபர் ஸெலெஸ்ன்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் பேசியது என்ன? மாஸ்கோ தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
-
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் பற்றாக்குறை!
24 MAR, 2024 | 03:55 PM கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது . சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மாதங்களாக இந்த நோய் தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார் . ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179586
-
உலக புற்றுநோய் தினம்: காலநிலை மாற்றத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்
புற்றுநோய் அறிகுறிகள் என்ன? உறுதிப்படுத்த எங்கு பரிசோதனை செய்வது? - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025இல் 15.7 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியது. இதில் ஆண்கள் அதிகமாக நுரையீரல், வாய் மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு அதிகமாக மார்பகம், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும் எச்சரித்துள்ளது. குறிப்பாக 2023ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில், யாருக்கெல்லாம் புற்றுநோய் வரலாம், புற்றுநோய் அறிகுறிகளை உறுதிப்படுத்திக்கொள்வது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. அவை குறித்து இங்கு பார்ப்போம். புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES “உயிர்க்கொல்லி நோய்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது புற்றுநோய். முதல் இடத்தில் இருப்பது இதய நோய். ஆனால் இதய நோய் போல் அல்லாமல், தலை முதல் கால் வரை உடலின் எந்தப் பாகமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது”, என்கிறார் அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி. அவரது கூற்றின்படி, தலைமுடி, நகங்கள், பற்களில் மட்டுமே புற்றுநோய் வராது. புற்றுநோயைப் பொறுத்தவரை கருப்பை, மார்பகம், நுரையீரல் புற்றுநோய்களைத் தவிர்த்து மலக்குடல் புற்றுநோய், சூல்பைப் புற்றுநோய் (Ovarian cancer), தலை மற்றும் கழுத்து புற்றுநோய் போன்றவையும் இந்தியாவில் சாதாரண நோயாக மாறி வருகிறது. இதில் முக்கியமானது தலை மற்றும் கழுத்து புற்றுநோய். இதற்கு மிக முக்கியக் காரணம் புகையிலை. இந்தியாவில் புகை பிடிப்பது என்பது அதிகமாகி வருகிறது. சாதாரண சிகரெட், பீடி, சுருட்டு தவிர்த்து, புகையிலையை மெல்கிறார்கள், இ-சிகரெட்டுகளை புகைக்கிறார்கள். பல இளைஞர்கள் கூல் லிப் எனப்படும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள். "சிறுவயதிலேயே இத்தகைய பழக்கங்கள் உருவாகின்றன. புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் இந்தப் பழக்கங்கள் பெரும் பங்காற்றுகின்றன” என்கிறார் மருத்துவர் ரத்னா தேவி. இதுமட்டுமின்றி தவறான உணவுப் பழக்கங்களும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறார் அவர். “பெண்களை அதிகளவில் பாதிக்கும் மார்பக புற்றுநோய்க்கு மோசமான உணவுப் பழக்கம் ஒரு காரணமாக உள்ளது. எந்த வகையான உணவுகளை, எந்த நேரத்தில், எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.” புற்றுநோய் எந்தெந்த வழிகளில் ஏற்படும்? படக்குறிப்பு, அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி. “உணவுப் பழக்கம் தவிர்த்து வைரஸ் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படலாம். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றால் இது ஏற்படுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குதப் புற்றுநோய் (Anal cancer) போன்றவை இந்த வைரஸால் உருவாகின்றன. ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரையும் இது தாக்கும். முக்கியமாக பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து இது வருகிறது. இந்த வகை வைரசுக்கு இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. போலியோ தடுப்பூசிகள் போல 9 முதல் 13 வயது வரை உள்ளவர்கள் வரும் முன் காக்கும் நடவடிக்கையின்படி அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை,” என்கிறார் மருத்துவர். “புற்றுநோய் ஏற்படுவதற்கு மரபணு காரணங்களும் உள்ளன. உணவுகளில் செய்யப்படும் கலப்படம், மாசுபட்ட காற்றை சுவாசித்தல், மாசடைந்த நீரைத் தொடர்ந்து பருகுதல், இப்படிப் பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. எனக்கெல்லாம் புற்றுநோய் வராது என யாரும் நினைக்க முடியாது,” என்று கூறுகிறார் மருத்துவர் ரத்னா தேவி. புற்றுநோய் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய, மாநில அரசுகள் சார்பாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, இந்தியாவில் கணிசமான பேருக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறிகுறிகளை நாம் புறக்கணிக்கக்கூடாது. எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேலாகக் குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் பரவ ஆரம்பித்த பிறகு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம். ஓய்வெடுத்தாலும் தீராத உடல் சோர்வும் ஒரு அறிகுறி. ரத்தப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம். சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத ரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம். தோலில் ஏற்படும் மாற்றங்களான சருமம் கருமையாகுதல் (hyperpigmentation), தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (jaundice), தோல் சிவத்தல் (erythema), அரிப்பு (pruritus), அதிகப்படியான முடி வளர்ச்சி ஆகிய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். இவை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக்கூடும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் ரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆறாத வாய்ப் புண், வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும் போது ரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறுபுறம், மலத்தில் ரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், சிறுநீரில் ரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES முலைக் காம்பிலிருந்து ரத்தம் கசிவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும். இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன. தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் இவை ஏற்படுகின்றன. தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்தியாவில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியர்களில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது ஏன் என்பது குறித்தும் விளக்கினார் மருத்துவர் ரத்னா தேவி. “இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மைதான். பலரும் புற்றுநோய் சோதனைகளைச் செய்ய முன்வருகிறார்கள். இதனால் புதிய புற்றுநோயாளிகள் குறித்த தரவுகள் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகின்றன,” என்கிறார் மருத்துவர். தொடர்ந்து பேசிய அவர், “அறிவியில் வளர்ச்சியால் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. பலரும் தங்கள் உடல்நிலை குறித்து இப்போது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு கவலை கொள்கிறார்கள். முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலம் தங்கள் உடலில் இருக்கும் நோய்கள் மற்றும் அபாயங்கள் குறித்து அறிந்து கொள்கிறார்கள். கைப்பேசி மூலமாகப் பல அறிகுறிகளைத் தெரிந்துகொண்டு, மருத்துவர்களை அணுகுகிறார்கள். அரசும் பல பரிசோதனை முகாம்களை நடத்துகிறது. சமீபத்தில் கரூரில் நடத்தப்பட்ட முகாம் மூலம் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டார்கள். புற்றுநோய் எந்தளவு அதிகரித்து வருகிறதோ அதே அளவு வேகமாக மருத்துவ அறிவியலும் முன்னேறி வருகிறது. எனவே இதற்கான தீர்வுகளும் நம்மிடம் உள்ளன,” என்கிறார் மருத்துவர். புற்றுநோய் பரிசோதனைகளை எங்கு செய்யலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற போலி பிம்பம் உடைக்கப்பட வேண்டும் என்கிறார் மருத்துவர் ரத்னா தேவி. “எந்தப் புற்றுநோயாக இருந்தாலும் அது ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகம். செய்ய வேண்டியது எல்லாம் சில எளிய பரிசோதனைகளே. அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது. தங்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் இருந்தால், உடனே இந்த சோதனைகளைச் செய்தால் தெரிந்துவிடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டும் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால்கூட குணமாவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்," என்று விளக்கினார் அவர். ஆனால் ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறார் மருத்துவர். புற்றுநோய் அபாயம் எப்போது அதிகமாகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES “ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம், சிகிச்சை எடுக்கிறோம். அதுபோல புற்றுநோய் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு, முழு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சினிமா பார்த்து புற்றுநோய் என்றால் குணப்படுத்தவே முடியாது, நிச்சயம் மரணம்தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. அது தவறு, எத்தனையோ பேர் சிகிச்சை எடுத்து குணமாகி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர், எந்த அறிகுறியும் இல்லாத போதும்கூட வழக்கமான உடல் பரிசோதனைகள் மூலம் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து கொண்டார்கள். எனவே கண்டிப்பாக, அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் வந்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும் என இல்லை, முக்கியமாக நாற்பது வயதைக் கடந்தவர்கள். நமக்கு வயதாகும்போது புற்றுநோய் அபாயமும் அதிகமாகிறது,” என எச்சரிக்கிறார் மருத்துவர் மற்றும் மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் ரத்னா தேவி. https://www.bbc.com/tamil/articles/c3ge14e813vo
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சிஐடியினர் நாளை வாக்குமூலம் பதிவு! 24 MAR, 2024 | 02:45 PM உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாம் தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179582
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
Sri Lanka 280 & 418 Bangladesh (13 ov, T:511) 188 & 47/5 Day 3 - Bangladesh need 464 runs.
-
வவுனியாவில் காசநோயால் கடந்த வருடம் மூன்று பேர் இறப்பு; 58 பேர் பாதிப்பு - காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி
வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் 24 MAR, 2024 | 02:21 PM காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் இன்று (24) இடம்பெற்றது. வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் வைத்தியசாலை பின்வீதியில் அமைந்துள்ள மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் 'ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்' எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினமான இன்று (மார்ச் 24) விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், அங்கிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. இந்த ஊர்வலம் கண்டி வீதிக்கு சென்று, அங்கிருந்து பண்டாரவன்னியன் சதுக்கத்தை அடைந்து, மன்னார் வீதி ஊடாக குருமன்காடு சந்தி, புகையிரத வீதி ஊடாக வவுனியா நகர், அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதிக்கு சென்று, வைத்தியசாலையில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள் ஆகியோருடன் முச்சக்கர வண்டிகளும் விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக வலம் வந்தன. https://www.virakesari.lk/article/179581
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RESULT 4th Match (D/N), Jaipur, March 24, 2024, Indian Premier League Rajasthan Royals 193/4 Lucknow Super Giants (20 ov, T:194) 173/6 RR won by 20 runs