-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
உண்மை. ஊரிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி எங்களுடைய இளைய சமுதாயத்திற்கு அவர்களது இனம், தாயகம் பற்றி சரியான அறிவை கொடுக்கவில்லை, தனியே மொழியையும் விழாக்களையும், விடுமுறைக்கு ஊருக்குப் போய் வருவதை மட்டும் சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்துள்ளதன் விளைவும், தமிழ் பாரம்பரிய கட்சிகளில் சேர்வதற்கு அரசியல் பின்புலம் ஒன்று இருந்தால் மட்டுமே சேரலாம் என்ற நிலையும் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். உண்மையில் இந்த தமிழ்கட்சிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர்கள் உண்மையாக எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் இன்று எங்களது நிலை இந்தளவுக்கு வந்திருக்காது. மக்களை குழப்புவதை நன்றாகவே செய்துவருகிறார்கள்.
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
// அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ?// இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள். இந்தக் கேள்வியை எனக்குள்ளும் கேட்கிறேன். பகிர்வுக்கு நன்றி பேராசிரியர் அவர்களே..
-
தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது?
//தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது? வீட்டுக்கு போகிறது// இந்தக் கேள்விக்கு எனக்கு இப்படித்தான் பதில் எழுத தோன்றுகிறது.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
எனக்கென்னவோ நாங்கள் தேவையில்லாமல் விளம்பரப்படுத்துக்கிறோமோ என்ற எண்ணமே வருகிறது. Dr அர்ச்சுனாவின் போதும் இப்படித்தான் இளையோர்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் போனார்கள். பிறகு அடங்கிவிட்டது. இப்பொழுதும் இப்படித்தான். அநுரவின் திட்டங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்று சிந்திக்கவிடாமல் இருப்பதற்குத்தான் இந்தளவு வீடியோக்களும். அவருடைய வீட்டுக்கு கூட போகுமளவுக்கு வைத்துள்ளது. எங்களுடைய இளையோருக்கு கடந்த கால வரலாறுகளையும் நாங்கள் ஒழுங்காகத் தரவில்லை. பாடப்புத்தகங்களில் தவறான தகவல்களை கொடுத்தாலும் கூட அதனை திருப்பிக் கேட்காமல் அதனைத்தான் படிப்பிக்கிறோம். ஆகையால் இனிவரும் இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Ricky Ponting ஒன்றும் பிழையாக கூறவில்லைத் தானே.. அவர் விளையாடிய காலத்தில் Australia ஒரு பலமிக்க அணியாகத் தானே இருந்தது.. இப்போ எதோ கஷ்டகாலம் கொஞ்சம் தடுமாறினம்.. West Indiesம் கூட கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் உண்டு.. இப்ப பார்த்தா ஏதோ கொஞ்ம் விளையாடினம்.. அப்படி விளையாட்டில இதெல்லாம் சகஜம்😊 தோல்வி பரவாயில்லை ஆனால் யாரிடம் தோற்றோம் என்பதே பிரச்சனை. நாங்களே நொந்து போயிருக்கிறம்😔
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அதான் மூட்டையை கட்டியாச்சு🥺🥺🥺😞
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
குளிர்காலத்தின் காலை வேளையில் மரங்களும் அழகு.. மூடுபனியில் நனையும் கட்டிடங்களும் அழகு!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அதுதான் எனக்கும் விளங்கேல்ல.. ஆனா உங்களை நம்பினவங்களுக்கு கிரிக்கெட் பற்றி நல்லா படிப்பிச்சு இருக்கிறீங்க🤭
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மீனாட்சி இருக்கிறா ..மதுரையையும் சோதனையையும் அவ பார்த்துக்கொள்ளுவா.. T20கெல்லாம் வரமாட்டா😊
- நிகழ வேண்டிய வழி
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இந்த வலிகளை உணர்ந்தவர்கள் அல்ல எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள். தங்களுடைய இருப்பையும் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொண்டால் மாத்திரம் போதும் என எண்ணுபவர்கள். உண்மையிலே மிகவும் அருவருப்பே இந்த தமிழ் அரசியல்வாதிகளை பார்க்கும் பொழுது ஏற்படுகிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களை நம்பி google sheets நிரப்பினவைக்கெல்லாம் ஏறுமுகம்தானே 🤭🤭🤭.... அவர்கள் கொஞ்சப் பேருக்கு உதவின புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.. எல்லாம் நன்மைக்கே
-
மக்கள் போராட்ட முன்னணி - புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்தனர் அரகலய போராட்டக்காரர்கள்
இந்த முறை ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒன்று முதலில் வந்தது. .. இப்ப மக்கள் போராட்ட முன்னனி .. ஆனால் தேர்தல் நடக்குமா?????
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படி Shakira பாடேல்ல அண்ணா.. கண்ணீர் விடாம நம்பிக்கையோட இருக்கச்சொல்லித்தான் பாடுறா.. அதான் கிருபனும் அவாவை போட்டிருக்கிறார்😊
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
வணக்கம், உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஒரு திருமண உடன்படிக்கையினால் வரும் சட்டரீதியான அனுகூலங்களையும் பிற அனுகூலங்களையும் இந்த same sex couples அடையும் வேண்டும் என்றால் அதற்கு அவர்களது திருமணத்தையும் சட்டரீதியாக்கவேண்டும், [இதற்குள் குழந்தைகளை தத்து எடுப்பது தொடங்கி surogacy, egg/sperm donors மூலம் பெறுவது ( இந்த முறைகளை தனியே same sex couples மட்டும் நாடுவதில்லை என்பதையும் நடைமுறையில் பார்த்து வருகிறோம்) முதல் எல்லா வகையான அனுகூலங்களும் வரும்]. இந்த விடயம் இலகுவில் முடிவுக்கு வரும் விடயமோ ஒரே நாளில் மாறும் விடயமோ இல்லை. இங்கே பலரும் தங்களது எண்ணங்களை எழுதியிருந்தார்கள். ஆகையால் இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை என்றாலும் கூட எனது கருத்திற்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள். என்னைப் பொறுத்த வரை சட்டரீதியாக திருமணம் செய்து வாழும் எனது பெற்றோரின் மூலம் என்ன நன்மைகளை சட்டரீதியாகவும் குடும்ப வாழ்க்கை என்றதற்குள் நான் பெற்றேனோ அதனை இந்த same sex couplesன் பிள்ளைகளும் பெறவேண்டும். De facto relationship கூட எல்லா உரிமைகளும் அனுகூலங்களும் இல்லை. ஆகவே திருமண உடன்படிக்கையை தவிர வேறு முறைகள் சரிவரமாட்டாது. நன்றி வணக்கம் அவுஸ்ரேலியாவில் 2017ல்தான் தனபாலினத்தவர்களின் திருமணத்தை சட்டரீதியானதாக மாற்றினர்கள் அப்படியென்றால் அதற்கு முன் நடந்த காட்டுத்தீ தொடங்கி வெள்ளப்பெருக்குகள் வரைக்கும் காரணம் இந்த தமிழ் கிறிஸ்தவர்களாமா?