Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. முன்னரும் இது பற்றி கூறினார்கள். இதை விரைவாக நடைமுறை படுத்தினால் இங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு நல்லது. 🙂
  2. நாடு வங்குரோத்து , பணமில்லை என்று சொல்லலாம். ஆனால் கடைகளிலோ, விடுதிகளிலோ , இன்னும் கலியட்ட்ங்களிலோ இலங்கையில் குறைவில்லை. வாகனங்களுக்கும் இங்கு குறைவில்லை. இறக்குமதிக்கு அனுமதித்தால் நூற்றுக்கணக்கில் வாங்குவதட்கும் தயாராக இருக்கிறார்கள். பொதுவாக இரவில் வாகனங்களை நிறுத்துவதட்கு கொழும்பை அண்டிய பகுதிகளில் இடமிருக்காது. எனவே அத்தனை எரிபொருள் நிரப்பு நிலையம் வந்தாலும் வியாபாரம் இருக்குது.
  3. மாவோவின் சிந்தனை எதுவாக இருந்தாலும் அவர்கள் உலகின் முதலாவது வல்லரசு என்ற இடத்தை நெருங்கி கொண்டிருக்கிறார்கள். அதாவது இலங்கை தமிழனும் ஒரு நாளைக்கு அந்த நிலைமைக்கு, குறைந்தது இரண்டாவது இடத்துக்காகவாவது வரப்போகிறான் என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் டக்ளசின் கொள்கைகளை வரவேற்கலாம். 😜
  4. என்ன இப்போது மண்டையை காணவில்லை? மண்டை எண்டு எழுத பயமா? இப்போது மேலே உள்ள மூளையால் யோசிக்கிறீர்கள்போல தெரியுது. நீங்கள் எழுதியதட்குத்தான் பதில் எழுதி இருந்தேன். பதில் இல்லை என்றவுடன் மூளையை பற்றி கதைக்கிறீர்கள். நீங்கள் சொன்னதை எப்பவோ நான் கிளறி எடுத்து எறிந்து விடுத்தேன். நீங்கள்தான் அதை இன்னும் செய்யவில்லை. நீங்களும், இங்குள்ள சிலரும் அப்படி செய்தால் எல்லாமே சுமுகமாக முடிவடைந்து விடும். அப்படியா? இனி என்ன கேட்கலாம்?
  5. சிங்களவன் மட்டும் ஆயிர கணக்கான ராணுவத்தை இழந்தும், காயப்பட்டும், சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டும், அரசியல் தலைவர்களை இழந்தும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும் பெற்ற இந்த வெற்றி எதேர்க்கென்று கேட்க மாடடார்களா? நீங்கள் கேட்க்கிறமாதிரி அவர்கள் கேட்க மாடடார்களா? அம்மணி , மாநில அரசு மாகாண அரசு என்றெல்லாம் எழுத வேண்டாம். அதையெல்லாம் மறந்து விடுங்கள். அதையெல்லாம் கடந்து பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைக்கு வந்தாயிற்று. நாங்கள் இங்கு இலங்கையில் இருந்து எழுதுகிறோம். விளங்கினால் சரிதான்.
  6. எமக்கு ஏன் முடியாமல் போனது? எல்லா நாடுகள் பற்றியும் எழுதுகிறீர்கள். நம்ம நாட்டிடை பற்றியும் எழுதுங்கள். தமிழ் ராச்சியம் சிங்களத்துடன் இணைக்கப்பட்ட்தா? இல்லை ஆக்கைரமிப்புக்கு முன்னர் இருந்து சிங்களவர் கிலேதான் வாழ்கிறோமோ?
  7. சட்ட்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா இல்லையா என்பதை இங்குள்ள நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும். அது தமிழராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதைத்தான் நானும் சொல்லுகிறேன் தமிழர்களுக்கு தனியான தீர்வு என்று வரப்போவதில்லை. ஏன் இந்தியாவும் அனுமதிக்க போவதில்லை. ஒரே நாடு ஒரே சடடம்தான் இந்தியாவின் கொள்கை. எனவே இனி நாம் எல்லோரும் ஸ்ரீலங்கார்கள்தான். பிரச்சினை முடிந்து விட்ட்து.
  8. இங்கு மத தலைவர்களின் தலையீடு தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த வரைக்கும் கத்தோலிக்க/ கிறிஸ்தவ மத தலைவர்கள் தவிர மற்ற மத தலைவர்களிதில் ஈடுபாடு கொள்ளுவது குறைவே . எனவே அவர்களும் இனி ஈடுபடுவார்களா என்பது சந்தேகமே. சங்கிகள் தலைமையை தீர்மானிக்க முடிவெடுத்ததுடன் அந்த அத்தியாயம் முடிவடைந்து விட்ட்து என்று சொல்லலாம். விட்டுக்கொடுப்புடன் செல்லாத வரை, தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்று செல்லும் வரை கட்சி நிச்சயமாக உருப்படாது. பத்திரிகை செய்தியின்படி ஸ்ரீதரன் கொழும்பு சடடதரணிகளை அணுகியதாகவும் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்றும் அறிய கிடைக்கின்றது. எனவே தவராசாவும் இப்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்குதென்று.
  9. நம்பினோர் கைவிடப்படுவதில்லை. கண்டு நம்பினவர்களைவிட காணாமல் நம்பியவர்கள் உயர்ந்தவர்கள். வாழ்த்துக்கள்.
  10. நிர்வாக சபையும் அவர்கள்தான், தொளிட் சங்கமும் அவர்கள்தான். அப்படி என்றால் .................
  11. ஏன் இல்லை? எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்ட்து. ஆனால் எல்லாம் மீறப்பட்ட்துடன், சில கிழித்தெறியப்பட்ட்து. செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம். ஆயுதப்போராட்டம் என்பது சும்மா மக்களை பிச்சைகாரக்கும் போராட்டமாக இருக்க கூடாது. ஆபிரிக்காவில் யுத்தம் என்று சொல்லி மக்கள் இன்னும் இன்னும் பிச்சை காரர்களாக மாறுகிறார்கள் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அது யுத்தம் அல்ல ஒரு கொள்ளை கும்பலின் வெறியாட்டிடம்தான் அங்கு நடக்கின்றது. ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு. இல்லாவிடடாள் முடிவு அழிவுதான். அன்டோன் பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு செவி கொடுத்திருந்தாலே எல்லாம் ஒரு நன்மையில் முடிவடைந்திருக்கும் . நிச்சயமாக இனிமேல் தீர்வு என்பது இருக்காது. எல்லோரும் இலங்கையர் என்று வாழ்வதுதான் தீர்வாக அமைய போகின்றது. இது எனது கருத்து.
  12. பொதுவாக தேர்தலில் வெற்றி வருபவர்கள் (90 %) முடடால்களாக, களவு, கொலை , கொள்ளை அடிப்பவர்களாக இருப்பார்கள். உதாரணத்துக்கு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்து பாருங்கள். எனவேதான் நாடடை வழி நடத்தக்கூடிய படித்த , ஒழுக்கமுள்ளவர்களை தெரிவு செய்ய இந்த நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக குப்பைகளையும் கொண்டு வருவதுண்டு. அதுதான் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை. ஆனால் இங்கு நீலனை ஒரு நல்ல நோக்கத்துக்காகவே கொண்டு வந்தார்கள் என்பது நிச்சயம்.
  13. இங்கு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் யார் என்று சிந்திக்க வேண்டும். எந்த இனத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் இனவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். பொதுவாக சிங்கள இனத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். நேர்மையாக சிந்திக்கிற , மனிதாபிமானத்துடன் அணுகும் அரசியல்வாதிகள் அரசியலில் மிகவும் குறைவு. அப்படியானவர்கள் இதில் களம் இறங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது. ஒன்று மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றது பணம் வேண்டும். எனவே உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இனி ஒரு யுத்தம் வராது என்பது எல்லோரும் கருதும் ஒரு விடயம். நானும் அப்படிதான் நினைக்கிறேன். எனவே அதிகார பகிர்வு எல்லாம் எழுதவும், கதைக்கவும் மட்டுமே. வெளிநாட்டு தலையீடுகள் என்று கூறினாலும் நிலைமையை பொறுத்து இலங்கை அதைசமாளிக்கும். சீனா, ருசியா இருக்கும் வரைக்கும் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.
  14. அதை எழுத நினைத்தாலும் எழுதவில்லை. அப்படிதான் அவர்கள் அவரது மகளுக்கு எந்தவித பிரச்சினையும் வராதபடி பார்த்து கொண்டார்கள். இன்னும் சொல்லலாம். அங்குள்ள ஒரு மாணவனின் சகோதரன் கொழும்பில் ஒரு நடவடிக்கையின்போது இறந்து விடடார். அதை விரிவாக இங்கு எழுதவில்லை. அவரும் பொறியிலாளர்தான். அப்போது அந்த விடயம் அங்கு தெரிய வந்து அந்த மாணவன் விசாரணைக்கு செல்ல வேண்டி இருந்தது. இருந்தாலும் சிங்கள மாணவர்களும் விரிவுரையாளர்களும் அதையெல்லாம் சமாளித்து அந்த மாணவன் படிப்பை முடித்து வெளியேறும் வரைக்கும் உறுதுணையாக இருந்தார்கள். இப்போது அவர் வெளிநாட்டில் வசதியாக வாழ்கிறார்.
  15. கடந்த வாரம் மின்னல் நிகழ்ச்சியை பார்த்தேன். இந்தியாதான் எமது தெய்வம் என்பதுபோல அடைக்கலநாதன் பேசி கொண்டிருந்தார். இன்னும் சீனாவை காட்டி , இவர்கள் வடக்கு கிழக்கில் பலமடைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்பது போலவும் பேசினார். இவருடைய சொத்துக்கள் எல்லாம் அங்குதான் இருக்கின்றது. இந்த லூசு கூடடம்தான் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள். இந்த கட்டுரைகளை எல்லாம் அரசியல் வாதிகள் வாசிக்கிறார்களா என்பதும் கேள்விக்குறிதான். வாசிக்க தெரிந்தால்தானே .
  16. அதை வரும் ஜனாதிபதி, பொது தேர்தலில் சிங்கள மக்களுக்கு கூற வேண்டும். வெளி நாடுகளில் இருக்கும்போது அல்லது வடக்கு கிழக்கில் இருக்கும்போது ஒன்றயும் சிங்கள பகுதியில் இருக்கும்போது ஒன்றயும் கூற கூடாது.
  17. வரும் தேர்தலில் சீனியர் சிடிசென்ஸ் இதட்கு பதில் வழங்குவார்கள். அனாலும் உங்களுக்கு ஏன் ஒட்டு போட வேண்டும் என்று என்பதையும் கூறினால் நல்லது. அதாவது அவர்களுக்கு எதனை வீத வட்டி கொடுப்பீர்கள் என்று கூறினால் நல்லது.
  18. அதையெல்லாம் கேட்க கூடாது. கேடடால் நீங்கள் துரோகியாக்க படுவீர்கள். அவரின் அரசியல் அறிவையும் அரசியல் செல்வாக்கையும், ஒரு அரசியல் தீர்வை எழுதும் தகமையயும் , உலகத்தலைவர்களால் ஏற்றுக்கொள்ள படடதையும் இவர்கள் ஏற்று கொள்ள தயாராகவில்லை. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறார்கள்.
  19. ஒரு பானை சோற்றிட்கு ஒரு சோறு பதம். பேராசிரியர் துரைராஜா பேராதனை பல்கலையில் இருக்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்கள பேராசிரியர்களைவிட இவரைத்தான் மரியாதைக்குரியவராக பார்த்தார்கள். இவரைத்தான் ஆதரித்தார்கள். அவர் புற்று நோயால் பாதித்திருந்த வேளை அவருக்கு எந்த விதமான உதவியையும் செய்ய ஆயத்தமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக புலிகளுக்கு நிலக்கீழ் கட்டிடங்களை அமைக்க வடிவமைப்பு செய்தார் என்ற குற்ற சாட்டுக்களும் இருந்தது. அதை எல்லாம் அவர்கள் பார்க்கவில்லை. நல்லவர்கள் கெடடவர்கள் எல்லா இடமும் இருக்கிறார்கள். நீங்கள் சட்ட்ங்கள், நிலங்கள், அதிகாரங்கள் பற்றி பேசுகிறீர்கள். இதெல்லாம் அரசியல் தீர்மானங்களினால்தான் நடைமுறை படுத்தலாம். எத்தனையோ தசாப்தங்களாக பேசி விட்டொம். இப்போது தீர்க்கமான தமிழ் தலமைகிடைத்திருக்கிறது. டெல்லியிலும் அலுவலகம் திறக்க போகிறார்களாம். பொறுத்திருப்போம்.
  20. நீங்கள் எழுதுவதை பார்த்தல் புலிகளையே நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். சோதியா அணி எந்த பகுதியை சேர்ந்தது? வன்னி படையணியுடன் இணைந்ததா? மன்னர் நகர் மனித புதை குழி எத்தனையோ காலத்துக்கு முட்பட்ட்து. அதை நூற்றுக்கு நூறு வீதம் கூறலாம். அங்குள்ள மக்களும் அதைத்தான் கூறுகிறார்கள்.
  21. இனி தமிழரசு கடசியெல்லாம் கிடையாது. இந்த கட்சியும் இப்போது டெலோ, புளொட் , ஈபீ, EPRLF போன்ற ஒரு இயக்கம்தான். இனிஅவர்களால்தனியாக இயங்க முடியாது. எப்படியும் அவர்களுடன் கூடடணி வைத்து ஒரு கட்சியாக பதிவு செய்யத்தான் போகிறார்கள். எனவே தமிழரசு கட்சியின் கதை முடியாதான் போகின்றது. எல்லோரும் சேர்ந்து கேட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகி மீண்டும் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய போகின்றார்கள். அவர்கள் பிழைப்பு பரவாயில்லை. பாவம் அப்பாவி ஏழை தமிழ் மக்கள். நம்பி நம்பி ஏமாறும் ஒரு கூடடம்.
  22. இனி தமிழரசு கடசியெல்லாம் கிடையாது. இந்த கட்சியும் இப்போது டெலோ, புளொட் , ஈபீ, EPRLF போன்ற ஒரு இயக்கம்தான். இனிஅவர்களால்தனியாக இயங்க முடியாது. எப்படியும் அவர்களுடன் கூடடணி வைத்து ஒரு கட்சியாக பதிவு செய்யத்தான் போகிறார்கள். எனவே தமிழரசு கட்சியின் கதை முடியாதான் போகின்றது. எல்லோரும் சேர்ந்து கேட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகி மீண்டும் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய போகின்றார்கள். அவர்கள் பிழைப்பு பரவாயில்லை. பாவம் அப்பாவி ஏழை தமிழ் மக்கள். நம்பி நம்பி ஏமாறும் ஒரு கூடடம்.
  23. ஐயாவின் ஆலோசனை நன்றாக இருக்கிறது. எல்லா கட்சிகளும் ஒன்றிய அரசிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி முடித்தால்தான் உண்டு. அதாவது இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இலங்கை எல்லைக்குள்ளும் மீன்பிடிக்கும் அதிகாரத்தை கொடுப்பதுடன் , எல்லை மீறி போவாரை கைது செய்வதட்கும் ஆலோசனை வழங்கினால் பிரச்சினை முடிந்து விடும்.
  24. உங்கள் கருத்தை வரவேட்கிறோம். இலங்கைமக்கள் பக்கம் இருக்கும்நியாயத்தை இந்திய மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.