Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பசுவூர்க்கோபி

  1. புங்கையூரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
  2. உங்களின் வரிகள் எனக்கு உற்சாகம் தருகிறது.உளமார்ந்த நன்றிகள்.
  3. நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா வரமுடியாமல் போனதிற்கு நானும் வருந்துகிறேன். இலங்கை இந்தியா போய்வந்தேன். நெஞ்சார்ந்த நன்றிகள்.
  4. வாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் எம் வாழ்வு சிறக்கத் தந்தாய். இத்தனையும் தந்த உன்னை மறக்கலாமோ? இடையில் வந்த பணத்தின்பின் ஓடலாமோ? செத்தபின்பும் செயற்கை என்றும் வருவதில்லை சிறந்த இந்த இயற்கை எம்மைப் பிரிவதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி. 17.01.2024
  5. நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை! *********************************** ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம் அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம் மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது. கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம். சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும் சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும் எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல் தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும். வேலைக்கு மட்டும் படிக்கின்ற பாடங்கள்-பின்பு வேதனை தந்து வீதிக்கும் வரலாம். வேலை இருக்கென படிக்கின்ற தொழிற்க் கல்வி வீட்டையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம். காற்றுள்ள போதே தூற்றுவாய் நெல்லை-அதேபோல் காலம் இருக்கையில் கல்வியைத் தேடு பாலை வனம்கூட சோலைவனமாகும்-இல்லையேல் படுக்கின்ற பாய்கூட வெறுப்பாவே பார்க்கும். பட்டங்கள் பெற்று நீ உயர்ந்து போனாலும்-கீழே பார்க்க மறக்காதே? உன்கால்கள் நிற்பதை அப்பா,அம்மா, ஆசிரியர் தோள்களில்.. அவர்களின் மகிழ்வே உன் உயரத்தின் எல்லை. ஆசிரியப் பணியை போற்றுவோம் உலகில் அவர்கள் இல்லையேல் அகிலமே இருளில் காலா காலமும் புது,புது கல்வியைக் கற்று காசினி உயர பல கடமைகள் செய்வோம். -பசுவூர்க்கோபி.
  6. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது. இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. அன்றுபோல் என் தீவு வேண்டும் ************************ அம்மாவின் அன்பு வேண்டும் அப்பாவின் கருணை வேண்டும் பனை தென்னை உணவு வேண்டும் பாசத்தின் உறவு வேண்டும் பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை பாய்தன்னில் உறங்க வேண்டும் கூள் காச்சிக் குடிக்க வேண்டும் கொண்டாடி மகிழவேண்டும். உரல் இடித்து சம்பல் வேண்டும் ஒடியல் பிட்டு கலந்து வேண்டும் மண்சட்டி சமையல் வேண்டும்-அந்த மகிழ்வான பொழுது வேண்டும். வெடி கொளுத்தும் பொங்கல் வேண்டும் கிறிஸ்மஸ் தாத்தா.. வீட்டுக்கு வரவும் வேண்டும் அயலவர்கள் கூட வேண்டும்-பழய அன்பு மழை பொழிய வேண்டும் வெளிநாட்டில் வாழும் போதும்-ஊர் விட்டு வந்த நினைவே தோன்றும் அழகான என்னூர் போல-இந்த அகிலத்தில் நான் கண்டதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  7. உனக்குமட்டுமா?உலகம். ********************** எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ பெரியவன் என்பது யாருக்குத் தெரியும். உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி உலகுக்கு வருவது எத்தனை கோடி உலகு எனக்கு கீழென நினைத்தவன் ஒருவன் கூட உயிரோடு இல்லை தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை. வாழும் போது பணக்காரன்,ஏழை வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே காலையும் மாலையும் சூரிய,சந்திரன் காணாமல் போனால் உன்னிலை என்ன வாழும் வயசோ நூறாண்டு காலம் வையகம் உனதென போர்கள் செய்கிறாய். காலைச் சூரியன் உதிக்காவிட்டால் கறண்டால் வெளிச்சம் கொடுக்கவா முடியும். அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை நெஞ்சக் கறள்களை நீக்கியெறிவோம் நின்மதியான நல் வாழ்வினைப் பெறுவோம். -பசுவூர்க்கோபி.
  8. உண்மைதான். நன்றிகள் சுவி அண்ணா. வினைவிதைத்தவன் வினை அறுப்பான் நீங்கல் சொல்வது உண்மையே. நன்றிகள் புங்கையூரன் அவர்களே.
  9. மகிழ்வோடு நன்றிகள் தோழர் நடத்தினால் நாஷம்தான் பொறுத்திருந்து பார்ப்போம் மகிழ்வோடு நன்றிகள் alvayan
  10. எங்கே போகிறது எம்திருநாடு! ************************* அழகிய இலங்கை ஆக்கிரமிப்புகள் இருந்தாலும்-மக்கள் ஒருகாலமும் உணவுக்கு கையேந்தியதாய் வரலாறு இருந்ததில்லை. இடையில்.. உண்னமுடியாத வாழைக்கிழங்கையும் உணவாய்யுண்டு தேங்காயோடு தேனீர் குடித்தோம். பாணுகாக கியூவில் பட்டினி கிடந்தோம்-என சிறிமாவின் காலமும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிப் போச்சு. ஆனால் இன்றோ அதைவிடவும் கொடுமை பார்க்குமிடமெல்லாம் கியூ பாணுக்கும், பல்பொருளுக்கும் பால்குடிகளின் பால்மாவுக்கும் சமையல்எரி வாயுவுக்கும் சாம்பாறு மரக்கறிகட்கும் மண்ணெண்ணை பெற்றோள் மாவு அரிசி யாவுக்குமே! மக்கள் படும் பாடு சொல்லிலடங்காது. விடிவை நினைக்கவே பயமாக இருகிறது எழுந்தவுடன் அம்மா பசிக்குது என அழும் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து அழத்தான் முடிகிறது-என அன்றாடம் உழைக்கின்ற தாய் தந்தைகள். விலைவாசி என்னும் மலையை மக்கள் தலையில் வைத்து தூக்கி நடவென சொல்லுகிறது அரசு. பட்டினியாலும்- மின் வெட்டாலும் சமநிலை படுத்தப்படிருக்கும் ஒரேநாடு ஒரேகொள்கை கோனுயர குடியுயரும்-என வாக்களித்த.. யுத்தம் தெரியாத சகோதர இன மக்களும் கோனையுயர்த்திவிட்டு அவர்கள்போடும் பொருளாதார-பசி பட்டினிகுண்டுகளுக்கு பலியாகும் நிலையில் இன்றோ வீதியில். எனியாவது அரசு போர்வெற்றியை விடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புமா? அல்லது கைமாறிக் கொடுக்குமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். -பசுவூர்க்கோபி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.