Everything posted by நன்னிச் சோழன்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 21 04.12.1990 சப்பித் தின்னுவன் என்று சொன்ன வார்த்தையிலேயே அந்த மூதாட்டியின் குமுறும் இதயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே தொடர்ந்தும் உரையாடினேன். அவற்ற பேர் என்ன ஆச்சி? வேலாயுதம் கனகரட்ணம். என்ன வேலை செய்யிறவர்? அவர் ஒரு ஏலாவாளிமோனை. கூலி வேலைதான் செய்யிறவர். அவருக்கு எத்தினை வயசு? அவ்வளவா இல்லை மோனை. ஒரு முப்பத்தைஞ்சு இருக்கும். மகளுக்கு எத்தினை பிள்ளையள்! நாலு. இதொண்டும்தான் பெட்டை. அந்தா ஒண்டு, மற்றது விளையாடப்போட்டுது. இங்க ரெண்டும் நிக்குது. இதுகளோட நான் என்ன செய்ய ஏலும். ஏன் தாய் எங்க போட்டா? அவள்.... வீட்ட தான். அங்கதான் பிரச்சினை யெண்டு வந்திட்டீங்களே, பிறகேன் அங்கை போறா?; அங் கன கிடக்கிற மாங்காய அத இத பொறுக்கிக் கொண்டு வந்து வித்தா ஏதாலும் வாங்கலாம்தானே மோன. இங்க ஏதாவது உதவி கிடைக்குதே? மண்டூரில் தந்ததுதான் பிறகு ஒண்டும் கிடைக்கேல்ல. அப்ப மருந்துகளுக்கு என்ன செய்யிறீங்கள்? மருந்து ஒண்டும் இல்ல. இதுகள் காட்டில் கிடக்கிற பூச்சிகள். (அகதிக ளைக் காட்டி) அப்ப வருத்தம் வந்தா? வருத்தம் வந்தா மண்டூர் ஆஸ்பத்திரிக்குப் போறதுதான்: மண்டூர் ஆஸ்பத்திரி எத்தினை மைல்? எனக்கு இந்த மைல் கணக்கெல்லாம் தெரியாது மோனை. நடக்கிறது தான் நடந்து மண்டூர் வந்தா நிக்கவேண்டியது தான். அங்க போனா அவன் டாக்குத்தனுக்கு காசு, ஏன் அது அரசாங்க ஆஸ்பத்திரி தானே? அவன் குடிகார டாக்குத்தனுக்கு காசு குடுத்தாத்தான் மருத்து, ஏ... எங்க... காசு இருக்கா பத்து ரூபா தா... இஞ்ச இந்தப் புள்ளக்கி காதுக் குத்து... காசு இல்ல கொண்டு போக வச்சிருக்கிறன். அப்ப நீங்கள் திரும்பி உங்கட இடத்த போக முடியாதே? எங்க மோனை போற உடுத்த பாவாடையோட ஓடிவந்தது மோனை. ஆக்கின சோறுசாப்பிட இல்ல. வீட்டில் உப்புரின்கூடபொறுக்கினவங்கள் ஆர் பொறுக்கினது? சிங்களவன்தான். இப்ப கெதியா எங்களுக்கு வீடு கட் டித்தர வேணும். நான் என்ர வீட்டயெண்டா மூலேக்கை கிடப்பன். காட்டுக்குப்போவன். (மல சல கூடத்திற்கு) இங்க பார் என்னெண்டு இருக்கிற. இப்படி நீங்கள் எத்தினை குடும்பம் இருக்கிறீங்கள் 24 குடும்பம். 'அப்ப ஆச்சி வாறம்' என்றவாறே விடைபெற்றோம். அங்கிருந்து தம்பலவத்தை என்னும் இடத்திற்குச் சென் றோம். இந்தப் பகுதி தற்போது அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்ப தாகத் தெரிவித்தனர். எமது பயணத்தில் ஆகக்கூடிய தூரம் சென்ற இடம் என்று குறிப்பிட முடியுமானால் இந்தக் கிராமத்தைத்தான் சொல்ல முடியும். எனவே அந்தப்பகுதிப் பிரதேசப் பொறுப்பாளரிடம் 'இந்தப் பகுதியில் முஸ்லிம் ஆக்களால் பிரச்சினை யில்லையே?' என்று கேட்டேன். ஏன் முந்தநாள் கூட ஒரு அறுபது பேரளவில் வந்தவங்கள் - ஆர்? முஸ்லிம்களும் சிங்களவனு களும் தான். நம்மட பையனுகள் போய்த் தான் அடிச்சுக் கலைச்சது? ‘அடிக்கடி வருவாங்கள்’ என்று சொன்னார் அவர். தம்பலவத்தை கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள அகதிகள் முகாமுக்குள் வாகனம் போய் நின்றது. நிர்வாணமான நிலையில் ஒரு பையன் நின்றான். அகதி முகாம்கள் எல்லாவற்றிலுமே நிர்வாணக்கோலம் சகஜம் தான். வீடுகளில் இருந்து ஓடி வந்தவர்கள் கையில் அகப்பட்டதை தூக்கிக் கொண்டு வந்தபோது உடுப்புகளைப் பற்றி அக்கறை எடுக்க முடியாது தான். முகாமைச் சுற் றிப் பார்த்தபடியே வந்தேன். வறுமை நிலையிலும் செந்தளிப்பான முகத்தைக் கொண்டிருந்த குடும்பப்பெண் ஒருவரைக் கண்டேன். அரிவாளில் மரக்கறி வெட்டிக் கொண்டிருந்தார். அவரோடு உரையாடத் தொடங்கினேன். அம்மா உங்கடபேர் என்ன? ராஜேஸ்வரி. உங்கட அவற்ற பேர்? தெய்வநாயகம். உங்கட ஊர் எது? சென்றல்காம்ப் இங்க வந்து எவ்வளவு காலம்? குழப்படி துடங்கினோண்ணை வெட்டக்கிறங்கினதுதான். உடனே இஞ்சை வந்திட்டீங்களோ? இல்ல முதல்ல 14 பள்ளியிலே இருந்து, மறுகா அன்னமலை பள்ளி, 46 பள்ளி துரந்தியன் மடுபள்ளியெண்டு போய் கடசியா இங்க வந்திருக்கிறம். இப்ப திரும்பி உங்கட வீட்டபோகேலாதோ? போகேலாது. எங்களுக்கு ரெண்டு வீடு, ஒருகடை இருந்தது. எல்லாத்தையும் பத்த வைச்சுப்போட்டாங்கள். ஆர் பத்தவைச்சது? முசிலிம் ஆக்களும், ஊர்காவல்படையும். இனி வீட்டை போகேலாது ஏதாவதொரு முடிவு வந்தால் தான் போகலாம். அதுவரைக்கும் இங்கின கிடந்து சாக வேண்டியதுதான். இங்க ஆரும் வந்து உங்களுக்கு உதவிசெய்தவையே? விதானைமார் ஒருக்கா தந்தவை. இந்தத் தம்பிமார்தான் (புலிகள்) ரெண்டுதரம் வந்து கொஞ்ச சாமான் தந்தவை. சோறாக்கக் கூட பானை இல்லாமத்தான் வந்தனாங்கள். கடைசியா இங்கின இருக்கிற தம்பி தான் பானை ஒண்டு தந்தவர். உங்கட ஊரில் எவ்வளவு குடும்பம் இப்பிடி அகதியாப் போனது? ஒரு... இருநூறு குடும்பம். எங்கட சென்றல்காம்ப், 3ம் வட்டாரம் எல்லாம் எழும் பீட்டுது. ஊர்காவல் படையால் ஆரும் செத்திருக்கினமே? ஓ கனபேர். பேர் தெரியுமே? குமார் எண்ட ஆள் மறுகா... சாமி... சுரேஷ்... சினப்பெடியன்... வட்ட விதானையற்ற மகள். அதுசரி எங்கை உங்கட அவர்? அவர் கல்முனைக்கு போட்டார். கல்முனைக்கு போறது பயமில்லையே அடிக்கடி முஸ்லிம் ஊர்காவல்படையின்ர குழப்படி எண்டு கேள்விப்படுறம் ஏன் அங்கை போனவர். அங்கை பிரச்சினைதானே? பிரச்சினைதான் பயந்து பயந்து தான் போறவர். எத்தினை மணிக்கு வருவார்? மாங்காய் கொண்டு போனவர் அதவித்துத்தான் ஏதாவது சாமான் வாங்கிவரவேணும். இப்ப வேணும். இப்ப வாறநேரம் தான். இன்னும் காணயில்ல எண்டுதான் யோசினையாய்க் கிடக்கு என்று சொன்னார். ஒருவிதபீதி முகத்தில் படர் வதை அவதானிக்க முடிந்தது. “சரிவாறம்” அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன் போகும் வழியில் பலர் எம்மைமறித்து. “எங்கட பிள் ளையாரைக் கொண்டு போயிட்டாங்கள் நீங்கள் தான் எப்படியாவது பிள்ளையாரை எடுத்துத் தரவேனும் நாங்கள் கும்புடுறதுக்கு சாமி இல்லாமல் இருக்கிறம் என்றனர். “ஆர்” என்றேன். “முசிலிம் ஆக்கள்” என்றனர் “அவங்களுக்கேன் பிள்ளையார்?” என்றேன். அவங்களுக்கு வேற சமயம் எதுவும் இருக்கக் கூடாதெண்டுநிலைப் பாடு. அதுதான் பிள்ளையாரைக் கொண்டு போனவங்கள் “அது வெண்கலத்தில செய்த பிள்ளையார்” என்றனர். நாளாந்தம் முஸ்லிம் ஊர்காவல்படையால் தமது உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஏற்படும் ஆபத்தைவிட பிள்ளையாருக்கு ஏற் பட்ட ஆபத்துத்தான் அவர்களுக்கு பெரிதாகத் தெரிகிறது மனித உயிர்களை விட மதத்தின் மீதுள்ள நம்பிக்கை பெரிதாகிவிட்டது. அந்தளவுக்கு மதம் மக்களிடையே ஊடுருவியுள்ளது. அதனால் தான் அஷ்ரப் போன்றவர்களாலும் இலகுவில் மதவெறிகளைத் தூண்டக் கூடியதாக உள்ளது. எனக்கு 1977 ஆம் ஆண்டுக் காலம் நினைவுக்கு வந்தது. அப்போது திருக்கோன மலைக் கோட்டைவாசலில் இருந்த பிள்ளையாரைத் தூக்கி கடலில் போட்ட சிங்களவர் கணப தெய்யோ நாண்ட கீயா! (பிள்ளையார் குளிக்கப் போய்விட்டார்) என்று சுவரில் எழுதினார்கள். அன்று சிங்களவர்கள். இன்று முஸ்லிம்கள். இந்துக்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் பிள்ளையாரை வேண்டித்தான் செய்வார்கள். இவர்களும் ஏதோ ஒரு வழியில் பிள்ளையாருடன் சம்பந்தப்படுகிறார்கள். பௌத்தத்தைத் தவிர வேறு மதம் இலங்கையில் இருக்கக் கூடாது என்ற கருத்தை புத்த பிக்குகளும் சிங்கள அரசியல்வாதிகளும் சாதாரண சிங்கள மக்களுக்கு ஊட்டினர். அதன் விளைவாக இன்னும் இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதேபோல இன்று அஷ்ரப் குறுகிய அரசியல் லாபத்துக்காக இஸ்லாமிய வெறியை ஊட்டி மேலும், இரத்தம் சிந்தப்படும் நிலையை தொடரச் செய்கிறார் என்பதை உணரமுடிந்தது. அதனால்தான் காத்தான்குடியில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் பிடித்து அரிந்த சீமெந்து கல்லில் முகத்தைத் தேய்த்துத் துன்புறுத்தினார்கள். இதுவரை இரு கிறிஸ்தவ மதகுருமாரை முஸ்லிம்கள் கொன்றிருக்கிறார் கள். உலகில் மதத்திற்காக மதத்தின்பேரால் நடந்தயுத்தங்கள் தான்கூடு தல். மதச்சன்டையில் செத்தவர் தொகைதான் கூட என்பது திரும்பவும் நினைவுக்கு வந்தது. அத்துடன் காக்காச்சி வெட்டையிலும் தம்பலவத் தையிலும் நான் கேள்விப்பட்ட விடயங்கள் ஒரேமாதிரியாக இருந்தன. இரண்டு இடங்க ளிலும் தமக்கு மரணம் நேரும் என்று தெரிந்து கொண்டும் மரணப் பொறிக்குள் போகத் தயாராக இருக்கிறார்கள் அந்த மக்கள் இரண்டு இடங்களிலும் மாங்காயைப் பொறுக்கிவிற்று கிடைக்கும் பணத்தில் பிள்ளைகளுக்குசாப்பாடுகொடுக்க நினைக்கிறார்கள். அங்கே சிங்களவரால் தொல்லை இங்கே முஸ்லிம்களால் தொல்லை. எனினும் வறுமையின் கோரம் தான் அந்த மக்களை உயிரைச் சாதாரணமாக நினைக்கவைக்கிறது. (தொடரும்)
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 20 03.12.1990 ஆற்றங்கரையிலிருந்து திரும்பி வந்தோம். மகிழடித் தீவுச் சந்தியில் லான்ட்குறோசரை நிறுத்தினார் கரிகாலன். அங்கு நின்றவர்களில் “மக்கள்” என்று அழைக்கப்படுபவரோடு உரையாடத் தொடங்கினேன். என்ன மக்கள் எல்லாரும் படுவானுக்க வந்திட்டீர்கள்? மறுகா என்ன செய் யிற. காம்பெல்லா போட்டுட்டானுகள். ஏன் படுவானுக்கை ஆமிவரானோ? இங்கெ வாறதெண்டா எப்பாலுமிருந்துதான். ஆரைப்பத்தேல நாளாந்தம் எல்லோ ஆமியைக் காணோணும். அதவிட ரெலோக்காறன் திரியிறான். ரெலோவால் பிரச்சினையா? மறுகா... பார்காற (Bar) கன்னன் தம்பிராசாற்ற மகன் பாங்கிலே வேலை செய்யிறவர் அவரையு மெல்லோ சுட்டுட்டானுகள். ஏன் சுட்டாங்கள்? லக்ஸ்மனும் நீலனும் வாறவங்களோண்டு கேட்டானுகள். ஏதோ மறு மொழி சொன்னான் இவன். கடைசியில் சுட்டுப் போட்டானுகள் ஆர் இப்ப ரெலோவுக்கு பொறுப்பு? வேட் டோவோ போட்டோவோ எண்டு தான் சொல்றானுகள். ஆரைப் பத்தையில ஆர் பொறுப்பு? அவன் கிழவிறவி சரி இங்கை வந்திருக்கிறீர் களே உங்கட குடும்பம் எல்லாம் என்ன மாதிரி? ஊரில தான். அப்ப தொழில்? தொழில் செய்யக் கூடிய நிலைமையே. ஆத்துக்கு போகலாம் தானை? ஆத்துக்க இறங்கினா ஆமி சுட்டு போடுவான். மண்முனை துறையையே பாவிக்க வேண்டாமெண்டு சொல்லியிருக்கிறான். அப்ப ஆத்தில தொழில் செய்யிறவை பாடு? ஒருத்தருக்கும் தொழில் இல்ல. முஸ் லிம் ஆக்கள் மீன் பிடிக்கிறாங்களோ? அவங்கள் காத்தான் குடிப்பக்கமாக புடிக்கிறானுகள். சரி பிள்ளைகள் பாடு எப்படி? பிள்ளையள்... பிள்ளையள்... என்னத்தைச் சொல்ல இப்பிடியே சீரழியீறம். கண்கள் கலங்கச் சொல்கி றார். தொண்டை அடைத்துக்கொள்கிறது. மக்களிடமும் மற்றவர்களிடமும் விடை பெறுகிறோம். அம்பிளாந்துறை, பழுகாமம் போன்ற இடங்களையும் பார்த்தோம். அம்பிளாந் துறையில் ஏராளமான வீடுகள் தீயிடப்பட்டிருந்தன. ‘பெரியபோரதீவு’ முனைத் தீவுப்பகுதிகளுக்குச் சென்றோம். அங்குதான் மின்சாரம் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றுமாத காலத்தின் பின் மின்சார விளக்கு எரியும் வீடுகளைக் கண்டோம். அங்கிருந்து புறப்பட்டு கோயிற் போரதீவு, வெல்லாவெளிப் பகுதிகளுக்குச் சென்றோம். எம்மால் தகர்க்கப்பட்ட. வெல்லாவெளிப் பொலிஸ் நிலையம் இருந்த பகுதியைப் பார்வையிட்டோம். இனி தமிழீழத்தில் சிறிலங்கா அரசின் சிவில் நிர்வாகம் என்பது பகல் கனவு தான் என்பதை தகர்ந்திருந்த அக்கட்டிடங்கள் உறுதிப் படுத்தின. அங்கிருந்து பாலையடிவெட்டைப் பக்கமாகப் போகும்போது எங்களுடன் வந்த மண்டலம் என்பவர் "இவடத்தைதான் றீகண்ணை செத்தவர்” என்று ஒரு இடத்தைக் காட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்த மாவீரன் மறைந்த இடத்தில் சிறிது நேரம் தங்கியிருந்தோம். பாலையடி வெட்டையில் நிற்கும்போது வேட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணமிருந்தன பக்கியெல்ல கிராமத்தின் சிங்கள ஊர்காவல்படையினர் இவ்வாறு அடிக்கடி சுட்டுக் கொண்டிருப்பது வழக்கம் என்றார் கரிகாலன். அங்கிருந்து காக்காச்சி வெட்டை என்னும் இடத்தைச் சென்றடைந்தோம். அங்குள்ள அகதிகள் முகாமில் பெரும்பாலான குழந்தைகள் நிர்வாணமாகவே காணப்பட்னர். போஷாக்கின்மை அவர்களின் தோற்றத்தில் தெரிந்தது. இடுப்பில் ஒரு குழந்தையுடன் ஒருகிழவி காணப்பட்டார் அவரிடம் சென்றேன். ஆச்சி உங்கட பேர் என்ன? என்று கேட்டேன். "கந்தப்பர் தங்க முத்து" என்றார். இந்தப் பிள்ளை? என்று வினவினேன். “பேத்தி - என்ட மகளட புள்ள" என்றார். உங்கட சொந்த இடம் எது என்று கேட்டேன். ''37' என்றார். 37 என்றால் என்று கேட்டேன். "37ஆம் கொலனி. நாசிவன் வெளி'' என்றார். இந்தப் பிள்ளையின் தகப்பன் எங்கை? என்று கேட்டேன். "சுட்டுப் போட்டானுகள் சிங்களவனுகள், அவன்... சுட்ட வனை என்னட்டத்தந்தா சப்பித்தின்னுவன்'' என்றார். (தொடரும்)
- Ancient Tamil/ Tissamaharama Potsherd with ship graffito - layer of 1st century BC. (H. J. Weisshaar - trench 1G, 23/27, layer 18.jpg
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி மலையாளக் கடற்கரை
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி மலையாளக் கடற்கரை
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சென்னையில் பாவிக்கப்பட்ட ஒரு வகையான தோணி
-
veppu vallam, Kerala | வெப்பு வள்ளம்
From the album: Different types of boats used by Tamils historically
-
Thekkan Ody, Kerala | தெக்கனோடி
From the album: Different types of boats used by Tamils historically
-
Rameshwaram vaththai வத்தை
From the album: Different types of boats used by Tamils historically
-
Thiruvonathoni with Chundan Vallam, Kerala
From the album: Different types of boats used by Tamils historically
-
Iruttukutty, Odi vallam, Kerala| இருட்டுக்குத்தி அ ஓடி வள்ளம்
From the album: Different types of boats used by Tamils historically
-
Churulan vallam, Kerala | சுருளன் வள்ளம்
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வல வத்தை 1900+ முதுப்பேட்டையில் (பாக்கு நீரிணை) ஓடிய ஓர் வத்தை. இதுவும் பலகைக்கட்டு வத்தை தான், எனினும் சுக்கானுடன் மூன்று பாய்கள் உள்ளதால் இது வல வத்தை எனப்படும். இதன் கடிசு நீளமானது. length = 43 அடி beam = 4½ அடி depth 2½ அடி. பாயின் உயரம்: வலப்பாய் = 13 அரை அடி நடுப்பாய் =22 அடி கடைப்பாய் = 14 அரை அடி கடிசு (balance board) - 17 அடி
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பலகைக்கட்டு வத்தை 1900+ அதிராம்பட்டினத்தில் இருந்து உருவோட்டப்பட்ட(sail) வத்தை. இரட்டைக்கடிசு கொண்டது. இதன் கடிசு மிகவும் நீளமானது (l= 34 அடி). பலகைகள் கொண்டு கட்டப்பட்டதால் பலகைகட்டு வத்தை என்று பெயர்பெற்றது. எனினும் சுக்கான் இல்லை இதற்கு. நீளமான கலவோடு(hull) & மூன்று பாய் கொண்டது: length: 18 - 37 அடி beam : 2 - 3 அடி depth : 2½ அடி பலகைகட்டு வத்தை & வல வத்தை
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூம்புக்கட்டை கொண்ட ஒரு சின்னமரம் (விதப்பான (specific) கட்டுமர வகைப்பெயர் தெரியவில்லை) சோழமண்டல கடற்கரை
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கடலூரில் பாவிக்கப்பட்ட தோணி இதற்கு தூம்புக்கட்டை (outrigger) ஒன்று உள்ளது. சோழமண்டல கடற்கரையில் தூம்புக்கட்டை பாவிக்கப்படுவதில்லை என்ற கருத்தை இப்படிமம் இல்லாமல் செய்கிறது.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மன்னார் வளைகுடாவில் ஓடிய ஓர் வகை பெயர் தெரியா கடற்கலம்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பாம்பன் தோணி பாலத்திற்கு அண்டிய பகுதிகளில் (இராமேஸ்வரம் கடற்பரப்பு) ஓடிய தோணி.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தை 1900கள்
-
Karamadi vallam/ kamba vallam - kerala -- கரைமடி வள்ளம்/ கம்ப வள்ளம்.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வள்ளம் 1900+ ஆதிரம்பட்டனத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட வள்ளம். இதற்கு கடிசு உண்டு.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கண்ணாத்தோணி 1900+ கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான வள்ளம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது. ஒற்றை நெடுங்கட்டை (boom) இரட்டை நெடுங்கட்டை
-
Kayal Vallam.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஓடம் 1900+ திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட ஓடம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.
-
kerala vallam - unknown type name.jpg
From the album: Different types of boats used by Tamils historically