Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would appreciate hearing your thoughts and comments on this work in English. ✍️ Research and Analysis: Nane Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****
  2. Ammunition and equipment carried on the Wave Rider class vessels The Wave Rider–class vessels were fitted with navigation lights on top of the helm room (cabin), although the exact configuration varied from boat to boat. Some vessels carried two red and two green lights, while others had a single red and a single green light, and a few were equipped with only one red light. Certain boats also featured a rectangular deck light, and some had searchlights mounted on the cabin roof. In addition to these fittings, the cabins commonly displayed the Sea Tigers flag along with the national flag of Tamil Eelam. Significantly, the Tigers employed a diverse array of radar systems on their Wave Rider-class vessels, sourcing equipment from JRC, Furuno, Raymarine, and Koden. These systems often incorporated specific components, such as the M1932 Mk2 display unit. Image 1: Left to Right: Rectangular deck light, Tamil Eelam National Flag, Sea Tigers flag, search light, KODEN radar and 4 navigation lights Image 2: Deck light mounted on a pole, which is fitted to the side rails and the Tamil Eelam flag fitted on top of the pole. Image 3: Top Left: A fully equipped Wave Rider class gunboat featuring a single red navigation light. | Top Right: A vessel featuring an open-array radar system, integrated red and green sidelights, and a dedicated deck light. | Bottom Left: A gunboat configured with a high-intensity searchlight, a red navigation light, and an auxiliary deck light. | Bottom Right: This gunboat is equipped with standard red and green navigation lights. The discovery of equipment aboard the Inthumathi, a Wave Rider-class vessel, provides significant insight into the technical capabilities and hardware utilized by Sea Tiger craft. Image 4: Boxes of ammunition include ammunition for GPMG, .50 BMG, and cannons. These were kept in the lower deck of the boat. Image 5: Left to Right, top row: Salt biscuit packet, Water bottles, JRC JMA-2343, 2 walkie-talkies, 2 military communication headset, GARMIN 152 (so a GA 29 External Antennae was also used), ICOM AT-140 HF Automatic Antenna Tuner | Left to Right, bottom row: Cobra 29 LTD Classic 40 Channel Custom CB Radio W/MICROPHONE, ICOM IC-M700PRO24 C Marine SSB Radio Image 6: Left to Right, notably: Ammunition boxes, one T-56 rifle with 4 mags and a assualt vest, heavy duty torches. Image 7: Top to Bottom: 3 Tamil Tigers indigenous produced bullet -resistant vests and 4 helmets. Image 8: This is a life jacket. *****
  3. மட்டு-அம்பாறை மகளிர் படையணியொன்று
  4. “சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார். அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார். தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார். எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள். அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார். எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும் அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம் எங்களுக்கு எதிராக போராடிய இவரால் எப்படி திலீபனுக்கு பூ வைக்க முடிகிறது என்று அதற்கு அவர் சொன்ன பதில் அவர் கூலிக்காக வந்த படியால் எமது தியாகம் பற்றி அறியாதவராக இருந்தார். எங்களிடம் வந்த பிறகு தான் எமது போராட்டத்துக்கு தனது பங்கும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். அவர் மட்டுமல்ல அவரது நாயும் எங்களுடன் தான் இருக்கிறது. இவர் பூ வைக்க மறந்தாலும் அவரின் நாய் பூ கொண்டு வந்து வைத்து விட்டுப் போகும். என்றார். எதிரியால் கூட விளங்கிக் கொண்ட எமது போராட்டத்தை சர்வதேசம் இன்றும் விளங்காமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.” நினைவுபகிர்வு – துன்னாலை செல்வம்
  5. 1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான், வாசு, அஜித்(பாம்பன்), பரன், றொபோட்(வெள்ளை) ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார். அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது(zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது.தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும். (இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்) அ.சேரா
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது. காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 28 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும்,பெண் போராளிகள் 23 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும் இருத்தல் முக்கியமானது. போராளிகள் தமக்கிடையே காதல் ஏற்படுமாயின் அது பற்றிய விபரத்தினை எழுத்து மூலம் துறைப் பொறுப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். துறைப்பொறுப்பாளர் அதனை ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். திருமண ஏற்பாட்டுக் குழு கூடிய அதைப்பற்றி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த பின் அந்த விபரத்தை தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கும். தேசியத்தலைவர் அவர்களது அங்கீகாரம் கிடைத்தபின் ஆண்,பெண் போராளிகளின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண சம்மதத்தோடு திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்யும். திருமண நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான உறவினர்கள், அத்தோடு துறை சார்ந்த போராளிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக அந்த திருமணம் இடம்பெறும். விடுதலைப்புலிகளால் நடாத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் தாலி அணிதலும் முக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தங்கத்திலான தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருக்கும். வழமையாக திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையிலேயே இந்தத் திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.சில மூத்த தளபதிகளின் திருமணங்களில் தேசியத் தலைவரும் திருமதி மதிவதனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். சில போராளிகளின் காதல் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன். நிதர்சனம் பகுதியில் கடமை புரிந்த தவா,எழில் ஆகியோர் களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. தவா அவர்கள் இவ்விடயத்தை திருமண ஏற்பாட்டுக் குழுவுக்கு அறியத் தந்தார். குழுவில் அங்கம் வகித்த புதுவை இரத்தினதுரையும் நானும்(தேவர் அண்ணா) தவா,எழில் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினோம். அப்போது எழிலனின் பெற்றோர் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அவரது மாமியார் மானிப்பாயில் இருப்பதாக எழில் தெரிவித்தார். புதுவை அவர்களும் நானும் சென்று மாமியாரைச் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறி அவர் மூலம் பெற்றோருக்கும் அறியத்தரப்பட்டு தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியோடு அந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றது. இதே விதமாக இன்னும் சில போராளிகளின் திருமணங்களும் நாம் போராளிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களோடு கலந்து பேசி அனைவரினதும் பூரண சம்மதங்களுடன் இடம்பெற்றிருக்கின்றன. புலிப்போராளிகளது திருமணங்களுக்கு தமிழீழ திருமண பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் சபையினர் முன்பாக ஆணும் பெண்ணும் உறுதிமொழிகளைக் கூறி கையொப்பங்கள் இடப்பட்டு சாட்சிகளின் ஒப்பங்களோடு அவை அங்கீகரிக்கப்பட்டன. இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் குடும்ப பராமரிப்பு இறுக்கமான நிதியை மாதாமாதம் இயக்கத்தின் நிதிப் பிரிவு வழங்கி வந்தடையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். --> தேவர் அண்ணா
  7. புலிகளின் சிறப்பு அணியொன்று பெரியவருக்கு பின்னால் நிற்பவர்: ரட்ணம் மாஸ்ரர்.
  8. மேஜர் சுவர்ணன் இம்ரான் பாண்டியன் படையணியின் ராதா விமான எதிர்ப்பு அணியில் வான்காப்பு வீரனாக பணியாற்றிய போது எடுத்த நிழற்படம்.
  9. லெப். கேணல் சேரமான் (பரமநாதன் சரவணபவா) - ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்தார். 04/04/2009
  10. அழியாத நினைவுகள் புகைப்படத்தை பார்த்ததும் கடந்த கால பயணத்தை பதிவு செய்கிறேன்… கோகுலன் அண்ணாவின் கீழ் பயணிக்கும் பொழுது சிறப்பு பயிற்சி ஒன்றுக்காக அனுப்பப்படுகிறோம் நானும் செந்தாழனும்... எங்களுக்கு அருகில் தான் சாள்ஸ் அன்ரனி கோபித் அண்ணாவின் முகாம் இருந்தது வட போர் முனை கிலாலி பகுதியில்...அவரோடு அன்று 5 போராளிகள் இருந்தார்கள் பாவலன்,மதுரன்,வளநெஞ்சன்,அறிவுச்சுடர்... இந்த புகைப்படத்தில் கோபித் அண்ணாவும் பாவலனும் இருக்கிறார்கள்… நான் ஒரு ஆசிரியர் துறை சார்ந்த கல்வியை அப்பொழுது நிறைவு செய்தபடியால் இவர்களோடு இணைந்து கொண்டோம் வட போர்முனை போராளிகள் சார்ந்து…ஐந்து மாதங்கள் ஒன்றாக பயணித்தோம் காலை நாலு முப்பது தொடக்கம் நள்ளிரவு 11 மணி வரை மிகக் கடுமையான பயிற்சிகள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடி துடுப்பாடிய நினைவுகள் அதிகம்… இதில் மேலும் ஒரு சகோதரர் இருக்கிறார் காண்டீபன் தூயவன் அரச அறிவியல் கல்லூரியில் ஒன்றாக கல்வி கற்றோம் மிகச் சிறந்த கல்வியாளர்…நான் புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னர் இரண்டு முறை கோபித் அண்ணாவோட உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று எங்களுக்கு சிறப்பாக சமைத்து தரும் மதுரன் அண்ணாவை விசாரித்தேன்…மேஜர் மதுரன் கேப்டன் அறிவிச்சுடர் இருவரும் வீரச் சாவடைந்துவிட்டார்கள் அவர்களைப் பற்றி இறுதியாக உரையாடினேன் கோபித் அண்ணாவோடு நோர்வே நாட்டிலிருந்து… அன்று நகுலன் அண்ணா துணை தளபதியாக இருந்தார் சாள்ஸ் அன்ரனி படையணியில் வீரமணி அண்ணா தளபதியாக இருக்கும் பொழுது நான் (லீமா சேரா)லாரன்ஸ் அண்ணாவோடு நகுலன் அண்ணாவை பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன் சந்திப்போம் சிறப்பாக வரவேற்பார் அன்புடன் நினைவுகள் இப்பொழுதும்…. லீமா சேரா மற்றும் நகுலன் அண்ணா இக்கச்சி பிரதேசத்தில் இருந்த போர் பயிற்சி கல்லூரியில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன் நினைவுகள் இன்றும்…ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிந்தேன்…லோரன்ஸ் அண்ணா ஆனந்தபுரம் முற்றுகையிலிருந்து காயப்பட்ட தகவலை மட்டும் அறிந்தேன் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து… எங்களைப் போன்றவர்கள் மரணிக்கும் வரை எங்கள் இனத்திற்காக நாங்கள் பயணித்த பாதைகள் பயணங்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கடந்து செல்ல முடியாமல் எங்களை காயப்படுத்துகிறது வலிகள் நிறைந்திருந்தாலும் தமிழ் இனத்திற்காக வாழ்ந்த மறவர்கள் நாங்கள்… எழுத்தாளர்: தரன் ஸ்ரீ💐
  11. நான் மே 15 அன்று காயமடைந்து, எனது சகாக்களால் முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்த இராணுவ வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டேன். பின்பு அவர்கள் என்னை ஆனந்தபுரம் ஊடக கைவேலி பாடசாலியில் இருந்த இன்னொரு இராணுவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்த இராணுவத்தினரும் இராணுவ வைத்தியர்களும் என்னை என்ன செய்வது என்று தொடர்பாடல் கருவி மூலம் பலருடனும் கதைத்துக்கொட்டிருந்தார்கள். நேரம் கிட்டத்தட்ட பி.ப.6.30 - 7.00 இருக்கும். ஓரளவுக்கு இருட்டி விட்டது. என்னை ஒரு இராணுவ ரக் (Truck) ஒன்றில் ஏற சொன்னார்கள். நான் ரக்கில் ஏற மிகவும் கஷ்டப்பட்டேன், எனது வலது கை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, நெஞ்சுக் காயமும் வயிற்றுக்காயமும் வலித்துக்கொண்டிருந்தது. ஒருவாறு வாகனத்தில் ஏறியபின் அங்கு நான் இருப்பதற்கு ஒரு மெல்லிய வாங்கு மட்டுமே போடப்பட்டிருந்தது. அதுவும் வாகனம் ஓடும்போதும் பள்ளத்தில் விழும் போதும் ஆடிக்கொண்டும் சரிந்து விழுந்து விடும் போலும் இருந்தது. வாகனத்தில் ஏறிய உடனே மெல்லிய இருட்டில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரத்தின் பின்பு எனக்கு எதிரே இருந்த வாங்கில் மூன்று பேர் இருப்பது தெரிந்தது. நன்கு கவனித்து பார்த்தேன். மூன்று பெண் போராளிகள்- கிட்டத்தட்ட 18-20 வயது இருக்கும். மூவருமே விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். அச்சம் கலந்த முகத்துடன் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத தவிப்போடு இருந்தார்கள்.என்னை யார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்னக்கு தெரியவில்லை. நாங்கள் சென்ற வாகனம் நீண்ட நேர பிரயாணத்திற்கு பின் ஒரு இடத்தில் ( ஒரு வீட்டின் முன் ) நின்றது. என்னை இறக்குவதற்கு முன் பெண் போராளிகள் மூவரையும் இறக்கி எடுத்தார்கள். அவர்கள் மூவரையும் இறக்கிய சிறிது நேரத்தின் பின் என்னையும் இறக்கினார்கள். அந்த இடத்தில் ஒரே இருள் மயம். தானாகவே பயம் வந்துவிடும் அளவிற்கு மயான அமைதியாக இருந்தது . என்னை அந்த வீட்டின் முன் பகுதியில் இருக்கச்சொன்னர்கள். ஒரு இராணுவ அதிகாரி வந்து என்னைப் பற்றி விசாரித்தார். பின்பு எனக்கு இரவு உணவு கொடுக்க சொல்லிவிட்டு காலையில் சந்திப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்பு நான் அவரை ஒரு நாளும் காணவில்லை. என்னை வைத்திருந்தது கிளிநொச்சி என்றும் அந்த வீடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் (TRO) அலுவலகம் என்பதும் அந்த சுவரில் ஒட்டி இருந்த அறிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என்னை சிறை வைத்திருந்த அதே வீட்டில் தான் அந்த பெண் போராளிகளையும் வைத்திருந்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் என்னை முகம் கழுவ வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கிருந்த ஒரு மாமரத்தில் புலிகளுடைய சில சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. அது பெரும்பாலும் அந்த பெண் போரளிகளுடையதாக இருக்க வேண்டும். அதன் பின்பு .................................................... thurairaajaa varatharaaja
  12. 2007 ஆம் ஆண்டு எனது அம்மாவை கடத்திச்சென்றார்கள் அப்போது அப்பா வீரச்சாவு அடைந்து சில காலங்களே தாண்டி இருந்தது என் தங்கைக்கு 6 வயது நானும் அக்காவும் பாடசாலை படித்துக்கொண்டு இருந்தோம். அன்று அம்மாவிற்கு அழைப்பு வந்தது. அக்கா நாங்கள் தொலைதூரம் நடந்து வந்ததால் பசியும் தாகமாகவும் இருக்கிறது எங்களுக்கு உணவு ஏதாவது எடுத்துக்கொண்டு மேல் வீதிக்கு வர முடியுமா என்று கேட்டார்கள், உடனே அம்மா குடிப்பதற்கு குளிர்பாணமும் உணவும் எடுத்துக்கொண்டு சென்றார் இது அம்மா அடிக்கடி இயக்கம் ஊருக்குள் வந்தால் செய்யும் விடையம்தான், ஆனால் மதியம் சென்ற அம்மா மாலை நேரமாகியம் வீடு வரவில்லை, நாங்கள் மாறி மாறி அழைப்பு எடுத்தோம் ஆனால் போன் நிறுத்தப்பட்டு இருந்தது, இரவு 9 மணிக்கு அழைப்பு வந்தது தம்பி உங்கள் அம்மாவை கடத்தி விட்டார்கள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று இயக்கம் அறிவித்தது, உண்மையை சொல்லப்போனால் அந்த காலப்பகுதியில் அயலவர் கூட எங்கள் வீடுகளுக்கு வர மாட்டார்கள் அடிக்கடி இராணுவம் கருணா குழு என்று எங்கள் வீட்டை அவதானித்துக்கொண்டே இருப்பார்கள், வீட்டில் நானும் என் மூன்று சகோதரிகளும்தான் அப்போது இரவு இரவாக அழுது விட்டு அப்படியே நித்திரை கொள்வோம், அடுத்து இரண்டு நாட்கள் பின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது... நாங்கள் ஒப்பாரி வைத்து அழுதோம் எங்க அம்மா இருக்கிறீங்க எப்போ வருவீங்க என்று, நான் வயல் வேலையா வந்தனான் வயல்ல வேலை முடிஞ்ச உடனே வாறன் என்று அழுது அழுது சொல்லுவா பிறகு எனக்கு வேலை கிடக்குது பிறகு கோல் பன்றன் என்று சொல்லிட்டு கோல் கட் பன்னிடுவா இப்படி தொடர்ந்து ஒரு கிழமை தாண்டியது, வீட்டில் சரியான உணவும் இல்லை தூக்கமும் இல்லை ஒரே ஒப்பாரியாக இருக்கும் வீடு. எட்டு நாட்கள் கழிந்து அழைப்பு வந்தது அம்மா இப்போ எங்கட வீட்டில் நிக்கிறா நாளைக்கு விடிய வீட்ட வருவா என ஒரு அக்கா அழைப்பு எடுத்து கூறினார், அடுத்த நாள் காலையில் அம்மா வீட்டிற்கு வந்தா நாங்கள் கட்டி அணைத்து அழுதோம் அம்மாவின் உடல் முழுவதும் இரத்தமும் தழும்புகளும் பதிந்து கிடந்தது, முதுகில் அணைத்து இடங்களும் வெடிப்பு காயம், எங்கே அழைத்து சென்றார்கள் என்று கேட்டோம், வீதியில் வைத்து வாகனத்தில் இழுத்து ஏற்றியவுடன் கண்களை கட்டினார்கள் சிறிது நேரத்தில் புகையிரத சத்தம் கேட்டது, பின் இறக்கி என்னை இழுத்து சென்று இரு கைகளையும் சங்கிலியால் கட்டினார்கள், அங்கே அடிக்கடி அழு குரல்கள் கேட்கும் கதறி அழும் சத்தம் கேட்கும் எப்போதும் இரத்த வாடையாக இருக்கும் அடிக்கடி துப்பாக்கி சூடு சத்தம் கேட்கும் என்றார், போன் எடுக்கும்போது கண்களில் கட்டியுள்ள துணியை அவிழ்ப்பார்கள் அப்போது அந்த இடம் முழுவதும் இரத்தமாக இருக்கும், நான் பேசுவதை சுற்றி நின்று கேட்பார்கள், அதன் பின் கேள்விகள் கேட்டு கேட்டு அடிப்பார்கள் நான் என்ட பிள்ளைகளுக்கு யாரும் இல்லை என்று சொல்லி அழுவேன் அப்போது அடிப்பார்கள் என்னால் வேதனை தாங்க முடியாமல் கத்துவேன் பின் சிறிது நேரம் களித்து வந்து அடிப்பார்கள் என்று கூறி அழுதா, இறுதியாக ஓர்சில் சந்தியில் கொண்டு சென்று சுடுவதற்கு தீர்மானித்தார்கள், பின் வாகனத்தில் ஏற்றினார்கள் வாகனத்தில் இருந்த ஒருவன் இந்த அம்மா பாவம் விட்டு விடுவோம் என்று கூற ஓர்சில் சந்தியின் பக்கம் ஒரு வீதியில் இரண்டு கைகளையும் கண்கள் வாயை கட்டியபடி வாகனத்தில் இருந்து தள்ளி விட்டார்களாம், அதன் பின் அங்கு தெரிந்த ஒருவரின் வீட்டிற்கு சென்று பின் வீடு வந்து சேர்ந்தார் அம்மா. இந்த வதை முகாம் பற்றி நேற்று படித்தேன் அம்மா கூறிய விடையங்கள் ஒத்து போவதால் எழுதுகிறேன். எழுதும்போது அம்மா பட்ட வேதனைகளை நினைக்கும்போது கண்கள் அழுகின்றது நான் அணைத்தையும் மறந்து வாழ போவது இல்லை என்றோ ஓர்நாள் அணைத்திற்கும் இவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும். வரலாற்றை படியுங்கள், வரலாற்றை படையுங்கள், வரலாற்றை மறந்த இனம் வாழாது, வரலாறே எங்கள் வழிகாட்டி. செந்தமிழன்
  13. ஆனந்தபுரத்தின் கோர தாண்டவத்திற்குள் வெளிவர முடியாமல் சிக்குண்டு கிடக்கிறோம் இன்று ஒரு உடைந்த வீட்டின் மூலையில் இருந்து நாங்கள் 5 பேர் அழுகிறோம், அவரை பாதுகாக்க பயிற்சி பெற்றவர்கள் இறுதியில் எங்களை காப்பாற்ற வீரகாவியம் ஆகிப்போனார். கோபித் அண்ணா விடுதலையாளர்களில் ஓர் வீர சரித்திர நாயகன். வீரவணக்கம் தோழர் செந்தமிழன்
  14. இவர்களின் முழு வரலாறு எனக்குத் தெரியாது. தெரிந்ததையெல்லாம் எழுதிவைத்துச் செல்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தெரியுமென்றால் வரலாற்றை பதியுங்கள் உறவுகளே. இது நடந்தது 1997/1998 காலம் என்று நினைவு. ரத்வத்தை மீது கரும்புலித் தாக்குதல் நடத்தவெனு ஒரு மறைமுக கரும்புலிகள் அணியொன்று சென்றது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ரத்வத்தை வரும் போது அவன் மேல் தாக்குதல் நடத்த வேண்டும். ரத்வத்தையின் பாதுகாப்பு வீரர்கள் போன்று உடையணிந்து அவர்களைப் போன்றே ஒரு ஊர்தியில் ஏறி உட்புகுந்தனர் கரும்புலிகள். ஆனால் ரத்வத்தை வருவதற்கு பல நிமிடங்கள் தாமதமானதால் உள்ளே வந்தவர்கள் யார் என்ற ஐயம் எழ எல்லாம் குழம்பிப் போனது. சிங்களம் மோசமான விடயமொன்று நடைபெறயிருப்பதை எண்ணி விழித்தது. கரும்புலிகள் அங்ருந்த மண்டபத்திற்குள் நுழைந்து நிலையெடுத்துகொள்கின்றனர். சண்டை வெடிக்கிறது. வேட்டுகளுக்கு நடுவணில் தண்ணீர் தாகம் எடுக்க அங்கிருந்த சிங்களப் பெண்மணியிடம் தண்ணீர் கேட்டார் ஓர் கரும்புலி வீரன். அவரும் தண்ணீர் கொடுத்தார். தாகம் தீர குடித்த வீரன் அப்பெண்மணியின் குழந்தையை வாஞ்சையோடு அரவணைத்து நாங்கள் உங்களைக் காயப்படுத்த மாட்டோம், கவலை வேண்டாம் என்று கூறியதாக பின்னாளில் அப்பெண்மணி கூறினாராம். இது நடந்துகொண்டிருந்த சமநேரத்தில் வாயிற் கதவிற்குள்ளால் உடைத்து பாய்ந்து உள்நுழைந்த சில சிங்கள வீரர்கள் மீது கரும்புலி மறவனொருவன் பாய்ந்து தனது சாஜரை இயக்கி வெடித்திச் சிதறினான். தொடர்ந்த சமரில் எமது தேசத்தின் நெருப்புகுழந்தைகள் யாவரும் தணலாகி விழிமூடிப் போயினராம். இது நான் கேள்விப்பட்ட தகவலே. நானொன்றும் முன்னாள் புலிவீரனன்று. ஆகவே முழு வரலாறு தெரிஞ்சாக்கள் வரலாற்றை எழுதிவையுங்கோ. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  15. இதில் சில பாகங்கள் விடுபட்டுள்ளன. அவை அனைத்தையும் சேகரித்து முழுமையான நூலாக்கி இதை வெளியிட்டு வைக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இது எமது தேசத்தின் இன்றியமையாத நூலாகும். இதை ஈழத்தமிழர்கள் தான் வெளியிடவேண்டும் என்றில்லை. தமிழகத் தமிழர்களும் வெளியிடலாம். யார் குற்றினாலும் அரிசியானால் சரி.
  16. இத்தகவலானது வன்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகர் திருமலையிலிருந்த சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பிய தமிழீழப் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய்வுப் பிரிவில் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றிய போராளியின் வாக்குமூலம் ஆகும். இப்போராளி 2009 சனவரி மாதம் குடும்பச் சிக்கல் காரணமாக உறவினர்களாலையே காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டார். பின்னர் சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பியோடினார். இவர் 2022ம் ஆண்டு வழங்கிய ஓர் வாக்குமூலத்தின் ஒரு பகுதியிலிருந்த தகவலே இங்கு கட்டுரையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேடர் இனப் போராளியும் தமிழீழ புலனாய்வுத்துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர் ஆவார். அவரும் சூடைக்குடாவிலிருந்து தப்பிய போராளியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாவர். அவ் வேடர் இனப் போராளியை இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் தான் சூடைக்குடா வதைமுகாமிற்கு சிங்களவர் சிறைப்படுத்தி கொண்டுவந்தார்கள். அவ்வேடர் இனப் போராளி உயர்ந்த நெடுவலானவர். அவரை கொண்டு வந்த உடனேயே தான் விடுதலைப்புலி என்பதை ஒத்துகொண்டதோடு தன்னிடம் கைச்சுடுகலனொன்று உள்ளதென்றும் அதைத் தருவதாகவும் தெரிவித்தார். எனவே அவருக்கு உடனே சித்திரவதை நடக்கவில்லை. அவ்வேடர் இனப் போராளியை இந்தத் தமிழ்ப் போராளி அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு அருகிலிருந்த ஆழிப்பேரலை வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டிலுக்குள் அடைத்திருந்தார்கள். கொண்டுவந்த அடுத்தநாள் வேடர் இனப் போராளிக்கு பின்னால் போடப்பட்டிருந்த மாஞ்சை (கைவிலங்கு) கழட்டி முன்னுக்கு மாற்றும் போது உதறிக்கொண்டு சிங்களப் படையினன் ஒருவருக்கு இடித்தார். இடித்த இடியில் மூக்கு உடைந்தது. உடனே திமிறி எழுந்து அருகிலிருந்த கம்பியை எடுத்து அடித்தார். அடித்த அடியில் இரு கடற்படையினரின் தலையுடைந்து செத்து மடிந்தனர். மற்றொருவருக்கு கை தூளாய்ப் போனது. இந்தக் களேபரம் நடந்துகொண்டிருக்கையில் வாசலில் காவலாளியாக நின்ற மற்றொரு கடற்படையினன் ஓடிவந்து வெடிவைத்தான், அவ்வேடர் இனப் புலிவீரனை நோக்கி. படபடவென்று வெடிபட்டது. அந்த இடத்திலேயே தலை சிதறியது போல வீழ்ந்து வீரச்சாவடைந்தான், அவ்வேடர் இனப் புலிவீரன். இவை அனைத்தையும் மற்ற புலனாய்வுத்துறைப் போராளி தனது கண்களால் கண்டதாக சோகத்துடன் வாக்குமூலத்தில் பதிவுசெய்தார். ஊர் பெயர் எதுவும் எம்மால் அறிந்திரமுடியா அவ் வேடர் இனப்புலிவீரனுக்கு எம் தலை சாய்த்து வீரவணக்கத்தை தெரிவித்துகொள்வோம். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  17. பாகம் - 28 11.12.1990 அன்பான வாசகர்களே! 36 நாட்களாக வெளிவந்த “உதிக்கும் திசைநோக்கி உன்னத பயணம்" கட்டுரை தொடரைப் படித்திருப்பீர்கள். கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையை நேரில் தெரிந்துகொள்ள திரு. மாத்தயா அங்கு சென்றபோது அவருடன் கூடச்சென்ற நான் என்னால் முடித்தவரை அந்த மக்களின் அவல நிலைகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொடரின் மூலம் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது பத்துவீதமே என நான் கருதுகிறேன். அந்த அவலங்களின் உண்மை வடிவத்தை முழுமையாக எழுத்தில் வடிக்க என்னால் முடியவில்லை. அந்தளவுக்கு எழுத்துத் துறையில் எனக்கு அனுபவமில்லை. இத்துறையைப் பொறுத்தவரை நான் கற்றுக்குட்டிதான். உச்சக்கட்ட இன அழிப்பு, அவலங்கள் நிறைந்துள்ள அம்பாறை மாவட்டத்திற்கு எம்மால் போக முடியாததால் இக்கட்டுரை எந்த விதத்திலும் முழுமையானதல்ல. அத்துடன் தொடராக இத்தனைநாள் வாசகர்களை ஒரே நிலையில் வைத்திருப்பதில் எந்தளவுக்கு வெற்றிகண்டுள்ளேன் என்பதும் தெரியவில்லை. என்னோடு கூடவந்த நிதர்சனம் படப்பிடிப்பாளர்கள் இவற்றை வீடியோ மூலம் பட மாக்கியுள்ளார்கள். எனவே இவற்றை நேரில் காணும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்போது அங்குள்ள நிலைமையின் கோரத்தை, அவலத்தை இதைவிடக் கூடுதலாக உங்களால் தெரிந்து கொள்ளமுடியும் எனக் கருதுகிறேன். இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கையில் அங்குள்ள கலாசாரங்கள், இயற்கை அமைப்பு, குடியேற்றங்கள் அனைத்தையும் வெளிக்கொணர வேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் அவலங்களையே முழுமையாக என்னால் கொண்டுவர முடியவில்லை. அதைவிட கட்டைபறிச்சானில் ஒரு தாக்குதலில் 60 இராணுவக் கொமாண்டோக்கள் பலியான சம்பவம் போன்ற விடயங்களை எழுத முடியவில்லை. முடிந்தால் அவற்றையும் புத்தகவடிவில் தர முயற்சிக்கிறேன். நாங்கள் அங்கு சென்றபோது இருந்த நிலைமைகளை விட இப்போதைய நிலைமை இன்னும் மோசம் திருமலையிலிருந்து மட்டக் களப்பு சென்று திரும்ப முன்னர் நான்கு இராணுவ முகாம்' கள் அங்கே கூடிவிட்டன. இப்போது மேலும் பல முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன . 1010 சதுரமைல் உள்ள திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போது 108 சிறிலங்காப் படை முகாம்கள் உள்ளன. அந்தளவுக்கு ஆக்கிரமிப்பின் வேசம் உச்சநிலையிலுள்ளது. இதைவிட சிங்கள, முஸ்லிம் ஊர்காவல் படைகளின் காவல் நிலைகள் வேறு. இத்தனைக்கும் மத்தியில் தான் அங்கு போராளிகள் போராடுகின்றார்கள். எஞ்சி இருக்கும் மக்கள் இவர்களுக்குக் கைகொடுக்கிறார்கள். குடியிருப்புக்களில் மக்கள் இல் லாத இடங்களில் போராளிகள் எதிர் நோக்கும் சிரமங்கள் எடுத்துரைக்க முடியாதவை. எந்தத் தகவல்களுமோ போராளிகளுக்குக் கிடைக்கமாட்டா. சகலத்தையும் போராளிகளே செய்ய வேண்டும். ஆனாலும் தங்கள் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தின் அவலங்கள்தான் மிக அதிகம். இன அழிவைக் கூடுதலாகச் சந்தித்த மாவட்டம் இதுவேதான். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை இந்த மூன்று மாவட்டங்களிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட இந்தப் படுகொலைகள் எவ்வளவு காலத்துக்குள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதை அவதானித்தால் தான் இன அழிப்பின் வேகம் புரியும்; கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டோர் கழுத்தை நெரிக் கையில்... வருத்தத்துடன், அதேவேளை தவிர்க்க முடியாமல் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகளுக்கு காரணங்கள் புரிந்திருக்குமென நினைக்கிறேன். அகதி முகாம் படுகொலைகள், சுற்றி வளைப்புக்கள், பயணங்களின் போது கடத்தப்படுதல் என்று பல்வேறு வடிவங்களில் இவை மேற் கொள்ளப்படுகின்றன. வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த அவலங்களை மூடிமறைக்க, அவற்றை நியாயப்படுத்த சிறிலங்காவின் தேசியப் பத்திரிகைகள், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகள் எடுத்துவரும் பகீரதப் பிரயத்தனங்கள் தான் - வந்தாறு மூலை அகதிகள் முகாமிலிருந்து அகதிகள் வெளியேற்றம் இதற்கு சிறு உதாரணம். தடுத்து வைக்கப்பட்டோர் பற்றிய தகவலைப் பெறுதல், நோயாளிகளை பராமரித்தல் காயமடைந்தோருக்கு வைத்திய வசதி, அகதிமுகாம் மக்களுக்கு உணவு, அவர்களுக்கான வைத்திய வசதி போன்றனவெல்லாம் தங்களுடைய கடமைகள். இவற்றில் எவரும் தலையிடாதீர்கள். தலையிட முடியாது என்றெல்லாம் இராணுவம் இல்லாத பகுதிகளில் முழக்கமிடும், (ஏன் சண்டித்தனம் என்று கூடச் சொல்லலாம்) செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கிழக்கு மாகாணத்தில் எந்தளவு “பொறுப்புடன்” கடமை புரிந்துள்ளனர் என்பதும் கேள்விக் குறியே; முடிந்தால் எனது அன்புக்குரிய வாசகர்கள் இந்த அமைப்புகள் தங்கள் பணி குறித்து அச்சிட்டு வைத்திருக்கும் பிரசுரங்களை வாங்கி கிழக்கின் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐயாயிரம் பேர் டிசம்பர்-10 (தற்போதைய நிலவரப்படி) வரையில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக் கணக்காணோர் கைதாகியுள்ளனர். தடுப்புக்காவலில் இருப்போர் பற்றி அறிகிறார்களோ இல்லையோ, இவர்கள் கண்ணெதிரே கைது செய் யப்படுவதே அலட்சியமாகிறது இவர்களுக்கு. அடுத்து “கோட்டையைக் கைப்பற்றுவதில் மட்டக்களப்பு ஆயுதங்களின் பங்களிப்பு கணிசமானது. அதைவிட மட்டக்களப்பு போராளிகளும் அங்கு போராடியிருக்கிறார்கள். வீரமரணமடைத்திருக் கின்றார்கள்” என்று திரு. நியூட்டன் கூறிய வார்த்தை அவதானிக்கப்படவேண்டியவை, இன்று வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களைப் பாதுகாப்பதில் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பை இந்த வார்த்தைகள் உணர வைக்கும், பதிலுக்கு நாம் அவர் களுக்காக என்ன செய்துள்ளோம். வெட்கப்பட வேண்டிய விடயம். இந்தப் போரினால் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்தான். பாலுக்குச் சீனி இல்லையென்ற பிள்ளைக்கும் கூழுக்கு உப்பு இல்லையென்ற பிள்ளைக்கும் ஒரேயளவு கவலைதான் என்பார்கள், கூழே இல்லாத பிள்ளைகளுக்கு...? இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்த எவருக்காவது கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ வேண்டும். அந்த அவலங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று சிந்தனை பிறந்திருக்குமாயின் இத்தொடரை எழுதிய நோக்கம் வெற்றி பெற்றதென்றே கருத வேண்டும். அன்பான வாசகர்களே! எங்கள் பார்வைகளை அகலமாக்கிக் கொள்வோம். அவர்களை நோக்கி எங்கள் கரங்கள் நீளட்டும். உதிக்கும் திசையிலுள்ளோர் உயிர் பெறட்டும். நீங்கள் சம்மதம் தானே? நன்றி. கரும்பறவை (முற்றும்)
  18. 2009 இறுதிப்போர் காலப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு நகர்ந்திருந்தது என்பதனை விளக்கும் போராளி இனியவன் அவர்கள் Video: 2009 இறுதிப்போரில் மாவீரர் துயிலுமில்லங்கள் நகர்த்தப்பட்ட...2009 இறுதிப்போர் காலப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு நகர்ந்திருந்தது என்பதனை விளக்கும் போராளி இனியவன் அவர்கள்
  19. 80, 90களில் நடந்த தென் தமிழீழக் கரூரங்கள் தொடர்பான போர்க்கால இலக்கியப் பாடல்கள் பாடல்: காற்றில் ஏறிவரும் இறுவட்டு: வெல்லும் வரை செல்வோம் இசை: இசைப்பிரியன் பாடலாசிரியர்: உதயலட்சுமி பாடியவர்: மேரி வெளியீடு: ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள் பாடல் வரிகள்: காற்றில் ஏறிவரும் எங்கள் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். கண்ணீர்க் கடலோடும் வாழ்க்கைப் படகைப் பாருங்கள். படுவான்கரையின் சிவப்பு நிறம் - அதுவே எங்கள் வாழ்வின் நிறம். எழுவான் கதிர்கள் மேனி தொடும் - இனியெம் வாழ்வு மேலுயரும். வாவியில் பாடும் மீன்களுக்கு எங்கள் மேனியை தீனாய்ப் போட்டனர்! கூப்பிய கைகளை வெட்டி எறிந்து பிள்ளைகள் உயிரைக் குடித்தனர்! மகிழடித்தீவின் மரங்களைக் கேளும் - உயிர் விலை என்ன, கூறிவிடும்! கொக்கட்டிச்சோலை மணல் வெளி எங்கும் குருதியே கோலம் கீறியது. இருவிழி நிறையக் கனவுகளோடு எழுவாய் எழுவாயம்மா நீ! பூபதித் தாயின் பூமியில் பிறந்தாய், புயல்களின் வடிவம் அன்றோ நீ! மலைகளைத் தாவும் காற்றின் வேகம் மனங்களுக்குண்டு கொண்டு எழுவாய் நீ! எவரோ எழுதும் சிலை நீ இல்லை, அலைகடல் போல எழுவாய் நீ! கோவில்களோடு தெய்வங்கள் சாக வைத்த நெருப்பு எரியுது! தேவியர் பாட்டில் தென்றல்கள் மாறி தேய்பிறை வானம் அழுகுது! வயல்வெளி எங்கும் பயிர்களின் நாற்று வன்முறைத் தீயில் அவிகிறது! அதிரடிக்காரன் எழுதிய தீர்ப்பே எங்களின் விதியாய் மாறியது! --> எழுத்துணரியாக்கம்: இனந்தெரியா யாழ் கள உறுப்பினர் ++++++++++++++++++++++++++++ பாடல்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து இறுவட்டு: ?? இசை: ?? பாடலாசிரியர்: அறியில்லை பாடியவர்: ?? வெளியீடு: ?? பாடல் வரிகள்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து போகுதே! தென் தமிழ் மக்கள் தினமும் நூறு சாகிறார்! தீயில் அவர் வேகுகிறார், பசியில் அவர் மாள்கிறார்! தீராத கொடுமைகளை எதிரி அங்கு இழைக்கிறான்! மீன்பாடும் மட்டு. நகர், அம்பாறை, திருமலையும் மிருகவெறிச் சிங்களவர் குடிமனையாய் மாறுதே! இனமழிக்கும் ராணுவத்தின் வதைமுகாம்கள் வளருதே! இன்னல் செய்யும் துரோகக் கும்பல் பெருகி அங்கு வளருதே! நெய்தல் நிலம், வயல்வெளிகள், நதியோரம், காட்டுநிலம் ஐயகோ எம் தமிழர் ஆண்ட நிலம் யாவுமே! அன்னியனின் குடிமனைகள் அங்கு நிதம் வளருதே! இழந்த மண்ணை மீட்பதற்கும் இன்னலுறும் எம்மினத்தைக் காப்பதற்கும் ஈழமே எழுச்சிகொள்! எழுந்திடு! எழுந்திடு! இனமழிப்பு நடக்குதே வேங்கையாய் விரைந்திடு! --> எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.