Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இந்தோனேசியாவிலிருந்த எமது படகுகளில் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பிற்க்குக் கொண்டு வந்து அங்கு நின்ற எமது கப்பலில் இருந்து தமிழீழத்திற்க்குத் தேவையான பொருட்களுடன் அலம்பிலுக்கு வருவதற்க்கான ஒரு திட்டம் கடற்புலிகளின் சர்வதேசக்கடற்பரப்பில் நின்றவர்களுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக அந்த நேரம் தமிழீழத்தில் நின்ற லெப்.கேணல் ஸ்ரிபன் தலைமையிலான ஒரு அணி உருவாக்கப்பட்டு அவ் அணிகளில் சர்வதேசக் கடற்பரப்பில் நின்றவர்களுடன் மேலதிகமாக தமிழீழத்தில் நின்றவர்கள் சிலரும் இணைக்கப்பட்டனர். இவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வதற்காக தமிழீழத்திலிருந்து புறப்பட்டு சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்தோனேசியா சென்று படகை எடுத்துக்கொண்டு கப்பலைச் சந்தித்து கப்பலில் உள்ள அந்த நேரம் தமிழீழத்திற்க்கு தேவையான முக்கிய பொருட்களுடன் வந்துகொண்டிருந்தபோது 17.09.2006 அன்று காலை அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலான கரோஐசால் வழிமறிக்கப்பட்டு சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் அதாவது மாலை கரோஐசால் முடியாத கட்டத்தில் விமானப்படையினர் அழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது . இந் நடவடிக்கையில் லெப் கேணல் ஸ்ரிபன் உள்ளிட்ட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்தனர். இச் சம்பவத்தில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ஸ்ரிபனின் இன்னும் இரண்டு சகோதரங்கள் வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்திருந்தனர். ஆனால் துரதிஸ்டம் இம் மூவரது வித்துடல்களும் மீட்கப்படவில்லை. ஸ்ரிபனை ஏற்கனவே இரணடு மாவீரர்கள் இருப்பதால் இவரை வீட்டுக்குச் செல்ல இயக்கம் அனுமதித்திருந்த போதிலும் இவரது பிடிவாதத்தால் இவர் வீட்டிற்க்கு செல்லாமல் தொடர்ந்து இயக்கத்தில் இருந்தார். இப்படியான எவ்வளவோ சம்பவங்கள் அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்திருந்த போராட்டமாக தமிழீழப் போராட்டம் இருந்தனெ கூறிக் கொள்வதில் மிகையாகாது. எழுத்துருவாக்கம் …. சு .குணா. http://irruppu.com/2021/09/16/அர்ப்பணிப்புடன்-சர்வதேச/
  2. 1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். தொடர்ந்து கடற்புலிகளால் தளபதி அருச்சுனா அவர்களின் தலைமையில் தரைத்தாக்குதலணி ஆரம்பிக்கப்பட்டபோது சிவாவும் அதில் ஒருவனாக இணைந்து அப்படையணியில் மிகவும் சிறந்து விளங்கினான். இவனது அனைத்துச் செயற்பாடுகளையும் கவனித்த தளபதி அருச்சுனா அவர்கள் இவனை சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளனாகா அனுப்புகிறார். அங்கு இவனது செயற்பாடுகளின் நிமிர்த்தம் இவனை மேலதிக மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிக்காக அப்போதைய கடற்புலிகளின் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரிடம் அனுப்பினார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள்.அங்கு தொலைத் தொடர்புப்பயிற்சிகளை பெற்ற அதேசமயம் அனுபவப் பயிற்சிக்காக ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளிலும் தளபதி பிருந்தன் மாஸ்ரரின் அனுமதியுடன் சென்று வந்தான்.இப்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேசமயம் தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக கப்பல்களின் செயற்பாடுகளின் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கப்ப்லுக்கு அனுப்பப்பட்ட போராளிகளுள் ஒருவனாக சிவாவும் சென்றான். அங்கு நின்ற காலங்களில் தன்னை ஒவ்வொரு விடயங்களிலும் மென்மேலும் கற்றக்கொள்கிறான். அதன்பின் தமிழீழம் வந்த சிவா ஆழ்கடல் விநியோகப் படகுகளின் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே செயற்படுகிறான்.தொடர்ந்து சண்டைப்படகுகளின் கட்டளை அதிகாரியாக விநியோகப்பாதுகாப்புச்சமர் மற்றும் வலிந்ததாக்குதலில் செவ்வனவேபங்காற்றினான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்திற்க்கான பாதுகாப்புச் சமரில் செவ்வனவே பங்குபற்றிய சிவா தொடர்ந்து சண்டைப்படகுகளின் முகாம் பொறுப்பாளனாகவும் சண்டைப் படகுகளின் தொகுதிக் கட்டளைஅதிகாரியாகவும் செயற்பட்டான் .உடல்பருமனாகா இருந்தாலும் எந்தப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.மற்றும் சகபோராளிகளுக்கும் தனது அனுபவங்ளை சொல்லிக்கொடுத்து அவர்களின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றினான்.அதுமட்டுமல்லாமல் இக்கட்டான பல்வேறு கடற்சமரை தனது அனுபவங்களினால் எங்களுக்குச் சாதகமாக மாற்றியவன் சி.அதே போல தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற ஆழ்கடல் விநியோகத்திற்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை தொடருமாறு கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் ஒரு தாக்குதல் திட்டம்கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக 21.10.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவடைகிறான். பல்வேறு கடற்சமரில் முக்கிய பங்காற்றியவன். நீண்டகடலனுபவம் கொண்ட சிவா எந்தவேலையாகிலும் திறம்படசெய்தவன். அனைத்துப் போராளிகளையும் அரவனைத்து செயற்பட்ட ஒருவீரன். மிகவும் நெருக்கடியான காலங்களிலும் முகாம் போராளிகளை மிகவும்கட்டுப்பாடாக வைத்திருந்தபோராளியுமாவார். எழுத்துருவாக்கம் .. சு .குணா http://irruppu.com/2021/10/21/மேஜர்-சிவா-நீண்ட-கால-கடல்/
  3. “ரகு இல்லையெண்டதால வாறதை நிப்பாட்டியிடாதீங்க; எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க” – வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோடே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் “இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டிக்கொண்டுபோங்கோ என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர். குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர். இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் ரகு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டான். அவனுக்கு பிரதிஸ் எனப்பெயர் சூட்டப்பட்டது. பயிற்சி முகாமில் ஒருவருக்கு சுகவீனம். அந்தக்காலத்தில் இயக்கத்திற்கு மருத்துவப்பிரிவு என ஒன்றிருக்கவில்லை. எந்த நோய் வந்தாலும் அரச மருத்துவ மனையிலேயே சிகிச்சைபெறவேண்டும். சுகவீனமுற்றவனைக் கூட்டிக்கொண்டு 09.09.1985அன்று ரகு மட்டக்களப்புக்கு வந்தான். அந்தக்கால கட்டத்தில் குறிப்பிட்ட வயது இளைஞர்களைக் கண்டாலே படையினருக்கு கைது செய்ய வேண்டும் போலிருக்கும். அதேநடைமுறையை இவர்களிலும் செயற்படுத்த முயன்றனர். தப்ப முடியாத நிலையில் இவர்கள் இருவரும் சயனைட் உட்கொண்டனர். இவர்களின் சடலங்களைப் படையினரே தீ மூட்டி எரித்தனர். ஓரிரு தினங்களின் பின்னரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிரதிஸ் (சின்னத்துரை ரகு ) பிரியன் (தம்பிப்பிள்ளை நவரட்னராஜா) என அறிய வந்தது. இருவரின் வீட்டிலும் மரணஓலம் , ஆரையம்பதிக் கிராமத்தில் கணிசமானோர் இருவரின்வீட்டிலும் குழுமியிருந்தனர். எப்படியும் இவர்களின் வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். அதுவும் தனது கையில் ரகுவைப்பிடித்துக் கையளித்த அன்ரி என்றழைக்கப்படும் திருமதி பூரணலட்சுமியைச் சந்திக்க வேண்டும். இவ்வாறு தீர்மானித்த அந்தப் போராளி மாலையாகும்வரை காத்திருந்து விட்டு அங்கு சென்றார். “உங்கட கையிலதானே அவனைப் பிடிச்சுத்தந்தன்; துலைச்சுப்போட்டு வாறீங்களே”எனக் கேட்பாரே அன்ரி என நினைத்தவாறேதான் அந்த வளவுக்குள் அவர் காலடி எடுத்து வைத்தார். அவ் வேளையிலேயே தொடர்ந்தும் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார் அன்ரி. அதிர்ந்துதான் போனார் அப்போராளி . சாதாரணமாக ஒரு அன்னையின் வாயிலிருந்து வரவேண்டிய அழுகையும் சோகமும் வேறுவிதமான வேண்டுகோளுடன் ஒலிக்கிறதே என வியந்தார். அந்தப் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டோரில் இருவரும் பயிற்சியை முழுமையாக பெற்றும் களம் காணாமல் போய்ச் சேர்ந்தனர். உள்ளுணர்வுகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் ஒரு போராளியின் குடும்பத்தினர் தங்கள் வீதியூடாக வீரச்சா வெய்தியோரின் வித்துடல்கள் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்துக்குக் கொண்டு செல்கையில் மலர்தூவி வணக்கம் செலுத்துவது வழமை. ஒரு நாள் வித்துடல் தாங்கிய வாகனம் இவர்களின் வீட்டருகில் வரும்போது பழுதடைந்து விட்டது. யாருடைய பிள்ளையென்றாலும் தங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து கண்ணீர் மல்க உணர்பூர்வமாக வழியனுப்பி வைப்பதை களத்தில் நின்று பார்த்தவர்களுக்குத்தான் புரியும். இந்த வாகனம் திருத்தப்பட்டு வித்துடல் கொண்டு செல்லப்படும்வரை இக் குடும்பத்தினர் அங்கேயே நின்றனர். பின்னர் துயிலுமில்லத்தில் விதைத்தாயிற்று வித்துடல் . அந்த மாவீரர் யாரென இனங்காணமுடியாத நிலையிலேயே துயிலுமில்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. மும்முரமாக யுத்தம் நடைபெறும் சமயங்களில் காயமடைந்தோர் களத்திலிருந்து அகற்றப்படுவர். அவர்கள் சிகிச்சைபெறும்போதும் வீரச்சாவு அடைவதுண்டு. களத்தில் வீரச்சாவடைவோர் சிலர் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருப்பர். அதனால் உறுதிப்படுத்த தாமதமாகும். சரியாக உறுதிப்படுத்தத் தாமதமாகுமெனில் (நாட்கணக்கில்) வித்துடல்கள் பழுதாகக்கூடும் . எனவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்க நேரும். ஒரு நாள் காயமடைந்த, வீரச்சாவு வடைந்த சிலரின் இலக்கத்தகடுகள் இணைத்த நூல்களை ஒருவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு வந்த போது நிகழ்ந்த தாக்குதலில் வீரச்சாவடைந்துவிட்டார். கழுத்தில் அவரதும் இலக்கத்தகடும் தொங்கியது. இவரது இலக்கமென்ன? யார்யார் காயமடைந்தனர்.?வீரச்சாவு அடைந்தனர் ? என ஆராய்ந்து முடிப்பதற்கு சம்பந்தப்படடோர் பட்ட பாடு கொஞ்சநஞ்ச மல்ல. அதைப்போலவேதான் கேப்பாபுலவில் பழுதடைந்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டவரின் வித்துடல் அங்கு மலர் வணக்கம் செலுத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவர்களுக்குப் பின்னரே தெரியவந்தது. “எங்கட பூவையும் கண்ணீரையும் பாக்க வேணுமெண்டுதானோ அவன்ர ஆன்மா வாகனத்தைப் பழுதாக்கினது“என்று அந்த மாவீரரின் குடும்பத்தினர் இந்த ஏற்பாடுகளைச் செய்தவரிடம் கேட்ட போது அவர் அதிர்ந்து தான் போனார். அது போலத்தான் அன்ரி ரகுவின் சம்பவம் நடந்த நாள் மட்டக்களப்பு நகரில்த்தான் நின்றார். வாகனத்தில் இருவரது உடல்களும் கொண்டு செல்லப்பட்ட போது தூர நின்று பார்த்தார்.”ஒரு புள்ள பச்சைச் சாறன் உடுத்திருந்தது. ஆர் பெத்த பிள்ளைகளோ?“ என்று அன்று முழுவதும் அங்கலாய்த்த படி இருந்தார். அந்தச் பச்சைச் சாரம் உடுத்த மகன் அவர் பெற்ற பிள்ளை என்று தெரியாமல் போயிற்று. அமிர்தகழியில் கொண்டுபோய் எரித்தார்கள் என்ற தகவல்தான் அவருக்கு மேலதிகமாகக் கிடைத்தது. ரகு மறைவதற்கு முதல்நாள் அவனது சகோதரி ஒருவர் “அவனைப் பாக்கவேணும்போல கிடக்கு; எங்கே யெண்டு சொல்லுங்கோ; நான் அங்க போய்ப் பாக்கிறன்” என்று கேட்டார். “பயிற்சி முடியாமல் அவனை அனுப்பேலாது. முடிஞ்ச பிறகு வருவான்”என்று தான் அவனை அழைத்துச் சென்ற போராளியால் சொல்லமுடிந்தது. எனினும் ஆளே முடிந்த பின்னும் அவனைப் பார்க்க முடியாமல் போய்விட்டது அந்தச் சகோதரிக்கு . எப்படியோ நம்புபவர்கள் அது உள்ளுணர்வுதான் என்பர். போராளிகளை உபசரிப்பது முதலான பணிகளைச் செய்து வந்த அன்ரி மகனின் இழப்புடன் சோர்ந்து போகவில்லை. அதன் பின்னர் மேலும் வீ ச்சுடன் தனது பணிகளைத் தொடர்ந்தார். குறிப்பாக அன்னை பூபதியின் உண்ணாவிரத காலத்தில் அவர் முழு மூச்சுடன் செயல்பட்டார். இந்திய இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டும் பணியில் தீவிரமாகக் பணியாற்றினார்.இந்திய இராணுவத்தால் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரைப் பார்வையிட்டதுடன் அவர்களின் நலனுக்காக இயன்றவரைஉழைத்தார். இதனைச் சகிப்பார்களா ஒட்டுக்குழுவினர். மட்டக்களப்பை விட்டு ஓடுவதற்கு சில நாட்களுக்கு முன் இவரைப்பிடித்து பழுக்கக் காய்ச்சிய கம்பியால் கையில் சுட்டனர் . அந்தக் காயம் ஆறமுன்னரே இந்தியப்படையுடன் இணைந்து செயற்பட்டோர் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட்டனர். தடுப்பிலிருந்த போராளிகள் விடுதலையாகினர். அவர்களின் விடுதலைக்காக திருக்கேதீஸ்வரத்துக்கு நேர்த்தி வைத்த அன்ரி. அதனை நிறைவேற்ற அங்கு சென்றார். கம்பியால் சூடு வைக்கப்பட்ட கையில் பிரசாதத்தைப் ஏந்தியபடி யாழ்பாணத்திலிருந்த போராளிகளையும் சந்திக்கச் சென்றார். மட்டக்களப்பில் புலிகளிடம் கைதாகியிருந்த ஏனைய இயக்கத்தவரை விடுவிக்குமாறு வேண்டினார். தாய்மை என்பது எல்லாப்பிள்ளைகளையும் ஒரேமாதிரித்தானே பார்க்கும்.” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற குறளுக்கு இலக்கணமாக அவரது வேண்டுகோள் இருந்தது. ஆனால் அவர்கள் திருந்தினார்களா ? 1990ல் இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கியதும் அந்த ஆயுதக்குழுக்கள் இன்னும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கின. பல்வேறு சுற்றிவளைப்புக்கள், விசாரணைகளில் படையினருக்கு உதவின. இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து ஒரு அணி மட்டக்களப்பு நிலைமைகளைப் பார்வையிடப் பெரும்பாலும் நடையிலேயே போய்ச்சேர்ந்தது. இதனைச் கேள்வியுற்றதும் அவர்களைச் சந்திக்க அன்ரி விரும்பினார். அக்காலகட்டத்தில் ஆரையம்பதியிலிருந்து படுவான்கரைக்கு தோணியில் எவரும் போகமுடியாதென டெலோ தடை விதித்திருந்தது. அந்தத்தடையை அன்ரி பொருப்படுத்தவில்லை. ஒரு தோணிக்காரரும் அன்ரிக் கு உதவினார். எனினும் முதல் நாளே வடக்கிலிருந்து வந்த அணி திரும்பிச் சென்றுவிட்டதும் “ஆனால் என்ன நீங்களும் எங்கள் பிள்ளைகள் தானே?“ என்று கூறி அங்கிருந்த போராளிகளிடம் தான் கொண்டுவந்த பலகாரங்களைக் கையளித்துவிட்டு புறப்பட்டார்அன்ரி . இறுதியில் அந்தப் பயணமே அன்ரி யின் வாழ்நாளை முடிக்கும் வகையில் அமைந்திருந்தது. டெலோவின் அன்றைய மட்டக்களப்புப் பொறுப்பாளர் ஜனா (கோவிந்தன் கருணாகரன்) தமது தடையை மீறியமைக்காக அன்ரிக்கு மரணதண்டனை விதித்தார் . அதனை நிறைவேற்ற 22.10.1990 அன்று கிழவி ரவி ,வெள்ளை , ராபட் ஆகியோர் அன்ரி யின் வீட்டுக்கு வந்தனர். தன்னை இழுத்த டெலோவினருடன் இழுபறிப்பட்டார் அன்ரி. கைகளால் தாக்கினார். எனினும் தமது தளபதி ஜனாவின் கட்டளையை நிறைவேற்றினர் டெலோ உறுப்பினர்கள். மேலும் பலர் அந்தக் காலத்தில் ஆரையம்பதியில் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வணிகரான தம்பிராஜா , அவரது மகனான வங்கிப் பணியாளர் குருகுலசிங்கம், மகளான திருமதி மலர் ஆகியோரைக் கொன்று தீர்த்தது டெலோ. கர்ப்பிணிப்பெண்ணான மலரைச் சுடும்போது “வயித்துக்குள்ள என்ன புலிக்குட்டியா இருக்கு ?“ எனக் கேட்டுவிட்டே சுட்டார் ஜனாவின் தம்பி. டெலோ மாமா என்றழைக்கப்படும் கோவிந்தன் கருணாநிதி. கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற போராளியை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து வெட்டிக் கொன்றார் ஜனா. உச்சக் கட்டமாக விஜி என்ற உயர்தர தர வகுப்பு மாணவியைக் கூட்டுப்பாலியல் வன்முறைறைக்குள்ளாக்கி விட்டு கொலை செய்து ஆற்றில் வீசினர். இவரது சடலத்தை வழங்குவதென்றால் அனுஷ்யா நல்லதம்பி என்ற இந்த யுவதி ஒரு பயங்கர வாதியென்று கையெழுத்திட வேண்டுமென அதிகாரத்தரப்பு உத்தரவிட்டது. இந்தப் பாதகங்களைச் செய்த அன்வர், வெள்ளை , ராபட் ஆகியோருக்குப் புலிகள் சாவொறுப்பு த்தண்டனை வழங்கினர். ஜனாவின் தம்பி டெலோ மாமா லண்டனில் 30.10.2017 அன்று பார்வை இழந்த நிலையில் மரணமடைந்தார். ஜனாவும் , ராமும் இப்போதும் உள்ளனர். நாட்டுப்பற்றாளர் பூரணலட்சுமி சின்னத்துரை பிறந்த திகதி : 1945 – அழிப்பு 22.10.1990 http://irruppu.com/2021/10/22/மரணத்தின்போதும்-எதிர்ப்/
  4. பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத் தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றன. 30.09.1992 அன்று தளபதி பால்ராஜ் அவர்கள் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்படுக் கொண்டிருந்த வேளையில்.தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்து தளபதி பால்ராஜ் அவர்களுடன்தனிமையில் கதைத்த பின்னர் தாக்குதல் திட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் யாழ்மாவட்டத் தாக்குதலனிப் போராளிகளில் ஒரு தொகுதி அணி உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது. (அன்றைய விளங்கப்படுத்தப்பட்ட திட்டத்தில் அறுபத்தியிரண்டு காவலரனை தாக்கி அழிப்பதே திட்டமாக இருந்து.) அதற்கமைவாக புறப்பட்ட அவ் அணிகள் 01.10.1992 அன்று கட்டைக்காட்டு முகாம் தாக்குதல்களில் ஏனைய படையணிகளுடன் இணைந்து அவ் வெற்றிகரத் தாக்குதலில் பங்குபற்றியது.அதன் பின்னர் பயிற்சிகள் தொடர்ந்தன.ஆனால் இம்முறை தாக்கி அழிக்கப்படவேண்டிய காவலரன்களின் தொகை 150 ஆக்கப்பட்டது. ( இதுவே தமிழீழத்தில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட கூடுதலான காவலரன் அழிப்பாகும்.)அதற்கேற்ற மாதிரி பயிற்சிகள் வழங்கப்பட்டது.தாக்குதலுக்கான நாளும் வந்தது.தாக்குதல் திட்டம் தளபதி பால்ராஜ் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது.இத் திட்டத்தின்படி 150 காவலரன்களைக் தாக்கி கைப்பற்றி வைத்திருந்து விட்டு பின்வாங்குவதாகவே இருந்து. 23.11.1992 அணிகள் காவலரனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் எதிரியின் கண்ணிவெடி ஒன்று போராளி ஒருவரின் காலில் வெடித்தது அருகிலிருந்த போராளி ஓடிச் சென்று அப் போராளியின் வாயைப்பொத்த அப்போராளியோ நான் கத்த மாட்டன் நீங்கள் நகருங்கள் என்றான். அன்று அப்போராளியின் அர்ப்பணிப்பு தன்னால் இச் சண்டையில் ஏதும் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது வேதனையை சகித்துக்கொண்ட விதம் சக போராளிகளுக்குள் இச் சண்டையை வெற்றி கொள்வதிலேயே இருந்து. 24.11.1992 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமானது .சண்டை தொடங்கிய குறிப்பிட்ட நேரத்திலேயே காவலரன் தாக்குதலனியின் முழுக்கட்டுப்பாட்டில் காவலரன்கள் கொண்டுவரப்பட்டன. இச்சமரில் கனரக ஆயுதம் ஒன்று (37MM) நிலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சென்றவர்களுக்குத் எவ்வாறு இயக்குவதோ அல்லது எவ்வாறு கழட்டுவதென்றோ தெரியாது தகவல் கட்டளைமையத்திற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.ஆயுத நிபுணர்களுள் ஒருவரான தளபதி கடாபி அவர்கள் வருகிறார் என்றதும் போராளிகளுக்கு உற்சாகம் மேலிட்டது. ஏனெனில் எப்படியாகிலும் அவ் ஆயுதத்தை கைப்பற்றிவிடலாமென்று. அந்த காலத்தில் அவர் ஆயுதங்களை கையாள்வதிலும் மற்றும் புதிய ஆயுதங்களை கையாள்வதில் ஒரு வித்தகராக இருந்தார். இருந்தாலும் அவர் கடுமையாக முயற்சித்தும் எதிரியானவன் அவ் ஆயுதத்தை பலமா நிலப்படுத்தப்பட்டதாலும் நேரம் குறைவான காரணத்தாலும் அவ் ஆயுதம் தகர்க்கப்பட்டது. இச் சண்டையில் பின்வாங்கவும் என்று கைபேசியில் சொல்லமுடியாது .ஏனெனில் எதிரி ஒட்டுக் கேட்பான் அதனால் பரிபாசையில் பலாலி விமானத்தளம் நோக்கி முன்னேறவும் என அறிவிக்கப்பட்டது. அதை ஒட்டுக்கேட்ட படையினர் மூர்க்கத்தனமாக எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தான். இச் சமயத்தில் மகளிர் அணியினரின் பக்கமாக பின்வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது .இதை அவதானித்த தளபதி குணா அவர்கள் உடனடியாக தானே களத்தில் இறங்கி அணிகளையும், வீரச்சாவடைந்த வித்துடல்களையும், காயமடைந்த போராளிகளையும்.கொண்டு வந்து சேர்த்தார். இச் சமரில் அவருடைய பங்களிப்பு என்பது ஒருவரியில் கூறிவிடவோ அல்லது எழுதி விடவோ முடியாது. அன்று அவர் களத்திற்க்கு சென்றிருக்காவிடில் நிலைமையை கற்பனைகூட செய்யமுடியாது. இப்படியாக பல்வேறு அர்ப்பணிப்புகள் நிறைந்த இச் சமரில் ஈழப்போா் 01,02லும் இந்திய இராணுவத்துடனான பல் வேறு இடங்களில் பல்வேறு சமர்களில் பங்குபற்றிய கப்டன் வீமன், அவர்களும் மேஜர் டொச்சன் அவர்கள் உட்பட ஐம்பத்தியெட்டுப் போராளிகள் இச் சமரில் வீரச்சாவடைந்தனர். இச் சமரிலேயே தான் கள விசாரணை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வெற்றிகரச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தினார். எழுத்துருவாக்கம்…சு.குணா. http://irruppu.com/2021/11/24/24-11-1992-அன்று-விடுதலைப்-புலிகள/
  5. 30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் . ஐனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 22.04.2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு மாவீரர்களின் தியாகத்தால் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்கள் மீட்க்ப்பட்டன .(சுமார் இருபது கடல்மைல் கரையோரப் பிரதேசங்களும் உள்ளடக்கம். ) அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ராடர் நிலையமும் யாழ் குடாரப்புக்கரையோரத்தில் அமைக்கப்பட்டு கடற்கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளும் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த சிங்களப்டைகளுக்காக திருகோணமலையிலிருந்து செல்லும் விநியோகக் கப்பல்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ் சிங்களக் கடற்படையின் விநியோகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கடற்படையின் பெரும்பாலான டோறாப்படகுகள் கூட திருகோணமலை சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்து வந்து பாதுகாப்பு வழங்கி விட்டு திரும்பவும் திருகோணமலைக்குச் சென்றுவிடுவர். ஆனால் பெருமளவு கரையோரப்பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்ததால் விடுதலைப்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கவேண்டுமாயின் காங்கேசந்துறை சிங்களக்கடற்படைத்தளத்தில் பலடோறாக்களை நிறுத்தவேண்டிய கட்டாயம் சிங்களக்கடற்படைக்கு ஏற்பட்டது. ஆகவே இச்சிங்களக்கடற்படைக்கு எரிபொருள் வழங்கள் மேற்கொள்வதற்கென துன்கிந்த என்கிற எரிபொருள்தாங்கிக் கப்பல் பயண்படுத்தப்பட்டது. இத்தகவல் விடுதலைப்புலிகளின் இலங்கை அரசபடையினரின் தகவல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் லெப்.கேணல். ஐஸ்ரின்.அணியினரால் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கமைவாக இத்தகவல்களை தேசியத்தலைவர் அவர்களிடம் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். இக்கப்பலைத் தாக்குவதற்கான முக்கியத்துவத்தையும் அனுமதியையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமால் அதற்கான நல்லதொரு திட்டத்தையும் கொடுத்து ஒரு தாக்குதல் ஒரு தடவைதான் பிழைவரவேணடும் இரண்டாம் முறையும் பிழைவரக்கூடாது என்று தெளிவாகக்கூறினார் தேசியத்தலைவர் அவர்கள்.(முதலில் விட்ட சில தவறுகளால் .) அதற்கமைவாக 30.10.2001 அன்று திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த துன்கிந்த என்கிற எரிபொருள் தாங்கிக்கப்பலுக்குப் பாதுகாப்பு வழங்கிய சிங்களக்கடற்படையின் டோறாப்படகுகள் மற்றும் பீரங்கிப்படகுகள் மீது லெப். கேணல் . சலீம், லெப்.கேணல். சுடர்ணன். மற்றும் தளபதி.சிறீராம் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் வழிமறிக்க யாழ் .பருத்தித்துறைக் கரையிலிருந்து உயர சுமார் முப்பத்தியெட்டுக்கடல்மைலில் சென்றுகொண்டிருந்த துன்கிந்த எரிபொருள் கப்பல்மீது அதிகாலை ஒருமணியளவில் கடற்கரும்புலிகள் தமது படகிலிருந்த ஆயுதங்காளால் தாக்கி நிற்பாட்டினார்கள். தொடர்ந்து கப்பலின் பின்பகுதியில் கடற்கரும்புலி மேஐர். கஸ்தூரி மற்றும் கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகியோர் தமது கரும்புலிப் படகால் மோதி வெடித்தனர். தொடர்ந்து கடற்கரும்புலி மேஐர் . கடலரசன். மற்றும் கடற்கரும்புலி கப்டன்.கேசவி ஆகியோர் தமது கரும்புலிப்படகால் கப்பலின் முன்பக்கத்தில் மோதி கப்பலை மூழ்கடித்து கடலிலே காவியமானார்கள். இத்தீரமிகுத்தாக்குதலை கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத் தளத்தின் ராடர் நிலையப் பொறுப்பாளர் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் குடாரப்பு ராடர் நிலையத்திலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். ஒருதடவை விட்ட பிழையை அடுத்த தடவை விடக்கூடாது என்ற தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையையும் செவ்வனவே செய்த திருப்தியுடன் கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான.. மேஐர் . கடலரசன். மேஐர்.கஸ்தூரி. கப்டன். அன்புமலர். கப்டன். கனியின்பன். இக்களத்தை கடலிலே கடற்சண்டைப்படகை வழிநடாத்தி பின்னர் வீரச்சாவடைந்த.. லெப். கேணல். சலீம்.( கலாத்தன்.)வீரச்சாவு. 10.03.2009. லெப்.கேணல். சுடர்ணன்.வீரச்சாவு.10.03.2003. தளபதி. சிறிராம். வீரச்சாவு.முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில். ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றோம். அன்று இக்களத்தில் களமாடியவர்களின் உள்ளத்திலிருந்து…. எழுத்துருவாக்கம்… சு.குணா. திகதி.30.11.2022. http://irruppu.com/2022/11/30/துன்கிந்த-கப்பல்-மீதான-த/
  6. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, சத்தியவேள்வியில் வித்தாகிய மாவீரர்கள் கடலில் மறைந்தாலும், மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்கள். 26.06.2000 அன்று கடற்படையின் பாரிய கடற்கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உகண கப்பல் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் .சர்வதேச விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு சந்தித்து பொருட்கள் மாற்றுமிடத்திற்கு (முல்லைத்தீவிலிருந்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து கடல்மைல் உயர) அண்ணளவான தூரத்தால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும் கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விநியோக நடவடிக்கையில் கடற்படையின் பாரிய கப்பல்களான சக்தி, லங்காமுடித்த, உகண கப்பல்களும், தரையிறங்குக் கலங்களும், இவைகளுக்கு உதவியாக அதிவேக டோறாப் படகுகளும், அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் பத்துக் கடல்மைல் தொடக்கம் அறுபது கடல்மைல் தூரத்தைக் கண்காணிப்பதற்காக அதிவேகடோறாப் படகுகளும் அறுபது கடல்மைல்களுக்கப்பால் கண்காணிப்பதற்காக வீரயா மற்றும் ஆழ்கடல் கலங்களும், ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோகத்தை இல்லாமல் செய்வதற்காக, கடற்படையினரால் வர்ணகீர கடல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆழ்கடல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு அக் கடற்படை விநியோக அணி மீது தாக்குதல் நடாத்தி கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்யைத் தொடருமாறும், அதற்கான தாக்குதல் திட்டத்தையும் கொடுத்தது மட்டுமன்றிசில ஆலோசனைகளையும் கொடுத்தார். அதற்கமைவாக கடற்புலிகளின் கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் ரஞ்சன். லெப்.கேணல் பழனி. மேஐர் ஆழியன் ஆகியோரின் தலைமையிலான சண்டைப்படகுகளும் இரண்டு கடற்கரும்புலிப் படகுகளும் சென்று ஆழ்கடலால் இராணுவத் தளபாடங்கள் மற்றும் படையினருக்குத் தேவையான பொருட்களுடன் வரும் கப்பலை இம்மூன்று சண்டைப்படகுகளால் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கரும்புலிப்படகுகளால் தாக்கி கப்பலை மூழ்கடிப்பதாகும். அதேநேரம் மேலதிகமாக வரும் கடற்படையினரை வழிமறித்து மறிப்புச்சமரை தொடுப்பதற்காக லெப்.கேணல் பகலவன் தலைமையிலான ஒரு தொகுதி சண்டைப் படகுகளும் இவர்களுக்கு உதவியாக கரும்புலிப்படகுகளும் நிலைகெண்டன. இவ்வளவு கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் கடுமையான தென்மேற்க்குப் பருவக்காற்றுக்குள்ளும் இந்தத் தடைகளை உடைத்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் என்கிற நோக்கோடும் 25.06.2000 அன்று மாலை ரஞ்சன், பழனி, ஆழியன் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும் கடற்கரும்புலிகளான சூரன் மற்றும் நல்லப்பன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகுகளும் சென்று முல்லைத்தீவுக்கு உயர அறுபது கடல்மைல் தூரத்தில் நிற்க - அந்தநேரத்தில் திருகோணமலையிலிருந்து கடற்படையின் விநியோகத் தொடரணி வருவதாக இப்படகுகளுக்கு அறிவிக்க தயார்நிலையிலிருந்த படகுகள் சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றிற்க்கும் மத்தியில் ஒருவாறு கப்பலை இணங்கண்டு அக்கப்பலைப் பின்தொடர்ந்த (26.06.2000 அன்று அதிகாலை) பழனி கப்பலின் மீது தாக்குதலைத் தொடுத்து வழியமைத்துக் கொடுக்க சூரனின் கரும்புலிப்படகு கப்பலின் மீது மோதியது. இம்மோதலால் கப்பல் நிலைகுலைய கப்பலிலிருந்து செறிவான தாக்குதல் நடாத்தியவண்ணமிருக்க பழனி, ரஞ்சன் மற்றும் ஆழியனது படகால் தாக்குதலை தொடுத்து வழியமைத்துக் கொடுக்க நல்லப்பனது கரும்புலிப்படகு கப்பல் மீது மோத கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் லெப் கேணல்.ஞானக்குமார், மேஐர் .சூரன், மேஐர். நல்லப்பன், மேஐர். சந்தனா, கப்டன் .இளமதி, கப்டன்.பாமினி ஆகிய கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலுக்குப்பின் சிங்களக்கடற்படையானது ஆழ்கடலிலும், கடற்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திகைத்து நின்றனர். இந் நிலையினை எதிரிக்கு ஏற்படுத்தி கடலின் மடியில்.நிறைந்திருக்கும் எங்கள் வீரக்கடற்கரும்புலிகள், எங்களின் நினைவிலும் நிறைந்திருப்பார்கள். எழுத்துருவாக்கம்….சு.குணா. http://irruppu.com/wp-content/uploads/2023/06/கடற்புலிகளின்.jpg http://irruppu.com/2023/06/26/ஆழ்கடலில்-களமமைத்து-சிங-2/
  7. எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். பிரிகேடியர் சொர்ணம் மதிப்பிற்குரிய பெருந்தளபதியுடனான நினைவுகளுடன்… திரு.அச்சுதன் (வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்தவர்) சொர்ணம் அண்ணா. அந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு…. பள்ளிப் பருவங்களில் நாங்கள் புகைப்படங்களில் பார்த்து, அறிந்து வியந்த ஒரு மிகப்பெரும் கதாநாயகன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா, ஒரு முறையேனும் அவருடன் கதைத்து விட மாட்டோமா என்றெல்லாம் ஏக்கம் கொண்டிருந்தோம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்11.jpg உலகம் போற்றும் எம் பெரும் தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன் பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றிக் கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதியவர். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும் என்னையும் என்னைப் போல் பலரையும் கவர்ந்தன. http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்4.jpg நான் எனது கல்வியை முடித்து குறிப்பிட்ட வேலை திட்டங்களைச் செய்து கொண்டு 1998 இல் தாயகம் சென்றேன். மிகவும் கடுமையாக ஜெயசிக்குறு எதிர் சமர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஒட்டுசுட்டான் வரை ராணுவம் முன்னேறி இருந்தது. இதே வேளை ஓயாத அலைகள்-3 இன் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியிருந்தன. ஆனால் அப்போது அந்தச் சமரின் பெயர் அறியவில்லை. ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதி ராணுவத்தின் அடுத்த நகர்வாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் ஒட்டுசுட்டான் முக்கிய தளமாக இருந்தது. இந்தப் பகுதியின் பொறுப்பு சொர்ணம் அண்ணாவிற்கே வழங்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் 3 எதிர்ச் சமர் இப்பகுதியில் தான் ஆரம்பமானது. இச்சமருக்கான தொடக்க வேலைகளைச் செய்ததும் ஒட்டுசுட்டானை உடைத்து எதிரிகளை ஓட விரட்டி ஒரு பெரும் வெற்றிச் சமருக்கு வழி வகுத்து கொடுத்த வெற்றி நாயகனாக இவர் இருந்தார் என்பதையும் அறிந்தேன். http://irruppu.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-15-at-07.56.50-840x485.jpeg அதேபோல் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிழக்குக் கடல் பரப்பும் மேற்குக் கடல் பரப்பும் விரிவுபடுத்தப்பட்ட காலகட்டத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசை அண்ணாவிற்கு உறுதுணையாக தமிழீழத்தின் மேற்குக் கடல் பகுதிகளுக்கான மன்னாரில் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக சொர்ணம் அண்ணா நியமிக்கப்பட்டிருந்தார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்10-496x840.jpg ஆண்டுகள் மெதுவாகக் கடந்தன. 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். ஒருமுறை கண்டுவிட மாட்டோமா என்று நினைத்திருந்த எனக்கு அப்பெருந் தளபதியுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பும் காலமும் கிடைத்ததில் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறேன். வான் புலிகளின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் சங்கர் அண்ணா அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. எமது படையாணி ஒரு மிகப்பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் இழப்பு இடியாய் விழுந்தது. http://irruppu.com/wp-content/uploads/2023/05/கேணல்-சங்கர்3.jpg விமானப் படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைவரின் ஆலோசனைக்கிணங்க கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக்கூடிய ஒரு நபராக எமது தளபதி சொர்ணம் அண்ணா வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரவர்களால் நியமிக்கப்படுகிறார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்புலிகளின்-604x840.jpeg எமது பணிகள் காடு சார்ந்த இடங்களில் அமைந்திருந்ததால் அவரின் அனுபவம் எமக்கு பல விடயங்களை கற்றுத் தந்தது. வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தலைவருடன் நெருக்கமாகப் பயணித்து அவரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு தளபதியுடன் பயணிக்கும் வாய்ப்பை நோக்கிச் சென்றேன். புதுக்குடியிருப்பில் இருக்கும் அவரின் தளத்திற்கு என்னை அழைத்திருந்தார். நான் சென்றவுடன் அவரே வந்து என்னை அழைத்துச் சென்று விருந்துபசாரங்கள் செய்து வெளிநாட்டு நிலவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். சங்கர் அண்ணா விட்டுச் சென்ற இடத்தை நிரப்பி அடுத்த கட்டத்திற்கு நாம் நகர உதவி தலைவர் கையளித்த பாரிய பணியை அவர் சிறப்புடன் நிறைவேற்றியது போன்ற பல விடயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். வான்புலிகள் காட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக எமக்கும் கற்றுக் கொடுத்தார். அருகிலேயே வைத்து நெருக்கடியான காலகட்டத்தை எப்படி கையாள்வது என்பதை செயல் வடிவாக்கிக் கற்றுத் தந்தார். பெருந் தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நடாத்தக்கூடிய வல்லமை மிக்க அத் தளபதி வரும் நாட்களில் ஆகாய தரைச் சமர்களை ஒருங்கிணைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. போராளிகளை வழிநடத்தி சீர்ப்பட அதை எமது கைகளில் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். அவர் என்னை அழைத்து ‘நான் தொடர்ந்து இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் எனக்கு வேறு பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் தெளிவாக விரைவாகக் கற்றுப் பொறுப்பெடுங்கள்’ என்றார். பாதுகாப்பு. போராளிகளின் மனங்களை தொய்வடையாமல் பார்த்துக் கொள்வது. இப்பெரும் இயக்கத்தின் நிர்வாக முறைமை போன்றவற்றை செவ்வனக் கற்றுத் தந்தார். ஒரு நாள் என்னை மணலாற்றுக் காட்டிற்கு அழைத்துச் சென்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவை நோக்கி ‘லீமா இவர் யார் என்று தெரியுமா? இவர் தான் எனக்கு அடுத்துப் பொறுப்பேற்கப் போகிறார் என அறிமுகம் செய்தார். பின்பு இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் தலைவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டி மிகவும் அக்கறையுடன் சம்பவங்களை விளக்கிப் பொறுப்புணர்வுடன் நடந்த பெருந் தளபதி அவர். யாரின் அறிமுகமெல்லாம் தேவைப்பட்டதோ அவர்களையெல்லாம் சிறப்புடன் அறிமுகம் செய்து உறுதுணை மிக்க தளபதியாக விளங்கினார் சொர்ணம் அண்ணா. http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்12.jpg காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த சொர்ணம் அண்ணா எமது ஒடுதளத்திற்கான பாதையாக இரணைமடுவிற்க்கு கிழக்காகவும் வட்டக்கச்சி யிலிருந்து பழைய கண்டி வீதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். இது சண்டை தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடுதளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது. http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்3.jpeg இந்தக் காலகட்டத்தில் நான் மீண்டும் வெளிவேலையாக அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு ஏற்பட்டது. அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிற்கு வழங்கினார். எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். அது தான் சொர்ணம் அண்ணாவின் திறன். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்7.jpg தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார். சிலகாலம் கடந்த பின் தலைவரின் பணிப்பின் பெயரில் வட்டக்கச்சி முகாமில் வைத்து சிறந்த கட்டமைப்பாக என்னிடம் வான்படையைக் கையளித்து தனது வாகனம் ஒன்றையும் தந்தார். பறந்து காட்டுங்கள் உங்கள் காட்டில் மழை பெய்யும் எனத் தட்டிக் கொடுத்து என்ன உதவி என்றாலும் அழையுங்கள் செய்து தருகிறேன் எனக் கூறி மீண்டும் கோணமலை சென்றார். அடிக்கடி என்னை அழைத்து நிலவரங்களை தெரிந்து கொள்வார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்-a.jpg அன்ரன் பாலசிங்கம் அண்ணா இறுதியாக தமிழ் ஈழம் வந்தபோது என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். தமிழீழத்தின் பெரும் தளபதிகள் ஒன்று கூடியிருந்த அந்த இடத்தில் என்னையும் வான்புலியின் சிறப்பு தளபதி யாக அறிமுகம் செய்து பெருமைப் படுத்தினார். நன்றி உணர்வோடு நான் அவரை நினைக்கிறேன். தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த சொர்ணமண்ணாவுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்5.jpg நான் அறிந்து செய்வதறியாமல் நின்ற அவரின் ஈகம். வாழ்வா சாவா என்று நம் தேசம் களம் கண்டு கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய் தேசத்திற்கான பெரும் பணியில் இணைத்துவிட்டு அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையவர். அப்பாவும் மகளுமாய் ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காகப் பணி செய்து மடிந்த வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய் நிலம். இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது மகளிற்க்கும் வீரவணக்கம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்9-594x840.jpg தம் குடும்பத்தை விடுத்து தலைவனையும் மண்ணையும் நேசித்து முள்ளிவாய்க்காலில் தமது இலட்சியப் பாதையில் மடிந்த வீரப்பெருந்தளபதிகளையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி நாம் ஒற்றுமையுடன் உரிமைக்காய் குரல் கொடுப்போம். ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ -எழுத்து அ.வி.முகிலினி http://irruppu.com/2023/05/14/பிரிகேடியர்-சொர்ணம்/
  8. 1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள், உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக் கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார். அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன . போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை வாகனத்தருகே சென்றார். அங்கே தலைவரைக் கண்டவுடன் ”அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா?” எனக் கேட்க தலைவரோ “ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பார்க்க” எனக் கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார். சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர். 28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது. இத்தாக்குதலை, உள்நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இச்சமர் முடந்தவுடன் அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைப் பாராட்டியதுடன் தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை. தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்ற சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச்சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார். – எழுத்துருவாக்கம் சு.குணா. http://irruppu.com/2022/06/27/மண்டைதீவுச்-சமர்-எவ்வாறு/
  9. யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார். அதற்கமைவாக இம்மினிமகாமைதாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார் .அதற்கமைவாக தாக்குலனிகள் 06.03.1987 அன்று அதிகாலை யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம்மீது தளபதி கிட்டண்ணா விளங்கப்படுத்திய தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் . குறிப்பிட்ட நிமிடத் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது .இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்க்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் . அவர்களின்.. விபரம் வருமாறு. கப்டன். நிக்சன். 2ம் லெப். அசோக். வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். -எழுத்துருவாக்கம். சு.குணா.
  10. 1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் .எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கை எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்ற சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது .அதில் ஒருவனாக ஈழவனும் பங்கு பற்றினான்.இச் சமரில் இவன் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருநல்ல சண்டைக்காரணாக இணங்காணப்பட்டான் இம் மறிப்புச் சமரின் இரண்டாம் நாளில் இவனது நண்பணான லெப்ரினன் சர்மா வீரச்சாவடைகிறான்.இச் சமரின் இவனது திறமையான செயற்பாட்டை அவதானித்த பொறுப்பாளர்.இவனை கனரக ஆயுதப்பிரிவிற்க்கு அனுப்புகிறார்..அங்குபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான அணிகள் பிரிக்கப்படும் போது இவனது அணியும் தேர்வு செய்யப்பட்டு அச்சமரில் பங்குபற்றியது.அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான பெரும்பாலான சமர்களில் பங்குகொண்ட ஈழவன்.மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதலிலும் பங்காற்றினான்.அதன் பின்னர் வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு பயிற்சிக்காக அணிகள் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் தனது அணியுடன் மிகவும் திறம்படசண்டையிட்டான்.சண்டைமுடிந்தவுடன் பழையபடி பயிற்சிகள் தொடர்ந்தன .அவர்கள் எடுத்த பயிற்சிக்கான அந்த நாளும் வந்தது அதுதான் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அத்தாக்குதலிலும் பங்காற்றினான்.இதற்கிடையில் தன்னை கரும்புலிகளனிக்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தலைவர் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.அதற்கான பதிலும் வர யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்து கரும்புலிகள் அணிக்குச் சென்றான்.அதன் பின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின் புலமாக இயங்கும் வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் கட்டளைமையங்கள்.மீது தாக்குதல் நடாத்தி எதிரியின் முன்னேற்ற நடவடிக்கையை திசைதிருப்புத்தாக்குதலை நடாத்துவதற்க்கு தலைவர் அவர்களால் கரும்புலிகளுக்கு வழங்கப்படுகிறது .கரும்புலிகளை இராணுவப் பிரதேசத்திற்குள் அனுப்பும் பொறுப்பு மூத்த தளபதி பானு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.அதற்கமைவாக அளவெட்டியில் அமைந்திருந்த காவலரன்களை தாக்கி அழித்து கரும்புலிகளை இராணுவப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள்.அங்கு சென்றவர்கள்.இவர்கள் உள் நுழைந்ததை அறிந்ததால் இராணுவம் பின் தொடர்ந்து சென்றதாலும் ஏற்பட்ட மோதலில் இராணுவத்திற்க்கு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து போராடி வீரச்சாவடைகின்றனர். இருப்பினும் இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி தனது பிரதேசங்களில் தேடுதல் நடாத்தினான் .இவர்களது இம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாவிடினும் இவர்களது தியாகத்தால் இயக்கம் இராணுவ முன்னேற்றத்திற்க்கு எதிராக தமது நிலைகளை பலப்படுத்துவதற்க்கும் அணிகளை மீளொளுங்கு செய்வதற்க்கும். காலஅவகாசத்தை வழங்கியது.இத்தீரமிகு வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலி கப்டன் ஈழவன் உட்பட்ட பதினொரு கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர். எழுத்துருவாக்கம்...சு.குணா. http://irruppu.com/2021/01/31/கரும்புலி-கப்டன்-ஈழவன்-ஈ/
  11. http://irruppu.com/2022/08/27/ஒரு-தளபதியின்-வீரச்சாவிற/ 27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது. ( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். ) அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும். இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது. அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன். பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதியின் வீரச்சாவிற்கு பழிவாங்குவதென்றால். அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள் அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. அதுதான் வெற்றிலைக்கேணி பெரிய மண்டலாய். வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார். தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்….சு.குணா.
  12. இறுவட்டு அட்டைகள் புலிகள் பாடல் இதுவும் ஊழியால் அழிந்து போனது; இதன் இசைகொண்ட பாடல்கள் அழிந்துபோய்விட்டன. இருப்பினும் இவ்விறுவட்டினுள்ளிருந்த ஒவ்வொரு பாடலின் வரிகளும் உள. இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
  13. இறுவட்டு அட்டைகள் புலிகள் ஓய்வதில்லை இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
  14. இறுவட்டு அட்டைகள் புலிகளின் புரட்சி இசை விழா இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
  15. இறுவட்டு அட்டைகள் புயலாகும் புது ராகங்கள் இவ்விறுவட்டில் சிங்களத்திலும் தமிழிலும் விடுதலைப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதுவும் ஊழியால் அழிந்து போனது. இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
  16. இறுவட்டு அட்டைகள் புதியதோர் புறம் விடியலின் பாடல்கள் இசை இறுவட்டில் வெளியான சில பாடல்கள் புதியதோர் புறம் என்ற இறுவட்டில் தவறுதலான புரிதலால் சில வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நெருப்பில் விளைந்த பொறிகள் திறனாய்வு: பாபு மூலம்: ஈழநாதம் 10-02-1991 பக்கம்: கடந்த 30-12-90 அன்று மட்டக்களப்பு பாடும் மீன் கலைமன்றத்தினரால் வெளியிடப்பட்ட 'புதியதோர் புறம்' ஒளிப்பதிவு நாடாவின் அறிமுகவிழா நல்லூர் சாதனா பாடசாலையில் நடைபெற்றது. தமிழீழக் களைஞர்களின் வளர்ச்சி வேகங்களின் வெளிப்பாடாக வெளிவந்த "இந்தமண் எங்களின் சொந்தமண்", "பூபாளம்", "வேங்கைகளின் விடுதலை வேதங்கள்" வரிசையில் 'புதியதோர் புறம்' எனும் புதிய வெளியீடான இது மிகவும் தரமானதாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் எமது மக்களின் விடுதலை வேட்கையையும் போராட்ட உணர்வுகளையும் ஆழமான கருத்துகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. பாடு மீன் கலைமன்றத்தின் தலைவரான திரு அமிர்தராஜ் அவர்களின் இந்தப் பணியானது போராட்ட வளர்ச்சிக்கு கலைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், மக்களை தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். ஒலிப்பதிவு நாடாவின் ஆரம்பத்தில் வரும் சில வரிகள் ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பானது இந்த மண்ணின் விடிவிற்காய் வகிக்கும் பங்கினை விபரிக்க, அதைத் தொடர்ந்து பாடல்கள் ஆரம்பிக்கின்றன. முதல் பாடலே, எம்மை பிரமிக்க வைக்கின்றது. எங்கோ ஒரு தெய்வ சந்நிதானத்தில் அமைதியான ஒரு சூழலில் ஒலிக்கும் தேவகானம் போன்று அந்தக் குரல் ஒலிக்கின்றது. "எந்தயர் ஆண்டது இந்நாடாகும்! இதை எதிரிகள் ஆள்வது கேடாகும்! வந்து நீ களத்தினில் போராடு, அடிமை வாழ்விலும் சாவது மேலாகும்" என்று ஆரம்பிக்கும் அந்தப்பாடல், மறைந்த தென் இந்தியப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழீழ மக்களுக்காக பாடிச் சென்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. கணீரென்ற அவரது தொனியும், இசை அமைப்பும் உண்மையில் ஒரு தேவகானமேதான். அழகான அந்தக் குரலுக்குரியவர் பாராட்டப்பட வேண்டியவரே. அந்தப்பாடலில் விசேட அம்சம் என்னவெனில், தமிழீழத்தின் வளங்களைப் பற்றியும், தமிழீழத் துரோகிகளின் கொடுமைகளையும் சித்தரித்து, இறுதியில் "தாயகம் மீட்டிட நீ ஓடு - பிரயா தானையில் சேர்ந்தொரு புலியாகு போயினித் தெருவினில் விளையாடு – தமிழ் பூத்திட புதியதோர் புறம் பாடு" என்று அழகாக விபரித்திருக்கிறார் கவிஞர். அடுத்த பாடலும், எமது விடுதலைப் போராளிகளான புலிகளின் தன்மையை புலிகளின் மன உறுதியை எடுத்துச் சொல்வதைப் போன்று அமைந்த கவிஞரின் பாடலை ஆண்-பெண் குரலிசையால், சோடிப்பாடலாக அழகாகப்பாடி மெருகேற்றியிருக்கின்றார்கள் பாடகர்கள். பெண்குரலின் சங்கீத நயத்துடன் ஆரம்பிக்கும் அப்பாடல், "நெருப்பில் விளைந்த பொறிகள் - நாங்கள் நஞ்சைத் தின்னும் புலிகள், இரும்பில் வார்த்த சிலைகள் - தலைவன் இதயம் கவர்ந்த கணைகள்" என்று தொடர்கிறது. பெண்குரல் மிகத் தெளிவாகவும், அழகாகவும் ஒலிக்கின்றது. இதேபோல, இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்திரமற்ற ஒரு வாழ்க்கைப் பயணத்தில் நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை, "தம்பிகளே அன்புத் தங்கைகளே நில்லுங்கள் உங்கள் சரித்திரம் என்ன சொல்லுங்கள்! போர்க்களம் சென்றிட ஒன்றாய் சேருங்கள். புதயுகம் பல படைப்போம் வாருங்கள்" என கூவி அழைக்கும் கவிஞரின் பாடலை, அழகான குரலில் இனிமையாக சோகமாக பாடி மக்கள் மனதில் தன்னை பதியவைத்துள்ளார் ஒரு பாடகர். ஆண்குரல் மிக இனிமையாக ரசிக்கூடிய வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களையும் வித்தியாசமான வகைகளில் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் அடுத்தபாடலை ஒரு துள்ளிசையாக மெருகூட்டியிருக்கின்றார். காலம் சென்ற மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கொள்கை விளக்க சீர்திருத்தப் பாடல்கன் போல அமைந்த இந்தப் பாடல் மிகவும் பிரமாதம். "போடு போடு வீரநடை போடு! வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு. ஆறிலும் சாவு நூறிலும் சாவு மானமிருந்தால் தானே வாழ்வு" என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கடைசி நிலைகளில் பாடலின் இசையின் சந்தம் மாறி பின்னர் மீண்டும் பழைய ராகத்துடன் சேர்ந்து "போடு போடு வீர நடை போடு" என்று நான்குமுறை சுருதியை அதிகரித்துப் பாடி பாடலை முடித்து வைக்கும் போது எமக்குள்ளேயே ஒரு உத்வேகம் பிறக்கின்றது. குதிரை மீது சென்று கொண்டிருப்பது போல கற்பனை பண்ணி இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். நிச்சயமாக இந்தப் பாடல் சிறுவர் - மாணவர் – இளைஞர் - யுவதிகள் - முதியவர் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரின் வாயிலும் வெளிவரும் என்பது திண்ணம். இந்தப் பாடகருக்கு பாராட்டுக்கள் பலமுறை வழங்களாம். அதைத் தொடர்ந்து, "மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் பயலென எழுந்து ஓடி வந்தார் புலிவீரர்" என்று பெண்குரல் ஒன்று சோகமாக ஒலிக்கின்றது. குரலில் எந்தவித தள தளப்புகளும் இன்றி இனிமையாக பாடியிருக்கும் இந்தக் குரல் பாராட்டப்பட வேண்டிய குரல். போராட்டத்தின் சிந்தனையின்றி தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை தட்டியெழுப்புவது போலவும், வெட்டவெளியில் காவலரண்களில் நின்று போராடும் புலிகளின் நிலை பற்றியும் விளக்கும் வகையில் ஒலிக்கிறது ஓர் ஆண்குரல். "தூக்கமேனடா தமிழா தூக்கமேனடா! நிமிர்ந்து நில்லடா நீயும் துணிந்து செல்லடா" என்று ஆரம்பிக்கின்றது அந்தப் பாடல். உறுதியான குரலில் அழகாகப் பாடியிருக்கிறார் பாடகர். அது போல, "சிங்களம் எங்களைக் கொன்று குவிக்கும், தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்! இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும், கொடும் எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்" என்று ஒருபாடல் ஆண்குரலில் ஒலிக்கிறது. இப்பாடலில் தென் தமிழ் ஈழத்தின் இன்னல்கள் தெரிகிறது. அதற்கேற்ற தொனியில் பாடியிருக்கும் பாடகருக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக, ஒரு போராளி மாண்டுபோன தனது சக போராளிகளை அழைப்பது போலவும் தாம் ஒன்றாய் கூடித்திரிந்த காலங்களையும், இன்று பிரிந்து நின்று கலங்குவதையும் விவரித்து ஒரு பாடல் ஒலிக்கின்றது. "மாண்டுபோன மைந்தர்களே என்னை சுமந்து நின்ற நண்பர்களே மீண்டும் இங்கே கூடுங்கள் ஈழம் மீட்போம் இங்கே வாருங்கள்.” என்று ஆரம்பிக்கும் இப்பாடலும் இனிமையாக இருக்கின்றது. ஒரு வித்தியாசமான வகையில் அமைந்ததும் எமது போராளிகளை காத்து வந்த காடுகளை வரம் வேண்டிப் பாடுகின்றது ஒரு மழலைக் குரல். "காடுகளே காடுகளே கொஞ்சம் கேளுங்கள்! தமிழ் ஈழத்தின் வீரர்களை என்றும் காத்தே வாருங்கள்" என்று மழலையின் செல்லக் குரல் ஒன்று ஒலிக்கின்றது. இந்தக் குரல் மிக விரைவாக வளர்ச்சியடையக் கூடிய வேகம் தெரிகிறது. இந்தக் குரலுக்கு ஒரு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகட்டும். "சத்தியத்தை காப்பதற்கு ராமன் வனவாசம் சென்றான்! இலட்சியத்தைக் காப்பதற்கு தலைவன் உமை நாடி வந்தான்! தாய்போல காத்து எங்கள் வீரர்களை ஆளாக்கி, நீங்காத நினைவாக நெஞ்சமதில் வீற்றிடுவீர்" என்ற கவிஞரின் கோரிக்கையும் பாடலுக்குரிய மழலைக் குரலும் அற்புதமாக இருக்கின்றது. இறுதியாக, "வீட்டுக்கொரு மைந்தனே விரைந்து வா, அடிமை விலங்கை உடைத்தெறிய போராடுவோம்" என்று ஆரம்பிக்கின்றது ஒரு ஆண்குரல். மிக உறுதியாக போராட்டத்திற்கு அணிதிரட்டும் நோக்கம் கொண்ட இப் பாடலில், "நம்பி நேசம் போனதினால் வந்தவினை! சொந்த மண்ணில் வாழ்வதற்கே அஞ்சும் நிலை! கண்ணைக் கட்டி காட்டினிலே விட்டதயர்! மண்ணை மீட்கப் போராடும் எங்கள் கதை” என்ற வரிகள் எமது பரிதாபத்தை வெளிப்படுத்துகின்றன. பாடலுக்குரியவர் அழகாக, ஆழமான உணர்வுடன் பாடியுள்ளார். இவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். மொத்தத்தில், 'புதியதோர் புறம்' கொண்ட முத்தான பத்துப் பாடல்களும் மிக நன்றாக அமைந்திருக்கின்றன; இசையமைப்பு பிரமாத அடுத்த வெளியீடுகள் இதை விட சிறந்த இசையில் வெளிவர வாழ்த்துகிறேன். ஒலிப்பதிவு நன்றாக இருக்கின்றது. மொத்தத்தில் கலைஞர்களின் வளர்ச்சியும் "போடுபோடு வீரநடைபோடு" என்று கூறுமளவிற்கு அமைந்திருக்கின்றது. இப்படியொரு தரமான ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பை வெளியிட்ட பாடும்மீன் கலைமன்றத்தினருக்கும் அதன் தலைவர் திரு. அமிர்தராஜ் அவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பில் நன்றிகள். *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.