நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Everything posted by நன்னிச் சோழன்
-
கப்டன் கந்தையா (அபிமன்யு)
1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.1993ம் ஆண்டு பூநகரி முகாம் தகர்ப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக மேற்கொள்ளப்படவிருந்த பலாலி விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கும் இவனது பங்களிப்பு முக்கியமானதாக இருந்து. இயக்கத்தில் இருந்த காலத்தில் இராணுவத்திற்க்குள்ளே நீண்டகாலமாக இருந்தான் அதன் பின்னர் பூநகரி முகாம் மீதான வேவு நடவடிக்கையில் 01.03.1994 அன்று வீரச்சாவடைந்தான். கப்டன் கந்தையா (அபிமன்யு) தியாகராசா ஞானவேல் மயிலிட்டி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 28.10.1973 வீரச்சாவு 01.03.1994 http://irruppu.com/2021/03/01/கப்டன்-கந்தையா-அபிமன்யு/
-
காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர். இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர். அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன. அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில் சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார். இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009) அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் . அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள் காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 ) இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது. அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான். அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன் அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார். இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து. எழுத்துருவாக்கம்…சு.குணா. இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு. கப்டன் பவான் (ஐயா) பொன்னம்பலம் யோககுமார் சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம். லெப்டினன்ட் கிர்மானி சிலுவைராசா ஜோன்சன் பேட்டன் குருநகர், யாழ்ப்பாணம். 2ம் லெப்டினன்ட் குணம் மு.யோகேந்திரன் உப்புக்குளம், மன்னார். 2ம் லெப்டினன்ட் குலம் மு.யோகேந்திரன் பள்ளிமுனை, உப்புக்குளம், மன்னார் வீரவேங்கை தாஸ் கஸ்பார் சூசைதாசன் நிலாச்சேனை, உயிலங்குளம், மன்னார். வீரவேங்கை சுவர்ணன் பொன்னையா சிறிபோஸ் சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம். For more images: http://irruppu.com/2021/04/21/காங்கேசன்துறை-பகுதியில்/
-
கப்டன் மாயவன்
கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். பிறப்பு: 13.09.1975 வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு . 1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் களஅனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன் . முகாமில் நடந்த கலைநிகழ்வுகளிலும் சரி விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டவன்.காயமடைந்து மருத்துவமனையிலிருந்து முகாமிற்கு வரும்போராளிகளுக்கான சகல வேலைகளிலும் முன்மாதிரியாக செயற்பட்டவன். மணலாறு மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பிலும் பங்குபற்றினான். இத்தாக்குதலுக்குப் பழிதீர்க்குமுகமாக விமானப்படையினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் பாடசாலை சென்ற இவனது சகோதரி உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1994 ம் ஆண்டு காலப்பகுதியில் கனரக ஆயுதப் பயிற்சியாளனாக நியமிக்கப்பட்டு அங்கு தனது திறமையான செயற்ப்பாட்டைக் காட்டி போராளிகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவன்.பல சமர்களில் பங்கேற்று அச் சமர்களின் அனுபவங்களை நகைச்சுவையோடு சக போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தவன். அன்று பலாலியிலிருந்து இராணுவம் முன்னேறுவதாக எமது முகாமுக்கு அறிவிக்கப்பட்டது.உடனடியாக அணிகள் தயார்படுத்தப்பட்டு களமுனைக்குச் சென்றன அவ் அணிகளுடன் சென்ற மாயவன் களமுனைத்தகவல்களுடன் வருவானென எதிர்பார்த்த வேளையில் தான் தொலைத்தொடர்புக்கருவியூடாக அச் சோகச் செய்தி எம்மை வந்தடைந்து. முன்னேறிய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்தான். இவனால் அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட போராளிகள் இறுதிவரை போராடினார்கள். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/05/18/கப்டன்-மாயவன்/
-
மேஐர் தசரதன்
மேஐர் தசரதன் சந்திரன் சுபாகரன் வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். தொடர்ந்து மேஐர் போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான். போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக்கான தேடல்மூலம் நிறையவே கற்றுக் கொண்டான்.தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் திருவடி அவர்களுடன் இணைந்து தென் தமிழீழ விநியோக நடவடிக்கையில் பெரும் பங்காற்றிய தசா அதன் பின்னர் லெப் கேணல் அண்ணாச்சியுடன் இணைந்து சாளையில் படகுகளை தேவைகளுக்கேற்ப இடங்களுக்கு மாற்றுவது படகுக்காவிகளைப் பராமரிப்பதுடன் அக்காலப்பகுதியில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் படகுச் சாரதியாகச் சிறப்புத்தளபதியின் அனுமதியுடன் செவ்வனவே பங்காற்றினான். தொடர்ந்து கனரக ஆயுதப் பயிற்சி பெற்று பலகடற்சமர்களில் ஐம்பது கலிபர் துப்பாக்கியோடு பங்காற்றினான்.ஐம்பது கலிபரின் சிறந்த சூட்டாளனுமாவான். இந்தநேரத்தில் தான் இந்தியா விநியோகத்திற்காகவும் அதற்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும் ஒருதொகைப் போராளிகள் மன்னாருக்குச் சென்றபோது அங்கு சென்ற தசா அப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில்.இவனது திறமையான செயற்பாடுகளைக் கவனித்த கடற்புலிகளின் முதலாவது தளபதியாகவிருந்த கங்கைஅமரன் அவர்களின் மெய்ப் பாதுகாவலனாகவும் அவரின் வாகனச் சாரதியாகவும் இணைத்துக்கொள்கிறார் . அப்பணியில் இருக்கையில் பணி நிமித்தமாக சென்றுகொணடிருக்கையில் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் ஆழஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களுடன் வீரச்சாவடைகிறான். எழுத்துருவாக்கம்..சு.குணா http://irruppu.com/2021/06/29/மேஐர்-தசரதன்-20ம்-ஆண்டு-வீர/
-
வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும். நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நெஞ்சினில் விடுதலைநெருப்பை ஏந்தி,காலம் எமக்குத்தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாக எமக்குத் தென்படுகின்றார்.கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப்பெற்றதிலிருந்து உயர்ந்த இடத்தில் வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றாள். இதனை இம் மாவீரர்கள் சார்பாக உறுதியாகக் குறிப்பிடமுடியும். தளம்பாது,தடம்புரளாது,நீண்ட விடுதலைப் போரட்டத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அழியாத பதிவையும் விடுதலை வரலாறு கொண்டுள்ளது. கப்டன். ஜிம்கலி அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக் கணக்கான போராளிகள் மாவீரர்களாக எம் கண்முன்னே, காற்றோடு காற்றாக கலந்து நிற்கின்றார்கள்.இவர்களை எம்மால் மறக்க முடியாது, மறப்பதும் சரியான அர்த்தமாகாது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையில் படைத்துறைப்பயிற்சி பெற்றுக்கொண்ட கப்டன். ஜிம்கலி அவர்களின் சொந்த ஊரான கிரானில் விடுதலைப் போராட்டத்திற்கு முந்திய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற வரிசையிலும் ஜிம்கலி இருந்தார். ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ்மக்கள் திரண்டெழுந்தபோது, பேரூந்து எரிப்பு, சிங்கள எழுத்துக்கள் அழிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான போக்கு என்பவற்றில் ஜிம்கலியின் பங்கு அதிகமாகவே இருந்தது. வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கின்றபோது எமது மண்ணிலிருந்து கிளர்தெழுந்த தமிழ் இளைஞர் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய பல சம்பவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. எந்த சுயநலமுமில்லாது தமிழ்மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று எழுந்தவர்கள் தான் இந்த வீரமறவர்கள், நாம் வசதியோடு, வளமாக வாழ நினைக்கின்றோம் ஆனால் இவர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும், தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழ்மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் தங்களை தமது மண்ணுக்கு உரமாக்கினார்கள். மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்ற கிரான் என்ற ஊர் தமிழர்களின் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. கிரானிலிருந்து மேற்கு திசையாக பயணிக்கின்ற போது எமது பார்வையில் படுகின்ற ஒவ்வொரு ஊரும், விடுதலைப் போராட்டத்தில் முக்கிய, அழியாத நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. புலிபாய்ந்தகல், கோராவெளி, பொண்டுகள் சேனை, குடும்பிமலை, பள்ளத்துச்சேனை,தரவை ,வடமுனை,கள்ளிச்சை மியான்கல்குளம், கூளாவடி.வாகனேரி என இன்னும் பல வயல்சார்ந்த ஊர்கள் தமிழ்மக்களுக்கு படியளக்கும் பசுமை நிறைந்த இடமாகவும் காணப்படுகின்றன. தமிழீழத்தின் எல்லையை நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு இடமும் தமிழர்களின் பெயர் சொல்லும் தமிழர்களின் வாழ்வாதார இடமாகவும் அமைந்திருக்கின்றன. கொஞ்சம் குடியிருப்புகள் கொஞ்சம் வயல்நிலங்கள், கொஞ்சம் காடுகள் என கலந்திருக்கின்ற இவ்வூர்கள் அனைத்தும் எமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வாழ் விடங்களாகவும் மாறி யிருந்தன.ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என்ற அடிப்படையிலும் எம்மால் காணக்கூடியதாகவும் இருந்தது.மேற்கு புறத்தின் எல்லையில் அகல வாய் திறந்திருந்த சிங்கள ஆக்கிரமிப்பையும் வடமுனையில் தடுத்து நிறுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் போர் அமைந்திருந்தது. ஒவ்வொரு குடியேற்றத்திற்கும்ஒவ்வொரு காரணம் வைத்திருக்கும் சிங்கள அரசு மேற் கூறப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த வைத்திருந்த காரணம் மகாவலி c வலயமாகும்.போராளிகளின் வாழ் விடங்களாக மாறிய இவ்விடங்களில் வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விடுதலைப் புலிகள் இருந்தனர். வீரம் செறிந்த விடுதலைப் போரை சந்தித்த இடங்களாகவும் இவை விளங்கின. புலிபாய்ந்தகல், இவ்வூர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் வரலாற்றுப்பதிவு ஒன்றைக் கொண்டதால்சிறப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமான முறையில் இயங்க ஆரம்பித்த வேளையில் பண்ணைமுறையிலான மறைவிடங்களை தமிழீழ மெங்கும் ஆங்காங்கே வைத்திருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது பண்ணை இயங்கியது, புலிபாய்ந்தகல் ஊரில்தான் என்பதையும், இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஒரு சில தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த இப் பண்ணையின் மூலமாக முதல் அத்தியாயத்தை விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வூர் பெற்றிருக்கிறது. அதற்குப் பின்பு பல போர் நிகழ்வுகளையும், மற்றும் வழிமறிப்புத்தாக்குதல்களையும், பரந்து விரிந்த இடத்தில் வாழ்ந்த போராளிகளின் எல்லைப்பாதுகாப்பு அரண் ஊராகவும், சிங்கள ஆக்கிரமிப்பு படையினர் ஒவ்வொருவரும் அறிந்து கொண்ட இடமாகவும் இது விளங்கியது. கப்டன்.ஜிம்கலி, பயிற்சியை முடித்தவுடன் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது பயிற்சி முகாமில் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அதன் பிறகு தாய் மண் திரும்பிய வேளையில் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா காவல் நிலைய அழிப்பு தாக்குதலிலும் ஈடுபட்டார். மட்டக்களப்பு நோக்கி வருகிற வழியில்வன்னிபெருநிலப்பரப்பில் பல நடவடிக்கைகளில் போராளிகளுடன் இணைந்து செயலாற்றினார். முல்லைத்தீவின் கொக்கிளாய் என்ற இடத்தில் அமைந்திருந்த சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப் பட்ட முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதல் என்ற வரலாற்று பதிவிலும் இடம்பெற்றார். இத் தாக்குதலில் கிரான் ஊரின் முதல் மாவீரர் கென்னடி என்பவரும் வீரச்சாவடைந்தார். விடுதலைப் புலிகளின் இந்தியாவின் இரண்டாவது பாசறையில் பயிற்சி பெற்ற கென்னடி கிரான் ஊரில் விடுதலையை நேசித்த குடும்பங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்டவர். திருகோணாமலை மாவட்டத்தில் குச்சவெளி என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த சிங்களக்காவல் நிலையம் மீதான தாக் குதலிலும் கப்டன் ஜிம்கலி பங்கேற்றுக் கொண்டார். 1985 ம் ஆண்டு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தளபதி அருணா தங்கியிருந்த ஈரளக்குளம் மதுரையடி முகாமில் கப்டன். ஜிம்கலி அவர்களும் இணைந்திருந்தார் இம் முகாமில் வைத்து திட்டமிடப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலையத்தாக்குதலில் கப்டன். ஜிம்கலி அவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்தது. 2 . 9 . 1985 ம் ஆண்டு அன்று இத் தாக்குதல் நடந்த வேளையில் சிங்கள அதிரடிப்படையினர், கல்லடி, கும்புறுமுலை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர்.இத் தாக்குதல் நடக்கின்றபோது ஏறாவூர் சிங்கள காவல் துறையினருக்கு உதவிக்கு வரவிருக்கும் கும்புறுமூலையில் நிலை கொண்டிருந்த சிங்கள அதிரடிப்படையினரை தடுத்துத் தாக்கும்பணி கப்டன். ஜிம்கலி தலைமையிலான குழுவினருக்கு கொடுக்கப் பட்டிருந்தது. இக் குழுவில் மட்டு – அம்பாறை முதல் பாசறையில் பயிற்சி பெற்ற மட்- இருதயபுரத்தைச் சேர்ந்த கப்டன்.சபேசன்,கிரான் ஊரைச் சேர்ந்த கங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கப்டன். ஜிம்கலி குழுவினரின் தீவிர தாக்குதலால் நிலை குலைந்த சிங்கள அதிரடிப்படையினர் முகாமுக்கு திரும்பி ஓடினார்கள்.அன்றிலிருந்து கப்டன். ஜிம்கலி கும்புறுமூலை அதிரடிப் படையினருக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வீரனாகக் காணப்பட்டார். கிரான் ஊரிலிருந்து விடுதலைக்காக திசைமாறிய இளைஞர்கள் எல்லாம் சரியான திசையில் கப்டன் ஜிம்கலி அவர்களின் பின்னால் அணிதிரண்டனர்.இவர்களுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிருந்தும் இணைந்துகொண்ட இளைஞர்களையும் வைத்து மாவட்டத்தின் இரண்டாவது பயிற்சிப் பாசறையை பள்ளத்துச்சேனை என்ற பழந்தமிழ் வயல்சார்ந்த ஊரில் தனது மேற்பார்வையில் திறம்பட நடத்தினார். இப் பாசறையில் பயிற்சி பெற்று,பூநகரி சிங்கள இராணுவ படைத்தளம் மீதான தாக்குதலில் 16 . 11 . 1993 . அன்று வீரச்சாவடைந்த மேஜர். ரூபன் பல களங்களை கண்ட வீரமான ஓர் போராளியாகும். மட்டக்களப்பு வடக்கு பொறுப்பாளராகப் பணியாற்றி பலசாதனைகளை விடுதலைக்காக நிகழ்த்திக்காட்டியவர் என்பதையும் இச் சந்தர்பத்தில் நினைவு கூருகின்றோம். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தளபதியாக லெப். கேணல் குமரப்பா பொறுப்பேற்றுக் கொண்டதைத்தொடந்து, வரலாற்று சிறப்புமிக்க கோயிலைக் கொண்டிருந்த கோராவெளி ஊரில்அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தங்குமிட முகாமுக்குப் பொறுப்பாளராக கப்டன். ஜிம்கலி நியமிக்கப் பட்டிருந்தார். கப்டன்.ஜிம்கலி அவர்களின் திட்டமிடலிலும், தலைமையிலும் வாகனேரி என்ற ஊரில் 1986 ம் ஆண்டு ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும், பல இராணுவத்தினர் காயமடைந்தனர். 27 . 06 1986 அன்று அதிகாலையில் கப்டன் .ஜிம்கலி முகாம் சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. நீண்ட காலமாக வேவுபார்க்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு இப் பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்தினர் மேற் கொண்டிருந்ததாக பின்பு அறியப்பட்டது. காலை இரண்டு குண்டு வீச்சு விமானங்கள்,உலங்கு வானுர்தி என தாக்குதலுக்கு மேலதிக பாதுகாப்பைக்கொடுத்ததாக நடவடிக்கை அமைந்திருந்தது.இம் முகாமுக்கு குறிப்பட்ட தூரத்தில் தங்கியிருந்த தளபதி லெப்.கேணல் குமரப்பா கப்டன். ஜிம்கலி அவர்களுடன் தொடர்பை எடுப்பதற்கு முயன்று முடியாததால் போராளி கங்கா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிங்கள இராணுவத்தினரின் தாக்குதல் பற்றியதை அறிந்துகொண்டு, எல்லோரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் எனக்கூறினார் இதற்கேற்ப குறிப்பிட்ட சில போராளிகளை குழுவாக ஒரு பக்கம் அனுப்பிவைத்து, இன்னொரு பக்கம் அவர்களும் சண்டையில் ஈடுபட்டனர். மேஜர்.ரூபன் , கப்டன்.தரன் ஆகிய குழுவினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிங்கள இராணுவத்தினர் சிதறி ஓடினர். இதன் பின்பு முகாமுக்குள் நுழைந்து தேடிய போதுதான் கப்டன். ஜிம்கலி உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தது தெரிய வந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமை விட்டு வெளியேறிய நிலையில் குண்டு வீச்சு விமானத்தாக்குதலில் கங்கா வீரச்சாவடைந்திருந்தார். துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் சயனைட் அருந்திய நிலையில் கப்டன். ஜிம்கலி அவர்களின் வித்துடல் எடுக்கப்பட்டது.அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருடன் இருக்கவில்லை.இவ் ஆயுதம் சிங்கள இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இவ் விடத்தில் சில ஆண்டுகளின் பின்பு ஒரு மரப் பொந்துக்குள் மறைத்து வைக்கபட்டிருந்ததை அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் கண்டெடுத்து போராளிகளிடம் ஒப்படைத்தார். இது ஜிம்கலிவைத்திருந்தது என தெரியவந்தது. தனது உயிரை விட தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற ஆயுதம் மேலானது என்ற உணர்வு கப்டன்.ஜிம்கலி அவரிடமிருந்ததை எம்மால் உணரமுடிந்தது. அக் காலங்களில் ஒவ்வொரு போராளியும் ஆயுதத்தைப் பாதுகாப்பதற்கு தமது உயிரை அர்பணித்தார்கள் என்பதை எமது போராட்ட வரலாறுகளின் மூலம் அறிந்திருக்கின்றோம். இச் சம்பவத்தைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தங்கள் புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இப் புலனாய்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முதல் பாசறையில் பயிற்சி பெற்ற கறுவாக்கேணி ஊரைச் சேர்ந்த கப்டன். சங்கர் ஈடு பட்டிருந்தார். இவருடைய திறமையினால் கோராவெளிமுகாம் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக விரிவாக அறிய முடிந்தது . மாடுவளர்ப்பு அதிகமாகக் காணப்பட்ட இப் பகுதிகளில் மாடு வாங்குபவர்கள் போல் வந்து முகாம் அமைவிடத்தை துல்லியமாக அறிந்து கொடுத்ததால் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை சம்பந்தப் பட்டவர்கள் மூலமாக கப்டன். சங்கர் தெரிந்து கொண்டார். இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு அன்றிலிருந்து ஆக்கிரமிப்புவாதிகள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இன்றும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. நன்றி தமிழ்காந்
-
தரையிறங்கிய சிறப்புப்படைக்கு தக்கபாடம் புகட்டிய தலைநகர் தாக்குதலணிகள்.
http://irruppu.com/2021/06/29/தரையிறங்கிய-சிறப்புப்பட/ June 29, 2021 1990.06 .மாதம் நடுப்பகுதியில் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இலங்கை அரசஇயந்திரம் முழுப்படைப்பலத்தையும தமிழீழமக்களுக்கெதிராக முழுவீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இவைகளுக்கெதிராக விடுதலைப்புலிகளும் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இலங்கை இராணுவமுகாம்களில ஒன்றான திருகோணமலை மாவட்டம் முதூர் நகர் பகுதியில் அமைந்திருந்த இராணுவமுகாமும் ஒன்றாகும்.இம்முகாமில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் இருந்தனர்.இதை இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததும் விடுதலைப்புலிகள் தங்களது முற்றுகைக்குள் கொண்டுவந்தனர்.இம்முகாம் கப்டன்.பேனாட் அவர்கள் மற்றும் மேஐர்.பவான் அவர்கள் தலைமையிலான போராளிகள் இலங்கைப்படைகளை வெளியேறாத வண்ணம் ஒருமுற்றுகைக்குள் வைத்திருந்தனர்.இப்படைமுகாமில் உள்ளவர்களுக்கு ஆதரவாகவும் இம்முகாமில் உள்ளவர்களை மீட்பதற்காகவும்.பல்வேறு கடல்வழிமூலம் தரையிறக்க முயற்சிகளை இலங்கைஇராணுவம் மேற்கொண்டது. இருந்தாலும் விடுதலைப்புலிவீரர்களின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அம்முயற்சிகளிலிருந்து பின்வாங்கியது இலங்கை முப்படைகள்.இருந்தாலும் 14.06.1990 அன்று இரவு திருகோணமலைமாவட்டம் முற்றுகைக்குள்ன முகாமிலிருந்து சுமார் ஆறுகிலேமீற்றர் தூரத்திலிலுள்ள இலக்கந்தை என்னுமிடத்தில் நள்ளிரவில் இங்கைஇராணுவத்தின் அதிசிறப்புப்காட்டுபபயிற்சி பெற்ற எண்பத்திமூன்று பேரைக்கொணட சிறப்பு அணிகளை தரையிறக்கியது. தரையிறங்கிய படைகள் மெதுமெதுவாக முதூர் நகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் முற்றுகைக்குட்பட்ட இராணுவமுகாமை நோக்கி நகர்ந்து வந்தனர் .இப்படை நகர்வை விடுதலைப்புலிகளின் வேவுவீரர்கள் அப்பகுதிக் பொறுப்பாளாரான பேனாட் அவர்களுக்குத் தெரிவித்தனர். பேனாட் அவர்களோ அணிகளை ஒருங்கினைத்து விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான பகுதியான கட்டைப்பறிச்சான் பாலத்திற்க்கு அண்மையாக வழிமறித்து ஒருபாரிய வீராவேசத்துடன் இருந்த சிறிய அணிகளையும் ஒருங்கினைத்து தாக்கினார்கள்.இச்சமர் 15.06.1990 அன்று காலை ஒன்பதுமணியளவிலிருந்து மாலை மூன்றுமணிவரை நீடித்தது.இத்தீரமிகு தாக்குதலில் தரையிறங்கிய சிறப்புப்படையணிகளில் நாற்பதிற்க்கும் மேற்பட்டபடையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.எஞ்சிய படையினரை கலைத்துச் சென்ற விடுதலைப் புலிகள் மீது விமானப்படையினரின் மூர்கத்தனமான தாக்குதல் நடாத்தி பாதுகாப்பு வழங்க கடற்படையினரின் படகுகளில் ஏறி தப்பியோடினர். இவ்வீரம் செறிந்த சமரில் மேஐர்.பவான் வீரச்சாவு.(03.07.1990.)அவர்கள் கப்டன் .குட்டி அவர்கள்.வீரச்சாவு.(17.06.1990) மேஐர்.வெற்றிச்செல்வன்.அவர்கள்.வீரச்சாவு. (09.06.1992)மேஐர் .வினோத்.அவர்கள்.(வீரச்சாவு. லெப்.நிமால்.அவர்கள்.வீரச்சாவு.(30.06.1991.). ஆகியோர். தலைமையிலான அணிகள் இச்சமரில் தத்தம் பகுதிகளை இராணுவம் வந்துவிடக்கூடாது என்கிற நிலையில் தலைவனை மனதில் நிலைநிறுத்தி கடுமையாகப் போரிட்டு இவ்வெற்றிகர நடவடிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்தார்கள்.இவ்வெற்றிகர தாக்குதலில் வீரவேங்கை ஜெகன் அவர்கள் வீரவேங்கை .டங்கா அவர்கள் வீரச்சாவடைந்தார்.இவ்வெற்றிகர நடவடிக்கைகளை கப்டன்.பேனாட் அவர்கள். (வீரச்சாவு.01.09.1990)செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார்.இத்தாக்குதல்களில் வீரமிக்க போராளிகள் சுமார் அறுபதுபேர்கள் தான் இருந்தார்கள். எப்படைவரினும் எமது வீரச்சாவடைந்த உடலைத் தாண்டிதான் வரவேண்டும் என்ற ஒவ்வொரு போரளியின் உணர்வாலேதான் இவ்வெற்றி தலைநர்ப்போராளிகளுக்குச்சாத்தியமாகிற்று. எழுத்துருவாக்கம்…சு.குணா. கப்டன் பேனாட் காளிக்குட்டி இரத்தினசபாபதி புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை.
-
முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.
மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராக இருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார். அதற்கமைவாக வலிகாமம் பகுதியிலுள்ள மாதகல் திருவடிநிலையில் பதினைந்துபேர் கொண்ட சிறு அணி நிலை கொள்ள வேவு அணிகள் முன்னே தமது வேவுத்தகவல்களைச் சேகரித்தன .09.07.1995 அன்று காலை எதிரி பலத்த எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்தியவாறு பாரியதொரு முன்னேற்ற நடவடிக்கையை திருவடிநிலை கடற்கரையோரப் பிரதேசம் நோக்கி ஆரம்பித்தான் . அங்குநின்ற அணிகள் சிறுசிறு தாக்குதல்களை நடாத்தி பின்வாங்கின. இவ் அணிகளுடன் மேலதிகமாக மூத்த தளபதி பானு அவர்களின் தலைமையில் மேஐர் பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அணிகளும் இன்னும் பல அணிகளும் அராலியில் ஒரு அரண் அமைத்து எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்.ஆனால் 12.07.1995 அன்று அணிகள் பின்னால் எடுக்கப்பட்டதுடன் அனைத்து அணிகளும் மருதனார்மடப் பாடசாலையில் ஒருங்கினைத்து மூத்த தளபதி பொட்டு அவர்கள் தலைமையில் ஒரு பெரும் தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதுடன் http://irruppu.com/wp-content/uploads/2021/07/IMG-7d8d9dc474fd390ee1a25386a8036ea6-V.jpg எதிரியின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையால் மக்கள் படுகின்ற இன்னல்களைப் பற்றி குறிப்பிட்ட மூத்த தளபதி பொட்டு அவர்கள் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துவதற்க்கு முன் தாக்குதல் நடாத்த வேண்டுமெனவும்.அணிகள் பிரிக்கப்பட்டு அளவெட்டி பகுதிக்கு மூத்த தளபதி பானு அவர்களும் உதவியாக( 18.10.1995 அன்று சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப் கேணல் சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்) .14.07.1995 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் முன்னரன்கள் கைப்பற்றப்பட்டு அணிகள் முன்னேறிச் சென்று அருணோதயாப் பாடசாலை உட்பட்ட பெரும்பிரதேசம் எமது பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தன.அன்றைய தினம் மதியம் எமதணிகளுடன் மேலதிகமாக மட்டு.அம்பாறைப் படையணிகள் இணைக்கப்பட்டு மாசியப்பிட்டி பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு இவ் அணிகள் அனுப்ப்பட்டு அங்கு நின்ற அணிகளுடன் இணைந்து சண்டையிட்டு அவ்விடங்களும் கைப்பற்றப்பட்டன. http://irruppu.com/wp-content/uploads/2021/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D1.jpg இவ் வெற்றிகர இராணுவ நடவடிக்கையை தலைவர் அவர்களின் ஆலோசனையுடன் மூத்த தளபதி பொட்டு அவர்கள் வழி நடாத்தினார்.இந் நடவடிக்கையில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டு பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு ஒரு புக்காரா விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.படையினரால் வன்வளைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது்.இந் நடவடிக்கையில் எழுபது போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/07/14/முன்னேறிப்பாய்ச்சலும்-ப/
-
லெப். கேணல் கதிர்வாணன்
கட்டுரையை எழுதியவர்: சு.குணா.
-
மணலாற்றில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் தாக்குதலொன்று.
தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன. இத்தகவல்களை மணலாற்று வேவுஅணிகள் தளபதிகளான அன்பு அவர்கள் மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகளோ எமது தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதற்காகவுமே இத்திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டம் அமைக்கப்படுவதாகவும் இவைகளுக்குப்பாதுகாப்பு வழங்கும் காவலரன்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதலில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்று கூறி தளபதிகளை வழியனுப்பி வைத்தார். தலைவர் அவர்கள்.வேவு அணிகள் கொடுத்ததரவுகளின் அடிப்படையில் தலைவர் அவர்கள் நல்லதொரு தாக்குதற்த்திட்டத்தைக் கொடுத்தார்.அதற்கமைவாக இருநூறுபேர்கொண்ட ஆண் பெண் போராளிகளைக் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதல் திட்டம் கமல் முகாமில் சிறப்புத் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது. (அத்துடன் களத்தை வழிநடத்துகிற தளபதி வீமன் அவர்களுக்கு சிறப்புத்தளபதி அன்பு அவர்கள் தெளிவான ஒருவிடயத்தைக் கூறினார்.தமிழர்தாயகப்பிரதேசத்தின் மணலாற்றின் முக்கியத்துவத்தை ஆழமாகவிளங்கப்படுத்தி அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை எமது தலைவர் அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.எனவே எமது மக்களின் தாயகப்பரப்பு துண்டாடப்படாமல் இருக்க என்ன விலைகொடுத்தாலும் இக்காவலரன்களை அழிக்கவேண்டும். ஏனெனில் இக்காவலரன்களை அழிக்காமல் விட்டால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை தடுக்கவும் முடியாது என்பதற்காகவே அவர் கடும்தொணியில் இவ்விடயத்தைக்கூறினார்.ஒவ்வொருபோராளியும் இவ்விடயத்திலிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இக்காவலரன்களை அழிக்கவேண்டுமென மனதில் உறுதிபூண்டார்கள்.) திட்டத்தின்படி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டத்திற்க்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட அனைத்துக் காவலரன்களை அதாவது இருபத்திஐந்திற்க்கும் மேற்பட்டகாவலரண்கள். தாக்கியழிப்பதே திட்டமாகும். திட்டத்திற்கமைவாக 02.03.1992 அன்று இரவு வேவு அணிகள் பெருஙகாடுகளுக்கூடாக மிகவும் தாக்குதல் அணிகளை மிகவும இரகசியமாக நகர்த்தி 03.03.1992 அன்று அதிகாலை சுமார் ஒருமணியளவில் எதிரியின் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு அண்மையாகக் கூட்டிச்சென்று விட்டனர். தாக்குல் அன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பாமானது தாக்குதல் ஆரம்பித்த குறுகிய நேரத்தில் அனைத்துக் காவலரன்களும் விடுதலைப்புலிவீரர்களின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.கைப்பற்றப்பட்ட அனைத்துக் காவலரன்களையும் அழித்துவிட்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் புலிகள் தளம் திரும்பினர். இவ்வெற்றிகரத்தாக்குதலை களத்தில் தளபதி வீமன் அவர்களும் உதவியாக லெப்.கேணல்.கஐந்திரன் அவர்களும்(வீரச்சாவு..30.12.2006) வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப்.கேணல். அன்பு அவர்கள் வீரச்சாவு.(12.11.1993) செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இத்தாக்குதலுக்கான வேவுத்தகவல்களை சேகரித்துத் தந்ததுடன் தாக்குதல் அணிகளையும் களத்திற்க்குள் குறிப்பிட்டநேரத்திற்க்குள் நகர்த்தி சண்டையிலும் பங்காற்றி பின்னாளில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் .இளம்புலி அவர்களையும் நினைவுகூருகின்றோம். இவ்வெற்றிகரத்தாக்குதலில் களத்தை வழிநடாத்திய தளபதி மேஐர்.வீமன் அவர்கள் வீரச்சாவடைந்தார். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/08/15/திட்டமிட்ட-சிங்களக்-குடி/
-
ஆழ்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பை நிவர்த்திசெய்த கடற்கரும்புலி வீரர்கள்.
நீண்டகாலமாக மன்னாரிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படயினர் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டுவந்தனர். அதுமட்டுமல்லாது கடற்புலிகளின் இந்திய விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தனர். இருந்தாலும் கடற்புலிகளும் இக்கடற்படையினர் மீது பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனாலும் அவைகளும் வெற்றியளிக்கவில்லை.மாற்றுத்திட்டமொன்றின் மூலம் தான் தாக்குதல் நடத்தலாம் அதுவென்ன என்கிற எண்ணமே போராளிகளிடமும் தளபதிகளிடமும் இருந்தது. இப்பிரச்சனைகள் அனைத்தும் எமது தலைவர் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டுவந்தனர் தளபதிகளான சூசை அவர்களும் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் இவ் அனைத்து விடயங்களையும் அக்களநிலவரங்களையும கேட்டறிந்து தீவிரமாக ஆராய்ந்த எமது தலைவர் அவர்கள். மீனவர்கள மீதுதானே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதற்கேற்றாற்போல ஒரு நல்லதொரு தாக்குதற்திட்டம் எமது தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக ஒரு ரோலர் கொள்வனவு செய்து அவ்ரோலரில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டு மூன்று கடற்கரும்புலிகள் செல்வார்கள் . அவர்கள் சாதரண மீன்பிடி ரோலரைப்போல மீன்பிடியில் ஈடுபடுவார்கள் .இலங்கைக்கடற்படையினர் தமது வழமையான தாக்குதலை அப்பாவி மீனவர்கள் மீது நடாத்தலாம் என எண்ணி ரோலருக்கு மிக அண்மையாக வரும்போது இக்கடற்கரும்புலிகள் மீன்களைக் கொடுப்பது போல பாவனைசெய்து வரும் இலங்கைக் கடற்படையின் டோறாப்பீரங்கிக்கலம் மீது தாக்குதல் நடாத்துவார்கள் இதுவே அத்தாக்குதற் திட்டமாகும். திட்டத்திற்கமைவாக நீண்ட கடலனுபவம் கொண்ட கடற்கரும்புலிவீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தாக்குதற் திட்டத்திற்கமைவாக 2000 ஆண்டு. மூன்றாம் மாதம் முற்பகுதியில் இக்கடற்கரும்புலிவீரர்கள் தமது இலக்கை அதாவது மக்களுக்கு பாரிய அழிவுகளை கொடுத்துககொண்டிருந்த இலங்கைக்கடற்படையினரின் கலத்தை அழிப்பதற்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தார்கள்.கடுமையான காற்று சீரற்ற காலநிலை இவைகளுக்கும் மத்தியில் தங்களது இலக்கை நோக்கி இக்கடற்கரும்புலிவீரர்கள் சென்றார்கள்.கிட்டத்தட்ட ஒருவாரமாக அக்கடலில் தங்களது இலக்கிற்க்காக அலைந்து திரிந்தார்கள் . இறுதியாக 12.03.2000 அன்று அதிகாலை இவர்களது ரோலரை அண்மித்த இலங்கைக்கடற்படையினர் இவர்களை விரட்டி மீன்களைப்பறித்து இவர்களை தாக்கமுற்பட்டபோது அவ் அதிவேகடோறாப்படகுமீது தாக்குதல் நடாத்தி மன்னார் கடலிலே தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு புதியவரலாற்றை எழுதிச்சென்றார்கள் இக்கடற்கரும்புலிவீரர்கள். http://irruppu.com/wp-content/uploads/2021/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%A6%E0%AE%AE%E0%AF%87%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-840x473.jpg அதுவரை தமிழ் மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் இருந்த தொந்தரவும் நீங்கியது.மீண்டும் தமிழ்மீனவர்கள் மீது கைவைத்தால் இப்படியான தாக்குதல் நடக்குமென்பதால் இலங்கைக்கடற்படையினரும் தமிழ்மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தாமல் ஒதுங்கிக்கொண்டனர். இத்தீரமிகு தாக்குதலில் ஒரு டோறாப்படகு பாரியசேதமடைந்ததுடன் பலகடற்படைபடையினர் கொல்லப்பட்டதுடன் பலகடற்படையினர் படுகாயமடைந்தனர். இத்தீரமிகு தாக்குதலை எமது தலைவர் அவர்களின் திட்டத்திற்கமைவாக கடற்புலிகளின் அப்போதைய தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இவ்வீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான… கடற்கரும்புலி …மேஐர்.பரதன். கடறகரும்புலி…மேஐர்.மதன். கடற்கரும்புலி..கப்டன்.தினேஸ். எழுத்துருவாக்கம்…சு.குணா http://irruppu.com/2021/08/10/ஆழ்கடல்-தமிழ்-மீனவர்களின/
-
கடற்கரும்புலிகளினால் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகுத் தாக்குதல்
1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர். இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார். அதற்கமைவாக சாள்ஸ் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் கிளாலி கடல்நீரேரியில் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் இலங்கைக் கடற்படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்தார். தளபதி சாள்ஸ் அவர்களின் இழப்பிற்க்குப் பழிவாங்கும் முகமாக ஒரு தாக்குதலை நடாத்துவற்காக இச் சந்தர்ப்பத்தையும் கடற்புலிகள் ஆக்ரோசத்துடனும் அதேவேளை நிதானத்துடனும் செயற்பட்டனர். அதற்கமைவாக கடற்கரும்புலிகளான மேஐர் புகழரசனும் கப்டன் மணியரசனும் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது .திட்டத்தின்படி மீனவர்களது படகைப்போல படகொன்றைக் கொள்வனவு செய்து அதற்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதற்குமேல் வலைகள் போடப்பட்டு இவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவார்கள். கடற்படையினர் இவர்களது படகை அணைத்து ஒருவரை தமது கடற்படைப்படகில் ஏறச்சொல்வார்கள் அச்சமயம் மணியரசன் ஏறமுற்பட புகழரசன் வெடிக்கவைப்பார். வெடிக்கவைத்தவுடன் இன்பருட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று அவ்டோறாப்படகை கைப்பற்றுவார்கள்- இதுவே திட்டமாக இருந்தது. 29.08.1993 அன்று திட்டத்தின்படி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் டோறாப்படகை மோதி வெடித்தனர்.சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று டோறாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் போதிய வசதியின்மையால் அம்முயற்சி பலனலிக்காமல் போக கடற்புலிகள் அவ்டோறாப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தார்கள். இத்தாக்குதலுக்காக இக்கடற்கரும்புலிகள் பட்டகஸ்ரம் கொஞ்ச நஞ்சமல்ல ஒவ்வொருநாளும் இரவிலிருந்து மதியம் வரை வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடி ஓடுவார்கள் .பின்னர் இலக்குக்கிடைகாமல் திரும்புவார்கள் .இதுமாதக்கணக்கில் இடம்பெற்றது இருந்தாலும் இவர்கள் இலக்குக்கிடைக்கும் வரை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து இலக்கின் மீது தமது உயிராயுதத்தால் மோதி விடுதலைப்போராட்டத்திற்க்கு பலம் சேர்த்தார்கள்.இதுவே கடற்கரும்புலித்தாக்குதலில் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகாகும். இவ்வெற்றிகத் தாக்குதலில் கடற்கரும்புலி மேஐர்.புகழரசன். கடற்கரும்புலி கப்டன் மணியரசன். ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இவ்வெற்றிகரத் தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடாத்தினார்கள். தலைவர் அவர்கள் குறிப்பட்டபடி கடற்கரும்புலிகளின் உயிராயுதத்தால் மீட்கப்பட்ட ஆயூதங்கள் கடற்புலிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுவும், அதன் பின் நடைபெற்ற கடற்சமரில் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் முன்னனி ஆயுதங்களாக சண்டைகளின் திருப்புமுனையாக அமைந்தது என்று கூறினால் அதுமிகையாது. எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/08/30/கடற்கரும்புலிகளினால்-மு/
-
இலங்கை இராணுத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடக்க காலகட்டத்தில் ஆங்காங்கே இலங்கை இராணுவத்தினர்மீதான சிறுசிறு பதுங்கித்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.பெரும்பலும் மக்களைப்பாதுகாக்கவும்,இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கட்டுப்படுத்தவும்வேண்டி இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். விடுதலைப்புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பலரும் பல்வேறு வகையில் தம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி விடுதலைக்கு வலுச்சேர்த்த வரலாறுகளும் பல உண்டு. இங்கே ,1984 ம் ஆண்டு செப்ரெம்பர் 10ம் தேதி முல்லைத்தீவு -திருகோணமலை பிரதான வீதியில் செம்மலையிலிருந்து நாயாறு நோக்கி சுமார் 1மைல் தூரத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்தாக்குதல் பற்றிப் பதிவு செய்ய விளைகின்றேன். அதை விபரிக்குமுன் அத்தாக்குதலைத் திறம்பட நடாத்திமுடித்த கப்டன் லோரன்ஸ் அவர்களைப்பற்றிக் குறிப்பிட்டாகவேண்டும். முல்லைத்தீவு மணலாற்றுப்பிரதேச அநேகமான மக்களுக்கு அவரைத்தெரியும். அதிலும் செம்மலைக்கிராம மக்களின் வீடுகளில் லோரன்சும் ஒரு பிள்ளை எனுமளவு மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஓர்சிறந்த போராளி .எப்போதும் சிவந்தே காணப்படும் கண்களில் விடுதலை வேட்கையும் ,சுறுசுறுப்பான செயற்பாடுகளும் மக்கள்மீது அவர்காட்டும் அன்பும் தமிழீத்தாயத்திற்கொண்ட அளவுகடந்த பற்றும் அவரை எல்லோர் மனங்களிலும் பதியவைத்துவிட்டது.அவரைப்போன்ற பல போராளிகளால்தான் போராட்டம் உச்சநிலைக்கு வளர்ந்தது என்றால் மிகையல்ல. அப்போதெல்லாம் இலங்கை இராணுவம் தனது விருப்பிற்கேற்ப அடாவடித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. அடிக்கடி சுற்றிவளைப்புகளும் கைதுகளும் மக்களின் வாழ்வை நிம்மதியற்ற நிலைக்குள்தள்ளியிருந்தது. நாயாற்றில் தமிழரின் பூர்வீக நிலத்தில் சிங்களமீனவர்களைக்குடியமர்த்தி ,அவர்களுக்குப் பாதுகாப்புவழங்குவதற்காகக் கொக்கிளாயில் இராணுவமுகாம் ஒன்றை இலங்கை இராணுவம் நிறுவியது.இதனால் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்கும்,கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுக்குமாக இராணுவ வாகனத்தொடரணிகளின் போக்குவரவு அதிகமாகியது.கூடவே, இடையில் நாயாற்றிலிருந்த சிங்களவர்களுக்கு அது பெரும் பலத்தையும் கொடுத்தது. மேலும் மேலும் அதிகரித்த இராணுவ நடவடிக்கைகளால் மணலாற்று மக்கள் சொந்த வீடுகளில் அச்சத்துடன் வாழும் நிலையை எதிர்கொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளால் மட்டுமே இந்நிலையை மாற்றமுடியும் என்பது மக்களின் அசையாத நம்பிக்கையாவிருந்தது. இவ்வேளையில் இலங்கை இராணுவத்திற்குத் தகுந்த பாடங்கற்பிக்கவேண்டி ஒரு கண்ணிவெடித்தாக்குதலை நடாத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர். இதற்குச் செம்மலைவாழ் மக்களிற் சிலரும் பக்கபலமாக நின்றனர்.கப்டன் லோரன்ஸின் தலைமையில் பணிகள் ஆரம்பமாகின.இராணுவத்தின் போக்குவரவு தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டதோடு தாக்குதலுக்கான நாளும்,இடமும் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அன்றையநாள் நிச்சயமாக இராணுவ வாகனம் வருமா என்பது கேள்வியாகவிருந்தது. அதனால் முல்லைத்தீவிலிருந்து இராணுவத்தை நாயாறுக்கு வரவழைக்க முடிவெடுத்தனர் புலிகள்.இதன்படி அளம்பிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்களவர்களின் லொறிக்குச் செம்மலை இளைஞர்கள்சிலர் கற்களை விட்டெறிந்துவிட்டு ஓடிவிட்டனர்.இச்செய்தி முல்லை இராணுவத்தைச்சென்றடைய அங்கிருந்து இராணுவத்தை நிரப்பியவாறு ஒரு ஜீப்வண்டியும் ஒரு துருப்புக்காவி(ரக்)வண்டியும் விரைந்து வந்தது.அழைத்து அடிப்பதென்பது இதுதான் போலும். http://irruppu.com/wp-content/uploads/2021/08/20210827_141345-840x630.jpg இதற்கு முன்னையநாள் சைக்கிளில் புறப்பட்ட கப்டன் லோரன்ஸ் அவர்களும் போராளிகள் சிலரும் செம்மலைக்கும் நாயாற்றுக்குமிடையில் 9 ம் கட்டையில் மக்கள் குடிகள் அரிதான இடத்தைத்தெரிவுசெய்து கண்ணிவெடியைக்கவனத்துடன் தடயமேதுமின்றிப் புதைத்துவிட்டு அருகிலுள்ள பற்றைகளுக்குள் பதுங்கியிருந்தனர்.அவர்களுக்கான உணவுப்பொதிகளை நேரத்துக்குநேரம் மக்கள் கொண்டுசென்று கொடுத்தனர்.அத்தோடு இராணுவத்தினரின் நகர்வும் மக்களால் அறியப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.ஆகமொத்தம் புலிகளும் மக்களும் இத்தாக்குதல் சரியாக இடம்பெறுவதற்கான எல்லாநடவடிக்கைகளையும் செவ்வனே நிறைவேற்றினர் என்பதோடு சரியான நேரத்திற்காகக்காத்திருந்தனர் எனபதே விடயம். நேரம் மதியத்தை நோக்கி நகர்கிறது. விரைந்துவந்த ஜீப்வண்டியும் துருப்புக்காவியும் நாயாற்றைச்சென்றடைந்து திரும்பிவரும்வரை காத்திருந்தனர் போராளிகள்.ஜீப்வண்டி சரியாகக் கண்ணிவெடியிடத்தை அடைய வெடி வெடிக்கவைக்கப்பட்டது.இதனைச்சற்றும் எதிர்பாராத இராணுவம் நிலைகுலைந்தது. ஜீப் முற்றிலும் சிதறியது அதிலிருந்த இராவத்தினர் அந்த இடத்திலேயே உயிரைவிட்டனர்.பலர் படுகாயமடைந்தனர்.துருப்புக்காவியின் முன்பக்கமும் சேதத்திற்குள்ளானது.இன்னும் சில இராணுவத்தினர் செய்வதறியாது கடற்ரைப்பக்கமாக ஓடி மீனவர்குடில்களில் தஞ்சமடைந்தனர். பீதியடைந்த சிலர் ஒடிச்சென்று மரங்களில் ஏறி ஒளிந்தனர்.சிறிய துப்பாக்கிச் சண்டையுடன் புலிகள் அவ்விடத்தைவிட்டகன்றனர்.ஏனெனில் அந்த இடம் தொடர் சண்டைக்கேற்றதல்ல என்பதே. இத்தாக்குதலில்10க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டதுடன் பல இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். சிலமணிநேரத்தின்பின் கொக்கிளாயிலிருந்து வந்த இராணுவம் செம்மலைப்பகுதியில் மக்கள்குடிருப்புகளை நோக்கிச் சரமாரியாகச்சுட்டதில் இளைஞர் ஒருவரின் கால் சிதைவுக்குள்ளாகிப்பின்னர் கால் துண்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றிகரத்தாக்குதலில் வீரச்சாவடைந்த.. லெப்டினன்ட் எட்வின் இரத்தினசபாபதி திலீபன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. அவர்களையும்.நினைவுகூருகின்றோம். வீரப்பிறப்பு: 07.11.1965 வீரச்சாவு: 10.09.1984 http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-.%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D1.jpg அக்காலகட்டத்தில் அது ஒரு வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றித் தாக்குதலாக அமைந்தது. இத்தாக்குதலுக்காகக் கப்டன் லோரன்ஸ்(வீரச்சாவு 25.10.1985) அவர்கள் ஓட்டிச்சென்ற சைக்கிள் பற்றைகளின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டது.அது ஆதரவாளர் ஒருவருடையது.மீண்டும் இராணுவம் வந்து தேடுதல் வேட்டை நடத்தினால் மக்களுக்கும் இத்தாக்குதலுக்குமான நேரடித்தொடர்புவெளிப்பட்டுவிடும் என்பதனால் ,ஆபத்து என்று தெரிந்தும் ஆதரவாளர்கள் இரவோடிரவாகத்தாக்குதல்நடந்த இடத்திற்குச்சென்று சைக்கிளை எடுத்துவந்துவிட்டனர். தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள், இத்தாக்குதலுக்கு உதவிய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கப்டன் லோரன்ஸ் அவர்களைப் பணித்தார்.ஆயினும் முக்கியமான பணிகளின்மூலம் ஒத்துழைப்புவழங்கிய இளைஞர்கள் சிலர் தாமாகவே மணலாற்றுக்காட்டின்ஓரமாகத்தலைமறைவாகத்தங்கி யிருந்து நிலைமையைப்பார்த்துத் தாம் ஊர்திரும்புவதாகத்தெரியப்படுத்தி அவ்வாறே 3 நாட்களின் பின் மீண்டனர்.இவை பலரும் அறியாத தாக்குதலுக்குப்பின்னான நிலவரங்கள்.இப்படி இன்னும் ஏராளம் உண்டு. இவ்விடயங்கள் மக்களோடு புலிகளுக்கிருந்த நலுலுறவையும் ,புலிகள்மீது மக்களுக்கிருந்த அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்பதைக்காணலாம். எழுத்துருவாக்கம்.. கலைமகள் 10.09.2021 http://irruppu.com/2021/09/09/இலங்கை-இராணுத்தினர்-மீதா/
-
120MM மோட்டரை கப்பலில் பயன்படுத்தி கடற்படையினருக்கு சவாலாக அமைந்த தாக்குதல்
உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில் 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல் (1500NM ) மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது ) http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.jpg அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார். மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின .இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்க சயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள். மூன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர், கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் . இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனை செய்யக்கூட முடியாது. இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார். http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் . இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி, கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள். எழுத்துருவாக்கம்.சு.குணா. http://irruppu.com/2021/09/11/120mm-மோட்டரை-கப்பலில்-பயன்பட/
-
அர்ப்பணிப்புடன் பன்னாட்டுக் கடற்பரப்பில் களமாடிய ஆழ்கடலோடிகள்
இந்தோனேசியாவிலிருந்த எமது படகுகளில் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பிற்க்குக் கொண்டு வந்து அங்கு நின்ற எமது கப்பலில் இருந்து தமிழீழத்திற்க்குத் தேவையான பொருட்களுடன் அலம்பிலுக்கு வருவதற்க்கான ஒரு திட்டம் கடற்புலிகளின் சர்வதேசக்கடற்பரப்பில் நின்றவர்களுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக அந்த நேரம் தமிழீழத்தில் நின்ற லெப்.கேணல் ஸ்ரிபன் தலைமையிலான ஒரு அணி உருவாக்கப்பட்டு அவ் அணிகளில் சர்வதேசக் கடற்பரப்பில் நின்றவர்களுடன் மேலதிகமாக தமிழீழத்தில் நின்றவர்கள் சிலரும் இணைக்கப்பட்டனர். இவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வதற்காக தமிழீழத்திலிருந்து புறப்பட்டு சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்தோனேசியா சென்று படகை எடுத்துக்கொண்டு கப்பலைச் சந்தித்து கப்பலில் உள்ள அந்த நேரம் தமிழீழத்திற்க்கு தேவையான முக்கிய பொருட்களுடன் வந்துகொண்டிருந்தபோது 17.09.2006 அன்று காலை அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலான கரோஐசால் வழிமறிக்கப்பட்டு சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் அதாவது மாலை கரோஐசால் முடியாத கட்டத்தில் விமானப்படையினர் அழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது . இந் நடவடிக்கையில் லெப் கேணல் ஸ்ரிபன் உள்ளிட்ட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்தனர். இச் சம்பவத்தில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ஸ்ரிபனின் இன்னும் இரண்டு சகோதரங்கள் வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்திருந்தனர். ஆனால் துரதிஸ்டம் இம் மூவரது வித்துடல்களும் மீட்கப்படவில்லை. ஸ்ரிபனை ஏற்கனவே இரணடு மாவீரர்கள் இருப்பதால் இவரை வீட்டுக்குச் செல்ல இயக்கம் அனுமதித்திருந்த போதிலும் இவரது பிடிவாதத்தால் இவர் வீட்டிற்க்கு செல்லாமல் தொடர்ந்து இயக்கத்தில் இருந்தார். இப்படியான எவ்வளவோ சம்பவங்கள் அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்திருந்த போராட்டமாக தமிழீழப் போராட்டம் இருந்தனெ கூறிக் கொள்வதில் மிகையாகாது. எழுத்துருவாக்கம் …. சு .குணா. http://irruppu.com/2021/09/16/அர்ப்பணிப்புடன்-சர்வதேச/
-
மேஜர் சிவா நீண்ட கால கடல் அனுபவம் உள்ள கடற்புலி வீரன்
1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். தொடர்ந்து கடற்புலிகளால் தளபதி அருச்சுனா அவர்களின் தலைமையில் தரைத்தாக்குதலணி ஆரம்பிக்கப்பட்டபோது சிவாவும் அதில் ஒருவனாக இணைந்து அப்படையணியில் மிகவும் சிறந்து விளங்கினான். இவனது அனைத்துச் செயற்பாடுகளையும் கவனித்த தளபதி அருச்சுனா அவர்கள் இவனை சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளனாகா அனுப்புகிறார். அங்கு இவனது செயற்பாடுகளின் நிமிர்த்தம் இவனை மேலதிக மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிக்காக அப்போதைய கடற்புலிகளின் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரிடம் அனுப்பினார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள்.அங்கு தொலைத் தொடர்புப்பயிற்சிகளை பெற்ற அதேசமயம் அனுபவப் பயிற்சிக்காக ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளிலும் தளபதி பிருந்தன் மாஸ்ரரின் அனுமதியுடன் சென்று வந்தான்.இப்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேசமயம் தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக கப்பல்களின் செயற்பாடுகளின் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கப்ப்லுக்கு அனுப்பப்பட்ட போராளிகளுள் ஒருவனாக சிவாவும் சென்றான். அங்கு நின்ற காலங்களில் தன்னை ஒவ்வொரு விடயங்களிலும் மென்மேலும் கற்றக்கொள்கிறான். அதன்பின் தமிழீழம் வந்த சிவா ஆழ்கடல் விநியோகப் படகுகளின் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே செயற்படுகிறான்.தொடர்ந்து சண்டைப்படகுகளின் கட்டளை அதிகாரியாக விநியோகப்பாதுகாப்புச்சமர் மற்றும் வலிந்ததாக்குதலில் செவ்வனவேபங்காற்றினான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்திற்க்கான பாதுகாப்புச் சமரில் செவ்வனவே பங்குபற்றிய சிவா தொடர்ந்து சண்டைப்படகுகளின் முகாம் பொறுப்பாளனாகவும் சண்டைப் படகுகளின் தொகுதிக் கட்டளைஅதிகாரியாகவும் செயற்பட்டான் .உடல்பருமனாகா இருந்தாலும் எந்தப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.மற்றும் சகபோராளிகளுக்கும் தனது அனுபவங்ளை சொல்லிக்கொடுத்து அவர்களின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றினான்.அதுமட்டுமல்லாமல் இக்கட்டான பல்வேறு கடற்சமரை தனது அனுபவங்களினால் எங்களுக்குச் சாதகமாக மாற்றியவன் சி.அதே போல தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற ஆழ்கடல் விநியோகத்திற்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை தொடருமாறு கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் ஒரு தாக்குதல் திட்டம்கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக 21.10.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவடைகிறான். பல்வேறு கடற்சமரில் முக்கிய பங்காற்றியவன். நீண்டகடலனுபவம் கொண்ட சிவா எந்தவேலையாகிலும் திறம்படசெய்தவன். அனைத்துப் போராளிகளையும் அரவனைத்து செயற்பட்ட ஒருவீரன். மிகவும் நெருக்கடியான காலங்களிலும் முகாம் போராளிகளை மிகவும்கட்டுப்பாடாக வைத்திருந்தபோராளியுமாவார். எழுத்துருவாக்கம் .. சு .குணா http://irruppu.com/2021/10/21/மேஜர்-சிவா-நீண்ட-கால-கடல்/
-
மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நாட்டுப்பற்றாளர் பூரணலட்சுமி
“ரகு இல்லையெண்டதால வாறதை நிப்பாட்டியிடாதீங்க; எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க” – வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோடே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் “இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டிக்கொண்டுபோங்கோ என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர். குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர். இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் ரகு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டான். அவனுக்கு பிரதிஸ் எனப்பெயர் சூட்டப்பட்டது. பயிற்சி முகாமில் ஒருவருக்கு சுகவீனம். அந்தக்காலத்தில் இயக்கத்திற்கு மருத்துவப்பிரிவு என ஒன்றிருக்கவில்லை. எந்த நோய் வந்தாலும் அரச மருத்துவ மனையிலேயே சிகிச்சைபெறவேண்டும். சுகவீனமுற்றவனைக் கூட்டிக்கொண்டு 09.09.1985அன்று ரகு மட்டக்களப்புக்கு வந்தான். அந்தக்கால கட்டத்தில் குறிப்பிட்ட வயது இளைஞர்களைக் கண்டாலே படையினருக்கு கைது செய்ய வேண்டும் போலிருக்கும். அதேநடைமுறையை இவர்களிலும் செயற்படுத்த முயன்றனர். தப்ப முடியாத நிலையில் இவர்கள் இருவரும் சயனைட் உட்கொண்டனர். இவர்களின் சடலங்களைப் படையினரே தீ மூட்டி எரித்தனர். ஓரிரு தினங்களின் பின்னரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிரதிஸ் (சின்னத்துரை ரகு ) பிரியன் (தம்பிப்பிள்ளை நவரட்னராஜா) என அறிய வந்தது. இருவரின் வீட்டிலும் மரணஓலம் , ஆரையம்பதிக் கிராமத்தில் கணிசமானோர் இருவரின்வீட்டிலும் குழுமியிருந்தனர். எப்படியும் இவர்களின் வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். அதுவும் தனது கையில் ரகுவைப்பிடித்துக் கையளித்த அன்ரி என்றழைக்கப்படும் திருமதி பூரணலட்சுமியைச் சந்திக்க வேண்டும். இவ்வாறு தீர்மானித்த அந்தப் போராளி மாலையாகும்வரை காத்திருந்து விட்டு அங்கு சென்றார். “உங்கட கையிலதானே அவனைப் பிடிச்சுத்தந்தன்; துலைச்சுப்போட்டு வாறீங்களே”எனக் கேட்பாரே அன்ரி என நினைத்தவாறேதான் அந்த வளவுக்குள் அவர் காலடி எடுத்து வைத்தார். அவ் வேளையிலேயே தொடர்ந்தும் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார் அன்ரி. அதிர்ந்துதான் போனார் அப்போராளி . சாதாரணமாக ஒரு அன்னையின் வாயிலிருந்து வரவேண்டிய அழுகையும் சோகமும் வேறுவிதமான வேண்டுகோளுடன் ஒலிக்கிறதே என வியந்தார். அந்தப் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டோரில் இருவரும் பயிற்சியை முழுமையாக பெற்றும் களம் காணாமல் போய்ச் சேர்ந்தனர். உள்ளுணர்வுகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் ஒரு போராளியின் குடும்பத்தினர் தங்கள் வீதியூடாக வீரச்சா வெய்தியோரின் வித்துடல்கள் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்துக்குக் கொண்டு செல்கையில் மலர்தூவி வணக்கம் செலுத்துவது வழமை. ஒரு நாள் வித்துடல் தாங்கிய வாகனம் இவர்களின் வீட்டருகில் வரும்போது பழுதடைந்து விட்டது. யாருடைய பிள்ளையென்றாலும் தங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து கண்ணீர் மல்க உணர்பூர்வமாக வழியனுப்பி வைப்பதை களத்தில் நின்று பார்த்தவர்களுக்குத்தான் புரியும். இந்த வாகனம் திருத்தப்பட்டு வித்துடல் கொண்டு செல்லப்படும்வரை இக் குடும்பத்தினர் அங்கேயே நின்றனர். பின்னர் துயிலுமில்லத்தில் விதைத்தாயிற்று வித்துடல் . அந்த மாவீரர் யாரென இனங்காணமுடியாத நிலையிலேயே துயிலுமில்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. மும்முரமாக யுத்தம் நடைபெறும் சமயங்களில் காயமடைந்தோர் களத்திலிருந்து அகற்றப்படுவர். அவர்கள் சிகிச்சைபெறும்போதும் வீரச்சாவு அடைவதுண்டு. களத்தில் வீரச்சாவடைவோர் சிலர் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருப்பர். அதனால் உறுதிப்படுத்த தாமதமாகும். சரியாக உறுதிப்படுத்தத் தாமதமாகுமெனில் (நாட்கணக்கில்) வித்துடல்கள் பழுதாகக்கூடும் . எனவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்க நேரும். ஒரு நாள் காயமடைந்த, வீரச்சாவு வடைந்த சிலரின் இலக்கத்தகடுகள் இணைத்த நூல்களை ஒருவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு வந்த போது நிகழ்ந்த தாக்குதலில் வீரச்சாவடைந்துவிட்டார். கழுத்தில் அவரதும் இலக்கத்தகடும் தொங்கியது. இவரது இலக்கமென்ன? யார்யார் காயமடைந்தனர்.?வீரச்சாவு அடைந்தனர் ? என ஆராய்ந்து முடிப்பதற்கு சம்பந்தப்படடோர் பட்ட பாடு கொஞ்சநஞ்ச மல்ல. அதைப்போலவேதான் கேப்பாபுலவில் பழுதடைந்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டவரின் வித்துடல் அங்கு மலர் வணக்கம் செலுத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவர்களுக்குப் பின்னரே தெரியவந்தது. “எங்கட பூவையும் கண்ணீரையும் பாக்க வேணுமெண்டுதானோ அவன்ர ஆன்மா வாகனத்தைப் பழுதாக்கினது“என்று அந்த மாவீரரின் குடும்பத்தினர் இந்த ஏற்பாடுகளைச் செய்தவரிடம் கேட்ட போது அவர் அதிர்ந்து தான் போனார். அது போலத்தான் அன்ரி ரகுவின் சம்பவம் நடந்த நாள் மட்டக்களப்பு நகரில்த்தான் நின்றார். வாகனத்தில் இருவரது உடல்களும் கொண்டு செல்லப்பட்ட போது தூர நின்று பார்த்தார்.”ஒரு புள்ள பச்சைச் சாறன் உடுத்திருந்தது. ஆர் பெத்த பிள்ளைகளோ?“ என்று அன்று முழுவதும் அங்கலாய்த்த படி இருந்தார். அந்தச் பச்சைச் சாரம் உடுத்த மகன் அவர் பெற்ற பிள்ளை என்று தெரியாமல் போயிற்று. அமிர்தகழியில் கொண்டுபோய் எரித்தார்கள் என்ற தகவல்தான் அவருக்கு மேலதிகமாகக் கிடைத்தது. ரகு மறைவதற்கு முதல்நாள் அவனது சகோதரி ஒருவர் “அவனைப் பாக்கவேணும்போல கிடக்கு; எங்கே யெண்டு சொல்லுங்கோ; நான் அங்க போய்ப் பாக்கிறன்” என்று கேட்டார். “பயிற்சி முடியாமல் அவனை அனுப்பேலாது. முடிஞ்ச பிறகு வருவான்”என்று தான் அவனை அழைத்துச் சென்ற போராளியால் சொல்லமுடிந்தது. எனினும் ஆளே முடிந்த பின்னும் அவனைப் பார்க்க முடியாமல் போய்விட்டது அந்தச் சகோதரிக்கு . எப்படியோ நம்புபவர்கள் அது உள்ளுணர்வுதான் என்பர். போராளிகளை உபசரிப்பது முதலான பணிகளைச் செய்து வந்த அன்ரி மகனின் இழப்புடன் சோர்ந்து போகவில்லை. அதன் பின்னர் மேலும் வீ ச்சுடன் தனது பணிகளைத் தொடர்ந்தார். குறிப்பாக அன்னை பூபதியின் உண்ணாவிரத காலத்தில் அவர் முழு மூச்சுடன் செயல்பட்டார். இந்திய இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டும் பணியில் தீவிரமாகக் பணியாற்றினார்.இந்திய இராணுவத்தால் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரைப் பார்வையிட்டதுடன் அவர்களின் நலனுக்காக இயன்றவரைஉழைத்தார். இதனைச் சகிப்பார்களா ஒட்டுக்குழுவினர். மட்டக்களப்பை விட்டு ஓடுவதற்கு சில நாட்களுக்கு முன் இவரைப்பிடித்து பழுக்கக் காய்ச்சிய கம்பியால் கையில் சுட்டனர் . அந்தக் காயம் ஆறமுன்னரே இந்தியப்படையுடன் இணைந்து செயற்பட்டோர் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட்டனர். தடுப்பிலிருந்த போராளிகள் விடுதலையாகினர். அவர்களின் விடுதலைக்காக திருக்கேதீஸ்வரத்துக்கு நேர்த்தி வைத்த அன்ரி. அதனை நிறைவேற்ற அங்கு சென்றார். கம்பியால் சூடு வைக்கப்பட்ட கையில் பிரசாதத்தைப் ஏந்தியபடி யாழ்பாணத்திலிருந்த போராளிகளையும் சந்திக்கச் சென்றார். மட்டக்களப்பில் புலிகளிடம் கைதாகியிருந்த ஏனைய இயக்கத்தவரை விடுவிக்குமாறு வேண்டினார். தாய்மை என்பது எல்லாப்பிள்ளைகளையும் ஒரேமாதிரித்தானே பார்க்கும்.” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற குறளுக்கு இலக்கணமாக அவரது வேண்டுகோள் இருந்தது. ஆனால் அவர்கள் திருந்தினார்களா ? 1990ல் இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கியதும் அந்த ஆயுதக்குழுக்கள் இன்னும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கின. பல்வேறு சுற்றிவளைப்புக்கள், விசாரணைகளில் படையினருக்கு உதவின. இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து ஒரு அணி மட்டக்களப்பு நிலைமைகளைப் பார்வையிடப் பெரும்பாலும் நடையிலேயே போய்ச்சேர்ந்தது. இதனைச் கேள்வியுற்றதும் அவர்களைச் சந்திக்க அன்ரி விரும்பினார். அக்காலகட்டத்தில் ஆரையம்பதியிலிருந்து படுவான்கரைக்கு தோணியில் எவரும் போகமுடியாதென டெலோ தடை விதித்திருந்தது. அந்தத்தடையை அன்ரி பொருப்படுத்தவில்லை. ஒரு தோணிக்காரரும் அன்ரிக் கு உதவினார். எனினும் முதல் நாளே வடக்கிலிருந்து வந்த அணி திரும்பிச் சென்றுவிட்டதும் “ஆனால் என்ன நீங்களும் எங்கள் பிள்ளைகள் தானே?“ என்று கூறி அங்கிருந்த போராளிகளிடம் தான் கொண்டுவந்த பலகாரங்களைக் கையளித்துவிட்டு புறப்பட்டார்அன்ரி . இறுதியில் அந்தப் பயணமே அன்ரி யின் வாழ்நாளை முடிக்கும் வகையில் அமைந்திருந்தது. டெலோவின் அன்றைய மட்டக்களப்புப் பொறுப்பாளர் ஜனா (கோவிந்தன் கருணாகரன்) தமது தடையை மீறியமைக்காக அன்ரிக்கு மரணதண்டனை விதித்தார் . அதனை நிறைவேற்ற 22.10.1990 அன்று கிழவி ரவி ,வெள்ளை , ராபட் ஆகியோர் அன்ரி யின் வீட்டுக்கு வந்தனர். தன்னை இழுத்த டெலோவினருடன் இழுபறிப்பட்டார் அன்ரி. கைகளால் தாக்கினார். எனினும் தமது தளபதி ஜனாவின் கட்டளையை நிறைவேற்றினர் டெலோ உறுப்பினர்கள். மேலும் பலர் அந்தக் காலத்தில் ஆரையம்பதியில் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வணிகரான தம்பிராஜா , அவரது மகனான வங்கிப் பணியாளர் குருகுலசிங்கம், மகளான திருமதி மலர் ஆகியோரைக் கொன்று தீர்த்தது டெலோ. கர்ப்பிணிப்பெண்ணான மலரைச் சுடும்போது “வயித்துக்குள்ள என்ன புலிக்குட்டியா இருக்கு ?“ எனக் கேட்டுவிட்டே சுட்டார் ஜனாவின் தம்பி. டெலோ மாமா என்றழைக்கப்படும் கோவிந்தன் கருணாநிதி. கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற போராளியை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து வெட்டிக் கொன்றார் ஜனா. உச்சக் கட்டமாக விஜி என்ற உயர்தர தர வகுப்பு மாணவியைக் கூட்டுப்பாலியல் வன்முறைறைக்குள்ளாக்கி விட்டு கொலை செய்து ஆற்றில் வீசினர். இவரது சடலத்தை வழங்குவதென்றால் அனுஷ்யா நல்லதம்பி என்ற இந்த யுவதி ஒரு பயங்கர வாதியென்று கையெழுத்திட வேண்டுமென அதிகாரத்தரப்பு உத்தரவிட்டது. இந்தப் பாதகங்களைச் செய்த அன்வர், வெள்ளை , ராபட் ஆகியோருக்குப் புலிகள் சாவொறுப்பு த்தண்டனை வழங்கினர். ஜனாவின் தம்பி டெலோ மாமா லண்டனில் 30.10.2017 அன்று பார்வை இழந்த நிலையில் மரணமடைந்தார். ஜனாவும் , ராமும் இப்போதும் உள்ளனர். நாட்டுப்பற்றாளர் பூரணலட்சுமி சின்னத்துரை பிறந்த திகதி : 1945 – அழிப்பு 22.10.1990 http://irruppu.com/2021/10/22/மரணத்தின்போதும்-எதிர்ப்/
- af.jpeg
-
24.11.1992 அன்று விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலாலி கிழக்கு தொடங்கி ஒட்டகப்புலம் வரையான 150 காவலரன் மீதான தாக்குதல் ஒரு பார்வை.
பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத் தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றன. 30.09.1992 அன்று தளபதி பால்ராஜ் அவர்கள் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்படுக் கொண்டிருந்த வேளையில்.தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்து தளபதி பால்ராஜ் அவர்களுடன்தனிமையில் கதைத்த பின்னர் தாக்குதல் திட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் யாழ்மாவட்டத் தாக்குதலனிப் போராளிகளில் ஒரு தொகுதி அணி உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது. (அன்றைய விளங்கப்படுத்தப்பட்ட திட்டத்தில் அறுபத்தியிரண்டு காவலரனை தாக்கி அழிப்பதே திட்டமாக இருந்து.) அதற்கமைவாக புறப்பட்ட அவ் அணிகள் 01.10.1992 அன்று கட்டைக்காட்டு முகாம் தாக்குதல்களில் ஏனைய படையணிகளுடன் இணைந்து அவ் வெற்றிகரத் தாக்குதலில் பங்குபற்றியது.அதன் பின்னர் பயிற்சிகள் தொடர்ந்தன.ஆனால் இம்முறை தாக்கி அழிக்கப்படவேண்டிய காவலரன்களின் தொகை 150 ஆக்கப்பட்டது. ( இதுவே தமிழீழத்தில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட கூடுதலான காவலரன் அழிப்பாகும்.)அதற்கேற்ற மாதிரி பயிற்சிகள் வழங்கப்பட்டது.தாக்குதலுக்கான நாளும் வந்தது.தாக்குதல் திட்டம் தளபதி பால்ராஜ் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது.இத் திட்டத்தின்படி 150 காவலரன்களைக் தாக்கி கைப்பற்றி வைத்திருந்து விட்டு பின்வாங்குவதாகவே இருந்து. 23.11.1992 அணிகள் காவலரனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் எதிரியின் கண்ணிவெடி ஒன்று போராளி ஒருவரின் காலில் வெடித்தது அருகிலிருந்த போராளி ஓடிச் சென்று அப் போராளியின் வாயைப்பொத்த அப்போராளியோ நான் கத்த மாட்டன் நீங்கள் நகருங்கள் என்றான். அன்று அப்போராளியின் அர்ப்பணிப்பு தன்னால் இச் சண்டையில் ஏதும் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது வேதனையை சகித்துக்கொண்ட விதம் சக போராளிகளுக்குள் இச் சண்டையை வெற்றி கொள்வதிலேயே இருந்து. 24.11.1992 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமானது .சண்டை தொடங்கிய குறிப்பிட்ட நேரத்திலேயே காவலரன் தாக்குதலனியின் முழுக்கட்டுப்பாட்டில் காவலரன்கள் கொண்டுவரப்பட்டன. இச்சமரில் கனரக ஆயுதம் ஒன்று (37MM) நிலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சென்றவர்களுக்குத் எவ்வாறு இயக்குவதோ அல்லது எவ்வாறு கழட்டுவதென்றோ தெரியாது தகவல் கட்டளைமையத்திற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.ஆயுத நிபுணர்களுள் ஒருவரான தளபதி கடாபி அவர்கள் வருகிறார் என்றதும் போராளிகளுக்கு உற்சாகம் மேலிட்டது. ஏனெனில் எப்படியாகிலும் அவ் ஆயுதத்தை கைப்பற்றிவிடலாமென்று. அந்த காலத்தில் அவர் ஆயுதங்களை கையாள்வதிலும் மற்றும் புதிய ஆயுதங்களை கையாள்வதில் ஒரு வித்தகராக இருந்தார். இருந்தாலும் அவர் கடுமையாக முயற்சித்தும் எதிரியானவன் அவ் ஆயுதத்தை பலமா நிலப்படுத்தப்பட்டதாலும் நேரம் குறைவான காரணத்தாலும் அவ் ஆயுதம் தகர்க்கப்பட்டது. இச் சண்டையில் பின்வாங்கவும் என்று கைபேசியில் சொல்லமுடியாது .ஏனெனில் எதிரி ஒட்டுக் கேட்பான் அதனால் பரிபாசையில் பலாலி விமானத்தளம் நோக்கி முன்னேறவும் என அறிவிக்கப்பட்டது. அதை ஒட்டுக்கேட்ட படையினர் மூர்க்கத்தனமாக எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தான். இச் சமயத்தில் மகளிர் அணியினரின் பக்கமாக பின்வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது .இதை அவதானித்த தளபதி குணா அவர்கள் உடனடியாக தானே களத்தில் இறங்கி அணிகளையும், வீரச்சாவடைந்த வித்துடல்களையும், காயமடைந்த போராளிகளையும்.கொண்டு வந்து சேர்த்தார். இச் சமரில் அவருடைய பங்களிப்பு என்பது ஒருவரியில் கூறிவிடவோ அல்லது எழுதி விடவோ முடியாது. அன்று அவர் களத்திற்க்கு சென்றிருக்காவிடில் நிலைமையை கற்பனைகூட செய்யமுடியாது. இப்படியாக பல்வேறு அர்ப்பணிப்புகள் நிறைந்த இச் சமரில் ஈழப்போா் 01,02லும் இந்திய இராணுவத்துடனான பல் வேறு இடங்களில் பல்வேறு சமர்களில் பங்குபற்றிய கப்டன் வீமன், அவர்களும் மேஜர் டொச்சன் அவர்கள் உட்பட ஐம்பத்தியெட்டுப் போராளிகள் இச் சமரில் வீரச்சாவடைந்தனர். இச் சமரிலேயே தான் கள விசாரணை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வெற்றிகரச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தினார். எழுத்துருவாக்கம்…சு.குணா. http://irruppu.com/2021/11/24/24-11-1992-அன்று-விடுதலைப்-புலிகள/
-
துன்கிந்த கப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.
30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் . ஐனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 22.04.2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு மாவீரர்களின் தியாகத்தால் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்கள் மீட்க்ப்பட்டன .(சுமார் இருபது கடல்மைல் கரையோரப் பிரதேசங்களும் உள்ளடக்கம். ) அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ராடர் நிலையமும் யாழ் குடாரப்புக்கரையோரத்தில் அமைக்கப்பட்டு கடற்கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளும் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த சிங்களப்டைகளுக்காக திருகோணமலையிலிருந்து செல்லும் விநியோகக் கப்பல்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ் சிங்களக் கடற்படையின் விநியோகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கடற்படையின் பெரும்பாலான டோறாப்படகுகள் கூட திருகோணமலை சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்து வந்து பாதுகாப்பு வழங்கி விட்டு திரும்பவும் திருகோணமலைக்குச் சென்றுவிடுவர். ஆனால் பெருமளவு கரையோரப்பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்ததால் விடுதலைப்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கவேண்டுமாயின் காங்கேசந்துறை சிங்களக்கடற்படைத்தளத்தில் பலடோறாக்களை நிறுத்தவேண்டிய கட்டாயம் சிங்களக்கடற்படைக்கு ஏற்பட்டது. ஆகவே இச்சிங்களக்கடற்படைக்கு எரிபொருள் வழங்கள் மேற்கொள்வதற்கென துன்கிந்த என்கிற எரிபொருள்தாங்கிக் கப்பல் பயண்படுத்தப்பட்டது. இத்தகவல் விடுதலைப்புலிகளின் இலங்கை அரசபடையினரின் தகவல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் லெப்.கேணல். ஐஸ்ரின்.அணியினரால் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கமைவாக இத்தகவல்களை தேசியத்தலைவர் அவர்களிடம் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். இக்கப்பலைத் தாக்குவதற்கான முக்கியத்துவத்தையும் அனுமதியையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமால் அதற்கான நல்லதொரு திட்டத்தையும் கொடுத்து ஒரு தாக்குதல் ஒரு தடவைதான் பிழைவரவேணடும் இரண்டாம் முறையும் பிழைவரக்கூடாது என்று தெளிவாகக்கூறினார் தேசியத்தலைவர் அவர்கள்.(முதலில் விட்ட சில தவறுகளால் .) அதற்கமைவாக 30.10.2001 அன்று திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த துன்கிந்த என்கிற எரிபொருள் தாங்கிக்கப்பலுக்குப் பாதுகாப்பு வழங்கிய சிங்களக்கடற்படையின் டோறாப்படகுகள் மற்றும் பீரங்கிப்படகுகள் மீது லெப். கேணல் . சலீம், லெப்.கேணல். சுடர்ணன். மற்றும் தளபதி.சிறீராம் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் வழிமறிக்க யாழ் .பருத்தித்துறைக் கரையிலிருந்து உயர சுமார் முப்பத்தியெட்டுக்கடல்மைலில் சென்றுகொண்டிருந்த துன்கிந்த எரிபொருள் கப்பல்மீது அதிகாலை ஒருமணியளவில் கடற்கரும்புலிகள் தமது படகிலிருந்த ஆயுதங்காளால் தாக்கி நிற்பாட்டினார்கள். தொடர்ந்து கப்பலின் பின்பகுதியில் கடற்கரும்புலி மேஐர். கஸ்தூரி மற்றும் கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகியோர் தமது கரும்புலிப் படகால் மோதி வெடித்தனர். தொடர்ந்து கடற்கரும்புலி மேஐர் . கடலரசன். மற்றும் கடற்கரும்புலி கப்டன்.கேசவி ஆகியோர் தமது கரும்புலிப்படகால் கப்பலின் முன்பக்கத்தில் மோதி கப்பலை மூழ்கடித்து கடலிலே காவியமானார்கள். இத்தீரமிகுத்தாக்குதலை கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத் தளத்தின் ராடர் நிலையப் பொறுப்பாளர் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் குடாரப்பு ராடர் நிலையத்திலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். ஒருதடவை விட்ட பிழையை அடுத்த தடவை விடக்கூடாது என்ற தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையையும் செவ்வனவே செய்த திருப்தியுடன் கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான.. மேஐர் . கடலரசன். மேஐர்.கஸ்தூரி. கப்டன். அன்புமலர். கப்டன். கனியின்பன். இக்களத்தை கடலிலே கடற்சண்டைப்படகை வழிநடாத்தி பின்னர் வீரச்சாவடைந்த.. லெப். கேணல். சலீம்.( கலாத்தன்.)வீரச்சாவு. 10.03.2009. லெப்.கேணல். சுடர்ணன்.வீரச்சாவு.10.03.2003. தளபதி. சிறிராம். வீரச்சாவு.முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில். ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றோம். அன்று இக்களத்தில் களமாடியவர்களின் உள்ளத்திலிருந்து…. எழுத்துருவாக்கம்… சு.குணா. திகதி.30.11.2022. http://irruppu.com/2022/11/30/துன்கிந்த-கப்பல்-மீதான-த/
-
ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, சத்தியவேள்வியில் வித்தாகிய மாவீரர்கள் கடலில் மறைந்தாலும், மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்கள். 26.06.2000 அன்று கடற்படையின் பாரிய கடற்கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உகண கப்பல் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் .சர்வதேச விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு சந்தித்து பொருட்கள் மாற்றுமிடத்திற்கு (முல்லைத்தீவிலிருந்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து கடல்மைல் உயர) அண்ணளவான தூரத்தால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும் கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விநியோக நடவடிக்கையில் கடற்படையின் பாரிய கப்பல்களான சக்தி, லங்காமுடித்த, உகண கப்பல்களும், தரையிறங்குக் கலங்களும், இவைகளுக்கு உதவியாக அதிவேக டோறாப் படகுகளும், அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் பத்துக் கடல்மைல் தொடக்கம் அறுபது கடல்மைல் தூரத்தைக் கண்காணிப்பதற்காக அதிவேகடோறாப் படகுகளும் அறுபது கடல்மைல்களுக்கப்பால் கண்காணிப்பதற்காக வீரயா மற்றும் ஆழ்கடல் கலங்களும், ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோகத்தை இல்லாமல் செய்வதற்காக, கடற்படையினரால் வர்ணகீர கடல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆழ்கடல் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு அக் கடற்படை விநியோக அணி மீது தாக்குதல் நடாத்தி கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்யைத் தொடருமாறும், அதற்கான தாக்குதல் திட்டத்தையும் கொடுத்தது மட்டுமன்றிசில ஆலோசனைகளையும் கொடுத்தார். அதற்கமைவாக கடற்புலிகளின் கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் ரஞ்சன். லெப்.கேணல் பழனி. மேஐர் ஆழியன் ஆகியோரின் தலைமையிலான சண்டைப்படகுகளும் இரண்டு கடற்கரும்புலிப் படகுகளும் சென்று ஆழ்கடலால் இராணுவத் தளபாடங்கள் மற்றும் படையினருக்குத் தேவையான பொருட்களுடன் வரும் கப்பலை இம்மூன்று சண்டைப்படகுகளால் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கரும்புலிப்படகுகளால் தாக்கி கப்பலை மூழ்கடிப்பதாகும். அதேநேரம் மேலதிகமாக வரும் கடற்படையினரை வழிமறித்து மறிப்புச்சமரை தொடுப்பதற்காக லெப்.கேணல் பகலவன் தலைமையிலான ஒரு தொகுதி சண்டைப் படகுகளும் இவர்களுக்கு உதவியாக கரும்புலிப்படகுகளும் நிலைகெண்டன. இவ்வளவு கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் கடுமையான தென்மேற்க்குப் பருவக்காற்றுக்குள்ளும் இந்தத் தடைகளை உடைத்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் என்கிற நோக்கோடும் 25.06.2000 அன்று மாலை ரஞ்சன், பழனி, ஆழியன் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும் கடற்கரும்புலிகளான சூரன் மற்றும் நல்லப்பன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகுகளும் சென்று முல்லைத்தீவுக்கு உயர அறுபது கடல்மைல் தூரத்தில் நிற்க - அந்தநேரத்தில் திருகோணமலையிலிருந்து கடற்படையின் விநியோகத் தொடரணி வருவதாக இப்படகுகளுக்கு அறிவிக்க தயார்நிலையிலிருந்த படகுகள் சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றிற்க்கும் மத்தியில் ஒருவாறு கப்பலை இணங்கண்டு அக்கப்பலைப் பின்தொடர்ந்த (26.06.2000 அன்று அதிகாலை) பழனி கப்பலின் மீது தாக்குதலைத் தொடுத்து வழியமைத்துக் கொடுக்க சூரனின் கரும்புலிப்படகு கப்பலின் மீது மோதியது. இம்மோதலால் கப்பல் நிலைகுலைய கப்பலிலிருந்து செறிவான தாக்குதல் நடாத்தியவண்ணமிருக்க பழனி, ரஞ்சன் மற்றும் ஆழியனது படகால் தாக்குதலை தொடுத்து வழியமைத்துக் கொடுக்க நல்லப்பனது கரும்புலிப்படகு கப்பல் மீது மோத கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் லெப் கேணல்.ஞானக்குமார், மேஐர் .சூரன், மேஐர். நல்லப்பன், மேஐர். சந்தனா, கப்டன் .இளமதி, கப்டன்.பாமினி ஆகிய கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள். இவ் வெற்றிகரத் தாக்குதலுக்குப்பின் சிங்களக்கடற்படையானது ஆழ்கடலிலும், கடற்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திகைத்து நின்றனர். இந் நிலையினை எதிரிக்கு ஏற்படுத்தி கடலின் மடியில்.நிறைந்திருக்கும் எங்கள் வீரக்கடற்கரும்புலிகள், எங்களின் நினைவிலும் நிறைந்திருப்பார்கள். எழுத்துருவாக்கம்….சு.குணா. http://irruppu.com/wp-content/uploads/2023/06/கடற்புலிகளின்.jpg http://irruppu.com/2023/06/26/ஆழ்கடலில்-களமமைத்து-சிங-2/
-
பிரிகேடியர் சொர்ணம்
எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். பிரிகேடியர் சொர்ணம் மதிப்பிற்குரிய பெருந்தளபதியுடனான நினைவுகளுடன்… திரு.அச்சுதன் (வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்தவர்) சொர்ணம் அண்ணா. அந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு…. பள்ளிப் பருவங்களில் நாங்கள் புகைப்படங்களில் பார்த்து, அறிந்து வியந்த ஒரு மிகப்பெரும் கதாநாயகன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா, ஒரு முறையேனும் அவருடன் கதைத்து விட மாட்டோமா என்றெல்லாம் ஏக்கம் கொண்டிருந்தோம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்11.jpg உலகம் போற்றும் எம் பெரும் தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன் பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றிக் கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதியவர். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும் என்னையும் என்னைப் போல் பலரையும் கவர்ந்தன. http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்4.jpg நான் எனது கல்வியை முடித்து குறிப்பிட்ட வேலை திட்டங்களைச் செய்து கொண்டு 1998 இல் தாயகம் சென்றேன். மிகவும் கடுமையாக ஜெயசிக்குறு எதிர் சமர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஒட்டுசுட்டான் வரை ராணுவம் முன்னேறி இருந்தது. இதே வேளை ஓயாத அலைகள்-3 இன் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியிருந்தன. ஆனால் அப்போது அந்தச் சமரின் பெயர் அறியவில்லை. ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதி ராணுவத்தின் அடுத்த நகர்வாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் ஒட்டுசுட்டான் முக்கிய தளமாக இருந்தது. இந்தப் பகுதியின் பொறுப்பு சொர்ணம் அண்ணாவிற்கே வழங்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் 3 எதிர்ச் சமர் இப்பகுதியில் தான் ஆரம்பமானது. இச்சமருக்கான தொடக்க வேலைகளைச் செய்ததும் ஒட்டுசுட்டானை உடைத்து எதிரிகளை ஓட விரட்டி ஒரு பெரும் வெற்றிச் சமருக்கு வழி வகுத்து கொடுத்த வெற்றி நாயகனாக இவர் இருந்தார் என்பதையும் அறிந்தேன். http://irruppu.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-15-at-07.56.50-840x485.jpeg அதேபோல் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிழக்குக் கடல் பரப்பும் மேற்குக் கடல் பரப்பும் விரிவுபடுத்தப்பட்ட காலகட்டத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசை அண்ணாவிற்கு உறுதுணையாக தமிழீழத்தின் மேற்குக் கடல் பகுதிகளுக்கான மன்னாரில் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக சொர்ணம் அண்ணா நியமிக்கப்பட்டிருந்தார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்10-496x840.jpg ஆண்டுகள் மெதுவாகக் கடந்தன. 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். ஒருமுறை கண்டுவிட மாட்டோமா என்று நினைத்திருந்த எனக்கு அப்பெருந் தளபதியுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பும் காலமும் கிடைத்ததில் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறேன். வான் புலிகளின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் சங்கர் அண்ணா அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. எமது படையாணி ஒரு மிகப்பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் இழப்பு இடியாய் விழுந்தது. http://irruppu.com/wp-content/uploads/2023/05/கேணல்-சங்கர்3.jpg விமானப் படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைவரின் ஆலோசனைக்கிணங்க கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக்கூடிய ஒரு நபராக எமது தளபதி சொர்ணம் அண்ணா வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரவர்களால் நியமிக்கப்படுகிறார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்புலிகளின்-604x840.jpeg எமது பணிகள் காடு சார்ந்த இடங்களில் அமைந்திருந்ததால் அவரின் அனுபவம் எமக்கு பல விடயங்களை கற்றுத் தந்தது. வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தலைவருடன் நெருக்கமாகப் பயணித்து அவரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு தளபதியுடன் பயணிக்கும் வாய்ப்பை நோக்கிச் சென்றேன். புதுக்குடியிருப்பில் இருக்கும் அவரின் தளத்திற்கு என்னை அழைத்திருந்தார். நான் சென்றவுடன் அவரே வந்து என்னை அழைத்துச் சென்று விருந்துபசாரங்கள் செய்து வெளிநாட்டு நிலவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். சங்கர் அண்ணா விட்டுச் சென்ற இடத்தை நிரப்பி அடுத்த கட்டத்திற்கு நாம் நகர உதவி தலைவர் கையளித்த பாரிய பணியை அவர் சிறப்புடன் நிறைவேற்றியது போன்ற பல விடயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். வான்புலிகள் காட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக எமக்கும் கற்றுக் கொடுத்தார். அருகிலேயே வைத்து நெருக்கடியான காலகட்டத்தை எப்படி கையாள்வது என்பதை செயல் வடிவாக்கிக் கற்றுத் தந்தார். பெருந் தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நடாத்தக்கூடிய வல்லமை மிக்க அத் தளபதி வரும் நாட்களில் ஆகாய தரைச் சமர்களை ஒருங்கிணைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. போராளிகளை வழிநடத்தி சீர்ப்பட அதை எமது கைகளில் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். அவர் என்னை அழைத்து ‘நான் தொடர்ந்து இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் எனக்கு வேறு பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் தெளிவாக விரைவாகக் கற்றுப் பொறுப்பெடுங்கள்’ என்றார். பாதுகாப்பு. போராளிகளின் மனங்களை தொய்வடையாமல் பார்த்துக் கொள்வது. இப்பெரும் இயக்கத்தின் நிர்வாக முறைமை போன்றவற்றை செவ்வனக் கற்றுத் தந்தார். ஒரு நாள் என்னை மணலாற்றுக் காட்டிற்கு அழைத்துச் சென்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவை நோக்கி ‘லீமா இவர் யார் என்று தெரியுமா? இவர் தான் எனக்கு அடுத்துப் பொறுப்பேற்கப் போகிறார் என அறிமுகம் செய்தார். பின்பு இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் தலைவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டி மிகவும் அக்கறையுடன் சம்பவங்களை விளக்கிப் பொறுப்புணர்வுடன் நடந்த பெருந் தளபதி அவர். யாரின் அறிமுகமெல்லாம் தேவைப்பட்டதோ அவர்களையெல்லாம் சிறப்புடன் அறிமுகம் செய்து உறுதுணை மிக்க தளபதியாக விளங்கினார் சொர்ணம் அண்ணா. http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்12.jpg காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த சொர்ணம் அண்ணா எமது ஒடுதளத்திற்கான பாதையாக இரணைமடுவிற்க்கு கிழக்காகவும் வட்டக்கச்சி யிலிருந்து பழைய கண்டி வீதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். இது சண்டை தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடுதளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது. http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்3.jpeg இந்தக் காலகட்டத்தில் நான் மீண்டும் வெளிவேலையாக அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு ஏற்பட்டது. அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிற்கு வழங்கினார். எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். அது தான் சொர்ணம் அண்ணாவின் திறன். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்7.jpg தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார். சிலகாலம் கடந்த பின் தலைவரின் பணிப்பின் பெயரில் வட்டக்கச்சி முகாமில் வைத்து சிறந்த கட்டமைப்பாக என்னிடம் வான்படையைக் கையளித்து தனது வாகனம் ஒன்றையும் தந்தார். பறந்து காட்டுங்கள் உங்கள் காட்டில் மழை பெய்யும் எனத் தட்டிக் கொடுத்து என்ன உதவி என்றாலும் அழையுங்கள் செய்து தருகிறேன் எனக் கூறி மீண்டும் கோணமலை சென்றார். அடிக்கடி என்னை அழைத்து நிலவரங்களை தெரிந்து கொள்வார். http://irruppu.com/wp-content/uploads/2023/05/வான்-a.jpg அன்ரன் பாலசிங்கம் அண்ணா இறுதியாக தமிழ் ஈழம் வந்தபோது என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். தமிழீழத்தின் பெரும் தளபதிகள் ஒன்று கூடியிருந்த அந்த இடத்தில் என்னையும் வான்புலியின் சிறப்பு தளபதி யாக அறிமுகம் செய்து பெருமைப் படுத்தினார். நன்றி உணர்வோடு நான் அவரை நினைக்கிறேன். தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த சொர்ணமண்ணாவுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்5.jpg நான் அறிந்து செய்வதறியாமல் நின்ற அவரின் ஈகம். வாழ்வா சாவா என்று நம் தேசம் களம் கண்டு கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய் தேசத்திற்கான பெரும் பணியில் இணைத்துவிட்டு அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையவர். அப்பாவும் மகளுமாய் ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காகப் பணி செய்து மடிந்த வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய் நிலம். இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது மகளிற்க்கும் வீரவணக்கம். http://irruppu.com/wp-content/uploads/2023/05/சொர்ணம்9-594x840.jpg தம் குடும்பத்தை விடுத்து தலைவனையும் மண்ணையும் நேசித்து முள்ளிவாய்க்காலில் தமது இலட்சியப் பாதையில் மடிந்த வீரப்பெருந்தளபதிகளையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி நாம் ஒற்றுமையுடன் உரிமைக்காய் குரல் கொடுப்போம். ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ -எழுத்து அ.வி.முகிலினி http://irruppu.com/2023/05/14/பிரிகேடியர்-சொர்ணம்/
-
"மண்டைதீவுச் சமர்" எவ்வாறு நடைபெற்றது
1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள், உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக் கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார். அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன . போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை வாகனத்தருகே சென்றார். அங்கே தலைவரைக் கண்டவுடன் ”அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா?” எனக் கேட்க தலைவரோ “ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பார்க்க” எனக் கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார். சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர். 28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது. இத்தாக்குதலை, உள்நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இச்சமர் முடந்தவுடன் அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைப் பாராட்டியதுடன் தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை. தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்ற சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச்சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார். – எழுத்துருவாக்கம் சு.குணா. http://irruppu.com/2022/06/27/மண்டைதீவுச்-சமர்-எவ்வாறு/
-
போராளிகளை வளர்த்து விடும் ஆசான் லெப். கேணல் சேரமான்.
மேற்கண்ட கட்டுரையை எழுதியவர் : சு. குணா
-
06.03.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கயழிக்கப்பட்ட யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் ஒரு பார்வை
யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார். அதற்கமைவாக இம்மினிமகாமைதாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார் .அதற்கமைவாக தாக்குலனிகள் 06.03.1987 அன்று அதிகாலை யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம்மீது தளபதி கிட்டண்ணா விளங்கப்படுத்திய தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் . குறிப்பிட்ட நிமிடத் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது .இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்க்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் . அவர்களின்.. விபரம் வருமாறு. கப்டன். நிக்சன். 2ம் லெப். அசோக். வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். -எழுத்துருவாக்கம். சு.குணா.
-
கரும்புலி கப்டன் ஈழவன்
1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் .எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கை எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்ற சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது .அதில் ஒருவனாக ஈழவனும் பங்கு பற்றினான்.இச் சமரில் இவன் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருநல்ல சண்டைக்காரணாக இணங்காணப்பட்டான் இம் மறிப்புச் சமரின் இரண்டாம் நாளில் இவனது நண்பணான லெப்ரினன் சர்மா வீரச்சாவடைகிறான்.இச் சமரின் இவனது திறமையான செயற்பாட்டை அவதானித்த பொறுப்பாளர்.இவனை கனரக ஆயுதப்பிரிவிற்க்கு அனுப்புகிறார்..அங்குபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான அணிகள் பிரிக்கப்படும் போது இவனது அணியும் தேர்வு செய்யப்பட்டு அச்சமரில் பங்குபற்றியது.அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான பெரும்பாலான சமர்களில் பங்குகொண்ட ஈழவன்.மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதலிலும் பங்காற்றினான்.அதன் பின்னர் வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு பயிற்சிக்காக அணிகள் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் தனது அணியுடன் மிகவும் திறம்படசண்டையிட்டான்.சண்டைமுடிந்தவுடன் பழையபடி பயிற்சிகள் தொடர்ந்தன .அவர்கள் எடுத்த பயிற்சிக்கான அந்த நாளும் வந்தது அதுதான் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அத்தாக்குதலிலும் பங்காற்றினான்.இதற்கிடையில் தன்னை கரும்புலிகளனிக்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தலைவர் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.அதற்கான பதிலும் வர யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்து கரும்புலிகள் அணிக்குச் சென்றான்.அதன் பின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின் புலமாக இயங்கும் வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் கட்டளைமையங்கள்.மீது தாக்குதல் நடாத்தி எதிரியின் முன்னேற்ற நடவடிக்கையை திசைதிருப்புத்தாக்குதலை நடாத்துவதற்க்கு தலைவர் அவர்களால் கரும்புலிகளுக்கு வழங்கப்படுகிறது .கரும்புலிகளை இராணுவப் பிரதேசத்திற்குள் அனுப்பும் பொறுப்பு மூத்த தளபதி பானு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.அதற்கமைவாக அளவெட்டியில் அமைந்திருந்த காவலரன்களை தாக்கி அழித்து கரும்புலிகளை இராணுவப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள்.அங்கு சென்றவர்கள்.இவர்கள் உள் நுழைந்ததை அறிந்ததால் இராணுவம் பின் தொடர்ந்து சென்றதாலும் ஏற்பட்ட மோதலில் இராணுவத்திற்க்கு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து போராடி வீரச்சாவடைகின்றனர். இருப்பினும் இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி தனது பிரதேசங்களில் தேடுதல் நடாத்தினான் .இவர்களது இம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாவிடினும் இவர்களது தியாகத்தால் இயக்கம் இராணுவ முன்னேற்றத்திற்க்கு எதிராக தமது நிலைகளை பலப்படுத்துவதற்க்கும் அணிகளை மீளொளுங்கு செய்வதற்க்கும். காலஅவகாசத்தை வழங்கியது.இத்தீரமிகு வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலி கப்டன் ஈழவன் உட்பட்ட பதினொரு கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர். எழுத்துருவாக்கம்...சு.குணா. http://irruppu.com/2021/01/31/கரும்புலி-கப்டன்-ஈழவன்-ஈ/