Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள், உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக் கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார். அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன . போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை வாகனத்தருகே சென்றார். அங்கே தலைவரைக் கண்டவுடன் ”அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா?” எனக் கேட்க தலைவரோ “ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பார்க்க” எனக் கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார். சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர். 28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது. இத்தாக்குதலை, உள்நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இச்சமர் முடந்தவுடன் அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைப் பாராட்டியதுடன் தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை. தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்ற சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச்சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார். – எழுத்துருவாக்கம் சு.குணா. http://irruppu.com/2022/06/27/மண்டைதீவுச்-சமர்-எவ்வாறு/
  2. யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார். அதற்கமைவாக இம்மினிமகாமைதாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார் .அதற்கமைவாக தாக்குலனிகள் 06.03.1987 அன்று அதிகாலை யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம்மீது தளபதி கிட்டண்ணா விளங்கப்படுத்திய தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் . குறிப்பிட்ட நிமிடத் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது .இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்க்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் . அவர்களின்.. விபரம் வருமாறு. கப்டன். நிக்சன். 2ம் லெப். அசோக். வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். -எழுத்துருவாக்கம். சு.குணா.
  3. 1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் .எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கை எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்ற சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது .அதில் ஒருவனாக ஈழவனும் பங்கு பற்றினான்.இச் சமரில் இவன் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருநல்ல சண்டைக்காரணாக இணங்காணப்பட்டான் இம் மறிப்புச் சமரின் இரண்டாம் நாளில் இவனது நண்பணான லெப்ரினன் சர்மா வீரச்சாவடைகிறான்.இச் சமரின் இவனது திறமையான செயற்பாட்டை அவதானித்த பொறுப்பாளர்.இவனை கனரக ஆயுதப்பிரிவிற்க்கு அனுப்புகிறார்..அங்குபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான அணிகள் பிரிக்கப்படும் போது இவனது அணியும் தேர்வு செய்யப்பட்டு அச்சமரில் பங்குபற்றியது.அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான பெரும்பாலான சமர்களில் பங்குகொண்ட ஈழவன்.மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதலிலும் பங்காற்றினான்.அதன் பின்னர் வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு பயிற்சிக்காக அணிகள் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் தனது அணியுடன் மிகவும் திறம்படசண்டையிட்டான்.சண்டைமுடிந்தவுடன் பழையபடி பயிற்சிகள் தொடர்ந்தன .அவர்கள் எடுத்த பயிற்சிக்கான அந்த நாளும் வந்தது அதுதான் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அத்தாக்குதலிலும் பங்காற்றினான்.இதற்கிடையில் தன்னை கரும்புலிகளனிக்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தலைவர் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.அதற்கான பதிலும் வர யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்து கரும்புலிகள் அணிக்குச் சென்றான்.அதன் பின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின் புலமாக இயங்கும் வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் கட்டளைமையங்கள்.மீது தாக்குதல் நடாத்தி எதிரியின் முன்னேற்ற நடவடிக்கையை திசைதிருப்புத்தாக்குதலை நடாத்துவதற்க்கு தலைவர் அவர்களால் கரும்புலிகளுக்கு வழங்கப்படுகிறது .கரும்புலிகளை இராணுவப் பிரதேசத்திற்குள் அனுப்பும் பொறுப்பு மூத்த தளபதி பானு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.அதற்கமைவாக அளவெட்டியில் அமைந்திருந்த காவலரன்களை தாக்கி அழித்து கரும்புலிகளை இராணுவப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள்.அங்கு சென்றவர்கள்.இவர்கள் உள் நுழைந்ததை அறிந்ததால் இராணுவம் பின் தொடர்ந்து சென்றதாலும் ஏற்பட்ட மோதலில் இராணுவத்திற்க்கு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து போராடி வீரச்சாவடைகின்றனர். இருப்பினும் இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி தனது பிரதேசங்களில் தேடுதல் நடாத்தினான் .இவர்களது இம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாவிடினும் இவர்களது தியாகத்தால் இயக்கம் இராணுவ முன்னேற்றத்திற்க்கு எதிராக தமது நிலைகளை பலப்படுத்துவதற்க்கும் அணிகளை மீளொளுங்கு செய்வதற்க்கும். காலஅவகாசத்தை வழங்கியது.இத்தீரமிகு வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலி கப்டன் ஈழவன் உட்பட்ட பதினொரு கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர். எழுத்துருவாக்கம்...சு.குணா. http://irruppu.com/2021/01/31/கரும்புலி-கப்டன்-ஈழவன்-ஈ/
  4. http://irruppu.com/2022/08/27/ஒரு-தளபதியின்-வீரச்சாவிற/ 27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது. ( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். ) அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும். இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது. அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன். பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதியின் வீரச்சாவிற்கு பழிவாங்குவதென்றால். அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள் அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. அதுதான் வெற்றிலைக்கேணி பெரிய மண்டலாய். வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார். தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்….சு.குணா.
  5. இறுவட்டு அட்டைகள் புலிகள் பாடல் இதுவும் ஊழியால் அழிந்து போனது; இதன் இசைகொண்ட பாடல்கள் அழிந்துபோய்விட்டன. இருப்பினும் இவ்விறுவட்டினுள்ளிருந்த ஒவ்வொரு பாடலின் வரிகளும் உள. இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
  6. இறுவட்டு அட்டைகள் புலிகள் ஓய்வதில்லை இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
  7. இறுவட்டு அட்டைகள் புலிகளின் புரட்சி இசை விழா இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
  8. இறுவட்டு அட்டைகள் புயலாகும் புது ராகங்கள் இவ்விறுவட்டில் சிங்களத்திலும் தமிழிலும் விடுதலைப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதுவும் ஊழியால் அழிந்து போனது. இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
  9. இறுவட்டு அட்டைகள் புதியதோர் புறம் விடியலின் பாடல்கள் இசை இறுவட்டில் வெளியான சில பாடல்கள் புதியதோர் புறம் என்ற இறுவட்டில் தவறுதலான புரிதலால் சில வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நெருப்பில் விளைந்த பொறிகள் திறனாய்வு: பாபு மூலம்: ஈழநாதம் 10-02-1991 பக்கம்: கடந்த 30-12-90 அன்று மட்டக்களப்பு பாடும் மீன் கலைமன்றத்தினரால் வெளியிடப்பட்ட 'புதியதோர் புறம்' ஒளிப்பதிவு நாடாவின் அறிமுகவிழா நல்லூர் சாதனா பாடசாலையில் நடைபெற்றது. தமிழீழக் களைஞர்களின் வளர்ச்சி வேகங்களின் வெளிப்பாடாக வெளிவந்த "இந்தமண் எங்களின் சொந்தமண்", "பூபாளம்", "வேங்கைகளின் விடுதலை வேதங்கள்" வரிசையில் 'புதியதோர் புறம்' எனும் புதிய வெளியீடான இது மிகவும் தரமானதாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் எமது மக்களின் விடுதலை வேட்கையையும் போராட்ட உணர்வுகளையும் ஆழமான கருத்துகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. பாடு மீன் கலைமன்றத்தின் தலைவரான திரு அமிர்தராஜ் அவர்களின் இந்தப் பணியானது போராட்ட வளர்ச்சிக்கு கலைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், மக்களை தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். ஒலிப்பதிவு நாடாவின் ஆரம்பத்தில் வரும் சில வரிகள் ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பானது இந்த மண்ணின் விடிவிற்காய் வகிக்கும் பங்கினை விபரிக்க, அதைத் தொடர்ந்து பாடல்கள் ஆரம்பிக்கின்றன. முதல் பாடலே, எம்மை பிரமிக்க வைக்கின்றது. எங்கோ ஒரு தெய்வ சந்நிதானத்தில் அமைதியான ஒரு சூழலில் ஒலிக்கும் தேவகானம் போன்று அந்தக் குரல் ஒலிக்கின்றது. "எந்தயர் ஆண்டது இந்நாடாகும்! இதை எதிரிகள் ஆள்வது கேடாகும்! வந்து நீ களத்தினில் போராடு, அடிமை வாழ்விலும் சாவது மேலாகும்" என்று ஆரம்பிக்கும் அந்தப்பாடல், மறைந்த தென் இந்தியப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழீழ மக்களுக்காக பாடிச் சென்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. கணீரென்ற அவரது தொனியும், இசை அமைப்பும் உண்மையில் ஒரு தேவகானமேதான். அழகான அந்தக் குரலுக்குரியவர் பாராட்டப்பட வேண்டியவரே. அந்தப்பாடலில் விசேட அம்சம் என்னவெனில், தமிழீழத்தின் வளங்களைப் பற்றியும், தமிழீழத் துரோகிகளின் கொடுமைகளையும் சித்தரித்து, இறுதியில் "தாயகம் மீட்டிட நீ ஓடு - பிரயா தானையில் சேர்ந்தொரு புலியாகு போயினித் தெருவினில் விளையாடு – தமிழ் பூத்திட புதியதோர் புறம் பாடு" என்று அழகாக விபரித்திருக்கிறார் கவிஞர். அடுத்த பாடலும், எமது விடுதலைப் போராளிகளான புலிகளின் தன்மையை புலிகளின் மன உறுதியை எடுத்துச் சொல்வதைப் போன்று அமைந்த கவிஞரின் பாடலை ஆண்-பெண் குரலிசையால், சோடிப்பாடலாக அழகாகப்பாடி மெருகேற்றியிருக்கின்றார்கள் பாடகர்கள். பெண்குரலின் சங்கீத நயத்துடன் ஆரம்பிக்கும் அப்பாடல், "நெருப்பில் விளைந்த பொறிகள் - நாங்கள் நஞ்சைத் தின்னும் புலிகள், இரும்பில் வார்த்த சிலைகள் - தலைவன் இதயம் கவர்ந்த கணைகள்" என்று தொடர்கிறது. பெண்குரல் மிகத் தெளிவாகவும், அழகாகவும் ஒலிக்கின்றது. இதேபோல, இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்திரமற்ற ஒரு வாழ்க்கைப் பயணத்தில் நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை, "தம்பிகளே அன்புத் தங்கைகளே நில்லுங்கள் உங்கள் சரித்திரம் என்ன சொல்லுங்கள்! போர்க்களம் சென்றிட ஒன்றாய் சேருங்கள். புதயுகம் பல படைப்போம் வாருங்கள்" என கூவி அழைக்கும் கவிஞரின் பாடலை, அழகான குரலில் இனிமையாக சோகமாக பாடி மக்கள் மனதில் தன்னை பதியவைத்துள்ளார் ஒரு பாடகர். ஆண்குரல் மிக இனிமையாக ரசிக்கூடிய வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களையும் வித்தியாசமான வகைகளில் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் அடுத்தபாடலை ஒரு துள்ளிசையாக மெருகூட்டியிருக்கின்றார். காலம் சென்ற மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கொள்கை விளக்க சீர்திருத்தப் பாடல்கன் போல அமைந்த இந்தப் பாடல் மிகவும் பிரமாதம். "போடு போடு வீரநடை போடு! வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு. ஆறிலும் சாவு நூறிலும் சாவு மானமிருந்தால் தானே வாழ்வு" என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கடைசி நிலைகளில் பாடலின் இசையின் சந்தம் மாறி பின்னர் மீண்டும் பழைய ராகத்துடன் சேர்ந்து "போடு போடு வீர நடை போடு" என்று நான்குமுறை சுருதியை அதிகரித்துப் பாடி பாடலை முடித்து வைக்கும் போது எமக்குள்ளேயே ஒரு உத்வேகம் பிறக்கின்றது. குதிரை மீது சென்று கொண்டிருப்பது போல கற்பனை பண்ணி இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். நிச்சயமாக இந்தப் பாடல் சிறுவர் - மாணவர் – இளைஞர் - யுவதிகள் - முதியவர் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரின் வாயிலும் வெளிவரும் என்பது திண்ணம். இந்தப் பாடகருக்கு பாராட்டுக்கள் பலமுறை வழங்களாம். அதைத் தொடர்ந்து, "மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் பயலென எழுந்து ஓடி வந்தார் புலிவீரர்" என்று பெண்குரல் ஒன்று சோகமாக ஒலிக்கின்றது. குரலில் எந்தவித தள தளப்புகளும் இன்றி இனிமையாக பாடியிருக்கும் இந்தக் குரல் பாராட்டப்பட வேண்டிய குரல். போராட்டத்தின் சிந்தனையின்றி தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை தட்டியெழுப்புவது போலவும், வெட்டவெளியில் காவலரண்களில் நின்று போராடும் புலிகளின் நிலை பற்றியும் விளக்கும் வகையில் ஒலிக்கிறது ஓர் ஆண்குரல். "தூக்கமேனடா தமிழா தூக்கமேனடா! நிமிர்ந்து நில்லடா நீயும் துணிந்து செல்லடா" என்று ஆரம்பிக்கின்றது அந்தப் பாடல். உறுதியான குரலில் அழகாகப் பாடியிருக்கிறார் பாடகர். அது போல, "சிங்களம் எங்களைக் கொன்று குவிக்கும், தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்! இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும், கொடும் எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்" என்று ஒருபாடல் ஆண்குரலில் ஒலிக்கிறது. இப்பாடலில் தென் தமிழ் ஈழத்தின் இன்னல்கள் தெரிகிறது. அதற்கேற்ற தொனியில் பாடியிருக்கும் பாடகருக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக, ஒரு போராளி மாண்டுபோன தனது சக போராளிகளை அழைப்பது போலவும் தாம் ஒன்றாய் கூடித்திரிந்த காலங்களையும், இன்று பிரிந்து நின்று கலங்குவதையும் விவரித்து ஒரு பாடல் ஒலிக்கின்றது. "மாண்டுபோன மைந்தர்களே என்னை சுமந்து நின்ற நண்பர்களே மீண்டும் இங்கே கூடுங்கள் ஈழம் மீட்போம் இங்கே வாருங்கள்.” என்று ஆரம்பிக்கும் இப்பாடலும் இனிமையாக இருக்கின்றது. ஒரு வித்தியாசமான வகையில் அமைந்ததும் எமது போராளிகளை காத்து வந்த காடுகளை வரம் வேண்டிப் பாடுகின்றது ஒரு மழலைக் குரல். "காடுகளே காடுகளே கொஞ்சம் கேளுங்கள்! தமிழ் ஈழத்தின் வீரர்களை என்றும் காத்தே வாருங்கள்" என்று மழலையின் செல்லக் குரல் ஒன்று ஒலிக்கின்றது. இந்தக் குரல் மிக விரைவாக வளர்ச்சியடையக் கூடிய வேகம் தெரிகிறது. இந்தக் குரலுக்கு ஒரு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகட்டும். "சத்தியத்தை காப்பதற்கு ராமன் வனவாசம் சென்றான்! இலட்சியத்தைக் காப்பதற்கு தலைவன் உமை நாடி வந்தான்! தாய்போல காத்து எங்கள் வீரர்களை ஆளாக்கி, நீங்காத நினைவாக நெஞ்சமதில் வீற்றிடுவீர்" என்ற கவிஞரின் கோரிக்கையும் பாடலுக்குரிய மழலைக் குரலும் அற்புதமாக இருக்கின்றது. இறுதியாக, "வீட்டுக்கொரு மைந்தனே விரைந்து வா, அடிமை விலங்கை உடைத்தெறிய போராடுவோம்" என்று ஆரம்பிக்கின்றது ஒரு ஆண்குரல். மிக உறுதியாக போராட்டத்திற்கு அணிதிரட்டும் நோக்கம் கொண்ட இப் பாடலில், "நம்பி நேசம் போனதினால் வந்தவினை! சொந்த மண்ணில் வாழ்வதற்கே அஞ்சும் நிலை! கண்ணைக் கட்டி காட்டினிலே விட்டதயர்! மண்ணை மீட்கப் போராடும் எங்கள் கதை” என்ற வரிகள் எமது பரிதாபத்தை வெளிப்படுத்துகின்றன. பாடலுக்குரியவர் அழகாக, ஆழமான உணர்வுடன் பாடியுள்ளார். இவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். மொத்தத்தில், 'புதியதோர் புறம்' கொண்ட முத்தான பத்துப் பாடல்களும் மிக நன்றாக அமைந்திருக்கின்றன; இசையமைப்பு பிரமாத அடுத்த வெளியீடுகள் இதை விட சிறந்த இசையில் வெளிவர வாழ்த்துகிறேன். ஒலிப்பதிவு நன்றாக இருக்கின்றது. மொத்தத்தில் கலைஞர்களின் வளர்ச்சியும் "போடுபோடு வீரநடைபோடு" என்று கூறுமளவிற்கு அமைந்திருக்கின்றது. இப்படியொரு தரமான ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பை வெளியிட்ட பாடும்மீன் கலைமன்றத்தினருக்கும் அதன் தலைவர் திரு. அமிர்தராஜ் அவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பில் நன்றிகள். *****
  10. இறுவட்டு அட்டைகள் பாசறைப் பாடல்கள் இது நான்காவது இறுவட்டாகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது. குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய இந்தியப் படைக் காலத்தில் வெளிவந்தது.
  11. இறுவட்டு அட்டைகள் பரணி பாடுவோம் மூல அட்டை: இரண்டாவது அட்டை: திறனாய்வு: - மூலம்: விடுதலைப் புலிகள்: ஆனி 1991 பக்கம்: 5 விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினரது மூன்றாவது ஒலிப்பதிவு நாடாவாகிய "பரணி பாடுவோம்" வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்துள்ளது. கரும்புலிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த ஒலிப்பதிவு நாடாவில் மொத்தம் 10 பாடல்கள் இருக்கின்றன. இந்த ஒலிப்பதிவு நாடா ஒரு விசேட அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில் உள்ள எட்டு பாடல்கள் போராளிகளால் இயற்றப்பட்டவை என்பது முக்கியமானதொரு அம்சமாகும். ஒன்று ஒரு தேசபக்தத் தந்தையால் இயற்றப்பட்டிருந்தது. எமது மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிப் பொதுச் செயலாளர் யோகி, கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, பைப், சகாதேவன் ஆகியோருடன் வன்னி மண்ணைச் சேர்ந்த திரு செல்லக்குட்டி என்பவரும் இப் பாடல்களை இயற்றியுள்ளனர். திரு செல்லக்குட்டியின் இரண்டு புதல்வர்கள் போராட்டத்தில் இணைந்து வீரமரணமடைந்துவிட்டனர். ஒருவரான கமல் இந்தியப்படைச் சண்டையின்போது யாழ்ப்பாணத்திலும், இன்னொருவரான லெப். சங்கர் சிலாபத்துறைத் தாக்குதலிலும் வீரமரணமடைந்துள்ளனர். தற்போது இவரது மகள் ஒருவர் இயக்த்தில் இருக்கின்றார். இவ்விதமாக "பரணி பாடுவோம்" ஒலிப்பதிவு நாடா, மற்றைய எல்லா எழுச்சிப் பாடல் நாடாக்களையும் விட தனித்துவமாக இருக்கின்றது. இந்த ஒலிப்பதிவு நாடா எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பிரமாண்டமான - சமூக தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் - மாற்றத்தின் குறியீடாக அமைந்துள்ளது எனலாம். அதாவது உள்ளார்ந்த ரீதியாக விடுதலை உணர்வால் விழுங்கப்பட்ட போராளிக் கலைஞர்களினால் கலை இலக்கியங்கள் படைக்கப்படுவது அதிகரிக்க இருக்கின்றது. இது கலை - இலக்கிய - பண்பாட்டு அரங்கிற்கு ஒரு புதுமையையும் செழுமையையும் கொடுக்கும் என்பது உறுதி. இந்த ஒலிப்பதிவு நாடா இதற்கு கட்டியம் கூறுகின்றது. இந்த ஒலிப்பதிவு நாடாவை வெளிக்கொணர்ந்த கலை, பண்பாட்டுக் கழகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். *****
  12. இறுவட்டு அட்டைகள் நெருப்பு நிலவுகள் இவ்விறுவட்டின் மூல அட்டை கிடைக்கப்பெறவில்லை. இவ்விறுவட்டில் வெளியான பாடல்களும் "முன்னேறிப் பாய்வதென்ன அம்மா" என்ற இறுவட்டிலுள்ள பாடல்களும் இனந்தெரியாதோரால் என்னால் அறியமுடியா காரணத்திற்காக ஒன்றாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினனும் இரண்டையும் பிரித்து "நெருப்பு நிலவுகள்" இன் பாடல்களை கீழே கொடுத்துள்ளேன். ஆடிப் பாடுவோம், கூடிப் பாடுவோம் நிலவில் புதிய கவிதை நீரடித்து நீரிங்கு ஓ வரும் வரும் மரணம் நிறைகுடத்தை ஏந்திக்கொண்டு காலநதி ஓடுகின்ற எதிரியின் பாசறைகள் எரித்திட குருவிக் கூட்டம் போல கிழக்கு வானம் ஆகாயம் பூச்சிரிக்க ஆதாரம்: வெளிச்சம் 1995.09 - பக். 71-73 "நெருப்பு நிலவுகள்" - பாடல் ஒலிப்பேழை மதிப்பீடு திறனாய்வு: ச. கலாநிதி மூலம்: வெளிச்சம் 1995.09 பக்கம்: 71-73 இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தாயக மண்மீட்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு வடம்பிடிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் "படையணி நகரும் பெண்கள் படையணி நகரும்" என்ற அணிவகுப்பு நகர்வில் ஒரு கட்டாய தேவையை முன்னிட்டு ஒத்துழைப்பு நல்கி உதவவேண்டிய வேளையில் வெறும் காட்சிப் பொருள்களாக, கற்பனைக்குகந்தவர்களாக, வர்ணனைக்குரியவர்களாக மட்டும் இருக்க முடியாதபடி காலமாறுதல்களும் காலத்தின் தேவைகளும் எம்முன் நிற்கையில் தமிழீழப் பெண்கள் குனிந்த தலைகளை நிமிர்த்தி நெருப்பு நிலவுகளாக, நிமிர்ந்த புயல்களாக வெற்றி மகளிராகப் புறப்பட்ட, புறப்பட்டுக் கொண்டிருக்கின்ற, புறப்படவேண்டிய நிலையைச் சித்திரிக்கவேண்டிய தேவையே "நெருப்பு நிலவுகளின்" வெளியீடு என்று கூறலாம். விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் இரண்டாவது வெளியீடாகவும் கலை பண்பாட்டுக் கழக மகளிர் பிரிவின் முதலாவது உருவாக்கமாகவும் வெளிவந்திருக்கும் இந்த ஒலிப்பதிவு நாடாவானது புதுவை இரத்தினதுரையின் இரண்டு பாடல்களையும், கணேசமூர்த்தியின் மூன்று பாடல்களையும், ரமணனின் பாடலொன்றையும், இளம்போராளிகளான உதயலட்சுமி, யோகன் (பாதர்), தமிழவள், நெடுஞ்செழியன் ஆகியோரது பாடல்களையும் சேர்த்து பத்து இசைப்பாடல்களைத் தன்னகத்தே அடக்கியுள்ளது. ஒலிப்பதிவு நாடாவில் கவிஞர் தனது பாடலை எத்தகைய உணர்வு நிலையில் நின்று எழுதினாரோ அந்த உணர்வோட்டம் மாறாமல் பாடகர் அதனை உள்வாங்கிப் பாடவேண்டும். பாடற்கருத்துக்கும் பாடல்களின் குரலுக்கும் இசைந்தவாறு இசையமைப்பு அமைய வேண்டும். இந்த மூன்று விடயங்களும் இணையும்போதுதான் ஒலிப்பதிவு நாடாவானது ஒரு முழுமையைப் பெறும். நெருப்பு நிலவுகளைப் பொறுத்தவரையில் இசையமைப்பானது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்துள்ளது. போராட்ட வேகம், நம்பிக்கையுணர்வு, சோகம், மகிழ்ச்சி போன்ற உணர்வலைகளில் மிகத் துல்லியமாக இசை இயங்குகின்றது. "ஆடிப்பாடுவோம்" என்ற பாடலில் "ஆடிப்பாடுவோம் கூடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு" என்ற பாடலோசையும் அதனோடு இணையும் இசையும் மிகநன்றாக அமைந்துள்ளது. 'பெண்ணாக இருத்தல்' காரணமாக பெண்ணுக்கென்று எமது சமூகமும் இலக்கியங்களும் விதித்துள்ள காலத்துக்கு ஒவ்வாத சில தளைகளை பெண் தாண்டவேண்டும். இந்த ஒலிப்பதிவு நாடாவில் கவிஞர் கேட்கிறார்: இனியும் உனக்குச் சிறையா? இருளில் இருத்தல் முறையா? "அள்ளிச் சொருகியே மெல்ல நடந்திடும் கொள்ளை அழகுகள் போதும்! கண்களில் தீயை மூட்டுங்கள்! உங்கள் கால்களில் வேகங்கள் பூட்டுங்கள்!" "வண்ணக் கனவுகள் தன்னில் மிதந்தொரு பெண்மை கரைந்தது போதும்! கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்!" என்று கூறிப் பெண்ணுக்கும் பெண்மைக்கும் புதிய பாதையைக் காட்டி நிற்கிறார். "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே" என்றார் பாரதிதாசன். ஆனால் இன்றைய தமிழீழப் பெண்போராளிகள் தாயக மீட்புக்காகப் போராடும் அதேவேளை பெண்விடுதலைக்காகவும் குரல் கொடுத்து படையணிகளில், பாசறைகளில், மகத்தான சாதனை புரிந்துவரும் வேளையிதில் இப்போராட்ட வரலாற்றில் மகளிர் படையணியின் வெற்றிகள் பெண்களின் ஒருபரிமாணமெனில் மற்றொரு பரிமாணமாக இத்தகைய இலக்கியம்சார் ஆக்கங்களின் வெளிப்பாடுகளைக் கூறலாம். போராளிகளாக, கவிஞர்களாக, பாடகர்களாக இன்னும் பல்வேறு துறைகளில் வல்லவர்களாக செயற்படுவதைப் பார்க்கும்போது "வளையல் அணியும் இளைய மலர்கள் கவசம் அணியவே! - பழைய விதிகள் எரியப் புதிய பரணி எழுதவே!" என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலடிகளின் நிதர்சனத் தன்மை புரிகின்றது. "ஓ வரும் வரும் மரணம் வரும் வரும் ..." என்ற கணேசமூர்த்தியின் பாடலில் நிரந்தரமான மான உணர்வின் தன்மையும், அதனோடு கூடிய தமிழர்களின் காவலனாகிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் பெரும்புயலையும் பூகம்பத்தையும் வென்று வெற்றிவாகை சூடும் உறுதி புலப்படும். அதேவேளை, "பெற்றவளை ஒருகணமும் மறந்ததில்லை அம்மா! போர்க்களத்தில் மானம் என்றும் இறந்ததில்லை அம்மா" என்ற பாடலடிகள் பெண்போராளியின் பாசமிகு குரலாக ஒலித்து தாய்மண் பற்றையும் தாய்ப்பற்றையும் உணர்த்தி நிற்கிறது. பெண்போராளிகளின் போராட்டத் திறனைக் கூறும் பாடல்களும், போராட்ட வரலாற்றுக்கு அறைகூவல் விடும் பாடல்களும் உள்ள அதேவேளை பெண்ணினத்துக்கு இருந்துவரும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றான சீதனத்தைக் கண்டிக்கும் வகையில் போராளி யோகனின் "நிறைகுடத்தை ஏந்திக்கொண்டு..." என்ற பாடலில் வரும் "மணம்கொடுக்கும் மலருக்குத் தேனின் துளிகள் பாரமோ! தேடிவரும் வண்டுகளுக்கு சீர்கொடுக்கவும் வேண்டுமோ! வாழ்க்கைத் துணை தேடிவந்தால் வஞ்சிப்பதுதான் முறையோ" என்று வருகின்ற அடிகள் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளில் ஒன்றை இனங்காட்டி நிற்கிறது என்று கூறலாம். "மழைகுளித்த மரங்கள் மீது தளிர்பிறக்குது! எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை வெடிக்குது" என்ற உதயலட்சுமியின் பாடலடிகளும் குருவிக் கூட்டம் போல இருந்த எங்கள் வாழ்வானது கொடும் பறவைக் கூட்டத்தால் அழிந்து போனதையிட்டுக் கலங்கும் போராளிக் கவிஞர் தமிழவள் "போர்க்களமே விடிவுதரும் மனம் அறிந்தது" என்று கூறும் பாடலடிகளும் பெண்போராளிகள் என்ற வகையில் அனைத்துப் பெண்போராளிகளின் சார்பிலும் ஒலிக்கின்ற உறுதிமிக்க குரலாக ஒலித்து நிற்கின்றது. ரமணனின் "ஆடிப்பாடுவோம் கூடிப்பாடுவோம்" என்ற பாடலில் "பெண்ணை மிதித்தவர் கண்ணைத் திறந்திடும் காலமும் உருவாச்சு" என்ற செய்தி கூறப்படுகிறது. சந்தோச உணர்வில் காலை விடியும் நேரம் வந்துவிட்டதால் உனது சோகமும் முடியும் என்ற உறுதியைக் கூறி, "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்ற பழங்கதையை மாற்றிவிட்ட புதிய கோலத்தைக் கூறுகிறார். "எதிரியின் பாசறைகள் பொடிப்பொடியாகும்" என்ற நெடுஞ்செழியனின் (போராளி) பாடலில் சோதனையில் சாதனை படைக்கும் வேகமும் மாவீரர் தியாகத்தால் வெற்றிவாகை சூடிடும் உறுதியும் கூடி கனவுகள் நனவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்ற நம்பிக்கைக் கீற்றும் வெளிப்பட்டு நிற்கிறது. கவிஞர்களது 'பெண்', 'பெண்மை' பற்றிய கருத்தோட்டங்களையும் போராளிகளது உள்ளத்துணர்வுகளையும் தாங்கி நிற்கின்ற பாடல்களை மிக அழகான குரல்வளத்தால் மெருகூட்டி கவிஞனின் உள்ளத்துணர்வுகளைத் தங்கள் குரலூடு எமக்கு அளித்துள்ள பாடகர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். வீரம் மட்டுமல்ல விவேகமும் பல்துறை ஆற்றலும் பல்துறை வளங்களும் உடையவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த ஒலிப்பதிவு நாடா மூலம் போராளிகள் நிரூபித்துள்ளார்கள். இந்த வகையில் "நெருப்பு நிலவுகள்" என்ற கலைப்பை மேலும் அணிசெய்யும் வகையில் நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களை அவர்களின் புதிய நகர்வைச் சித்திரிக்கும் அழகிய ஓவியத்தை முகப்பாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த நெருப்பு நிலவுகள் பாடல்களும் உங்கள் ஒவ்வொருவரது உணர்வுகளிலும் உட்காரத்தான் போகின்றது. *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.