Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 12/08/2003 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9629 தமிழாக்கம்: நன்னிச் சோழன் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அம்பாறையில் உள்ள தமிழர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர் மட்டக்களப்பு நகருக்கு தென்மேற்கே 38 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீரமுனையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரால் 1990 இல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறையில் தமிழ் குமுகாயங்களால் செவ்வாய்க்கிழமை பொது கடையடைப்பு (ஹர்த்தால்) பின்பற்றப்பட்டது என்று அம்பாறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைகள் மூடப்பட்டதுடன் பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்து சேவைகளும் தேங்கின. திருக்கோவிலுக்கு போக்குவரத்து சேவை முற்றாக முடங்கியது. தமிழ் பரப்பு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டதோடு இயல்பு வாழ்க்கையும் சீர்குலைந்தது, அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை, பாடசாலைகள் திறக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் பரப்பெங்கும் கொடிகள் காணப்பட்டதுடன் மேலும் காவல்துறை ஆளணியினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் கேந்திர சந்திகளில் களமிறக்கப்பட்டுள்ளதாக அம்பாறை வட்டாரங்கள் தெரிவித்தன. வீரமுனை என்பது சம்மாந்துறைக்கு அருகாமையில் உள்ள ஒரு பண்டைய தமிழ் ஊர் என்பதோடு பல முஸ்லிம் ஊர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஜூன் 11, 1990 இல் சிறிலங்கா படையினரிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இவ்வூரில் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர், சிறிலங்கா அரசாங்கத்தின் தரைப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றால் மூன்று படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஊரில் உள்ள மனிதவுரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். சிறப்பு அதிரடிப்படை குறிப்பாக போரின் போது தமிழ் ஊர் மக்களை பல படுகொலைகளை ஊக்குவிப்பதற்கும் நடத்துவதற்கும் பெயர் போனது என்பதோடு பல மனிதவுரிமை மீறல் முறைப்பாடுகளில் சிக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஜூன் 20 மற்றும் 29 1990 இல், ஊர்காவல் படையினரும் சிறிலங்கா தரைப்படையினரும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை அவர்களின் வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து, அவர்களை கொண்டவெட்டுவானில் உள்ள பாதுகாப்புப் படைமுகாமுக்கும் பின்னர் அடவிகளுக்கும் அழைத்துச் சென்று கொன்றனர். படையினர் பின்னர் இறந்தவர்களின் வீடுகள் மற்றும் பிற சொத்துக்களை எரித்ததாக ஊரிலுள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. ஆகஸ்ட் 12, 1990 அன்று அதிகாலை, சிறப்பு அதிரடிப்படையினர், சில பயங்கரவாத ('ஜிஹாத்') குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் வீரமுனை ஊர் மக்களை சுற்றி வளைத்தனர். முந்தைய இரண்டு படுகொலைகள் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், தாங்கள் உயிருக்கு பயந்து, தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து இந்துக் கோயில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில் சிந்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலில் தஞ்சம் புகுந்ததாக ஊர் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கோவிலில் சூட்டு மழை பொழிந்து மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர், அவர்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 56 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வூரில் நடந்த இந்த மூன்றாவது படுகொலையைத் தொடர்ந்து, தமிழ் ஊர் மக்கள் அங்கு வாழ முடியாது போனது. ஊர்மக்கள் காரைதீவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்தனர். ஊர்வாசிகளில் சிலர் 1993 இல் ஊரிற்குத் திரும்பி தொடர்ந்து வாழ்கின்றனர், எனினும் சிலர் திரும்பி வரவில்லை, இன்னும் அகதி முகாம்களில் தான் வாழ்கின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. *****
  2. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8387 திகதி: 19/02/2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன் பாரிய படுகொலை, கட்டாய வெளியேற்றத்தை தாண்டி பிழைத்துள்ளது உடும்பன்குளம் இலங்கையின் தென்கிழக்குக் கரையோரத்தில் அதிகம் அறியப்படாத உட்பரப்பில் வயல்வெளிகள் அடர்ந்து பசுமையாக காணப்படுகின்ற உடும்பன்குளம் என்னுமொரு தமிழ் சிற்றூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 19, 1986 அன்று, சிறிலங்கா படைத்துறையினர் ஊரின் சூட்டுக்‌ களத்தில்‌ 128 கமக்காரர்களை சாகும்வரை அடித்துக் கொத்தினர். அடவியின் (jungle) பற்றிலிருந்து படிப்படியாக அப்பரப்பு மீட்கப்பட்டு வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பு ஊரிற்குத் திரும்பிய வெகுசில துணிச்சலான முன்னாள் குடியிருப்பாளர்கள் ஒரு மகத்தான நெல் அறுவடையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஆயினும் பிப்ரவரி 19 அவர்களுக்கு அழியாத வடுநிறைந்த நாளாகவே எஞ்சியுள்ளது. அந்தி சாயும் பொழுதில் உடும்பன்குளக் குளம் | படிமப்புரவு: தமிழ்நெற் அடிக்கடி நடப்பது போல, உடும்பன்குளத்தில் இடம்பெற்ற படுகொலைகளை உசாவ சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. “அன்று நான் வேலை விடையமாக வெளியூரில் இருந்ததால் படுகொலையில் இருந்து தப்பித்தேன். எல்லோரும் வெருண்டுபோயிருந்தனர். அடுத்த நாள்தான் எங்களால் இங்கு வர முடிந்தது. சூட்டுக்களம் முழுவதும் பாதி எரிந்தும் முழுது எரிந்ததுமான சடலங்கள் தான் இருந்தன. தாங்க முடியாத காட்சியாக இருந்தது. தப்பியோடி காட்டுக்குள் ஒளிந்திருந்த சிறுவன் ஒருவன், படையினர் தீயிட்டுக் கொளுத்தியபோது உயிரிழந்தவர்களில் சிலர் உயிருடன் இருந்ததாக எங்களிடம் கூறினார். சரியாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு படைத்துறை மீண்டும் இங்கு வந்து ஊரைச் சேர்ந்த இருவரை 86 ஜூலை 19 அன்று சுட்டுக் கொன்றனர்." என்று உள்ளூர் தலைவர் நாகமணி கந்தசாமி, 48, கூறினார். நாகமணி கந்தசாமி, 48, அந்தி சாயும் நேரத்தில் உடும்பன்குளத்திற்குச் சென்று கொண்டிருந்த போது | படிமப்புரவு: தமிழ்நெற் கொடூரமான படுகொலை நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உடும்பன்குளத்தில் இருக்கத் துணிந்த அந்த ஊர் மக்கள், சிறீலங்கா படைத்துறையின் அதிசிறப்பு கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவினரான சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) மொத்தமாக துரத்தப்பட்டனர். “அதிரடிக்காரர்கள் 1990 இல் எங்கள் வீட்டையும் கடையையும் எரித்தனர். அவர்கள் ஊர் பாடசாலையையும் கூட்டுறவு சங்க கட்டிடத்தையும் அழித்தார்கள். நாங்கள் அறுவடை செய்த நெற்பயிர்களுக்கு அதிரடிக்காரர்கள் தீ வைத்ததுடன், நாங்கள் பருவத்திற்காக பயிரிட்டிருந்த 25 ஆயிரம் மரவள்ளி செடிகளை எங்களுடைய பண்ணையில் நாசப்படுத்தினர். நானும் என் கணவரும் சாவிலிருந்து அருந்தப்பாக தப்பினோம். பல நாட்கள் அடவிக்குள் ஒளிந்திருந்தோம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கு வந்துள்ளோம். எனினும் மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்குவதென்பது மிகவும் கடினமானது.” என்கிறார் 45 வயதான குமாரகுலசிங்கம் தங்கேஸ்வரி. உடும்பன்குளம் நீர்த்தேக்கத்தின் கசிவுக்கு அருகில் நின்று தனது வயலைப் பார்க்கிறார் 58 வயதான கணபதிப்பிள்ளை சிவநேசராஜா | படிமப்புரவு: தமிழ்நெற் “ஆனால் மிக மோசமான விடையம் என்னவென்றால், அதிரடிக்காரர் இங்குள்ள நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுகளை தகர்த்ததுதான். ஏறத்தாழ பத்தாண்டுகளாக நீர்த்தேக்கங்கள் பிளந்து கிடக்கின்றன. உடும்பன்குளம் நீர்த்தேக்கத்தின் கரையை சீர்செய்ய தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் (பொருண்மியம்) உதவியுள்ளது. மற்ற சிறிய தாங்கிகளின் (நீர்த்தேக்கங்கள்) பிளந்த மற்ற கரைகளும் அண்மைய மாதங்களில் சரிசெய்யப்பட்டுள்ளன” என்று அப்பரப்புக்கான ஊரக வளர்ச்சி சங்கத்தின் தலைவர் திரு. முருகேசு வரதராஜன், 33, கூறினார். இக்கோட்டத்தில் அதிரடிக்காரரின் 'கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில்' மனித வசிப்பிடத்தைத் தக்கவைக்கத் தேவையான அடிப்படைக்குரிய கட்டமைப்புகள் முறைமையாகவும் கொடுகாகவும் அழிக்கப்பட்டதால் குடும்பங்கள் நிரந்தரமாக மீள்குடியேறத் தயங்குகின்றன என்றார். “சொகுசு ஊர்திகளில் சென்று, வெளிநாட்டவர்களுடன் தாயகத்தின் புனரமைப்பு பற்றி கலந்துரையாடி செல்லும் பலருக்கு, நாங்கள் வரைபடத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள் இங்கிருந்து எட்டு கிலோமீட்டருக்கு மேல் நடந்தே திருக்கோவிலுக்கு பேருந்து செல்ல வேண்டியுள்ளது” என்று அவர் வேதனையுடன் கூறுகிறார். “நாங்கள் வாழ்வாதாரத்திற்காக கருங்கற்களை உடைக்க வேண்டியிருந்தது. இங்குள்ள நிலங்களில் கமம் செய்ய முடியாமல் எனது குடும்பம் இன்னும் வறுமையில் வாடுகிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது எனது குடும்பத்திற்கு ஒரு ஆடம்பரம்.”, என்று உடும்பங்குளத்திற்கு அருகிலுள்ள தங்கவேலாயுதபுரம் என்ற ஊரில் அறுவடை செய்யப்பட்ட வயலின் தரையில் இருந்து சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நெற்கதிரை குச்சியால் அடித்தபடி கூறினார், 38 வயதான கிருஷ்ணன் சிவஜோதி. கிருஷ்ணன் சிவஜோதி தங்கவேலாயுதபுரத்தில் உள்ள சூட்டுக்களத்தில் நெல் கட்டை அடிக்கிறார். | படிமப்புரவு: தமிழ்நெற் "கடினமான ஒரு நாள் வேலையானது குழந்தைகளுக்கு சமச்சீரான உணவைக் கொடுக்க போதுமான அரிசி தானியங்களைப் பெற்றுத்தருகிறது.", என்று அவர் கூறினார். சிவஜோதியும் அவரது தோழர்களும் மட்டக்களப்புக்கு தெற்கே 94 கிலோமீற்றர் தொலைவில் தீவின் தென்கிழக்கு கடற்கரையில் முதன்மை வீதியில் உள்ள தாண்டியடி என்ற ஊரைச் சேர்ந்தவர்களாவர். ஒரு பத்தாண்டுகளிற்கும் மேலாக இவ்வூரை அதிரடிப்படையினர் திறந்தவெளி சிறைச்சாலை போன்று வைத்திருந்ததாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். கண்மூடித்தனமான கைது, தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் காணாமற்போதல் ஆகியவை இங்கு தலைவிரித்தாடுகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரடிக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் எந்த ஊடகவியலாளரும் அப்பரப்பிற்கு வரவில்லை. குறித்த விடையத்தில் மேற்கத்திய கையேடுகளின்படி வடிவமைக்கப்பட்ட அதிரடிக்காரர்களின் கிளர்ச்சி எதிர்ப்பு கேந்திரத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஒரே இரவில் வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மட்டக்களப்பில் இருந்து 76 கிலோமீட்டர் தெற்கே உள்ள திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஊர்களில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழ்ந்தனர். அதிரடிக்காரர்கள் அவர்களின் வளமான நிலங்களுக்கும் கால்நடைகளுக்குமான அணுகலை தொடர்ந்து மறுத்து வந்ததால் பலர் வறுமைக்கும் நம்பிக்கையீனத்திற்கும் தள்ளப்பட்டனர். திரும்பிச் செல்லத் துணிந்தவர்களை அதிரடிக்காரர்களின் சுற்றுக்காவல் படையினர் பதிதாக்குதலில் (ambush) சுட்டுக் கொன்றனர். எவ்வாறாயினும், அதிரடிக்காரர்களின் பாத்தாண்டு கால கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளால், உலகின் பிற பகுதிகளில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டவை, விடுதலைப் புலிகளின் படைய செயற்பாடுகளை கட்டுப்படுத்தவோ அல்லது புலிகளிடமிருந்து மக்களை அச்சுறுத்துவதில் வெற்றிபெறவோ இயலவில்லை. அதற்குப் பகரமாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் இக்கோட்டத்தில் மறைமுகமாக ஊக்குவிக்கப்பட்ட பொசுக்கல் கொள்கையானது, தில்லுமுல்லான வாழ்க்கையிற்கான வசதியான வழியை நீடித்திருக்கச்செய்ய அதிரடிக்காரர்களுக்கு ஒரு மறைப்பாக உருவெடுத்தது. "நாங்கள் சில ஆட்களை இழக்க வேண்டியிருந்தது. ஆனால், போர்நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து இங்கு நடந்த பொதுமக்கள் போராட்டங்கள், அதிரடிக்காரர்களுக்கு எங்களுடைய மக்களை என்றென்றும் அடிமைகளாக நடத்த முடியாது என்பதைக் காட்டுகிறது” என்கிறார் திருக்கோவில் சமூக ஆர்வலரும் செய்தியாளருமான விவேகானந்தன். *****
  3. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 30/06/2002 தமிழாக்கம்: நன்னிச் சோழன் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7144 பதற்றமான கிழக்கு மாகாண நகரத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது மட்டக்களப்பில் இருந்து 32 கிலோமீற்றர் வடக்கே வாழைச்சேனை - ஓட்டமாவடி பொதுப் பகுதியில் நான்கு நாட்களாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை காலை நீக்கப்பட்டது. வாழைச்சேனை பஜாரில் உள்ள தமிழ் ஏற்றுமதியாளர்களும் வணிகர்களும் தங்கள் கடைகள் மற்றும் கட்டிடங்களின் அழிக்கப்பட்ட எச்சங்களை பார்வையிட திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 28 வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா படைமுகாமுக்கு அருகிலுள்ள கடையின் வணிகர் ஒருவர் கூறுகையில், “வடகிழக்கில் இதுபோன்ற பேரழிவுகளுக்கு காப்புறுதி நிறுவனங்கள் பணம் செலுத்தாததால் நாங்கள் மீளமுடியாமல் அழிந்துள்ளோம். "வாழைச்சேனை பஜாருக்குப் பின்னால் உள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் சூறையாடி எரிக்கப்பட்டிருக்கும். " என்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் கிழக்கு நகரின் தமிழ் பகுதிக்கு தீ வைத்து அழிக்கும் முயற்சியில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவுவதில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் வாழைச்சேனை பஜாரில் தமிழர் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் எச்சங்களை உண்ணோட்டமிடுகின்றனர் வாழைச்சேனை பஜாரில் தமிழர் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் எச்சங்களை உண்ணோட்டமிடுகின்றனர் ஊரடங்குச் சட்டத்தின் போது எரிக்கப்பட்ட உந்துருளி வாழைச்சேனையில் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தமிழ் குமுகாயத் தலைவர்கள் மற்றும் வணிகர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட வாழைச்சேனை பிரதேச சபை அலுவலகம் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7139 வாழைச்சேனைத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது "ஹர்த்தால்' என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வாழைச்சேனையில் தமிழ் மக்களின் பொருண்மியத்தை அழிப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக இருந்தது. அவர்கள் எங்களைத் தாக்க சுடுகலன்கள், அமுக்கவெடிகள் மற்றும் கையெறிகுண்டுகளைப் பாவித்தனர். இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த ஆயுதங்களால் எங்களைத் தாக்கியபோது காவல்துறையினர் அருகில் நின்றார்கள். இந்த ஆயுதங்களை அவர்களுக்கு வழங்கியோர் யார்? " என்று தமிழ் குமுகாயத் தலைவர்கள் மற்றும் வணிகர்களின் பேச்சாளர் திரு.எதிர்மன்னசிங்கம் கமலரஞ்சித், சிறிலங்காவின் தரைப்படைக் கட்டளையாளர் லெப்டினன்ட் ஜெனரல் பலகல்ல மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் திரு.மிலிந்த மொரகொட ஆகியோருடன் கிழக்கு நகரில் ஞாயிறன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது வினவினார். சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளரும் அமைச்சரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு உண்மை கண்டறியும் பணியில் வாழைச்சேனையைப் பார்வையிட்டனர், அந்த சமயத்தில் அவர்கள் வாழைச்சேனையிலுள்ள தமிழ் குமுகாயத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாழைச்சேனை இந்து கல்லூரியில் நடைபெற்றது. இஸ்லாமிய தீவிரவாதிகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என உள்ளூர் ஊடகவியலாளர் திரு.சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளர் மற்றும் அமைச்சரிடம் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டத்தின் போது தரைப்படையினரும் காவல்துறையினரும் தங்களது கடைகளிலும் மண்டிகளிலும் உள்ள பொருட்களை அகற்ற விடாமல் தடுத்ததாகவும், தேவையான காப்பை தாம் வழங்குவதாக சொன்னதாகவும் தமிழ் வணிகர்கள் சிறிலங்கா அரசாங்க நிகராளிகளிடம் தெரிவித்தனர். "எவ்வாறெயினும், எங்களின் உடைமைகளையும் பொருட்களையும் ஓம்பிக் காப்பதாக (safe guard) தரைப்படையும் காவல்துறையும் கூறியதையடுத்துத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் வியாழக்கிழமை இரவு எங்கள் கடைகள் அனைத்தையும் எரித்தனர்" என்று வணிகர் ஒருவர் கூறினார். “வன்முறையின் பின்னர் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிக்கு வருகை புரிந்த திரு. ஹக்கீம் அப்பரப்பில் உள்ள முஸ்லிம்களை மாத்திரம் சந்தித்தார். அவர்களுக்கே பாதுகாப்புக் கோரியுள்ளார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்தாலும் ஹக்கீம் இதில் மிகவும் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டுள்ளார். இவ்வாறு பக்கச்சார்புடன் செயற்பட்டமைக்காக பிரதமர் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திரு.கமல்ரஞ்சித் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறீலங்கா தரைப்படை மற்றும் அமைச்சர் மொரகொடவிடம் பேசிய போது தெரிவித்தார். முன்னறிவிப்பின்றி இஸ்லாமிய அமைப்புகள் ஹர்த்தாலை விதித்துள்ளன என்றார். 'எனவே வியாழன் காலை இஸ்லாமிய குழு தமிழர் பகுதியில் கைக்குண்டுகளை வீசிய போது ஏராளமான தமிழர்கள் சாலைகளிலும் பஜாரிலும் இருந்தனர்' என்று மேலும் தெரிவித்தார். *****
  4. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 29/06/2002 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7135 தமிழாக்கம்: நன்னிச் சோழன் வாழைச்சேனை வன்முறையில் காவல்துறையினரின் கைவரிசை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் வாழைச்சேனையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கு காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், அப்பரப்பிற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். வன்முறை குறித்து உசாவ ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உசவல் ஆணைக்குழுவை நியமிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.ஜோசப் பரராஜசிங்கம், திரு.த.தங்கவடிவேல் மற்றும் திரு.ஜீ.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் முழுவடிவம் பின்வருமாறு:- "உங்களின் கனிவான கவனத்திற்கும் குறைதீர்விற்காகவும் பின்வரும் மெய்யுண்மைகளை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம். "வாழைச்சேனையில் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அழிவு நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களை நாம் கூட்டாகப் பார்வையிட்டோம். "இரு சமூகத்தினரையும் நேரில் கண்ட சாட்சிகளிடமும், குறிப்பாக நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், நாங்கள் நடத்திய உசாவலில், இந்த நீதியற்ற இறப்புகள், ஆட்களுக்கு காயம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் தான் பொறுப்பென்றும் அவர்களின் விளைபயனற்ற தன்மையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. "பெரும்பாலான நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ஊரடங்குச் சட்டத்தின் போது கடைகள் எரிப்பு மற்றும் சூறையாடுதல் உள்ளிட்ட ஆட்களின் இறப்புகள் மற்றும் காயங்கள் நடந்துள்ளன. கடந்த 27ஆம் திகதி காலை வாழைச்சேனை பிரதேச சபை அலுவலகம் ஊரடங்குச் சட்டத்தின் போது எரிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை கடைப்பிடிக்கும் பொறுப்பில் உள்ள பாதுகாப்புப் படையினர் இந்த அரச சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். "வாழைச்சேனை காவல்துறை பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜமால்தீன் மற்றும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி திரு.பியசேன ஆகியோருக்கு எதிராக இரு சமூகங்களையும் குறிப்பாக தமிழர்களையும் சேர்ந்த பல சாட்சிகள் அன்னார்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பக்கச்சார்பற்ற தன்மையை பேணவில்லை எனவும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவில்லை எனவும் முறைப்பாடு செய்துள்ளனர். "சிஐடி அதிகாரிகள் திரு.ஃவைஸ், திரு.மன்சூர், திரு.ரமீஷ் மற்றும் திரு.உவைஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது சுட்டதாக கூறப்படுவதும் நேரில் கண்ட சாட்சிகள் சிலரால் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன் தமிழ் இளைஞரான திரு. காண்டீபன் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததற்கு திரு.ஃவைஸ் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாக குறிக்கப்பட்டிருந்தது. "வாழைச்சேனை கோட்ட செயலாளர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நடப்பு காவல் மா அதிபர் திரு.த.ஆனந்தனராஜா முன்னிலையில் இவ்விரு அலுவலர்களையும் இவ் நிலையத்திலிருந்து உடனடி நடைமுறையுடன் இடமாற்றம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது. "இந்நிலையில், இந்த நிகழ்வுகள் குறித்து உசாவவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் ஓய்வுபெற்ற மூத்த உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உசாவல் ஆணைக்குழு ஒன்றை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். "கீழ்க்கண்டவர்களுக்குப் போதுமான சிறப்பு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். 1) இந்த சம்பவத்தில் இறந்த ஆட்களின் அடுத்தவர்கள் 2) காயம் அடைந்த ஆட்கள் 3) தீயினால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன அல்லது முற்றிலும் எரிந்தன 4) வேறு ஏதேனும் இடருதவி." *****
  5. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 27/06/2002 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7124 தமிழாக்கம்: நன்னிச் சோழன் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர் வியாழன் அன்று மட்டக்களப்பில் இருந்து வடக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாழைச்சேனையில் தீவிரவாத இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர்கள் என ஐப்படும் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 13 தமிழ் பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையை அடக்குவதற்காக வியாழன் மதியம் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பின்னர், காலையில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதொரு கைக்குண்டு தாக்குதலில் நான்கு தமிழர்கள் படுகாயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கடுமையாகவுள்ளார், அத்துடன் ஒருவரைக் கொன்றதோடு ஒன்மரைக் காயப்படுத்தினர். வாழைச்சேனைக்கு அருகிலுள்ள ஓட்டமாவடியில் 10 தமிழ் பெண்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சமாதான முன்னெடுப்புகள் மூலம் எங்களின் நியாயமான உரிமைகளை அடைவதை தடுப்பதில் உறுதியாக இருப்பவர்கள் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் தமிழர்களை தாக்கி கிழக்கில் பொது வன்முறையை ஆக்க ஆயுதமேந்திய இஸ்லாமிய தீவிரவாதிகளை தூண்டுகின்றனர்" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார். வாழைச்சேனைக்கு அருகில் உள்ள தமிழ் சிற்றூரான கருவாக்கேணியில் பத்து வயது சிறுவன் ஒருவரை இஸ்லாமிய தீவிரவாத கும்பல் அரிவாளால் தாக்கி படுகாயமடையச் செய்தது. வாழைச்சேனை பசாருக்குப் பின்னால் உள்ள தமிழர் வீடு ஒன்று இஸ்லாமிய அமைப்பினரால் தீக்கிரையாக்கப்பட்டது. அப்பரப்பில் உள்ள ஏராளமான தமிழ் குடும்பங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உள்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவனை மட்டக்களப்புக்கு கொண்டு சென்ற நோயாளர் காவுவண்டி மீது ஏறாவூரில் முஸ்லிம்கள் கல்லெறிந்தனர். மட்டக்களப்பில் இருந்து 5 கிலோமீற்றர் தெற்கே உள்ள காத்தான்குடியில் மற்றுமொரு நோயாளர் காவுவண்டிக்கு முஸ்லிம்கள் கல்லெறிந்ததோடு, ஓட்டமாவடியில் வியாழக்கிழமை காலை தமிழர்களுக்குச் சொந்தமான மூன்று பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாழைச்சேனை நகர பஜாரில் 6 கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு தமிழர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை பிற்பகல் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முஸ்லீம் பகுதிகளிலிருந்து வந்த ஆயுதமேந்திய குண்டர்களின் தாக்குதல்கள் என்றும், எனவே கிழக்கில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்க தமிழர்கள் எதனையும் செய்யக்கூடாது என்றும் விடுதலைப் புலிகளின் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை மற்றும் அதனை அண்மித்த பரப்புகளில் இன்று (வியாழன்) மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. "கிழக்கில் ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய தீவிரவாதிகள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அமைப்புகளும் கடந்த காலங்களில் கிழக்கில் பல தடவைகள் இந்த பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டுள்ளன. இதன் நோக்கம் சமாதான முன்னெடுப்புகளை சீர்குலைத்து, கிழக்கு கடலோரம் நடுவண் அரசியல் சிக்கல்களை குழப்பிவிடுவதுதான்" என்று திரு. ஜோசப் பரராஜசிங்கம் கூறினார். *****
  6. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 26/06/2002 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7121 தமிழாக்கம்: நன்னிச் சோழன் மூதூர் ஊடகவியலாளர் வீட்டின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்! மூதூர் நகரில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் திரு. பி. சத்சிவானந்தத்தின் வீட்டின் மீது தீவிரவாத இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஆயுததாரிகள் புதன்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தியதில் ஏந்தனங்கள் (equipments) மற்றும் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 'ஒசாமா முன்னணி' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியக் குழுவின் ஆயுதக் கும்பல் புதன்கிழமை காலை கிழக்கு நகரம் வழியாக வெறித்தனமாகச் சென்று, கிழக்கு நகரத்தின் தமிழ் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளைத் தாக்கியது. இதனால் மூதூரில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் உள்ளூர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். செய்தியாளர் நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இங்குள்ள குழந்தைகள் புனித அந்தோனியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக வண. சாந்தன் இம்மானுவேல் தெரிவித்துள்ளார். திரு.சசிவானந்தம் மீதான தாக்குதல், செவ்வாய்கிழமை இரவு ஒளிபரப்பான பிபிசியின் தமிழ்ச் சேவைக்கு ஊடகவியலாளர் வழங்கிய அறிக்கையுடன் தொடர்புபட்டது என கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.ஏ.நடேசன் தெரிவித்தார். "மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் திரு. எஸ். ஜெயானந்தமூர்த்தியும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம்." என்று திரு நடேசன் மேலும் கூறினார். திரு. சத்சிவானந்தம் தமிழ் நாளிதழான வீரகேசரியின் மூதூர் செய்தியாளராகவும் பல பன்னாட்டு ஊடகங்களில் பங்களிப்பாளராகவும் உள்ளார். புதன்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நீக்கியவுடன் ஒசாமா முன்னணி (அணி) ஆயுதக் கும்பல்கள் தமிழர் வீடுகளைத் தாக்கத் தொடங்கின. மதியம் மீண்டும் நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் விதித்தனர். வன்முறையைக் அடக்க மூதூர் நகருக்கு மேலதிக காவலர்களும் படையினரும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலையில் உள்ள இலங்கை கண்காணிப்புப் பணியகத்தின் நோர்வேத் தலைவர் திருமதி விக்டோரியா லுண்ட் புதன்கிழமை காலை ஜோர்டானிய கண்காணிப்பாளர் அப்துல் பத்தாவுடன் நிலைமையைக் காண மூதூருக்கு விரைந்தார் என்று கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு ஊரின் தெற்கே உள்ள மூதூரில் வன்முறை வெடித்தபோது, செவ்வாய்க்கிழமை இரவும் பகலும் ஊரடங்குச் சட்டம் மூதூரில் காவல்துறையால் போடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டம் வேலணையில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் தெற்கில் உள்ள பச்சனூர் சிற்றூரிலிருந்து தமிழர்கள் நடத்திய பேரணியும், மூதூரில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் தாக்கப்பட்டமையும் வன்முறையைத் தூண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நேற்றைய தாக்குதல்களில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. *****
  7. .
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/10/2001 பக்கம்: 1,10 மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்காக தனியாக ஊர்காவல்படை அமைப்பு; ஐநூறு இளைஞர் திரட்டப்படுவராம் மட்டக்களப்பு, ஒக்ரோபர் 2 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச மக்களின் பாதுகாப் புக்காக ஐநூறு முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னாள் பிரதி அமைச்சர் எம் .எல் .ஏ.எம்.ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ளார் என்று செய்தி ஏஜென்ஸி ஒன்று அறிவித்தது. காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்புக்காகவே இந்த ஊர்காவல்படை அமைக்கப்பட விருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் விடுதலைப் புலிகளால் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மையைக் கருத்திற்கொண்டே இது அமைக்கப்படுவதாகவும் - இந்தக் கிராமங்களில் மேலதிக பொலீஸ் மற்றும் இராணுவ நிலைகளை அமைப்பது தொடர்பாகவும் தாம் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் - அவர் மேலும் தெரிவித்ததாக அந்தச் செய்தி ஏஜென்ஸி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட பின்னர், அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் அணியில் ஹிஸ்புல்லா இடம்பெற்றிருப்பது தெரிந்ததே. இதற்கிடையில் இந்த ஊர்காவல் படையை அமைக்கும் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகு தாவூத், ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா ஆகியோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த ஊர்காவல்படை அமைப்பது தமிழர் - முஸ்லிம்கள் உறவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் - தனது அரசியல் சுயலாபத்துக்காக முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஆயுதக்குழு ஒன்றை உருவாக்குவதற்கே ஹிஸ்புல்லா முயற்சி செய்கிறார் எனவும் - நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலான தெரிவித்தார். *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.