Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. போ.நி.க.கு சொந்த விருப்பத்திற்கு மாறாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று எங்கும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. தங்களால் அந்த ஆங்கில வசனங்களைக் காட்ட முடியுமா? இருவேறு சிக்கல்களை குழப்புகிறீர்கள் என்று நம்புகிறேன்
  2. அதுமட்டுமில்லை. கடற்புலிகளின் ஆழ்கடலோடிகள் வரும் வழியை இந்திய-அமெரிக்கா கூட்டுப் புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த துல்லியமான தரவுகளைக் கொண்டு அறிந்த பின்னர் சென்று தாக்குதல் நடாத்தியது. தாமாக சொந்த முயற்சியில் புலனாய்ந்து தரவுகளை எடுத்து கடற்புலிகளைத் தேடிச் சென்று தாக்கவில்லை! அதாவது இந்திய-அமெரிக்கா சப்பாட்டை எடுத்து வாய்க்குள் வைத்துவிட அதை மென்று தின்றது, சிங்களம். அவ்வளவுதான். (எவ்வாறாயினும் எம்மவர் சாக்கொல்லப்பட்டனரே!)
  3. இல்லை சரியாகி விட்டது நன்றி. (தொழினுட்பக் கோளாறு)
  4. அவசர உதவி, விம்பகத்தில் "போராளிகளின் வித்துடல்கள்" என்பதற்குள் இருந்த 537 படிமங்கள் நேற்று அழித்தெறியப்பட்டுள்ளன. தயவு கூர்ந்து மீட்டுத் தாருங்கள். நன்றி.
  5. சகடை வகுப்புப் படகு
  6. சகடை வகுப்புப் படகு
  7. கண்ணிவெடி உற்பத்தித் தொழிற்சாலைகளில் பெண் போராளிகள் பணி புரியும் காட்சி
  8. பேரரையர்(கேணல்) தமிழ்ச்செல்வி
  9. முதலாவது சூடை வகுப்புச் சண்டைப்படகு 1992-1994 கலப்பெயர்: அறியில்லை 'அணியம்: .50' 'இவர் கையில் ஏந்தியிருப்பது எச்.கே. எம்.பி.5 என்ற சுடுகலன் ஆகும்' 'கடையார்: .30 & எஃவ். என். மாக்' படகின் பக்கவாட்டுப் பார்வை: இதன் கலப்பெயர் அதன் கலகூட்டில் (hull) எழுதப்பட்டுள்ளது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. இடது: வலது:
  10. சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களைப் படகுடன் தீமூட்டி எரித்து கடலன்னை மடியில் கலந்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்), மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் ஆகியோரின் ஆண்டு வீரவணக்க நாள். அலைகடலில் ஓர் நாள் ………….. தமிழீழத்தின் மன்னார் மாவட்டம் ஓர் மாலைப் பொழுது அந்த மீனவர்களும் தங்களது அடுத்தநாள் தொழிலுக்கு உரியவற்றை சரி செய்தாலும், சில மீன்பிடி வள்ளங்கள் புறப்படுவதும், சில மீனவர்கள் சிறிலங்கா கடற்படைக் கடலில் விளைத்த கொடுமைகளைப் பேசுவதும், சிறுவர்கள் ஓடி விளையாடுவதுமாக தாய்மார்கள் கூடியிருந்து கதைப்பதுமாக , இரை தேடச் சென்ற பறவைகள் கடலிலிருந்து கரைநோக்கிப் பறந்து வருவது, ஆலயமணிகள் ஒலிப்பதுமாக வழமைபோல் ஈழத்தின் கடற்கரை மாலைக்காட்சி இருந்தது. அப்போது சிறு சந்தோஷக் கூக்குரல் சத்தங்களுடன் ஓர் படகு கடலில் புறப்படுகிறது. அது ஓர் மீன்பிடி வள்ளம் (றோலர்) அது செலுத்துவது மீனவர்கள் இல்லை அதை செலுத்திச் செல்வது சில கடற்புலி, கடற்கரும்புலிப் போராளிகள். எங்கே செல்கிறார்கள்? என்றுமே ஓய்வறியாத நாளும் விடியலை சுவாசிக்கும் இதயங்கள் போராளிகள். அதில் பயிற்சி தம்மை வருத்தி தேர்சி பெறுவார்கள், அப்படி எத்தனையோ காவியங்கள் தரையிலும் – கடலிலும் புரிந்து இன்று வரலாறாக, சரித்திரமாக நிலைத்துள்ளார்கள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள். சில பயிற்சிகளுக்காக, சில தேவைகளுக்கும் மீன்பிடி வள்ளங்கள், பெரிய படகு போல் போராளிகளாலே வடிவமைத்து பயிற்சிக்கும் சில தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியாக அன்று…..! சில போராளிகள் படகை எடுத்து பயிற்சிக்கு சென்றார்கள். ஆயினும் இவர்கள் இயற்கையின் சீற்றத்தையும் மீறி படகைச் செலுத்திக் கொண்டிருக்கையில் கடலின் அலையின் வேகம் சற்று அதிகமானதால் படகும் கடல் வீச்சை மீறி இயங்க மறுக்க இயந்திரக் கோளாறால் படகு செல்லாமல் கடல் அலையினால் தள்ளப்பட்டு செல்கிறது. படகில் இருக்கும் தொலைத் தொடர்பில் நிலைமை கரையில் உள்ள நிலையத்திற்கு அறிவிக்கப்படுகிறது. உடனே நாச்சிக்குடாவிலிருந்து கட்டி இழுக்க படகு சென்று கட்டி இழுக்கும் தருணம், எங்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நன்றாக படகு சென்றுவிட்டது. யாரும் கடலில் நின்று எதையும் நிர்ணயிக்க முடியாது காரணம் கடல் எந்த நேரமும் எமக்கு சாதகமாக இராது அடிக்கடி மாற்றம் கொள்ளும், அதை விட எதிரியின் ரோந்தும் கூடிய இடம் எந்த நேரங்கள் என்று கணிப்பதற்கும் இல்லை. எதிரிகள் தாக்கினாலும் எதிர்த்துச் சண்டை செய்ய போராளிகளின் வள்ளத்தில் எந்த ஆயுதமும் இல்லை. அவர்கள் சென்றது மீன்பிடிக்க மற்றும் அந்தச் சூழ்நிலை சமாதான காலம் என்றாலும் போராளிகள் போர்விதிகளை மீறியவர்கள் இல்லை. பரந்த கடல்வெளியில் இவர்களும் பயணித்தார்கள் ஆனால் படகு எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைகிறது. காற்றும் கடலும் அதிகமானதால் படகை செலுத்துவதும் கடினம் காற்றையும் கடலின் எதிர் வீச்சையும் மீறி மனித வலுவால் படகை செலுத்துவது என்பது இயலாத காரியம். போராளிகளை மீட்பதற்கு எம்மவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் அது பலனளிகவில்லை. சில சாதகமற்ற சூழ்நிலையால் (கடல் இயற்கை சாதகமின்மை) படகும் மன்னார் மாவட்டம் தாண்டி யாழ் மாவட்டம் நெடுந்தீவின் மேற்குப் பக்கத்திற்குச் சென்றுவிட்டது. அப்போது திடிரென எதிரியின் படகின் கண்காணிப்புக் கருவியில் போராளிகளின் படகு தெரிந்திருக்க வேண்டும். எதிரியின் படகுகள் போராளிகளைச் சூற்றி வளைக்கிறது. எதிரி போராளிகளின் படகை நெருங்க பயந்தான். அவன் படகைச் சோதனை இட வேண்டும் என்றான். அதற்கு போராளிகள் பகைவனின் சூழ்ச்சி அறிந்து அனுமதிக்கவில்லை. அவன் கூறியது ‘நாங்கள் ….. உங்க படகை சோதனை செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எங்கள் படகில் ஏறவும் என…’ போராளிகள் உண்மை நிலவரத்தை கூறினார்கள். எதிரியோ அவர்களது நியாயத்தைக் கேட்கவேயில்லை. இப்படியாக கடலில் பேச்சுக்கள் நடைபெற்ற தருணம் நேரமும் கடந்து சென்றது. போராளிகளிடம் ஆயுதம் இருக்கவில்லை, அதைவிட சமாதான காலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயிரம் ஆயிரம் போராளிகள் அரசியல் பணி புரிந்து இருந்த காலம் அது. அப்போது போராளிகள் கரையில் இவர்களின் வரவை எதிர்பாத்து காத்திருந்தனர். ஆயினும் சில போராளிகளின் வசனங்கள் கடலில் இருந்த போராளிகள் சுதன், பொதிகைத்தேவன், அன்பன் பற்றியே அவன் நல்ல சண்டைக்காரன், அவன் ஏதாவது எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டுவான், கோபக்காரன் என்றைக்கும் பணியமாட்டான் இப்படியாக அவர்களின் சக தோழ – தோழியரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. அது ஓர் போர்க்காலம் இல்லை. சமாதான காலத்தில் போராளிகளுக்கு இப்படியா என்பதை எந்த மனமும் ஏற்பதற்கு இல்லை. கடலிலே….. பகைவன் போராளிகளை சரணடையவும் என்றான். சற்று வானம் வெளுக்கத் தொடங்கியது அது விடிசாமம் 3 மணி இருக்கும். அப்போது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு பகைவனின் படகில் இருந்து தங்கள் கொடியின் சமிக்கையுடன் போராளிகளை நெருங்கி வந்தார்கள். போராளிகள் கண்காணிப்புக் குழுவிற்கு மதிப்பளித்து அவர்களை சோதனை இட அனுமதித்தார்கள் ஆயினும் இத் தருணத்திலும் பகைவனிற்கு பயம் போராளிகள் படகில் ஏற. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏறும் முன் அப்போது பகைவன் ஓர் சூழ்ச்சி செய்தான் படகை கரையில் கொண்டு வந்து தான் சோதனையிடலாம் என அதற்கு கண்காணிப்புக் குழுவும் தலையை அசைத்தது போலும் கரையை அதாவது இராணுவக் கட்டுபாட்டுப் பிரதேசத்திற்குள் போராளிகளின் படகை கட்டி இழுத்துச் செல்ல முற்பட்ட வேளை அதற்கு போராளிகள் மறுத்தார்கள். எதிரியின் துப்பாக்கிகள் யாவும் போராளிகளின் படகை நோக்கிக் குறிபார்த்து மிரட்டினார்கள். ஆயினும் அதிலிருக்கும் வேங்கைகள் கரும்புலிகள் என யாரும் அறியவில்லையே!!! போராளிகள் சிரித்தார்கள் ஆயுதம் இன்றியும் கடற்படையுடன் வாதாடினார்கள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வேடிக்கை பார்த்தது ஏனோ தெரியவில்லை.? அப்போது நிலைமையை கரையில் உள்ள நிலையத்திற்கு அறிவித்தார்கள். ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த செய்தியை கேட்டவருக்கு ஓர் கணம் யோசிக்க வைத்தது. இது சமாதான காலமா..? அவர்கள் தொலைதொடர்பில் கூறியது … இதுதான்……….நிலைமை நாம் கேட்பதை அவர்கள் கேட்கவில்லை…….. நாங்கள் சரணடையமாடடோம், எதிரி போராளிகளின் படகை கரைக்கு கொண்டு செல்ல முனைகிறான். ஆயுதங்களை போராளிகளின் படகை நோக்கிய வண்ணம் குறிவைத்தபடி நெருங்கினான். அப்போது கடலில் எதிரியும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் எதிர்பார்க்கா விடயம். படகை கடற்கரும்புலிகள் எரிபொருள் ஊற்றி எரித்தார்கள் அந்த நெருப்பின் நடுவில் 3கருவேங்கைகள் தீயில் சங்கமித்தார்கள். அந்த ஒளி நெடுந்தீவுக் கரை முழுமையாக நிறைத்ததை ஓர் சிலரைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. மறுநாள் தான் தெரியும் தங்கள் கடலில் 3முத்துக்கள் மூழ்கிவிட்டார்கள் என்பது. எதிரியையும் நிச்சயமாகக் கண் கலங்க வைத்து அந்த கரிய வேங்கைகள் கடலிலே காவியமாகியிருந்தார்கள். நாளும் ஈழத்தின் கடலில் நிம்மதியாக மக்கள் சென்று வர அவர்களின் வாழ்விற்காக நாளும் தம்மை உருக்கி வருத்தி வளர்ந்த வேங்கைகள் இன்று அந்தக் கடல்த்தாய் மடியில் காற்றுடன் கலந்து போனார்கள். பொதிகைத்தேவனின் உடையில் இன்றும் உள்ளது அவனின் மூச்சு அவனின் ஆடைகளைப் பார்க்கையிலே என் மனம் ஓர் பாடல் வரியைத்தான் நினைவில் கொள்ளும். சிரிப்புமலர் பூத்திருந்த முகங்கள் எங்கு போச்சு சேர்த்து வைத்த உடைகளிலும் இருக்கு உங்கள் மூச்சு ஆழக்கடல் மடியினிலும் அன்பின் அலை பாயும் ஐந்து பெரும் ஒன்றாய் இருந்த நினைவு……….. நீங்கள் விதைத்த தடத்தில் கடலிலே காவியங்கள் தொடரும் வீரரே..! – இசைவழுதி இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
  11. “கடலில் எரிந்த தியாகங்கள்” கரும்புலிகள் நாள் சிறப்பு பதிவு சேரா 2 …, சேரா 2 … நவம்பர்… அலறிய வோக்கியை தூக்குகிறான் செழியன். நவம்பர் சொல்லுங்கோ. சேரா2 நாங்க வீடு கட்டிற இடம் தெரியுமல்ல? “ஒமோம் சொல்லுங்கோ … ” அங்க சரியான மழையா கிடக்கு வீட்ட கட்ட முடியல்ல கீழால வெள்ளம் பாயுது எங்கட அடித்தளத்த கரைக்குது என்ன பண்ண? மண்மூட்டை எதாவது கொண்டு வர லொறி அனுப்ப முடியுமா? சங்கேத பாசையில் சென்ற தகவல் மறுமுனையில் விளங்கி கொள்ளப்படுகிறது. மீன் பிடிப்பதற்காகவும் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் கடற்புலிகளின் அணி ஒன்று தமிழீழ கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிற்கிறது. வேராங்கண்டல் முழங்காவிலில் இருந்து புறப்பட்ட அந்த மீன்பிடி படகு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு மீன்பிடிப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்க, காலநிலை தாண்டவம் ஆடத்தொடங்கியது. அந்த றோளர் படகு கடற்புலிகளின் படகு கட்டுமானப்பகுதியால் பயிற்சிக்கும், மீன்பிடிக்கும் என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் எந்த ஆயுதங்களும் இன்றி தனி தொலைத்தொடர்பு சாதனத்தோடு மட்டும் அந்த போராளிகளின் அணி கடலில் நின்றிருந்தது. மீன் பிடித்து கொண்டிருந்த படகை காலநிலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததால், கடல் அடித்து செல்ல தொடங்கியது. படகுக்குள் இருந்தவர்கள் பலத்த முயற்சி எடுக்கிறார்கள். கரிய வேங்கைகள் தங்கள் படகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படாத பாடு படுகிறார்கள். ஆனால் எதுவுமே கைக்குள் இல்லை. இயந்திரத்தின் இயக்கம் நின்று விட்டது. அதை திருத்தி மறுபடியும் இயங்க வைக்க கடும் முயற்சி எடுத்த அந்த அணிப் போராளிகள் தோற்றுப் போகிறார்கள். அலையின் போக்குக்கு செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. தங்கள் கட்டளை செயலகத்துடனான தொடர்பை துண்டிக்காமல் தமது நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். படகிற்கு பொறுப்பாளன் ஆற்றலோன் நடக்கும் நிலைப்பாட்டை கட்டளை செயலகத்துக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறான். கட்டளைச் செயலகம் உடனடியாக அணியில் இருக்கும் படகுப் பொறுப்பாளர் ஆற்றலோன் மற்றும் படகு இயந்திரவியலாளர் அன்பனுடன் தொலைத்தொடர்பாளர் பொதிகைத்தேவனை படகில் நிறுத்தி ஏனைய போராளிகளை உடனடியாக ரோளருடன் இணைக்கப்பட்டிருந்த சிறு படகு மூலமாக தளம் திரும்புமாறு கட்டளை வழங்குகிறது. அவர்கள் தங்கள் தோழர்களை விட்டு தளத்துக்கு சென்று விட சிறு படகில் ஏறுகிறார்கள் ஏனைய அறுவர் கொண்ட அணி. அந்த சிறு படகில் இணைக்கப்பட்டிருந்த இயந்திரத்தால் ரோளரை கட்டி இழுக்க முடியாது. அதனால் அந்த அணி மூன்று கரும்புலி வீரர்களை விட்டு பிரிந்து விடுகிறது. ரோளர் படகு கடல்நீரால் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கடல் கட்டுப்படுத்த தொடங்கியது. அந்த மன்னார் கடற்பரப்பு தன் மடி தவழ்ந்த தன் குழந்தைகளை யாழ்ப்பாண கடலில் தொலைக்கப் போவது தெரியாமல் இழுத்து செல்கிறது. “அண்ண எதாவது ஒழுங்கு இருக்கா…? ” அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கட்டளை செயலகத்தில் இருந்து அவர்களுக்கான உதவிப்படகு அனுப்பப்படுகிறது. நாச்சிக்குடாவில் இருந்து சென்ற உதவிப்படகு வானலை மாற்றத்தில் சிக்கி அருகில் செல்லமுடியாமல் தளம் திரும்புகிறது. மீண்டும் மீண்டும் எடுத்த முயற்சிகள் காலநிலையால் முடக்கப்பட்டு விட பொதிகைத்தேவனுடன் ஆற்றலோனையும், அன்பனையும் சுமந்த படகு அலையின் போக்கிற்கு சென்று கொண்டிருக்கிறது. பலமான காற்று, அடித்தெழும்பும் பலத்த அலை இவற்றுக்குடையே இயந்திரம் இயங்காது நின்றுவிட அந்த கரிய புலிகளை சுமந்த படகு நீரோட்டத்தில் இழுத்து செல்லப்படுகிறது. ஆற்றலோன் அன்பனை இயந்திரத்தின் நிலையை கேட்கிறான் ஆனால் அன்பனின் இயந்திரவியல் அறிவு கூட அன்று கை கொடுக்கவில்லை. அவன் முயன்று கொண்டே இருக்கிறான். ஆற்றலோன் கட்டளைச் செயலகத்துடனான தொடர்பில் நிலைமைகளை விளக்குகிறான். “அண்ண எங்களுக்கு இயந்திரத்துக்கான பொருட்கள் வேணும் இல்லை என்றால் இயந்திரம் வேலைசெய்யுறது கடினம்”. “ஓம் விளங்குது உங்களுக்கான சாமான ஏத்தி கொண்டு வருகினம் வேகமா கிடைப்பினம். ” அதுவரை சமாளியுங்கோ. கட்டளைச் செயலகம் அறிவிக்கிறது. நெடுந்தீவு கடற்பகுதி சில மணி நேரங்களில் அந்த படகை தன் அலைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நெடுந்தீவின் சிங்கள கடற்படை அவர்களை வழி மறிக்கிறது. நிலைமை புரிந்து கட்டளையகத்துக்கு தகவல் அனுப்புகிறார்கள் புலிகள். நிலைமை சிக்கலாகி விட்டதை உணர்கிறது கட்டளைசெயலகம். தமிழீழத் தேசிய தலைவருக்கு செய்தி அனுப்பப்படுகிறது. அவரிடமிருந்து அரசியல்துறை ஊடாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் கவனத்துக்கு அந்த செய்தி செல்கிறது. உடனடியாக சிங்களத்தின் முற்றுகைக்குள் தனித்து ஆயுதங்கள் அற்ற நிலையில் இருக்கும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டப்படுகிறது. ஆனால் அதற்கிடையில் இவர்களை சூழ்ந்த இரு டோறா படகில் ஒன்று தளம் திரும்ப மற்றையது இவர்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. கட்டளைப்பீடத்தில் இருந்த பொறுப்பாளர் கொதித்து போகிறார். “இவனுக்கு இதுவே வேலையா போச்சு. ” கோவத்தில் எழுகிறார் அவர். காரணம், கடந்திருந்த முதல் வாரமும் மீன் பிடித்துக் கொண்டிருந்த இதே போராளிகளை சூழ்ந்த கடற்படை அவர்களை கைது செய்ய முனைந்ததும், போராளிகள் அவர்கள் நின்ற இடத்தில் இருந்து மேலாக படகை செலுத்தி இரணைதீவு பகுதிக்கால் தளம் திரும்பியதும் நடந்து முடிந்த நிகழ்வு. இன்று மீண்டும் கடற்புலிகளின் படகை கடற்படை மறித்து அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்ல முனைகிறது. “அவனின் நோக்கம் எங்கள கைது செய்யுறது தான்” ஆற்றலோன் செய்தி அனுப்புகிறான். சென்றிருந்த மறு டோரா திரும்பி வர அதில் இருந்து போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் தமது அடையாளத்தை காட்டி படகை நெருங்குகிறார்கள். போராளிகளுக்கு கட்டளைப்பணியகத்தில் இருந்து கட்டளை வருகிறது “அவர்களை சோதனையிட அனுமதியுங்கள்”. வந்த கண்காணிப்புக்குழு படகினுள் சென்று தேடி “எந்த வெடி பொருட்களோ ஆயுத தளபாடங்களோ இல்லாத நிராயுதபாணிகள் ” என்று சிங்களத்துக்கு தெரிவிக்கிறார்கள். ஆனால் அதை சிங்களம் ஏற்க மறுத்து படகை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்ல திட்டமிடுகிறது. அதற்கு புலிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள். அந்த காலம் போர்நிறுத்தம் என்ற பெயரில் புலிகளின் ஆயுதங்கள் இடைக்கால மௌனிப்பை செய்திருந்தை இந்த உலகமே அறியும். எதிரியையும் எங்களையும் கண்காணிக்க வேண்டும் என்ற போர்வையில் நோர்வே தலமையிலான கண்காணிப்பு குழு எங்கள் தேசத்தின் பாகங்கள் எங்கும் பரவி இருந்தது. அவர்கள் எங்கள் போர்நிறுத்த மீறல்களை கண்காணித்தார்களோ இல்லையோ எங்கள் நடவடிக்கைகளை, எம் வியூகங்களை கவனிக்க தவறவில்லை. எங்களின் இருப்பிடங்கள், நாளாந்த பயிற்சி மற்றும் அரசியல் நகர்வுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறவில்லை. எங்கள் போராளிகளின் ஒவ்வொரு அசைவையும் தமது தலைமைக்கு தெரியப்படுத்தாமல் இருக்கவில்லை. இது நியம் என்பதை நாம் பிந்திய காலங்களில் உணர்ந்து கொண்டோம். யுத்த நிறுத்தம் என்ற பெயரில் எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சர்வதேச பார்வை வீச்சானது எம்மை அடக்கவும், அழிக்கவும் வழி ஏற்படுத்தி இருந்தது என்பது நியமே. இதை எல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போலவே நாம் உணர்ந்து கொண்டோம். சண்டையின் உச்சத்தை நாம் எட்டிப்பிடித்து இருந்த போது. எங்கே புலிகள் வெற்றி பெற்று தமிழீழத்தை அமைத்து விடுவார்களோ என்று அஞ்சிய சர்வதேசத்தின் கோழைத்தனமான கோரிக்கையும் திட்டமிட்ட ஏற்பாடும் தான் இந்த போர்நிறுத்த காலம். எங்கள் இராணுவ நிலைகளை, அரசியல் நிலைகளை எல்லாம் தங்கள் புலனாய்வுக் கண்களுக்குள் கொண்டு வந்திருந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களுக்கு இந்த காலம் சரியான தருணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. அவர்கள் எம்மை அழிப்பதற்கான தகவல்களை பெற, எங்கள் பலம், பலவீனம் என்பவற்றை இனங்காண, திட்டமிட, செயற்படுத்த என அத்தனைத்தைக்கும் குறிப்பிட்ட இந்த காலத்தை பயன்படுத்த தவறவில்லை. ஆயிரக்கணக்கான போராளிகள் நிராயுதபாணிகளாக அரசியல் வேலைக்காக இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நின்றிருந்தார்கள். இங்கே ஆழ் கடலில் மூன்று உயிராயுதங்கள் நிராயுதபாணியாக நின்றிருந்தார்கள். இந்த நிலையில் எமக்கு பல சிக்கல்கள் உருவாகி கொண்டிருந்தது. மூன்று கரும்புலிகளை ஆழ்கடலில் எதிரிப்படை முற்றுகைக்குள் நிராயுதபாணிகளாக வைத்திருக்கிறார்கள். அவர்களை சூழ்ந்து கைது செய்ய சிங்கள கடற்படை முயன்று கொண்டிருக்கிறார்கள். சுற்றி சுற்றி வந்து உடனடியாக படகில் இருந்து வெளியேறி தமது படகிற்கு வருமாறு பணிக்கிறார்கள். முடியாது என்று புலிகள் மறுக்கின்றார்கள். நாம் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலால் அடித்து வரப்படுவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் காற்றோடு செல்கிறது. சிங்களப்படை கட்டாயப்படுத்துகிறது. நாங்கள் உங்களை சோதனையிட வேண்டும் அதனால் மறுக்காமல் வந்து எங்கள் படகில் ஏறுங்கள் என்கிறது சிங்களப்படை. ஆனால் கிட்ட போக பயத்தோடு சுற்றி சுற்றி வருகிறது. போராளிகளின் படகிற்குள் வெடி பொருட்கள் இருக்கலாம் அதை வெடிக்கவைத்து தம்மையும் அழிக்கலாம் என்ற நினைப்பு அவர்களை பயம் கொள்ள வைத்திருந்தது. ஆனால் அவர்களை சோதனையிட்ட கண்காணிப்புக்குழு எதுவும் இல்லை என்கிறது. கரும்புலிகளால் அவர்களுக்கு நிலமை விளக்கப்பட்டு அது சிங்களத்துக்கு எடுத்துரைக்கப்படாலும் சிங்களம் ஏற்றுக்கொள்ளாது போராளிகளின் படகையும் அவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது. “நாங்கள் படகை சோதனை செய்துவிட்டோம் எதுவும் இல்லை என்று கூறிய கண்காணிப்புக்குழுவை, படகை தங்களின் முகாமுக்கு இழுத்து வந்து அங்கு வைத்து சோதனையிடுமாறு சிங்களம் கூற கண்காணிப்புக்குழு மௌனித்து நிக்கிறது. போராளிகளின் நிலை புரிந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய போர்நிறுத்த கண்காணிப்புகுழு கையை விரிக்கும் நிலை. எங்கள் சமாதான செயலகம் தொடர்ந்து முயற்சி எடுத்து கொண்டிருந்தாலும் போர்நிறுத்த கண்காணிப்பு குழு மௌனத்தோடுதான் இருக்கிறது. சமாதான செயலகம் ஜனாதிபதி செயலகத்துடனான தொடர்பை ஏற்படுத்தி நிலைமைகளை விளக்க முற்பட்ட போதும், உரிய அதிகாரி இப்போது இல்லை என்று தொடர்பு துண்டிக்கப்பட்டு திட்டமிட்ட ஒரு யுத்தநிறுத்த மீறல் அரங்கேற்றப்படுகிறது. போராளிகளை முற்றுகைக்குள் இறுக்கிக் கொண்டிருந்த சிங்களம் அவர்களை நகர விடாது துப்பாக்கிகளை குறிவைக்க, கரும்புலிப்படகில் இருந்து ஒரு செய்தி கட்டளை நிலையத்திற்கு வருகிறது. “அண்ண நீங்க அனுப்பின வெள்ளையண்ணையாக்கள் கூட மௌனமா இருக்கினம் எங்கள அவன் தன்ட வீட்ட கூட்டி போக பாக்கிறான். புலிகளின் படகிற்குள் இருந்த கண்காணிப்புக்குழுவை தன் படகிற்குள் ஏற்றி விட்டு போடப்பட்டிருந்த நங்கூரத்தை வெட்டி, படகைக் கட்டி இழுத்து செல்ல கடற்படை முனைப்பு காட்டி கண்காணிப்பு குழுவை ஏற்றுவதற்காக டோராவை ரோளரோடு அணைக்க முயலும் அதே நேரம் தங்கள் கள்ளத்தனத்தை அரங்கேற்ற முயல்கிறது கடற்படை. ஆனால் போராளிகளோ உறுதியாக இருக்கிறார்கள். கண்காணிப்பு குழுவை அனுப்பாது தடுத்து வைக்கிறார்கள். நாங்கள் மூன்று கரும்புலிகளை இழக்கப் போகிறோம் என்ற உண்மை உணரப்பட்டது. “அண்ண முடிவை சொல்லுங்கோ நாங்கள் படகையும் எரிச்சு குப்பி அடிக்கிறம். ” மறுமுனையில் கட்டளை நிலையத்தில் இருந்த விழிகள் கலங்கத் தொடங்கின நிலைமைகள் தலைமைக்கு தெரியப்படுத்தப்படுகிறது. கடற்புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் யாவும் இந்த சம்பவத்தை மட்டுமே கூறுகிறது. ஒருவன் விம்மலுடன் நடப்பதை கேட்டுக் கொண்டிருக்கிறான். தன் கண்முன்னே தனது தம்பியின் படகு இராணுவ முற்றுகைக்குள் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான் ” அண்ண பொதிகைக்கு ஒன்றும் நடக்காது கவலைப்படாதீங்க.” அருகிலிருந்தவன் தேற்றுகிறான். அவனுக்கு தன் தம்பியின் முடிவு தெரிந்து விட்டது. அவனின் துணிவும் அடிபணியாத வீரமும் அவனை கொடையாளனாக்க தயங்காது என்பதை கண்பார்வை தூரத்தில் நின்ற படகில் இருந்த கடற்புலி போராளி அறிவான். அவன் பொதிகைத்தேவனின் மூத்த சகோதரனாக இருந்தாலும் ஒரே படையணியில் இருந்த போராளியாவான். பொதிகைத்தேவன் நஞ்சுக்குப்பிக்கும் சர்வதேசத்தின் வஞ்சகத்துக்கும் சிங்களத்தின் கொடுங்கோலுக்கும் சாவடைவதை அவன் விரும்பவில்லை தம்பி கரும்புலி என்பதை அறிந்தே இருந்தான். அடுத்த கட்ட ஈழப்போர் ஆரம்பித்தால் இலக்கு ஒன்றை தகர்த்து சாதிக்க வேண்டியவன் நிராயுதபாணியாக சாவதை அந்த அண்ணனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெடுந்தீவு கடல் தன்னுள் மூன்று வீரர்களை சாம்பலாக கரைத்துக் கொள்ளப் போவது தெரியாமலே மூசிக் கொண்டு கிடந்தது. கண்காணிப்புக்குழு அமைதி காத்தது. நிலவரம் கட்டளை நிலையத்துக்கு தெரியப்படுத்தப்படுகிறது. “சரணடைய மாட்டோம்” மூன்று கரிய புலிகளும் தங்கள் தெளிவான முடிவை அறிவிக்கிறார்கள். பல முனை முயற்சிகள் தோற்றுப் போகின்றன. “சண்டையை தொடங்கி மூவரையும் எடுத்திடலாமா? ” தலைமையிடம் சண்டைக்கான அனுமதி கோருகிறார் சிறப்புத்தளபதி. சண்டைப் படகுகள் , கரும்புலிப்படகுகள் தயாராகி கட்டளைக்காக காத்து கிடக்கிறது மூன்று கரும்புலிகளுக்கு எதாவது நடந்தால் அங்கே சுற்றி நின்ற அத்தனை டோராக்களும் மூழ்கடிக்கும் வேகத்தோடும் துணிவோடும் சபதத்தோடும் கடற்புலிகளின் அணிகள் தளத்தில் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன. அனுமதி மறுக்கப்படுகிறது. “அவன் யுத்தநிறுத்தத்தை மீறுவதற்காக நாமும் மீறல் ஆகாது என்று தலமைச்செயலகத்தில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. – [ ] 1500 க்கு மேற்பட்ட அரசியல் போராளிகள் நிராயுதப்பாணிகளாக சிங்களத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அவர்களை எந்த முன்னறிவித்தலும் இன்றி சிங்களம் கைது செய்யலாம் அல்லது ஆயுதமின்றி நிராயுதமாக நிற்பவர்கள் மீது சிங்களத்தின் ஆயுதங்கள் தாக்குதல் நடத்தலாம். – [ ] அதேநேரம் சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் குற்றம் செய்த சிங்களம் தப்பித்து கொள்ளும் புலிகள் தான் சண்டையை தொடக்கினார்கள். என்ற நிலை உருவாகும். – [ ] பயங்கரவாதிகள் சண்டையை தொடங்கி சமாதானத்தை குழப்பி விட்டார்கள்” மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பி விட்டார்கள் என்று சிங்களம் பரப்புரை செய்து எந்த மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய துணிந்து நடுக்கடலில் நிற்கிறார்களோ அவர்களின் தியாகம் வீணடிக்கப்படும். இவ்வாறான காரணங்களோடு பல காரணங்கள் இருக்க தலைமையால் சண்டைக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. – [ ] “நவம்பர். நீங்கள் யார் என்று எல்லாருக்கும் காட்டுங்கோ” கட்டளைப்பணியகம் ஆற்றலோனுக்கு கட்டளை குடுக்க. அதற்காக தயாராகினார்கள். அந்த கரிய புலிகள்.ஆற்றலோனின் குரல் மாறி பொதிகைத்தேவனின் குரல் காற்றில் வருகிறது. அங்கு நடப்பவற்றை பொதிகைத்தேவன் கூறுகிறான் நாங்கள் வலையை உடலில சுற்றிவிட்டு பெற்றோல் ஊற்றி கொழுத்தப்போறம். படகில் தண்ணி ஏறினால் வெளியேற்ற என்று பயன்படுத்தப்படும் நீர் இறைக்கும் இயந்திரத்துக்கான பெற்றோல் 5 லீட்டர் வழமையாக படகில் இருக்கும். அதையே ஆயுதமாக்கினர் புலிகள். “அண்ண… அன்பன் இப்ப வலைய உடம்பில சுற்றி பெற்றோல ஊற்றி கொழுத்துறான்…” பொதிகைத்தேவன் கட்டளை செயலகத்துக்கு நிலைமைகளை கூறுகிறான். தீ மூண்ட சத்தம் மட்டுமே வருகிறது. இப்ப ஆற்றலோன் அன்பனோட சேர்ந்து அந்த வலைய உடம்பில சுத்தி எரியுறான். சிறிய இடைவெளியில் இப்ப நானும் வலைய சுற்றிவிட்டேன் பெற்றோல ஊற்றி கொழுத்துறன். நாங்கள் யார் என்று காட்டி செல்லுறம் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” தொலைத்தொடர்புக்கருவி இயங்கிக் கொண்டே இருக்கிறது. எந்த சலனமும் அற்று கரிய புலிகள் தீயோடு எரியத் தொடங்குகிறார்கள். படகு தீப்பிடிக்கிறது. சுவாலை அந்த கடலையே சூடாக்கும் வெப்பத்தோடு எரிகிறது. கடற்கரும்புலிகளான லெப்டினன் கேணல் ஆற்றலோன்/ சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் ஆகிய வேங்கைகளை தீ உண்டு கொண்டிருந்தது. எந்த சலனமும் இன்றி அந்த கரிய வேங்கைகள் சர்வதேசத்துக்கு புலிகளின் வீரத்தை சொல்லி தீயோடு சங்கமிக்கத் தொடங்கினார்கள். வெடி பொருள் இன்றியும் புலிகள் சாதிப்பார்கள் என்று மூன்று கரும்புலிகளும் கூறி சென்று விட்டார்கள். எந்த மக்களை நேசித்தார்களோ, எந்த மண்ணை காதலித்தார்களோ அதற்காக தங்கள் உயிரை அடிபணியாத வீரத்தை காட்டி தீயோடு எரிந்து போனார்கள். – [ ] துப்பாக்கி முனையை கரியபுலிகளுக்கு எதிராக நிமிர்த்திப்பிடித்த எதிரியின் நெஞ்சம் வெடித்திருக்கும். வான் எழுந்த வெப்பக்காற்றின் சூட்டை தாங்க முடியாது திகைத்து நின்றது கண்காணிப்புக்குழு. அவர்கள் மேலெழுந்த கரிய புகையை வெறித்து கொண்டிருந்தார்கள். பொதிகையும் ஆற்றலோனும் அன்பனும் விடுதலைப்புலிகளின் உறுதியை தற்கொடையை சர்வதேசத்துக்கு மீண்டும் நிலைப்படுத்தினார்கள். பணிந்திடாத வீர தலைவனின் தம்பிகள் அல்லவா? மூத்த தளபதி கேணல் கிட்டுவின் வாரிசுகளல்லவா? குப்பி கடித்து வீரம் நிலைநாட்டிய விக்டரின் சேனையல்லவா? அஞ்சாத துணிவோடு தாயக கடலில் தணலுக்கிடையில் கருகி போனார்கள். சர்வதேசம் புரிந்திருக்கும் புலி வீரத்தை. சிங்களம் திகைத்திருக்கும் கரும்புலிகளின் தீரத்தினால். ஆனால் எங்கள் விழிகள் மட்டும் அவர்களின் தியாகத்தை எண்ணி சுடுநீரை சொரிந்து கொண்டது. அவர்கள் சென்று விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்தவனின் இறுதிக் குரலை வோக்கியில் கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் அவன் எரிவதை கண்ணால் பார்த்துக்கொண்டு நின்ற கொடுமையான வலி எங்கள் வரலாற்றில் பதிவாகியது ஆனால் அவன் தளரவில்லை. போராளியின் விழிகள் கலங்கவில்லை , கரங்கள் உறுதி கொள்கிறது. துப்பாக்கியை இறுக பற்றிக் கொள்கிறது. ******************************** கரும்புலிகள் நாள் சிறப்பு பதிவு… கவிமகன்.இ 05.07.2016
  12. எழுத்தாளர்: தெரியவில்லை 6.2.2003 அன்று இரவு மன்னார் கிராஞ்சி கடற்கரை கடற்புலிகளின் முகாமில் இருந்து மீன்பிடி வள்ளத்தில் பயணம் தொடங்கியது. 4 கரும்புலிகளின் இருந்தனர். நான் மட்டும் கடற்புலி போராளி. படகின் மேல்தளத்தில் நான் தூங்கி கொண்டு இருந்தேன். எனக்கு உரிய பணி வள்ளத்தில் பிரயாணம் மட்டுமே. 4 கடற்கரும்புலிகள் தான் வள்ளத்தின் மாலுமிகள். நான் ஒரு பிரயாணி. 7.02.2003 அதிகாலை 3 மணிக்கு நெடுந்தீவை கடக்கும் போது இயந்திரம் பழுது படுகிறது. நீண்ட முயற்சி செய்தும் இயந்திர பழுதை திருத்த முடியவில்லை. இலங்கை கடற்படை டோரா படகு எம் வள்ளத்தை அவதானித்தது. அருகில் வந்தது. இந்தக் காலத்தில், மன்னாரில் லெப்டினன் கேணல் பகலவன் அண்ணா பொறுப்பாளர். அடுத்த நிலையில் சுடரொளி அண்ணா இருந்தார். இன்று லண்டனில் இருக்கிறார். உடன் பகலவன் அண்ணா, சுடரொளி அண்ணா, சூசை அண்ணா தொடர்பில் வந்தார்கள். நிலமை விளங்கப்படுத்தப்பட்டது. சூசை அண்ணா, சுடரொளி அண்ணாவிற்கு கட்டளை இட்டார், கடற்புலிகளின் முகாமில் இருக்கும் வேகமான படகில் சென்று நிலமையை நேரில் பார்க்கச்சொல்லி. நிலமை இப்படி இருக்க இலங்கை டோரா எம்மை நெருங்கியது. அச்சம் இன்றி எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி நாம் ஐவரும் இருந்தோம். இலங்கை கடற்படை டோரா படகு எம்மீது மோதும் அளவிற்கு வந்தது. எம் வள்ளத்தை அணைக்க தயார் ஆனது. இந்த நிலையில் சுடரொளி அண்ணாவின் படகும் எம்மை நெருங்கியது. உடனே கடற்படைக்கு சொன்னோம், "நீங்கள் எம்மை பரிசோதிக்க முடியாது. நாங்கள் கடற்புலிகள். மீன்பிடிக்க சென்றோம். இயந்திர கோளாறு காரணமாக நிற்கிறோம். எம்மை கரைக்கு கொண்டு செல்ல எமது படகு வந்து விட்டது" என்று. ஆயினும் இலங்கை கடற்படை எம் வள்ளத்தை வலுக்கட்டாயமாக தங்களின் முகாமுக்கு கட்டி இழுக்க தொடங்கியது. நிலமை விபரீதம் ஆனது. இதை அவதானித்து கொண்டு இருந்த சூசை அண்ணா உடனே உத்தரவு இட்டார், என்னை சுடரொளி அண்ணா இருக்கும் படகில் ஏறு என்றார். நான் ஏறினேன். என்னோடு இன்னொரு கரும்புலி வீரனையும் இணைத்துக்கொண்டு வள்ளத்தை விட்டு சுடரொளி அண்ணா இருக்கும் படகில் ஏறினேன். அடுத்து சூசை அண்ணா இலங்கை கடற்படைக்கு கூறினார், "எமது வள்ளத்தை விட்டு விடுங்கள். இப்போ போர் நிறுத்த காலம். நாங்கள் போர் புரிய வரவில்லை" என்று. பலதடவை கூறியும் இலங்கை கடற்படை கேட்கவில்லை. மீன்பிடி வள்ளத்தில் இருக்கும் கரும்புலிகள் நாம், பகலவன் அண்ணா, சூசை அண்ணா அனைவரும் ஒரே அலைவரிசையில் வந்தோம், அனைவரின் உரையாடலையும் எல்லோரும் கேட்டு கொண்டு இருந்தோம். எமக்கு நிலமை புரிந்து விட்டது. அந்த நேரத்தில் ஒரு அமைதி. கரும்புலிகள் மூவரும் ஒரே இடத்தில் இருந்து மூவரும் தங்கள் கைகளை பற்றி பிடித்து கொண்டு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கூறி வெடிமருந்தை வெடிக்க வைக்க தீயானது கடலில் மூண்டது. கூட இருந்தவர்கள் கடலினில் கரைந்து போக என் இதயம் வலியின் வேதனையை அனுபவித்தது. அதி வேகமாக கரைவந்து சேர்ந்தோம். என் சுவாசம் கூட அழுதது.
  13. எழுத்தாளர்: தெரியவில்லை புலிகள் அமைப்பில் இருந்தால் புலியாக இருத்தல் வேண்டும். எனது நீண்ட பயணத்தில் பல ஆயிரம் போராளிகளின் பல சாதனைகள். அதில் தான் புலிகள் இயக்கம் பாரிய வெற்றியை தன்னகத்தே கொண்டு இருந்தது. நானே பல சாதனைகளுக்கு சொந்தக்காரன். எனக்கு புலிகள் பற்றி வியாக்கியானம் கூறக்கூடாது. நாம் தாம் புலிகள். எம்மோடு நின்ற ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தான் புலிகள். நான் ஒரு கணப்பொழுதில் சாதித்து இவை: 2001 ஆண்டு இந்தியா-அவுஸ்டேலியா கிரிகெட் விளையாட்டு சென்னையில் நடை பெற்றுக்கொண்டு இருந்த நேரம் புலிகளின் இரண்டு கப்பல்கள் சென்னையில் இருந்து 70 கடல்மைல் தூரத்தில் நின்று கொண்டு இருந்தது. மஞ்சோசி என்ற கப்பலில் இருந்து கொய் என்ற கப்பலுக்கு பொருட்களை மாற்றி ஏற்றிக்கொண்டு இருந்தோம். கொய் கப்பலுக்கு கப்டனாக ரஞ்சன் அண்ணாவும் மஞ்சோசிக்கு கப்பலுக்கு ரவிசங்கர் கப்டனாகவும் இருந்தனர். அப்போது தான் ரவிசங்கர் கப்டனுக்கு சேவையை பாராட்டி ஓய்வு வழங்க தலைவன் முடிவு செய்கின்றார். சாளையில் பொறுப்பாளராக இருந்த ரஞ்சன் அண்ணாவை கப்பலை பொறுப்பெடுக்க தலைவன் கட்டளை இட ரவிசங்கர் கப்டனுக்கு ஓய்வுக்காக கப்பல் மாறுகின்றார். மஞ்சோசி கப்பலில் இருந்து பொருட்களை இறக்கி கொண்டு இருந்த நேரம் நான் கப்பல் தெலைக்காட்சி அன்ரனாவை திருப்பினேன். தொலைகாட்சி படம் ஏதும் இழுக்கின்றனவா என்று பார்க்கவே அவ்வாறு செய்தேன். அந்நேரத்தில் இந்திய தூர்தர்சன் தெலைக்காட்சியில இந்திய-அவுஸ்ரெலிய கிரிக்கெட் விளையாட்டு போய்கொண்டு இருந்தது. நான் உடனே ரவிசங்கர் கப்டனுக்கு அதைக் கூறினேன். அவர் மகிழ்ந்தார். அடுத்த கப்பலான கொய்யில் கப்டன் ரஞ்சன் அண்ணாவுக்கும் கூறினேன். பொருட்கள் அனைத்தும் மாற்றப்பட்டது. இரு கப்பல்களும் இணைந்தே இருந்தது. கடல் அமைதியாக இருந்தது. அனைவரும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினார்கள். சில மணி நேரத்தில் இந்திய கடலோர காவற்படையின் விமானம் இரண்டு எமது கப்பலை நல்ல பதிவாகவே நெருங்கியது. எமக்கு என்ன செய்வதெற்னு என்று புரியவில்லை. உடனே இரண்டு கப்பல்களின் இயந்திரத்தையும் இயங்க வைத்தோம். இரண்டு கப்பல்களும் வேறு வேறு திசைக்கு ஓட தொடங்கிய போது மஞ்சோசி கப்பலை ரவிரங்கர் கப்டன் வேகத்தை குறைத்து ஓடினார். கொய் கப்பலி ஆயுதங்கள் அதிகம் என்பதலும் ஆட்லறியும் உள்ளதாலும் வெகமாக ஓடவிட்டு மஞ்சோசி கப்பல் மெதுவாக ஓடிக்கொண்டு இருந்தது. அந்நேரம் இந்திய கடற்படை கப்பல் ஒன்று எம்மை நெருங்கியது. நாமும் திசை மாற்றாமல் சிங்கபூர் போவது போல் சென்று கொண்டு இருந்தோம். 2 மணிநேரம் எமக்கு பின்னால் பின் தொடர்ந்த இந்திய கடற்படை கப்பல் மொதுவாக எம்மை விலத்தி சென்னை துறைமுகத்திற்கு திருப்பிக்கொண்டு சென்றது. அந்த நேரத்தில் இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு அறிவிக்கின்றது, சந்தேகத்திற்கு இடமான பச்சை நிற கப்பல் முல்லைதீவுக்கு 300 கடல்மை தூரத்தில் செல்கின்றது என்று. இலங்கை கடற்படை உடனே எம்மை நோக்கி வரத்தொடங்கியது. சாளையில் இருந்த தொலைதொடர்பு ஒட்டுக்கேட்கும் பிரிவு இந்த செய்தியை சூசை அண்ணாவுக்கு கூற, சூசை அண்ணா நிலமையை தலைவனிடம் கூற, தலைவின் கட்டளை வருகின்றது கப்பலின் நிறத்தை மாற்றச்சொல்லி. ரவிசங்கர் கப்டன் எம்மை அழைத்து விசயத்தை கூறினார். தலைவன் கப்பலின் நிறத்தை மாற்ற நினைத்ததை நானும் லெப்டினன் கேணல் செம்பகச்செல்வனும் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினோம். கயிற்றில் பலகை கட்டி கப்பலின் வெளிப்புறத்திற்கு இறங்கினோம். சவால் நிறைந்தது. கப்பல் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது. கடல் அலைகள் மோதுகின்றது. பயங்கரமான நிலமை. மனதில் உறுதி எடுத்தோம். கப்பலில் குகா என்ற பொதுமகனும் வள்ளுவன், சகாதேவன் என்று சிலரும் இருந்தனர். அவர்கள் அனைவரும் நாங்கள் கப்பலில் வெளிப்புறத்தில் தொங்கிகொண்டு இருந்து கேட்கும் பொருட்களை எமக்கு தந்தனர். பெயின்ட்களை தருவார்கள், உணவு, தண்ணீர் என்று அனைத்தும் மரணத்தின் விழிம்பில் இருந்து குகா பலதடவை எம்மோடு இணைத்தார். நிறம் மாற்றினால் கப்பல் தப்பும் இல்லையேல் 12 பேர் வீரமரணம். அத்தோடு கப்பலில் இருந்த அனைத்து பொருட்களையும் புலிகள் இழப்பார்கள் என்ற நிலமை புரிந்தது. எப்படிப்பட்ட சாவல்! இந்த நிலையை மாற்ற எம்மிடம் கிறே நிறம் தான் அதிகமாக இருந்ததால் உடனே இருவரும் இணைந்து கப்பலின் நிறத்தை பல மணிநேர போராட்ரத்திற்கு மத்தியிலும் பல மணிநேர கடும் முயற்சியாலும் கப்பல் நித்தை மாற்றினோம். எம் இருவராலும் இயங்க முடியவில்லை. கப்பலின் நிறத்தை மாற்றும் வரை அதிக அளவான சக்தியுடன் இயங்கி கொண்டு இருந்த நாம் நிறத்தை மாற்றிய பின் எமது உடல் நிலை மேசமானது. ஒரு பெரும் கப்பலுக்கு நிறம் மாற்றுவது என்பது கற்பனையில் நடக்காது. ஆனால் நாங்கள் இருவர் நடத்தினோம். உடனே கப்பலின் மேல் தளத்திற்கு நாம் இருந்த பலகையை தூக்கியே எடுத்தார்கள். நாம் கப்பல் தளத்திலே வீழ்ந்து படுத்து இருந்தோம். சில மணி நேரத்தில் இலங்கை கடற்படை நெருங்கியது. எம்மை அழைத்தது. ரவிசங்கர் கப்டன் ஆங்கில புலமை மற்றும் கடல் அனுபவம் அதிகம் கொண்டவர் என்பதால் இலங்கை கடற்படைக்கு சவால் விடும் விதமாக பேசினார். எமது கப்பலில் உடனே நாம் இந்தோனேசிய கொடி கட்டினோம். சில மணிநேரம் எம்மை பின் தொடர்ந்த இலங்கை கடற்படை எமது கப்பலை நிறுத்தச்சொல்லி கட்டளையிட ரவிசங்கர் கப்டன் மறுத்துவிட்டு எமது பாதையில் சென்றார். நாம் யாரும் கப்பலுக்கு வெளியில் வரவே இல்லை. அறைகளின் உள்ளே இருந்தோம். இலங்கை கடற்படை தொலை நோக்கி வைத்து எமது கப்பலை பார்கின்றார்கள். கப்பலில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் இல்லை என்று முடிவு செய்து இலங்கை கடற்படை திரும்பிக்கொண்டு திருகோணமலை துறைமுகம் சென்றது. நாம் பூமி பந்தின் மத்திய பிரதேசத்தை தாண்டிச் சென்று எமது கப்பலை நிறுத்தி ஓய்வு எடுத்து கொண்டோம். தலைவனின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த தருணங்களின் இதுவும் ஒன்று. தலைவன் கப்பலின் நிறத்தை மாற்ற சொன்னதால் நான் இன்று வரலாறு கூறுகின்றேன். இன்று அந்த கப்பலும் இல்லை, கூட இருந்த நண்பன் செம்பகச்செல்வனும் இல்லை. வள்ளுவன், குகா, சகாதேவன் ரவிசங்கர் கப்டன் என்று பலர் இருக்கின்றோம். அதை சில மணிநேரத்தில் மாற்றியோர்; நேரியன் மற்றும் செம்பகச்செல்வன் என்ற இரு கடற்புலிகள் ஆவர்.
  14. எழுத்தாளர்: தெரியவில்லை 2002.06.15 திகதி அன்று செய்சின் கப்பல் சுமத்திரா தீவிற்கு அண்மையில் பூமப்பந்தின் நடுவில் 0 பாகையில் நின்று கொண்டு இருந்தோம். கப்பல் கப்டன் எஸ்.கே இருந்தார். தலைமை இயந்திர பொறிஞராக நண்பன் இளங்கதிர் இருந்தான். இளங்கதிர் இயந்திர பகுதியில் கப்பலின் கீழ் பகுதியில் கழிவு நீர் கழிவு ஒயில் அகற்றி கொண்டு இருந்த நேரம் கப்பலில் ஓட்டை ஒன்று திடீரென வந்து விட்டது. கப்பலுக்குள் கடல் நீர் எங்களை தூக்கி எறியும் வேகத்தில் கப்பலுக்குள் ஏறியது. இயந்திரத்தின் கீழ் தளம் வரை வலு வேகமாக உள் நுழைந்தது. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் நானும் நண்பன் ஜெனர்தனனும் உள்ளே இறங்கினோம். தண்ணீர் வேகம் எங்களை தாக்கியது. சிறிய அளவிலான துவாரத்தில் புகுந்து இயந்திர அடிப்பகுதிக்கு சென்று அங்கே துவாரம் வீழ்ந்த இடத்தை இருவரும் இணைந்து கையில் கொண்டு சென்ற சிறிய துணியை வைத்து இருவரும் அழுத்தி பிடிப்பது என்ற நோக்கம். தண்ணீர் துவாரத்தை முதல் நிறுத்துவோம் அதன் பின் கப்பலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றுவோம் என்பது திட்டம். நானும் நண்பனும் துவாரம் விழுந்த இடத்தை கடினமாக போராடி 20 நிமிடத்திற்குப் பின் சென்றடைந்தோம். துவாரத்தையும் அழுத்தி விட்டோம். கப்பலுக்குள் நீர் வரத்தை தடுத்து விட்டோம். இருந்தும் எங்கள் இருவரின் கைகளை கடல் நீர் தள்ளுகின்றது. எங்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலை. கைகள் எடுத்தால் மரணம் என்ற நிலையை உணர்ந்த நாம் இருவரும் உடல் வலிமையை மன வலிமையை அதிகரித்துக்கொண்டு கைகளை அசைக்காது இருந்தோம். எங்கள் தலை மட்டும் நீருக்கு வெளியில் இருந்தது. பல மணி போராட்டத்தின் பின் கப்பலுக்குள் இருந்த நீரை வெளியேற்றி விட்டார்கள். நாங்கள் இருவரும் நீரில் பல பணி நேரம் கைகள் அசைக்காமல் இருந்ததால் - அதே நேரம் நாம் எங்கள் சக்தியை தேவையில்லாமல் வெளியில் விடாமல் இருப்பதற்காக கதைத்துக்கொள்ளவும் இல்லை. எங்கள் சக்தியை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. நீரை வெளியேற்றிய பின் நண்பன் இளங்கதிர் இருவருக்கும் தேனீர் கொண்டு வந்து இருவருக்கும் பருக்கிவிட்டான். தேனீர் குடித்தவுடன் சிறிய உசாரானது. எமது கைகள் அசைக்கவே இல்லை. வெளியில் சென்றான் இளங்கதிர். எஸ்.கே உள்ளே வந்தார். நிலமையை பார்த்தார். எங்கள் இருவரின் நிலை எஸ்.கேயை கவலை கொள்ள வைத்தது. வெளியில் சென்ற எஸ்.கே இளங்கதிர் உடன் சில மணித்தியாலத்தில் இரண்டு கம்பிகள் ஒட்டிய தட்டை கொண்டு வந்து இரண்டு முனைக்கும் இறுக்க சொன்னார். எம் கைகள் எடுத்த உடனே நீர் பாயும். அந்த நேரத்தில் தகட்டை வைத்து அழுத்தி கம்பிகளால் இறுக்க வேண்டும். திட்டம் சரியாக இருந்தது. நாம் இருவரும் கைகளை நகர்தினோம். நீர் கப்பலுக்குள் பாய்ந்தது. எங்கள் கைகள் இயங்க மறுத்தது. நண்பன் இளங்கதிர் கடினமாக போராடிக்கொண்டு இருந்தான். நாங்களும் இயங்க மறுத்த கையை வாழ்வா சாவா என்ற கேள்வில் கைகளை இயக்கி இளங்கதிருக்கு உதவினோம். இரு தகட்டையும் இறுக்கி விட்டோம். உள்ளே வந்த நீரை வெளியேற்றி அந்த பகுதியேல்லாம் கடல் நீர் இல்லாமல் துடைத்து எடுத்து நன்னீர் போட்டு துடைத்தோம். எங்கள் உடல் கைகளை இயக்க மறுத்தது. எங்களை தூக்கி வெளியேற்றினார்கள், நண்பர்கள். கப்பலுக்கு மேல் தளத்தில் படுக்க வைத்தார்கள். சில மணி நேரத்தில் துவாரம் விழுந்த இடத்தை சுற்றி சீமெந்து போட்டு அந்த பகுதி அனைத்தும் அடைத்து விட்டார்கள். கப்பல் துவாரம் விழுந்த தகவல் கேபி அண்ணாவுக்கும் சூசை அண்ணாவுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருவரும் எங்கள் செய்தி என்ன என்று பார்த்து கொண்டு இருந்தார்கள். கப்பல் மீட்ட கதையை கப்பல் கப்டன் எஸ்.கே இருவருக்கும் கூறி மகிழ்ந்தார். கப்பலில் இருந்த அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் குதுகலித்து இருந்தார்கள். எம்மால் காக்கப்பட்ட கப்பல் இன்று அத்தனை வீரர்களுடனும் கடலில் கரைந்து விட்டது. வீரவணக்கம். கப்பல் வரலாறு தொடரும்…. https://yarl.com/forum3/uploads/monthly_2024_01/large.318825823_1305785940212303_5698621076466929847_n.jpg.f0cbfefa22b80cff84acd2df5afed95f.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.