Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. தரைப்புலிகளின் பயிற்சிப் பாசறை யாழில் 1993 'புட்டியில் அமர்ந்திருக்கும் போராளிகளைக் கவனிக்குக. அவர்கள் தலைக்கவசம் உட்பட பல காப்பு அங்கிகள் அணிந்திருக்கின்றனர், வெடிப்பினால் ஏற்படம் சிதறல்களில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள.'
  2. யாழ்ப்பாணத்தில் பயிற்சியின்போது 13 April 1995 'வானூர்தி எதிர்ப்புப் பயிற்சி ' 'பெண்போராளிகளின் கணையெக்கி அணி' பின்னேரத்தில் ஒரு இறங்குதுறையில் நடக்கின்றனர்
  3. 1993 கடற்புலி கடற்கலவரின் (sailors) அணிவகுப்பு முன்னால் ஆண்கள், பின்னால் பெண்கள் | துமுக்கி: கட்டைக்காட்டில் ஆசீர் சிறப்புத் தாக்குதலணியால் கைப்பற்றப்பட்ட எஃவ்.என். எஃவ்.என்.சி. - க்களோடு அணிநடை போடுகின்றனர். (இங்கிருந்து 200 FN FNC அள்ளப்பட்டது)
  4. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் (Charles Antony Special Regiment/ CASR) விழா ஒன்றில் தலைவர் மாமாவும் அதன் முன்னாள் சிறப்புக் கட்டளையாளர்களில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்த போது... பின்னால் படையணிப் போராளிகள் பலர் அமர்ந்திருக்கின்றனர்
  5. சுப்பர் சொனிக் வகுப்புப் படகு மட்டக்களப்பு 04/2004 கருணாவின் வஞ்சகக் கூத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.
  6. மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல் 1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய பாகத்தை திரு மனோகரன் கார்த்திக் வெளியிடவில்லை.
  7. பிற்சேர்க்கை: பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள் 'தலைவர் மாமாவும் சாள்ஸ் (மாவீரர்) அவர்களும் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர்'
  8. யாழ் | 05/1995
  9. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/07/1990 பக்கம்: 4 கல்முனையில் தமிழர்கள் கொலை; ரஞ்சன் ஒப்புக்கொண்டார் கொழும்பு, ஜூலை 13 கல்முனை நகரத்தில் தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என்பதை பாதுகாப்புத் துணை அமைச்சர் திரு. ரஞ்சன் விஜேரத்தினா ஒப்புக்கொள்கிறார். நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அந்தச் சம்பவம் நடந்தது உண்மை தான் என்று அவர் கூறினார். அமைச்சர் ரஞ்சன் இது குறித்துச் சொன்னதாவது: கல்முனை நகரில் சில தமிழர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்கிறேன். கிழக்குப் பகுதி இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டது உண்மை தான். போட்டித் தமிழர் குழுக்கள், முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் விடுதலைப் புலிகள் என்று அடையாளங் காட்டப்பட்டவர்களை இராணுவத்தினர் கொன்றனர். இவ்வறு போட்டிக் குழுக்களால் அடையாளங் காட்டப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, எதிர்காலத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பாடாமல் கவனமாக நடந்து கொள்ளுமாறு இராணுவத்தினருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. 50 பேர் என்று தகவல் இதேவேளை -- கல்முனை நகரில் அரச படைகளால் 50 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ரெலோ குற்றஞ்சாட்டி இருப்பதாக ஏஜென்ஸிச் செய்தி ஒன்று தெரிவித்தது. [அ-எ] ரஞ்சனைக் கண்டிக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் கொழும்பு, ஜூலை 13 முஸ்லிம் தீவிரவாதக் குழு ஒன்றுதான் கல்முனை நகரில் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தமிழரைக் கொன்றதாக அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினா கூறியதை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் கண்டித்தார். அமைச்சரின் கூற்று பொறுப்பற்ற தன்மையானது என்றும் - ஜிஹாத் என்றொரு இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்றும் - ஜனாப் அஷ்ரப் தெரிவித்தார். *****
  10. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 12/07/1990 பக்கம்: 1 கல்முனையில்‌ இராணுவம்‌ - ஜிகாத்‌ காட்டுத் தர்பார்‌; 31 தமிழர் படுகொலை (கல்முனை) கல்முனையில்‌ நேற்று முன்‌னம்‌ மாலை முப்பத்தியாரு தமிழர்களைச்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ ஜிகாத்‌ இயக்கத்‌தினரும்‌ சேர்ந்து வெட்டிக்‌ கொலை செய்துள்ளனர்‌. பின்னர்‌ கொலை செய்யப்பட்டவர்கள்‌ தீ வைத்துக்‌ கொழுத்தப்பட்‌டுள்ளனர்‌. இவ்வாறு கொலை செய்‌யப்பட்டவர்‌களில்‌ ஒரு பெண்‌ மானபங்கப்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்‌பட்டுள்ளார்‌. இக்‌கொலைகளில்‌ கறுப்புச்‌ சட்டைகளுடன் இருந்த சிறிலங்கா அரசின்‌ மறைமுக கொலைகாரப்‌ படையினர்‌ ஈடுபட்டதாகத்‌ தெரிகிறது. டாக்டர்‌ சண்முகநாதனும்‌, அவரது மனைவியும்‌ இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில்‌ அடங்குகின்றார்கள்‌. அதேவேளை கல்‌முனை வாடிவீட்டிற்கு அருகிலிருந்த வீடுகளுக்குச்‌ சொந்தமான தமிழர்கள்‌ கொலை செய்யப்‌பட்டு வீடுகள்‌ யாவும்‌ தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்‌தோடு சிறிலங்கா இராணுவத்தினர்‌ அங்கு முகாம்‌ அமைத்துள்ளதாகவும்‌ செய்‌திகள்‌ தெரிவிக்கின்றன. கல்முனைக்கும்‌ நிலாவரைக்‌கும்‌ இடையில்‌ தமிழர்‌ எவரும்‌ இல்லை என்றும்‌, அவர்‌கள்‌ ஜிகாத்தால்‌ துரத்தப்பட்‌டுள்ளனர்‌ எனவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன. *****
  11. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/07/1990 பக்கம்: 1 கிழக்கு தமிழரை அழிக்க ஆயுதக் குழுக்கள்! நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை! கொழும்பு, ஜூலை 10 கிழக்கில்‌ மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்‌ ஆயுதப்‌ படைகளைச்‌ சேராத பலர்‌ குழுக்களாகச்‌ சேர்ந்து கத்தி, பொல்லுகளுடன்‌ திரிவதாக அறியவருகிறது. கிழக்குத்‌ தமிழரைப்‌ படுகொலை செய்து அவர்களை டயர்‌ போட்டு எரிக்கும்‌ செயல்களில்‌ இக்குழுக்கள்‌ ஈடுபட்டிருப்பதாகவும்‌ கூறப்படுகிறது. இக்குழுக்களின்‌ கைகளில்‌ சிக்கிய நூற்றுக்கணக்கான தமிழர்‌கள்‌ பற்றி தகவல்‌ ஏதும்‌ இல்லை என்றும்‌ கூறப்படுகிறது. அரச படைகளின் ஆதரவோடு இயங்கும் இந்தக் குழுக்கள், நியாயம் வழங்கும் உரிமையைத் தம் கைகளில் எடுத்திருக்கின்றன என்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன. படையினர் தாக்குதலுக்கு இலக்காகும் பகுதிகளுக்கு இக்குழுவினர் விரைந்து வருவதாகவும் - பின்னர் அப்பகுதியில் காணப்படும் அப்பாவித் தமிழ் மக்களை அவர்கள் கொன்று குவிப்பதாகவும் - இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு "பாடம் புகட்ட!" அவர்கள் முயல்வதாகவும் ஏஜென்சி செய்திகள் மேலும் தெரிவித்தன. இந்தக் குழுக்களில் ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலரும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது. *****
  12. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 08/07/1990 பக்கம்: 1 தமிழர்‌ மீது ஜிகாத்‌ தாக்கு (சிலாவத்துறை) மன்னார்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிலாவத்துறைப் பகுதியில்‌ உங்களால்‌ தான் பிரச்சினை எனக்கூறி சில முஸ்லிம்கள்‌ தமிழ்‌ மக்களைத் தாக்குவதாக செய்திகள்‌ தெரிவிக்கின்றன. இவ்வாறு தாக்குபவர்கள்‌ ஜிகாத் இயக்கத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ எனவும்‌ தெரியவருகிறது. அத்தோடு தமிழ்‌ மக்களின்‌ சொத்துக்களும்‌ சூறையாடப்‌படுவகாகத் தெரிகின்றது. நாளேடு: உதயன் திகதி: 08/07/1990 பக்கம்: 1 டயர்‌ போட்டு முஸ்லிம்களும்‌ எரிக்கப்பட்டதாகத்‌ தகவல்‌ யாழ்ப்பாணம்‌, ஜூலை 8 கடந்த வியாழனன்று திருக்கோணமலை மாவட்டம்‌ கந்‌தளாயில்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ ஆதரவாளர்களான 12 முஸ்லிம்களையும்‌, 12 தமிழர்‌களையும்‌, முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படையினரும்‌, இராணுவத்தினரும்‌ சேர்ந்து சுட்டுக்‌ கொலை செய்த பின்னா்‌ டயர்‌ போட்டு எரித்துள்ளனர்‌. விடுதலைப்‌ புலிகள்‌ வட்‌டாரங்கள்‌ இத்தகவலைத்‌ தெரிவித்தன. அங்கு வியாழனன்று விடுதலைப்‌ புலிகளுக்கு உதவி செய்ததாகக்‌ கூறி இளம்‌பெண்‌ ஒருவரை இராணுவத்‌தினர்‌ கைது செய்து தமது முகாமுக்குக்‌ கொண்டுசென்‌றதாகவும்‌ -- இதுவரை இவர்பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை என்றும்‌ தெரிவிக்‌கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று கிண்‌ணியாவில்‌ ஆறு அப்பாவித்‌ தமிழர்களை முஸ்லிம்‌ ஊர்‌காவல்‌ படையினரும்‌ இராணுவத்தினரும்‌ சேர்ந்து உயிருடன்‌ டயர்‌ போட்டு எரித்‌ததாகவும்‌ விடுதலைப்‌புலிகள்‌ வட்டாரங்கள்‌ தெரிவித்தன. இதேவேளை -- ஆலங்கேணிப்‌ பகுதியில்‌ வெளியேறிய தமிழர்களின்‌ வீடுகளில்‌ இருந்த பொருள்‌ அனைத்தையும் கிண்ணியாவிலிருந்து வந்த முஸ்லிம் காடையர்கள் சிலர்‌ கொள்ளையடித்ததாகவும்‌ -- தம்பலகாமம்‌ 96, 98, 99 ஆம்‌ கட்டைகளில்‌ கிராமப்‌ புறங்களில்‌ உள்ள தமிழ்‌ மக்‌கள்‌ கிண்ணியாவில்‌ உள்ள கடைகளுக்கு பொருள்‌ வாங்‌கப்‌ போகவிடாது முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படையினரால் துன்புறுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும்‌ வருகின்றனர்‌ என்றும்‌ அவ்வட்டாரங்கள்‌ மேலும்‌ தெரிவித்தன. [உ-9] *****
  13. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 01/07/1990 பக்கம்: 1 100 தமிழர்கள் கைது யாழ்ப்பாணம், சூலை 1 கடந்த புதனன்று காலையில் கல்முனை, மருதமுனையைச் சுற்றி வளைத்த சிறிலங்கா அதிரடிப்படையினர் அங்கு தஞ்சம் புகுந்திருந்த சுமார் நூறு தமிழர்களை ஜிகாத் அமைப்பினைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் கைது செய்தனர். (உ) *****
  14. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 28/06/1990 பக்கம்: 1 கல்முனையில்‌ தமிழர்‌ படுகொலை 75ஆக உயர்வு (கல்முனை) கல்முனையில்‌ ஜிகாத்‌ இயக்‌கத்தினரும்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ சேர்ந்து படுகொலை செய்த தமிழரின்‌ எண்ணிக்கை எழுபத்‌தைந்தாக உயர்ந்துள்ளது. இவர்கள்‌ நடுவீதியில்‌ நிறுத்திவைத்து சுட்டுக்‌ கொன்றுள்ளனர்‌. இச்சம்பவம்‌ கடந்த இருபத்‌திதான்காம்‌ திகதி நடைபெற்‌றதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள்‌ தெரிவிக்‌கின்றன. (லோ) *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.