என் மனதில் உதித்தது...
இந்த அண்ணாக்கள் தங்களால் இயன்றளவு வரலாறுகளை எழுதி ஆவணப்படுத்தலாம். அவை எதிர்கால தலைமுறைகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.
அன்னவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிடுவதற்குப் பல ஊடகங்கள் உண்டு; பிற ஊடகங்களுக்கு/வலைத்தளங்களுக்கு அனுப்பத் தயக்கம் இருந்தால் யாழிலையே எழுதி விடலாம். கட்டுரையாகத் தான் வேண்டுமென்றில்லை. சிறு சிறு பத்திகளாகக் கூட எழுதட்டும், ஒரே திரி திறந்து.
நாசகாரிகள் வரலாறுகள் வெளியில் வரக்கூடாதென்று முக்காலத்திலும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டேதான் இருப்பாங்கள். இருந்தாலும் இந்த அண்ணாக்களுக்கு எப்பவும் மக்களின் ஆதரவு இருந்துகொண்டே இருக்கும், அந்தக் காலத்தில் இருந்த மாதிரி.
இயக்கத்தில் மெய்யாக இருந்து போராடியவர்கள் எழுதும் வரலாறுகளுக்கு எப்போதும் மக்கள் வரவேற்பு உண்டு🤩. ஆனால் இரண்டு நாட்கள் இருந்துபோட்டு, தண்டனை பெற்று வெளியேறிப் போய், வயிற்றுப் பிழைப்பிற்கு இயக்கத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் நக்கல் செய்து நாசமாக்கும் வண்ணமோ அல்லது இறந்தோரின் பெயராலோ புத்தகம்☢️ எழுதுகிறவங்களுக்கு🤬 எப்பையும் செருப்படி🫨 தான். அதில் மாற்றமில்லை🤪.