Everything posted by நன்னிச் சோழன்
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
பிரிகேடியர் பால்ராஜ், கேணல் கீதன், பிரிகேடியர் ஜெயம்
- 1202 replies
-
-
- 1
-
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
பெண் கட்டளையாளர்கள்
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
எங்கை எடுத்த படங்களென்று தெரியவில்லை. 2004> 'இடது முதலாவது செஞ்சோலை செயற்திட்ட பொறுப்பாளர் சுடர்மகள்/ ஜனனி. செஞ்சோலைப் பிள்ளைகள் 'பெரியம்மா' என்பர். இவர் சிங்களவரால் ஓமந்தையில் பிடிக்கப்பட்டு பின்னாளில் காணாமல் போனார். பிடிபட்ட பல முக்கியப் போராளிகளைப் போல மோசமாக படுகொலை செய்யப்பட்டர் என்று கேள்வி.' ஜனனிக்கு அடுத்து நிற்பவர் கேணல் தமிழ்ச்செல்வி ஆவார். இடது முதலாவது ஆண் மட்டுவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஆவார். பெயர் மறந்துவிட்டேன். ------------------- செஞ்சோலை புதிய வளாகம் திறப்பு - இந்நிகழ்விற்கு நானும் சென்றிருந்தேன்; எனது உறவினர் ஒருவர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டேன். சந்திப்புக் கொட்டிலுக்குள் (வட்டவடிவ ஓலையால் வேயப்பட்ட வெள்ளை நிறம் பூசப்பட்ட அரைக்கட்டுச் சுவர் கொண்ட கொட்டில்) சில பேரை அன்றுதான் முதலும் கடைசியுமாகவும் கண்டு உரையாடி பூரித்துப் போனேன். அந்த கொட்டிலுக்குள் இருந்த 'பெரியவர்'-டு விளையாட்டாக அரியதரம் உண்ணும் போட்டியில் பங்கெடுத்துத் தோற்றும் போனேன்; இரண்டு அரியதரங்களை நான் ஒரே நேரத்தில் வாயில் போட்டு மென்ன முடியாமல் முழிக்க அவர் ஒவ்வொன்றாக எடுத்து உண்டு வென்றார். பின்னர் அவரோடு பகலுணவு உண்டேன். அவரது தொடையில் என்னை அமர்த்தி ஊட்டியும் விட்டார். இன்றும் இவையிரண்டும் என்நெஞ்சில் பசுமையாக உள்ளன. ஆனால், அன்று ஊட்டிவிட்ட அந்தச் சீமான் மே 19இல் சாமியிடம் போய்விட்டார். தற்காப்புக் கருதி மேற்கொண்டு ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.)
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 2001 இவ்வாண்டில் பி411 என்ற தொடரெண் கொண்ட சீ சென்ரினெல் வகுப்புச் சுடுகலப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதாக நேவிபீடியா என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் திகதியை என்னால் அறியமுடியவில்லை. திகதி: மார்ச் 21, 2001 அடிபாட்டுக் காலம்: காலை 5:00 மணியளவில் நிகழ்வு இடம்: முல்லைக் கரையிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகள் மீது வலிதாக்குதல் நடாத்திய சிங்களக் கடற்படையின் டோறாக்கள் மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர் என்று அற்றை நாளே புலிகள் செய்தி அறிக்கை விட்டிருந்தாலும் மெய்யில் வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் மீதே சிங்களக் கடற்படையினர் வலிதாக்குதல் நடாத்தி வேண்டிக்கட்டினர். யாழிலிருந்து திருமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மூன்று டோறாக்கள் {சுப்பர் டோறாவும் (பி 422) பேபி டோறாவும் (பி 495, பி497)} முதலில் கடற்புலிகளைக் கண்டுகொண்டன. உடனே பேபி டோறாக்கள் இரண்டும் கடற்புலிகளின் மூன்று சண்டைப்படகுகள் மீது முதல் வேட்டுகளைத் தீர்த்தன. முதலில், கடற்புலிகளின் சண்டைப்படகுகளின் கலத்தொகுதிக் (flotilla) கட்டளையாளர் வழங்கல் படகுகள் சாளைத் தளத்திற்கு ஓம்பலாகச் (safe) செல்வற்காக அனைத்துக் கலமணிகளையும் (squadron) சண்டை தவிர்ப்புச் செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆயினும் கடற்படையின் படகுகள் நன்கு நெருங்கி கடற்புலிகளைத் தாக்கத் தொடங்கின. கடற்படையின் தொந்தரவு அதிகரித்ததால் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் திடீரென வலு முரட்டுத்தனமான தாக்குதலை பகையின் டோறாக்கள் மீது தொடுத்தார். வெடித்த கடற்சமரின் ஒரு சமயத்தில் சுப்பர் டோறா (பி 495) ஒன்று கடற்புலிகளின் தாக்குதலில் நிலைகுலைந்து இயந்திரம் சேதமடைந்ததால் நின்றுவிட அதன் மீது தாக்குதலை வலுப்படுத்தினர். அந்நேரம் மேலும் 8 டோறாக்கள் உதவிக்கு விரைந்து தாக்குதல் நடாத்தின. சேதமடைந்ததிலிருந்த கடற்படையினர் சிலரைக் கொல்ல ஏனையோர் கடலினுள் குதித்து வேறொரு கலத்தில் ஏறி உயிர்தப்பினர். பின்னர் டோறாவைக் கைப்பற்றி, அதிலேறி, படைக்கலன்களைக் கழட்டியெடுத்துவிட்டு சக்கை வைத்து அதை மூழ்கடித்தனர், கடற்புலிகள். அதே சமயம் உதவிக்கு விரைந்து வந்த சிங்கள வான்படையின் குண்டுதாரிகள் கடற்புலிகளை இலக்கு வைத்தன. இந்நிலையை தமக்குச் சாதகமாக்கிய கடற்புலிகள் சிங்களக் கடற்படையின் கடற்சமர் வியூகத்தினுள் நுழைந்து பகைவரோடு இரண்டறக் கலந்து சமராடினர். கடற்புலிகளின் இத்தந்திரமான வியூகத்தால் திணறிய சிங்கள வான்படை பகை-நட்புக் கடற்கலங்களை இனக்காணத் தவறி தம் டோறா ஒன்றின் மீதே குண்டுவீசி மூழ்கடித்தனர். மேற்கொண்டு கடற்புலிகளோடு பொருத இயலாமல் சிங்களக் கடற்படையினர் பின்வாங்கினர். இக்கடற்சமரின் போது மேலும் இரு டோறாக்கள் சேதமடைந்தன. ஆனால் சிங்களக் கடற்படையினரோ இச்சமரில் தமது ஒரே ஒரு டோறாவே மூழ்கடிக்கப்பட்டதாகவும் தமது வான்படையினர் வான்குண்டெதையும் வீசவில்லையென்றும் தெரிவித்தனர். இக்கடற்சமரை கடலில் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் வழிநடாத்த பிரிகேடியர் சூசை அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தரையிலிருந்து வழிநடாத்தினார். இது புலிகளின் ஒருதலைப் பக்க போர் நிறுத்தத்தை மீறியதொரு செயலென்று புலிகள் குற்றம் சாட்டினர். மேலதிகத் தகவல்: வெடித்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் 12 டோறாக்களோடு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் மிராஜ் வகுப்பு வழங்கல் படகுகளும் பொருதின. இத்தாக்குதலில் கடற்சிறுத்தை அணியின் கட்டளையாளரான லெப். கேணல் சேரமான், லெப். கேணல் பகலவன், லெப். கேணல் கன்னியத்தம்பி, கடற்புலிகளின் மகளீர் பிரிவுத் துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி, லெப். கேணல் விடுதலை, லெப். கேணல் சீராளன், லெப். கேணல் ஜெரோமினி எ விடுதலை, மேஜர் ஆழியன், மேஜர் தமிழ்நம்பி, லெப். கேணல் சிறீராம் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். சிறீராம் அவர்கள் சென்ற சண்டைப்படகில் லெப். கேணல் சேரமான் இருந்தார். கட்டளையாளர் சிறீராம் மொத்தச் சமரையும் படமாக்கியிருந்தார். இச்சமரில் ‘ராகினி’ என்ற கலப்பெயரைக் கொண்ட மிராஜ் வகுப்பு வழங்கல் படகும் பங்கெடுத்திருந்தது. டோறாவிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் யாவும் இதில் தான் ஏற்றப்பட்டன. கரையில் இதிலிருந்தும் மற்றைய மிராஜ் வகுப்புப் படகிலிருந்தும் படைக்கலன்களையும் காயம் & வீரச்சாவுகளையும் பொதுமக்கள் இறக்கினர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்-2 (பி 495) கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை. கடற்புலிகளின் தகவலின் அடிப்படையில். ஆனால் சிங்களம் இது பெருத்த சேதத்தோடு தப்பியது என்றே கூறுகின்றது) சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9+ பேர் காயப்பட்டடோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் தென்றல், மேஜர் கலா எ நாவுக்கரசி, கப்டன் மறவன் காயப்பட்டடோர்: ஒரு பெண் போராளி உட்பட ஆகக்குறைந்தது நான்கு போராளிகள் நிகழ்படம்: https://eelam.tv/watch/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-sea-tigers-battle_sE4OLdlDX3555zW.html https://eelam.tv/watch/2001-ltte-sea-tigers-battle-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0_fAwUpWfGhs9JNf6.html ஆதாரம்: உதயன்: 22/03/2001 | தமிழ்நெற்: 21/03/2001 (SLN gunboat sunk), (One Dvora captured, weapons stripped - VOT) | எரிமலை: மார்ச் 2001 | கட்டுரை: ‘21.03.2001 அன்று சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிகள்’ திகதி: ஏப்ரல் 16, 2001 அடிபாட்டுக் காலம்: ‘புலிகளின் குரலின்’ செய்தியின் படி: சாமம் 1:45 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: சாளைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகள் வலுச் சேர்க்கும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது வைகறைப் பொழுது 2:15 மணியளவில் சிறிலங்காக் கடற்படையின் ஐந்து டோறக் கலங்கள் இவர்களைக் கண்டுகொண்டன. பொதுவாக இந்நடவடிக்கைகள் இராப்பொழுதிலேதான் நடைபெறுவதுண்டு, சிங்களக் கடற்படையுடனான முட்டலைத் தவிர்க்க. அவை புலிகளின் படகுகள் என்பது தெரியாமல் கடற்புலிகளின் கலத்தொகுதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி உசாவல் செய்ய முயன்ற போது கடற்புலிகளிடமிருந்து குறிகைகள் (Signal) ஏதும் கிடைக்காததால் சிங்களக் கடற்படையின் பி 462 என்ற டோறா முதலில் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தபடி மிண்டியது. மேற்கொண்டு ஏனையவையும் சுடத் தொடங்க கடற்சமர் மூண்டது. அச்சமயம் நாகர்கோவில் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இரு டோறாக்களும் திருமலை, காங்கேசன்துறை கடற்றளங்களிலிருந்து உதவிக்கு மேலதிக சுடுகலப் படகுகளும் அழைக்கப்பட்டு கடற்புலிகளின் கலத்தொகுதியோடு பொருதின. நடந்த கடற்சமரில் கடற்புலிகளின் சூட்டில் பி 490 என்ற தொடரெண் கொண்ட டோறாவின் இயந்திரங்கள் சேதமாகி காங்கேசன்துறைக்கு கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. கதுவீ பொருத்தப்பட்ட மற்றொரு டோறாவும் (பி 460) இராப்பார்வை ஏந்தனங்கள் (Equipments) பொருத்தப்பட்ட இன்னொரு டோறாவும் தொடர்ந்த கடற்சமரில் சேதமாகின. சிங்கள வான்படையும் சிங்களக் கடற்படைக்கு உதவியது. கடற்சமர் முடிந்த பின்னர் அப்பரப்பில் தேடுதல் நடாத்திய போது ஒரு டசினுக்கும் அதிகமான நெகிழி உருள்கலன்கள் மிதந்து வருவது கவனிக்கப்பட்டது என்று சிங்களக் கடற்படை கூறியது. பின்னர் அவற்றை ஆய்வுகுட்படுத்திய கடற்படையினர் அவற்றில் சிலதில் வான்புலிகளின் இலகு வகை வானூர்திகளுக்கான ஹை ஒக்ரேன் எரிபொருளும் சிலதில் சயனைட் தயாரிப்பதற்கான ரலிலின் டெசோசயனைட் என்ற வேதிப்பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வான்புலிகளின் சிலின் 143 இலகு வகை வானூர்திகளுக்கான எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டது என்பது இக் கட்டுரை எழுதுவினைஞரின் ஊகமாகும். இக்கடற்சமரானது புலிகளின் ஒருதலைப் பக்க போர் நிறுத்தத்தை மீறிய செயல் என்று புலிகள் குற்றம் சாட்டினர். சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டடோர்: 7 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: 2ம் லெப். கவிமகள், லெப். தமிழ்மறவன் ஆதாரம்: உதயன்: 17,19/04/2001 | தமிழ்நெற்: 16/04/2001 (SLN, Sea Tigers clash off Mullaithivu) திகதி: ஏப்ரல் 20, 2001 அடிபாட்டுக் காலம்: வைகறை 3:50 மணியிலிருந்து காலை 7:00 மணி வரை நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவுக் கரையில் பொதுமக்களின் உதவியுடன் போர்த்தளவாடங்களை இறக்கிக்கொண்டிருந்த கடற்புலிகளின் நடமாட்டத்தை கரைக்கு வடகிழக்கே 32 கடல்மைல் தொலைவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கலங்கள் கண்டுவிட்டு மேலதிக கடற்படையை துணைக்கு அழைத்து கடற்புலிகளோடு பொருதினர். சிங்களக் கடற்படைக்குத் துணையாக வழமை போல சிங்கள வான்படையும் வந்து சேர்ந்து சமர் புரிந்தன. இதற்கு முன்னர் நடந்த பல கடற்சமர்களின் போதும் சிங்கள வான்படை உதவிக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடற்சமரில் சிங்களக் கடற்படையின் டோறா ஒன்று சேதமடைந்தது. கடற்புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றுள் ஆகக்குறைந்தது ஒன்றாவது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகாகும். இக்கடற்சமரில் தான் முதன்முறையாக 8 கடற்புலிகள் சிங்களக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்ட ஒரே படகிலிருந்தே பிடிக்கப்பட்டனராம். காயத்தோடு இருந்த அவர்களில் ஒருவர் பலாலி படைய மருத்துவமனையிலும் ஏனையோர் திருமலை படைய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்தது. ஆனால் இவ்வாறு சிறிலங்காக் கடற்படையால் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகள் பன்னாட்டு போர்க்கைதிகள் விதிமுறைக்கு மாறாக மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தப்பட்டனர். பெண் போராளிகள் சிங்களக் கலங்களில் ஏற்றப்பட்டவுடனேயே ஆடைகள் கழையப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர். பின்னர் திருமலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு இறக்கப்பட்டவுடன் உடைகள் கொடுக்கப்பட்டது. இவ்வாறு பிடிபட்டவர்களில் ஆகக்குறைந்தது இரு பெண் போராளிகளாவது 2002 சனவரி வரை உயிரோடு இருந்துள்ளனர். ஏனைய போராளிகளின் நிலைமை தெரியவில்லை. எவ்வாறெயினும் இதற்கு முன்னர் பிடிபட்டவர்கள் மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டதே இவர்களினதும் கதியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலதிகத் தகவல்: இவர்களில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு வெலிக்கடை மகளீர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த (சனவரி 2002 நிலவரப்படி) சுபாசினி மற்றும் விஜயகலா ஆகியோர் தொடர்பில் பன்னாட்டு மன்னிப்பு அவைக்கு கிடைத்திருந்த அறிக்கைகளிலிருந்து… சுபாஷினி: “பன்னாட்டு மன்னிப்புச் சபைக்கு கிடைத்த தகவலின்படி, விஜயரத்தினம் சுபாஷினி விடுதலைப் புலிகளின் படகில் கடலிலிருந்து திரும்பிய போது, சிறிலங்காக் கடற்படையின் சுடுகலப் படகுகள் பல அவர்களைச் சுற்றி வளைத்தன. பல மணி நேரம் கடும் சண்டை நடந்தது. விஜயரத்தினம் சுபாஷினி மற்றும் பலர் அவர்களது படகுகள் சேதமடைந்ததை அடுத்து கடலில் குதித்தனர், பின்னர் அவர் கடற்படைச் சுடுகலப் படகு ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டார். சுடுகலப் படகில் ஏறிய உடனேயே, அவளது உடைகள் அனைத்தும் கழற்றப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டன. மேலும், பத்து கடற்படை வீரர்கள் அவளது முலைகளையும் பிறப்புறுப்புப் பகுதியையும் தொட்டு அழுத்தினர். அவள் கத்திக் கொண்டிருந்த போது அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் விரல்களை அவளது பெண்குறிக்குள் விட்டனர். இந்த முழு வேதனையும் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. படகு திருகோணமலையை அடைந்ததும் அவளது உடைகள் கொடுக்கப்பட்டன. அவர் கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் எவ்வித குற்றச்சாட்டோ உசாவலோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிவுக்கிட்டியவரை, இந்தக் குற்றச்சாட்டு குறித்து எந்த உசாவலும் நடத்தப்படவில்லை.” (பன்னாட்டு மன்னிப்புச் சபை, AI Index: ASA 37/001/2002, பக்கம்: 14) விஜயலலிதா: “தங்கையா விஜயலலிதா என்ற 14 வயது தமிழ்ப் பெண், 20 ஏப்ரல் 2001 அன்று விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட போது பத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் (மேலே உள்ள வழக்கு எண். 4 ஐயும் பார்க்கவும், விஜயரத்தினம் சுபாஷினி). அறிக்கையின்படி, தங்கையா விஜயலலிதா கடற்படையின் சுடுகலப் படகில் அழைத்துச் செல்லப்பட்டு அவரது பாவாடை மற்றும் கச்சு கழற்றப்பட்டது. படகு திருகோணமலையை அடைந்ததும் அவளது உடைகள் அவளிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. அவர் தற்போது கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் எவ்வித குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.” (பன்னாட்டு மன்னிப்புச் சபை, AI Index: ASA 37/001/2002, பக்கம்: 14) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: 4 பேர் கடற்புலிகள் ஆளணியினரில்: வீரச்சாவடைந்தோர்: 9 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் பவான், லெப். கேணல் கடம்பன், மேஜர் மயூரி, மேஜர் இசைவிழி, கப்டன் சுடர்வானம், லெப். மைந்தன், லெப். அறிவு எ அறிவழகன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். மதிநிலா எ நிலாவொளி காயமடைந்தோர்: சிலர் போர்க்கைதிகளானோர்: 8 பேர் முதற்பெயருடனான இயற்பெயரும் வயதும்: சிற்றம்பலம் துஸ்யந்தினி (16), தங்கையா விஜயலலிதா (14), விஜயரத்தினம் சுபாசினி (19), புவனேஸ்வரன் மலிஸ் (21), வைகரன் (19), ரவி (19), கந்தன் (19), கோடீஸ்வரன் (24) ஆதாரம்: உதயன்: 21&23/04/2001 | தமிழ்நெற்: 20/04/2001 (Four LTTE boats sunk - Navy) | மாவீரர் பட்டியல் | பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிக்கை: asa370012002en.pdf திகதி: சூன் 23, 2001 அடிபாட்டுக் காலம்: காலை நிகழ்வு இடம்: சம்பூர் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லைகொடுத்து அவர்தம் மீது தாக்குதல் நடாத்திவந்த சுற்றுக்காவல் படகுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த கைக்குண்டு செலுத்தி, வெளியிணைப்பு மின்னோடி, தொலைத்தொடர்புக் கணம் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக தவிபுவினர் ஊடக வெளியீடு ஒன்றில் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த நாள் காலையில் சம்பூர் மீது சிறிலங்காக் கடற்படையின் சுடுகலப் படகுகள் சூடு நடத்தியதாக மூதூரில் உள்ள தமிழ்நெட் செய்தியாளர் தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையின் எறிகணை வீச்சில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், ஒரு பாடசாலை மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கடற்படையின் எறிகணைவீச்சில் பல கால்நடைகளும் கொல்லப்பட்டதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் கோட்டத்தின் அறிக்கைகள் தெரிவித்தன. கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுற்றுக்காவல் படகு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 24/06/2001 | தமிழ்நெற்: 23/06/2001 (SLN patrol boat captured - Mutur LTTE) திகதி: செப்டெம்பர் 15, 2001 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:50 மணியளவில் நிகழ்வு இடம்: சூடைக்குடா (ஃவௌல் பொயின்ற்/Foul Point) கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வெள்ளைக்கொடி பறக்க விடப்பட்ட கட்டைப்படகு ஒன்றில் குடிமக்கள் போன்று வேடமிட்டு டோறாவை நெருங்கிய கடற்கரும்புலிகள் இலக்கை அண்மித்ததும் வெடித்துச் சிதறினர். இதில் டோறா சிறிது சேதமடைந்தது. சேதப்பட்ட (சிறிது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் ஓசையினியவன், கப்டன் தமிழினியன் எ பொறையரசு சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: ஆதாரம்: உதயன்: 17/09/2001 திகதி: செப்டெம்பர் 16, 2001 அடிபாட்டுக் காலம்: வைகறை 4:30 மணியிலிருந்து நண்பகல் வரை டோறா மீது இடியன் மோதி மூழ்கிய நேரம்: வைகறை 5:30 மணியளவில் மற்றொரு டோறா சேணேவித் தாக்குதலிற்குள்ளாகி மூழ்கிய நேரம்: நண்பகல் 12:45 மணியளவில் நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கரையிலிருந்து 26-30 கடல் மைல் தொலைவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து 1200 தரைப்படையினரையும் கப்பல் ஊழியர்களையும் ஏற்றிக்கொண்டு ஏமக் கலங்களோடு காங்கேசன்துறைத் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'எம்.வி. பிரைட் ஒஃவ் சௌத்' என்ற படைக்காவி பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்துக் கடற்புலிகளால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலின் போது கடற்புலிகளின் அனைத்து வழங்கலும் ஒருங்கிணைக்கப்பட்டு 10 சண்டைப்படகுகள், 2 வழங்கல் படகுகள், மற்றும் 8 குண்டுப்படகுகளைக் கொண்ட 5 கலத்தொகுதிகளாகப் (4 தாக்குதல் மற்றும் ஒரு வழங்கல்) பிரிக்கப்பட்ட கலக்கூட்டம் (fleet) ஒன்று ஈடுபடுத்தப்பட்டது. இந்நடவடிக்கையில் 170 கடற்புலிகளும் 24 கடற்கரும்புலிகளும் ஆக மொத்தம் 194 போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வருண கிரண கடற்றடுப்பு வேலியை உடைக்க கடற்புலிகள் தம்மோடு பொருதிக்கொண்டிருந்த டோறா ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதலை குறித்த வைகறைப் பொழுதில் நடாத்தினர். பின்னர் ஏமக்கலங்கள் மீது கடற்புலிகள் தாக்குதலைத் தொடுக்க மேலும் 15 டோறாக் கடற்கலங்கள் திருமலையிலிருந்தும் யாழ் குடாவிலிருந்தும் துணைக்கு வந்து சேர்ந்தன. சிங்களக் கடற்படைக்கு உதவிக்கென சிங்கள வான்படையினரும் அவ்விடத்திற்கு விரைய பாரிய கடற் போரரங்காக விரிந்தது, அக்கடற்சமர். தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் கப்பலைச் சுற்றி வளைத்தனர், கடற்புலிகள். அச்சமயம் இடியன் ஒன்று மோதியிடிப்பதற்காக 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' சொல்லிப் புறப்பட்டுச் சென்ற போது கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவசரக் கட்டளையாக இடியனை மோதியிடிக்காமல் பின்வாங்குமாறு அறிவுறுத்த மோதச் சென்ற இடியனும் கப்பலை ஒரு முறை சுற்றி வலம் வந்துவிட்டு பின்வாங்கியது. அப்போது தான் சிறிலங்காக் கடற்படையினர் வெளியுலகிற்கு அறிவிக்காமல் சிங்களப் படைத்துறையின் கடல் படைக்காவியில் தமக்குப் பாதுகாப்பாக தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இலக்கை அழிக்காவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கடற்புலிகள் கப்பலைப் போகவிட்டனர். இத்தாக்குதல் மட்டும் அன்று வெற்றியடைந்திருதால் கட்டுநாயக்கா மீதான கரும்புலி நடவடிக்கை போன்று கடலிலும் உலகமே திரும்பிப் பார்க்க வல்லதொரு வரலாற்றுச் சாதனை படைத்திருப்பர். இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அதில் சென்ற படையினரை முற்றாக மீட்கும் வல்லமை சிங்களக் கடற்படையிடம் அப்போது இருக்கவில்லை. இக்கப்பாலானது கடற்கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து ஒரு மணிநேரம் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மேற்கொண்ட தொடர்ந்த சமரில் நண்பகல் 12:45 மணியளவில் நடாத்தப்பட்ட சேணேவித் தாக்குதலில் மற்றொரு டோறா மீளப்பாவிக்கேலாதளவு கடுமையாகச் சேதமடைந்தது. தொடர்ந்த சமரில் மேலும் 6 டோறாக்கள் சேதமடைந்தன. கடற்புலிகள் தரப்பில் ‘பரந்தாமன்’ என்ற கலப்பெயர் கொண்ட வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகின் கடையார் (இயந்திரப்பகுதி) தீ பற்றிக்கொண்டது. மாதவி படகும் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்து மீட்டெடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தீ அணைக்கப்பட்டது. செப்டெம்பர் 23 அன்று விடுதலைப் புலிகள் கடற்படையினரின் இந்த மனிதக்கேடயச் செயலை வன்மையாக கண்டித்ததுடன் பொதுமக்கள் யாரையும் படைத்துறைக் கப்பல்களில் போக்குவரவுச் செய்யவேண்டாம் என்று அறிவுரை கூறி கேட்டுக்கொண்டனர். நிகழ்வின் முழு விரிப்பு: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட கடற்கலங்கள்: 7 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) - 6 கடற்கலப் பெயர்: எம்.வி. பிரைட் ஒஃவ் த சௌத் (MV Pride of the South) கல வகை: படைக்காவி படிமம்: படிமப்புரவு: Tamilnet சிறிலங்கா படைத்துறை ஆளணியினரில், கடற்படையினரில்: கொல்லப்பட்டோர்: 11-15 பேர் காணாமல் போனோர்: 7-18 பேர் (இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை) தரைப்படையினரில் காயப்பட்டடோர்: 47-60 பேர் விடுதலைப்புலிகளின் ஆளணியினரில் காயமடைந்தோர்: 2 பேர் கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: புனிதா (மட்டக்களப்பில் நடந்த சமரொன்றில் லெப். கேணல் தரநிலையில் வீரச்சாவடைந்தார் . இச்சமரில் இவர் தொலைத்தொடர்பாளராக பணியாற்றினார்) மற்றும் இன்னொரு போராளி வீரச்சாவடைந்தோர்: 10 பேர் கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்: ‘கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்’ லெப். கேணல் இரும்பொறை & (பெயர் அறியில்லா சண்டைப்படகின்) 'படகுக் கட்டளை அதிகாரி' லெப். கேணல் குமுதன், 'முதன்மைப் பொறியியலாளர்' மேஜர் சிவகாந்தன் எ தாஸ் எ காந், '23மிமீ சுடுகலன் முதன்மைச் சூட்டாளர்' மேஜர் நளன், '20மிமீ சுடுகலன் முதன்மைச் சூட்டாளர்' கப்டன் எழிலரசன், '25மிமீ சுடுகலன் சூட்டாளர்' லெப். திருவாணன் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் அனோஜன் எ மாதவன், மேஜர் அருணா எ சுதா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி படிமங்கள்: தாக்குதலிற்குச் சென்ற ஏனைய கடற்கரும்புலிகளோடு (இடிக்காதோர்) லெப். கேணல் அனோஜனும் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியனும் தேசியத் தலைவருடன் உரையாடும் காட்சி | படிமப்புரவு: தவிபு பாவிக்கப்பட்ட சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: கவிர் ஆதாரம்: உதயன்: 17&18/09/2001 | தமிழ்நெற்: 16/09/2001 (Sea battle off Pt. Pedro), (Two Dvoras sunk, two damaged in clash), (Several killed, missing in naval clash) & 23/09/2001 (Tigers say SLN using civilians as human shield) | கட்டுரை: 'தமிழரை மனிதக் கேடயங்களாகப் பாவித்துத் தப்பித்த எம்வி பிரைட் ஒஃவ் சௌத்' | இத்தாக்குதலில் பங்குபெற்றிய புலிகளின் சண்டைப்படகொன்றின் கட்டளை அதிகாரி திரு புலவர் அவர்களின் வாக்குமூலம் திகதி: செப்டெம்பர் 23, 2001 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10 மணியளவில் தொடங்கி எற்பாடு வரை நீடித்தது நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 57 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வழக்கமான வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகள் மீது குறித்தக் கடற்பரப்பில் வைத்து மே 25 அன்று தொடங்கப்பட்ட 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) என்ற கடற்புலிகளின் ஆழ்கடல் ஆயுத வழங்கல் நடவடிக்கைகளை தடுக்கும் பாரிய கடல்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்படையினர் வலிதாக்குதலில் ஈடுபட்டு மிண்டிய போது கடற்சமர் மூண்டது. சிங்களக் கடற்படைக்கு ஆதராவக சிங்கள வான்படையும் வந்து சேர்ந்தது. தொடர்ந்த கடற்சமரில் கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ள சிங்களவரின் டோறா ஒன்றை இடியன் அண்மித்த போது பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. இருந்தபோதிலும் டோறாவும் சிறிய சேதத்திற்குள்ளாகியது. கடற்புலிகள் எவ்விதச் சேதமுமின்றி கரை திரும்பினர். இங்கு கடற்சமர் வெடித்த இடத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் கடற்புலிகளின் இரு வணிகக் கப்பல்கள் போர்த்தளவாடங்களை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றுகொண்டிருப்பதை சிங்களக் கடற்படை கண்டதாம். சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 3 பேர் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் நல்லமுத்து எ சிவாகரன், கப்டன் புவிமகள், ‘கடற்புலிகளின் மகளீர் பிரிவுத் துணைக் கட்டளையாளர்' லெப். கேணல் அமுதசுரபி (இவ இச்சமரில் காயமடைந்து பண்டுவம் பலனின்றி 26/10/2001 அன்று காயச்சாவடைந்தார்) கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: மேஜர் திருமலை ஆதாரம்: உதயன்: 24&25/09/2001 | தமிழ்நெற்: 23/09/2001 (Tigers say SLN using civilians as human shield) திகதி: ஒக்டோபர் 5, 2001 அடிபாட்டுக் காலம்: காலை நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையிலிருந்து 9 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்த டோறாக் கலத்தை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதலில் டோறா சேதமடைந்தது என்று உதயன் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பெருங்கடலிலிருந்து ஆயுதங்களை ஏற்றுக்கொண்டு வந்துகொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளை வழிமறித்துத் தாம் தாக்குதல் நடாத்தியதாக 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை மட்டக்களப்புக் கடலூடாக ஆயுதங்களை புலிகள் தரையிறக்கியதாக அதிகாரநிறைவு பாதுகாப்பு வட்டாரங்களை மேகோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரயிதழொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக உதயன் 15/10/2001 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டடோர்: 2 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 6/10/2001 திகதி: ஒக்டோபர் 21, 2001 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10:10 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள ஆழ்கடல் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் வலுச்சேர்க்கும் நடவடிக்கையின் போது எரிபொருளை ஏற்றிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் மே 25 அன்று தொடங்கப்பட்ட 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) என்ற கடற்புலிகளின் ஆழ்கடல் ஆயுத வழங்கல் நடவடிக்கைகளை தடுக்கும் பாரிய கடல்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் கடற்சமர் வெடித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகளின் ஆக்குறைந்தது ஒரு சண்டைப்படகாவது மூழ்கடிக்கப்பட்டது. இச்சமரில் கடற்கரும்புலிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். அவர் சண்டைப்படகில் பட்டறிவிற்காகப் பயணித்தவரா (கடற்கரும்புலிகள் கடற்சமர்கள் தொடர்பான பட்டறிவினைப் பெற இவ்வாறு சண்டைப்படகுகளில் செல்வதுண்டு) அல்லது இடியனில் சென்று மோதியிடிக்க முற்பட்ட போது பகைச்சூட்டிற்கு இடியன் இலக்காகிட இவர் வீரச்சாவடைந்தாரா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. கடற்படையின் டோறாக்களுக்கு சேதமேதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: 1 ஆள் (சிங்களக் கடற்படையின் தகவலின் படி) வீரச்சாவடைந்த போராளிகள்: 11 பேர் கடற்புலிகள்: 10 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் செங்கண்ணன் எ கலாதரன், மேஜர் கொற்றவன், மேஜர் நீலவண்ணன், கப்டன் திருவாணன், லெப். தயாபரன் எ முரளி, லெப். நாவரசி, 2ம் லெப். விடுதலைவீரன், 2ம் லெப். தமிழ்வேங்கை, 2ம் லெப். கனிவிழி, 2ம் லெப். சுகனிலா கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: கப்டன் இளங்குயிலன் ஆதாரம்: உதயன்: 22/10/2001 | மாவீரர் பட்டியல் திகதி: ஒக்டோபர் 21, 2001 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் நடந்த சமரிலிருந்து விலத்தி இவர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பினுள் நுழைந்த போது மீண்டும் சிங்களக் கடற்படையோடு முட்டுப்பட்டுக் கடற்சமரொன்று வெடித்தது. கடற்படையின் டோறாக்களுக்கோ ஆளணியினருக்கோ சேதமேதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இக்கடற்சமரில் கடற்புலிகளின் கடற்கலங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் விரிப்புத் தெரியவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: அறியில்லை கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 9 பேர் தரநிலையுடனான பெயர்: லெப்.கேணல் கலாத்தன் எ செங்கண்ணன், கப்டன் ஈழப்பிரியன், கப்டன் நாவலன், லெப். புகழ்நம்பி, லெப். யாதவன், 2ம் லெப். கனிமதி, 2ம் லெப். சுபநிலா எ கலைநிலா, 2ம் லெப். மூவேந்தன், 2ம் லெப். தணிகைச்செல்வி ஆதாரம்:உதயன்: 22/10/2001 | மாவீரர் பட்டியல் | கட்டுரையாக்கப்பட்ட சிறப்புரை: மருதங்கேணியில் 21/10/2003 அன்று லெப். கேணல் கலாத்தன் நினைவு நூல்நிலையத் திறப்பு விழாவில் பிரிகேடியர் சூசை அவர்கள் உரைத்த சிறப்புரை. திகதி: ஒக்டோபர் 21, 2001 அடிபாட்டுக் காலம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:30 மணியளவு வரை நிகழ்வு இடம்: பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களவரின் கடற்கலங்களை வழிமறித்துக் கடற்புலிகள் நடாத்திய வலிதாக்குதல். இக்கடற்சமரில் வழமை போன்று சிங்கள வான்படையும் சிங்களக் கடற்படைக்கு துணையாக வந்து எதிர் தாக்குதல் நடாத்தியது. சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாக் கடற்கலங்கள் சேதமடைந்தன. இவ்வலிதாக்குதலில் கடற்கரும்புலிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். அவர் மோதியிடிக்க முற்பட்டபோது வீரச்சாவடைந்தாரா அல்லது வேறெப்படியேனும் வீரச்சாவடைந்தாரா என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் கடற்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் சிவா, கப்டன் செல்லப்பன், கப்டன் செந்தளிர், 2ம் லெப். புகழினியன் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: மேஜர் றோசா ஆதாரம்: உதயன்: 22/10/2001 திகதி: ஒக்டோபர் 30, 2001 அடிபாட்டுக் காலம்: எற்பாடு நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கரையிலிருந்து 17 கடல் மைல் தொலைவுக் கடற்பரப்பு கப்பல் மீது முதலாவது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:14 மணியளவில் கப்பல் மீது இரண்டாவது இடியன் மோதிய நேரம்: முதலாவது மோதியிடிப்பிலிருந்து 10 நிமிட இடைவெளியில் நிகழ்வு விரிப்பு: மக்களுக்கான எரிபொருளை ஏற்றிச்செல்கிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றுள்ள படையினருக்கான எரிபொருளை ஏற்றிக்கொண்டு திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ஏமக் கடற்கலங்களோடு சென்று கொண்டிருந்த துன்கிந்த என்ற எரிபொருள் கப்பல் கடற்கரும்புலிகளால் மோதியிடிக்கப்பட்டு வெடித்து எரிந்தது. தாக்குதல் நடந்த சமயத்தில் கப்பலில் 16 கடற்படையினர் மற்றும் தரைப்படையினரும் 11 கப்பல் ஊழியரும் இருந்தனர். கடற்புலிகளின் துணையோடு வந்த கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டனர். 750 இலிருந்து 1000 மெட்ரிக் தொன் அளவிலான எரிபொருளை ஏற்றிச்செல்ல வல்ல இக்கப்பலில் 120 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய், 225 மெட்ரிக் தொன் கந்தக டீசல், 275 மெட்ரிக் தொன் 'லங்கா ஓட்டோ' டீசல் ஆகியன ஏற்றப்பட்டிருந்தன. முதல் மோதியிடிப்பிற்குப் பின் சேதமடைந்த கப்பலை கடற்படையினர் மீட்க முயன்ற போது இரண்டாவது மோதியிடிப்பு நிகழ்ந்தது. இக்கப்பலின் மீதான கரும்புலித் தாக்குதலிற்குப் பின்னர் கப்பலில் நெருப்புப் பிடித்து கொழுந்துவிட்டு பின்னிரவு வரை எரிந்ததைப் பருத்தித்துறைக் கடற்கரையோரத்திலிருந்து கண்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இக்கப்பலின் தீ அணைக்கப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதாக சிங்களப் படைத்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இத்தாக்குதலானது அதே ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி முல்லைத்தீவிலிருந்த கடற்புலிகளின் தளம் ஒன்றின் மீதான சிங்களவரின் வான் தாக்குதலிற்குப் பழிக்குப்பழியாகவும் (இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் யாரும் வீரச்சாவடையவில்லை.) லெப். கேணல் கலாத்தனின் நினைவாகவும் மேற்கொள்ளப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். வெடித்து எரிந்த (ஆனால் மூழ்கடிக்கப்படவில்லை) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: துன்கிந்த கல வகை: எரிபொருள் தாங்கி படிமம்: படிமப்புரவு: shipspotting.com சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இக்கப்பலிலிருந்தோரில் மூவரைக் காணவில்லை ஆனால் ஏனையோர் மீட்கப்பட்டுவிட்டனர் என்று சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் பிரி. சனத் கருணாரட்னேவும் எட்டுப் படைவீரர்கள் கொல்லப்பட்டதோடு பல கடற்கலவர் ஒழிந்தனர் என்று முதலாவது செய்திக் குறிப்பிலும் பல தரைப்படையினரும் கடற்படையினரும் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் வானொலி கூறியது என்று இரண்டாவது செய்திக் குறிப்பிலும் தமிழ்நெற் செய்தி வலைத்தளமுமென செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் கடலரசன் எ சமுத்திரன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் எ கேசவி சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: கவிர் ஆதாரம்: உதயன்: 31/10/2001 | தமிழ்நெற்: 30/10/2001 (Sea Tiger attack in seas off Pt. Pedro), (Fuel ship sunk off Pt. Pedro - VoT) | பிபிசி ஆங்கிலம்: 31/101/2001 (Tamil Tigers claim tanker attack) ******
- 27 replies
-
-
- 1
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
Akkarayan.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
block trench.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ad.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
F0yuFVrWIAETOqJ.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி
(இவ வீரச்சாவடைந்த திகதி தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்) எழுதியவர்: எல்லாளன் (2008) நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.''மகள் கதைக்கட்டாம்... "அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள். ''வழமையான நலஉசாவல்..." தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்...." எல்லாம் முடிய, ''நான் வேற இடம் போறனப்பா....அதுதான் எடுத்தனான்....,இனி எடுத்தால் தான் தொடர்பு....நீங்கள் எடுக்காதீங்கோ....சரி வைக்கிறன் அப்பா...."மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான். ஒரு முறை அவள் வீட்டுக்கு வந்து போனபோது அவளது உடமைப்பையிலிருந்த கடிதமும், படமும் அவள் யார் என்பதைப் பெற்றவரும் உடன் பிறப்புகளும் அறிந்து கொண்டார்கள். ''அவளது உணர்வுகள் மதிப்பளிக்க வேண்டும்" அப்பா உடன் பிறந்தோரை மதிப்பளிக்க வேண்டும்" அப்பா உடன் பிறந்தோரை அமைதிப்படுத்தினார். அதன் பின் நிறையக் களங்களில் பங்கெடுத்திருக்கிறாள். கடமை அழைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் அவள் போய் வந்தாள். ஆனால், எங்கு நிற்கின்றாளோ அங்கிருந்து எப்படியாவது வீட்டோடு தொடர்பை ஏற்படுத்திவிடுவாள். இது அவளின் அன்பின் வெளிப்பாடு. அதே போல்தான், இன்றும் தான் வேறிடம் செல்வவதாக குறிப்பிட்டிருந்தாள். அப்பா, அதை பெரிதாக எடுக்கவில்லை. மீண்டும் மகள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அன்று மாலை இரு போராளிகள் அப்பாவைத் தேடி வந்தார்கள். அப்பாவிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அப்பா நம்ப மறுத்தார். ''இன்று நண்பகல் நான் பிள்ளையோடு கதைத்தேன்... அவள் வேறிடம் போவதாக சொன்னாள்..." ஓமய்யா.... கதைத்திருப்பா... ஏனெண்டா மாலைல 3.30 ற்குத்தான் திருகோணமலைக் கடற்பரப்பில் அந்தக் கரும்புலித்தாக்குதல் நடந்தது..." ''தாக்குதலுக்கு அணியப்படுத்தி படகுகள் எல்லாம் கடலுக்கு இறங்கின பிறகுதான் உங்களோட மகள் கதைச்சிருக்கிறா..."வந்தவர்கள் சொன்னார்கள்அப்போதுதான் அப்பாவுக்கு ஓர் உண்மை புரிந்தது. ''தன் குடும்பத்தை காதலிப்பவளால்தான, தாய் தேசத்தின் மீது அன்பு வைக்க முடியும்" முற்றும்....
-
Believed to be Invisible A-520 | sunk on 2008 may
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
lt. col. jeevan statue iluppadichenai 6-2-2002.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Maaveerar Thuyilum Illam at Muzhangkaavil, photographed on 27 November 2007.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Visuvamadu_MTI_2007.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
elu5.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
mathana regiment.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
06_03_03 - lt. col. mathana.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Akkarayan september 2009.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 2000 திகதி: மார்ச் 6, 2000 அடிபாட்டுக் காலம்: சாமத்தில் மூன்று மணிநேரம் தொடர்ந்து நடந்தது நிகழ்வு இடம்: கொக்கிளாய் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலிகளின் நான்கு படகுகளை கண்ட படையினர் அவற்றின் மீது வலிதாக்குதலை செய்ததையடுத்து கடற்சமர் வெடித்தது. இதில் புலிகளின் படகுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்பப்பட்டாலும் சேத விரிப்பு அறியில்லை. நான் சிங்களவரால் வெளியிடப்பட்ட தகவல்களை ஆவணத்தில் சேர்க்கவில்லை, அவை எப்பொழுதும் அள்ளுகொள்ளையாக காட்டப்படுவதால். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள் (கிளை அறியில்லை): 12 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தவநாதன், மேஜர் குமரச்செல்வன் எ ராகுலன், மேஜர் அறிவுமங்கை, மேஜர் கிளிமொழி, கப்டன் ரஞ்சிதன், கப்டன் சுபநிலா, கப்டன் இருண்மொழி எ அருள்மொழி, கப்டன் பருதி எ கருணை, லெப். செங்கண்ணன் எ ஊரவன், லெப். திலாந்தன், 2ம் லெப். கலைத்தங்கன், வீரவேங்கை கேசவன் இவர்களில் ஆகக்குறைந்தது ஐந்து பேர் கடற்புலிகள் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். ஆதாரம்: உதயன்: 8 & 9/03/2000 | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 12, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 7:30 மணியளவில் நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் இரணைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வலுச் சேர்க்கும் நடவடிக்கை (கடல் வழங்கல்) ஒன்றில் ஈடுபட்டிருந்த கடற்கரும்புலிகளை வழிமறித்த கடற்படைக்கும் கடற்கரும்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் தம்மால் இயன்றவரை சிங்களக் கடற்படையின் படகை தாக்கியழிக்கும் முயற்சியாக நெருங்கிச் சென்ற போது கடற்படையின் சூட்டில் இவர்களின் வள்ளம் வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பினால் ஏற்பட்ட சிதறல்களால் கடற்படையின் டோறா ஒன்று சேதமடைந்தது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதன், மேஜர் பரதன், கப்டன் சுவேந்திரன் எ தினேஸ் ஆதாரம்: உதயன்: 14 & 16/03/2000 | மாவீரர் பட்டியல் | உயிராயுதம் பாகம்-8 திகதி: ஏப்ரல் 7, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியளவில் நிகழ்வு இடம்: நாகர்கோவில் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலிலிருந்த டோறாக்கள் புலிகளின் நாகர்கோவில் வலுவெதிர்ப்பு நிலைகள் (Defence points) மீது கடலிலிருந்தபடி தாக்குதல் நடாத்திக்கொண்டிருந்த வேளை கடற்புலிகளோடு முட்டுப்பட்டு மோதல் வெடித்தது. அப்போது நாகர்கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணிப் போராளிகளில் சிலரான தமிழரசன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் "அப்பாச்சி" (107/105mm) என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட கனவகை படைக்கலனைக் கொண்டு முதலில் ஒரு சுப்பர் டோறா மீது சுட்டனர். சூடுபட்டு அது மூழ்கியது. அதன் கதி அறிய வந்த அடுத்த பேபி டோறாக்கும் அதே கதிதான். புலிகளின் சூட்டால் அதன் கலக்கூட்டில் ஓட்டை விழுந்து கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவிலுள்ள பிட்டி ஒன்றில் மோதி கடலில் ஓரளவிற்கு தாண்டது. தாண்ட பேபி டோறாவைக் கடற்புலிகள் கரைக்கு கட்டியிழுத்து வந்ததாக அறியப்படுகிறது. எதுயெப்படியாயினும் இவ்டோறா கரைக்குக் கொண்டுவரப்பட்டது/ கரைதட்டியது. அதிலிருந்தும் முதலில் மூழ்கியதிலிருந்தும் கடற்புலிகள் படைக்கலன்கள் மற்றும் ஏந்தனங்களைக் கழட்டியெடுத்தனர். இரு டோறாக்களிலுமாகச் சேர்ந்து மொத்தம் 35 பேர் மூழ்கியிருந்தனர். அவர்களில் 19 பேரே சிங்களக் கடற்படையால் மீட்கப்பட்டனர்; அங்கிருந்து பேருந்தில் பயணித்து வல்லிபுரக் கோவில் முகாம் நோக்கிச் சென்றார். 16 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு சிங்களப் படையினன் நீந்தி சென்று அம்பனில் கரைசேர்ந்தார். படிமங்கள்: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: P-493 பேபி டோறா கடற்கல வகுப்புப் பெயர்: P-493 சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) படிமங்கள்: சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 16 பேர் காயப்பட்டோர்: ஆகக்குறைந்தது 1 ஆள் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 8, 9&10/04/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 7/04/2000 (Two Dvoras sunk -LTTE), (Dvora survivor swims ashore, helicopter hit), 9/04/2000 (Tigers list weapons taken from Dvoras) | கட்டுரை: " "தண்டனை எனக்கும்", தேசியத்தலைவரின் மகன் சாள்ஸின் வேண்டுகோள்" - அ.ம.இசைவழுதி திகதி: ஏப்ரல் 12, 2000 அடிபாட்டுக் காலம்: காலை 6:30 மணியளவில் நிகழ்வு இடம்: புத்தளம் முகத்துவாரத்திற்கு அப்பால் குதிரைமலையின் முனைக் கடற்பரப்பு (கற்பிட்டிக் கடற்பரப்பு) நிகழ்வு விரிப்பு: கற்பிட்டித் தளத்தில் ஊடுருவி தாக்குதல் நடாத்த முயன்ற அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவின் கட்டளையாளர் கப்டன் முத்துமணி காட்டிக்கொடுப்பால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவர் நகர்ந்த பரப்பு முசிலீம்கள் பெருவாரியாக வாழும் பரப்பாகும். அவரின் நினைவாக புகழரசன் கடற்கரும்புலிகள் அணியைச் சேர்ந்த கப்டன் வீரமணி அதே கற்பிட்டிக் கடலின் குறித்த பரப்பில் சுற்றுக்காவலில் வந்த வோட்டர் ஜெட் படகை இலக்கு வைத்து கரும்புலியாய்ச் சென்றார். கடற்புலிப் படகுக் கட்டளை அதிகாரிகளான அறிவு மற்றும் சோலைக்குமரன் ஆகியோரின் சண்டைப்படகுகள் வழிமறித்துத் தாக்க மீனவர் வேடத்திலிருந்த இவரின் படகு முன்னகர்ந்து சென்று பகைப் படகை மோதியிடித்து மூழ்கடித்து. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் வீரமணி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: கட்டைப்படகு (Dinghy) ஆதாரம்: உதயன்: 13/04/2000 | தமிழ்நெற்: 12/04/2000 (SLN, Sea Tigers clash off Katpitty) | உயிராயுதம் பாகம் - 8 திகதி: சூன் 5, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை நிகழ்வு இடம்: வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடலில் நடைபெற்ற முறியடிப்புச் சமரின் போது இரு கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. கடற்புலிகளின் படகொன்று கடும் சேதமடைந்து பின்னர் கட்டியிழுத்து வரப்பட்டது. நிகழ்வின் முழு விரிப்பு: (இவ்விரிப்பினுள் இரு டோறாக்கள் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் மூழ்கடிக்கப்பட்டது ஒரு டோறாவும் ஒரு றினிட்டி மறைனும் என்பது குறிப்பிடப்பட வேண்டியதுவாகும்.) மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்:2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா கடற்கல வகுப்புப் பெயர்: றினிட்டி மறைன் சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 15 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 13 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் ஆண்டான் எ சசிகரன், மேஜர் அமுதப்பிரியா, மேஜர் மதிவண்ணன், மேஜர் மருதா, கப்டன் ஜெயவதனி எ சோபனா, கப்டன் சத்தியரூபி கப்டன், இளஞ்சேரன், கப்டன் குயில்மாறன், கப்டன் சேசிகா லெப். மதிவதனன், லெப். குட்டிக்கண்ணன், 2ம் லெப். கலைமுகிலன், வீரவேங்கை மதியழகன் ஆதாரம்: மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/6/2000 (Two super-dvora gun boats sunk) திகதி: சூன் 26, 2000 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணியளவில் தொடங்கி எட்டு மணிநேரம் நீடித்தது நிகழ்வு இடம்: பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கப்பல் தொடரணியில் செல்லும் படைக்கலன்கள் ஏற்றிய கப்பலொன்றை அழிக்கும்படியான தலைவரின் கட்டளைக்கு கடற்புலிகள் செயல்வடிவம் கொடுத்த அடிபாடு இதுவாகும். கட்டளைக்கு ஏற்ப திட்டம் வகுத்து லெப். கேணல் பழனி தலைமையில் லெப். கேணல் ரஞ்சன், மற்றும் மேஜர் ஆழியன் ஆகியோரை படகு கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 சண்டைப்படகுகளும் இவர்களோடு கடற்கரும்புலி மேஜர் சூரனைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட ஒரு வெள்ளை வகுப்புக் குண்டுப்படகில் கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமரன் மற்றும் மேஜர் சந்தனா மற்றும் இன்னும் இரு கடற்கரும்புலிகளும், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பனை கட்டளை அதிகாரியாகக் கொண்ட வெள்ளை வகுப்புக் குண்டுப்படகில் கடற்கரும்புலிகளான கப்டன் பாமினி மற்றும் கப்டன் இளமதி ஆகியோருமாக புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் எற்பாடு 3 மணிக்குப் புறப்பட்டுச் சென்று முல்லைத்தீவிற்கு உயர 60 கடல்மைல் தொலைவில் தரிபெற்றிருந்தனர். அப்போது கடலின் கடும் கொந்தளிப்பாலும் அதிகரித்து வீசிய கடற்காற்றின் வேகத்தாலும் படகுகளைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்துவது தடையாய் இருந்தது. ஆயினும் இதனைப் பொருட்படுத்தாது இரவுப்பொழுதில் இலக்கிற்காக காவலிருந்தனர் கடற்புலிகள். முடிவில், திருமலையிலிருந்து வந்துகொண்டிருந்த உகண கப்பலும் அதற்கான ஏம டோறக்களையும் சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது கடற்புலிகள் பின்தொடர்ந்து சென்று தாக்குதலைத் தொடங்கினர். அப்போது நேரம் சாமம் 1:30 மணியாகும். கடற்சமரின் ஒரு கட்டத்தில் மேஜர் ஆழியன் தனது சண்டைப்படகு மூலம் தாக்குதல் நடாத்தியபடி மேஜர் சூரனின் இடியனை கப்பலிற்கு அருகாமை வரை அழைத்துச் சென்றார். மோதுவிக்க முன்னர் மேஜர் ஆழியனின் படகில் இருந்த லெப். கேணல் சிலம்பரசன் பகைவரின் வலுவெதிர்ப்பு சற்றுத் தணிந்துகொண்டு செல்வதை அறிந்து மேஜர் சூரனின் இடியனில் இருந்த இரு கடற்கரும்புலிகளை நீரினுள் குத்திக்கும் படி கட்டளை வழங்குகிறார். அவர்களும் அப்படியே செய்தனர். பின்னர் இடியனை மோதும் படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இடியனின் தாக்குதலிற்குப் பின்னர் கப்பலிலிருந்து வலுவான சூடு கடற்புலிகளை நோக்கி ஏவல்செய்யப்பட்டது. ஆயினும் மேஜர் ஆழியன் அதற்கு முகம்கொடுத்தபடி தொடர்ந்து எதிர்த்தாக்குதலில் ஏடுபட்டார். அப்போது லெப். கேணல் பழனியும் லெப். கேணல் ரஞ்சனும் மேஜர் நல்லப்பனின் இடியனைக் கொண்டு சென்று மோதுவித்தனர். உடனே கப்பல் வெடித்துச் சிதறி அங்கேயே மூழ்கியது. சமரின் நடுவில் கடற்படையின் டோறா ஒன்றும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு எதுவிதச் சேதமும் ஏற்படவில்லை. நீரினுள் குதித்த கடற்கரும்புலிகளை லெப். கேணல் சிலம்பரசன் தனது படகில் ஏற்றியபடி தளம் திரும்பினார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: மெர்க்ஸ் உகண (Mercs Uhana) கல வகை: படைய வழங்கல் கப்பல் படிமம்: படிமப்புரவு: கப்பலில் பணிபுரிந்த ஒரு சிங்களவர் படிமப்புரவு: கப்பலில் பணிபுரிந்த ஒரு சிங்களவர் சேதமாக்கப்பட்ட (கடுமையாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 10 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் ஞானேஸ்வரன் எ ஞானக்குமார், மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், மேஜர் சந்தனா, கப்டன் இளமதி, கப்டன் பாமினி. சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: வெள்ளை ஆதாரம்: மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 26/06/2000 (Arms ship destroyed - LTTE), (Ship hit in seas off Mullaithivu) | உயிராயுதம் பாகம்-8 | கட்டுரை: எம்.ரி. கொய் தண்டையல் கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசனின் வாழ்க்கை வரலாறு திகதி: செப்டெம்பர் 30, 2000 அடிபாட்டுக் காலம்: நண்பகல் நிகழ்வு இடம்: குதிரைமலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் சிங்களக் கடற்படையின் டோறா ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. தாக்குதலிற்குப் பின்னர் அங்கு அனுப்பப்பட்ட மேலதிக சிங்களப் படகுகளால் மூழ்கிய கலத்திலிருந்து 7 சிங்களக் கடற்கலவர் காப்பாற்றப்பட்டனர். இக்கடற்சமரில் 2 சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 2 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப்பட்டவில்லை. ஆனால் இம்மோதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்பேதும் ஏற்படவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 4 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 1/10/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 30/09/2000 (Tigers sink FAC in Kalpity) திகதி: ஒக்டோபர் 19, 2000 அடிபாட்டுக் காலம்: இரவு நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சிங்களக் கடற்படையின் தகவலின் படி, வெற்றிலைக்கேணியை நோக்கி வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் கலத்தொகுதிக்கும் அங்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் வெடித்த கடற்சமர் இதுவாகும். கடற்சமர் பற்றி தவிபு ஒன்றும் கூறவில்லை. ஆனால் இம்மோதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்பேதும் ஏற்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படகுகள் (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 21/10/2000 | மாவீரர் பட்டியல் திகதி: ஒக்டோபர் 23, 2000 அடிபாட்டுக் காலம்: கடற்சமர்: வைகறை 5:30 மணியளவில் தொடங்கி மூன்று மணிநேரம் தொடர்ந்தது லிகினியா மற்றும் டோறா மீது இடியன்கள் மோதிய நேரம்: வைகறை 5:45 மணியளவில் தரைச்சமர்: எறிகணை வீச்சு: வைகறை 5 மணி சொச்சத்திலிருந்து கடற்சமரின் குறிப்பிட்ட காலம் வரை முற்றுகை உடைப்புச் சமர்: துல்லியமான காலம் அறியில்லை. ஆனால் எறிகணை வீசத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலையே தமது உந்துருளி சிறப்புப்படையினர் (BSF) அவ்விடத்திற்குச் சென்று புலிகளுடன் மிண்டினர் என்றும் அப்போது தம் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு 11 பேர் காயமடைந்தனர் என்று சிங்களம் தெரிவித்ததாக உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மோதல் இரவுவரை தொடர்ந்ததாகவும் உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை ஏவப்பட்ட நேரம்: சரியாக நண்பகல் 10:30 ஏவுகணை ஏவியவர்: இளம்புலி (ராதா விமான எதிர்ப்பு அணி) பாவிக்கப்பட்ட ஏவுகணை செலுத்தி: மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை - 14 (SAM-14) ஏவப்பட்ட இடம்: மார்பிள் கடற்கரையின் டயமன்ட் குன்றின் சாரலில் இருந்து ஏவி உப்பாற்றினுள் வீழ்த்தினார் நிகழ்வு இடம்: கடற்சமர்: திருமலைத் துறைமுகத்தினுள் தரைச்சமர்: எறிகணை வீச்சு: திருமலைத் துறைமுகம் மீது மார்பிள் கடற்கரையிலிருந்து கணையெக்கிகளால் (mortar) எறிகணை வீச்சு நடாத்தப்பட்டது முற்றுகை உடைப்பு: மார்பிள் கடற்கரையை அண்டிய கந்தளாய் ஊற்றுப் பரப்பு நிகழ்வு விரிப்பு: திருகோணமலைத் துறைமுகத்தினுள் கடற்கரும்புலிகளும் கடற்புலிகளும் புகுந்து மேற்கொண்ட தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலிற்காக ஆறு கடற்கரும்புலிகள் 4 கவிர் வகுப்புப் படகுகளில் மாவலி கங்கை ஆற்றிலிருந்து புறப்பட்டு திருமலைத் துறைமுகத்தை நோக்கிச் சென்றனர். அதே சமயம் நாவற்குடா மார்பிள் கடற்கரையிலிருந்து கணையெக்கிகள் மூலம் இனங்காணப்பட்ட திருமலை துறைமுக இலக்குகள் மீது எறிகணை வீச்சு நடாத்தப்பட்டது, திருமலைப் படையணியின் போராளிகளால். இந்தக் குழப்ப நிலையைப் பயன்படுத்தி வைகறை 5:30 மணியளவில் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலி லெப். கேணல் இளங்கோ தலைமையிலான கடற்கரும்புலிகளும் பிறிதொரு இடத்திலிருந்து வந்திருந்த கடற்புலிகளும் சிங்களக் கடற்படையோடு மிண்டினர். கடற்சமரை லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் வழிநடாத்தினார். வெடித்த கடற்சமரில் கடற்கரும்புலிகளின் இரு குண்டுப்படகுகள் "லிஹினியா" விரைவுப் படைக்காவி மீதும் ஒரு டோறாக் கலம் மீதும் வைகறை 5:45 மணியளவில் அடுத்தடுத்து மோதியிடித்து அவற்றை மூழ்கடித்தனர். கடற்சமர் தொடர்ந்து நடைபெற்றது. மூன்றாவது இடியன் உள்ளே வெடிக்க நான்காவது தளம் திரும்பியது. தொடர்ந்தும் கடற்றளம் மீது நடைபெற்றுக்கொண்டிருந்த எறிகணை வீச்சால் அங்கே தரிபெற்றிருந்த மேலும் ஒரு கலம் மூழ்கியது. அப்போது கடற்படைத்தளம் மீது எறிகணைகளை சரமாரியாக ஏவிக்கொண்டிருந்த திருமலை படையணிப் போராளிகள் நிலைகொண்டிருந்த மார்பிள் கடற்கரைக்கு அண்டிய கந்தளாய் ஊற்றுப் பரப்பை சுற்றிவளைத்த கடற்படையினர் மற்றும் தரைப்படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் மூண்டது. இச்சமரில் பொதுமக்கள் மூவர் காயமடைந்தனர். தரைச்சமருக்கு சூட்டாதரவு வழங்கவென வந்த எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்தி ராதா விமான எதிர்ப்பு அணிப் போராளி இளம்புலி அவர்களால் சரியாக நண்பகல் 10:30 மணியில் SAM-14 ஏவுகணை செலுத்தி மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது (இவ் ஏவுகணையின் வெற்றுக்கூடு தற்போது சிறிலங்காவிலுள்ள இரத்தினபுரி வான்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.). இதனை அவர் டயமன் குன்றின் சாரல் தரையைத் தொடும் இடத்திலிருந்து ஏவியிருந்தார். உலங்குவானூர்தியிலிருந்த நான்கு வான்படையினரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் 24ம் திகதி மட்டில் கடற்படை சுழியோடிகளால் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், சுற்றிவளைப்பை வெற்றிகரமாக உயிரிழப்பேதுமின்றி உடைத்துத் தளந்திரும்பியதாக தமிழர் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் மார்பிள் கடற்கரை மற்றும் அண்டிய பரப்புகளிலிருந்து தப்பியோடிய போராளிகளை சிங்களப் படையினர் பிடித்தாத்துடர்ந்த (pursue) போது 24ம் திகதி நாவற்குடாப் பரப்பில் குப்பி கடித்து வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களையும் வகை-56 துமுக்கிகள் இரண்டையும் பல ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றினதோடு, மேலுமொருவர் குப்பி கடித்தபடி உயிர்காக்கப்பட்டு திருமலை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு தகவல் தெரிவித்துள்ளன. அவரிடமிருந்து நிகழ்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலின் போது புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக சிறிலங்காப் படைத்துறையானது கரும்புலிகள் மகாவலி கங்கை ஆற்றில் தமது கவிர் வகுப்புப் படகை ஓட்டும் காட்சி ஒன்றையும் புலிவீரனொருவன் வெறும்மேலுடன் ஒரு போர்த்தளவாடத்தை (வகை - 63 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்தியின் இரு குழல்கள் போன்று தென்படுகிறது.) தோளில் சுமந்த படி நடந்து செல்லும்படியான நிழற்படமொன்றையும் ஆதாரமாக வெளியிட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் இவ்வாறொரு நிகழ்வு நடைபெற்றதாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இத்தாக்குதலினால் திருகோணமலை பட்டணமும் சூழலும் பரப்பில் கடும் பதற்றநிலை நிலவியதோடு நகரமும் அதிர்ந்தது. எறிகணைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் நகரை அண்டிய குடியிருப்புகள் மீதும் வீழ்ந்தன. இதனால் மக்கள் திகிலடைந்தனர். இரவு வரை மார்பிள் கடற்கரை மற்றும் நாச்சிக்குடா பரப்புகளில் மோதல்கள் தொடர்ந்ததால் வெள்ளைமணல் மற்றும் நாச்சிக்குடா பரப்புகளிலிருந்து சுமார் 500 குடும்பங்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்ததாக அற்றை நாளே தகவல்கள் வெளியாகின. உப்பாற்று சுற்றுப்பரப்புகளிலிருந்து சுமார் 250 குடும்பங்கள் வெளியேறி ஆலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயந்த மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு திருமலைக் கோட்டச் செயலர் வேலும்மயிலும் நேரில்சென்று இடருதவிப் பணிகளை மேற்கொண்டார். 24ம் திகதி மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளுத் திரும்பினர். வான்காப்பு போராளி இளம்புலி அவர்களால் சுட்டுவீழ்த்தப்பட்ட எம்.ஐ.24 வித உலங்குவானூர்தியின் மீட்க்கப்பட்ட அழிபாடுகள். | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் மார்பிள் கடற்கரையிலிருந்து தாக்குதல் மேற்கொண்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிகழ்படமாக சிறிலங்கா அரசு வெளியிட்டது: https://eelam.tv/watch/ம-வல-கங-க-ஆற-ற-ல-039-கவ-ர-039-வக-ப-ப-ப-படக-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html https://eelam.tv/watch/mi-24-ரக-த-க-க-தல-உலங-க-வ-ன-ர-த-ச-ட-ட-வ-ழ-த-தப-பட-ட-க-ட-ச_NsSLV9CHjoIY4Wu.html மூழ்கடிக்கப்பட்டு மேலெடுக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கலப் பெயர்: லங்கா ராணி கடற்கல வகை: விரைவுப் படைக்காவி மூழ்கடிக்கப்பட்ட நிலையிலான படிமம்: கடையார் பகுதியில் இடியன் இடித்து பாதி மூழ்கியுள்ளது. | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் படிமம்: 'மேலேடுக்கப்பட்டு திருத்தப்பட்ட பின்னர் கடலில் ஓடும் காட்சி | படிமப்புரவு: slnwwp' கடற்கலப் பெயர்: ரணஜய(Ranajaya) கடற்கல வகை: விரைவுச் சுடுகலப் படகு படிமம்: புலிகளின் அதிரடிக்காரர் ஏவிய உந்துகணை ஒன்று இதன் கடையாரில் பட்டு வெடித்ததில் கடையார் சேதமடைந்து, நீரில் மூழ்கி, பின்னர் மேலெடுக்கப்பட்டது. | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் கடற்கலப் பெயர்: லிஹினியா (Lihiniya) கடற்கல வகை: விரைவுப் படைக்காவி படிமம்: 'கரும்புலி இடித்து மூழ்கடிக்கப்பட்டு பின்னர் மேலெடுக்கப்பட்டது | படிமப்புரவு: அறியில்லை' மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை துறைமுகக் கடற்சமரால் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில் (தொடக்கக் கட்ட அறிக்கையின் படி), கொல்லப்பட்டோர்: 2 பேர் காயப்பட்டோர்: 25 பேர் கந்தளாய் ஊற்று முற்றுகை உடைப்புச் சமரால் சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில் (ஒக்டோபர் 23, 2000 ஆம் ஆண்டு நண்பகல் 11:15 வரை - கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி), கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நித்தி எ சோழவேங்கை, மேஜர் மயூரன், மேஜர் திருமாறன் எ திருவாளவன், மேஜர் நிதர்சன், மேஜர் றோஸ்மன் எ கணேஸ், லெப்.கேணல் றெஜி எ இளங்கோ கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி படிமங்கள்: சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 3 கல வகை: கவிர் ஆதாரம்: உதயன்: 24,25,27 & 28/10/2000 | தமிழ்நெற்: 23/10/2000 (Massive assault on Trincomalee Harbour -LTTE), (Tigers destroy gunboat in Trincomalee SLN Yard), (Mi24 shot down, fighting on Marble Beach) | மாவீரர் பட்டியல் | navypedia: HANSAYA personnel transports (1983/1987) (http://www.navypedia.org/ships/sri_lanka/srl_ls_hansaya.htm) | உயிராயுதம் பாகம் - 9 திகதி: நவம்பர் 2, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 9:45 மணியளவில் நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையிலிருந்து 71 கடல் மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: தொடர்ந்துகொண்டிருந்த விடுதலைப்போரிற்குத் தேவையான எரிபொருளை தொகையாகக் கொண்டுவருவதற்காக "பழனி" என்று பெயரிடப்பட்ட ஒரு எரிபொருள் தாங்கிப் படகு உள்நாட்டிலேயே கடற்புலிகளால் கட்டப்பட்டது. அது ஏமப்படகுகளின் (மகேஸ்வரி என்ற கலப்பெயர் கொண்ட வழங்கல் படகும் மூன்று சண்டைப்படகுகளும் கொண்ட கலத்தொகுதி ஒன்று) துணையோடு குறித்த ஆழ்கடலிற்குச் சென்று அங்கிருந்த தமிழீழ வணிகக் கப்பலிலிருந்து எரிபொருளை ஏற்றியபடி முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது கரையிலிருந்து 71 கடல் மைல் தொலைவில் இவர்களை சிங்களக் கடற்படையின் ஆழ்கடல் சுற்றுக்காவல் கலமான சுரணிமாலா (இசுரேலால் வழங்கப்பட்டது) வழிமறிக்க மோதல் வெடித்தது. அப்போது பழனி படகிலிருந்த கடற்கரும்புலிகளான லெப்.கேணல் பெத்தா, மேஜர் சதா, மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் வல்லவன் மற்றும் கடற்புலி லெப். கேணல் சதீஸ் ஆகியோர் தாங்கியின் பாதுகாப்பிற்குப் பொருத்தப்பட்டிருந்த படைக்கலனால் பகைக் கலத்தை நோக்கிச் சுட்டனர். ஆயினும் சூட்டுவலு கூடிய சிங்கள ஆழ்கடல் கலத்தின் சூட்டில் தமிழரின் எரிபொருள் தாங்கியால் நின்றுபிடிக்க இயலவில்லை. அதன் இயந்திரம் சேதமடைந்து நகராமல் கடலிலேயே நின்றுவிட்டது. இருந்தாலும் பின்னால் வந்துகொண்டிருந்த ஏனைய கடற்புலிப் படகுகள் சுரணிமாலாவின் முற்றுகையை உடைத்து பழனியின் கலக்குழுவினரை வழங்கல் படகான மகேஸ்வரியில் ஏற்றினர். இதன் பின்னர் 'பழனி'யின் தொழினுட்பம் பகைவரின் கையில் சிக்கக்கூடாது என்பதற்காக படகிலிருந்த எரிபொருளை எடுத்து படகு முழுவதும் ஊற்றி தன்னோடு சேர்த்துக் கொளுத்தி தானும் வீரச்சாவடைந்தார், பழனியின் தொலைத்தொடர்பாளரான கடற்கரும்புலி மேஜர் இலக்கியன். பேந்து புலிகளின் ஏமக் கலத்தொகுதி காயமடைந்திருந்த கடற்கரும்புலிகளோடும் கடற்புலிகளோடும் முல்லைத்தீவுக் கடற்புலிகளின் கடற்றளம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது காங்கேசன்துறையிலிருந்தும் திருமையிலிருந்தும் 15 இற்கும் மேற்பட்ட சிங்களக் கடற்படையின் டோறாக்கள் திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளோடு பொருதினர். கடற்புலிகளின் கலத்தொகுதிக்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து கடற்புலிகளின் மேலதிகச் சண்டைப்படகுகள் விரைந்து சென்று டோறாக்களின் மேல் தாக்குதலைத் தொடுக்க பாரிய கடற்சமர் வெடித்தது. தொடர்ந்த கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்றின் ஓட்டியான கடற்கரும்புலி லெப். கேணல் சல்மானும் வேறு சில போராளிகளும் வீரச்சாவடைய கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமுமடைந்தனர். கடற்படையின் வலிதாக்குதலை முறியடித்துக் கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் பின்னர் கரைசேர்ந்தன. சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 10 பேர் கடற்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் சதீஸ் எ சதீஸ்குமார், மேஜர் குமரவேல், மேஜர் நிலவன், கப்டன் குமார் எ உயிரோவியன் கடற்கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘கப்பல் தண்டையல்’ லெப்.கேணல் பெத்தா எ கதிர்காமரூபன், ‘சண்டைப்படகு ஓட்டி’ லெப்.கேணல் சல்மான் எ இரும்பொறை, மேஜர் சதா எ சதாசிவம், மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், 'இயந்திரப் பொறியியலாளர்' கப்டன் வல்லவன் படிமங்கள்: ஆதாரம்: உதயன்: 3/11/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (LTTE boat destroyed -SLN) | உயிராயுதம் பாகம்-9 திகதி: நவம்பர் 3, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 7:45 மணியளவில் நிகழ்வு இடம்: திருமலைத் துறைமுக வாசலில் நிகழ்வு விரிப்பு: சம்பூர் கரையிலிருந்து புறப்பட்டுச் சென்ற இடியன் திருமலை துறைமுகத்தினுளிருந்து சுற்றுக்காவலிற்காக வெளியே வந்த டோறா மீது மோதி வெடித்ததில் டோறா சேதமடைந்தது. அவ்டோறா பின்னர் துறைமுகத்தினுள் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுடர்மணி எ செங்கதிர், லெப்.கேணல் நரேஸ் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் படிமங்கள்: சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: கவிர் ஆதாரம்: உதயன்: 6/11/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (LTTE boat destroyed -SLN) ******
- 27 replies
-
-
- 1
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
ஆண்டு: 1999 திகதி: சனவரி 29 & 30, 1999 அடிபாட்டுக் காலம்: திகதி சாமம் 10 மணி முதல் 30ம் திகதி வைகறை 4 மணி வரை நிகழ்வு இடம்: சாலைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் புலிகளுக்கு படைக்கலன்களை ஏற்றியபடி இரு வழங்கல் கப்பல்கள் வருவதாக சிறிலங்காப் படைத்துறைக்கு புலனாய்வுத் தகவலொன்று கிடைத்தது. கமுக்கமான தகவலையடுத்து கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையின் டோறா ஒன்றும் சுடுகலப் படகுகள் பலவும் வழங்கல்களை கப்பலிலிருந்து ஏற்றிக்கொண்டு கரை திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் வழங்கல் & சண்டைப் படகுகளைக் கொண்ட கலத்தொகுதியோடு மிண்டின. அப்போது வெடித்த கடற்சமரில் கடற்படையின் தாக்குதல்களை சமாளித்தவாறு கடற்புலிகள் சேதமின்றி கரைக்குத் திரும்பினர். நடந்த கடற்சமரில் கடற்படையின் டோறா ஒன்று சேதமாகியது. பின்னர், மேற்கொண்டு நடந்த தேடுதலில் வழங்கல்களை ஏற்றி வந்ததாகக் கருதப்படும் தமிழகத்தில் பதிவு செய்த கொமாண்ட் (MT Command) என்ற தாங்கியையும் கொமாண்டல் கிளிப்பா (Commandal Clippa) என்ற சரக்குக் கப்பலையும் பிடித்து ஏமத்தோடு திருமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். சோதனை செய்து அவற்றில் ஐயத்திற்குரிய பொருட்கள் ஏதுமில்லாததால் புலிகளினுடையது இல்லை என்று நம்பி விடுவித்தனர். ஆனால் இவற்றிலிருந்து வழங்கல்களை இறக்கிய பின்னரே கடற்படையினர் இவற்றை பிடித்து சோதனை செய்தனர் என்று கொழும்பு வட்டாரங்கள் தமிழ்நெற்றிற்குத் தெரிவித்தனர். சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வேங்கை, மேஜர் அகிலன் எ சாந்தகுமார், மேஜர் கலியரசன் ஆதாரம்: உதயன்: 29/01/1999 | தமிழ்நெற்: 30/01/1999 (Three Sea Tigers killed - radio), (Four Sea Tigers killed -SLN) திகதி: பெப்ரவரி 18, 1999 அடிபாட்டுக் காலம்: சாமம் நிகழ்வு இடம்: கிளாலி கடற்படைத்தளம் நிகழ்வு விரிப்பு: பெப்ரவரி 25, 1998 அன்று இலக்கு வைக்கப்பட்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகே இம்முறையும் இலக்காகியது. ஆனால் போன தடவையைவிட இந்தத் தடவை தளத்தின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால் கடற்படைத் தளத்தின் வாசலில் வைத்துத் தாக்கிக் கைப்பற்றுவது திட்டமாக இருந்தது. அதற்கமைவாக 7 பேர் கொண்ட ஒரு சதளமாக கடற்சிறுத்தைகள் சென்றனர். முன்னர் சென்ற மூன்று சதளத் தலைவர்களில் (Squad Leader) ஒருவரே இம்முறை சதளத் தலைவராக அனுப்பப்பட்டார். தாக்குதலை கட்டளையாளர் லெப். கேணல் சேரமான் நேரடியாக வழிநடாத்தினார். ஆனால் இம்முறையும் வோட்டர் ஜெட் வரவில்லை. பி 174 என்ற தொடரெண்ணை உடைய கே-71 என்ற வகுப்புப் பெயரைக் கொண்ட படகே வந்ததால் அதைத் தாக்கிக் கைப்பற்றக் கடற்சிறுத்தைகள் திட்டமிட்டனர். தாக்குதலின் போது படகிலிருந்த அத்தனைக் கடற்படையினரும் கொல்லப்பட்டதோடு கே-71 படகு வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டு தளம் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதலில் இரு சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலிருந்ததால் புலிகளாலையே புனித படைய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. படகிலிருந்து படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன. பின்னாளில் இக்கடற்கலத்திற்கு "நிமல்" என்ற பெயரைக் கலப்பெயராகக் கடற்புலிகள் சூட்டினர். கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கே-71 படிமம்: கைப்பற்றப்பட்ட கலத்தைப் பாவித்து சமாதான காலத்தில் தென் தமிழீழத்தில் வழங்கல் பணியில் ஈடுபடும் கடற்புலிகள் | படிமப்புரவு: தவிபு-ல் எடுக்கப்பட்டது. பின்னர் அந்நிழற்படத்தை அவர்களிடமிருந்து சிங்களம் கைப்பற்றி உவர்மலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது ஆனையிறவுக் களப்பில் சிங்களக் கடற்படையின் வழங்கல் படகுகளை வழிமறித்து கே-71 படகிலிருந்து பொருதும் கடற்புலிகள். | படிமப்புரவு: தவிபு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்ட கடற்படையினர்: அறியில்லை வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: திரைப்படம்: ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ என்ற இந்நடவடிக்கையினை அப்படியே காட்சியாக மனக்கண் முன் நிறுத்திய ஆவணத் திரைப்படம் | உதயன்: 19, 20 & 22/02/1999 | தமிழ்நெற்: 19/02/1999 (Sea Tigers attack SLN patrol - VoT) திகதி: மே 25, 26 1999 அடிபாட்டுக் காலம்: 25ம் திகதி சாமம் 11 மணியிலிருந்து வைகறை 2:30 மணிவரை நடந்தது. நிகழ்வு இடம்: அளம்பில் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: அளம்பில் கடற்பரப்பில் விடுதலைப்போரிற்கு வலுச் சேர்க்கும் நடவடிக்கையாக வழங்கல்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த வழங்கல் படகுகளுக்கு ஏமம் வழங்கிக்கொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகிற்கும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் மோதல் மூண்டது. அப்போது கடற்புலிகளின் சண்டைப்படகிற்கு உதவியாக மேலும் நான்கு சண்டைப்படகுகளும் அவ்விடத்திற்கு விரைந்தன. வெடித்த கடற்சமரில் கடற்படையின் டோறா ஒன்று சேதமாகியது. இச்சமரின் போது கடற்படை டோறாவின் நகர்திறனை லெப். கேணல் பிரசாந்தன் தான் தனது முதன்மைச் சுடுகலனின் சூட்டால் நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டோர்: இழப்பில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 7 தரநிலையுடனான பெயர்கள்: 'படகுக் கட்டளை அதிகாரி' லெப். கேணல் பிரசாந்த் எ பிரசாந்தன், மேஜர் வர்ணன், மேஜர் சுருளி எ நாயகன், மேஜர் தேன்மொழி, கப்டன் வசந்தராணி, லெப். மடந்தை, லெப். அன்புக்குயில் எ தர்மா ஆதாரம்: உதயன்: 27 & 28/05/1999 | தமிழ்நெற்: 27/05/1999 (Seven Tigers killed in naval battle -VoT) | கட்டுரை: லெப் கேணல் நிசாந்தனின் வாழ்க்கை வரலாறு திகதி: சூலை 25, 1999 அடிபாட்டுக் காலம்: வைகறை 3:30 மணியளவில் நிகழ்வு இடம்: தலைநகர் திருகோணமலைத் துறைமுகத்தின் புதிய இறங்குதுறை நிகழ்வு விரிப்பு: ப.நோ.கூ.ச. சொந்தமான இக்கப்பலானது 1998 ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் வருவாயின்மை காரணமாக 1998ஆம் ஆண்டே இதன் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் சி. கடற்படையின் அனுமதியுடன் சேவையைத் தொடர்ந்தது. துறைமுகக் காவல் நிலையத்திற்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதிய இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்தது. அப்போது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் நீரடியால் நீந்திச் சென்று தரித்து நின்ற கப்பலின் கலக்கூட்டில் (hull) நேரக்கணிப்பு நீரடிக் குண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்து கப்பலை மூழ்கடித்தனர். இது ஒரே தடவையில் 350 பயணிகளை ஏற்றிச்செல்ல வல்லதாகும். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: நியூக்கோ என்டூரன்ஸ் (Newco Endurance) கல வகை: பயணிகள் வலசை (Passenger Ferry) படிமம்: மூழ்கடிக்கப்பட்ட வலசையின் அழிபாடுகள் | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் சிறிலங்கா ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: கப்பல் தண்டையல் சவிரிமுத்து அருள்நாயகம் காயப்பட்டடோர்: கப்பல் காவலாளி எஸ். சண்முகம் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 26/07/1999 | தமிழ்நெற்: 25/07/1999 (Passenger ferry sunk by powerful blast) திகதி: ஓகஸ்ட் 12, 1999 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணிநேரம் நடந்தது நிகழ்வு இடம்: கொக்கிளாய் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் நான்கு படகுகள் ஆழ்கடலில் திருமலை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த சிறிலங்காக் கடற்படையினர் அவற்றினை வழிமறித்து கொக்கிளாய் ஆழ்கடற்பரப்பில் மிண்டினர். அப்போது மூண்ட கடற்சமரில் கடற்படையினரின் டோறா ஒன்று சேதமடைந்தது. அதே நேரம் கடற்படையினர் தாம் இரு கடற்புலிப் படகுகளை சேதமாக்கியதாகவும் அவை கொக்கிளாய்க்கு "எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அளம்பில் நோக்கி கட்டியிழுத்துச் செல்லப்பட்டதாகத்" தெரிவித்தனர். கடற்படையினர் வழமையாக விடும் அள்ளுகொள்ளையான கணக்கில் இதுவும் ஒன்றா அல்லது மெய்யிலையே நடந்ததா என்பது பற்றி அறியமுடியவில்லை. புலிகள் பொதுவாக தமது சண்டைப்படகுகள் ஏதேனும் மூழ்கினால் மட்டுமே அறிவிப்பதுண்டு. சேதத்தினைப் பற்றி அத்தி பூத்தாற் போலவே வாய்திறப்பதுண்டு. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 14/08/1999 | தமிழ்நெற்: 13/08/1999 (Dvora damaged - VoT), (Two LTTE boats damaged-SLN) திகதி: ஓகஸ்ட் 16, 1999 அடிபாட்டுக் காலம்: வைகறை 3:15 மணியிற்குப் பின்னர் தொடங்கியது டோறா மீது இடியன் மோதிய நேரம்: வைகறை 3:15 மணி நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்சமர்களின் போது கடற்புலிகள் துரத்தத் தொடங்கினால் எப்பொழுதும் டோறாக்கள் தப்பியோடிவிடும். ஆதலால் அவற்றை மோதியிடித்துவிட்டு பின்னர் தாக்கித் தாட்டுவிடும் வியூகமொன்றோடு கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன் தலைமையிலான மூன்று சண்டைப்படகுகளைக் கொண்ட கலத்தொகுதியும் லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான மூன்று சண்டைப்படகுளைக் கொண்ட மற்றொரு கலத்தொகுதியும் நாயாற்றுத் தொடுவாயில் ஆயத்தமாய் காத்திருந்தன. அதேநேரம் இரு கடற்கரும்புலிகளைக் கொண்ட இடியனொன்று புல்மோட்டைக்கும் புடவைக்கட்டுக்கும் இடையில் சென்று ஆயத்தமாய் நின்றது. அப்போது கடற்கரும்புலிகளின் இடியனை நோக்கி விரைந்து வந்த டோறாவை தமது இடியனில் பூட்டப்பட்டிருந்த இயந்திரச் சுடுகலனைப் பாவிக்காமலேயே மோதியிடுக்கும் துணிகர தாக்குதலில் ஈடுபட முயன்றனர் கடற்கரும்புலிகள். அப்போது டோறாவின் சூட்டிற்கு இலக்காகி, மோதுவதற்கு 5- 10 மீட்டர்களே இருக்கையில் இடியன் வெடித்துச் சிதறியது. இதனால் டோறாவும் வலுத்த சேதமடைகிறது. அதை மூழ்கடித்து விட விரைந்த கடற்புலிகளின் சண்டைவண்டிகளுக்கும் ஆதரவிற்கு விரைந்த டோறாகளுக்குமிடையில் கடற்சமர் வெடித்தது. ஆனாலும் சேதமடைந்த டோறாவை ஏனைய டோறாக்கள் பாதுகாப்பாக கட்டியிழுத்துச் சென்றுவிட்டன. சமரின் பின்னர் புலிகளின் குரலால் டோறா ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் பின்னாளில் வெளியான உயிராயுதம் பாகம்-7 இல் புலிகள் தம் முதல் தகவல் அறிக்கை பிழையென்பதை மறைமுகமாக ஏற்று டோறா சேதமென்றே ஒப்புக்கொண்டனர். சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: தவிபுவின் முதல் தகவல் அறிக்கை பிழையென்று மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. காயப்பட்டடோர்: தவிபுவின் முதல் தகவல் அறிக்கை பிழையென்று மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் அந்தமான் எ எழில்வேந்தன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: கவிர் ஆதாரம்: உதயன்: 17/08/1999 | தமிழ்நெற்: 16/08/1999 (Confusion over firing at sea), (SLN Dvora sunk - radio) | உயிராயுதம் பாகம்-7 இல் திகதி: செப்டெம்பர் 26 & 27, 1999 அடிபாட்டுக் காலம்: 26 ம் திகதி சாமம் 10 மணி முதல் 27ம் திகதி வைகறை 4 மணி வரை நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த படையினரின் கடற்கலத் தொடரணியை இலக்கு வைத்து முல்லைத்தீவிற்கு உயர 50 கடல் மைல் தொலைவில் கடற்புலிகள் வலிதாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். இதற்காக அப்போதைய கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன், லெப். கேணல் இரும்பொறை (பின்னாளைய துணைக் கட்டளையாளர்), கடற்கரும்புலி லெப். கேணல் நிரஞ்சன் ஆகியோரைக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட சண்டைப்படகுகளும் இவர்களின் தலைமையில் கடற்கரும்புலிகளான மேஜர் உமேசன், மேஜர் விடுதலை, மேஜர் நாதவேணி ஆகியோரைக் கொண்ட இடியன் ஒன்றுமாக ஒரு கலமணியாகச் சென்று தாக்குதலைத் தொடுத்தனர். சமர் உக்கிரமடைய கடற்புலிகளின் மேலதிக சண்டைப்படகுகளும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்ததாக சிங்களக் கடற்படை தெரிவித்திருந்தது. அப்போது காங்கேசன்துறையிலிருந்தும் திருமலையிலிருந்தும் மேலதிக தாக்குதல் கலங்கள் படையினருக்கு உதவியாகவும் வந்து சேர்ந்தன. சமரின் போது எகிப்திலிருந்து சென்னைக்கு 14 ஆயிரம் மெற்றிக் தொன் உரவகைகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த - சீனாவில் பதிவுசெய்யப்பட்ட - எம். வி. யுஜியா என்ற சரக்குக்கப்பல் விடுதலைப்புலிகளின் தாக்குதலிற்கு உள்ளானது. இக்கப்பல் மீது படகு ஒன்றில் வந்த ஆயுததாரிகளே உந்துகணைகளையும் சுடுகலன்களையும் கொண்டு தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் புலிகளாக இருக்கலாம் என்று தாம் ஐயப்படுவதாகவும் கப்பலின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இருந்தபோதிலும் 'உயிராயுதம் பாகம்-8' இல் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் விளக்கியிருந்த இக்கடற்சமர் தொடர்பான விரிப்பில், இக்கப்பல் மேலே தான் கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை சூசகமாகக் கூறியிருப்பதாக ஊகிக்கிறேன்; சாதாரணமாக கடற்கலங்களின் வகுப்புப் பெயரை விதப்பாகக் குறிப்பிடும் அவர் இத்தாக்குதலிற்கு மட்டும் 'இலக்கு' என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டிருந்ததை வைத்தே இவ்வாறு நான் "ஊகிக்கத் தலைப்படுகிறேன்". புலிகள் என்று நம்பப்படுபவர்களின் தாக்குதலில் கப்பல் வலுத்த சேதமடைந்திருந்தாலும் கப்பலிலிருந்த சீனக் கலக்குழுவினருக்கு எவ்வித உடற்சேதமும் ஏற்படவில்லை. சமரின் முடிவில் கப்பல் திருமலை வட்டத்தீவை நோக்கி கட்டியிழுத்துச் செல்லப்பட்டது, சிங்களக் கடற்படையின் சிறப்புக் கடற்படைப் படகுகளால். சமர் நடந்த அடுத்த நாள் கடற்படையினரே கப்பல் மீது தாக்குதல் நடாத்தியதாக 'புலிகளின் குரல்' வானொலியும் விடுதலைப்புலிகளே தாக்குதல் நடாத்தியதாக கடற்படையினரும் என்று அடிபட்ட இரு கன்னையினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொண்டனர் குறிப்பிடத்தக்கது. இச்சமரில் கடற்படையின் இரு படையப் படகுகள் சேதமடைந்தன. சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: படையப் படகுகள் (விதப்பான வகுப்பு அறியில்லை) - 2 கடற்கலப் பெயர்: எம். வி. யூஜியா (MV Yujiya) கல வகை: சரக்குக் கப்பல் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 4 பேர் கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: கப்டன் தமிழ்க்குன்றன் கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் உமேசன் எ செழியன், மேஜர் ரவி எ விடுதலை, மேஜர் நாதவேணி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: வெள்ளை ஆதாரம்: உதயன்: 28/09/1999 | தமிழ்நெற்: 27/09/1999 (Damaged merchant vessel towed to port) | உயிராயுதம் பாகம்-8 திகதி: ஒக்டோபர் 7, 1999 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணியிலிருந்து வைகறை 5:30 மணிவரை நிகழ்வு இடம்: கச்சதீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த நாளன்று இந்தியாவிலிருந்து கரை நோக்கி வந்துகொண்டிருந்த வழங்கல் படகுகளுக்கான - மருத்துவப் பொருட்களுக்கானது - ஏமத்திற்காக அளம்பிலிலிருந்து கட்டளைப் படகான 'கேசவன்' என்ற கலப்பெயர்கொண்ட படகும் (வேவ் ரைடர் வகுப்பு) இன்னும் இரண்டு படகும் (கலப்பெயர் & வகுப்புப் பெயர் அறியில்லை) என ஒரு கலத்தொகுதி படகுகாவிகள் மூலம் மன்னாருக்கு அனுப்பப்பட்டன. உரகடலில் காரிருட்டில் வந்துகொண்டிருந்த தமிழரின் இரு வழங்கல் படகுகளையும் சிங்களவரின் டோறாக்கள் கண்டு வழிமறித்துத் தாக்கத் தொடங்கின. உடனே கரையிலிருந்த தமிழரின் கலத்தொகுதி கடலேறி ஏமத்திற்கு விரைந்தது. கலத்தொகுதியின் கட்டளையாளராக லெப். கேணல் நிரோஜன் கேசவன் படகில் சென்றார். வழியில் இயந்திரக் கோளாறு காரணமாக துணையாய் சென்ற இரு சண்டைப்படகுகளும் மெள்ளமாய் நகர்ந்தன. கலத்தொகுதியின் கதுவீ மோசமான காலநிலை காரணமாகச் சரிவரத் தொழிற்படவில்லை. ஆகையால் கடல் பட்டறிவின் துணையுடன் துணைகளை எதிர்பார்க்காமல் முன்னேறிச் சென்றது கேசவன் படகு. ஆனால் அங்கே அடிவேண்டி ஒரு வழங்கல் படகு மூழ்கிவிட்டிருந்தாலும் அதன் கலமர் பாதுகாப்பாக மற்றைய வழங்கல் படகில் இருந்தனர். அந்த மனநிறைவுடன் கடற்புலிகளின் கட்டளைப்படகு பகைவருடன் பொருதிக்கொண்டிருந்த போது வழங்கல் படகு பத்திரமாக கரை சேர்ந்தது. சிறிது நேரத்தில் கடலில் நடந்த சமரில் கேசவன் படகின் இயந்திரம் சேதமடைந்து அசையாமல் நின்றது. துணைப்படகுகள் இரண்டும் தம்மால் இயன்ற வரை நெருங்கி முன்னேறிய போது கேசவன் படகு தீமூண்டு மூழ்கிக்கொண்டிருந்தது, அதன் கலக்குழுவினரோடு. இக்கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் டோறாக்களில் இரண்டு மெல்லிய சேதமாகியது என்று உதயனும் ஒன்று சேதமாகியது என்று தமிழ்நெற்றும் செய்தி வெளியிட்டுள்ளன. சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 / 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டடோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 15 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்’ லெப். கேணல் நிரோஜன், மேஜர் காமினி எ ஜெயராஜ், மேஜர் நகுலன், மேஜர் குகன் எ செல்லையா, மேஜர் சோழன், கப்டன் இளநிலவன், லெப். நாகமணி, லெப். பாவேந்தன், லெப். சொற்கோ, லெப். தமிழ்நம்பி, 2ம் லெப். மாறன், 2ம் லெப். இசைவாணன், வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், வீரவேங்கை இனியவன் ஆதாரம்: உதயன்: 8, 9 &10 /10/1999 | தமிழ்நெற்: 7/10/1999 (Fifteen Tigers killed - VoTt), (LTTE boat sunk, four killed - SLN) | கட்டுரை: லெப். கேணல் நிரோஜனின் வாழ்க்கை வரலாறு திகதி: ஒக்டோபர் 14 & 15, 1999 அடிபாட்டுக் காலம்: 14ம் திகதி சாமம் 10:00 மணி முதல் 15 திகதி வைகறை 3:00 மணி வரை நிகழ்வு இடம்: கொக்கிளாய்க் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வன்னியிலிருந்து 200இற்கும் மேற்பட்ட போராளிகளை தலைநகர் திருமலைக்கும் திருலைமையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட போராளிகளை வன்னியிற்குமாக ஏற்றிப்பறிக்கும் வழங்கல் நடவடிக்கை தேசியத் தலைவரால் கடற்புலிகளிடம் கையளிக்கப்பட்டது. இதற்கமைவாக லெப். கேணல் கோகுலன், லெப். கேணல் பழனி மற்றும் கடற்சிறுத்தைக் கட்டளையாளர் லெப். கேணல் சேரமான் ஆகியோரைக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட சண்டைப்படகுகள் ஐந்தும் கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவத்தை கட்டளை அதிகாரியாகக் கொண்ட இடியனில் கடற்கரும்புலிகளான மேஜர் பரணி, மேஜர் கலைமகள் ஆகியோரும் கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட இடியனில் கடற்கரும்புலிகளான மேஜர் சூரியப்பிரபா, கப்டன் சுதா ஆகியோருமென ஒரு கலத்தொகுதியாகப் புறப்பட்டுச் சென்றனர் (இவற்றைத் தவிர வேறு குண்டுப்படகுகளும் சென்றனவா என்பது தெரியவில்லை) இக்கலத்தொகுதியில் போராளிகளை ஏற்றிய மிராஜ் வகுப்பு மற்றும் பல்வேறு வகுப்பு வழங்கல் படகுகளும் இடம்பெற்றிருந்தன. கொண்டுசென்ற போராளிகளை இறக்கவேண்டிய இடத்தை நோக்கி கலத்தொகுதி சென்றுகொண்டிருக்கையில் திருமலையிலிருந்த கடற்படையினர் இவர்களைக் கண்டு அவ்விடத்திற்கு விரைந்தனர். வந்த கடற்படையினரோடு கடற்புலிகள் பொருதி கடற்சமர் நடந்துகொண்டிருக்கையில் இறக்கியேற்ற வேண்டியவர்களை குறித்த இடத்தில் இறக்கியேற்றிவிட்டு அங்கிருந்து கடற்புலிகள் திரும்பினர். வந்துகொண்டிருக்கையில் புடவைக்கட்டு கடற்பரப்பில் கடும்சமர் நடந்துகொண்டிருந்தது. இச்சமரில் லெப். கேணல் பழனியின் கலத்தொகுதி ஒரு பக்கத்தாலும் லெப். கேணல் கோகுலனின் கலத்தொகுதி இன்னொரு பக்கத்தாலும் சமராடிக்கொண்டிருக்கையில் ஒரு டோறா வலுத்த சேதமாகி நகராமல் நின்றது. அதை இலக்கு வைத்துப் பாய்ந்து சென்ற இரு இடியன்கள் மோசமான மேகமூட்டத்தின் காரணமாக தெளிவான பார்வையின்மையால் இலக்குப்பிசகி தமக்குள்ளையே மோதி வெடித்துச்சிதறின. ஆயினும் தொடர்ந்து சமராடிய கடற்புலிகள் ஏனைய போக்குவரவுப் போராளிகளைப் பத்திரமாகக் கரை சேர்த்தனர். சேதப்பட்ட (மோசமான) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 7 பேர் கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: மேஜர் துவாரகன் கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் பழனியப்பன் எ புவேந்திரன் எ புவனேஸ், லெப்.கேணல் அருந்தவம், மேஜர் கோபி எ பரணி, மேஜர் சூரியப்பிரபா, மேஜர் கலைமகள், கப்டன் சுதா எ சுதாகரன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: வெள்ளை ஆதாரம்: உதயன்: 16/10/1999 | தமிழ்நெற்: 15/10/1999 (Twenty Tigers killed in sea battle -SLN), 16/10/1999 (Seven LTTE casualties in sea battle -Radio) | உயிராயுதம் பாகம்-8 திகதி: திசம்பர் 8, 1999 அடிபாட்டுக் காலம்: வைகறை 3:30 மணியளவில் நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் நின்றிருந்த கப்பல்களிலிருந்து கரைக்கு வழங்கல்களைக் கொண்டுவரும் நடவடிக்கைக்கு, புலிகளின் மொழியில் 'வலுச் சேர்க்கும் நடவடிக்கை', எந்தவொரு எடையூறும் சிங்களக் கடற்படையால் ஏற்படாவண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையொன்றை ஒரு குண்டுப்படகைக் கொண்டு ஆழ்கடலில் மேற்கொண்டனர். தேவைப்படும் போது கண்காணிப்பில் ஈடுபடும் குண்டுப்படகே சண்டைப்படகுகளின் துணையின்றி இடையூறை ஏற்படுத்தும் இலக்கின் மீது தாமாக மோதியிடிப்பதுவென திட்டமிடப்பட்டது. இதற்கமைவாக 08/12/1999 அன்று வழங்கல்களுக்குப் பயன்படும் மிராஜ் வகுப்புப் படகொன்றில் (பொதுவாக சுடுகலன் ஒன்று பூட்டப்பட்டிருக்கும்) நான்கு கடற்கரும்புலிகள் புறப்பட்டுச் சென்றனர். கண்காணிப்பில் இவர்கள் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கத்தில் வலுச் சேர்க்கும் நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. அப்போது கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழரின் படகை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த 8 டோறாக்கள் கொண்ட சிங்களவரின் கலத்தொகுதியொன்று கண்டுகொண்டது. தனியனாக நின்ற படகை அழிக்கவென சிங்களவரின் டோறா ஒன்று கீழிறங்கி வர அதை மோதியிப்பதற்கு கடற்புலிகளின் படகு உயரச் சென்றது. டோறாவை நெருங்கி மோதுவதற்காக எத்தனித்த போது அவ்டோறாவிலிருந்த கடற்படையினரின் சூட்டில் இடியன் வெடித்துச் சிதறியது. எனினும் இடியனின் வெடியதிர்வில் டோறா மீளப் பாவிக்கேலாதளவு சேதமாகி ஏனைய டோறாக்களால் திருமலைக்கு கட்டியிழுத்துச் செல்லப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 4 பேர் காயப்பட்டோர்: 5 பேர் வீரச்சாவடைந்த கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கார்வண்ணன் எ சிவரூபன், மேஜர் இசைக்கோன், மேஜர் ரங்கன் எ யாழ்வேந்தன், கப்டன் கானவன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: மிராஜ் கலப்பெயர்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 9/12/1999 | தமிழ்நெற்: 08/12/1999 (Naval clash kills 4), 09/12/1999 (4 Tigers killed) | உயிராயுதம் பாகம்-8 திகதி: திசம்பர் 30, 1999 அடிபாட்டுக் காலம்: காலை 9:30 மணியளவில் நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு நிகழ்வு விரிப்பு: ஓயாத அலைகள்-03 தொடர் படைய நடவடிக்கை நடந்து கொண்டிருந்த போது குறித்த நாளில் கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி சிங்களக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தின் (SBS) தொடரணி ஒன்று வழங்கல் நடவடிக்கைக்காக நகர்ந்துகொண்டிருந்தது. அது கொக்குப்பிட்டியில் இருந்த போராளிகளால் கவனிக்கப்படுகிறது. அத்தொடரணியில் 3 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள், 4 கூகர் வகுப்புப் படகுகள் மற்றும் 8 புளூஸ்ரார் வகுப்புப் படகுகள் என்பன உள்ளடங்கியிருந்தன. பகைவரின் இந்த நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய வகைப் படகுகள் இரண்டும் (ஒன்றின் வகுப்புப் பெயர் கே-71) கரும்புலிப் படகு ஒன்றுமென ஒரு சதளமாக கொக்குப்பிட்டியில் இருந்து விரைந்தன. இந்நிலையில் கரும்புலிப்படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், அது அவ்விடத்திலேயே தரித்து நின்றுவிட்ட இக்கட்டான சூழல் உருவாகியது. அதே நேரம் தொடரணி மீது சிறிய வகை தாக்குதல் படகுகளில் ஒன்று தாக்குதலை தொடங்கியது. இக்கடற்சமரின் இக்கட்டான நிலையை கிளாலிக் கரையில் கவிர் வகுப்புக் கரும்புலிப்படகோடு நின்று கவனித்துக்கொண்டிருந்த அறிவரசன் புரிந்து கொண்டார். எனவே எந்தவிதக் கட்டளையுமின்றி தானே கரும்புலியாய் முட்டிட முடிவெடுத்தார். தானே தன்னந்தனியாக வற்றுக்கடலில் நின்ற தனது கரும்புலிப் படகைத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளையாளர் லெப். கேணல் பகலவனிடம் நேராக விரைந்து சென்று, இடிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொண்டார். எந்த விதத் தொலைத்தொடர்புக் கருவியுமோ கதுவீயுமோ இன்றி கட்டளையாளர் கையால் சுட்டிக்காட்டிய சிங்களக் கடற்படையின் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மீது மோதியிடித்து அதை மூழ்கடித்தார். இதனால் கிளாலிக் களப்பிலே ஆனையிறவிற்கான அன்றைய சிங்களப் படைத்துறைக்கான வழங்கல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் மூன்று புளூஸ்ரார் வகுப்புப் படகுகள் (விதப்பான வகுப்பு அறியில்லை) சேதமடைந்தன. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: புளூஸ்ரார் (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: கலக்குழுவினர் அத்தனை பேரும் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: கப்டன் அறிவு எ அறிவரசன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: கவிர் கலப்பெயர்: கிடைத்துள்ள நிகழ்படத்தில் இவ்விடியனின் பெயர் தென்படுகிறது. ஆனால் நிகழ்படம் தெளிவற்றுள்ளதால் கலப்பெயரை அறிய முடியவில்லை. ஆதாரம்: தமிழ்நெற்: 31/12/1999 (Clash in Jaffna Lagoon) | உயிராயுதம் பாகம் - 8 ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
MERCS UHANA - sunk 2000
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F0fx5NBWAAAiMqw.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
போரியல் குணத்தில் உச்சம் தொட்ட கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன்
https://www.eelamview.com/2019/07/06/bt-lt-col-puradsi/ கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் ! தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், வாடி வீட்டை நனைத்துக் கொண்டிருக்கும் நிலவொளியும், அவ்வொளியில் மினுமினுக்கும் சமுத்திரமுமென தமிழீழம் தன் அடையாளங்களை சுமந்து நிமிர்ந்திருந்த காலம் மட்டுமல்லாது, தமிழீழம் என்ற இலக்குக்காக தம்மை ஒறுத்து தம் நாட்டின், தம் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக கரங்களில் சுடுகலன்களை சுமந்து நின்ற விடுதலைப் போராளிகளையும், தமிழ் இனத்தையே கருவறுத்து விட துடித்த சிங்கள வெறியர்களையும் அவர்களோடிணைந்த துரோகிகளையும் சுமந்து நின்ற காலம் அது. தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு வட/ தென் தமிழீழம் எங்கும் புலிகள் வரியுடுத்தி களத்திடை மேவித் திரிந்த அக்காலத்தில், படையக ரீதியாக பல வளர்ச்சியைக் கண்டிருந்த விடுதலைப்புலிகளின் மரபுவழி தமிழீழ இராணுவம் தன் படையக வளங்கல்களை நிலைநிறுத்தவும், மேம்படுத்தவும் என விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி பயணித்தனர். ஒற்றைப் படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து விநியோகப் பணிகளை செய்த விடுதலைப்புலிகளின் கடற்புறா அணி கடற்புலிகளாக பரினாம வளர்ச்சி பெற்று பல நூறு சண்டைப் படகுகள், பல நூறு விநியோகப் படகுகள்,உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைத் தொடர்பாடல்கள் என அதி உச்ச வளர்ச்சியை அடைந்திருந்த காலம். அக்காலத்தில் தான் வட/ தென் தமிழீழத்தின் ஆயுத வளங்கல்களை பலப்படுத்தவும் தமிழீழ படைக்கட்டுமானத்தை நிலைநிறுத்தவும் வட தமிழீழத்தில் இருந்து தென் தமிழீழத்துக்கும் அங்கிருந்து வடதமிழீழத்துக்கும் படையக / ஆளணிகளை நகர்த்தும் பணியை பல போராளிகள் செய்து வந்தார்கள். அதில் முக்கியமானவன் லெப். கேணல் புரட்சிநிலவன். புரட்சிநிலவனை அறியாத கடற்புலிப் போராளிகள் குறைவு. அத்தகைய வீரமும் விவேகமும் கொண்ட இளைய போராளி. இயக்க வாழ்வு என்பது புரட்சிக்கு வெறும் 5 வருடங்கள் தான். ஆனாலும் அதி உச்சப் பணிகள் மூலமாக உயர்ந்து நின்ற போராளி. அதிகமான காலங்களில் விநியோக நடவடிக்கைகளையே தன் பணியாக கொண்டவன். அதுவும் பல இன்னல்கள் நிறைந்த பயணங்களை மிக சாதாரணமாக செய்து முடிப்பவன். நினைவாற்றல் நிறைந்த ஒரு போராளி, புரட்சி என்றால் “ஆள்கூறு “ என்று போராளிகள் கிண்டல் செய்வார்கள். உண்மையும் அதுவே புரட்சிக்கு தமிழீழத்தின் பெரும்பான்மையான ஆள்கூறுகள் அனைத்தும் மனதில் நிறைந்து கிடக்கும். குறித்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடத்தில் ஆள்கூறுகளை பார்த்து உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே பூமிநிலை காண் தொகுதி (Global Positioning System) கருவியில் அந்த ஆள்கூற்றை உட்செலுத்தி தயாராகிவிடுவான் புரட்சி. அவ்வாறு நினைவாற்றல் மிகுந்தவன் இப் போராளி. கடல் அலைகளின் தாலாட்டில் நிதம் நிதம் மகிழ்ந்திருக்கும் வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, தாளையடியை சொந்த இடமாகவும். மருதநிலமும், பாலைவனமும் நிமிர்ந்து நிற்கும் விசுவமடுவை வதிவிட இடமாக கொண்டிருந்த வைரமுத்து வசீகரன் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் விடுதலையின் தேவையை உணர்ந்து பாசறை புகுந்து புரட்சிநிலவனாகினான். அடிப்படைப் பயிற்சியை முடித்து படையணித் தளபதிகளினால் போராளிகள் தம் படையணிகளுக்கு உள்ளிணைக்கப்பட்ட போது கடற்புலிகளின் அணிக்கு தெரிவாகி உள்வாங்கப்படுகிறான். அங்கே சிறப்பு கடற்பயிற்சிகளை முடித்த புரட்சி நிலவன் முழுநிலை கடற்புலியாக உருவாகினான். படகு இயந்திரவியலாளனாக தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் நடுக் கடலில் வைத்தே இயந்திரத்தை கழட்டி மாற்றி படகை இயக்கும் வல்லமை கொண்டவன். ஒரு தடவை சர்வதேச கடல் விநியோக போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட பொருட்களுடன் சாலை முகாம் நோக்கி வந்து கொண்டிருந்த படகின் பிரதான இயந்திரவியலாளர்களான சென்றது புரட்சி நிலவனும் நக்கீரன் என்ற போராளியும். கரை நோக்கி வந்து கொண்டிருந்த அப்படகு இயந்திரம் இயங்காததால் இடையில் நின்றுவிட, பழுதடைந்துவிட்ட அவ்வியந்திரத்தின் பிரதான தொகுதியை நடுக்கடலில் வைத்தே மாற்றி சர்வதேச விநியோக போராளிகளிடம் இருந்து கிடைத்த புதிய இயந்திரத் தொகுதியை நிறுவி அப்படகை இயக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். அவ்வாறு வலிமை மிக்க டீசல் இயந்திரவியலாளனாகவும் போராளியாகவும் மிளிர்ந்த புரட்சிநிலவன் கடற்புலிகள் அணியில் இருந்து கடற்கரும்புலிகள் அணிக்கு செல்வதற்காக தேசியத்தலமையிடம் அனுமதி கோருகிறான். நெஞ்சுக்கும் தோள்மூட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவன் பெற்றிருந்த விழுப்புண் அவனின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமோ என எண்ணத்தை உருவாக்கினாலும் அவனின் துணிவும், தன்நம்பிக்கையும் விவேகமான செயற்பாடுகளும் புரட்சிநிலவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது. கடற்புலிகளின் பெரும் பணியாக இருந்த ஒன்று கடல் விநியோகம். அவ்விநியோகத்தினூடாக படையகப் பொருட்களை தமிழீழத்துக்கு கொண்டு வருவது முக்கிய பணியாக விரிந்து கிடந்தது. அப்பணியை செய்த போராளிகளுள் புரட்சி நிலவனும் முக்கியம் பெறுகிறார். அப்பணியில் முக்கியம் பெறுவது தென்தமிழீழத்துக்காக படையக பொருட்கள் விநியோகம். அவ்விநியோகத்தை தன் உச்ச வீரத்தால் செய்து கொண்டிருந்த புரட்சிநிலவன் பல முக்கிய ஆயுதங்களை தென் தமிழீழத்துக்குக் கொண்டு போய் சேர்த்தான். அவ்விநியோகத்தின் பெறுபேற்றை தென்தமிழீழத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைகள் நிச்சயம் உணர்ந்திருக்கும். அதை இரண்டு 152 MM ஆட்லறி எறிகணையின் மூலம் விடுதலைப்புலிகளின் படையணிகள் உணர்த்திக் காட்டின. திருகோணமலை துறைமுகம் தொடக்கம் அங்கே இருந்த எதிரிகளின் பாசறைகள் பல அத் தாக்குதல்களால் திணறிக் கிடந்தன. ஆட்லறி எறிகணையால் எம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து கொடுங்கோலாட்சி நடாத்திய சிங்கள தேசம் விடுதலைப்புலிகளின் ஆட்லறி எறிகணையின் துல்லிய தாக்குதல்களால் திணறிப் போய்க் கிடந்தது. அதற்கு மூல காரணமாகியது புரட்சியிலவன் என்றால் அதில் எந்த பொய்மையும் இல்லை. தனது விவேகத்தாலும், புத்திசாதுரியத்தாலும், ஒரு போராளியும் இரண்டு பொதுமகன்களையும் தனது ஆளணியாக கொண்டு தென் தமிழீழத்தின் கிட்டுபீரங்கிப் படையணியை வானம் தொட்டுவிடச் செய்வதற்காக அவ்விரண்டு ஆட்லறி எறிகணை செலுத்திகளையும் படகினூடாக கொண்டு வந்து சேர்த்தது புரட்சி நிலவனின் போரியல் குணத்தின் முக்கிய உச்சமாகிறது. அதுவே தென்தமிழீழத்தில் பல வெற்றிகளுக்கு காரணமாகிறது. அவற்றை அங்கே கையளித்து சற்று ஓய்வும் இன்றி தென் தமிழீழத்தில் இருந்து வட தமிழீழம் நோக்கி வந்து கொண்டிருந்த புரட்சிநிலவனும் அவனின் அணியும் தமது படகில் இன்னும் ஒரு ஆட்லறியை சுமந்து கொண்டு மன்னார் பகுதி நோக்கி பயணிக்கின்றனர். அப்போது அந்த பயங்கரம் நடக்கின்றது. ஆனால் அதை பயங்கரம் என்று நினைக்காத புரட்சிநிலவன் தனது விவேகத்தால் அன்றைய நாளில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய படையகச் சொத்தொன்றை காப்பாற்றியது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் எந்த நிலையிலும் தளர்வற்றவர்கள் என்பதை சொல்லிச் சென்றான். அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் என்று மன்னார் கடற்படை முகாமில் இருந்து வந்த சிங்களக் கடற்படையின் ரோந்துப் படகு ஒன்றை இவர்களை இடைமறிக்கிறது. மீனவர்கள் போல் பயணித்துக் கொண்டிருந்த அவர்களின் படகிற்குள் ஆட்லறி எறிகணை செலுத்தி இருப்பதனால், பொதுமகன்கள் இருவரும் சற்றுக் கலவரமானார்கள். சோதனை என்ற பெயரில் இவர்களின் படகிற்குள் வந்த கடற்படை ஒருத்தன் இவர்களை மிரட்டும் தொணியில் கேள்விகளை கேட்ட போது, பொதுமகன்கள் இருவராலும் கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எந்த அதிர்ச்சியும் அடையாத புரட்சிநிலவன் சிங்கள மொழியில் உரையாடத் தொடங்கினான். சிங்களப் படையின் காலுக்கு கீழ் இருக்கும் சிறிய கதவு ஒன்றை திறந்தால் உள்ளே இருக்கும் பொருட்களை அவன் நிச்சயம் கண்டுவிடுவான். அதனால் அவனின் நினைவுகளை திசை திருப்புவதற்காக முயல்கிறான் புரட்சி நிலவன். உடனடியாக அவனின் கையை பிடித்து படகின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றான். சிங்களத்தில் “ உனக்கு என்ன வேணும் சொல்லு தாறன்” என்று கேட்டது மட்டுமல்லாது அந்தச் சிங்களக் கடற்படைக்கு அவர்களிடம் இருந்த அதிக விலை கொண்ட கருவாட்டை அவனுக்கு அன்பளிப்பாக வழங்குகிறான். அவ் அன்பளிப்பினாலும் உபசரிப்பினாலும் தன் நிலை இழந்த கடற்படை சிரித்தபடி தனது டோரா படகிற்கு திரும்பினான். அவ்வாறு புரட்சிநிலவன் செய்யவில்லை என்றால், நிச்சயமாக அந்த கடற்படை காலடியில் இருந்த கதவை திறந்திருப்பான். அதனை கண்டிருப்பான். அதன் பின் யாருமே எதிர்பார்க்காத சம்வங்கள் நடந்து முடிந்திருக்கும். ஆனால் புரட்சிநிலவனின் அந்த விவேகமான செயற்பாடு அவரின் அணியும் உள்ளே அமைதியாக இருந்த ஆட்லறியும் எந்த சேதமும் இல்லாமல் கரையேறியதற்கு காரணமாகியது. இல்லையென்றால் அன்று எமக்காக கொண்டுவரப்பட்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் பெரும் சொத்து பெற்ரோல் ஊற்றி கொழுத்தப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். அதோடு நிச்சயம் இரண்டு போராளிகளும் வீரச்சாவடைந்திருப்பர். பொதுமகன்கள் இருவரும் கைதாகி இருப்பர் அல்லது அவர்களும் வீரச்சாவடைந்திருப்பர். ஆனால் புரட்சிநிலவனின் சாதுரியமான செயற்பாடு அன்றைய களச்சூழலை மாற்றிவிட்டது. இக் களச் சூழலையும் சாதுரியமாக நடவடிக்கையை வெற்றிபெறச் செய்த புரட்சிநிலவனின் நடவடிக்கையினையும் அறிந்த தேசியத்தலைவர் உடனடியாக தன்னிடம் அழைத்தது மட்டுமல்லாது, CBZ உந்துருளி ஒன்றும் நடவடிக்கைக்குத் தேவையான பல பொருட்களையும் பரிசளித்து மதிப்பளித்தார். அதன் பின்பான நாட்கள் விநியோக நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போது, உயர் தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகளை கொண்டு வர வேண்டி களச்சூழல் ஏற்பட்டது. அதனால் உயர் தொழில்நுட்ப தகவல்பரிமாற்ற முறமையினை கற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அணியில் புரட்சி நிலவனும் ஒருவராகிறார். அந்த கற்றல் செயற்பாடு முடிவடைந்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் எதிரியின் கோட்டைக்குள்ளே நின்று சிங்கள எதிரியை திணறடிக்க செய்யும் படையக பொருட்களை தமிழீழத்துக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பணி ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டார். தென்னிலங்கையின் முக்கிய கடல் சார்ந்த நகரம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட போது, புலி ஒருத்தன் மீனவனாக மாறி நின்று படையகப் பொருட்களை கப்பலில் இருந்து இறக்குவதும், அதை தமிழீழத்துக்கு எந்த இடரும் இல்லாது அனுப்புவதுமாக தனது விநியோகப் பணியை செய்து கொண்டிருந்தார். பயப்பிடவில்லை, சோர்ந்து போகவில்லை, இலக்கொன்றே அவனின் மூச்சாக தன் பணியில் ஈடுபட்டு பல படையக பொருட்களை தமிழீழத்திற்கு கிடைக்கச் செய்தார். ஒரு படகின் அணித் தலைவனாக பணியாற்றிய அப் போராளிக்கு அவன் கற்றுத் தேர்ந்திருந்த சிங்கள மொழி பெரிதும் உதவியது என்பது உண்மையே. இவ்வாறான இடர் மிக்க பணிகளினால் தமிழீழ விடுதலைக்காக உழைத்த அப்போராளியும் அவரது அணியும் உறுதியாக இறுதி வரை பயணித்தார்கள். கடல் விநியோகம் என்பது சாதாரணமானதல்ல. சிங்கள கடற்படை இந்திய கடற்படை என கடல் வல்லூறுகளும், தொழில்நுட்ப அரக்கர்களாக இருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் செய்மதிகள் மற்றும் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் என தமிழீழ கடற்பரப்பில் சிறு பணியை செய்வதற்கும் பல தடைகள் எழுந்து நின்றன. அதே நேரம் அதையும் தாண்டி, இயற்கையும் பாதகத்தை விளைவிக்கும். அவ்வாறான இடர்களை எல்லாம் தம் தோழ்களிலே சுமந்து தமிழீழ கடல் அன்னையின் மடியில் தவழ்ந்து திரிந்தனர் இப் போராளிகள். ஒன்றல்ல இரண்டல்ல மாதங்கள் பல கடந்தும் கரையேறாத பணி. ஒழுங்கான தூக்கம் இல்லை, உணவில்லை. ஆனாலும் சோர்ந்து போக மாட்டார்கள். தன்நம்பிக்கையையும் துணிவையும் தமதாக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஒன்றில் ஒன்றரை மாதங்களாக கடலில் பயணித்துக் கொண்டிருந்த புரட்சிநிலவன் கரையேறி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. கிடைத்த சிறு ஓய்விலும் முகாமை விட்டு நகராது தமிழீழ விடுதலைக்காக பணி செய்தார். அப்போது இன்னும் ஒரு அணி கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அவ்வணியின் படகு இயந்திரகோளாறால் பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத சூழல் வந்த இடைநடுவில் நின்ற போது, சிறப்புத்தளபதி சூசை அவர்களால் புரட்சிநிலவனிடம் அப் படகை மீட்டுவருவதற்கான வேண்டுகை விடப்பட்டது. அது மட்டும் அல்லாது அப்படகின் கட்டளை அதிகாரியாக வந்த போராளி முக்கிய பணி ஒன்றுக்காக வேறு ஒரு படகிற்கு செல்ல வேண்டிய தேவை எழுந்திருந்தது. இவற்றின் காரணமாக அப் படகை பொறுப்பெடுக்கவும், இயந்திரத்தை திருத்தி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கவும் சரியான தெரிவாக புரட்சிநிலவனே இருந்தார். அதனால் உடனடியாக தனது அணியோடு கடலேறிய புரட்சிநிலவன் படகை கொண்டு வந்து சேர்க்கும் பணியை சரியாக செய்தார். பழுதடைந்த படகினை சென்றடைந்து, அப்படகின் கட்டளை அதிகாரியாக இருந்த போராளியிடம் இருந்து படகை பொறுப்பெடுத்து அவரது பணிக்காக அவரை அனுப்பிய பின் படகை கரையேற்றும் பணியில் ஈடுபட்டார்கள் புரட்சிநிலவனின் அணியினர். பல இடர்களை சுமந்து குறிப்பிட்ட சில வருட போராட்ட வாழ்விலே உச்ச வீரத்தோடு களப்படியாற்றிய, தமிழீழ மக்களின் மனங்களை வென்ற அப் போராளிக்கு அப்பணியே இறுதிப்பணி என்று யாரும் எண்ணவில்லை. மன்னார் கடல் அன்று அமைதியாக இல்லை. தன் வீரக் குழந்தைகளின் மேனி தொட்டு வரும் காற்றில் கடல் அலை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சிங்களத்தின் கடற்படையின் படகுகளை எதிர்க்க முடியாது அந்த அலைகள் சீறிக் கொண்டிருந்தன. தன் பிள்ளைகளை தன் அலை எனும் சிறகுகளால் பாதுகாக்க முனைந்து கொண்டிருந்தது அந்த கடல். அதனூடாகவே புரட்சி நிலவனும், மோகன் ஐயாவும், மோகனதாஸ் ஐயாவும். அப்படகோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னார் கடல் பகுதியில் அடிக்கடி குறுக்கே வரும் சிங்களப்படைப் படகுகள் திடீர் என்று எதிர் வந்தன. சர்வதேசத்தாலும் இந்திய வல்லாதிக்க சக்திகளாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அக் கடல் மீதான எமது நடவடக்கைகள் ஒவ்வொன்றிலும், அவர்களுக்கெல்லாம் போக்குக் காட்டி ஒவ்வொரு வெற்றி நடவடிக்கைகளையும் செய்த புரட்சிநிலவனின் அணி அன்று சிங்களப் படைகளினால் இடைமறிக்கப்படுகிறது. புரட்சி நிலவனும் அவரின் அணியும் எதிர்த்து களமாடுகிறார்கள். தொலைத் தொடர்புக் கருவிகள் நிலமையை கட்டளைப் பீடத்துக்கு கொண்டு செல்கின்றன. ஆனாலும் சண்டையின் தீவிரம் உச்சம் பெற்று படகு சண்டை இட முடியாத அளவுக்கு சேதமடைகிறது. ஆனாலும் இறுதிவரை உறுதியாக புரட்சிநிலவன் சிங்களப்படைகளை எதிர்கொள்கிறார். கட்டளைப் பணியகத்தில் இருந்து உதவி அணிகள் சென்றடைய முன்பாகவே சண்டை உக்கிரமமடைந்து அப்படகு கட்டளை அதிகாரியான கடற்கரும்புலி புரட்சிநிலவன் லெப். கேணல் புரட்சிநிலவனாகவும், மோகன், மற்றும் மோகனதாஸ் என்ற பொதுமகன்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும் வீரச்சாவடைந்திருந்தார்கள். மன்னார் கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததைப் போலவே தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக ஆர்ப்பரித்துப் பயணித்த புரட்சிநிலவனும் அவரது அணியும் தம் பணியின் போதே விழி மூடி கடல் மடியில் வெடியோடு சங்கமித்து போயினர். “கடலிலே காவியம் படைப்போம்” என்ற உயர்ந்த வாசகத்தை தாரகமந்திரமாக கொண்டு பயணித்த கடற்புலிகள் பாரிய துறைமுகங்களை கொண்ட ஒரு அரச கடற்படையாக இல்லாத நிலையிலும், பல சிறு கடற்துறைமுகங்களை கொண்டிருந்ததும் விநியோக நடவடிக்கைகளில் உச்சம் பெற்றிருந்ததும், தமிழீழ கடற்படையின் இவ்வாறான போராளிகளின் தியாகங்கள் உச்சம் பெற்றிருந்ததும் வரலாறாக பதிவாகி கிடக்கின்றது.
- வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
- வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
-
மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
'தமிழீழத் தலைநகர்' திருக்கோணமலையில் இருந்த ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இது சம்பூரில் அமைந்திருந்தது. இதன் சிறப்பு யாதெனில் தமிழீழத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களிலே மிகவும் வேறுபாடான தோற்றங்கொண்ட கல்லறைகளாக இங்கிருந்த கல்லறைகள் காணப்பட்டன. திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்களோடு வெள்ளைக்காரர்கள்(SLMM) கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சாரணர்கள் அங்கு வரும் மாவீரர் பெற்றொருக்கு அவர்களின் செல்வங்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் இருக்கும் விதப்பான இடத்தினை குறிப்பிட்டுச் சொல்வார்கள்:
- 235 replies
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
-
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte