Everything posted by நன்னிச் சோழன்
-
Elephantpass camp atack.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 12.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 11.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 10.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp .jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 9.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 8.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 7.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 6.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 5.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 4.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Elephantpass camp 3.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Border Force.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Border Force Maaveerar Appan.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Special Operation Black Tiger Captain Prem - on maj. gen. ranjan vijaratna
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Lt. Col. Chanthiran, Special Operation Black Tiger
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
2008.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் | தொடர்
பாகம் - 2 தந்தை செல்வாவின் தனிநாடு கொள்கை எதிர்ப்பு:- இந்த தனிநாட்டுக் கோரிக்கையினை ஆரம்பத்திலிருந்தே தந்தை செல்வா எதிர்த்து வந்தார். அவர் சமஸ்டி கொள்கையையே தூக்கிபிடித்தார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப் போர் நிலவியது. பின்னர் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர். சூலை 26, 1957 அன்று பண்டா-செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், கோவத்துடன் இருந்தார் "அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் [2b]. (இவ்வுடன்படிக்கை மூலம் "தந்தை செல்வா" அவர்கள் தாம் கொண்டிருந்த கூட்டாட்சி எ சமஸ்டி கொள்கையைக் கூட தூக்கியெறிந்துவிட்டு அதைவிட மலிவான ஒன்றான "பிரதேச சபை"யையே பெற்றார் சிங்களவரிடமிருந்து. இதனால் கடும் கோபத்திற்காளானார்.) ஜூலை 28, 1957 தேதியிட்ட திறந்த கடிதத்தில், தந்தை செல்வாவிற்கு எழுதிய சி.சுந்தரலிங்கம் [2b], தமிழ் மொழிபெயர்ப்பு: “நீங்கள் தமிழர்களை எவ்வளவு கழிவிரக்கமான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்? “1956 ஆம் ஆண்டு அரியணை உரையில் திருத்தம் மூலம் நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் அரசாட்சியையுடைய பொதுநலவாய தமிழ் இலங்கையை உருவாக்கும் ஒரு தன்னாட்சி தமிழ் நாட்டை நான் விரும்பும் அளவிற்கு, இந்த விடயத்தில் மாத்திரம் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியியல் மாநிலங்களை நிறுவுதல்] உங்கள் கட்சியிலிருந்து நான் வேறுபட்டேன். ‘தன்னாட்சி தமிழ் மொழியியல் அரசு’ தொடர்பாக நான் உங்கள் கட்சியுடன் முழுமையாக உடன்பட்டிருந்தேன். மீண்டுமுரைக்கிறேன், உங்கள் கட்சி கூட்டாட்சியை விரும்பியபோதும், நான் பிரிவினையை விரும்பினேன், ஏனென்றால் 1955 முதல், தமிழர் நலன்களைக் காக்க எந்த தமிழரும் ஒரு சிங்கள அரசியல்வாதியை நம்பக்கூடாது, நிச்சயமாக முதன்மை அமைச்சர் பண்டாரநாயக்கவை நம்பக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்றார். பின்னர் மீண்டும் தந்தை செல்வா சமஸ்டி கொள்கையை ஆதரித்தார். தமிழரசுக் கட்சியின் செயற்குழு டிசம்பர் 26 1960 அன்று கூடியது (பம்பல் என்னவென்றால் அக்கட்சியின் தமிழ்ப் பெயர் "தமிழரசு", தமிழில். எனினும் ஆங்கிலத்தில் அதன் பெயர் "Federal Party"; அதாவது சமஸ்டி கட்சி. கட்சியின் பெயரிலேயே முரண்பாடுகளை உடைய கட்சி இதுவாகும் [2a]). அதன்போது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை [5]. அவர் அதற்கு சொன்னது [5], இதே போன்று இன்னொரு நிகழ்வு கட்சியின் 11ஆவது மாநாட்டில் அரங்கேறியது. கட்சியின் 11ஆவது மாநாடு உடுவிலில் நடந்தது. அதன்போது இளைஞர் அணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றனர் [5]. அப்போது அதை தடுத்த தந்தை செல்வா, என்றார் [5]. தொடர்ந்து கூட்டாட்சியை தந்தை செல்வா ஆதரித்து வந்ததால் செ. சுந்தரலிங்கம் இவரைக் தொடர்ந்து சாடி வந்தார். 1963இல் செ. சுந்தரலிங்கம் எழுதிய கடிதமொன்றில் தந்தை செல்வாவின் கூட்டாட்சி திட்டத்தை சாடினார். திசம்பர் 20, 1963 என்று எழுதிய கடிதமொன்றில் எதிர்வுகூறல் போன்று எழுதியிருந்தார் [1.1]: தமிழ் மொழிபெயர்ப்பு: "திரு. சாமுவேல் செல்வநாயகம் தலைமையிலான கூட்டாட்சி கட்சி [இலங்கை தமிழ் அரசு கட்சி] தங்கள் கூட்டாட்சி கொள்கை, சத்தியாக்கிரகம், அஹிம்சை மற்றும் பாதை-யாத்திரைத் திட்டங்கள் மட்டுமே ஈழத் தமிழர்களின் பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று தொடர்ந்து கூறி வந்தால், ஈழத் தமிழ் தேசம் மீண்டும் பிறக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதில் நம்பிக்கை அடைகிறேன். வளர்ந்து வரும் தலைமுறையின் துன்பங்களையும் இன்னல்களையும் விரிக்க முடியாது. ஆனால் எதிர்கால தலைமுறையினர் என்னென்ன அனுபவிக்க நேரிடும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது." "அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் தேர்தல்களில் தொடர் தோல்விகளின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்ட போது, என்று இடித்துரைத்தார் [6]. இதன் மூலம் அவர் தனது தனிநாட்டுக் கொள்கை கொண்டோர் தவிர வேறு யாருடனும் கூட்டு வைக்கவிரும்பவில்லை என்பது தெரிகிறது. "நாட்டுப்பற்றாளர்" வை. நவரட்ணம் அவர்கள் 1969 ஆகஸ்ட் 27 இல் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டார். அதன் போது தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். இத்தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கோரியிருந்தனர் [5]! இதனால் மக்களின் ஆதரவு இவரிற்கு பெரும்பான்மையாக கிட்டாமல் போக இவர் தோல்வி கண்டார். அதே நிலைமை தான் 1977 தேர்தலிலும் இவருக்கு நேர்ந்தது. அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோதும் கூட்டாட்சி அடிப்படையிலான மாற்று யாப்பையே முன்வைத்தார் [5]. கால மாற்றம்:- 1973 செப்டம்பரில் மல்லாகத்தில் நடந்த தமிழரசுக் கட்சியின் 12வது ஆண்டு மாநாட்டில், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது [3]. இத்தனிநாட்டுக் கோரிக்கையை முதலில் ஏற்காத சமஸ்டியை தூக்கிப் பிடித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். தொண்டமான் ஆகியோர் கூட்டுத்தலைவர்களாகி தமிழர் விடுதலைக் கூட்டணி என்றொரு கட்சியை 1975இல் தோற்றுவித்து ஒரு கட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டனர். "தந்தை" செல்வா அவர்கள் மட்டு நகரில் ஆற்றிய உரை ஒன்றின் போது கீழ்க்கண்டவாறு தனது தனி நாட்டிற்கான கோரிக்கைக்கு ஆதரவை அறிவித்தார். - மே 11, 1975 இல் மட்டக்களப்பில் ஆற்றிய உரையில். [4] தனிநாடு மக்கள் ஆணை பெறுகிறது:- வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கையானது மக்கள் ஆணைக்கு விடப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது. இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் 19 நவம்பர் 1976 அன்று நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரையில் [4] இவ்வுரையின் போது இவர், என்றும் கூறினாராம் [5]. பின்னர் 1977 தேர்தலில் இதையே தமது கொள்கையாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் ஆட்புலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இவ்வாணைக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது! உசாத்துணை: Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73 Sri Lanka: The Untold Story - K T Rajasingham Chapter 14: Post-colonial realignment of political forces Chapter 16 ‘Honourable wounds of war’ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் The Tamil People’s Struggle to be Free தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை C. Suntharalingam – Part II: Grandfather’s Letters - S. Ratnajeevan H. Hoole - Colombo Telegraph ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
"தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தந்தை செல்வநாயகம் சென்தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது அதிபர் மறுத்தமையால் அன்றைய தினமே இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். அதன் பின்பு வெஸ்ரி கல்லூரியில் அவர் பணியாற்றும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் வேட்டி சால்வை அணிந்து பணியாற்ற முடியாது என்றபோது அங்கும் வேலையை இராஜிநாமா செய்துவிட்டு வெளியேறினார். அனைவரும் இணைந்து செல்வோமே என நினைத்தவர் அல்லர் தந்தை செல்வா. அவரது அரசியல் அணுகுமுறையும் அவரது தனிப்பட்ட குணாதிசயத்துடன் ஒத்ததாகவே இருந்தது. இல்லையென்றால், 1947 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றியீட்டினார். எனினும், நாடாளுமன்றம் வந்து ஓரிரு ஆண்டுகளிலேயே பொன்னம்பலம் தலைமையில் பொன்னம்பலம் அணி எனவும், உப தலைவர் செல்வநாயகம் தலைமையில் செல்வா அணி எனவும் இரண்டாகப் பிரிந்தது. தேர்தலில் தோல்வி பிரிய வேண்டும் என்பதற்காகத் தந்தை செல்வா பிரியவில்லை, பிரஜாவுரிமைச் சட்டத்தை அன்றைய இலங்கைத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க அறிமுகப்படுத்தியபோது அது தீங்கானது, அதனை ஆதரிக்க முடியாது, 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கை - இந்தியக் காங்கிரஸ் அந்த உறுப்பினர்களின் பிரஜாவுரிமையே அற்றுப்போகும் விதமாக அந்தச் சட்டம் இயற்றப்பட்டு கொண்டு வந்தபோது அதனை எதிர்க்க வேண்டும் எனக் கட்சிக்குள்ளேயே வாதாடினார். கட்சி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கொள்கையின் நிமித்தம் கட்சியை இரண்டாகப் பிளந்தார். 101பேர் இருந்த நாடாளுமன்றத்தில் 6 பேர் கொண்ட கட்சியில் இருந்து 3 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர். கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஒற்றுமை என்ற கோஷத்துக்காகத் தவறைச் செய்ய அவர் விரும்பவில்லை. ஒற்றுமை அல்ல, கொள்கையே முக்கியம், எங்களுடைய நிலைப்பாடு முக்கியம், எதற்காக மக்களுக்காக எழுந்து நிற்கின்றோம் என்பது முக்கியம், அதைச் செய்யத் துணிந்தார். 1949 ஆம் ஆண்டு புதிதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர் ஆரம்பித்தார். வருட ஆரம்பத்தில் மாவிட்டபுரத்தில் அண்ணன் மாவை.சேனாதிராஜாவின் வீட்டுக்கு அருகிலே கட்சியின் அங்குரார்ப்பணம் நடந்தது. எனினும், டிசம்பரில் கொழும்பில்தான் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை உத்தியோகபூர்வமாக அவர் நடத்தினார். அதற்கு முன்னர் பல முஸ்தீபுகள் இடம்பெற்றபோது அதைக் கற்கலால் எறிந்து குழப்பினார்கள், அடித்துத் துரத்தினார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றன. அதனால்தான் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பு - மருதானையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அங்குரார்ப்பணம் செய்தார். பிடித்த கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். அந்த வழியைத் தன்னுடைய மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். 3 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலிலே போட்டியிட்டு தோல்வி கண்டார். தமிழரசுக் கட்சி சார்பில் கோப்பாயில் வன்னியசிங்கமும், திருகோணமலையில் இராஜவரோதயமும் மட்டுமே வெற்றியீட்டினர். முதல் தேர்தலிலேயே தமிழரசுக் கட்சியை வெற்றிகொள்ள வைத்த பெருமிதம் திருமலைக்கு உண்டு. ஆனாலும், கட்சி தோல்வியடைந்தது. மக்கள் தனது கொள்கையைப் புறக்கணித்து விட்டார்கள் என அவர் விட்டுவிடவில்லை. அந்தத் தேர்தலிலே காங்கேசன்துறைத் தொகுதியில் தான் தோற்றபோது அவர் நீதிமன்றிலே வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தேர்தல் வெற்றி தவறானது, முடிவு தவறானது எனத் தானே வாதாடி வழக்கொன்றைத் தொடுத்தார். அந்த வழக்கிலேயும் அவர் தோற்றார். தோற்றது மட்டுமன்றி அன்று வழக்குச் செலவாக 40 ஆயிரம் ரூபாவையும் அவர் கட்ட வேண்டியும் இருந்தது. அதையும் செய்தார். ஆனால், 1956 ஆம் ஆண்டில் இருந்து இளையவர்களையும், புதியவர்களையும் கட்சிக்குள் சேர்த்தார். வேட்பாளர்களாக நிறுத்தியவர்கள் எல்லாம் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். பெரு வெற்றி கண்டார். தனி நாட்டுக் கோரிக்கை அதற்குப் பிறகு இன்று வரைக்கும் அவர் வகுத்த சமஷ்டிக் கொள்கைக்குத் தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றார்கள். ஆகவே, அவரது அரசியல் அணுகுமுறையை அறிந்திருப்பது அல்லது பின்பற்றுவது அத்தியாவசியம். இந்த விடயத்திலே தந்தை செல்வா சொன்ன இரண்டு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். இதே மண்ணிலே தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது தந்தை செல்வாவின் பேருரையில் சொன்ன ஒரு வாசகம், "ஓர் இனம் அழியாமல் இருப்பதற்குப் பல ஏற்றம் தேவை. ஒன்று அந்த இனத்தின் எண்ணுத்தொகை குறையாமல் இருப்பது. இரண்டாவது அந்த இனம் வசிக்கும் பிரதேசம் பறிபோகாமல் இருப்பது." இந்த இரண்டும் இந்தத் தீவிலே எங்கள் இனம் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும், நாம் வதியும் பிரதேசம் பறிபோகாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்வதாக இருந்தால் நாம் வசிக்கும் பிரதேசத்தில் ஆட்சி முறை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் தனது சமஷ்டி கொள்கையை முன்வைத்தார். 1956 ஆம் ஆண்டிலேயே தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம் ஈழம் என்று பெயர் கொடுத்தார். ஆனால், தந்தை செல்வா அதை அந்த வேளை ஏற்கவில்லை. தொடர்ச்சியாக பலர் தனியாகப் பிரிந்துபோவதுதான் ஒரே வழியெனக் கூறியபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூடியபோது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா சொன்னது "இது வன்முறையில் முடியும். ஆயுதப் போர் பிரச்சினையைத் தீர்க்காது" என்று கூறி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை. 11ஆவது மாநாடு உடுவிலே நடந்தபோது இளைஞர் அணி - அதாவது வாலிபர் முன்னணியினர் வந்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் எனச் சொன்னபோது அவர்களுக்கு அறிவுரை கூறி அதனை நீங்கள் முன்மொழிய வேண்டாம், இதனை நான் எதிர்த்தவன் அல்லன், இது எமது மக்களுக்குப் பாதகமாக முடியும் எனக் கூறி அதனையும் தந்தை செல்வா தடுத்தார். 1970 ஆம் ஆண்டுத் தேர்தலிலே வி.நவரட்ணம் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலிலே போட்டியிட்டபோது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றோம். அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோது மாற்று யாப்பை முன்வைத்தார். சமஷ்டி அடப்படையிலே அந்த யாப்பு இருந்தது. எமது வெள்ளி விழா மலரிலும் அது இருக்கின்றது. அந்த யாப்பிலே பல விடயங்களை அவர் கோரியிருந்தாலும் இறுதியிலே எமது கட்சியின் சார்பில் வி.தர்மலிங்கம் 5 பிரேரணைகளை (நாடாளுமன்றத்தில்) முன்வைத்தார். அனைத்தும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது தந்தை சொன்னார், ''இனி, நாளையில் இருந்து நாம் இங்கே வர மாட்டோம். நாம் வெளிநடப்புச் செய்து இதனை ஒரு நாடகமாக மாற்ற விரும்பவில்லை. ஆனால், நாளையில் இருந்து நாம் இங்கு வரமாட்டோம்'' - என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து இராஜிநாமா செய்தார். இடைத்தேர்தலும் இரண்டரை ஆண்டுகள் இடம்பெறாமல் இருந்தது. 1975ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடைத்தேர்தலிலே அவர் பெருவெற்றியீட்டினார். அதன் பிறகுதான் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், எமது கட்சி தனிநாடு ஒன்றை நிறுவ முனைகின்றது. இது இலேசான காரியம் அன்று, வில்லங்கமானது என்பதை நாம் அறிவோம்" - என்று அதனை விவரித்துச் சொல்லி விட்டு, எமது நடவடிக்கை சாத்வீகமானது எனச் சொன்னார்." - என்றார். https://tamilwin.com/article/thanthai-selva-remembrance-in-trinco-1714329010
-
தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் | தொடர்
பாகம் - 1 தனிநாடு கோரப்படுகிறது:- ஈழத் தமிழர்க்கொரு தனி நாடு வேண்டும் என்று முதன் முதலில் கோரியவர் சிலோன் நாடாளுமன்றத்தில் டி.எஸ். சேனனாயக்காவின் முதலாவது அமைச்சரவையில் பதவி வகித்த செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் செப். 8, 1947 தேர்தலில் வவுனியாவில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார் [5.1] [1.1]. இவரைப் பற்றிய சிறு முன்குறிப்பு யாதெனில், இவர், டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையினுள் அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டு உள்வாங்கப்பட்டவராவார்; வணிகம் மற்றும் பண்டமாற்று அமைச்சு வழங்கப்பட்டது [5.1]. தமிழரை நிகராளித்துவப்படுத்தி இவர் சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு டி.எஸ் சேனநாயக்காவிற்கு ஆதரவு அளிப்பதை தமிழரசுக் கட்சியினர், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில், கடுமையாக எதிர்த்தனர் [1.2]. இருப்பினும் தனது ஆதரவை சிங்களவருக்கு கொடுத்து சிங்கக் கொடியேறுவதற்கு வழி வகுத்தார் [2]. பின்னர் தனது தவறையுணர்ந்தோ என்னவோ மார்ச் 3, 1951 இல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் தனது பதவியைத் துறந்தார் [5.2]. இவர் மீண்டும் 1952 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார் [6]. இத்தேர்வின் போது கிடைத்த ஆசனத்தைக் கொண்டுதான் பிரிவோம் என்பதை அறிவித்தார்! 'அடங்காத் தமிழர்' செ. சுந்தரலிங்கம் | படிமப்புரவு: விக்கி இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின், தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்" என்றார், ஆங்கிலத்தில்[4]. இதன்மூலமே தான் முதன் முதலில் எமக்கு தனி நாடு வேண்டும் என்றும் அறிவித்தார். தனிநாட்டிற்காக குழுசேருமாறு முதலில் அழைத்தவர்:- இத்துடன் தனிநாட்டிற்காக குழுசேருமாறு தமிழர்களிற்கு முதலில் அழைப்புவிடுத்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார் [3.1]. தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைத்தது மட்டுமின்றி 1958இல் வவுனியாவின் எல்லைகளிலிருந்த தமிழ் சிற்றூர்களினுள் சிங்களவர் ஊடுருவுவதைத் தடுக்க தமிழரை திரட்டி சிங்களவருக்கு எதிராக சண்டைக்கு களமிறக்கியதும் இவரே ஆவார். தமிழருக்கு வேட்டைச்சுடுகலன்களை இவர் வழங்கியதாக கூறக்கேள்வி. அதற்காக இவர் 'அடங்காத் தமிழர் முன்னணி' என்றவொரு அமைப்பையும் தோற்றுவித்திருந்தாராம். இதன் மூலம் தான் இவருக்கு "அடங்காத் தமிழன்" என்ற பட்டமும் கிடைக்கப்பெற்றதாக கருத்தப்படுகிறது. இதன் பின்னர் 1959 இல் 'ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி' என்றவொரு தேர்தல் திணைக்களத்தில் பதியப்படாத அரசியல் கட்சியினையும் தோற்றுவித்தார். தனிநாட்டிற்காக சண்டைக்கு வருமாறு முதலில் அழைத்தவர்:- தனிநாட்டிற்கான சண்டைக்கு வருமாறு தமிழர்களிற்கு முதன் முதலில் அறைகூவல் விட்டவரும் செ. சுந்தரலிங்கமே ஆவார். "Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents" (1967) என்ற நூலின் பின்குறிப்பில் [3.2] இல் இவ்வாறு எழுதியுள்ளார்: தமிழ் மொழிபெயர்ப்பு: சிலோனின் பிரிவினைக்கும் 1802 ஆம் ஆண்டு அமியன்ஸ் உடன்படிக்கைக்கு முன்னரிருந்த தமிழ் அரசை மீட்டெடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும் ஈழத் தமிழர்களை, ஈழத் தமிழ் தேசத்தின் பரியுடைமையானதும் (freedom) பந்திலாமையானதுமான (Independence) சண்டைக்கு சேர முன்வருமாறு அழைக்க முன்மொழிகிறேன். 'கிளாப்' என்பவர் வகைப்படுத்திய 17 வகையான நாயகன்களில் இவரை "குமுகாய மரபொழுங்குக்குப் புறம்பானவர்"/Bohemian என்று எழுதுவினைஞர் சச்சி சிறிகாந்தா அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் வகைப்படுத்தினார், தனது நூலான "The Pirabhakaran Phenomenon" இல் [7.1]. எனினும் இவர் "தேசத் தந்தை" எனப்படாமைக்கு இவர் செய்த ஊத்தை நாச வேலைகளே காரணமாகும்! உசாத்துணை: The Fall And Rise Of The Tamil Nation (1995) - V. Navaratnam Chapter 2 pg. 41-42 It Happened 65 Years Ago: When two independent Tamils pawned Eelam rights - Sachi Sri Kantha, October 12, 2012 Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73 C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005 Sri Lanka: The Untold Story - K T Rajasingham Chapter 12: Tryst with Independence Chapter 14: Post-colonial realignment of political forces 1952 Election Result The Pirabhakaran Phenomenon - Sachi Sri Kantha Part 53 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் | தொடர்
தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம். இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.
-
Veeman - Kutty Miraj class boat.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இந்தக் கட்டுரையானது தொடர்ந்தும் நீலன் திருச்செல்வம் என்ற உடனுழைப்பாளரால் கொணரப்பட்டதாகக் கூறப்படும் கொணரப்படாத தீர்வுப் பொதி பற்றி என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் புலி எதிர்ப்புவாத தமிழர்களிற்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டது. இவரை புலிகள் "துரோகி/ வஞ்சகன்" என்று அவர்களின் அலுவல்சார் ஊடக வெளியீடுகளிலும் அவர்களின் நேரடி கண்காணிப்பிலிருந்த இதழ்களிலும் அழைத்ததாக எங்கும் தெரியவுமில்லை. என்னால் காணவும் இயலவில்லை! (வெளிநாடுகளிலிருந்து வெளியான தமிழர் ஆதரவு இதழ்களில் இச்சொல் தாராளமாக காணக்கிடைக்கிறது) எங்கினும் இருந்தால் எனக்கும் வாசகர்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் முழுமையடையாத வரைவுச் சட்டம் 1996 ஜனவரி 16 அன்று சிங்கள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது, மார்ச் 1997ம் ஆண்டு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களின் இறுதி அறிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சிறிலங்கா அதன் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவை வெளியிட்டது. பின்னர் ஒக்டோபர் 1997 அன்று முழுமையடைந்த வரைபு வெளியானது. 7 ஓகஸ்ட் 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும். அதையும் கூட சிங்களம் நிறைவேற்றவில்லை. மட்டுமின்றி சந்திரிக்காவின் முதன்மை அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் மகாநாயக்க தேரர்களின் கருத்திற்குட்படுத்தியே செய்வோம் என்றார், 13 ஓகஸ்ட் 2000ம் ஆண்டு அன்று. இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" என்ற நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் மறுதலித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதனை "படைய வடிவமைப்புகளை மறைக்க ஒரு அரசியல் முகமூடி" என்று 14 ஓகஸ்ட் 1995இல் அழைத்தனர். (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) முன்மொழிவை புலிகளின் மதியுரைஞரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்க கட்டத்தில், 1995 ஓகஸ்ட் 11, மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். பின்னாளில் ,மார்ச் 13, 2003 ஆம் ஆண்டு,வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்குகையில் இவ்வரைபின் "தொடக்க வடிவம்" ஏற்கக்கூடியது என்றார் (உதயன் 13/03/2003 பக் - I). அப்போது கூறியதாவது: உந்த மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் தனியான வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர் கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான" 😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும். அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்! புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர். இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது. வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே, 1996, யாழில் 812 தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்ற சிங்களவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! பாவிக்கப்பட்ட முதன்மை உசாத்துணை: https://tamilnation.org/conflictresolution/tamileelam/cbkproposals/ ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்