Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. எனக்கும்.... ரண்டு பக்கமும் குத்து வாங்கோனும்... இந்தியன் கொஞ்சம் கூட வாங்கினால் நல்லம்
  2. பாகம் - 3 இவ்விறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையை பார்ப்பதற்கு முன்னர் எமது தாய்நாட்டை குறிக்க வழங்கப்பட்ட ஒவ்வொரு சொல்லாக காண்போம். தாய்நாட்டைக் குறிக்கும் பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழ் இலங்கை, தமிழிலங்கை, ஈழம், தமிழ் ஈழம், தமிழீழம், தமிழ் சிலோன் ஈழத் தமிழகம்:- முதலிலிருந்தது “ஈழத்‌ தமிழகம்‌" என்ற சொல் தான் [3.1]. இது எப்புராமன் என்ற இயற்பெயரையுடைய பரமஃகம்சதாசனின் பாடலில் இடம்பெற்றுள்ளது. பரமஃகம்சதாசன் ஓர் தமிழ்நாட்டுத் தமிழன் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திலுள்ள அதிகாரம் என்ற ஊரில் பிறந்தவர் ஆவார் [1]. பரமஃகம்சதாசன் இயற்றிய இப்பாடல் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவராகயிருந்த "கோப்பாய் கோமான்"[2] அமரர் கு. வன்னியசிங்கம் அவர்கள் காலத்திலிருந்து அவரது தலைமையில் நியமிக்கப்பட்ட தேசியப்பண் அவையால் தெரிவுசெய்யப்பட்ட பாடலாகும். இப்பாடல் தான் கூட்டாட்சி/ சமஸ்டி கோரிய தமிழரசுக் கட்சியின் பாடலாகவும் இருந்தது. அதனால் இது தேசியப் பண் என்ற நிலைக்கு உயர்ந்தது! இன்னும் சொல்லப்போனால் முதலில் சமஸ்டி கோரி, பின்னர் அதைக் கைவிட்டு பிரதேச சபையை பெற்று, கட்சிக்கு வெளியிலிருந்து தனிநாட்டுக் கோரிக்கை எழுந்த போது அதை எதிர்த்து, பேந்து 1976இல் தனிநாட்டையே தேர்தல் அறிக்கையாகக்கொண்ட ஓர் கட்சியின் பாடலாகயிருந்த பாடல் தான் இதுவாகும்! அப்பேர்பட்ட இப்பாடலிலுள்ள "ஈழத் தமிழகம்" என்ற சொல்லானது கூட்டாட்சியை ஏற்கும் போதில் வரும் மாநிலத்தினைக் குறித்து பின்னரே பந்தப்படா தனித் தமிழ் நாட்டைக் குறித்தது, கட்சியின் கொள்கை மாறியதால். தமிழ் இலங்கை:- இச்சொல் தான் தமிழருக்கு தனிநாட்டை கோரிய முன்னாள் சிலோன் நாடாளுமன்ற உறுப்பினர் "அடங்காத் தமிழர்" சுந்தரலிங்கம் அவர்களால் முதன் முதலில் எமக்கான நாட்டை குறிக்க பாவிக்கப்பட்ட சொல்லாகும். இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின், தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்" என்றார், ஆங்கிலத்தில்[4]. இதில் அவர் மொழிந்த வாக்கியத்திலுள்ள "தமிழ் இலங்கை" என்ற சொல் தான் பரியான (free) பந்தப்படா தனித் தமிழ்நாட்டை குறிக்க எழுந்த முதற்சொல்லாகும். இதன் ஆங்கில எழுத்துக்கள் "Tamil Ilankai" என்பவையாகும். இச்சொல் வழக்கிற்கு வந்த போதும் "ஈழத் தமிழகம்" என்ற சொல்லானது கூட்டாட்சி என்ற கொள்கையையுடைய தமிழரசுக் கட்சியின் தேசியப்பண்ணில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழிலங்கை:- மூன்றாவதாக இந்தியாவிலிருந்து "தமிழிலங்கை" என்ற சொல்‌லும்‌ வழங்கப்பட்டது, ஈழத்தமிழரொருவரால்[3.1]. 1960ஆம்‌ ஆண்டில்‌ "மாமனிதர்" கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பச்சையப்பன்‌ கல்லூரியில்‌ கல்வி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சி. பா. ஆதித்தனார் அவர்களின்‌ தொடர்பு கிடைத்தது. அப்போது அவரைப்‌ பற்றி எழுதிய ஓர் பாடலில்‌ இச்சொல்லைப்‌ பாவித்திருந்தார், எமக்கான நாட்டை அன்னவர் ஏற்படுத்த சொன்னதாக [3.1]. இச்சொல்லானது சேர்த்தெழுதப்பட்ட சொல்லாகும். ஈழம் மூன்றாவதாக வழங்கியது ஈழம் என்ற சொல்லாகும். இதை மொழிந்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இதற்கு இவர் பாவித்த ஆங்கிலச் சொல் "Eylom" என்பதாகும். இது தற்போது பாவனையிலுள்ள "Eelam" என்ற ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்களிலிருந்து வேறுபட்டதாகும். இச்சொல்லை இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் பாவித்துள்ளார் [5.1]. தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். படிமப்புரவு: இது வேசுபுக்கிலிருந்து எனக்குக் கிடைத்த படிமம் | குறிப்பு: இஃது கொண்டு வெளியாகியுள்ள நூலெதுவென்று என்னால் அறியமுடியவில்லை. மேலும் இச்சொல்லானது சிறிலங்காவின் தமிழ் தேசியப்பண்ணிலும் இடம்பெற்றுள்ளது. எனினும் அங்கு இது ஒட்டுமொத்த தீவையும் குறித்து நிற்கிறது. எனினும் இதன் பொருளானது ஈழபோர்களின் போதும் பின்னரும் மாற்றம் கண்டுள்ளது. என்னதான் சிறிலங்காவின் தமிழ் மொழி விருத்து (version) தேசியப் பண்ணில் "ஈழம்" என்ற சொல் இடம்பெற்றிருக்கும் போதிலும் போரின் போதும் போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் இச்சொல் தமிழீழத்தை குறிக்கவே வழங்கப்பட்டு வருகிறது. சிங்களவர் கூட இச்சொல்லை எப்பொழுதும் தமிழீழத்தின் சூழமைவில் வைத்தே கதைப்பர்! இத் தமிழ் மொழி விருத்தை எழுதியவர் மு. நல்லதம்பி ஆவார். அதனை 1950ம் ஆண்டில் எழுதினார். தமிழ் ஈழம்:- இச்சொல் முதன் முதலில் யாரால் எங்கு எப்போது முன்மொழியப்பட்டு பாவனைக்கு வந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. எனினும் இது 1970களை அண்டியே பாவனைக்கு வந்திருக்கலாம் என்று துணிபுகிறேன். இச்சொல்லைக்கொண்டு தான் "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் அவர்கள், எல்லாளன் என்னும் புனைபெயரில், தாம் எழுதிய "Tamils Need a Nation, Why?" (1975/1976) என்ற நூலில் "The Socialistic Fedaral Republic of Tamil Eelam" என்பதை எமது நாட்டின் பெயராக முன்மொழிந்தார் [6]. 'புலிகளின் முதலாவது இலச்சினை, 1978ம் ஆண்டு | படிமப்புரவு: விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1' பின்னாளில், 1978ம் ஆண்டில், புலிகளின் இலச்சினையில் இந்த 'Tamil Eelam' என்பதின் ஆங்கில எழுத்துக்கள் 'Thamil Ealam' என்று மாறியது. இம்மாற்றமானது 1985ம் ஆண்டு சனவரி வரை தொடர்ந்தது. பின்னர் 1985ம் ஆண்டு சனவரியிலிருந்து மீளவும் 'Tamil Eelam' என்று மாற்றப்பட்டு இன்று வரை அப்படியே பாவிக்கப்பட்டு வருகிறது. தமிழீழம்:- உணர்ச்சிக் கவிஞர்‌ காசி ஆனந்தன்‌ தலைமையில் மே 19, 1972 அன்று மட்டக்களப்பில்‌ தமிழர்‌ கூட்டணி கட்சியின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு மேடையில்‌, என்ற சொற்றொடர் கொண்ட பதாகை கட்டப்பட்டிருந்தது [3.1]. இதில் தான் முதன் முதலில் "தமிழீழம்" என்ற சொல் பாவிக்கப்பட்டிருந்தது. இச்சொற்றொடரை யார் எழுதினார் என்பது அறியில்லை. மேலுமொரு சுவையான தகவல் யாதெனில் இதுவே வரலாற்றில் பதியப்பட்ட தமிழரின் முதலாவது "தாகம்" முழக்கமுமாகும். இச்சொல் நாளடைவில் மக்கள் நடுவணில் புழக்கத்திற்கு வந்து இன்றுவரை ஆளுகை வகையில் நாமிழந்துவிட்ட எமது தாய்நாட்டை குறித்து நிற்கும் சொல்லாக விளங்குகிறது. தமிழ் சிலோன்:- இச்சொல்லானது "நாட்டுப்பற்றாளர்" வி. நவரத்தினம் அவர்களால் 1991 இல் எழுதப்பட்டு 1995ம் ஆண்டு வெளியான "The Fall and Rise of Tamil Nation" என்ற நூலின் பல பக்கங்களிலும் 'Tamil Ceylon' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பாவிக்கப்பட்டுள்ளது. உசாத்துணை: தமிழர் தேசிய கீதம் படைத்த பரமஃகம்சதாசன், தினமணி "கோப்பாய் கோமான்" அமரர் கு.வன்னியசிங்கம் (கோப்பாய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தமிழீழம் சிவக்கிறது - பழ. நெடுமாறன் பக்கம் 229 C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005 Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM Tamils Need a Nation, Why? - A. Rajaratnam - 1975/1976 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன் முற்றும்🙏
  3. கட்டுநாயக்கா வான்படைத் தளம் மற்றும் பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் மீதான கரும்புலித் தாக்குதலிற்கான நடவடிக்கைக் கட்டளையாளர் மறைமுகக் கரும்புலி லெப். கேணல் கண்ணன் "வெடியாய் உதிர்ந்த போதும் நினைவாய் வாழுவீர்"
  4. According to the Tiger Intelligence Sources: Destroyed Aircrafts: 18 Airbus - 3 A - 340 - 300's - 2 A - 330 -200 - 1 Kfir - 4 K-8 Jet - 3 MIG-27 - 2 MI-17 - 2 Bell 212 - 2 Bell 412 - 2 Damaged Aircrafts: 10 Airbus - 3 A 320's - 2 A -330 - 1 Kafir - 4 MI-24 - 1 Antonov - 1 Bell-412 - 1
  5. இங்கே நான் எழுதிய முதலாவது அரசியல் கட்டுரைக்கு இத்தனை உறவுகள் வந்து கருத்திடுவார்கள் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. எனது கட்டுரையையும் மதித்து கருத்தெழுதிய அத்தனை உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முதலில்... இது கட்டுரை அல்ல... நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கிருபன் ஐயன் (நீலனை ஏன் கொன்றார்கள் புலிகள்) மற்றும் ஜஸ்ரின் ஐயன் (சந்திரிக்கா மாமி கொண்டுவந்த பொதி எப்படிப்பட்டது) ஆகியோருக்கு எழுதிய இரு கருத்துக்களை தொகுத்து, ஒன்றாக்கி, சும்மா கட்டுரையாக்குவமே என்று ஆக்கினேன்... 😀😀 அமோக வரேற்பு கிடைத்துள்ளது... அதுவும் இரு பக்கத்திற்கு... 🤣 எனக்கு பொங்கல் வைத்தது கூட கணக்கில்லை.. இத்தனை பேர் கருத்தெழுதியதே கணக்கு... 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.