Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பாகம் - 2 தந்தை செல்வாவின் தனிநாடு கொள்கை எதிர்ப்பு:- இந்த தனிநாட்டுக் கோரிக்கையினை ஆரம்பத்திலிருந்தே தந்தை செல்வா எதிர்த்து வந்தார். அவர் சமஸ்டி கொள்கையையே தூக்கிபிடித்தார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப் போர் நிலவியது. பின்னர் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர். சூலை 26, 1957 அன்று பண்டா-செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், கோவத்துடன் இருந்தார் "அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் [2b]. (இவ்வுடன்படிக்கை மூலம் "தந்தை செல்வா" அவர்கள் தாம் கொண்டிருந்த கூட்டாட்சி எ சமஸ்டி கொள்கையைக் கூட தூக்கியெறிந்துவிட்டு அதைவிட மலிவான ஒன்றான "பிரதேச சபை"யையே பெற்றார் சிங்களவரிடமிருந்து. இதனால் கடும் கோபத்திற்காளானார்.) ஜூலை 28, 1957 தேதியிட்ட திறந்த கடிதத்தில், தந்தை செல்வாவிற்கு எழுதிய சி.சுந்தரலிங்கம் [2b], தமிழ் மொழிபெயர்ப்பு: “நீங்கள் தமிழர்களை எவ்வளவு கழிவிரக்கமான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்? “1956 ஆம் ஆண்டு அரியணை உரையில் திருத்தம் மூலம் நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் அரசாட்சியையுடைய பொதுநலவாய தமிழ் இலங்கையை உருவாக்கும் ஒரு தன்னாட்சி தமிழ் நாட்டை நான் விரும்பும் அளவிற்கு, இந்த விடயத்தில் மாத்திரம் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியியல் மாநிலங்களை நிறுவுதல்] உங்கள் கட்சியிலிருந்து நான் வேறுபட்டேன். ‘தன்னாட்சி தமிழ் மொழியியல் அரசு’ தொடர்பாக நான் உங்கள் கட்சியுடன் முழுமையாக உடன்பட்டிருந்தேன். மீண்டுமுரைக்கிறேன், உங்கள் கட்சி கூட்டாட்சியை விரும்பியபோதும், நான் பிரிவினையை விரும்பினேன், ஏனென்றால் 1955 முதல், தமிழர் நலன்களைக் காக்க எந்த தமிழரும் ஒரு சிங்கள அரசியல்வாதியை நம்பக்கூடாது, நிச்சயமாக முதன்மை அமைச்சர் பண்டாரநாயக்கவை நம்பக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்றார். பின்னர் மீண்டும் தந்தை செல்வா சமஸ்டி கொள்கையை ஆதரித்தார். தமிழரசுக் கட்சியின் செயற்குழு டிசம்பர் 26 1960 அன்று கூடியது (பம்பல் என்னவென்றால் அக்கட்சியின் தமிழ்ப் பெயர் "தமிழரசு", தமிழில். எனினும் ஆங்கிலத்தில் அதன் பெயர் "Federal Party"; அதாவது சமஸ்டி கட்சி. கட்சியின் பெயரிலேயே முரண்பாடுகளை உடைய கட்சி இதுவாகும் [2a]). அதன்போது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை [5]. அவர் அதற்கு சொன்னது [5], இதே போன்று இன்னொரு நிகழ்வு கட்சியின் 11ஆவது மாநாட்டில் அரங்கேறியது. கட்சியின் 11ஆவது மாநாடு உடுவிலில் நடந்தது. அதன்போது இளைஞர் அணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றனர் [5]. அப்போது அதை தடுத்த தந்தை செல்வா, என்றார் [5]. தொடர்ந்து கூட்டாட்சியை தந்தை செல்வா ஆதரித்து வந்ததால் செ. சுந்தரலிங்கம் இவரைக் தொடர்ந்து சாடி வந்தார். 1963இல் செ. சுந்தரலிங்கம் எழுதிய கடிதமொன்றில் தந்தை செல்வாவின் கூட்டாட்சி திட்டத்தை சாடினார். திசம்பர் 20, 1963 என்று எழுதிய கடிதமொன்றில் எதிர்வுகூறல் போன்று எழுதியிருந்தார் [1.1]: தமிழ் மொழிபெயர்ப்பு: "திரு. சாமுவேல் செல்வநாயகம் தலைமையிலான கூட்டாட்சி கட்சி [இலங்கை தமிழ் அரசு கட்சி] தங்கள் கூட்டாட்சி கொள்கை, சத்தியாக்கிரகம், அஹிம்சை மற்றும் பாதை-யாத்திரைத் திட்டங்கள் மட்டுமே ஈழத் தமிழர்களின் பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று தொடர்ந்து கூறி வந்தால், ஈழத் தமிழ் தேசம் மீண்டும் பிறக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதில் நம்பிக்கை அடைகிறேன். வளர்ந்து வரும் தலைமுறையின் துன்பங்களையும் இன்னல்களையும் விரிக்க முடியாது. ஆனால் எதிர்கால தலைமுறையினர் என்னென்ன அனுபவிக்க நேரிடும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது." "அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் தேர்தல்களில் தொடர் தோல்விகளின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்ட போது, என்று இடித்துரைத்தார் [6]. இதன் மூலம் அவர் தனது தனிநாட்டுக் கொள்கை கொண்டோர் தவிர வேறு யாருடனும் கூட்டு வைக்கவிரும்பவில்லை என்பது தெரிகிறது. "நாட்டுப்பற்றாளர்" வை. நவரட்ணம் அவர்கள் 1969 ஆகஸ்ட் 27 இல் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டார். அதன் போது தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். இத்தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கோரியிருந்தனர் [5]! இதனால் மக்களின் ஆதரவு இவரிற்கு பெரும்பான்மையாக கிட்டாமல் போக இவர் தோல்வி கண்டார். அதே நிலைமை தான் 1977 தேர்தலிலும் இவருக்கு நேர்ந்தது. அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோதும் கூட்டாட்சி அடிப்படையிலான மாற்று யாப்பையே முன்வைத்தார் [5]. கால மாற்றம்:- 1973 செப்டம்பரில் மல்லாகத்தில் நடந்த தமிழரசுக் கட்சியின் 12வது ஆண்டு மாநாட்டில், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது [3]. இத்தனிநாட்டுக் கோரிக்கையை முதலில் ஏற்காத சமஸ்டியை தூக்கிப் பிடித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். தொண்டமான் ஆகியோர் கூட்டுத்தலைவர்களாகி தமிழர் விடுதலைக் கூட்டணி என்றொரு கட்சியை 1975இல் தோற்றுவித்து ஒரு கட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டனர். "தந்தை" செல்வா அவர்கள் மட்டு நகரில் ஆற்றிய உரை ஒன்றின் போது கீழ்க்கண்டவாறு தனது தனி நாட்டிற்கான கோரிக்கைக்கு ஆதரவை அறிவித்தார். - மே 11, 1975 இல் மட்டக்களப்பில் ஆற்றிய உரையில். [4] தனிநாடு மக்கள் ஆணை பெறுகிறது:- வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கையானது மக்கள் ஆணைக்கு விடப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது. இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் 19 நவம்பர் 1976 அன்று நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரையில் [4] இவ்வுரையின் போது இவர், என்றும் கூறினாராம் [5]. பின்னர் 1977 தேர்தலில் இதையே தமது கொள்கையாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் ஆட்புலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இவ்வாணைக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது! உசாத்துணை: Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73 Sri Lanka: The Untold Story - K T Rajasingham Chapter 14: Post-colonial realignment of political forces Chapter 16 ‘Honourable wounds of war’ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் The Tamil People’s Struggle to be Free தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை C. Suntharalingam – Part II: Grandfather’s Letters - S. Ratnajeevan H. Hoole - Colombo Telegraph ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  2. "தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தந்தை செல்வநாயகம் சென்தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது அதிபர் மறுத்தமையால் அன்றைய தினமே இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். அதன் பின்பு வெஸ்ரி கல்லூரியில் அவர் பணியாற்றும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் வேட்டி சால்வை அணிந்து பணியாற்ற முடியாது என்றபோது அங்கும் வேலையை இராஜிநாமா செய்துவிட்டு வெளியேறினார். அனைவரும் இணைந்து செல்வோமே என நினைத்தவர் அல்லர் தந்தை செல்வா. அவரது அரசியல் அணுகுமுறையும் அவரது தனிப்பட்ட குணாதிசயத்துடன் ஒத்ததாகவே இருந்தது. இல்லையென்றால், 1947 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றியீட்டினார். எனினும், நாடாளுமன்றம் வந்து ஓரிரு ஆண்டுகளிலேயே பொன்னம்பலம் தலைமையில் பொன்னம்பலம் அணி எனவும், உப தலைவர் செல்வநாயகம் தலைமையில் செல்வா அணி எனவும் இரண்டாகப் பிரிந்தது. தேர்தலில் தோல்வி பிரிய வேண்டும் என்பதற்காகத் தந்தை செல்வா பிரியவில்லை, பிரஜாவுரிமைச் சட்டத்தை அன்றைய இலங்கைத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க அறிமுகப்படுத்தியபோது அது தீங்கானது, அதனை ஆதரிக்க முடியாது, 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கை - இந்தியக் காங்கிரஸ் அந்த உறுப்பினர்களின் பிரஜாவுரிமையே அற்றுப்போகும் விதமாக அந்தச் சட்டம் இயற்றப்பட்டு கொண்டு வந்தபோது அதனை எதிர்க்க வேண்டும் எனக் கட்சிக்குள்ளேயே வாதாடினார். கட்சி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கொள்கையின் நிமித்தம் கட்சியை இரண்டாகப் பிளந்தார். 101பேர் இருந்த நாடாளுமன்றத்தில் 6 பேர் கொண்ட கட்சியில் இருந்து 3 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர். கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஒற்றுமை என்ற கோஷத்துக்காகத் தவறைச் செய்ய அவர் விரும்பவில்லை. ஒற்றுமை அல்ல, கொள்கையே முக்கியம், எங்களுடைய நிலைப்பாடு முக்கியம், எதற்காக மக்களுக்காக எழுந்து நிற்கின்றோம் என்பது முக்கியம், அதைச் செய்யத் துணிந்தார். 1949 ஆம் ஆண்டு புதிதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர் ஆரம்பித்தார். வருட ஆரம்பத்தில் மாவிட்டபுரத்தில் அண்ணன் மாவை.சேனாதிராஜாவின் வீட்டுக்கு அருகிலே கட்சியின் அங்குரார்ப்பணம் நடந்தது. எனினும், டிசம்பரில் கொழும்பில்தான் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை உத்தியோகபூர்வமாக அவர் நடத்தினார். அதற்கு முன்னர் பல முஸ்தீபுகள் இடம்பெற்றபோது அதைக் கற்கலால் எறிந்து குழப்பினார்கள், அடித்துத் துரத்தினார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றன. அதனால்தான் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பு - மருதானையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அங்குரார்ப்பணம் செய்தார். பிடித்த கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். அந்த வழியைத் தன்னுடைய மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். 3 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலிலே போட்டியிட்டு தோல்வி கண்டார். தமிழரசுக் கட்சி சார்பில் கோப்பாயில் வன்னியசிங்கமும், திருகோணமலையில் இராஜவரோதயமும் மட்டுமே வெற்றியீட்டினர். முதல் தேர்தலிலேயே தமிழரசுக் கட்சியை வெற்றிகொள்ள வைத்த பெருமிதம் திருமலைக்கு உண்டு. ஆனாலும், கட்சி தோல்வியடைந்தது. மக்கள் தனது கொள்கையைப் புறக்கணித்து விட்டார்கள் என அவர் விட்டுவிடவில்லை. அந்தத் தேர்தலிலே காங்கேசன்துறைத் தொகுதியில் தான் தோற்றபோது அவர் நீதிமன்றிலே வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தேர்தல் வெற்றி தவறானது, முடிவு தவறானது எனத் தானே வாதாடி வழக்கொன்றைத் தொடுத்தார். அந்த வழக்கிலேயும் அவர் தோற்றார். தோற்றது மட்டுமன்றி அன்று வழக்குச் செலவாக 40 ஆயிரம் ரூபாவையும் அவர் கட்ட வேண்டியும் இருந்தது. அதையும் செய்தார். ஆனால், 1956 ஆம் ஆண்டில் இருந்து இளையவர்களையும், புதியவர்களையும் கட்சிக்குள் சேர்த்தார். வேட்பாளர்களாக நிறுத்தியவர்கள் எல்லாம் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். பெரு வெற்றி கண்டார். தனி நாட்டுக் கோரிக்கை அதற்குப் பிறகு இன்று வரைக்கும் அவர் வகுத்த சமஷ்டிக் கொள்கைக்குத் தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றார்கள். ஆகவே, அவரது அரசியல் அணுகுமுறையை அறிந்திருப்பது அல்லது பின்பற்றுவது அத்தியாவசியம். இந்த விடயத்திலே தந்தை செல்வா சொன்ன இரண்டு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். இதே மண்ணிலே தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது தந்தை செல்வாவின் பேருரையில் சொன்ன ஒரு வாசகம், "ஓர் இனம் அழியாமல் இருப்பதற்குப் பல ஏற்றம் தேவை. ஒன்று அந்த இனத்தின் எண்ணுத்தொகை குறையாமல் இருப்பது. இரண்டாவது அந்த இனம் வசிக்கும் பிரதேசம் பறிபோகாமல் இருப்பது." இந்த இரண்டும் இந்தத் தீவிலே எங்கள் இனம் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும், நாம் வதியும் பிரதேசம் பறிபோகாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்வதாக இருந்தால் நாம் வசிக்கும் பிரதேசத்தில் ஆட்சி முறை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் தனது சமஷ்டி கொள்கையை முன்வைத்தார். 1956 ஆம் ஆண்டிலேயே தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம் ஈழம் என்று பெயர் கொடுத்தார். ஆனால், தந்தை செல்வா அதை அந்த வேளை ஏற்கவில்லை. தொடர்ச்சியாக பலர் தனியாகப் பிரிந்துபோவதுதான் ஒரே வழியெனக் கூறியபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூடியபோது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா சொன்னது "இது வன்முறையில் முடியும். ஆயுதப் போர் பிரச்சினையைத் தீர்க்காது" என்று கூறி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை. 11ஆவது மாநாடு உடுவிலே நடந்தபோது இளைஞர் அணி - அதாவது வாலிபர் முன்னணியினர் வந்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் எனச் சொன்னபோது அவர்களுக்கு அறிவுரை கூறி அதனை நீங்கள் முன்மொழிய வேண்டாம், இதனை நான் எதிர்த்தவன் அல்லன், இது எமது மக்களுக்குப் பாதகமாக முடியும் எனக் கூறி அதனையும் தந்தை செல்வா தடுத்தார். 1970 ஆம் ஆண்டுத் தேர்தலிலே வி.நவரட்ணம் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலிலே போட்டியிட்டபோது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றோம். அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோது மாற்று யாப்பை முன்வைத்தார். சமஷ்டி அடப்படையிலே அந்த யாப்பு இருந்தது. எமது வெள்ளி விழா மலரிலும் அது இருக்கின்றது. அந்த யாப்பிலே பல விடயங்களை அவர் கோரியிருந்தாலும் இறுதியிலே எமது கட்சியின் சார்பில் வி.தர்மலிங்கம் 5 பிரேரணைகளை (நாடாளுமன்றத்தில்) முன்வைத்தார். அனைத்தும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது தந்தை சொன்னார், ''இனி, நாளையில் இருந்து நாம் இங்கே வர மாட்டோம். நாம் வெளிநடப்புச் செய்து இதனை ஒரு நாடகமாக மாற்ற விரும்பவில்லை. ஆனால், நாளையில் இருந்து நாம் இங்கு வரமாட்டோம்'' - என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து இராஜிநாமா செய்தார். இடைத்தேர்தலும் இரண்டரை ஆண்டுகள் இடம்பெறாமல் இருந்தது. 1975ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடைத்தேர்தலிலே அவர் பெருவெற்றியீட்டினார். அதன் பிறகுதான் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், எமது கட்சி தனிநாடு ஒன்றை நிறுவ முனைகின்றது. இது இலேசான காரியம் அன்று, வில்லங்கமானது என்பதை நாம் அறிவோம்" - என்று அதனை விவரித்துச் சொல்லி விட்டு, எமது நடவடிக்கை சாத்வீகமானது எனச் சொன்னார்." - என்றார். https://tamilwin.com/article/thanthai-selva-remembrance-in-trinco-1714329010
  3. பாகம் - 1 தனிநாடு கோரப்படுகிறது:- ஈழத் தமிழர்க்கொரு தனி நாடு வேண்டும் என்று முதன் முதலில் கோரியவர் சிலோன் நாடாளுமன்றத்தில் டி.எஸ். சேனனாயக்காவின் முதலாவது அமைச்சரவையில் பதவி வகித்த செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் செப். 8, 1947 தேர்தலில் வவுனியாவில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார் [5.1] [1.1]. இவரைப் பற்றிய சிறு முன்குறிப்பு யாதெனில், இவர், டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையினுள் அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டு உள்வாங்கப்பட்டவராவார்; வணிகம் மற்றும் பண்டமாற்று அமைச்சு வழங்கப்பட்டது [5.1]. தமிழரை நிகராளித்துவப்படுத்தி இவர் சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு டி.எஸ் சேனநாயக்காவிற்கு ஆதரவு அளிப்பதை தமிழரசுக் கட்சியினர், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில், கடுமையாக எதிர்த்தனர் [1.2]. இருப்பினும் தனது ஆதரவை சிங்களவருக்கு கொடுத்து சிங்கக் கொடியேறுவதற்கு வழி வகுத்தார் [2]. பின்னர் தனது தவறையுணர்ந்தோ என்னவோ மார்ச் 3, 1951 இல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் தனது பதவியைத் துறந்தார் [5.2]. இவர் மீண்டும் 1952 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார் [6]. இத்தேர்வின் போது கிடைத்த ஆசனத்தைக் கொண்டுதான் பிரிவோம் என்பதை அறிவித்தார்! 'அடங்காத் தமிழர்' செ. சுந்தரலிங்கம் | படிமப்புரவு: விக்கி இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின், தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்" என்றார், ஆங்கிலத்தில்[4]. இதன்மூலமே தான் முதன் முதலில் எமக்கு தனி நாடு வேண்டும் என்றும் அறிவித்தார். தனிநாட்டிற்காக குழுசேருமாறு முதலில் அழைத்தவர்:- இத்துடன் தனிநாட்டிற்காக குழுசேருமாறு தமிழர்களிற்கு முதலில் அழைப்புவிடுத்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார் [3.1]. தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைத்தது மட்டுமின்றி 1958இல் வவுனியாவின் எல்லைகளிலிருந்த தமிழ் சிற்றூர்களினுள் சிங்களவர் ஊடுருவுவதைத் தடுக்க தமிழரை திரட்டி சிங்களவருக்கு எதிராக சண்டைக்கு களமிறக்கியதும் இவரே ஆவார். தமிழருக்கு வேட்டைச்சுடுகலன்களை இவர் வழங்கியதாக கூறக்கேள்வி. அதற்காக இவர் 'அடங்காத் தமிழர் முன்னணி' என்றவொரு அமைப்பையும் தோற்றுவித்திருந்தாராம். இதன் மூலம் தான் இவருக்கு "அடங்காத் தமிழன்" என்ற பட்டமும் கிடைக்கப்பெற்றதாக கருத்தப்படுகிறது. இதன் பின்னர் 1959 இல் 'ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி' என்றவொரு தேர்தல் திணைக்களத்தில் பதியப்படாத அரசியல் கட்சியினையும் தோற்றுவித்தார். தனிநாட்டிற்காக சண்டைக்கு வருமாறு முதலில் அழைத்தவர்:- தனிநாட்டிற்கான சண்டைக்கு வருமாறு தமிழர்களிற்கு முதன் முதலில் அறைகூவல் விட்டவரும் செ. சுந்தரலிங்கமே ஆவார். "Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents" (1967) என்ற நூலின் பின்குறிப்பில் [3.2] இல் இவ்வாறு எழுதியுள்ளார்: தமிழ் மொழிபெயர்ப்பு: சிலோனின் பிரிவினைக்கும் 1802 ஆம் ஆண்டு அமியன்ஸ் உடன்படிக்கைக்கு முன்னரிருந்த தமிழ் அரசை மீட்டெடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும் ஈழத் தமிழர்களை, ஈழத் தமிழ் தேசத்தின் பரியுடைமையானதும் (freedom) பந்திலாமையானதுமான (Independence) சண்டைக்கு சேர முன்வருமாறு அழைக்க முன்மொழிகிறேன். 'கிளாப்' என்பவர் வகைப்படுத்திய 17 வகையான நாயகன்களில் இவரை "குமுகாய மரபொழுங்குக்குப் புறம்பானவர்"/Bohemian என்று எழுதுவினைஞர் சச்சி சிறிகாந்தா அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் வகைப்படுத்தினார், தனது நூலான "The Pirabhakaran Phenomenon" இல் [7.1]. எனினும் இவர் "தேசத் தந்தை" எனப்படாமைக்கு இவர் செய்த ஊத்தை நாச வேலைகளே காரணமாகும்! உசாத்துணை: The Fall And Rise Of The Tamil Nation (1995) - V. Navaratnam Chapter 2 pg. 41-42 It Happened 65 Years Ago: When two independent Tamils pawned Eelam rights - Sachi Sri Kantha, October 12, 2012 Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73 C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005 Sri Lanka: The Untold Story - K T Rajasingham Chapter 12: Tryst with Independence Chapter 14: Post-colonial realignment of political forces 1952 Election Result The Pirabhakaran Phenomenon - Sachi Sri Kantha Part 53 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  4. தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம். இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.
  5. இந்தக் கட்டுரையானது தொடர்ந்தும் நீலன் திருச்செல்வம் என்ற உடனுழைப்பாளரால் கொணரப்பட்டதாகக் கூறப்படும் கொணரப்படாத தீர்வுப் பொதி பற்றி என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் புலி எதிர்ப்புவாத தமிழர்களிற்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டது. இவரை புலிகள் "துரோகி/ வஞ்சகன்" என்று அவர்களின் அலுவல்சார் ஊடக வெளியீடுகளிலும் அவர்களின் நேரடி கண்காணிப்பிலிருந்த இதழ்களிலும் அழைத்ததாக எங்கும் தெரியவுமில்லை. என்னால் காணவும் இயலவில்லை! (வெளிநாடுகளிலிருந்து வெளியான தமிழர் ஆதரவு இதழ்களில் இச்சொல் தாராளமாக காணக்கிடைக்கிறது) எங்கினும் இருந்தால் எனக்கும் வாசகர்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  6. நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் முழுமையடையாத வரைவுச் சட்டம் 1996 ஜனவரி 16 அன்று சிங்கள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது, மார்ச் 1997ம் ஆண்டு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களின் இறுதி அறிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சிறிலங்கா அதன் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவை வெளியிட்டது. பின்னர் ஒக்டோபர் 1997 அன்று முழுமையடைந்த வரைபு வெளியானது. 7 ஓகஸ்ட் 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும். அதையும் கூட சிங்களம் நிறைவேற்றவில்லை. மட்டுமின்றி சந்திரிக்காவின் முதன்மை அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் மகாநாயக்க தேரர்களின் கருத்திற்குட்படுத்தியே செய்வோம் என்றார், 13 ஓகஸ்ட் 2000ம் ஆண்டு அன்று. இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" என்ற நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் மறுதலித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதனை "படைய வடிவமைப்புகளை மறைக்க ஒரு அரசியல் முகமூடி" என்று 14 ஓகஸ்ட் 1995இல் அழைத்தனர். (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) முன்மொழிவை புலிகளின் மதியுரைஞரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்க கட்டத்தில், 1995 ஓகஸ்ட் 11, மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். பின்னாளில் ,மார்ச் 13, 2003 ஆம் ஆண்டு,வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்குகையில் இவ்வரைபின் "தொடக்க வடிவம்" ஏற்கக்கூடியது என்றார் (உதயன் 13/03/2003 பக் - I). அப்போது கூறியதாவது: உந்த மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் தனியான வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர் கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான" 😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும். அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்! புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர். இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது. வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே, 1996, யாழில் 812 தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்ற சிங்களவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! பாவிக்கப்பட்ட முதன்மை உசாத்துணை: https://tamilnation.org/conflictresolution/tamileelam/cbkproposals/ ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  7. தவறுதலாக பதியப்பட்டிருந்த 2010 இற்குப் பிறகு வெளியிடப்பட்ட இரு இசை இறுவட்டுகள் நீக்கப்பட்டு புதிதாக கிடைக்கப்பெற்ற 5 இறுவட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது 219 ஆக உயர்ந்துள்ளது, விடுதலைப் போராட்ட கால இசை இறுவட்டுகள்.
  8. ஈழநாதத்தினுள் பல தொடர்கட்டுரைகள் உள்ளது. அவை எமது விடுதலையின்பாற்பட்டன. அவற்றை எடுத்து ஆரேனும் நூலாக்குங்கள்.
  9. என் கண்முன்னே எமது இறுதி மருத்துவமனை எரிந்து போனது. காயப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அனைவரும் உடல் சிதறி போனார்கள் – மருத்துவப் போராளி அலன் விடுதலைப்புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப்பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஒரு அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்து கொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க் கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூட தன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப் போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதியான மருத்துவமனையை, அதாவது போராளிகளால் நிர்வகிக்கப்பட்ட மருத்துவமனையை பொறுப்பாக இருந்து களப்பணியாற்றிய மருத்துவப் போராளி அலன் அவர்களை இன்று சந்திக்கப் போகிறோம். தமிழீழ மருத்துவத் துறையில் உங்களின் போராளிகள் மற்றும் மக்களுக்கான மருத்துவப் பணிகள் எப்படி இருந்தன? பெரும்பாலான பணி எனக்கு பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் தான் இருந்தது. பெரும் காலங்கள் அங்கே சத்திரசிகிச்சை கூடங்களிலையே மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கி வந்தேன். அத்தோடு கடற்புலிகளின் படையணி மருத்துவராகவும் கடமையாற்றினேன். அவ்வாறான காலங்களில் படையணி மருத்துவமனைகளான நெய்தல் மற்றும் முல்லை ஆகிய படையக மருத்துவமனைகள் இயங்கிய போது அம் மருத்துவமனைகளிலும் என் பணி விரிந்திருந்தது. Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை பற்றி கூறுங்கள். உண்மையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும் மருத்துவ வளங்கள் குறைவு. அதாவது மருத்துவர்களோ அல்லது மருத்துவப் பொருட்களோ எமக்கு தாராளமாக கிடைப்பதில்லை அதனால் மக்களுக்கான மருத்துவப் பணிகளை சீர்படுத்துவதற்காக எமது தலமையின் ஆலோசனையின் பெயரில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனைகளை 1996 ஆம் ஆண்டு தொடங்கினோம். அங்கே வாழ்ந்து வந்த அரச மருத்துவர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் பெறப்பட்டு போராளி மருத்துவர்களை வைத்து நிர்வகிக்கத் தொடங்கினோம். இம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி ஆற்றுகைப்படுத்தல் முறைமை என்பது உச்சமாக இருக்கும். மருந்தை விட ஒருவரின் மனதில் நீ வருத்தக்காறன் இல்லை என்ற நினைப்பை ஊட்டினாலே பெரும்பாலான நோய்கள் இல்லாது போய்விடும். இது பண்டையகாலங்களில் இருந்து வந்த மரபு. அதைப் போல அங்கே பணியாற்றிய அரச மருத்துவர்களாக இருந்தாலும் சரி போராளிகளாக இருந்தலும் சரி மக்களை நெருங்கி நின்றார்கள். Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை அரச மருத்துவமனைகளை விட சிறப்பாக இயங்கியது. அது எவ்வாறு சாத்தியமானது? இது தேசியத் தலைவரின் உன்னத நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இல்லாத நவீன வசதிகள் அங்கே இருந்தன. சத்திரசிகிச்சைக் கூடம் நவீனமாக உருவாக்கப்பட்டது. இலவசமாக மக்களுக்கான மருத்துவத்தை இதனூடாக கொடுக்க முடியவில்லை என்றாலும் தெற்கோடு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவுடனான மருத்துவசிகிச்சைகளை மக்கள் பெறக் கூடியதாக இருந்தது. அரச மருத்துவர்கள் போராளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லை என்றே நான் கூறுவேன். அவர்களும், நாங்களும் இணைந்து தான் அதிகமான காலங்களில் பணியாற்றி இருக்கின்றோம். அங்கே பணியாற்றிய பல மருத்துவர்களின் மிகப் பெரும் பங்கு எமது போராளி மருத்துவர்களை உருவாக்குவதில் இருந்தது. அதே நேரம் அவர்கள் மக்களுக்கான மருத்துவப் பணியிலோ, போராளிகளின் மருத்துவப்பணியிலோ தயக்கமின்றி ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களின் நிர்வாகத்துக்குள் நாமோ, எமது நிர்வாகத்துக்குள் அவர்களோ கட்டமைப்பு ரீதியாக பங்கெடுத்தது இல்லை. மக்கள் பணிக்காக நாம் இணைந்திருந்தோம் மருத்துவத் தடை, பொருளாதாரத் தடை என்பன இறுக்கமாக இருந்த காலங்களில் மருத்துவமனையை எவ்வாறு இயக்கினீர்கள்? இது மக்களுக்காக எம் மருத்துவப் பிரிவால் இயக்கப்பட்ட மருத்துவமனை. அதனால் எமது படையக மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடல் மார்க்கமாக கொண்டு வருவதைப் போலவே அப் பிரச்சனைகளை நாம் கையாண்டோம். அதற்காக எமது பிரிவுக்குள் மருத்துவக் களஞ்சியம் மற்றும் கொள்வனவுப் பகுதி என்பன பிரத்தியேகமாக இயங்கின. Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தனியார் மருத்துவமனையாக இயங்கிதால் (இலவசமாக இயங்காத நிலையில் )அனைத்து வகையான மக்களும் சிகிச்சையை பெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை அதை எவ்வாறு கையாண்டீர்கள்? எமது விடுதலைப் போராட்டம் மக்களுக்கான சுதந்திரத்துக்கானது. இதில் சிகிச்சைக்காக வரும் மக்களிடம் நாம் பணத்தை மிக முக்கியமாக எதிர்பார்க்கவில்லை. மிக அவசரமான அல்லது முக்கியமாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை நாம் இலவசமாகவே செய்தோம். அதே நேரம் அனைத்து மக்களும் சிகிச்சை பெறக் கூடியதாக தியாக தீபம் திலீபன் இலவச மருத்துவமனையை உருவாக்கி அதனூடாக அனைத்துவகை மக்களும் சிகிச்சை பெறக் கூடிய சூழலை உருவாக்கினோம். இறுதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது Dr. பொன்னம்பலம் மருத்துவமனை மீது இலங்கை அரசின் வான்படை தாக்குதலை மேற் கொண்டது. அப்போது அங்கே என்ன நடந்தது? புதுக்குடியிருப்பு Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையை பொறுத்தவரை சத்திரசிகிச்சை கூடம், விடுதிகள், வெளிநோயாளர் சிகிச்சை பகுதி , நிர்வாகப் பகுதி என பல பகுதிகளை கொண்டிருந்தது. அதில் இறுதி நேரம் எமது மருத்துவமனைக்கு தாக்குதல் நடக்கலாம் என்று எமது “வான் தாக்குதல் கண்காணிப்பு பிரிவினால் “ அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக சத்திரசிகிச்சை கூடத்தை உடனடியாக நாம் இரணைப்பாலைப் பகுதியில், சத்திரசிகிச்சைக் கூடத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து அங்கிருந்த இரு வீடுகளுக்கு மாற்றினோம். அதே நேரம், மல்லாவி, அக்கராயன்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் நெட்டாங்கண்டல் போன்ற மருத்துவமனைகளை ஒன்றிணைத்து மாத்தளன் பாடசாலையில் ஒரு மருத்துவமனையையும் இயக்கினோம். அங்கே தங்கி இருந்த நோயாளர்களை இடம் மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையில் தான் எமது மருத்துவமனை மீது சிங்கள வான்படை தாக்குதலை செய்தது. அதில் 60 க்கு மேல் மக்கள் சாவடைந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். இத்தாக்குதல் திட்டமிட்டு Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனைக்கு மட்டுமா அல்லது அரச மருத்துவமனைகளுக்கும் நடாத்தப்பட்டதா? மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடாத்துவது சிங்களப்படைகளுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல. வழமையாகவே சிங்கள தேசம் செய்கின்ற விடயம் தான். அதுவும் மருத்துவமனைகள் என்று அடையாளமிடப்பட்டிருந்த போதும் ( சிகப்பு நிற + குறியீடு) எந்த மனச்சாட்சியும் இன்றி நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது சிங்களப்படைகள். அத் தாக்குதல்களில் மருத்துவர்கள், நோயாளர்கள் அல்லது பணியாளர்கள் சாவடைந்திருக்கிறார்களா? ஓம், பல தடவைகள் நடந்திருக்கின்றது. இறுதிச் சண்டையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நாம் எடுத்துக் கொண்டால், கிளிநொச்சி மாவட்டமருத்துவமனை தொடக்கம் தர்மபுரம், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம் எனத் தொடர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை தாக்குதலை நடாத்தியது இனவாதப்படை. இவ்வாறான தாக்குதல்களில் பல மருத்துவர்கள் சாவடைந்திருக்கிறார்கள். அதிலும் பல மருத்துவ போராளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். குறிப்பாக மேஜர் அல்லி, செவ்வானம், இறையொளி என்று எமது போராளி மருத்துவர்கள் இறுதிச் சண்டை நேரம் மக்களுக்கான மருத்துவப் பணியில் அதுவும் சத்திரசிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது வீரச்சாவடைந்தார்கள். இவ்வாறான மக்கள் பணியில் நின்ற போராளி மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை சிங்கள தேசம் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடாத்தியதாக அறிவித்திருந்தது. இது உண்மையா? ஓம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவு மாவட்ட , கிளிநொச்சி மாவட்ட, மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவை இயங்கிக் கொண்டிருந்த போது இராணுவம் புதுக்குடியிருப்புப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் திட்டமிட்டு சிங்களப் படைகள் தாக்குதலை நடாத்தின. அந்த நிலையில் பல நோயாளர்கள் இறந்து போனார்கள். நான் அப்போது இரணைப்பாலை மருத்துவமனையில் பணியில் நின்றேன். எனக்கு தகவல் ஒன்று வந்தது. உடனடியாக மருத்துவமனையை பின் நகர்த்துமாறு பணிக்கப்பட்டதனால் அங்கே பொறுப்பாக நின்றமருத்துவ அதிகாரிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து பின் நகர்ந்திருந்தனர். அங்கிருந்து வெளியேறும் போது பல மருந்துகளைத் தவற விட்டுள்ளனர் என்று அத்தகவல் தெரிவித்தது. அதனால் அவற்றை எடுத்து வருவதற்காக நான் இன்னும் ஒரு தம்பியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றிருந்தேன். அப்போது அங்கே சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி 20 க்கும் மேலான மக்கள் இறந்து போயிருந்தார்கள். அவர்களைக் கடந்தே நான் மருந்துக் களஞ்சியம், மருத்துவர் விடுதி என அனைத்து இடங்களையும் அலசி அம் மருந்துகளை எடுத்து வந்தேன். ஆனால் சிங்கள வல்லாதிக்கத்தின் ஊடகவியலாளரான சமன்குமார ராமவிக்ரம, அடுத்த நாள் அரச செய்தி ஊடகமான ரூபவாகினியில் விடுதலைப்புலிகள் தங்கி நின்ற மருத்துவமனை வளாகம் மீது நடந்த தாக்குதலில் 12 விடுதலைப்புலிகள் பலியாகினர் என்று அறிவித்தார். இந்த இடத்தில் ஒன்றை நான் உறுதியாக கூற முடியும். எம் போராளிகள் இறுதி நேரத்தில் கூட வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை கைவிட்டு வருவதை விரும்புவதில்லை. அதே நேரம் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிங்களப்படை தாக்குதல் நடாத்திய போது எமது படையணிகள் தங்களது நிலையை புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு வீதிக்கு அருகில் அமைத்திருந்தார்கள். இந்த நிலையில் எம் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தால் அவர்களது வித்துடலை கைவிட்டு வர யாரும் நினைக்க மாட்டார்கள். 12 வித்துடல்களையும் கைவிட்டு வருமளவுக்கு போராளிகள் என்றும் இல்லை. அதை விட ரூபவாகினி காட்டியதைப் போல அங்கே எந்த துப்பாக்கிகளும் இருக்கவில்லை. தளபாடங்கள் மட்டுமே உடைந்த நிலையில் சிதைந்து கிடந்தது. அதை விட இத் தாக்குதலில் மக்கள் தான் சாவடைந்தார்கள் என்பதற்கு நான் ஒரு சாட்சி. புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்படும் போது புவியியல் நிலை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்துவதில்லையா? எங்கெல்லாம் மக்களுக்கான மருத்துவமனைகளை நிறுவுகிறோமோ அந்த இடத்தின் புவியியல் நிலையை (GPS – Global Positioning System ) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC ) ஊடாக கொடுப்போம். அதை விட கூரைகளில் சிகப்பு நிற குறியீட்டை வரைந்திருப்போம். இவற்றை வைத்துக் கொண்டே திட்டமிட்டுத் தாக்குதல்களை மேற் கொண்டார்கள் சிங்களப்படைகள். என்னைப் பொறுத்தவரை நாம் அமைவிடத்தை அடையாளப் படுத்தியதன் பின்னரே அதிகமாக தாக்குதலை நடாத்தினார்கள். நான் இரணைப்பாலையில் என் மருத்துவமனையை நிறுவி ஒரு வாரமாக மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வந்த போது அங்கே இருந்த தற்காலிக கொட்டகைகளில் நோயாளர்களை படுக்க வைத்திருந்தேன். அந்த ஒரு வாரமும் எந்தத் தாக்குதல்களும் நடைபெறவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து மருத்துவமனையின் நிலையை அறிவித்து 3 ஆவது நாள் என்பொறுப்பில் இருந்த அம் மருத்துவமனைக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டது. உண்மையில் அதன் அமைவிடத்தைக் கொடுத்தது மட்டும் தான் இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும். அது மட்டுமல்ல மாத்தளனில் இருந்த மருத்துவமனைக்கு நேரடியாக உந்துகணையால் (RPG ) தாக்குதலை நடாத்தியது. இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்ட பின்பே மருத்துவமனைகள் அதிகமாக தாக்கப்பட்டன. அதுவும் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக நடந்தது. இது இறுதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின் நிலை? இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயம் 1,2,3,4 என படிப்படியாக குறிப்பிட்ட பிரதேசங்களை அறிவிக்கிறது. அதனால் அப் பிரதேசங்களை நோக்கி மக்கள் நகர்ந்து சென்றார்கள். அதற்குள் தாக்குதல் நடக்காது என்று நம்பிச் சென்ற மக்கள் மீது சரமாரியான தாக்குதலை செய்து மக்களை கொன்று குவித்தார்கள் சிங்களப்படைகள். ஒவ்வொரு பாதுகாப்பு வலயங்களும் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டது. குடும்பம் குடும்பமாக மக்கள் செத்துக் கொண்டிருந்த கொடுமையை அரங்கேற்றி இருந்தது சிங்கள அரசு. உயர்பாதுகாப்பு வலயம் 1 என்று அறிவிக்கப்பட்ட உடையார்கட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த மறுநாளே தாக்குதலை செய்தார்கள். அப்போது உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் மல்லாவி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. அம் மருத்துவமனையை குறி வைத்து பெரும் தாக்குதல் ஒன்றை ஒருங்கிணைத்தது சிங்களப்படைகள். உடையார்கட்டுச் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் 104 ( சரியான தொகை நினைவில்லை) மக்களை கொன்று குவித்தது. பாதுகாப்பு வலயத்துக்குள் பாதுகாப்புத் தேடி போன மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றார்கள். அப்படியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த மக்களை சாகடிக்கும் திட்டமிட்ட தாக்குதலை தேவிபுரம் பகுதியில் வைத்து செய்கிறது சிங்களப்படை. அப்போது 20 பேருக்கு மேலான மக்கள் அந்த இடத்திலேயே சாவடைந்தார்கள். காயமடைந்தவர்களை நான் முதலுதவி செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தேன். இறந்த உடல்களில் பொறுப்பெடுக்கப்படாத வெற்றுடல்களை தென்னை மரங்களுக்கு கீழே பசளை போடுவதற்காக வெட்டப்பட்ட கிடங்குகளில் போட்டு அடக்கம் செய்தேன். அதைப் போல பல சம்பவங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் நடந்தது. இந்த இடத்தில் நான் ஒன்றை கூற வேண்டும். இவ்வாறு மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிங்களம் செய்து கொண்டிருந்த போது நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதை இவ்வுலகம் உணர வேண்டும். இறுதி நாட்களில் தென்தமிழீழத்தில் இருந்த போராளிகள் ஒரு விடயத்துக்காக தலைவரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள். அதாவது தென் இலங்கை பகுதிகளில் வாழும் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தினால், எம்மக்கள் மீதான தாக்குதலை எதிரி கொஞ்சமாவது குறைக்க முனைவான் என்றும் அதனூடன திருப்பு முனையுடன் கூடிய கால அவகாசம் ஒன்று எமக்கு வேறு தயார்படுத்தல்களுக்குக் கிடைக்கும் என்றும், அதே நேரம் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் போரை நிறுத்தச் சொல்லி அரசுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி கேட்டார்கள். தலைவரோ எம் விடுதலை அமைப்பின் போரியல் நெறிக்கு அமைவாக எதிரிகளுடன் மட்டும் சண்டை இடுங்கள். சிங்கள வல்லாதிக்க அரசுடன் அல்லது சிங்கள படைகளுடன் மட்டும் சண்டையிடுங்கள். நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவி சிங்கள மக்கள் மீது ஒரு சிறு காயத்தையும் ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கூட நடாத்த வேண்டாம் என்று பணித்தார். இவ்வாறு தான் எம் தலைவர் மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். சிங்கள அரசைப் போல கொடூர முகம் கொண்டு அப்பாவி மக்களை கொன்றொழிக்கவில்லை. அதே வேளை எம் பராமரிப்பில் எத்தனை சிங்களப் படை வீரர்கள் இருந்தார்கள்? அவர்களை எவ்வாறு நாம் பராமரித்தோம் என்பதை இச்சிங்கள அரசு அறியாது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு காயப்பட்ட சிங்கள இராணுவத்தை பாதுகாத்தது பற்றி கூறுங்கள்? நிச்சயமாக விடுதலைப்புலிகளின் மருத்துவர்களுக்கு தேசியத் தலைவர் வலியுறுத்துவது இதைத் தான். எதிரி என்றாலும் அவன் நோயாளியாக உங்களிடம் வந்தால் எங்கள் போராளிகளைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்று. அதைப் போலவே எங்களை கொல்வதற்காக துப்பாக்கியோடு களத்தில் நின்றவர்கள் காயப்பட்டு வந்த போது அவர்களையும் எம் போராளிகள் போலவே பாதுகாத்தோம். இறுதிக் காலங்களில் என்னிடம் 6 சிங்கள இராணுவம் சிகிச்சை பெற்றார்கள். அதில் இருவர் மேயர் தர அதிகாரிகளாகவும், ஒருவர் லெப்டினன் தர அதிகாரியாகவும், மிகுதியானவர்கள் கோப்ரல் தர படையாகவும் இருந்தார்கள். அதை விட இவர்கள் என்னிடம் சிகிச்சைக்காக வந்த போது வயிற்றுக் காயம் மற்றும் தலைக் காயம் போன்ற பாரிய காயங்களுடனே வந்தார்கள். இவர்கள் பூநகரி பிரதேசத்தில் நடந்த சண்டையில் காயமடைந்து காப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தார்கள். இவர்களின் சிகிச்சைகளின் பின் அவர்களை பாதுகாக்கும் பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்தார்கள். அதில் மூவர் ICRC ஊடாக சிங்கள அரசிடம் கையளிக்கப்பட்டிருந்தார்கள். ஏனைய மூவரும் விடுதலை செய்வதற்கான நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருந்த காரணத்தால் தனிப்பட்ட முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மட்டும் தானா இருந்தார்கள்? இந்த ஆறு பேரும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள். அதை விட எம் மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்ற பல இராணுவ வீரர்களை நாம் விடுவித்துள்ளோம். அதே நேரம் விடுவிப்பதற்கு தயாராக சிலரையும் சிறைக் கைதிகளாக பலரையும் விட்டுச் சென்ற மக்களின் வாழ்விடங்களில் தங்க வைத்திருந்தோம். எனக்குத் தெரிய பலர் அங்கே இருந்தார்கள். உங்களிடம் மருத்துவ பொருட்கள் அல்லது உபகரணங்கள் போதுமான அளவில் இருந்ததா? இல்லை. உணவுப் பொருட்களுக்கு இருந்த தடையைப் போலவே மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்திருந்தது சிங்கள அரசு. அதனால் எம்மிடம் மருத்துவப் பொருட்கள் கையிருப்பில் இல்லை. அதே நேரம் கைவிடப்பட்ட புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து நான் மீட்டு வந்த மருந்துப் பொருட்களை சிக்கனமாக பாவித்து வந்ததால் இறுதி வரை கொஞ்சமேனும் இருப்பில் இருந்தது. அதை விட மருத்துவ இருப்பு என்பது அறவே இல்லை. வலிநிவாரணி, தொற்றுநீக்கிகள் என்று எதுவுமே இல்லை. அதுவும் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்புக் குளுசைகள் எம்மிடம் கொஞ்சம் கூட இல்லாமல் போயிருந்தது. ஆனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த மருந்துகள் எமக்கு பெரிதும் உதவின. அதை விட எலும்புகள் பொருத்துவதற்கா பாவிக்கும் External Fixation கள் கையிருப்பு இல்லாத நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டதால் இறுதி நாட்கள் வரை மிகப் பயனுள்ளதாக இருந்தது. சிங்கள அரசின் பொருளாதாரத் தடையால் மக்கள் உணவுக்கு பெரிதும் சிரமப் பட்டிருப்பார்களே.? நிச்சயமாக, நான் சிறுவயதில் படித்த ஒரு விடயத்தை இந்த சண்டை எனக்கு நினைவூட்டியது என்பதை விட நேரடியாக காட்டியது என்றே கூறலாம். அதாவது பண்டமாற்றுப் பொருளாதாரம் என்று ஒரு விடயத்தை ஆதிகால மக்கள் செய்திருந்தார்கள். அதாவது பணம் என்ற பரிமாற்றுச் சாதனத்தைக் கண்டுபிடிக்க முதல் பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்கும் முறைமை இருந்தது. அவ்வாறான முறைமையையே எம் மக்கள் இறுதியாக கையாண்டார்கள். “ஒரு கிலோ அரிசி தாங்கோ நாங்கள் உங்களுக்கு பங்கர் வெட்டித் தாறம் “ என்று கேட்ட மக்கள் தான் அதிகமாக இருந்தார்கள். உழைப்புக்கு பணம் வாங்க மறுத்தார்கள். பணம் அங்கே பெறுமதியற்ற வெற்றுத் தாளாகவே இருந்தது. ஒரு சோற்றுப் பருக்கை தான் அங்கு பெறுமதியாக காணப்பட்டது. இவ்வாறு தான் மக்கள் வாழ்ந்தார்கள். உண்ண உணவில்லை. தமிழீழ நிர்வாக சேவை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவை மக்களுக்காக கஞ்சித் திட்டம் ஒன்றை நடமுறைப் படுத்தியதால் தான் பசியில் சாவடைந்த மக்களின் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இல்லா என்றால் பசியில் அங்கிருந்த அனைவருமே இறந்திருப்பார்கள். இறுதி நாட்களில் காயப்பட்டவர்களை எவ்வாறு கையாண்டீர்கள்? உண்மையில் மிக இடர் சுமந்த காலம் அது. சண்டை தொடர்ந்து நடந்து நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்து வந்துவிட்டோம். நான் வட்டுவாகல்பகுதியில் இருந்த இரண்டு வீடுகளை சத்திரசிகிச்சைக் கூடமாக மாற்றி இருந்தேன். அதனை சுற்றி சிறு கிடங்குகளை பதுங்ககழி போல உருவாக்கி, மேலே தறப்பாளை கட்டிவிட்டு காயப்பட்டவர்களை படுக்க வைத்திருந்தோம். இது தான் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை. எவ்வகையான காயங்களை நீங்கள் கையாண்டீர்கள்? எல்லாவகையான காயங்களும் வந்தன. நான் இறுதியாக வட்டுவாகலுக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் இருந்த போது அங்கே பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்தன. அதை விட இரணைப்பாலையில் இருந்த போதே கொத்துக்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்திருந்தன. இறுதிக் காலத்தில் கூடுதலாக எல்லாவகையான ஆயுதங்களையும் இராணுவம் பயன்படுத்தி இருந்தான். இறுதிக் காலங்களிலும் மருத்துவமனையில் தங்கி நின்றார்களா ? காயப்பட்டவர்களை கொண்டு வந்து மருத்துவமனையை சுற்றி கிடத்திவிட்டு உறவினர்கள் போய்விடுவார்கள். அதனால் அங்கிருக்கும் காயங்களின் தன்மையை ஆய்வு செய்து நாம் சிகிச்சை வழங்குவோம். உதாரணமாக ஒருவருக்கு கால்களை கழட்டினால் உயிர் தப்ப முடியும் என்றால் உடனடியாக அதை செய்தோம். சிகிச்சை செய்தும் பலனில்லை உயிர் பிரிவது நிச்சயம் எனக் கருதும் காயக்காறர்களை இரத்தத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளைச் செய்து விட்டு ஏனைய காயக்காறரை கவனிப்போம். வேறு ஒன்றையும் செய்ய முடியாத நிலை. மிக கொடுமையான சம்பவம் ஒன்றை இப்போது பகிர வேண்டும். ஒரு இளைஞன் காயப்பட்டு வந்த போது அவனுக்கு கால் மற்றும் கைகளில் காயம் இருந்தது. அதனால் சத்திரசிகிச்சை செய்து அவரை சத்திரசிகிச்சைக்குப் பின்னான சிகிச்சைகளுக்காக அருகில் இருந்த மாமரம் ஒன்றுக்கு கீழ் சிறிய மருத்துவ பதுங்ககழிக்குள் படுக்க வைத்திருந்தேன். அப்போது, திட்டமிட்ட தாக்குதலை மருத்துவமனை மீது சிங்களப் படைகள் செய்தன. அத் தாக்குதலில் 50 இற்கும் மேலான மக்கள் இறந்தனர். அதேநேரம் 6 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பல மக்கள் மீண்டும் காயமடைந்திருந்தனர். அதில் அவனும் ஒருத்தன். அவன் வயிற்றில் காயப்பட்டிருந்தான். “ டொக்டர் என்னைக் காப்பாத்துங்கோ பிளீஸ்…” என்று கத்தியபடி காயப்பட்டிருந்த காலை இழுத்தபடி ஓடி வருகிறான். இரு கைகளும் வயிற்றில் இருந்து வெளியே விழுந்த குடலை விழுந்துவிடாமல் பிடித்தபடி இருக்கின்றன. எனக்கு அக் காட்சியை நினைத்தால் இப்போதும் மனம் ஒரு நிலையில் இருக்காது. அப்போது எங்களின் போராளி மருத்துவரான தணிகை அவர்களும் பணியில் இருந்தார். அதனால் அந்த இளைஞனை உடனடியாக சத்திரசிகிச்சை Laparotomy செய்வதற்காக தயார் படுத்தினேன். மருத்துவர் தணிகையுடன் இணைந்து நானும் அந்த இளைஞனுக்கான சத்திரசிகிச்சையை செய்து முடித்தோம். அதே நேரம் அந்த நேரம் அந்த சத்திரசிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டது. அதை தருவதற்கு அங்கே யாராலும் தயாராக இல்லாத நிலையில் மருத்துவப் போராளி உயர்ச்சியிடம் இருந்து குருதி பெறப்படுகிறது. அக்குருதியை வைத்தே அவ்விளைஞனை காப்பாற்றினோம். இதைப் போலவே இன்னும் ஒன்று, சிறு வயது பிள்ளை ஒன்று தலையில் காயப்பட்டபடி என் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறாள். அவளைக் கொண்டுவந்தது அவளது பேரன். அவர் வந்து கத்தி அழுதபடி என் பேத்தியை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார். பரிசோதித்த நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. அவள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளைத் தூக்கி வந்த அந்த ஐயாவிடம் தெரியப்படுத்தலாம் என்று வந்த போது, அவர் அந்த வீட்டு வாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்கள இராணுவம் எறிகணைத் தாக்குதல் செய்கிறது. அத் தாக்குதல் நின்ற போது வாசலை உற்று நோக்குகிறேன். அங்கே அந்த வயதானவர் தலை சிதறி பலியாகி இருந்தார். இவ்வாறு பல கொடுமைகளை எம் மண் சுமந்து நின்றது. அதை விட கொடுமை என்ன என்றால் என்னிடம் என் குடும்பத் தேவைக்காக இருந்த 2 கிலோ அரிசியை கொடுத்து, மக்களைக் கொண்டு வெட்டிய ஒரு பதுங்குகுழிக்குள் எம் மருத்துவமனையை சுற்றி இறந்த மக்களை புதைத்தேன். கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதால் மருத்துவமனையைச் சுற்றி பல மக்கள் இறந்திருந்தார்கள். எம்மால் எதையும் செய்ய முடியவில்லை. உடனடியாக அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல் அதனால் அவ்வாறான 47 பேரை நாங்கள் அந்த பதுங்ககழியில் புதைத்தோம். பண்டமாற்று பொருளாதாரத்தை எனக்கு காட்டிய இறுதிப் போர் அன்று கொடுமையான இச்செயலையும் தந்திருந்தது. இறுதி வரை போராளிகளின் மனநிலை எவ்வாறு இருந்தது? காயப்பட்ட போராளிகள் கூட காயத்தை மாற்றிக் கொண்டு சண்டைக்கு போக வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார்கள். ஓரிரண்டு பேர் சண்டையைத் தவிர்த்தாலும் அநேகமான போராளிகள் களமுனைக்கு போக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். இறுதி நாள் என்ன நடந்தது ? 16 ஆம் திகதி வரை என் பராமரிப்பில் பல போராளிகளும் அதிகமான மக்களும் இருந்தார்கள். பெரும்பாலும் கால் உடைவுக் காயங்கள் தான் அதிகம். அவ்வாறான நிலையில் அவர்களுக்கு முடிந்தளவு அறிவுறுத்துகிறேன் “ அப்பா. அம்மா உறவுகள் யாராவது வந்தால் அவர்களுடன் போகக் கூடியவர்கள் போங்கோ என்று. அப்படி போனவர்கள் ஓரிரண்டு பேர் தான். மிகுதிப் பேர் அங்கேயே இருந்தார்கள். இறுதியாக நான் வைத்திருந்த மருத்துவமனையைச் சுற்றி இராணுவம் வந்துவிட்டது. அதன் பின் அங்கே எதையும் செய்ய முடியாத சூழல். முடிவெடுக்க முடியவில்லை. என் மனைவியும் மகனும் என்னுடனேயே நிற்கிறார்கள். அவர்களையாவது காப்பாற்ற வேண்டிய சூழல். நான் அவர்களை கூட்டிக் கொண்டு போய் என் நண்பனின் குடும்பத்தோடு சேர்த்து விடலாம் என்று வெளிக்கிட்ட போது, “ டொக்டர் நீங்களும் எங்கள விட்டிட்டு போக போறீங்களா” என்று ஒரு தம்பி கேட்டான. என்னால் அவனுக்கு எதை செய்ய முடியும்? அவர்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. அவர்களிடம் மனைவி மகனை விட்டுவிட்டு வருவதாக உறுதி வழங்கி விட்டு வட்டுவாகலை நோக்கி செல்கிறேன். அங்கே நண்பனின் குடும்பத்திடம் என் குடும்பத்தை விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறேன். என்னால் அந்த இடத்துக்கு கிட்ட போக முடியவில்லை. அவ்வளவு எறிகணைத் தாக்குதல்கள். எப்படியோ நான் அங்கே போய் சேர்கிறேன்150-200 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 200 தடவைக்கு மேல் நிலத்தில் விழுந்து படுத்திருப்பேன் அவ்வளவு தாக்குதல்கள். இவ்வாறு மருத்துவமனைக்கு போய் சேர்ந்த போது அப் போராளிகள் மனதில் புது தெம்பு பிறந்திருக்கும் எமக்காக நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை எழுந்திருக்கும் அதனால் அந்த கொடுமைக்குள்ளும் புன்னகைத்தார்கள். நான் என்னோடு பணியாற்றியவர்களை வெளியேறிச் செல்லுமாறு பணித்தேன். அதன் பின் அப் போராளிகளோடு பேசிக் கொண்டிருந்த தருணம் பின்பகுதியில் இருக்கும் கொட்டிலுக்கு போய் வர வேண்டிய சூழல் வந்தது. அவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தார்கள். அதனால் அவர்களிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற போது ஒரு தம்பி, டொக்டர் எப்பிடியும் ஆமி எங்கள உயிரோட பிடிச்சிடுவான் உங்கட குப்பிய தாங்கோ நான் சாக போறன் என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. அவனிடம் அப்பிடி ஒன்றும் நடக்காது என்று ஆறுதல் சொல்லிவிட்டு நகர்கிறேன். அதேவேளை அங்கே இருந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை காப்பாற்றுமாறு கத்தி அழுதது இன்னும் செவிகளில் கேட்கிறது. நான் என்ன செய்ய முடியும்? எதையும் முடிவெடுக்க முடியாதவனாய் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒரு சகோதரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை கூட்டிக் கொண்டு போய் என் மனைவி மகனோடு விடலாம் என்று யோசித்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற போது பெரும் தொகையான 60 MM எறிகணைகள் எம் மருத்துவமனையை நோக்கி செலுத்தப்பட்டதை பார்த்தேன். அக் குறுகிய இடத்தில் 100-200 க்கும் மேலான எறிகணைகள் வெடித்துச் சிதறின. அத்தனையும் மருத்துவமனை என்று தெரிந்து அடிக்கப்பட்ட எறிகணை என்பது எனக்கு புரிந்து போனது. தாக்குதல் குறைந்த போது அங்கே செல்ல முனைந்த என்னைத் தடுத்து நிறுத்தினார் மற்றவர். ஆனாலும் நான் காப்பாற்றிய எம் போராளிகள் கண்ணுக்கு முன்னே தவித்துக் கிடக்க என்னால் எதையும் செய்ய முடியாமல் தவித்தேன். அப்போது என் போராளி நண்பன் ஒருவன் அங்கிருந்து தப்பி வந்திருந்தான். மச்சான் உன்னோட இடத்துக்கு 60MM ஆல பராச் பண்ணி விட்டான். எதுவும் மிஞ்சவில்லை. எல்லாமே சிதறிப் போய்விட்டது. ஒருத்தன் கூட உயிரோட இல்ல. அவன் தெரிஞ்சு தான் அடிச்சிக்கான். எனக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம் கண்ணுக்கு முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முதல் கதைத்துவிட்டு வந்த அப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற நாம் போராடிய ஒவ்வொரு வினாடிகளும் இப்படி சிதைந்து போய்விட்டது என்று மனம் உடைந்து போனது. என்னால் அந்த இடத்தை விட்டு வரவும் முடியவில்லை. மனைவி மகனை தவிக்க விட்டு இருக்கவும் முடியவில்லை. மன நெகிழ்வோடு நான் இருந்த போது நண்பனும் மற்ற சகோதரனும் என்னை தம்மோடு வருமாறு பணிக்கின்றனர். அதன் மேல் அங்கே ஒன்றும் இல்லை என்றாகிவிட்ட போது நான் எதை செய்யப்போகிறேன் என்ற நினைப்பில் மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை திரும்பிப் பார்த்தபடி உயிரோடு வந்தும் வலியோடு வாழ்கிறேன். https://eelamaravar.wordpress.com/2019/05/19/mullivaikal-hospital-attack/
  10. வணக்கம் ஐயனே, மன்னிக்க வேண்டும்... தவறான புரிதல் கொண்டுள்ளீர்கள். நான் அழிக்க வேண்டியது அந்த கருத்து எழுதியுள்ள குறித்த மறுமொழிப்பெட்டியை மட்டுமே. அதனால் தான் தெளிவாக அந்த பெட்டிக்கு மட்டும் "delete" என்று கொடுத்தேன். ஒட்டு மொத்த ஆவணத்திற்குமன்று. அடுத்தமுறை இன்னும் தெளிவாக குறித்த பெட்டியை மட்டும் அழிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி //3000x3000 px ற்கு உட்பட்ட படங்களே இணைக்க முடியும்.// நன்றி அப்படியே செய்கிறேன். வணக்கம் ஐயனே, மன்னிக்க வேண்டும்... தவறான புரிதல் கொண்டுள்ளீர்கள். நான் அழிக்க வேண்டியது அந்த கருத்து எழுதியுள்ள குறித்த மறுமொழிப்பெட்டியை மட்டுமே. அதனால் தான் தெளிவாக அந்த பெட்டிக்கு மட்டும் "delete" என்று கொடுத்தேன். ஒட்டு மொத்த ஆவணத்திற்குமன்று. அடுத்தமுறை இன்னும் தெளிவாக குறித்த பெட்டியை மட்டும் அழிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி //3000x3000 px ற்கு உட்பட்ட படங்களே இணைக்க முடியும்.// நன்றி அப்படியே செய்கிறேன்.
  11. History of Ceylon Tamils - Mrs. Vasantha Natarajan B.A. வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் அளவெட்டி கிராமம் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு தொகுப்பு: பண்டிதர்.க.நாகலிங்கம் வெளியீடு: அளவெட்டி மஹாஜன சபை A Historical Record of Kayts Island - Raymond Rajabalan Tamil Culture in Ceylon - Reghavan யாழ்ப்பாணச் சமூகம் ஈழத்தமிழர் தொன்மை - பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் Studies in Sri Lankan Tamil Linguistics and Culture: Selected Papers of Professor Suseendirarajah
  12. புலிகளின் கட்டிமுடிக்கப்படாத பறவாடி (Hanger) பழைய யாழ்-கண்டி சாலையில், இரணைமடுவிற்கு கிழக்காக, இப்பறவாடி அமைந்திருந்ததாக சிறிலங்கா தரைப்படையினர் தெரிவித்திருந்தனர். எனினும் சரியான இடத்தை என்னால் அறியமுடியவில்லை. இப்பறவாடியை நோக்குமிடத்தில் இது முற்றாக கட்டுமானம் முடிவுற்றிராத ஒரு பறவாடியாகவே தென்படுகிறது. எனினும் இதன் கூரை சிதைவடைந்துள்ளது. கட்டமைப்பு: இதன் மூன்று பக்கங்களிற்கும் கடும்பச்சை நிற இரும்புக் கொள்கலன்கள் வைக்கப்பட்டு அதனுள் மண் நிரப்பபட்டிருந்தது, வெடிப்புக் காப்பிற்காக. ஆயினும் வலப்பக்கத்தில் இருந்த கொள்கலனொன்றைக் காணவில்லை. மேற்புறத்திலும் வலுவான அரைவட்ட வடிவ இரும்புகள் போடப்பட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததாக அறியக்கூடியதாகவுள்ளது, காணக்கிடைக்கூடிய ஆதரங்களின் அடிப்படையில். இதன் இரு இரும்புக் கதவுகளும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை நோக்குமிடத்து, அதன் வடிவம் முற்றாக கட்டிமுடிக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவிலிருந்த பறவாடியுடன் ஒத்துப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒட்டு மொத்த வடிவமும் கேப்பாப்புலவிலிருந்த பறவாடியைப் போலவே கட்டப்பட்டுக்கொண்டிருந்ததைக் நோக்க முடிகிறது. படிம ஆக்குநர்: நன்னிச் சோழன் | மூலப் படிமம்: 6640x4067 | குறிப்பு: பல படிமங்களை ஒன்றாக்கியே இதை உருவாக்கினேன், ஆவணத்திற்காக
  13. வணக்கம் நிர்வாகத்தினரே, இதற்குள்ளிருந்த ஆவணம் நான் திருத்திக் கொண்டிருக்கையில் திடீரென அழிந்துவிட்டது. தயவுகூர்ந்து இதை மீட்டெடுத்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எப்படி மாயமாய் மறைந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நன்றி https://yarl.com/forum3/topic/256542-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dairstrips-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
  14. புலிகளின் கட்டிமுடிக்கப்படாத பறவாடி (hanger) பழைய யாழ்-கண்டி சாலையில், இரணைமடுவிற்கு கிழக்காக, இப்பறவாடி அமைந்திருந்ததாக சிறிலங்கா தரைப்படையினர் தெரிவித்திருந்தனர். எனினும் சரியான இடத்தை என்னால் அறியமுடியவில்லை. இப்பறவாடியை நோக்குமிடத்தில் இது முற்றாக கட்டுமானம் முடிவுற்றிராத ஒரு பறவாடியாகவே தென்படுகிறது. கட்டமைப்பு: இதன் மூன்று பக்கங்களிற்கும் கடும்பச்சை நிற இரும்புக் கொள்கலன்கள் வைக்கப்பட்டு அதனுள் மண் நிரப்பபட்டிருந்தது, வெடிப்புக் காப்பிற்காக. ஆயினும் வலப்பக்கத்தில் இருந்த கொள்கலனொன்றைக் காணவில்லை. மேற்புறத்திலும் வலுவான அரைவட்ட வடிவ இரும்புகள் போடப்பட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததாக அறியக்கூடியதாகவுள்ளது, காணக்கிடைக்கூடிய ஆதரங்களின் அடிப்படையில். இதன் இரு இரும்புக் கதவுகளும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை நோக்குமிடத்து, அதன் வடிவம் முற்றாக கட்டிமுடிக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவிலிருந்த பறவாடியுடன் ஒத்துப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒட்டு மொத்த வடிவமும் கேப்பாப்புலவிலிருந்த பறவாடியைப் போலவே கட்டப்பட்டுக்கொண்டிருந்ததைக் நோக்க முடிகிறது. படிம ஆக்குநர்: நன்னிச் சோழன், yarl.com | மூலப் படிமம்: 6640x4067 | குறிப்பு: பல படிமங்களை ஒன்றாக்கியே இதை உருவாக்கினேன், ஆவணத்திற்காக.
  15. வணக்கம் நிர்வாகத்தினரே... நான் படிமம் ஒன்று (6640x4040) - இதுவொரு நான் உருவாக்கிய விளக்கப்படம் .jpg - பதிவேற்ற முயற்சித்த போது என்னால் இயலவில்லை (8 times). என்ன சிக்கல் என்பதும் எனக்கு தெரியவில்லை. தயவு கூர்ந்து சிக்கலை சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கிறேன். நன்றி. https://yarl.com/forum3/gallery/album/162-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
  16. புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட முதற் கடற்கலம் தொடர்பான தகவல்களும் (1986), 2000 ஆம் ஆண்டு திருமலை துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்ட நான்கு கடற்கலங்களில் மூன்றின் படீமங்கௌம் அவற்றில் இரண்டினது மூழ்கிய நிலையிலான படிமங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
  17. இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  18. பின்னிணைப்பு-1 பாடல் வரிகள் இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் 24ம் திகதி வெற்றிலைக்கேணியிலிருந்து கடலேறிச்சென்று குடாரப்பில் சாமம் மட்டில் தரையிறங்கி, அங்கிருந்து நகர்ந்து சென்று இயக்கச்சி சேணேவித்தளம், மற்றும் தாமரைக்குளம் சேணேவித்தளம் ஆகியவற்றிலிருந்த சேணேவிகளை அழித்த தரைக்கரும்புலிகளின் மறத்தின் நினைவாய் வெளியிடப்பட்ட பாடலின் வரிகள் உள்ளன. பாடல் இறுவட்டு: அலையின் கரங்கள் வெளியீடு: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், பிரான்ஸ் வெளியீட்டு திகதி: ~07/2000 பாடல் வரி: தேசமே, எங்கள் தேசமே! மண்ணில் வீசும் வாசமே! மௌனமாய் தங்கள் மூச்சையே நிறுத்திய வேங்கைகளே! உன்னத விடுதலைக்காய் தன்னுயிர் தந்தவரே! வானமும் உம்மைத் தேடுதே, இங்கு வா! தேசமும் உம்மைத் தேடுதே, இங்கு வா! நிலவும் தூங்க, கடலும் சாய, வீரம் எழுந்தது! வெற்றிலைக்கேணி பிரியும் நேரம் வேர்கள் அழுதது - கருவேங்கை சிலிர்த்தது! ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே! ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே! பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே! கண்ணிவயலில் கால்கள் தவழ்ந்து கண்டி வீதி கடந்தாரே! குடலறுத்து உயிர்குடிக்கும் கடுமலையாய் கனகரகம் எரிமலையின் உச்சியிலேறி பகைமுடித்த தனுசனவன் எரிமலையின் உச்சியிலேறி பகைமுடித்த சுதாசினியே தேசத்தின் சுடரொளியாய் தெரியுதெங்கள் ஈழத்திலே! ==================================================== இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி கட்டைக்காட்டில் ஒன்றுகூடி அங்கிருந்து உழுபொறிகள் மற்றும் ஏனைய ஊர்திகள் மூலம் வெற்றிலைக்கேணி கோவிலடியையடைந்து அங்கிருந்து மாலையில் கடலேறிச்சென்று குடாரப்பில் மார்ச் 26ம் திகதி சாமம் முதல் மார்ச் 27ம் திகதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க "குடாரப்புத் தரையிறக்கம்" தொடர்பாகவும் அதற்கு முன்னர் நடைபெற்ற கட்டம் மூன்றின் போது மேற்கொள்ளப்பட்ட புல்லாவெளி தரையிறக்கம் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட பாடலின் வரிகள் உள்ளன. பாடல் இறுவட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 05 வெளியீடு: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், பிரான்ஸ் வெளியீட்டு திகதி: 05/07/2002 பாடல் வரி: ஆனையிறவுத் தளம்... ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழவே ஆணை பிறந்தது அலை மூன்றில் - புலி தானை வென்றதென தகவல் மிதந்து வர தலைகள் நிமிர்ந்தனவே புவிமன்றில் வான்-தரை-கடல் வழிச் சமரிலே - முன் வரிப்புலி இழப்பினை ஏன் கண்டான்? ஏனிது என்பதன் விடைகண்டு - தலைவன் ஏவிய கடற்புலி செயம்கொண்டான் தரையிறக்கினார் கடற்புலிகள் - பகை தலையிறக்கினார் தமிழ்ப்புலிகள் கரையிறக்கினார் கடற்புலிகள் - கடற்கலம் தரையிறக்கினார் கரும்புலிகள் கடாரம் வென்ற படை போலும் - புலி கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி. குடாரப்பு, புல்லாவெளி கரைகளிலே - சென்று குதித்த புலிகளின் கதைகேளும் (தரையிறக்கினார் கடற்புலிகள்) கடல்வழி வான்வழி பகைப்படைகள் - வர கதைகளை முடித்தனர் கடற்புலிகள் தடைகள் தாண்டினர் புயற்புலிகள் - வெற்றி தந்துவிட்டோடினர் நரிப்படைகள் (தரையிறக்கினார் கடற்புலிகள்) ********
  19. முடிவுரை இத்தோடு குடாரப்புத் தரையிறக்கம் தொடர்பான அனைத்துத் தகவலும் என்னால் இயன்றளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டு நிறைவடைகின்றன. எதிர்காலத்தில் எனக்கு தரையிறக்கம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்குமாயின் இக்கட்டை இற்றைப்படுத்துவேன் என்பதையும் இங்கே அறிவித்துக்கொள்கிறேன். இதை நான் பல காலமாக எழுத வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் நோர்மண்டி தரையிறக்கத்தினைப் பற்றி வாசிக்கும்போதும் அதைப் பார்க்கும்போதும் எனக்கு குடாரப்புத் தரையிறக்கம் ஞாபகம் வருவதோடு அதை நாம் ஆவணப்படுத்தவில்லையே என்ற ஏக்கமும் எழுவதுண்டு. இதனால் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கனவு பிறந்தது. ஆனால் அதை ஆவணப்படுத்த எம்மிடம் எந்தவொரு ஆதாரங்களோ தகவல்களோ இல்லாமையால் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனக்கு 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகம் கிடைத்தது. அதை வாசித்த போது அதனுள் தரையிறக்கம் பற்றி அதை ஆவணப்படுத்தும் அளவிற்கு போதிய தகவல்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். கையோடு அதனை ஒரே மூச்சில் ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணி எனது கனவையும் நனவாக்கிக் கொண்டேன். எமது வரலாறுகளை நாம் சிதறு துண்டுகளாக எழுதி வைத்தால் அவை அழிந்து போய்விடும். ஓத்துவான தகவல் கொண்ட எல்லாவற்றையும் ஒரே ஆவணமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை;கொள்கை. அப்படி எழுதுவதால் எம்மால் அதனை இலகுவாக காக்க முடிவதோடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அதனை கடத்தலாம். எமது தீவில் 2700 ஆண்டுகளுக்கு(அநுராதபுரத் தமிழ்ப் பானையோடு) மேலாக நாம் வசித்து வந்தாலும் எமக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்பது தொடர்பான தொடர் வரலாறுகள் இல்லை. இதே இழிநிலை இனிமேலும் தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். அதனால்தான் இவ்வாறு என்னால் இயன்றளவு எமது சமர்க்கள வரலாறுகளை ஆவணப்படுத்துகிறேன், எனக்குத் தெரிந்த முறையில்! நன்றி "தனியரசானதும் தமிழுன்னைப் பாடிடும் தாய்மனம் குளிர்ந்திடும் பார்... எங்கள் சந்ததி தன்னது பங்கினைச் செய்தது என்றது மகிழ்ந்திடும் பார்..." -->அலையின் வரிகள் இறுவெட்டின் 'ஓடாதே ஓடாதே' பாடலிலிருந்து... ******

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.