Everything posted by நன்னிச் சோழன்
-
ஓயாத அலைகள்-2 இல் கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? | தொடர்
பாகம் 3 கிளிநொச்சி இராணுவ முகாமை ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு அன்று பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க தலைமை வகித்திருந்த போதும் சத்ஜெய சமரின் மூன்று கட்டங்களுக்கும் வழிகாட்டிய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சிறீலால் வீரசூரியா, பிரிகேடியர் வசந்த பெரேரா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழருக்குரிய நிலங்களை ஆக்கிரமிப்பதிலேயே இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டார்களேயானால் சொந்த மண்ணை இழந்த நிலையில் ஏதிலிகளாகிய தமது மக்களின் வாழ்விடங்களை மீட்கும் செயற்பாட்டுக்கு தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் எந்தளவு தீவிரமாகச் செயற்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். அதாவது புலிகள் அமைப்பின் ஒவ்வொரு தளபதிகளும் கிளிநொச்சி முகாமைத் தாக்குவதற்கான திட்டங்களை வகுத்தவண்ணமே இருந்துள்ளனர். அதற்காக விடுதலைப் புலிகளின் விசேட வேவுப்பிரிவுப் போராளிகள் மட்டுமல்லாது தேவைக்கேற்ப ஒவ்வொரு தளபதிகளும் தமது அணியின் வேவுப்போராளிகளை இம்முகாம் மீதான வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியும் வந்துள்ளனர். அந்த வகையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியிலிருந்து அன்று வேவு செயற்பாட்டை மேற்கொண்டவரும் பின்னர் விசேட வேவுப்பிரிவோடிணைந்து வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டவருமான போராளி வீரமணி தாம் எந்த நோக்கோடு முகாமுக்குள் நுழைந்தார்கள்; என்பதையும் எதிரியின் நிலைகளை எவ்வாறு அவதானித்தார்கள் என்பதையும் தாம் இராணுவ முகாமுக்குள் வேவுச்செயற்பாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவங்களையும் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். கிளிநொச்சி இராணுவ முகாமினுடைய வேவு நடவடிக்கையைச் செய்யுமாறு தளபதி பால்ராஜ் அண்ணாவால் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. எதிரியின் முகாமிற்கு வெளிப்பகுதியில் எங்களுடைய வேவு நடவடிக்கைகளைச் செய்த அந்தக் காலப்பகுதி எமது நடமாட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. ஏனெனில் எதிரியின் அரண்களுக்கு முன்பாக அவனது படைகள் பதுங்கியிருந்து தாக்கி எமக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வந்தார்கள். இதனால் முன்னணி வேவுத்தரவுகளைக் கூடத் திரட்ட முடியாதிருந்த காலப்பகுதியில்தான் உள் வேவு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் நாங்கள் சகல இடங்களிலும் எதிரியின் காவல் அரண்களை நெருங்கி நெருங்கி அவதானித்து வந்தோம். எந்தப் பகுதியில் எதிரியின் அவதானிப்பு குறைவாக இருக்கிறதோ அதனு}டாக நாங்கள் உட்புகுவதற்கான வழியினை தேடிக்கொண்டிருந்தோம். அந்தக் காலப்பகுதியில் தான் எதிரியின் கம்பி வேலியிலிருந்து 100 மீற்றர் சில வேளைகளில் 200 மீற்றர் முன்பாக தனது அணியை காவலரண்களுக்கு முன்பாக நிலைப்படுத்தியிருந்தான். ஏனெனில் எமது அணிகளின் நடவடிக்கை எப்படியிருக்கின்றது என்பதை அறிந்து தமது முகாமை உசார்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் நாங்கள் கடினமான முயற்சியெடுத்துதான் இந்த வேவு நடவடிக்கையை மேற்கொண்டோம். நாங்கள் உருத்திரபுரம் டி-7 பகுதியால் வந்து ஒரு வேவு நடவடிக்கை செய்தோம் இந்த நேரத்தில் வெளிவேவுகளை தீவிரப்படுத்தியிருந்தார் தளபதி பால்ராஜ் அண்ணா. இதேநேரம் இன்னுமொரு அணியும் உள்வேவுக்காக ஒரு பாதையை பார்த்து உட்செல்ல முயற்சி செய்து கொண்டிருந்த வேளைதான் எதிரி அவதானிப்பு நிலையிலிருந்து அவதானித்து அந்த அணிக்கு பின்புறமாக தமது அணியை நகர்த்தி வந்து தாக்குதல் செய்து போராளி ஒருவரின் தலையை வெட்டிக் கொண்டு போய்விட்டான். அதற்குப் பின்பு நாங்கள் அங்கு சென்று தாக்குதலை நடத்தி அப்போராளியின் உடலை மீட்டுக்கொண்டு வந்தோம். இதனையடுத்து தளபதி பால்ராஜ் உள்நடவடிக்கைக்காக என்னோடு மூன்று பேர் கொண்ட ஒரு வேவு அணியையும் இன்னுமொரு அணியையும் தயார்படுத்தினார். என்னோடு இணைக்கப்பட்டவர்கள் மேஜர் சசிக்குமார், கரும்புலி மேஜர் நிதர்சன் ஆகியோர் அதே நேரத்தில் போராளி லு}யினின் தலைமையிலான மற்றைய அணியில் மேஜர் பரணி, கப்டன் தமிழவன் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த இரண்டு அணிகளையும் உள்ளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைத்தான் அவர் செய்திருந்தார். டி-7 பக்கமாக காவலரணை அடித்து எதிரிக்குச் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அதேநேரத்தில், கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில் எங்களையும் உள்ளுக்கு அனுப்பவேண்டும் என்று முன்னணி வேவு அணிகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலுக்குப் போராளி ரஞ்சன் லாலா பொறுப்பாக இருந்தார். நாங்கள் இந்நடவடிக்கைக்காக ஒருநாள் பயிற்சி எடுத்தோம். காவலரண் மீது தாக்குதல் நடத்தியவுடன் எங்களை உள்ளே அனுப்புவதுதான் திட்டம். இதிலே அந்தச் சண்டையிலும் ஒரு திட்டம் தரப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் இராணுவத்தினர் பதுங்கியிருந்து சென்றி பார்ப்பான் அந்த இடத்திற்கு குண்டு அடித்து சண்டையை ஆரம்பிப்பதுவே அத்திட்டம். இதற்காகத் தடைவெட்டும் போராளிகளுடன் நாங்கள் ஐந்து பேர் அமைதியாக நகர்ந்தோம். இரவு 12.45இற்கு சண்டையெனச் சொல்லப்பட்டிருந்தது. நாங்கள் தடைகளையெல்லாம் வெட்டி நகர்ந்துகொண்டு போகும் சந்தர்ப்பத்தில் எதிரி வெளிச்சம் பாய்ச்சி நோட்டமிட்டு விட்டு பன்றி என்று நினைத்து கலைக்கத் தொடங்கினான். பின்பு எங்களை இனங் கண்டு விட்டான். உடனே அந்த இடத்திலே சண்டை ஆரம்பமானது. உடனே நாங்கள் இரண்டு குண்டுகளை அடித்துவிட்;டு மறைப்பு வேலிகளைப் பிரித்துக்கொண்டு பாதையை அகட்டி உள்நுழைந்தோம். நிறைய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. பரந்தன் பகுதியின் கிளிநொச்சி எல்லையிலிருந்து டிப்போ வரை எனது அணியின் வேவு நடவடிக்கைக்குரிய பகுதியாக இருந்தது. எனக்குத் தரப்பட்டிருந்த வேலைத்திட்டம் எதிரியின் முகாம்கள் எந்தெந்த இடங்களில் இருக்கிறதென்பதை அவதானிக்கும் திட்டமாக இருந்தது. கிளிநொச்சி எங்களுக்கு ஒரு பாPட்சமான இடமாக இருந்தபோதும் முகாமுக்குள் எல்லாமே மாற்றப்பட்டிருந்தது. எதிரி எல்லாவற்றையும் முழுமையாக மாற்றி வைத்திருந்தான். அன்று இரவு நாங்கள் முகாமுக்குள் சென்று விடிந்துகொண்டு வரும் நேரத்தில் கனகபுரப் பகுதியில் ஒரு ஆலமரத்தின் கீழுள்ள பழைய பங்கர் ஒன்றுக்குள் மூன்று பேரும் ஒழித்திருந்தோம். காலை 7.30 மணிக்கு அப்பகுதியால் இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். எமக்கு அருகாலும் சிலர் சென்றனர். ஆனால் எங்களைக் காணவில்லை. இராணுவத்தினர் இரவு சண்டை நடந்த இடத்திற்கு போய்க்கொண்டிருந்தனர். அதற்குப்பிறகு பகல் முழுவதும் அங்கேயே இருந்தோம். எதிரியின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் அதை பால்ராஜ் அண்ணை தமக்குத் தெரியப்படுத்தச் சொல்லியிருந்தார். அன்றிரவு 7.00 மணிக்கு ஆலமரத்தில் ஏறி பால்ராஜ் அண்ணையோடு தொலைத் தொடர்பு கருவி மூலம் கதைத்துவிட்டு இறங்கி கனகபுரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தோம். கனகபுரத்தில் இப்போது சங்கம் இருக்கின்ற இடத்திற்குப் பக்கத்தில் அன்று மினிமுகாம் ஒன்று இருந்தது. அங்கிருந்த மைதானம் ஆமி விளையாடும் மைதானமாக இருந்தது. அதற்குப் பக்கத்தில் இருந்து மூன்றுபேரும் அந்த இடத்தை அவதானித்தோம். அப்போது மின்பிறப்பாக்கி இயங்கிக்கொண்டிருந்தது. பின்பு அங்கிருந்து திருநகர் வீதியால் நகர்ந்து முன்பிருந்த சந்தைப்பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்குள் அன்று தங்கினோம். விடிந்தவுடன் பார்த்தபோது இராணுவத்தினது தடயங்கள் காணப்பட்டதோடு ஒரு வெளிப்பான பற்றையாகவும் இருந்தது. நாங்கள் அன்று பகல் முழுவதும் அதற்குள்ளேயே இருந்தோம். இருளானதும் அங்கிருந்து பால் சாலை வீதியால் வந்து பார்த்தோம். அப்பகுதியில் எதிரி இருக்கவில்லை. ஆனால் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அதனால் இங்குதான் பிரதான முகாம் இருக்கவேண்டும் என்ற ஊகத்தில் இரவு பார்வை சாதனத்தால் பார்த்துக்கொண்டு போய் பிரதான வீதியில் ஏறிவிட்டோம். அங்கிருந்து நகர்ந்து சென்றால் முன்னர் சுவையுூற்று இருந்த இடத்திற்குப்போய் பின் பிரதான வீதியாலே நகர்ந்து வைத்தியசாலையை நோக்கிச் சென்றோம். அங்கு தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் எதிரியின் முட்கம்பி வேலிபோடப்பட்டிருந்தது. அந்த முட்கம்பி வேலியினைப் பிடித்துக்கொண்டுபோனோம். அங்கு புகையிரத வீதியோடுதான் பிரதான முகாமாக இருந்தது. அங்கு அவற்றை அவதானித்துக்கொண்டு புகையிரத வீதியால் நகர்ந்துசென்றோம். நாங்கள் எதிரியின் கம்பி வேலியை விட்டு விலகிச்சென்றால் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளை சந்திக்க வேண்டிவரும் என்பதற்காக கம்பி வேலியைப் பிடித்துக்கொண்டே சென்றோம். அன்று பணக்காரத்தெரு என்று சொல்லப்பட்ட அந்தப்பகுதியில் முழுக்கட்டடங்களையும் எதிரி உடைத்திருந்தான் கம்பி வேலிகளின் முன்னால் நாய்களையும் கட்டி வைத்திருந்தான். நாய்கள் எங்களைப் பார்த்துக் குரைக்கத் தொடங்க எதிரி வெளிச்சம் பாய்ச்சிப்பார்த்துக்கொண்டிருந்தான். அதனால் நாங்கள் அமைதியாக குரோல் இழுத்துத் தவண்டு கால்களை மெதுவாக எடுத்துவைத்துதான் எங்களது நகர்வுகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு காவலரண்களும் எத்தனை மீற்றருக்கு ஒன்று இருக்கின்றதென்பதையும் குறித்துக்கொண்டு சென்றோம். இவ்வாறு ஒருபகுதியைப் பார்த்து முடித்துக் கொண்டு மீண்டும் சந்தைப்பகுதி பற்றைக்குள்ளேயே வந்து தங்கினோம். அன்று பகல் பால்ராஜ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டு எடுத்த தகவல்களை கொடுத்தோம். அடுத்த நாள் அதேபோன்று மற்றப்பகுதியைப் பார்க்கத் தொடங்கினோம். அப்போது கரடிப்போக்கு வாய்க்கால் பகுதியெல்லாம் மறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியால் எல்லாம் உட்சென்று பார்த்துக்கொண்டு அதேபகுதியால் வந்து அரைவாசிப் பகுதியைப் பார்த்து விட்டு மூன்றாம் நாள் சந்தைப் பகுதிக்குள் தங்கினோம். நாங்கள் முதல் நாள் பால்ராஜ் அண்ணாவோடு தொடர்பு கொண்டதை எதிரி தனது தொலைத் தொடர்பு சாதனம் மூலம் கேட்டு நாங்கள் இருக்கும் பகுதியை அறிந்திருந்தான். அதனால் அன்று நாங்கள் இருந்த பற்றைப்பகுதியை சுற்றிவளைத்து இரண்டு டாங்கிகளையும் அப்பகுதிக்குத் தாக்குதல் நடத்தத்தயாராக வைத்துக் கொண்டு தேடுதல் செய்யத் தொடங்கினான். ஒரு பகுதியைத் தேடிமுடிக்க நாங்கள் அடுத்த பகுதிக்கு மாறினோம். இவ்வாறு நான்கு தடவைகள் நான்கு விதமாகத் தேடுதலை நடத்த நாங்களும் மாறிக்கொண்டிருந்தோம். இப்படியாக அவனது தேடுதல்கள் முடிந்து டாங்கிகள் எல்லாம் புறப்படும் நேரத்தில் நாங்கள் ஒரு புற்றுக்குப்பின்னால் மறைந்திருந்தோம். அப்போது ஒரு ஆமி என்னுடைய முகத்திற்கு நேராக வந்து என்னைக் கண்டுவிட்டான். நாங்கள் குண்டுகளை அடிக்கத்தயாராக வைத்திருந்தோம். சைனைட்டையும் வாய்க்குள் வைத்தபடியே இருந்தோம். என்னுடைய முகத்தைப் பார்த்தவன் உடனே பயந்து கண்ணை மூடிவிட்டு திரும்பிச்சென்றுவிட்டான். நாங்கள் இருளும்வரை அங்குதான் இருந்தோம். ஆனால் எங்களைத்தேடி எதிரி வரவில்லை. இதே நேரத்தில் எங்களிடம் இருந்த உணவுகள் குடிநீர் எல்லாம் முடிந்துவிட்டது. அங்குள்ள கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க முடியாது. கிணற்றுப்படிகள் எல்லாம் உடைந்துபோயிருந்தன. அதனால் எம்மிடம் இருந்த சிறிதளவு நீரை கான் மூடியில் எடுத்து தொண்டையை நனைத்துக்கொண்டுதான் இருந்தோம். மூன்றாம் நாள் எங்களது வேவு நடவடிக்கை முடிந்தது. இதனால எங்களை திரும்பி வருமாறு கட்டளை கிடைத்தது. ஆனால் உள்ளே இருந்து திரும்பிவர பாதையில்லை. எங்களை காவல் அரண் அடித்து உள்ளே அனுப்பியதால் பாதை எடுத்துத்தான் வெளியேவர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக நாங்கள் நகர்ந்து டிப்போ பகுதி மத்திய கல்லு}ரிப்பகுதி எல்லாம் பார்த்தோம் எதிரி மண்ணரன்களின் உட்பகுதியில் முட்கம்பிகளை வலைபோன்று மண்ணோடு சேர்த்து அடித்திருந்தான். அவற்றுக்குள் கண்ணிவெடிகளையும் புதைத்திருந்தான் இந்தப்பகுதியால் வெளியால் செல்லமுடியாது. அன்றிரவு மரத்தில் ஏறி பால்ராஜ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டேன். எங்களை கொம்படியால் வருமாறு கட்டளையிட்டார். அன்று அங்கேயே தங்க வேண்டியேற்பட்டது. அங்கு வற்றிய குளத்தின் ஒரு பகுதியில் நின்ற சேற்று நீரை துணிவைத்து எடுத்துகுடித்து விட்டு வந்து வான்கரையின் ஒருபகுதியில் ஒளித்துக்கொண்டோம். இதேவேளை ரொட்றிக்கோ மைதானத்pல் இராணுவத்தினருக்கு பயிற்சி நடந்து கொண்டீருந்தது. அங்கு நடந்த சூட்டுப்பயிற்சியில் வந்த சன்னங்கள் எங்களைச்சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன. பின்பு நாங்கள் இரவு நகர்ந்த தடயங்களை கண்டவுடன் தேடுதலை எதிரி மேற்கொள்ளத் தொடங்கினான். அப்போது நான் இருந்த இடத்தில் எறும்புகள் என்னைமொய்த்துக்கடித்துக் கொண்டிருந்தன. நான் அப்போது அசைய முடியாது இருந்தேன். ஒரு ஆமி வந்து எனது பாதத்திற்கு மேல் தனது கால்களை வைத்துக்கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு தொடர்ந்து தேடுதலை முடித்துக்கொண்டு போய்வி;ட்டான். அடுத்தநாள் நாங்கள் உப்பளப்பகுதிக்குப் போய் அன்று பகல் அங்கேயே மறைந்திருந்தோம். அன்றிரவு தட்டுவன் கொட்டிப்பகுதியால் கடந்து சென்றோம். அன்று நேரம் போதாமையினால் ஆனையிறவின் பெருங்காட்டுப்பக்கமாய் போய் தங்கினோம். அப்போது எங்களுக்கு உணவோ நீரோ இருக்கவில்லை. பசிக்களையில் விழுந்த பனம்பழத்தை எடுத்துச்சாப்பிட்டு விட்டு இருந்தோம். ஆனால் வெளியில் வரப்பாதை இருக்கவில்லை. அப்போது பால்ராஜ் அண்ணை எங்களோடு தொடர்பு கொண்டு நீங்கள் எந்த இடத்திலாவது ஆமியின் காவலரன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வெளியே வாருங்கள் நாங்கள் அந்தப்பகுதியால் வந்து உங்களை மீட்போம் எனக்கூறினார். அன்படி நாங்கள் நகர்ந்து சென்றபோது எதிரி எங்களைக்கண்டு தாக்கத் தொடங்கினான். நாங்களும் தாக்கத் தொடங்கினோம். பிறகு நாங்கள் ஓடி காட்டுக்குள் மறைந்துகொண்டோம். எங்களோடு வந்த போராளி சசிக்குமாரைக் காணவில்லை. நாங்கள் இருவரும் அன்று காலை காட்டுக்குள் இருந்தபோது தேடுதல் நடத்திய ஆமி எங்களைக் கண்டுவிட்டான். அதனால் நாங்கள் அவன் மீது தாக்கியவாறு அவனது அரண்களைத் தாண்டி கட்டைக்காட்டுப்பகுதியால் சென்று ஒரு நாவல் மரத்திற்கு மேலே ஏறி இருந்தோம். ஆமி கீழால் சென்றான். ஆனால் எங்களைக் காணவில்லை. எங்களுக்கு நீர் கூட இல்லாததினால் சோர்வடைந்து விட்டோம். நடக்க முடியவில்லை. ஒருவாறாக அன்றிரவு ஆமியின் வேலியைக்கடந்து பூனைத்தொடுவாய் பகுதியால் வந்து வெளியேறியதோடு மயங்கிவிட்டோம். அப்பகுதி மக்கள்தான் எங்களைக் காப்பாற்றினார்கள். அடுத்தநாள் சுட்டதீவுப்பகுதியால் காணாமல் போன சசிக்குமாரும் வந்து சேர்ந்தார்.
-
ஓயாத அலைகள்-2 இல் கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? | தொடர்
பாகம் 2 ஓயாத அலை 02 தாக்குதலை நடாத்துவதற்கான சிறப்பு வேவுச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வேவு அணிகள் கிளிநொச்சி இராணுவ முகாம்களிற்குள் ஊடுருவி வேவு செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன் மூலம் பெறப்பட்ட பல முக்கிய தரவுகளும் இந்த ஓயாத அலை 02 தாக்குதல் வெற்றிக்கு மூலபலமாகவிருந்தன. அவ்வாறு வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஓயாத அலைகள் 02 தாக்குதல் நடவடிக்கைக்கான வேவுப்பணியில் அணி ஒன்றுக்குப் பொறுப்பாகவிருந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவரும் தற்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான பிரதாபன் அன்று தாங்கள் எவ்வாறு எதிரியின் முகாமுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும் அங்கு எதிரியின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதையும் தாக்குதலுக்கான தகவல்களை எதிரியின் முகாமுக்குள்ளிருந்து எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இவ்வாறு கூறினார். கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை வேவு பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஏற்கனவே கட்டளைத் தளபதி தீபன் அண்ணாவால் சொல்லப்பட்டது. உள்வேவுக்கான பகுதிகளும் பிரித்து தரப்பட்டன. ஆனால் உள்ளே செல்வதற்கான பாதை இருக்கவில்லை. வெளிலைனைக் (பாதுகாப்பு வேலியை) கடந்து உள்ளே செல்வதற்கான பாதையை நாங்கள் எடுக்கவேண்டிய தேவை இருந்தது. ஆனையிறவிற்கும் கிளிநொச்சிப்பகுதி மற்றும் பரந்தன் பகுதிகளுக்குள்ளால் உட்செல்வதற்கான பாதை எடுப்பதற்காக ஒரு மாத காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தோம் பாதை இல்லாததால், கட்டைக்காடு வெற்றிலைக்கேணியுூடாக உள்ளே செல்லுமாறு எமக்கு கட்டளை கிடைத்தது. அங்கு சென்று நீரேரியினு}டாக உட்செல்ல முனைந்த போது அங்கே இரவில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்ததோடு அவதானிப்பும் பலமாக இருந்தது. பிறகு கொம்படி பகுதியால் செல்ல முற்பட்டபோது எதிரியின் தாக்குதலுக்கிலக்காகி திரும்பினோம். இந்த வேளையில்தான் கிளிநொச்சி குளத்தினு}டாக மற்றுமொரு அணி எடுத்த பாதையினு}டே உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அங்கும் அந்த அணிக்கு அடி விழுந்து விட்டது. அதனால் குளத்தின் அலை கரையினால் நாங்கள் ஒருபாதை எடுத்து உள்நுழைந்தோம். உள்ளே எங்கு தங்குவது எப்பகுதியால் பயணிப்பது என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் உள்ளே வயல்வெளிகளும் வெளியான பிரதேசமாகவும் இருந்ததால் மறைவான இடம் கிடைக்கவில்லை. அதனால் முதல் நாள் முழுவதும் நாங்கள் தங்குவதற்கான இடங்களைத் தேடி பாதுகாப்பான ஓர் இடத்தை தெரிவு செய்தோம். மறுநாள் அதனுள்ளிருந்து திட்டங்களை வகுத்துக் கொண்டு கரடிப்போக்கு சந்திப் பகுதிக்கு வந்தோம் அங்கு தான் கரடிப்போக்கு முகாம் இருந்தது. அது சிறிய பிரதேசத்தைக் கொண்ட முகாமென நினைத்தோம். ஆனால் கரடிப்போக்கிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை வரைக்கும் அந்த தொடர்முகாம் அமைந்திருந்தது. அங்கிருந்து புகையிரத வீதியினு}டாக குறிப்பிட்ட பகுதியை அவதானித்து விட்டு மறுநாளும் உள்ளேயே தங்கினோம், அடுத்த நாள் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அவதானிப்பை தொடர்ந்தோம். இவ்வாறு அந்த முகாமின் புகையிரத வீதிப் பகுதியின் சுற்றளவை எடுக்க மட்டும் 07 நாட்கள் எடுத்தன. ஏனென்றால் கரடிப் போக்கு சந்தியிலிருந்து பரந்தன் நோக்கி 700 மீற்றரில் இன்னுமொரு இராணுவ முகாமிருந்தது. அந்த முகாமிற்கும் கரடிப்போக்கு முகாமுக்கும் இடையால் இறங்கியே நாங்கள் வேவுபார்க்க வேண்டியிருந்தது. அந்த ஒரு கிழமை முடிந்ததும் எடுத்த தரவுகளுடன் கட்டளைத்தளபதி தீபன் அண்ணாவிடம் வந்தோம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை எமக்கு தந்தார். அதற்கேற்ப நாங்கள் இரண்டாவது முறை உட்புக முயன்ற போது முதல் சென்ற பாதையில் இராணுவத்தின் அவதானிப்பு அணி நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அந்த பாதையிலிருந்து 50 மீற்றர் விலத்தி ஒரு பாதையை எடுத்து உள்ளே சென்றோம் அங்கு திட்டப்படி முதல் கட்டத்தில் விட்ட பகுதியிலிருந்து முகாமின் சுற்றளவை பார்த்தோம். அதன்பிறகு வெளியே வந்து மூன்றாவது முறை உட்சென்று திருநகர் பகுதியில் இருந்த முகாம்களை அவதானித்தோம். பழைய மஞ்சுளா வெதுப்பகத்தடியில் ஒரு முகாமும் 6 ஆம் வாய்க்கால் சந்தியில் ஒரு முகாமும் கோழிப்பண்ணை வீதியில் ஒரு முகாமும் இருந்தன. இவற்றோடு 3 ஆம் வாய்க்கால் வீதியிலும் ஒரு முகாம் இருந்தது. இவை கிளிநொச்சி பிரதான தளத்திற்குரிய பாதுகாப்பு முகாம்களாக அமைந்திருந்தன. இவற்றை நாங்கள் பார்த்த சமகாலத்திலேயே மற்றுமொரு அணி பரந்தன் பகுதியை பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் பார்த்த பகுதியின் முழுமையான தரவும் எடுக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில் இரவில் வேலை செய்வது இலகுவாக இருந்தபோதும்; பகலில் உள்ளே தங்குவதென்பது கடினமாகவே இருந்தது. கிளிநொச்சியின் கட்டடப்பகுதிக்குள் இராணுவத்தினர் இருந்தனர்;. ஏனைய பகுதி வெளியானவை. அதனால் நாங்கள் தங்குவதற்காக சில இடங்களை பிரித்து வைத்திருந்தோம். அதாவது 3 ஆம் வாய்க்கால் அருவிக்கருகில் உள்ள சில இடங்களிலும், அடுத்து கோழிப்பண்ணை வீதியின் இடது பக்கத்தில் ஒரு இடத்திலும், திருநகர் சுடலைக்குள்ளிருந்த பற்றைக்குள்ளும் பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடையில் ஒரு பகுதியிலும் தங்குவதற்கான பகுதிகளை பிரித்திருந்தோம். வீதியோரமாக நாங்கள் தங்கியிருந்த வேளை பகலில் இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருக்கும் அதிலே நாங்கள் சாப்பிடுவதற்குக் கூட பெரும் சிரமமாகவே இருந்தது. ஏனைய பகுதிகளில் இருந்த புற்கள் பற்றைகள் கூட எரிக்கப்பட்டிருந்தன. ஏனென்றால் வேவுக்காக நாங்கள் இறங்கிவிட்டோம் என்பதை எதிரி தெளிவாக உணர்ந்திருந்தான். அதனால் ஒவ்வொரு நாளும் தேடுதலில் ஈடுபட்டே வந்தான். இதனால் கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வேலை செய்துவிட்டு பகலில் தங்குவதற்காக ஆனையிறவுப்பகுதிக்கு வந்து தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நாங்கள் மூன்று தடவைகள் உள்ளே சென்று ஓரளவு வேலைகளை முடித்திருந்த போதும் சில பகுதிகளின் வேலைகள் நிறைவு பெறவில்லை. எமது திட்டம் கிளிநொச்சிப் பகுதியைக் கட்டம் கட்டமாக பிரித்து மறித்துத் தாக்குதலை மேற்கொள்வதே. எனவே அதற்கான சரியான பகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் மூன்றாம் நாள் அந்த வேலையை முடிக்க முன் வெளியே வந்துவிட்டு அடுத்த தடவை செல்ல முற்பட்ட போது பாதையில் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன இதனால் மீண்டும் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டினு}டாக உள்ளே வருமாறு கட்டளையிடப்பட்டது. அந்தப்பகுதியால் வருவதற்கு புதிதாக பாதை எடுத்தே வரவேண்டியிருந்தது. அதனால் ஒரு மாதம் அப்பகுதியில் தாமதமானது. அங்கு நின்ற செம்பியன் வேவு அணியின் பாதையினாலேயே நாம் உள்ளே நுழைந்தோம். ஆனால் நாம் சென்ற அப்பாதை எதிரியின் காப்பரணுக்குள் தான் செல்லும் ஆனால் அந்தக்காப்பரண்களில் இருக்கும் இராணுவம் முன்னுக்கு வந்து நிற்பதால் அந்த அரண்கள் வெறுமையாக இருந்ததால் நாம் அந்தப் பகுதியால் உள்நுழைந்தோம். உள்நுழைந்த போதும் ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையுள்ள இராணுவ முகாம்களை கடந்தே வரவேண்டியிருந்தது. அன்று அதிகாலையில் பரந்தன் வீதியைக் கடக்க முடியவில்லை உமையாள்புரப் பகுதி பற்றைக்குள் தங்கிவிட்டோம். அன்று காலைதான் எமக்குத் தெரிந்தது. அப்பகுதியில் இராணுவத்தின் தேடுதல் அதிகமாக நடைபெறும் பிரதேசமென்று. அன்று தேடுதலுக்காக வந்த இராணுவத்தினர் நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். நாய்கள் எங்களை கண்டு குரைக்கத் தொடங்கின. ஆனால் இராணுவம் அதைப் பொருட்படுத்தவில்லை. அன்று இரவு கிளிநொச்சிக்கு வந்து முன்னர் விட்ட மிகுதி வேலையை ஆரம்பித்தோம். நான்கு நாட்களுக்குள் வேலையை முடித்துக் கொண்டு தட்டுவன் கொட்டியையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது பதுங்கியிருந்த இராணுவ அணி ஒன்று எங்களைத் தாக்கியது. நாங்களும் திருப்பி தாக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு போராளி காயப்பட்டு விட அந்த சண்டையோடு வெளியால் வந்து விட்டோம். வந்தவுடன் வெளியில் நின்ற எதிரியின் ஒரு அணியுடனும் சண்டை பிடித்துத்தான் வந்து சேர்ந்தோம். இதேவேளையில் பரந்தன் பகுதியில் வேலை செய்த எமது அணியும் அன்று வெளிவர முயற்சி செய்து இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அவர்கள் முட்கள் நிறைந்த பகுதியால் ஓடி மறுநாள் கால்களில் முட்கள் குத்தி நடக்க முடியாத நிலையில் பனை மட்டைகளை வெட்டி காலில் செருப்பு போல கட்டிக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள் எனக் கூறினார்.
-
ஓயாத அலைகள்-2 இல் கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? | தொடர்
ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர் ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். பின்னணி 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியது இலங்கை அரசபடை. அதன்பின்னர் ஜெயசிக்குறு என்று பெயரிட்டு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது அரசபடை. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குடையில் இருக்கும் நிலப்பகுதியையும் முக்கிய வினியோகப் பாதையையும் கைப்பற்றுவதே அரசபடையின் நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக நிகழ்ந்த இந்த ஜெயசிக்குறு படைநடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த போதே, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தனர். பெப்ரவரி 2, 1998 அன்று நடத்தப்பட்ட கிளிநொச்சி நகர் மீதான தாக்குதல் புலிகளுக்கு எதிர்பார்த்தளவு வெற்றி தராதபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொண்டனர். அதன்பின்னும் ஜெயசிக்குறு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் ஒரு தடவை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர். இம்முறை புலிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது. தாக்குதல் செப்டம்பர் 26, 1998 அன்று இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் ஆண்டு நினைவுநாளின் இரவில் ஓயாத அலைகள் இரண்டு என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ம் நாள் அதிகாலை தொடக்கம் மூன்றுநாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் கிளிநொச்சி நகரம் முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது டிவிசனின் 3 ஆவது படைப்பிரிவு, பிரிகேடியர் உபாலி எதிரிசிங்கவின் தலைமையில் கிளிநொச்சிப் பகுதியை 1996 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புக்குள்ளாக்கியிருந்தது. 1996-07-26 அன்று ஆரம்பமான ‘சத்ஜெய” எனும் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தம் எனக்கூறிக் கொண்டு 70 நாட்கள் மூன்று கட்டங்களாக 12 கிலோமீற்றர் பகுதிக்குள் ஆமை வேகத்தில் முன்னேறி 22.09.1996 அன்று கிளிநொச்சியை ஆக்கிரமித்தன சிறிலங்காப்படைகள். இவ் ஆக்கிரமிப்பினால் அன்று ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். 1,279 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே ஆனையிறவு, பரந்தன் படைத்தளங்கள் அமைந்திருந்த நிலையில் சத்ஜெய 60 சதுர கிலோமீற்றர் நிலத்தை விழுங்கிக்கொண்டது. இந்நடவடிக்கைக்கெதிராக புலிகள் 15 நாட்கள் தான் எதிர்சமரை மேற்கொண்டனர். இதன்போது நாளொன்றுக்கு 3,000 எறிகணைகள் என்ற வீதத்தில் புலிகள் மீது எறிகணைகளை ஏவியும், நாளொன்றுக்கு நான்கு தடவைகள் இரண்டு கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடாத்தியே ஆக்கிரமிப்பை நடத்தின. இதன்போது சிறிலங்காப் படைகள் பயன்படுத்திய எறிகணைகளின் எடை மட்டும் 500 தொன் எனவும் கிபிர் குண்டுகளின் எடை 325 தொன் எனவும் மொத்தமாக சத்ஜெயவிற்கு 825 தொன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழிச் சமரை வெற்றிகரமாகக் கையாண்ட சமராக இது அமைவதோடு, 120 மில்லி மீற்றர் மோட்டார் உட்பட பெயர் குறிப்பிடாத பல சுடுகலன்களை விடுதலைப் புலிகள் முதன்முதல் பயன்படுத்திய சமராகவும் இது அமைகிறது. எனினும் புலிகள் தமது ஆட்பலத்தைத் தக்கவைப்பதற்காக தற்காலிக பின்வாங்கல்களையும் மேற்கொள்ள நேர்ந்தது. இச்சமரில் 700 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட 2,500 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 254 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ்வாறு ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு இடிவிழுந்த நாள் 27.09.1998 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பல உயிர்த்தியாகங்களைச் செய்து கிளிநகரை மீட்பதற்கான ஓயாத அலைகள் – 02 ஐ ஆரம்பித்தனர். இன்று நீரோடும் கால்வாய்கள் அன்று மாவீரரின் குருதி சிந்திக்கிடந்த கால்வாய்களாகக் காணப்பட்டன. இன்று நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அன்று பல புலி வீரர்களின் உடல்கள் சரிந்த நிலங்களாகக் காணப்பட்டன. இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஓயாத அலைகள் – 02 சமர் எவ்வாறு நடைபெற்றதென்பதை அன்றைய சமர்க்களங்களில் எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஓயாதஅலை – 02 சமரின் வெற்றிக்கு வலுச்சேர்த்தவர்களில் எதிரியின் முகாம்களுக்குள் ஊடுருவி தாக்குதலுக்கான தரவுகளையும் உள்ளே எதிரியின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்த வேவு வீரர்கள் தாம் எவ்வாறு எதிரியின் நிலைகளுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும், தாக்குதலுக்கான தகவல்களை எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இதுவரை வெளியிடாத தகவல்களை வேவுப்புலி வீரர்கள் ஓயாத அலைகள் – 02 இன் 7 ஆவது ஆண்டு நினைவுநாளில் பகிர்ந்து கொள்கின்றார்கள். அதில் வெற்றிக்கு வழிவகுத்த அம்சங்களை- பல புதிய தகவல்களை வேவு வீரர்களை நெறிப்படுத்தியவரும் அன்றைய விசேட வேவுப் பிரிவின் தளபதிகளில் ஒருவராகவும் இருந்த லெப்ரினன்ட் கேணல் ஜெரி இவ்வாறு கூறுகிறார். ‘ஓயாத அலை இரண்டுக்கான வேவு நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் கிளிநொச்சிப் பகுதியை அண்டிய இராணுவ காவலரண்களைச் சுற்றி ஓரளவு கண்காணிப்பை வைத்திருந்தோம் கிளிநொச்சி முகாமை அடிக்க வேண்டுமென்று எல்லாரும் உறுதியோடு இருந்தோம் ஆனால் எப்போது அடிக்கிறதென்ற திட்டம் எங்களுக்குத்தரப் படவில்லை. ஓயாத அலை – 02 நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்குள்தான் இந்த வேவு நடவடிக்கையை வேகப்படுத்தினோம். ஆரம்பத்தில் விசேட வேவுப்பிரிவினர்தான் இதைப் பார்த்தார்கள். சண்டைக்கு அணிகளை இறக்குவதற்கான வேவுக்காக ஒவ்வொரு படையணிகளையும் இந்த வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியே இதனை முழுமைப்படுத்தினோம். ஆரம்பத்திலே வேவு பார்த்ததற்கும் கடைசிக் கட்டங்களில் வேவு பார்த்ததற்கும் நிறையப் பிரச்சினைகள் இருந்தன. என்னவென்றால் வேறு நடவடிக்கைகளுக்கு வேவு பார்க்கும் போது குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் என்றால் 500 அல்லது 600 மீற்றர் விலத்தியும் பார்ப்போம். ஆனால் இந்தப் பிரதேசத்தைப் பொறுத்த மட்டில். எங்களுக்கென குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட இடத்தில் பாதை எடுத்து கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. ஏனென்றால் அந்த இடத்தில் உடைப்பை ஏற்படுத்தினால் மட்டும்தான் இலகுவான முறையில் கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இதே நேரத்தில் எதிரியும் எதிர்பார்க்கக்கூடிய இடத்தில்தான் உடைப்பு பகுதியும் இருந்தது. மூன்று பேரைக் கொண்ட வேவு அணி உட்புகுந்து வேவு பார்க்க முடியும். ஆனால் பெரும் அணி நகரும் போது எதிரி அவதானிக்காதவாறும் வேவுபார்க்க வேண்டியிருந்தது. வேவின் ஆரம்பத்தில் சிக்கல் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் எல்லாப் பாதைகளிலும் எதிரியின் பதுங்கித் தாக்கும் அணிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தது. பகல் வேளைகளிலும் இரவிலும் எதிரி தனது அரணுக்கு வெளியிலும் அவதானிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருந்தான். இதற்கும் பின்புதான் நாங்கள் முழுமையான வேவுகளை பார்க்க வேண்டியிருந்தது. அதாவது எமது அணிநகரும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக மற்றுமொரு அணியை நகர்த்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கூடிய பாதைகளால் அணிகளை நகர்த்துவதற்கான வேவுகளைப் பார்த்து நகர்த்தியதென்பதும் எமக்கு பெரும் வெற்றி என்றே கருதலாம். இதில் எல்லா வேவுப் போராளியும் கடுமையாக உழைத்தார்கள். கடைசிக் கட்டங்களில் இரவு, பகல் முழுமையாக ஓய்வின்றி செயற்பட்டார்கள். ஏனென்றால் சண்டையினுடைய முழுப்பொறுப்பும் வேவு வீரனுக்குரியதாக இருக்கும். உண்மையில் ஒரு வேவுப் போராளி தனது உயிரை மதிக்காமல் கடும் ஆபத்தான பகுதிகளுக்குள் சென்று வருகிறானென்றால் அதன் உண்மையான நோக்கம் தான் உயிரோடு திரும்பினால் அந்தப் பாதையில் ஏனைய போராளிகளின் இழப்புக்களை குறைப்பது தான் வேவுப் போராளியின் நோக்கமாக இருக்கும். வேவில் பிரச்சினைகள் இருந்தால் இழப்புக்கள் கூடும் ஆகவே வேவுப் போராளிகள் சரியாக இதை உணர்ந்து கொண்டுதான் இதில் ஈடுபடுவார்கள் ஒரு சண்டையில் வெற்றியடைந்தால் அதனுடைய ஆரம்ப வெற்றி வேவுவீரனையே சாரும். இந்த ஓயாத அலை – 02 ஐப் பொறுத்த வரையில் முழுப்பாதையாலும் குறித்த நேரத்திற்கு சண்டை தொடங்கி முழுப்பாதைகளையும் உடைத்து அணிகள் உட்புகுந்தன. ஒருபாதையால் 50 பேர் கொண்ட அணி அமைதியாக உள்ளே சென்றுதான் சண்டையில் ஈடுபட்டன. வேவுப் போராளிகளுக்கு இந்தப் பிரதேசத்தில் அமைந்த சாதகம் என்னவென்றால் நடை தூரம் குறைவாக இருந்தது. இந்த போராளிகளுக்கு வேவின் கடைசிக்கட்டங்களில் ஓய்வு கொடுக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ஓய்வெடுத்தால் சண்டையில் பெரும் மாற்றம் ஏற்படும் அவர்களும் ஓய்வினை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் சண்டைக்கு முதல்நாள் நகர்விற்கான பாதையில் சிக்கல் ஏற்பட்டால் மற்றுமொரு பாதையை அவர்தான் எடுக்கவேண்டும் இந்த சண்டையிலும் சண்டைக்கு முதல் நாள் ஒரு பாதையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அந்தபாதைக்குரியவர் அடுத்தநாள் நான்கு மணிக்கிடையில் இன்னுமொரு பாதையை எடுத்தார். நகர்வுப்பாதைகளை எடுப்பதிலும் நிறைய விடயங்களை அவதானிக்க வேண்டும். ஒவ்வொரு பாதையும் எங்களுக்கு சாதகமான முறையில் இருக்க வேண்டும் பாதையால் அணிகள் நகரும் போது எதிரி அவதானிக்காதவாறிருக்க வேண்டும். எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளின் நடமாட்டமற்ற பகுதியாக இருக்க வேண்டும். இது போன்ற பல விடயங்களை அவதானித்துத் தான் பாதை எடுக்க வேண்டும். அதாவது இராணுவம் எந்த உசார் நிலையிலிருந்தாலும் தேவைக்கேற்ப பாதை எடுத்தே ஆகவேண்டும். ஓயாத அலை – 02 இல் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் உண்டு அதாவது பயிற்சி முடித்த குறுகிய காலத்திற்குள்ளேயே ஓர் அணியையும் இந்த வேவில் ஈடுபடுத்தினோம். இவர்களுக்கு வேவுப்பயிற்சியை வழங்கும்போது அதிலே சில போராளிகளின் திறமையான செயற்பாடும் இந்த சண்டையில் முக்கியத்துவம் பெறுகிறது. 2 ஆம் லெப்டினன் ரகுவரன் எனும் போராளி ஆரம்பத்தில் வேலைத் திட்டங்களுக்கு அனுப்பும்போது ஒரு வித்தியாசமான துணிச்சல், நகர்வு, பண்பு என்பவற்றை கொண்டிருந்தார். அவரின் திறமையை அவதானித்து இந்த பாதை எடுக்கும் செயற்பாட்டில் அவரையும் ஈடுபடுத்தினோம். பாதைகள் எடுக்கப்பட்ட பின் மேற்கொண்ட பகுப்பாய்வில் அவரின் செயற்பாடு மிகவும் வித்தியாசமானதாகவிருந்தது. ஒரு அனுபவமுள்ள வேவுவீரன் எவ்வாறு செயற்படுவாரோ அதேபோல் இவர் பயிற்சியையும் பொறுப்பாளர்களால் விளங்கப்படுத்தப்பட்ட விடயத்தையும் வைத்து இராணுவத்தின் நடவடிக்கைகளை மிகவும் நுணுக்கமாக அவதானித்திருந்தார். அவ்வாறுதான் ஒவ்வொரு வேவுப் போராளிகளும் செயற்பட்டிருந்தார்கள். சண்டை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் வேவுப்போராளிகளின் பணி என்ன வென்றால் திட்டத்திற்கேற்ப அணிகளை நகர்த்தி சண்டையை தொடங்கி மண் அரண்களில் ஏறி காப்பரண்களைக் கைப்பற்றியவுடன் வெளி லைனுக்குரியவர்கள் அங்கு நிற்க உள்ளே அணிகளை கொண்டு செல்ல வேண்டியவர்கள் அணிகளுடன் உட்செல்வார்கள். சில பாதைகளை எடுக்கும் காலத்தில் எங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஏனென்றால் அப்பகுதிகள் வெளியான பிரதேசம், அங்கு எதிரியின் அணிகள் வந்து பதுங்கியிருந்து தாக்குதல்களை பெருமளவில் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் சண்டைக்கு முதல் நாள் அப்போது பொறுப்பாக இருந்தவரால் சொல்லப்பட்டது இந்தப்பகுதியால் பாதை எடுக்கப்படா விட்டால் சண்டையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுமென்று இதனை அந்த பாதைக்குரிய போராளிகளுக்கு தெரியப்படுத்தினோம். அதாவது இந்தப்பாதை தளபதி பால்ராஜ் அண்ணாவின் அணி போகவேண்டிய பாதை இந்த அணிதான் கட்டவுட்போட வேண்டிய அணி. எனவே ஒரு புதுவிதமான முறையில் இதில் வேலையை மேற்கொண்டோம். அதாவது நாங்கள் ஒரு அணியை தயார்ப்படுத்தி நகர்ந்து சண்டை ஏற்பட வேண்டிய நிலை உருவானால் சண்டையிட்டாவது பாதையை எடுப்பது என்ற நிலையில். மிகக்கூடிய ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்திலும் அந்த போராளிகளின் திறமையான செயற்பாட்டினால் அந்தப்பாதையை எடுத்து அதனூடாகவே மறுநாள் அணிகளை நகர்த்தினோம். ஒரு பகுதிக்கு சுகந்திரன் என்ற போராளி பொறுப்பாக நின்று செயற்பட்டார். அவர்கள் மாலை 6.30 இற்கு குளத்து தண்ணிக்குள் இறங்கினால் காலை 4.30 இற்கு பிறகுதான் அவர்கள் கரைக்கு வருவார்கள் 10 மணித்தியாலம் வரையில் தண்ணிக்குள்ளிருந்து நீண்டநேரம் அவதானித்தார்கள் அதாவது சில இடங்களில் தாழ்வான பகுதியும் சில இடங்களில் தாழ்வற்ற பகுதியுமாக இருந்தது. அதற்குள் சத்தமின்றி அணிகள் நகர்வது என்றால் மிகக் கடினம் அதற்கேற்றவாறு வேவு பார்க்க வேண்டியிருந்தது. இதன்படி இப்பகுதியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிகள் நகர்த்தப்பட்டன. சண்டைக்கான பயிற்சிகளை அணிகளுக்கு வழங்கும் போது வேவுப் போராளிகளும் ஈடுபடுவார்கள் ஏனென்றால் இவர்களின் வழிகாட்டல் அணிகளுக்கு அவசியமானதாக இருக்கும். ஒரு பகுதியால் சண்டை அணிகள் நகர்ந்து கைப்பற்ற வேண்டிய அரண்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு விட்டன. இதற்கு லெப். கேணல் சித்தா பொறுப்பாக சென்றார். பின்பு பகலில் இராணுவம் மிக முனைப்பாக சண்டையிட ஆரம்பிக்கும் போது இந்த அணியினரின் துப்பாக்கிகள் நீருக்குள்ளால் சென்றதால் செயற்படாது போனது இதனால் அணிக்கு இழப்பு அதிகரிக்க தொடங்கியது லெப். கேணல் சித்தா உட்பட 40 பேர் வரை குளத்து பண்டில் வீரச்சாவடைந்தனர். இதேபோன்று இன்னுமொரு பாதையிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. இவ்வாறு இராணுவம் அதி உசார் நிலையில் இருந்த போதும் வேவு வீரர்களின் ;திறமையான வேவுச் செயற்பாட்டினால் தான் ஓயாத அலைகள் – 02 சமரை வெற்றி கொள்ள முடிந்ததென அன்று பொறுப்பாக இருந்த தளபதிகள் கூறினார்கள் அது உண்மையும் கூட. ஓயாத அலைகள் – 02 இல் உள்வேவு என்பதும் முக்கியமானதொன்று இதை பொறுத்த வரையில் வேவுப்போராளிகள் முகாமிற்குள் ஊடுருவி விட்டார்கள் என்பதை எதிரி அறிந்திருந்த நிலையிலும் போராளிகள் உட்புகுந்து மிகவும் துல்லியமாக வேவு பார்த்திருந்தார்கள். அதாவது எதிரியின் முகாமுக்குள் அவனது கட்டளைத் தளங்கள், ஆயுத களஞ்சியங்கள், முக்கிய தளங்கள், மோட்டார் தளங்கள், உள் அரண்கள் முட்கம்பி வேலிகள் அனைத்தும் எவ்வாறு எந்த அளவு உசார் நிலையில் இருக்கின்றன என்பதையும் உள் அரண்கள் எத்தனை எந்த அளவு தூரத்தில் உள்ளன என்பனவற்றைக் கூட வேவுப் போராளிகள் தெளிவாக அவதானித்திருந்தார்கள். வேவைப் பொறுத்த வரையில் தடையங்களை விட்டால் அந்த சண்டையே குழம்பிவிடும். அதற்கேற்றவாறு வேவு வீரன் செயற்பட வேண்டும். உண்மையில் வேவு வீரன் விசுவாசமானவனாகவும் நம்பிக்கையுடையவனாக துணிச்சல் நிறைந்தவனாக இல்லாதிருந்தால் அந்த வேவு வீரனாலேயே பல போராளிகள் வீரச்சாவடைய வேண்டிய நிலை ஏற்படும் ஆகவே இந்த சண்டையில் அவ்வாறு எந்த செயற்பாடும் நடைபெறாதது வேவு வீரரின் திருப்திகரமான செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. பொதுவாக சண்டை ஆரம்பிக்கின்ற நேரத்தில் அனைத்து பாதைகளும் ஒழுங்கமைக் கப்பட்டு குறித்த நேரத்திற்குள் அணிகள் நகர்ந்து சண்டையில் ஈடுபட்டன. இந்த சண்டையில் தடை உடைப்பிற்கான செயற்பாட்டில் வீரச்சாவுமிகக்குறைவாகவே இருந்தது. பொதுவாக வேவு வீரர்கள் திரட்டும் தகவல்கள் அனைத்தும் தளபதிகளுடாக தேசியத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தேசியத் தலைவராலேயே சண்டைக்குரிய திட்டங்கள் வகுக்கப்படும் அவரின் திட்டத்திற்கேற்பதான் மாற்றங்கள் மேற்கொள்வதானால் செய்வோம். இந்த சண்டையில் ஏற்கனவே நாங்கள் தெரிவு செய்த சில பாதைகளை தலைவர் நிறுத்தினார். அதற்கேற்ப அடுத்த பாதைகளை எடுத்துத்தான் அணிகளை நகர்த்தினோம். இவ்வேவுப்புலி வீரர்களின் அணிகளின் துணிகரச் செயற்பாட்டுக்கு வித்திட்டவர்கள் வீரச்சாவைத் தழுவிய வேவுப்புலி மாவீரர்கள் என்பதே மிகப்பொருத்த முடையது. ஏனெனில் வேவுக்காக செல்கின்ற ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடைகின்ற பொழுது அடுத்த வேவு வீரனுக்கு ஏற்படுகின்ற உணர்வு எதிரியின் மீது தாக்குதலை நடத்தவேண்டுமென்ற உத்வேகத்தை அதிகரிக்கும். ஆகவே எமது விடுதலையின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் வீரச்சாவ டைந்த ஒவ்வொரு மாவீரனின் தியாகமும் விடுதலை உணர்வுமே உத்வேகத்தை அளிக்கின்றன. கள ஆய்வுகளுடன்:- இ.சசிக்குமார். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ ஈழநாதத்திலிருந்து
-
Jeyasikuru counter battle victory celebration (10).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (9).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (8).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (7).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (6).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (5).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (4).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (3).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (2).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Jeyasikuru counter battle victory celebration (1).jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு ! மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம் இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது. அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும் நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள் பின்னாளில் திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
மருத்துவப்பிரிவுப் போராளிகளுடன் பிரிகேடியர் பால்ராஜ் இ-வ: பிரி. பால்ராஜ், மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா, சரியாகத் தெரியவில்லை (கப்டன் யாழ்வேள்!?), படைய மருத்துவர் தணிகை
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
தகவலுக்கு மிக்க நன்றி கோசான்.
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
படைய மருத்துவர் லெப். கேணல் இசைவாணன்(!?) 11/11/2008
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
"புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து மருத்துவப்பிரிவின் இறுவட்டு: இறுவட்டு வெளியீட்டின் போது 14/06/2003 கிளிநொச்சியில் புதிதாக திறக்கப்பட்ட யாழ்வேள் மருத்துவமனையில் இவ்வெளியீட்டு விழா நடைபெற்றது. பொன். தியாகமப்பா திறந்துவைக்கிறார் தலைவர் மங்கள குத்துவிளக்கினை ஏற்றுகிறார் இறுவட்டு வெளியீட்டின் போது படைய மருத்துவர் அஜந்தன் வெளியிட்டு வைக்க தலைவர் பெற்றுக்கொள்கிறார் மருத்துவப் போராளி மாவீரருக்கான பொதுச்சுடரினை தலைவர் ஏற்றுகிறார்
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு 'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்' 16.10.2005: 1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தகவல்: தமிழ்நெற் 'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை' ''நுழைவுவாயில்'' 'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.' 'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.' 'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.' 'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூன்று அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.' 'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.' 'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.' 'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.' 'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.' 'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்' 'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.' 'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.' 'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.' 'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.' 'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.' 'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.' 'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.' 'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.' 'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.' 'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.' 'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.' 'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.' 'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.' 'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.' 'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தொடக்கக்கால கட்டடம்) புதுக்குடியிருப்பு பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!
-
arul alias rosan.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில் 29/2/2009
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2002-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டன. இதன் மருத்துவப் போராளிகள் "சிறப்பு மருத்துவப் போராளிகள்" எனப்பட்டனர்.
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
சிறிலங்கா வன்வளைப்பு தமிழீழ ஆட்புலத்தில் புலிகள் மேற்கொண்ட முதலாவது நடமாடும் மருத்துவ சேவை 1/10/2004 தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் சிறப்பு மருத்துவப் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர் எழுமதி கரிகாலன் தலைமையில் 15 வைத்தியர்கள் காலை பூந்தோட்டத்தில் உள்ள அகதிகள் முகாமிலும் பின்னர் வவுனியா மகாரம்பைக்குளத்திலும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். (Tamilnet) படைய மருத்துவர் தேவா (தேவா அக்கா)