Everything posted by கந்தப்பு
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
இந்தியா அமைதிப்படை காலத்தில் மண்டையன் குழுவை நடாத்தி பல இளைஞர்கள் சித்திரைவாதை செய்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2004 இல் சேர்ந்த போது சொல்லப்பட்ட காரணம் சிங்கள தரப்புக்கு எதிராக தமிழ் அமைப்புகள் சேர்ந்து பலமான கூட்டணி அமைக்க வேண்டும். 2010 தேர்தலில் தமிழர்களை அழித்த மகிந்தா சரத்பொன்சேகா ஆகிய இருவர்களில் சரத் பொன்சேகாவுக்கு யாழில் ஏன் அதிகளவு மக்கள் வாக்களித்தார்கள்? இவர்களை தவிர சிவாஜிலிங்கம் , விக்கிரமபாகு கருணாரத்தினா போன்றவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியில் ஜேவிபிக்கு யாழ் மண்ணில் இருந்து 3 வேட்பாளர்கள் ஏன் தெரிவு செய்தார்கள். இதே ஜேவிபி தமிழர்கள் கொல்லபடும்போது தமிழர்களுக்கு எதிராக இருந்ததை யாழ் மக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. யாழ் மக்களும் சுயநலவாதிகளா? எம்மவர்களில் சிலர் வைகோ அவர்களை கடந்த 7,8 வருடங்களாக குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் திமுகவில் இருந்து வை கோ பிரியும் போது வைகோவுக்காக சிலர் தீக்குளித்தார்கள். ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வை கோ இருந்தார். அப்பொழுது இயக்கமும் இருந்தது. அக்காலத்தில் எம்மவர்கள் திக்குளித்தவர்கள் பற்றி சொல்வதில்லை. வை கோ அவர்கள் பாரதீய ஜனதா, தமிழகத்தில் ஊடுருவதை தடுக்கத்தான் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். இதே போலதானே 2004 இல் சிங்களதரப்புக்கு எதிராக போட்டியிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இயக்கம் இருந்த காலத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சேர்க்கப்பட்டார்
-
Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
தமிழில் அழகிய நீளம் குறைந்த பெயர்களும் இருக்கிறது. உ+ம்-அகிலன், நேயன், மாறன், எழிழன், யாழவன், சேயோன், சுடர், சுரபி, மயூரன். எனது பிள்ளைகளுக்கு இப்புத்தகத்தில் இருந்தே பெயர்கள் சூட்டினேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களின் வசதிப்படி போட்டியை நடாத்துங்கள். நான் நினைக்கிறேன், ஈஸ்டர் 4 நாட்கள் விடுமுறையுடன் சேர்த்து நீங்கள் எங்கேயோ குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்கிறீர்கள் போல 🤔
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரம்ப சுற்று 70 போட்டிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. @கிருபன் நீங்கள் போட்டிகளை தயார்படுத்தலாம். நாட்கள் குறைவு என்பதால் அதிக போட்டியாளர்கள் விடை எழுத கட்டாயம் முதல் போட்டியில் இருந்து நீங்கள் ஆரம்பிக்க தேவையில்லை. ஒருவாரம் முடிய அல்லது சிலநாட்களின் பிறகு நடக்கும் போட்டிகளில் இருந்து ஆரம்பிக்கலாம். The Times of IndiaIPL 2026 Schedule: BCCI reveals full second phase fixture...Cricket News: The BCCI has officially unveiled the schedule for the second phase of the Indian Premier League 2026, confirming fixtures from April 13 to May 24.The .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2,3 நாட்களில் மிகுதி போட்டிகள் விபரங்கள் வெளியாகும். இம்முறை 74 போட்டிகள்தான் நடைபெறும். ABP LiveIPL 2026 Full Schedule Release: BCCI Confirms 74-Game For...The BCCI sticks to the tried-and-tested 74-match format for IPL 2026 as the full schedule prepares for a massive reveal this week.
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
துவிச்சக்கர வண்டியில் மட்டும் அல்ல வீதி ஓரமாக நடந்து சென்ற வயோதிபர் ஒருவரை இருமுறை வேகமாக சென்ற இருசக்கர இயந்திர வாகனங்கள் இடித்ததை நண்பர் ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன். வெளிநாட்டு பணம், என்னத்தை சொல்ல? வெள்ளி அல்லது திங்கள் விடுமுறை என்றால் கொழும்பில் வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் சிலவேளை 3 நாள் விடுமுறைக்கு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்ல முயல்வார்கள். இவர்களால் எரிபொருள் பயன்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்.
-
Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
கிருத்திக், கிஷோர் எல்லாம் தமிழ் பெயரா?
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சென்ற நத்தார் விடுமுறைக்கு இந்தியா சென்று வந்தவர்களின் கருத்துக்கள் படி வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் விஜய்க்கு வாக்களிக்கவுள்ளதாக சொன்னதாக சொல்லியிருந்தார்கள். இளைஞர்கள் பலர் அவருக்கு ஆதரவு இருப்பதாகவும், திமுகவின் குடும்ப ஆட்சிக்கு மாற்று விஜய் என்றும் சொன்னதாக சொன்னார்கள். 50 வயதுக்கு மேற்ப்பட்ட பலர் திமுகவுக்கே ஆதரவாகவும் திமுகதான் பிஜேபியை தமிழகத்தில் ஊடுருவாகாமல் தடுக்கும் என்றும் சொன்னதாக சொன்னார்கள். மே 4 ஆம் திகதி உண்மையான முடிவு தெரிந்துவிடும்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். - விகடன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேற்கு வங்களாம் ஏப்பிரல் 23, 29 திகதிகளில் நடைபெறுகிறது. KKR அணியின் சொந்த மைதானம் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கிறது அசாமில் ராஜஸ்தான் அணி விளையாடும் 2 வது மைதானம் (குவாஹாட்டி)இருக்கிறது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. - விகடன் @கிருபன் - IPL மிகுதி 64 போட்டிகளும் விரைவில் அறிவிப்பார்கள். நீங்கள் போட்டியினை விரைவில் தயாரிக்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2024 இல் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இதே போல இரண்டுமுறை போட்டி விபரங்களை வெளியிட்டார்கள் . நீங்கள் இரண்டாவதாக வெளியிட்ட போட்டிகளைவைத்து போட்டியினை நடாத்தினீர்கள். சென்ற வருடம் 74 போட்டிகள் நடைபெற்றன. இம்முறை 84 போட்டிகள் நடைபெறவுள்ளது. 20 போட்டிகளின் விபரங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. மிகுதி 64 போட்டிகளை மட்டும் வைத்து நீங்கள் போட்டியை நடாத்துங்கள். கடந்த சிலவருடங்கள் போட்டிகளை அழகாக நடாத்தியுள்ளிர்கள். போட்டிகளை நீங்கள் நடாத்தினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு இம்முறை போட்டியினை நடாத்த நேரமில்லாமல் இருந்தால் மட்டும் நான் போட்டியினை நடாத்துகிறேன். தமிழக சட்டசபை தேர்தல் போட்டி கட்டாயம் நடைபெறும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறமாட்டாது. எப்போது தேர்தல் தினம் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நாளை வரும் போட்டி விபரங்களில் முதல் 20 போட்டிகளின் விபரங்கள் மட்டுமே இருக்குமென்றும் தேர்தல் தேதிகள் தெரிந்த பின்பு மிகுதி விபரங்கள் வரும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. மிகுதி விபரங்கள் சிலவேளை ஏப்ரல் மாதத்தில் அதாவது முதலாவது போட்டி ஆரம்பித்தபின்பும் வரலாம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தேர்தல் நாள், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள், எத்தனை தொகுதியில் கட்சிகள் போட்டியிடுகின்றன, போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஊரிலே செல்லடிக்கு தப்பிப்பிழைத்து இங்கிலாந்துக்கு வந்து மீண்டும் வளைகுடாவில் நடுங்கிகொண்டு இருந்தும் போட்டியினை திறம்பட நடாத்திய கிருபன் அவர்களுக்கு பாராட்டுக்கள் முதலிடத்தை பிடித்த நியூபலன்ஸ் அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த நியாயம் அவர்களுக்கும் வாழ்த்துகள். தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் அகஸ்தியன் அவர்கள் வென்று இருப்பார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூபலன்ஸ் அவர்கள் மகளிர் உலக கிண்ணப் போட்டியிலும் கலந்து கொண்டவர்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
16 ஓவரில் 3 விக்கேற்றுகள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரெலியர்கள் சிலர் அவுஸ்திரேலியா டாலர்கள் 10000 குடுத்து வளைகுடா நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்துருக்கிறார்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வளைகுடா மண்ணில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்ல தற்போது விமானக்கட்டணம் நன்றாக அதிகரித்துள்ளதாக இங்கு செய்திகளில் கண்டேன். உங்களது விமானக்கட்டணம் அதிகரித்துள்ளதா? எனக்கு புள்ளிகள் கிடைக்காது என்றாலும் நான் நியூசிலாந்து அணிக்கே ஆதரவு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா வெற்றி. இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் இங்கிலாந்துக்கு ஆதரவு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா 24-1 24-2 ஆக இருந்திருக்கும். சாம்சன் தப்பிட்டார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொல்வது சரி. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தமிழ் வீரர்களை குறிப்பிட்டேன். T20 துடுப்பாட்டதில் விஜயகாந்த் விசயகாந்த் 2 போட்டிகள் இலங்கை அணி சார்பாக விளையாடியிருக்கிறார்.