Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4)சுவைபிரியன் 5) தமிழ்சிறி
  2. வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4)சுவைபிரியன்
  3. பதில் எழுதாத இக்கேள்விகளுக்கு மட்டும் பதில் அளியுங்கள்
  4. 20 வது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் அளியுங்கள் 27 வது கேள்விக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி ஒன்றின் பெயரை குறிப்பிடுங்கள். 27 -34 கேள்விகளுக்கு அக்கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்று பதில் எழுதுங்கள். 37 வதுக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பெயரை சொல்லுங்கள்.
  5. வெற்றி பெற வழ்த்துக்கள். நீங்கள் 20 , 27 வது கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. இக்கேள்விகளுக்கு விடை என்ன? 27 - 34 கேள்விகளுக்கு நீங்கள் தெரிவு செய்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதற்கான விடைகளையும் எழுதுங்கள் 37 வது கேள்விக்கு நீங்கள் அனுரா என்று பதில் அளித்திருக்கிறீர்கள். அனுரா என்ற பெயரில் யாழ் தேர்தல் தொகுதியில் ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. ஆனால் அனுராவின் தேசிய மக்கள் சக்தியினை குறிப்பிடுவது போல உங்களின் பதில் தெரிகிறது. அக்கட்சி சார்பாக யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிக வாக்குகளை பெற்றுவார் என நீங்கள் நினைக்கும் வேட்பாளரின் பெயரை இங்கு எழுதுங்கள்
  6. இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி
  7. 10, 13 வது கேள்விகள் இந்தக்கட்சியை பற்றித்தான் கேட்டிருந்தேன். அவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 14 இல் போட்டியிடுகிறார்கள். தவராஜா போல கடைசி நிமிடத்தில் உமாகரன் ராசையா, ஆனந்தி எழிழன், கஜதீபன் , லோஜன் ( கொழும்பு) போன்றவர்களை சேர்க்க நினைத்து இருந்தும் தவறுதலாக மறந்துவிட்டேன்
  8. உங்களின் பதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது வெற்றி பெற வாழ்த்துகள்
  9. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  10. லைக்காவின் ஒருவன் தளம், ஆதவன் தொலைக்காட்சியில்தான் தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியா ஊடகங்களில் சிறந்த தமிழ் படதுக்கான விருதினை இப்படத்தினை தயாரித்த சுபாஸ்கரனுக்கும் மணிரத்தினமுக்கும் கிடைத்ததாக சொல்கிறார்கள்.
  11. ஒவ்வொருவருடமும் மாநில மொழியான தமிழில் வந்த சிறந்த படத்துக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இம்முறை பொன்னியின் செல்வன் 1 க்கு கிடைத்திருக்கிறது. முன்பு மகாநதி சேது விசாரணை முதல் மரியாதை , பெரியார் , பாரதி, தங்கமீன்கள், அசுரன் , கடைசி விவசாயி போன்ற படங்களுக்கு கிடைத்தபோது அப்பட்டங்களின் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் விருதினை பெற்றார்கள். இம்முறை பொன்னியின் செல்வன் 1 க்கான விருதினை சுபாஸ்கரன், மணிரத்தினம் அவர்கள் வாங்கினார்கள்.
  12. மாநில மொழிக்கான சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் 1 க்கு விருது கிடைத்தது. இதனால்தான் அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் இயக்குனர் மணிரத்தினமும் விருதினை வாங்கினார்கள். சிறந்த தயாரிப்பாளருக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. இது தவறான செய்தி.
  13. நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும் போட்டியை நடாத்துகிறேன்.
  14. நானும் பார்த்தேன் . சிவனணைந்தான் , அவரது அக்கா, அம்மா, நண்பன் , பூங்கொடி டீச்சர் நினைவுகளில்…
  15. சுற்றுலா செல்வோரில் அதிகமானோர் சிங்கள இனவாதத்தினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் அடைக்கலம் தேடி குடியுரிமை பெற்ற தமிழர்களும் அவர்களது சந்ததியினரும்தான்
  16. வைகோவின் மதிமுக தோன்றிய வரலாறு 2011 இல் யாழில் வந்தது.
  17. 2016 இத்தொகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 63.237 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. 35.69% வாக்குவீதம் பெற்றது. அதிமுக 56,865 வாக்குகளை பெற்றது ( 31.82%). மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட பாட்டளி மக்கள் கட்சி 41,428(23.19%) வாக்குகளை பெற்றது. 4 இடத்தினை மாக்ஸிஸ கம்னியூஸ்ட் கட்சி (5.59%) பெற்றது. 5 ஆம் இடம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களித்தார்கள் (0.78%) . 6 இடம் பிஜேபி( 0.72%) . நாம் தமிழர் கட்சி இதை விட குறைவான வாக்குகளே இங்கு பெற்றிருக்கிறது. முக்கிமாக ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்த இந்த தேர்தலில் , இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி இடம் பிடித்தது . மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக 93,730 வாக்குகள் பெற்று (48.69%) வெற்றி பெற்றது. அதிமுக 84,157(43.72%) வாக்குகளை பெற்றது. நாம் தமிழர்கட்சி 8,216(4.27%) வாக்குகளை பெற்றது. இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் திமுக 1,24,053(63.22%) , பாட்டளி மக்கள் கட்சி 56,296(28.69%) , நாம் தமிழர் கட்சி 10,602(5.40%) வாக்குகளை பெற்றது. இம்முறை அதிமுக போட்டியிடவில்லை . அதிமுக ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? இத்தேர்தலில் பாட்டளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக பிஜேபியின் அண்ணாமலை அதிமுக, ஏடப்பாடியையும் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு பெரிய தண்டனை வழங்கியிருக்கிறார்கள். பல தொகுதியில் கட்டு பணத்தினை இழந்திருக்கிறார்கள் . உண்மையில் நாங்கள்தான் எதிர்கட்சி. திமுகவுக்கு எதிரான வாக்குகளை எங்கள் கூட்டணிக்கு வழங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் . இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்பிய அதிமுக ஆதரவாளர்கள் பலர்கோபத்தினால் திமுகாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என சில இணையத்தளங்களில் எழுதியிருக்கிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.