Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. உரிய விளக்கம் கோரல்... நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌ கேள்விக்‌ கடிதம்‌ தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது, 04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌ முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு! ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை. மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌ முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌ தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும்‌ குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌. எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌. தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌. எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன். கலாநிதி குமாரவடிவேல் குருபரன் LL.B (Hons) (Colombo) B.C.L (Oxford) Ph.D (London) Attomey-at-Law (Sri Lanka) Notary Public and Commissioner for Oaths.
  2. வயது போயிட்டுது. 😄. காலை முரசுக்கு பதிலாக காலைக்கதிர் என்று எழுதிவிட்டேன்
  3. படங்களை எப்படி இணைப்பது என்று சொல்லுங்கள். நான் இணைத்துவிடுகிறேன் https://postimg.cc/gallery/NcwY1B0
  4. நன்றி . முதல் பக்கத்தில் ‘இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் வந்த பெட்டி செய்தியும் , அதைதொடர்ந்து 4 பக்கத்தில் வந்த முழு செய்தியும் இணையுங்கள்
  5. இன்றைய காலைக்கதிர் (பக்கம் 1,4) வந்த இந்த செய்தியை யாரவது இங்கு இணைக்கமுடியுமா? வலம்புரி பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகளிர் இல்லத்தினை மூடுமாறு ஆளுநர் உத்தரவு என்ற செய்தி தவறானது என்று வெளியிட்டிருக்கிறார்கள்
  6. இன்று 5ஆம்திகதி யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர் பத்திரிகையிலும் ‘உதயன் பத்திரிகையில் வெளியான செய்திபற்றி உதயன் பத்திரிகையின் ஊடக அறத்தினை பற்றி இரகசியம் பரகசியம்’ என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளது’. PDF வடிவில் உள்ளதினால் இணைக்க முடியவில்லை
  7. தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகனை நோக்கி காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் உதயன் பத்திரிகையில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
  8. 3வது நடுவர் தவறாக தென்னாபிரிக்கா மில்லருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினாரா? https://www.hindustantimes.com/cricket/south-africa-robbed-of-t20-world-cup-win-fresh-video-of-suryakumar-yadav-title-winning-catch-sparks-controversy-india-101719710314668.html Did Suryakumar Yadav touch the boundary rope during the catch? The catch soon sparked comparisons with Kapil Dev's iconic 1983 moment, but few on social media reckoned Suryakumar's shoe had flicked the boundary cushion when he grabbed the catch at long-off before throwing the ball up in the air. A South African fan wrote: “This certainly deserved more than one look, just saying. Boundary rope looks like it clearly moves.”
  9. போட்டியை அழகாக நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற பிரபா (USA),முன்னிலையில் இருந்த ஈழப்பிரியன், யசோதரன் , குமாரசாமிக்கும் வாழ்த்துகள். கிருபன் நடாத்திய இரண்டு போட்டிகளிலும் எனக்கு 3 இம் இடங்கள் 😄 .
  10. ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். 78 வது கேள்வி - இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? என்றுதான் கேட்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஆப்கானிஸ்தான் , இந்தியா வீரர் இருவரும் ( Farooqi , Arshdeep singh ) வருகிறார்கள் . ஆனால் இத்தொடரில் சிறந்த பந்துவீச்சாளர் என்று கேட்டால்தான் ஆப்கானிஸ்தான் வீரர் Farooqi மட்டும் வருவார்( இருவரில் சிறந்த Run Rate). ஆனால் போட்டியை நடத்தும் கிருபனின் எந்த முடிவையும் நான் ஏற்கிறேன்
  11. சென்ற வருடத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் ( 50 ஓவர்) முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே விளையாடப் போகின்றன . இலங்கை 9 ஆம் இடமென்பதினால் இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. தெரிவான அணிகள் - பாகிஸ்தான்அவுஸ்திரேலியா , இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து , இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான், வங்களதேசம்
  12. ஆனால் நீங்கள்தான் எங்களை விட முன்னிலையில் இருக்கிறீர்கள். அடுத்து கிருபனால் நடாத்த இருக்கும் துடுப்பாட்ட போட்டி சாம்பியன் கிண்ணமாக வாய்ப்பு இருக்கிறது. பெப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்தியா அரசாங்கம் , பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட அனுமதி வழங்குமா என்பது ஒரு கேள்வி. இப்போட்டிகள் Rawalpindi, Karachi,Lahore மைதானத்தில்தான் நடக்கவுள்ளது. ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும். Wagah எல்லை ( இந்தியா பாகிஸ்தான் எல்லை)க்கு அருகில் லாகூர் இருப்பதினால் இந்தியா இரசிகர்கள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளை பார்க்க வசதியாக இருக்கும். அத்துடன் ஒரே இடத்தில் இந்தியா தங்குவதினால் பாதுகாப்பு பிரச்சனைகள் குறைவாக இருக்கும். இதுவரை வெற்றி பெற்ற அணிகள் 1998 - தென்னாபிரிக்கா 2000 - நியுசிலாந்து 2002 - இந்தியா , இலங்கை ( மழை காரணமாக இறுதி போட்டி நடைபெறவில்லை , இதனால் இரண்டு அணிகளும் வென்றதாக அறிவித்தார்கள்) 2004 - மேற்கிந்தியா தீவுகள் 2006 - அவுஸ்திரேலியா 2009 - அவுஸ்திரேலியா 2013 - இந்தியா 2017 - பாகிஸ்தான் ரகசியம் சொல்லியாச்சு . இனி எங்களை விட முன்னுக்கா இல்லை பின்னுக்கா வருவீர்கள் என உங்களின் கைகளில்தான் இருக்கிறது 😄
  13. அரை இறுதிபோட்டிக்கு இந்தியா தெரிவானால் கயானா மைதானத்தில்தான் போட்டி நடக்கும் என முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதனால் இந்தியா 4 சூழல் பந்து வீச்சாளர்களை இந்த உலக கோப்பைக்கு தெரிவு செய்தது. இந்தியா அணிக்கு மட்டுமே அரை இறுதி போட்டிக்கு தாங்கள் எங்கே விளையாட வேண்டும் என தெரிந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமான விடயம். Did India have a clear advantage knowing where their T20 World Cup 2024 semi-final was going to be staged? India captain Rohit Sharma didn't think there was any. Former India batter Sanjay Manjrekar thought otherwise. "Clear advantage," Manjrekar said on ESPNcricinfo's Timeout show. "Rohit has to say that. He can't say it was an advantage. India would've picked their side based on it. India's problem has been semis and finals and when you know you're playing in Guyana, if you've been wondering why they've got four spinners in their squad, this could be the reason." Former England batter Nick Knightconcurred with that assessment that "it didn't seem right or fair" that India knew where they were playing. It's a school of thought that seems to have found favour from several quarters, most notably his former colleague and opening partner Michael Vaughan. "Literally, it's their tournament," Vaughan said in the Club Prairie Fire podcast on Thursday. "They get to play whenever they want. They get to know exactly where their semi-final will be. They play every single game in the morning so people can watch them at night in India on TV. "I get that. I get that money is a big play in the world of cricket. And I get that in bilateral series, but you would think that when you get to a World Cup, the ICC should be a little bit fairer to everybody. It shouldn't be just India just because they bring a few quid in. Knight went a step further in questioning the ICC's decision to have separate rules for both the semi-finals. The Afghanistan-South Africa semi-final on Wednesday night had a reserve day scheduled, while the India-England semi-final had only the provision of an extension by 250 minutes, and no reserve day. The decision to have the final on a Saturday was among other scheduling concerns raised. "I can't quite get my head around why we've got to this point," Knight said. "I thought watching the group stages, it could've been condensed. I thought they were elongating moments at times between games. And why can't we play the final on Sunday? Am I oversimplifying this to give teams the extra day to travel? I wonder if we could've pushed it altogether a little bit more to prevent this situation from happening." "As I said, bilateral, I completely understand it. But when you get to a World Cup, there cannot be any kind of sympathy or any kind of sway towards one team in the tournament. And this tournament is purely set up for India, simple as that." Manjrekar called for the ICC to make it a level-playing field, and not solely focus on commercial gains. "It's a wrong way to go about it," he said. "I'm talking about a very idealistic kind of a situation. In this sport, we've put the cart before the horse a lot. We're so excited to take it to the USA, New York. But what about the conditions? You've got to focus on making the product high-quality and a level-playing field and then look for commercial gains. "We can't just say 'this is what the market wants, let's cater to that' because this is not really a pure, commercial venture. It's got to be about having a high-quality [product]." விகடனில் யூன் 6 ம் திகதியில் வந்த ஆக்கம் மற்ற அணிகளெல்லாம் கன்னாபின்னாவென பயணம் செய்து சகட்டுமேனிக்கு நேரம் மாறி மாறிப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் சௌகரியமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஜாலியாக எல்லா போட்டிகளையும் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்குச் சாதகமாக தொடரின் அட்டவணைகள் வடிவமைக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு சில காலமாகவே பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மட்டும் எப்படி ஆடி எந்த இடத்தைப் பிடித்தாலும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருக்கும் வகையில் கோக்குமாக்கான அட்டவணை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியா பாகிஸ்தானுடன் ஆடிய போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்ட கூத்தெல்லாம் நடந்திருந்தது. அது கூட ஆசியக்கோப்பை, அங்கேயும் ஜெய்ஷாதான் தலைமைப் பீடத்தில் இருக்கிறார் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகக்கோப்பையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஐ.சி.சி ஏன் இப்படி செய்ய வேண்டும்?
  14. இந்தியா முடிவெடுக்கவில்லை. இந்த போட்டிகள் நடக்கமுன்பே இதுதான் போட்டிcவிதியாக சொல்லப்பட்டது. தென்னாப்பிரிக்கா , ஆப்கானிஸ்தான் போட்டி மழை காரணாமாக நடக்காவிட்டால் சூப்பர்8 எல் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்திருப்பார்கள். இறுதி போட்டி மழை காரணாமாக நடக்கவிட்டால் மறுநாள் விளையாட சந்தர்ப்பம் வழங்குவார்கள்
  15. விகடன் இணையத்தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தியா - இங்கிலாந்து மோதும் இந்த அரையிறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே என்பது கிடையாது. ஆனால், வழக்கமான போட்டி நேரத்தை விட கூடுதலாக 250 நிமிடங்கள் இந்தப் போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 4 மணி நேரம் 10 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி கயானாவில் காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆக, மழை பெய்தாலும் ஒரு முழு நாளுக்கும் கூட காத்திருந்து போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். சரி, ஒரு வேளை மழை பெய்தால் ஓவர்கள் எப்படிக் குறைக்கப்படும்? கூடுதலாக 250 நிமிடங்கள் போட்டியை நடத்தக் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா... அதனுடன் இன்னிங்ஸ் பிரேக்கிலிருந்து 5 நிமிடங்களை எடுத்துக் கொள்வார்கள். இப்போது மொத்தம் 255 நிமிடங்கள் கையில் இருக்கும். வழக்கமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு முதல் பந்து வீசப்பட்டிருக்க வேண்டும். மழை பெய்யும்பட்சத்தில் அந்த 255 நிமிடங்களையும் சேர்த்துக் கொண்டு இரவு 12:15 மணி வரை காத்திருப்பார்கள். அதற்குள் மழை நின்று பிட்ச் பந்துவீசத் தயாராகி முதல் பந்து 12:15 மணிக்குள் வீசப்படும் சூழல் ஏற்பட்டால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது. முழுமையாக 20 ஓவர் போட்டியே நடந்துவிடும். 12:15க்கும் மேல் மழை பெய்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு 4 நிமிடம் 25 நொடிகளுக்கும் ஒரு ஓவர் வீதம் குறைந்துகொண்டே வரும். அப்படிப் பார்த்தால் தோராயமாக 12:19 போட்டி தொடங்குகிறதெனில் 19 ஓவர் போட்டியாக நடக்கும். இப்படி ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் ஆட்டத்தில் குறைந்துக்கொண்டே வரும். இந்த அரையிறுதிப் போட்டியில் முடிவை எட்ட வேண்டுமெனில் குறைந்தபட்சமாக 10 ஓவர் போட்டியாவது நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல் நேரமெல்லாம் எடுத்த பிறகும் 10 ஓவர் போட்டியை கூட நடத்தமுடியவில்லையெனில் சூப்பர் 8 சுற்றில் அதிகப் புள்ளிகள் எடுத்திருக்கும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும். அப்படி நடந்தால் அது இந்திய அணிக்குச் சாதகமாக முடியும்.
  16. அதுவும் குறைந்தது 10 ஓவர் ஓரு அணி விளையாட வேண்டுமாம். In the case of the second semi-final, an ICC spokesperson said that the overs will start being reduced only at approximately 2.40pm: 250 minutes after the scheduled start time of 10.30am. This gives rise to a scenario in which the match could start as a 20-over affair at 2.40pm, only for the the side batting first to be midway through their overs when the rain returns, thereby causing the match to be washed out as a no-result. That possibility is reduced by the early move towards reduced overs in the first semi-final, but not the second. If the ICC had made every effort to complete the second semi-final by 2.40pm and only gone into extra time if a 10-over game was not possible until such time, we would have had nearly identical playing conditions for both matches. What constitutes a completed game? Unlike in the league matches, where five overs in the second innings was enough for a result to be declared, both sides will have had an opportunity to bat 10 overs to constitute a match.
  17. போட்டி நடைக்காவிட்டால் சூப்பர் 8 இல் முதலிடம் பெற்ற அணி வெற்றி பெரும் என போட்டி விதியில் சொல்லப்பட்டிருக்கிறது The team that finished at the top of their Super Eight group advances. That means South Africa from the first semi-final, and India from the second.
  18. மழையினால் போட்டி நடக்காவிட்டால் இந்தியா இறுதி போட்டிக்கு தெரிவாகும்.
  19. திருத்தம். - 50 ஓவர் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா 6 முறை கிண்ணம் பெற்றது. ( 1983,1999,2003,2007, 2015,2023)
  20. இதே மைதானத்தில் தான் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு 5 விக்கெட் இழப்புக்கு 6.3 ஓவரில் 30 ஓட்டங்களை பெற்றது. ஆனால் Rutherford இன் அபார ஆட்டத்தினால் 149 ஒட்டங்களை பெற்றது. இதே மைதானத்தில் உகண்டா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தானின் வெற்றி பந்து வீச்சாளர்களிலும் , ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களிலும்தான் தங்கியிருக்கிறது. Gurbaz மேற்கு இந்தியா , தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . இந்தியாவுக்கு எதிராக வெறும் 11 ஒட்டங்களை பெற்றார். ஆப்கானிஸ்தான் இந்த 3 நாடுகளிடம் மட்டுமே தோல்வியை தழுவியது
  21. நீங்கள் அவுஸ்திரேலியா , ஆப்கானிஸ்தானுடன் தோற்றது வெக்கமில்லையா என்று எழுதியதுக்காகவே முன்பும் சிம்பாவேயுடன் தோல்வியை தழுவியதையும் , 20-20 உலககிண்ணத்தில் பல தோல்விகளையும் கண்ட அணி என்பதனை எழுதினேன் . 20 20 உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியர்கள் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று சொல்வதில்லை . டெஸ்ட் , 50 கிண்ணப்போட்டிகளில் முன்பு சொல்லியிருக்கிறார்கள்
  22. ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடிய எல்லாப் போட்டிகளிலும் இந்த உலகக்கிண்ணத்தில் வென்று இருக்கிறது. இந்தியா , மேற்கிந்திய தீவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் 2 வதாக துடுப்பாடி தோல்வியினை சந்தித்தும் ஒரு காரணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.