Everything posted by கந்தப்பு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
குறிப்பாக 2009 இல் மேற்கிந்தியா தீவு , இலங்கை இருந்த குழுவில் இறுதியாக வந்து ஆரம்ப சுற்றில் வெளியேறிய அவுஸ்திரேலியா. 2007 இல் சிம்பாவேயுடன் தோல்வியை பெற்ற அணி அவுஸ்திரேலியா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
50 ஓவர் போட்டிகளில் உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றிகள் பெற்றது . 5 முறை உலகக்கிண்ணத்தினை பெற்று இருக்கிறது . அவுஸ்திரேலியா. மக்ஸ்வெல் 50 ஓவர் போட்டியில்தான் 200 ஓட்டங்கள் பெற்று இருக்கிறார் 20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை மட்டுமே வென்ற அணி அவுஸ்திரேலியா . கடைசியாக 2022 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியிலும் சூப்பர் 6 க்கு செல்லாமல் தோற்ற அணி அவுஸ்திரேலியா . இதுவரை நடை பெற்ற உலககிண்ணத்தினை அதிகபட்சம் இருமுறை வென்ற அணி இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் மட்டுமே . 50 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவுஸ்திரேலியா சாதனை படைத்தாலும் 20 20 கிண்ணப்போட்டிகளில் தோல்விகளை அதிகம் பெற்று இருக்கிறது . 2007 - அரை இறுதி போட்டி தெரிவு 2009 - சூப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படவில்லை 2010 - 2 மிடம் 2012 -அரை இறுதி 2014 - சூப்பர் 10 2016 - சூப்பர் 10 2021 - முதலிடம் 2022 - சூப்பர் 10 இதுவரை நடந்த 9 உலகக்கிண்ணத்தில் (2024 சேர்த்து) 4 முறை மட்டுமே அவுஸ்திரேலியா அரை இறுதிக்கூ முன்னேறி உள்ளது .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூசிலாந்து , பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தோற்றபோது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 5 க்கு முட்டை வாங்கினேன். அவுஸ்திரேலியாவும் தோற்றுவிட்டது. மறுபடியும் கனக்க முட்டைகள் கிடைக்கப்போகுது. 😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த போட்டிகளுக்கு நான் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , மேற்கிந்திய தீவு , தென்னாபிரிக்கா, நியூசிலாந்து , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், அமெரிக்கா, அயர்லாந்து , நெதர்லாந்து …, , உகண்டா என வரிசைப்படுத்தி விட்டு இறுதிபோட்டியில்கடந்த 10 வருடங்களாக இந்தியா நல்லாய் விளையாடியும் தோற்பதினாலும் அவுஸ்திரேலியா எனக்கு பிடித்த அணி என்பதினாலும் வெற்றி பெரும் அணிஅவுஸ்திரேலியாவை தெரிவு செய்து விட்டேன். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் இந்தியா இங்கிலாந்து மேற்கிந்தியா இலங்கை கிருபன் இணைத்த Excel இன் ஊடாக வந்தது. இதில் எனது வரிசையில் 1,3 இடங்களில் உள்ள இந்தியாவையும் இங்கிலாந்திணையும் , மற்றைய குழுவில் இருந்து எனது தரவரிசையில் 2, 5 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியாவும் தென்னாப்பிரிகாவையும் அரை இறுதிக்கு வரும் அணிகளாக தெரிவு செய்தேன் . சூப்பர் 8 தெரிவு பற்றி முன்பே தெரிந்திருந்தால் இந்தியா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மேற்கிந்தியா தீவினை அரை இறுதிக்கு தெரிவு செய்திருப்பேன் . ஆனால் ஆப்கானிஸ்தான் வங்காளதேசத்தினை வென்று இந்தியா அவுஸ்திரலியாவை வென்றால் அவுஸ்திரேலியாக்கு ஆப்பு . அவுஸ்திரேலியா இந்தியாவை வென்றாலும் Run Rate கூடவாகவும் இருக்க வேணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களின் எல்லா முடிவுக்கும் நான் ஆதரவு. மழை வந்தால் DUCKWORTH-LEWIS METHOD இருப்பது போல போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதினால் ‘கிருபன் Method’ இணை உபயோகித்து புள்ளிகளை வழங்குங்கள் 😀
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நன்றிகள் பல வீரப்பையன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எங்களுக்கு இப்ப பகல்இங்கிலாந்து மேற்கிந்தியா தீவு போட்டி பார்க்கக்கூடியதாக இருக்கிறது 😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி. ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கைக்கு அடுத்தவருடம் உந்த பிரச்சனை இல்லை. அடுத்துவருடம் 2025 இல்பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன் கிண்ணத்தில் (2029 இல் இந்தியாவில் நடைபெறும்) விளையாட இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. சென்ற வருடம் நடைபெற்ற உலகக்கிண்ண்ப்போட்டியில் முதல் 8 இடத்தினை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா , நியூசிலாந்து , இங்கிலாந்து , தென்னாபிரிக்கா, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விளையாடவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள போட்டியில் இலங்கை தெரிவு செய்யப்படாததினால் , இலங்கையில் அவைக்கு வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று அடுத்த வருடம் பிரச்சனை இல்லை.
-
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
Due to public demand, “Oozhi (ஊழி) is showing again in Sydney on Thursday June 20th at 6.45pm. Venue- Auburn Reading Cinemas “Oozhi” (ஊழி) is a poignant portrayal of the aftermath of the war in Srilanka, where promises of peace crumble in the face of enduring injustice, directed by Ranjith Joseph who previously made the well acclaimed film “Sinam Kol” 2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருண்ட ஊழிக்காலத்துக்குள் மூழ்கிப்போகும் ஊழியே இது. Online Tickets - www.eventboss.com Tickets (by phone) - Jana 0401842780 Siva 0424 757 814 Naventhira 0435 039 160 Ganesh 0430 050 051
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கையும் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்று சூப்பர் 8 க்கு வங்காளதேசம் தெரிவு செய்யப்பட்டால் 2026 இல் நடைபெறவுள்ள T20 உலககிண்ணபோட்டிக்கு அயர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் போட்டி நடாத்தும் நாடுகள் ( இலங்கை, இந்தியா) ,இப்பொழுது நடைபெறும் போடியில் சூப்பர் 8 க்கு தெரிவான நாடுகள்( தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , அமெரிக்கா, மேற்கிந்தியாதீவுகள், வங்காளதேசம்ஆப்கானிஸ்தான்) ஐசிசி தரவரிசையில் உள்ள மிகுதி 3 நாடுகள் ( பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து) தேர்வு செய்யப்படும். ஆனால் இன்றைய போட்டியில் வங்காளதேசம் தோற்று , இலங்கையை நெதர்லாந்து வென்றால் சூப்பர் 8 க்கு நெதர்லாந்து தெரிவாகும். இதனால் 2026 போட்டியில் நெதர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும். வங்காளதேசம் ஐசிசி தரவரிசையில் அயர்லாந்தினை விட முன்னுக்கு நிற்பதினால் அயர்லாந்துக்கு பதிலாக வங்காளதேசம் 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்யபடும் மற்றய நாடுகள் அமெரிக்கா , பசுபிக் , ஆசியா, ஆபிரிக்கா , ஐரோப்பா போட்டிகளின் படி தெரிவாகும். இதில் அமெரிக்கா போட்டிகளில் ஒரு நாடே தெரிவாகும். ஏற்கனவே அமெரிக்கா 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவானதினால் கனடாவுக்கு 2026 இல் தெரிவு செயப்பட வாய்ப்பு இருக்கிறது அமெரிக்கா குழுவில் பெர்முடாவும் சிறந்த அணி. கனடாவா பெர்முடாவா என்பது இனி வரும் போட்டிகளில் தெரியும். ஆபிரிக்கா கண்டப்போட்டியில் 2 நாடுகள்உகண்டா , நபிபியா போன்ற நாடுகள் மறுபடியும் தெரிவு செய்யப்படுமா அல்லது சிம்பாவே , கென்யா போன்ற நாடுகளும் 2 நாடுகளுக்குள் வருமா? எனக்கு சிம்பாவே வரவேண்டும் என்பது விருப்பம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேற்கிந்தியா தீவு ஆப்கானிஸ்தான் போட்டியில் நான் மேற்கிந்தியா தீவுதான் வெற்றி பெரும் என்று பதில் எழுதியிருந்தேன். ஆனால் ஆப்கானிஸ்தான் வென்றால் , அவர்கள் விளையாடும் குழுவில் (C)மேற்கிந்திய தீவு இரண்டாம் இடத்தினை பிடிக்கும். நீங்கள் கேட்ட கேள்விகள் போல group C இல் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் போட்டிகள் நடக்கும்
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதை விட cricinfo இணையத்தில் T20 World Cup Table பகுதியில் 6, 7 மாதத்துக்கு முன்பு pre tournament seeding என்று இந்த தகவல் இருக்கின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது இந்தியா திணிக்கவில்லை. ஐசிசியின் வருமானம் இந்தியா இரசிகர்களில்தான் தங்கியிருக்கிறது. 2007 உலக கோப்பை மேற்கிந்தியாவில் நடைபெற்ற போது இந்தியா ( பாகிஸ்தானும்) முதல் சுற்றில் தோல்வியுற்று வெளியேறிவிட்டது. இதனால் அத்தொடரில் பெரிய வருமானம் ஐசிசிக்கு கிடைக்கவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முன்பே வெளியீட்டு இருந்தார்கள். நாங்கள் கவனிக்கவில்லை. Cricinfo இணையத்தளத்தில் மே 27 இது பற்றி செய்தி வந்திருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களைபோலதான் எனது பதிலும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம். முன்பே இப்படி தெரிவு செய்வதினால் அந்த நாட்டு ரசிகர்கள் நுழைவு சீட்டினை முன்பே வாங்கிவிடுவார்கள். முக்கியமாக இந்தியாவின் போட்டிகள் பகலில் நடக்கும் . இந்தியா நேரம் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் . பல இந்தியர்கள் பார்ப்பார்கள் . இந்தியா தொலைக்காட்சிகளும் இதனை விரும்புவார்கள் . விளம்பரத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும் போட்டி துடங்கமுதல் இந்த விதிகளை நான் வாசிப்பதுண்டு. இம்முறை நான் வாசிக்க தவறிவிட்டேன். அரை இறுதிபோட்டி மட்டும் இந்தியா தெரிவானால் எங்கு விளையாடுவார்கள் என்பதை முன்பே இங்கு பதிந்திருக்கிறேன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேற்கிந்திய தீவுக்கும் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்துக்கும் இடையில் நடக்கப்போகுது முன்பும் இப்படி 50 உலக்கிண்ணப்போட்டியில் சூப்பர் 6 இல் செய்தது. எந்த போட்டி என்று மறந்து விட்டேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2026 உலககிண்ண போட்டியில் அமெரிக்கா நேரடியாக விளையாட தகுதி பெற்றிருக்கிறது. போட்டி நடாத்தும் நாடுகள் ( இலங்கை, இந்தியா), சூப்பர் 8 க்கு தெரிவான நாடுகள் உட்பட 12 நாடுகள் (மிகுதி 3 நாடுகள் இந்தமாத கடைசியில் ஜூன் 30 இல் ICC தரவரிசை படி தெரிவு செய்யப்படும்) நேரடியாக போட்டியிடப் போகின்றன. மிகுதி 8 நாடுகளும் ஆபிரிக்கா, ஆசியா , ஐரோப்பா , பசுபிக் , அமெரிக்கா போட்டிகளின் அடிப்படையில் தெரிவாகும் ஓம். முதலே தீர்மானித்து விட்டார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிருபன் - உங்களது போட்டியில் குழு B, Cஇல் முதலிடத்தை Australia (B1),மேற்கிந்திய தீவுகள் (C1)பெற்றாலும் சூப்பர் 8 இல் இவை B2 ,C2 என்றே அடுத்த சுற்றுக்கு தெரிவாகும். இந்த போட்டியில் பங்கேற்ற பலரது விடைகள் அடுத்த சுற்றில் கேள்விக்குறியாக இருக்க போகவுள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதனால் இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பெரும்பாலும் Bangladesh அடுத்த சுற்றில் ஒரே குழுவில் போட்டியிடும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிருபன் - உங்களது போட்டியில் அடுத்த சுற்றில் குழு B இல் Australia முதலிடம் பெற்றாலும் கேள்வி 54 இல் சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 கேட்கப்பட்ட கேள்விக்கு B1 Australia என்று வராது என போட்டி நடாத்துபவர்கள் முன்பே முடிவு செய்திருக்கிறார்கள். Six out of 20 teams have progressed so far to the Super Eight stage of the T20 World Cup 2024, with India (A1), Australia (B2), and Afghanistan (C1) in Group 1, and USA (A2), West Indies (C2) and South Africa (D1) in Group 2. The teams are assigned A1, B1 and so on not on the basis of where they finished in their group but according to pre-tournament designations. Super Eights: how will the teams be grouped and seeded? Eight teams have been allotted pre-decided seedings that they will retain for the Super Eight stage, provided they qualify. These teams, and their seedings, are: A1 - India, A2 - Pakistan B1 - England, B2 - Australia C1 - New Zealand, C2 - West Indies D1 - South Africa, D2 - Sri Lanka The seedings for the other teams are not fixed. To understand it further, if D1 and D2 qualify from group D, and D2 top the group, D2 will not be given the D1 slot in the Super Eight stage despite topping the group. They will continue with the pre-decided fixtures in Super Eight that have been scheduled for D2. But if, say, D3 or D4 qualify in place of, say, D1, the qualified team will replace D1 in the Super Eight. If D3 and D4 both qualify, then the group topper will play D1's fixtures and the team that finishes second will be allotted D2's matches. Once the eight teams are known, they will be grouped into Super Eight as follows: Group 1: A1, B2, C1, D2 Group 2: A2, B1, C2, D1 The fixtures for the Super Eight stage, starting June 19, are already listed with the teams' seedings. No points will be carried forward from the first round to the second
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 4 கேள்விக்கும் தேர்தல் வாக்குகள் வர வர புள்ளிகள் வழங்கினேன். மறுநாள் வேலைக்கு செல்லும் போது புகையிரதத்தில் பயணிக்கும் போதும் , வேலையில் ஒய்வு கிடைக்கும் போது இலகுவாக புள்ளிகள் வழங்கக்கூடிய கேள்விகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கினேன். கைதொலை பேசியினுடாக கேள்விகளையும் பார்த்து விடைகளையும் பார்த்து புள்ளிகளை வழங்கினேன். பிறகு வந்த நாட்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய கூடியதாக இருந்தினால் நேரம் எடுத்து சிலரை ஒருநாள் முதல்வராக்கினேன். அப்பொழுது நீங்கள் உட்பட வேறு சிலரையும் முதல்வராக்கலாமென்றால் உங்களுக்கும் அப்பொழுது முதல்வராக இருந்தவர்களுக்குமிடையிலான புள்ளிகள் அதிகமாக இருந்தது. என்ன செய்தாலும் முதல்வராக்க முடியாது என்று உணர்ந்தேன்.